"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Tuesday, March 27, 2012

நாத்திகம் விரும்பும் இஸ்லாம் ..! ?

                                              ஓரிறையின் நற்பெயரால்

நாத்திகர்கள் - 

பொதுவாக இந்த சமூகத்தில் இறை மறுப்பாளர்களாக அறிமுகப்படுத்தப்பட்டாலும் பதிவுலகில் இஸ்லாத்தை எதிர்ப்பதிலே அவர்கள் குறியீடு அதிகம் அறியப்படுகிறது. இது மிகைப்படுத்தப்பட்ட வாக்கியமல்ல. பதிவுலகில் அவர்கள் சார்ந்த கொள்கைகளை விளக்கி இடும் பதிவுகளை காட்டிலும் இஸ்லாத்தை சாடி வெளியிடும் ஆக்கங்களே மிக மிக அதிகம்!

  • பெண்ணடிமைத்தனம் ,
  • சம நீதியின்மை
  • ஆணாதிக்கம்
  • தீவிரவாதம்
  • மரண தண்டனைகள்
  • அடிமை வாழ்வு

இவைகள் போல பல இஸ்லாத்தோடு இணைக்கப்பட்டு பெரும்பாலும் விமர்சிக்கப்படுகிறது. இன்னும் சிலர் வேத வரிகளுக்கும் தூதர் மொழிகளுக்கும் தன்னிலை விளக்கம் அளித்து அதை பொதுவாக்கி விமர்சிக்கிறார்கள். இன்னும் ஆச்சரியம்! ஆரம்ப நாட்களில் கேட்கப்பட்ட அதே புரிதலும் அதே கேள்விகளும் தான் இன்றளவும் விமர்சனங்களாக இணையத்தில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றது. பதில்கள் தெளிவாய் தரப்பட்ட பின்னரும்...

விளக்கங்கள் அளிக்கப்பட்டால் அவை கண்டிப்பாய் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பது அவசியமில்லை. மாற்றுக்கருத்து தாரளமாய் இருக்கலாம், அது நம் ஆய்வின் சரியான திசை நோக்க பயன்படும். ஆனால் நாத்திகர்களுக்கோ அந்த விளக்கங்கள் என்ன சொல்கிறது என்று பார்ப்பதற்கு கூட மனம் வருவதில்லை. இறுதிவரை அவர்களின் கேள்விகள் எங்கேயும் கேள்விகளாகவே மட்டுமே இருக்கப்பட வேண்டும் என்பதே எண்ணமாக இருக்கும் போலும்!

ஆனால் பாருங்கள் இஸ்லாத்தை கடுமையாக விமர்சிக்கிறார்கள் - அது ஆணாதிக்க மதம் வேண்டாம் என்கிறார்கள். சரி ஒரு வாதத்திற்கு இதை ஏற்றுக்கொண்டாலும் எவை மனிதக்குல முழுமைக்கும் தேவை அவை எப்படி பின்பற்றப்பட வேண்டும் என்பதை விளக்கி எங்கேயும் பதிவுகள் இடுவதில்லை. அதுக்குறித்து விவாதிக்கவும் அழைப்பு விடுப்பதில்லை. 

எவரும் தாம் ஏற்ற கொள்கை கோட்பாடுகளை விளக்கி அதன் பின்பற்றும் நடைமுறை சாத்தியக்கூறுகளை பொதுவில் முன்மொழிவதில்லை. சமூகத்திற்கு நலன் பயக்கும் பெயரில் ஆக்கங்கள் சில இட்டாலும், இஸ்லாம் என்ற ஒற்றைப்புள்ளியை மையப்படுத்தியே அவர்களது பெரும்பாலான கட்டுரைகள் இருக்கின்றன. ஆக என்ன சொல்லவருகிறார்கள் அவர்கள்...?

தம் கொள்கை எப்படியும் இருக்கலாம். ஆனால் இஸ்லாம் மட்டும் விமர்சிக்கப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும் -சமூகத்தின் மீது அக்கறைக்கொண்டவர்கள் நாத்திகர்களென்றால் கொஞ்சம் யோசிக்கவேண்டும் அவர்கள்.

தமிழில் நாத்திகம் - பரிணாமத்தை எதிர்த்து பதிவிடும் முஸ்லிம் தளங்கள் மிகக்குறைவு. (அப்படி விமர்சிக்கும் தளங்களில் கூட கண்ணியமான முறையில் தான் விமர்சனம் செய்யப்படுகிறது.) முஸ்லிம் பதிவர்கள் பெரும்பாலும் இஸ்லாம் சார்ந்த கருத்துக்களை மையப்படுத்தி விளக்கியே மக்களை அதன் பால் அழைக்கிறார்கள். 

ஆக நாத்திகத்தை எதிர்க்கமாலும் முஸ்லிம் பதிவர்களால் தங்களின் நிலைப்பாட்டை இணையத்தில் தக்கவைத்துக்கொள்ள முடியும். 
ஆனால் இஸ்லாத்தை விமர்சிக்காமல் எந்த நாத்திக பதிவராலும் தம்மை பதிவுலகில் தக்கவைத்து கொள்ள முடியவில்லையென்பதை தான் மேற்கண்ட செயல்கள் காட்டுகிறது. 

இதற்கு என்ன காரணம்...? 

ஆயிரமாயிரம் கொள்கைகளும் கோட்பாடுகளும் நாத்திகத்திற்கு எதிராய் உலகில் இருக்க இஸ்லாம் மட்டும் ஏன் பிரதானமாக விமர்சிக்கப்படுகிறது?

பதிவின் மையக் கருத்தே இது தான்.. இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்

                


இங்குள்ள எந்த நாத்திகரும்

  • வானமும்- பூமியும் படைக்கப்பட்டதன் நிலையறிந்து இவை கடவுளால் படைக்கப்பட வாய்ப்பில்லையென உணர்ந்து மதத்திலிருந்து வெளியேறினார்களா..? இல்லை., 
  • காற்றும், மழையும், பிறப்பும், இறப்பும் உண்டாக்க ஒரு கடவுள் தேவையில்லையென்பதை அறிவியல் அளவுகோலில் துல்லியமாக அளந்து கடவுளை மறுத்தார்களா...? என்றால் அதுவும் இல்லை என்பதே உண்மையான பதிலாக இருக்க முடியும் 
பின் எப்படி மத வெளியேற்றம்...? 

எந்த ஒரு மனிதனின் இயல்பு நிலை மாற்றத்திற்கு முதன்மை காரணம் வளரும் சூழலில் பயிற்றுவிக்கப்படும் கருத்துக்கள். அக்காலங்களில் பயிற்றுவிக்கப்படும் எதுவும் பிற்கால செயல்களில் பிரதிபலிக்க நூறு சதவீகித வாய்ப்புள்ளது. அதனடிப்படையில் போதிய அறிவின்றி தவறாகவோ அல்லது புரிதலற்ற முறையிலோ தனக்கு பயிற்றுவிக்கப்படும் கடவுள் கொள்கைகளை உண்மையென ஏற்று பின்னாளில் அவற்றை நிதர்சன வாழ்வில் பொருத்தும் போது நிச்சயமாக அது தனதறிவுக்கு தவறாக தான் காட்டும். அத்தோடு தன் நிலையில் தலைக்கீழ் மாற்றத்தை தான் ஏற்படுத்தும்.

அப்படி பயிற்றுவிக்கப்படுவது இஸ்லாமாக இருந்தாலும் சரியே... அதனால் தான் இணைய உலவிகளில் இஸ்லாத்தை விமர்சிக்கும் அனேகர் சொல்வது நான் முன்னாள் முஸ்லிம் என்று... அவர்களின் இம்மாற்றத்திற்கு காரணம் தனக்கு தவறாக விளக்கப்பட்ட இஸ்லாமே தவிர நபிகளார் விளக்கிய இஸ்லாமல்ல., 

பின்னாளில் பொதுவில் வந்து அறிவியலாக்க முயலும் பரிணாமத்தையும், கடவுள் குறித்த (தவறாக கற்றுணர்ந்த) தர்க்கரீதியான வாதங்களையும் தோதாக வளைத்து தம் மத வெளியேற்றத்திற்கு இதுவே நிலையான காரணம் என சொல்கிறார்கள். ஆனால் இன்று வரையிலும் தங்களின் திருமணம், மற்றும் பொது நிகழ்வுகளை ஏதாவது ஒரு மதம் சார்ந்த அடிப்படையிலே செய்து வருகின்றனர். 

அவ்வபோது பொதுவில் எங்கும் கடவுள் இல்லையென்று சொல்லிக்கொண்டே எல்லாம் கடவுள் என்ற கொள்கைக் கொண்டவர்களுக்கு பண்டிகை கால வாழ்த்து செய்திகளை பின்னூட்டமாய் பரிமாறுகிறார்கள். இது எதுமாதிரியான கொள்கை பிடிப்போ தெரியவில்லை.? ஆனால் இஸ்லாத்தை மட்டும் தொடர்ந்து தாக்கி எழுத பட வேண்டும் ? ஏன்?

 உளவியல் ரீதியாக சிந்தித்தால் எளிதாக உணரலாம்.

நாத்திகத்திற்கு நேர் எதிர் கொள்கை ஒன்று உலகில் உண்டென்றால் அது இஸ்லாம் மட்டுமே! 

பொதுவாக மதங்கள், கடவுள் உண்டென்பதை உறுதியாக நம்பினாலும், கடவுளை வணங்கப்பட வேண்டிய ஒரு நிலையில் மட்டுமே வைத்து பார்க்கிறது. கடவுளின் தலையீடு பூஜை, புனஷ்காரம் போன்ற செயல்களிலோ, பண்டிகை தினங்களிலோ அல்லது விழாக்காலங்களிலோ மட்டுமே பிரதான படுத்தப்படுகிறது.      
  
நடைமுறை வாழ்வின் பெரும்பாலான செயல்களுக்கு தங்களின் சுய விருப்பு, வெறுப்பின் அடிப்படையில் எதையும் தீர்மானிக்கிறார்கள். கடவுளின் கட்டளை ஏற்று நடப்பது நடைமுறைக்கு சாத்தியமில்லையென்பதை மறைமுகமாக ஏற்றும் கொள்கிறார்கள். இன்று ஒரு மதம் சார்ந்த இருவர் பேசிக்கொள்ளும் போது கடவுள் குறித்தோ அல்லது அவனது கட்டளைக்குறித்தோ பேசுவதும் இல்லை, விவாதிப்பதும் இல்லை. கடவுளின் தாக்கம் அவர்களின் செய்கைகளில் வெளிப்படுவது மிக மிக குறைந்தே இருக்கிறது.

இந்நிலை நாத்திகத்திற்கு மிக வசதியாய் போயிற்று மதம் உருவாக்கிய கடவுள்களை விமர்சிக்க வேண்டிய அவசியமும் இல்லை. அப்படி விமர்சித்தாலும் அவற்றை அவர்கள் பொருட்டாய் கொள்வதும் இல்லை.

ஆனால் இஸ்லாம் மட்டுமே வணக்க வழிப்பாட்டோடு கடவுளை ஒரங்கட்டாமல் எந்த ஒரு காரியமெனிலும் அதற்கு கடவுளின் ஓப்புதலை பொருத்தி பார்க்க சொல்கிறது. சரியென்றால் அவற்றை பின்பற்ற சொல்கிறது. தவறேன்றால் விட்டு விலக சொல்கிறது. சர்வ சாதரணமாக சந்திக்கும் தருணங்களில் கூட சலாத்தினையே முதலில் சொல்ல பணிக்கிறது. கல்யாண பத்திரிக்கையில் மட்டும் கடவுள் பெயர் பொதிக்காமல் காலம் முழுவதுமே கடவுளின் தலையீட்டை அவசியமாக்குகிறது.

இப்படி இஸ்லாம் நாத்திகத்திற்கு எதிராய் தம் இருப்பை மௌனத்தால் முன்னிருத்துவதால் நாத்திகத்தின் வெறுப்பும் எதிர்ப்பும் இஸ்லாத்தின் மீது இயல்பாகவே திரும்புகிறது. தமது கொள்கைகளை கட்டிக்காக்க வேண்டிய தருணத்திற்கு நாத்திகம் தள்ளப்படுகிறது. எவ்வளவு பெரிதாய் தம் கோட்டை நாத்திகம் வரைந்தாலும் அதையும் தாண்டி இஸ்லாமிய கோடு பயணிப்பதை நாத்திகம் நிதர்சனமாக உணர்கிறது. 

 இந்நிலை மாற ஒரே வழி எதிரில் இருக்கும் கோட்டை சிறிதாக்க வேண்டும் அதற்கு அக்கோட்டை அழிக்கவேண்டும் மக்களின் மனதில் நாத்திகம் உயர்ந்த கொள்கையாக எண்ணப்பட வேண்டுமானால் அதற்கு எதிராக இருக்கும் இஸ்லாம் குறைப்படுத்த படவேண்டும். ஆம்! அதைத்தான் நாத்திகம் இப்போது செய்ய முயன்றுக் கொண்டிருக்கிறது 

ஆனால்...
பெயரளவிற்கு மட்டும் கடவுளை ஏற்று...
முஹம்மதை (ஸல்) முன்னமே மறந்து... 
வெள்ளிக்கிழமை மட்டுமே இறை தொழுது...
பொழுது போகா விட்டால் மட்டுமே மார்க்கம் பேசி...
எந்த கொள்கையும் தம் சொந்த கொள்கையாக நிறுவி
போலி சமத்துவம் பேச
முஸ்லிம்கள் கற்றுக்கொண்டால்

விமர்சனம் ஏதுமின்றி
பொதுவில் கூட
நாத்திகம் விரும்பும் இஸ்லாம்...! இணையமெங்கும் காட்சியளிக்கும்


பிறச்சேர்க்கை:  இந்த தளம் Blog spot லிருந்து dot Com ற்கு மாறி இருப்பதால் இப்பதிவை மீண்டும் புதிதாக தமிழ்மணம் திரட்டி உள்ளது. ஓட்டு போட்டவர்கள் (குறிப்பாய் மைனஸ் ஓட்டுகளை )மீண்டுமொருமுறை போட்டுக்கொள்ளவும் 

                                               அல்லாஹ் மிக்க அறிந்தவன்

24 comments:

  1. பகிரங்க அழைப்பு :
    சில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா? இஸ்லாத்தின் கொள்கை சரியா? என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்
    www.onlinepj.com

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

      தான் சொன்னதே சட்டம் என முன் முடிவுகளோடு எதையும் தீர்மானிப்பவர்கள் இதைப்போன்ற அறைக்கூவல்களை கவனத்தில் கொள்ள மாட்டார்கள் சகோ

      மீண்டுமொருமுறை நினைவூட்டியமைக்கு நன்றி!

      Delete
  2. நடு நிலையுடன் இறை மறுப்புக் கருத்துகளை முன் வைக்கும் என் வலைப் பதிவில் இஸ்லாம் பற்றி எதுவும் சொல்லியிருக்கிறேனா?
    விருப்பம் இருந்தால் பார்வையிடுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோ பரமசிவம்

      பார்வையிட்ட வரை உங்கள் தளத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகள் இல்லை. நன்று

      நேரம் கிடைத்தால் கடவுள் குறித்த கட்டுரைகளுக்கு மாற்றுக்கருத்து இருப்பீன் தெரிவிக்கிறேன்

      உங்களைப்போல ஒரு சில பதிவர்களும் இங்கே இருக்கலாம். ஆனால் இங்கு நான் முன்னிலைப்படுத்தியது பெரும்பான்மை நாத்திக பதிவர்கள் தளங்கள் குறித்தே. நான் உரையாடிய / பார்த்த நாத்திக பதிவர்கள் அனைவரும் இஸ்லாமிய எதிர்ப்பை மையப்படுத்தி தான் ஆக்கம் இடுகிறார்கள்.

      அவர்களிடம் நாத்திகம் குறித்து விவாதிக்க விரும்பினாலும் இறுதியில் இஸ்லாத்தை தான் குறைப்படுத்த முனைகிறார்கள்.

      அதன் பிரதிப்பலிப்பாக தான் இக்கட்டுரை

      வாய்ப்பிருந்தால் நீங்கள் இந்த சுட்டியை காணுங்கள்
      http://iraiadimai.blogspot.com/p/blog-page_01.html

      நாத்திகம் குறித்த தர்க்கரீதியான கேள்விகள் - உரையாட விருப்பம் இருப்பீன் தொடரலாம்

      Delete
  3. சலாம் சகோ குலாம்,

    மாஷா அல்லாஹ். அழகான பதிவு. யாருடைய மனதையும் புண்படுத்தாமல் சொல்ல வந்த கருத்தை சொல்லி உள்ளீர்கள். நீங்கள் சொன்னது உண்மைதான் சகோ, இன்றைய நிலையில் நாத்திக கொள்கைக்கு கடும் சவால் அளிக்கும் ஒரு மதம் உண்டென்றால் அது இஸ்லாம் தான். அதனால் தான் நாத்திகர்கள் அதிகம் இஸ்லாத்தை குறி வைக்கிறார்கள். இதில் ஆச்சரியப் பட எதுவும் இல்லை. நாம் நமது கருத்துக்களை தொடர்ந்து சொல்லி வருவோம், இறைவன் நாடினால் அவர்கள் மனங்களில் மாற்றங்கள் உண்டாகும்.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      == இன்றைய நிலையில் நாத்திக கொள்கைக்கு கடும் சவால் அளிக்கும் ஒரு மதம் உண்டென்றால் அது இஸ்லாம் தான். அதனால் தான் நாத்திகர்கள் அதிகம் இஸ்லாத்தை குறி வைக்கிறார்கள். இதில் ஆச்சரியப் பட எதுவும் இல்லை. நாம் நமது கருத்துக்களை தொடர்ந்து சொல்லி வருவோம், ==

      உண்மைதான் சகோ
      இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து சொல்லி வருவோம்.
      இறைவன் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்த போதுமானவன்!

      Delete
  4. ஹா..ஹா.ஹா... உங்களுக்கும் மைனஸ் ஒட்டா???? தீயா வேலை செய்றார் போல இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. == தீயா வேலை செய்றார் போல இருக்கு. ==

      ஹா ஹா... ஒங்க பேர்லையும் மைனஸ் ஓட்டு விழ போகுது பார்த்துகுங்க

      முஸ்லிம் பதிவர்களை எதிர்ப்பதில் இருக்கும் ஆர்வம் இஸ்லாத்தை அறிந்துக்கொள்வதில் அவர்களுக்கு இருந்தால் இதைப்போன்ற ஆக்கங்களுக்கு தேவையே இருக்காது சகோ.

      எதிர்ப்பை தெரிவிக்கவோ அல்லது ஆக்கக் கருத்துக்களுக்கு உடன்பாடில்லா விட்டாலே போடத்தான் மைனஸ் ஓட்டு!

      ஆனால் இங்கே பாருங்கள் மைனஸ் ஓட்டு போட்டுவதற்கு கூட தம் சொந்த பெயர் மறைத்து கள்ள ஓட்டை தான் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

      முன்னெல்லாம் பின்னூட்டங்களில் செய்த கயமைத்தனம் இப்போது ஓட்டு போடுவதில் மிளிர்கிறது.

      வளர்க தொழில் நுட்பம்!
      பாவம் அவர்கள், நாம் ஓட்டுக்காக எழுதுவதில்லை, மறுமைக்காக எழுதுகிறோம் என்பதை இன்னும் புரிந்துக்கொள்ளவில்லை போலும்.,

      வருகைக்கும் கருத்திற்கும்
      ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

      Delete
    2. அஸ்ஸலாமு அலைக்கும்
      ////பாவம் அவர்கள், நாம் ஓட்டுக்காக எழுதுவதில்லை, மறுமைக்காக எழுதுகிறோம் என்பதை இன்னும் புரிந்துக்கொள்ளவில்லை போலும்./////
      மைனஸ் ஓட்டு போட்டால் என்ன எழுதுவதை நிறுத்திவிடுவார்கள் என்று நினைத்து கொண்டார்கள் போலும்.சொன்ன செய்தி "மைனஸ் புலிகளின்" காதில் விழுந்தாலே போதுமானது."மைனஸ் புலிகளே" நற்செய்திகள் சொல்வது எங்களின் கடமை நீங்கள் அறிவுறைகளை ஏற்றுகொள்வதும் ஏற்றுகொள்ளாததும் உங்களுடைய விருப்பம்.

      Delete
    3. வ அலைக்கும் சலாம் வரஹ்

      மிக தெளிவான கருத்து

      வருகைக்கு நன்றி சகோ

      Delete
  5. நாம் என்ன சொன்னாலும் நாத்திகர்கள் பிடித்த முயலுக்கு காலே இல்லை என்பார்கள்...

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

      == நாத்திகர்கள் பிடித்த முயலுக்கு காலே இல்லை என்பார்கள்... ==

      :)
      சொன்னாலும் ஆச்சரியம் இல்லை சகோ!

      இறைவன் அவர்களுக்கும் நமக்கும் நேர்வழி வழங்க போதுமானவன்

      வருகைக்கு நன்றி சகோ
      ஜஸாகல்லாஹ் கைரன்

      Delete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) சகோ..

    நல்லோர்களின் சிந்தனையைத் தூண்டும் பதிவு.

    //எவை மனிதக்குல முழுமைக்கும் தேவை அவை எப்படி பின்பற்றப்பட வேண்டும் என்பதை விளக்கி எங்கேயும் பதிவுகள் இடுவதில்லை. அதுக்குறித்து விவாதிக்கவும் அழைப்பு விடுப்பதில்லை.//

    உண்மையான வரிகள், அடுத்தவரின் மன உணர்வுகளை புண்படுத்தும் முன், தான் கொண்ட கொள்கை என்ன? அது எவ்விதம் மனிதனை பண்படுத்துகிறது? என்பவற்றை நாத்திகர்கள் உணர்ந்து, வாழ்ந்து காட்டினாலே போதுமானது.

    இவற்றை அறிய வேண்டுமாயின், ஒரு சில வலைப்பூக்களை சற்று சுற்றிவந்தாலே போதும்.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      == இவற்றை அறிய வேண்டுமாயின், ஒரு சில வலைப்பூக்களை சற்று சுற்றிவந்தாலே போதும். ==

      என்ன சொல்ல... அந்த நிலை மாற இறைவனிடம் பிரார்த்திப்போம்.

      அழகிய கருத்திற்கு நன்றி சகோ
      ஜஸாகல்லாஹ் கைரன்

      Delete
  7. Salam,

    very good psychological approach.

    keep posting more posts in depth

    Rizwan

    ReplyDelete
    Replies
    1. wa alaikum salam warh

      Thanks for your valuable comment.

      Jzkhallah khairan Bro.,

      Delete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) சகோ..சிந்தனையைத் தூண்டும் பதிவு.நன்றி சகோ.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      == சகோ..சிந்தனையைத் தூண்டும் பதிவு ==

      கருத்திற்கு நன்றி சகோ ராக்கெட் ராஜா?

      ஜஸாகல்லாஹ் கைரன்

      Delete
  9. சலாம் சகோ! அருமையான ஆக்கம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      வருகைக்கும்
      வாழ்த்திற்கும்

      நன்றி சகோ
      ஜஸாகல்லாஹ் கைரன்
      :)

      Delete
  10. சலாம் சகோ! அருமையான ஆக்கம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. Nanbar gulam avarkalukku vanakkam,
    Enakku neenda naatkalaaka oru santhekam irunthukondu irukkintrathu. Naan Saudi Arabia vil kadantha 17 aaNdukalaaka paNipurikiren. Naan islaaththai saarnthavan illai, ellaa mathamum sammathame entru vazbavan. Ennudan paNi puriyam nanbar Pakistan naattai saarnthavar. avaridam tholaipesiyilo allathu neril sentru vElai nimiththamaaka pesum pOthu Assalaamu alaikkum entro allathu Good Morning, Good Afternoon entro sonnaal atharkku avaridamirunthu varum pathil Waalaikkum, Morning, Afternoon. En intha kodUra manappaanmai. Veru mathaththavaraaka irunthaal avarukku vaazththu sollvathil kooda intha paarabatcham En? Isalaaththai saaraathavanukku thanathu vaazththin moolamaaka vaaznthuvidakkoodaathu entru ninaippaa? Intha kelviyai munvaippathan kaaraNam, intha naattukku vanthapinnar ennudaiya irandaavathu makalukku isalam mathaththai thazuvaavittaalum isalm peiyare vaiththullen. Enkku matha betha viththiyaasam illai. ithan moolam enakku oru veruppaiye undaakkiyathu. Ithu oru thani nabarin karuththuthaan mudinthaal pathil kooravum.

    Entrum Anbudan
    Bala

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோ பாலா
      உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

      உங்கள் இஸ்லாமிய புரிதலுக்கு நன்றி! இஸ்லாம் முன்மொழியும் கோட்பாடுகள் அனைத்தும் உலகளாவிய சகோதரத்துவத்தை அடிப்படையாக கொண்டது. அப்படியிருக்க சலாம் உரைப்பதென்பது முஸ்லிம்களுக்கு மத்தியில் மட்டும் பரிமாறப்படும் ஒன்று அல்ல. மாறாக அவை அனைத்து மக்களிடத்தும் கொண்டு சேர்க்கப்பட வேண்டியது. ஏனெனில் எந்த ஒரு தனிமனிதனுக்கு சாந்தியும் சமாதானமும் எப்போதும் வேண்டிய ஒன்று தான். மேலும் குர் -ஆனோ சலாம் உரைப்பது குறித்து இப்படி தெளிவாக சொல்கிறது
      உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்;. அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான். ((4:86))

      ஆக சலாம் கூறப்பட்டால் அதை விட அழகிய முறையில் பதிலளிப்பது முஸ்லிம்களின் கடமை. ஆனால் அதே நேரத்தில் ஒன்றை கவனத்தில் வைக்க வேண்டும் கேலி பேசும் நோக்குடனோ, கிண்டலுக்காகவோ சலாம் கூறப்பட்டால் அதை புறக்கணிப்பதும் முஸ்லிம்களின் கடமை. இந்த இரண்டிற்காக தவிர நல்ல நோக்கத்துடன் எந்த ஒரு முஸ்லிமல்லாதவரும் முஸ்லிம்களுக்கு சலாம் சொல்லலாம். ஏனெனில் எனது பெரும்பாலான முஸ்லிமல்லாதவர்களுக்கு இடும் பின்னூட்டங்களில் எல்லாம் சலாம் சொல்லியே துவங்கி இருப்பேன். இங்குள்ள ஏனைய பின்னூட்டங்களில் அதை நீங்களே பார்க்கலாம். உங்களுக்கும் கூட சலாம் சொல்லி தான் துவங்கி இருக்கிறேன்

      மேற்கண்ட விளக்கங்கள் தெரியாமல் இருந்தால், பாகிஸ்தானை சார்ந்த அந்த சகோதரர் உங்களிடம் நடந்துக்கொண்ட விதம் உண்மையில் வருத்தம் மிக்கது. அதைப்போல குட் மார்னீங்க், குட் ஈவீங்க் என்பன நேரடி அர்த்ததில் நல்ல சொற்கள் தான். மார்க்கம் செயல்படுத்த எந்த தடையும் விதிக்கவில்லை. எனினும் எல்லா காலங்களிலும் அதை பயன்படுத்தவும் முடியாது. இதுக்குறித்தும் உங்கள் பாகிஸ்தான் நண்பர் சொன்ன கருத்தை இணைத்தால் மேற்கொண்டு இங்கே பேசலாம்.

      எல்லா மதமும் சம்மதமே! என்ற கோட்பாடு முரண்பாடானது என்பது மட்டுமில்லை அது அறிவுக்கும் ஒத்து வராது. இன்ஷா அல்லாஹ் நீங்கள் விரும்பினால் அதுக்குறித்தும் பேசலாம்

      உங்கள் சகோதரன்
      குலாம்.

      Delete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்