ஓரிறையின் நற்பெயரால்
தவ்ஹீது (ஏகத்துவம்)
தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படுத்துதல்' என்றும் பொருள்.
அனைத்து வகையான வணக்க வழிபாடுகளுக்கும் தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனே என்றும், படைத்தல், காத்தல், உணவளித்தல் போன்ற செயல்களிலும் மற்றும் குர்ஆன் ஹதீஸ்கள் ஆகியவற்றில் அல்லாஹ்வின் ஆற்றல்கள், பண்புகளாக எவைகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றதோ அவைகள் அனைத்திலும் அல்லாஹ்வுக்கு நிகர் யாருமில்லை என்றும் அவன் தனித்தவன் என்றும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு 'தவ்ஹீத்' என்று பெயர்.
அஹ்லுஸ் ஸூன்னத் வல்ஜமாஅத்
'அஹ்லுஸ் ஸூன்னத் என்பதற்கு நபி வழியென்றும், 'வல்ஜமாஅத் என்பதற்கு அவ்வழியை பின்பற்றுவர்கள் என்றும் பொருள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் வழியை பின்பற்றும் யாவரும் அஹ்லுஸ் ஸூன்னத் வல்ஜமாஅத் ஆவர்
இப்பெரும் வார்த்தைகள் இரண்றிற்கும் நேரடி அர்த்தங்கள் இவை. இவ்விரு வார்த்தைகளுக்கும் செயல்வடிவம் கொடுப்பவர்களே முஸ்லிம்கள். ஒன்றை ஏற்று பிறிதொன்றை விட்டவர்கள் முஸ்லிம்கள் என்ற வட்டத்திற்குள் வரமாட்டார்கள். இப்படி இஸ்லாத்தின் உரைக்கல்லான இவை இன்று எதிர் எதிர் நிலையில் செயல்படும் இயக்கம் சார்ந்த வார்த்தைகளாக சமூகத்தில் வலம் வருவதுதான் ஆச்சரியமான வேதனை!
இஸ்லாத்தை பொறுத்தவரை அல்லாஹ்வும் அவன் திருத்தூதரும் ஒன்றை ஏவினால் அதை ஏற்று நடப்பதே ஒருவர் முஸ்லிம் என்பதற்கு சான்று. மாறாக அவற்றில் மாற்றம் கொள்வதற்கோ - திருத்தம் செய்வதற்கோ அதிகாரம் இல்லை. இதை அல்லாஹ் தன் வான் மறையில்
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். ((33:36))
திருக்குர்-ஆன் மிக தெளிவாக எந்த ஒரு காரியத்தை செய்வதற்கும் விலக்குவதற்கும் அளவுக்கோலை ஏற்படுத்தி இருக்க எந்த ஒரு காரியமெனிலும் அது அல்லாஹ்வுடைய அங்கீகரிப்பும், அவனுடைய தூதரின் வழிக்காட்டுதலும் இருக்க வேண்டியது அவசியமான ஒன்று. அதிலும், குறிப்பாய் மார்க்க விசயங்களில் இவை இன்னும் அதிக கவனத்துடன் கையாளப்பட வேண்டும்.
இறைவனை மையப்படுத்தும் விசயங்களிலெல்லாம் இறை நேசர்களை முன்னிலைப்படுத்தும் நபர்கள் ஒருங்கிணைந்த கூட்டமைப்புக்கு சுன்னத் வல் ஜமாஅத் என்றும் அவற்றை களைவதற்காக குழுமியிருக்கும் நபர்கள் தவ்ஹீதுவாதிகள் என்ற பெயரிலும் சமூக பார்வையில் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.
சுன்னத் ஜமாஅத்தினர் என தம்மை அடையாளப்படுத்திக்கொள்வோர்களிடம் நாம் வினவினால் அவர்கள் கூறும் பதில் இது தான்
அல்லாஹ்விற்கு யாரையும் நாங்க இணைவைப்பதில்லை. மாறாக இறைவனிடத்தில் எங்களின் துஆ விரைவாக ஏற்றுக்கொள்ளப்பட இறை நேசர்களை முன்னிலைப்படுத்துகிறோம் என்பதே...
கப்ரு ஜியாரத்திற்கு இது தாம் மையக்காரணமாக கொண்டால் இச்செய்கை அவர்களின் அறியாமையென்று தெளிவாய் நிரூபிக்கலாம்.
பிடரியின் நரம்பை விட அருகாமையில் இருப்பதாக சொல்லும் போது இறைவனிடம் நம் துஆக்களை சொல்ல இரண்டாம் நபரின் குறுக்கீடு அங்கு அவசியமானதன்று. அதுவும் எந்த ஒரு நபருக்கும் மற்றவரின் பரிந்துரையும் ஏற்க்கபட மாட்டாது என தெளிவாய் சொல்லப்பட்டிருக்கும் போது மேற்கண்ட காரணம் அறியாமையின் விளைவே!
அதுமட்டுமில்லாமல் இறை நேசர்களின் வருகையின் நோக்கம்
அல்லாஹ் மட்டுமே வணத்திற்குரியவனாக ஏற்க வேண்டும் -அவனுக்கு இணை துணை கற்பிக்க கூடாதென்றும்
நபிகள் (ஸல்) அவர்களின் போதனைப்படி வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும். புதிதாய் மார்க்கத்தில் எதையும் ஏற்படுத்தக்கூடாது -என்பதை தெளிவாய் வலியுறுத்துவதற்கே என்பதாய் இருக்கும்.
மேற்கண்ட நோக்கத்திற்காக ஒருவரது வருகையும் வாழ்வும் இருப்பது உண்மையானால்
ஒருவரை நாம் மதிப்பது உண்மையென்றால் அவரது வழிமுறைகளை பேணுவது அவசியமான ஒன்று. இன்று இறை நேசர்களுக்கு கண்ணியம் செய்கிறோம் என்ற பெயரால் அவர்கள் மீதான புகழ்ப்பாக்களாக மௌலிதுகளை படிப்பது ஒருபுறம் இருக்கட்டும்.
அவர்களின் வாழ்வில் எந்த சந்தர்ப்பத்திலும் நபிகள் மீது மௌலிதுகளை ஓதியதாக எந்த வித ஆதாரப்பூர்வ வரலாற்று சான்றுகளும் இல்லை, ஏனெனில் மார்க்கம் அங்கீகரித்திராத செயல் என்பதை அவர்களே அறிந்திருந்தனர். ஆக அவர்களே செய்யாத, முன்மொழியாத ஒன்றை அவர்களின் பெயரில்
செய்வதற்கு மார்க்க ரீதியில் ஆதார தரவுகளை எங்கிருந்து பெற்றீர்கள்..?
இவைதான்
இப்படித்தான்
தர்ஹா -கந்தூரி- தகடு தாயத்துக்களை ஆதாரிப்போர் மத்தியில் எழுப்ப வேண்டிய கேள்விகள்...
ஆனால்,
" தர்காவுக்கு போறியா அப்ப நீ நரகத்திற்கு தான் போவே...! "
ஏற்படும் தீமையின் விளைவை மென்மையின்றி எடுத்துரைப்பதால் அவர்களின் செவிப்பறையில் செருக்குடன் அமர்ந்திருக்கும் சைத்தான் செயலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறான். ஏற்க மறுப்பதோடு எதிர் வினையும் ஆற்றுகிறான். செவி மூடும் சைத்தான் பிரச்சனைக்கான வழி திறக்கிறான்
அவர்களுக்கிடையில் ஏற்படும் விவாதம் ஒரு கட்டத்தில் இறை நேசர்களின் வாழ்வை விமர்சிக்கும் நிலைக்கு செல்கிறது.
ஒருவரை விமர்சிப்பதற்கு இரண்டு அடிப்படை தகுதிகள் இருக்கவேண்டும்.
1. அவரது சொல், செயல் மற்றும் வாழ்வியல் கூறுகளை நாம் நேரடியாக அறிந்திருக்க வேண்டும். அதற்கு அவரது சமகாலத்தில் வாழ்ந்தால் மட்டுமே நமக்கு சாத்தியம்.
2. அவரது வாழ்வை விளக்கும் நம்பத்தகுந்த ஆவண சான்றுகளில் அவர் குறித்த விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்
இன்று இறைநேசர்களின் வரலாறுகள் என்று நமக்கு கிடைக்கபெற்றிருப்பதெல்லாம் அவர்களின் மறைவுக்கு பின்னரே அதுவும் நம்பகதன்மை குறைபாடுடன் எழுதப்பட்ட வரலாறுகளே. அதிலும் அவர்கள் மீதான விமர்சனங்கள் ஏதுமின்றி கறாமத்துகள் எனும் பெயரில் அற்புதங்களாக அவர்களின் வாழ்வில் சில செயல்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.
நம்பக தன்மையில் குறைப்பாடுடைய இத்தகைய வாழ்க்கை வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு ஒருவரை உண்மையாக விமர்சிக்க முடியாது. ஆக அவர்களின் வாழ்வை குற்றப்படுத்தி விமர்சித்தல் என்பது பொருளற்றதாக தான் இருக்கும். ஒருவர் மரணித்தவுடன் அவரது செயல்களுக்கான பிரதிபலனை இறைவனிடத்தில் அடைந்துக்கொள்வார் எனும் போது அவர்களை விமர்சிப்பதும் தேவையில்லாத ஒன்றே!
மேலும் அப்படி விமர்சிப்பதிலும் எதிர்விளைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தான் மதிக்கும் / நம்பும் ஒன்றை விமர்சிக்கும் போது அதன் தாக்கம் கோபமாக மாறி சொல்வோர் மீது வெறுப்பாய் திரும்புகிறது. சொல்லுவது உண்மையாக இருப்பீன் கூட மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. பின் கூறும் இறைமறை வழி விளக்கமும், நபிமொழி போதனையும் பயனற்று தான் போய்க்கொண்டிருக்கின்றது. இதன் விளைவாய் தனிமனித சாடல்களும் -இயக்க மோதல்களும் அரங்கேறுகின்றன.
மேலும் இயக்கம் சார்ந்து இஸ்லாமிய குறியீடுகள் முன்னிருத்தப்படுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா?
இவ்வுலகின் உயர்ந்த ஒற்றை சொல்லான தவ்ஹீது என்ற பதம் இயக்கரீதியில் முன்னிருத்தப்படுவதாக எண்ணி எத்தனையோ பேர் நான் தவ்ஹீதல்ல..! என்றும் தர்காவை மையப்படுத்தி சுன்னத் வல் ஜமாஅத் என்ற வார்த்தை ஆனாச்சாரங்களின் ஆணிவேராய் நிறுவப்படுவதால் அதை தவிர்ப்பதாக எண்ணி நான் சுன்னத் ஜமாஅத் காரனல்ல..! என்று பலர் இன்றும் சொல்ல காண்கிறோம்.
உங்களில் சில பேருக்குக்கூட இவ்வாக்கத்தின் தலைப்பு ஒருவித சலனங்களை மனதில் ஏற்படுத்தி இருக்கலாம்... சிந்திக்கவேண்டும் சகோ! இவ்விரு வார்த்தைகளின் செயல்முறை வடிவம் ஒருசேர நம்மிடையே அமையா விட்டால் நமக்கு பெயரே வேறு!
அறியாமை களையப்படவேண்டியது என்பது சந்தேகமில்லை ஆனால் அவற்றை விளக்கும் முறை அழகிய வழியில் வெளிப்பட வேண்டும் என்பது அவசியமென்பதை விட மார்க்க கடமையும் கூட!. மாறாக முன்முடிவுகள் -பிடிவாதத்தோடு செயல்படுவோரை என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்???
நபி வழியில் தான் தமது வாழ்வை அமைத்துக்கொள்வதாக கூறுவோர் மேற்கண்ட நிலைகளை சற்று ஆராய வேண்டும். ஏனெனில் நமது வாழ்வியல் முறைக்கு அல்லாஹ்வின் தூதர் அனைத்திலும் முன்மாதிரியாய் செயல்பட்டிருக்க அடுத்தவர்களின் வழிக்காட்டுதல் அவசியமில்லாத ஒன்று.
இறைநேசர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் சந்தேகமில்லை ஆனால். அவர்கள் வணங்கப்படுபவர்களாக யாரும் பொருள் கொள்ள வழி செய்து விடாதீர்கள்!
நாம் மட்டுமல்ல நாளை அவர்களும் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியாக வேண்டும்!
அல்லாஹ் நன்கு அறிந்தவன்

- எந்த தேவைக்கும் என்னை முன்வைத்து அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள் என்றோ
- எனது மரணத்திற்கு பிறகு ஆண்டுக்கு ஒரு முறை கப்ருரில் சந்தனம் பூசி கந்தூரி விழா நடத்துங்கள் என்றோ எப்படி சொல்வார்?

Tweet | |||||
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteநீண்ட நாட்களாக நான் எழுத நினைத்த ஒரு பதிவு...
எப்படி எழுதுவது... எங்கே ஆரம்பித்து எங்கே முடிப்பது... என்ற குழப்பத்திலேயே தள்ளிப்போய்க்கொண்டு இருந்தது.
கடைசியில் ஒருவழியாக பூனைக்கு நீங்கள் மணிகட்டிவிட்டீர்கள்..!
தங்கள், //நீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..?//... என்ற ஸ்டேடஸ் மெசேஜை காலையில் பார்த்துவிட்டு நான் சாட்டிங்கில் கேட்ட கேள்வி...
"நான் தவ்ஹீத் கொள்கையை ஏற்று நபி(ஸல்) அவர்களின் சுன்னத்துகளை பின்பற்றும் ஒருவன்... எனில், நான் எந்த ஜமாஅத்..?"
இதற்கான பதில் தரும் அருமையான இடுகை..!
ஜசாக்கலாஹு க்ஹயர்..!
///இவ்விரு வார்த்தைகளுக்கும் செயல்வடிவம் கொடுப்பவர்களே முஸ்லிம்கள். ஒன்றை ஏற்று பிறிதொன்றை விட்டவர்கள் முஸ்லிம்கள் என்ற வட்டத்திற்குள் வரமாட்டார்கள். ////
மிகச்சிறப்பான ஒரு பதிவுக்கு நன்றி சகோ.குலாம்.
///இப்படி இஸ்லாத்தின் உரைக்கல்லான இவை இன்று எதிர் எதிர் நிலையில் செயல்படும் இயக்கம் சார்ந்த வார்த்தைகளாக சமூகத்தில் வலம் வருவதுதான் ஆச்சரியமான வேதனை!///---வேதனை.....வேதனை..... வேதனை.... வேதனை..... வேதனை..........
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
ReplyDeleteநமது சமுதாயத்திற்கு தேவையான , அருமையான கருத்து
ஸலாம் சகோ குலாம்.
ReplyDeleteநான் பார்க்க விரும்பாத தலைப்பு.சுன்னத்வல் ஜமாத் என்றாலே முழுவதும் தர்காவாதிகள் என பொதுபார்வை கொண்டிருப்பதில் முறன்படுகிறேன்.
அப்டீன்னா நீங்க சுன்னத் ஜமாத்தான்னு கேட்டுடாதீங்க..
நான் இவ்வியக்க நேசர்கள் ஒருவரையொருவர் மேடைபோட்டு ஒரு முஸ்லிமின் தரம் என்னவெனத்தெரியாமல் எல்லைகடந்து விமர்சித்ததன் விளைவாய்,சகமுஸ்லிமாய் கேவலப்பட்டு நிற்கிறேன்.இவர்களின் இச்செயலால் இவர்களினின்று தனிமைப்பட்டு நிற்கிறேன்...
உங்களின் தளப்பெயர் போல நான் முஸ்லிம் நான் முஸ்லிம் என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன்..
நபியவர்கள் சொல்லியதற்கிணங்க இறுதிவரை இந்த குழப்பத்தில் சிக்கிவிடாது ஒரு மரத்தின் வேரை பல்லால் கடித்தபடி இருக்க என்னை இறப்பு தழுவினாலும் இன்ஷா அல்லாஹ் அப்படியே நீடிக்க விரும்புகிறேன்.
அன்புடன்
ரஜின்
அஸ்ஸலாமு அலைக்கும்!
ReplyDeleteஇன்றைய கால கட்டத்துக்கு மிகவும் தேவையான பதிவு. வாழ்த்துக்கள் சகோ.
அஸ்ஸலாம் அலைக்கும்.....
ReplyDeleteநலமோடு இருப்பீர்கள் என்று நம்புகிறேன்
குலாம் பாய், நீங்க சொல்றது சரிதான். எனக்கும் இதைப் பற்றி ரொம்ப நாளாக ஆதாங்கம்,
என் உள்ளத்தில் இருந்ததை அப்படியே உங்க பதிவில் பார்த்ததும் சந்தோசம் தான் , சரியாக எழுதி இருக்கீங்க ... இந்த பதிவை என் நண்பர்களுக்கும் பார்வர்ட் பண்ணிட்டேன் ...
நானும் இயக்கம் சார்ந்தவர்களிடம் இதைப்பற்றி கேட்டால்
அவர்கள் பெருமையாக நான் தவ்ஹித்வாதி என்று சொல்றாங்க அதே நேரத்தில்
சுன்னத் வல் ஜமாஅத் என்கிறதை தவீர்கிறார்கள்.... இரண்டுமே ஒன்னுதானேபா னு நாம சொன்னால் ஒரு மாதிரியா பார்க்குறாங்க (இயக்க பித்து பிடிச்சவங்க)
நான் எந்த இயக்கத்தையும் சாராதவன் ....ஆனால்
உண்மை முஸ்லிமாக இருக்கவே விரும்புகிறேன் ......
வஸ்ஸலாம்
muhammad nasar
வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
ReplyDeleteசுட்டியை சொடுக்கி படியுங்கள்.
******
80 களின் இறுதியில் ஹிந்துக்களுக்கு அநீதி!! ஹிந்துஸ்தானத்திற்கு ஆபத்து!! என்ற நூலில் ஹிந்து முன்னணி தலைவன் ராம. கோபாலய்யர் வெளியிட்டு உள்ள புளுகுகளுக்கு ஷஹீத் பழனி பாபா அவர்கள் வெளியிட்ட மறுப்புரையின் தொகுப்பு. *********
.
அஸ்ஸலாமு அலைக்கும் குலாம்.
ReplyDeleteநல்ல பதிவு.
சரி, இந்த ‘தவ்ஹீத்’ அல்லது ‘சுன்னத் வல் ஜமாஅத்’ என்ற பெயர்கள் எப்படி புழக்கத்திற்கு வந்தன? நாம் இஸ்லாத்தைச் சரியாகக் கடைபிடிக்கிறோம் என்பதற்கு ‘முஸ்லிம்’ என்ற பெயரே போதுமானதுதானே? எப்படி வந்தன கூடுதலாக இப்பெயர்களும், அதன் வகைப்படுத்துதல்களும்?
இன்று நான் யாரிடமேனும் (இஸ்லாமியர்களிடம்கூட) முஸ்லிம் என்று அறிமுகப்படுத்திக் கொண்டால், கூடவே இந்த இரு பிரிவுகளில் எதைச் சேர்ந்தவள் என்றும் சொல்லிக் கொள்ள வேண்டியவளாகின்றேன். ஒரு இந்து தன் சாதியையும் தவறாமல் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியிருப்பது போல. :-((((
நாயகம் (ஸல்) காலத்தில் அவர்களைப் பின்பற்றி உறுதியோடு பல துன்பங்களையும் துயரங்களையும் சகித்து, இஸ்லாமை - அதன் அடிநாதமான ஏகத்துவத்தை ஏற்று வாழ்ந்தவர்களைவிடவா, இக்காலகட்டத்தில் வாழும் நாம் சிறந்த பின்பற்றுபவர்கள்? அவர்கள்கூடத் தம்மை இப்படி அடையாளப்படுத்திக் கொண்டதில்லையே? முஸ்லிம்கள் என்றுதானே அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.
எனவேதான் முஸ்லிம் என்ற இந்த அடையாளமே எனக்குப் போதுமானதாய் நினைக்கிறேன், உங்களைப் போலவே. :-))))
ஸலாம் சகோ ரஜின்,
ReplyDelete//சுன்னத்வல் ஜமாத் என்றாலே முழுவதும் தர்காவாதிகள் என பொதுபார்வை கொண்டிருப்பதில் முறன்படுகிறேன்.//---இந்த பொதுப்பார்வைக்கு காரணம் அவர்கள்தானே..? அவர்களின் தலைவர்கள்தானே..? என்றைக்காவது அந்த தலைவர்களுள் ஒருவர் தர்காக்களையும் அங்கே நடக்கும் தட்டு, தகடு, தாயத்து, சந்தனக்கூடு, கொடிஏற்றம், ஃபாத்திஹா, அவுலியாக்களிடம் துவா... போன்ற அனாச்சாரங்களையும் கண்டித்துள்ளனரா..? தடுத்துள்ளனரா..? மாறாக ஆதரிப்பவராக அல்லவா இருக்கின்றனர்..? இல்லையெனில், கண்டும் காணாது அல்லவா இருக்கின்றனர்..?
அதேநேரம், ///இவ்வியக்க நேசர்கள் ஒருவரையொருவர் மேடைபோட்டு ஒரு முஸ்லிமின் தரம் என்னவெனத்தெரியாமல் எல்லைகடந்து விமர்சித்ததன் விளைவாய்,///...இதுவும் நடக்காமல் இல்லை. தன் இயக்க உறுப்பினர்கள் இப்படி செய்தால் அதை கண்டித்து அதற்காக இயக்கத்தை விட்டு நீக்கி ஒரு முன்னுதாரணமாக எந்த இயக்கமும் இல்லை. ஏனெனில், சில தலைவர்களே அப்படி இருக்கும்போது என்ன செய்வது..?
ஆனால், இந்த தவறுகள் இரண்டும் இஸ்லாமிய அடிப்படையில் ஒரே மாதிரியானவை அல்ல.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ReplyDeleteகாலத்திற்கேற்ற அருமையான ஆக்கம்! அல்ஹம்துலில்லாஹ்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ் வபரகாதஹு,
ReplyDeleteமாஷா அல்லாஹ் அருமையான கட்டுரையை தொகுத்து வழங்கி இருக்கின்றீகள் சகோ.இன்றைய சூழ்நிலைக்கு தேவையான ஒரு கட்டுரை.
இந்த பிரிவினை சம்பந்தமாக நான் ஒரு தௌஹீத் சகோதரரிடம் குரான் மற்றும் ஹதீதை பின்பற்றக்கூடிய அணைத்து இயக்கங்களும் ஒன்று சேர்ந்தால் என்ன?என்று கேட்ட பொழுது அவர் எனக்கு பதில் அளிக்கையில் நபி(ஸல்) அவர்கள் காலத்துக்கு பின்னர் சகாபாக்கள் மத்தியில் பிரிவினை ஏற்படவில்லையா? என்று கூறி பிரிவினையை நியாயப்படுத்துகிறார்.என்னத்த சகோ சொல்ல.அல்லாஹ் ரப்புல் ஆலமின் தான் நம் அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும்.இன்ஷா அல்லாஹ்
your brother ,mohamed iqbal
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் குலாம்...
ReplyDeleteநல்லதொரு ஆக்கம். இயக்கரீதியில் மறுப்பதாக கூறிக்கொண்டு நாம் தவ்ஹீத் இல்லையென்றும், சுன்னத் வல்ஜமாத் இல்லையென்றும் கூறுவது அடிபடையிலேயே கை வைக்கும் ஒன்று.
அதே நேரம், இயக்கங்கள் குறித்தும் ஒரு தெளிவான பார்வை நம்மிடையே இருக்கவேண்டும். தூய இஸ்லாத்தை எடுத்து சொல்லும் எந்தவொரு இயக்கமும் இஸ்லாத்தை மட்டுமே முன்னிலைப்படுத்த முடியும். அதன் தலைவர்களும் இதற்கு மாறாக செயல்பட முடியாது. இயக்கங்கள் என்பவை சமூக நலன் குறித்தான ஒரு அமைப்புகள். அவ்வளவே.
சும்மத வல்ஜமாஅத் என்ற பெயரில் ஒரு அமைப்பாக செயல்படுகின்றவர்கள் ஒரே ஒரு அறிக்கை பொதுவில் "தர்காக்கள் இஸ்லாத்திற்கு எதிரானவை" என்று கூறுவார்களேயானால் நம் முன்னே இருக்கும் ஒரு முக்கிய பிரச்சனை தீரும். ஆனால் செய்வார்களா அவர்கள்?
தர்காக்களை எதிர்க்காத, சுன்னத் வல்ஜமாஅத் அமைப்பு தன் நிலையை மாற்றிக்கொள்ள முன்வரவேண்டும் என்று குறைந்தபட்ச எதிர்ப்பைக்கூட காட்டாத எவருக்கும் ஒற்றுமை குறித்து பேச தகுதி இல்லை.
தூய இஸ்லாத்தை எடுத்துச் சொல்லும் இயக்கங்கள் ஒருங்கிணைய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் சும்மாத் வல்ஜமாத் என்ற பெயரில் நபிவழிக்கு முரணாக செயல்படுபவர்களை ஆதரித்து செல்ல வேண்டுமென்றால் அப்படியான போலி ஒற்றுமை தேவை இல்லை.
நான் சொல்லவருவது, ஒரு பக்கம் அனாச்சாரங்களை நடத்திக்கொண்டு, அதற்கு ஆதரவளித்து கொண்டு மற்றொரு பக்கம் ஒற்றுமை வேண்டும் ஒற்றுமை வேண்டும் என்று கூறிக்கொண்டிருப்பவர்கள் ஒரு பொருட்டாக மதிக்காமல் கடந்து சென்று விடுவோம் என்பது தான். கேடுகெட்ட மனிதர்களில் ஒரு பகுதியினர் இவர்கள்.
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
ReplyDeleteமாஷா அல்லாஹ் அருமையான,அவசியமான ஆக்கம்
அதும் அந்த இமேஜ் மிக அருமை
I SUPPORT LOVE AND MAKING PEACE
---------------------------------------------------------------------------------------------
நபியவர்கள் சொல்லியதற்கிணங்க இறுதிவரை இந்த குழப்பத்தில் சிக்கிவிடாது ஒரு மரத்தின் வேரை பல்லால் கடித்தபடி இருக்க என்னை இறப்பு தழுவினாலும் இன்ஷா அல்லாஹ் அப்படியே நீடிக்க விரும்புகிறேன்.
---------------------------------------------------------------------------------------------
+1
வ அலைக்கும் சலாம் வரஹ்
ReplyDelete@அன்பு சகோ சிட்டிசன்
//கடைசியில் ஒருவழியாக பூனைக்கு நீங்கள் மணிகட்டிவிட்டீர்கள்..!//
இல்லை சகோ ஆக்கத்தில் ஐம்பது சதவீகிதத்தை மட்டுமே பூர்த்தி செய்திருக்கிறேன். ஏனெனில் தனிமனித -இயக்க சாடல் இருந்திடக்கூடதென்பதில் கவனமாய் இருந்ததினால் நூறு சதவீகித விளைவையும் ஆக்கத்தில் வெளிப்படுத்த முடியவில்லை
அத்தகைய எதிர்ப்பார்ப்பு உங்கள் எழுத்துகளில் வெளிபட அதிக வாய்ப்பிருக்கிறது - இன்ஷா அல்லாஹ் எதிர்ப்பார்க்கிறோம்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ
ஜஸாகல்லாஹ் கைரன்
வ அலைக்கும் சலாம் வரஹ்
ReplyDelete@ அன்பு சகோ Rabbani
அல்ஹம்துலில்லாஹ்!
ஜஸாகல்லாஹ் கைரன்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ
தான் சரியான வழியை கடைபிடிக்கிறேன் என்று பெருமிதம் கொள்ளலாம்.ஆனால் தன்னுடைய இயக்கம் தான் சிறந்தது என்று ஆணவம் கொள்வது தவறு .. பிறர் சில மார்க்க உரையை கூறினால் அது ஒரு இயக்கம் கூறுவது போல் ஆகிவிடும் ..தன்னுடைய இயக்கத்தை சிறந்ததாக நினைப்பர்க்கு பிறர் கருத்தை மறுக்கத்தான் தோன்றும் ..பிறர் கருத்தை ஏற்காமல் தாமாக முன்வந்து குர்ஆன் சொலவதையும் அதன் ஆதாரங்களையும் தெரிந்து உணர்ந்து கொண்டால் மட்டுமே இங்கு மாற்றம் ஏற்படும்.பிற மதங்களில் சாதியை போன்று நம் மதங்களில் இன்று இயக்கங்கள் தோன்றி விட்டது... குறிப்பாக கடந்த
Deleteவருடங்களாக ரம்ஜான் தொழுகை வெவ்வேறு நாட்களில் நடப்பது நமக்குள் பிரிவை ஏற்படுத்தி இருப்பது வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது . தான் ஒரு இயக்கம் என்பதை மறந்து சரியான வழியை
கடைபிடித்து அல்லாஹ்விற்கு அஞ்சிய ஒரு மூமின் என்று எண்ணுதல் மிக சிறந்தது .
வ அலைக்கும் சலாம் வரஹ்
ReplyDelete@ அன்பு சகோ ரஜின்
//அப்டீன்னா நீங்க சுன்னத் ஜமாத்தான்னு கேட்டுடாதீங்க..//
பாத்திங்களா... இந்த மாயை தான் விலகவேண்டுமென்கிறேன்.
"நான் தவ்ஹீத் கொள்கையை ஏற்று நபி(ஸல்) அவர்களின் சுன்னத்துகளை பின்பற்றும் ஒருவன்... என்பது தான் நம் ஒவ்வொருவரின் யதார்த்த வாழ்வில் வாய்மொழி சொல்லாக இருக்கவேண்டும்
//நான் இவ்வியக்க நேசர்கள் ஒருவரையொருவர் மேடைபோட்டு ஒரு முஸ்லிமின் தரம் என்னவெனத்தெரியாமல் எல்லைகடந்து விமர்சித்ததன் விளைவாய்,சகமுஸ்லிமாய் கேவலப்பட்டு நிற்கிறேன்.//
இல்லை சகோ சொல்லும் விசயங்களில் சொல்லப்படும் முறை என்பது முக்கியமாக ஒன்று. எனினும் இறை நேசர்களின் நோக்கி முற்படும் நபர்களை களைவதற்காக பயணப்படும் சகோதரரகள் சில நேரங்களில் இயக்க நேசர்களாக அதில் சிக்குண்டு வீழ்வது தான் வருத்தமான விசயம்
வ அலைக்கும் சலாம் வரஹ்
ReplyDelete@ அன்பு சகோ சுவனப்பிரியன்
அல்ஹம்துலில்லாஹ்!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ
ஜஸாகல்லாஹ் கைரன்
வ அலைக்கும் சலாம் வரஹ்
ReplyDelete@ அன்பு சகோ முஹம்மது நாசர்
//என் உள்ளத்தில் இருந்ததை அப்படியே உங்க பதிவில் பார்த்ததும் சந்தோசம் //
எனக்கு மட்டுமில்லை சகோ இந்த உம்மத்தின் மீதான அக்கறை கொண்ட பெரும்பாலான மக்களுக்கு இந்த ஆதங்கம் இருக்க தான் செய்யும்
எனினும் சமூகம் பார்வை தங்களை குற்றப்படுத்தி விடுமோ என்ற உலகியல் அச்சமே அவரவர் இயக்கம் சார்ந்து செயல்பட தூண்டுகிறது
இன்ஷா அல்லாஹ் நிச்சயமாய் அறியாமைகள் அகற்றப்பட்டு முஸ்லிம்கள் தூய இஸ்லாத்தை பின்பற்றும் நாள் விரைவில்...
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ
ஜஸாகல்லாஹ் கைரன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteஅன்பு VANJOOR அப்பா
வருகைக்கு நன்றி
ஜஸாகல்லாஹ் கைரன்
வ அலைக்கும் சலாம் வரஹ்
ReplyDelete@அன்பு சகோ ஹூஸைனம்மா
தவ்ஹீது சுன்னத் வல் ஜமாஅத் என்பன முஸ்லிம்களாக இருப்பதற்கு மார்க்கம் ஏற்படுத்திய வரையறை. ஆனால் இன்று இயக்க ரீதியில் பெயர்சொல்லாக இவை முன்னிருத்தப்படுவதால் இச்சொல்லின் மூலங்களை நன்கு அறிந்தவர்கள் கூட ஏதாவது ஒன்றை மட்டுமே தன் சார்பு பெயராக குறிப்பிடுகின்றனர்.
//நாயகம் (ஸல்) காலத்தில் அவர்களைப் பின்பற்றி உறுதியோடு பல துன்பங்களையும் துயரங்களையும் சகித்து, இஸ்லாமை - அதன் அடிநாதமான ஏகத்துவத்தை ஏற்று வாழ்ந்தவர்களைவிடவா, இக்காலகட்டத்தில் வாழும் நாம் சிறந்த பின்பற்றுபவர்கள்? //
அவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் மட்டுமே மையப்படுத்தி செயல்பட்டார்கள். ஆனால் இன்றோ நம்மில் அவை இயக்க முன்மொழிவதை வைத்தே முன்னிலைப்படுத்த படுகிறது
//எனவேதான் முஸ்லிம் என்ற இந்த அடையாளமே எனக்குப் போதுமானதாய் நினைக்கிறேன், உங்களைப் போலவே. ://
ஜஸாகல்லாஹ் கைரன்
கருத்திற்கும் வருகைக்கும்
நன்றி சகோ
வ அலைக்கும் சலாம் வரஹ்
ReplyDelete@ அன்பு சகோ Jafar Safamarva
அல்ஹம்துலில்லாஹ்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ
ஜஸாகல்லாஹ் கைரன்
வ அலைக்கும் சலாம் வரஹ்
ReplyDelete@ அன்பு சகோ mohamed iqbal
//நபி(ஸல்) அவர்கள் காலத்துக்கு பின்னர் சகாபாக்கள் மத்தியில் பிரிவினை ஏற்படவில்லையா? என்று கூறி பிரிவினையை நியாயப்படுத்துகிறார்.//
சரி தான் ஆனால் அப்பிரிவினை அச்சமூக மத்தியில் மக்களை இயக்கம் சார்ந்து பிரிக்கவில்லை. அதிலும் இன்று இயக்கம் சார்ந்த செயல்பாடுகளுக்கும் அன்றைய நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு சகோ
ஜஸாகல்லாஹ் கைரன்
கருத்திற்கும் வருகைக்கும் நன்றி
வ அலைக்கும் சலாம் வரஹ்
ReplyDelete@ அன்பு சகோ ஆஷிக் அஹமது
//தூய இஸ்லாத்தை எடுத்து சொல்லும் எந்தவொரு இயக்கமும் இஸ்லாத்தை மட்டுமே முன்னிலைப்படுத்த முடியும்//
உண்மைத்தான் .ஆனால் தான் மட்டுமே தூய இஸ்லாத்தை பின்பற்றுவதாக பறைசாற்றிக்கொள்வது தான் இயக்கரீதியான பிரிவுகளுக்கு தலையாய காரணம்.
//"தர்காக்கள் இஸ்லாத்திற்கு எதிரானவை" என்று கூறுவார்களேயானால் நம் முன்னே இருக்கும் ஒரு முக்கிய பிரச்சனை தீரும். ஆனால் செய்வார்களா அவர்கள்? //
செய்ய வேண்டும். ஆனால் தன் சுய லாபத்திற்காக வயிறு வளர்க்கும் ஹஜ்ரத்மார்களின் போலி மார்க்க பிரச்சாரத்தில் மதி மயங்கும் மனிதர்கள் அவர்களின் உண்மையான நோக்கம் அறிந்துக்கொண்டால் அல்ஹம்துலில்லாஹ்! பிரச்சனையின் ஐம்பது சதவீகிதம் முற்றிலும் குறையும்
//தர்காக்களை எதிர்க்காத, சுன்னத் வல்ஜமாஅத் அமைப்பு தன் நிலையை மாற்றிக்கொள்ள முன்வரவேண்டும் என்று குறைந்தபட்ச எதிர்ப்பைக்கூட காட்டாத எவருக்கும் ஒற்றுமை குறித்து பேச தகுதி இல்லை. //
தர்காக்களை எதிர்க்காத ?????
மாநபி வழிப்பேணாத அவர்களை பின் எப்படி சுன்னத் வல் ஜமாஅத் என்றழைப்பது சகோ இதுதான் என் மையக்கேள்வி..
ஆக நாமே அவர்களை அப்பெயரில் வீணாய் அடையாளப்படுத்துவானேன்...?
//கேடுகெட்ட மனிதர்களில் ஒரு பகுதியினர் இவர்கள்.//
யோசிக்க வேண்டும் அவர்கள்!
ஜஸாகல்லாஹ் கைரன் சகோ
வ அலைக்கும் சலாம் வரஹ்
ReplyDelete@ அன்பு சகோ முஸ்லிம்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
குறிப்பாய் உங்கள் பெயருக்கும்
+1
Salam bro!
ReplyDeleteAlhamdulillah
alhamdulilah
alhamdulilah
en manathil eruntha ennangal
engu varthaikalaga!!
Arumaiyana aakam!
Nam muslim matumey!
வ அலைக்கும் சலாம் வரஹ்
ReplyDelete@அன்பு சகோ s.jaffer.khan
// Nam muslim matumey!//
அல்ஹம்துலில்லாஹ்!
வருகைக்கும் , கருத்திற்கும் நன்றி
ஜஸாகல்லாஹ் கைரன் சகோ
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
ReplyDeleteசகோ குலாம். நல்லப் பதிவு, ஆனால் ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னா வார்த்தை பொய்யென்று சொல்கிறீர்களா...........! அவர்கள் கூறியப்படி 73 பிரிவுகளாக பிரியும் காலம் வரும் சகோ, அதற்கு என்ன உங்க பதில்............
~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
ReplyDeleteசகோ அனானி
வ அலைக்கும் சலாம் வரஹ்
சரி 73 ல இது ரெண்டுனா...
மீதி 71கூட்டம் எங்கே லிஸ்ட் கொடுப்பீங்களா?
ஏற்கனவே ஆயிரம் தாண்டும் போல இருக்கே...
மத்ததை எல்லாம் ஒண்ணு சேர்க்க வேணாம்..?
அல்லாஹ்வின் கயிற்றை பற்றும் குர்ஆன் ஆயத்து படி வாழ்க்கையை அமைப்பதா...
அல்லது, நபி ஸல் அவர்கள் எச்சரித்ததை உண்மையாக்குகிறேன் பேர்வழி என்று 73 ஆக உடைவதா..?
எது இஸ்லாம்...
நரகம் இருக்கிறது என்பதற்க்காக அதை உண்மைபடுத்துகிறேன் என்று
இவர் பாவம் மேல் பாவம் செய்வாரா..?
அல்லது நன்மை செய்து சுவர்க்கம் செல்ல முயல்வாரா..?
எதை செய்ய வேண்டும் என்று கட்டளையோ அதை செய்வதா..?
அல்லது..
செய்யாவிட்டால் தண்டனை என்ற எச்சரிக்கையை உண்மை படுத்துவேன் என்று குற்றம் செய்வதில் ஈடுபடுவதா..?
எது அறிவுடைமை..?
73 கூட்டமாகும்போது கியாமத் வரும். இன்னிக்கு கியாமத் நாளா...?
நபிமொழியின் எச்சரிக்கையை உண்மையாக்குவதா உங்கள் வேலை..?
அல்லது அல்லாஹ்வின் கட்டளைப்படி வாழ்வதா..? எது நம் வேலை?
இன்சுலேஷன் இல்லாத வயரை தொட்டால் ஷாக் அடிக்கும்---இது ஆசிரியர் எச்சரிக்கை.
எப்போதும் ரப்பர் கிளவுஸ் போட்டு வேலை பாருங்க-----இதுவும் ஆசிரியர் எச்சரிக்கை.
ஒவ்வொரு வருஷமும் சொல்லு பேச்சு கேட்காத மாணவர்கள் அதிகமாவதை பார்த்துவிட்டு...
வருங்காலத்தில் ஷாக் அடித்து ஒரு மாணவர் இறப்பார்.----இதுவும் அதே ஆசிரியரின் முன்னெச்சரிக்கை.
இப்போது ஒரு மாணவர், "நண்பர்களே... மறக்காமல் ஆசிரியர் சொன்னபடி ரப்பர் கிளவுஸ் அணிந்து மின்சார வேலையில் ஈடுபடுங்கள்." நியாபகமூட்டுகிறார்... அப்போது அனானி மாணவர் மாதிரி ஒருத்தர்...வந்து.. அவரிடம்...
"ஆசிரியரின் வார்த்தை பலிக்காமல் போய் விடலாமா... அதை நான் உண்மையாக்குகிறேன் என்றால்...?"...
அதுவும் பலிக்கும்....
இங்கு யார் மீது பிழை சொன்னதை கேளாத மாணவன் மீதா ? தெளிவாய் எச்சரித்த ஆசிரியர் மீதா?
இதுதான் இங்கு விசயமே.!
அஸ்ஸலாமு அலைகும்..மிக அவசியமான தலைப்பு மற்றும் பதுவுக்கு ஜஸாக்கல்லாஹு கைரன்..இயக்கச்சிந்தனையால் பல முஸ்லிம்கள் தம்மிடயே வேற்று இனப் பார்வயை வளர்த்து வருகின்றனர்..அறியாமயாலும் ஆணவத்தாலும்.
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வரஹ்
ReplyDeleteஅன்பு சகோ zalha
//அறியாமயாலும் ஆணவத்தாலும்.//
அறியாமை - களையப்பட வேண்டும்! அதுவே சமூகம் நம்மீது பணிக்கும் கடமை -அல்லாஹ்விடம் அதற்கு தான் நாம் பதில் சொல்லியாக வேண்டும்.
ஆணவம் - ?
என்ன செய்ய முடியும் சொல்லுங்கள் சகோ...
அல்லாஹ் தான் அவர்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும்
கருத்திற்கும் வருகைக்கும் நன்றி
ஜஸாகல்லாஹ் கைரன்
:)
nice
ReplyDeleteAssalamu alaikum wrah
ReplyDelete@Dear Bro., Mohamed Ramees
thanks for ur comment
Zkhallah khairan
Ishari Perera has left a new comment on your post "நீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..?":
ReplyDelete****** page admin kayla kedacha kolluvan..................
சகோ Ishari Perera
ReplyDeleteஉங்கள் மீது சாந்தி நிலவட்டுமாக!
முதல்ல இந்த ஆக்கத்தில சொல்லப்பட்ட விசயம் குறித்து கருத்து சொல்லுங்க அண்ணே.. அப்புறம் கொல்லலாம்.
(உங்க கமெண்ட்டே கொல்லுற மாதிரி இருக்கணும். ஆமாம்!)
// **** // வார்த்தைகள் சென்ஸார் செய்யப்பட்டுள்ளது.
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஉங்கள் பதிவின் தலைப்பை சில வருடங்களுக்கு முன் சிந்தித்தேன் அதன் அடிப்படையில் என் பெரிய தாயாரின் மகனை சுன்னாவை போதிப்பதாக சொல்லும் மதரசாவில் சேர்த்தோம் என் சிரிய தாயரின் மகனை தவ்ஹீத்தை போதிக்கும் மதரசாவில் சேர்த்தோம் மாஸா அல்லாஹ் கடந்த ஹஜ் பெருநாள் உரையை இருவரும் தத்தமது ஜமாத் அடிப்படையில் உரையாற்றினார்கள் குர் ஆன் சுன்னாவின் அடிப்படையில் அவர்கள்
உரையை கேட்ட போது அறிந்து கொண்டேன் தமிழகத்தில் நமது ஏகத்துவ
பிரச்சாரம் வீன் போக வில்லை என்று. உங்கள் என்னம் ஈடேரும் சகோதரி ஹூஸைனமா குர் ஆன் சுன்னாவின் அடிப்படயில் சிந்திக்கும்
மக்கள் உருவாகி விட்டார்கள் அதுவே மகிள்ச்சியான செய்திதான்
வ அலைக்கும் சலாம் வரஹ்
ReplyDeleteசகோ @ கலில்
//என் பெரிய தாயாரின் மகனை சுன்னாவை போதிப்பதாக சொல்லும் மதரசாவில் சேர்த்தோம் என் சிரிய தாயரின் மகனை தவ்ஹீத்தை போதிக்கும் மதரசாவில் சேர்த்தோம் //
தௌஹீது மற்றும் நபிவழி போதிப்பது தான் உண்மையான மார்க்க கல்வியாக இருக்க முடியும். இன்ஷா அல்லாஹ் மதரஸாக்களில் போதிக்கப்படுவது அதுவாக தான் இருக்கவேண்டும் என்பதே இவ்வாக்க கருப்பொருள்.
//குர் ஆன் சுன்னாவின் அடிப்படயில் சிந்திக்கும்
மக்கள் உருவாகி விட்டார்கள் அதுவே மகிள்ச்சியான செய்திதான்//
ஜஸாகல்லாஹ் கைரன்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
ReplyDeleteமிக அருமையான ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு அற்புதுதமான தெள்ளியதொரு எழுத்துக்களின் வாயிலாக வீருநடை போட்டுள்ளீர்கள், அல்ஹம்துலில்லாஹ். கருத்துக்கள் அனைத்தும் தெளிவாகவும், ஏற்றுக்கொள்ளும் விதத்திலும் அமைந்துள்ளது வாழ்த்துக்கள்.
சுன்னத் வல் ஜமாத் என்று பெயர்ப் பலகைகளில் மட்டும் பதிந்துவிட்டு, நபிவழி என்றால் என்ன? இறைவனின் தன்மைகள் என்ன என்பதை சரிவர விளங்காத அறிவீனர்களாகவே மிகப் பெரும்பான்மையோர் இருப்பதை நம் கண்கூடாக காண முடிகிறது, இதில் வெள்ளிகிழமைகளில் ஜும்மா பேருரையை வேறு வாரந்தோரும் கேட்டு டைம் பாஸ் பண்ணிவிட்டும் செல்கிறது இக்கூட்டம் அதோடு மட்டுமா? பள்ளிவாசல்களில் ஏதேனும் நிர்வாகத் தகறாறு வந்துவிட்டால் பார்க்க வேண்டுமே இவர்களின் வீரத்தை, அடேங்கப்ப என்ன ஒரு பில்டப்.
உண்மையை விளங்கி நபிவழி நடக்க நினைக்கும் முஸ்லிம்கள் சிந்திக்கட்டும்.
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் தருகிறோம் என்று ஒரு கூட்டம் முன்பு வெற்றியாளர்கள் (நஜாத்) என்று அறியப்பட்டு பின்பு பல துண்டுகளாய் சிதறிக் கிடக்கிறது. (ஆமாம் நபி வழியை நாங்கள்தான் பின்பற்றுகிறோம் என்று கூறிக்கொண்டு இத்தனை கூட்டங்களாக பிரிந்து கிடக்கிறீர்களே! உங்களில் இப்பொழுது யார் உண்மையான நபி வழியை பின்பற்றுவது, நல்லோர்கள் சிந்தித்து தெளிவு பெறட்டும்).
இப்படி எத்தனையோ ஆதங்கங்கள் இதுபோன்ற கொடுமைகளை காணும் பொழுதெல்லாம் மனதைப் போட்டு பிழிவதுண்டு, உங்களின் இந்தப் பதிவு அதற்கு மிகப் பெரும் ஆறுதல் என்றால் மிகையில்லை.
நல்லதொரு விஷயத்தை பதிவாக்கியதற்கு இறைவன் நற்கூலி வழங்குவானாக.. ஆமீன்.
வாழ்த்தி வந்திருக்கும் அனைத்து பின்னூட்டங்களும் ஒற்றுமைக்காக எவ்வளவு தூரம் ஏங்குகிறது என்பதை பிரதிபலிக்கிறது.
இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலை நிருத்தியிருப்பானாக ஆமின்.
வ அலைக்கும் சலாம் வரஹ்
ReplyDeleteசகோ @ Syed Ibramsha
காலம் தாழ்த்தி வந்தாலும் தரமான தங்களின் கருத்திற்கு நன்றி
ஜஸாகல்லாஹ் கைரன் சகோ
soobar
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteசகோ @ akbarali
வருகைக்கு நன்றி
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஉங்கள் மீது ஏகனின் அமைதி நிலவட்டுமாக!
ReplyDeleteசகோ அனானி
உங்கள் கருத்தில் பொருளும் இல்லை பொறுப்புமில்லை. குறைந்த பட்ச நேர்மையோடாவது விமர்சிக்க வாருங்கள் என்பதே என் விருப்பம்!
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ...
ReplyDeleteகடந்த சில தினங்களாக என் மனதை அரித்து கொண்டிருந்த கேள்விக்கான பதிலை உங்கள் பதிவில் கண்டுகொண்டேன்... மிக்க நன்றி.... :)
///இப்பெரும் வார்த்தைகள் இரண்றிற்கும் நேரடி அர்த்தங்கள் இவை. இவ்விரு வார்த்தைகளுக்கும் செயல்வடிவம் கொடுப்பவர்களே முஸ்லிம்கள். ஒன்றை ஏற்று பிறிதொன்றை விட்டவர்கள் முஸ்லிம்கள் என்ற வட்டத்திற்குள் வரமாட்டார்கள். இப்படி இஸ்லாத்தின் உரைக்கல்லான இவை இன்று எதிர் எதிர் நிலையில் செயல்படும் இயக்கம் சார்ந்த வார்த்தைகளாக சமூகத்தில் வலம் வருவதுதான் ஆச்சரியமான வேதனை!///
வேதனைக்குரிய விஷயம் சகோ... சமூக வலைதளங்களில் இவர்கள் இஸ்லாத்தை பற்றிய விவாதங்களில் அடித்து கொள்கிறார்கள்...... ஆனால் அவர்களுக்கு இஸ்லாத்தை பற்றி துளியும் அக்கறை இருப்பதாக தெரியவில்லை நீ பெரியவனா? இல்லை நான் பெரியவனா என்கிற அகங்காரம் மட்டுமே தலை தூக்கி நிற்கிறது... எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவர்க்கும் நேரான வழியை காட்டி அருள் புரிவானாக ஆமீன்..!!!
வ அலைக்கும் சலாம் வரஹ்
ReplyDelete= எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவர்க்கும் நேரான வழியை காட்டி அருள் புரிவானாக ஆமீன்..!!! =
இன்ஷா அல்லாஹ் சகோ
கருத்திற்கு ஜஸாகல்லாஹ் கைரன்
Assalamu alaikum
ReplyDeleteநல்ல பதிவு. அவசியமான பதிவு.
ReplyDeleteஅழகிய முறையில் கூற வேண்டும் என்று சொல்லி ஜமாத்தே இஸ்லாமி,விடியல் வெள்ளி, மற்றும் நடு நிலை என்று சொல்லக் கூடிய பல இஸ்லாமிய இயக்கங்கள் சாதித்தது என்ன? மார்க்க நடை முறைகளை வேண்டுமானால் அழகிய முறையில் கூறலாம்.ஆனால் தீமை என்று வரும் போது நிரந்தர நரகத்திற்க்கு இட்டுச் செல்லக் கூடியவைகளை சக்தி இருந்தால் கரம் கொண்டு தடுக்க வேண்டும், இல்லையெனில் வாயால் தடுக்க வேண்டும் அதுவும் முடியாவிட்டால் மனதால் வெறுத்து ஒதுங்க வேண்டும். இது ஈமானின் கடைசி நிலை என்று ரஸுல்(ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.இதுவே சய்யிதுனா இப்ராஹீம் (அலை) அவர்களின் வழி முறை.
ReplyDeleteதவ்ஹீத் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை,அந்த தவ்ஹீத் என்ற பெயரை பயன்படுத்தி இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல உபயோகப் படுகிறதே தவிற,தவ்ஹீத் இயக்கத்தில் இருப்பவன் மட்டும் தான் சொர்க்கம் செல்வான் என்று எந்த தவ்ஹீத் இயக்கத்தவனும் கூறுவதில்லை.
இன்னும் பித்அத்களை ஒதுக்கி விட்டு இயன்ற வரை நபி(ஸல்) அவர்களின் சுன்னத்துகளை பின்பற்றாமல் எந்த தவ்ஹீத் வாதியும் இருப்பதற்கு தயாராக இல்லை.
ஒரு காலத்தில் இறைநேசர்களிடம் உதவி தேடாதவன் முஸ்லீமாக இருக்க வாய்ப்பில்லை என்று இருந்தது ஆனால் இன்று தர்காவிற்கு போவதைப் பற்றி பேசினால் பெரும்பாலான பேர் முகம் சுளிக்கும் நிலை உருவாகி உள்ளது இதற்கு தவ்ஹீத் இயக்கங்களின் அதிரடியான பிரச்சாரங்களே என்பதை நாம் எளிதில் மறந்து விட முடியாது.
தவ்ஹீத் இயக்கத்தைச் சேர்ந்தவன் தன்னை ஷிர்க் வாதிகளிடம் இருந்து பிரித்துக் காண்பிப்பதறகாக் தவ்ஹீத் என்ற சொல்லை உபயோகம் செய்வானே ஒழிய நான் முஸ்லீம் அல்லாதவன் என்று எங்கும் சொல்ல மாட்டான். இயக்கத்தையும், இஸ்லாத்தையும் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
இன்றைக்கு புழங்கும் சுன்னத் ஜமாஅத் என்ற சொல்லை முதன் முதலில் உபயோகித்தவர் இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள். ஷியாக்களின் கொள்கையை விட்டு பிரித்துக் காண்பிப்பதற்க்காக குர்ஆன் சுன்னா அடிப்படையில் ஆரம்பித்த இயக்கம் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் ஆகும். இன்று அதே பெயரை பயன்படுத்தி ஷியாக்களின் கொள்கையை (தர்ஹா, பித்அத் மற்றும் ஏனைய அனாச்சாரங்கள்) பின்பற்றி வருகிறார்கள்.
வரும் காலங்களில் தூய இஸ்லத்தை பின்பற்றும் கூட்டம் பல்கிப் பெருகும் பொழுது இப்படிப் பட்ட வாதங்களுக்கு வாய்ப்பில்லை இன்ஷா அல்லாஹ்.
அழகிய முறையில் கூற வேண்டும் என்று சொல்லி ஜமாத்தே இஸ்லாமி,விடியல் வெள்ளி, மற்றும் நடு நிலை என்று சொல்லக் கூடிய பல இஸ்லாமிய இயக்கங்கள் சாதித்தது என்ன? மார்க்க நடை முறைகளை வேண்டுமானால் அழகிய முறையில் கூறலாம்.ஆனால் தீமை என்று வரும் போது நிரந்தர நரகத்திற்க்கு இட்டுச் செல்லக் கூடியவைகளை சக்தி இருந்தால் கரம் கொண்டு தடுக்க வேண்டும், இல்லையெனில் வாயால் தடுக்க வேண்டும் அதுவும் முடியாவிட்டால் மனதால் வெறுத்து ஒதுங்க வேண்டும். இது ஈமானின் கடைசி நிலை என்று ரஸுல்(ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.இதுவே சய்யிதுனா இப்ராஹீம் (அலை) அவர்களின் வழி முறை.

ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் சகோஸ்...
ReplyDelete//தீமை என்று வரும் போது நிரந்தர நரகத்திற்க்கு இட்டுச் செல்லக் கூடியவைகளை சக்தி இருந்தால் கரம் கொண்டு தடுக்க வேண்டும், இல்லையெனில் வாயால் தடுக்க வேண்டும் அதுவும் முடியாவிட்டால் மனதால் வெறுத்து ஒதுங்க வேண்டும். இது ஈமானின் கடைசி நிலை என்று ரஸுல்(ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்//
சகோ. மனிதன்,
”உங்களில் யாராவது தீமையைக் கண்டால் அதை அவர் தன் கையால் தடுக்கட்டும். அதற்கு முடியாவிட்டால் தன் நாவால் தடுக்கட்டும். அதற்கும் முடியாவிட்டால் உள்ளத்தால் அதை வெறுத்து ஒதுங்கிக் கொள்ளட்டும். இதுவே ஈமானின் மிகப் பலவீனமான நிலையாகும்.” இது தான் அந்த ஹதீஸ் என்று நினைக்கிறேன்.
”நிரந்தர நரகத்திற்க்கு இட்டுச் செல்லக் கூடியவைகளை” என்ற வார்த்தைகளையும் சேர்த்து உங்கள் வசதிக்காக ஹதீஸ்களை வளைக்க வேண்டாம். அல்லாஹ்விற்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
For follow up...
ReplyDeleteஉலகில் மிகப்பெரிய அதிசிரப்பிற்குறிய தர்கா மதீனா மஸ்ஜிதுன் நபவியில்தான் உள்ளது.
ReplyDelete