"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Tuesday, January 17, 2012

இறை வழிக்காட்டுதலும், மனித பின்பற்றுதலும் -எங்கே தவறு?


                                                ஓரிறையின் நற்பெயரால்


 மதங்கள் மக்களை நல்வழிப்படுத்த உருவானவையாக இருப்பினும் அதனைப் பின்பற்றுவோர் அனைவரும் நல்லவர்களாக இல்லையே...? -அப்படியென்றால் மதங்களின் ஊடான கடவுளின் ஆளுமை மக்கள் மீது இல்லையா...? தவறு செய்யும் மதம் சார்ந்த நபர்களை பார்க்கும்போது...

கடவுள் ஏன் அவர்களை தண்டிக்கவில்லை அப்படி
கண்டிக்காத கடவுள் நமக்கு ஏன் இருக்க வேண்டும் ?

இப்படி ஒரு பொது நிலை கேள்வி எல்லோர் மனதிலும் உதிப்பது இயல்பே...
பொதுவாக மதங்களை நோக்கி இக்கேள்வி முன்வைக்கப்பட்டாலும் இஸ்லாம் இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறது என பார்ப்போம்!

இஸ்லாத்தை பொருத்தவரை ஒரு செயலை முன்னிருத்தி அதை எப்படி நன்மையாக மேற்கொள்வது என்ற வழிமுறையை ஏற்படுத்தி தந்திருக்கிறது. அத்தோடு அச்செயலுக்கு மாறாய் உண்டாகும் எதிர்விளைவையும் விளக்கி அதற்குண்டான பிரதிபலன்களையும் தெளிவாய் மக்கள் முன்னிலையில் பிரகனப்படுத்துகிறது.

ஆக எந்த ஒரு செயலையும் மிக தெளிவாக மனித சமூகத்திற்கு விளக்கி பின்னரே அவற்றை செய்யவோ, தவிர்க்கவோ பணிக்கிறது.


 அவ்வாறு மேற்கொள்ளும் அனைத்து செயல்களிலும் இறைவனின் வழிக்காட்டுதலை மையமாக வைத்து தங்களின் சுய அறிவை பயன்படுத்த சொல்கிறது.,


 ஒரு செயலை எப்படி செய்ய வேண்டும் என்ற வழியும் அச்செயலை செய்வதால் எற்படும் சாதகம் /பாதகம் குறித்த அறிவும் மிக தெளிவாய் நமக்கு உணர்த்தப்பட்டிருக்கிறது.

இவற்றை வைத்து எந்த செயலையும் ஏற்று செய்வதாக இருப்பீனும் விட்டு விலகுவதாக இருப்பீனும் கடவுளின் போதனைகளை அடிப்படையாக வைத்து நாம் சிந்தனைரீதியான முடிவுகளை எடுக்க முடியும்.

ஆக ஒரு செயலுக்கு முழுமுதற் காரணகர்த்தா கடவுளாயினும் மேற்கொள்ளும் செயல்கள் குறித்த முடிவுகள் நமது சிந்தனையிலே விடப்படுவதால் அவற்றிற்கு முழுப்பொறுப்பு நாம் தாம் என்பது தெளிவாகிறது. 

அவ்வாறு இருக்கும் போது மனிதன் சிந்தையில் ஏற்படும் தீமையான எண்ணங்களால் எடுக்கும் தவறான முடிவுகளுக்கு அவனே காரணம். மாறாக கடவுளல்ல...! (விதி என்ற நிலைப்பாட்டை குறித்து இங்கு சொல்லவில்லை என்பதையும் கவனத்தில் கொள்க) 


அதாவது கடவுளோ....

கொலை செய்யாதே
விபச்சாரம் புரியாதே
வட்டி வாங்காதே
பிறரை ஏமாற்றதே...
ஒழுக்கமாய் இரு... 
 என தம்மை வணங்கி வழிபடும் மக்களுக்கு போதனைகளை வழங்கினால்...

கொலை செய்து
விபச்சாரம் புரிந்து
வட்டி வாங்கி
பிறரை ஏமாற்றி 
ஒழுங்கின்றி அலையும் 
மக்களாக இருந்தால்... அவர்கள் செய்யும் தவறுகளுக்கு எப்படி கடவுள் பொறுப்பாவார்?

கடவுளோ மேற்கண்டவற்றை செய்யாதே என்று சொல்வதோடு அஃது செய்பவன் முறையாய் இறையை பின்பற்றுபவன் அல்ல என்றே பணிக்கிறார். ஒரு கொள்கையே ஏற்பதென்பது அதனை தமது நடைமுறை வாழ்வில் பின்பற்ற தகுந்த தருணங்கள் அனைத்திலும் செயல்படுத்துவதே.

 அவ்வாறு இருக்கும் போது கடவுளை ஏற்பதாவோ அல்லது அவனது போதனைப்படி வாழ்வதாகவோ இருந்தால் அவனது சொல்லுக்கு மாறு செய்யா வாழ்வை வாழ வேண்டும். ஆனால் தங்களின் சுய நலத்திற்காக கடவுளின் சொல்லை புறக்கணித்து சமூகத்திற்கு தீமை ஏற்படுத்தினால் அவன் கொண்ட கொள்கைக்கே மாற்றமானதாக அவன் நிலை இருக்கும். அதாவது

கடவுளை ஏற்காதவர் எப்படி இறை நம்பிக்கையாளர் என்று அழைக்கப்பட மாட்டானோ அதைப்போல கடவுளை ஏற்று அவனது போதனைகளின் படி வாழ்வை அமைக்காத அல்லது அவனது போதனைகளுக்கு மாறு செய்து வாழ்பவன் எப்படி கடவுளை ஏற்பவன் என்ற வட்டத்திற்குள் வைத்து பார்க்க முடியும்.? அவனை ஒரு முழுமைப்பெற்ற இறை நம்பிக்கையாளனாக ஏற்க முடியாது. 

 ஏனையவர்களை விட மதரீதியான குறியீடுகளால் ஒருவன் சமூகத்தில் அடையாளப்படுத்தப்படும்போது அவன் செய்யும் தவறுகள் திரிபு அடைந்து கடவுளின் நீததன்மையின் மேல் பழிப்போட வழிவகுக்கிகிறது! கடவுளின் கூற்றுக்கு மாறு செய்யும் எவரையும் கடவுளை பின்பற்றுவோராக இனியும் இச்சமூகத்தில் முன்மொழியக்கூடாது மாறாக இறைச் சொல்லுக்கு மாறுசெய்வோர் இறை நிராகரிப்பாளர் என்றே அடையாளப்படுத்தப்படவேண்டும்!

அப்படினா.... கடவுள் இவ்வாறு கொலை, கொள்ளை &Etc தவறுகள் செய்யும் மனிதர்களை ஏன் ஒண்ணும் செய்வதில்லை....? 

 நல்ல கேள்வி!

 இதற்கு இஸ்லாம் கூறும் இறை வழிக் கோட்பாடுகள் என்ன பதில் வைத்திருக்கிறது என முதலில் பார்க்கவேண்டும். பின்னே நமது நிலைப்பாட்டை அதில் பொருத்த வேண்டும். ஆனால் இக்கேள்வியே கேட்கும் பலரும்.. அதற்கான பதிலை தாங்களே வைத்திப்பதுப்போல...

 நானே இவ்வளவு நாள் கடவுளை கன்னாபின்னாவென்று திட்டிக் கொண்டிருக்கிறேன். இதுவரை என்னையே ஒண்ணும் செய்யவில்லையே உங்கள் கடவுள்...?


  மனிதனின் சுய நிலை எண்ணங்களின் வாயிலாக ஒரு செயலின் முடிவை தீர்மானிக்கும் வாய்ப்பு வழங்கப் பட்டிருப்பதால்  அவசரத்திலோ, ஆத்திரத்திலோ தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பிருக்கிறது. கடவுள் உடனுக்குடன் அவர்களுக்கு தண்டனை வழங்கினால் பின்னாளில் அவர்களின் தவறுகளுக்கு திருத்திக்கொள்ள வாய்ப்பும் இருக்காது.

மேலும் மக்களில் சிலர் வேண்டுமென்ற தவறுகள் செய்த போதிலும் அவர்களுக்கும் சிறு அவகாசம் கொடுக்கப்படுதற்காகவே காலம் தாழ்த்தப்படுகிறது. இதை தன் மறையில் இறைவன்

மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை உடனுக்குடன் பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் உயிர்ப்பிராணிகளில் ஒன்றையுமே பூமியில் விட்டு வைக்க மாட்டான்; ஆனால், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களை(ப் பிடிக்காது) பிற்படுத்துகிறான் - அவர்களுடைய தவணை வந்து விட்டாலோ ஒரு கணமேனும் (தண்டனை பெறுவதில்) அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள். ((16:61))

என தெளிவாக பிரகனப்படுத்துகிறான். மாறாக உடனே தண்டிக்கவில்லை என்பதற்காக இறைவன் இல்லையென்றாகி விடாது. ஏனெனில் மனித தவறுகளுக்கு உடனுக்குடன் தண்டனை வழங்கினால் மட்டும் தான் கடவுள் இருப்பது உண்மையென்றால் அதற்கு பகரமாக தவறுகள் செய்யா நிலையிலேயே மனிதர்களை இயல்பாகவே கடவுள் படைத்திருக்கலாம். அதுவும் அனைவரையும் முஸ்லிம்களாகவே!

இறைவனை வணங்கி குற்றமிழைக்காத மக்கள் மட்டுமே இப்பூவியில் இருப்பர். அப்படி நன்மை செய்பவர்களை மட்டுமே வைத்துக்கொண்டு தீமையை தவீர்த்து வாழ சொல்வதில் எந்த அர்த்தமுமில்லை.

 தீமையும் -நன்மையும் கலந்த வாழ்வில் தனக்கு பாதகமாக இருப்பீனும் அத்தகைய சூழ்நிலையிலும் நன்மையே மட்டுமே மேற்கொண்டு ஒரு மனிதன் வாழ்கிறானா என சோதிக்கப்படுவதற்கே இவ்வுலக வாழ்க்கை!

                                                   அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

30 comments:

  1. ஸலாம் சகோ. குலாம்.
    நச் கேள்விகள் கேட்டு
    நறுக் பதில்கள் அளித்து
    நன்மை பயக்கும் படியான
    நயமான ஒரு சிறந்த பதிவு.
    நன்றி சகோ. குலாம்.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      அன்பின் சிட்டிசன்

      நல் கருத்திட்டு
      நலமாய் ஊக்கமளிக்கும் -உங்கள்
      நடுநிலை பார்வைக்கு
      நன்றிகள்!

      ஜஸாகல்லாஹ் கைரன்

      Delete
  2. //தீமையும் -நன்மையும் கலந்த வாழ்வில் தனக்கு பாதகமாக இருப்பீனும் அத்தகைய சூழ்நிலையிலும் நன்மையே மட்டுமே மேற்கொண்டு ஒரு மனிதன் வாழ்கிறானா என சோதிக்கப்படுவதற்கே இவ்வுலக வாழ்க்கை!//

    அழகிய பதிவு சகோதரர் குலாம்!

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

      அன்பு சகோ

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ
      ஜஸாகல்லாஹ் கைரன்

      Delete
  3. சலாம் சகோ குலாம்,

    மாஷா அல்லாஹ்... அற்ப்புதமான ஆக்கம். வாழ்த்துக்கள் சகோ. மிகவும் நயமாக, அர்த்தப் பொதிவுடன் எழுதுகிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      அன்பு சகோ

      வாழ்த்துகளுக்கும் வருகை தந்து கருத்திடமைக்கும்
      நன்றி சகோ
      ஜஸாகல்லாஹ் கைரன்

      Delete
  4. அஸ்ஸலாமு அலைக்கும்,

    //ஏனெனில் மனித தவறுகளுக்கு உடனுக்குடன் தண்டனை வழங்கினால் மட்டும் தான் கடவுள் இருப்பது உண்மையென்றால் அதற்கு பகரமாக தவறுகள் செய்யா நிலையிலேயே மனிதர்களை இயல்பாகவே கடவுள் படைத்திருக்கலாம். அதுவும் அனைவரையும் முஸ்லிம்களாகவே!//

    அல்ஹம்துலில்லாஹ். இதனை தெளிவாக உணர்ந்துக்கொண்டால் நாத்திகர்களின் பல கேள்விகள் காற்றில் பஞ்சை பறந்துவிடும்.

    குர்ஆன் மனிதனை சிந்திக்கச் சொல்கின்றது. இவ்ளோ தப்பு நடக்குது, கடவுள் வரவில்லையே என்பவர்கள் சற்று ஆழமாக தங்கள் கருத்துக்களை பிரதிபலித்து கொண்டாலே இம்மாதிரியான கேள்விகளுக்கு தேவை இருக்காது.

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      அன்பு சகோ

      //குர்ஆன் மனிதனை சிந்திக்கச் சொல்கின்றது. இவ்ளோ தப்பு நடக்குது, கடவுள் வரவில்லையே என்பவர்கள் சற்று ஆழமாக தங்கள் கருத்துக்களை பிரதிபலித்து கொண்டாலே இம்மாதிரியான கேள்விகளுக்கு தேவை இருக்காது.//

      உண்மைதான்!
      இதில் வேதனை பாருங்கள்., பகுத்தறிவோடு சிந்தித்தன் விளைவாலே நாங்கள் கடவுளை மறுக்கிறோம் என அவர்கள் கூறுவதே

      வருகைக்கும் கருத்திற்கும்
      ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

      Delete
  5. சுட்டியை சொடுக்கி படியுங்கள்

    ---- >
    புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.
    ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

    இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது. உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர்
    < ----

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
      அன்பு அப்பா
      வருகைக்கு நன்றி

      Delete
  6. தங்களின் கருத்துகள் யாவும் ஏற்புடையவையே.அனைவரையும் முஸ்லிம்களாக என கூறியிருக்க வேண்டியதில்லை.இறை ஒருவரே என்ற தெளிவு வராதவரை மற்ற செயல்கள் அது நல்லதாக இருந்தாலும் அவ்வளவு சிறப்பு பெறுவதில்லை என்பது மாறாத உண்மையாகும்

    ReplyDelete
    Replies
    1. ஸலாம்
      அன்பு சகோ அனானி

      // அனைவரையும் முஸ்லிம்களாக என கூறியிருக்க வேண்டியதில்லை.//

      உங்களைப்போன்ற சிலரின் எண்ணங்களை முன்னிருத்தி தான் அப்படி சொன்னேன். ஏனெனில் எல்லோரையும் முஸ்லிம்களாக படைத்திருப்பதென்பதை இன்னும் சுருக்கி ஒரே இறையை மட்டுமே வணங்கவேண்டும் என்ற எண்ணத்திலே எல்லா மனிதர்களையும் இறைவன் படைத்திருக்கலாம் என்றும் கூட சொல்லலாம். அதன் மூலம் என்ன சோதிப்பு இருக்கிறது சகோ?


      //.இறை ஒருவரே என்ற தெளிவு வராதவரை//

      நீங்களே உங்கள் வரிகளை யோசித்து பாருங்கள்

      அதெப்படி இறைவன் ஒருவன் இல்லை பலர் என சொல்ல முற்படுகிறீர்கள்?
      பல தெய்வங்கள் இருப்பதென்பது சாத்தியமா? அப்படி இருந்தால் இவ்வுலகம் சீராய் இயங்குமா சகோ...?

      உங்கள் வரிகளை மீண்டும் பரிசீலனை செய்யுங்கள் மாற்றுக்கருத்து இருப்பீன் தொடரலாம் - இன்ஷா அல்லாஹ்

      Delete
  7. கார்பன் கூட்டாளி has left a new comment on your post


    //அவ்வாறு இருக்கும் போது மனிதன் சிந்தையில் ஏற்படும் தீமையான எண்ணங்களால் எடுக்கும் தவறான முடிவுகளுக்கு அவனே காரணம். மாறாக கடவுளல்ல...!//

    சரிதான். மனிதன் செய்யும் தவறுக்கு மனிதன் தான் காரணம், இருப்பினும் சில விஷயங்கள் குழப்பமாக உள்ளது.

    உதாரணமாக ஒரு மனிதன் மது இலகுவாக கிடைக்காத இடத்தில் இருக்கிறான் என்று வைத்து கொள்ளுங்கள், அவனின் மது அருந்த வேண்டும் என்ற தவறு குறைகிறது, மற்றொருவன் மது அதிகமாக புழக்கம் உள்ள நாட்டில் வசிக்கிறான், இவனுக்கு மது அருந்துவதர்கான வாய்ப்புக்கள் அதிகம்,இங்கு இவனின் தவறு செய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    அது போல ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு மாதிரி ஹார்மோன்கள் சுரக்கும் பொழுதும் அவன் தவறில் ஈடு படாமல் இருக்கிறானா என்பதை பார்பதர்காகதான் இந்த பூமி ஒரு சோதனை கூடம் என்று சொல்ல படுகிறது என்பதை புரிய முடிகிறது.

    உண்மையில் முழுமையாக அறிந்தவன் அவன் மட்டுமே..

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
      அன்பு சகோ

      //உதாரணமாக ஒரு மனிதன் மது இலகுவாக கிடைக்காத இடத்தில் இருக்கிறான் என்று வைத்து கொள்ளுங்கள், அவனின் மது அருந்த வேண்டும் என்ற தவறு குறைகிறது, மற்றொருவன் மது அதிகமாக புழக்கம் உள்ள நாட்டில் வசிக்கிறான், இவனுக்கு மது அருந்துவதர்கான வாய்ப்புக்கள் அதிகம்,இங்கு இவனின் தவறு செய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.//

      உதாரணமாக இங்கு ஒரு தீமையின் விளைவு மாறுபடும் காலசூழ் நிலையை மையப்படுத்தி இருக்கிறீர்கள்.

      சரிதான்! நன்றாக சிந்தித்துப்பாருங்கள். நீங்கள் குறிப்பிடுவது போன்று ஒரு தீமையை செய்வதற்கான வாய்ப்பு ஒரு இடத்தை விட மற்றோரு இடத்தில் குறைய வாய்ப்பிருப்பது உண்மை தான்.

      ஆனால் மற்றொரு தீமை அந்த இடத்தில் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது அதாவது நீங்கள் முன்னிலைப்படுத்திய மது மட்டுமின்றி பிறிதொரு இடத்தில் சூது, விபச்சாரம், கொலை மற்றும் ஏராளம்....

      இன்னும் எளிதாக கூறினால்
      நம்மூர்களில் மேற்கத்திய நாடுகளின் கலாச்சார ஊடுவல் வாயிலாக தீமைகளை ஏற்படுத்தி இறைவனுக்கு மாறு செய்யும் நிலையை விட "தர்கா வழிபாடு" போன்றவற்றில் ஈடுபட்டு மாறு செய்யும் மக்களே அதிகம்!

      ஆக இடங்கள், கால சூழல்கள் ஒரு தீமையை வேண்டுமானால் செய்ய தூண்டாமல் இருக்கலாம். ஆனால் வேறு தீமை செய்வதற்கு ஏற்ற சூழ் நிலையை அந்நிலையில் சைத்தான் ஏற்படுத்துவான்! என்பதையும் நாம் கவனிக்க வேண்டும் சகோ

      வருகைக்கும் கருத்திற்கும்
      ஜஸாகல்லாஹ் கைரன் !

      Delete
  8. Ibnu Shakir has left a new comment on your post

    அன்பு சகோ,
    முதலில் குரான் வசனம் இறைவனின் வழிகாட்டுதல் என்று நிரூபித்துவிட்டுத்தானே அதனை இறை வழிகாட்டுதல் என்று நீங்கள் குறிப்பிட வேண்டும்?

    பரிணாமவியலை நிரூபிக்கவில்லை என்று நீங்கள் குறிப்பிட்டு அதனை ஒதுக்கச்சொல்கிறீர்கள். அது நிரூபிக்கப்பட்டதுதான் என்று அறிவியல் ஆதாரங்களை ஸனதிக்காக்கள் வைக்கிறார்கள்.

    நீங்களும் அதே போல குரான் என்பது இறைவசனம், ஜிப்ரீல் என்ற மலக்கு முஹம்மதுவிடம் பேசியது, அந்த ஜிப்ரீலை அல்லாஹ்தான் அனுப்பினார், அவருக்கு டெம்போரல் வலிப்பு நோயால், ஜிப்ரில் வந்து பேசியதாக நினைத்துகொள்ளவில்லை என்பதை நிரூபித்துவிட்டுத்தானே நீங்கள் குரான் வசனத்தை இறைவசனம் என்று கூற வேண்டும்?

    சிந்தியுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

      ஸலாம் அன்பு சகோ
      //முதலில் குரான் வசனம் இறைவனின் வழிகாட்டுதல் என்று நிரூபித்துவிட்டுத்தானே அதனை இறை வழிகாட்டுதல் என்று நீங்கள் குறிப்பிட வேண்டும்? //

      நல்ல கேள்வி
      அதற்கு முன்
      இறைவன் இருக்கின்றானா... ?
      அவன் ஒருவனாக இருக்க மட்டும் சாத்தியமா ?
      ஏன் இருக்க வேண்டும் ?
      எதற்காக நம்மை படைக்க வேண்டும்... ?

      என்று அறிந்துக்கொள்ள வேண்டும். சகோ பின்னரே அவனது வழிக்காடுதல் நமக்கு அவசியமா என ஆராய வேண்டும்!

      அதைக்குறித்து இத்தளத்தில் அனேக ஆக்கங்கள் பார்வையிடுங்கள்
      மேற்கண்ட " ? " பதில் முதலில் திருப்திகரமாக இருந்தால் நீங்கள் குறிப்பிட்ட கேள்வியோடு தொடருவோம்

      இன்ஷா அல்லாஹ்

      Delete
  9. Ibnu Shakir has left a new comment on your post
    என்ன சகோ,
    இப்படி குழப்புறீங்க? இது எல்லாமே உங்களுக்கு குரான் வழியாத்தானே வருது? அப்ப குரான்ல இருக்கிறது இறைவசனம் என்று முதலில் நீங்க நிரூபித்துவிட்டுத்தானே, அதில் சொல்லப்படும் இறைவன் இருக்கிறான், அவன் ஒருவன், அவன் நம்மை படைத்தான் போன்ற விஷயங்களுக்கு வர முடியும்?

    ஆக கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிப்போம்.

    முதல்ல அவருக்கு டெம்போரல் லோப் வியாதி இல்லை என்று நிரூபியுங்கள்.
    பிறகு அவரிடம் பேசியது ஜிப்ரீல்தான் என்று நிரூபியுங்கள்
    பிறகு அந்த ஜிப்ரீலை அல்லாஹ் என்பவர் அனுப்பினார் என்று நிரூபியுங்கள்.
    அந்த அல்லாஹ்தான் பிரபஞ்சத்தை ஆறு நாளில் படைத்தார் என்று நிரூபியுங்கள்.
    பிறகு அந்த அல்லாஹ்தான் கடைசி நாளில் மனிதனையும் ஹவ்வாவையும் படைத்தார் என்று நிருபியுங்கள்.
    பிறகு குரானில் சொல்லப்பட்டவை எல்லாம் அல்லாஹ் என்ற இறைவன் அனுப்பியது ஆகவே அது இறை வழிகாட்டல் என்ற முடிவுக்கு வந்துவிடலாம்.

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோ

      வேலைப்பளு

      இறை நாடினால் இரவு தொடர்கிறேன்.

      Delete
    2. அல்ஹம்துலில்லாஹ்! நான் குழம்பவில்லை சகோ!

      நீங்கள் தான் தெளிவாக குழம்பி இருக்கீறீர்கள். ஒருவர் முன்மொழியும் வழிக்காட்டுதலை பின்பற்றுவதற்கு இரண்டு அடிப்படை தன்மைகளை அவற்றில் இருக்கவேண்டும்.
      ஒன்று, அவர் மீதான நம்பகத்தன்மை அடுத்து அவர் கொணரும் கொள்கைகள் வாழ்வியலுக்கு உகந்ததாக பகுத்தறிவிற்கு ஏற்றதாக இருக்கவேண்டும். அவ்வாறு இருப்பீன் அவரின் கொள்கைகளை ஏற்கலாம் ,அஃதில்ல்லையேல் அதை பின்பற்றுவதை அல்லது ஏற்பதை தவிர்க்கலாம்
      இது தான் பொதுவிதி

      ஒருவரின் நம்பகத்தன்மை அறியப்பட்ட பின்னரே அவரது கூற்றுக்கள் ஏற்கப்பட வேண்டும். என்பதை அடிப்படையாக கொண்டு உங்கள் வாக்கியத்தை மீண்டும் வாசியுங்கள்!

      கடவுளின் வழிக்காட்டுதல் உண்மையானது என்பதை அறிய அவர் குறித்த தன்மைகள் நமக்கு அறிய தந்திருக்கவேண்டும். இவ்வுலகத்தில் இறைவனை யாரும் காணமுடியாது எனும் முன்மொழிவோடே மக்கள் மத்தியில் கடவுளின் இருப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆக அவனது நேரடி தோற்றம் தவிர்த்த பிற வழிகளில் தான் அவன் குறித்த பண்புகள் விளக்கப்படவேண்டும். அதற்கு உலகின் முதல் மனிதர் தொடங்கி இறுதித்தூதர் வரை இறைக்குறித்த கோட்பாடுகளும் வழிக்காட்டுதல்களும் தொடர்ந்துக்கொண்டு தான் வருகிறது, (அதுக்குறித்து இத்தளத்தில் நிரம்ப இருக்கிறது)

      Delete
    3. இங்கு குர்-ஆனின் நம்பக தன்மை பற்றி கேள்வி எழுப்பி அதை மெய்பிக்க குர்-ஆனிலிருந்து சுட்டிக்காட்ட வேண்டும் என்றால் அதற்கு முதலில் உலகம் ஆராய்ந்து உண்மைப்படுத்தி இருக்கும் விசயங்களை குர்-ஆன் கூறியதோடு பொருத்தி அது தவறா அல்லது சரியா என
      அறிய வேண்டும். அது தவறாக இருப்பீன் நாம் ஏனைய விசயங்களிலும் அதன் நன்பகத்தன்மையை பரிசீலிக்கலாம்

      அல்ஹம்துலில்லாஹ்! இதுவரை குர்-ஆன் கூற்றில் எந்த வித தவறான தன்மையும் இருந்ததாக -இருப்பதாக எந்த ஒரு ஆய்வின் முடிவுகளும் அறிவிக்கவில்லை. ஆக நாம் ஏற்கனவே நன்கு மெய்படுத்திய விசயங்கள் நூறு சதவீகிதம் குர்-ஆனில் சரியாக இருப்பீன் நாம் ஒரு சதவீகிதம் கூட ஒப்பு நோக்காத மறுமை, ஜீப்ரில், சொர்க்கம், நரகம் போன்ற தன்மைகள் எப்படி தவறு என்று கூற முடியும்.. ஏனெனில் ஒன்றீன் நம்பகத்தன்மை என்பது எல்லா நிலையிலும் எல்லா காலங்களிலும் தொடர்ந்து நிலைத்திருக்காது. ஆனால் குர்-ஆனில் கூற்றில் எந்த வித வாழ்வியலுக்கு மாறான கருத்துடைய முரண்பாடுகளும் இல்லை.
      இவை மட்டுமல்ல....
      இது இறைவனின் வார்த்தைகள் இல்லை முஹம்மது நபிகள் தான் எழுதினார் என்றால் அதற்காக ஆதாரச்சான்று... தர முடியுமா?

      குர்-ஆன் எழுதியதாக நிருபிக்க எவ்வளவு பெரிய அறிவான பதில் அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதென்று, சகோ இது குறித்து ஏற்கனவே திண்ணை தளத்தில் கருத்தும் இட்டு இருக்கிறேன்

      வலிப்பு நோயினால் ஒருவருக்கு மனபிறழ்வே ஏற்பட வாய்ப்பு அதிகமாகும். அந்நிலையில் எப்படி மிக சீராக தெளிவாக உறுதியாக ஒரு கடவுளை மட்டுமே வணங்குங்கள் என்ற ஒரு நேரான நிலையில் அவரால் தொடர்ந்து செயலாற்ற முடியும்??????

      இதற்கு பதில் தருவீர்களா...? அதுமட்டுமில்லாமல் அவரது வாழ்நாளில் அவரது மீதான எந்தவித அறிவற்ற செய்கை தொடர்பான குற்றச்சாட்டு எழவே இல்லை. அப்படியிருக்க அவரது வாழ்வு முழுவதும் சீரான சிந்தனையை நபிகள் கொண்டிருந்தார்கள் என்பது தெளிவு

      Delete
    4. சரி நபிகள் நாயகம் தான் குர்-ஆனை எழுதினார்கள் என்று இருந்தால் இந்த கேள்விகளுக்கு பதில் தாருங்கள்
      http://iraiadimai.blogspot.com/2010/07/blog-post_15.html


      ஆறு நாள் உலகப்படைப்பு

      மலக்குகள் குறித்து ஏற்கனவே தெளிவாக இத்தளத்தில் விளக்கப்பட்டிருக்கிறது சகோ

      முடிந்தால் படித்துப்பாருங்கள்

      இறை நாடினால் தொடர்வோம்!

      Delete
    5. Ibnu Shakir has left a new comment on your post "இறை வழிக்காட்டுதலும், மனித பின்பற்றுதலும் -எங்கே த...":

      //ஒன்று, அவர் மீதான நம்பகத்தன்மை //
      அது உங்களது நம்பிக்கை என்ற ஒன்றின் மீது மட்டுமே இருக்கிறது

      //அதுமட்டுமில்லாமல் அவரது வாழ்நாளில் அவரது மீதான எந்தவித அறிவற்ற செய்கை தொடர்பான குற்றச்சாட்டு எழவே இல்லை.//
      நிறைய இருக்கிறது சகோ. ஆனால் உங்களது மத நம்பிக்கை அவற்றை பார்க்க விடாது.
      //குர்-ஆனில் கூற்றில் எந்த வித வாழ்வியலுக்கு மாறான கருத்துடைய முரண்பாடுகளும் இல்லை. //
      இதுவும் உங்கள் நம்பிக்கை மட்டுமே. யாரேனும் எடுத்து காண்பித்தால் கூட உங்களால் பார்க்கமுடியாது. உங்களது அறியும் மனம் அதனை எப்படி சமாளிப்பது என்றே சிந்திக்கும்.
      //இறைவனின் வார்த்தைகள் இல்லை முஹம்மது நபிகள் தான் எழுதினார்//
      இல்லை. குரானை தான் சொல்லவில்லை அது இறைவனின் வார்த்தைகளே என்று நம்பினார் என்று கருதலாம். ஆனால், அந்த நம்பிக்கை அவரது டெம்போரல் லோப் பிரச்னையால் உருவானது.
      //வலிப்பு நோயினால் ஒருவருக்கு மனபிறழ்வே ஏற்பட வாய்ப்பு அதிகமாகும்.//

      நாயை பார்த்து சாத்தான் என்று கூறுவதும்,மற்றவர்களால் பார்க்கமுடியாத ஒரு உருவம் தன்னிடம் பேசுவதாக கூறுவதும் அவரது மனப்பிறழ்வுகளுக்கு உதாரணங்கள்.

      //நபிகள் நாயகம் தான் குர்-ஆனை எழுதினார்கள் என்று இருந்தால் இந்த கேள்விகளுக்கு பதில் தாருங்கள்
      http://iraiadimai.blogspot.com/2010/07/blog-post_15.html//
      மனப்பிறழ்வில் தான் கூறவில்லை. மலக்குகூறுவதையே தான்கூறுகிறோம் என்று நினைத்திருக்கலாம். அதன் மூலம் சுயலாபம் அடைந்தாரா அல்லவா என்பதல்ல பிரச்னை.

      பிரச்னை யாகவா முனிவரை பின்பற்றுபவர்களுக்கும், பஹாவுல்லாவை பின்பற்றுபவர்களுக்கும், ஜோஸப் ஸ்மித்தை பின்பற்றுபவர்களுக்கும் உங்களுக்கும் என்ன ஒற்றுமை என்று கண்டுபிடியுங்கள்.
      அவர்களில் யாரேனும் ஒருவரோடு விவாதிக்க முடியுமா?
      எத்தனையோ முஸ்லீம்கள் பஹாவுல்லாவை பின்பற்றுபவர்களாக ஆகியிருக்கிறார்கள். பஹாய்கள் மீது கடுமையாக அடக்குமுறை இருக்கும் ஈரானிலேயே பஹாய்கள் பெருகிகொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஏன் பஹாவுல்லாவை பின்பற்றுகிறார்கள்?
      அவர்களை மடையர்கள் என்று நீங்கள் கூறிவிடலாம்.
      அப்போது உங்களை பற்றியும் நீங்கள் சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்

      Delete
    6. அன்பு சகோ

      உங்களின் கருத்து ஒரு பக்க சார்புடையது என்பதை உங்கள் பதிலிலே தெளிவாக தெரிகிறது. ஆக்கத்தின் சுட்டியில் நபி முஹம்மது குர்-ஆனை இயற்றினார்களா? என தன்னிலையில் கேள்வியும் எழுப்பி அதற்கு முக்கிய மூன்று காரணங்களை வகைப்படுத்தி அதன் கீழாக கருத்தையும் பதிந்திருக்கிறேன்.

      நீங்களோ ஆக்கத்தை விட்டு இஸ்லாத்தை மட்டும் நோக்கிலே கருத்திட்டிருகீறீர்கள்.

      ஒருவர் மீதான குற்றச்சாட்டை உண்மைப்படுத்துவதாக இருந்தால் அதற்கான ஆதார தரவுகளை தர வேண்டும். வெறும் வாயளவில் சொல்லிக்கொண்டு போனால் அதற்கு பெயர் நேர்மையான விமர்சனமாக இருக்காது.

      //இல்லை. குரானை தான் சொல்லவில்லை அது இறைவனின் வார்த்தைகளே என்று நம்பினார் என்று கருதலாம். ஆனால், அந்த நம்பிக்கை அவரது டெம்போரல் லோப் பிரச்னையால் உருவானது.//

      பரவாயில்லை குர்-ஆனை நபிகள் எழுதவில்லையென்பதை ஒப்புக்கொண்டீர்கள். சகோ ஏற்கனவே தெளிவாக சொல்லியிருக்கேன். வலிப்போ அல்லது இன்னபிற நோய்களின் தாக்கம் உடல் மற்றும் மனதளவில் பாதிப்பை தான் ஏற்படுத்தும்.
      தெளிவான கருத்துக்களை முன்மொழியாது.

      மிக சரியாக ஒரே சீராக ஒருவர் ஒரே கருத்தை தொடர்ந்து வலியுறுத்தவும் முடியாது. மேலும் முன்னுக்கு பின் முரணாகவே பேச செயல்பட அவ்வேளை தூண்டும். நீங்கள் கூறுவதுப்போல அத்தகைய நிலைகளில் நபி முஹம்மது பிற எண்ணத்தூண்டுதலால் குர்-ஆன் இறைவேதம் என கூறுவது எப்படி பொருத்தமான வாதமாக இருக்க முடியும்?


      //மனப்பிறழ்வில் தான் கூறவில்லை. மலக்குகூறுவதையே தான்கூறுகிறோம் என்று நினைத்திருக்கலாம்.
      சரிதான் மலக்குகள் கூறியதாக குறிப்பிடலாம்.
      ஆனால் நீங்களும் நானும் அறியாத மலக்குகள் என்ற மூலத்தை வைத்து நபி முஹம்மது அவர்கள் ஏன் கூற வேண்டும்?

      என்ற கேள்விக்கு இதுவரை பதிலில்லை

      Delete
    7. //அதன் மூலம் சுயலாபம் அடைந்தாரா அல்லவா என்பதல்ல பிரச்னை.//

      இல்லை! இதுதான் இங்கே பிரச்சனையே...
      அப்படியானால் அவர் ஏன் கடவுளின் பெயரை முன்னிருத்தி இதை சொல்ல வேண்டும்?

      ஏனெனில் இதைப்போன்ற நிலையில் ஒருவர் கூறும் நற்கருத்துக்களுக்கு தாம் உரிமையாளர் அல்ல என்று சொல்வதை விட மக்களின் மத்தியில் ஏற்படும் செல்வாக்குக்காக தாமே சொல்வதாகதானே இயல்பாக மனம் நாடும். அதைத்தானே சொல்லி இருக்கவேண்டும்.

      //பிரச்னை யாகவா முனிவரை பின்பற்றுபவர்களுக்கும், பஹாவுல்லாவை பின்பற்றுபவர்களுக்கும், ஜோஸப் ஸ்மித்தை பின்பற்றுபவர்களுக்கும் உங்களுக்கும் என்ன ஒற்றுமை என்று கண்டுபிடியுங்கள்.
      அவர்களில் யாரேனும் ஒருவரோடு விவாதிக்க முடியுமா? //

      தொடர்பில்லாத வாதம்

      பொதுவாக எந்த ஒருவரும் எந்த ஒரு நிலையிலும் யாரையாவது எதையாவது ஒன்றை சார்ந்தே செயல்பட அல்லது பின்பற்றிதான் ஆக வேண்டும்
      அது உங்களுக்கும் பொருந்தும் எனக்கும் பொருந்தும்.
      ஆனால் அது நம் அறிவுக்கு பொருந்தமானதாக இருக்கிறதா என உணர்வதே நமது எண்ணம் சீராக செயல்படுவதற்கு அடையாளம்.

      இஸ்லாம் மிகதெளிவாக போதனைகளை முன்மொழிகிறது. அது பின்பற்றவும் அதிக சாத்தியக்கூறுகளை உருவாக்கி இருக்கிறது. அதன் வழி பயணத்தில் எனக்கு எந்த வித முரண்பாடுகளையும் - தவறான வழிக்காட்டுதல்களையும் நான் காணவில்லை. ஆக பின்பற்றுகிறேன்.

      இங்கு யார் யார் எதை எதை பின்பற்றுகிறார்கள் அது எப்படிப்பட்டது என்பதை நீங்கள் தான் அறிந்துக்கொள்ள முயல வேண்டும். ஏனெனில் இஸ்லாமிய காழ்ப்புணர்ச்சி ஒன்றை மட்டும் குறியாக வைத்துக்கொண்டு நாட்களை கடத்தும் உங்களைப்போன்றோர்களுக்கு தான் எந்த வித கொள்கை கோட்பாடுகள் இல்லாமல் பயணித்துக்கொண்டு இருக்கீறீர்கள்?

      முதலில் நீங்கள் பின்பற்றும் கொள்கை கோட்பாடுகள் என்ன என்பதை தெரிவு செய்து பின் உங்கள் கொள்கையில் இருக்கின்ற ஒன்று இஸ்லாத்தில் எப்படி சாத்தியமில்லை என்பதை விமர்சியுங்கள்!

      இறை நாடினால் தொடர்வோம்.

      Delete
    8. Ibnu Shakir has left a new comment on your post

      குரானை நபி எழுதவில்லை என்று நான் கூறவில்லை. குரானை நபிதான் எழுதினார். ஆனால் தான் எழுதவில்லை என்று நம்பினார். டெம்போரல் லோப் வலிப்பு உள்ளவர்கள் மிகவும் தெளிவான கருத்துக்களை கூறியிருக்கிறார்கள். அந்த கருத்துக்கள் பல கோடிக்கணக்கானவர்களை சமீப காலத்திலேயே கவர்ந்திருக்கின்றன. ஆகையால் உங்கள் வாதம் தவறு. //ஆனால் நீங்களும் நானும் அறியாத மலக்குகள் என்ற மூலத்தை வைத்து நபி முஹம்மது அவர்கள் ஏன் கூற வேண்டும்?// மலக்கு என்பது நாம் அறியாததல்ல. ஜிப்ரீல்தான் லூக் எழுதிய சுவிசேசத்திலும் வருகிறார். ஆகையால், கிறிஸ்துவ உறவினர்களை கொண்ட அவர் தனக்கு கிடைத்த முன் அனுமானங்களின் படி, தான் உணர்ந்தது, ஜீப்ரீலின் வருகை என்று நினைத்துகொள்கிறார். மனப்பிறழ்வினால் அந்த உணர்வு அதிகரிக்கிறது. தான் கூறுவதையெல்லாம் ஜிப்ரீலின் கூற்றாகவே கூற ஆரம்பிக்கிறார். //இதைப்போன்ற நிலையில் ஒருவர் கூறும் நற்கருத்துக்களுக்கு தாம் உரிமையாளர் அல்ல என்று சொல்வதை விட மக்களின் மத்தியில் ஏற்படும் செல்வாக்குக்காக தாமே சொல்வதாகதானே இயல்பாக மனம் நாடும். // இல்லை. அவர் அன்றைய ஒருமைப்பட்ட சமூகத்துக்கு எதிரான கருத்துக்களையே கூறுகிறார். ஆகையால் இன்னொருவர்மீது பழி போடுவதுதான் எளிது. //பொதுவாக எந்த ஒருவரும் எந்த ஒரு நிலையிலும் யாரையாவது எதையாவது ஒன்றை சார்ந்தே செயல்பட அல்லது பின்பற்றிதான் ஆக வேண்டும்// ஒருவர் மற்றவர் ஒருவரின் கருத்தை பின்பற்ற வேண்டும் என்று நினைப்பதும் உங்களது submissive மனத்தின் நிலைப்பாடுதான். சமூகமே எந்த ஒழுக்கப்பாடுகள் சரியானவை என்று தீர்மானிக்கிறது. தெருவில் எச்சில் துப்புவது தவறு என்றும் ஒரு சமூகத்தில் இருக்கலாம். எச்சில் துப்புவது தவறல்ல என்றும் மற்றொரு சமூகத்தில் இருக்கலாம். உலகம் பழித்தது ஒழித்துவிடின் என்பது அந்தந்த சமூகத்தின் தரத்துக்கு ஏற்ப, சூழ்நிலைக்கு ஏற்ப மாறிகொண்டே இருக்கும். அது யாருக்கும் எந்த வித சிக்கலையும் கொண்டுவருவதில்லை.என்றென்றைக்கும் நிரந்தரமான விதிகள் என்று எதுவும் இல்லை. ஏனெனில், ஒரு கால கட்டத்துக்கு சரியான விதி மற்றொரு நாட்டில் மற்றொரு காலகட்டத்தில் தவறான விதியாக ஆகிவிடும். இது உங்களால் சிந்திக்க கடினமாக இருக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நடைமுறையில் அவ்வளவு கடினமானது அல்ல. ரோட்டின் வலது பக்கம் செல்வது ஒரு நாட்டில் சரி. ரோட்டின் இடது பக்கம் செல்வது ஒரு நாட்டில் சரி. எது சரி என்பதை சுற்றியுள்ள சமூகமே நிர்ணயிக்கிறது. Inherently there is no moral association with either left or right. ஆனால், இடது கை பழக்கத்தை சாத்தானின் பழக்கம் என்று யாரோ சொல்லி submissive ஆக நம்ப ஆரம்பித்தால், அது தீவிரத்தன்மை அடையும்போது இடது கை பழக்கம் உள்ளவர்களை எல்லாம் ஒரு குழு கொல்வதில்தான் முடியும்.

      Delete
    9. அன்பு சகோ உங்கள் பின்னூட்டத்தில் கொஞ்சம் கருத்தும் இருப்பதாக எண்ணுகிறேன்.
      கைர்
      இப்போது தெளிவாக சொல்லுங்கள்?
      நபி முஹம்மதுக்கு நீங்கள் மேற்கோள் காட்டும் டெம்போரல் வலிப்பு நோய் எப்போது ஏற்பட்டது?
      அதை எந்த சமகாலத்திய வரலாற்றில் எங்கே பதிந்து வைத்திருக்கிறார்கள்.
      சகோ நான் மீண்டும் சொல்கிறேன். உங்கள் கோணம் தவறான புரிதலுடன் தொடர்கிறது..

      சரி மலக்குகள் பார்வையை ஏனைய முன்னுள்ள கிரகந்த நூல்களிலிருந்து லாகமாக தமதாக்கி கொண்டார்கள் என உங்கள் கூற்றை உடன்பாட்டு முறையில் ஏற்றுக்கொள்கிறேன்.
      நான் ஏற்கனவே கொடுத்த சுட்டியில் இதுவல்லாத பிற கேள்விகளையும் முன்னிலைப்படுத்தி தான் ஆக்கம் புனைந்திருக்கிறேன். அதற்கு எங்கே உங்களது பதில்?

      சமூகம் ஏற்பட்ட அல்லது ஏற்பட இருக்கும் மாற்றத்தை முன்னிலைப்படுத்திய தன் செய்கைகளை மாற்றவல்லது சரிதான். இப்படி மாற்றங்களை மட்டுமே கொண்டு தன் நிறத்தை மாற்றும் இந்த சமூகத்திற்கு நிலையான ஒழுக்கத்தை யார் கொணர்வது?
      மேலை நாடுகளில் அணியும் குட்டை பாவடைகள் நமது நாட்டில் கலாச்சார சீரழிவின் அடையாளமாக்கப்படுகிறது. ஆக இங்கு ஒரு சமூகம் பண்பாடக்கொண்டது பிறிதோரு நாட்டில் கேவலமாக பார்க்க படுகிறது

      இதில் எது சரி?
      இதை யார் தீர்மானிப்பது
      நீங்களா?
      இப்படி இடத்திற்கு நேரத்திற்கு ஒரு கொள்கை மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே போனால் நாம் எதை உண்மையான நிலைப்பாட கொள்வது சகோ?
      இஸ்லாத்தையும் -குர் ஆனையும் விமர்சிப்பது அப்புறம் இருக்கட்டும்
      எதை முன்னிலைப்படுத்தி நாம் செய்யும் செயல்களை இது நன்மை இது தீமை என வகைப்படுத்துவது
      விளக்கம் தருவீர்களா?

      Delete
    10. Ibnu Shakir has left a new comment on your post "இறை வழிக்காட்டுதலும், மனித பின்பற்றுதலும் -எங்கே த...":

      //எதை முன்னிலைப்படுத்தி நாம் செய்யும் செயல்களை இது நன்மை இது தீமை என வகைப்படுத்துவது//
      சமூகத்தின் நலனை.

      Delete
    11. எது சமூகத்தில் நலன்?

      நான் கோடிட்ட ஒரு நிலைகளில் எது சமூகத்திற்கு நலம் தருகிறது...?

      இந்தியாவில் இருக்கும் போது முக்காடும் -மேலை நாடுகளில் இருக்கும் போது முழுவதும் களைவதா சமூக நலன்???

      குறைந்த பட்சம் உங்கள் பதிவுகளில் கூட சமூக நலம் மையப்படுத்தப்படவில்லையென்பது உங்கள் தளத்தில் வெளியாகும் கட்டுரைகளின் நரகல் நடை சான்றுபகிர்கிறது.

      நான் முன்னமே உங்களுக்கு "உரைக்கும்படி " கூறியிருக்கிறேன். (தேடிப்பிடித்து படித்துக்கொள்ளுங்கள்)

      விமர்சித்தல் என்பது வேறு., கேவலப்படுத்துதல் என்பது வேறு.

      விமர்சிப்பதால் சமூக பார்வைக்கு நலன் ஏற்படுத்தலாம்

      கேவலப்படுத்துதல் எந்த பலனையும் இந்த சமூகத்திற்கும் ஏற்படுத்தாது , நமக்கும் ஏற்படுத்தாது. புரிந்துக்கொள்ள முயலுங்கள்.

      இஸ்லாமிய முகமுடியை கழற்றி விட்டாவது குறைந்த பட்ச நேர்மையோடு இனியாவது விவாதிக்க பழகுங்கள்.

      போலிகளுக்கு இனி இங்கே வேலையில்லை!

      Delete
  10. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) சகோ...

    வழக்கம் போலவே மிக அருமையான அறிவுரையுடன் கூடிய ஒரு பதிவு. மேலும், பின்னூட்டங்களுக்கு மிக மிக நீண்ட விளக்கம், மாஷா அல்லாஹ்!.

    "டெம்பரோல் வலிப்பு" வியாதி?!, இது என்ன முகமது (ஸல்..) அவர்களுக்கு மட்டும் ஓர வஞ்சனை?, இஸ்லாமிய நம்பிக்கையில் "ஆதம் (அலை)", நூஹ் (அலை), இப்ராஹிம் (அலை), இஸ்மாயில் (அலை), இஸ்ஹாக் (அலை), மூசா (அலை), ஈசா (அலை) என்று ஒரு லட்சத்திற்கும் அதிகமான நபிமார்களை முஸ்லிம்கள் நம்புகின்றார்கள், இவர்கள் அனைவருக்கும் டெம்ப்ரோல் வலிப்பு வியாதியா?. இதில் ஒரு கொடுமை என்னவென்றால் நபிமார்களைப்யும் இஸ்லாமிய அடிப்படையும் பற்றித் தெரியாமலேயே இஸ்லாமிய முகமூடி வேறு???,

    மறைவானவற்றை நம்பி இறைவன் மீதும் அவன் தூதர்கள் மீதும் நம்பிக்கை கொண்டு அவன் கூறும் வழியில் வாழ்வை அமைப்போர்தான் இறைவனுக்குக் கட்டுப்பட்டவர்கள் அதாவது முஸ்லிம். இதுவன்றி என்னதான் அழகிய அரபிப் பெயர் வைத்திருந்தாலும் முஸ்லிமாகிவிட முடியாது!, அரபிப் பெயர்களைக் கொண்டு முஸ்லிம் என்று தீர்மானித்தால் லெபானில் உள்ள பல மதங்களைப் பின்பற்றும் மக்கள் இதைவிட அழகிய அரபிப் பெயர்களை வைத்துள்ளனர்.

    ReplyDelete
  11. வ அலைக்கும் சலாம் வரஹ்
    தெளிவான கருத்துகளுக்கு நன்றி சகோ

    வருகைக்கும் வாசிப்பிற்கும்
    ஜஸாகல்லாஹ் கைரன்

    ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்