"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Thursday, December 08, 2011

கடவுள் ஏன் இருக்க வேண்டும்....?


                                   ஓரிறையின் நற்பெயரால்

     ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்வதே இவ்வுலக வாழ்வின் பொதுவான நியதி! கடவுளை ஏற்றாலும்- மறுத்தாலும் நன்மையை செய்து தீமையை விலக்கி வாழ்வதே பெரும்பாலான மக்களின் செயலாக இருக்கிறது.

   கடவுளின் பெயர் முன்னிருத்தப்படாமலும் மக்களால் நன்மை- தீமை என்ற இரு பண்புகளையும் பிரித்தறிந்து பேண முடியும் என்றாலும் அது எல்லா சூழ்நிலைகளிலும் முடியுமா ? என்பதே இவ்வாக்கம் முன்னிருத்தும் கேள்விகள்

முதலில் நன்மையை எடுத்துக்கொள்வோம். 

   எந்த வித எதிர்ப்பார்ப்புமின்றி சொல், செயல் மற்றும் பொருளாதார ரீதியாக ஒருவருக்கு நம்மால் பயன்பாடு ஏற்படுத்துவதே நன்மை என்பதன் பொருள்!

  ஏதோ ஒரு வகையில் நமக்கு பயன் கிட்டினால் மட்டுமே அதற்கான செய்கைகளை நம்மால் இயல்பாகவே தொடர்ந்து செய்ய முடியும். ஆனால் பிரதிபலனற்ற ஒரு செயலை நாம் மேற்கொள்வதால் எந்த நன்மையும் நமக்கு ஏற்பட போவதில்லை. அப்படியிருக்கும் போது தர்க்கரீதியாக யோசித்தால் அச்செயலை செய்யவேண்டும் என்ற அவசியமே இல்லை..
அப்புறம் ஏங்க நன்மை செய்து வாழ வேண்டும்?
 இருங்க., இன்னும் டீப்பாக போகலாம்

  நமது குடும்பத்திலுள்ளவர்களுக்கு அல்லது உறவினர்களுக்கு நன்மை செய்வதால் அவர்கள் மத்தியில் நமக்கான அந்தஸ்து உயர வாய்ப்பிருக்கிறது. அத்தோடு அவர்மேல் கொண்ட அன்பால் மன திருப்தியும் கிடைக்கிறது.

    அதைப்போல் நம் பழக்க சூழலில் அறியப்பட்டவராக இருப்பவருக்கு நன்மை செய்வதால் அவர் நம் கொடை தன்மையின் புகழை பிறர் மத்தியில் பரவ செய்யலாம் - இப்படி இரு வழிகளில் உண்டாகும் நன்மையின் விளைவு நமக்கு மன திருப்தியையும் - சமூக அந்தஸ்தையும் ஏற்படுத்தும். அதன் ஊடாக பொதுப்படையாக மற்றும், உளவியல் பயன்பாடு ஏற்படுகிறது.

     ஆனால் நம்மை யாரென்ற அறியாத பிறருக்கு அல்லது யாருக்கும் தெரியாத வகையில் அல்லது நேரடி தொடர்பு இல்லாமல் செயல்படுத்தப்படும் நன்மைகளால் சமூக ரீதியான எந்த ஒரு பயனும் நமக்கு ஏற்படாது. சரி மன திருப்தியாவது கிடைக்குமா என்றாலும் அதுக்கும் சான்ஸ் இல்லை..

 ஏன்னா நமது செயலுக்கு பிறரால் அங்கீகாரம் அளிக்கப்படும் நிலையில் மட்டுமே மன திருப்தியை முழுவதும் நாம் அடைந்துக்கொள்ள முடியும். ஆனால் மேற்கண்ட நிலையில் அதற்கான தன்மைகள் ஏற்பட வாய்ப்பில்லை.

 சிரமப்பட்டு ,உண்மையாக சம்பாதித்த பொருளாதாரத்தை பிறருக்கு எந்த வித பிரதிபலனும் இன்றி அளிப்பதால் அத்தகைய சூழலில் நாம் பெறும் வாழ்வியல் பயன்பாடு ஒன்றுமில்லை.

நூறு சதவீகித நன்மைகள் செய்து வாழ்வதென்பது கடவுளை ஏற்காத வாழ்வில் சாத்தியமில்லை! என்பதைவிட பிரதிபலனற்ற நன்மைகளை செய்ய மனம் இயல்பாகவே அவ்விடத்தில் பணிக்காது என்பதே உண்மை.

அப்போ கடவுளை ஏற்பவர்களால் மட்டும் தான் நூறு சதவீகிதம் நன்மையை செய்ய முடியுமா..?
 இல்லை... ஆனால் நன்மை செய்வதற்கான அதிகபட்ச வாய்ப்பு கடவுளை மறுப்பவர்களை விட ஏற்பவர்களுக்கே இருக்கிறது. ஏனெனில் மேற்கண்ட நிலையில் செய்யும் நன்மைகளுக்கு சமூகமத்தியில் பலன்கிட்டா விட்டாலும் இறைவனிடத்தில் அதற்கான பிரதிப்பலன் உண்டு என்ற எண்ணம் இயல்பாகவே ஏற்படும்.


சரி தீமைக்கு வருவோம்.


  நன்மை!  அதை செய்யாவிட்டால் கூட யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை. ஆனால் தீமை நிச்சயம் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்த வல்லது.
  • செல்வந்தர்கள் தம் புகழ் பழிக்கப்பட்டு சமூகத்தில் தனது அந்தஸ்து பாழாக்கப்படும் என்ற எண்ணத்திலும்
  •  ஏழைகள் தனது வறுமையின் காரணமாக பிறருக்கு அஞ்சுவதுமே 
                தீமைகள் செய்வதிலிருந்து தவிர்ந்து வாழ்வதற்கு தோதுவான காரணிகள். மாறாக கடவுளின் மீதான பயமில்லை .. என "மக்களின் சமூகரீதியான தீமைக்குறைவுக்கு" நாத்திகர்கள் காரணங்கள் சொல்கின்றனர்.
சரி, உடன்படுவோம்.  இவையெல்லாம் அவர்களின் எண்ணங்கள் சீராக ஒரே நேர்க்கோட்டில் இறுதிவரை பயணித்தால் மட்டுமே சாத்தியம்! 

   ஆனால் மனித மனங்கள் இயக்க சூழ்நிலையை மட்டுமே மையமாக கொண்டு செயல்படுவதால் நேரத்திற்கு தகுந்தார்போல் நெகிழ்வுத்தன்மை உடையது. ஆக
செல்வந்தர்கள் தம் புகழின் துணைக்கொண்டு தவறு செய்ய தொடங்கினால் ,  ஏழைகள் தம் செல்வ நிலையை பெருக்க வேண்டும் என தீர்மானித்து எப்படியும் வாழலாம் என முடிவெடுத்தால்...

வெயிட்...
அப்படி அவங்க வாழ்ந்தாலும் சட்டங்கள் போட்டு அவர்களை கட்டுப்படுத்தலாம் ஏன்.. மீறும் மக்களுக்கு தண்டனையும் கொடுக்கலாம் தானே! 

  குட்!. ஆனால் மனித சட்டங்கள் என்பது நூறு சதவீகிதம் முழுமையடையாத ஒன்று. ஏனெனில் ஒரு மனிதரின் அறிவை தாண்டி ஒருவரால் சிந்திக்க முடியாது. அவ்வறிவை அடிப்படையாக வைத்தே எந்த ஒன்றையும் சரி தவறு என அவரால் இனங்காண முடியும். ஆனால் அவரைக்காட்டிலும் பிறிதொருவரின் அறிவு சற்றுக்கூடுதலாக அங்கே செயல்பட்டால் முன்னவரின் முடிவில் இருக்கும் சரி தவறை மேலும் தெளிவாக வரையறுக்கும்.

   மூன்றாம் நபர் இன்னும் அறிவுமிகுந்தவராக இருப்பின்...  சரி / தவறை அறியும் விகிதம் அதிகரித்துக்கொண்டே போகும். இப்படியாக அதன் நம்பக தன்மை விரிவடைந்துக்கொண்டே இறுதிவரை போகும்.இது எல்லா மனிதர்களுக்கும் எல்லா காலத்திலும் பொருந்தும். இதனடிப்படையில் மனித உருவாக்கச்சட்டங்கள் என்றுமே முழுமை பெறாத ஒன்று!

சரிங்க... கண்டுப்பிடிக்கப்பட்ட குற்றங்களுக்கு தண்டனை கொடுக்க தானே செய்யுறோம் அப்புறம் என்ன...?

 இருக்கலாம்! ஆனா
 குற்றங்களின் நிருபணம் என்பது கண்ட, கேட்ட, பார்த்த சாட்சியங்களை வைத்தும் , அந்நிகழ்வோடு ஓத்துபோகும் பெரும்பான்மை செய்கைகளின் முடிவுகளுமே தண்டனையை தீர்மானிக்கிறது.

 மேற்கண்ட இரு நிலைகளிலும் "அதுவரை" தெரிவுறுத்தப்பட்ட வற்றை மட்டும் வைத்து சரியென ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவற்றை மையப்படுத்தி மட்டுமே தீர்ப்புகள் வழங்கப்படுவதால் ஒரு நிலையில் குற்றவாளிகள் கூட தப்புவதற்கும்- நல்லவர்கள் தண்டனையுள்ளாவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

அப்படியில்லாமல் நன்கு விசாரிக்கப்பட்டு உண்மையான குற்றவாளிக்கு தண்டனைகள் வழங்கப்பட்டாலும் அவையும் ஒருவர் மேற்கொண்ட குற்றத்தின் அளவிற்கு அளிக்கமுடியாது

உதாரணமாக ஒருகொலைக்கு பதிலாக குற்றவாளிக்கு தூக்கு தண்டனை தரப்படுவதாக கொள்வோம்.
  ஒரு கொலை செய்வதவனுக்கு ஒரு தூக்கு., மிக சரியான தீர்ப்பு
ஐந்து கொலைகள் செய்த ஒரு குற்றவாளியாக இருப்பீன்... என்ன?  ஐந்து முறை தூக்கா!
          1 :  1
          5 :  1 எப்படி இது நியாயமான தீர்ப்பாகும்...?

அதுவுமில்லாமல் இவையெல்லாம் சட்டத்தின் முன் கொண்டு வரப்படும் மனிதர்களுக்கு தான்!
 சட்டங்களில் சிக்கிக்கொள்ளாமல் மரிக்கும் வரை தீமைகளை செய்து வாழும் மனிதர்களுக்கு... மனித நீதிகளால் என்ன செய்ய முடியும் என்பதே இவ்விடத்தில் கேள்வி? 

தீமை செய்து வாழ்ந்து மனித சட்டங்களில் தப்பி மரணித்தாலும் நாளை கடவுள் முன் நிறுத்தப்படும் போது கண்டிப்பாக அத்தீமைக்கான தண்டனை வழங்கப்படும் என்றால்...

அவை நம்பமுடியாத கற்பனைக்கு உட்பட்ட இறை சட்டங்கள் என எள்ளி நகையாடுவோர் அதற்கான மாற்றுத்தீர்வை இவ்வுலகத்திலே ஏற்படுத்த வேண்டும். ஆனால் அதற்கான ஒரு வாய்ப்பை இயற்கை இதுவரை ஏற்படுத்தவில்லை.. ஏன் உலகம் அழியும் நாள்வரையிலும் ஏற்படுத்தவும் போவதில்லை.

கடவுளின் தலையீடு ஒன்றே அதிகப்பட்சமாக நன்மை செய்வதற்கும் தீமை செய்வதிலிருந்து விலகி இருப்பதற்கும் வழிமுறைகளை ஏற்படுத்த வல்லது
 மறுமையில் வழங்கப்படும் தீர்ப்பை நம்பா விட்டாலும் ,மனித உருவாக்க தீர்ப்புகள் முழுமையற்றவை என்பதை ஏற்றதாக தான் வேண்டும். பொறுத்திருப்போம் என்ன சொல்லுகிறதென நாத்திகம்!

                                                                அல்லாஹ் நன்கு அறிந்தவன்



25 comments:

  1. ஸலாம் சகோ.குலாம்,

    //சட்டங்களில் சிக்கிக்கொள்ளாமல் மரிக்கும் வரை தீமைகளை செய்து வாழும் மனிதர்களுக்கு... மனித நீதிகளால் என்ன செய்ய முடியும் என்பதே இவ்விடத்தில் கேள்வி? //

    இதற்கான பதில்....

    //கடவுளின் தலையீடு ஒன்றே அதிகப்பட்சமாக நன்மை செய்வதற்கும் தீமை செய்வதிலிருந்து விலகி இருப்பதற்கும் வழிமுறைகளை ஏற்படுத்த வல்லது//

    அருமையான பதிவு. நன்றி சகோ.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்,

    மகத்தான ஒரு கட்டுரை. அல்ஹம்துலில்லாஹ்.

    முன்முடிவோடு மனமுரணோடு செயல்படும் பகுத்தரிவுவாதிகளோடு மல்லுக்கு நிற்கிறீர்கள். அல்லாஹ் உங்களுக்கு நல்ல வெற்றியை அளிப்பானாக.

    ReplyDelete
  3. வ அலைக்கும் சலாம் வரஹ்
    @ சிட்டிசன்
    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
    ஜஸாகல்லாஹ் கைரன்
    சகோ

    ReplyDelete
  4. வ அலைக்கும் சலாம் வரஹ்
    @ அறிவு

    உண்மைத்தான்! எனினும் அவர்களும் நடு நிலை சிந்தனையை ஒரு நிலையில் மேற்கொள்வார்கள் என்ற ஆர்வ மிகுதி தான் தொடர் ஆக்கங்கள் ...

    ஜஸாகல்லாஹ் கைரன்
    சகோ

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும்,

    தங்களின் பதிவு மிக அருமை சகோதரே அல்ஹம்துலில்லாஹ்.

    அல்லாஹ் உங்களுக்கு அறிவை மேலும் விசாலமாக்குவானாக !

    பாராட்டுக்களும் & வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  6. வ அலைக்கும் சலாம் வரஹ்

    அல்ஹம்துலில்லாஹ்!

    நன்றி ஜஸாகல்லாஹ் கைரன்
    வருகைக்கும் உங்களின் துஆவிற்கும்

    ReplyDelete
  7. ஸலாம்

    நன்றாக இருக்கிறது ... இறைவனை நம்புபவரால் தான் எந்த வித எதிர்பார்ப்பு இல்லாமல் நன்மை செய்ய முடியும் ..

    ReplyDelete
  8. வ அலைக்கும் சலாம் வரஹ்

    அன்பு சகோ
    இலக்கை நோக்கி...

    பயணிப்பதற்காகவே இவ்வாக்கங்கள் சகோ.,

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
    ஜஸாகல்லாஹ் கைரன்
    :)

    ReplyDelete
  9. Ibnu Shakir has left a new comment on your post "கடவுள் ஏன் இருக்க வேண்டும்....?":

    ஆக்கத்தில் தவறிருந்தால் சுட்டிக்காட்டுங்கள் என்று கூறுகிறீர்கள்.
    ஆக்கத்தில் தவறிருக்கிறது. ஆனால் சுட்டிக்காட்ட அனுமதி இல்லையே!
    (சிவாஜி உருகுவது போல உருகி படித்துகொள்ளவும்)

    ReplyDelete
  10. வாங்க சகோ!
    எங்கடா இன்னும் உங்கள காணுமேனு பார்த்தேன்...
    //அனுமதி இல்லையே//

    தாரளமாக இருக்கிறது., ஆனால் அவை கருத்துக்களாக / குற்றச்சாட்டாக / விமர்சனமாக / சந்தேகமாக பதியப்பட்டால் மட்டுமே!

    ஆனால் உங்கள் எழுத்துக்களை இன்னொருமுறை நீங்களே மனம் விட்டு படித்துப்பாருங்கள்...
    உங்கள் நேரத்தையும் வீணாக்கி எனது நேரத்தையும் வீணாக்காதீர்கள்.
    இப்போது கூட உங்கள் கேள்விகள் ஆக்கம் தொடர்பாக முன்வைக்கப்பட வில்லை பாருங்கள்.

    மேற்கண்ட அடிப்படையில் உங்கள் எண்ணங்கள் பின்னூட்டமானால் இன்ஷா அல்லாஹ் பதில் தர முயற்சிக்கிறேன் - அல்லது அறிந்தவர்களின் பதில்களுடன் சந்திக்கிறேன்.

    ReplyDelete
  11. இதற்கான மறுப்பு வெளியிடப்பட்டிருகிறது. ஆர்வமுள்ளவர்கள் காண்க.

    http://nallurmuzhakkam.wordpress.com/2011/12/17/gulam-senkodi-2/

    ReplyDelete
  12. அன்பு சகோ செங்கொடி
    பாருங்கள்....
    //நண்பர் மனிதச் சட்டம் இறைச்சட்டம் எனும் பாகுபாட்டையும் இதனுள் புகுத்தியுள்ளார். இந்த பாகுபாடு குறித்தும், சட்டம் என்பதன் தன்மை குறித்தும் ஏற்கனவே விளக்கப்பட்டிருக்கிறது//

    இல்லை .. செங்கொடி தளத்தில் விளக்கம் போல் புனையப்பட்டு இருக்கிறது. மீண்டும் அங்கே சொன்ன பதில்கள் தான் இங்கேயும் மேற்கோளாக காட்டப்படுகிறது.

    சகோதரரே மீண்டும் சொல்கிறேன் ஒரு கோட்பாட்டை ஏற்காமல் இருப்பது வேறு., மறுப்பதென்பது என்பது வேறு. ஏற்காவிட்டால் விளக்க வேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில் ஏற்பது என்ற அடிப்படை போன்று நம்பிக்கையின் கீழ் அதைக்கொண்டு வரலாம்.

    ஆனால் மறுப்பதென்பது ஆதார உள்ளீடுகளை கொண்டு காரணங்களை விவரித்து தெளிவாக தரவேண்டிய எதிர்ப்பு. நான் இஸ்லாம் சரி என்கிறேன். அதற்கு இறை சட்டத்தை அளவுகோலாக வைத்து சாத்தியக்கூற்றை மெய்ப்பிக்கிறேன். இவ்வுகலகில் உண்டான மனித உருவாக்க சட்டத்தால் சாத்தியமில்லையென்கிறேன்

    ReplyDelete
  13. இறை ஒன்று இல்லாவிட்டால் இயற்கை அனைத்திற்கும் எல்லா நிலையிலும் சாத்தியங்களை கொண்டிருக்க வேண்டும் அப்போது தான் கடவுள் என்ற ஒன்றீன் தலையீடு அவசியமில்லாது எனலாம். ஆனால் எங்கெல்லாம் இயற்கையிடம் பதில் இன்றி உங்கள் கூற்றுப்போல
    இருக்கலாம்
    முடியலாம்
    செய்யலாம்...
    அங்கு இன்னொன்றீன் இருப்பு அவசியமாகிறது.அதுவுமில்லாமல் ஏற்கன்வே இறை தலையீடு இல்லாமல் இயற்கை தேர்ந்த்தெத்ததாக முரண்பாட்டில் உடன்பட்டு சில விசயங்களை சென்ற பின்னூட்டத்தில் முன்னிருத்தினேன்.

    நீங்களோ மனித உருவாக்கசட்டங்கள் குறைப்பாடுடையவை அவை வர்க்கரீதியாக வாழும் மக்களின் சூழ்நிலைக்கு தக்கவாறு நெகிழ்வடையும். எனினும் அதிகப்பட்ச நீதமான ஆட்சிமுறை கம்யூனிசத்தால் மட்டுமே முடியும் என்கிறீர்கள்.- இது பதில்

    அதிகப்பட்ச சாத்திக்கூறுகள் எதில் என்பதல்ல.. நூறு சதவீகிதம் முழுமையான சட்டங்கள் எங்கே என்பதே என் கேள்வி (யின் உட்கருத்து).

    சரி அப்படி ஏற்றுக்கொண்டாலும் (ஆக்கத்தில் தெளிவாக விளக்கி தான் பதிவிட்டிருக்கிறேன்.) சட்டத்தின் முன் கொண்டு வரா மக்களின் தவறுக்கான தண்டனை...?

    இது தானே ஆக்கத்தின் மைய கேள்வி - அதை தாண்டி விளக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கிக்கொண்ட போவதாக சொன்னால்....

    சகோ கம்யூனிசம் உங்கள் கொள்கையாக இருக்கலாம் அது உங்கள் மன சார்ந்த நம்பிக்கையாக இருப்பீன் அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இஸ்லாத்தில் இல்லா நிலை அஃதில் உண்டென்றால் இஸ்லாம் முன்னிருத்தும் கேள்விகளுக்கும் பதில் தந்தாக வேண்டும். மாறாக இஸ்லாத்திலே அப்படி இருக்கிறதா என்றால் எப்படி சரியான விவாதமாகும்?

    ***

    ReplyDelete
  14. முதலில் நான் இட்ட பதிவுக்குறித்து ஏற்கனவே நான் உங்களிடம் சொன்னது தான். திடிரென யாரும் அறியாமல் பதிவிட்டு எதிராக கருத்திடும் யாரின் பின்னூட்டத்தையும் அனுமதிக்கவில்லையென்றால் உங்கள் கூற்றை உண்மைப்படுத்தலாம்

    ஆனால் நான் December 7, 2011 இல் 11:36 மு.பகல் அன்று
    //கடவுள் ஏன் இருக்கக்கூடாது? என உங்களை ஆக்கம் வரைய சொன்னது உண்மைதான் – ஏற்கனவே எனது இந்த 10 தேதிக்குள் நிர்ணயக்கப்பட்ட தலைப்பு தான் அது. அதில் உங்களின் கேள்வியும் உள்ளடக்கியிருந்தால் அதற்கான தெரிதல்களையும் சேர்த்து பதிவிடுவதற்காக அப்படி சொன்னேன்
    இன்ஷா அல்லாஹ்.. 10ம் தேதிக்குள் பதிவிடுகிறேன்//
    அல்ஹம்துலில்லாஹ் பதிவும் இட்டு இருக்கிறேன்


    ஆம் உங்களுக்கு தெரிவிக்காதற்கு காரணம் உங்கள் மீதான நம்பகத்தன்மை எனக்கு குறைபாடாக தோன்றியதே...

    பாருங்கள்...

    //Robin
    December 5, 2011 இல் 12:02 பிற்பகல் #
    குலாம் விவாதத்தை தவிர்க்க ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். //

    இந்த பின்னூட்டத்தை வெளியிட்ட நீங்கள் அதுக்குறித்து எதும் சொல்லவில்லையே., சகோ ராபின் கிறித்துவ மதத்தை பின்பற்றினாலும் உங்களை பொருத்தவரை கடவுள் உண்டென்கிறார் என்ற நிலைப்பாட்டின் கீழ் வருகிறார்.
    அவர் உங்களை நோக்கி கருத்தை முன்வைக்கா விட்டாலும் உங்கள் நிலைப்பாட்டிற்கு எதிரான கருத்துடையவர். ஆக
    நீங்கள் அவருக்கு எந்த வித மறுப்போ அல்லது விவாத அழைப்போ ஏன் விடுக்க வில்லை. குறைந்த பட்சம் அவரது கொள்கையும் குறைபாடுடையாதாக ஏன் அங்கு ஒரு வரியை முன்வைக்கவில்லை.

    நீங்கள் சொல்லலாம் அவர் என்னை நோக்கி கருத்தை பதியவில்லை என... பின் அவரது வருகை அங்கு எதற்காக? என்னை விமர்சிக்கவா...? எனக்கும் முகவரி இருக்கிறது சகோ

    ஆக உங்கள் நோக்கம் கடவுள் கோட்பாட்டை எதிர்ப்பதில் இல்லை. மாறாக இஸ்லாத்தை (மட்டும்) விமர்சிப்பதே என்பது தெளிவாகிறது.

    இதுவே உங்களுக்கு தெரியப்படுத்தாதற்கு காரணம்.

    // வழக்கம் போல என்னுடைய வாதங்களை தகுந்த உள்ளீட்டுடனும், போதிய வீரியத்துடனும், வீண் அலங்காரங்களோ, வசைகளோ இன்றி எடுத்துவைப்பேன் என உறுதி கூறுகிறேன். //

    இது மட்டும் விவாத முறைமைக்கு அழகல்ல.. உங்கள் கருத்தை ஆதாரிக்கா எந்த நிலைக்கும் உங்கள் அழைப்பும் / மறுப்பும் இருக்க வேண்டும்.

    இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை... - இறை நாடினால் தொடர்கிறேன்

    ReplyDelete
  15. Dear Gulam.

    Please read this article
    http://puthu.thinnai.com/?p=7092

    How Mohammad is different from other temporal lobe epilepsy patients?

    This is a serious question. I hope you provide the answer to my satisfaction and your satisfaction.

    I am troubled. That is why I seek your explanation.

    Anony

    ReplyDelete
  16. சகோ அனானி

    நீங்கள் கொடுத்த சுட்டியை பார்த்தேன்.. கடவுளை நம்புவது ஒருவித மன நோய் எனும் ரீதியில் எழுதப்பட்ட ஆக்கமாக தெரிகிறது. முற்றிலும் தவறான புரிதல் என்பதை விட அபத்தமான புரிதல். அதிலும் வலிப்பு நோயின் விளைவு கடவுளை நம்ப பயன்படுத்துவதாக சொல்ல முற்படுவது தான்...
    அந்த ஆக்கம் எழுதியவரின் மனநிலையை கொஞ்சம் யோசிக்க வைக்கிறது

    நோவினையின் விளைவு நமக்கு தீங்கை அதிகரிக்கும். அந்நிலையில் நமது எண்ணங்கள் சீராக இயங்க வாய்ப்பில்லை.

    தேவையற்ற குழப்பங்களும் மன பிறழ்வுகளும் தான் நமது சிந்தனை ஓட்டத்தில் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அப்படியிருக்க ஒரே கடவுள் கோட்பாட்டை முன்னிருத்தி மிக தெளிவாக எண்ண அலைகள் எப்படி உள்ளத்தில் ஏற்படும்.. - தெளிவான முரண்பாடு..

    இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

    சகோதரர் அனானி மீண்டும் உங்கள் எண்ணங்களை பரிசீலனை செய்யுங்கள் இதைப்போன்ற ஆக்கங்களால் கடவுளின் இருப்பை மறுக்க முடியாது.

    ReplyDelete
  17. Dear Gulam,

    There are two more articles in that series published. After reading and reviewing them, I am more inclined to view the Wahi of Mohammad as the result of epileptic seizure. Mohammad clearly mistook the "sensed presence" induced by the epilepitc seizure as the presence of Jibreel.

    I like to see your views on the other two articles.

    With kind regards
    Earlier Anony

    ReplyDelete
  18. The article clearly does not claim that there is no God. It merely says the so called "revelations" of Ellen white, St Paul and other religious mystics such as Mohammad are the result of epileptic seizures.
    On the otherhand, it says the meditation of Fransciscan sisters and Buddhists and Hindus are real religious experiences. Whereas the Ellen white and other epileptic patient revelations are clearly a result of their mental disease.

    ReplyDelete
  19. அன்பு சகோ அனானி

    எல்லோருக்கும் தங்கள் கருத்தை சொல்ல வாய்ப்பிருக்கிறது.. அதனடிப்படையில் உங்கள் கருத்தை ஏற்கிறேன். மன சிதைவை மையப்படுத்தி முஹம்மது நபியால் உருவாக்கப்பட்ட மதமாக இஸ்லாத்தை நிறுவ முயல்கிறீர்கள்.

    நன்று .,

    இன்னும் விளக்கமாக விவாதிக்கலாம் உங்கள் தரவுகளை தாருங்கள் சென்ற முறை தந்ததுப்போல பொருத்தமில்லாத லிங்கை தராமல் - தமிழில் கருத்துக்கூறினால் இன்னும் தெளிவாக என்னால் விளங்க- விளக்க முடியும்.

    இறை நாடினால் சந்திப்போம்

    ReplyDelete
  20. பகுதி 2க்கு பிறகு இடப்பட்ட பின்னூட்டங்களுக்கான விளக்கங்களுடன் பகுதி 3 வெளியிடப்பட்டிருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் காணலாம்.

    http://nallurmuzhakkam.wordpress.com/2012/01/03/gulam-senkodi-3/

    ReplyDelete
  21. http://puthu.thinnai.com/?p=7277
    http://puthu.thinnai.com/?p=7630

    these are the two links
    It would take around 55 minutes for you to see the video fully (2 parts)

    Pls read and then let us discuss. I have no arguments. It is only a discussion.

    ReplyDelete
  22. Please know that it is not "மன சிதைவை"
    It is an epileptic seizure that creates illusions and delusions for a temporary period.

    ReplyDelete
  23. //ஆர்வமுள்ளவர்கள் காணலாம். //

    சரிதான்! ஆர்வமுள்ளவர்களுக்கு மட்டுமே

    சகோ செங்கொடி., உங்களின் நன்பகதன்மையில் எனக்கு அவ்வளவாக நம்பிக்கையில்லை

    வருகைக்கு நன்றி
    :)

    ReplyDelete
  24. அன்பு சகோ அனானி

    //Please know that it is not "மன சிதைவை"
    It is an epileptic seizure that creates illusions and delusions for a temporary period.//

    இருக்கலாம்.. பாருங்கள் இந்த கருத்தை சொல்வதற்கு கூட உங்களுக்கு அனானி முகமுடி தான் தேவைப்படுகிறது.

    ஏற்கனவே திண்ணை தளத்தில் கருத்தையும் பதிந்து தான் இருக்கிறேன் சகோ

    //It is only a discussion/

    சகோ உங்கள் தரப்பை தெளிவாய் கூறுங்கள் தாரளமாய் உரையாடலாம்

    இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  25. Dear Gulam

    After you have published the comment, three more articles have been published.

    Now you have to prove, what is described in that series is not what happened to Mohammad.

    What is described in that series is what happened to Mohammad is my stand.

    Regards

    ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்