"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Saturday, March 12, 2011

-இப்படிக்கு இப்லிஸ்

ன் இறைவா..!
ஆதத்தை (அலை) வழிக்கெடுக்க
முனைந்தவன் நான்
ஆனால் அவர் தம் மக்களோ
என்னையல்லவா.... வழிக்கெடுக்க முயல்கிறார்கள்
இது உனது விதியோ...
இல்லை
பழிக்கு பழியோ...

உன் கட்டளைக்கு உடன்படாததால்
மக்களுக்கு
மாறு செய்பவன் நான்
உன் கட்டளைக்கு உடன் பட்டும் 
எனக்கு மாறு செய்வதில்லையே மக்கள்....

சஹாபாக்கள் காலத்தில்
சர்வ காலமும் போராட்டமாக இருந்தது...
பல முறை அவர்கள் வெல்ல...
சிலமுறை வென்றிருக்கிறேன்.
ஆனால்... இன்றோ
அப்துல் ரஹ்மானை வழிக்கெடுக்க முயலும் முன்
அப்துல்லாவையும் இலவசமாக
வழிகெடுத்தே என் முன் வருகிறார்.

உன்னைப் பற்றி அறியாததால்..
நான் ஏதோ ஆனேன்
என்னைப்பற்றி அறிந்தும் -மக்கள்
வீணாய் போனது ஏன்...?

நபிகளார் காலத்தில் நாளெல்லாம்
யோசித்தேன்...
துன்பம் தருவது எவ்வாறு என்று
ஆனால் இன்றோ...
யோசிக்கிறார்கள்
இன்பம் பெறுவது என்னிடம் எவ்வாறு என்று

அன்று உமரோ (ரலி) ஒரு தெரு வழி நடக்க
நானோ பிறிதொரு தெரு ஓடினேன்
இன்று எவரும் 
வருவதை கண்டு ஓடி ஒளிந்தாலும் 
கண்டறிந்தல்லவா...
என் தோள் மீது கைப்போட்டு
அழைத்து செல்கிறார்கள்
அனாச்சாரியங்கள் பல புரிவதற்கு

பாங்கொலி சத்தம் கேளாமல் இருக்க
"பாடு" பட்டேன் அப்போது
பாங்கொலி கேட்டுவிட போகிறது என்பதற்காக
'பாட்டு' கேட்கிறார்கள் எப்போதும்....

உன் இறைமறையில் 
எண்ணற்ற இடங்களில்
என்னைப்பற்றி
எச்சரித்தாய் அல்லவா... மக்களுக்கு 
ஒருமுறையேனும் 
அவர்களை குறித்து என்னிடம் சொல்லிருந்தால்
அப்போதே....
சிரம் பணிந்திருப்பேனே... 
ஆதி பிதா ஆதமுக்கு 
கியாம நாள் வரை வாழ அவகாசம் கேட்டவன் நான்
சரியென, அதுவரை சாகாவரம் தந்தவன் நீ....
போதும்....
பொய்யானவர்களுடன்
பொறுப்போடு வாழ்ந்தது
ரப்பே., இனி எனக்கு இங்கு வேலையில்லை...

உயர்ந்தோனே....
யாரை வழி கெடுப்பது இனி...
உண்மையானவர்களை 
உலகத்தில்
இனங்காட்டு...
இல்லையேல் 
உண்மையாகவே 
மரணித்து விடு... என்னை
                                                               -இப்படிக்கு இப்லிஸ் 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இது கற்பனையாக எழுதப்பட்டாலும்., இன்றைய சமுகத்தில் வாழும் மக்களின் நிலைபாட்டை விவரிக்கும் சில வரிகளே இது. இன்று சைத்தானே கெட்கம் கொள்ளும் அளவிற்கு தான் மனிதர்களின் நடத்தைகள் குறிப்பாக இஸ்லாமியர்களின் செயல்கள் இருக்கின்றன...கேடுகெட்ட எண்ணங்கள் மற்றும் செயல்களிலிருந்து விலகி படைத்தவனுக்கே முற்றிலும் பணிந்து சைத்தானுக்கு மாறு செய்யும் மக்களாக அல்லாஹ் உங்களையும் என்னையும் ஆக்கி அருள்வானாக
பின் குறிப்பு: மேலுள்ள புகைப்படத்திற்கும் இப்லிஸூக்கும் (சைத்தான்) எந்தவித சம்பந்தமுமில்லை 
                                                                   அல்லாஹ் மிக்க அறிந்தவன்


7 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    புனைவாக இருந்தாலும் இது எழுதப்பட்ட நோக்கம் தூய்மையானது

    நன்றி சகோ

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும் தம்பி
    எப்படி இருக்க.நீண்ட நாட்களாக
    உன்னை காணோம். வரிகள் அருமை
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
    சகோ.குலாம்,

    //உயர்ந்தோனே....
    யாரை வழி கெடுப்பது இனி...
    உண்மையானவர்களை
    உலகத்தில்
    இனங்காட்டு...
    இல்லையேல்
    உண்மையாகவே
    மரணி(க்கச்செய்)து விடு... என்னை//---நல்ல நோக்கத்தில் எழுதப்பட்ட புனைவு.

    அதானே...!
    எல்லாருமே வழிகெட்டுப்போய் விட்ட பின்னால் சைத்தானுக்கு என்ன வேலை?

    ஆனால்...

    புதிதாய் பிறப்பவர்களையும், பிறக்கப்போகுபவர்களையும் அவர்கள் வளர வளர கூட இருந்து வழிகெடுக்க வேண்டாமா?
    அடடே..! அதானே..!

    விழிப்புணர்வுக்கு நன்றி சகோ.குலாம்.

    ReplyDelete
  4. வ அலைக்கும் வரஹ்
    சகோதரர் ஹைதர் அலி.,
    வழக்கம்போல் தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.,
    சகோதரி ஆயிஷா அபுல்
    அல்ஹம்துலில்ல்லாஹ்., அல்லாஹ்வின் அருளால் நலம் அதுப்போல் தாங்களும் நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். சற்று வேலை பளு காரணமாக முன்புபோல வலையில் உலவ முடிவதில்லை. இன்ஷா அல்லாஹ் துஆ செய்யுங்கள்.,
    சகோதரர் ஆஷிக்
    //புதிதாய் பிறப்பவர்களையும், பிறக்கப்போகுபவர்களையும் அவர்கள் வளர வளர கூட இருந்து வழிகெடுக்க வேண்டாமா?
    அடடே..! அதானே..! // நல்ல நினையூட்டல்., இனி இப்லிஸ் கொஞ்சம் ஆறுதல் அடைவான்....

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அழைக்கும் ...சகோதரர் குலாம் ...கவிதை வடிவில் சொன்ன கருத்துகள் மிக உண்மையனே செய்திகள் அல்ஹம்டுலில்லாஹ்...... எல்லா புகழும் இறைவனுக்கே ....

    ReplyDelete
  6. சகோதரர் குலாம்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    சிலருடைய உள்ளக்குமுறலை அழகாக வடித்திருக்கின்றீர்கள். இது பற்றி அதிகம் அலட்டி கொள்ள தேவையில்லை சகோதரர். தாங்கள் தொடர்ந்து சிறப்பாக செயலாற்ற இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  7. வ அலைக்கும் ஸலாம் வரஹ்
    @அன்பு சகோதரர் நஸ்ருதீன் அவர்களுக்கு
    கருத்துக்கும் வருகைக்கும் நன்றி
    எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.,

    @அன்பு சகோதரர் ஆஷிக் அஹ்மத்
    உண்மைத்தான் ஏதோ என் எண்ண சிதறல்களே., இவைகள் - ஏனையொருக்கும் சின்னதொரு நினையூட்டல்.,
    தங்களின் துஆவிற்கு நன்றி.,
    ஜஸாகல்லாஹ் கைரன்.,

    ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்