ஓரிறையின் நற்பெயரால்
"மூன்றுப்பேர் இருக்கும் இடத்தில் ஒருவரை விட்டு இருவர் மட்டும் தனியே ரகசியம் பேசாதீர்கள்..! " (1)
இப்படி தனிமனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு மட்டுமின்றி அத்தகைய செயல் அந்த மூன்றாம் நபருக்கு மனரீதியாக உளைச்சலை ஏற்படுத்தும் என்பதை தெளிவாக அறிந்து இந்த செயலை தவீர்க்க சொன்னது யாரென்று உங்களால் ஊகிக்க முடிகிறதா...?
. . .
முஸ்லிமல்லாதவர்களுக்கு பெரும்பாலும் இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. குறைந்தபட்ச முஸ்லிம்களுக்கே அதிலும் மார்க்க சூழலில் வளர்ந்த முஸ்லிம்களுக்கே இவை நபிமொழிகள் என அறிய வாய்ப்புகள் இருக்கிறது.
இதற்கு யார் காரணம்...? எது காரணம்..?
தாடி வைப்பதும் , தொப்பி அணிவதும், வார நாட்களில் மற்றும் குறிப்பிட்ட தினங்களில் நோன்பு வைப்பதும், உபரியான தொழுகைகள் நிறைவேற்றுவதும் மட்டுமே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் வழிமுறை (சுன்னத்) என பொதுவாக இச்சமூகத்தில் முஸ்லிம்களால் புரிய வைக்கப்பட்டு முஸ்லிமல்லாதவர்களால் புரிந்துக்கொள்ளப் படுகிறது.
வெறும் ஆன்மிகத்தை மட்டுமே போதிக்க வந்தவர்களாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் இருந்தால் அவர்களை அல்லாஹ் குர்-ஆனில் அகிலத்தாருக்கு அழகிய முன்மாதிரி - என கூற வேண்டிய அவசியமில்லை. ஆக ஆன்மிகம் மட்டுமில்லாது., அரசியல் தொடங்கி அனைத்துத்துறைகளிலும் மக்களுக்கு உரித்தான பாடங்கள் அவர்கள் வாழ்க்கையிலிருந்து கிடைக்கபெற வேண்டும் என்பதைதான் மேற்கண்ட இறைவசனம் பறைச்சாற்றுகிறது.
பொன்மொழிகள் எனபன மனித வாழ்க்கைக்கு தேவையான விசயங்களை அறிவுரீதியாகவும், அனுபவரீதியாகவும் விளக்கிக்கூறுவதே. ஒருவர் கூறும் பொன்மொழிகளை அவரது வாழ் நாள் முழுவதும் பின்பற்றி நடந்திருப்பார் என்பதற்கு எந்த வித ஆதாரமும் தெளிவாக இல்லை!
ஆனால் நபிமொழிகள் எனபன அப்படியல்ல., நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் தம் வாழ்வில் செயல்படுத்தியது. பிறரை செயல்படுத்த தூண்டியது மற்றும் செயல்படுத்தியதற்கு அங்கீகாரம் கொடுத்தது. இவை முழுவதும் தொகுக்கப்பட்டவையே நபிமொழிகள் என அழைக்கப்படுகிறது.
சரி அப்படி அவர்கள் எதைத்தான் சொன்னார்கள்...?
கடை நிலை பாமரன் கூட நம் வாழ் நாளில் ஒன்றை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விதத்தில் அவர்கள் முன்மொழிந்த வார்த்தைகள் இருப்பது தான் கூடுதல் அழகு. ஆன்மிகத்தை அன்றாட வாழ்வியலோடு இணைத்த பெருமை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு மட்டுமே உண்டு என்றால் அது மிகையாகாது. மக்களின் அன்றாடச்செயல்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் அதை தம் வழிமுறையாக்கினார்கள் - இறைவனிடத்தில் அவை நன்மை பயக்கும் என்றார்கள். ஒருவர் இயல்பாக அதை தொடர்ந்து செய்ய ஆர்வமூட்டினார்கள். அவர்களின் கூற்றில் சிலவற்றை பார்ப்போம்.
உனது மனைவிக்கு ஒரு வாய் உணவு கவளத்தை ஆசையோடு ஊட்டுவதற்கும் இறைவனிடத்தில் நன்மை உண்டு (2) என்றார்கள். அதுமட்டுமா...
ஒருமுறை தம் தோழர்கள் மத்தியில் உரையாடியபோது
"உங்கள் மனைவியோடு வீடுக்கூடுவதற்கும் இறைவனிடத்தில் வெகுமதி உண்டென்றார்கள் - (3)
அறிவு மிகுதிபெற்ற அண்ணலாரின் தோழர்களில் ஒருவர்
" நாயகமே! எங்களது இச்சைகளை தவிர்த்துக்கொள்வதற்காக செய்யும் இச்செயல் எப்படி இறைவனிடத்தில் வெகுமதி பெற்றுதரும் என்றார்.
அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம், மனைவியோடு கூடாமல் மாற்றரோடு கூடினால் "விபச்சாரமென" அதற்கு இறைவனிடத்தில் தண்டனையுண்டல்லவா...? இறைவனுக்காக அதை தவிர்த்து ஆகுமானவற்றோடு வாழ்வதற்கே அந்த வெகுமதியென்றார்கள்.
சர்வசாதரணமாக இல்லங்களில் நாம் செய்யும் சராசரி செயலுக்குக்கூட இறைவனிடத்தில் அங்கீகாரம் உண்டு என்று இல்லறவியலுக்கு புதுவிலக்கணம் வகுத்தார்கள்.
சமூகத்தில் எல்லோரிடமும் நம்மால் நற்பெயர் பெற முடியும். அல்லது அஃது பெறுவதற்கு அவர்களுக்கு முன்னால் நம்மால் போலியாய் கூட நடிக்க முடியும். ஏன், நமது தாய், தந்தை, சகோதரங்கள், மகன் என எல்லோரிடமும் அஃது நம்மால் நற்பெயர் எடுக்க முடியும்.
ஆனால் உண்மையற்ற நிலையில் மனைவியிடத்தில் மட்டும் நற்பெயர் பெற முடியாது. ஏனெனில் இந்த உலகத்தார் அனைவரிலும் நம் அந்தரங்கங்களை அதிகம் அறிந்தவள் நம் மனைவி மட்டுமே. ஆக அவளை போலியாக நடித்து ஏமாற்றுவது என்பது எல்லா காலத்திலும் சாத்தியமில்லை. ஆதலால் தான்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம்
"மனைவியரிடத்தில் சிறந்தவரே மக்களில் சிறந்தவர்..!"- (4) என்றார்கள்.
மக்களில் சிறந்தவர் என்ற பெயரோடு நாளை இறைவனிடத்தில் செல்வதற்கு இன்று மனைவியிடத்தில் உண்மையாக நடந்துக்கொள்ள வேண்டியது கட்டாய கடமையாகிறது.
"உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் வரவேற்பதும் ஓர் நற்செயலாகும்." (5)
பெரும்பாலான குடும்ப பிரச்சனைகளுக்கு மையக்காரணம் சரியான உபசரிப்பிமின்மையே... குறைந்த பட்சம் வாங்க!.. என்று சொல்வதில் கூட ஏற்ற இறக்க உச்சரிப்புதான்!
இவை கூடாதென்று சொல்லி அதை தவிர்க்க சொல்வதோடு உரிய முறையில் அவர்களை நோக்குவதே... இறைவனிடத்தில் நன்மையை பெற்று தரும் செயல்களில் ஒன்றாக மாற்றினார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள்.
இப்படி குடும்பவியல் செயல்களை இறை நேசத்திற்கு உரித்தான செயலாக மாற்றமடைய வழிச்சொன்ன நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் பொருளியலிலும் சமூக மத்தியிலும் அதே நிலையே தான் கையாண்டார்கள்.
வட்டியே தடை செய்து வியாபாரத்தை ஊக்குவித்த நபிகள்
ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. (6) என்று ஒருவர் தம் சொந்த கால்களில் நிற்பதற்கு தன்னார்வத்தை ஏற்படுத்தினார்கள். மேலும் தேவை ஏற்படும் நிமித்தமாக பொருட்களை பதுக்கி வைத்து வியாபாரம் செய்வதையும் சபித்தார்கள்.
அண்டை வீட்டுக்காரன் பசித்திருக்க நான் மட்டும் வயிறார உண்பவன் உண்மை இறை விசுவாசியல்ல!" (7) என்று ஏனையவர்களின் மீதும் நமக்குள்ள கடமையே சுட்டிக்காட்டினார்கள். அதை செயல்படுத்தியும் காட்டினார்கள்.
இறைவழியில் உயிரை தியாகம் செய்தவராக இருந்தாலும் அவரது பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும். ஆனால் அவர் பெற்ற கடனை தவிர. (8)என கொடுக்கபட்ட கடனும், கொடுத்தவரின் நிலையும் இறைவனிடத்தில் எவ்வளவு மதிப்புடையது என்பதை தெளிவுறுத்தினார்கள்.
மக்கள் நடக்கும் நடைபாதைகளில் குறுக்கே அமர்ந்து அவர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்துவதையும், நிலக்குறிகள் மற்றும் நீர் நிலைகளுக்கு சேதம் ஏற்படுத்துவதையும் தடை செய்த (9) நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவை இறைவனின் கோபத்திற்கு ஆளாக்கும் இழிசெயல் என்றும் எடுத்துரைத்தார்கள்.
அனாதைகளின் பொருட்களை அபகரிப்பது நெருப்பை விழுங்குவதற்கு சமமானது (10) என அநியாய செயலை விளக்கி அஃது செயல்படுவோர் அதே நிலையில் இறைவன் முன் கொண்டுவரப்படுவார்கள் என்றும் எச்சரித்தார்கள்.
மேலும் அனாதைகளை பற்றிக்கூறும் போது, "அவர்களை நல்ல முறையில் பராமரிப்பவர்களும் நானும் மறுமையில் இப்படி (நெருக்கமாக) இருப்போம் என தனது ஆட்காட்டி விரலையும், நடுவிரலையும் ஒன்றிணைத்து காட்டினார்கள். (11)
பாதிக்கப்பட்டவன் மன்னிக்காதவரை என்ன தான் மிகப்பெரிய வணக்கசாலியாக இருந்தாலும் அவனை இறைவன் மன்னிப்பதில்லை. (12) என்ற நபிமொழியில் தனிமனித உரிமைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை உணரலாம்!
இன்னும் பார்த்தால்.... தெருக்களில் கிடக்கும் சிறு முள்ளை அகற்றுவதையும் ஈமான் எனும் உயர் இறையச்சத்தோடு உள்ளடக்கிய ஒரு பகுதியாக (13) நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் கூறுவதிலிருந்தே தனி மனித மற்றும் சமூகத்திற்கு பயன்படும் அனைத்துமே அவர்களது கூற்றில் அடங்கிருப்பதை சிந்தனை ரீதியாக உணரும் எவருக்கும் நிரூபணம்!
சில உதாரணங்கள் தான் இவை. இன்னும் அனேக நபிமொழிகள் இருக்கின்றன, ஆனால் அவை இந்த மனித மத்தியில் தெளிவாக வழிமொழியப்படாமல், பொன்மொழிகள் என்ற அளவிலே வைத்து பார்க்கப்படுவதால் நாம் நடைமுறைப்படுத்தும் அண்ணலாரின் வழிமுறைகள் இன்று சமூகத்தின் கவனத்திற்கு வருவதில்லை.
மேற்சொன்ன செயல்கள் மட்டுமல்ல. நாம் புது ஆடை அணிவதிலிருந்து, மரணித்தப்பின் நமக்கு வெள்ளாடை தரிக்கும் வரையிலான நிகழ்வுகளின் வழிக்காட்டுதல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் வாழ்வியலிருந்தே பெறப்படுதல் சாத்தியம் என்பதை இச்சமூகத்திற்கு உணர்த்த வேண்டும். அது எல்லோராலும் எளிதாகவும் பேணப்படவும் முடியும் என்பதையும் தெளிவுறுத்த வேண்டும்.
நபிகளாரின் செய்கைகளை நினைவூட்டுவதற்காக வருடத்திற்கு ஒரு முறை அவர்கள் மீது புகழ்பாக்களாக படிப்பதால் அதை உணர்த்த முடியாது! அதற்கு அவர்களின் வழிமுறைகளில் ஒவ்வொன்றையும் முடிந்த அளவிற்கு பின்பற்றி வாழ்வதே பொருத்தமானது!
ஏனெனில் நாம் இச் சமூகத்தில் செய்யும் ஒவ்வொரு நற்கருமங்களும் அவர்களின் வாழ்வியல் வழிமுறை என்பதை விளக்க வேண்டும் அப்போது அவர்கள் மீது நாம் கொண்ட நேசத்தை உண்மைப்படுத்துவதாக பொருள். மாறாக அவர்களை மிகைப்படுத்தி புகழ்வதில் இல்லை.
முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள்:
முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தான தலைவர் என்ற மாயை எண்ணத்தை அகற்றுங்கள். ஏனெனில் அதற்காக மட்டும் தான் அவர்களின் வருகை இருந்திருந்தால் தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற மார்க்க கடமைகளை விவரிப்பதோடு அவர்களின் பணி முடிவுற்று இருக்கும்.
ஆனால் அவர்களின் இறுதி பேரூரையில்
"பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்! மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை.....
இப்படி -வர்த்தக ரீதியாக பிரிக்கப்பட்டிருக்கும் மக்களின் எதார்த்த வாழ்வை மையப்படுத்தி கூறினார்கள். அரேபியர்களுக்கோ ஒரு இனத்திற்கோ தனிப்பட்ட முறையில் அவர்களின் வரவு அமைந்திருந்தால் இப்படி சொல்லவேண்டிய அவசியமே இல்லை. யாராக இருப்பினும் இறைவன் முன் அனைவரும் சமம் என்றே பிரகடனம் படுத்தினார்கள். ஆக குர்-ஆன் எப்படி மானிட சமூகத்திற்கு பொதுவான நூலோ அதுப்போலவே நபிகளும் இந்த மனித சமுதாய முழுமைக்குமான தலைவர்!
அல்லாஹ் நன்கு அறிந்தவன் .
நீல நிறத்தில் இருப்பவைகள் அனைத்தும் சஹீஹான ஹதிஸ்களே. எளிதாக புரிந்துக்கொள்வதற்காக இயல்பு தமிழில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஹதிஸ் விபரம்:
01.அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் : புகாரி
02. அறிவிப்பவர் : ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) நூல் : புகாரி 56
03.
04. அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : திர்மிதி எண்: 1082
05. அறிவிப்பாளர்கள்: அபூதர் (ரலி) நூல் : திர்மிதி 2022, 2037)
06. நூல் : புஹாரி,எண் 2072
07. அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி); நூல் : மிஷ்காத்
08. அறிவிப்பாளர்: சலமா பின் அக்வஃ (ரலி) நூல் புகாரி: 2289
09. அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி). நூல் : புஹாரி.
10.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (2766) முஸ்லிம்.
11. அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம், திர்மிதி (1983)
12. அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி 2448
13.
Thanks to
Imam Nazir Ali M.A (Masjid India@ Kuala Lumpur)
கையளவு உலகம் Ayusha Begum.
Reference:
சித்தார்க்கோட்டை.காம்
மனிதக்குல வழிக்காட்டி நபிகள் நாயகம் (ஸல்) - PJ
பெருமானாரின் பொன்மொழிப்பேழை - Abdur Rahim
பொற்புதையல் - Altaf hussain

Tweet | |||||
ஸலாம் சகோ.குலாம்....
ReplyDeleteபெருமானாரின் அருமையான வழிகாட்டுதல்கள்.
பகிர்வுக்கு நன்றி சகோ.
//முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள்:
முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தான தலைவர் என்ற மாயை எண்ணத்தை அகற்றுங்கள்.//
---வழிமொழிகிறேன்..!
வ அலைக்கும் சலாம் வரஹ்
Deleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ!
மைக்கேல் ஹார்ட் : மைக்கேல் ஹார்ட் மனித குல மேம்பாட்டிற்காக பங்காற்றிய சிறப்புக்குரியவர்களின் தொகுப்பை எழுதும் போது விவரிக்கின்றார்
ReplyDeleteஉலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, முஹம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம்.
சமயஞ்சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே!
1400 ஆண்டுகள் கழிந்த பின் இன்றும் அவர்களுடைய வாழ்வும் வாக்கும் குறைக்கப்படாமலும் கூட்டப்படாமலும் எந்தவொரு மாற்றமுமின்றி நமக்கு அப்படியே கிடைக்கின்றன.
மனித சமுதாயத்தின் பெரும் பிரச்சினைகளை அப்போதனைகள் அன்று தீர்த்து வெற்றி கண்டதைப் போலவே இன்றும் தீர்க்கும் வல்லமை வாய்ந்தவையாய் இருக்கின்றன.
இதுவே வாய்மையாய் யாம் உலகிற்கு மொழியும் கூற்றாகும். வரலாற்றை ஆராயும் ஒவ்வொருவருக்கும் தென்படும் தவிர்க்க முடியாத முடிவாகும்.
புகழ் மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள். சட்டங்களை இயற்றினார்கள். பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவை தான்!
பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்து விட்ட உலகாயதக் கோட்டைகளைத் தான் அவர்களால் நிறுவ முடிந்தது.
ஆனால் முஹம்மத் (ஸல்) அவர்களோ போர்ப்படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள், அரசவம்சங்கள் ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டும் வெற்றி கொள்ளவில்லை. அவற்றுடன் அன்றைய உலகின் மூன்றிலொரு நிலப்பரப்பில் வசித்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களையும் ஈர்த்தார்கள்.
வழிபாட்டுத் தளங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துக்களையும், கொள்கையையும், நம்பிக்கைகளையும், ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களைப் பதித்தார்கள்.
வெற்றியின் போது அவர்கள் காட்டிய பொறுமை, பணிவு, சகிப்புத் தன்மை, தாம் ஏற்றுக் கொண்ட பணிக்காக தம்மையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட அவரது உயர் நோக்கம், ஆழ்ந்த விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் கொள்ளாமல் உலகப் பற்றற்று வாழ்ந்து வந்த நிலை, அவர்களின் முடிவில்லாத தொழுகைகள், பிரார்த்தனைகள்,
இறைவனுடன் அவர்கள் நடத்தி வந்த மெஞ்ஞான உரையாடல்கள், அவர்களின் மரணம், மரணத்திற்குப் பின்னரும் அவர்கள் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர்கள் ஓர் ஏமாற்றுக்காரர் என்றோ,மோசடி குணம் உடையவர் என்றோ பறை சாற்றிடவில்லை.
மாறாக, சமயக் கொள்கை ஒன்றை நிலைநாட்டிட அவர்களுக்கிருந்த மனோ உறுதியைத் தான் பறைசாற்றுகின்றன.
“டாக்டர் அம்பேத்கார்" : பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் மனிதனாக வாழ வழி செய்த முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள் கிடையாது.
திவான் சந்த் : முஹம்மது இரக்கமே உருவானவர். அவரது இரக்கம் அவரைச் சுற்றியுள்ளவர்களைக் கவர்ந்திழுத்தது. - திவான் சந்த் ஷர்மா (D.C.Sharma – The Prophets of the East Calcutta 1935 pp 12)
**********
வில்லியம்மூர் :சர்வ சக்தியும் படைத்த இறைவன் தனக்குத் துணையாக நிற்கிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நபிகள் நாயகம் அவர்களுக்கு இல்லாதிருந்தால் இவ்வளவு பிரமாண்டமான சாதனைகளை அவர் சாதித்திருக்கமுடியாது.
தாமஸ் கார்லைல். : நபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப்புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை. கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும்.-
கிப்பன்.: அறம் செய்வது எப்படி என்பதைப் பற்றி தெளிவாக திட்டவட்டமாக வரையறுத்துக் கூறிய ஒரே ஒரு சட்டமேதையாக விளங்குபவர் முஹம்மது நபி ஒருவரே. –
*********
டால்ஸ்டாய் :நாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது,
பல நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி,
அவர்களை மெய்யான வாழ்க்கையின் பக்கம் இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமை வெறும் நாவினால் புகழ்ந்து விடக்கூடியதல்ல.
வாஷிங்டன் இர்விங் : இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவர் மறுக்க முடியும்?
-
ஜவஹர்லால் நேரு. முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும். –
ReplyDeleteநெப்போலியன் திருக்குர்ஆனுக்கும் தூதர் முஹம்மது அவர்களுக்கும் என் விசுவாசத்தை வழங்குகிறேன். குர்ஆனின் கொள்கைக்கு இணங்க ஒரே விதமான ஆட்சியை உலகெங்கும் நிறுவக்கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை. –
“கவிக்குயில்” சரோஜினி நாயுடு
எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது.
எனது முன்னோர்கள் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு தத்துவ ஞான உபதேசம் செய்து கொண்டிருந்த காலத்தில் அரபுநாடு அந்தகாரத்தில் மூழ்கிக் கிடந்தது.
அநாகரிகமும் காட்டுமிராண்டித்தனமும் அங்கு குடி கொண்டிருந்தன. புத்தர், புத்தகயாவில் போதி மரத்தடியிலும் சாரநாத்திலும் நிர்வாணம் பற்றி பிரச்சாரம் செய்து கொண்டிருந்த காலத்தில் உலக ஜனநாயம் என்றால் என்னவென்றே ஒருவருக்கும் தெரியாது. ஆனால் அது எதிர்த்தும் போரிடப்பட்டது. கால்களால் மிதித்துத் துவைக்கப்பட்டது.
எனவே, ஆரேபியாவிலே ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு மனிதர் இறுதியாக இந்த உலகில் தோன்றி ஏக சகோதரத்துவத்துக்கு ஒரு சரியான விளக்கம் கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.
எந்த விதமான உயர்வும் தாழ்வும் வேற்றுமையும் இல்லாத மக்களைக்கொண்ட ஒரு ‘குடிஅரசு’ எப்படி இருக்கவேண்டும் என்பதை அவரே விளக்க வேண்டியிருந்தது.
ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த இந்த மனிதர் யார்? இவர் உலகத்துக்கு நம்பிக்கையூட்டும் நல்ல செய்தியைக் கொண்டு வந்தது ஏன்?
பல பெரிய மதங்கள் மீது மாசு படிந்து விட்டது.
அந்த மதங்களின் குருமார்கள் இழைத்த கொடுமைகள் சகிக்கமுடியவில்லை. என வேதத்துக்கு மாசு கற்பித்த அந்தக் கொடுமைகளிலிருந்து விடுதலைபெற வேண்டும் என்று இந்த உலகம் விழைந்தது.
உலக மக்களுக்கு அவ்வப்போது இழைக்கப்படுகின்ற கொடுமைகளிலிருந்து அவர்களை எப்படியாவது விடுவித்து வருகின்ற ஆண்டவன் இந்த சாதாரண பாலைவன மனிதரின் இதயத்திலே, ‘ஆண்டவன் ஒருவன்’ என்ற உண்மையை உணர்த்தினான்.
ஆண்டவனால் படைக்கப்பட்ட மக்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற உண்மையை உணர்த்த இந்த ஏக தெய்வக் கொள்கையே போதிய ஆதாரமாயிருக்கிறது.
மேல் நாடுகள் எதையெல்லாம் புதிய கருத்துக்கள் என்றும் மகத்தான சாதனைகள் என்றும் கூறுகின்றனவோ, அவையெல்லாம் அந்த அரேபியாவின் பாலைவனச் சோலையிலே விதைக்கப்பெற்ற வித்துக்களின் விருட்சங்களேயன்றி அவற்றில் புதியது ஒன்றுமில்லை.
இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்?
பாரசீக இலக்கியம் ஆரியர்களுடையது என்று சொல்லிக்கொண்டு அதனை ஆர்வத்துடன் படிக்கின்றனர். சிலர் ஆனால் அந்த அழகிய மொழிக்கு ஆண்மையும் வீரமும் அளித்தவர்கள் அரபு நாட்டுப் போர் வீரர்கள் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்? -கவியரசி சரோஜினி நாயுடு
என்சைக்ளோபீடியா ப்ரிட்டானிகா முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி:
லா மார்ட்டின்: இறைத்தூதர்களிலேயே அதிகமாக வெற்றியடைந்தவர் முஹம்மதுதான்.
இந்த உலகம் சார்ந்த இருபது சாம்ராஜ்ஜியங்களையும் மறுமை சார்ந்த ஆன்மிக சாம்ராஜ்ஜியத்தையும் நிறுவியவ ஒருவர் முஹம்மது.மனிதனுடைய பெருமையையும் புகழையும் அளக்கக்கூடிய எந்த அளவுகோலை வைத்துப் பார்த்தாலும், முஹம்மதைவிட சிறந்த ஒருவரை நாம் காட்ட முடியாது.
–ஹிஸ்டரி துலா துர்கி (ஃப்ரெஞ்ச்), பாரிஸ்,1854, பாகம் 11, பக்கங்கள் 276-277.
******
பெர்னாட்ஷா.:அருமையான உயிர்த்தன்மை காரணமாக, முஹம்மதின் மார்க்கத்தை நான் எப்போதுமே ஒரு உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறேன். மாறிக்கொண்டே இருக்கின்ற இந்த உலகில், எல்லாவற்றையும் இணைக்கும் தகுதி படைத்த ஒரே மதமாக இஸ்லாம்தான் உள்ளது.
ReplyDeleteஎல்லாக் காலங்களிலும் கவரக்கூடியதாக அது இருக்கும்.
முஹம்மதை நான் அலசி ஆராய்ந்து பார்த்துவிட்டேன்.
முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்கு பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன்.
அவர் மனிதகுலத்தைக் காக்க வந்தவர் (Saviour of Humanity). இந்த நவீன உலகின் சர்வாதிகாரியாக அவரைப் போன்ற ஒருவர் வருவாரேயானால், இன்றைக்கு மிகவும் அவசியமான தேவைகளாக இருக்கின்ற அமைதியையும் சந்தோஷத்தையும் கொண்டு வந்த பிரச்சனைகளைத் தீர்க்க அவரால் மட்டுமே முடியும்.
இன்று இருப்பதுபோல, வருங்காலத்திலும் முஹம்மதின் மார்க்கம் ஐரோப்பாவால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மார்க்கமாகவே இருக்கும் என்று நான் தீர்க்கதரிசனம் சொல்வேன்.
அடுத்த நூறு ஆண்டுகளில் இங்கிலாந்தை, ஏன் இங்கிலாந்தை, ஐரோப்பாவையே ஆளக்கூடிய வாய்ப்பு ஒரு மதத்துக்கு இருக்குமானால் அது இஸ்லாமாகத்தான் இருக்க முடியும். - ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, த ஜெனியுன் இஸ்லாம்.The Genuine Islam, Singapore, Vol. 1, No. 8.1936).
******
பாஸ்வொர்த் ஸ்மித் : போப்புக்கான பாசாங்குகளும், சீசருக்கான படையணியினரும், பாதுகாவலர்களும், அரண்மனையும், நிரந்தர வருமானவும் இல்லாமல், ஒரே சமயத்தில் சீசராகவும் போப்பாகவும் இருந்தவர் முஹம்மது.
தெய்விக கட்டளை கொண்டு ஆண்ட ஒரு மனிதன் உண்டென்றால் அது முஹம்மதுதான்.-–Mohammad and Mohammadanism, லண்டன்,1874, பக்கம் 92.
அன்னிபெசண்ட் அரேபியாவின் மாபெரும் தீர்க்கதரிசியான முஹம்மதுவின் வாழ்க்கையையும்,அவர் எப்படி வாழ்ந்தார், எப்படி வாழக் கற்றுக் கொடுத்தார் என்று படிக்கும் யாருக்கும் அவர் மீது மரியாதை தவிர வேறு எதுவும் ஏற்படாது. –, The Life and Teachings of Muhammad, சென்னை,1932, பக்கம். 4.
மகாத்மா காந்தி; கோடிக்கணக்கானவர்களின் இதயத்தில் விவாதத்துக்கு இடமில்லாத வகையில் இடம் பிடித்த ஒருவரின் வாழ்க்கையை அறிந்து கொள்ள விரும்பினேன்…
இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்ற உண்மை எனக்கு தெள்ளத் தெளிவாக விளங்கியது. - ,’யங் இந்தியா’ பத்திரிக்கையில் 1924ல் எழுதியது.
வாஷிங்டன் இர்விங்: இஸ்லாத்தின் பிடிவாதமான எளிமை, இறைத்தூதர் முஹம்மதுவின் பரிபூரணமான சுயநலமற்ற தன்மை, கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் அவர் வைத்திருந்த மரியாதை,
தன் தோழர்கள் மீதும் தன்னைப் பின்பற்றியவர்கள் மீதும் அவர் கொண்டிருந்த அளவற்ற பிரியம், தீவிரமான அர்ப்பணம், அவரது வீரம், எதற்கும் அஞ்சாத தன்மை,
கடவுள்மீது அவர் வைத்திருந்த பரிபூரண நம்பிக்கை, அவருக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட பணி மீது இருந்த கடமையுணர்வு இவைதான் இஸ்லாம் பரவுவதற்குக் காரணம்.
ஒவ்வொரு தடையையும் மீறி இஸ்லாம் வந்தது இவைகளால்தான். வாளால் அல்ல. நபிகள் நாயகம் பற்றிய இரண்டாம் பாகத்தை நான் படித்து முடித்து மூடியபோது, அந்த மகாவாழ்க்கை பற்றிப் படிக்க மேலும் இல்லையே என்று எனக்கு வருத்தமாக இருந்தது.
ராணுவ வெற்றிகளின்போது, மற்றவர்களிடம் ஏற்படுவதைப்போல, பெருமையோ வீண் பேச்சோ முஹம்மதுவிடம் ஏற்படவில்லை. துன்பத்திலும் துயரத்திலும் உழன்று கொண்டிருந்தபோது எப்படி எளிமையாகத் தோன்றினாரோ, நடந்து கொண்டாரோ, அப்படியே வெற்றியின் உச்சியில் இருந்த போதும் இருந்தார்.அநாவசியமாக தனக்கு மரியாதை தரப்படுவதை அவர் வெறுத்தார். - –, Life of Muhammad, நியூயார்க், 1920.
********
தாமஸ் கார்லைல்: ரொம்ப உற்சாகமாக நம்மவர்கள் முஹம்மதைப் பற்றிச் சொன்ன பொய்களும் அவதூறுகளும் நம்மையே கேவலப்படுத்துவதாக உள்ளது.–. Heroes and Hero Worship and the Heroic in History, 1840.
ஜவஹர்லால் நேரு: முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும்.
எஸ். எச். லீடர்: துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், ‘முஹம்மது ஒரு சரித்திர நாயகர்’ என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள்.
முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தான தலைவர் என்ற மாயை எண்ணத்தை அகற்றுங்கள். ஏனெனில் அதற்காக மட்டும் தான் அவர்களின் வருகை இருந்திருந்தால் தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற மார்க்க கடமைகளை விவரிப்பதோடு அவர்களின் பணி முடிவுற்று இருக்கும். //////
ReplyDeleteஇதை நான் வழிமொழிகிறேன்
வ அலைக்கும் சலாம் வரஹ்
Deleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ!
பா.ராகவன்: ஒரு மனிதரின் பிறப்பே எப்படி முக்கியத் தருணமாகும்? என்கிற கேள்வி எழலாம்.
ReplyDeleteமற்ற இறைத்தூதர்களைப் பற்றிய தகவல்களுக்கு நாம் புராணக் கதைகளையே ஆதாரங்களாகக் கொள்ள வேண்டியிருக்கிற நிலையில், இவர் ஒருவரைக் குறித்த விவரங்களை மட்டும்தான் கதைகளிலிருந்து அல்லாமல், சரித்திரத்தின் பக்கங்களிலிருந்தே நாம் பெற முடிகிறது.
காலத்தால் நமக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது மட்டுமே இதற்குக் காரணமல்ல. அவரது காலத்தில் வாழ்ந்தவர்கள், அவருடன் நேரில் பழகியவர்கள், அவரது பிரசங்கங்களை, போதனைகளைக் கேட்டவர்கள் எழுதிவைத்த குறிப்புகள் ஏராளமாக இருக்கின்றன.
முகம்மது குறித்த ஒவ்வொரு தகவலும் பல்வேறு நிலைகளில் சரிபார்க்கப்பட்டு, ஒப்புநோக்கப்பட்டு, அவருடன் நேரடியாகப் பழகியவர்கள் விவரித்துள்ளவற்றுடன் பொருந்தினால் மட்டுமே அச்சேறின.
இதனால், முகம்மது குறித்த விவரங்களின் நம்பகத்தன்மை பற்றிய அத்தனை கேள்விகளும் அடிபட்டுப் போய்விடுகின்றன.
ஆதாரம் இல்லாத ஒரு குட்டிக்கதை, கதையின் ஒருவரி... ஒரு சொல் கூடக் கிடையாது. - பா.ராகவன்
கீழ் உள்ள சுட்டியை சொடுக்கி படிக்கவும்.
>>> சித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்மது நபி, இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வைத்ததில்லை. - பா.ராகவன் <<<
.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
Deleteஅன்பிற்கினிய அப்பா
அண்ணலார் பற்றி அறிஞர் பெருமக்கள் கருத்துக்கள் !
மாஷா அல்லாஹ் அழகிய மேற்கோள்கள் அளித்தமைக்கு
ஜஸாகல்லாஹ் கைரன்
சலாம் சகோ.
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ். நல்ல முயற்சி. தெளிவான விளக்கங்கள். ஏக இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இதற்க்கான கூலியை வழங்குவானாக. ஆமீன்.
வ அலைக்கும் சலாம் வரஹ்
Deleteஅன்பு சகோ
வருகைக்கும் கனிவான துஆவிற்கும் நன்றி
அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நன்மையை ஏற்படுத்துவனாக!!
சலாம் சகோ குலாம்!
ReplyDeleteஅழகிய நபி மொழிகளை தந்ததற்கு வாழ்த்துக்கள்.
வ அலைக்கும் சலாம் வரஹ்
Deleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ
ஜஸாகல்லாஹ் கைரன்
பாஸ் தமிழ்ல இல்லாத நீதி நூல்களா, இல்லை அறிவுரை நூல்களா ...அவை அனைத்தும் நபி பிறப்பதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உள்ளது..." யாது ஊரே யாவரும் கேளிர் ..பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் " இப்படியெல்லாம் நபிக்கு முன்னாடியே சொல்லிட்டாங்க ...தமிழ் மட்டும் இல்ல கிரேக்கம் சமஸ்கிருதம் என மூத்த மொழிகள்ல எல்லாத்துலேயும் என்ன பண்ணனும் , என்ன பண்ண கூடாது ன்னு ரொம்ப முன்னாடியே சொல்லிட்டாங்க ... நீங்க ஒரு அதி தீவிர அல்லா/நபி ரசிகர் மனநிலைல இருந்து இந்த பதிவ எழுதி இருக்குரமதிரித்தான் எனக்கு தோணுது
ReplyDeleteசலாம் பாஸ்!.,
Deleteயாதும் ஊரே யாவரும் கேளீர் உலக சகோதரத்துவத்திற்கு ஒரு நச்! கருத்து
திருக்குறளில் இல்லாத நீதிக்கருத்துக்கள் உலகில் குறைவு...
சரிதான்...
மேற்கண்டவற்றை சொன்ன கணியன் பூங்குன்றனாரும் - நம்ம வள்ளுவரும் அச்சொல்லின் படி வாழ்ந்தார்களாக என்பதே என் கேள்வி...
இன்னும் சொல்லப்போனால் மேற்கண்டவர்களின் வாழ்வியல் சம்பவங்களைக்கூட நாம் புனைவுகளாக தான் வைத்திருக்கிறோம்.
ஏனெனில்
சொல்வன யார்க்கும் எளியனவாம் அஃது
சொல்லிய வண்ணம் செயல்
என்று பல்லவன் பஸ்களில் மட்டும் முகம் பார்த்து பழகிய வள்ளுவர் சொன்னதை உண்மைப்படுத்தவே இவ்வாக்கம்!.
நபியவர்கள் எதை சொன்னார்களோ அதை செயல்படுத்தவும் செய்தார் என்பதை ஆக்கத்தில் மையப்படுத்தி தான் வைத்திருக்கிறேன்.
அல்லாஹ்விற்கு ரசிகன் தேவையில்லை
விசுவாசி மட்டுமே போதும்.
நபிகளாருக்கு... ?
ஓய்வு நேரங்களில் அவர்களின் வாழ்வியலை படித்து அறிந்துக்கொள்ள முற்படுங்கள். உங்களுக்கே தெளிவாய் புரியும்!
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteநல்லதொரு இடுக்கை, இதற்கு மேலும் அழகு சேர்த்தது வாஞ்சூர் அப்பாவின் பின்னூட்டங்கள்.
--------------------
@வாஞ்சூர் அப்பா : யார் என்னா சொன்னா என்னா, நான் என்ன சொல்றேன்னு பாருங்க ( இது என்னை பற்றியது அல்ல --- விளங்கிடும்ன்னு நினைக்கிறேன் அனைவருக்குமே )
வ அலைக்கும் சலாம் வரஹ்
Deleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ
அஸ்ஸலாமு அலைக்கும் ! நபிகள் (ஸல்) அவர்களை பற்றிய நல்ல கட்டுரை. சகோதரர் குலாம் அவர்களே ! ஏராளமான நபி மொழியை பதிவு செய்திருக்கும் நீங்கள், நூல்களின் பெயர்களை நீங்கள் குறிப்பிடவில்லை என்பது ஒரு குறையே. அதில் கவனம் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வரஹ்
Deleteஉண்மைதான்!
இருந்தாலும் முஸ்லிம் அல்லாத சகோதர்களுக்கும் எளிதாக புரிவதற்காக
//நீல நிறத்தில் இருப்பவைகள் அனைத்தும் சஹீஹான ஹதிஸ்களே. எளிதாக புரிந்துக்கொள்வதற்காக இயல்பு தமிழில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.//
என்று குறிப்பிட்டு தான் இருக்கிறேன் சகோ.,
பெரும் பாலும் புஹாரி, முஸ்லிம் மற்றும் மிஸ்காத் நபிமொழி தொகுப்புகளிலிருந்தே ஹதிஸ் திரட்டப்பட்டது
இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் ஆதார நூல் ஹதிஸ் எண் இணைத்து வெளியிடுகிறேன்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
Deleteஹதிஸ்கள் தொகுப்புக்களும் இணைக்கப்பட்டிருக்கிறது சகோ!
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரா !
ReplyDeleteதங்களின் ஆக்கமும் , கருதுக்குரிய விளக்கமும் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் . எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே எல்லா புகழும் .
வ அலைக்கும் சலாம் வரஹ்
Deleteஅல்ஹம்துலில்லாஹ்!
வருகைக்கும் கனிவான உங்கள் துஆவிற்கும் நன்றி
ஜஸாகல்லாஹ் கைரன் சகோ
சலாம் சகோ.....
ReplyDeleteமாற்று மதத்தினரும் ஏற்று கொள்ளும் நபிமொழிகள்...நன்றி...
வ அலைக்கும் சலாம் வரஹ்
Deleteகருத்திற்கும் வருகைக்கும் நன்றி சகோ
And some more points.
ReplyDelete1. You can marry 9 yrs girl
2. You can marry your daughter-in-law
3. You should kill atheist
4. You can marry upto 4 womens or girls
5. You can beat your wife
Wow.. what a religion. I respect it.
மனைவிக்கு அத்தனை சிறப்புகள் சொன்ன நபிகள், எளிதாக தலாக் சொல்லி அத்துவிடுவதற்கும், ஒன்றுக்கு மேல் கட்டிக்கொண்டு பெண்களை இழிவுபடுத்துவதற்கும் வழிசெய்யாமலிருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
ReplyDeleteஜிகாத் என்ற பெயரில் குண்டுவைத்து கொல்லும் பாதகர்களுக்கும் நச்சுன்னு நாலு வார்த்தை சொல்லியிருந்தால் இன்னும் சந்தோசமாக இருந்திருக்கும்.
ம்ம்ம்ம் என்னத்த சொல்லி என்னத்த செய்ய....
முழுசா இஸ்லாமியர்களாக இருக்கும் அனேக நாடுகளில்தான் இன்னும் நிம்மதி கிடைத்தபாடில்லை.
அல்லா அவர்களுக்கு முதலில் கருணை காட்டினால் நல்லது.
அன்பு சகோ தமிழ் மற்றும் ஆங்கில அனானிக்கு.,
ReplyDeleteஉங்கள் கோபங்களை தர்க்கரீதியான கேள்விகளாக மாற்ற முயல்கிறீர்கள்., அது தவறில்லை. ஆனால் அவைகளுக்கு ஆதார நிருபணம் வேண்டும். சில ஆங்கில தளங்கள் நபிகள் வாழ்வை விமர்சித்து வெளியிடும் ஆக்கங்களை தமிழ்படுத்தி இங்கே பதியும் சில போலி பகுத்தறிவாதிகளின் ஆக்கங்களை படித்து கேள்வி எழுப்புவதில் பயனில்லை சகோ., நான் எப்போதும் சொல்லும் ஒன்று இது தான்! விமர்சிக்கும் நாம் அதை முழுமையாக விளங்கிக்கொண்டு விமர்சிக்கவேண்டும். பொத்தாம் பொதுவாக ஒன்றை விமர்சித்தல் பயனற்றுத்தான் போகும்.
சரி விடுங்கள்.,
ஆக்கத்தில் குறிப்பிட்டதுப்போல நபிகளாரின் வாழ்வியலில் ஒவ்வொன்றும் மிக துல்லியமாக பதியப்பட்டிருக்கிறது.,
நீங்கள் குறிப்பிடும்
இளவயது திருமணம்
விவாகரத்து
பலதாரமணம்
முஸ்லிமல்லாதவர்களை கொல்லுங்கள்
இன்னும் நீங்கள் கேட்க மறந்த
அதிக திருமணங்கள்
போர்கள்
குர்-ஆன் நபிகள் உருவாக்கியது
போன்ற அனேக குற்றச்சாட்டுகள் பலவற்றிற்கு தெளிவாக ஏற்கனவே பதில் பதியப்பட்டிருக்கிறது .,
குற்றச்சாட்டிற்கு இந்த சுட்டியை பார்வையிடுங்கள்
நபிகள் குறித்து சில ஆக்கங்களும் இந்த தளத்தில் பதியபட்டு தான் இருக்கின்றன
குறைந்த பட்சம் உங்கள் பெயர்களை முன்னிருத்தி பின்னூடமிடுவதற்கு கூட நேர்மையில்லை.,
இதில் பிறரை குற்றச்சாடுதல் தான் வேடிக்கை!
அடுத்த முறை., உங்கள் பெயர்களிலே பின்னூட்டமிடுவீர்களே என நம்புகிறேன்
குற்றச்சாட்டிற்கு இந்த சுட்டியை பார்வையிடுங்கள்
Deletehttp://iraiadimai.blogspot.com/p/non.html
Thanks for your reply. I can easily post my name, i accept i am afraid to talk openly to islam becoz they threatened. Better advice your people to tolerate the freedom of speech of atheist or others. I think you are the first muslim blogger post my comments. Once again thanks for your info. I will read and revert if i have any doubts on that..
DeleteThanks,
Senthilkumar
அன்பு சகோ செந்தில் குமார்.
Deleteபெயர் பதிந்தமைக்கு நன்றி!.,
ஏன் பெயர் குறிப்பிட சொல்கிறேன் என்றால் அப்போது தான் நீங்கள் எழுப்பும் கேள்விகள் அல்லது குற்றச்சாட்டுகள் எந்த சார்புடையது என்பதை ஓரளவிற்கு ஊகிக்க முடியும். அதற்கொப்ப பதில் தர முடியும்
ஏனெனில் இங்கு முஸ்லிம் பெயர்களிலும் முகவரியற்றவர்களும் சிலர் நேர்மையற்று தான் எப்படியும் இருக்கலாம். ஆனால் இஸ்லாத்தை தாக்கி எழுத வேண்டும் என்ற ஒரே பேராவாலுடன் தங்களின் எழுத்துகளை வலம் வர செய்கின்றனர்.
சரி விசயத்திற்கு வருவோம். முஸ்லிம்களை அவர்கள் சார்ந்த கோட்பாடுகள் கொள்கைகள் அத்துமீறி விமர்சிக்கப்படும் போது உணர்வு ரீதியான ஆட்பட்ட சில சகோதரங்கள் கடும் சொல்லை பிரயோகிக்கத்தான் செய்கிறார்கள். அது தவறு தான் அப்படிப்பட்டவர்களின் எந்த பேச்சும் உங்கள் மனது புண்படும்படி இருப்பீன் முஸ்லிம் என்ற முறையில் அதற்காக நான் உங்களிடம் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.
ஆனால் பாருங்கள் முஸ்லிம் பதிவர்களின் பேச்சுகளில் மன உளைச்சல் அடைவதாக குறிப்பிடும் நீங்கள்
//Wow.. what a religion. I respect it.//
இப்படி தான் கருத்திடுகிறீர்கள்... இவை தான் தவீர்க்கபட வேண்டுமென்கிறேன்.
எனினும் எந்த ஒன்றையும் விவாதிக்க நடு நிலை வேண்டும் சகோ நமக்கு தெரியாத விசயங்களில் நான் சந்தேகிக்க அல்லது குற்றம் சாட்டத்தான் முடியும். அஃதில்லாமல் தெரிவுத்தப்பட்ட கருத்துக்கள் போல நாமே முன்முடிவுகளுடன் எதையும் அணுகும் போது தெளிவான பதிலும் பயனற்று தான் போகும்.
கொடுத்த சுட்டியை பார்வையிடுங்கள்.
மாற்றுக்கருத்து இருப்பீன் மற்றவை பிற -இன்ஷா அல்லாஹ்
உங்கள் சகோதரன்
டெம்போரல் வலிப்பு இருந்தது . அதனால்தான் அவர் தன்னிடம் ஜிப்ரீல் பேசுவதாக நினைத்துகொண்டார் என்று இங்கே பலர் கேட்டதற்கு பதிலே சொல்லவில்லையே?
ReplyDeleteஅவருக்கு டெம்போரல் வலிப்பு இல்லை. உண்மையிலேயே ஜிப்ரீல் வந்து பேசினார் என்று நம்புகிறீர்களா? அதற்கு என்ன ஆதாரம் என்று சகிர் கேட்டதற்கும் நழுவி போய்விட்டீர்களே.
வாங்க சகோ அனானி
Deleteஷகீர்
அண்ணன் போயி இப்போ அனானியா வந்திருக்கீங்க...
நான் ஏற்கனவே தெளிவாய் சொல்லி இருக்கிறேன். ஒருவருக்கு ஏற்படும் நோயின் கடுமையின் போது மனமும் உடலும் ஒருங்கே செயல்புரியாது. பிறழ்வுகள் தான் ஏற்படும். ஆனால் குர்-ஆனில் எங்கும் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களோ அல்லது பகுத்தறிவிற்கு ஒவ்வாத கருத்துக்களோ இல்லை.
மேலும் அவருக்கு அந்நோய்
எப்போது
எங்கே
எதனால்
ஏன் ஏற்பட்டது? - இதையும் தெளிவாக கேட்டுருக்கிறேன்.
மேலும் குர்-ஆன் முஹம்மது நபிகளின் வார்த்தையாக இருக்க வாய்ப்பில்லையென்பதையும் விளக்கி அதற்கு ஒரு சுட்டியும் கொடுத்து பதிலும் கேட்டிருக்கிறேன். எங்கே போனார் உங்கள் சகீர்? அதற்கு இதுவரை பதிலை காணோம்.
சகோ அனானி அவரிடமே கேளுங்கள் எத்தனை கேள்விகளை முன்னிருத்தியிருக்கிறேன். எனக்கு அதிக நேரமில்லை. கிடைக்கும் நேரங்களையும் சகீர் போன்றவர்களுடன் பேசி வீணடிக்க விரும்பவில்லை. எத்தனை அழகான முறையில் சிலர் விவாதித்து வருகிறார்கள் -அதுவும் முகவரியுடன்...
ஒருக்கொள்கையே விமர்சிப்பது எளிது. தான் கொண்ட கொள்கையை ஒப்பிட்டு பிறர் கொள்கையை பிழை காண்பது தான் உண்மையானது குற்றச்சாட்டு. இஸ்லாத்தை விமர்சிப்பது இருக்கட்டும் குறைந்த பட்சம் உங்கள் சகீர் எந்த கொள்கையில் இருக்கிறார் என்பதையாவது பகிரங்கப்படுத்துவாரா....?
”ஆனால் குர்-ஆனில் எங்கும் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களோ அல்லது பகுத்தறிவிற்கு ஒவ்வாத கருத்துக்களோ இல்லை.”
Deleteஎன்று நீங்கள் சொல்கிறீர்கள்.
இருக்கின்றன என்று காட்டினால்கூட அது அறிவுக்கு தெரிந்தாலும் உணர்ச்சிக்கு தெரியாது.
இருக்கும் பல முரண்பாடுகளை எத்தனையோ முறை நாத்திகர்கள் காட்டியிருக்கிறார்கள்.
அதனை எப்படி சமாளித்து பதில் கொடுப்பது என்றுதானே சிந்திப்பீர்கள்?
நாஸிக் மன்ஸூக் என்ற வசனங்கள் முன்னுக்கு பின் முரணான வசனங்களை சமாளிக்கத்தானே உருவாயின?
அறிவுக்கு முரணான பல கருத்துக்களும் இருக்கின்றன. தேன் பழத்தை சாப்பிடுவது, ஜுல்கர்னைன் உலகத்தின் கிழக்கையும் மேற்கையும் பார்த்தது, ஜோடிகளாக எல்லா உயிரினங்களையும் படைத்ததாக சொன்னாலும் பால் இல்லாத (sexless) உயிரினங்கள் இருப்பது இப்படி எத்தனையோ.
அவற்றை உங்களால் அறிவுக்கு முரணான கருத்துக்கள் என்று எடுத்துகொள்வீர்களா அல்லது எப்படி சமாளிப்பது என்று சிந்திப்பீர்களா?
எப்படி சமாளிப்பது என்று சிந்திக்க தொடங்கும்போதே அது குரானில் 1) தெளிவாக இல்லை, 2) அது பகுத்தறிவுக்கு முரணானது என்பதை ஆழ்மனத்தில் ஒப்புகொள்வதன் விளைவுதான் என்று உணர்வீர்களா?
சகீர் என்ன காமெடியாக எழுதினாலும், அவர் முன்வைக்கும் வாதங்களுக்கு உங்களிடம் பதில் இல்லை. நானும் முஸ்லீமாக இருந்தவன். இன்று இல்லை.
சகீரின் பதிவில் பின்னூட்டத்தில் நரேன் எழுதியிருக்கும் ஹதீஸ்களை கவனியுங்கள். அன்றைக்கு அவருக்கு இருந்த வியாதியை அவராலோ அல்லது அந்த காலத்து மருத்துவர்களாலோ அறிந்திருக்க முடியாது. அந்த தெளிவான ஹதீஸ்கள் அவருக்கு டெம்போரல் லோப் வலிப்பு இருந்ததை உறுதி செய்கின்றன. அது மட்டுமல்ல, இந்த காலத்தில் டெம்போரல் வலிப்பு இருந்த டாஸ்டவஸ்கி, பஹாவுல்லா போன்றோரும் அதே போல ஆன்மீக கருத்துக்களை அழகான உரைநடையில் தெளிவாகவே எழுதியிருக்கிறார்கள். ஜிப்ரீல் மொஹம்மதுவிடம் வந்து உரையாடினார் என்று ஒத்துகொண்டால், ஜோஸப் ஸ்மித்திடம் மரோனி தூதரும், பஹாவுல்லாவிடம் சுவன தேவதையும் வந்து பெசியதாகவும் ஒப்புகொள்ள வேண்டும். ஏனெனில் இந்த தேவதைகளும் அவர்களுக்கு மட்டுமே காட்சியளித்தன. அவர்களுக்கு மட்டுமே கேட்டன. ராமசந்திரனின் வீடியோவில் பேசிய ஜான் என்பவரிடமும் இதே போல கடவுள் வந்து சொல்லியிருக்க வேண்டும்.
இவர்கள் அனைவருக்கும் பொதுவானவை அவர்களுக்கு மட்டுமே தெரியும் காட்சிகள், அவர்களுக்கு மட்டுமே தெரியும் இறைதூதர்கள், அவர்களுக்கு மட்டுமே கேட்கும் ஒலிகள். இவற்றில் நபிகளாருக்கு மட்டும் ஏன்விதிவிலக்கு அளிக்கிறீர்கள்? நீங்கள் அந்த மதத்தில் இருப்பதாலா? இஸ்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்ற உங்கள் விருப்பம் உங்கள் கண்களை மறைக்கிறதா?
1400 ஆண்டுகளாக இஸ்லாம் உருவாக்கி வைத்திருக்கும் கட்டுக்கோப்பு, கட்டுப்பாடுகளை விட்டு வெளியேறத்தான் தைரியம் வேண்டுமே ஒழிய, அதற்குள்ளேயே அடங்கிப்போவதற்கு தைரியம் வேண்டாம். இஸ்லாம் என்றால் submission என்று பொருள். அதனால்தான் நீங்கள் அடிமை என்று வைத்துகொண்டுள்ளீர்கள். அதனைத்தான் இஸ்லாமிய கொள்கை கோருகிறது. அப்படிப்பட்டவரிடம் ஒரு தெளிவான விவாதத்தையும் எதிர்பார்க்க முடியாது.
அன்பு சகோ அனானி!
Deleteஎங்கே முரண்பாடு? ஒப்புக்காவது எதையாவது சொல்லாதீர்கள். நீங்கள் மேற்கோள் காட்டும் வசனங்கள் எல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளிலே பதில் சொல்லி முடிக்கப்பட்டவை.
பாருங்கள்! யார் சமாளிப்பது? நான் முன்னம் கேட்ட கேள்விகளுக்கு இதுவரை உங்கள் சகீரிடம் ? பதிலில்லை.
நரேன்.. வேறா...? அவரது தளத்தில் நான் முஸ்லிம் தள மறுப்பாக்கத்திற்கு நான் இட்ட பின்னூட்டத்திற்கு வேலைப்பளு பின்பு உரையாடலாம் என்றார். அவ்வளவு தான்! உண்மையானயென அவர் தளத்திலே தேடிக்கொள்ளுங்கள்.
குறைந்த பட்ச நேர்மையாவது வேண்டும் சகோ...?
நாத்திகர்கள் சொந்த பெயரில் கூட விமர்சிப்பதற்கு கூட மனம் வரவில்லை.
இதை கயமை என்பதா....
அல்லது தைரியமின்மை என்பதா...?
நீங்கள் உட்பட எந்த நாத்திகர்களாவது ஒரு சொந்த பெயரோடு இங்கே உலாவருகிறார்களா...?
வானம், பூமி, என இப்படியான அஃறிணை பெயர்களோடு இணையம் சுற்றுக்கிறார்கள்..?
ஏன் என கேட்டால் அதிலும் மதம் சார்ந்த பெயர் வந்துடும் என்ற பயம்...
பாருங்கள் உங்கள் பெயர்கள் அஃறிணையாக இருந்தாலும் உங்களுக்கு மேலானது என்ற பிடிவாதம் - சொல்லுங்கள் இதற்கு பெயர் தான் அறிவுரீதியான் சிந்தனையா...?
//1400 ஆண்டுகளாக இஸ்லாம் உருவாக்கி வைத்திருக்கும் கட்டுக்கோப்பு, //
இதுதான் உங்களைப்போன்றவர்களின் இஸ்லாமிய புரிதல்...
இஸ்லாம் சரியான மற்றும் தெளிவான பின்பற்றதகுந்த சாத்தியக்கூறுகளை கட்டுக்கோப்பாய் கொண்டதால் தான் மூடத்தனமாக பகுத்தறிவு போர்வையில் போலியாய் என்னைப்போன்றவர்கள் உங்களைப்போல இஸ்லாத்தை துறக்கவில்லை.
நான் முன்னாள் முஸ்லிம்....?
இது உங்களோடு சேர்த்து இதுவரை 4 பேர் என்னிடம் சொல்லியாச்சி...
வானம் ,பூமி இந்த பிரபஞ்ச தோற்றம் அறிந்தா... நீங்கள் இஸ்லாத்தை துறந்தீர்கள்... ஆச்சரியம் தான் போங்கள்.. சமூகத்தில் நிலவும் கடவுளின் பெயரால் மூட நம்பிக்கையின் பாதிப்பு அல்லது பிரதிபலிப்பு உங்களைப் போன்றோர்களை இஸ்லாம் விலகலை கொடுத்திருக்கிறது.
நாங்களல்ல.. உங்களைப்போன்றவர்கள் தான் உணர்ச்சிப்பூர்வமான முடிவு எடுக்கிறீர்கள்..
ஓட்டை விழுந்த பரிணாம பாத்திரத்தில் இன்னும் அறிவியல் அரிசி அவியாது என உணர்ந்து - பகரமாய் இஸ்லாத்தை மொழிப்பெயர்ப்பில் விளங்கி வீணாய் விமர்சித்து உங்களின் நாத்திக பகுத்தறிவை மக்களுக்கு போதிக்கிறீர்கள்.
உண்மையாக சொல்லுங்கள் மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக் தான் இதையெல்லாம் சொல்கிறீர்களா...?
சகீர் போன்றவர்களின் பதிவுகள் எவ்வளவு கீழ் நடை எழுத்தை கொண்டவை என்பதை நான் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.
நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஏனென்றால் உங்களுக்கென ஒரு கொள்கையும் இருக்காது. அதை பின்பற்றவும் மாட்டீர்கள். நாத்திக போர்வையில் பிறருக்கு வணக்கம் சொல்வீர்கள்... மதம் சார்ந்த பண்டிகை வாழ்த்து சொல்வீர்கள்.. கேட்டால்.. சமத்துவம் பேசுவீர்கள்... இது தான் உங்கள் கொள்கையின் லட்சணம்....
அதனால் தான் போலியற்ற நெகிழ்வடையாத கொள்கைகொண்ட இஸ்லாத்தின் மீது புழுதி வாரி இறைக்கிறீர்கள். அதற்கு தர்க்கரீதியாக ..இப்படி நபிகளாருக்கு வலிப்பு நோய். எனபன போன்றவை...
இறுதியாக எங்கேயும் ஒரு உண்மை முஸ்லிம் பிறரை கேவலமாக விமர்சிக்கவோ போலியாக புனைவுப்படுத்தியோ எழுத மாட்டான். ஆனால் நாத்திக செம்மல்கள் என நம் சமூகத்தில் அறியப்படுவோர்... சொல்லவே நா கூசுகிறது....
யாருக்கு தைரியம் இல்லை... இதுவரைக்கும் அனானியாக தான் இங்கே பேசி வருகிறீர்கள்... இதுவரை நான் எந்த நாத்திக தளத்திலும் என் முகவரி தந்தே கருத்திட்டுகிறேன். அது தான் இஸ்லாம் எனக்கு கற்றுக்கொடுத்தது.
மீண்டும் போலிக்குற்றச்சாடை பதியாமல் இந்த தளத்தில் வலது ஓரத்தில் ஒரு ப்ளாக் லெட்டர்ல ஒரு பிக்சர் இருக்கு பாருங்க...
அதே கிளிக் பண்ணி படிச்சீட்டு.. முடிஞ்சா பதில் தர பாருங்க....
நான் உண்மை முஸ்லிம் காத்திருக்கிறேன். இன்ஷா அல்லாஹ்
நீங்கள் உண்மை நாத்திகரன்றால் பதிலோடு வாருங்கள்.
இந்த சமூகத்தில் நாத்திக புரிதல் அப்படி....
உங்கள் மனது புண்படும்படி பேசியிருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளவும்.
நண்பர்களே!!!
ReplyDeleteஉங்களின் உன்னத சேவை தொடர வல்ல இறைவனிடம் துஆ செய்கிறேன்.
- இப்ராகிம் பாரிஸ்-லிருந்து...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteஅன்பு சகோ வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
maash allah!
ReplyDeletenalla thakavalkal!
ungaludaya pakirvai vida -
pinnoottam athikamaaka uzhaikka ungalai
vaikkirathu!
allah arul purivaanaaka!
வ அலைக்கும் சலாம் வரஹ்
Deleteஅன்பு சகோ
== pinnoottam athikamaaka uzhaikka ungalai
vaikkirathu! ==
ஜஸாகல்லாஹ் கைரன்
எல்லாபுகழும் அல்லாஹ்விற்கே
வாழ்த்திற்கும் துஆவிற்கும் நன்றி சகோ
அஸ்ஸலாமு அழைக்கும் ...
ReplyDeleteசகோதரரே அல்ஹம்துலில்லாஹ்.. நமக்கு அல்லாஹ் போதுமானவன்...
தங்களின் கல்வி அறிவை அல்லாஹ் மேலும் அதிகப்படுத்துவானாக..
தொடர்ந்து எழுதுங்கள் - வாழ்த்துக்கள்.
வ அலைக்கும் சலாம் வரஹ்
Deleteஅன்பு சகோ
அல்ஹம்துலில்லாஹ்! எல்லாப்புகழும் ஒருவனுக்கே.,
= தொடர்ந்து எழுதுங்கள் - வாழ்த்துக்கள். ==
இன்ஷா அல்லாஹ் துஆ செய்யுங்கள் சகோ
வாழ்த்திற்கும், வருகைக்கும் நன்றி
ஜஸாகல்லாஹ் கைரன் ...