"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Wednesday, June 23, 2010

மாநபிக்கு ஓர் மடல்

    மதீன மண்ணில் துயில் கொள்ளும் எங்கள் மஹமூதரே! தாங்கள் கண்ட  தொல்லைகளும்,கொடுமைகளும்,சமுக அவலங்களும் சொல்லிமாளாது.


    சாயம் போன சரித்திர பக்கங்களும் தங்களின் உலர்ந்த உதிர வரலாற்றை காய்ந்திடாமல் இன்னும் வைத்திருக்கிறது.
இறையாணை கொண்டு தமக்கு துன்பம் விளைவித்த கொலைகார மக்களை அழிக்க வாய்ப்பு வழங்கிய போதும் அவர்கள் அறியாதவர்கள் - எனக்கூறி அம்மக்களை சபிக்காமல் நேர்வழி பட வழிந்தோடும் குருதி வாய் துடைத்து கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்த  தூயோரே! அந்த தூயோனின் இறுதி தூதே!

நாயகமே சகிப்புத் தன்மையின் தாயகமே!
படைப்பினம் அல்லாது  படைத்தவனிடம் பாடம் பயின்ற பகுத்தறிவின் பெட்டகமே!  
உண்மைக்கு உயிர் தந்த உத்தமரே!

மனித பிறவிகளின் மத்தியில் நீங்கலோர் மனிதநேய பிறவி!
பொறுமையே உங்கள் மீது பொறாமை கொண்டது; பொறாமையோ உங்கள் பொறுமை கண்டு அகன்று சென்றது. !
வாய்மையும் தங்களிடம் வாழ்வு தேடியது,வலிமையோ வாஞ்சையுடன் துணை நின்றது ..!

உங்கள் உருவ படத்தை அறிந்தவர் உலகில் எம்மில்  இல்லை -உங்களை அறியாதவர் உலக வரைபடத்தில் எவரும் இல்லை

கலப்பின உறவு அது வெறும் கனவு என எண்ணி உறங்கிய சமுகத்தை சகோதர வீதியில் கைக்கோர்த்து சமமாய் நடக்க செய்த எங்கள் உயிரே!


உங்கள் உம்மத்தின் இந்த சமுக நிலை அறிவீரோ...?
*வாளேந்திய சமுகத்தை வாய்மையால் செதுக்கியவர் நீங்கள்
வாயே திறக்க கூடாதென வன்முறையால் கூறுபோடும் சமுகத்தில் நாங்கள்


*தீண்டாமையை திக்கற்ற திசைக்கு திருப்பியவர் நீங்கள்
யாரும் தீண்டினால் அவரை தீக்கு இரையாக்கும் தீய சமுகத்தில் நாங்கள்


*அநாதைகளுக்கும்,அமானிதங்களுக்கும் வரம்பின்றி அடைக்கலம் தந்தவர்  நீங்கள்
அமானிதங்களை திரும்ப கேட்போரை வரம்பு மீறி அனாதைகளாக்கும் வஞ்சக சமுகத்தில் நாங்கள்

*வட்டியை மூர்ச்சையாக்கி வணிகத்தை வளமுடன்  வாழ செய்தவர் நீங்கள்
வணிக வாயடைத்து வட்டியின் வயிறு வளர்க்கும் வழிகெட்ட சமுகத்தில் நாங்கள்


*பெண்ணினத்தை பொன்னென எண்ணி பொத்தி வைக்க சொன்னவர் நீங்கள்
பெண்ணையும்,பொன்னையும் வியாபார பொருளாக்கிய விரச சமுகத்தில் நாங்கள்      
  
*பெருங்கல்லும் சிரம் பணிய கண்டீர் நீங்கள்
சிறுக்கல்லுக்கு சிரம் பணிய காத்திருக்கும் பெருங்கூட்ட சமுகத்தில் நாங்கள்


*தொண்டர்களை ஒழித்து உயிர் கொடுக்கும் தோழர்களை உருவாக்கியவர் நீங்கள்
தொண்டர்களை ஒழித்து உயிர் எடுக்கும் குண்டர்களை உருவாக்கும் கேவல சமுகத்தில் நாங்கள்


*பாவத்தின் சாயல் கூட அறியாதவர் நீங்கள் .,
பாவ முட்டைகளை பொதிகளேன  சுமக்கும் கழுதை சமுகத்தில் நாங்கள்


*உங்கள் நிழல் கூட புகழ் மீது விழ மறுத்த மாமனிதர் நீங்கள்.  
புகழ்தரா மக்களை நிழல் கொண்டு அழிக்கும் நீதியற்ற சமுகத்தில் நாங்கள்


*எளிமையை தோழானாக்கி,பகட்டை பரதேசியாகிய பகலவன் நீங்கள்
எளிமையை ஏளனம் செய்யும் பதவி மோக சமுகத்தில் நாங்கள்  


*பெருமை -இறை ஆடை அது வேண்டாம் இங்கே நமக்கு என உரக்க கூறினீர்கள் நீங்கள்
அவ்வாடையை அகங்கார அலமாரியில் அழகாய் அடிக்கி உடுத்தி மகிழும் உதாசீன சமுகத்தில் நாங்கள்


     மதீனா, மக்கள் பலரை புனிதராக்கியது மாநபி தங்களின் வருகையால் மதீன  மண்ணின் புழுதி கூட புனிதமாகியது

  எங்கள் இரட்சகனின் தூதர் ரவ்லாவை காண அந்த மதீன புழுதிகளோடு நானும் காத்திருகின்றேன் இறை நாடினால்...     
               
 உங்களை வர்ணிக்க வார்த்தைகள் ஏங்குகின்றன., வாய்ப்புக்கு மொழிகளும் காத்திருக்கின்றன
நான் என்ன செய்யஅடியேனுக்கு அவ்வளவே அறிவு!
முதலோனின் இறுதித் தூதே,இறுதி நாளின் முதலாமானவரே.,    நீங்கள் எங்களோடு இருந்திருக்க கூடாதா...? எல்லாம் வல்லவனின் எண்ணம் தானே எல்லாமாகிறது.உங்கள் மீது சாந்தியையும்,சமாதானத்தையும் வல்ல ரஹ்மான் வாரி வழங்குவானாக! உங்களோடு சுவர்க்கத்தில் இருக்கும்  நஸிபை  எங்களுக்கும் நாடுவானாக!! 

குறிப்பு:
எந்த ஒரு வரியும் இறைவனுக்கு இணைவைக்கும் விதத்திலோ,அவனது தன்மைக்கு சமமாகவோ வர்ணிக்கபடவில்லை,பொய்யோ,கற்பனையோ இதில் இடம் பெறவில்லை,மேலும் ஹதிஸ்களின் அடிப்படையிலேயே உருவாக்கபட்டது.  
read more "மாநபிக்கு ஓர் மடல்"

Tuesday, June 22, 2010

இஸ்லாம் கூறும் மறுமை வாழ்வு

                                          ஓரிறையின் நற்பெயரால்...
 மனிதன் எல்லா நிலைகளிலும் நன்மை களை செய்து,    தீமைகளை களைந்து வாழ இறைவனின் கொள்கை கோட்பாட்டுகள் வேண்டுமா ? அல்லது மனசாட்சிக்கு கட்டுபட்டாலே போதுமா     
         
மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள்(21:1)  


இவ்வுலக வாழ்வோடு அனைத்தும் முடிவடைகிறதுஇறப்புக்கு பின் ஒரு வாழ்வு  கிடையாது அது வெறும் மாயை என வாதிடும் சக நண்பர்களுக்காக இங்கு சில விளக்கங்கள்


ஏனைய மதங்களில் இறப்பிற்கு பிறகுண்டான சொர்க்கம்,நரகம் குறித்து கூறப்பட்டாலும் அத்தகைய வாழ்வு குறித்து இஸ்லாம் மிக தெளிவாகவும், விரிவாகவும் கூறியுள்ளது.  


இவ்வுலகில் வாழும் எந்த ஒரு மனிதராக இருந்தாலும் அவருக்கு வழங்கப்பட்ட நற்போதனைகளின் அடிப்படையில் தனது வாழ்வை அமைத்து கொண்டால் அவருக்கு வெகுமதியாக சுவர்க்கமோ,அதுவல்லாது,தனது மனோ இச்சையை பின்பற்றி கெடுதியின் பக்கம் செல்வாராயின் அதற்கு தண்டனையாக நரகமோ இறப்பிற்கு பின்னுள்ள வாழ்வில்  இறைவன் புறத்திலிருந்து வழங்கப்படும் என்பதே இஸ்லாம் வரையறுக்கும் மறுமை வாழ்வு


      ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் (செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர்( (நரக)நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப (இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.(3:185)

       பிறகு, கியாம நாளன்று, நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள். (23:16)
   
      மறுமை அல்லது மறுஉலக வாழ்வை ஏற்காமல் இருப்பதால் ஏற்படும் நன்மைதீமைகளை சற்று அறிவோம். மனசாட்சிக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தாலே போதுமானதுகடவுள் என்பதெல்லாம் தேவையில்லாத ஒன்று  என்பதே கடவுள் மறுப்பாளர்களின் பொதுவான கருத்து. 
  
    இதனடிப்படையில் அணுகும் போது ஒரளவிற்கு தனிமனித ஒழுக்கத்தை சரி காணலாமேயோழிய ஒட்டு மொத்த சமுதாய நலனையும் சீர் செய்யமுடியாது ஏனெனில் மனிதனின் மனசாட்சியானது, , எண்ணங்களின் அடிப்படையில் வீட்டு சுழலின்பெற்றோர்கள் வளர்ப்பின்வாழும் இடத்திற்கு தகுந்தார்போல்  மாறுபடும். திருட்டு என்பது தவறென்று அனைவரும் அறிந்திருந்தாலும் திருடனின் மனசாட்சி அது சரி என நியாயம் கற்பிக்கிறது..


  அதுபோலவே மதுபுகை பழக்கம் மற்றும் விபச்சாரம் போன்ற ஏனைய தவறுகளும். பிறரால் நமக்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்பின் போதும் ஒரு தவறு சரியெனபடுகிறது இவைகள் தவறென்று ஏற்று கொள்வோரின் தனிமனித வாழ்வு வேண்டுமானால் மேம்பாடு அடையலாம். (சமுகம் முழுவதும் நிலையான நன்மையே ஏற்படுத்த முடியாது) எனினும் மனசாட்சி எதாவது ஒரு நிலையில் இந்த தவறுகளை விரக்தியின் அடிப்படையிலோ,ஆசையின்  அடிப்படையிலோ சரி காணும்போது தனி மனித ஒழுக்கமும் சீர் கெட்டுபோகும். 


  உதரணமாக,கற்பழிப்போ,விபச்சாரமோ சமுக கொடுமை என நம் மன சாட்சி ஏற்றுக்கொள்ளும்.எனவே அதை செய்ய நாட மாட்டோம்.ஆனால் ஆணோ,பெண்ணோ விருப்பப்பட்டு சேர நினைத்தால் மன சாட்சியின் பார்வையில் அது தவறென்று கூறாது. மேலும் அத்தவறுகளை  மனம் நாடும்போதேல்லாம் செய்யவே தூண்டும். அதுபோலவே ஏனைய உடன்பாட்டு தவறுகளும்.ஆக மனசாட்சியின் மூலமாக தீமையே தவிர்த்தல் என்பது முழுவதும் சாத்தியமற்றது.எனவே  மனசாட்சியால் தற்காலிக நன்மையே மட்டுமே ஏற்படுத்தமுடியும்.


        ஆனால் .. எந்த ஒரு சுழலிலும்,வளர்ப்பிலும் வாழும் மனிதன் இறைவனை ஏற்று அவனது போதனைகளை நம்பும்பொழுது இத்தகைய தவறுகள் செய்ய மனசாட்சி நாடும்போது இறைவன் தன்னை கண்காணிக்கிறான்,தான் செய்யும் தவறுக்காக  மறுமையில் தண்டனை வழங்குவான்  எனும் எண்ணம் ஏற்படும்.எனவே தவறு செய்வதற்கான மனநிலை ஏற்பட வாய்ப்புகள் மிகமிக குறைவு.உடன்பாட்டின் அடிப்படையில் தவறிழைப்பின் கூட கடவுளிடம் பாவமன்னிப்பு கேட்டு திருந்துவான். கடவுளுக்கு பயந்து மறுமுறை அது நிகழாவண்ணம் பார்த்து கொள்வான்.


மனிதர்களே! உங்கள் இறைவனையஞ்ச (நடந்து) கொள்ளுங்கள்; இன்னும் அந்த (கியாமத்) நாளைக்குறித்துப் பயந்து கொள்ளுங்கள்; (அந்நாளில்) தந்தை தன் மகனுக்கு பலனளிக்க மாட்டார்; (அதே போன்று) பிள்ளையும் தன் தந்தைக்கு எதையும் நிறைவேற்றி வைக்க இயலாது நிச்சயமாக அல்லாவின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே இவ்வுலக வாழ்க்கை உங்களை மருட்டி ஏமாற்றிவிட வேண்டாம்; மருட்டி ஏமாற்றுபவ(னாகிய ஷைத்தா)னும் அல்லாஹ்வைக் குறித்து உங்களை மருட்டி ஏமாற்றாதிருக்கட்டும்.(31:33)

  கால சுழலுக்கு தகுந்தார் போல் செயல்படும் மனசாட்சிக்கு கட்டுபடுதல் மூலமாக எல்லா நிலையிலும் தவறிழைப்பதை முழுவதுமாக தவிர்க்க இயலாது. மாறாக-, இயல்பாகவே நம்மை ஒருவர் கண்காணிக்கிறார் எனும் போது அவரது பார்வையில் நாம் தவறிழைக்க மாட்டோம்,அதுபோலேவே எப்போதும் நம்மை கண்காணிக்க ஒருவர் இருக்கிறார் எனும் மனநிலை அடையும் போது  தவறு செய்யும் எண்ணம் ஏற்படுவதே சற்று அரிதாக தான் இருக்கும் 

அடுத்து நன்மைகள் குறித்து
தீமைகளை தவிர்த்து கொள்வதற்கு மனசாட்சி மேற்கொள்ளும் கட்டுபாடுகளை போல நன்மைகளை செய்வதற்கு  ஆர்வமூட்டுவதில்லை.ஏனெனில் தீமையே போல் அல்லாது, நன்மையான  காரியம்  செய்வதால் பிற மக்களுக்கோ,சமுகத்திற்கோ  நலம் பயக்கும் அதே வேளையில் செய்யாவிடின் தனிமனித ஒழுங்கிற்கு எந்த பாதகமும் ஏற்படுவதில்லை.


  ஆகவே சராசரி மனிதர்களின் மனசாட்சி ஒருவேளை நன்மை செய்ய தூண்டலாம்.அல்லது இது அவசியமன்று என ஒதுக்கலாம் ஆர்வ மிகுதியோ ,சமுக பற்றோ அல்லது புகழை விரும்பியோ தவிர மனசாட்சி சமுதாய நலனில் ஈடுபாடு செலுத்துவதில்லை .
    
  ஆனால் இஸ்லாம் தீமையே தவிர்ப்பது போல் நன்மையான காரியத்தின் பால் செல்வதற்கும் இறைவனிடத்தில் வெகுமதி அளிக்கப்படும் என்கிறது.உதரணமாக தன் மனைவிக்கோ, பெற்றோருக்கோ, பிள்ளைகளுக்கோ, ஏனைய உறவினருக்கோ ஆதரவற்ற அனாதைகளுக்கோ உதவுவது சமுக கடமை என்பதையும் தாண்டிஅதை ஒரு மார்க்க கடமையாக இஸ்லாம் வலியுறுத்துக்கிறது.


  பிறமக்கள் மற்றும் சமுக நலனில் அக்கறை காட்டுதல் குறித்து  ஏராளமான வேத வரிகளும்,தூதர் மொழிகளும் உள்ளன.தனிமனித மற்றும் சமுக வாழ்வு நிலையான நலன் பெற ஓரிறை கூறும் மறுமை கோட்பாடே சிறந்தது.

 அந்நாளில் ஒவ்வோர் ஆத்மாவும், அது சம்பாதித்ததற்குக் கூலி கொடுக்கப்படும்; அந்நாளில் எந்த அநியாயமும் இல்லை. நிச்சயமாக, அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.(40:17)
அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "இஸ்லாம் கூறும் மறுமை வாழ்வு"

Sunday, June 20, 2010

கடவுளை அறிய ஐம்புலன்கள் போதுமா ?



    ஓரிறையின் நற்பெயரால்

ஒரு செயல் அல்லது பொருளின் தன்மைகளை  பற்றி அறியவே நமக்கு புலனறிவு வழங்கபட்டுகிறது அப்புலன்களின் மூலம் கடவுளை அறிந்து கொள்ள முடியுமா ? எனக்கேட்டால் முடியாது என்பதே அறிவுக்கு பொருத்தமான பதிலாக இருக்க முடியும் !

புலன்களின் ஒரு  முக்கிய அம்சமான "பார்த்தல்" எனும் செயல்பாட்டின் மூலம் கடவுளை  காணமுடியுமா

   இன்று உலகில் கடவுளை ஏற்ப்போர்,மறுப்போர் உட்பட யாரும் கடவுளை கண்களால் பார்க்க வில்லை. 


  கடவுளை மறுப்போர் இதனை மிகப்பெரும் ஆதாரமாக கொள்கின்றனர். கண்களால் பார்க்க விட்டால் கடவுள் இல்லை என்றாகி விடுமா


ஒரு செயலையோ,பொருளையோ நாம் கண்களால் காணும் பொழுது அந்நிகழ்வை உண்மை படுத்துகிறோம் என்பதே சரி,பார்க்க வில்லையன்பதற்காக அந்நிகழ்வு உண்மையில்லை என்றாகி விடாது  


இதனை விளக்க ஒரு சிறிய உதாரணம் கூறலாம்.
  மழைக்காலங்களில் சிலவகை புச்சிக்களை புதிதாக நாம் காண்போம். அதற்கு முன்பு வரை அப்புச்சியை பார்த்திருக்க மாட்டோம். அதை குறித்து எண்ணும் போது அப்புச்சி அன்றுதான் படைக்கபட்டிருக்கும் என எந்த ஒரு பகுதறிவாளனும் எண்ண மாட்டான்.


  மாறாக நேற்றுவரை அப்புச்சியைபற்றி தான் ஏதும் அறிந்திருக்கவில்லை என்றே கூறுவான். இதன் மூலம் ஏற்கனவே இருக்கின்ற ஒன்றை பற்றி அறியாமல் இருப்பதற்கு வாய்ப்புள்ளது என்பது தெளிவு! 


 நாம் பார்க்காமல் இருந்தாலும் பார்க்க முடியாவிட்டாலும் ஒரு நிகழ்வு உண்மையாக இருப்பதற்க்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.ஆக பார்த்தல் என்பது ஐந்தறிவின் ஒரு பகுதி தான் தவிர அது ஒன்றே முழுமை பெற்ற பகுத்தறிவு ஆகாது.


 ஆக கடவுளை நாம் காணவில்லை என்பதை விட காணக்கூடிய வாய்ப்பு கடவுளால் நமக்கு வழங்க படவில்லை என்பதே சிந்திப்போர் எவரும் ஏற்றுக் கொள்ளும் சீரிய வாதமாகும்.

 (இஸ்லாத்தை பொறுத்தவரை இவ்வுலக வாழ்வில் கடவுளை யாரும் பார்க்க முடியாது இவ்வுலக வாழ்விற்கு பிறகே இறைவனை அனைவரும் பார்க்க முடியும் என்கிறது)
அதுபோலவே  வெளிபடையாக உணரும் ஏனைய புலன்களின் மூலமும் கடவுளை அறிய முடியாது. ஏனைய புலனறிவுகள் சிறப்பாக செயல் பட்டாலும் குறிபட்ட புலன்களின் மூலமே சிலவற்றின் தன்மையே அறிய முடியும். 


   அதாவது மணத்தை அறிய ஏனைய அறிவுகள் இருந்த போதிலும் நுகர்ந்துணரும் புலனறிவு இருந்தால் மட்டுமே அது சாத்தியம்! அதுபோலவே ஒலிகளை உள்வாங்குவதற்கு கேட்டறியும் அறிவு இல்லையென்றால் ஏனைய அறிவுகளால் பலனில்லை.


 அனைத்து புலன்களும் நன்றாக  செயல்படும் வேளையிலும் கூட தனக்கு பின் உள்ள ஒரு பொருள் பற்றி ஒருவரிடம் வினவினால் அவர் எத்தகைய பதிலும் கூற முடியா நிலையே ஏற்படும். மேலும் எதிரில்- ஒரு குறிப்பிட தொலைவிற்கு அப்பால் இருக்கும் ஒன்றை பற்றியும் நம்மால் அறிந்துகொள்ள முடியாது.


  எல்லா நிலையிலும் ஐம்புலன்களால் மேற்கொள்ளப்படும்  செயல்கள் முழுமை பெறாது எனவும் அறியலாம்      
நேற்றுவரை சாதாரண ஒரு புச்சியினம் பற்றி ஒன்றும் அறிந்திருக்க வாய்பில்லாத நமக்கு, இன்றும் ஒரு தூர தொலைவிற்கு பிறகு நமது புலன்கள் செயல்படாது எனும் போது யாவற்றையும்  படைத்து இரட்சிக்கும் கடவுள் நம் புலன்களின் கட்டு பாட்டிற்குள் வர வேண்டும் என்று எண்ணுவது எந்த விதத்தில் நியாயம் ?

    நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப்பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை)அறிந்து கொள்ளாச் செவிடர்களும் ஊமைகளும் தாம் ((8:22) 
                 அல்லாஹ் நன்கு அறிந்தவன்
read more "கடவுளை அறிய ஐம்புலன்கள் போதுமா ?"

Saturday, June 19, 2010

கடவுள் இருகின்றானா?

    ஓரிறையின் நற்பெயரால்

     இன்று உலக மக்களில் பெரும்பாலோர் எதாவது ஒரு மதத்தை பின்பற்றுகின்றனர்.வெகு சிலர் மட்டுமே கடவுள் மறுப்பு கொள்கையே ஏற்று கொண்டிருகின்றனர். மத்தின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட சில மூட நம்பிகைகளும்,சக மனிதரை இழிவுகுள்ளாகியதுமே கடவுள் மறுப்புக்கு பிரதான காரணமாகும்.ஆனால் இஸ்லாத்தை பொறுத்தவரை இவ்விரண்டையும் மண்ணோடு மடியச்செய்த மார்க்கம் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் அவரே உலகத்தை இயக்குகிறார் என்பதே இஸ்லாத்தின் அடிப்படை. அவ்வழியாக கடவுள் குறித்து சில கருத்துக்களை உங்களுடன் பகிர்கிறேன்.,தாங்கள் விருப்புவெறுப்பின்றி பகுத்தறிவின் அடிப்படையில் நடுநிலையோடு சிந்திக்க முற்படுங்கள்

    ஒரு வீடோ,  ஊரோ,  பள்ளிக்கூடமோநிறுவனமோ,  இயக்கமோ,  தொழிற்சாலையோ சீராக இயங்குவதற்கு ஓர் தலைமைத்துவம் அவசியம் என்பதை நாம் நம் வாழ்வில் இயல்பாகவே அறிந்திருகின்றோம்.அதை நடைமுறையிலும் கண்டும் கொண்டிருகின்றோம் இப்பேரண்டத்தை படைத்தது அதிலுள்ள சூரியன்,சந்திரன்,நட்சத்திரம் ஆகியவற்றை உள்ளடக்கிய  பால்வெளி மண்டலம் போன்றவற்றையும் மனிதர்கள் மற்றும் ஏனைய படைப்புகள் -ஆகிய அனைத்தையும் சீரான முறையில் இயங்க செய்வதற்கு ஓர் தலைமைத்துவம் வேண்டும் என சொல்லுவது  பகுத்தறிவுக்கு உட்பட்ட வாதமா? இல்லையா…?
           முடிவுற்ற எந்த ஒரு செயலின் நம்பத்தன்மை பற்றி அறிய அச்செயல்பாடு முழுவதையும் ஆராய்ந்து அறிவது பகுத்தறிவாகும். பகுத்தறிவு குறித்து  wikipidia  இவ்வாறு கூறுகிறது
    பகுத்தறிவு எனப்படுவது பொருட்களின் நிகழ்வுகளின் கருத்துக்களின் கூறுகளை அவதானித்து, ஆய்ந்து அவற்றின் இயல்புகளில் இருந்து அதாரபூர்வமாக புறவய நோக்கில் நிரூபிக்கப் படக்கூடிய முடிவுகளை முன்வைக்கும் வழிமுறையையும் அதை ஏதுவாக்கும் மனித அறிவு ஆற்றலையும் குறிக்கின்றது. பகுத்தறிவின் நோக்கம் மெய்ப்பொருளை அல்லது உண்மையக் கண்டறிவதே.
    பகுத்தறிவை மூலமாக கொண்டு அறிவியலின் ஆதார அடிப்படையில் கூட இன்று கடவுள் இல்லை என்று மறுப்பதற்க்கான எந்த வழிமுறைகளும் தெளிவாக இல்லை.கடவுள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம் என்ற நிலைபாடே உள்ளது. இதன் வாயிலாக கடவுள் உண்டு என்பதை நிருபிக்க காட்ட வேண்டிய ஆதாரத்தின் அளவிற்கு  கடவுள் இல்லை என்பதை நிருபிக்கவும் ஆதாரத்தை காட்ட வேண்டும்
  நம்பக தன்மையின் அடிப்படையிலேயே எந்த ஒரு அறிவியல் நிருபனமும் ஏற்று கொள்ளப்படுகிறது. இறைவன் இருக்கிறான் என்பதற்கான காரணத்தை அறிவியல் ரீதியாக பார்ப்போமேயானால்,     
        இஸ்லாத்தை பொருத்தவரை குர்-ஆன் இறைவனுடைய வார்த்தைகள் என நம்பப்படுகிறது  ஒருவர் உண்மையாளர்  என அறிய அவரது  கூற்று அறிவியலுக்கு முரண்படாமலும், எக்காலத்திற்கும் ஏற்றவகையில் கருத்து மாற்றம் ஏற்படாமலும் இருப்பது விஞ்ஞான ரீதியாக .அது உண்மையென்று நம்புவதற்கு போதுமானது ,அதன் அடிப்படையில் சுமார் 1400  வருடங்களுக்கு முன் குர்-ஆனில் கூறப்பட்ட எந்த ஒரு அறிவியல் செய்தியும் இன்று வரை நிருபிக்கப்பட்ட எந்த ஒரு அறிவியல் உண்மையோடும் முரண்படவில்லை,மேலும்,கூறப்பட்ட சமுகம் சார்ந்த கருத்துகள் அனைத்தும் எந்த ஒரு கால சூழலுக்கும் பொருந்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழவே  இல்லை. கடவுள் இல்லை என்போர் அதை உறுதி செய்ய  எந்த ஒரு அறிவியல் ஆதாரத்தையும் எடுத்து வைக்கவில்லை.இதுவரை விஞ்ஞான ரீதியாக நிருபிக்கப்பட்ட எந்த ஒரு ஆதாரமும் கடவுள் இல்லை என சொல்வதற்கான விடயமுமில்லை  என்பது இங்கு குறிப்பிடத்தக்கது (டார்வினின் "பரிணாமவியல்  கோட்பாடு" சித்தாந்தம் போன்றவை  கூட மண்ணுக்கு போனது நாம் அனைவரும் அறிந்த ஒன்று) 
ஆக கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என்பதை அறிந்தோ அறியாமலோ விஞ்ஞானம் பறை சாற்றி கொண்டிருக்கிறது. 
          அல்லாஹ் மிக்க அறிந்தவன் 




read more "கடவுள் இருகின்றானா?"

Wednesday, June 16, 2010

கடவுள் படைப்பில் மனிதர்களிடையே ஏற்ற தாழ்வு ஏன்?

ஓரிறையின் நற்பெயரால்
   கடவுள் மறுப்பாளர்களின் பிரதான கேள்வியாக  இன்று இது கேட்கப் படுகிறது. ஆரம்பத்தில் கடவுளை கண்முன் காட்டுங்கள் ,அவ்வாறு காட்டினால் நாங்களும் ஏற்றுக் கொள்ள தயார் என்று அறை கூவல் விட்ட பகுதறிவளர்கள்(?) உண்மையிலேயே இந்த வினா பகுத்து அறிவதற்கு உரியது என்பதை நிதர்சனமாக உணர்ந்து அதனை புறந்தள்ளி அடுத்து கையில் எடுத்த வினா தான் . . .


    உலகத்தை படைத்தது  காக்கும் கடவுள் ஏழைபணக்காரன்வறியவர், உழைப்பாளிவிவசாயி,உடல் ஊனமுற்றோர்என மக்கள் மத்தியில் பலதரப்பட்ட நிலைகளை ஆக்கியது ஏன்நீதமாக செயல் படும் கடவுள் என்று சொல்பவர் இப்படி ஏற்ற ,தாழ்வுகளை ஏற்படுத்தலாமா...?

இக்கேள்வியே படிக்கும் போது, ஆமாம்! ஏன் கடவுள் அவ்வாறு படைத்துள்ளார் ., என்று  நடுநிலையாளர்கள் கூட ஒருகணம் சிந்திக்கத்தான் செய்வார்கள். ஆம்! அச்சிந்தனையை தான் இஸ்லாமும் வரவேற்கிறது. இயற்கை மார்க்கமான இஸ்லாம் இக்கேள்விக்கான பதிலை மிக தெளிவாகவும்அழுத்தமாகவும் உரைக்கிறது. 

 அல்லாஹ் திருமறையில் 

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை (51:56)
ஆக,மனிதன் படைக்கப்பட்டதின் முழுமுதற் காரணம் அவனை வணங்கு வதற்காகவே என்பது தெளிவு! அவ்வாறு வணங்குவதற்காக படைக்கபட்ட  மனிதனின் தோற்றம் பற்றி வல்ல நாயன் கூறுகிறான்,

மனிதர்களே!  உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய ன்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;. அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்;. மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான் (4:01)

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (49:13)

  மனித சந்ததி ஒரே பெற்றோர்களிடமிருந்து உருவாயிற்று ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டே குலங்களாகவும்,கோத்திரங்ககளாகவும் பிரித்து வைக்கப்பட்டிருகிறார்கள் என்பதின் மூலம்  மனிதனின் பிறப்பின் அடிப்படையில் எந்த வித ஏற்ற தாழ்வுகள் ஏற்படுத்தபடவில்லை என்பதை மேற்கண்ட வசனத்திற்கு மேலதிக விளக்கம் இல்லாமலே புரிந்து கொள்ளலாம்.

  அடுத்து ,மிக முக்கியமாக விவாதிக்கப்படும் மனித வாழ்வில் ஏற்படும் ஏற்ற தாழ்வு பற்றி காண்போம்.

    இவ்வுலக வாழ்வு குறித்து இஸ்லாம் கூறும் இலக்கணத்தை சற்று அறிந்து கொண்டால் இந்நிலைபாடு ஏன் என புரியும்இறந்த பிறகு இருக்கும் ஒரு நிலையான வாழ்வுக்கு தன்னை தயார் படுத்தி கொள்ளவதற்க்கான ஒரு சோதனை கூடம் தான் இவ்வுலக வாழ்வு என்கிறது இஸ்லாம். 
    நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்களின் அடிப்படையில் இறந்தபிறகு அதற்காக வெகுமதியோ,தண்டனையோ இறைவன் புறத்திலிருந்து கொடுக்கப்படும் என்பதே இஸ்லாம் கூறும் மறு உலக நம்பிகை.
    எனவே இவ்வுலகம் சோதனைக்காக படைக்கப்பட்டிருப்ப்பதால் தான் மனிதர்களிடையே இத்தகையே ஏற்ற தாழ்வை இறைவன் உருவாக்கி இருக்கிறான்.


   ஏனெனில் யாராக இருந்தாலும் அவர் பெற்ற, செலவழித்த செல்வம் குறித்து நாளை(மறுமையில்) கேள்வி கேட்டபடுவார். எனவே இறைவனுக்கு பயந்து செல்வந்தர்கள் நல்ல வழியில் பொருளிட்டினார்களா? செலவு செய்தார்களா
 அதுபோல,ஏழைகள் இருக்கும் செல்வத்திற்கு அதிகமாக பெற தவறான வழியில் செல்லாமல் மேலும் பெற நியாயமான முறையில் உழைத்தார்களா... என்பனவற்றிக்காகவே அல்லாஹ் செல்வத்தை மக்களிடையே மாறி மாறி வர செய்கிறான். 


  இதனை தன் திருமறையில்...
"நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச) சோதனையாக இருக்கின்றன நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு" என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள் (8:28)

உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான், ஆனால் அல்லாஹ் - அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது.(64:15)

(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்;. உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்;. ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.(3:186)

     ஆக இளவயதில் மரணம், திடீர் விபத்துக்கள்,உடல் ஊனங்கள்குழந்தை பேரின்மைபசிவறுமைமழையின்மைபூகம்பம்இயற்கை சீற்றங்கள் போன்ற காரணங்கள் அந்தந்த குடும்ப மற்றும் சமூகங்களுக்கு சோதனையாக அமைகின்றன. 


   அத்தகைய சுழலில் அவர்களை சார்ந்தோர் எவ்வாறு செயல் படுகிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடதக்கது. சுருக்கமாக சொன்னால்... அவ்வாறு ஏற்படும்  சூழ்நிலையில் மனிதன் இறைவனுக்காக பொறுமையே மேற்கொள்கிறானா,அல்லது தன் கோபத்தின் வெளிப்பாட்டால்  தான்தோன்றி தனமாக செயல்படுகிறானா என்பதை கண்டறிவதற்கான இறைவனின் ஏற்பாடே இது ஆகும். திருமறையில்...

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன் (67:2) 

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக  (2:155)

அன்றியும், (அல்லாஹ்வின் பாதையில் போரிடும்) உங்களிலிருந்துள்ள முஜாஹிதுகளையும், பொறுமையாளர்களையும் நாம் அறியும் வரை உங்களை நிச்சயமாக நாம் சோதிப்போம்; உங்கள் செய்திகளையும் நாம் சோதிப்போம் (அவற்றின் உண்மையை வெளிப்படுத்துவதற்காக) (47:31)

   மேற்கண்ட வசனத்தின் வாயிலாக சோதிப்பதற்காகவே எந்த ஒரு இழப்பும் நம்மை வந்தடைகிறது என்பதை விளங்கலாம். உலகின் அதிபதியான அளவற்ற அன்புடையோனகிய வல்ல நாயன் அணுவளவேணும் அநியாயம் எவருக்கும் இழைத்திட மாட்டான். 


 பகுத்தறிவு பார்வைக்கு இறுதியாக ... மனித பார்வையில் கால்நடைகளும், பறவையினங்களும் வெறும் ஐயறிவு உயரினமாக தென்படும்போது., அவ்வுயிர்கள் தேவைக்காக மட்டுமே பயன்படும் நிலையில் இருக்கும் போது அவ்வுயிர்களை படைத்திட்ட உண்மை இறைவன் கூறுவதை கேளுங்கள்.

பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும் (6:38)

   மனித படைப்போடு  ஏனைய உயிரினங்களையும் ஒப்பு நோக்கியிருக்கும்  இறைவனின் நீத தன்மைக்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்? 
                                                     அல்லாஹ் மிக அறிந்தவன்           
            
            
read more "கடவுள் படைப்பில் மனிதர்களிடையே ஏற்ற தாழ்வு ஏன்?"

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்