ஓரிறையின் நற்பெயரால்
இன்று உலக மக்களில் பெரும்பாலோர் எதாவது ஒரு மதத்தை பின்பற்றுகின்றனர்.வெகு சிலர் மட்டுமே கடவுள் மறுப்பு கொள்கையே ஏற்று கொண்டிருகின்றனர். மதத்தின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட சில மூட நம்பிகைகளும்,சக மனிதரை இழிவுகுள்ளாகியதுமே கடவுள் மறுப்புக்கு பிரதான காரணமாகும்.ஆனால் இஸ்லாத்தை பொறுத்தவரை இவ்விரண்டையும் மண்ணோடு மடியச்செய்த மார்க்கம் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் அவரே உலகத்தை இயக்குகிறார் என்பதே இஸ்லாத்தின் அடிப்படை. அவ்வழியாக கடவுள் குறித்து சில கருத்துக்களை உங்களுடன் பகிர்கிறேன்.,தாங்கள் விருப்புவெறுப்பின்றி பகுத்தறிவின் அடிப்படையில் நடுநிலையோடு சிந்திக்க முற்படுங்கள்
ஒரு வீடோ, ஊரோ, பள்ளிக்கூடமோ, நிறுவனமோ, இயக்கமோ, தொழிற்சாலையோ சீராக இயங்குவதற்கு ஓர் தலைமைத்துவம் அவசியம் என்பதை நாம் நம் வாழ்வில் இயல்பாகவே அறிந்திருகின்றோம்.அதை நடைமுறையிலும் கண்டும் கொண்டிருகின்றோம் இப்பேரண்டத்தை படைத்தது அதிலுள்ள சூரியன்,சந்திரன்,நட்சத்திரம் ஆகியவற்றை உள்ளடக்கிய பால்வெளி மண்டலம் போன்றவற்றையும் மனிதர்கள் மற்றும் ஏனைய படைப்புகள் -ஆகிய அனைத்தையும் சீரான முறையில் இயங்க செய்வதற்கு ஓர் தலைமைத்துவம் வேண்டும் என சொல்லுவது பகுத்தறிவுக்கு உட்பட்ட வாதமா? இல்லையா…?
பகுத்தறிவு எனப்படுவது பொருட்களின் நிகழ்வுகளின் கருத்துக்களின் கூறுகளை அவதானித்து, ஆய்ந்து அவற்றின் இயல்புகளில் இருந்து அதாரபூர்வமாக புறவய நோக்கில் நிரூபிக்கப் படக்கூடிய முடிவுகளை முன்வைக்கும் வழிமுறையையும் அதை ஏதுவாக்கும் மனித அறிவு ஆற்றலையும் குறிக்கின்றது. பகுத்தறிவின் நோக்கம் மெய்ப்பொருளை அல்லது உண்மையக் கண்டறிவதே.
பகுத்தறிவை மூலமாக கொண்டு அறிவியலின் ஆதார அடிப்படையில் கூட இன்று கடவுள் இல்லை என்று மறுப்பதற்க்கான எந்த வழிமுறைகளும் தெளிவாக இல்லை.கடவுள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம் என்ற நிலைபாடே உள்ளது. இதன் வாயிலாக கடவுள் உண்டு என்பதை நிருபிக்க காட்ட வேண்டிய ஆதாரத்தின் அளவிற்கு கடவுள் இல்லை என்பதை நிருபிக்கவும் ஆதாரத்தை காட்ட வேண்டும்
நம்பக தன்மையின் அடிப்படையிலேயே எந்த ஒரு அறிவியல் நிருபனமும் ஏற்று கொள்ளப்படுகிறது. இறைவன் இருக்கிறான் என்பதற்கான காரணத்தை அறிவியல் ரீதியாக பார்ப்போமேயானால்,
இஸ்லாத்தை பொருத்தவரை குர்-ஆன் இறைவனுடைய வார்த்தைகள் என நம்பப்படுகிறது ஒருவர் உண்மையாளர் என அறிய அவரது கூற்று அறிவியலுக்கு முரண்படாமலும், எக்காலத்திற்கும் ஏற்றவகையில் கருத்து மாற்றம் ஏற்படாமலும் இருப்பது விஞ்ஞான ரீதியாக .அது உண்மையென்று நம்புவதற்கு போதுமானது ,அதன் அடிப்படையில் சுமார் 1400 வருடங்களுக்கு முன் குர்-ஆனில் கூறப்பட்ட எந்த ஒரு அறிவியல் செய்தியும் இன்று வரை நிருபிக்கப்பட்ட எந்த ஒரு அறிவியல் உண்மையோடும் முரண்படவில்லை,மேலும்,கூறப்பட்ட சமுகம் சார்ந்த கருத்துகள் அனைத்தும் எந்த ஒரு கால சூழலுக்கும் பொருந்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழவே இல்லை. கடவுள் இல்லை என்போர் அதை உறுதி செய்ய எந்த ஒரு அறிவியல் ஆதாரத்தையும் எடுத்து வைக்கவில்லை.இதுவரை விஞ்ஞான ரீதியாக நிருபிக்கப்பட்ட எந்த ஒரு ஆதாரமும் கடவுள் இல்லை என சொல்வதற்கான விடயமுமில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது (டார்வினின் "பரிணாமவியல் கோட்பாடு" சித்தாந்தம் போன்றவை கூட மண்ணுக்கு போனது நாம் அனைவரும் அறிந்த ஒன்று)
ஆக கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என்பதை அறிந்தோ அறியாமலோ விஞ்ஞானம் பறை சாற்றி கொண்டிருக்கிறது.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்
Tweet | |||||
No comments:
Post a Comment
ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!