"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Friday, November 02, 2012

கடவுளை மெய்ப்பிக்கும் அறிவியல்..!


                                     ஓரிறையின் நற்பெயரால்...


அறிவியல் வரையறை செய்த எல்லாவற்றையும் ஆராய்ந்து அவற்றை உண்மையென்றோ பொய் என்றோ வகைப்படுத்த முடியும். ஆனாலும் ஒன்றீன் மூலத்தை குறித்து அறிவியல் எதை பதிவு செய்து வைத்திருக்கிறதோ அதனை தவிர்த்து மாற்று திறனால் அதை அளவிட முடியாது, மேலும் அதன் ஆளுகை ஒரு குறிப்பிட்ட நிலை வரை மட்டுமே நீடித்து செல்லும். என்பதை சென்ற பதிவில் பார்த்தோம்.

இப்படி அறிவியல் இவ்வுலகிற்கு வெளிக்கொணர்ந்த செயல்பாடுகளை மட்டுமே வைத்து ஒன்றை உண்மையென்றோ அல்லது பொய்யென்றோ ஒன்றை கூறுகிறோம். இதனடிப்படையில் நாம் புரிந்துக்கொள்வது அறிவியல் ஒன்றை ஆதார குறியீடுகளும் தரும் போது மட்டுமே அவற்றை குறித்த தகவல்களை நேர் மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ ஏற்றுக்கொள்கிறோம்.

எந்த ஒன்றையும் நாம் உறுதிப்படுத்திக்கொள்ள அறிவியலை மட்டுமே துணைக்கழைத்தால் அறிவியல் அனைத்தையும் இவ்வுலகிற்கு முழுமைப்படுத்தி சொல்லி இருக்க வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் முழுமைப்படுத்தி விட்டதா என்றால் அதற்கு இல்லையென்பது தான் அறிவுடையோரின் பதிலாக இருக்கும். ஆம்! அறிவியல் இன்னும் தொடாத செயல்பாடுகள் ஏராளம் இவ்வுலகில் உண்டு.

 கடவுள் குறித்த அறிவியல் நிலைப்பாடும் இப்படி தான். விஞ்ஞான ரீதியில் கடவுளை ஏற்க ஒரு குறியீடும் இல்லையென்று சொல்வோர் அதற்கு எதிர்க்கேள்வியாக கடவுளை மறுக்கும் விஞ்ஞான குறியீடுகள் குறித்து கேட்டால், அறிவியலில் கண்டறியப்படாத எதுவும் ஏற்றுக்கொள்ள தகுதியானது அல்ல. ஆக கடவுளின் இருப்பு எங்கும் இருப்பதாக அறிவியல் இதுவரை கண்டறியவில்லை. ஆக கடவுள் இல்லை! - இப்படி ஒரு அறிவார்ந்த பதில்(?) தருகிறார்கள். இது எப்படி ஏற்றுக்கொள்ளும் வாதமாக இருக்கும்.?

எந்த ஒன்றை குறித்தும் இதுவரை அறிவியல் நிருபணம் தரவில்லையோ அது இல்லையென்று சொல்வது ஏற்புடையதன்று. மாறாக அதுக்குறித்த நேர்/ எதிர் தகவல்கள் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை என்று சொல்வது தான் பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில் இன்றும் நாம் புதிது புதிதாக செய்திகளை அறிந்துக்கொண்டே இருக்கிறோம். ஆக அறிவியல் இன்னும் முழுமையடையவில்லை என்பது கண்கூடு!

சரி விசயத்திற்கு வருவோம். அப்படியானால் கடவுளின் இருப்பை நேரடியாக பிற்கால அறிவியலால் உண்மைப்படுத்த முடியுமா..? என்றால் முடியாது என்பது தான் தர்க்கரீதியான பதிலாக இருக்க முடியும். ஏனெனில் கடவுள் என்பது / என்பவர் மறைந்திருக்கும் அல்லது கண்டறியப்பட வேண்டிய ஒரு பொருளல்ல அதி நவீன தேடு பொருள் மூலம் கண்டுப்பிடிக்கப்பட! அறிவியல் என்பது நமது தேவைகளுக்காக பிறவற்றை ஆராய்வது, முடிந்தால் அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்த முயல்வது. 

அப்படி ஆராயவும், ஆதிக்கம் செலுத்த முடியா நிலையிலும் கடவுள் இருப்பதால் அறிவியலால் கடவுளின் இருப்பை நேரடியாக உணர்த்த முடியாது. மாறாக இல்லையென்று அறிதிட்டு சொல்லவும் வாய்ப்பில்லை. ஏனெனில் நம் கண்களுக்கு புலப்படவில்லை என்ற புறக் காரணி தவிர்த்து எந்த ஆதாரபூர்வமான சான்றுகளும் கடவுளை மறுக்க இல்லை. இப்படி சரி தவறு என தெளிவாய் கூறப்படாத ஒன்றின் உண்மை நிலையை தர்க்கரீதியாக ஆராயலாம்..

உதாரணமாக நான் அமெரிக்கா என்ற ஒரு நாடு இல்லையென்கிறேன், காரணம் நான் அந்த நாட்டை பார்த்தில்லை, அது குறித்த செய்திகளை கேட்டதில்லையென்கிறேன். ஆகவே அமெரிக்க இல்லையென்பது என்பது என் வாதம் என வைத்துக்கொண்டால்.. இதை மறுப்பதாக இருந்தால் நீங்கள் மேற்கண்டவற்றிற்கு எதிராக எனக்கு ஆதார நிருபணம் தர வேண்டும்.

அதாவது, அமெரிக்கா என்ற நாடு இந்த  புவியில் வட அமெரிக்க கண்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அமைந்துள்ளன. வடக்கே கனடாவும் தெற்கே மெக்சிகோவும் எல்லைகளாக அமைந்துள்ளன. வல்லரசு நாடாக இருக்கிறது,  வாஷிங்டன் டி.சி.இதன் தலை நகரம்.

இப்படி அமெரிக்கா குறித்து எனக்கு அதிகமாக தகவல்களை உங்களால் தரமுடியும். நேரடியாக போய் வந்தவர்களின் சாட்சியமும் இருந்தால் வேறு வழியில்லை நான் பார்க்கவில்லையென்றாலும் அமெரிக்க உண்டென்பதை ஒப்புக்கொண்டாகதான் வேண்டும். அது தான் உண்மையும் கூட..

அடுத்து லாம்கு ..?
லாம்கு என்ற ஒரு நாடு இல்லையென்கிறேன். மேற்கூறப்பட்ட அதே காரணங்கள் தான்.  அதை மறுப்பதாக இருந்தால் மேற்கண்ட அதே வழிமுறைகளை பின்பற்றி எனக்கு மறுப்பை தரவேண்டும். ஆனால் நீங்கள் எப்படி தேடியும்  அப்படி ஒரு நாடு குறித்த தகவல்கள் உங்களுக்கு கிடைக்கவே இல்லை .அதை உண்மைப்படுத்த உங்களிடம் எந்த ஆதார சான்றும் இல்லை என கொள்வோம். ஆக நீங்கள் வேறு வழியின்றி நான் சொல்வதை ஒப்புக்கொண்டாக வேண்டும். ஏனெனில் லாம்கு என்ற ஒரு நாட்டை நீங்கள் இதுவரை கண்டறியவே இல்லை.

இங்கு தான் சற்று சிந்திக்க வேண்டும். முதலில் நான் இல்லையென்ற அமெரிக்காவை நீங்கள் உண்டென்பதற்கு ஆதாரங்கள் தந்தீர்கள். இரண்டாவதாக நான் மறுத்த லாம்குவிற்கு ஆதரவாக உங்களால் ஒரு சான்றை கூட தர முடியவில்லை. அதற்காக லாம்கு என்ற நாடு பறக்கும் தன்மையுடையது, ஒரு பச்சை பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் என்று மாற்று வரைவிலக்கணமும் தர முடியாது. ஏனெனில் புவியியல் அமைப்பு, நிலப்பரப்பு, தட்ப வெப்ப நிலை, மக்கட்தொகை, இனம், மொழி போன்றவையே ஒரு நாட்டிற்கான அடையாளம்.

ஒரு நாடென்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற வரைவிலக்கணம் நமக்கு அறிவியலால் வழங்கப்பட்டிருக்கிறது. அதை முதல்  நாட்டிற்கு கூறியதால்  அதை நான் ஏற்றுக்கொண்டேன். லாம்குவை பொறுத்தவரை அப்படி ஒன்றை உங்களால் தரமுடியவில்லை ஆக மேற்கண்டவை இல்லாமல் வேறு செயல்பாடுகளை அடையாளப்படுத்தினால் அதுவும் தவறே! அப்படி அடையாளப்படுத்தப்பட்டாலும் ஒரு நாடு என்பதற்கான அடையாளத்தின் கீழ் அது வராது.

ஆக லாம்கு என்ற ஒன்று இல்லை. என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டாக வேண்டும். இப்படி தான்  அறிவியல் மூலமாக நாம் ஒன்றை அறிந்துக்கொள்கிறோம் (யாரும் லாம்கு நாட்டை தேடி அலைய வேண்டாம். எனது பெயரை தான் (கு+லாம்) திருப்பி போட்டிருக்கிறேன்)



இதே உதாரணத்தை கடவுள் என்ற நிலையோடு பொருத்தினால் உண்டென்பதற்கும், மறுப்பதற்கும் சான்று தரவேண்டும். கடவுள் உண்டென்பவர்கள் கடவுளை புறக்கண்களால் பார்க்க முடியாது, அவரது ஆளுமை எல்லாவற்றிலும் மிகைத்திருக்கிறது. மாறாக எந்த ஒன்றீன் ஆளுமையும் அவர் / அதன் மீது செலுத்த முடியாது. என்று கூறுகிறார்கள்.

இது தற்காலத்தில் கூறப்பட்ட வறட்டு தத்துவமல்ல.. இந்த மனித சமூகத்திற்கு கடவுள் எப்போது அறிமுகம் செய்து வைப்பட்டாரோ அன்றிலிருந்து முன்மொழியப்பட்ட வார்த்தை இது. இதை மறுப்பதாக இருந்தால் இதற்கு மாற்றமான ஆதார சான்றுகள் தரவேண்டும் மாறாக கடவுள் நேரடியாக தெரிவதில்லை. அறிவியலிலும் உட்படவில்லை என்றால் அது மேற்கண்ட நிலைக்கு எதிர் நிலை தான் தவிர மறுப்பாகாது.

கடவுளின் நிலை குறித்து அறிவியல் தொடக்கத்திற்கு முன்னரே தெளிவாய் பிரகடனப்படுத்திருக்கும் போது கடவுளை மறுப்பதாக இருந்தால் அந்த கூற்றுக்கு உடன்பட்டே மறுப்பை கூற வேண்டும். அதாவது நேரடியாகவும் இல்லாமல், அறிவியல் சாதனங்களில் நிறுத்தாமல் கடவுளின் இருப்பை எப்படி காட்டுவது..? என்பதை கடவுள் மறுப்பாளர்கள் தெளிவாக சொல்ல வேண்டும்..

அஃதில்லாமல் மீண்டும் மீண்டும் கடவுளை மறுக்க அறிவியலை அழைத்தால் அது அறியாமை வாதமே.. ஏனையவைகளை கண்டறிந்து அவற்றிற்கு இலக்கணம் வகுத்ததுப்போல கடவுள் குறித்து நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ வரைவிலக்கணம் அறிவியல் ஏற்படுத்தி தரவில்லை.  கடவுளை குறித்து அறிய கடவுள் ஏற்பாளர்கள் / மறுப்பாளர்கள் கூறும் வாதங்களை அடிப்படையாக வைத்தே அறிவியலோடு பொருத்த வேண்டும். ஆனால் இங்கே கடவுள் மறுப்பாளர்கள் தங்களின் மறுப்புக்கு அறிவியலையே பதிலாக்க பார்க்கிறார்கள்.

ஆராய்வதற்கு வாய்ப்பே கொடுக்கப்படாத ஒன்றை ஆராய முடியவில்லையென்பது எப்படி பொருத்தமான வாதமாகும்?  கடவுளை பொய்படுத்த அறிவியலுக்கு வாய்ப்பே இல்லை, சொல்ல போனால் மெய்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தான் அறிவியலுக்கு கேள்விகளாக  காத்திருக்கிறது.

  •  உலக உருவாக்கத்திற்கு பிக்பாங் தியரி வரை விவரித்து செல்லும் அறிவியல் அதற்கு முந்திய நிலை குறித்து விளக்க முற்படுவதில்லை. அதாவது பிக்பாங் ஏற்பட்ட விதத்தை மட்டுமே பேசுகிறது. -பிக்பாங் எனும் பெரு வெடிப்பு ஏன் நிகழ வேண்டும்?  
  • ஆயிரமாயிரம் கேமராக்களும், விதிமுறைகளும், பாதுக்காப்பு வசதிகளும் ஏற்படுத்தி இருந்தும் போக்கு வரத்து, விபத்துகளை சரிசெய்ய முடியவில்லை ஆனால் பரந்து விரிந்த பால்வெளிகளில் பல்லாயிரக்கணக்கான கோள்களும் தத்தமது நீள் வட்ட பாதையில் மிக சரியாக சுழன்று வருகிறதே . எது அப்படி சாத்தியமாக்கியது?  
  • மனிதனோ ஏனைய உயிரினங்களோ உயிர் வாழ தகுதியற்ற இலட்சகணக்கான கோள்கள் ஏன் ஏற்படுத்த பட வேண்டும்?
  •  இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து வரும் சூரிய/ சந்திர கிரகணங்களை துல்லியமாக வரையறுக்கும் அறிவியலால் ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தை துல்லியமாக வரையறுக்க முடியவில்லையே..?
  • மருத்துவ துறையில் அளப்பரிய சாதனை படைக்கும் அறிவியலால் ஒருவரின் மரணத்தை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை.?  அட குறைந்த பட்சம் ஒருவர் மரணிக்கும் நேரத்தையாவது அறிந்து சொல்ல முடிவதில்லையே... அது ஏன்?
இப்படி அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல் அறிவியல் குறைப்பட்டுக்கொண்டிருக்கும் போது... கடவுளின் இருப்பை அறிவியல் உண்மைப்படுத்தவில்லையென்பது எவ்வளவு பெரிய முரண்பாடான சிந்தனை...!

மேற்கண்ட வினாவிற்கு அறிவியல் விடை அளித்தால் கடவுள் இருப்பதென்பது அவசியமே இல்லாத ஒன்று தான். அதுவரை கடவுளின் இருப்பை அறிவியல் மெய்ப்படுத்திக்கொண்டே தான் இருக்க வேண்டும்...

அறிவியலை கடவுளுக்கு எதிராக முடிச்சிட பார்க்காதீர்கள். ஏனெனில் அறிவியல் கடவுளின் எதிரியல்ல. மனித பயன்பாட்டிற்கு கடவுள் கொடுத்திருக்கும் ஓர் கருவி!

                                                 அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

183 comments:

  1. ஸலாம் சகோ.குலாம்.

    //ஆராய்வதற்கு வாய்ப்பே கொடுக்கப்படாத ஒன்றை ஆராய முடியவில்லையென்பது எப்படி பொருத்தமான வாதமாகும்? கடவுளை பொய்படுத்த அறிவியலுக்கு வாய்ப்பே இல்லை, சொல்ல போனால் மெய்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தான் அறிவியலுக்கு கேள்விகளாக காத்திருக்கிறது.//---தட்ஸ் இட்..!

    உங்கள் பாணியில் அருமையாக எழுதி உள்ளீர்கள். நன்றி சகோ.குலாம்.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      அன்பு சகோ சிட்டிசன்
      வருகைக்கும்
      வாழ்த்திற்கும்
      நன்றி..!

      ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

      Delete
  2. நல்ல பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

      வருகைக்கு நன்றி சகோ
      ஜஸாகல்லாஹ் கைரா..

      Delete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் மச்சான்
    வார்த்தைகள்,வரிகள், எழுத்துக்கள், பின்னி பெடல் எடுக்கிறீங்க மச்சான் அருமையான எழுத்து நடை வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      வருகைக்கும், வாழ்த்திற்கும்
      நன்றி மச்சான்...

      ஜஸாகல்லாஹ்...

      Delete
  4. நண்பர் குலாம்,

    உங்களின் ஒவ்வொரு சொல்லையும் உடைத்து அவைகளில் நீங்கள் ஒழித்து வைத்திருக்கும் உங்கள் வெற்று நம்பிக்கையை உங்களுக்கே வெளிப்படுத்த நான் தயார். ஆனால் நீங்கள் 1. என் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும், 2. குறிப்பிட்ட காலம்(அது எவ்வளவு கால இடைவெளி என்றாலும் பரவாயில்லை) நிர்ணயிக்க வேண்டும், 3. வேலை அதிகம் என்று கூறி இடை நிறுத்தம் செய்யக் கூடாது. இதை நீங்கள் பூர்த்தி செய்வதாக இருந்தால் இப்போதிலிருந்து நான் தயார். மாறாக ஏதேதோ காரணங்கள் கூறினால், நீங்களே பதிவெழுதி மகிழ்ந்து கொள்ளுங்கள், நான் குறுக்கே வரவில்லை.

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோ செங்கொடி...
      நீங்கள் மறுக்கும் இறையருளால் நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். உங்களின் ஆக்ரோசமான கமெண்ட்டிற்கு நன்றி., வெற்று நம்பிக்கை... உண்மை தான் அதை உடைக்க தான் நானும் போராடி வருகிறேன். நாத்திகம் என்பது வெறும் அன்றாட வாழ்வியலுக்கு ஒரு ஊறுகாய் போல் தொட்டுக்கொள்ள மட்டுமே பயன்படும் வாழ்வியல் நடைமுறை சித்தாந்தம் என்பதே என் எண்ணம். அதை விளக்கும் விதத்தில் அது இழக்கும் சாத்தியக்கூற்றை இங்குள்ள பல ஆக்கங்களில் எழுதி இருக்கிறேன். ஆனால் பாருங்கள்.. அதில் குறுக்கு கேள்வி கேட்டால் பதில் இருக்கலாம்... கலாம்.. லாம்.. ம் என பொருத்தமற்ற அல்லது சந்தர்ப்ப வாத பதிலை தருகிறீர்கள். இஸ்லாம் என வரும் போது மட்டும் பத்தி பத்தியாய் பதிவுகள். அதுவும் முரண்பாடான புரிதலுடன்.. எப்படி சகோ...

      சரி... அதிகம் விளக்க தேவையில்லையென நினைக்கிறேன்...

      உங்களைப்பொருத்தவரை இஸ்லாம் மாயை அது ஒரு வெற்று சடங்கு என்றால் இஸ்லாம் எங்கே உரக்க குரலெடுக்கிறதோ அங்கே கம்யூனிஸம் எனும் நாத்திக கோட்பாடுகள் அதன் குரல்வளையே நெறிக்க வேண்டும். மாறாக ஒலிப்பெருக்கியல்லவா வைத்து விட்டு செல்கிறது. பல கேள்விக்குறிகளுக்கு இஸ்லாம் முற்றுப்புள்ளி வைக்குமிடத்திலெல்லாம் கம்யூனிஸம் ஆச்சரியக்குறியல்லவா வைக்கிறது... இதில் எங்கே , எதை உடைக்க போகீறீர்கள் சகோ.. குறைந்த பட்சம்

      1.இஸ்லாம் தோற்றதாக கூறும் இடங்களையும் அதில் கம்யூனிஸம் சாதித்த நிகழ்வுகளையும் பட்டியலிடுங்கள்.?
      2.இந்த சமூகத்தில் வர்த்தரீதியாக பிரிந்துக்கிடக்கும் பாமரன் முதல் படித்தவன் வரை ஒரே நிலையான நீதிக்கு என்ன வழி?
      3.அப்படியே மேல குறிப்பிட்ட அந்த 4 கேள்விக்களுக்கும்... பதில் தாருங்கள்..?

      இல்லையேல் ஆரோக்கியமான முறையில் கடவுள் / இஸ்லாம் குறித்து விவாதிக்க முற்படுங்கள். குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே இணையத்தில் இணையும் வாய்ப்பு எனக்கு இன்ஷா அல்லாஹ். ஆக மேற்கண்ட இரண்டு நிலையில் எதிலாவது நீங்கள் உடன்பட்டு உங்கள் கேள்விகளை இங்கே பின்னூட்டமாக பதியுங்கள். கண்ணியமான வார்த்தைகள் உங்களிடமிருந்து பதியப்படும் வரை பின்னூட்டங்கள் அழிக்கப்பட மாட்டாது. இன்ஷா அல்லாஹ் அதற்கு உத்திரவாதம் அளிக்கிறேன்.

      மாறாக எனது தளத்தில் தான் பதிவேன் என்றால் அதற்கு நான் பொறுப்பல்ல., தேவையற்ற விமர்சனங்களை தேவையில்லாமல் சுமக்க நான் தயாரில்லை.
      உண்மையே விளக்க உங்கள் தளத்தை விட இந்த தளமே மிக சிறந்த இடமாக நான் கருதுகிறேன் ஏனெனில் ஏராளமான கடவுள் ஏற்பாளர்கள் உங்கள் தளத்தை விட இந்த தளத்தைதான் பார்வையிட வாய்ப்பு அதிகம். நீங்கள் சொல்லும் கருத்துகள் அதிகமானோரிடம் சேரும் வாய்ப்பை உங்களுக்காக இங்கே நான் இலவசமாக ஏற்படுத்தி தருகிறேன்!

      அதுவுமில்லாமல் நான் பதில் தர தாமதமானாலும் பிறரது பதிலும் உங்களுக்கு பயன்படலாம். ஆக எவ்வளவு பத்தி பத்தியாய் பின்னூட்டமானாலும் இங்கே கேள்வி ஒன்று, இரண்டு என வரிசைப்படுத்தி இங்கே பல பின்னூட்டமாய் இடுங்கள். அது 1000 பின்னூட்டம் அளவிற்கு நீண்டாலும் சரியே. அப்படி பிரித்து பிரித்து பின்னூட்டமிட்டும் அதை ஏற்றுக்கொள்ளவில்லையென நீங்கள் கூறினால் அந்த நிலையின் போது gulamdhasthakir@gmail.com என்ற முகவரிக்கு மெயிலும் இடுங்கள். இன்ஷா அல்லாஹ் அதை இங்கே உங்கள் பெயரில் நான் வெளியிடுகிறேன்.

      ஆரோக்கியமான விவாதத்திற்கு இதை விட சிறந்த வழி எனக்கு தெரியவில்லை.. புரிந்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.
      உண்மையும், நன்மையும் விரும்பும் மக்கள் இருக்கும் வரை நான் முஸ்லிம் தள ஆக்கங்கள் நாத்திகத்திற்கு எதிராய் தொடரும்... இன்ஷா அல்லாஹ்

      உங்கள் சகோதரன்
      குலாம்

      (நீண்ட பின்னூட்டமானாலும் ப்ளாக்கர் ஏற்றுக்கொள்ளும் என்பதற்காகவே இதை ஒரே பின்னூட்டமாக போட்டிருக்கின்றேன்)

      Delete
  5. சகோ செங்கொடி,

    குலாம் தான் உங்களுடன் விவாதிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாரே?? அப்புறம் என்ன?? ஆரம்பிக்க வேண்டியது தானே???

    ReplyDelete
  6. நண்பர் குலாம்,

    உங்களுடைய வேண்டுகோளை நான் ஏற்கிறேன் இங்கு வந்தே இந்த உங்கள் ஆக்கத்திற்கான என்னுடைய விளக்கங்களை வைக்கிறேன் (அவை நல்லூர் முழக்கத்திலும் பதியப்படும்). ஆனால் அதற்கு முன்னர், என்னுடைய கேள்விகளுக்கு நீங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை என்பதை உங்களுக்கு நினைவுறுத்துகிறேன்.

    ReplyDelete
  7. அன்பு சகோ செங்கொடி.,

    உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி...
    அப்படியே என்னன்ன கேள்விகளுக்கு பதில் சொல்லப்படவில்லையென இங்கே சுருக்கமாக பின்னூட்டமிட்டால் இன்ஷா அல்லாஹ் அதிலிருந்தே தொடங்கலாம் விவாதத்தை....

    உங்கள் சகோதரன்
    குலாம்.

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும்..

    மாஷா அல்லாஹ் அருமையான பதிவு!.

    //எந்த ஒன்றை குறித்தும் இதுவரை அறிவியல் நிருபணம் தரவில்லையோ அது இல்லையென்று சொல்வது ஏற்புடையதன்று.//

    எளிமையாக கூறவேண்டுமானால், தான் வசிப்பதற்கு ஒரு வீடு/கட்டடம் கட்டும் முறை கண்டுபிடிக்கும் முன், நாடு விட்டு நாடு பாய விமானம் கண்டுபிடிக்கும் முன்.. இவற்றிற்கு முன் வாழ்ந்தவர்களுக்கு இவை என்னவென்று அறிவியலால் தீர்மனமாக படம் பிடித்து காட்ட இயலவில்லை.

    தூக்காணங்குருவி எந்த பொறியியல் கல்லூரியில் படித்தது என்று தெரியவில்லை, பறக்கும் பறவைகளுக்கு எந்த ரைட் சகோதரகள் கற்றுக்கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. இன்னும் இவைகளுக்கு அறிவியலை பற்றி எந்த கவலையும் இல்லை.

    உண்மையை தெள்ளத்தெளிவாக விளக்கும் அருமையான பதிவு. பகிர்விற்கு ஜஸாக்கல்லாஹ் ஹைரன்.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      கருத்திற்கு நன்றி சகோ
      ஜஸாகல்லாஹ் கைரா..

      Delete
  9. நண்பர் குலாம்,

    1. என் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும், அதாவது, ஒரு விசயத்தில் நான் எழுதியிருக்கும் விளக்கங்களைப் பரிசீலித்து மறுப்போ பதிலோ அளிக்க வேண்டும் அல்லாத பட்சத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    2. குறிப்பிட்ட காலம்(அது எவ்வளவு கால இடைவெளி என்றாலும் பரவாயில்லை) நிர்ணயிக்க வேண்டும், அதாவது, ஒருவர் விளக்கமளித்ததும் அதை மறுத்து தன் வாதத்தை எடுத்து வைப்பதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தவிர்க்கவியலாத போதுகளில் மட்டும் விபரம் கூறி கால நீட்டிப்பு கோரிக் கொள்ளலாம்.

    3. வேலை அதிகம் என்று கூறி இடை நிறுத்தம் செய்யக் கூடாது. அதாவது, விவாதம் தொடங்கி நகர்ந்து கொண்டிருகும் போது, இணையத்தில் இணையும் வாய்ப்பு குறைவு என்றோ, நடுநிலையாளர்கள் தீர்மானித்துக் கொள்வார்கள் என்றோ விவாதத்தை தவிர்க்காமல், விவாதம் செய்வது நாம் இருவர், நம்மிருவருக்கிடையே இரு தீர்வு என்பதை நோக்கி பயணிக்க வேண்டும்.

    ReplyDelete
  10. அன்பு சகோ
    செங்கொடி... என்ன பிரச்சனை உங்களுக்கு

    விவாதிக்க வேண்டுமென்கிறீர்களா...? இல்லை விவாதிக்க முடியாது என்று என்னை சொல்ல சொல்கிறீர்களா...?

    ஏற்கனவே தெளிவாக கூறி இருக்கிறேன்.விவாதம் குறித்து... மீண்டும் மீண்டும் என்னால் காப்பி பேஸ்ட் பண்ண முடியாது.

    1.முதலில் கேள்விகளை கேளுங்கள். இன்ஷா அல்லாஹ் பிறகு தீர்மானித்துக்கொள்ளலாம். யார் தடுமாறுகிறார்கள்.தெளிவற்ற தகவல்களை தருகிறார்கள் என்று..

    அப்புறம் என் கேள்விகளுக்கு முடிந்தால் பதில் தாருங்கள். இல்லையென்றால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஒருவனை இஸ்லாத்தில் இணைக்க செய்வதும், நிலைக்க செய்வதும் அல்லாஹ்வின் கருணை. ஆக விவாதங்கள் மட்டுமே போதுமானது. இன்ஷா அல்லாஹ் தெளிவான தகவல்கள் இருப்பீன் பரிசிலிப்பதற்கு பெயர் தான் பகுத்தறிவு!

    2. எவ்வளவு இடைவெளி இருந்தால் நிங்கள் ஒத்துக்கொள்வீர்கள்.
    உங்களின் வரட்டு வாதங்களுக்கு இன்ஷா அல்லாஹ் என்னால் ஒரு மணி நேரத்தில் பதில் சொல்ல முடியும்.

    ஆனால் இணையத்திற்கு வருவதற்கு தான் எனக்கு பிரச்சனை ஒரு நாளிலோ, ஒரு வாரத்திலோ, ஒரு மாதத்திலோ, ஒரு வருடத்திலோ எவ்வளவு விரைவில் இணையத்தில் இணைய முடியுமோ... உங்களுக்கு தொடர்ந்து இன்ஷா அல்லாஹ் பதில் தந்துக்கொண்டே இருக்கிறேன்

    இல்லை.. இல்லை கால நேரம் சொல்ல வேண்டுமென்றால்.. எனது அலுவலை நீங்கள் மாற்றி தருவதாக உத்திரவாதம் அளித்தால் உங்கள் இடத்திற்கே வந்து 24 மணி நேரமும் உங்களுக்கு பதில் சொல்ல தயார்.
    இரண்டாம் ஆப்சனுக்கு பதில் தரும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.

    3 வது பாயிண்ட்டுக்கு விரிவான பதில் அவசியமில்லையென நினைக்கிறேன்.

    கொஞ்சம் சுருக்கமாக சொல்வதாக இருந்தால்.
    நான் விவாதித்த நாத்திகர்கள் எவரிடத்திலும் கண்ணியக்குறைவான பேச்சு, தேவையற்ற சாடல்கள், கேவலமான பிறரின் பின்னூட்ட அனுமதிப்பு இல்லாதிருக்கும் வரை அவர்களுடன் விவாதத்தை தொடர்ந்து தான் இருக்கிறேன். இவை எல்லை மீறும் போது மட்டுமே எனது பயணத்தை நான் முஸ்லிமில் தொடர்கிறேன். இனியும் அப்படி தான்! விவாதிப்பது நீங்களாக இருப்பீன் கூட..

    ஓகே சகோ போதுமென்றே நினைக்கிறேன்.
    குட் லக்.. அசத்துங்க....

    ReplyDelete

    ReplyDelete
  11. நண்பர் குலாம்,

    பிரச்சனை என்னிடம் இல்லை, உங்கள் பதில் கூறும் முறைமையில் தான்.

    1. நீங்கள் கம்யூனிஸ்டாக மாறிவிட வேண்டும் என உங்களை நான் கோரவில்லை, அது சாத்தியமும் இல்லை. முன்னர் நாம் நடத்திய விவாதங்களில் என்னுடைய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நீங்கள் கடந்து சென்றிருக்கிறீர்கள். என்னுடைய விளக்கங்களை எந்தவித பரிசீலனைக்கும் உட்படுத்தாமல் உங்கள் கருத்தையே மீண்டும் வேறு சொற்களில் கூறியிருக்கிறீர்கள். உங்கள் பழைய வாதங்களிலிருந்து இவைகளை எடுத்துக் காட்டவா? ஆகவே தான், நீங்கள் பதில் கூறுவதை உறுதிப்படுத்துவதற்காகத்தான் நீங்கள் பதில் கூற வேண்டும் அல்லது ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தேன் (கவனிக்கவும்: ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியிருப்பது நீங்கள் பதிலளிக்க மறுக்கும் வாதத்தை தானேயன்றி கம்யூனிசத்தை ஏற்க வேண்டும் என்று கூறவில்லை)

    2. ஒற்றை மணி நேரத்தில் பதில் கூறும் திறனெல்லாம் என்னிடம் இல்லை. அதிகபட்சம் நான்கிலிருந்து ஐந்து நாட்கள் வரை எடுத்துக் கொண்டு, என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை உள்வாங்கி, சரி தவறை ஆலோசித்துக் கற்று சரியானதை சரியான விதத்தில் எழுதுவதே என்னுடைய வழக்கம். அதனால் எவ்வளவு நாட்கள் பதிலுக்காக காத்திருக்க வேண்டும் என்ற புரிதல் வேண்டுமல்லவா? அதற்காகத்தான் கால வரையறை வேண்டும் என்பது. பதிலெழுத ஓர் ஆண்டு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால் ஓர் ஆண்டுக் கொருமுறை என்னுடைய பதிவு வெளிவரும் என்று வரையறுத்துக் கூறுங்கள் என்று நான் கேட்டு நீங்கள் கூறாமல் அடம் பிடித்ததை உங்கள் பழைய வாதங்களிலிருந்து எடுத்துக் காட்டவா? அலுவலகத்தை மாற்றுங்கள் என்றெல்லாம் நான் புரிதலற்று பேசுவதில்லை. 24 மணி நேரமும் பதில் கூறிக் கொண்டிருக்கும் அளவுக்கு இது எனக்கு முதன்மையானதும் அல்ல.

    3. விவாதம் என்று வந்துவிட்டால் விவாதத்துக்கு வெளியேயுள்ள எதையும் கண்டு கொண்டிருப்பது என்னுடைய வழக்கமல்ல. ஏதேனும் தகுந்த காரணம் இருப்பின் அதை வெளிப்படையாகக் கூறி விவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவதும் என்னுடைய வழக்கம் தான். ஏதேதோ காரணங்களுக்காக முடிக்க விரும்பி வேறேதோ காரணங்களைக் கூறுவது எனக்கு வழக்கமல்ல. விவாதம் நடந்து கொண்டிருக்கும் போதே வாசகர்கள் தீர்மானித்துக் கொள்வார்கள் என்று இடை நிறுத்திச் சென்றதை உங்கள் பழைய விவாதங்களிலிருந்து எடுத்துக் காட்டவா? விவாதம் என்று வந்துவிட்டால் இருவரும் அதன் தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும். அவ்வாறன்றி உங்கள் கருத்து உங்களுக்கு என்னுடைய கருத்து எனக்கு என்று கூறிச் செல்வதற்கு விவாதம் என்ற ஒன்று அவசியமில்லை.

    மீண்டும் கூறுகிறேன். விவாதம் என்பது தேடலுக்காக நடத்தப்பட வேண்டும், பொழுதுபோக்கிற்காக அல்ல. நான் எழுப்பியிருக்கும் மேற்கண்ட மூன்று அம்சங்களும் விவாதத்தை சீரிய முறையில் நடத்துவதற்கு உதவுபவை. தேடல் நோக்கில் விவாதத்திற்கு வாருங்கள்; உங்கள் சொற்களுக்குள் நீங்கள் ஒழித்து வைத்திருக்கும் வெற்று நம்பிக்கையை உங்களுக்கே அடையாளப்படுத்திக் காட்டுகிறேன். அல்லவெனில், நீங்களே உங்களுக்குள் பதிவெழுதி மகிழ்ந்து கொள்ளுங்கள், நான் குறுக்கே வர விரும்பவில்லை. எத்தனை நாளுக்குத் தான் நம்பிக்கையல்ல உறுதியான ஏற்பு என்று நம்பிக் கொண்டிருப்பீர்கள், வந்து பாருங்கள் என்பது மட்டுமே என் அழைப்பு.

    ReplyDelete
  12. நண்பர் குலாம்,

    பிரச்சனை என்னிடம் இல்லை, உங்கள் பதில் கூறும் முறைமையில் தான்.

    1. நீங்கள் கம்யூனிஸ்டாக மாறிவிட வேண்டும் என உங்களை நான் கோரவில்லை, அது சாத்தியமும் இல்லை. முன்னர் நாம் நடத்திய விவாதங்களில் என்னுடைய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நீங்கள் கடந்து சென்றிருக்கிறீர்கள். என்னுடைய விளக்கங்களை எந்தவித பரிசீலனைக்கும் உட்படுத்தாமல் உங்கள் கருத்தையே மீண்டும் வேறு சொற்களில் கூறியிருக்கிறீர்கள். உங்கள் பழைய வாதங்களிலிருந்து இவைகளை எடுத்துக் காட்டவா? ஆகவே தான், நீங்கள் பதில் கூறுவதை உறுதிப்படுத்துவதற்காகத்தான் நீங்கள் பதில் கூற வேண்டும் அல்லது ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தேன் (கவனிக்கவும்: ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியிருப்பது நீங்கள் பதிலளிக்க மறுக்கும் வாதத்தை தானேயன்றி கம்யூனிசத்தை ஏற்க வேண்டும் என்று கூறவில்லை)

    2. ஒற்றை மணி நேரத்தில் பதில் கூறும் திறனெல்லாம் என்னிடம் இல்லை. அதிகபட்சம் நான்கிலிருந்து ஐந்து நாட்கள் வரை எடுத்துக் கொண்டு, என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை உள்வாங்கி, சரி தவறை ஆலோசித்துக் கற்று சரியானதை சரியான விதத்தில் எழுதுவதே என்னுடைய வழக்கம். அதனால் எவ்வளவு நாட்கள் பதிலுக்காக காத்திருக்க வேண்டும் என்ற புரிதல் வேண்டுமல்லவா? அதற்காகத்தான் கால வரையறை வேண்டும் என்பது. பதிலெழுத ஓர் ஆண்டு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால் ஓர் ஆண்டுக் கொருமுறை என்னுடைய பதிவு வெளிவரும் என்று வரையறுத்துக் கூறுங்கள் என்று நான் கேட்டு நீங்கள் கூறாமல் அடம் பிடித்ததை உங்கள் பழைய வாதங்களிலிருந்து எடுத்துக் காட்டவா? அலுவலகத்தை மாற்றுங்கள் என்றெல்லாம் நான் புரிதலற்று பேசுவதில்லை. 24 மணி நேரமும் பதில் கூறிக் கொண்டிருக்கும் அளவுக்கு இது எனக்கு முதன்மையானதும் அல்ல.

    3. விவாதம் என்று வந்துவிட்டால் விவாதத்துக்கு வெளியேயுள்ள எதையும் கண்டு கொண்டிருப்பது என்னுடைய வழக்கமல்ல. ஏதேனும் தகுந்த காரணம் இருப்பின் அதை வெளிப்படையாகக் கூறி விவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவதும் என்னுடைய வழக்கம் தான். ஏதேதோ காரணங்களுக்காக முடிக்க விரும்பி வேறேதோ காரணங்களைக் கூறுவது எனக்கு வழக்கமல்ல. விவாதம் நடந்து கொண்டிருக்கும் போதே வாசகர்கள் தீர்மானித்துக் கொள்வார்கள் என்று இடை நிறுத்திச் சென்றதை உங்கள் பழைய விவாதங்களிலிருந்து எடுத்துக் காட்டவா? விவாதம் என்று வந்துவிட்டால் இருவரும் அதன் தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும். அவ்வாறன்றி உங்கள் கருத்து உங்களுக்கு என்னுடைய கருத்து எனக்கு என்று கூறிச் செல்வதற்கு விவாதம் என்ற ஒன்று அவசியமில்லை.

    மீண்டும் கூறுகிறேன். விவாதம் என்பது தேடலுக்காக நடத்தப்பட வேண்டும், பொழுதுபோக்கிற்காக அல்ல. நான் எழுப்பியிருக்கும் மேற்கண்ட மூன்று அம்சங்களும் விவாதத்தை சீரிய முறையில் நடத்துவதற்கு உதவுபவை. தேடல் நோக்கில் விவாதத்திற்கு வாருங்கள்; உங்கள் சொற்களுக்குள் நீங்கள் ஒழித்து வைத்திருக்கும் வெற்று நம்பிக்கையை உங்களுக்கே அடையாளப்படுத்திக் காட்டுகிறேன். அல்லவெனில், நீங்களே உங்களுக்குள் பதிவெழுதி மகிழ்ந்து கொள்ளுங்கள், நான் குறுக்கே வர விரும்பவில்லை. எத்தனை நாளுக்குத் தான் நம்பிக்கையல்ல உறுதியான ஏற்பு என்று நம்பிக் கொண்டிருப்பீர்கள், வந்து பாருங்கள் என்பது மட்டுமே என் அழைப்பு.

    பின் குறிப்பு: கடந்த பின்னூட்டத்தில் \\\நம்மிருவருக்கிடையே இரு தீர்வு/// என்று தவறாக வந்திருக்கிறது. நம்மிருவருக்கிடையே ஒரு தீர்வு என்பதே சரியானது.

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோ
      செங்கொடி...
      சரி பிரச்சனை என்னிடத்திலே இருக்கட்டும். அதை பகிரங்கப்படுத்த தான் இங்கே அழைக்கிறேன். இங்கே விவாதிப்பதின் நோக்கம் நம் இருவர் மட்டும் தெளிவு பெற வேண்டுமென்பதற்காக அல்ல. அது மட்டும் தான் உங்கள் நோக்கமென்றால் அதற்கு பொதுவெளி அவசியமன்று. சாட்டிலோ, மெயிலிலோ தொடரலாம்.

      உங்கள் கருத்தை ஆதாரிப்பவர்களும், என் கருத்தை ஆதரிப்பவர்களுக்கும் இடையே தெளிவான புரிதல் ஏற்பட வேண்டுமென்பதற்காக தான் இங்கே ஒரு களம் அமைத்து தரப்பட்டிருக்கிறது. ஆக உங்கள் கருத்தோ அல்லது என் கருத்தோ இங்கே தொடங்குமானால் அதன் ஊடாக தொடரும் பரிவர்த்தனைகளில் பங்கு பெற எல்லோருக்கும் வாய்ப்பாக அமையும் என்பதற்காகவே என் தளத்தில் உங்களை பதிய அழைக்கிறேன். அதுவுமில்லாமல் வேறு தளங்களை பார்வையிடும் வாய்ப்பு கிடைப்பதை விட மொபைலிருந்தே என் தளத்தின் (உங்கள்) பின்னூட்டங்களை அனுமதிக்க செய்வது எனக்கு எளிது. ஆக உங்கள் கருத்துக்கு மறுப்பு கருத்தும் கிடைக்க வாய்ப்பு இங்கே அதிகம்

      மேலும் வாய்ப்பிருக்கும் போதெல்லாம் பதிலும் தருவதாக மட்டுமில்லை கேள்வியும் கேட்பதாக ஒப்பும் கொண்டிருக்கிறேன். பிறகென்ன... ? எனக்கு எதிராக எழுதும் உங்கள் கருத்துக்கு இங்கே முன்னிரிமை அளித்து வெளியிடுவதாக சொல்கிறேன். இதை விட என்ன செய்ய வேண்டும் நான்! இதில் எங்கே கோழை தனம் இருக்கிறது...?

      அடுத்து, ஒரு கேள்வியின் வீரியம் அறிந்தே அதற்கு தரும் பதில்களின் கால அளவு நீடிக்கும். பொதுபுரிதலில் இலகுவான தவறுகளுடன் பதியப்படும் கேள்விகளுக்கு எதற்கு மூன்று நாள் ஆழிய சிந்தனையில் அமர வேண்டும் சகோ...? இறை நாட்டத்தால் எனக்கும் சிந்தனையின் திறம் தெரியும்.நான் ஒரு ஆக்கத்திற்கு எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் சுமார் ஒரு மாதம். புரிந்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.

      இன்ஷா அல்லாஹ் எனக்கு திங்கள் நீங்களாக இரவின் மையப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் இணையத்தில் இணையும் வாய்ப்பு கிடைக்கும். அல்லாஹ் நாடினால் அப்போது என்னை நோக்கும் எந்த கேள்வியானாலும் பதில் தருகிறேன். மத்தப்படி.. திசை திருப்பல், மழுப்பல் போன்ற வார்த்தைகளெல்லாம் உங்களின் மன அமைதிக்காக வேண்டுமானால் சொல்லிக்கொள்ளுங்கள். அல்லது நேரடியாக விவாதத்தை பின்னூட்டத்தில் பதிவு செய்வதாக நீங்கள் விரும்பினால் மலேசிய நேரப்படி அதிகாலை 6 லிருந்து 7 வரை விவாதத்தை தொடரலாம்.. உடன்படுகிறீர்களா...? வாதி சொல்லும் அதே சூழ்நிலை காரணத்தை பிரதிவாதிக்கும் சொல்ல வாய்ப்புக்கொடுக்க வேண்டும்...

      இந்த மூன்று சுழற்சி முறை பின்னூட்டங்களும் என்னை பொருத்தவரை வீண் என்றே நினைக்கிறென். இதுவரை நீங்கள் கேள்விகளை பதிவு செய்திருப்பீர்களேயானால் இன்ஷா அல்லாஹ் இந்த பின்னூட்டங்களுக்கு பதிலாக உங்களுக்கு மறுப்போ, எதிர்ப்போ தோய்ந்த பின்னூட்டங்களை பதிவேற்றி இருந்திருப்பேன்..

      தயவு செய்து இனிமேலும் கால நிர்ணயத்தை நிர்ணயிக்கும் பொறுப்பை கையிலெடுக்காமல் உங்கள் கருத்தை பதிவு செய்ய பாருங்கள்..
      அப்படியில்லாமல்

      // மீண்டும் கூறுகிறேன். விவாதம் என்பது தேடலுக்காக நடத்தப்பட வேண்டும், பொழுதுபோக்கிற்காக அல்ல. நான் எழுப்பியிருக்கும் மேற்கண்ட மூன்று அம்சங்களும் விவாதத்தை சீரிய முறையில் நடத்துவதற்கு உதவுபவை. தேடல் நோக்கில் விவாதத்திற்கு வாருங்கள்; உங்கள் சொற்களுக்குள் நீங்கள் ஒழித்து வைத்திருக்கும் வெற்று நம்பிக்கையை உங்களுக்கே அடையாளப்படுத்திக் காட்டுகிறேன். அல்லவெனில், நீங்களே உங்களுக்குள் பதிவெழுதி மகிழ்ந்து கொள்ளுங்கள், நான் குறுக்கே வர விரும்பவில்லை. எத்தனை நாளுக்குத் தான் நம்பிக்கையல்ல உறுதியான ஏற்பு என்று நம்பிக் கொண்டிருப்பீர்கள், வந்து பாருங்கள் என்பது மட்டுமே என் அழைப்பு.//
      இப்படியே பின்னூட்டங்களை பதிந்தால்.... ஒன்றும் சொல்வதற்கில்லை

      தேடல் என்பது எனது விருப்பாக இருப்பதினால் தான்... எந்த ஆக்கமாக இருந்தாலும் அதில் ஐம்பது சதவீகித சாத்தியக்கூற்றை மட்டுமே இஸ்லாத்திற்கு கொடுக்கிறேன்... மீதி விடையளிக்க முடியா கேள்விகளில் நிறுத்தி இருக்கிறேன்.

      கொஞ்சம் சுய தம்பட்டங்களுக்கு ஒய்வு கொடுத்து விட்டு... உயிர்மெய்யெழுத்துக்களுக்கு உயிர் கொடுக்க வாருங்கள். அதிகம் பேச தேவையில்லை. இன்ஷா அல்லாஹ் களத்தில் காத்திருக்கிறேன்... ஏனெனில்

      நான் முஸ்லிம்!

      Delete
  13. அன்பார்ந்த நான் முஸ்லீம் தள வாசகர்களுக்கு,

    குலாமுடனான விவாதம் தொடர்பாக நான் என்ன கூறிக் கொண்டிருக்கிறேன்.

    1. என்னுடைய விளக்கங்களை பரிசீலித்து உங்கள் மறு விளக்கங்களை அளிக்க வேண்டும்.
    2. எப்போது பதில் வரும் எனத் தெரியாமல் காத்திருப்பதைத் தவிர்க்கும் பொருட்டு இத்தனை நாட்களுக்குள் அல்லது இத்தனை வாரங்களுக்குள் பதிலளிப்பேன் என்று கூற வேண்டும்.
    3. வாசகர்கள் தீர்மானித்துக் கொள்வார்கள், இணையத்தில் அதிக நேரம் இணைந்திருக்க இயலாது என்று காரணம் கூறி விவாதத்தை இடையில் நிறுத்தக் கூடாது.

    இதைத்தானே நான் கூறிக் கொண்டிருக்கிறேன். அதுவும் எதனால்? ஏற்கனவே குலாமுடன் விவாதம் செய்து அவர் இந்த உத்திகளைப் பயன்படுத்தி இருக்கிறார் என்பதனால் தானே. இதில் நேரடியாக பதில் கூறுவதில் அவருக்கு என்ன சிக்கல் இருந்துவிட முடியும்?

    1. அவ்வாறே பதிலளிக்கிறேன் நீங்களும் அவ்வாறேன் பதிலளியுங்கள்.
    2. அதிகபட்சம் இத்தனை நாட்களுக்குள்/வாரங்களுக்குள் நான் பதிலளிக்க முயல்கிறேன். நீங்களும் இதற்கு மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
    3. நான் விவாதத்தை இடையில் நிறுத்த மாட்டேன், நீங்களும் அவ்வாறே நிறுத்தாதீர்கள்.

    நேர்மையாக விவாதம் செய்ய விரும்புபவர்களுக்கு இப்படி பதிலளிப்பதில் ஏதேனும் பிரச்சனை வந்து விடுமா? இதற்கான குலாமின் பதில்களைப் பாருங்கள். என்னுடைய கேள்விகளின் நோக்கத்திற்கும் அவரின் பதில்களுக்கும் ஒட்டும் தொடர்பிருக்கிறதா? இத்தனை திருகல்களோடு பதில் கூறி ஏன் அவர் தன்னைத் தானே சிரமத்துக்கு உள்ளாக்கிக் கொள்ள வேண்டும்? அல்லது பதில் கூறுவதற்கு அடமாக மறுக்கும் அளவுக்கு அந்தக் கேள்விகள் அவ்வளவு கடினமான, பிரச்சனைக்கு உள்ளாக்கக் கூடிய கேள்விகளா? இதற்கு நான் பதில் கூறுவதைவிட நீங்கள் சிந்தித்துப் பார்ப்பதே சிறந்தது.

    இப்போதும் கூறுகிறேன், கடவுள் என்பது வெறும் நம்பிக்கையா? உறுதியான இருப்பா? என்பதை நண்பர் குலாமுடன் தீர்க்கமாக விவாதிக்க வேண்டும் என்பதில் நான் மிகுந்த ஆர்வம் கொண்டவனாக இருக்கிறேன். அதனால் தான் மீண்டும், மீண்டும் இங்கே விளக்கப் பின்னூட்டங்களை வைத்துக் கொண்டிருக்கிறேன். இந்த விவாதம் தொடங்குவதும் தொடர்வதும் குலாமின் கைகளிலேயே இருக்கிறது.

    நீங்கள் நான் பிடிவாதம் பிடிப்பதாகக் கூட நீங்கள் கருதலாம். மீண்டும் நான் கூறிக் கொள்வது இதைத்தான். ஏற்கனவே நண்பர் குலாமுடன் இது போன்ற அனுபவம் எனக்கு நேர்ந்திருப்பதால் அப்படியான அனுபவம் மீண்டும் நிகழாதிருக்க விரும்புகிறேன். இத்தளத்தில் நான் இடும் கடைசிப் பின்னூட்டமாகக் கூட இது இருக்கக் கூடும். அப்படி இது கடைசிப் பின்னூட்டமாக இது இருந்தால் அதற்கான பொறுப்பு முழுக்க முழுக்க நண்பர் குலாமைச் சேருமேயன்றி என்னையல்ல.

    வழக்கம் போல நண்பர் குலாம் இந்தப் பின்னூட்டத்தையும் உள்வாங்காமல் திசைதிருப்பினாலோ, அவதூறு செய்தாலோ .. .. .. திசைதிருப்பலோ, அவதூறோ என்னை எதுவும் செய்யாது. நான் அனிச்சமலரல்ல தொட்டவுடன் சுருங்கிக் கொள்வதற்கு, வீறுகொண்டு நிற்பேன். ஏனென்றால், நான் செங்கொடியை ஏந்திக் கொண்டிருப்பவன்.

    நன்றி.

    ReplyDelete
  14. அன்பு சகோ செங்கொடி...

    இதைப்போன்ற தேவையற்ற பேச்சுக்கள் இங்கே வேண்டாமென்கிறேன்..

    நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் இப்படி

    // இன்ஷா அல்லாஹ் எனக்கு திங்கள் நீங்களாக இரவின் மையப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் இணையத்தில் இணையும் வாய்ப்பு கிடைக்கும். அல்லாஹ் நாடினால் அப்போது என்னை நோக்கும் எந்த கேள்வியானாலும் பதில் தருகிறேன். மத்தப்படி.. திசை திருப்பல், மழுப்பல் போன்ற வார்த்தைகளெல்லாம் உங்களின் மன அமைதிக்காக வேண்டுமானால் சொல்லிக்கொள்ளுங்கள். அல்லது நேரடியாக விவாதத்தை பின்னூட்டத்தில் பதிவு செய்வதாக நீங்கள் விரும்பினால் மலேசிய நேரப்படி அதிகாலை 6 லிருந்து 7 வரை விவாதத்தை தொடரலாம்.. உடன்படுகிறீர்களா...? வாதி சொல்லும் அதே சூழ்நிலை காரணத்தை பிரதிவாதிக்கும் சொல்ல வாய்ப்புக்கொடுக்க வேண்டும்... //

    இதை விட தெளிவாக எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. குறைந்தப்பட்சம் ஒரு மாதம் நான் ஒரு ஆக்கம் வரைய எடுத்துக்கொள்ளும் காலஅவகாசம் என்பதால் உங்களுக்கு பதில் தர அதிகப்பட்சம் ஒரு மாதத்திற்கும் முடியும் என்பதை தான் இங்கே அறிவார்ந்தவர்கள் விளங்குவார்கள்.

    இல்லையென்றால் தினமும் அதிகாலை 6 லிருந்து 7 மணி வரைக்கும் முடியுமா என்றால் அதற்கும் பதில் இல்லை.

    அப்படி எத்தனை கேள்விகளுக்கு நான் பதில் அளிக்காமல் ஓடி வந்து விட்டேன் சகோ... சுமார் 20 ஆக்கத்திற்கு மேலாக நாத்திகத்திற்கு எதிராக ஆக்கம் புனைந்தும் பலதை விட்டு சிலதை தொட்டு பதில் என்ற பெயரில் உங்கள் கருத்துக்களை பதிந்து இருக்கிறீர்கள்.

    உங்கள் கருத்தை எனது தளத்தில் பதிய செய்வதில் முன்னிரிமை அளிக்கிறேன்றால் பார்வையாளர்கள் உணர்ந்துக்கொள்வார்கள்.. நம் இருவரின் நிலைப்பற்றி..

    எல்லாவற்றையும் சிவப்பு நிற கண்ணாடி அணிந்து பார்க்காதீர்கள், அப்புறம் பாலின் நிறம் கூட செந்நிறமாக தான் தெரியும்...

    சொல்ல வேண்டியவைகளை சொல்லி விட்டேன் விவாதத்தை தொடர்வதும், விட்டு விலகுவதும் உங்கள் இஷ்டம். தனி மனித உரிமைக்கு பெரிதும் மதிப்பளிப்பவன் நான்.

    (இன்று எனக்கு விடுமுறை ஆக உடனடியாக பதில் தந்திருக்கிறேன்)

    ReplyDelete
  15. சரி இதற்கு மேலும் என்னுடைய கேள்விகளை நான் வலியுறுத்திக் கொண்டிருக்கப் போவதில்லை. ஆனால் நான் ஏன் இந்த அளவுக்கு வற்புறுத்தினேன் என்பதை விரைவிலேயே உணரும் நிலை வரும் என்று நம்புகிறேன்.

    எனக்கும் நண்பர் குலாமுக்கும் இடையே முன்னர் நடந்த விவாதங்களை படித்துப் பார்ப்போர், ஏன் குலாமின் குறைவான இடுகைகளை நான் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்பதையும், எத்தனை கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் குலாம் விட்டிருக்கிறார் என்பதையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும். போகட்டும்.

    இன்னும் ஒரு வாரத்தில் என்னுடைய முதல் மறுப்பை இங்கே வெளியிடுகிறேன்.

    இந்த விவாதத்தில் என்னுடைய சொற்களுக்கு நான் நேர்மையாக இருப்பேன் என்றும், எனக்கு அளிக்கப்படும் பதில்களை உள்வாங்காமல், பரிசீலிக்காமல் பதிலளிக்க மாட்டேன் என்றும், குலாமின் விளக்கம் வெளியாகி அதிகபட்சம் ஒரு வார காலத்திற்குள் மறுப்பை வெளியிடுவேன் என்றும், தவிர்க்கவியலாத போதுகளில் முறைப்படி அறிவிப்பேன் என்றும், நானாக இந்த விவாதத்தை இடைமுறித்துச் செல்ல மாட்டேன் என்றும் உறுதியளிக்கிறேன்.

    இனி களத்தில் .. .. ..

    ReplyDelete
  16. நண்பர் செங்கொடி!.. உங்கள் கேள்விகளுக்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்...

    Regards,
    Abu Nadeem

    ReplyDelete
  17. அன்பார்ந்த வாசகர்களே!

    குறித்த காலத்திற்குள் முதல் பதிவை பதிவு செய்ய முடியாமைக்கு வருந்துகிறேன். நான் எழுத எண்ணியதில் பாதியைத் தான் எட்டியுள்ளேன். எனவே, எதிர்வரும் திங்கட்கிழமை இரவுக்குள் முதல் பதிவை வெளியிட்டு விடுகிறேன். எதிர்காலத்தில் இது போன்ற தாமதங்கள் நிகழாவண்ணம் மிகுந்த கவனம் கொள்வேன் என உறுதியளிக்கிறேன்.

    ReplyDelete
  18. அன்பார்ந்த வாசகர்களே!

    குறித்த காலத்திற்குள் முதல் பதிவை பதிவு செய்ய முடியாமைக்கு வருந்துகிறேன். நான் எழுத எண்ணியதில் பாதியைத் தான் எட்டியுள்ளேன். எனவே, எதிர்வரும் திங்கட்கிழமை இரவுக்குள் முதல் பதிவை வெளியிட்டு விடுகிறேன். எதிர்காலத்தில் இது போன்ற தாமதங்கள் நிகழாவண்ணம் மிகுந்த கவனம் கொள்வேன் என உறுதியளிக்கிறேன்.

    ReplyDelete
  19. அஸ்ஸலாமு அழைக்கும் .. உங்களுடைய பதிவு மிக அருமை ......

    ReplyDelete

  20. செங்கொடி
    9:05 PM (14 hours ago)

    to me
    நண்பர் குலாம்,

    உங்கள் பதிவுக்கான முதல் மறுப்பை உங்கள் தளத்தில் வழக்கம் போல்
    பின்னூட்டமாக இட்டேன். மிகநீண்ட நேரமாகிய பின்னரும் ‘ஏற்றிக் கொண்டே’
    இருக்கிறது. ஆகவே மின்னஞ்சல் மூலமும் உங்களுக்கு அனுப்புகிறேன்.
    அதிகபட்சம் எத்தனை சொற்கள் ஒரு பின்னூட்டத்தில் வெளிவருகின்றன எனப்
    பார்க்க எண்ணுகிறேன். எனவே முடிந்தவரை ஒரே பின்னூட்டமாக இடுங்கள்.
    ********************************************

    இந்த விவாதத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக இவ்விவாதத்தில் தொழிற்பட்டுக்
    கொண்டிருக்கும் முதன்மையான சில கூறுகளைப் பற்றிய தெளிவுகள்
    தேவைப்படுகின்றன.

    அறிவியல் என்றால் என்ன?

    எளிமையாகச் சொன்னால், மனிதனுக்குள் எழும் கேள்விகளுக்கு விடை காணும்
    முயற்சியிலான தேடல். மனிதன் இதுவரை கண்டடைந்த அனைத்தும் அறிவியலாலேயே
    சாத்தியமாகியிருக்கின்றன. மனிதன் உழைப்பில் ஈடுபடும் போது இயற்கையை
    எதிர்கொண்டாக வேண்டியதிருக்கிறது. அப்படி எதிர்கொள்ளும் வழிகளில் இயற்கை
    வழங்கும் ஏராளமான புதிர்களை, தனக்கு ஏற்கனவே இருக்கும் அறிவைக் கொண்டும்,
    புதிய பரிசோதனைகளைக் கொண்டும் விளக்கி புதிய உண்மைகளைக் கண்டடைவதும்,
    அந்த புதிய உண்மைகளை மீண்டும் மீண்டும் சோதனைகளுக்கு உட்படுத்தி அவைகளைச்
    சமன்பாடாக்குவதும், அந்தச் சமன்பாடுகளை சமூகத்தில் பயன்படுத்திப்
    பார்த்து விளைவுகளைக் கண்காணிப்பதும், அதன் அடிப்படையில் புதிய
    புதிர்களைத் தேடிப் போவதுமே அறிவியல். அறிவியல் முழுமையடையாத ஒன்றல்ல,
    அனைத்துக்கும் காரணிகளைக் கண்டறிந்து முழுமைப்படுத்துவதே அறிவியலின் பணி.
    சாராம்சத்தில் அறிவியல் என்பது ஒரு பயணம். அடுத்தடுத்த இலக்குகளைத் தேடி
    அது பயணித்துக் கொண்டே இருக்கும். அதன் பயணம் முடிவடைவதே இல்லை.
    அறிவியலுக்கு என்றேனும் முற்றுப் புள்ளி விழுமாயின் அறிவியலை
    முன்னெடுத்துச் செல்ல ஒற்றை ஒரு மனிதன் கூட உயிருடன் இல்லை என்பதே
    பொருள்.

    கடவுள் என்றால் என்ன?

    கடவுள் என்றால் என்ன? எனும் கேள்விக்கு யாராலும் விடை சொல்ல முடியாது.
    ஏனென்றால் இது பொருளாகவோ கருத்தாகவோ, அல்லது இரண்டுமல்லாத வேறொன்றாகவோ
    இதுவரை அடையாளம் காணப்படவில்லை. மட்டுமல்லாது அடையாளம் காண முடியாது
    என்பதே கடவுளின் தகுதிகளில் ஒன்று என்கிறார்கள் ஆத்திகர்கள். இதுவரை மனித
    இனம் கண்டறிந்த, இன்னும் கண்டறியப் போகும் அனைத்து வித நுட்பங்களாலும்,
    எந்தக் காலத்திலும் கண்டறியப் படமுடியாததும், அதேநேரம், மனிதனின்
    செயல்களில் அற்பமான ஒன்றைக்கூட விட்டுவிடாமல் அனைத்தையும் இயக்குவதும்
    கடவுள் என்ற ஒன்றே.

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோதரர் செங்கொடி.. உங்களின் நீண்ட நெடிய கருத்திற்கு நன்றி! நான் முன்னமே சொன்னது தான்.. உங்கள் பின்னூட்டத்தை பகுதி பகுதியாக பிரித்து இட்டால் அதை ப்ளாக்கர் ஏற்கும்.. மேலும் கேள்வி 1 2 என வரிசைப்படுத்தி ஒவ்வொரு பின்னுட்டமாக ( நான் மேல இட்டதுப்போல்) பார்ப்பதற்கும், பதிலளிப்பதற்கும் ஏதுவாக இருக்கும். அத்தோடு இப்படி பிரித்து பிரித்து இட்டால் பார்வையிடுபவர்களுக்கும் ஒரு வித சடைவு ஏற்படாமல் எளிதாக புரியும் வண்ணம் இருக்கும். >>> கைர், இனி வரும் காலங்களில் இப்படியாய் முயற்சியுங்கள் சகோ...

      சரி உங்கள் வாதத்தை எதிர் நோக்குவோம்...

      Delete
  21. செங்கொடி
    9:05 PM (14 hours ago)

    மனிதனின் அறிதல் என்றால் என்ன?

    மனிதன் ஒரு பொருளை அல்லது கருத்தை எப்படி அறிந்து கொள்கிறான். தன்னுடைய
    ஐம்புலன்களின் வழியே பெற்ற அனுபவங்களைக் கொண்டும், அந்த அனுபவங்களை மூளை
    எனும் பொருளில் நினைவுகளாக சேகரித்து வைத்துக் கொண்டு அவைகளை தேவையான
    பொழுதுகளில் தேவைப்படும் விதத்தில் பயன்படுத்திக் கொள்ளுவதே மனிதனின்
    அறிவு அல்லது அறிதல் எனப்படுவது. பகுத்தறிவு என்பதும் மூளை
    தன்னிடமிருக்கும் அனுபவங்களை அலசி பொருத்தமான முடிவை எடுக்க உதவும் ஒரு
    பயன்பாட்டுமுறைதான். இதுவரை மனிதன் கண்டடைந்த அனைத்தும் புலன்களின்
    மூலமும், அவற்றை ஒருங்கிணைப்பதன் மூலமும் பெற்றவைகளே தவிர வேறெந்த
    வழியிலும் அல்ல. அதேவேளை மனிதன் ஐயமுற்றிருக்கும் ஒன்றில் தெளிவடைவதற்கு
    தகுந்த உரைகல் அறிவியலைத் தவிர வேறு ஒன்றில்லை. அறிவியலைத் தவிர வேறு
    உரைகல் இருக்கக் கூடும் என்றுகூட இதுவரை யாரும் கண்டறிந்ததில்லை.

    கடவுள் பற்றிய அறிதல் மனிதனுக்கு எப்படி ஏற்பட்டது?

    மனிதன் உயிர் வாழ வேண்டுமென்றால் அவன் உற்பத்தியில் அதாவது உழைப்பில்
    ஈடுபட்டே ஆக வேண்டும். மனிதன் உழைப்பில் ஈடுபடுகிறான் என்றால் அவன் தன்
    வழியில் இயற்கையை எதிர்கொள்கிறான் என்பதே அதன் பொருள். அவ்வாறு இயற்கையை
    எதிர்கொள்ளும் போது அறியாத, தெளிவில்லாத, தீவிரம் புரியாத பல
    இன்னல்களுக்கு அவன் ஆளாகிறான். எடுத்துக்காட்டு நெருப்பு, மழை, இடி,
    மின்னல், இருள், கடும் பனி, கொடுங்கோடை, வெள்ளம், வறட்சி.. .. ..
    இவைகளைக் கண்டு அவன் அஞ்சுகிறான். ஏனென்றால் உயிர் என்பதன் பயன்மதிப்பு
    மட்டுமே தெரிந்திருந்தாலும் அதன் இழப்பு அவனை அஞ்சச் செய்கிறது. அடுத்து,
    மரணம். தன்னுடன் உண்டு, களைத்து, களித்துக், கழித்துக் கொண்டிருந்த தன்
    கூட்டத்தில் ஒருவன் திடீரென தன் செயல்களை நிறுத்திக் கொள்வது ஏன்?
    மீண்டும் என்றாவது ஒரு நாள் அவனின் நீள் தூக்கத்திலிருந்து எழும்பக்
    கூடுமோ எனும் கேள்வி. இந்த இரண்டும் சேர்ந்து தான் அதாவது இயற்கை குறித்த
    பயம், மரணம் குறித்த கேள்வி ஆகிய இரண்டும் சேர்ந்து தான் கடவுள் எனும்
    உருவகத்தை மனிதனிடம் கொண்டு வந்திருக்கின்றன. கடவுள் எனும் கருத்து
    உருவகம் மனிதன் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரே
    ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு அதற்கும் சில ஆயிரம் ஆண்டுகள் கழிந்த
    பின்னரே மதங்கள் தோன்றத் தொடங்கின. இவைகள் வெறும் யூகங்கள் அல்ல.
    பண்டைக்கால குகை ஓவியங்கள் சுட்டும் வரலாறு இப்படித்தான் இருக்கிறது.

    இனி நண்பர் குலாமின் கட்டுரைக்குள் பயணிக்கலாம். அந்தக் கட்டுரையில்
    சாராம்சமாக அவர் கூறியிருப்பது என்ன? அறிவியல் தன்னளிவில் முழுமையடையாத
    ஒன்று. அறிவியல் இன்னும் விடையளிக்காத வினாக்கள் இருக்கின்றன. எனவே
    குறைபாடுடைய அந்த அறிவியலைக் கொண்டு கடவுளை அளக்கவோ, அங்கீகரிக்கவோ
    முடியாது, கூடாது. நண்பரின் கருத்து தவறானது என்பதை அவரின்
    வாதங்களினூடாவே பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. //அறிவியல் என்பது ஒரு பயணம். அடுத்தடுத்த இலக்குகளைத் தேடி
      அது பயணித்துக் கொண்டே இருக்கும். அதன் பயணம் முடிவடைவதே இல்லை. //

      உண்மைதான்.. இதை தான் நான் ஆக்கத்திலும் மையப்படுத்தி இருக்கிறேன். ஆனால் இங்கே நீங்கள் இதே நிலைப்பாட்டுடன் தான் எல்லா இடங்களிலும் ஒத்து போகவில்லையென்பது தான் ஆச்சரியமான இரட்டை நிலைப்பாடு. ஏனெனில் ஒரு இடத்தில்
      // அறிவியல் அனைத்தையுமே முழுமைப்படுத்திச் சொல்லியிருக்கிறது.//

      இப்படி சொல்கிறீர்கள். அதை என்வாழ்வில் உறுதிப்படுத்துதல் எனும் நோக்கில் ஆராய்ந்து என் செயல்களுக்கு அறிவியல் அல்லாத வேறு மூலத்தை இங்கே சமர்பிக்க சொல்கிறீர்கள். தவறான ஒப்பீடு . ஏனெனில் இங்கே நான் உறுதிப்படுத்துதலை சொல்லவில்லை... முழுமைப்படுத்தி இருக்கிறதா என கேட்கிறேன்..
      ஆக உங்கள் நிலையில் நீங்கள் ஒரு தெளிவான பதிலை தரவேண்டும்
      1. அறிவியல் முழுமைப்படுத்தப்பட்ட ஒன்றா ? அல்லது
      2. ஆய்வுகளை அடிப்படையாக வைத்து தொடரும் ஒரு பயணமா..?

      அத்தோடு அதிரடியாக கடவுள் குறித்த இலக்கணத்திற்கு வந்துவீட்டிர்கள். // கடவுள் என்றால் என்ன? எனும் கேள்விக்கு யாராலும் விடை சொல்ல முடியாது.
      ஏனென்றால் இது பொருளாகவோ கருத்தாகவோ, அல்லது இரண்டுமல்லாத வேறொன்றாகவோ
      இதுவரை அடையாளம் காணப்படவில்லை. மட்டுமல்லாது அடையாளம் காண முடியாது // இப்படி கூறிவிட்டு நாத்திகர் பக்கம் கைகாட்டி விட்டு போகிறிர்கள்.

      நான் கேட்பது நீங்கள் மறுக்கும் கடவுள் குறித்து... அதற்கு இது தான் உங்கள் பதிலா என்பதை இன்னும் அழுத்தமாக பதிவு செய்யுங்கள்.

      அடுத்து மனித அறிதலும், கடவுள் குறித்த அறிதலும் சில கருத்துக்களில் உங்களோடு உடன்படுகிறேன்.. ஆனால்
      // மனிதன் ஐயமுற்றிருக்கும் ஒன்றில் தெளிவடைவதற்கு தகுந்த உரைகல் அறிவியலைத் தவிர வேறு ஒன்றில்லை. அறிவியலைத் தவிர வேறு
      உரைகல் இருக்கக் கூடும் என்றுகூட இதுவரை யாரும் கண்டறிந்ததில்லை.//

      சரிதான்... மனிதன் ஐயமுற்றிற்கும் ஒன்றின் மீதை இன்று 21ம் நூற்றாண்டின் விளிம்பில் நின்றுக்கொண்டு உரசிப்பார்க்க நமக்கு உரைக்கல் அறிவியலாய் இருக்கிறது. அதுவும் மனிதன் இதுவரை உணர்ந்து, அறிந்து வைப்படுத்தப்பட்ட விசயங்களை தான் தவிர தன் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்ப்பட்ட்ட விசயங்கள் குறிது அலச / உரச எந்த உரைக்கல்லும் கால சக்கரத்தில் இல்லை. அதாவது கி.மூவில் எதிர்ப்பார்க்காத சாத்தியமில்லாத ஆனால் செயல்கள் கி.பி யில் நடைமுறையில் சாத்தியாமாயிற்று. கி. பியில் சாத்தியமா நினைத்த பல செயல்கள் இன்று சாதரண செயல்களாயிற்று. உண்மை தான் மறுப்பதற்கில்லை.

      ஆனால் இங்கே தான் புரிந்துக்கொள்ள வேண்டியது மனித அறிவுக்கு ஆராய தகுந்த உங்கள் சொல்லில் சொல்வதாக இருந்தால் கருத்தாகவோ, அல்லது பொருள் வாதமாகவோ இருப்பது மட்டுமே தம் புது பரிமாணங்களை இவ்வுலகிற்கு காட்டி தன் நிலையே விரிவாக்கி செல்ல முடியும். ஆனால் ஆராய சாத்தியமில்லாத ஒன்றை குறித்து இதுவரை அல்லது இனி உலகம் அழியும் நாள் வரையிலும் நம்மால் உணர்ந்துக்கொள்ளவோ அல்லது இயலா நிலையிலோ ஒன்றிருந்தால் அது இல்லையென்றே சொல்வதற்கென்ற வாய்ப்பே அறிவியலில் இல்லை. (அப்படியான ஒன்றாக கடவுள் குறித்து ஆக்கத்தில் சொல்லியும் இருக்கிறேன்) மீண்டும் விளக்கமாக இன்ஷா அல்லாஹ் கீழே தொடர்கிறேன்.

      கடவுள் அறிதலுக்கான உங்கள் விளக்கங்கள் எல்லாம் தர்க்கரீதியாக ஏற்றுக்கொண்டாலும் அதை ஐம்பது சதவீகிதம் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும். தான் பயப்படும் ஒன்றை கடவுளாக கொள்வதென்பது உருவ வழிப்பாட்டை மையபப்டுத்தும் மதங்களின் ஊடான பொது நிலை விளக்கமே.. காட்டு விலங்குகளை வேட்டையாட பழகிய மனிதன் தான் பயந்த ஒன்றிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள தான் முயல்வானே தவிர அவற்றை வணங்கும் பொருளாக கொள்வான் என்பது எப்படி யோசித்தாலும் கூட ஏற்றுக்கொள்ள முடியாத வாதம்..? ஏனெனில் வணங்குதல் என்பது என்றால் என்னவென்று அவனுக்கு அப்போது எப்படி தெரியும்..?

      பயப்படுவதென்பது என்பது கூட ஒரு வித உள்ளுணர்வு. நமது சிந்தனைக்கு எதிரான நிலை எதிரில் வெளிப்படும் போது நமது இயலாமையை வெளிப்படுத்தும் உணர்வு. அதுவும் அந்த நிலை சீராகும் வரை மட்டுமே நீடிக்கும். அப்படிப்பார்த்தால் இடியும், மின்னலும் இயற்கை சீற்றங்களும் இல்லா நிலைகளிலும் காலங்களிலும் அந்த உள்ளுணர்வு ஏற்படுவதில்லை. ஆக கடவுள் என்பது தற்காலிக உருவகிக்கும் பொருளாக மட்டுமே இருந்திருந்து அதற்கடுத்த மனிதன் வாழ ஏதுவான சூழ் நிலைகளில்காணமல் போயிருப்பார் சகோ... ஆனால் 21 நூற்றாண்டிலும் அதை ஏற்கும் மக்கள் இருக்க என்ன காரணம்..?

      குகை ஓவியங்கள் மனிதர்கள் வாழ்ந்ததற்காக அடையாளங்கள் தான் தவிர கடவுளை மறுக்கும் காரணிகள் அல்ல... வேறு ஆதி மனிதர்கள் முதல் கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரங்களை திரட்டி தாருங்கள் சகோ..

      Delete
  22. செங்கொடி
    9:05 PM (14 hours ago)

    \\\எந்த ஒன்றையும் நாம் உறுதிப்படுத்திக்கொள்ள அறிவியலை மட்டுமே
    துணைக்கழைத்தால் அறிவியல் அனைத்தையும் இவ்வுலகிற்கு முழுமைப்படுத்தி
    சொல்லி இருக்க வேண்டும்/// நண்பர் குலாம் ஒரு ஆத்திகர் என்பதால் அவரளவில்
    அவர் கடவுளை உறுதிப்படுத்த வேண்டியதில்லை. ஆனால் ஒரு மனிதர் எனும்
    அடிப்படையில் இதுவரை ஏராளமான விசயங்களை தன் வாழ்வில்
    உறுதிப்படுத்தியிருப்பார். தயவு செய்து அப்படியான உறுதிப்படுத்தல்களில்
    அறிவியலை விலக்கி வைத்துவிட்டு உறுதிப்படுத்தியவற்றை குறைந்தது ஒரு பத்து
    விசயங்களையாவது அவர் பட்டியலிட வேண்டும் எனக் கோருகிறேன். முடியாது.
    ஒன்றைக்கூட அவரால் கூற முடியாது. ஆக அனைத்தையும் முழுமைப்படுத்திச்
    சொல்லாத அறிவியலை மட்டுமே துணைக்கழைத்துக் கொண்டுதான் தன் வாழ்வின்
    அத்தனை உறுதிப்படுத்தல்களையும் செய்திருக்கிறார். ஆனால் கடவுள்
    விசயத்தில் மட்டும் அவருக்கு அறிவியலில் போதாமை வந்துவிடுகிறது. இதன்
    மூலம் ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம். அவர் வாழ்வின் மெய்யான
    விசயங்களுக்கும் கடவுளுக்கும் இடையில் ஒரு பேதம் இருக்கிறது.

    அறிவியல் அனைத்தையுமே முழுமைப்படுத்திச் சொல்லியிருக்கிறது. ஒரு குண்டூசி
    உடலில் குத்தினால் ஏன் வலிக்கிறது என்பது தொடங்கி இப்பேரண்டத்தின்
    கோள்களின் இயக்கம் வரை அனைத்தையும் கண்டறிந்து முழுமைப்படுத்திச்
    சொல்லியிருக்கிறது. எதை முழுமைப்படுத்தாமல் குறையுடன் விட்டு
    வைத்திருக்கிறது? இந்த இடத்தில் நாம் ஒரு புரிதலுக்கு வந்தாக வேண்டும்.
    அறிவியல் குறைபாடுடையது என்று ஆத்திகர்கள் என்ன நோக்கில் கூறுகிறார்கள்?
    அதற்கு என்ன சான்றுகள் தருகிறார்கள்? என்பதை நுணுகிப் பார்க்க வேண்டும்.
    அறிவியல் இன்னும் கடக்காத எல்லை இருக்கிறதா? என்றால், ஆம் இருக்கிறது.
    எடுத்துக் காட்டாக பெருவெடிப்புக் கொள்கைக்கு முன்னர் நடந்த மாற்றங்கள்
    என்ன? என்று கேட்டால் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள், இன்னும்
    பதில் கிடைக்கவில்லை என்பதே பதில். ஆனால் ஆத்திகர்கள் அறிவியலின் இந்த
    தொடர்ந்து தேடும் தன்மையை சுட்டிக்காட்டி அறிவியல் குறைபாடுடையது என்று
    கூறுகிறார்கள். இதோ நண்பர் குலாம் இதற்கு பயன்படுத்தியிருக்கும்
    வாசகங்களை கவனித்துப் பாருங்கள். \\\ஆனால் எல்லாவற்றையும்
    முழுமைப்படுத்தி விட்டதா என்றால் அதற்கு இல்லையென்பது தான் அறிவுடையோரின்
    பதிலாக இருக்கும்.. .. ஆக அறிவியல் இன்னும் முழுமையடையவில்லை என்பது
    கண்கூடு.. .. அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல்
    அறிவியல் குறைப்பட்டுக்கொண்டிருக்கும் போது/// கடவுளை அதை நம்பாதவர்களும்
    கூட அதன் இயல்புகளை ஏற்றுக் கொண்டு பதிலளிக்க வேண்டும் என்று கோரும்
    நண்பர் குலாம். அறிவியலுக்கு மட்டும் அதன் இயல்புகளை தூக்கிக் கடாசி
    விட்டது ஏன்? அறிவியல் என்பது ஒரு தேடல். அது தொடர்ந்து கொண்டே
    இருக்கும். அதற்கு முற்றுப்புள்ளி என்பதே கிடையாது. ஒரு விசயத்தில்
    குறைபாடுடையது என ஒன்றை கூற வேண்டுமாயின் அந்த விசயத்தின் அதன் இயலாமை
    வெளிப்பட்டிருக்க வேண்டும். அறிவியல் எந்த விசயத்திலாவது இப்படி தன்னுடைய
    இயலாமையை வெளிப்படுத்தியிருக்கிறதா? அல்லது அறிவியலால் முடியாதவைகள்
    என்பதற்கு பட்டியல் ஏதும் குலாம் வைத்திருக்கிறாரா? அறிவியலின் இந்த
    எட்டப்படாத உயரம், தொடர்ந்து பயணப்படும் தன்மைகள் குறித்து குலாம்
    அறியாதவராக இருக்க முடியாது. என்றால் ஏன் அறிவியலை குறைபாடுடையது என
    காட்ட முயற்சிக்க வேண்டும்? ஏனென்றால் கடவுளை மெய்ப்பிக்க அதைத்தவிர வேறு
    வழி இல்லை. நண்பர் குலாமுக்கு மட்டுமல்ல எல்லா மதவாதிகளுக்கும் இது
    பொருந்தும்.

    ReplyDelete
    Replies
    1. // அறிவியல் எந்த விசயத்திலாவது இப்படி தன்னுடைய
      இயலாமையை வெளிப்படுத்தியிருக்கிறதா? அல்லது அறிவியலால் முடியாதவைகள்
      என்பதற்கு பட்டியல் ஏதும் குலாம் வைத்திருக்கிறாரா? //

      உங்களின் இந்த கேள்வி எனக்கு ஆச்சரியத்தை வரவழைக்கவில்லை. தம் வாதத்தை மெய்பிக்க எந்த சந்தர்ப்பங்களையும் தனதாக்கி கொள்ளலாம் என்ற நிலைதான் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. முதலில் நான் சொல்லவரும் கருத்தை நீங்கள் உள்வாங்கினீர்களா இல்லையா என்பது எனக்கு புரியவில்லை. இங்கே யாரும் அறிவியலை மறுக்கவும் இல்லை அதன் முடிவுற்ற உறுதிப்பாட்டில் சந்தேகிக்கவும் இல்லை. ஆனால் அறிவியல் முழுமையடையாத தம் பயணத்தை தொடரும் ஒரு நிகழ்வுகளின் ஊடான ஒன்றாக சொல்கிறேன். அதை முதல் பத்தியில் நீங்களும் சொல்கிறீர்கள்

      பின்போ
      // அறிவியல் இன்னும் கடக்காத எல்லை இருக்கிறதா? என்றால், ஆம் இருக்கிறது.
      எடுத்துக் காட்டாக பெருவெடிப்புக் கொள்கைக்கு முன்னர் நடந்த மாற்றங்கள்
      என்ன? என்று கேட்டால் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள், இன்னும்
      பதில் கிடைக்கவில்லை என்பதே பதில். //
      இதற்கு பெயர் பதிலா..?

      சரி உங்களோடு உடன்பட்டாலும் நீங்கள் குறிப்பிடும் அறிவியலில் முழுமையடாத ஒன்று எப்படி குறைப்பாடே இல்லாததாக இருக்கும் என்று சொல்கிறீர்கள். இங்கே முழுமையடையாத எதுவும் உறுதிப்பாட்டில் நிலையானது அல்ல என்பது தான் அறிவியல் அறிவியலுக்கே தரும் விளக்கம். அப்படியிருக்க என்னை பட்டியல் போட சொல்கிறீர்கள் அறிவியலில் குறைப்பாடு என்னவென்று.. ஆக்கத்தின் கீழே நான்கு கேள்விகளை கோட்டிட்டேன். அது என்னவாம்..? (இதுக்குறித்தும் உங்கள் பதில்கள் கொண்ட அத்தகைய கருத்திற்கு கீழாக தொடர்கிறேன்)

      Delete
  23. செங்கொடி
    9:05 PM (14 hours ago)

    அடுத்து நண்பர் குலாம் பொருத்தமான ஒரு வாதத்தை எடுத்து வைக்கிறார்.
    \\\எந்த ஒன்றை குறித்தும் இதுவரை அறிவியல் நிருபணம் தரவில்லையோ அது
    இல்லையென்று சொல்வது ஏற்புடையதன்று. மாறாக அதுக்குறித்த நேர்/ எதிர்
    தகவல்கள் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை என்று சொல்வது தான் பொருத்தமானதாக
    இருக்கும்/// சரிதான். இதை யாரும் மறுக்கப் போவதில்லை. தெளிவாகச்
    சொன்னால் நான் மறுக்கப் போவதில்லை. ஆனால் நண்பர் குலாம் இதை ஏற்றுக்
    கொள்கிறாரா? என்பது தான் என்னுடைய கேள்வி. நண்பர் குலாம் கூறியிருக்கும்
    இந்த வாதத்தை நான் இரண்டு விதங்களில் நேர்கொள்கிறேன்.

    1. கடவுள் உறுதியானவர், அவர் நிலைத்திருந்து காரியமாற்றிக்
    கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுவதைத்தான் நாத்திகர்கள்
    எதிர்க்கிறார்கள். அது ஒரு கருத்து, ஆத்திகர்களின் நம்பிக்கை என்றால்
    யாரும் அதில் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கப் போவதில்லை. இந்த
    விவாதத்தின் தலைப்பு கூட வெற்று நம்பிக்கையா? உறுதியான இருப்பா?
    என்றுதான் வைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, அது ஒரு நம்பிக்கை என்றால் அதில்
    எந்த உரசலுக்கும் இடமில்லை. இப்போது குலாம் கூறுவதைப் பாருங்கள், அவர்
    எந்த விதத்திலிருந்து இதை அணுகுகிறார்? கடவுள் உறுதியாக நிலவுகிறது எனும்
    அடிப்படையிலிருந்தே மேற்கண்ட வாதத்தை அவர் வைக்கிறார். துல்லியமாகக்
    கூறினால், அது நம்பிக்கையா? மெய்யான இருப்பா? என்பது தான் இங்கு
    விவாதமாகியிருக்கிறதேயன்றி கடவுளல்ல. இதை சரியான கோணத்தில் புரிந்து
    கொள்ள வேண்டும்.

    2. நண்பர் குலாம் கூறியிருக்கும் இந்த வாதம் ஒரு பாதி தான். “எந்த ஒன்றை
    குறித்தும் இதுவரை அறிவியல் நிரூபணம் தரவில்லையோ அது இருக்கிறது என்று
    சொல்வது ஏற்புடையதன்று. மாறாக அது குறித்த தகவல்களோ, வாய்ப்புகளோ உறுதி
    செய்யப்படாதவரை அது உறுதியாக இருக்கிறது என கூறவியலாது என்று சொல்வது
    தான் பொருத்தமானதாக இருக்கும்” என்பது தான் அந்த மறுபாதி. இதற்கு குலாம்
    என்ன பதில் கூறுவார்?

    ReplyDelete
    Replies
    1. //“எந்த ஒன்றை குறித்தும் இதுவரை அறிவியல் நிரூபணம் தரவில்லையோ அது இருக்கிறது என்று
      சொல்வது ஏற்புடையதன்று. மாறாக அது குறித்த தகவல்களோ, வாய்ப்புகளோ உறுதி
      செய்யப்படாதவரை அது உறுதியாக இருக்கிறது என கூறவியலாது என்று சொல்வது
      தான் பொருத்தமானதாக இருக்கும்” என்பது தான் அந்த மறுபாதி. இதற்கு குலாம்
      என்ன பதில் கூறுவார்? //

      நாம் ஒன்றை ஏற்பதாகவோ மறுப்பதாகவோ இருந்தால் நாம் ஆதாரிக்கும் அந்த செய்கையின் மூலத்தை ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட அறிவியலோடு ஒப்பு நோக்கி அதன் விளைவு நேர் விகிதத்தில் இருந்தால் ஏற்கலாம் அதற்கு மாற்றமாக இருந்தால் மறுக்கலாம்.. இதை நான் ஏற்கிறேன், ஆனால் அறிவியல் வரைவிலக்கணம் தராத ஒன்றோடு அறிவியல் மனித சிந்தைக்கு தெளிவாக அறியப்படும் முன்பே ஒரு நிலையான அதுவும் அறிவியல் உபகரணங்களால் /ஆய்வுகளால் கண்டறிய வாய்ப்பில்லாத ஒன்றீன் மூலத்தை எந்த அறிவியல் அறிவு கொண்டு ஐயா இல்லையென அறிந்தீர்கள் நீங்கள்..?

      சுருக்கமாக கேட்கிறேன். கடவுள் இல்லையென்பதை எந்த அறிவியல் உபகரணங்களால் அளந்து அதை அறிவியல் உண்மைப்படுத்தியது சொல்லுங்கள்...

      அறிவியலால் வரையறை செய்த ஒன்றை மட்டுமே மறுக்கவும் / ஏற்கவும் செய்யலாம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் வரையறுக்கும் கட்டுப்பாடுகளை கொண்ட அனைத்து பொருட்களையும் / செய்கைகளையும் அறிவியலில் வகைப்படுத்தலாம்.. அப்படி உறுதி செய்யப்பட்ட அந்நிலைக்கு எதிராக நாம் நம் சுய கருத்தை / சிந்தனையை வெளிப்படுத்துவது தான் அறிவியலுக்கு எதிரானது. ஆனால் இங்கே அறிவியல் உறுதிப்படுத்த வாய்ப்பில்லாத ஒன்றை அதற்கு எதிரான நிலையில் தான் ஒப்பு நோக்க வேண்டும். அதாவது நீங்கள்
      1. அறிவியலால் நிருபிக்க வாய்ப்பில்லாத ஒன்றை வேறு வழிகளில் நிருபிக்க வழி சொல்ல வேண்டும்! அல்லது
      2. அறிவியல் இல்லையென்பதை உறுதி செய்யாத ஒன்றை ஏற்றாக வேண்டும்...?

      இந்த கருத்தில் எதில் நீங்கள் உடன்பட போகீறீர்கள் என்பதே இப்போதைக்கு என் கேள்வி? தெளிவாக சொல்லுங்கள்.

      Delete
  24. செங்கொடி
    9:05 PM (14 hours ago)

    அடுத்து குலாம் எழுப்பியிருக்கும் ஒன்று ‘அறிவியலால்
    கண்டுபிடிக்கப்படுவதை விட உயர்வானவர் கடவுள்’ என்பது. முதலில் ஒரு
    விசயத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். கடவுள் என்பது
    வெளிப்படுத்தப்பட்ட ஒன்றல்ல, கூறப்பட்ட ஒன்று. வானிலிருந்தோ அல்லது
    பூமிக்கு அப்பாற்பட்ட இடத்திலிருந்தோ வெளிப்பட்டு, அந்த வெளிப்பாடு
    பாதுகாக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட அந்த வெளிப்பாட்டின் வாயிலாக கடவுள்
    என்பது உருவெடுக்கவில்லை. மாறாக கடவுள் என்பதை மனிதர்கள் தான்
    கூறியிருக்கிறார்கள், இந்த நிலையில் அறிவியலால் கண்டுபிடிக்கப்படுவதை விட
    உயர்வானவர் எனும் தகுதி கடவுளுக்கு எப்படி ஏற்பட்டிருக்கும்? கடவுளைக்
    கூறியவர்களின் மற்றுமொரு கூற்று, அவ்வளவு தான். நண்பர் குலாம் கடவுள்
    மறுப்பு குறித்து தவறான புரிதலோடு இருக்கிறார். கடவுளின் தகுதிகளாக,
    வல்லமைகளாக ஆத்திகர்கள் கூறுகிறவைகளை அப்படியே ஏற்றுக் கொண்டு கடவுள்
    எனும் கருத்தை மட்டும் மறுப்பது தான் கடவுள் மறுப்பு என்பதாக அவரின்
    புரிதல் இருக்கிறது. அவ்வாறல்ல, கடவுளை மறுக்கிறோம் என்றால் அதன்
    தகுதிகள், வல்லமைகள் என கடவுளின் மீது ஏற்றப்பட்டிருக்கும் அத்தனை
    புனிதங்களோடு சேர்த்துத்தான் கடவுளை மறுக்கிறோம். அறிவியலால்
    அளக்கப்படுவதைவிட கடவுள் உயர்வானவர் எனவே அறிவியலில் அகப்படவில்லை
    என்பதால் கடவுள் இல்லை என்று கூற முடியாது என்பது அபத்தமான வாதம்.

    அடுத்து நண்பர் குலாம் இப்படி கூறியிருக்கிறார், \\\நம் கண்களுக்கு
    புலப்படவில்லை என்ற புறக் காரணி தவிர்த்து எந்த ஆதாரபூர்வமான சான்றுகளும்
    கடவுளை மறுக்க இல்லை/// இப்படிக் கூறுவதற்கு நிரம்பவும் அசட்டுத்
    துணிச்சல் வேண்டும். கண்ணெதிரே காணப்படவில்லை என்பதால் மட்டுமல்ல, 1.
    அறிவியல் ரீதியாகவும் 2. வரலாற்றியல் ரீதியாகவும் 3. சமூகவியல்
    ரீதியாகவும் கடவுள் இல்லை என்பதற்கான காரணிகள் முன்
    வைக்கப்பட்டிருக்கின்றன.

    இனி, நண்பர் குலாமின் அமெரிக்கா லாம்கு எடுத்துக்காட்டை கொள்ளலாம். இதில்
    அமெரிக்கா பற்றிய விளக்கங்கள் புரிதலுக்காகவும், லாம்கு வாதமாகவும் பயன்
    படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் கூர்ந்து கவனித்தால் ஒன்றை நாம் புரிந்து
    கொள்ளலாம். அமெரிக்கா குறித்த விளக்கத்தில் இருக்கும் தெளிவு,லாம்கு
    குறித்த விளக்கத்தில் இல்லை. அமெரிக்கா என்றொரு நாடு இருக்கிறதா?
    இல்லையா? இதில் எந்த ஐயத்திற்கும் இடமில்லாமல் செலவு செய்வதற்கு
    வாய்ப்பிருந்தால் கண்ணால் கண்டுவிட்டு வந்துவிடலாம். ஆனால் லாம்கு?

    லாம்கு என்றொரு நாடு இருக்கிறதா? இல்லையா? அமெரிக்கா விசயத்தில் நாடு
    என்பதற்கு என்னென்ன வரையறைகள் பயன்படுத்தப்பட்டனவோ அதே வரையறைகளை இங்கும்
    பயன்படுத்தினால் எளிதாக முடிவு கிடைத்துவிடும். லாம்கு எனும் நாடு
    புவிப்பரப்பில் தற்போது எங்கும் இல்லை. லாம்கியர்கள் எனும் தேசிய இனத்தை
    உலகில் தற்போதுள்ள எவரும் கண்டதில்லை. வேறு எந்த சான்றுகளும் கிடைக்காத
    நிலையில் நாம் இரண்டு முடிவுகளுக்கு வந்தாக வேண்டும். 1. லாம்கு என்றொரு
    நாடு இல்லை. 2. முன்னெப்போதோ இருந்து பின்னர் அழிவுபட்டுப்
    போயிருக்கலாம். இப்போது இரண்டாவது முடிவை எடுத்துக் கொண்டால் அதற்கான
    இலக்கியக் குறிப்புகளோ, மரபு சார்ந்த கதையாடல்களோ அது இருந்ததாக
    கருதப்படும் பகுதி மக்களிடையே உலவ வேண்டும். தொல்லியல் ஆய்வுகள்
    நடத்தப்பட்டு அந்த இலக்கியக் குறிப்புகளையோ, மரபுக் கதையாடல்களையோ
    உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். இன்னும் நுணுக்கமாக பார்த்தால் லாம்கு
    எனும் கருத்தாக்கம் யாரால் எப்போது முன்வைக்கப்பட்டது? அதற்கு தனிப்பட்ட
    பலன்கள் ஏதும் அவருக்கு உண்டா? அது குறித்த பின்னணிகள் ஆராய்ந்து அதில்
    உண்மை இருக்க வாய்ப்பிருக்கிறதா? என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்தலாம்.
    இப்படி ஏதுவுமே கிடைக்காத பட்சத்தில் லாம்கு என்ற நாடு இல்லை,
    இருந்ததில்லை என்று முடிவு செய்து விடலாம்.

    இது தான் அறிவியல் முறை. அதவது ஒரு நாடு இருக்கிறது என்றாலும் இல்லை
    என்றாலும் அதனதற்குறிய ஆதாரங்கள் வேண்டும். குலாம் இதை எப்படி
    பயன்படுத்தியிருக்கிறார்? லாம்கு குறித்த எந்த தகவலும் உங்களுக்கு
    கிடைக்கவில்லை என்றால் அதைக் கூறியவரின் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள
    வேண்டும் என்பது தான் அறிவியல் முறை என்கிறார். அதாவது லாம்கு குறித்த
    எந்தத் தகவலும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் லாம்கு குறித்த
    அறிவிப்பை வெளியிட்டவர் என்ன கருத்தைக் கொண்டிருந்தாலும் அப்படி ஒரு நாடு
    இருக்கிறது என்றாலும் இல்லை என்றாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
    இப்படி புனைவான ஒரு கருத்தைக் கூறிவிட்டு \\\இப்படி தான் அறிவியல்
    மூலமாக நாம் ஒன்றை அறிந்துக்கொள்கிறோம்/// என்று துணிந்து
    கூறியிருக்கிறாரே நண்பர் குலாம். எப்படி இது?

    ReplyDelete
    Replies
    1. // அறிவியலால்
      கண்டுபிடிக்கப்படுவதை விட உயர்வானவர் கடவுள்’ என்பது. முதலில் ஒரு
      விசயத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். கடவுள் என்பது
      வெளிப்படுத்தப்பட்ட ஒன்றல்ல, கூறப்பட்ட ஒன்று. வானிலிருந்தோ அல்லது
      பூமிக்கு அப்பாற்பட்ட இடத்திலிருந்தோ வெளிப்பட்டு, அந்த வெளிப்பாடு
      பாதுகாக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட அந்த வெளிப்பாட்டின் வாயிலாக கடவுள்
      என்பது உருவெடுக்கவில்லை. மாறாக கடவுள் என்பதை மனிதர்கள் தான்
      கூறியிருக்கிறார்கள், இந்த நிலையில் அறிவியலால் கண்டுபிடிக்கப்படுவதை விட
      உயர்வானவர் எனும் தகுதி கடவுளுக்கு எப்படி ஏற்பட்டிருக்கும்? கடவுளைக்
      கூறியவர்களின் மற்றுமொரு கூற்று, //

      தெளிவற்ற வாதத்தோடு தொடர்கிறீர்கள்.. இங்கே நான் முன்னிலைப்படுத்துவது அறிவியலை தான். ஆனால் அந்த அறிவியலும் கூட தனது மாற்று திறன் கொண்ட பொருட்களிடத்தில் தன் ஆளுமையே செலுத்த முடியாது ( அதை சென்ற ஆக்கத்தில் சொல்லி இருந்தேன்) அப்படியிருக்க கடவுளை அறிவியலால் வெளிப்படுத்த வேண்டுமென்றால் என்ன சொல்வது...? முதலில் நீங்கள் ஒரு விசயத்தை விளங்க வேண்டும். தம் இருப்பை நம் முன் தோன்றி தானே கடவுள் கூறியிருப்பாரானால் அப்புறம் ஆறாம் அறிவுக்கு என்ன வேலை? கடவுள் குறித்து மனிதன் தான் சொல்ல வேண்டும்.. அப்படி சொல்லப்படும் விசயங்கள் மறுக்க தகுந்த ஒன்றா, பின்பற்றுதலுக்கு தகுந்த ஒன்றா, சாத்தியமிக்கதா என்று ஆராய்ந்து அறிதல் வேண்டும்>>>

      //இந்த நிலையில் அறிவியலால் கண்டுபிடிக்கப்படுவதை விட
      உயர்வானவர் எனும் தகுதி கடவுளுக்கு எப்படி ஏற்பட்டிருக்கும்?//

      இந்த கேள்வியை இன்னும் உள்வாங்கினால் அபத்தம் நிறைந்த இந்த கேள்விக்கு நிகரில்லை எனலாம். அறிவியலால் மட்டுமே கடவுளின் இருப்பை உறுதி செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே கடவுளை நம்புவேன். சொன்னால்... ஒரு சிறிய கற்பனை. இன்னும் ஆயிரம் வருடங்கள் கழித்து அதி நவீன உபகரணங்களால் கடவுளின் இருப்பு இந்த உலகத்திற்கு தெரிய வருகிறது. அனைத்து சேனல்களிலும் நேரடி ஒளிப்பரப்பு. கடவுள் நல் உபதேசங்களை சொல்கிறார். தனக்கு கீழ் படிந்து வாழ சொல்கிறார். அதுவும் ஏற்றுக்கொள்ள தக்க வகையில்.. உடனே மக்களெல்லாம் அன்று முதல் ஒரே கடவுளை வணங்க தொடங்குவார்கள். தவறிழைக்காமல் வாழ்கிறார்கள்.

      மரணத்திற்கு பிறகு...
      அன்றைய காலக்கட்டதில் வாழ்ந்தவர் சொர்க்கம் செல்வார்... இன்று நம் சக காலத்தில் வாழ்ந்த இறைவனை நம்பாதவர் நரகம் செல்வார். சொர்க்கம் செல்ல அவர் சொல்லும் காரணங்களை விடுங்கள்., நரகத்தை தீர்ப்பாக கொண்டவர் என்ன சொல்வார்..? என் சம காலத்தில் உன் இருப்பு எனக்கு தெரியவில்லை அப்படியிருக்க உன்னை வழிப்பட எனக்கு நேரடி ஆதாரம் கிடைக்கவில்லை ஆக எனக்கு நரகம் கொடுப்பது எப்படி நீதமாகும்...? என்பார். நமக்கே தெரிகிறது இது அநீதம் என்று..

      அப்படியிருக்க கடவுள் நீதிமானாக இருந்தால் அறிவியலால் இந்த நேரடி உணர்த்தல் அநீதமாக அல்லவா கூடும்? இது எப்படி அறிவார்ந்த சிந்தனை... எந்த காலத்தில் அறிவியல் நேரடியாய் கடவுளை உணர்த்தினாலும் அதற்கு முன்னுள்ள சமுகம் அநீதம் இழைக்கப்பட்டதை போலாகும்..

      இந்நிலைகள் கூடாதென்றால் எந்த காலத்திற்கும் பொருத்தமான, சமத்துவமிக்கதாக தாக இருக்கவேண்டும். கடவுளின் வெளிப்பாடும், இருப்பும்... இப்போது சொல்லுங்கள் எவருக்கும் அநீதம் இல்லா நிலையில் கடவுளை எப்படி அறிவியல் வெளிகொணர வேண்டும்?


      இந்நிலையில் நீங்கள் மறுக்கும் காரணிகள் என்னவென்பதை தெளிவுப்படுத்துங்கள்..

      //\\நம் கண்களுக்கு
      புலப்படவில்லை என்ற புறக் காரணி தவிர்த்து எந்த ஆதாரபூர்வமான சான்றுகளும்
      கடவுளை மறுக்க இல்லை/// இப்படிக் கூறுவதற்கு நிரம்பவும் அசட்டுத்
      துணிச்சல் வேண்டும். கண்ணெதிரே காணப்படவில்லை என்பதால் மட்டுமல்ல, 1.
      அறிவியல் ரீதியாகவும் 2. வரலாற்றியல் ரீதியாகவும் 3. சமூகவியல்
      ரீதியாகவும் கடவுள் இல்லை என்பதற்கான காரணிகள் முன்
      வைக்கப்பட்டிருக்கின்றன.//

      எங்கே வரலாற்று ரீதியாகவும் சமூக, அறிவியல், கணக்கு இப்படி எங்கல்லாம் கடவுளை மறுக்க அறிவியல் காரணிகளை தந்தீர்கள் பட்டியல் இடுங்கள் சகோ...

      Delete
  25. செங்கொடி
    9:05 PM (14 hours ago)


    இந்த லாம்குவை அப்படியே கடவுளுக்கு ஒட்டுவோம். கடவுள் என்றொருவர் உண்டு,
    அவருக்கு இன்னின்ன வல்லமைகளை உண்டு, அவரால் தான் எல்லாம் நடந்தது என்று
    ஒருவர் கூறினால், லாம்குவைப் போல கடவுள் குறித்த தகவல்களைத் தேடுவோம்.
    எந்தத் தகவலும் எப்படியான குறிப்புகளும் கிடைக்கவில்லை என்றால் என்ன நிலை
    எடுப்பது? நண்பர் குலாமின் முடிவுப்படி அந்த ஒருவர் கூறியதை ஏற்ககலாம்.
    அறிவியலின் வழியில் கிடைத்த சான்றுகளின் படி மட்டுமே தீர்மானிக்க
    முடியும் என்பதால் கடவுள் இல்லை என்று முடிவுக்கு வரலாம். இரண்டில் எது
    சரியான முடிவு என்றால் நண்பர் குலாமின் முடிவை புறந்தள்ளுவதைத் தவிர வேறு
    வழி இருக்கிறதா?

    இதில் இன்னொரு உத்தியும் இருக்கிறது. அமெரிக்கா எனும் நாடு இருக்கிறதா
    இல்லையா? லாம்கு என்றொரு நாடு இருக்கிறதா இல்லையா? என்று நண்பர் குலாம்
    கேள்வி எழுப்பவில்லை. அமெரிக்கா என்றொரு நாடு இல்லை என்றால், லாம்கு
    என்றொரு நாடு இல்லை என்றால் என்றுதான் கேள்வியை எழுப்புகிறார். அப்போது
    தான் அவர் விரும்பும் முடிவை வந்தடைய முடியும். அப்போதும் கூட லாம்கு வை
    கடவுளோடு இணைக்கும் விசயத்தில் அவர் இடறியிருப்பதை ஊன்றிக் கவனித்தால்
    விளங்கிக் கொள்ளலாம். லாம்கு என்றொரு நாடு குறித்த தகவல் உங்களுக்கு
    கிடைக்கவில்லை என்றால் நான் கூறுவதை ஏற்று லாம்கு இல்லை என்று நீங்கள்
    முடிவு செய்ய வேண்டும். அதேபோல் கடவுள் எதிரான தகவல்கள் உங்களுக்கு
    கிடைக்கவில்லை என்பதால் நாங்கள் சொல்வதை ஏற்று கடவுள் இருக்கிறார் என்பதை
    ஒப்புக் கொள்ளுங்கள். இதைத்தான் நண்பர் குலாம் கூற விருப்புகிறார். ஆனால்
    முடிவுகள் அவருக்கு எதிராகவே இருக்கின்றன. ஒரு விசயத்தை தெளிவாக
    முன்வைத்து விடலாம். இப்பேரண்டத்தில் இருக்கும் அனைத்தையும் ஆய்வதற்கும்
    அறிவதற்கும் இருக்கும் ஒரே அளவுகோல் அறிவியல் தான். அறிவியலை விலக்கி
    வைத்துவிட்டு எதையும் அறிந்துவிட முடியாது.

    அடுத்து குலாம் கடவுள் பற்றி கூறப்படுவது வரட்டுத் தத்துவமல்ல என்கிறார்.
    எப்படி? \\\கடவுள் உண்டென்பவர்கள் கடவுளை புறக்கண்களால் பார்க்க
    முடியாது, அவரது ஆளுமை எல்லாவற்றிலும் மிகைத்திருக்கிறது. மாறாக எந்த
    ஒன்றீன் ஆளுமையும் அவர் / அதன் மீது செலுத்த முடியாது. என்று
    கூறுகிறார்கள். இது தற்காலத்தில் கூறப்பட்ட வறட்டு தத்துவமல்ல.. இந்த
    மனித சமூகத்திற்கு கடவுள் எப்போது அறிமுகம் செய்து வைப்பட்டாரோ
    அன்றிலிருந்து முன்மொழியப்பட்ட வார்த்தை இது. இதை மறுப்பதாக இருந்தால்
    இதற்கு மாற்றமான ஆதார சான்றுகள் தரவேண்டும்/// எந்த நிரூபணமும் தராமல்
    தாங்கள் கூறுவதை அப்படியே ஏற்க வேண்டும் என்று அடம் பிடிப்பதே
    ஆத்திகர்களின் வேலையாகி விட்டது. கடவுள் அறிவிலுக்கு அகப்பட மாட்டார்,
    அப்படி வரமாட்டார், இப்படி தெரியமாட்டார் என்று கூறி அதையெல்லாம்
    அப்படியே ஏற்றுக் கொண்டு கடவுள் இல்லையென்று நிரூபி என்கிறார்கள்.
    எப்படியுமே தெரியமாட்டார் எதிலுமே அகப்படமாட்டார் என்றால் அவர் உறுதியாக
    இருக்கிறார் என்று உங்களுக்கு எப்படி தெரிந்தது?

    \\\கடவுளின் நிலை குறித்து அறிவியல் தொடக்கத்திற்கு முன்னரே தெளிவாய்
    பிரகடனப்படுத்திருக்கும் போது/// இதுவும் குலாமின் கூற்று தான்,
    கலப்படமில்லாத சுத்தமான பொய்யான கூற்று. அறிவியலின் தொடக்கத்துற்கு
    முன்னர் கடவுள் எனும் ஒன்று இருக்கிறது என மனிதனால் உணரப் பட்டிருந்ததா?
    என்று மனிதன் நெருப்பை கண்டறிந்தானோ அன்றே அறிவியல் யுகம் தொடங்கி
    விட்டது. ஆனால் மனிதனின் வாழ்வில் அதற்கும் வெகு காலத்திற்குப் பின்பே
    கடவுள் அறிமுகமாகிறார். இது மதவாதிகளுக்கு வழக்கம் தான் அவர்களின்
    உளக்கிடக்கைகளை பொது உண்மைகளைப் போல் ‘ஜஸ்ட் லைக் தட்’ கூறிக் கொண்டே
    செல்வது. நண்பர் குலாம் அவரது கூற்றில் உண்மையுள்ளவராக இருந்தால் இதற்கு
    சான்றுகள் தரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. சரி லாம்குக்கு மீண்டும் வருவோம்!

      இங்கே நான் நேர்மறையாக சொன்னது எனது சந்தர்ப்ப வாதத்திற்காக அல்ல.. இதே நிலைக்கு எதிராக கேள்விகளை மாற்றினாலும் அப்போதும் அதே பதில் தான்.. இதில் எந்த யுக்தி மறைந்து இருக்கிறதென்று எனக்கு தெரியவில்லை,

      இங்கே நான் மையப்படுத்தியது நமக்கு முழுதாய் கிடைத்த வரவிலக்கணம் படி மட்டுமே நாம் ஒன்றை உண்மைப்படுத்த முடியும். மாறாக அதுவும் அந்த பொருளுக்கோ, செயலுக்கோ உரிய இலக்கணமாக அமைந்தால் மட்டுமே...

      மாறாக உண்மையான வேறு தகவல்களை தந்தாலும் கூட அந்த செயலுக்குரிய இலக்கணம் ஆகாது. அதை தான் மிக தெளிவாக சொல்லியிருப்பதாக நினைக்கிறேன்.

      இப்போது கடவுளுக்கெதிரான சான்றை நிருவ வேண்டுமென்றால் அதற்கான ஆதார குறீயிடுகள் என்னவென்று கேட்கிறேன். கொடுக்கும் பதில்களோடு அறிவியலை ஒப்பு நோக்குங்கள் என்கிறேன். இந்த கருத்தில் புறந்தள்ள என்ன இருக்கிறது என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை..!

      // அதேபோல் கடவுள் எதிரான தகவல்கள் உங்களுக்கு
      கிடைக்கவில்லை என்பதால் நாங்கள் சொல்வதை ஏற்று கடவுள் இருக்கிறார் என்பதை
      ஒப்புக் கொள்ளுங்கள். //

      இது தானே லாஜிக்! காரண காரியத்தோடு ஒன்றை அலசி உண்மைப்படுத்துதல் மட்டுமே அறிவியல் என்கிறீர்கள். அதே அறிவியலை கொண்டு கடவுளை மறுத்தீர்களா என்றால் ., மறுக்கும் பொருளின் இலக்கணத்தை குறித்து எதுவும் சொல்லாத அறிவியலில் பொதுப்படுத்தி மறுக்க முடிந்த பொருளின் இலக்கணத்தோடு ஒப்பீடு செய்கிறீர்கள்>>> இது எப்படி அறிவியலின் உண்மை வெளிப்பாடு ஆகும்..?

      // இப்பேரண்டத்தில் இருக்கும் அனைத்தையும் ஆய்வதற்கும் அறிவதற்கும் இருக்கும் ஒரே அளவுகோல் அறிவியல் தான். அறிவியலை விலக்கி
      வைத்துவிட்டு எதையும் அறிந்துவிட முடியாது. //

      சரிதான் ...ஆனால் இப்பேரண்டத்தை கடந்து செயல்படும் ஒன்றை எதை வைத்து அறிவீர்கள் சகோ... ? இது தானே என் கேள்வி...

      //ஆனால் மனிதனின் வாழ்வில் அதற்கும் வெகு காலத்திற்குப் பின்பே
      கடவுள் அறிமுகமாகிறார். இது மதவாதிகளுக்கு வழக்கம் தான் அவர்களின்
      உளக்கிடக்கைகளை பொது உண்மைகளைப் போல் ‘ஜஸ்ட் லைக் தட்’ கூறிக் கொண்டே
      செல்வது. நண்பர் குலாம் அவரது கூற்றில் உண்மையுள்ளவராக இருந்தால் இதற்கு
      சான்றுகள் தரட்டும்.//

      சரி குலாம் பொய்யராக இருக்கட்டும்... குரங்கிலிருந்து >> நியண்டார்தால் >> மனிதன் பரிணாம வளர்ச்சி (அதை நீங்கள் நம்புகிறீர்களா) பெற்ற காலத்திலே இருந்து கடவுள் என்ற ஒன்று இல்லை.. என்பதற்கு ஆதார சான்றுகள் தாருங்கள் ஐயா...

      Delete
  26. செங்கொடி
    9:05 PM (14 hours ago)


    இனி நண்பர் குலாமின் கேள்விகளின் பக்கம் முகம் திருப்பலாம். பொதுவாக
    மதவாதிகள் அன்றிலிருந்து இன்றுவரை கடவுள் இருக்கிறார் என்பதற்கு நிரூபணம்
    என்ன? எனும் கேள்வியால் துளைக்கப்பட்டே வந்திருக்கிறார்கள். ஆனால் இது
    வரை யாரும் பதில் கூறியதில்லை. அப்படியான பதில் கூறும் முயற்சிகள்
    அனைத்தையும் எடுத்துப் பார்த்தால் ஒது ஒரே விதமாக தோற்றமளிப்பதைக்
    காணலாம். அவை அனைத்தும் கேள்விகளின் விளக்கங்களாகவே இருக்கும். ஒருபோதும்
    அவை பதில்களின் தொகுப்பாக இருந்ததில்லை. தெளிவாகச் சொன்னால் எதிர்க்
    கேள்விகள் கேட்பதே கடவுளுக்கான நிரூபணம். அந்த வகையில் தான் குலாமின்
    இந்தக் கேள்விகளும் அடங்கும். பழைய பாட்டையில் பயணிக்கும் பசலிக்
    கேள்விகள்.

    1. பெருவெடிப்பு ஏன் நிகழ வேண்டும்? பெருவெடிப்பு உறுதியாக நிகழ்ந்தது
    என்று எந்த அறிவியலாளனும் கூறவில்லை. அது ஒரு அறிவியல் யூகம். அது எப்படி
    நிகந்திருக்கக் கூடும் என ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். படிப்படியாக
    தொடர்ந்து பதிலளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது ஏன் நிகழ
    வேண்டும். அது ஒரு தற்செயல் நிகழ்சி. அண்டத்தில் நிகழ்ந்து கொண்டிருப்பவை
    அனைத்தும் தற்செயல் நிகழ்ச்சிகளே. எதுவும் திட்டமிட்ட நிகழ்ச்சிகளல்ல.
    ஒரு குவளைத் தேனீர் தரையில் கொட்டினால் என்ன வடிவத்தில் பரவும் என்பது
    எப்படி தற்செயலானதோ அது போன்றே பெருவெடிப்பும் தற்செயல் நிகழ்ச்சி தான்.
    காட்டாக ஒரு கோள் ஏன் கோள வடிவில் இருக்கிறது? கோள வடிவில் இருப்பதால்
    தான் அது கோள். அவ்வாறின்றி வேறு ஏதேனும் ஒரு வடிவத்தில் இருந்தால்,
    அப்போது வேறு ஏதாவது ஒரு பெயரில் அழைத்துக் கொண்டிருப்போம். ஏன் இந்த
    வடிவில் இருக்கிறது கோள வடிவில் இருந்திருக்கக் கூடாது? என்று கேள்வி
    கேட்ட்க் கொண்டிருப்போம். அதேபோல் தான் பெருவெடிப்பு ஏன் நிகழ்ந்தது
    என்பதும். பெருவெடிப்பு நிகழ்ந்ததால் இந்தப் பேரண்டம் உருவானது எனும்
    யூகம் வேறு விதமாய் இருந்திருக்கும், அவ்வளவு தான். ஏனென்றால் ஏன்
    நிகழ்ந்தது? ஏன் இப்படி இருக்கிறது? எனபன போன்ற ஆத்திகக் கேள்விகளெல்லாம்
    அறிவியலிலிருந்தோ தேடலிலிருந்தோ எழுந்ததல்ல. அது ஆன்மீகவாதிகளின்
    சந்தர்ப்பவாதத்திலிருந்து எழுந்தது. அவ்வாறன்றி பெருவெடிப்பு
    நிகழ்ந்ததற்கு திட்டமிடப்பட்ட காரணம் உண்டு என நண்பர் குலாம் நம்பினால்,
    அந்தக் காரணத்தை அவர் விளக்கட்டும். பின்னர் அது குறித்து
    பரிசீலிக்கலாம்.

    2. கோள்கள் சரியாக சுற்றுகிறதே எப்படி? இது அறியாமையினால் எழுந்த கேள்வி.
    வான் வெளியில் கணந்தோறும் எத்தனையோ ஒழுங்கீனங்கள், மோதல்கள் நிகழ்ந்து
    கொண்டு தான் இருக்கின்றன. பிறிதொரு கோளால், அஸ்ட்ராய்டால், விண்கற்களால்,
    எறிகற்களால், வால் நட்சத்திரங்களால் தாக்குதலுக்கு உள்ளாகாத பருப்பொருள்
    என்று விண்ணில் எதுவுமில்லை. சந்திரனின் மேற்பரப்பு சிறுவர்களின் பம்பரம்
    போல் அத்தனை காயங்களுடன் இருப்பது ஏன்? செவ்வாயின் ஒருபகுதி சற்று
    வீக்கத்துடன் காணப்படுவது குறுங்கோளின் மோதலால் தான் எனக்
    கண்டறிந்திருக்கிறார்களே. சூரியனின் பாதைக்குள் ஷூமேக்கர் லெவி வால்
    நட்சத்திரம் பாதை மாறி வந்து போகவில்லையா? ஏன் பூமியில் விண்கல் வந்து
    மோதிய பள்ளம் சைபீரியாவில் இன்னும் இருக்கிறதே. மரியானா ட்ரன்ச்
    பூமியிலிருந்து பிய்ந்து போனது என்று தானே அறிவியலாளர்கள்
    கூறியிருக்கிறார்கள். அவ்வளவு ஏன், பூமியே கூட ஒருமுறை தன் துருவத்தை தலை
    கீழாக மாற்றியிருக்கிறது. இந்த ஒழுங்கீனங்களும் மோதல்களும் ஏன்
    நிகழ்கின்றன? மதவாதிகள் எப்போதுமே தங்களுக்கு சாதகமான அம்சங்களை மட்டுமே
    எடுத்துக் கொண்டு புளகமடைவார்கள். இதுவும் அதுதான்.

    3. உயிர்கள் வாழத் தகுதியற்ற பல கோள்கள் விண்ணில் இருக்கின்றனவே, இது
    ஏன்? உண்மையில் இது ஆத்திகர்களை நோக்கி நாத்திகர்கள் கேட்க வேண்டிய
    கேள்வி. இப்பேரண்டம் ஏதோ ஒரு ஆற்றலால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது
    என்பது தான் ஆத்திகர்களின் நிலை. அப்படியென்றால் இந்தக் கேள்விக்கு பதில்
    கூறும் பொறுப்பும் ஆத்திகர்களுக்கே, அதாவது நண்பர் குலாமுக்கே உண்டு.

    ReplyDelete
    Replies
    1. மிக நேர்த்தியாய் சாமாளித்துக்கொண்ட உங்கள் பதில்கள் இந்த இடத்தில் தான் பல்லிளித்து விட்டன சகோ...

      1.பெரு வெடிப்பு ஏன் நிகழ வேண்டுமென்று கேட்டால்...? தற்செயல்.. எப்படி சகோ எனது ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது ஆசிரியரிடம் நான் கேட்ட இதே கேள்விக்கு அவர் சொன்ன அதே பதில் இன்று விண்ணை முட்டும் விஞ்ஞானம் வளர்ந்த காலத்திலுமா...?

      தற்செயல் என்று ஒன்று அறிவியல் இல்லவே இல்லை,
      ஆனால் தற்செயல் என்பது எந்த வித திட்டமிடலோ, முன்னேற்பாடோ ஏதுமின்றி நடக்க சாத்தியமில்லா சூழ்நிலையில் மிக நேர்த்தியாக நடைபெறும் சம்பவம்... எதுவும் காரண காரியத்தோடு நடைபெற்றால் மட்டுமே அவை அறிவியலாக்கப்படுகின்றன.. அவை ஏற்றும் கொள்ளப்படுகின்றன. அப்படியிருக்க தற்செயல் என்ற ஒன்றை ஏற்றால் அது எப்படி அறிவுப்பூர்வமான செய்கையாக ஏற்றுக்கொள்ள முடியும்...

      அதுமட்டுமில்லை //ஒரு குவளைத் தேனீர் தரையில் கொட்டினால் // அது கூட ஒரு முறை தெரித்த விதத்தில் , விழுந்த வடிவில் நடக்க இன்னொரு முறை சாத்தியமில்லை. அப்படியிருக்க இன்றும் தன் வரையறைக்குள் சுழலும் சந்திரன் , சூரியன் வான்வெளி கோளங்கள் எப்படி திட்டமிட்டு தம் தற்செயலை தொடர்கிறது,,,? உண்மையாகவே முரண் நிலையில் உடன்படும் ஒர் அறிவியலை குறைபாடு என்று சொல்லாமல் என்ன பெயர் சொல்லி அழைப்பது சகோ.?

      அடுத்து வடிவத்தை குறித்து விவரிக்க தொடங்கி விட்டீர்கள். இங்கே யாரும் அதன் வடிவத்தை குறித்து கேட்கவில்லை. ஏனெனில் இதைப்போன்ற கேள்விகள் முடிவடியாதது... அதன் ஆளுகை அல்லது செய்கை குறித்த கேள்விகள்.

      பார்த்தீர்களா... ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.. உங்களின் இருக்கலாம்.. கலாம்.. லாம்... போன்ற சந்தர்ப்ப வாத விளக்கங்களுக்கு ஆத்திகர் மேல் பழி போடாதீர்கள்

      2. எது அறியாமையில் விளைந்த கேள்வி..? கேள்வியின் உட்சாரத்தை தயவு செய்து உள்வாங்கி பேசுங்கள் சகோ...
      நீங்கள் சொல்லும் எல்லா ஒழுங்கீனங்களும் , மோதல்களும், தாக்குதல்களும் விண்ணில் நடந்தாகவே இருக்கட்டும்... இதை நடத்தியது யார்... அது தானே இங்கே கேள்வி...!
      இதை செய்தது மனிதன் கண்டறிந்த அறிவியலா,, மனிதன் கண்டறிந்த அறிவியல் யுக்திகளாக இவற்றின் மீதான் தாக்குதல்களையும், மோதல்களையும் செய்தது..?

      இல்லை காரணம் விளக்கப்பட முடியா உங்களின் தற்செயலா,,,?

      நீங்கள் நடந்து முடிந்ததற்கு காரணம் சொல்கிறீர்கள்,,? ஆனால் நான் நடத்தியது யார் ? அதுவும் ஏன் என கேட்கிறேன்..?

      3. என்ன லாகவ பேச்சு... நான் கேட்ட கேள்வி எனக்கேவா..? சகோ கடவுள் மனிதனுக்காக மட்டும் இப்பிரபஞ்சத்தை, விண்ணை, மண்ணை பல கோடி உயிரினங்களை, பால்வெளிகளை படைக்கவில்லை... இப்போது போதுமா...? இந்த கேள்விக்கான விடை

      சரி நீங்கள் சொல்லுங்கள் அவசியமற்ற எந்த செய்கையும் அறிவியலில் இல்லையெனும் போது ஏனைய கோள்களின் படைப்பு எதற்காக...?

      Delete
  27. செங்கொடி
    9:05 PM (14 hours ago)

    4. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து நிகழப் போகும் கிரணங்களை இப்போதே
    துல்லியமாக கணித்திருக்கிறார்களா? இது எள்ளல், அதுவும் தன் கருத்துக்கு
    சாதகமான பயன் கருதிய எள்ளல். போகட்டும். குழந்தை பிறக்கும் நேரத்தை
    மருத்துவ அறிவியல் இயற்கையாகவும், செயற்கையாகவும் வெகு தெளிவாக
    கணிக்கிறது. தொடக்கத்தில் மனிதன் மாதக்க்கணக்காக, பின் நாட்கணக்காக,
    தற்போது மணிக்கணக்காகக் கூட துல்லியமாக கூற முடிந்திருக்கிறது.
    பெரும்பாலான பிரசவங்களில் நிமிடக்கணக்கில் கூட இந்த துல்லியம்
    இருப்பதுண்டு. அறிவியல் இதை சாத்தியமாக்கி இருப்பது அனைவரும் அறிந்தது
    தான். மற்றொருபுறம் வினாடி துல்லியத்தில் தங்கள் குழந்தை பிறக்க வேண்டும்
    என்பதற்காக சிசேரியன் செய்பவர்களும் இருக்கிறார்கள். இது அறிவியலின்
    வளர்ச்சி. ஆனால் இந்தக் கேள்வியின் சாரம் இருக்கிறதே அது ஏற்கனவே கூறியது
    போல் ஆன்மீகவாதிகளின் சந்தர்ப்பவாதத்தின் வளர்ச்சி. நூறு ஆண்டுகளுக்கு
    முன்னர் குழந்தை பிறக்கும் நாளை சரியாக கணித்துக் கூற முடியுமா? என்று
    கேட்டார்கள், இன்று வினாடி துல்லியமாக கூற முடியுமா? என்று
    கேட்கிறார்கள், நாளை மைக்ரோ வினாடி துல்லியமாக கூற முடியுமா? என்று
    கேட்பார்கள், அதனிலும் பிறகு நானோ வினாடி துல்லியமாக குழந்தை பிறப்பதை
    கணித்துக் கூற முடியாத அறிவியல் என்ன அறிவியல் என்பார்கள்.இதில் நாம்
    புரிந்து கொள்ள வேண்டியது கேள்வியை அல்ல, கேள்வியின் நோக்கத்தை.

    5. மரணத்தை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை? இது அறிவுபூர்வமான கேள்வியா
    அறிவுக்கு முரணான கேள்வியா? மனிதன் ஒரு பொருள். எல்லாப் பொருளுக்கும்
    மூன்று பரிமாணங்கள் இருப்பதைப் போல் திட்டவட்டமாக நான்காவது பரிணாமமாகிய
    காலமும் இருக்கிறது. காலத்தின் ஒரு புள்ளியில் தொடங்கும் ஒரு பொருள்
    மற்றொரு புள்ளியில் முடிந்தே தீர வேண்டும். இது அறிவியல் விதி. இதற்கு
    மாறாக ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை என்று கேட்டால் அதில்
    அறிவியலுக்கு கொஞ்சமும் இடமில்லை. அறிவுபூர்வமான கேள்வியாக நினைத்து
    கேட்கப்பட்டிருந்தாலும் கூட அதில் அறிவியல் இல்லை. ஆனால் மரணத்தை மனிதன்
    வெற்றிகரமாக தள்ளிப் போட்டிருக்கிறான். ஆதிகாலத்தில் மனிதனின் அதிகபட்ச
    வாழ்நாளே முப்பது முதல் முப்பத்தைந்து ஆண்டுகள் தான். தெளிவாகச் சொன்னால்
    முப்பதைக் கடப்பவர்கள் வெகு அரிது. ஆனால் இன்றோ எழுபதைக் கடந்து
    இருக்கிறது. தெளிவாகச் சொன்னால் கடந்த மூன்று லட்சம் ஆண்டுகளில் மனிதன்
    தன் வாழ்நாளை இரண்டு மடங்குக்கும் அதிகமாக மாற்றிக் காட்டியிருக்கிறான்.
    இதை அவன் ஏதோ ஒரு ஆற்றலின் துணை பலத்தால் அல்ல, தன் சொந்தப் பலத்தில்
    அடைந்திருக்கிறான்.

    கடைசி இரண்டு கேள்விகளிலும் பிறக்கும் மரணிக்கும் நேரம் குறித்து கேள்வி
    எழுப்பப்பட்டிருக்கிறது. இரண்டுமே கணிப்புகளை கோருகின்றன. கணிப்பு
    என்றாலே அது எதிர்காலம் தொடர்பானது. எதிர்காலம் குறித்து ஒரு தகவலை
    வெளியிட்டால் அது முழுமையாக துல்லியமாக இருப்பதற்கு வாய்ப்பில்ல்லை.
    ஏனென்றால் அவை கணிப்புகள். அப்படி கணிக்கப்படுபவைகளும் பெரும்பாலும்
    வெற்றியடைகின்றன என்பதிலிருந்து அறிவியலின் ஆளுமையை புரிந்து கொள்ளலாம்.
    மாறாக இப்படியான கணிப்புகளுக்கு அவசியமின்றி ஏதோ ஒரு ஆற்றலுக்கு
    துல்லியமாக இவைகள் தெரியும் என்றால் கூறட்டும்; மனிதனின் அறிவியல்
    கணிப்பு துல்லியமாக இருக்கிறதா? அல்லது அந்த ஏதோ ஒன்றின் அறிவிப்பு
    துல்லியமாக இருக்கிறதா? என்று பார்த்துவிடலாம்.

    ReplyDelete
    Replies
    1. 4. இதிலும் அதே சந்தர்ப்ப வாத பதில்கள்... சகோ இன்னும் எளிதாக கேட்கிறேன். கடவுளை ஏற்போர் கேட்கும் கேள்விகளுக்கு துல்லியமான, நிலையான மறுப்புகளை கொண்ட தெளிவான பதில்களால் மட்டுமே நாத்திகத்தை நிலை நிறுத்திக்கொள்ள முடியும்... நேற்று, இன்று மட்டுமல்ல... நாளை மைக்ரோ வினாடிக்கு கீழாகவும் அளவைகள் அறியப்பட்டால் அந்த நிலையில் கூட கேட்கும் கேள்விகளுக்கு உங்களின் பதில்கள் தெளிவாய் வரையறை செய்யப்படவேண்டும்.. அதில்லாமல் பெரும்பாலான வேளையில் நிகழும் சாத்தியக்கூற்றை அடிப்படையாக வைத்து பொதுப்படுத்த கூடாது,

      ஏனெனில் என்னால் கூட சொல்ல முடியும் இன்னும் மூன்று வினாடிகளில் மிக சரியாக ஒர் ஆண் குழந்தை பிறக்க இருக்கிறது என்று.. எழுதி முடிப்பதற்குள் பிறந்தே இருக்கும்... இது எப்படி பொதுமைப்படுத்தப்பட்ட வாதமாகும்..

      சகோ இதுக்குறித்தும் நான் ஏற்கனவே ஒரு ஆக்கத்தில் சொல்லி இருக்கிறேன். நீங்களோ அல்லது நானோ ஆயிரம் முறை கூட ஒரு நாணயத்தை சுண்டி அது விழும் பக்கத்தை நேர்த்தியாக சொல்ல முடியும் என்று..
      ஆனால் இங்கே கேள்வி... 99.9 சதவீகிதம் கூட அல்ல முற்றிலும் 100 % துல்லியத்தை குறித்து >>> புரிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

      5. இது அறிவிப்பூர்வமான கேள்வியாக நினைத்து தான் கேட்டேன்.. பிறக்கும் எல்லா குழந்தைகளின் சான்றிதழிலும் அப்படியே மரணிக்கும் தேதியும் குறிப்பிட்டு கொடுத்தால் சான்ஸே... இல்ல,, கடவுள் குறித்து விவாதிக்க வேண்டிய வாய்ப்பே இல்லை ஏனெனில் கடவுளின் இருப்பே அவசியமில்லை இங்கே.. அறிவியலால் உறுதிபட சொல்ல எது சாத்தியமில்லையோ அங்கே இன்னொன்றீன் தலையீடு இருக்கிறதென்பதை அறிவார்ந்தவர்கள் ஏற்றுதான் ஆக வேண்டும் சகோ.

      //மாறாக இப்படியான கணிப்புகளுக்கு அவசியமின்றி ஏதோ ஒரு ஆற்றலுக்கு
      துல்லியமாக இவைகள் தெரியும் என்றால் கூறட்டும்; மனிதனின் அறிவியல்
      கணிப்பு துல்லியமாக இருக்கிறதா? அல்லது அந்த ஏதோ ஒன்றின் அறிவிப்பு
      துல்லியமாக இருக்கிறதா? என்று பார்த்துவிடலாம்.//

      உங்களுக்கே முரண்பாடான வார்த்தைகளை இங்கே முன்மொழிகிறீர்கள்... மனித கணிப்புகள் முழுவதும் நேர்த்தியில்லாதவை என தான் உங்களின் முன்னர் பத்தியில் முழுமையற்ற பதிலாய் இருந்தது...

      Delete
  28. செங்கொடி
    9:05 PM (14 hours ago)

    சரி மேற்கண்ட கேள்விகளை நண்பர் குலாம் ஏன் எழுப்பியிருக்கிறார்.
    அறிவியலெல்லாம் ஒன்றுமில்லை, ஆண்டவனே எல்லாம் என்று காட்டுவதற்காக.
    மீண்டும் ஒருமுறை சுருக்கமாக அவற்றை பார்த்து விடலாம். கடவுள் உண்டா
    இல்லையா எனும் கேள்விக்கான பதிலை நாம் அறிவியலிலும், பேரண்டப் பருப்
    பொருட்களிலும் அவற்றுக்கிடையேயான இயங்கு விசைகளிலும் தேடிக் கொண்டிருக்க
    வேண்டிய அவசியமில்லை. கடவுள் உண்டா இல்லையா எனும் கேள்வியின் சாராம்சம்
    கடவுளைச் சொன்னவன் கூறியது உண்மையா பொய்யா என்பது தான். இந்தக்
    கேள்வியின் வலியை எதிர்கொள்ள முடியாமல் தான் அதை அறிவியலுடன் முடிச்சுப்
    போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    சரி, கடவுள் என்பது அறிவியலுக்குள் சிக்காது என்பதை வாதத்துக்காக
    எடுத்துக் கொள்வோம், கடவுள் என்பது வெற்று நம்பிக்கையா? உறுதியான இருப்பா
    என்பதை உறுதி செய்ய கீழே சில கேள்விகளை தருகிறேன், பதில் வந்த பின்
    தொடர்ந்து பரிசீலிக்கலாம்.

    1. கடவுள் ஒரு சுயம்பு என்பதை வாதத்துக்காக கொள்வோம். பேரண்டம் உட்பட
    அனைத்தையும் அவர் படைப்பதற்கு முன் எங்கு இருந்தார். அதாவது அவர் முதலா?
    அவர் இருந்த இடம் முதலா?

    2. கடவுள் எல்லா ஆற்றல்களையும் கொண்டவர் என்பதை ஒப்புக்கு ஒப்புக்
    கொள்வோம், அவரின் பிற படைப்பினங்களான, வானவர்கள், சைத்தான்கள் உள்ளிட்ட
    வேறு சிலவைகளையும் தடம் பிடிக்க முடியவில்லையே ஏன்?

    3. கடவுளை அளக்க முடியாது, ஆனால் கடவுள் தன் உதவியாளர்கள் மூலம் இடையறாது
    இயங்கிக் கொண்டிருக்கிறார் அல்லவா? அந்த வானவர்கள் இயங்குவதற்கு என்ன
    விசையை பயன்படுத்துகிறார்கள்? அதையும் ஏன் அளக்க முடியவில்லை.

    4. மழையைக் கூட பிரார்த்தித்து கேட்க முடியும் எனும் போது இந்த உலகில்
    சோதித்தறிய முடியும்படியான, மனிதர்கள் கோரிக்கையை இறைவன்
    நிறைவேற்றியதற்கான சான்று ஏதாவது கூற முடியுமா?

    அறிவியலின் நோக்கத்தையும் பயன்பாட்டையும் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ற
    முடிவை வந்தடைய வேண்டும் என்பதற்காக வளைப்பதை விட, நேரிய முறையில்
    பாரிசீலித்துப் பார்க்கலாம். அப்படியான பரிசீலனைக்கு நண்பர் குலாமை
    அழைக்கிறேன்,

    ReplyDelete
  29. //கடவுளைச் சொன்னவன் கூறியது உண்மையா பொய்யா என்பது தான். இந்தக்
    கேள்வியின் வலியை எதிர்கொள்ள முடியாமல் தான் அதை அறிவியலுடன் முடிச்சுப்
    போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.//

    இறுதியாக இப்படி முடிவெடுத்து இருக்கீறிர்கள். மிக தெளிவாக கடவுள் குறித்து முன்மொழியும் கொள்கை ரீதியான கோட்பாடுகளை தெளிவாக ஆக்கத்தில் சொல்லி இருக்கிறென். அதை அறிவியலோடு பொருத்தவும் முடியாது என்று..

    அறிவுப்பூர்வமாய் சில கேள்விகளை நீங்கள் மேற்கோள்களில் காட்டியிருப்பது உங்களின் தவறான இஸ்லாமிய புரிதலுக்கு மற்றொருமொரு சான்று,,

    1. கடவுள் என்பவர் இப்பேரண்டத்தில் மட்டுமே இருக்கப்படவேண்டும் என்ற வரையறை உங்களுக்கு யார் தந்தது..? காலத்திற்கும் வெளிக்கும் அப்பாற்ப்பட்ட ஒன்றின் இருப்பு பிறிதொன்றை சார்ந்திருக்க வேண்டும் என்று இருந்தால் அதற்கு பெயர் கடவுளல்ல..!

    2. தயவு செய்து குர்-ஆனை படியுங்கள் சகோ!

    3. முதலில் வானவர்கள் குறித்த மூலங்கள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா... முடிந்தால் இந்த ஆக்கத்தை பாருங்கள் சகோ
    http://www.naanmuslim.com/2010/07/blog-post_08.html

    4. யாரிடமும் மழையை பிரார்த்திக்காமல் நீங்களே தென் மாவட்டங்களில் ஒரு வாரமும், வட மாநிலங்களில் மாதத்தில் ஒரு மாசமும், கேரளா, கர்நாடகா போன்ற கீழ்நிலை மாநிலங்களில் மாதத்திற்கு மூன்று முறையும் இனி மழை பொழியும் தேதிகளை போட்டு ஒரு நோட்டீஸ் வெளியிட்டு இறைவன் பொய் என்பதை நிருபியுங்களேன்....

    //அறிவியலின் நோக்கத்தையும் பயன்பாட்டையும் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ற முடிவை வந்தடைய வேண்டும் என்பதற்காக வளைப்பதை விட, நேரிய முறையில்
    பாரிசீலித்துப் பார்க்கலாம். //

    நல்ல வாக்கியம்! இதை நீங்களும் கவனத்தில் வைத்து எதிர்வரும் விதாங்களில் தொடர வாழ்த்துகிறேன்..

    மறுப்பதற்கல்ல.. எதையும் ஏற்பதற்கே வேண்டும் பகுத்தறிவு!

    உங்கள் சகோதரன்
    குலாம்.

    ReplyDelete
  30. 1. முற்குறிப்பு: நண்பர் குலாம், என்னுடைய பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இருந்தால் தான் முழுமையாக புரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும் என எண்ணுகிறேன். எனவே உங்களின் விளக்கங்களை என்னுடைய பின்னூட்டம் முடியும் இடத்திலிருந்து தொடங்குங்கள். இடையிடையே இடைச் செருகல் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    கடவுள்: வெற்று நம்பிக்கையா? உறுதியான இருப்பா? இந்த மைய இலக்கில் நண்பர் குலாமின் வாதங்கள் ஒன்றவில்லை எனக் கருதுகிறேன். கடவுள் உறுதியாக இருக்கிறார் எனும் கோணத்திலிருந்துதான் தன்னுடைய வாதங்களை குலாம் வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் நான் எழுப்பியிருந்த ஒரு விசயத்தை கவனமாக தவிர்த்துவிட்டு தன் கேள்விகளுக்கான விளக்கங்களைத் தொடருகிறார். எந்த அறிவியலாலும் கடவுளை அளக்க முடியாது. அவர் எதிலும் அகப்பட மாட்டார் என்றால். கடவுள் உறுதியாக இருக்கிறார் என்று எந்த அடிப்படையில் நீங்கள் ஏற்கிறீர்கள்? இதற்கு நண்பர் குலாம் கூறப்போகும் பதிலிருந்து தான், அவர் கூறிக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கான விளக்கங்களை பகுத்துப் பார்க்க வேண்டும். எனவே, \\\கடவுள் அறிவிலுக்கு அகப்பட மாட்டார், அப்படி வரமாட்டார், இப்படி தெரியமாட்டார் என்று கூறி அதையெல்லாம் அப்படியே ஏற்றுக் கொண்டு கடவுள் இல்லையென்று நிரூபி என்கிறார்கள். எப்படியுமே தெரியமாட்டார் எதிலுமே அகப்படமாட்டார் என்றால் அவர் உறுதியாக இருக்கிறார் என்று உங்களுக்கு எப்படி தெரிந்தது?/// இதற்கான நண்பர் குலாமின் பதில் மிகுந்த அவசியமான ஒன்றாக இருக்கிறது.

    அறிவியல் குறைபாடுடையது என நண்பர் குலாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஏன் அவ்வாறு கூறுகிறாரென்றால் அறிவியல் குறைபாடாக இருப்பதினால் கடவுளோடு ஒப்பிட்டு, உரசிப்பார்க்கும் தகுதி அறிவியலுக்கு கிடையாது. இதைத்தான் நான் ஒரு எளிமையான நடைமுறை கேள்வியால் எதிர்கொண்டிருந்தேன். கடவுளை உறுதிப்படுத்த அறிவியல் உதவாதுஎன்று கூறும் நண்பர் குலாம் அதே குறைபாடுடைய அறிவியலைக் கொண்டு தான் தன் மெய் வாழ்வில் எல்லா விசயங்களையும் உறுதிப்படுத்துகிறார். அவ்வாறன்றி அறிவியலை விலக்கி வைத்துவிட்டு உறுதிப்படுத்திய விசயங்கள் இருந்தால் பட்டியலிடுமாறு கேட்டிருந்தேன். இதற்கு நேரிய முறையில் பதிலளிக்க முடியாது என்பது ஒருபுறமிருக்கட்டும். என்ன பதிலளித்திருக்கிறார்? \\\தவறான ஒப்பீடு . ஏனெனில் இங்கே நான் உறுதிப்படுத்துதலை சொல்லவில்லை... முழுமைப்படுத்தி இருக்கிறதா என கேட்கிறேன்.. /// இது நண்பர் குலாம் முதலில் கூறியது, \\\எந்த ஒன்றையும் நாம் உறுதிப்படுத்திக்கொள்ள அறிவியலை மட்டுமே துணைக்கழைத்தால் அறிவியல் அனைத்தையும் இவ்வுலகிற்கு முழுமைப்படுத்தி சொல்லி இருக்க வேண்டும்/// அதாவது அறிவியல் அனைத்தையுமே முழுமைப்படுத்தி இருந்தால் மட்டுமே எந்த ஒன்றையும் நாம் உறுதிப்படுத்திக் கொள்ள அறிவியலை துணைக்கழைக்க முடியும். தெளிவாகச் சொன்னால் முழுமைப்படுத்தப்படாத அறிவியலுக்கு எதையும் உறுதிப்படுத்தும் தகுதி இல்லை. அதனால் தான் நான் அப்படி தகுதியில்லாத அறிவியலை விலக்கி வைத்துவிட்டு உங்கள் வாழ்வில் உறுதிப்படுத்திய நிகழ்வுகள் இருந்தால் பட்டியலிடுங்கள் என்று கேட்டிருந்தேன். அப்படி அவர் பட்டியலிட முடியாது. ஏனென்றால் எந்த அறிவியல் முழுமைப்படுத்தப்படாதது என்று கூறிக் கொண்டிருக்கிறாரோ அந்த அறிவியலைத் தான் அனைத்து விசயங்களுக்கும் அவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். கடவுள் என்று வரும்போது மட்டுமே அறிவியலை விலக்கி விடுவார். ஏனென்றால் கடவுளை அவரால் ஒட்டும் நிரூபிக்க இயலாது. அவ்வளவுதான் விசயம்.

    அறிவியல் முழுமையடையாததா? இதை நண்பர் குலாம் இப்படி கேள்வியாக முன்வைத்திருக்கிறார், \\\அறிவியல் முழுமைப்படுத்தப்பட்ட ஒன்றா? அல்லது ஆய்வுகளை அடிப்படையாக வைத்து தொடரும் ஒரு பயணமா..?/// இரண்டுமே அறிவியலின் இருவேறு தன்மைகள். இரண்டையும் முடிச்சிடக் கூடாது. மனிதன் முதலில் தான் இருக்கும் பூமியை ஆய்வு செய்தான், அடுத்து அதன் துணைக் கோளான நிலவு தொடர்ந்து செவ்வாய், வியாழன், சனி என்று சூரியக்குடும்பம் அதைத் தாண்டிய அண்ட வெளி என்று தொடர்கிறான். இது அறிவியலின் பயணம். பூமியின் வடிவம் என்ன? கோளமான ஆனால் துருவங்களில் தட்டையான ஒரு வடிவம். இது முழுமை பெற்று விட்டது. ஆக அறிவியல் பூமியின் வடிவம் குறித்து முழுமை பெற்றுவிட்டது. ஆனால், அது அண்ட வெளிகளில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  31. 1
    முற்குறிப்பு: நண்பர் குலாம், என்னுடைய பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இருந்தால் தான் முழுமையாக புரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும் என எண்ணுகிறேன். எனவே உங்களின் விளக்கங்களை என்னுடைய பின்னூட்டம் முடியும் இடத்திலிருந்து தொடங்குங்கள். இடையிடையே இடைச் செருகல் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    கடவுள்: வெற்று நம்பிக்கையா? உறுதியான இருப்பா? இந்த மைய இலக்கில் நண்பர் குலாமின் வாதங்கள் ஒன்றவில்லை எனக் கருதுகிறேன். கடவுள் உறுதியாக இருக்கிறார் எனும் கோணத்திலிருந்துதான் தன்னுடைய வாதங்களை குலாம் வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் நான் எழுப்பியிருந்த ஒரு விசயத்தை கவனமாக தவிர்த்துவிட்டு தன் கேள்விகளுக்கான விளக்கங்களைத் தொடருகிறார். எந்த அறிவியலாலும் கடவுளை அளக்க முடியாது. அவர் எதிலும் அகப்பட மாட்டார் என்றால். கடவுள் உறுதியாக இருக்கிறார் என்று எந்த அடிப்படையில் நீங்கள் ஏற்கிறீர்கள்? இதற்கு நண்பர் குலாம் கூறப்போகும் பதிலிருந்து தான், அவர் கூறிக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கான விளக்கங்களை பகுத்துப் பார்க்க வேண்டும். எனவே, \\\கடவுள் அறிவிலுக்கு அகப்பட மாட்டார், அப்படி வரமாட்டார், இப்படி தெரியமாட்டார் என்று கூறி அதையெல்லாம் அப்படியே ஏற்றுக் கொண்டு கடவுள் இல்லையென்று நிரூபி என்கிறார்கள். எப்படியுமே தெரியமாட்டார் எதிலுமே அகப்படமாட்டார் என்றால் அவர் உறுதியாக இருக்கிறார் என்று உங்களுக்கு எப்படி தெரிந்தது?/// இதற்கான நண்பர் குலாமின் பதில் மிகுந்த அவசியமான ஒன்றாக இருக்கிறது.

    அறிவியல் குறைபாடுடையது என நண்பர் குலாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஏன் அவ்வாறு கூறுகிறாரென்றால் அறிவியல் குறைபாடாக இருப்பதினால் கடவுளோடு ஒப்பிட்டு, உரசிப்பார்க்கும் தகுதி அறிவியலுக்கு கிடையாது. இதைத்தான் நான் ஒரு எளிமையான நடைமுறை கேள்வியால் எதிர்கொண்டிருந்தேன். கடவுளை உறுதிப்படுத்த அறிவியல் உதவாதுஎன்று கூறும் நண்பர் குலாம் அதே குறைபாடுடைய அறிவியலைக் கொண்டு தான் தன் மெய் வாழ்வில் எல்லா விசயங்களையும் உறுதிப்படுத்துகிறார். அவ்வாறன்றி அறிவியலை விலக்கி வைத்துவிட்டு உறுதிப்படுத்திய விசயங்கள் இருந்தால் பட்டியலிடுமாறு கேட்டிருந்தேன். இதற்கு நேரிய முறையில் பதிலளிக்க முடியாது என்பது ஒருபுறமிருக்கட்டும். என்ன பதிலளித்திருக்கிறார்? \\\தவறான ஒப்பீடு . ஏனெனில் இங்கே நான் உறுதிப்படுத்துதலை சொல்லவில்லை... முழுமைப்படுத்தி இருக்கிறதா என கேட்கிறேன்.. /// இது நண்பர் குலாம் முதலில் கூறியது, \\\எந்த ஒன்றையும் நாம் உறுதிப்படுத்திக்கொள்ள அறிவியலை மட்டுமே துணைக்கழைத்தால் அறிவியல் அனைத்தையும் இவ்வுலகிற்கு முழுமைப்படுத்தி சொல்லி இருக்க வேண்டும்/// அதாவது அறிவியல் அனைத்தையுமே முழுமைப்படுத்தி இருந்தால் மட்டுமே எந்த ஒன்றையும் நாம் உறுதிப்படுத்திக் கொள்ள அறிவியலை துணைக்கழைக்க முடியும். தெளிவாகச் சொன்னால் முழுமைப்படுத்தப்படாத அறிவியலுக்கு எதையும் உறுதிப்படுத்தும் தகுதி இல்லை. அதனால் தான் நான் அப்படி தகுதியில்லாத அறிவியலை விலக்கி வைத்துவிட்டு உங்கள் வாழ்வில் உறுதிப்படுத்திய நிகழ்வுகள் இருந்தால் பட்டியலிடுங்கள் என்று கேட்டிருந்தேன். அப்படி அவர் பட்டியலிட முடியாது. ஏனென்றால் எந்த அறிவியல் முழுமைப்படுத்தப்படாதது என்று கூறிக் கொண்டிருக்கிறாரோ அந்த அறிவியலைத் தான் அனைத்து விசயங்களுக்கும் அவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். கடவுள் என்று வரும்போது மட்டுமே அறிவியலை விலக்கி விடுவார். ஏனென்றால் கடவுளை அவரால் ஒட்டும் நிரூபிக்க இயலாது. அவ்வளவுதான் விசயம்.

    அறிவியல் முழுமையடையாததா? இதை நண்பர் குலாம் இப்படி கேள்வியாக முன்வைத்திருக்கிறார், \\\அறிவியல் முழுமைப்படுத்தப்பட்ட ஒன்றா? அல்லது ஆய்வுகளை அடிப்படையாக வைத்து தொடரும் ஒரு பயணமா..?/// இரண்டுமே அறிவியலின் இருவேறு தன்மைகள். இரண்டையும் முடிச்சிடக் கூடாது. மனிதன் முதலில் தான் இருக்கும் பூமியை ஆய்வு செய்தான், அடுத்து அதன் துணைக் கோளான நிலவு தொடர்ந்து செவ்வாய், வியாழன், சனி என்று சூரியக்குடும்பம் அதைத் தாண்டிய அண்ட வெளி என்று தொடர்கிறான். இது அறிவியலின் பயணம். பூமியின் வடிவம் என்ன? கோளமான ஆனால் துருவங்களில் தட்டையான ஒரு வடிவம். இது முழுமை பெற்று விட்டது. ஆக அறிவியல் பூமியின் வடிவம் குறித்து முழுமை பெற்றுவிட்டது. ஆனால், அது அண்ட வெளிகளில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  32. 2
    இதுதான் முழுமை பெற்றது, அதேநேரம் பயணம் தொடர்கிறது என்பதின் விளக்கம். அறிவியலின் இந்த தன்மையை எந்த ஒன்றோடும் ஒப்புநோக்கிப் பார்த்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக இதயத்தின் செயல்பாடுகள் குறித்து அறிவியல் முழுமையாக அறிந்து விட்டதா? ஆம் அறிந்துவிட்டது. ஆனால் அதில் ஏற்படும் நோய்கள் குறித்து அதை எங்கணம் இன்னும் எளிமையாக தீர்க்கலாம் என்பது குறித்து ஆய்வுகள் தொடர்ந்து கொண்டுள்ளது. இதில் தெளிவற்ற தன்மையோ, முழுமையடையாத தன்மையோ இருக்கிறதா? ஒன்றை நன்றாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அறிவியல் ஒரு பொருளல்ல.குறிப்பிட்ட ஒரு தேதியோடு அறிவியலில் இனி புதிதாக ஒன்றுமில்லை என்று கூறுவதற்கு. அது ஒரு தேடல், தேடிக் கொண்டே இருக்கும். தேடல், பயணம் என்று கூறுவதால் அதை முழுமையடையாத ஒன்று என்று கூற முடியாது. ஏனென்றால், அது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் ஒவ்வொன்றையும் முடித்துக் கொண்டே இருக்கிறது. அவ்வாறு முடித்துக் கொள்வதற்கு சில நாட்கள் ஆகலாம், சில ஆண்டுகள் ஆகலாம், பல ஆண்டுகள் ஆகலாம், ஏன் நூற்றாண்டுகள் கூட கடக்கலாம். ஒருபோதும் அதை குறைபாடுடையது என்று கூறமுடியாது. ஏனென்றால் அது அறியும் முயற்சி. இதில் இன்னொரு விசயமும் இருக்கிறது. அறிவியல் என்பது அறிதலை நிகழ்த்தும் முறை. அந்த முறையினால் பெறப்படும் முடிவு அல்ல. அறிவியலினால் பெறப்படும் முடிவை அறிவியலாக திட்டமிட்டு குழப்புவது தான் இதுபோன்ற பிரச்சனைகளின் தொடக்கமாக இருக்கிறது. அறிவியல் குறைபாடுடையதாக இருந்திருந்தால் என்றோ தோல்வியடைந்து மனித வாழ்விலிருந்து வெளியேற்றப்பட்டு அந்த இடத்தில் புதிதாக அறிதலுக்கான வழிமுறை ஒன்று தோன்றி இருக்கும். அவ்வாறில்லாமல் மனிதன் அறிந்து கொள்வதற்கான ஒரே கருவியாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறதே, அது ஒன்றே அது குறைபாடில்லாதது என்பதற்கான சான்று.

    சரி, அறிவியலின் இந்தத் தன்மைகள் நண்பர் குலாமுக்கு தெரியவில்லை என்று கூற முடியுமா? அவ்வாறல்ல. தெரியும், தெரிந்து கொண்டே தான் கூறுகிறார். ஏனென்றால், அறிவியல் குறைபாடுடையது என்பதை நிருவினால் தான் கடவுள் இருக்கிறார் எனும் கற்பனையை உண்மையாக காட்டமுடியும். அதனால் தான் ஒவ்வொரு மதவாதியும் தம் வாழ்வில் முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்தும் அறிவியலை, ஏற்றுக் கொள்ளும் அறிவியலை கடவுள் விசயத்தில் மட்டும் குப்பைக் கூடைக்கு அனுப்பி விடுகிறார்கள். இன்னொரு வேடிக்கையையும் இதில் பார்க்கலாம். கடவுள் இல்லை என்று மறுக்கும் நாத்திகர்கள் கூட கடவுளின் தகுதிகள் என்று ஆத்திகர்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கும் நண்பர் குலாம், சொந்தத்தில் அவர் ஏற்றுக் கொண்டிருக்கும் அறிவியலின் தன்மையை தன்னுடைய விருப்ப நோக்கிற்காக மறுத்துக் கொண்டிருக்கிறார். இதை அவரின் சுய முரண்பாடு என்பதா? காரியவாதம் என்பதா?

    \\\ஆராய சாத்தியமில்லாத ஒன்றை குறித்து இதுவரை அல்லது இனி உலகம் அழியும் நாள் வரையிலும் நம்மால் உணர்ந்துக்கொள்ளவோ அல்லது இயலா நிலையிலோ ஒன்றிருந்தால் அது இல்லையென்றே சொல்வதற்கென்ற வாய்ப்பே அறிவியலில் இல்லை/// முதலில் நண்பர் குலாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். கடவுளை ஆராயவோ, அறிந்துகொள்ளவோ வழியே இல்லாத நிலை என்பது கடவுளுக்கு குலாம் போன்று அதனை ஏற்றுக் கொள்பவர்கள் கொடுக்கும் தகுதி, புனிதம். அதை மறுக்கும் நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை. கடவுள் என்ற ஒன்று ஐயத்திற்குறியது. அது இருக்கிறதா? இல்லையா? என்பது தான் விவாதம். ஐயமேற்படும் ஒன்றில் மனித குலம் தெளிவு காண்பதற்கு இருக்கும் ஒரே கருவி அறிவியல் தான். அறிவியலில் உரசிப்பார்த்து தான். அதை இல்லை என்று கூறுகிறோம். கடவுளை அறிந்து கொள்ள வழிகளே இல்லை எனும் பலவீனமான முனையில் நின்று கொண்டிருக்கும் நீங்கள், அறிவியலை விலக்குவதற்காகவே கடவுளுக்கு நீங்கள் கொடுத்து வைத்திருக்கும் தகுதியை நாங்கள் ஏற்க வேண்டும் என நிபந்தனை விதிப்பது எந்த விதத்தில் சரி என்பதை சிந்திக்க வேண்டாமா? அறிவியலில் கடவுளை நிரூபிக்க வழியில்லை என்றால், மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு வழியை நீங்கள் கொண்டுவந்து அந்த வழியில் கடவுளை நிரூபித்துக் காட்டுங்கள். ஏனென்றால் அறிவியலைத் தவிர வேறு எந்த வழியும் மக்களிடையே இல்லை. அதுதான் உங்கள் வேலை. மாறாக, எந்த வழியில் நிரூபிப்பது என்று எங்களைக் கேட்பதோ, நிரூபிக்க மறுப்பதோ நேர்மையான விவாதமுறை அல்ல.

    ReplyDelete
  33. 3
    \\\நான் கேட்பது நீங்கள் மறுக்கும் கடவுள் குறித்து... அதற்கு இது தான் உங்கள் பதிலா என்பதை இன்னும் அழுத்தமாக பதிவு செய்யுங்கள்./// இதை நண்பர் குலாம் பலமுறை கேட்டுவிட்டார், நானும் பல்முறை பதிலும் கூறிவிட்டேன். ஆனாலும், சொற்களை மட்டும் மாற்றி மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறார். ஐயா, நீங்கள் எந்தக் கடவுளை இருப்பதாக கூறிக் கொண்டிருக்கிறீர்களோ அதே கடவுளைத் தான் நாங்கள் இல்லை என மறுத்துக் கொண்டிருக்கிறோம். இருப்பதற்கு ஒரு கடவுளும் மறுப்பதற்கு ஒரு கடவுளும் என்பது கண்ணதாசன் பாட்டுக்கு வேண்டுமானால் ஈர்ப்புக்கவர்ச்சியாய் இருக்கலாம். உண்மைக்கு விவாதத்துக்கு அது ஒவ்வாது. கடவுள் என்ற ஒன்று இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்கள், நாங்கள் இல்லை என மறுக்கிறோம். இருக்கிறது என்றால் அதற்கான சான்றை நம்புபவர்கள் காட்டட்டும். இல்லை என்பதற்கான சான்றை மறுப்பவர்கள் காட்டட்டும். மாறாக, நாங்கள் நம்பும் கடவுள் குறித்து எதுவும் கூறமாட்டோம், ஆனால் நீங்கள் மறுக்கும் கடவுள் குறித்து விளக்குங்கள் என்றால் .. .. .. மன்னிக்கவும் அபஸ்வரம் தட்டுகிறது.

    நண்பர் குலாம் பண்டைக் கால குகை ஓவியங்கள் வெறுமனே மனிதர்கள் வெறுமனே வாழ்ந்தார்கள் என்பதற்கான சான்றுகளல்ல, எப்படி வாழ்ந்தார்கள் என்பதற்கான சான்றுகள். அவர்கள் வேட்டையாடிய முறை, எந்தெந்த விலங்குகளை வேட்டையாடினார்கள்? எப்படி வேட்டையாடினார்கள்? அவர்களுக்கு நேர்ந்த இன்னல்கள் என்னென்ன? அவைகளை அவர்கள் எப்படி எதிர் கொண்டார்கள் போன்ற அனைத்து விபரங்களும் அந்த ஓவியங்களில் கிடைத்திருக்கின்றன. நெருப்பு போன்ற பாரிய இன்னல்கள் மட்டுமல்லாது கோர விலங்குகளின் முன்னும் அவர்கள் மண்டியிட்டு வணங்கிய படங்கள் கிடைத்திருக்கின்றன. கோர விலங்குகள் முன் தங்கள் வேட்டையாடிய சிறு விலங்குகளை போட்டபோது தங்களை கொல்லாது விட்டுச் செல்வதை கவனித்த மனிதன் படையல் எனும் வழக்கத்தை மேற்கொள்கிறான். வணக்கம் என்பது இன்றைய நிறுவனமயமாக்கப்பட்ட மதங்களின் பின்னால் இருக்கும் பொருளுக்கும் அன்றைய பொருளுக்கும் இடையே வித்தியாசம் உண்டு. வளைதல், கீழ்படிதல், அஞ்சுதல், குறிப்பாக உங்களுக்கு எதிராக எந்தச் செயலிலும் நான் ஈடுபடப் போவதில்லை என்பது தான் அன்றைய பொருள். வழிபாடு எனும் பொருளெல்லாம் மதங்களின் பிறகு ஏற்பட்டவை. இதுவே மனிதனின் மரணத்துடன் தொடர்பு படுத்தப்பட்டு மறுபிறவி, இறந்த பிறகான வாழ்க்கை என்று விரிந்தது, பின்னர் மதங்கள் தோன்றியதும் அந்த நம்பிக்கைகள் நிறுவனமயமாக்கப்பட்டு மக்களிடையே நீடிக்க வைக்கப்படுகிறது. ஒரே ஒருமுறை வந்து சென்றால் அதை பயமென்று முடித்துக் கொள்ளலாம். ஆனால் ஆதிநாளில் மனிதன் பயம் கொண்ட அனைத்தும் மீண்டும் மீண்டும் வந்தன. எனவே தான் அவை பயம் என்பதிலிருந்து மாறி நம்பிக்கையாக நிலைபெற்றன. இன்றைய நாட்களிலும் அதே நம்பிக்கை நீடித்து நிலைத்திருப்பதற்கு அது நம்பிக்கை, மதம் எனும் எல்லைகளைக் கடந்து சுரண்டலுக்கான கருவியாகவும் பயன்படுவதால் இன்றுவரை அது தக்கவைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சமூகத்தில் சுரண்டல் நீடிக்கும் வரை மதங்களும் நீடிக்கும். இந்த விபரங்களை தொல்லியல் சமூகவில்யல் நூல்கள் எதிலும் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். இவைகளுக்கு எதிராக உங்களிடம் சான்றுகள் ஏதேனும் இருக்கிறதா? இருந்தால் எடுத்து வையுங்கள் பரிசீலிக்கலாம். ஏனென்றால், பரிசீலிக்க மறுப்பதாலேயே கடவுளும் மதங்களும் நீடித்திருக்கின்றன என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.

    \\\அறிவியல் வரைவிலக்கணம் தராத ஒன்றோடு அறிவியல் மனித சிந்தைக்கு தெளிவாக அறியப்படும் முன்பே ஒரு நிலையான அதுவும் அறிவியல் உபகரணங்களால் /ஆய்வுகளால் கண்டறிய வாய்ப்பில்லாத ஒன்றீன் மூலத்தை எந்த அறிவியல் அறிவு கொண்டு ஐயா இல்லையென அறிந்தீர்கள் நீங்கள்..?/// இது ஒரு குழப்பமான கேள்வி அல்லது குழப்ப வேண்டும் என்பதற்கான கேள்வி. ஒரு பொருளுக்கான தரவுகள் கிடைக்கவில்லை என்பதனால் மட்டுமே அதை இல்லை என அறுதியிட்டு கூறிவிட முடியாது என்கிறார் குலாம். ஒப்புகிறேன். அதேநேரம் ஒரு பொருளுக்கான தரவுகள் எதுவுமே கிடைக்காத நிலையில் அது இருக்கிறது என்று எப்படி உறுதியாக கூற முடியும்? என்று நான் கேட்கிறேன். இதற்கு பதிலாகத்தான் கண்டறிய வாய்ப்பில்லாத ஒன்று என்று விலகுகிறார் நண்பர் குலாம். ஐயா, எதையும் அறிவதாக இருந்தால் அது அறிவியலின் வரையறைக்குள் வருகிறதா என்று பார்ப்பது தான் சரியான வழிமுறை. ஒரே வழிமுறை. இதற்கு அப்பாற்பட்ட எல்லாம் கற்பனை அல்லது வெற்று நம்பிக்கை. \\\1. அறிவியலால் நிருபிக்க வாய்ப்பில்லாத ஒன்றை வேறு வழிகளில் நிருபிக்க வழி சொல்ல வேண்டும்! அல்லது 2. அறிவியல்

    ReplyDelete
  34. 4
    இல்லையென்பதை உறுதி செய்யாத ஒன்றை ஏற்றாக வேண்டும்...?/// அறிவியலால் நிரூபிக்க இயலாத ஒன்று என்று எதுவுமே இல்லை. அப்படி நிருபிக்க இயலாத ஒன்று என்று ஏதேனும் இருப்பதாக கூறினால் அப்படி கூறுபவர்கள் தான் அந்த வழியையும் சொல்ல வேண்டும். இரண்டாவதில் எதை ஏற்க வேண்டும் என்கிறார். கடவுளுக்கு நிரூபணம் கேட்டால் வழி சொல்லு இல்லையென்றால் ஏற்றுக் கொள் என்கிறார் நண்பர் குலாம். என்ன சொல்வது இதை? சாரமில்லா வெற்று உணர்ச்சி.

    கடவுளின் இருப்பை இன்றோ நாளையோ உபகரணங்களால் உறுதிப்படுத்தினால் அதற்கு முன்னால் வாழ்ந்த மக்களுக்கு அது அநீதி ஆகிவிடும் என்கிறார். இதெல்லாம் ஆத்திகர்களின் கவலை. ஆத்திகர்களுக்காக நாத்திகர்கள் கவலைப் பட முடியாது. கடவுள் நீதமானவரா? நேர்மையானவரா? அனைவருக்கும் சமமானவரா? என்பதெல்லாம் இங்கு கேள்வியே அல்ல. அப்படி ஒன்று இருக்கிறதா? என்பது தான் இங்கு கேள்வி. அதற்கு முதலில் நிரூபணம் தாருங்கள். அவர் வல்லவரா நல்லவரா என்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

    \\\எங்கே வரலாற்று ரீதியாகவும் சமூக, அறிவியல், கணக்கு இப்படி எங்கல்லாம் கடவுளை மறுக்க அறிவியல் காரணிகளை தந்தீர்கள் பட்டியல் இடுங்கள் சகோ... /// ஏற்கனவே உங்களுடன் நடந்த விவாதங்களில் சான்றுகள் தரப்பட்டிருக்கிறது.

    அறிவியல் ரீதியான காரணங்கள்:
    1. எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் என்று எதுவுமில்லை.
    2. தொடக்கமோ முடிவோ இல்லாத பொருள் என்று எதுவும் இல்லை.
    3. எந்த ஒரு பொருளையும் சாராமலும், எந்த ஒன்றிலிருந்து சார்பு பெறப்படாமலும் எதுவுமில்லை.

    வரலாற்றுரீதியான காரணங்கள்:
    1. ஆதி மனிதர்கள் வாழ்வில் கடவுள் எனும் நிலை இருந்ததற்கான எந்த சான்றும் கண்டறியப் படவில்லை.
    2. பூமியில் மனிதன் எனும் உயிரினம் தவிர ஏனைய உயிரினங்களுக்கு கடவுள் எனும் உணர்வு இல்லை.

    சமூக ரீதியான காரணங்கள்:
    1. கடவுளின் தகுதிகள் கூறும் படியான ஆற்றல் இருந்திருந்தால் மனித வாழ்வில் அது செலுத்தியிருக்கும் தாக்கம் மக்களிடம் கண்டறியப்படவில்லை. தெளிவாகச் சொன்னால் தெளிவாகச் சொன்னால் மனித வாழ்வின் அறவாழ்வு விழுமியங்கள் அழிந்திருக்கின்றன.
    2. கடவுளிடமிருந்து கிடைத்தது என்று சொல்லத்தக்க, சோதித்தறியத்தக்க எதுவுமே கண்டறியப்படவில்லை.

    அடுந்து லாம்கு வுக்கு வருவோம். லாம்குவில் நண்பர் குலாம் கூறியிருப்பது என்ன? லாம்கு எனும் நாட்டிற்கான எந்த தகவல்களும் அறிவியல் மூலம் கிடைக்கவில்லையாயின், அந்த லாம்குவை கூறியவன் கூற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள் என்கிறார். அதோடு மட்டுமின்றி அது தான் அறிவியல் முறை என்றுவேறு கூறுகிறார். இது சரியா? ஒன்றை ஏற்பதாக இருந்தாலும் மறுப்பதாக இருந்தாலும் அதனதற்குறிய காரணிகள் தெளிவாக்கப்பட வேண்டும். இந்த இரண்டில் எதை ஏற்பது? எதை புறந்தள்ளுவது?

    அடுத்து என்னுடைய பதில்களுக்கான மறு கேள்விக்கு வருவோம்.

    1. \\\தற்செயல் என்று ஒன்று அறிவியல் இல்லவே இல்லை, ஆனால் தற்செயல் என்பது எந்த வித திட்டமிடலோ, முன்னேற்பாடோ ஏதுமின்றி நடக்க சாத்தியமில்லா சூழ்நிலையில் மிக நேர்த்தியாக நடைபெறும் சம்பவம்... எதுவும் காரண காரியத்தோடு நடைபெற்றால் மட்டுமே அவை அறிவியலாக்கப்படுகின்றன.. அவை ஏற்றும் கொள்ளப்படுகின்றன. அப்படியிருக்க தற்செயல் என்ற ஒன்றை ஏற்றால் அது எப்படி அறிவுப்பூர்வமான செய்கையாக

    ReplyDelete
  35. 5
    ஏற்றுக்கொள்ள முடியும்/// அறிவியலில் தற்செயல் என்று எதுவுமே இல்லை என்பதை நண்பர் குலாமுக்கு எந்த ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் சொல்லிக் கொடுத்தாரோ நமக்குத் தெரியாது. தற்செயல் நிகழ்ச்சி என்றால் முன்கூட்டியே திட்டமிடாதது என்பது தான். அதற்கு காரண காரியங்கள் இருக்கும். அந்தக் காரண காரியங்களைத் தேடிக் கண்டறிவது தான் அறிவியலின் பணி. ஆனால் தற்செயல் என்பதற்கு சில எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகளை நண்பர் குலாம் சேர்க்கிறார், \\\நடக்க சாத்தியமில்லா சூழ்நிலையில் மிக நேர்த்தியாக நடைபெறும் சம்பவம்/// பெருவெடிப்பு திட்டமிடப்பட்ட ஒன்றா? தற்செயலானதா? யாரும் திட்டமிட்டு குதிரையை சொடுக்கி பெருவெடிப்பை நிகழ்த்தவில்லை. ஆனால் அதற்கான காரணத் தொடர்புகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அந்த ஆய்வு முடிவில் பெருவெடிப்பு என்று ஒன்று நிகழவே இல்லை என்றுகூட கண்டறியப்படலாம். ஏனென்றால் அது அறிவியல் யூகம் எனும் நிலையில் தான் இருக்கிறது. இந்த அம்சத்தை கணக்கிலெடுத்துக் கொள்ளாமலேயே நண்பர் குலாம் வாதிட்டுக் கொண்டிருக்கிறார்.

    ஒரு குவளைத் தேனீர் தரையில் கொட்டினால் ஏற்படும் வடிவம் போல மறுமுறை ஏற்படும் என்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால் அப்படி ஏதேனும் விண்வெளியில் நிகழ்கிறதா? இல்லை ஒரே மாதிரியான செயல்கள் மீண்டும் மீண்டும் விண்வெளியில் நிகழ்வதில்லை. பூமியில் உயிரினங்கள் தோன்றி பரிணமித்ததுபோல் வேறு எங்கேனும் ஒரு கோளில் உயிரினங்கள் பரிணமிக்க வாய்ப்பு உண்டு. ஆனால் பூமியில் ஏற்பட்ட அதே மாதிரியில் ஒருபோதும் இன்னொன்று நிகழாது. வெளியில் நிகழும் இரண்டு பருப்பொருட்களிடையேயான மோதல் மீண்டுமொருமுறை அதேபோல் நேருமா என்றால் ஒருபோதும் நேராது. ஆனால் கோள்கள் தம் சுற்றுப்பாதையில் மீண்டும் மீண்டும் சுற்றி வருவது இதுபோல் மீண்டும் நிகழும் செயலா? அல்ல. அது இன்னும் முழுமையடையாத நடந்து கொண்டிருக்கும் ஒரு செயலின் படிகள். இதை ஒரு எளிமையான எடுத்துக்காட்டின் மூலம் விளக்கலாம். சில சிறுவர்கள் சங்கு சக்கரம் கொளுத்துகிறார்கள் என்று கொள்வோம். அவர்கள் கொளுத்தும் அத்தனை சங்கு சக்கரங்களும் ஒரே மாதிரியான பயணம் கொண்டிருக்குமா? நிச்சயம் இருக்காது ஏனென்றால் அது திட்டமிடப்படாமல் நிகழ்ச்சிப் போக்கில் நிகழ்வது. ஆனால் ஒரு சங்குச் சக்கரத்திலிருந்து வெளிப்படும் ஒரு தீத்துணுக்கு அது வெளிப்படுவதிலிருந்து அணைகிற வரையில் ஒரே மாதிரியாக திரும்பத் திரும்ப சுழன்று கொண்டிருக்கும். அதன் ஒவ்வொரு சுற்றும் தனித்தனியான ஒரு காரியமல்ல. தீப்பற்றி வெளிப்படுவதிலிருந்து சிலபல முறை சுழன்று அனைந்து போவது வரை ஒரே செயல். அந்த ஒரே செயல் மீண்டும் நிகழாது ஏனென்றால் அது தற்செயல் நிகழ்ச்சி. ஆனால் அந்த ஒரு நிகழ்ச்சிக்குள் பல ஒரேமாதியான சுழல்கள் இருக்கின்றன காரணம் அது கிட்டிக்கப்பட்ட மருந்தின் விசையால் வெளிச் சுழல்வது. அது போல்தான் ஒரு சூரியக் குடும்பத்தின் கோள்கள் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றன என்றால் அது மீண்டும் மீண்டும் நிகழும் நிகழ்ச்சியல்ல. பூமி தோன்றி குளிர்ந்து சுழன்று அடங்கிப் போவது வரை ஒரேஒரு நிகழ்ச்சி தான். அது தற்செயல் ஆனால் அதற்குள் பல்லாயிரம் ஆண்டுகளாக தன்னைத்தானே சுழன்று சூரியனையும் சுற்றிக் கொண்டிருப்பது அதன் உள்ளார்ந்த விசையால், வெளி வளைந்திருப்பதால். இதை புரிந்து கொள்ளாமல் மேலெழுந்த வாரியாக தன்னுடைய விருப்ப முடிவுக்கு உகந்த விளக்கங்களை அளித்துக் கொண்டிருப்பது திரிக்கும் செயல். எனவே பெருவெடிப்பு தற்செயலானது தான் திட்டமிடப்பட்டதல்ல. இன்னும் திட்டமிடப்பட்டது தான் என நண்பர் குலாம் நம்பினால் அதனை விளக்கட்டும்.

    2. \\\இருந்தும் போக்கு வரத்து, விபத்துகளை சரிசெய்ய முடியவில்லை ஆனால் பரந்து விரிந்த பால்வெளிகளில் பல்லாயிரக்கணக்கான கோள்களும் தத்தமது நீள் வட்ட பாதையில் மிக சரியாக சுழன்று வருகிறதே/// இது நண்பர் குலாம் முதலில் கூறியது. \\\நீங்கள் சொல்லும் எல்லா ஒழுங்கீனங்களும் , மோதல்களும், தாக்குதல்களும் விண்ணில் நடந்தாகவே இருக்கட்டும்... இதை நடத்தியது யார்... அது தானே இங்கே கேள்வி/// இது இப்போது கூறியிருப்பது. முதலில் ஒழுங்கீனங்களே நடக்கவில்லை என்றார். இப்போது நடந்து கொண்டிருக்கும் ஒழுங்கீனங்களை நடத்தியது யார்? என்கிறார். சிறுபிள்ளைத் தனமான கேள்வி. இப்படித்தான் விபரமறியா அப்பாவி ஆத்திகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்ன நடந்தாலும் அது ஆண்டவன் நடத்தியது தான் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இதில் தான் நாம் கேள்வி எழுப்புகிறோம். கடவுள் தான் நடத்துகிறார் என்றால் அதை நிரூபியுங்கள். எந்த ஆய்வுமின்றி அப்படியே நம்புவது பாமரத்தனம். நண்பர் குலாம் அவ்வாரான பாமரராய்

    ReplyDelete
  36. 6
    இருக்கமாட்டார் என நம்புகிறேன். எனவே கடவுள் தான் நிகழ்த்துகிறார் என்பதை காரண காரியங்களுடன் நிருவட்டும். பரிசீலிக்க நான் தயார்.

    3. அறிவியல் என்றால் என்ன? படைப்பு என்றால் என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கான பதில்களில் நண்பர் குலாம் எந்த அளவுக்கு வறட்சியாக இருக்கிறார் என்பதை அறிவதற்கு அவர் எழுதியிருக்கும் இந்த வாக்கியம் போதுமானது, \\\அவசியமற்ற எந்த செய்கையும் அறிவியலில் இல்லையெனும் போது ஏனைய கோள்களின் படைப்பு எதற்காக/// அறிவியல் தான் இந்த பேரண்டத்தைப் படைத்தது என்று கருதுகிறாரா நண்பர் குலாம். அறிவியல் என்பது ஆராயும் முறை. அங்கு செயல்களுக்கு என்ன பங்கு இருக்கிறது? இந்த வாக்கியத்தை இன்னும் தெளிவாக நண்பர் குலாம் விளக்கட்டும் பின்னர் அதை பார்த்துக் கொள்ளலாம். இந்தக் கேள்வி, பயனற்ற கோள்களும் பருப் பொருட்களும் ஏன் படைக்கப்பட வேண்டும் எனும் கேள்வி யார் எழுப்பி யார் பதிலளிக்க வேண்டிய கேள்வி? கடவுள் தான் அனைத்தையும் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கிறார் என்றால் மனிதனுக்கு உபயோகமில்லாத ஏனைய கோள்களும் பருப்பொருட்களும் ஏன் படைக்கப்பட்டன என்பதற்கு பதில் கூற வேண்டிய பொறுப்பு கடவுளை நம்புகிற ஆத்திகர்களுக்கே உண்டு. நாத்திகர்கள் இதில் பதில் கூற ஒன்றுமில்லை. ஏனென்றால் இந்த பேரண்டம் தோன்றியது தற்செயலானது. மனிதனோ ஏனைய கோள்களில் உயிரினங்களோ தோன்றியும் இருக்கலாம் தோன்றாமலும் இருக்கலாம் இதில் ஒரு நாத்திகன் பதிலளிக்க ஒன்றுமில்லை. எனவே ஆத்திகர் குலாம் \\\மனிதனுக்காக மட்டும் இப்பிரபஞ்சத்தை, விண்ணை, மண்ணை பல கோடி உயிரினங்களை, பால்வெளிகளை படைக்கவில்லை/// என்று விட்டேத்தியாய் கூறி நழுவாமல் ஏன் அவை படைக்கப்பட்டன என்பதை விளக்க வேண்டும். கவனிக்கவும் நண்பர் குலாம் எழுப்பிய கேள்வி ஏனையபிற கோள்கள் மனிதனுக்காக படைக்கப்பட்டனவா? இல்லையா? என்பதல்ல. மனிதனுக்கு பயனில்லாதவைகள் ஏன் படைக்கப்பட்டன என்பதே.

    4/5. பிறக்கும் நேரமோ இறக்கும் நேரமோ சரியாக கணிக்கப்பட வேண்டும் என்பதில் என்ன அறிவியல் இருக்கிறது? சோதிடம் கூறும் வேலையெல்லாம் அறிவியலுக்கு இல்லை. அவ்வாறு கணித்துக் கூறினால் தான் கடவுள் இல்லை என்பது நிரூபணமாகுமா? பிறக்கும் இறக்கும் நேரத்தை சற்றே நெருங்கிய துல்லியமாக தேவைப்படும் போதுகளில் அறிவியல் கணிக்கிறது. சான்றிதழ்களில் பிறந்த இறக்கும் நேரங்கள் கணித்துக் கொடுத்து ஆகப்போவது என்ன? மனித குலத்துக்கு இன்றியமையாத தேவைகளாக அவை மாறினால் அதற்கான முயற்சிகளை எடுக்கும். ஆத்திகம் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் நாத்திகம் பதில் கூறும், கேள்வியின் நோக்கம் கடவுள் உண்டா இல்லையா என்பதை நிருவும் நோக்கத்தில் இருந்தால். மாறாக, கடவுள் உண்டு என்பதை நிருவ முடியாத ஆற்றாமையில் கேள்விகள் எனும் பெயரில் செய்யப்படும் திசை திருப்பல்களை தகுந்த முறையில் அம்பலப்படுத்துவது தான் நாத்திகத்தின் பணியாக இருக்கும். பிறக்கும் இறக்கும் நேரத்தை துல்லியமாக கூற முடியுமா என்றால் இன்றைய நிலையில் முடியாது என்றே கொள்வோம். இதனால் அறிவியல் குறைபட்டதாகிவிடுமா? நண்பர் குலாம் கேள்வியையும் அவைகளின் நோக்கத்தையும் அவை நடத்தப்படும் விவாதத் தலைப்புடன் கொண்டிருக்கும் பொருத்தத்தையும் தெளிவுபடுத்துங்கள். பின்னர் விரிவான பதிலுடன் வருகிறேன்.

    இனி, நான் கேட்டிருந்த கேள்விகளையும் அதற்கு நண்பர் குலாம் அளித்திருக்கும் பதில்களையும் பார்ப்போம்.

    1. நண்பர் குலாமுக்கு கேள்வி புரியவில்லையா? பேரண்டத்துக்குள் கடவுள் இருக்கிறார் என்று நான் கூறவில்லை. எங்கே வேண்டுமானாலும் அவர் இருந்துவிட்டுப் போகட்டும். நான் கேட்டது எந்த ஒன்றையும் படைக்கும் முன் அவர் எங்கு இருந்தார் என்பது தான். முடிந்தால் பதில் கூற முயலுங்கள் திசை திருப்பாதீர்கள்.

    2. நான் குரானைப் படிப்பது இருக்கட்டும். உங்கள் பதில் என்ன அதைச் சொல்லுங்கள் அப்போதுதானே உங்கள் முகம் தெரியும்.

    ReplyDelete
  37. 7
    3. நண்பர் குலாம் மிகுந்த உயவுத் தன்மையுடன் நீங்கள் எழுதியிருக்கும் அந்தப் பதிவில் என் கேள்விக்கான பதில் இல்லை. மட்டுமல்லாது அந்த இடுகையை பாருங்கள் இந்த இடுகையை படியுங்கள் என்றெல்லாம் எழுதாமல் கேள்விக்கான பதிலை எழுதுவது உத்தமம்.

    4. இந்த விவாதத்தை தொடங்குமுன் சில கேள்விகளைக் கேட்டு பதில் கூறுங்கள் என்று நண்பர் குலாமைக் கேட்டேன். பிடிவாதமாக மறுத்தார். அதில் முதல் கேள்வி, நான் எழுப்பும் கேள்விகளை உள்வாங்கிக் கொண்டு அதற்கு பதில் கூற வேண்டும் என்பது. நான் எழுப்பிய நான்காவது கேள்வியையும் அதற்கு நண்பர் குலாம் கூறியிருக்கும் பதிலையும் படித்துப் பார்த்தால் புரியும். நான் ஏன் விவாதம் தொடங்குவதற்கு முன் அந்த அளவுக்கு வற்புறுத்தினேன் என்பது.

    மனிதர்களின் கோரிக்கையை ஏற்று கடவுள் நிறைவேற்றிய ஏதாவது ஒன்றுமனிதன் சோதித்தறியும்படி உலகில் இருக்கிறதா? என்பது கேள்வி. நாட்டில் எங்கு எப்போது மழை பொழியும் என்பதை பிரசுரமாக வெளியிடுங்கள். அடேங்கப்பா கேள்விக்கும் பதிலுக்கும் என்னே ஒரு பொருத்தம். நண்பர் குலாம் ஏற்கனவே உங்களுக்கு இணையத்தில் இணைந்திருக்கும் நேரம் மிகவும் குறைவு, அந்த நேரத்தையும் சரியான பதிலை கூறுவதற்கு பயன்படுத்துமாறு வேண்டுகிறேன்.

    பகுத்தறிவு என்பது பகுத்துப் பார்த்து ஆய்ந்தறிந்தவைகளை நேர்மையுடன் பரிசீலித்துப் பார்த்து சாதக பாதகங்களுக்கு அப்பாற்பட்டு உண்மைகளை துணிவுடன் ஏற்றுக் கொள்வது. எந்தவித பரிசீலனையும் இன்றி எந்த ஆதாரமும் இன்றி தான் நம்பும் ஒன்றுக்காக எதையும் வளைக்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு பகுத்தறிவு பகாஅறிவாகத்தான் இருக்கும்.

    தொடர்ந்து வருவேன்.

    ReplyDelete
  38. அன்பு சகோ செங்கொடி.,

    உங்கள் கருத்துகளையும் என் கருத்துகளையும் படிப்பவர்கள் எளிதில் உள்வாங்க வசதியாக தான் பகுதி பகுதியாக பின்னூட்டம் இட்டேன். இதில் எங்கே இடை சொருகல்... உங்கள் சொல்லில் ஒற்றை எழுத்தை கூட நான் மாற்றவே இல்லையே சகோ . அதுவுமின்றி தொடர்ந்து போய்க்கொண்ட இருந்தால் அது விவாதம் போல அமையாமல் பேருரை போல அமையும் என்பதால் படிப்பவர்களுக்கு ஒரு சடைவு ஏற்படலாம் எனபதாலே பிரித்து பிரித்து ரீப்ளே ஆப்சனில் என் கருத்தையும் இட்டேன்.

    சரி உங்கள் விருப்பம் போல இங்கே இடுகிறேன். பாருங்கள் எப்படி இருக்கிறது என்று.. ஆனால் மீண்டும் உங்களின் வாதத்தை இரண்டாம் முறையாக மேற்கோள் காட்டி தொடர்ந்தால் எனது பின்னூட்டத்தின் நீளம் இன்னும் அதிகரிக்கும் என்பதால் உங்களின் உடன்படா கருத்துகளுக்கு மட்டும் பதிலை பதிவு செய்கிறேன்.

    முதலில் கடவுள் குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்டேன்.. அதற்கு அறிவியல் உண்மைப்படுத்தாத எதுவும் இப்பேரண்டத்தில் இல்லையென்றீர்கள். இந்த அளவுகோலை எங்கே எடுத்தீர்கள் என்றால். அந்த அறிவியல் தான் சொன்னது என்றீர்கள் . எல்லா வற்றையும் அறிவியலை அளவுகோலாக கொண்டு எடுத்தால் அது முழுமைப்பெற்ற ஒரு தொகுப்பாக இருக்க வேண்டும் என்றேன்..
    ஆனால் அது தொடரும் ஒரு பயணம் என்கிறீர்கள். ஆக இப்போதும் என் கேள்வி.. முழுமை பெறாத ஒரு தொகுப்பு எப்படி எல்லாவற்றிற்கும் உறுதிப்படுத்தப்பட்ட முடிவை எடுக்க உதவும் என்றேன். அதுவுமின்றி எக்காலத்திற்கும் பொருத்தமான பதிலை அறிவியலால் கொடுக்க முடிந்தால் அதில் எந்த கேள்விகளையும் வைத்து உரச முடியும். ஆனால் சுமார் ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்னர் இருக்கும் அறிவியலில் உரசி உண்மைப்படுத்தப்படாத விசயங்கள் எல்லாம் இன்று சாத்தியம். ஆக கடவுளை மறுக்க அறிவியலின் அறிவு வளரவில்லை..

    ஆக நிலையற்று தொடரும் அறிவியலை அளவுகோலாக கொண்டு இல்லாமல் கடவுளின் உறுதியான இருப்பை நிருபிக்க என்ன கேள்வி வைத்திருக்கீறிர்கள் என்றேன்... அது தொடர்பாக உங்களிடம் எந்த பதிலும் பதிவு செய்யப்படவில்லை.

    அறிவியல் குறைப்பாடானது என்று நான் சொல்வது இருக்கட்டும்.. நீங்கள் சொல்லுங்கள் நான் மேற்கோள் காட்டிய கேள்விகளுக்கு எல்லாம் தற்செயல் என்ற ஒற்றை வரியில் மட்டும் விளக்கத்தை முடித்தால்.. தற்செயல் என்ற ஐந்தெழுத்தை விட கடவுள் என்ற நான்கு எழுத்தில் மிக மேலானது . ஆக நீங்கள் தற்செயல் இல்லா நிலை தவிர்த்த ஆதார ரீதியான குறியீடுகளை தரவேண்டும்.

    ஆக இங்கே கடவுள் என்பதற்கு உங்கள் விளக்கத்தை உறுதிப்படுத்துங்கள்.

    ReplyDelete
  39. உறுதிப்படுத்துதல் / முழுமைப்படுத்துதல்...
    மிக சாமர்த்தியான விளக்கம்.. ஐயா... நான் என்ன சொல்லி இருக்கிறேன்.. என்பதை தயவு செய்து புரிந்துக்கொள்ள முயற்சியுங்கள்.. முழுமைப்படுத்தபட்ட விசயங்கள் மட்டுமே நேர் மறை / எதிர் மறை ஊகத்தை தாண்டி நிலையாக உறுதிப்படுத்த நிகழ்வுகளாக நாம் கொள்ள வேண்டும் ஏனெனில் அறிவியல் தனது அளவுக்கோலை கொண்டு அதை மெய்படுத்தி இருக்கிறது ஆக... இன்னும் இருபத்தி நான்கு நேரத்திற்கு பிறகு நமக்கு புதிய நாள் கிடைக்கும் என்பதை மறுக்க யாரும் போவதில்லை.

    ஏனெனில் இந்நிகழ்வை எதிர்க்கவோ மறுக்கவோ செய்வதாக இருந்தால் இதற்கு எதிரான ஆதாரங்களை சான்றாக வேண்டும். ஆனால் அப்படி இருக்க வாய்ப்பும், இல்லை அறிவியல் உடன்படுத்தும் நிகழ்வுகளை மறுப்பின்றி நாம் ஏற்றுக்கொள்கிறோம், ஏனெனில் அறிவியலை தாண்டி இதை ஏற்க / மறுக்க வேறு அளவுகோல் நமக்கு இல்லை. இதைப்போன்ற பல நிகழ்வுகளை நானோ நீங்களோ ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.. ஏனெனில் இவையாவும் முழுமைப்படுத்தப்பட்ட உறுதியான செய்கைகள். ஆனால் இன்னும் முழுமைப்படுத்தபடாத நிகழ்வுகள் ஏராளம் இருக்கின்றன.. அதில் ஒன்று கடவுளின் இருப்பு. அதன் நேர் /எதிர் மறை சிந்தனைகளை உறுதிப்படுத்த அறிவியலுக்கு வாய்ப்பே இல்லையெனும் போது எப்படி கடவுளின் இருப்பை முழுமைப்படுத்த ஒன்றாக ஒப்பு நோக்க முடியும்...?

    இது தானே எனது மையக்கேள்வி. அதை விட்டு விட்டு நானும் நீங்களும் உறுதியாய் ஏற்றுக்கொண்டு உடன்படும் விசயத்திலா நமக்கு இடையில் விவாதம்,,,? கேள்விகள் புரியவில்லையென்றால் தயவு செய்து மீண்டும் கருத்துக்களை உள்வாங்கி பாருங்கள் சகோ.

    // ஆக அறிவியல் பூமியின் வடிவம் குறித்து முழுமை பெற்றுவிட்டது. ஆனால், அது அண்ட வெளிகளில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. //

    ஆக இப்பேரண்ட விதிகளை அறிவியல் இன்னும் முழுமைப்படுத்தவில்லையென்பதை ஒத்துக்கொண்டதற்கு நன்றி! அப்படி இருக்கும் போது அறிவியல் பூமியின் வடிவத்தை மட்டும் குறித்து முழுமைப்படுத்தி விட்டது என்பது எவ்வளவு லாவகமான பேச்சு இது நகைப்புக்குரிய விசயம் தான் சகோ.. இன்னும் மனித காலடி தடங்கள் படாத இடங்களில் இப்பூவியில் அறுபது சதவீகிதத்திற்கு மேலாக உள்ளது. கொஞ்சம் பொறுமை சகோ... அவற்றையும் ஆராய்ந்து உறுதிப்படுத்தி சொல்லட்டும் அதுவரை பொறுத்திருங்கள்..

    ReplyDelete
  40. இந்த விவாதத்தின் தொகுப்பு செங்கொடி தளத்தில் விவாதம் எனும் தலைப்பிலான தனிப்பகுதியாக வெளியிடப்படுகிறது தொடர்ந்து வெளியிடப்படும். தேடலுள்ளவர்கள் தொடரலாம்.

    http://senkodi.wordpress.com/senkodi-gulam-argue/

    ReplyDelete



  41. சகோ... நாம் முதலில் உறுதிப்பட்ட செய்கையே ஏற்றுக்கொள்வதாக இருந்தால் அது அச்செய்கையின் ஊகங்களை விட்டு தெளிவாக முழுமைப்பெற்றியிருக்க வேண்டும்.. இதயமும்- இதய நோய்களும்... இந்த எடுத்துக்காட்டில் ஒரு விசயம் நாம் கவனிக்க வேண்டும்.. இதயத்தை குறித்து நாம் தெளிவாக அறிந்திருப்பதனால் தான் அவற்றிற்கு உண்டாகும் நோய், பிரச்சனை, உணர்வு ரீதியான பண்புகளை பிரித்து பிரித்து இனங்காட்ட முடியும். ஆனால் இதயத்தை இங்கே வகைப்படுத்தும் முன்னே இதயம் என்றால் என்னவென்பதை நாம் முன்னரே தெளிவாக அறிந்திருக்க வேண்டும்.

    இது தான் இங்கே மிக முக்கியமும் கூட. ஏனெனில் ஒன்றை குறித்து தெளிவற்ற வரையறை கூட என்று சொல்ல முடியாது வரையறையே ஏற்படுத்தாத ஒன்றை அறிவியலின் அடுத்த கட்டத்தில் வைத்து அதன் ஊடாக நிகழ்வுகளை பிரித்தறிவது எங்கனம் சாத்தியம்... சகோ செங்கொடி நான் கேட்கும் அடிப்படை கேள்வி இது தான்... கடவுளின் மெய் நிலை குறித்து அறிவியல் வேறு எந்த கருத்தை எதிர்த்து அல்லது ஆதாரித்து ஆதாரப்பூர்வமாக வரையறை ஏற்படுத்தி தந்திருக்கிறது என்பதே...

    அதுவுமில்லாமல் உங்களின் இதயம் தொடர்பான உதாரணங்களில் கூட இனி ஏற்பட போகும் வியாதிகள் அல்லது பிரச்சனைகளை பற்றி இன்னும் அறிவியல் தேடல்கள் தொடர்வதை தான் மையமாக சொல்லி இருக்கிறீர்கள்... உறுதிப்படுத்துதல் என்பது வேறு முழுமைப்படுத்துதல் என்பது வேறு.. என்பதை இதை விட அழகான உதாரணத்தின் மூலம் யாரும் விளக்க முடியாது நன்றி!

    இப்படி முன்னுக்கு பின் முரணான உங்கள் பேச்சுக்கு பெயர் சுய முரண்பாடு என்பதா? காரியவாதம் என்பதா? அல்லது புரிதலற்று முன்முடிகளுடன் தொடரும் உங்களின் குருட்டு வாதம் என்பதா,.?


    // முதலில் நண்பர் குலாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். கடவுளை ஆராயவோ, அறிந்துகொள்ளவோ வழியே இல்லாத நிலை என்பது கடவுளுக்கு குலாம் போன்று அதனை ஏற்றுக் கொள்பவர்கள் கொடுக்கும் தகுதி, புனிதம். அதை மறுக்கும் நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை. கடவுள் என்ற ஒன்று ஐயத்திற்குறியது. அது இருக்கிறதா? இல்லையா? என்பது தான் விவாதம். ஐயமேற்படும் ஒன்றில் மனித குலம் தெளிவு காண்பதற்கு இருக்கும் ஒரே கருவி அறிவியல் தான். அறிவியலில் உரசிப்பார்த்து தான். அதை இல்லை என்று கூறுகிறோம். //

    ஏன் சகோ புரிதலில்லாமல் மீண்டும் மீண்டும் இந்த வார்த்தைகளை சொல்கிறீர்கள். இன்று அறிவியல் நினைக்கும் உயரத்தை விட மேலோங்கி இருக்கிறதென்பது உண்மை தான்.. இன்று அறிவியலில் உரசிப்பார்க்க எல்லா வாய்ப்பும் இருக்கு அதிலும் அறிவியல் உண்மைப்படுத்தாத எதுவும் இப்பேரண்டத்தில் இல்லையென்று சொல்வதற்கு உண்டான எல்லா தகுதியும் இருப்பதாக சொல்கிறீர்கள்.

    ஆனால் மனித சமூகங்கள் மண்ணில் கால் பதித்த காலத்தில் ... எந்த அறிவியல் உணர்வுகளும் பூஜ்ய தொடக்கத்தில் இருக்கும் போது எந்த அறிவியலை ஆதாரமாக கொண்டு கடவுளை மறுத்திருப்பார்கள்... கொஞ்சம் அறிவுப்பூர்வமாக சிந்தித்து.. பதில் சொல்லுங்கள் சகோ.. எல்லாவற்றையும் அறிவியல் என்ற ஒற்றை பையின் உள்ளே கொண்டு போடாதீர்கள்.

    உங்களின் வெற்று யூக அறிவியலுக்கு ஆதாரம் கேட்டால் மீண்டும் மீண்டும் பதில் சொல்லா முடியா நிலையில் புனிதம் கற்பித்து கடவுளை கொணர்ந்ததாக சொல்கிறீர்கள் தவறு என்று எங்களை நோக்கி கரம் நீட்டும் நீங்கள் உங்களின் சரி என்பதற்கு உகந்த பதில் தாருங்கள் என்பது தானே என் வாதம்.

    // ஒரு பொருளுக்கான தரவுகள் கிடைக்கவில்லை என்பதனால் மட்டுமே அதை இல்லை என அறுதியிட்டு கூறிவிட முடியாது என்கிறார் குலாம். ஒப்புகிறேன்.//

    நீங்கள் மட்டுமல்ல நானும் கூட உறுதி செய்யப்பட்ட தரவுகள் கிடைக்க பெற்றால் தான் ஒன்றை உண்மையென ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இங்கே கேள்வி.. ஊர்ஜிதம் செய்ய தகுந்த அல்லது முடிந்த பொருட்களோ / செய்கைகளோ / கருத்துகளோ மட்டுமே இந்த நிலைக்கு கீழ் வரும்.. இவை இல்லா மூலத்தில் அமைந்த ஒன்றை சரி தவறு என ஆராய எந்த அளவுகோல் இருக்கிறது சகோ.. அது தானே எனது தொடர் கேள்வியும் கூட..!

    இதை எளிமைப்படுத்தப்பட்ட இப்படி

    1. அறிவியலால் நிருபிக்க வாய்ப்பில்லாத ஒன்றை வேறு வழிகளில் நிருபிக்க வழி சொல்ல வேண்டும்! அல்லது
    2. அறிவியல் இல்லையென்பதை உறுதி செய்யாத ஒன்றை ஏற்றாக வேண்டும்.. >>> என கேள்வி கேட்டால் என்னை நோக்கியே என் கேள்விகளை திருப்புகிறீர்கள். நான் தெளிவாய் கடவுள் குறித்த மூலங்களை சொல்லியும் இருக்கிறேன், ஆக கடவுளின் மூலங்களை நீங்கள் தான் உங்களின் அறிவுப்பூர்வமாக ஆதாரங்களை வைத்து மறுத்து அதை அறிவியலோடு பொருத்த வேண்டும். மாறாக என் நிலை வாதத்தை மறுக்க அறிவியலை வக்கிலாக ஆக்க கூடாது அறிவியலை நீதிபதியாக்க வேண்டும். ஆக நீங்கள் மேற்கண்ட வினாவிற்கு தர கடமைப்பட்டவர் நீங்கள் தான்

    ReplyDelete
  42. // கடவுளின் இருப்பை இன்றோ நாளையோ உபகரணங்களால் உறுதிப்படுத்தினால் அதற்கு முன்னால் வாழ்ந்த மக்களுக்கு அது அநீதி ஆகிவிடும் என்கிறார். இதெல்லாம் ஆத்திகர்களின் கவலை. ஆத்திகர்களுக்காக நாத்திகர்கள் கவலைப் பட முடியாது. கடவுள் நீதமானவரா? நேர்மையானவரா? அனைவருக்கும் சமமானவரா? என்பதெல்லாம் இங்கு கேள்வியே அல்ல. அப்படி ஒன்று இருக்கிறதா? என்பது தான் இங்கு கேள்வி. //

    இது ஒரு பகுத்தறிவு ரீதியான சிந்தனையா... யோசிக்க வேண்டும் நீங்கள். கடவுளின் இருப்பை வெளிப்புறத்தில் காணும் வாய்ப்பு கி.பி 3000 த்தில் அனைவருக்கும் கிடைக்கும் என்று சொல்வதாக வைத்துக்கொள்வோம்.. இப்போது கடவுள் இருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்வீர்களா.. நீங்கள்...? ஏனெனில் கடவுளின் இருப்பை மறுப்பதாக இருந்தால் அது கி.பி 3000 ஆண்டிற்கு பிறகு தான் அது சாத்தியம். அதுவரை நம்புவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் இருக்கிறது. இப்படி ஒரு நிலை இருந்தால் நீங்கள் கடவுளை நம்புவீர்களா... நேரடியாக இப்போது சொல்லுங்கள்.. இந்த பதிலில் காலங்கள் எவ்வளவு அவசியமானது என நான் தொடர்கிறேன் இன்ஷா அல்லாஹ்.

    //அறிவியல் ரீதியான காரணங்கள்:
    1. எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் என்று எதுவுமில்லை.
    2. தொடக்கமோ முடிவோ இல்லாத பொருள் என்று எதுவும் இல்லை.
    3. எந்த ஒரு பொருளையும் சாராமலும், எந்த ஒன்றிலிருந்து சார்பு பெறப்படாமலும் எதுவுமில்லை.//

    மீண்டும் அதே பல்லவி பாடுகிறீர்கள். உங்களின் அதிகப்பட்ச விளக்கங்கள் தேவையில்லை . ஆற்றலையும், பொருளையுமே மறுக்க மேற்சொன்ன எடுகோல்கள் அவசியம். ஒரு பொருளை சார்ந்த ஒன்றாக இருந்தால் அது எப்படி எதையும் சார்ந்திருக்காத சர்வ வல்லமை பெற்றதாக இருக்க முடியும்... புதிதாய் ஏதாவது கேளுங்கள் சகோ..

    அப்படியே சமூக, வரலாறு காரணிகளை உண்மைப்படுத்த ஆதாரங்களையும் கேட்டிருந்தேன்.. அடுத்த பின்னூட்டத்திலாவது பதிவு செய்ய பாருங்கள்

    ReplyDelete
  43. //5
    ஏற்றுக்கொள்ள முடியும்/// அறிவியலில் தற்செயல் என்று எதுவுமே இல்லை என்பதை நண்பர் குலாமுக்கு எந்த ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் சொல்லிக் கொடுத்தாரோ நமக்குத் தெரியாது. தற்செயல் நிகழ்ச்சி என்றால் முன்கூட்டியே திட்டமிடாதது என்பது தான். அதற்கு காரண காரியங்கள் இருக்கும். அந்தக் காரண காரியங்களைத் தேடிக் கண்டறிவது தான் அறிவியலின் பணி. ஆனால் தற்செயல் என்பதற்கு சில எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகளை நண்பர் குலாம் சேர்க்கிறார், \\\நடக்க சாத்தியமில்லா சூழ்நிலையில் மிக நேர்த்தியாக நடைபெறும் சம்பவம்/// பெருவெடிப்பு திட்டமிடப்பட்ட ஒன்றா? தற்செயலானதா? யாரும் திட்டமிட்டு குதிரையை சொடுக்கி பெருவெடிப்பை நிகழ்த்தவில்லை. ஆனால் அதற்கான காரணத் தொடர்புகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அந்த ஆய்வு முடிவில் பெருவெடிப்பு என்று ஒன்று நிகழவே இல்லை என்றுகூட கண்டறியப்படலாம். ஏனென்றால் அது அறிவியல் யூகம் எனும் நிலையில் தான் இருக்கிறது. இந்த அம்சத்தை கணக்கிலெடுத்துக் கொள்ளாமலேயே நண்பர் குலாம் வாதிட்டுக் கொண்டிருக்கிறார். //

    பகுதி ஐந்திற்கு தற்செயலை உங்கள் வாதத்திற்கு தோதாக தான் இன்னும் வளைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.. தற்செயல் என்பது தற்செயல் நிகழ்ச்சி என்றால் முன்கூட்டியே திட்டமிடாதது என்பது தான். அதற்கு காரண காரியங்கள் இருக்கும். அந்தக் காரண காரியங்களைத் தேடிக் கண்டறிவது தான் அறிவியலின் பணி.
    இந்த அறிவியல் பணி பல யுகங்களை கடந்துமா இன்னும் முடியவில்லை... சரி இன்னும் ஆயிரம் யுகங்களை அறிவியல் எடுத்துக்கொள்ளட்டும்.. பலமாய் ஆய்வு செய்யட்டும்... அதுவரை இந்த கேள்விகளுக்கு அறிவியலின் ஆணித்தரமான பதில் பூஜ்யம் மட்டுமே... அதற்கு ஆயிரம் எக்ஸ்ட்ரா பிட்டீங்குகளை நீங்கள் இன்னும் சேர்த்து தொடருங்கள்... அதுவரை உங்கள் அறிவியல் என்ன பதில் சொல்கிறது என்று காத்திருக்கிறேன்..

    அதை தொடர்ந்து நீங்கள் சொல்லும் உதாரணமெல்லாம் நிகழ்வுற்ற செய்கையின் முழு தகவலையும் அடிப்படையாக வைத்தே சொல்கிறீர்கள் நான். முடிவுற்ற காரியத்தின் விளைவு என்ன என்பதை கேட்கவில்லை.. மாறாக அவ்வாறு ஏன் அந்த காரியம் நிகழ்வுற வேண்டும் என்று கேட்கிறேன்.

    சகோ ஒன்றை முதலில் புரிந்துக்கொள்ளுங்கள் ... எந்த ஒரு செயலின் முழுமுடிவுகள் உங்களுக்கு கிடைக்கவில்லையோ அதாங்க உங்கள் அறிவியலுக்கு... உடனே தனது ஆய்வுகளை தொடர்ந்து கொண்டிருக்கிறது, வாய்ப்புகள் அதிகம்.. இன்னும் சில வருடங்களில் சாத்தியம், இப்படியாக எதிர்காலத்தை மட்டுமே பதிலாக்கினால் இந்த செயல்களை முன்னிருத்தி நாம் விவாதிக்க அறிவியலை நீங்கள் துணைக்கு அழைத்து வர முடியாது.. ஏனெனில் எல்லா விடை தரா கேள்விகளுக்கும் எதிர்க்காலம் விடையளிக்கும் என்றால் நிகழ்காலத்தில் நிலையான இருப்பு குறித்து விவாதிப்பதில் எந்த பயனும் இல்லை... ஆக உறுதி செய்யப்பட்ட ஆதார குறீயிடுகளை மட்டும் இங்கே பதிலாக்கினால் அது தான் வாதத்தின் மறுப்பு நிலைக்கு அழகு!
    இதுவும் சிறுபிள்ளை தனமான கேள்வி என்றால் தற்செயலை அறிவியலாக்கும் உங்களின் வாதம் மிக திறமைமிக்கது!... என்பதில் பெருமிதம் கொள்ளுங்கள்.


    ReplyDelete
  44. //அறிவியல் தான் இந்த பேரண்டத்தைப் படைத்தது என்று கருதுகிறாரா நண்பர் குலாம். அறிவியல் என்பது ஆராயும் முறை. அங்கு செயல்களுக்கு என்ன பங்கு இருக்கிறது? //

    சபாஷ்! அறிவியலை அனைத்திற்கும் காரணமாக்கும்... விதத்தை மையப்படுத்தி உங்கள் சொல்லாடல் இருந்ததால்.. அதே நிலையில் தமிழ் மொழி சொல்லாடால் படி நானும் அறிவியலுக்கு பிற கோள்கள் உருவாக்கத்திற்கு என்ன வேலை என்றேன்..

    சரி அறிவியலில் எந்த செயலுக்கும் பங்குகில்லை.. குட்... அப்படியானால் அந்த கோள்களின் உருவாக்கத்திற்கு கடவுள் தேவையில்லையென்றால் நாத்திகன் என்ற அறிவியலார் தான் இன்னின்ன நோக்கத்திற்காக, இந்த இந்த தேவைக்காக குறிப்பாய் ஏன் / யார் படைத்தது என கூற வேண்டும்... ?
    தெளிவாய் கூறி இருக்கிறென்.. மனித சமூகத்திற்க்காக மட்டும் இந்த பூமி எனும் பேரண்டமும் , பல்வெறு பால்வெளி மண்டலங்களும் படைக்கப்படவில்லை. ஏனெனில் மனிதனை போல பல கோடி படைப்பினங்களை இறைவன் படைத்தும் இருக்கிறான் .
    இது என்ன விவாத முறையோ? நிறைய கேள்விக்குறிகளை உங்களுக்கு சாட்டினால் கடவுள் இருக்கிறார் என கூறும் நீங்கள் தான் எனக்கு பதில் தரவேண்டும்... என்பது...

    நிலையாக நம்பும் ஒன்றை நீங்கள் உறுதிப்படுத்துவதாக இருந்தால் அதற்கான ஆதார அடிப்படையில் தான் நம்ப வேண்டும்.. முச்சிக்கு முன்னூறு முறை கடவுள் ஏன் படைக்க வேண்டும், அதில் என்ன தேவை இருக்கிறது, கடவுளின் இருப்பை எப்படி உணர்வது என்றால் அது இந்த இழை தாண்டி மற்றொரு இழையில் தான் விவாதிக்க வேண்டும். ஏனெனில் கடவுள் இல்லையென்பதில் உங்களை பொருத்தவரை தெளிவற்று இருந்தால் தான் அதுக்குறித்து நாம் பேச வேண்டும். மாறாக கண்டிப்பாக கடவுள் இல்லையென்றால் கடவுள் இருப்பத்ற்கான சாத்தியக்கூறுகள் என நான் சொல்லும் பல புள்ளிகள் உங்கள் ஆதார ரீதியான பதில்களில் மறுக்கப்பட வேண்டும்.. ஆனால் நான் கேட்ட எந்த கேள்விக்கும் பதிலை ஒன்று என்னை நோக்கி திருப்புகிறீர்கள் .அல்லது எதிர்க்காலத்தின் மீது சுமத்துகிறீர்கள்...
    மறுக்கும் ஒன்றின் நிலைப்பாட்டை கூட உங்களால் உறுதியாக்க முடியவில்லையென்றால் என்ன சொல்வது...

    ReplyDelete
  45. // நண்பர் குலாமுக்கு கேள்வி புரியவில்லையா? பேரண்டத்துக்குள் கடவுள் இருக்கிறார் என்று நான் கூறவில்லை. எங்கே வேண்டுமானாலும் அவர் இருந்துவிட்டுப் போகட்டும். நான் கேட்டது எந்த ஒன்றையும் படைக்கும் முன் அவர் எங்கு இருந்தார் என்பது தான். முடிந்தால் பதில் கூற முயலுங்கள் திசை திருப்பாதீர்கள்.

    2. நான் குரானைப் படிப்பது இருக்கட்டும். உங்கள் பதில் என்ன அதைச் சொல்லுங்கள் அப்போதுதானே உங்கள் முகம் தெரியும். //

    நம்பர் ஒன் செம கேள்வி சகோ....

    படைக்க மட்டுமே திறன் வாய்ந்த ஒன்று படைக்கப்படும் பொருட்களுக்கு முன் எங்கே இருந்திருக்கும் என்றால்... இது அடிப்படை அறிவற்ற கேள்வி என்று தான் சொல்வேன்.. ஒன்று பிரிதொன்றை சார்ந்திருந்தால் அதுவும் பலஹீனங்களை தன்னுள் கொண்ட படைப்பே! இப்போது படைப்புகளாக நாம் அறிருந்திருக்கும் வானம் பூமி வேறு பலவகையான கோள்களும் , இடங்களும் , காலங்களும், வெளிகளும் நம்மை போன்ற தேவைகளை அடிப்படையாக கொண்டு வாழ்வை பயணிக்கும் (அற்ப) உயிரினங்களுக்கு மட்டுமே தேவையான ஒன்று...

    கடவுள் என்பதை நாம் ஏற்பதாக இருந்தால் அது காலத்திற்கும் , வெளிக்கும், சூழ்நிலை, இடங்களுக்கும் அப்பாற்ப்பட்டதாக தான் இருக்கும்.. கொஞ்சம் லாஜிக்காக கேள்வி கேளுங்கள் சகோ..

    2. 1981லிருந்தே என் முகம் எல்லாத்திற்கும் தெரியும்... உங்களை போன்ற நாத்திக செம்மல்கள் தான் இரட்டை முகங்களோடு அகத்திலும் புறத்திலும் உலா வருகிறீர்கள். தேவையற்ற தனிமனித சாடல்கள் தவிர்த்து கேள்வி / விவாதம் எனும் நோக்கில் மட்டும் பயணிப்பது நலம்!


    ReplyDelete
  46. // நண்பர் குலாம் மிகுந்த உயவுத் தன்மையுடன் நீங்கள் எழுதியிருக்கும் அந்தப் பதிவில் என் கேள்விக்கான பதில் இல்லை. மட்டுமல்லாது அந்த இடுகையை பாருங்கள் இந்த இடுகையை படியுங்கள் என்றெல்லாம் எழுதாமல் கேள்விக்கான பதிலை எழுதுவது உத்தமம். //

    ஏற்கனவே ஓராயிரம் முறை கேட்கப்பட்ட கேள்விகளுக்கு புதிதாய் என்ன சொல்ல சொல்கிறீர்கள் சகோ செங்கொடி... அப்படி மீண்டும் கருத்துக்கள் சொன்னாலும் மீண்டும் மீள் கேள்விகள் தான் அதை தவிர்ப்பதற்காகவும், கால விரயத்தை போக்குவதற்காகவும்.. லிங்குகளை பகிர்ந்தேன் அதுவும் வேறு நபருடையது அல்ல என்னுடையது தான்.. அதை நீங்கள் படித்தால் அதில் தொடர்ந்த கேள்வி / பதில் தாண்டி மேலும் இலகுவாக அதே பதிவின் கீழ் தொடரலாம்.. அதற்காக தான் மத்தப்படி பக்க பக்கமாய் பின்னூட்டமிட எனக்கு புதிதில்லை... சரி மீண்டும் சொல்லுங்கள் அல்லாஹ், மலக்குகள் தொடர்பாக உங்களின் கேள்விகளை வரிசைப்படுத்துங்கள் இன்ஷா அல்லாஹ் இங்கேயே பதிகிறேன்...

    நீங்கள் கேள்விக்கேட்கும் தகுதிக்கேற்ப தான் என்னாலும் பதில் தர முடியும்... மத்தப்படி பதிலை கண்டு அங்கலாய்ப்பு எல்லாம் தேவையற்றது... எனது கேள்வி எந்த விதத்தில் இருக்கிறதென்பதை உங்கள் கேள்வி தான் தீர்மானிக்கிறது. ஏனெனில் இங்கே பொதுவில் பகிரும் கருத்துக்கள் உங்களுக்கும் எனக்கும் மட்டுமானது அல்ல... நம் இருவர் தாண்டி ஏனையோருக்காகவும் தான். ஆக குலாம் பதில் சொல்வதை பாருங்கள்.. என் கேள்வியே பாருங்கள் என நீங்கள் சொல்வது போல நான் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.. ஏனெனில் ஒரு நிலையில் நாத்திகர்களிடம் அறிவியலை நோக்கி கேள்வி எழுப்பினால் பதில்களென அது குர்-ஆன் அல்லாஹ் பக்கமாய் புலம் பெயர்வதை பலமுறை பார்த்திருக்கிறேன் அதன் பிரதிப்பலிப்பு உங்களின் கருத்திலும் ஊடாக வலம் வருவதை அறிய முடிகிறது.

    // மனிதர்களின் கோரிக்கையை ஏற்று கடவுள் நிறைவேற்றிய ஏதாவது ஒன்றுமனிதன் சோதித்தறியும்படி உலகில் இருக்கிறதா? //

    ஏன் இல்லை... வானத்தையும், பூமியையும் எவ்வாறு படைக்கப்பட்டதென்று பாருங்கள்...
    நமது மொழிகளும், நிறங்களும் ஏன் மாறுப்பட்டு இருக்கின்றது பாருங்கள்,..
    கரு வளர்ச்சி குறித்து பாருங்கள்,
    ஏன் மனிதனின் அன்றாட செயல்களுக்கும் அவனது தேவைக்கும் அவனது உறுப்புகள் ஏன் , எவ்வாறு செயல்படுகின்றன என பாருங்கள்..

    இதில் நீங்கள் சோதித்து அறிந்த விசயத்தை பட்டியிலிடுங்கள் அவை எப்படி கடவுளோடு தொடர்புடையது என நான் சொல்கிறேன் -இன்ஷா அல்லாஹ்...

    அதுவில்லாமல் வழக்கம் போல உங்களின் பொது புரிதலை கடவுள் மறுப்புக்கு ஆறிவு ரீதியான ஆதாரமாக்கினால்... இதைப்போன்ற கேள்விகளெல்லாம் உங்களுக்கு வீணாய் தான் தோன்றும்.. ஏனெனில் உங்களின் பெரும்பாலான கேள்விக் குறிகளுக்கு நீங்கள் எதிர்க்காலத்தை பதிலாக்குகிறீர்கள், நான் நிகழ்காலத்தில் கேள்வியாக்குகிறேன். நாம் இருவரும் 'இறந்த' காலத்தில் இதை முழுமையாக உணர்ந்துக்கொள்வோம் இன்ஷா அல்லாஹ்

    பினிஷ்ஸிங்கில நல்லா தான் முடிக்கிறீங்க...

    பகுத்தறிவு என்பது பகுத்துப் பார்த்து ஆய்ந்தறிந்தவைகளை நேர்மையுடன் பரிசீலித்துப் பார்த்து சாதக பாதகங்களுக்கு அப்பாற்பட்டு உண்மைகளை துணிவுடன் ஏற்றுக் கொள்வது. எந்தவித பரிசீலனையும் இன்றி எந்த ஆதாரமும் இன்றி தான் நம்பும் ஒன்றுக்காக எதையும் வளைக்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு பகுத்தறிவு பகாஅறிவாகத்தான் இருக்கும்.

    மிக நன்று... அடுத்த மறுப்பு எழுதும் முன் இதையும் கவனத்தில் வைத்து தொடருங்கள்

    உங்கள் சகோதரன்
    குலாம்

    ReplyDelete
  47. 1
    அடுத்தகட்ட வாதத்தை தொடங்குமுன் - நண்பர் குலாம் மறைமுகமாக சில குற்றச்சாட்டுகளை என்மீது சுமத்தியிருக்கிறார் - அவைகளுக்கான விளக்கங்களைத் தந்து விடுவது சிறப்பு. \\\இதில் எங்கே இடை சொருகல்... உங்கள் சொல்லில் ஒற்றை எழுத்தை கூட நான் மாற்றவே இல்லையே சகோ/// எழுதப்படும் கருத்துகளில் இடைச் செருகல் செய்துவிட்டதாகவோ, கூடுதல் குறைவு செய்து விட்டதாகவோ நான் கூறவே இல்லையே. பின் ஏன் நண்பர் குலாம் அப்படியான ஒரு பிம்பத்தை ஏற்படுத்த முயல்கிறார். ஒரே பின்னூட்டமாக இடுவதற்கு கூகுள் தளங்களில் வசதியில்லை என்பதால் ஒரு பின்னூட்டமே பல பகுதிகளாக பிரித்து வெளியிடப்படுகிறது. அப்படி வெளியிடப்படும் தனித்தனியான பின்னூட்டங்களில் ஒவ்வொன்றுக்காக மறுப்பு என்று அதன் ரிப்ளே ஆப்சனை பயன்படுத்தினால், நானும் அதுபோல ரிப்ளே ஆப்சனைப் பயன்படுத்தினால் .. .. .. படித்துப் பார்க்கும் வாசகர்களுக்கு எதுவுமே புரியாமல் குழப்பம் தான் மிஞ்சும். விவாதத்தில் ஒருவரின் வாதம் முடிந்த பிறகே அடுத்தவரின் வாதம் தொடங்க வேண்டும். அது தான் சரியானது, ஒருவேளை அது பேருரை போல இருந்தாலும் கூட. இதை புரிந்து கொண்டு இந்தமுறை பின்னூட்டமளித்திருக்கும் நண்பர் குலாம் இடைச் செருகல், கூடுதல் குறைவு என்ற பிம்பமாக்கலுக்கு ஆட்பட்டிருக்க வேண்டாம் என எண்ணுகிறேன்.

    \\\1981லிருந்தே என் முகம் எல்லாத்திற்கும் தெரியும்... உங்களை போன்ற நாத்திக செம்மல்கள் தான் இரட்டை முகங்களோடு அகத்திலும் புறத்திலும் உலா வருகிறீர்கள். தேவையற்ற தனிமனித சாடல்கள் தவிர்த்து/// தனிமனித சாடல் என்று என்னைச் சுட்டிக் கொண்டே நண்பர் குலாம் தனி மனித சாடலில் ஈடுபட்டிருக்கிறார். நான் என்ன எழுதியிருந்தேன், \\\நான் குரானைப் படிப்பது இருக்கட்டும். உங்கள் பதில் என்ன அதைச் சொல்லுங்கள் அப்போதுதானே உங்கள் முகம் தெரியும்/// நான் உங்கள் முகம் தெரியும் எனக் குறிப்பிட்டது உங்கள் அக முகத்தைத் தானேயன்றி உங்கள் புற முகத்தை அல்லரே. அதாவது உங்கள் நோக்கம் அப்போது தான் தெரியவரும் என்பதையே நான் முகம் எனும் குறியீட்டில் குறித்திருந்தேன். [இதற்கான பதிலில் உங்கள் (அக)முகத்தை எப்படி வெளிக்காட்டியிருக்கிறீர்கள் என்பதை உணர்த்துகிறேன்] ஆனால் நண்பர் குலாமோ தேவையற்ற சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார். எதை இரட்டை முகம் எனக் குறிப்பிடுகிறார் நண்பர் குலாம். புனை பெயர் வைத்துக் கொள்வது சமூகக் குற்றமோ, சட்டக் குற்றமோ அல்ல என்பதை நண்பர் குலாம் மிகத் தெளிவாக உணர்ந்து கொள்வது நல்லது. இல்லாவிடின் இணையப் பொதுவெளியில் உலவுவதற்கான அவரின் தகுதி குறித்து ஐயுற வேண்டியதிருக்கும். கவனிக்கவும், நண்பர் குலாமின் கருத்துகளைத் தவிர அவரது புற முகமோ அல்லது வேறெதுவுமோ எனக்கு கிஞ்சிற்றும் அவசியமில்லை. வார்த்தைகளை கவனமாகக் கையாள்வது நண்பர் குலாமுக்கு நல்லது.

    \\\இங்கே பொதுவில் பகிரும் கருத்துக்கள் உங்களுக்கும் எனக்கும் மட்டுமானது அல்ல... நம் இருவர் தாண்டி ஏனையோருக்காகவும் தான்/// இதற்கு ஏற்கனவே சிலமுறை நண்பர் குலாமுக்கு பதில் கூறியிருக்கிறேன். விவாதம் என்று வந்து விட்டால் இருவரும் கேள்வி கேட்டு பதில் கூறிக் கொள்ள வேண்டும். அப்படி கூறிக்கொள்ளும் பதிகளும், கேட்கப்படும் கேள்விகளும் யாரும் படித்து புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக இருக்க வேண்டும். இணையப் பரப்பில் பதியப்படும் எதுவும் பொதுவானவை தாம். என்னுடைய எழுத்துகளில் ஏதாவது அங்கணம் பொதுவான தன்மையற்று இருந்தால் குறிப்பாக சுட்டிக்காட்டி கூறுங்கள் பரிசீலிக்கிறேன். மாறாக குறிப்பாக பதில் கூறுவதே பொதுவானது அல்ல என்பதுபோல் பாவித்துக் கொண்டு எழுத வேண்டாம் என நண்பர் குலாமைக் கோருகிறேன்.

    \\\நாத்திகர்களிடம் அறிவியலை நோக்கி கேள்வி எழுப்பினால் பதில்களென அது குர்-ஆன் அல்லாஹ் பக்கமாய் புலம் பெயர்வதை பலமுறை பார்த்திருக்கிறேன்/// இதுவும் நண்பர் குலாமுக்கு ஏற்கனவே பதில் கூறப்பட்ட ஒன்றுதான். இது கடவுள் குறித்த விவாதம். பொதுவாய் கடவுள் என்று சொல்லப்படுவதன் தகுதிகள் குறித்து வாதங்கள் வைத்தால் நண்பர் குலாம் எங்கள் கடவுள் அப்படி அல்ல என்று கூற மாட்டாரா? நண்பர் குலாம் இஸ்லாமிய கடவுளை மையப்படுத்தியே தன்னுடைய வாதங்களை நகர்த்துகிறார். நானும் இஸ்லாமிய கடவுளை மையப்படுத்தியே என்னுடைய வாதங்களை நகர்த்துகிறேன். இதில் பாசாங்கு ஒன்றுமில்லை.

    ReplyDelete
  48. 2
    \\\நீங்கள் எதிர்க்காலத்தை பதிலாக்குகிறீர்கள், நான் நிகழ்காலத்தில் கேள்வியாக்குகிறேன்/// அவ்வாறல்ல, கேட்கப்படும் கேள்வி எந்தக் காலத்தை மைய நோக்காக கொண்டிருக்கிறதோ அந்தக் காலத்தில் தான் பதிலும் இருக்கும். இதை அந்த பதில்களின் போது விளக்குகிறேன். ஈர்ப்புக் கவர்ச்சிக்காக சொற்களைச் சுழற்ற வேண்டாம்.

    இப்போது வாதங்களுக்குள் நுழைந்து விடலாம் என்றாலும் அதற்கு முன் சில நினைவுபடுத்தல்களை செய்துவிடலாம். கடவுள்: வெற்று நம்பிக்கையா? உறுதியான இருப்பா? எனும் இந்த விவாதத்தில்;
    1. எந்தவித அளவுகோலிலும் கடவுள் அகப்படமாட்டார் என்றால் அவர் உறுதியாக இருக்கிறார் என்று எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள் என்று கேட்டிருந்தேன். இதற்கான பதிலைக் கூறாமல் நண்பர் குலாம் தவிர்ப்பது போல் தெரிகிறது. அவ்வாறன்றி அதற்கு அவர் பதில் கூற வேண்டும்.
    2. அறிவியல் குறைபாடுடையது என்பதில் நண்பர் குலாம் தீவிரமாக இருப்பதால் தம் யதார்த்த வாழ்வில் அறிவியலை விலக்கி வைத்து முடிவெடுத்த நிகழ்வு ஏதேனும் உண்டா எனக் கேட்டிருந்தேன். இதற்கு பதில் கூறுவது விரும்பத் தக்கது.
    3. லாம்கு விசயத்தில் எதை ஏற்பது எதைப் புறந்தள்ளுவது எனக் கேட்டிருந்தேன். இது அடிப்படைக்கு உதவக் கூடியது என்பதால் இதற்கான பதில் அவசியபடுகிறது.
    4. முதலில் அண்ட வெளியில் மோதல்களே நிகழ்வில்லை என்றார் நண்பர் குலாம். பின்னர் மோதல்களை யார் நிகழ்த்தியது என்றார். கடவுள் தான் நிகழ்த்துகிறார் என்றால் அதை நிரூபியுங்கள் என்று கேட்டிருந்தேன். நண்பர் குலாம் இதற்கான நிரூபணங்கள் தர வேண்டும்.
    இவைகளெல்லாம் அடிப்படையானவைகள் அதாவது விவாதத்தின் மையப் பொருளை நோக்கி வாதங்களை நகர்த்துவதற்கு உதவும் கேள்விகள். எனவே இவற்றுக்கான பதில்கள் அவசியம். இனி வாதங்களுக்குச் செல்லலாம்.

    கடவுள் வெற்று நம்பிக்கையா? உறுதியான இருப்பா? எனும் இந்த விவாதத்தில் கடவுள் உறுதியாக இருக்கிறார் என்பதற்கு எந்த வித நிரூபணங்களும் நண்பர் குலாம் சமர்ப்பிக்கவில்லை. அவர் அறிவியலால் அளக்கப்பட முடியாதவர் என்பது தான் பல வண்ண வார்த்தைகளில் மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கிறது. அப்படி அளக்கப்படமுடியாதவர் என்றால் எந்த அடிப்படையில் நீங்கள் உறுதியானவர் என ஏற்கிறீர்கள் எனக் கேட்டால் அதற்கு மௌனமே பதில். இதற்கு மாறாக எதிர்க் கேள்விகளில் தான் இதுவரையான நண்பர் குலாமின் வாதங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அதாவது கடவுள் இவற்றையெல்லாம் படைக்கவில்லை என்றால் வேறு யார் படைத்தது? தெளிவாகச் சொன்னால் நண்பர் குலாமின் வாதம் எதிர்க் கேள்விகளில் தான் நிலை பெற்றிருக்கிறதே தவிர கடவுள் இருக்கிறார் என்பதை ஆதாரப் படுத்துவதில் இல்லை.

    இந்த விவாதத்தின் தொடக்கம் முதலே அறிவியல் குறிப்பிடத்தக்க இடத்தை கைப்பற்றிக் கொண்டிருக்கிறது. அறிவியல் குறைபாடுடையதா? இல்லையா? என்பது இங்கு மைய விவாதம் அல்ல. ஆனால் கடவுளை அளக்க அறிவியல் பயன்படாது என்பதை மெய்ப்படுத்த வேண்டி இந்த விவாதத்தினூடே அறிவியல் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் அறிவியல் குறித்து பிறள்விளக்கங்களே நண்பர் குலாமினால் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. \\\எல்லா வற்றையும் அறிவியலை அளவுகோலாக கொண்டு எடுத்தால் அது முழுமைப்பெற்ற ஒரு தொகுப்பாக இருக்க வேண்டும் .. .. .. முழுமை பெறாத ஒரு தொகுப்பு எப்படி எல்லாவற்றிற்கும் உறுதிப்படுத்தப்பட்ட முடிவை எடுக்க உதவும் .. .. .. நிலையற்று தொடரும் அறிவியலை/// ஆனால் அறிவியல் என்பது இப்படித் தானா?

    அறிவியல் என்பது இன்றல்ல என்றுமே முழுமை பெறாது அதாவது நண்பர் குலாமின் கூற்றுப்படி. இந்த தேதியில் தொடங்கி இந்த தேதியில் முழுமை பெற்று விட்டது என்று கூறுவதற்கு அது ஒரு பொருளல்ல. இன்றல்ல இன்னும் முன்னூறு கோடி ஆண்டுகள் கடந்து பார்த்தாலும் அப்போதும் நண்பர் குலாம் கூறும் பொருளில் அது முழுமை பெற்றதாக இருக்காது. ஏனென்றால் கணந்தோறும் புதிது புதிதாய் ஆய்வுகளை நடத்திக் கொண்டே இருக்கிறது.

    ReplyDelete
  49. 3
    நண்பர் குலாமின் முழுமையின்படி பார்த்தால் கடவுளுக்கு மட்டுமல்ல எந்த ஒன்றுக்கும் அறிவியலை அளவுகோலாக பயன்படுத்த முடியாது. அறிவியல் குறித்து இதைத்தான் நண்பர் குலாம் கூற வருகிறாரா? தெளிவுபடுத்தட்டும்.

    முழுமை பெறாத ஒரு தொகுப்பு தான் அறிவியலா? அறிவியல் என்பது எந்த ஒன்றையும் அது உண்மையா பொய்யா எனக் கண்டறிய உதவும் ஓர் ஆய்வுமுறை. மனித அறிவை வேண்டுமானால் முழுமை பெறாத தொகுப்பு என்று கூறலாம். இதற்காகத்தான் நான் விவாதத்தின் தொடக்கத்தில் அறிவியல் என்றால் என்ன? அறிதல் என்றால் என்ன? என்று தனித்தனி கேள்விகளாக வைத்திருந்தேன். நண்பர் குலாம் இரண்டையும் கலந்து குழப்பிக் கொள்கிறார். அறிவுக்கும் அறிவியலுக்கும் இடையிலான இந்த வித்தியாசம் புரியாமல் தான் நண்பர் குலாம் அறிவியலைக் கூற வருகிறாரா? தெளிவுபடுத்தட்டும்.

    அறிவியல் நிலையற்று தொடருகிறதா? இந்தப் பேரண்டம் கணம் தோறும் மாறிக் கொண்டே இருக்கிறது. அந்த மாற்றங்களை அறிவியல் அறியும் போது அது குறித்து ஏற்கனவே அறிவியல் செய்து வைத்திருந்த முடிவு மாறுகிறது. கவனிக்கவும் அறிவியல் மாறவில்லை, அறிவியலைப் பயன்படுத்தி கண்டுபிடித்த ஒரு முடிவு மாறுகிறது. இப்படி மாறுவதால் அறிவியல் குறைபாடுடையதாகிவிடுமா? முன்பு கூறியதும் சரியான முடிவு இப்போது கூறுவதும் சரியான முடிவு, இரண்டு முடிவுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்தப் பொருள் மாறியிருக்கிறது என்பது தான் உண்மையேயன்றி, மாறியிருக்கிறது என்பதால் அறிவியல் குறைபாடுடையதாகவும் ஆகிவிடாது, நிலையற்றதாகவும் ஆகிவிடாது. இது புரியாமல் தான் நண்பர் குலாம் அறிவியல் பேசிக் கொண்டிருக்கிறாரா? தெளிவுபடுத்தட்டும்.

    அறிவியல், அறிவியலின் மூலம் பெறப்பட்ட முடிவு, மனிதனின் அறிவு இந்த மூன்று தனித்தனியான விசயங்களை ஒன்றாக கலந்து குழப்பி வைத்துக் கொண்டு அதைத்தான் அறிவியல் என்று கூறிக் கொண்டிருக்கிறார் நண்பர் குலாம். அறிவியல் என்பது தேடும் முறை. சான்றுகள் இல்லாத எதையும் அறிவியல் ஏற்பதில்லை. சான்றுகள் இல்லாமல் எதையும் ஏற்காத தேடும் முறையான அறிவியலைக் கொண்டு தான் இப்பேரண்டத்தின் ஒவ்வொரு பொருளையும், ஒவ்வொரு விதியையும், ஒவ்வொரு ஆற்றலையும் நாம் கண்டறிந்து கொண்டிருக்கிறோம். இந்த அடிப்படையில் தான் கடவுள் என்று புதிதாக முளைத்த ஏதோ ஒன்றை தேடுகிறோம். இதுவரை அப்படி ஒன்று இருப்பதற்கான சான்றுகள் எந்த ரூபத்திலும் கிடைக்கவில்லை என்பதால் அப்படி ஒன்று இல்லை என்கிறோம். கிபி 3000 ல் அல்ல, அதுவும் வெளிப்படையாக பார்வைக்கு கிடைக்க வேண்டும் என்பதும் அவசியம் அல்ல, கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஒருசின்ன சான்று ஏதேனும் நாளையே கிடைத்தாலும் போதும், கடவுள் இருக்கிறார் என்பதை அறிவியலும் ஏற்றுக் கொள்ளும் நாங்களும் ஏற்றுக் கொள்வோம். இதில் எந்த விதமான சங்கடமும் எங்களுக்கு இல்லை. ஆனால் அவ்வாறான கொசுறான சான்றேனும் கிடைக்காதவரை கடவுள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. கடவுளை நம்பும் ஆத்திகர்கள் இவ்வாறு இருக்கிறார்களா? எல்லாமே முன்முடிவுகள். அவர்கள் சன்றுகளின் அடிப்படையில், ஆதாரங்களின் அடிப்படையில் முடிவு செய்கிறார்களா? அவர்களுக்கு அவர்களின் நம்பிக்கையே அடிப்படை, அவர்களின் நம்பிக்கையோ வேதத்திலிருந்து வருகிறது, அந்த வேதமோ யாரோ ஒருவர் கடவுளிடமிருந்து வந்தது என்று சொல்லும் வாய்ச் சொல்லாக இருக்கிறது.

    இதைத்தான் நான் பல முறை சுட்டிக் காட்டி விட்டேன், நண்பர் குலாமும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள மறுக்கிறார். கடவுள் எனும் ஒன்றுக்கு ஆத்திகர்கள் கொடுத்து வைத்திருக்கும் தகுதிகள் புனிதங்கள் எல்லாம் யாரோ ஒருவர் சொன்னது. எந்த ஆதாரமும் இல்லாமல் அந்த யாரோ ஒருவர் சொன்னதை எப்படி ஏற்றுக் கொள்வது? இது தான் மையமான பிரச்சனை. நண்பர் குலாம் அடிக்கடி கூறிக் கொண்டிருக்கும் வாதம் ஒன்றிருக்கிறது. அப்பாற்பட்ட ஒன்று எப்படி அறிவியலுக்குள் அகப்படும் என்று. எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர் கடவுள் என்று நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? சரி வேறு எதையெல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்? அவர் எல்லா வல்லமையும் உள்ளவர், அவருக்கு எந்த இணையும் இல்லை, இணையாகவும் எதுவுமில்லை, கடவுளை எந்தக் காலத்திலும், எந்த நுட்பத்தாலும் கண்டு பிடித்துவிட முடியாது வேறு ஏதாவது? அதுசரி இவைகளையெல்லாம் நாங்கள் ஏற்றுக் கொண்டுவிட்டால் நாங்கள் கடவுளை ஏற்பவர்களா? மறுப்பவர்களா? குலாம் ஐயா! நான் பலமுறை

    ReplyDelete
  50. 4
    கூறிவிட்டேன், கடவுளை மறுக்கிறேன் என்றால் நீங்கள் கடவுளுக்கு கூறும் அனைத்து தகுதிகளையும் உள்ளடக்கித்தான் கடவுளை மறுக்கிறோம். இவைகளை கொஞ்சம் கூட பரிசீலிக்காமல், கடவுள் அறிவியலுக்குள் அகப்படமாட்டார், எந்த வழியில் நிரூபிக்க வேண்டும் என்று கூறுங்கள் என்று திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருந்தால் .. .. ..? ஐயா நீங்கள் உங்கள் கடவுளுக்கு கொடுத்திருக்கும் தகுதிகளை நாங்கள் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்? அவைகள் என்ன சூரியன் கிழக்கே உதிக்கும் என்பதைப் போல பொது உண்மைகளா?

    அறிவியலை நீதிபதியாக்க வேண்டும் வக்கீலாக்கக் கூடாது என்றொரு முத்திரை வாக்கியத்தையும் நண்பர் குலாம் கூறியிருக்கிறார். எங்கள் வாதமே அறிவியல் பூர்வமாக இருப்பது தான். உங்களுக்கு வக்கீல் யாரும் இல்லை என்பதால் நான் அழைத்து வந்திருக்கும் வக்கீலை விலக்கிக் கொள்ள வேண்டும் என்கிறீர்களே எப்படி? கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது தான் கேள்வி. இதற்கான பதிலை நாங்கள் அறிவியல் மூலமே தேடுகிறோம். ஏனென்றால் ஒன்று உண்மையா பொய்யா என்று அறிய வேறு வழிமுறைகள் இல்லை. எனவே அறிவியலே எங்களின் வக்கீல். நீதிபதி.. .. ..? நேர்மையுடன் பரிசீலித்துப் பார்க்கும் ஒவ்வொரு மனமும் நீதிபதி தான். உங்களையும் என்னையும் உள்ளடக்கி தாம் சரியென நம்பும், ஏற்றுக் கொண்டிருக்கும் கொள்கைகளில் எது சரியானது என்பதை வாதங்களாக்கி முன்வைக்கிறோம். நேர்மையாக பரிசீலித்துப் பார்க்கும் வரை தான் இது விவாதமாக இருக்கும். எந்தப் பரிசீலனைக்கும் இடமற்று தன்னுடைய வாதத்துக்கு ஆதரவானவைகளை மட்டுமே பார்த்து பேசிக் கொண்டிருப்பவர்கள் யாரானாலும் அவர்கள் விதண்டாவாதிகளே. தான் விதண்டாவாதியா? நேர்மையாக வாதம் செய்பவனா என சீர்தூக்கும் அறிவு இருக்கிறதா .. .. .. அதைத் தவிர வேறொரு நீதிபதி தேவையில்லை. அதேநேரம் உங்களுக்கும் அறிவியல் தான் வக்கீல். ஒருவரே இரண்டு பக்கமும் வக்கீலா? என்று கேட்காதீர்கள். வக்கீல் என்பது வழக்குரைக்கும் முறை. தனித்தனி வக்கீலானலும் இருவருமே வக்கீல் தானே அது போலத்தான். அறிவியல் என்பது உண்மையா பொய்யா என்பதை அறியும் முறை. அந்த அறியும் முறையை இருவரும் கைக் கொண்டு தத்தமது நிலைபாடுகளில் எது சரியானது எனக் காண வேண்டும். அதன் மூலம் இதை கண்ணுறுபவர்களும் பயன்பெற வேண்டும். அதற்குத்தான் இந்த விவாதம். மாறாக நான் அறிவியலையும் நீங்கள் நம்பிக்கையையும் வக்கீலாக்கிக் கொண்டால் முடிவை நோக்கி பயணிக்க முடியாது. ஏனென்றால் அறிவியல் தான் ஏற்றுக் கொள்ளப்பட்ட அறியும் முறையேயன்றி நம்பிக்கையல்ல. இதை திரிபற உள்வாங்கிக் கொண்டு இலக்கை நோக்கி என்னை நீங்களும், உங்களை நானும் நகர்த்துவோம்.

    தற்செயல் சிறந்ததா? கடவுள் சிறந்ததா? தற்செயல் தான் சிறந்தது. கடவுள் என்பதையும், தற்செயல் என்பதையும் நேர்நிறுத்தி ஒப்பிட்டுப் பார்த்தால்; தற்செயல் என்பது எந்தவித முன் திட்டங்களும் இல்லாதது என்பதை மட்டுமே குறியாக கொண்டுள்ளது. ஆனால் கடவுள் என்பது அப்படி அல்ல. அதற்கு கனம் அதிகம். எந்தக் குறுக்கீடுமற்ற சுய தீர்மானம் கொண்ட, எல்லா வல்லமைகளையும் ஒருங்கே கொண்ட ஒன்றாகத்தான் கடவுள் உருவகிக்கப்படுகிறது. இவ்வளவு கனம் கொண்டதாக உருவகிக்கப்படும் ஒன்றுக்கு எந்த வித ஆதாரமும் இல்லை. மறுபக்கம் எளிய தற்செயல் என்பதற்கோ மனிதன் இதுகாறும் தன் அறிதலுக்கு ஆதாரப் புள்ளியாய் கொண்டிருக்கும் அறிவியல் துணை நிலை சான்றுகளை அளிக்கிறது. அதுகுறித்து மேல் விளக்கங்களைத் தேடுகிறது, அது நிகழ்ந்ததற்கான காரணங்களை அலசுகிறது. மட்டுமல்லாமல் தற்செயல் என்பது எதிர்கால அறிவியலுக்கான வெற்றிடங்களைக் கொண்டுள்ளது. கடவுளுக்கோ எல்லாம் முடிந்து, அவன் செயல் எனும் ஒற்றைப் புள்ளியில் இறுகிவிட்டது. எனவே, கடவுள் என்பதைவிட தற்செயல் என்பதே சிறந்தது. இது குறித்து நீங்கள் எழுதியதில் சில எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகளும் இருக்கிறதல்லவா? ஆம் இப்போதைக்கு அறிவியலின் ஆணித்தரமான பதில் பூஜ்ஜியம் தான். அதனால் தான் நாங்கள் காத்திருக்கிறோம். நாளையே அறிவியல் பூஜ்ஜியத்திலிருந்து விடுபட்டு ஒன்றை நோக்கி நகர்ந்தால் எங்கள் காத்திருப்பை விட்டுவிட்டு கடவுளை நோக்கி நகர்ந்துவிட்டுப் போகிறோம். ஆனால் நீங்கள் அறிவியல் ஆணித்தரமான பதில் பூஜ்ஜியமாக இருக்கும் நிலையிலேயே அது உறுதியாக இருக்கிறது என்று அடித்து விடுகிறீர்களே. அது தானே இங்கு கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. உங்களிடம் ஏற்கனவே ஒருமுறை கூறியதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். மனிதனின் தினப்படி வாழ்க்கையில் ஒரு தொடர்பும் இல்லாமல் பேரண்டத்தைப் படைத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டுவிட்ட கடவுள் என்றால் அவர் இருக்கிறார் என்பதை ஏற்பதில் எங்களுக்கு ஆட்சேபனை ஒன்றுமில்லை.

    ReplyDelete
  51. 5
    கவனிக்கவும் மனிதனின் தினப்படி வாழ்க்கையை இயக்குகிறார், வழிகாட்டுதல் தருகிறார் என்பதில் தான் சிக்கல் இருக்கிறது. புரிந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

    இதயத்தை நான் ஓர் அம்சத்தில் எடுத்துக்காட்டு கூறினால் அதையே வேறொரு திசையில் இழுத்துச் செல்கிறீர்கள், உங்கள் விளக்கத்தின்படியே பார்ப்போம். இதயம் குறித்து நாம் வகைப்படுத்த வேண்டுமென்றால் அது குறித்து முன்னமே நாம் அறிந்திருக்க வேண்டும். அதேபோல் கடவுளை அறிந்து அறிவியல் எந்த வரையறையும் செய்திருக்காத போது அறிவியல் மூலம் கடவுளை எப்படி வகைப்படுத்த முடியும்? திருமிகு குலாம் அவர்களே! இதயம் என்றொரு உறுப்பைப் பற்றி யாரும் அறியாதபோது, அப்படி ஒன்று இருக்கிறது என்று யாரும் நம்பிக் கொண்டிருக்கவில்லை, தெரியவந்தபோது யாரும் மறுத்துக் கொண்டிருக்கவும் இல்லை. நீங்கள் எடுத்துக் காட்டிய அதையே தான் நானும் கடவுளுக்கு பொருத்துகிறேன். கடவுள் குறித்து அறிவியல் எந்த வரையறையும் செய்யாத போது அப்படி ஒன்று இருக்கிறது என்று எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? அட மெய்யாகவே கடவுள் இருந்துவிட்டுப் போகட்டும். அவர்தான் இப்பேரண்டத்தைப் படைத்தார் இயக்குகிறார் என்று எந்த அடிப்படையில் நீங்கள் கூறுகிறீர்கள்?

    உறுதிப்படுத்துதல் முழுமைப்படுத்துதல் இந்த இரண்டையும் ஒரே பொருளில் நான் எங்கும் பயன்படுத்தியதாய் நினைவில்லை. நண்பர் குலாம் நீங்கள் உணர்ச்சிவயப்பட்டு பதில் கூறுகிறீர்களே தவிர அறிவுவயப்பட்டு பதில் கூறவில்லை என்பதற்கு பூமியின் வடிவம், இதயத்தின் செயல்பாடுகள் குறித்து எடுத்துக்காட்டாய் நான் எழுதியிருந்தவற்றை நீங்கள் எப்படி மறுபயன்பாடு செய்திருக்கிறீர்கள் என்பதே போதுமானது.

    நண்பர் குலாம் மீண்டும் நான் உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது இது தான், ஒரு விசயத்தில் நான் ஒரு பதில் கூறியிருந்தால் முதலில் அதை பரிசீலியுங்கள். மாறாக எந்த பரிசீலனையுமற்று உங்கள் கூற்றையே மீண்டும் வேறு வார்த்தைகளில் கூறுவது என்றால் .. .. ..? \\\மனித சமூகங்கள் மண்ணில் கால் பதித்த காலத்தில் ... எந்த அறிவியல் உணர்வுகளும் பூஜ்ய தொடக்கத்தில் இருக்கும் போது எந்த அறிவியலை ஆதாரமாக கொண்டு கடவுளை மறுத்திருப்பார்கள்/// ஐயா நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன், கேட்டிருக்கிறேன். மனிதனின் தொடக்க காலத்தில் கடவுள் குறித்த சிந்தனையே மனிதனுக்கு இல்லை என்று, அதை குகை ஓவியங்கள் உறுதிப்படுத்துகின்றன என்று. இது குறித்த உங்கள் பரிசீலனை என்ன? ஆனால் மீண்டும் நீங்கள் கூறியதையே திரும்பக் கூறியிருக்கிறீர்கள். மடக்கி மடக்கி என்னால் நினைவூட்டிக் கொண்டிருக்க முடியாது.

    \\\சமூக, வரலாறு காரணிகளை உண்மைப்படுத்த ஆதாரங்களையும் கேட்டிருந்தேன்/// எதற்கு ஆதாரங்களைக் கேட்கிறீர்கள்? ஐயமானவற்றிற்குத்தான் ஆதாரங்கள் வேண்டும். பூமியில் குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்கிறீர்களா? தெளிவுபடுத்துங்கள் ஆதாரம் தருகிறேன். விலங்குகளுக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்று கருதுகிறீர்களா? கூறுங்கள் ஆதாரம் தருகிறேன். மனிதனின் அற வாழ்வு விழுமியங்கள் காலந்தோறும் மாறிவரவில்லையா? சொல்லுங்கள் ஆதாரம் தருகிறேன். சோதித்தறியத்தக்க ஏதேனும் மனிதன் கேட்டு கடவுளிடமிருந்து கிடைத்திருக்கிறது என்று நம்புகிறீர்களா? நான் இல்லை என்கிறேன் ஆதாரம் நீங்கள் தான் தரவேண்டும். நானும் ஆதாரம் தாருங்கள் என்று தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். கடவுள் குறித்து நேரடியாகக் கூட அல்ல கடவுளோடு தொடர்புடைய ஏதாவது ஒன்றைக்கூட சான்றுகள் கூறி நிரூபியுங்கள் என்று தொடக்கத்திலிருந்தே கேட்டுக் கொண்டிருக்கிறேன். உங்கள் அடுத்த வாதத்திலாவது அப்படி ஏதேனும் கூறுகிறீர்களா என்று பார்ப்போம்.

    அடுத்து நண்பர் குலாம் அழகில் முற்றிய வாக்கியம் ஒன்றை அமைத்துள்ளார், \\\எந்த ஒரு செயலின் முழுமுடிவுகள் உங்களுக்கு கிடைக்கவில்லையோ அதாங்க உங்கள் அறிவியலுக்கு... உடனே தனது ஆய்வுகளை தொடர்ந்து கொண்டிருக்கிறது, வாய்ப்புகள் அதிகம்.. இன்னும் சில வருடங்களில் சாத்தியம், இப்படியாக எதிர்காலத்தை மட்டுமே பதிலாக்கினால் இந்த செயல்களை முன்னிருத்தி நாம் விவாதிக்க அறிவியலை நீங்கள் துணைக்கு அழைத்து வர முடியாது.. ஏனெனில் எல்லா விடை தரா கேள்விகளுக்கும் எதிர்க்காலம் விடையளிக்கும் என்றால் நிகழ்காலத்தில் நிலையான இருப்பு குறித்து விவாதிப்பதில் எந்த பயனும் இல்லை... ஆக உறுதி செய்யப்பட்ட ஆதார குறீயிடுகளை

    ReplyDelete
  52. 6
    மட்டும் இங்கே பதிலாக்கினால் அது தான் வாதத்தின் மறுப்பு நிலைக்கு அழகு/// இதை நாண்பர் குலாம் எதை முன்னிட்டு கூறியிருக்கிறார்? பெருவெடிப்பு ஏன் நிகழ்ந்தது எனும் கேள்விக்கு நான் கூறிய பதிலை முன்னிட்டே இதைக் கூறியிருக்கிறார். இது எதிர்காலம் குறித்த கேள்வியா இல்லையா? இதற்கான நிகழ்கால விடை அறிவியல் இன்னும் அதற்கான பதிலை கண்டுபிடிக்கவில்லை என்பது தான். இது நிகழ்கால பதில். நாளை கிடைக்கக் கூடும் இது எதிர்கால பதில். ஒருவேளை பெருவெடிப்பு எனும் ஒன்று நிகழவே இல்லை என்று கூட முடிவு காணப்படலாம் இது சாத்தியக் கூறு கண்ட பதில். இந்த மூன்று அம்சங்களையும் உள்ளடக்கித் தானே என்னுடைய பதிலைக் கூறியிருந்தேன். இதில் எதிர்காலம் மட்டும் தான் இருக்கிறதா? பெருவெடிப்பு ஏன் நிகழ்ந்தது? என்பது தான் உங்கள் கேள்வி. இப்போதைக்கு அறிவியலிடம் இந்தக் கேள்விக்கு பதிலில்லை. எதிர்காலத்தில் கண்டறியப்படலாம் அல்லது பெருவெடிப்பு என்பதே பொய்யாகிப் போகலாம் என்பது என் பதிலின் சுருக்கம். இது கேள்விக்கான பதிலாக இருக்கிறதா? இல்லையா?; இது யதார்த்தத்துக்கு உட்பட்டிருக்கிறதா? இல்லையா?; இது உண்மையாக இருக்கிறதா? இல்லையா? இது அறிவியலின்படி சரியாக இருக்கிறதா? இல்லையா? இவைகள் தானே ஒரு பதிலை அலசிப்பார்க்கும் முறை. ஆனால் நண்பர் குலாம் இது எதிர்கால பதிலாக இருக்கிறது என்கிறார். கேள்விக்கு பொருத்தமான பதிலை, யதார்த்தமான பதிலை, உண்மையான பதிலை, அறிவியல் ரீதியான பதிலை எதிர்கால பதில் என பரிசீலிக்காமல் ஒதுக்கித் தள்ளும் நண்பர் குலாம், கேட்டிருக்கும் கேள்விகள் எப்படிப்பட்டவை? நண்பர் குலாம் மட்டுமல்ல எதிர்க் கேள்விகளால் மட்டுமே கடவுளை இருத்தி வைக்க எண்ணும் எந்த மதவாதியின் எதிர்க் கேள்விகளை எடுத்துக் கொண்டாலும் அதில் ஒரேஒரு அம்சம் மட்டுமே பிரதானமாய் இருப்பதைக் காணலாம். அது, நிகழ்காலத்தில் அறிவியல் எந்த இடத்தில் தன் தேடல் எல்லையை நிறுத்தியிருக்கிறதோ அந்த இடத்துக்கு மேலே தான் மதவாதிகளின் எதிர்க்கேள்விகள் தொக்கி நிற்கும். நண்பர் குலாம் கேட்ட கேள்விகளையே பாருங்கள், பெருவெடிப்பு நிகழ்ந்ததற்கான காரணிகள் அறிவியலால் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, அதனால் பெருவெடிப்பு ஏன் நிகழ்ந்தது எனும் கேள்வி. பிறக்கும் நேரம் இறக்கும் நேரம் இவைகளை துல்லியமாக கணிக்கும் அளவுக்கு அறிவியல் இன்னும் முன்செல்லவில்லை. அதனால் துல்லியமாக கணிக்க முடியுமா? என்று கேள்வி. எதிர்கால பதில் என ஒதுக்கும் ஐயா குலாம் அவர்களே உங்கள் கேள்விகள் ஏன் எப்போதும் அறிவியலின் நிகழ்கால எல்லையைக் கடந்தே இருக்கிறது? நிகழ்காலத்தில் அறிவியல் மெய்ப்பித்திருக்கும் வினைப்பாடுகளிலிருந்து உங்கள் கேள்விகளை எழுப்பிப் பாருங்களேன். இன்னொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை நாளை பிறக்கும் நேரத்தை துல்லியமாக கூறும் எல்லையை அறிவியல் எட்டி விட்டால் அந்தக் கணத்திலிருந்து பிறக்கும் நேரத்தைக் கூற முடியுமா? எனும் கேள்வியை எந்த மதவாதியும் உச்சரிக்கக் கூட மாட்டார்கள். இவைகள் ஒருபுறம் இருக்கட்டும் பெருவெடிப்பு ஏன் நிகழ்ந்தது? நேரத்தைக் கூற முடியுமா? போன்ற கேள்விகளால் கடவுளின் இருப்பை உறுதிப்படுத்த முடியுமா? முடியாது. வெறும் எதிர்க்கேள்விகள் அவ்வளவு தான். ஆனாலும் நான் பதிலளித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

    \\\அறிவியலில் எந்த செயலுக்கும் பங்குகில்லை.. குட்... அப்படியானால் அந்த கோள்களின் உருவாக்கத்திற்கு கடவுள் தேவையில்லையென்றால் நாத்திகன் என்ற அறிவியலார் தான் இன்னின்ன நோக்கத்திற்காக, இந்த இந்த தேவைக்காக குறிப்பாய் ஏன் / யார் படைத்தது என கூற வேண்டும்/// இப்படியும் நண்பர் குலாம் எழுதியிருக்கிறார். இப்பேரண்டத்தை கடவுள் தான் படைத்தார் என்று நண்பர் குலாம் தான் கூறிக் கொண்டிருக்கிறார். அதற்கு மாறாக கடவுள் படைக்கவில்லை மனிதன் தான் படைத்தான் என்றோ, கடவுளைத் தவிர்த்த வேறு யாரோ படைத்தான் என்றோ நாத்திகர்கள் ஒருபோதும் கூறவில்லை. அவர்கள் கூறுவதெல்லாம் யாராலும் முன்திட்டமிடப்படாத, தற்செயலான ஒரு வினை என்றுதான் கூறுகிறார்கள்.(கவனிக்கவும் தற்செயல் என்பதற்கு முன் திட்டமிடப்படாதது என்பதைத் தவிர வேறெந்தப் பொருளும் இல்லை) அவர்கள் வெளிப்படையாகவே ஒப்புக் கொள்கிறார்கள் அது குறித்து ஆய்வுகளின்படி தான் கூற முடியும் என்று. ஆய்வில் இருக்கிறது என்பவர்கள் பதில் கூற வேண்டுமா? இன்னார் தான் படைத்தார் என்று கூறுபவர்கள் பதில் கூற வேண்டுமா? கடவுள் தான் படைத்தான் என்று கூறுபவர்கள், யாரும் படைக்காமல் தற்செயலாய் உருவானது என்று கூறுபவர்களின் பக்கம் இந்தக் கேள்வியை தள்ளிவிடுவது வேடிக்கையாக இல்லையா?

    ReplyDelete
  53. 7
    \\\மனித சமூகத்திற்க்காக மட்டும் இந்த பூமி எனும் பேரண்டமும் , பல்வெறு பால்வெளி மண்டலங்களும் படைக்கப்படவில்லை. ஏனெனில் மனிதனை போல பல கோடி படைப்பினங்களை இறைவன் படைத்தும் இருக்கிறான்/// இப்படியும் நண்பர் குலாம் கூறியிருக்கிறார். இந்தப்பதிலுக்கான கேள்வியும் நண்பர் குலாம் எழுப்பியது தான். இதோ அந்தக் கேள்வி, \\\மனிதனோ ஏனைய உயிரினங்களோ உயிர் வாழ தகுதியற்ற இலட்சகணக்கான கோள்கள் ஏன் ஏற்படுத்த பட வேண்டும்?/// ஆக கேள்வியும் நண்பர் தான், பதிலும் நண்பர் தான். ஆனால் இரண்டும் வேறு வேறு திசையில் இருக்கிறது. அவர் எழுப்பிய லேள்விக்கு அவரே நேர்மையாய் பதில் சொல்லத் தயாரில்லை.

    \\\நான் கேட்ட எந்த கேள்விக்கும் பதிலை ஒன்று என்னை நோக்கி திருப்புகிறீர்கள் .அல்லது எதிர்க்காலத்தின் மீது சுமத்துகிறீர்கள்/// இந்த எதிர்காலம் மீது சுமத்துகிறீர்கள் என்பதற்கு மேலே பதில் கூறியிருக்கிறேன். நான் கேட்க வேண்டிய கேள்வியை முந்திக் கொண்டு நீங்கள் கேட்டுவிட்டீர்கள் என்பதனாலேயே அது உங்கள் கேள்வி ஆகிவிடாது. அந்தக் கேள்வியின் நோக்கம் என்ன என்பதைக் கொண்டு தான் அது யார் எழுப்பிய, யாருக்காக எழுப்பப்பட்ட கேள்வி என்பதை முடிவு செய்ய வேண்டுமேயல்லாது. யாரிடமிருந்து வருகிறது என்று பார்த்தால் பிழையான முடிவே அமையும்.

    அடுத்து நான் எழுப்பிய கேள்விகளுக்கு நண்பர் குலாம் அளித்த பதில்களைப் பார்ப்போமா?

    1. பேரண்டம் உட்பட அனைத்தையும் அவர் படைப்பதற்கு முன் எங்கு இருந்தார். அதாவது அவர் முதலா? அவர் இருந்த இடம் முதலா? இதற்கு நண்பர் குலாம் தந்திருக்கும் பதில் என்ன? \\\படைப்புகளாக நாம் அறிருந்திருக்கும் வானம் பூமி வேறு பலவகையான கோள்களும் , இடங்களும் , காலங்களும், வெளிகளும் நம்மை போன்ற தேவைகளை அடிப்படையாக கொண்டு வாழ்வை பயணிக்கும் (அற்ப) உயிரினங்களுக்கு மட்டுமே தேவையான ஒன்று/// சுருக்கமாகச் சொல்லால் கடவுள் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர். எல்லாக் கேள்விக்கும் இது ஒன்றுதான் பதிலா? அற்ப உயிரினங்களுக்கு மட்டுமே தேவையான ஒன்று என்று நண்பர் குலாம் கூறுகிறார். ஆனால் நண்பர் கூறும் கடவுளோ தான் அர்ஷ் எனும் ஒன்றின் மீது அமர்ந்ததாக கூறப்பட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர் அர்ஷ் எனும் ஒன்றின் மீது அமர்வதேன்? இதில் மட்டும் லாஜிக் இடிக்கவில்லையா? இது கடவுள் எனும் கற்பனைப் படைப்பில் ஏற்பட்ட முரண்பாடு. இந்த முரண்பாட்டை மறைப்பதற்காக அவரால் எல்லாம் முடியும். இடமில்லாமலேயே அவரால் இருக்க முடியும் என்று சப்பைக் கட்டுகளை வல்லமைகளாக ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர். இந்த சப்பைக்கட்டுகளை ஏற்பதாக இருந்தால் முக்கிய்மான ஒரு கேள்வி ஐயாமாக எழும். அது கடவுள் என்றால் என்ன? எனும் கேள்விதான். எந்த மதவாதியாவது இந்தக் கேள்விக்கு பதில் கூற முடியுமா? எல்லாவற்றுக்கும் அவனால் முடியும் அவன் பலவீனமற்றவன் என்று கூறிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக சிந்திக்கத் தொடங்குங்கள்.

    2. கடவுளின் பிற படைப்பினங்களான, வானவர்கள், சைத்தான்கள் உள்ளிட்ட வேறு சிலவைகளையும் தடம் பிடிக்க முடியவில்லையே ஏன்? இதற்கு நண்பர் கூறும் பதில் என்ன? \\\தயவு செய்து குர்-ஆனை படியுங்கள் சகோ .. .. .. விவாதம் எனும் நோக்கில் மட்டும் பயணிப்பது நலம்/// அதைப்படி இதைப்படி என்று கூறுவதற்குப் பதிலாக கேட்ட கேள்விக்கு பதில் தாருங்கள். இதில் முகம் என்பதை விளக்க வேண்டியதிருக்கிறது அல்லவா? இஸ்லாம் குறித்து நான் எழுதிக் கொண்டிருக்கும் விமர்சனங்கள் நண்பருக்கு வெகு நன்றாகத் தெரியும். குரானைப் படிக்காமல் அவற்றை எழுத முடியுமா? என்றால் தெரிந்திருந்தும் குரானைப் படியுங்கள் என்று கடந்து செல்வதேன். அந்தக் கேள்விக்கு பதில் கூறவும் முடியாமால், கூறாமலிருக்கவும் முடியாமல் பதில் எனும் பதத்தில் குரானைப் படியுங்கள் என்கிறாரே இதில் அவர் முகம் தெரியவில்லையா? இந்த முகம் குறித்துத்தான் எனக்கு அக்கரையேயன்றி நிச்சயமாக அவரின் புறமுகம் குறித்தல்ல. புரிந்து கொள்ளட்டும்.

    ReplyDelete
  54. 3. வானவர்கள் இயங்குவதற்கு என்ன விசையை பயன்படுத்துகிறார்கள்? அதையும் ஏன் அளக்க முடியவில்லை. இதற்கு நண்பர் குலாம் கூறும் பதில் என்ன? \\\மலக்குகள் தொடர்பாக உங்களின் கேள்விகளை வரிசைப்படுத்துங்கள்/// ஐயா! நான் கேள்விகளை தெளிவாகக் கேட்டிருக்கிறேன். பதில் தான் வரவேண்டியிருக்கிறது.

    4. இந்த உலகில் சோதித்தறிய முடியும்படியான, மனிதர்கள் கோரிக்கையை இறைவன் நிறைவேற்றியதற்கான சான்று ஏதாவது கூற முடியுமா? இதற்கு நண்பர் கூறும் பதில் என்ன?, \\\நீங்கள் சோதித்து அறிந்த விசயத்தை பட்டியிலிடுங்கள் அவை எப்படி கடவுளோடு தொடர்புடையது என நான் சொல்கிறேன்/// நண்பர் குலாம், கேள்வியை ஒழுங்காகப் படியுங்கள். வானம், பூமி, மொழி, நிறம், உறுப்புகள் இவைகளெல்லாம் மனிதன் கேட்டு கடவுள் தந்ததா? கேள்வியை ஊன்றிப் படியுங்கள் அப்போதுதான் என்ன கேட்கப்பட்டுள்ளது என்று புரியும்.

    மீண்டும் வருவேன்.

    பின்குறிப்பு: ‘உங்கள் அறிவியல்’ ‘உங்கள் அறிவியல்’ என்றொரு சொல்லாடலை நண்பர் குலாம் பலமுறை பயன்படுத்தியிருக்கிறார். இதன் மூலம் அவர் அறிவியலை ஏற்கவில்லை என்று பொருளாகிறது. இவ்வளவு எளிதாய் நண்பர் குலாம் தன் முகத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்க வேண்டாம் எனக் கருதுகிறேன்.

    ReplyDelete
  55. அன்பு சகோ... செங்கொடி

    முதலில் வார்த்தையின் பயன்பாடுகள் இடத்திற்கு இடம் மாறுபடும் என்பதையும் இடத்தை பொருத்தே அதன் அர்த்தம் மாறும் என்பதையும் சகோ செங்கொடி விளங்கிக்கொள்ள வேண்டும்... இடைசொருகல் என்றால் "கருத்திற்கு இடையில் தேவைற்ற வார்த்தைகளை அமைத்து அந்த வாக்கியத்தில் திரிபுகளை ஏற்படுத்து என்று அர்த்தம் இது தான் இந்த நாள் வரையிலும் அந்த வார்த்தைக்கான விளக்கமாக நான் நினைத்திருக்கிறேன். உங்கள் கருத்தில் எங்கே நான் இடைசொருகல் ஏற்படுத்தி இருக்கிறேன் என்று கேட்டதில் எந்த தவறும் இல்லையென நினைக்கிறென்.. இதில் பிழையென்றால் சொல்ல வேண்டிய இடத்தில் வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுங்கள் சகோ..

    ஒருவர் கூறும் பல கருத்துக்களில் ஒவ்வொன்றையும் பகுதி பகுதியாக பிரித்து அவற்றில் கீழாக அது தொடர்பான கருத்து பரிமாற்றம் நிகழ்வதே குழப்பத்தை தவிர்க்கும் வழியாக எனக்கு தோன்றியது. அஃதில்லாமல் அனைத்து பின்னூட்டங்களுக்கும் கீழாக ஒவ்வொன்றாக தொடரும் போது குறிப்பிட்ட கருத்துக்களில் வீரியம் குறையவோ, அல்லது விளக்கி சொல்லவோ முடியா நிலை ஏற்படும். கைர்.. இனி உங்கள் விருப்பப்படி தொடர்வோம்..

    உங்கள் வாதத்திற்கு வருவோம்..
    வார்த்தைகளை கையாள்வது குலாமிற்கு மட்டுமல்ல பொதுவெளியில் உலாவும் அனைவருக்கும் அவசியமான ஒன்று என்பதை சகோதரர் மறந்து விடாதீர்கள். இங்கே உங்கள் சொல்லாடலில் எனது நோக்கத்தை உங்கள் எழுத்தில் புறமுகமாக சுட்டி காட்டீனீர்கள் என்றால் உங்களின் இரட்டை முகம் என்பதை... செயலும், செயலும் கொள்கை ரீதியாக உங்களுக்கு மாறுப்பட்டிருப்பதை எனது சொல்லாடல் குறிக்கவில்லையென்பதை எப்படி நீங்கள் மறுக்கலாம் சகோ.. ஆக வார்த்தைகள் பார்த்து உபயோகிக்க வேண்டியது நீங்களும் தான்...

    இஸ்லாமிய கடவுளை மையப்படுத்தினால் அதன் ஊடாக பதியப்படும் கருத்துக்களுக்கு மறுப்போ எதிர்ப்போ காட்டலாம் தவறில்லை. ஆனால் பொது புரிதலில் ஒன்றை இங்கே உண்மையாக்க முனைவது தான் பாசாங்கு சகோ செங்கொடி.. ஆரம்பத்தில் கடவுள் என்ற பொது நிலையில் விவாதத்தை தொடங்கி அறிவியல் முரண்பாட்டை சார்ந்த விளக்கங்கள், சாத்தியக்கூறுகளை இழக்கும் பதில்கள் இப்படியாய் ஆனவுடன் இஸ்லாமிய கடவுள் என புலம் பெயர்வது ஏன்.?

    அப்படி இஸ்லாத்தின் கடவுட்கொள்கையே விமர்சிப்பதாக இருந்தால் அதற்கு நான் குர்-ஆனை / ஹதிஸை தான் மேற்கோளாக காட்ட வேண்டும். அப்போது நீங்கள் அதனை மறுத்தே விவாதிக்க வேண்டும்..

    ReplyDelete
  56. யார் சொற்களை ஈர்ப்புக்காக பயன்படுத்துவது சகோ,,
    கடவுள் இருக்கிறார் என்பது எனது நம்பிக்கை... இல்லையென்பது உங்கள் நம்பிக்கை.. இருவரும் பொதுவெளியில் நமது நிலையின் உறுதிப்பாட்டை நிருபிக்க நூறு சதவீகிதம் தெளிவான சான்றுகள் தரா நிலையில் இறந்த காலத்தில் மற்று நிகழ்காலத்தில் இருக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி தான் இரு நிலையின் சாத்தியக்கூற்றை ஆராய வேண்டும். அஃதில்லாமல் எதிர்க்காலத்தில் சாத்திய கூற்றை இங்கே மேற்கோள் காட்டினால் அதை விட பன்மடங்கு சாத்தியக்கூற்றை என்னாலும் சுட்ட முடியும் இறப்பிற்கு பிறகு உண்டாகும் சொர்க்கம், நரகம் போன்றவை கடவுளின் இருப்பை நூறு சதவீகிதம் துல்லியமாக வரையறுக்கும் சாத்தியக்கூறுகள்... இதை நான் இங்கே எனது வாதத்திற்கு ஆதாரமாக தந்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா...?

    ஆக நம்பிக்கை தாண்டி ஒன்றை விவாதிக்கும் பொருளாக்கினால் அதற்கு எதிர்க்காலம் தான் அதிக வலுவுள்ள சாத்தியக்கூறு என்றால் உங்களுக்கு விவாதிக்க வாய்ப்பே இல்லை அதன் பின்னால் நான் சொல்லும் சொர்க்கத்திற்கும் - நரகத்திற்கும்...
    மறுபடியும் பழைய பல்லவிகள்.. தான் மீண்டும் மீண்டும் தொடர்கிறது...

    1. எந்த வித அளவுகோலிலும் அகப்படாமல் ஒன்று இருந்தால் அது தான் கடவுள் என்கிறேன். பின்னர் கடவுளின் இருப்பை எப்படி உணர்வது என்பதற்கும் மனித அறிவாலோ, வேறு எதுவாலோ எந்த ஒன்றை செய்ய சாத்தியமில்லையோ அது இவ்வுலகில் நடைபெற்றால் அதன் ஊடாக கடவுளின் இருப்பை அறிந்துக்கொள்ளலாம் என்கிறென். அதை ஆக்கத்தில் வகையும் படித்தி இருக்கிறேன்.

    2. உறுதிப்படுத்துதல் என்பதற்கும் முழுமைப்படுத்துதல் என்பதற்கும் மிக தெளிவாய் விளக்கமும் கொடுத்து இருக்கிறேன்.. உங்களின் பிடிவாதம் தெளிவாய் புலப்படுகிறது... கொஞ்சம் புரிந்துக்கொள்ள முற்படுங்கள் சகோ செங்கொடி

    3. லாம்கு என்ற உதாரணத்தின் அடிப்படை சாரம்சம். எந்த செய்கைக்கு எப்படி நமக்கு இலக்கணம் கற்பிக்கப்பட்டதோ அதனடிப்படையில் மட்டுமே அதை ஒப்பு நோக்கி அதை ஏற்கவோ மறுக்கவோ செய்ய முடியும். அதனடிப்படையில் நாடு உட்பட ஏனைய எல்லாவற்றிற்கும் அறிவியல் வரையறை ஏற்படுத்தி தந்திருக்கிறது. அதைப்போல கடவுளை மறுக்கவோ ஏற்கவோ செய்வதாக இருந்தால் அதற்கும் அறிவியல் வரையறை ஏற்படுத்தி தந்திருக்க வேண்டும்.. கடவுள் குறித்த அறிவியல் வரையறை என்பதே நம் கேள்வி! பதில் இன்னும் வரவில்லை சகோ

    4 அண்ட வெளியில் நடைபெற்ற, நடைபெரும் மோதல்களும், நிகழ்வுகளும் அறிவியலால் தான் நிகழ்ந்தது என்பதற்கு சகோ செங்கொடி சான்றுகள் தரவேண்டும்..

    சகோ செங்கொடி... கடவுள் இல்லையென்பதற்கு அறிவியல் நிருபணம் முடியாத ஒன்று ஆக கடவுள் இருக்கிறார் என்பதை நிருபிக்க வேறு வழியில் நிருபணம் தர உங்களிடம் என்ன கேள்வி இருக்கிறதென்பதே என் கேள்வி

    அடுத்து பால்வெளி தொடர்பாக ஏற்பட்ட விளைவுக்கான காரணத்தை மட்டுமே அறிவியல் இன்றுவரையிலும் சொல்லி வருகிறது எனது கேள்வி அந்த நிகழ்வு ஏன் ஏற்பட வேண்டும் என்பதே... இனியாவது சொல்லுங்கள்

    ReplyDelete
  57. வாத திரிபை அழகாக பயன்படுத்துகிறீர்கள்... சகோ செங்கொடி..
    அறிவியலை நான் ஏற்கவில்லையென்றோ அது.. மனித சிந்தனைக்கு உகந்தது இல்லையென்றோ இங்கே மட்டுமில்லை எந்த ஆக்கத்திலும் நான் சொன்னது இல்லை. மாறாக அறிவியலை மட்டுமே வைத்து ஒன்றை தீர்மானிக்க முடிவு செய்தால் அது முழுமை பெற்ற தொகுப்பாக எல்லா நிலைகளிலும், எல்லா காலத்திற்கும் அப்பாற்பட்டு இருந்திருக்க வேண்டும். ஆனால் நிலையாக உறுதிச்செய்யப்பட்ட நிகழ்வுகளை தவிர தம் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு தொடர் நிகழ்வு.. அறிவியல் அதை நீங்களே வழிமொழிகிறீர்கள். ஆக இதை வைத்து சாத்தியக்கூற்றை பொய்பிக்காத ஒன்றை இல்லையென்று எப்படி முடிவு செய்ய முடியும்...

    ஏனெனில் காலத்திற்கும் இடத்திற்கும் தகுந்தாற்போல் மாறுபடும் ஒன்று குறைப்பாடுடையது என்பது தான் என் தரப்பு வாதம். அப்படிப்பட்ட அறிவியலில் ஒன்றை குறைப்படுத்த சான்றுகள் வேண்டும் என்கிறென்.

    உங்கள் வாதப்படி.. தம் தொடரும் பயணத்தில் ஒன்றீன் அதன் முன்னர் நிலையிலிருந்து அதற்கு பின்னாளில் வேறு இலக்கணமோ, அல்லது மறுத்தோ புதிய செய்திகளை சொன்னால் அதை ஏற்றுக்கொள்வதாகவும் நாம் உடன்பட்டால் அந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு அறிவியலை நாம் ஏற்பதாக கொண்டால் அதே வாதத்தின் படி இதுவரை கடவுள் அறிவியலுக்கு உட்படவில்லையென்று தானே சொல்ல முடியும். அதெப்படி திட்டவட்டமாக கடவுள் இல்லையென்ற முடிவை எடுக்க முடியும். வேறு எந்த நிகழ்விற்கும் எதிர்க்கால மாற்றம் வாய்ப்பிருக்கிறது எனும் தருணத்தில் கடவுள் என்ற நிகழ்விற்கு மட்டும் நிகழ்காலத்திலே அறிவியல் முழுமையான பதிலை தந்து விட்டது என்பது எப்படி பொருத்தமான வாதம் அது அறிவியலுக்கே எதிரான நிலையல்லவா...?

    கடவுள் இல்லையென்பதற்கு உங்கள் தரப்பில் அப்படி திட்டவட்டமான என்ன சான்று வைத்திருக்கிறது அறிவியல்.. ? கொஞ்சம் விளக்குங்களேன் சகோ

    ReplyDelete
  58. அண்ணே...செங்கொடி... இங்கே உடன்பட மறுக்கும் புள்ளிகளுக்கு புறத்தோற்றத்தில் ஆதார ரீதியாக செய்திகள் இருக்கிறதா என பார்க்கவேண்டும். இல்லையெல் அதற்கான சாத்தியக்கூறுகள் இரு கருத்தில் எதற்கு இருக்க வாய்ப்பு அதிகம் என பார்க்க வேண்டும். அதை தான் இப்போது நானும் நீங்களும் செய்து வருவது..


    அப்படியிருக்கும் போது உங்கள் தரப்பின் கூற்று தான் உண்மையென்பது போல் சொல்வீர்களேயானால் வெரி சிம்பீள்.. நீங்கள் விளக்க வேண்டியது கடவுளின் இருப்பை மறுக்கும் அறிவியல் குறியீடுகள் என்ன என்பது தான்... இதை தான் ஆரம்பத்தில் இருந்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.. அதை தவீர்த்து நீங்கள் உலகின் நிகழ்வுகளை மட்டுமே கடவுளுக்குரியதாக பொறுத்தினால் நிச்சயமாக அறிவியலை வக்கிலாக மட்டும் தான் கொண்டு வர வேண்டி இருக்கும்...

    அதன் கீழாக தொடரும் கருத்துக்கள் உங்கள் வாதத்திற்கு வலுக்கூட்டுவதாக நினைத்து விடாதீர்கள்.. எங்கெல்லாம் நீங்கள் அறிவியலை மட்டுமே துணைக்கழைக்கிறீர்களோ அங்கே அறிவியல் பேணும் தனித்துவத்தின் மூலமாக மட்டுமே பதில் தரவேண்டும். மாறாக தற்செயல், விபத்து போன்ற விளக்கங்களெல்லாம் கடவுள் என்பதன் இருப்பை உணர்த்தும் தூண்டிலில் அகப்படும் மீன்களே. ஆக அறிவியலை சந்தர்ப்பவாத சாட்டசியாக்க வேண்டாம் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்..

    ReplyDelete
  59. நான் எங்கும் உணர்ச்சி வசப்பட்டு உங்களுக்கு பதில் கூற வில்லை சகோ செங்கொடி.. உங்களின் செந்நிற பாவையில் விரியும் எந்த காட்சியும் சிகப்பாய் தெரிய வேண்டும் என்றால் அதற்கு நான் பொறுப்பல்ல.,

    இதயத்தை பற்றி தெரிந்தவன் கூறினால் மட்டுமே அதை இதயம் என நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஏனெனில் அதுக்கு முன்னர் இதயம் குறித்து நம்மில் யாரும் அறிந்திருக்கவில்லை. சரி தான் இதே தானே நானும் சொல்கிறேன்..
    உலகில் யாராலும் வகைப்படுத்த முடியாத, அறிந்திடவும் முடியாத ஒன்றை பிறவற்றின் மூலமாக சொன்னால் அது தான் தர்க்க ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் கடவுள் என்பதை / என்பவரை இங்கே மனிதன் கண்டறியவும் இல்லை அதை வெளிக்கொணரவும் இல்லை., மாறாக கடவுளை குறித்து கடவுளே மனிதனை படைத்து அவனுக்கு அறிமுகப்படுத்தும் போது... கடவுள் என்ற ஒன்றை அது /அவன் கூறியப்படி தான் ஏற்றாக வேண்டும்.

    அப்படி ஏற்கும் அது நமது பகுத்தறிவுக்கு உகந்ததாக இருக்கிறதா என பார்க்க வேண்டும். இங்கே இதயத்தை அறிய அதன் மூலம் பற்றி அறிந்தவர் சொல்கிறவற்றிலிருந்து அதன் பண்புகள், செயல்கள் போன்றவற்றை ஒப்பு நோக்க வேண்டும் அது தான் முறையான செய்கையும் கூட அதுப்போலதானே.. கடவுள் குறித்து எதிர் மறை கருத்துக்கள் கொள்ள அதன் மூலம் என்ன கூறிற்று என ஒப்பு நோக்க வேண்டும். ஆனால் இங்கே மட்டும் அதற்கு முரண்பாடுகள் மட்டுமே கற்பிக்க படுவது ஏனோ..?

    அயா.... மீண்டும் மீண்டும் சொல்கிறேன்... கடவுள் என்பது வெற்று நம்பிக்கை என்றால் அதற்கு எதிராக வைக்கப்படும் வாதங்கள் ஆய்வு ரீதியாக அல்லது ஆதார ரீதியாக சான்றாக்கப்பட வேண்டும். ஏனெனில் அப்போது கடவுளை மறுக்கும் கொள்கை நம்பிக்கை இல்லை மாறாக நிருபணமான உண்மையாக ஏற்றுக்கொள்ள முடியும்...

    சரி கடவுளின் இருப்பு ஆதி மனிதனுக்கு ஏற்பட்டவில்லையென்பதற்கு ஆதார தரவுகள் கேட்டேன்.. அதற்கு குகை ஓவியங்கள் சான்றன்றால் என்ன சொல்வது சரி குறைந்த பட்சம் மனித உருவாக்கம் குறித்து பேசுவோமா...? மனிதன் எப்போது எங்கே தோன்றினான் கூறுங்கள் அதுக்குறித்து தொடர்வோம்..

    ReplyDelete
  60. //பெருவெடிப்பு ஏன் நிகழ்ந்தது எனும் கேள்விக்கு நான் கூறிய பதிலை முன்னிட்டே இதைக் கூறியிருக்கிறார். இது எதிர்காலம் குறித்த கேள்வியா இல்லையா? இதற்கான நிகழ்கால விடை அறிவியல் இன்னும் அதற்கான பதிலை கண்டுபிடிக்கவில்லை என்பது தான். இது நிகழ்கால பதில். நாளை கிடைக்கக் கூடும் இது எதிர்கால பதில். ஒருவேளை பெருவெடிப்பு எனும் ஒன்று நிகழவே இல்லை என்று கூட முடிவு காணப்படலாம் இது சாத்தியக் கூறு கண்ட பதில். இந்த மூன்று அம்சங்களையும் உள்ளடக்கித் தானே என்னுடைய பதிலைக் கூறியிருந்தேன். இதில் எதிர்காலம் மட்டும் தான் இருக்கிறதா? பெருவெடிப்பு ஏன் நிகழ்ந்தது? என்பது தான் உங்கள் கேள்வி. இப்போதைக்கு அறிவியலிடம் இந்தக் கேள்விக்கு பதிலில்லை. எதிர்காலத்தில் கண்டறியப்படலாம் அல்லது பெருவெடிப்பு என்பதே பொய்யாகிப் போகலாம் என்பது என் பதிலின் சுருக்கம். இது கேள்விக்கான பதிலாக இருக்கிறதா? இல்லையா?; //

    இங்கே கேள்விக்கு பதில் வேண்டுமென்பதை விட உண்மைக்கு நெருக்கமான தரவுகள் வேண்டும்.. எங்கே அறிவியல் சான்று தர முடியா இந்த நிலையில் உங்களின் பரந்து விரிந்த சிந்தனையே கொஞ்சம் பரிசீலிக்கலாமே... கடவுளின் இருப்பை உண்மைப்படுத்தும் நிகழ்வாக கூட இது இருக்கலாமே... என்றைக்காவது எதிர்மறை கண்ணோட்டதோடு இப்படி சிந்தீத்தீர்களா சகோ செங்கொடி..? யதார்த்தை தாண்டி உண்மையே உறுதிப்படுத்தும் சாத்தியக்கூறுகள் இந்நிலையில் எதற்கு அதிகம் என்பதை சிந்தித்து பார்க்க கடமைப்பட்டு இருக்கீறீர்கள் சகோ செங்கொடி

    எதிர்க்காலம் பதில் தந்தால் பரவாயில்லை கிளைக்கேள்விகளுக்கு மட்டுமே அறிவியல் பதில் தரவேண்டும்..? ஆனால் பெருவெடிப்பு நிகழவில்லையென்றால் ஒட்டுமொத்த அறிவியலும் அர்த்தமற்றதாகி விடும் சகோ செங்கொடி..
    தேனீர் கோப்பையிலிருந்து தற்செயலாக சிதறி விடும் தேனீர் வடிவங்கள் கூட மீண்டுமொரு தரையில் அதே வடிவில் விழ வாய்ப்பில்லையெனும் போது, அந்த தேனீரே கோப்பைக்குள் தற்செயலாக வந்தது என்று சொன்னால் என்ன சொல்வது....???????


    அறிவியலில் அனைத்திற்கும் பதிலுண்டு அதனால் தான் கடவுளை மறுக்கிறோமென்றால் இதற்கும் தெளிவான பதில்கள் தந்தாக வேண்டும் அஃதில்லாமல் இப்படிப்பட்ட கேள்விகள் மதவாதிகளின் சந்தர்ப்பவாத கேள்விகள் என்றால் உண்மையாகவே கடவுள் இல்லையென்ற வெற்று நம்பிகையில் இருப்பது மத எதிர்ப்புவாதிகளே... ஐயா செங்கொடி... இதற்கு தெளிவாய் பதில் தர அடுத்த முறையிலாவது முயலுங்கள்...

    ReplyDelete
  61. //\\\மனித சமூகத்திற்க்காக மட்டும் இந்த பூமி எனும் பேரண்டமும் , பல்வெறு பால்வெளி மண்டலங்களும் படைக்கப்படவில்லை. ஏனெனில் மனிதனை போல பல கோடி படைப்பினங்களை இறைவன் படைத்தும் இருக்கிறான்/// இப்படியும் நண்பர் குலாம் கூறியிருக்கிறார். இந்தப்பதிலுக்கான கேள்வியும் நண்பர் குலாம் எழுப்பியது தான். இதோ அந்தக் கேள்வி, \\\மனிதனோ ஏனைய உயிரினங்களோ உயிர் வாழ தகுதியற்ற இலட்சகணக்கான கோள்கள் ஏன் ஏற்படுத்த பட வேண்டும்?/// ஆக கேள்வியும் நண்பர் தான், பதிலும் நண்பர் தான். ஆனால் இரண்டும் வேறு வேறு திசையில் இருக்கிறது. அவர் எழுப்பிய லேள்விக்கு அவரே நேர்மையாய் பதில் சொல்லத் தயாரில்லை.//

    சரிதான் இந்த கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லையென்பதை ஒத்துக்கொண்டதற்கு நன்றி!. இதை முரண்பாடாக காட்ட முயற்சித்து இருக்கிறீர்கள்.. முதலில் நான் என்ன சொன்னேன் என்பதை விளங்கிக்கொள்ள முயலுங்கள் சகோ

    முதலில்
    மனித சமூகத்திற்க்காக மட்டும் இந்த பூமி எனும் பேரண்டமும் , பல்வெறு பால்வெளி மண்டலங்களும் படைக்கப்படவில்லை. ஏனெனில் மனிதனை போல பல கோடி படைப்பினங்களை இறைவன் படைத்தும் இருக்கிறான்

    அடுத்து \\\மனிதனோ ஏனைய உயிரினங்களோ உயிர் வாழ தகுதியற்ற இலட்சகணக்கான கோள்கள் ஏன் ஏற்படுத்த பட வேண்டும்?//
    இவற்றில் என்ன முரண்பாடு இருக்கிறது ..? படைப்பினங்கள் என்பது மனிதனும், ஏனைய உயிரினங்களும் மட்டும் தானா... கல்லும் ,மண்ணும், மலையும், துகள்களும், பாறைகளும் போன்ற அஃறிணையும் கடவுளின் படைப்பினமே... ஆக உயிர்கள் வாழ தகுதியற்ற வெறும் கல்லும் மண்ணும் மட்டுமே நிரம்பிய கோள்கள் ஏன் உருவாக்கப்பட வேண்டும் என்பதே கேள்வி?

    ஏனெனில் தகவமைப்பு அடிப்படையில் மட்டுமே எந்த உயிரும் தம்மை பாதுக்காத்துக்கொள்ள முடியும் என்பது பரிணாமம். இங்கே அதற்கு அவசியமே இல்லாத நிலையில் கோள்கள் ஏன் ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த கேள்வியின் உள் நோக்கம்..

    கேள்வியின் சாரத்தை முதலில் புரிந்துக்கொள்ளுங்கள் சகோ பிறகு உங்கள் சுய விளக்கத்தை சொல்லலாம்...

    ReplyDelete
  62. அர்ஷ்...!

    குட் இந்த கேள்விக்கு இன்னும் நீங்கள் வரவில்லையே என நினைத்தேன்... இது 1400 வருட பழமை கேள்விதான் சகோ... நான் முன்னமே கூறினேன் இஸ்லாம் என வரும்போது அதை இஸ்லாமிய வரம்பிற்குள் மட்டுமே நீங்கள் பொய் படுத்த வேண்டும். அஃதில்லாமல் கடவுள் குறித்த பொது நிலை பதிலில் இஸ்லாத்தை லாகவமாக நுழைக்க பார்க்கும் உங்கள் சிற்றெண்ணம் எனக்கு தெளிவாய் புரிகிறது,

    கடவுள் காலத்திற்கும் , இடத்திற்கும் அப்பாற்பட்டவர் என்றால் அவர் தனது வல்லமையின் வெளிப்பாட்டை எங்கெயும் பதிய கூடாது என்று உங்களுக்கு யார் அளவுகோல் தந்தது... நாத்திகவாதிகளின் வழமையான முரண்பாட்டு மன நிலையில் நீங்களும் உடன்படும் புள்ளியில் இதுவும் ஒன்று.
    இஸ்லாம் என நுழைந்தால் அதன் ஊடான பதில்களில் தான் உங்களின் தரப்பை நியாயப்படுத்த வேண்டும்.. சரி சொல்ல வேண்டிய நமது கடமைக்கு சொல்வோம்.. உடன்படுவதும் மறுப்பதும் உங்களின் விருப்பம்.

    முதலில் இதற்கு விடை தரும் முன் அல்லாஹ் அர்ஷில் மட்டும் தான் எப்போதும் அமர்ந்து இருப்பான் என்பதற்கு நீங்கள் ஆதாரம் தர வேண்டும். கவனிக்க "எப்போதும்" அல்லது என்றேன்றும் என்பதுதற்கான பதில் வேண்டும்.

    ஐயா, உங்களின் இஸ்லாமிய அறிவை வெளிச்சம் போட்டு காட்டியதற்கு நன்றி... அர்ஷ் என்பது அவனது வல்லமையின் வெளிப்பாட்டிற்காக அவனுக்கே உரிய பெருமை, புகழுக்காக அவன் தன் நிலையின் பிரம்மாண்டத்தை பிரகடனப்படுத்த அர்ஷ் எனும் நீரின் மேல அமைக்கப்பட்டிருக்கும் அரியாசனத்தில் அமர்ந்திருப்பதாக கூறுகிறான். இங்கே அவனது வல்லமையின் வெளிப்பாடான வார்த்தை தான் தவிர அவனது தேவையே முன்னிருத்தி சொல்லவில்லை. ஏனெனில் அடுத்து இந்த ஹதிஸில் அந்த அர்ஷை வானவர்கள் சுமக்கிறார்கள் என்றும் வருகிறது. அப்படியானால் வானவர்களின் உதவியும் இறைவனுக்கு தேவையா என கேட்கவில்லையா...?

    சின்ன உதாரணம் சொல்லலாம்... உலகின் மிக சிறந்த பணக்காரன் வீட்டில் அனைத்து வேலைகளுக்கு ஆட்களை வைத்திருப்பான். இதற்கு காரணம் அவனது ஆரம்பத்தின் வெளிப்பாடா,,,> அல்லது கடைக்கு சென்று ஒரு டீ வாங்கி குடிக்க கூட அவனுக்கு முடியாதா...? இதற்கு பதில் தரும் பொறுப்பை உங்களிடம் தருகிறேன். இது உதாரணம் மட்டுமே ஒப்பீடு அல்ல..

    ஏனெனில் ஹதிஸ்கள் மற்றும் குர்-ஆன் பல இடங்களில் செய்கையே நேரடியாக அவனே செய்வதை போன்று இருக்கிறது.அதிகம் தேவையில்லை ஒரு உதாரணம் சொல்கிறேன் ஒரு ஹதிஸில் நீங்கள் நற்கருமங்கள் செய்வதற்காக அவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் அவன் உங்களை நோக்கி இரண்டு அடி நோக்கி வருவான், நீங்கள் ஜான் நகர்ந்தால் அவன் முழம் நகர்ந்து வருவான் ,நீங்கள் அவனை நோக்கி நடந்து வந்தால் அவன் ஓடி வருவான்...
    இது நேரடியாக பார்த்தால் கடவுள் என்பவரின் சக்திக்கு சிறிதும் பொருத்தமற்ற வாதம்... யாரும் கடவுளை நடந்தால் எங்கும் கடவுள் அவரை நோக்கி ஓடிவருவதில்லை...
    மேற்கண்ட வாக்கியம் கடவுள் கடமையாக்கிய நன்மையான காரியங்களில் பக்கம் நாம் சிறிது அடி எடுத்து வைத்தால் கடவுள் அதற்கான தூண்டுதலை அதிகரிக்க செய்து அதன் வழியிலே நமது நன்மையான காரியத்தை தொடர செய்வார்.. என்பதே அறிவார்ந்த எல்லோரும் புரிந்துக்கொள்ளும் செய்தி!

    ReplyDelete
  63. ஆக அர்ஷ், மலக்குகள் போன்ற எதிர் நிலை கேள்விகளால் கடவுளை மறுக்க முடியாது, வேண்டுமானால் பலஹீன கடவுள் என்று தான் சொல்ல முடியும்..

    மலக்குகள் குறித்து தேவையான பகுதிகளை மட்டும் இங்கே பகிர்கிறேன்

    மலக்குகள் இருப்பதை அறிவியலால் நிருப்பிக்க முடியுமா...?

    மலக்குகள் மனிதனை போன்றே ஒரு படைப்பை தவிர மனித படைப்பின் எத்தகையை அம்சமும் அவர்களுக்கு பொருந்தாது என்பதை கவனத்தில் வைத்து தொடருங்கள்.,

    அறிவியல் கோட்பாடுகளுக்கும்,இறைவனின் வார்த்தைகளான குர்-ஆனிய கோட்பாடுகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும்., இன்று நம்மிடையே அறிவியல் என உள்ளவைகளை, அவை எவ்வாறு ஏற்பட்டது,ஏற்படுத்திய விளைவு முதலிய காரணிகளை கையில் வைத்து கொண்டு,பிறகே நாம் அதை உண்மை என்கிறோம்.

    ஒரு எளிய நிகழ்வுதாரணம், இன்று நம் கையில் இருக்கும் வானவில் குறித்த வரைவிலணத்தின் படி அவை எப்படி ஏற்படும், ஏன் ஏற்படும்,எவ்வளவு நேரம் ஏற்படும் போன்ற தகவல்களை மிக துல்லியமாக தர முடியும்., அதற்கு (மாறுபடாமல் இருப்பதற்கு) பெயர் தான் அறிவியல்,

    காரணம் பல்வேறு கால சூழ்நிலைகளில், நேரங்களில், இடங்களில் ஏற்பட்ட வானவில் தோற்றங்கள் குறித்த நிகழ்வுகளை ஒருசேர இணைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் வானவில் குறித்து மிக தெளிவாக அறிகிறோம்.

    இவ்விடத்தில் ஒன்றை நன்றாக கவனியுங்கள் நமக்கு கிடைக்கபெற்ற ஒரு முழுமைப்பெற்ற செயல் வடிவத்தை வைத்து கொண்டே அதன் தொடர் செயலாக்கம் மற்றும் ஏற்கனவே அவை செயல் பட தொடங்கிய விதம் குறித்து உண்மையே வெளிபடுத்த முடியும்., மாறாக உலகில் முன்முதலில் வானவில் தோன்றுவதற்கு முன்பே இன்னின்ன காலங்களில் நேர அளவில் நிறங்களில் வானவில் தோன்றும் என யாரும் கூறவில்லை.

    இதற்கு விளக்கம்- எந்த அறிவியலாரிடமும் இருக்கிறதா...? வானவில் குறித்து அவர்கள் முன்னர் அறியாததே...!
    என்ற ஒரு காரணமே விடையாக இருக்கும், மேலும் இன்று நாம் வகுத்திருக்கும் வானவில் குறித்த கோட்பாடுகள் அனைத்தும் நம் கண்ட ஆய்வின் அடிப்படையில் மட்டுமே கோட்பாடுகளாக வைத்திருக்கின்றோம்.

    மேலும் இதற்கு மேல் எந்தவித கோட்பாடும் வானவில் குறித்து இனி மாறாது என எவரும் சொல்ல முடியாது. இன்னும் பல ஆண்டுகள் கழித்து வானவில்லில் நிறப்பிரிகை மாறுபாடோ,தோன்றும் கால அளவில் ,சுழலில் மாறுபாடு ஏற்பட்டாலோ யாரும் இதுகுறித்து யாரும் ,ஏற்கனவே வானவில் குறித்து கூறப்பட்ட கோட்பாடுகள் பொய்யென கூற மாட்டார்கள் .மாறாக வானவில் குறித்த "அறிவியல் கண்டுப்பிடிப்பில்" மேலும் ஒரு மைல்கல் என பெருமிதம் கொள்வார்கள்.

    ஆக,நம் கண முன் தெரியும் நிதர்சனமான உண்மைகளுக்கேற்ற வகையில் காரணத்தை மெல்ல மெல்ல அறிவதே அறிவியல்!,

    அதே போலத்தான் சந்திர /சூரிய கிரகணங்களும் இன்னும் 1000 வருடங்கள் கழித்து கூட எப்போது ஏற்படும்,எந்த நாட்டில் எவ்வளவு நேரம் தெரியும் என்பதை மிக துல்லியமாக சொல்ல முடிந்த அறிவியலாருக்கு முதல் கிரகணங்கள் ஏற்படுவதற்கு முன்பு இப்படி ஒரு கிரணக செயல் பாடுகள் ஏற்படுதல் குறித்த எந்த வித தகவல்களும் இல்லை.,

    அதேபோலத்தான் ஏனைய பிற அறிவியல் செயல் பாடுகளும். எனவேதான் EXPIRY தேதிக்கு முன்னே கெட்டு போகும் உணவு பொருட்கள் மற்றும் EXPIRY தேதி முடிந்தும் செயல்படும் பாட்டரி போன்ற வேதி பொருட்களுக்கு அறிவியல் முரண்பாட்டை நாம் முன்னிருத்துவதில்லை

    இதற்கு நேர்மாறாக இஸ்லாத்தின் அடிப்படை இருக்கிறது.(அறிவியலுக்கு மாற்றமாக அல்ல,மேற்குறிப்பட்ட செயல்முறை விதிக்கு மாற்றமாக) இஸ்லாம் தன்னுடைய கோட்பாடுகளையும், கொள்கைகளையும் மிக அழகாக, தெளிவாக மற்றும் விரிவாக முன்மொழிந்து, மேலும் அக்கொள்கைகள் எக்காலத்திருக்கும், யாருக்காகவும் எதற்காகவும் நெகிவுதன்மையடையாது என பிரகடனபடுத்திய பிறகே மனித சமுகத்திற்கு தன்னை அறிமுகப்படுத்துகிறது.

    அவ்வாறு விளக்கப்பட்ட அக்கொள்கைகளை செயல்படுத்த காரணங்களையும் கூறியுள்ளது. இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளில் மிக முக்கியமானது "மறைவானவற்றின் மீது நம்பிகை வைப்பது" இதன் கீழாக தான் நாம் பார்க்கும் மலக்குகள் சார்ந்த கோட்பாடுகள் வருகிறது.

    ஆக மலக்குகளின் தன்மையை விளக்கி அவர்களை இந்த உலகில் யாரும் நிகழ்வின் அடிப்படையில் அறிந்து கொள்ளமுடியாது என தெளிவுறுத்திய பின்னரே அவர்கள் குறித்த இன்னபிற நடவடிக்கைகளை மேற்கொள்ள சொல்கிறது.

    குர்-ஆன் இத்தெரிவை யாரும் கேள்வி எழுப்பாமலே அவை குறித்து தன்னிலை விளக்கம் அளிக்கிறது. எனவே இன்று மலக்குகளை ஏற்க/நம்ப மறுப்போர் எவரும் மலக்குகள் குறித்து பேசும் போது அவர்(மலக்கு)கள் தொடர்பான மூலங்கள் குர்-ஆன்லிருந்தே பெறப்பட்டன என்பதை மறந்து விடக்கூடாது.,

    ReplyDelete
  64. எனவே யாரும் அறியாத ஒன்றை பற்றி அதற்கு ஒரு வரைவிலக்கணமும் கொடுத்து (அதுவும் யாரும் அதுகுறித்து கேள்வி கேட்காமலே)நிகழ்வின் அடிப்படையில் இவ்வுலகத்தில் யாரும் உளவியல் மற்றும் உணர்வுரீதியாக அவர்களின் இருப்பை அறிந்துக்கொள்ளவும் முடியாது என அச்செயலுக்கு முழு வரையறை தரும் போது அறிவியல் ரீதியாக என்ன முரண்பாடு இருக்கிறது

    ஏனெனில் அறிவியலுக்கு முரண்படும் செயலானது,நிருப்பிக்கபட்ட அறிவியல் ஆய்வோடு நாம் ஒப்பிடும் ஒரு சோதனை முற்றிலும் வேறுபடுவதே ஆகும். மலக்குகள் குறித்து விஞ்ஞான ரீதியான ஒரு வரைவிலக்கணமோ அல்லது எந்த ஒரு அறிவியல் சோதனையோ மேற்கொள்ளப்படவில்லை. எனவே இங்கு அறிவியல் முரண்பாட்டிற்கு வேலையே இல்லை.

    ReplyDelete
  65. //உங்கள் அறிவியல்’ என்றொரு சொல்லாடலை நண்பர் குலாம் பலமுறை பயன்படுத்தியிருக்கிறார். இதன் மூலம் அவர் அறிவியலை ஏற்கவில்லை என்று பொருளாகிறது//

    சின்ன திருத்தம்... எங்கே உங்களால விளக்க வழியில்லையோ, விளக்க முடியவில்லையோ அங்கே சந்தர்ப்பவாதத்திற்காக பயன்படுத்தும் உங்கள் அறிவியலை மட்டுமே நான் ஏற்கவில்லை.

    திருத்திக்கொள்ளுங்கள் சகோ


    இறை நாடினால் சந்திப்போம்...
    உங்கள் சகோதரன்
    குலாம்

    ReplyDelete
  66. 1
    நண்பர் குலாமின் கடந்த பதிலைப் பார்க்கும் போது, 1. நான் எழுப்பியிருந்த பல கேள்விகளுக்கு குறிப்பான பதில் இல்லை. 2. நான் எழுதிய பல விசயங்களைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவே இல்லை. 3. ஒரு குறுகிய வட்டத்திற்குள் அமைந்த பதில்களே தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவைகளைத் தொகுத்தால், கடவுள் ஒரு வெற்று நம்பிக்கை என்பதை மறுக்கவும் முடியாமல், உறுதியான இருப்பு என்பதை நிறுவவும் முடியாமல் தவிப்பது புலனாகிறது. உடனே இதை அப்படியே சொற்களை மட்டும் மாற்றிபொ போட்டு நண்பர் குலாம் எழுதக் கூடும். அப்படிதான் அவர் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் நான் கூறுவதற்கு என்னால் காரணங்களைக் கூற முடியும் என்பது தான் இதில் கவனிக்கப்பட வேண்டியது.

    நான் எழுப்பியிருந்த பல கேள்விகளுக்கு குறிப்பான பதில் இல்லை

    1. எந்தவித அளவுகோலிலும் கடவுள் அகப்படமாட்டார் என்றால் அவர் உறுதியாக இருக்கிறார் என்று எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள் என்று கேட்டிருந்தேன். இதற்கான பதிலைக் கூறாமல் நண்பர் குலாம் தவிர்ப்பது போல் தெரிகிறது. அவ்வாறன்றி அதற்கு அவர் பதில் கூற வேண்டும்.
    2. அறிவியல் குறைபாடுடையது என்பதில் நண்பர் குலாம் தீவிரமாக இருப்பதால் தம் யதார்த்த வாழ்வில் அறிவியலை விலக்கி வைத்து முடிவெடுத்த நிகழ்வு ஏதேனும் உண்டா எனக் கேட்டிருந்தேன். இதற்கு பதில் கூறுவது விரும்பத் தக்கது.
    3. முதலில் அண்ட வெளியில் மோதல்களே நிகழ்வில்லை என்றார் நண்பர் குலாம். பின்னர் மோதல்களை யார் நிகழ்த்தியது என்றார். கடவுள் தான் நிகழ்த்துகிறார் என்றால் அதை நிரூபியுங்கள் என்று கேட்டிருந்தேன். நண்பர் குலாம் இதற்கான நிரூபணங்கள் தர வேண்டும்.
    4. கடவுள் என்றால் என்ன?
    5. பேரண்டம் உட்பட அனைத்தையும் படைப்பதற்கு முன் கடவுள் எங்கு இருந்தார்?
    6. இந்த உலகில் சோதித்தறிய முடியும்படியான, மனிதர்கள் கோரிக்கையை இறைவன் நிறைவேற்றியதற்கான சான்று ஏதாவது கூற முடியுமா?
    இந்த என்னுடைய கேள்விகளுக்கெல்லாம் ஏன் குலாம் பதில் கூற மறுக்கிறார்? இதற்கான சூக்குமம் நண்பர் குலாம் என்ன பதில் கூறிக் கொண்டிருக்கிறார் என்பதில் ஒழிந்திருக்கிறது.

    சுற்றிச் சுற்றி நண்பர் குலாம் என்ன கூறிக் கொண்டிருக்கிறார்? கடவுள் என்பதை எதனாலும் அளக்க முடியாது. கடவுள் மட்டுமல்ல, கடவுளோடு தொடர்புடையதாக கூறப்படும் வானவர்கள் உள்ளிட்ட எதனையும் கடவுளுக்கு கொடுக்கும் அதே தகுதிகளோடு பொருத்தி அவைகளும் எதனாலும் அளக்க முடியாதவைகள். இதைத்தான் மடக்கி மடக்கி பல்வேறு வண்ணங்களில் கூறிக் கொண்டிருக்கிறார். இப்போது நண்பர் குலாம் பதில் கூற மறுக்கும் “எந்தவித அளவுகோலிலும் கடவுள் அகப்படமாட்டார் என்றால் அவர் உறுதியாக இருக்கிறார் என்று எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்” எனும் கேள்வியோடு ஒப்பு நோக்கிப் பாருங்கள். விடை வெகு எளிதானது தான். கடவுள் வெற்று நம்பிக்கை தான் எனும் முடிவுக்கு நண்பர் குலாமும் வந்து விட்டார், ஆனால் அவர் ஆத்திகவாதியாயிற்றே எப்படி ஒப்புக் கொள்வது அது தான் பிரச்சனை என்று கருதுகிறேன். நண்பர் குலாம் இதை மறுக்க வேண்டுமென்றால் தைரியமாக அந்தக் கேள்விக்கு பதில் கூற முன்வரட்டும். பார்க்கலாம்.

    நான் எழுதிய பல விசயங்களைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவே இல்லை

    அறிவியல் குறித்து நண்பர் குலாம் மீண்டும் மீண்டும் பிறள் விளக்கங்களையே அளித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறி, நண்பர் எதை அறிவியலாக கருதுகிறாரோ அது அறிவியல் இல்லை. பிற விசயங்களை நண்பர் அறிவியலோடு குழப்பிக் கொண்டிருக்கிறார் என்று விளக்கங்கள் அளித்திருந்தேன். கொஞ்சமாவது அவைகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறாரா? ஆனால் அவர் என்ன எண்ணிக் கொண்டிருக்கிறாரோ அதையே மீண்டும் எழுதியிருக்கிறார். நன்பர் குலாம் எழுதிய எதையாவது நான் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள்வில்லை என்று

    ReplyDelete
  67. 2
    கூறமுடியுமா? ஒவ்வொன்றையும் பரிசீலித்தே என்னுடைய விளக்கங்களையும் பதில்களையும் வைத்துக் கொண்டிருக்கிறேன். இதை ஏன் நண்பர் குலாம் செய்ய மறுக்கிறார்? வெகு எளிமையான காரணம் தான். அப்படி அவர் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டால் அவரின் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டியதிருக்கும். அதனால் தான் சொன்னதையே மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருக்கிறார்.

    ஒரு குறுகிய வட்டத்திற்குள் அமைந்த பதில்களே தொடர்ந்து கொண்டிருக்கின்றன

    இந்த வாதத்தின் தொடக்கம் முதல் இப்போது வரை நண்பர் செய்து வரும் வாதங்களை இரண்டே கருத்துகளின் உள்ளீட்டிலேயே அமைத்திருக்கிறார். 1. கடவுளை அளக்க முடியாது. 2. அறிவியல் குறைபாடுடையது. நண்பர் குலாம் கூறியிருக்கும் எந்தப் பதிலிலும் இந்த சாரத்தை பிழிந்தெடுக்க முடியும். என்னுடைய பதிலகளியும் இதே போல் வகைப்படுத்த முடியும். ஆனால், நண்பர் குலாமுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் நான் நண்பர் கூறுவதை பரிசீலித்து பதில் கூறுகிறேன். நண்பர் குலாம் அவ்வாறு பரிசீலிக்க மறுக்கிறார் என்பது தான்.

    இதற்கு வெளியே நண்பர் குலாம் இப்படியும் கூறியிருக்கிறார். \\\கொஞ்சம் புரிந்துக்கொள்ள முற்படுங்கள் சகோ செங்கொடி .. .. .. பதில் இன்னும் வரவில்லை சகோ .. .. .. சகோ செங்கொடி சான்றுகள் தரவேண்டும் .. .. .. உங்களிடம் என்ன கேள்வி இருக்கிறதென்பதே என் கேள்வி .. .. .. இனியாவது சொல்லுங்கள் .. .. .. கொஞ்சம் விளக்குங்களேன் சகோ .. .. ../// இவைகளெல்லாம் நண்பர் குலாமின் பதில்களை நான் பரிசீலிக்காதது போலவும், அவர் கேள்விகளுக்கு பதிலளிக்காதது போலவும் ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறது. மெய்யாகவே நண்பர் குலாமுக்கு திராணி இருந்தால் நான் வரிசைப்படுத்தி இருப்பது போல் நான் பதில் கூறாதவைகள் என நன்பர் குலாம் நினைப்பதை வரிசைப்படுத்தட்டும். நான் ஏற்கனவே எழுதியிருப்பவைகளிலிருந்து எடுத்துக் காட்டி அதை நான் எதிர் கொள்கிறேன்.

    இனி நண்பர் குலாமின் வார்த்தைகளினூடான வாதங்களுக்கு வருவோம். \\\அஃதில்லாமல் எதிர்க்காலத்தில் சாத்திய கூற்றை இங்கே மேற்கோள் காட்டினால் அதை விட பன்மடங்கு சாத்தியக்கூற்றை என்னாலும் சுட்ட முடியும் இறப்பிற்கு பிறகு உண்டாகும் சொர்க்கம், நரகம் போன்றவை கடவுளின் இருப்பை நூறு சதவீகிதம் துல்லியமாக வரையறுக்கும் சாத்தியக்கூறுகள்/// நான் தெளிவாகவே எடுத்துக் கூறியிருக்கிறேன், எதிர்காலத்த மட்டும் நான் பதிலாகத் தரவில்லை என்று. அதை பரிசீலிக்க மறுக்கும் நண்பர் அதற்கு மாறாக என்னாலும் சொர்க்கம் நரகத்தை சாத்தியமாக கூற முடியும் என்கிறார். முடியாது. என்னுடைய எதிர்காலப் பதில்களும் சொர்க்க நரகமும் ஒன்றல்ல. நான் எதிர்கால ஆய்வுகள் என்று கூறினேன் என்றால் அது ஆத்திகர்களும் நாத்திகர்களும் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. யதார்த்தமான ஒன்று. அந்தப் பதிலை நான் ஏற்றுக் கொள்கிறேன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன் என்று கூறமுடியுமே தவிர அது உண்மையல்ல என்று கூற முடியாது. ஆனால் சொர்க்கம் நரகம் என்பது அப்படியானதா? அல்ல, அது ஆத்திகர்கள் கூறும் கதை மட்டுமே. எனவே நண்பர் குலாம் உள்ளுக்குள் சீர்தூக்கிப் பார்த்து விட்டு பின்பு தன் வாதங்களை வைக்கட்டும்.

    \\\அண்ட வெளியில் நடைபெற்ற, நடைபெரும் மோதல்களும், நிகழ்வுகளும் அறிவியலால் தான் நிகழ்ந்தது என்பதற்கு சகோ செங்கொடி சான்றுகள் தரவேண்டும்/// இப்படி கூலாம் எழுதியிருக்கிறார். ஆனால் ஏற்கனவே நான் இப்படி குறிப்பிட்டிருக்கிறேன், \\\இப்பேரண்டத்தை கடவுள் தான் படைத்தார் என்று நண்பர் குலாம் தான் கூறிக் கொண்டிருக்கிறார். அதற்கு மாறாக கடவுள் படைக்கவில்லை மனிதன் தான் படைத்தான் என்றோ, கடவுளைத் தவிர்த்த வேறு யாரோ படைத்தான் என்றோ நாத்திகர்கள் ஒருபோதும் கூறவில்லை. அவர்கள் கூறுவதெல்லாம் யாராலும் முன்திட்டமிடப்படாத, தற்செயலான ஒரு வினை என்றுதான் கூறுகிறார்கள்.(கவனிக்கவும் தற்செயல் என்பதற்கு முன் திட்டமிடப்படாதது என்பதைத் தவிர வேறெந்தப் பொருளும் இல்லை) அவர்கள் வெளிப்படையாகவே ஒப்புக் கொள்கிறார்கள் அது குறித்து ஆய்வுகளின்படி தான் கூற முடியும் என்று/// என்னுடைய இந்தப் பதிலை நண்பர் குலாம் பரிசீலித்தாரா? ஆமென்றால் எந்த வகையில் அந்த பரிசீலிப்பைச் செய்தார்? அந்தப் பரிசீலனையின்

    ReplyDelete
  68. 3
    முடிவு என்ன? கூறமுடியுமா? ஆனால் அவரின் கேள்வியை அப்படியே சொற்களை மட்டும் மாற்றி மீண்டும் கேட்டிருக்கிறார். இது என்ன விதமான விவாதமுறை? கடவுள் தான் படைத்தார் என்று சத்தியம் செய்கிறார். அதற்கான சான்றுகள் எங்கே என்றால் சப்பைக்கட்டுகளை மூட்டை மூட்டைகளாக இறக்குகிறார். மறுமுனையில், யாராலும் எதாலும் படைக்கப்படவில்லை என்கிறேன். அறிவியல் தான் படைத்தது என்று செங்கொடி சான்றுகள் தர வேண்டுமாம். குறைந்தபட்ச புரிதலாவது இருந்தால் இப்படியான கேள்விகளை எழுப்ப முடியுமா? சரி கடவுள் படைத்தரா? அறிவியல் படைத்ததா? என்பதா இந்த விவாதத்தின் தலைப்பு. எங்கோ தொடங்கிய கேள்வியை எங்கோ இழுத்து வந்திருப்பதுதான் நடந்திருக்கிறது.

    \\\அறிவியலை நான் ஏற்கவில்லையென்றோ அது.. மனித சிந்தனைக்கு உகந்தது இல்லையென்றோ இங்கே மட்டுமில்லை எந்த ஆக்கத்திலும் நான் சொன்னது இல்லை. மாறாக அறிவியலை மட்டுமே வைத்து ஒன்றை தீர்மானிக்க முடிவு செய்தால் அது முழுமை பெற்ற தொகுப்பாக எல்லா நிலைகளிலும், எல்லா காலத்திற்கும் அப்பாற்பட்டு இருந்திருக்க வேண்டும்/// இது நண்பர் குலாமின் கூற்று. முன்னுக்குப்பின் முரணான இதைக் கொண்டு தான் கடவுளை மறுக்க முடியாது என்று கூறுகிறார். அறிவியலை நண்பர் குலாம் ஏற்கிறார் என்றால் எந்த அடிப்படையில் ஏற்பார்? ஒன்றை சிந்தைக்கு உகந்தது இல்லை என்பதை எந்த வழியில் தீர்மானிப்பார்? வாழ்வில் நிகழும் அனைத்திலும் எந்த வழியில் அவரால் முடிவுக்கு, தெளிவுக்கு வர முடிகிறதோ அந்த அடிப்படையில் தானே ஏற்பார், சிந்தைக்கு உகந்தது என்று தீர்மானிப்பார். ஆனால் அறிவியலை நண்பர் குலாம் ஏற்கிறார். அது தான் சிந்தைக்கு உகந்தது என்று முடிவு செய்திருக்கிறார். ஆனாலும் அறிவியலைக் கொண்டு எதையும் தீர்மானிக்க முடியாது என்கிறார். ஏனென்றால் அது முழுமை பெற்ற தொகுப்பாக எல்லா நிலையிலும் எல்லா காலத்திற்கு அப்பாற்பட்டு இருக்கவில்லை என்கிறார். இது எந்த விதத்தில் சரியான கூற்று? ஒன்று அறிவியலை நான் ஏற்கவில்லை என்று கூற வேண்டும். அல்லது அறிவியல் முடிவு செய்ய உகந்தது என்று கூறவேண்டும். இரண்டு நேரெதிரான கூற்றுகளை ஒன்றாக இணைத்து அதை ஒரு நிலைபாடாக கூறமுடியுமா? நண்பர் குலாமால் முடிந்திருக்கிறது. என்ன சொல்வது இதை? அறிவியல் என்பது ஆய்வு முறை அது சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் தொகுப்பல்ல என்று விளக்கங்கள் அளித்திருக்கிறேன். அது யாருக்காக? மற்றொரு தரப்பால் கூறப்படும் எதையும் பார்க்க மாட்டேன் பரிசீலிக்க மாட்டேன் என்றான பிறகு என்ன பொருளில் இது விவாதம் .. .. ..?

    \\\அதெப்படி திட்டவட்டமாக கடவுள் இல்லையென்ற முடிவை எடுக்க முடியும். வேறு எந்த நிகழ்விற்கும் எதிர்க்கால மாற்றம் வாய்ப்பிருக்கிறது எனும் தருணத்தில் கடவுள் என்ற நிகழ்விற்கு மட்டும் நிகழ்காலத்திலே அறிவியல் முழுமையான பதிலை தந்து விட்டது என்பது எப்படி பொருத்தமான வாதம் அது அறிவியலுக்கே எதிரான நிலையல்லவா/// சபாஷ்.. .. .. இது, இதைத்தான் எதிர்பார்த்தேன். வேறு எந்தப் பொருளுக்கும் எதிர்கால மாற்றத்திற்கு வாய்ப்பிருக்கிறது என்றால் கடவுளுக்கு மட்டும் எப்படி எதிர்கால மாற்றம் இல்லாமல் போகும்? இதைத்தானே கேட்கிறீர்கள். நீங்களே கூறுங்கள் நண்பர் குலாம். கடவுளுக்கு எதிர்கால மாற்றம் சாத்தியமா? என்றோ ஒரு நாளில் கடவுள் குறித்து அறிவியல் கண்டு பிடித்துவிடும் அது வரை பொறுங்கள் என்கிறீர்களா? இதைத்தான் நான் ஏற்கனவே தெளிவாக அறிவித்திருக்கிறேனே. நாளையே கடவுள் இருக்கிறது என்பதற்கான சான்றுகள் கிடைத்தால் ஏற்றுக் கொள்ளத் தயார் என்று. பின் எப்படி அது அறிவியலுக்கு எதிரான நிலையாகும்? ஆனால் எது அறிவியலுக்கு எதிரான நிலை தெரியுமா? அறிவியல் இப்படி ஒன்று இருக்கிறது அல்லது இப்படி ஒன்று இருக்கக் கூடும் என்று யூகமாகக் கூட குறிப்பிடாத போது அது உறுதியாக இருக்கிறது என்று கூறுகிறீர்களே அது தான் அறிவியலுக்கு எதிரான நிலைபாடு. சிந்திப்பவர்களுக்கு தெளிவுண்டு.

    \\\கடவுள் இல்லையென்பதற்கு உங்கள் தரப்பில் அப்படி திட்டவட்டமான என்ன சான்று வைத்திருக்கிறது அறிவியல்/// பலமுறை இதற்கான பதிலை கூறிவிட்டேன். பதில் கூறிய பிறகு கடவுள் அறிவியலுக்குள் அகப்பட மாட்டார் என்று கூறுவது. பின் வேறொரு இடத்தில் அறிவியல் என்ன சான்று வைத்திருக்கிறது என்பது. நண்பர் குலாம் கொஞ்சம் தன்னினைவுடன் இருப்பது சிறந்தது.

    ReplyDelete
  69. 4
    \\\கடவுளின் இருப்பை உண்மைப்படுத்தும் நிகழ்வாக கூட இது இருக்கலாமே... என்றைக்காவது எதிர்மறை கண்ணோட்டதோடு இப்படி சிந்தீத்தீர்களா சகோ செங்கொடி..? .. .. .. இங்கே உடன்பட மறுக்கும் புள்ளிகளுக்கு புறத்தோற்றத்தில் ஆதார ரீதியாக செய்திகள் இருக்கிறதா என பார்க்கவேண்டும். இல்லையெல் அதற்கான சாத்தியக்கூறுகள் இரு கருத்தில் எதற்கு இருக்க வாய்ப்பு அதிகம் என பார்க்க வேண்டும்/// தாராளமாக பார்க்கலாமே. நாங்கள் ஒன்றும் மதவாதிகளல்லவே வேறு எதைப்பற்றியும் சிந்திக்க மாட்டோம் என்பதற்கு. பெருவெடிப்பு என்பது அறிவியல் யூகம், அது ஏன் நிகழ்ந்தது என்பதற்கு அறிவியலிடம் ஒரு காரணமும் இப்போதைக்கு இல்லை. இது கடவுள் எனும் ஒன்றை எந்த விதத்திலேனும் உறுதிப்படுத்துவதற்கு உதவுமா? முதலில் இரண்டும் யூகங்கள். ஒரு யூகம் இன்னொரு யூகத்தை உறுதிப்படுத்தாது. அறிவியலோ கடவுளோ ஏதோ ஒன்று யூகம் எனும் நிலையிலிருந்து மாறி யதார்த்தம் எனும் நிலைக்கு வந்தால் தான் ஒன்று மற்றொன்றை உறுதிப்படுத்தும். யதார்த்தத்திற்கு வர கடவுளுக்கு ஒரு போதும் வாய்ப்பில்லை. இதை நாத்திகர்கள் கூறவில்லை. ஆத்திகர்கள் தான் கூறியிருக்கிறார்கள். எனவே அறிவியலுக்கு மட்டுமே யதார்த்தத்திற்கு வரும் வாய்ப்பு உண்டு. நாளை பெருவெடிப்பு என்பது அறிவியல் யூகம் எனும் நிலையிலிருந்து மாறி அது மெய்யாகவே நிகழ்ந்திருக்கிறது எனும் நிலை அறிவியலால் உறுதிப்படுத்தப்படுகிறது என்று கொள்வோம். அப்போது என்னென்ன விதங்களில் அது கடவுளை உறுதிப்படுத்தலாம். அதாவது இப்போது தற்செயல் எதாலும் திட்டமிடப்படாத செயல் என்பது மாறியிருக்குமா? நிச்சயம் மாறியிருக்காது மாறாக இன்னின்ன காரனங்களால் அது நிகழ்ந்தது என்று கூறும். இன்னும் முன்னூறு கோடி ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன் செம்பூதமாய் மாறக் கூடும் ஏனென்றால் அதன் ஹீலியம் இருப்பு முன்னூறு கோடி ஆண்டுகளைத் தாண்டாது என்பது அறிவியல் யூகம், மாறாக நானூறு கோடி ஆண்டுகளைத் தாண்டுகிறது என்று கொள்வோம். அப்போது அறிவியல் எப்படி மேலதிக ஹீலியம் வந்தது என்றோ அல்லது முன்னூறு ஆண்டுகள் என்று போட்ட கணக்கு எந்த விதத்தில் பிசகியது என்றோ ஆராயும். இதைத்தவிர எதுவோ ஒரு ஆற்றல் வந்து நூறு கோடி ஆண்டுகளுக்கான ஹீலியத்தை சூரியனில் ஊற்றிவிட்டுப் போய்விட்டது என்று யாரேனும் கூறினால் அதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளுமா? நண்பர் குலாமின் ஆசைகளுக்கெல்லாம் அறிவியல் வளைய வேண்டும் என்பது அவசியமில்லை. அறிவியல் தேடுவதெல்லாம் மீச்சிறிய ஒரு சான்று. கிடைத்தால் எந்த குலாம் வேண்டாமலும் அது குறித்த ஆய்வுகள் தொடங்கும். அப்படியான சான்றுகள் எதுவும் இல்லாமல் இப்படி எதிர்மறையாக சிந்தித்தால் என்ன? என்று கேட்டால் .. .. .. !

    நண்பர் குலாம் முதலில் ஒரு கேள்வியைக் கேட்கிறார், \\\மனிதனோ ஏனைய உயிரினங்களோ உயிர் வாழ தகுதியற்ற இலட்சகணக்கான கோள்கள் ஏன் ஏற்படுத்த பட வேண்டும்/// இதற்கு நண்பர் குலாம் அளித்த பதில், \\\மனித சமூகத்திற்க்காக மட்டும் இந்த பூமி எனும் பேரண்டமும் , பல்வெறு பால்வெளி மண்டலங்களும் படைக்கப்படவில்லை. ஏனெனில் மனிதனை போல பல கோடி படைப்பினங்களை இறைவன் படைத்தும் இருக்கிறான்/// இதை நான் முரண்பாடு என்றேன் அதற்கு நண்பர் குலாம் அளித்த விளக்கம் \\\படைப்பினங்கள் என்பது மனிதனும், ஏனைய உயிரினங்களும் மட்டும் தானா... கல்லும் ,மண்ணும், மலையும், துகள்களும், பாறைகளும் போன்ற அஃறிணையும் கடவுளின் படைப்பினமே... ஆக உயிர்கள் வாழ தகுதியற்ற வெறும் கல்லும் மண்ணும் மட்டுமே நிரம்பிய கோள்கள் ஏன் உருவாக்கப்பட வேண்டும் என்பதே கேள்வி/// முதலில் இது என்னை நோக்கி எழுப்பப்பட்ட கேள்வி. ஆனால் நான் இது ஆத்திகர்களுக்கான கேள்வியேயன்றி நாத்திகர்களுக்கல்ல என்று கூறியதும் மேற்கண்ட பதில் வருகிறது. இப்போது அதில் என்ன முரண்பாடு இருக்கிறது என்பதைப் பார்க்கலாம். கேள்வி என்ன? மனிதனோ வேறு உயிரினங்களோ உயிர்வாழ தகுதியற்ற வீணான பிற கோள்கள் ஏன் படைக்கப்பட்டன? அதாவது மனிதனைப் போன்ற உயிரினங்கள் வாழவில்லை என்றால் அது தேவையற்றது. தெளிவாகச் சொன்னால் மனிதனோ உயிர்களோ படைப்பில் வகைப்படுத்தப்பட்டு ஏனையவைகளுக்கு அந்த முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. கல், மண், மலை, காடு, மேடு எல்லாம் படைப்புகள் என்றால் உயிர்கள் வாழ்த்தகுதியற்ற கோள்கள் ஏன்? எனும் கேள்வியே எழாது. ஏனென்றால் உயிர்கள் எப்படி படைப்போ அது போல கல்லும் மண்ணும் படைப்புகளே. இந்தப் படைப்பு சரி அந்தப் படைப்பு ஏன் எனும் கேள்வி அபத்தம். அனைத்தும் படைப்புகளே என்பது தான் படைப்பு நிலையில் சரி. பின் எப்படி உயிர்களில்லாத கோள் ஏன் எனும் கேள்வி எழும். உயினங்கள் இல்லாத கோள்கள் ஏன் எனும் கேள்வி எழுகிறது என்றாலே, அதன் பொருள் அனைத்தும் படைப்பு

    ReplyDelete
  70. 5
    எனும் நிலை மறுக்கப்படுகிறது என்பது தான். கல்லும், மண்ணும்; மரமும், மட்டையும்; மனிதனும், விலங்கும் எல்லாம் படைப்பே எனும் நிலையில் இருந்து கொண்டு நண்பர் குலாமின் கேள்வியையும், பதிலையும், அதற்கான விளக்கத்தையும் அலசிப் பாருங்கள். எளிமையாய் புரியும் அதிலிருக்கும் முரண்பாடு.

    \\\நீங்கள் உலகின் நிகழ்வுகளை மட்டுமே கடவுளுக்குரியதாக பொறுத்தினால்/// இது குறிக்கும் ஒட்டுமொத்தப் பகுதிக்கு ஏற்கனவே விளக்கமளிக்கப்பட்டு விட்டது. என்றாலும், இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒரு சொல்லை மட்டும் புரிந்து கொள்வதற்காகவே இது. இந்த வாக்கியத்தில் உலகின் நிகழ்வுகளை மட்டுமே என்றொரு சொற்றொடரை நண்பர் குலாம் பயன்படுத்தியிருக்கிறார். உலகம் என்பது மனிதன் வாழும் பூமியை மட்டுமே குறிக்கும் சொல். அறிவியலின்படி மனிதன் இந்த உலகை மட்டுமே அறிந்திருக்கவில்லை, அதையும் தாண்டி அண்ட வெளிகளிலெல்லாம் தன் அக வீச்சால் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறான். அப்படி பயணப்படும் எங்கிலும் - உலகில் மட்டுமல்ல - ஏதொரு சான்றையும் கடவுளுக்கு அணுக்கமாக மனிதன் பெறவில்லை. அப்படியிருக்க ‘உலகின் நிகழ்வுகளை மட்டுமே’ என குலாம் ஏன் பயன்படுத்தினார். இதை மற்றொரு விதத்திலும் அணுகலாம். கடவுள் என்பவர் பேரண்டம் கடந்து தாபித்துக் கொண்டிருப்பவர் என்று கூறப்பட்டாலும், அவரின் செயல்பாடுகள் மனிதனோடு மட்டும் அதாவது புவியோடு மட்டும் முடிந்து விடுகிறது. அதற்கு வெளியே ஏதேனும் செயல்களில் கடவுள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்று ஆத்திகர்கள் கூட கூறமுடியாது. பேரண்டத்தை இயக்குகிறார் என்பது கூட மனிதனின் அறிதல் எல்லைக்குள் பேரண்டம் வந்து விட்டது என்பதால் கூறப்படுவது தான். இதற்கு வெளியே கடவுளின் செயல்கள் என்று எதுவுமில்லை. ஆக இரண்டு கோணத்தில் பார்த்தாலும் குலாம் பயன்படுத்தியிருக்கும் இந்தச் சொற்றொடர் பொருட்பிழையானது.

    \\\இதயத்தை அறிய அதன் மூலம் பற்றி அறிந்தவர் சொல்கிறவற்றிலிருந்து அதன் பண்புகள், செயல்கள் போன்றவற்றை ஒப்பு நோக்க வேண்டும் அது தான் முறையான செய்கையும் கூட அதுப்போலதானே.. கடவுள் குறித்து எதிர் மறை கருத்துக்கள் கொள்ள அதன் மூலம் என்ன கூறிற்று என ஒப்பு நோக்க வேண்டும். ஆனால் இங்கே மட்டும் அதற்கு முரண்பாடுகள் மட்டுமே கற்பிக்க படுவது ஏனோ..?/// நண்பர் குலாம் மீண்டும் மீண்டும் புரியாமல் அல்லது புரிந்து கொள்ள விரும்பாமல் இயைபில்லாத ஒப்பீட்டை செய்து கொண்டிருக்கிறார். இதயம் பற்றி அறிந்தவர் சொன்னார் என்பதற்காக அதை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோமா அல்லது அவர் தன் அறிந்தவற்றை நிருபித்துக் காட்டினார் என்பதனால் அதை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோமா? வெறும் சொல்லை மட்டும் வைத்து ஏற்றுக் கொண்டிருக்கிறோமா அல்லது இதயம் யதார்த்தமாக இருக்கிறது என்பதனால் ஏற்றுக் கொண்டிருக்கிறோமா? ஆனால் கடவுள் அப்படி அல்லவே. அது வெறும் சொல். எந்த நிரூபணங்களும் இல்லாத வெற்றுச் சொல். யதார்த்தத்தில் அறிந்து கொள்ள முடியாத, இனி எக்காலத்திலும் அறிந்து கொள்ள வாய்ப்பில்லாத ஒரு சொல். மட்டுமல்லாமல் ஓர் அறிவியலாளனின் சொல்லுக்கும், ஓர் ஆன்மீகவாதியின் சொல்லுக்கும் இடையே பாரிய வேறுபாடுகள் உண்டு. அறிவியலாளனின் சொல் ஆய்வுகளிலிருந்து வெளிப்படுவது, ஆன்மீகவாதியின் சொல்லோ கற்பனையிலிருந்து வெளிப்படுவது. இரண்டையும் எப்படி ஒன்றெனக் கூற முடியும்?

    \\\பெருவெடிப்பு நிகழவில்லையென்றால் ஒட்டுமொத்த அறிவியலும் அர்த்தமற்றதாகி விடும் சகோ செங்கொடி .. .. .. அறிவியலில் அனைத்திற்கும் பதிலுண்டு/// அதெப்படி எங்கிருந்து இது போன்ற அறிவியல் தேற்றங்களையெல்லாம் நண்பர் குலாம் கண்டுபிடிக்கிறார். கொஞ்சம் விளக்கிச் சொன்னால் நானும் முயற்சி செய்து பார்ப்பேன்.

    அர்ஷ் இந்தச் சொல்லை நான் ஏன் பயன்படுத்தினேன்? கடவுள் இடமில்லா இடத்திலும் இருக்க முடியும் என்று கூறப்பட்டதற்காகத் தான், அவர் பொருளைப் பயன்படுத்துகிறார். ஒரு பொருளைப் பயன்படுத்துகிறார் (கவனிக்கவும்: எப்போதும் பயன்படுத்துகிறாரா? எப்போதாவது பயன்படுத்துகிறாரா என்பது தேவையற்ற விசயம். பயன்படுத்தும் இயல்பில் இருக்கிறார் அவ்வளவுதான்) என்றாலே அவருக்கு ஒரு பொருளுக்குறிய இலக்கணங்கள் வந்து விடுகின்றன. அப்படி இலக்கணங்கள் வந்து விட்ட பிறகு இடமில்லாமலும் இருக்க முடியும் என்று கூற முடியாது. இதை சுட்டிக் காட்டத்தான் நான் அர்ஷ் எனும் சொல்லைப் பயன்படுத்தினேன். ஆனால் இதற்கு அர்ஷ் என்பதை அரியணை என்று

    ReplyDelete
  71. 6
    பொருள் கொள்ளக் கூடாது வல்லமை என்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அருஞ்சொற்பொருள் கூறியிருக்கிறார். கலப்படமில்லாத சுத்தமான மதவாத விளக்கம். எந்த இடத்தில் என்ன கேட்கப்படுகிறதோ, அதற்குத் தகுந்தாற்போல் விளக்கமளிப்பது தான் மதவாதிகளின் வேலை. முகம்மதின் நண்பரொருவர் மதினாவில் இறந்துவிட்டார் என்பதற்காக அல்லாவின் அர்ஷ் ஆடியது என்றொரு ஹதீஸ் உண்டு. இதற்கு அல்லாவின் வல்லமை ஆடியது என்று பொருள் கொள்ளலாமா? ஆக இடமில்லாமல் அதாவது அவனைத் தவிர அனைத்துமே படைப்பு என்றால் அவனுக்கும் படைப்புக்குமான இடைவெளியில் எங்கு எப்படி அவனால் இருக்க முடிந்தது என்பது கடவுள் எனும் கற்பனையின் முரண்பாடு என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறேன். இந்த அடிப்படையில் தான் விளக்கங்கள் இருக்க வேண்டுமேயல்லாது, அர்ஷ் என்பதிலோ ஹதீஸ்களிலோ இந்தக் கேள்விக்கான பதில்கள் திசை திரும்பக் கூடாது. அதற்கு உட்பட்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.

    அடுத்து மலக்குகள். நீளமான, கேள்வியுடன் தொடர்பற்ற நம்பிக்கை சார்ந்த விளக்கங்கள். கடவுள் உறுதியான இருப்பு என்று கூறிவிட்டு எல்லாவற்றுக்கும் நம்பிக்கையையே பதிலாக்கினால் எப்படி. எங்கு ஐயம் இருக்கிறதோ அங்கு சான்றுகள் வேண்டும்.

    \\\எங்கே உங்களால விளக்க வழியில்லையோ, விளக்க முடியவில்லையோ அங்கே சந்தர்ப்பவாதத்திற்காக பயன்படுத்தும் உங்கள் அறிவியலை/// நண்பர் குலாம் உங்களின் எந்தக் கேள்விக்கு விளக்கமளிக்க முடியாமல் அறிவியலை சந்தர்ப்பவாதமாக பயன்படுத்தினேன் விளக்கமளிக்கவும். அப்படி விள்க்கமளித்த பின், ‘உங்கள் அறிவியலை’ என்பதை நீங்கள் பயன்படுத்திய விதம் குறித்தும், அறிவியலை எப்படி நீங்கள் சந்தர்ப்பவாதமாக பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்பதையும் நிரூபிக்கிறேன்.

    நண்பர் குலாம் ஓரிடத்தில் நான் உணர்ச்சிவயப்பட்டு எழுதவில்லை அறிவுவயப்பட்டே எழுதுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். யாரும் தான் அறிவுவய்ப்பட்டு எழுதுகிறேன் என்றோ, உணர்ச்சியவயப்பட்டு எழுதுகிறேன் என்றோ சான்றிதழ் காட்டிக் கொண்டிருப்பதில்லை. அவரவர்களின் எழுத்தைக் கொண்டு தான் அதை தீர்மானிக்க இயலும். அதன்படி குலாமின் பதில்கள் எப்படி அறிவுவயப்பட்டதாக இல்லாமல் உணர்ச்சிவயப்பட்டதாக் இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறேன்.

    \\\என்னுடைய பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இருந்தால் தான் முழுமையாக புரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும் என எண்ணுகிறேன். எனவே உங்களின் விளக்கங்களை என்னுடைய பின்னூட்டம் முடியும் இடத்திலிருந்து தொடங்குங்கள். இடையிடையே இடைச் செருகல் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்/// இதுதான் நான் முதலில் எழுதியது. இந்த வாக்கியங்களிலிருந்து அறிவுவயப்படும் யாரும் என்ன புரிந்து கொள்ள முடியும்? இணையப்பரப்பில் உலவும் யாருக்கும் நான் என்ன பொருளில் எழுதியிருக்கிறேன் என்பதில் ஐயம் எழ வாய்ப்பில்லை. அதிலும் ஒரு வலைதளம் நடத்திக் கொண்டிருப்பவருக்கோ எந்தவித ஐயங்களுக்கு இடமின்றி தெளிவாக புரிந்து கொள்வதில் எந்தச் சிரமமும் இருக்காது. ஆனால் நண்பர் குலாம் என்ன செய்திருக்கிறார்? என்னுடைய கருத்தில் குலாம் இடைச் செருகல் செய்து திரித்துவிட்டர் என குற்றம் சுமத்தியது போன்று பிம்பம் ஏற்படுத்த முனைந்திருக்கிறார். இதை எடுத்துக் காட்டினால் \\\முதலில் வார்த்தையின் பயன்பாடுகள் இடத்திற்கு இடம் மாறுபடும் என்பதையும் இடத்தை பொருத்தே அதன் அர்த்தம் மாறும் என்பதையும் சகோ செங்கொடி விளங்கிக்கொள்ள வேண்டும்... இடைசொருகல் என்றால் "கருத்திற்கு இடையில் தேவைற்ற வார்த்தைகளை அமைத்து அந்த வாக்கியத்தில் திரிபுகளை ஏற்படுத்து என்று அர்த்தம் இது தான் இந்த நாள் வரையிலும் அந்த வார்த்தைக்கான விளக்கமாக நான் நினைத்திருக்கிறேன். உங்கள் கருத்தில் எங்கே நான் இடைசொருகல் ஏற்படுத்தி இருக்கிறேன் என்று கேட்டதில் எந்த தவறும் இல்லையென நினைக்கிறென்.. இதில் பிழையென்றால் சொல்ல வேண்டிய இடத்தில் வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுங்கள் சகோ/// என்று பொருந்தா விளக்கம் அளிக்கிறார். அறிவுவய்ப்பட்டு சிந்திக்கும் யாரும், ஏற்பட்டிருக்கும் பிழையை உணர்ந்து வருத்தம் தெரிவிப்பார்கள். அல்லது சற்றே அகமுள்ளவர் என்றால் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்கள். ஆனால் நண்பர் பொருந்தா விளக்கம் அளிக்கிறார்.

    ReplyDelete
  72. 7
    அதன் காரணம் என்ன வென்றால் ஏதாவது சொல்லி பதில் எழுதிவிட்ட ஹோதாவை உருவாக்குவது. இது அறிவுவயப்பட்டு சிந்திப்பதா? உணர்ச்சிவயப்பட்டு சிந்திப்பதா? அதிலும் முரண்பாடு பாருங்கள். முதலில் வார்த்தையின் பொருள் இடத்துக்கு இடம் மாறுபடும் என்றும் இடத்தைப் பொருத்தே அதற்கு அர்த்தம் வரும் என்று எழுதியிருக்கிறார். அப்படியென்றால் இடைச் செருகல் என்பதற்கு அச்சொல் என்ன இடத்தில் இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டுமல்லவா? ஆனால் மறு நொடியே வேறாக எழுதுகிறார். இடைச் செருகல் என்றால் கருத்துக்கு இடையே செருகுவது என்று இடத்தை நீக்கி விட்டு சொல்லுக்கு மட்டும் பொருள் கொள்கிறார். முரண்பாடே உன் மெய்ப் பெயர் தான் நண்பர் குலாமோ.

    \\\இங்கே உங்கள் சொல்லாடலில் எனது நோக்கத்தை உங்கள் எழுத்தில் புறமுகமாக சுட்டி காட்டீனீர்கள் என்றால் உங்களின் இரட்டை முகம் என்பதை... செயலும், செயலும் கொள்கை ரீதியாக உங்களுக்கு மாறுப்பட்டிருப்பதை எனது சொல்லாடல் குறிக்கவில்லையென்பதை எப்படி நீங்கள் மறுக்கலாம் சகோ/// இதன் பொருள் என்ன? எனக்கு சுத்தமாக விளங்கவில்லை. எனக்கு குலாம் அளவுக்கு அறிவுத்திறன் இல்லாததால் எனக்கு புரியும் வண்ணம் விளக்க வேண்டுகிறேன். நண்பரின் நோக்கம் என்ன என்பதைக் குறிக்க முகம் எனும் குறியீட்டை பயன்படுத்தியதற்காக \\\உங்களை போன்ற நாத்திக செம்மல்கள் தான் இரட்டை முகங்களோடு அகத்திலும் புறத்திலும் உலா வருகிறீர்கள்/// என்று வன்மமாக சொற்களைக் கக்கினார். என்னுடைய சொல்லுக்கு நான் சரியான விளக்கம் அளித்திருக்கிறேன். இனி நண்பர் குலாம் அவருடைய சொற்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். ஆனால் அவரோ என்ன எழுதியிருக்கிறார் என்றே தெரியாமல் ஏதேதோ எழுதியிருப்பது என்னை பகடி செய்வது போல் இருக்கிறது. விவாதக் களத்தில் என்னை கேலி செய்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. நண்பர் குலாம் என்னைப் பற்றிய தன்னுடைய இரண்டு குறிப்புகளுக்கும் தகுந்த விளக்கமளிக்க வேண்டும்.

    தொடர்ந்து வருவேன்.

    ReplyDelete
  73. ன்பு சகோ., செங்கொடி,

    மீண்டும் மீண்டும் அதே சொற்பிரயோகங்கள். நான் முன்னமே சொல்லி இருக்கிறேன். கேள்விகளின் தரத்தை பொருத்தே பதில்களின் வீரியமும் வெளிப்படும்.

    தொடக்கத்திலே கடவுள் குறித்து இரு கோணங்களையும் உங்களுக்கு முன்னால் தெளிவுப்படுத்தினேன்.
    ஒன்று. நம்பிக்கையில் ஏற்பது அல்லது எதிர்ப்பது
    இரண்டு. திடமான உறுதிப்பாட்டில் உண்மையாக்குவது அல்லது மறுப்பது.

    இங்கே கடவுள் மறுப்பு உங்களைப்பொருத்தவரை நம்பிக்கையென்றால் அதற்கு கடவுளை ஏற்பது என் நம்பிக்கையென்ற அளவிலே பதில் சொல்வது போதுமானது.

    கடவுளை உறுதியான நிலைப்பாட்டில் உண்மைப்படுத்தவோ மறுக்கவோ செய்வதாக இருந்தால் நான் மட்டுமல்ல., நீங்களும் தெளிவான சான்றுகள் தரவேண்டும்.

    இங்கே விஞ்ஞானம் தம் செய்கைகளை விளக்கும் முன் கடவுள் குறித்து
    தெளிவாக...
    1. அவர் தன்னிகரற்றவர்.
    2. அளவுக்கோலில் அகப்படாதவர்.
    3.காலங்களுக்கும், வெளிகளுக்கும் அப்பாற்ப்பட்டவர்
    என்று சொன்னேன்.

    ReplyDelete
  74. இது எப்படி ஏற்றுக்கொள்வது என்று எதிர்க்கேள்வி நீட்டினீர்கள்.

    இதற்கு துணைப்பதிலாக அல்லது துணைக்கேள்வியாக அறிவியலில் அகப்படாத ஒன்றை அதன் செய்கை ரீதியாக எப்படி உணர்த்துவது என்று கேட்டேன். அதற்கு அறிவியல் மட்டுமே எல்லாவற்றிற்கும் மூலாதாரம். அவற்றில் சிக்காத எதுவும் எங்கும் இல்லை. என்றீர்கள்.

    அறிவியல் மட்டுமே எல்லாவற்றிற்கும் மூலாதாரம் என்றால் அவை இரண்டு அடிப்படை விதிகளை பெற்றிந்தால் மட்டுமே அவற்றை எந்த செய்கையோடு உரசி அவற்றை மெய்படுத்த அல்லது பொய்ப்படுத்த முடியும் அதாவது அந்த அறிவியல்

    1. முழுமைப்பெற்ற தொகுப்பாக இருக்க வேண்டும்
    2. எல்லா கேள்விக்கும் விடை ஆதாரப்பூர்மாக சொல்லி / சொல்லிக்கொண்டு / இனியும் சொல்ல வேண்டும்

    இங்கே தான் கடவுளின் இருப்புக்கு ஆழமான புரிதலை அறிவியல் தருகிறது. தனது இயலாமையே வெளிப்படுத்தும் இடங்களில் அறிவியல் அதற்கு மேலான ஒரு செய்கைக்கு நிருபணம் தருகிறது. இந்த நிமிடம் வரை பதில் தரா கேள்விகள் என சிலவற்றை நான் கேட்டேன் இப்படி

    1. பிரபஞ்சம் ஏன் உருவாக வேண்டும். ? முன்னர் அதன் நிலை?
    2 பிக்பாங்க் ஏன் ஏற்பட்டது? நிகழ்வுற்ற காரணமல்ல ஏன் நிகழ வேண்டும் ?
    3. மனிதனோ ஏனைய உயிரினங்களோ உயிர் வாழ தகுதியில்லா கோள்கள் ஏன் உருவாக வேண்டும்?
    தர்க்க ரீதியா
    4. மரணம் / பிறப்பு குறித்தும்
    5. மழை பொழிதல்.. குறித்தும் கேட்டேன்.

    ReplyDelete
  75. இதற்கு என்ன பதில் தந்தீர்கள் என்பதை நீங்களே மீண்டுமொரு முறை உங்கள் பதிலில் பாருங்கள்.
    தற்செயல் அல்லது எதிர்க்காலம் பதில் தருமென்றால்
    காரண காரியத்தோடு நிகழ்ந்தால் மட்டுமே அது அறிவியல். ஆக அறிவியலில் தற்செயல் என்ற ஒன்று இல்லை.

    இதற்கு உங்களின் தெளிவான மறுப்பு என்ன?

    அடுத்து எதிர்க்காலம் மீதான அவதானிப்பு. இந்த அவதானிப்புகள் தான் உங்களின் அறிவுப்பூர்வமான பதில்கள் என்றால் அந்த எதிர்க்கால நிகழ்வுகள் நடைபெறும் தருணங்கள் மட்டுமே உங்களின் பதில் உண்மையாக்கப்படும் அதுவரை எதிர்க்காலங்கள் என்றை பதிலால் இங்கே நிகழ்காலத்தில் தீர்க்கமாக விவாதிப்பது அர்த்தமே அற்றது.

    இப்போது என்ன செய்ய போகீறீர்கள். எதிர்க்காலம் தான் மேற்கண்ட என் கேள்விக்கு பதில் தருமென்றால் அந்த எதிர்க்காலம் பதில் தரும் வரை நாம் காத்து இருக்க வேண்டும். விவாதிக்க முடியாது, தெளிவாக கூறுங்கள்.

    அளப்பரிய தன்மைகளைக்கொண்ட கடவுளின் செய்கைகள் மனித அறிவுக்கு எட்டும் வகையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிற உங்களுக்கு எல்லாவற்றையும் தீர்மானிக்கும் அறிவியலிடம் அனைத்து கேள்விகளுக்கும் பதில் தெளிவாக இல்லையென்று சொல்லும் துணிச்சல் ....

    என்ன சொல்வது...

    ReplyDelete
  76. உங்களின் கடந்த இரு சுற்று பின்னூட்டங்களையும் சற்று நிதானித்தால் அறிவியலை நோக்கும் கேள்விகளுக்கு பதிலை ஒற்றை வரியில் எதிர்க்காலத்திற்கு தள்ளி இஸ்லாத்தின் மீது உங்களின் புரிதலை மையப்படுத்த தொடங்கி வீட்டீர்கள் ,

    மிக நன்று...
    இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்... பிரச்சனையில்லை.

    முதலில் பொது நிலை புரிதலில் கடவுளை மையப்படுத்தும் போது அவர் அல்லது அது எதையும் சார்ந்து இருக்க தேவையில்லையென்ற வாதத்தை வைத்தேன்.
    அடுத்து அறிவுப்பூர்வமாக அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்றால் அவன் ஒன்றை சார்ந்து இருக்கிறான் என்றாகி விட்டதே.... என்று முரண்பாட்டை கற்பிக்க முயல்கிறீர்கள்.

    ஐயா, இது முரண்பாடா...? என்ன ஒரு புத்திசாலித்தனமான புரிதல்.
    ஒரே நேரத்தில் நடை பெற சாத்தியமில்லாத இரு செயல்கள் அல்லது நிகழ்வுகள் ஒரே நேரத்தில் நடைப்பெற்றதாக சொல்வது தான் முரண்பாடு. அதாவது

    ஒரே நேரத்தில் நான் நின்றுக்கொண்டே அமர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு பெயர் தான் முரண்பாடு. ஆனால் எனக்கு அமர வேண்டும் என்ற வற்புறுத்தலோ நிர்பந்தமோ இல்லை. ஆனாலும் நான் அமர்ந்திருக்கிறேன். என்றால் அது எப்படி முரண்பாடாகும்...

    இங்கே கேள்வி அர்ஷ்ஷில் விற்றிருப்பது அல்லாஹ் தேவையின் நிமித்தமாகவா? என்பதை நீங்கள் தான் விளக்க வேண்டும் அத்தோடு அப்படி அர்ஷில் அமர்வதால் அவர் எப்படி அதை சார்ந்து இருப்பது போன்றதாகும்?

    ஏனெனில் இந்த கேள்வி இங்கே அவசியமாக்கப்படாமல் இருந்தாலும் துணை கேள்விகள் பிறக்க தான் செய்யும். அதாவது இல்லாமை அல்லது வெறுமை என்ற ஒன்றிலிருந்து கடவுள் எல்லாவற்றையும் கண்காணிக்கிறார் என்றாலும் கடவுள் இல்லாமை என்ற நிலையே சார்ந்தவராக தானே கடவுள் ஆகிறார்.

    ஆக இங்கே நாம் கவனிக்க வேண்டியது தேவையின் நிமித்தமாக ஒன்றை சார்ந்திருத்தலும், தனது பிரம்மாண்டத்தின் வெளிப்பாட்டை உணர்த்துவதும் ஒன்றா என்பதே..!

    ReplyDelete
  77. அர்ஷ் என்பது கடவுளின் வல்லமை அல்லது அரியாசனம் என்று சொன்னாலும் அதனால் எனக்கு எந்த ஆட்சபனையும் இல்லை. ஏனெனில் நான் எளிய உதாரணமும் கொடுத்தேன். இங்கே எங்கும் மத நம்பிக்கையே சாதகமாக்கவில்லை. ஹதிஸ்கள் மற்றும் ஆயத்துகளின் சொல்லாடல் என்ன அர்த்தத்தை கொடுக்கிறதோ அந்த இடங்களில் அந்த அர்த்தங்களை தான் கொடுக்க வேண்டும்.. அதற்கு ஹதிஸ்களிலிருந்து மேற்கோள்களும் காட்டினேன்.

    உங்களின் மதவாத எதிர் புரிதல்கள் எல்லை தாண்ட வேண்டாம். குறைந்த பட்சம் கடவுள் என்றால் என்ன என்று முதலில் தீர்க்கமாக சொல்லுங்கள்.
    அதற்கு அறிவியல் தான் மூலாதாரம் என்றால் அறிவியல் என்றால் என்ன என்பதையாவது தெளிவாக சொல்லுங்கள்

    .சரி உங்களின் பின்னூட்டங்கள் இஸ்லாம் நோக்கி பயணிப்பதால் அதை சார்ந்த எனது என்னின் கருத்துக்களும் இங்கே தொடரும்
    கடவுளின் இருப்பை அறிய செய்யும் மூலாதாரம் என்னை பொருத்தவரை குர்-ஆன் மற்றும் சஹீஹான ஹதிஸ்களே.

    ஆக இவற்றில் நீங்கள் உடன் பட மறுத்தால் நீங்கள் விரும்பும் வகையில் விஞ்ஞான கருத்துக்களை தான் எனது சார்பு நிலை விளக்கமாக இங்கே குறிப்பிட வேண்டும்.. அதற்கு உங்களது தெளிவான மறுப்புகள் அதே
    அறிவியல் வழியாக தர வேண்டும். இந்த கருத்துக்களை இங்கே தர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லையென்ற போதிலும் உங்களது கருத்துக்கள் என்னை அதன் பக்கமே இழுத்து செல்கிறது. என்ன செய்ய..

    ReplyDelete
  78. அதாவது குர்-ஆனில் அறிவியல் நிருபணங்கள் உண்மையானது எப்படி என்பதே என் கேள்வி..

    அதற்கு கீழுள்ள சுட்டிகளை தான் நான் தந்தாக வேண்டும் அனைத்தையும் மாரிஸ் புகைல், டாக்டர் கீத் மூர் போன்ற இஸ்லாமியர் அல்லாத அறிவியலார் தந்த ஆதாரப்பூர்வமான விளக்கங்கள். அனைத்தையும் கோடிட்டால் பின்னூட்டம் அதிக அளவில் தொடர வாய்ப்புண்டு. அதற்கு அவசியம் ஏற்படுத்த வேண்டாம் என நினைக்கிறேன்.

    கருவியல் குறித்து
    http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/KARU.HTM

    மலைகள் குறித்து
    http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/malai.htm

    உலகத் தோற்றம் குறித்து
    http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/world.htm

    மனித மூளை குறித்து
    http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/brain.htm

    ஆறுகள் மற்றும் கடல்கள் குறித்து
    http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/sea.htm

    ஆழ்கடல் அதனுள் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து
    http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/ulalai.htm

    மேகங்கள் குறித்து
    http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/eraimaililscience.htm

    மனித வளர்ச்சியின் படிநிலை குறித்து
    http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/truth_creation_human.htm

    கரு வளர்ச்சி குறித்து
    http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/truth_embryology.htm

    சிசுவின் உள்/வெளித்தோற்றம் குறித்து
    http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/truth_in_out.htm

    வலி உணரும் நரம்புகள் குறித்து
    http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/truth_skin.htm

    வானவியல் குறித்து
    http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/truth_astronomy.htm

    ஒட்டக படைப்பைக்குறித்து
    http://www.tamilislam.com/science/camel_science.htm

    மேலும்
    *விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்
    *பாலின் உற்பத்தி குறித்து
    *அனைத்து படைப்பினங்களிலும் ஜோடி
    *பெருவெடிப்பு கொள்கை
    *சூரியனும் இதர கோள்களும்
    *ஓரங்களில் குறைந்து வரும் பூமி
    *தேனின் மருத்துவ குணம் -ஆகியவைப் பற்றி அறிய
    http://www.tamililquran.com/quranscience.asp

    துறைச்சார் வல்லுனர்களின் குர்-ஆன்,அறிவியல் குறித்த ஒப்பிட்டு எண்ணப்பதிவு This is the TRUTH)-VIDEO
    http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/scientist.htm

    ஒன்றும் அவசரமில்லை ஒரு வாரமல்ல ஒரு மாதம் வேண்டுமானாலும் எஉத்துக்கொள்ளுங்கள் இதற்கு தெளிவான மறுப்புகள் அதே அறிவியல் வழியாக தர வேண்டும் அஃதில்லாமல் உங்கள் கற்பனை கோட்டையிலிருந்து இஸ்லாத்தை உற்று நோக்கி பதில் எனும் பெயரில் அறியாமை வாதங்களை வைத்து தொடர்ந்தால் மீண்டும் மீண்டும் முந்தைய விவாத கருத்துக்களை தான் மேலும் தொடர வேண்டியிருக்கும்.

    ReplyDelete
  79. மலக்குகள் குறித்து தொடங்கிய இடத்திலே மீண்டும் வந்து நிற்கிறீர்காள். இங்கே எனது இந்த இலகுவான கேள்விக்கு மட்டும் பதில் தாருங்கள்.

    @. மலக்குகள் என்ற சொல்லாடலை எந்த மூலத்திலிருந்து நீங்கள் பெற்றீர்கள்?
    இதற்கு மட்டும் முதலில் பதில் சொல்லுங்கள்.

    அடுத்து பரிணாமம், மனித தோற்றம் குறித்து உங்களது சுருக்கமான விளக்கத்தை தந்தால் இன்ஷா அல்லாஹ் அதுக்குறித்தும் அடுத்த களங்களில் விவாதிக்கலாம்.


    இறுதியாக, இரட்டை நிலை என்ற என் சொல்லாடல் உங்களுக்கு என்ன சொல்ல வருகிறது என்ற புரிய வில்லையென்று எனக்கு புரியா விதத்தில் சொல்லி இருக்கிறீர்கள்.

    இதற்கு அதிக விளக்கம் தேவையில்லை சகோ., பொதுவாக செயலும் சொல்லும் அதாவது நடைமுறையில் ஒன்றும், பேச்சில் ஒன்றும் எதிர்முனைகளை கொண்டிருந்தால் அதற்கு பெயர் தான் இரட்டை நிலைப்பாடு அல்லது இரட்டை நிலை என்று சொல்வர்.

    உங்கள் பர்சனல் வாழ்க்கை குறித்து சொல்லவில்லை.. என்னுடன் பகிர்ந்த உங்கள் கருத்திலிருந்தே அதை சொன்னேன்.. எனது சொல்லாடல் வேறு உங்களுக்கு புரியவில்லையென்ற குற்றச்சாட்டை வைத்து இருக்கிறீர்கள். ஆக மிக எளிதாக புரியும் விதத்தில்..

    நீங்கள் சில நேரங்களில் 'வணக்கம்' சொல்லியே உங்கள் பின்னூட்டத்தை ஆரம்பித்து இருக்கீறீர்கள்...
    வணக்கம் என்றால் என்ன...?
    இதற்கு விளக்கம் தந்தால் உங்கள் மீது நான் சொன்ன சொல்லாடலை இன்ஷா அல்லாஹ் உண்மைப்படுத்துகிறேன்..

    இந்த இழையில் எனது மையக்கேள்விகள்.
    உங்களது மறுப்புக்கு பிரதான காரணம் தர்க்க ரீதியான மற்றும் ஆறிவுப்பூர்வமான விஞ்ஞான குறியீடுகள் தான் என்றால் நம்பிக்கை என்ற என் நிலைத்தாண்டி உங்களின் மறுப்புக்கு ஆதார சான்றுகள் அதே அறிவியலை பயன்படுத்தி தான் நீங்கள் தர வேண்டும் இங்கே - அதுவும் கடவுள் ஏற்பு நிலையில் கேட்கப்படும் எல்லா கேள்விக்களுக்கும். அப்படி பதில் தரா இயலா நிலையில் எதிர்க்காலத்திற்காக காத்திருக்கும் அவ்வேளையில் கடவுள் குறித்த உங்கள் எண்ணங்களை தாராளமாக பரிசீலிக்கலாமே...

    இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்
    உங்கள் சகோதரன்

    ReplyDelete
  80. 1
    நண்பர் குலாம்,

    நான் எழுப்பும் கேள்விகளுக்கு ஏன் நீங்கள் பதில் கூற மறுக்கிறீர்கள்? இதற்கு மேலும் நீங்கள் நழுவி ஓடிக் கொண்டிருக்க முடியாது. விவாதம் தொடங்குவதற்கு முன்பு என் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துங்கள் என்று கேட்டதற்கு பிடிவாதமாய் மறுத்தீர்களே, அது இதற்காகத்தானா? ஒரு எல்லைக்கு மேல் நீங்கள் பதில் கூற மாட்டீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் உங்கள் தளத்தின் வாசகர்களுக்கும் அது தெரிய வேண்டுமல்லவா? அதைத்தான் நீங்கள் தற்போது செவ்வனே செய்து வருகிறீர்கள். பார்க்கிறேன் இன்னும் எத்தனை காலம் தான் உங்களால் இப்படி நழுவ முடியும் என்று. இதோ நீங்கள் பதில் கூற மறுக்கும் கேள்விகளின் குறைந்தபட்ச பட்டியல்,

    1. எந்தவித அளவுகோலிலும் கடவுள் அகப்படமாட்டார் என்றால் அவர் உறுதியாக இருக்கிறார் என்று நீங்கள் எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்?
    2. அறிவியல் குறைபாடுடையது என்றால் உங்கள் யதார்த்த வாழ்வில் அறிவியலை விலக்கி வைத்து முடிவெடுத்த நிகழ்வு ஏதேனும் உண்டா? பட்டியலிடுங்கள்.
    3. முதலில் அண்ட வெளியில் மோதல்களே நிகழ்வில்லை என்றீர்கள். பின்னர் மோதல்களை யார் நிகழ்த்தியது என்றீர்கள். கடவுள் தான் நிகழ்த்துகிறார் என்றால் அதை நிரூபியுங்கள்?
    4. கடவுள் என்றால் என்ன? (கவனிக்கவும் கடவுளின் தகுதிகள் அல்ல)
    5. பேரண்டம் உட்பட அனைத்தையும் படைப்பதற்கு முன் கடவுள் எங்கு இருந்தார்?
    6. இந்த உலகில் சோதித்தறிய முடியும் படியான, மனிதர்கள் கோரிக்கையை இறைவன் நிறைவேற்றியதற்கான சான்று ஏதாவது கூற முடியுமா?
    7. ஆத்திகர்கள் கடவுளை உறுதிப்படுத்துவதாக கூறிக் கொண்டு கேட்கும் எதிர்க் கேள்விகள் அனைத்தும் ஏன் நிகழ்கால அறிவியலைக் கடந்ததாக இருக்கிறது?
    8. ஆன்மீகத்துக்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்பு சாராம்சத்தில் கடவுளைச் சொன்னவரின் சொல் உண்மையா பொய்யா என்பதே. இதை நீங்கள் எப்படி கருதுகிறீர்கள்?

    இது மட்டுமல்ல உங்களின் ஒவ்வொரு பதிவிலும் கேள்விகளை எழுப்புகிறீர்கள். அதற்கு நான் பதிலளித்ததும், விளக்கமளித்ததும் அதை அப்படியே விட்டுவிட்டு வேறொரு கேள்விக்கு தாவி விடுகிறீர்கள். சொர்க்கம் நரகத்தை கூறமுடியும் என்றீர்கள், கூற முடியாது என்று விளக்கினேன். அந்த விளக்கத்தை ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா? யாருக்கும் தெரியாது ஆனால் விட்டுவிட்டு வேறொன்றுக்கு தாவி விட்டீர்கள். இதயத்தை எடுத்துக்காட்டி அப்படியே ஏற்க வேண்டும் என்றீர்கள் ஏன் ஏற்க முடியாது என விளக்களித்தேன். அந்த விளக்கத்தை ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா? யாருக்கும் தெரியாது ஆனால் விட்டுவிட்டு வேறொன்றுக்கு தாவி விட்டீர்கள். இது போன்றவைகளெல்லாம் வெற்றாய் விவாதத்தை நகர்த்தி காலம் கடத்தும் மிகப் பழைய உத்திகள். இந்த புளித்துப்போன உத்திகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு நேர்மையாய் விவாதம் நடத்த வாருங்கள் என உங்களை அழைக்கிறேன்.

    நண்பர் குலாம், அறிவியல் குறித்து பேசும் தகுதியை நீங்கள் இழந்து விட்டீர்கள். அறிவியல் என்றால் என்ன? அதை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள்? நீங்கள் பயன்படுத்துவதிலிருந்து அறிவியல் எப்படி வேறுபட்டிருக்கிறது என்பவைகளை தெளிவாக விளக்கியிருக்கிறேன். கொஞ்சம் கூட அவைகளை பரிசீலிக்காமல் மீண்டும் மீண்டும் அதே விசயங்களை திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த ஒழுங்கில் இப்படி வேறு கூறிக் கொள்கிறீர்கள், \\\கடவுள் என்றால் என்ன என்று முதலில் தீர்க்கமாக சொல்லுங்கள். அதற்கு அறிவியல் தான் மூலாதாரம் என்றால் அறிவியல் என்றால் என்ன என்பதையாவது தெளிவாக சொல்லுங்கள்/// முடிந்தால் என்னுடைய கடந்த பதிவுகளை விழிப்புடன் படித்துப் பாருங்கள். இவை குறித்து நான் தீர்க்கமாக எதுவும் சொல்லவில்லை என்கிறீர்களா? அப்படியென்றால் என்னுடைய பதிவுகளை சரிவர படிக்காமலேயே எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்.

    ReplyDelete
  81. 2
    இதை நீங்கள் மறுத்தால் என்னுடைய கடந்த பதிவுகளிலிருந்து அந்த தீர்க்கத்தை மேற்கோள் காட்டுகிறேன். எப்படி வசதி?

    அறிவியலில் தற்செயல் என்ற ஒன்று இல்லையா? இது குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன். தற்செயல் என்றால் அது யாராலும் எதனாலும் முன் திட்டமிடப்படாதது என்பதைத் தவிர வேறு எந்தப் பொருளும் அதற்கு இல்லை. அறிவியலில் சோயாஸ் விளைவு என்றொரு தேற்றம் உண்டு எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா? உங்களுக்கு விருப்பமான நிறங்களை எல்லாம் அறிவியலின் மேல் பூசாதீர்கள். உங்கள் வீட்டில் ஒரு தேனீர் கோப்பை இருக்கிறது. அந்த வழியே வரும் நீங்கள் அதைக் கவனிக்காமல் தட்டிவிட்டீர்கள், தேனீர் கொட்டிவிட்டது. இது நீங்கள் எந்த திட்டமிடலும் செய்யாமல் நிகழ்ந்தது என்பதால் அது தற்செயலானது. ஆனால் அதில் அறிவியல் ரீதியான காரணங்கள் இல்லாமலில்லை. உங்கள் காலிலிருந்து பெறப்பட்ட விசை கோப்பையின் மீது தாக்கி அதன் நிலை மையப் புள்ளிக்கு வெளியே அதை சரித்ததால் புவியீர்ப்பு விசையின் செயல்பாட்டினால் கோப்பையின் விழிம்பு தரை நோக்கி இழுபட்டு அதனுள்ளிருந்த தேனீர் கொட்டியது. இது அறிவியல் ரீதியான காரணம். நீங்கள் கொட்டியது தற்செயல் என்பதால் இந்த அறிவியல் காரணம் இல்லாமல் போகுமா? அல்லது அறிவியல் காரணங்கள் இருக்கிறது என்பதால் நீங்கள் அதை திட்டமிட்டு கொட்டினீர்கள் என்றாகுமா? மீண்டும் சொல்கிறேன் உங்களின் மதவாத நோக்கங்களுக்காக நீங்கள் அறிவியலை திரிப்பதால் அறிவியல் குறித்து பேசும் தகுதியை நீங்கள் இழந்து விட்டீர்கள். எனவே இனியும் புரிதலற்று, பரிசீலனையற்று அறிவியலை நீங்கள் வளைத்துக் கொண்டிருந்தால் அதற்கு பதில் கூறும் கடமை எனக்கு இல்லை.

    கடவுள் என்பது வெற்று நம்பிக்கையா? உறுதியான இருப்பா? இது விவாதம். இதை இந்தப்பதிவில் தான் நீங்கள் தொட்டிருக்கிறீர்கள். அதுவும் எப்படி? \\\இங்கே கடவுள் மறுப்பு உங்களைப்பொருத்தவரை நம்பிக்கையென்றால் அதற்கு கடவுளை ஏற்பது என் நம்பிக்கையென்ற அளவிலே பதில் சொல்வது போதுமானது/// இதைவிட மழுப்பலாக யாரும் பதில் கூறிவிட முடியாது. உங்கள் நிலைப்பாடு என்ன? நம்பிக்கையா? இருப்பா? நம்பிக்கைதான் இருப்பல்ல என்றால் இந்த விவாதமே தேவையில்லை. இருப்பு தான் நம்பிக்கையல்ல என்றால் அதற்கு சான்றுகளை தாருங்கள். இது தான் கேள்வி.

    மறுபக்கம் நான் என்ன கூறியிருக்கிறேன். கடவுள் மறுப்பு என்பதை நான் நம்பிக்கையாக கூறவில்லை உறுதியாக மறுக்கிறேன். எப்படி? அறிவியல் ரீதியாக, வரலாற்று ரீதியாக, சமூக ரீதியாக கடவுள் என்ற ஒன்று இருப்பதற்கான எந்தத் தடயமும் இதுவரை கிடைக்கவில்லை. கடவுளின் துணைநிலைகளும் இப்படியான எந்த தடயங்களும் இல்லாதிருக்கின்றன. அதுமட்டுமன்றி, துணை நிலைகள் இடையறாது இயங்கிக் கொண்டிருக்கும் போதும் அந்த இயங்கு விசைகள் கண்டறியப்பட முடியாததாக இருக்கிறது. மட்டுமல்லாது எக்காலத்திலும் அதைக் கண்டறிய முடியாது என ஆத்திகர்கள் கூறுகிறார்கள். எனவே தான் நான் கடவுள் இல்லை என மறுக்கிறேன். இது சான்றாதாரங்களின் அடிப்படையிலான என்னுடைய நிலைப்பாடு. அதேநேரம் எதிர்காலத்தில் கடவுள் குறித்தோ, அதன் துணை நிலைகள் குறித்தோ ஏதேனும் சின்னஞ்சிறு தடயம் கிடைத்தாலும் கூட என்னுடைய நிலையை மாற்றிக் கொண்டு கடவுளை ஏற்றுக் கொள்வதாக கூறியிருக்கிறேன். இது சாத்தியங்களின் அடிப்படையிலான என்னுடைய நேர்மை. மறு பக்கம் ஆதாரங்களோ சான்றுகளோ எதுமற்ற நிலையிலும் கூட பேரண்டத்தை படைத்துவிட்டு மனிதனின் தினப்படி வாழ்வில் குறுக்கிடாதிருக்கும் கடவுள் என்றால் அதை ஏற்பதில் எனக்கு ஆட்சேபனை ஏதுமில்லை என்று தெரிவித்திருக்கிறேன். இது உலகின் கோடிக்கணக்கான மக்கள் அதில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் எனும் அடிப்படையில் எழுந்த என்னுடைய பரிசீலனை.

    உண்மையிலேயே உங்களுக்கு நீங்கள் நேர்மையாளராக இருக்க விரும்பினால் இதுபோன்று உங்களின் கடவுள் குறித்த நிலைப்பாட்டை தெளிவாக முன்வைக்க முடியுமா? நீங்கள் மட்டுமல்ல கடவுள் நம்பிக்கை கொண்டுள்ள யாராலும் தங்களின் நிலைப்பாட்டை இப்படி தெளிவாக முன்வைக்க முடியாது. அப்படி முன்வைக்க முடியாத நிலையில் இருந்தால் இது எங்களின் நம்பிக்கை என்று கூறிவிட்டுப் போவது தானே. ஏன் உறுதியாக இருக்கிறார் என்று

    ReplyDelete
  82. 3
    கூற வேண்டும்? விடை எளிமையானது தான். மதம் குடியேறக் குடியேற பரிசீலனை அகன்று கொண்டே செல்லும். எந்த அளவுக்கு அது அகன்றிருக்கிறதோ அந்த அளவுக்கு மழுப்பல்கள் வெளிவரும். அவ்வளவு தான்.

    \\\1. பிரபஞ்சம் ஏன் உருவாக வேண்டும். ? முன்னர் அதன் நிலை? 2 பிக்பாங்க் ஏன் ஏற்பட்டது? நிகழ்வுற்ற காரணமல்ல ஏன் நிகழ வேண்டும் ? 3. மனிதனோ ஏனைய உயிரினங்களோ உயிர் வாழ தகுதியில்லா கோள்கள் ஏன் உருவாக வேண்டும்? தர்க்க ரீதியா 4. மரணம் / பிறப்பு குறித்தும் 5. மழை பொழிதல்.. குறித்தும் கேட்டேன்/// இவை குறித்து ஏற்கனவே பதில்கள் கூறப்பட்டு அவை குறித்த மறுப்புகளும் மீள் விளக்கங்களும் கூட பரிமாறப்பட்டிருக்கின்றன. 3. இது நாத்திகர்கள் முன்வைத்து ஆத்திகர்கள் பதிலளிக்க வேண்டிய கேள்வி. இது குறித்த விவாதம் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது. அதில் நீங்கள் தொடருங்கள். 1,2. இது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை. ஏனென்றால் பெருவெடிப்புக் கொள்கை இன்னும் அறிவியல் யூகம் எனும் நிலையிலேயே இருக்கிறது. இப்பேரண்டம் பெருவெடிப்பால் தான் உருவானது என்று இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. 4,5. சோதிடம் பார்க்கும் வேலை அறிவியலுக்கு இல்லை. இவை குறித்து ஏற்கனவே எழுதிக் கொண்டிருக்கையில் மறுபடியும் முதலில் இருந்தா?

    எதிர்காலம் மீதான அவதானிப்புகள் மட்டும் தான் என்னுடைய பதில்களா? எதை நான் எதிர்கால வினையில் பதில் கூறியிருக்கிறேனோ அதுதான் யதார்த்தமாக இருக்கிறது, உண்மையாக இருக்கிறது, அறிவியலாக இருக்கிறது என்று ஏற்கனவே எழுதியிருக்கிறேன். வேறு உங்களுக்கு கூறுவதற்கு ஒன்றுமில்லை என்பதால் இதில் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அதேநேரம், கடவுளை உறுதிப்படுத்துகிறேன் என்று கூறிக் கொண்டு நீங்கள் கேட்கும் கேள்விகளெல்லாம் ஏன் நிகழ்கால அறிவியல் எல்லைகளைக் கடந்ததாக இருக்கிறது என்று கேட்டிருந்தேன். பதில் என்ற பெயரில் ஒரு எழுத்தேனும் கூற முடிந்ததா உங்களால்?

    எதிர்காலம் தான் பதிலைத் தருமென்றால் பதில் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும் இல்லை என்று கூறக்கூடாது என்கிறீர்கள். இதுவும் வேறு ரூபத்தில் ஏற்கனவே எழுதியது தான். பதில் வரும்வரை காத்திருக்காமல் நீங்கள் ஏன் உறுதியாக இருக்கிறது என்று கூறுகிறீர்கள்? வாருங்கள், இருவரும் காத்திருப்போம். ஆதாரபூர்வமாக பதில் கிடைத்த பிறகு கடவுளை ஏற்கவோ மறுக்கவோ செய்வோம். அதுவரை கடவுளை ஒத்தி வைப்போம். நீங்கள் தயாரா?

    இஸ்லாத்தை நான் இழுத்து வருகிறேனா? இந்த விசயத்திலும் நான் கேள்விகள் கேட்டிருக்கிறேன், எங்கே உங்கள் பதில்? \\\பொதுவாய் கடவுள் என்று சொல்லப்படுவதன் தகுதிகள் குறித்து வாதங்கள் வைத்தால் நண்பர் குலாம் எங்கள் கடவுள் அப்படி அல்ல என்று கூற மாட்டாரா?/// இதற்கு உங்களின் பதில் என்ன? சரி. நீங்கள் கடவுளை பொதுவாக கூறினீர்கள், நான் இஸ்லாத்தை இழுத்து வந்தேனா? ‘கடவுளை மெய்ப்பிக்கும் அறிவியல்’ எனும் கட்டுரையில் நீங்கள் எழுதியிருந்தது இது, \\\கடவுள் என்பது / என்பவர் மறைந்திருக்கும் அல்லது கண்டறியப்பட வேண்டிய ஒரு பொருளல்ல/// இது கடவுள் குறித்த பொதுவான புரிதலா? இஸ்லாமிய புரிதலா? கடவுளுக்கு அவதாரங்கள் உண்டு, அவை நேரடியாக மனிதர்களுடன் வாழ்ந்திருக்கிறது, இன்னும் ஒரு அவதாரம் கூட வரவேண்டியதிருக்கிறது. இது பார்ப்பனிய மதத்தின் புரிதல். இயேசு அந்தி நாட்களில் மீண்டு வருவார், மனிதர்களுடன் இருப்பார் என்பது கிருஸ்தவ மதத்தின் புரிதல். இந்த பூமியில் மனிதர்கள் யாரும் கடவுளைப் பார்க்கமுடியாது, எந்த விதத்திலும் கண்டறியப்பட முடியாது என்பது எந்த மதத்தின் புரிதல்? இஸ்லாமிய மதத்தின் புரிதலை பொதுப் புரிதலாய் நீங்கள் வேண்டுமானால் மறைத்து வைக்க எண்ணலாம். உங்கள் எண்ணப்படியே நானும் செயல்பட வேண்டும் என்பது அவசியமில்லை. ஏனென்றால் நான் கேள்விகளுக்கு மட்டுமல்ல கேள்விகளின் நோக்கங்களுக்கும் பதில் கூற விரும்புபவன். எனவே உங்கள் வாதம் இஸ்லாமியக் கடவுளை மையப்படுத்தி இருப்பதால் என்னுடைய வாதமும் இஸ்லாத்தை மையப்படுத்தியே இருக்கும், அல்லது கடவுள் எனும் பொதுப் புரிதலில் விவாதிக்க விரும்புகிறீர்களா? கூறுங்கள். அப்போது எங்கள் கடவுள் இப்படி இல்லை என்று உங்களால் கூற முடியாமல் போகும். சம்மதமா?

    ReplyDelete
  83. 4
    அர்ஷ் என்பதை நான் ஏன் பயன்படுத்தினேன்? இதற்கு தெளிவாக, விரிவாக பதிலளித்திருக்கிறேன். கடவுளைத் தவிர அனைத்தும் படைப்பு என்றால், கடவுளுக்கும் படைப்புக்குமான இடைவெளியில் கடவுள் எங்கு எப்படி இருந்தது? இந்தக் கேள்வியை விளக்கும் கருவியாகத்தான் அர்ஷ் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் கவனமாக அர்ஷிலிருந்து அந்தக் கேள்வியை உருவி எடுத்துவிட்டு அர்ஷ்க்கு மட்டும் விளக்கமளித்திருக்கிறீர்கள், இது ஏன்? அதிலும் திசை திருப்பலே உங்கள் விளக்கமாக இருக்கிறது. அரஷிலும் அந்தக் கேள்வியிலும் நான் எதை முரண்பாடு என்று கூறியிருந்தேனோ அதை விடுத்து வேறொரு இடத்தை நான் முரண்பாடு என்று கூறுவதாக கற்பித்துக் கொண்டு உங்களுக்கு நீங்களே விளக்கமளித்திருக்கிறீர்கள். நான் முரண்பாடு என்று கூறியது இதை, \\\அவனைத் தவிர அனைத்துமே படைப்பு என்றால் அவனுக்கும் படைப்புக்குமான இடைவெளியில் எங்கு எப்படி அவனால் இருக்க முடிந்தது என்பது கடவுள் எனும் கற்பனையின் முரண்பாடு/// முரண்பாடு என்று உங்களுக்கு நீங்களே கருதிக் கொண்டது இதை \\\அறிவுப்பூர்வமாக அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்றால் அவன் ஒன்றை சார்ந்து இருக்கிறான் என்றாகி விட்டதே.... என்று முரண்பாட்டை கற்பிக்க முயல்கிறீர்கள்/// மீண்டும் நான் கூறுகிறேன், அர்ஷ்க்கு நீங்கள் விளக்கமளிப்பதாக இருந்தால் அர்ஷ் எதற்காக கூறப்பட்டதோ அந்தக் கேள்வியை உள்ளடக்கியே விளக்கமளிக்க வேண்டும். அவ்வாறன்றி கடவுள் தேவை நிமித்தம் அர்ஷில் அமர்ந்திருந்தாரா இல்லையா என்பது எனக்கோ, இந்த விவாதத்திற்கோ தேவையற்ற கேள்வி. சரி, அர்ஷ் தொடர்பாக நான் என்ன கேட்டிருந்தேன்? இங்கும் கேட்கப்பட்டதை விடுத்து வேறேதோ சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அர்ஷ் என்பது அரியணை என்றால், அது ஒரு பொருள். ஒரு பொருளை பாவிப்பது என்றால் அது இன்னொரு பொருளால்தான் முடியும். இதன்படி அர்ஷை பாவிக்கும் கடவுளும் ஒரு பொருளாகிறது. அது பொருள் என்றால் இருப்பதற்கு ஒரு இடம் வேண்டும். கடவுளைத் தவிர ஏனைய அனைத்தும் படைப்பு என்றால் கடவுளுக்கும் படைப்புக்குமான இடைவெளியில் கடவுள் இருந்தது எங்கே? இது தான் நான் கேட்டது. இந்த என்னுடைய கேள்விக்கும் உங்களின் பதிலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? அர்ஷ் என்பது அரியணையா? வல்லமையா? அர்ஷ் என்பது வல்லமை தான் என்பதற்கு இசைவாக ஏதேனும் ஹதீஸ் இருக்கிறதா? கூறுங்கள், பார்க்கலாம். ஆனால் அர்ஷ் என்பது அரியணை என்பதற்கு ஏராளமான ஹதீஸ்கள் இருக்கின்றன. ஒருவரின் மரணத்திற்காக, அர்ஷ் ஆடியது என்றும், அர்ஷின் நிழலில் நல்லவர்கள் தங்கியிருப்பார்கள் என்றும், அர்ஷை யாரெல்லாம் சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் ஹதீஸ்கள் இருக்கின்றன. எனவே அர்ஷை ஏன் அரியணை என்று கொள்ளக் கூடாது?

    மலக்குகள் குறித்து நான் கேட்பதற்கும் நீங்கள் கூறிக் கொண்டிருப்பதற்கும் துளியும் தொடர்பில்லை. கடவுளின் தனிச்சிறப்பான தகுதி கடவுளின் துணை நிலைகளுக்கும் உண்டு என்பது கடவுளை ஒழித்து வைக்க பயன்படுத்தப்பட்ட அதே உத்தி. மலக்குகள் மட்டுமல்ல, சைத்தான் உட்பட கடவுள் வரை கடவுளோடு தொடர்புடைய அனைத்து கலைச்சொற்களையும் கடவுளோடு தொடர்புடைய மூலகங்களிலிருந்து தான் பெற முடியும். அதற்காக அந்த மூலகங்கள் கூறும் அனைத்தையும் ஒப்புக் கொள்ள வேண்டுமா?

    இஸ்லாத்தில் அறிவியல் என்று சுட்டிகள் தந்திருகிறீர்கள் அவை இங்கே தேவையற்றவை. மட்டுமல்லாது அவைகளுக்கு அறிவியலின் அடிப்படையிலேயே இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே எனும் தொடரில் உரிய பதில் தந்திருக்கிறேன். அவை அறியாமை வாதங்கள் என நீங்கள் கருதினால் அந்தந்த இடங்களில் உங்கள் அறிந்த ஆமை வாதங்களை நடக்க விட்டுப் பாருங்கள், உங்களுக்கு திறமையிருந்தால். இன்னொரு விபரத்தையும் இங்கு பதிவது சிறப்பு எனக் கருதுகிறேன். மருத்துவர் மோரிஸ் புகைலோ, பேராசிரியர் கீத் மூரேவோ அல்லது இன்னும் சிலரோ குரானுக்குள் அவியல் இருக்கிறது, மன்னிக்கவும் அறிவியல் இருக்கிறது என்று கூறியவர்களெல்லாம் ஒன்று சௌதியில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தவர்களாகவோ, சௌதியின் உதவியுடன் ஆய்வுகள் செய்தவர்களாகவோ இருப்பது ஏன்? இந்தக் கேள்விக்கும் நீங்கள் சற்று பதில் தேடிப் பார்க்கலாம்.

    பரிணாமம் குறித்து விவாதிக்கலாமா? என்று கடந்த இரண்டு பதிவுகளில் கேட்டிருக்கிறீர்கள். ஏன் கூடாது தாராளமாக விவாதிக்கலாம். ஆனால் இந்த விவாதத்தோடு அதற்கு தொடர்பிருக்கிறதா? எனவே, இந்த விவாதத்தை

    ReplyDelete
  84. 5
    நிறைவு செய்துவிட்டு அடுத்த தலைப்பாக வேண்டுமானால் அதை எடுத்துக் கொள்ளலாம். நான் ஆயத்தமாக இருக்கிறேன்.

    \\\இங்கே உங்கள் சொல்லாடலில் எனது நோக்கத்தை உங்கள் எழுத்தில் புறமுகமாக சுட்டி காட்டீனீர்கள் என்றால் உங்களின் இரட்டை முகம் என்பதை... செயலும், செயலும் கொள்கை ரீதியாக உங்களுக்கு மாறுப்பட்டிருப்பதை எனது சொல்லாடல் குறிக்கவில்லையென்பதை எப்படி நீங்கள் மறுக்கலாம் சகோ/// இதற்கு என்ன விளக்கம் என்று நீங்கள்கூறியாக வேண்டும். நான் புரியவில்லை என்று எழுதினேன் என்பதற்காக உங்களுக்கு புரியவில்லை என்று கூறியிருக்கிறீர்கள் \\\இரட்டை நிலை என்ற என் சொல்லாடல் உங்களுக்கு என்ன சொல்ல வருகிறது என்ற புரிய வில்லையென்று எனக்கு புரியா விதத்தில் சொல்லி இருக்கிறீர்கள்/// இது தான் நீங்கள் அறிவார்த்தமாக பதில் கூறுவதன் அடையாளமா? இப்போது நான் உங்களுக்கு வணக்கம் கூறவில்லை என்ற போதிலும் பழைய பின்னூட்டங்களைத் தேடி அதில் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே ஏதோ இரட்டை நிலை இருப்பதாக காட்ட முனைந்திருக்கிறீர்கள். வணக்கம் எனும் சொல்லை தேடி எடுத்த உங்களுக்கு அந்தச் சொல்லுக்கு நான் கொடுத்த விளக்கமும் தெரிந்திருக்க வேண்டும். பரவாயில்லை, என்னுடைய இரட்டை நிலை குறித்து நீங்கள் வெளிப்படுத்தும் போது நான் என்னுடைய விளக்கங்களுடன் வருகிறேன். முதலில் நீங்கள் கூறிய வாக்கியத்திற்கு என்ன விளக்கம் என்பதைக் கூறுங்கள்.

    \\\கேள்விகளின் தரத்தை பொருத்தே பதில்களின் வீரியமும் வெளிப்படும்/// நண்பர் குலாம், இது உங்களைப் பற்றி நீங்களே உயர்வுநவிற்சியாய் கூறிய வாக்கியம் எனக் கருதுகிறேன். நீங்கள் என் கேள்விகளுக்கு பதில் கூற மறுக்கிறீர்கள் என்று கூறிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய பதில்களை பரிசீலிக்க மறுக்கிறீர்கள் எனக் கூறிக் கொண்டிருக்கிறேன். மாறாக உங்கள் பதிலில் வீரியம் குறைவாக இருக்கிறது எனக் கூறவில்லை. முதலில் நீங்கள் பதில் கூறுங்கள் பின்னர் அதில் வீரியம் இருக்கிறதா இல்லையா என்று பார்க்கலாம்.

    மீண்டும் வருவேன்.

    பின்குறிப்பு: \\\அறிவியல் மட்டுமே எல்லாவற்றிற்கும் மூலாதாரம். அவற்றில் சிக்காத எதுவும் எங்கும் இல்லை. என்றீர்கள்/// இப்படி நான் கூறியிருக்கிறேனா? ஆம் என்றால் அதை மேற்கோள் காட்டுங்கள். அப்படி உங்களால் காட்ட முடியாவிட்டால் என்னுடைய கருத்தை திரிக்கிறீர்கள் என்று பொருள்.

    ReplyDelete
  85. அன்பு சகோ செங்கொடி...

    முதலில் நமது விவாத பொருள் தொடர்பான எனது நிலை என்னவென்பதை மீண்டும் நினையுருத்துகிறேன்..

    கடவுளின் இருப்பு நம்பிக்கையா அல்லது உறுதியான நிலைப்பாடா என்பதே..?

    நம்பிக்கையென்றால் பொதுவில் விளக்க எந்த ஆதாரப்பூர்வமாக நிருபணமும் தேவையில்லை..
    கடவுள் - எனது நம்பிக்கையென்றாலும் உங்களையும் கடவுளை ஏற்க நான் அழைப்பு விடுத்ததால் நம்பிக்கை தாண்டி உறுதியான நிலைப்பாடு என்ற நிலையில் கடவுளின் இருப்புக்குறித்து விவாதிக்க ஒப்புக்கொண்டேன்.

    உறுதிப்பாடு - இதன் கீழாக நமது விவாதம் தொடர்வதாக இருந்தால்.. கடவுள் குறித்த நேர்மறை எதிர்மறை என இரண்டு கருத்துக்களுக்கும் ஆதார சான்றுகள் தரவேண்டும் என்பதே இவ்விவாதத்தின் மையப்பொருள்.

    சரி இப்போது கடவுள் குறித்து எளிய அறிமுகம் கொடுத்தேன்.
    கடவுள் வல்லமை மிக்கவர், அளவுகோலில் அகப்படாதவர் என்று.

    அப்படியானால் கடவுளின் இருப்பை எப்படி உறுதியாக நம்ப முடியும் என்பது அறிவார்ந்த கேள்வி தான்...
    அந்த அடிப்படையில் நான் சென்ற பின்னூட்டத்தில் ஒரு செய்திகளை பகிர்ந்தேன் அதை இன்னும் விளக்கமாக இங்கே பார்ப்போம்.
    இவ்வுலகில் மனித புலன்களுக்கு காட்சி தராதவர் கடவுள் என்பதே பொதுவிதி
    அப்படியானால் அவரது இருப்பை இறந்த பிறகே மனித புலன் களால் அறிந்துக்கொள்ள முடியும்..

    ReplyDelete
  86. அதாவது எதிர்க்காலத்தில்... அவரது இருப்பை அறியலாம் என்றேன்.
    ஆனால் இங்கே அந்த <<<<<<<< எதிர்க் காலம் >>>>>>> என்பது இன்னும் நடை பெற வேண்டிய, முழுவதும் சோதித்து அறிய முடியா தன்மைக்கொண்ட செயல்பாடு.. ஆக எதிர் காலம் என்ற பதிலால் கடவுளின் இருப்பை உறுதிப்படுத்த தற்போதைய விவாதத்தில் இடமில்லை...

    நன்று...
    அப்படியான இரண்டாம் நிலை அணுகுமுறையை தான் கடவுளின் இருப்புக்கு ஆதார சான்றாக தரவேண்டும்.

    கடவுள் காணுவதற்கரியவர் எனும் போது கடவுள் குறித்து கிடைக்கும் வேறு செய்திகளால் அவரது உறுதிப்பாட்டை சாத்தியக்கூற்றை அடிப்படையாக ஒப்பு நோக்க வேண்டும்/

    கடவுளை - என்னைப்போன்றவர்களுக்கு அறிமுகப்படுத்தியது குர்-ஆன் தான். ஆக குர்-ஆன் இறைவனின் வார்த்தைகளாக நம்பினால் கடவுளின் உறுதிபாடு குறித்து சொல்கின்றன என்பதை நாம் முதலில் ஆராய வேண்டும்.

    கடவுளின் செயல்கள் என மூன்று காலத்திலும் நடைபெற்ற செயல்களை குர்-ஆன் வகைப்படுத்துகிறது. அதில் இறந்த காலத்தை ஒப்பு நோக்க வேண்டுமென்றால் அதற்கு நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். அதற்கு வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே அதை உண்மையென்றோ பொய்யென்றோ மறுக்க முடியும்.
    அதைப்போன்ற நிலைப்பாடுகள் குர்-ஆனில் 20 சதவீகிதம் உண்டு,

    அடுத்து நிகழ்காலத்தில் உள்ளவற்றோடு சோதித்து அவற்றை உண்மையென்றோ பொய்யென்றோ கூறும் நிலையில் குர்-ஆனில் சுமார் 50 சதவீகித செய்திகள் உண்டு. அதைத்தான் சென்ற பின்னூட்டத்தில் வகைப்படுத்தி இருந்தேன். அவற்றின் மீதான நம்பக தன்மை மறுக்கப்பட்டது என அறிவியலாரின் ஆதார சான்றுகள் தராமல் சவுதியின் துணையுடன் ஏன் அந்த ஆய்வுகள் நடத்தப்பட்டது என்ற ஒற்றை வரியில் உங்களின் லாகவமான பதிலை முடித்து இருக்கிறீர்கள்.. நான் கொடுத்த அனைத்து சுட்டிகளுக்கான ஆய்வுகளுமா சவுதியிலா நடத்தப்பட்டது...?

    என்ன செய்ய வழக்கம் போல் தொடர்கிறேன்..

    ReplyDelete
  87. இப்படி ஐம்பது சதவீகிதம் கேட்கப்பட்ட தொகுப்பட்ட செய்திகளில் இன்றைய அறிவியலில் எதுவும் முரண்பட வில்லை. ஆக 50 சதவீகிதம் தொகுப்பட்ட செய்திகளில் நூறு சதவீகிதம் உண்மை இருந்தால் நம்மால் இங்கே சோதித்து அறிய வாய்ப்பில்லாத கடவுளின் வல்லமை, நிலைப்பாடு மறுமை, சொர்க்கம், நரகம் போன்ற செய்திகளை நம்புவதற்கு என்ன தடை ஐயா செங்கொடி? அதுவும் யாரும் கேள்வி எழுப்பும் முன்னரே அவை குறித்த செய்திகள் பகிர்ந்த பின்னரும்.. மேலும் இவற்றை பொய் என்று மறுப்பதற்கு எந்த வித ஆதார சான்றுகளும் இல்லாத போதும்..

    வேண்டுமானல் இறுதி வாய்ப்பு கடவுளை அறிவியல் ரீதியாக மறுக்க உங்களுக்கு தருகிறேன்.
    1. மேற்கில் சூரியன் தோன்றுதல்
    2. மண்ணிலிருந்து மனிதர்களுடன் பேசும் ஒரு பிராணியின் உருவாக்கம்.
    3. உலகம் அழிவு.

    இவை கடவுளின் கூற்றாக முன்மொழியப்படும் வார்த்தைகள் . இவற்றில் எதும் நடக்க சாத்தியமில்லையென்று உங்களால் நூறு சதவீகிதம் அறிவியல் நிருபணம் தாருங்கள்.

    மேலும் உங்கள் சப்பைக்கட்டு தொடர்ந்தால் இதே கேள்விகளை தான் நானும் கேட்டுக்கொண்ட இருக்க நேரிடும்.

    அதுவுமில்லாமல் கடவுள் மனித உருவாக்க பொருட்களால் காண முடியாது என்று தெளிவான கூறப்பட்டிருப்பதால் அதன் இருப்பை உலக பொருட்கள் / கருத்துக்கள் / நிகழ்வுகள் வாயிலாக தான் அறிந்துக்கொள்ள முடியும்.

    அதையும் பட்டியலிட்டேன். கடவுளின் இருப்பை உணர்த்தும் செயல்களாக
    1. ஒருவரின் பிறப்பு
    2. ஒருவரின் மரணம்
    3. மழை
    4. பெருவெடிப்புக்கொள்கை.

    இப்படி...

    ReplyDelete
  88. இவற்றிற்கு ஆதார ரீதியான நிருபணங்கள் அறிவியலால் முன்மொழியப்பட்டிருக்க வேண்டும்... எங்கே அதற்கான ஆதார சான்று...?

    இதுவரை தற்செயல் மற்றும் எதிர்க்காலத்தை தான் பதிலாக்கி வருகிறீர்கள் சென்ற பின்னூட்டம் வரையிலும் அது தொடர்கிறது. இதில் இன்னும் ஒரு படி மேல போய்

    // இது நாத்திகர்கள் முன்வைத்து ஆத்திகர்கள் பதிலளிக்க வேண்டிய கேள்வி. //

    சபாஷ்!.. உங்களைப் போல எனது விருப்புக்காக என்னிடம் பதில் இல்லையென்றால் எதிர்ப்போரை குறைப்படுத்த விரும்ப மாட்டேன்.

    சோதிடம் அறிவியலில்லையென்றால் எதிர்காலம் மீதான் அவதானிப்புகள் என்பதற்கு பெயர் உங்கள் கூற்றில் உண்மை... அறிவியல் என்றால்... அதை தாண்டி எதிர்க்காலத்தின் இறுதி குறித்துயாக மறுமை வாழ்வு குறித்து சொன்னேனே... அதையும் எனது கூற்றில் உண்மை, என்று எடுத்துக்கொள்ளலாமே... நீங்கள்?


    முதல் பத்தியில் தெளிவான சொல்லி இருக்கிறேன். நமது விவாதத்தில் எதிர்க்காலம் எப்படி கடவுளின் இருப்பை நிகழ்காலத்தில் உறுதிப்படுத்தாதோ அதே எதிர்க்காலம் கடவுள் மறுப்பையும் உறுதிப்படுத்தாது...

    உங்கள் நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட வியாக்கியானங்களை
    1. இதோ கடவுளை மறுக்கும் ஆதார ரீதியான நிருபண சான்றுகள் என இங்கே தாருங்கள்.

    அல்லது

    2. எதிர்க்காலமே பதில் தருமென்றால் அதை ஒதுக்கி வைத்து விட்டு நிகழ்காலத்தில் கடவுள் மறுப்பு வழியில்லையென்று ஒத்துக்கொள்ளுங்கள்.,

    மாறாக உங்கள் கேள்விக்கு பதில் இல்லையென்று இன்னொரு முறை சொல்லாதீர்கள் எனக்கு ஏற்படும் நகைப்பை விட உங்களின் அரைக்குறை ஆய்வு(?) வேதனையளிக்கிறது...

    ReplyDelete
  89. கடவுள் ஏற்பு நம்பிக்கை தாண்டி உறுதியான நிலைப்பாடாக கொண்டதால் தான்.. கடவுள் இருப்பு குறித்த சாத்தியக்கூற்றை அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து வருகிறேன்.

    ஆனால் கடவுளை மறுப்பது உங்களின் உறுதியான நிலைப்பாட சொன்னால் அதற்கு நூறு சதவீகிதம் ஆதார / விஞ்ஞான / அறிவுபூர்வமான அறிவியல் சான்றுகள் சமர்பிக்க வேண்டும்...

    இதுவரை கடவுளின் இருப்பு உறுதியற்றது என்பதை நிருபிக்க ஒரே ஒரு நிருபிக்கப்பட்ட சான்றாவது இங்கே முன் வைத்து இருக்கிறீர்களா....

    வழக்கம் போல் ஆத்திகர்கள் (நான்) கூறும் பதிலை பிடித்தே ஆத்திக ( நீங்கள் ) கேள்விகளை முன்வைத்து விவாதத்தை தொடர்கிறீர்கள்...
    கடவுளை மறுக்க இது ஒரு அறிவார்ந்த அணுகு முறையா...
    யோசிக்க கடமை பட்டிருக்கிறீர்கள் சகோ செங்கொடி...

    நான் முன்னமே கேட்டது இன்னும் கேட்டுக்கொண்டே தான் இருப்பேன்..
    கடவுள் இல்லையென்றால் பதில் தரா கேள்விகள் என்ற ஒரு நிலை அறிவியல் மற்றும் சமூகத்தில் இருக்கவே கூடாது...

    பல்லாயிரம் கிலோ எடையில் விண்ணில் பறக்கும் விமானத்தை தூக்கி பிடித்து காரணத்தை விளக்க தெரிந்த அறிவியலுக்கு தேனீயின் வாழ்வு முறை தெளிவற்று விளக்கமின்றி இன்னும் ஆச்சரியத்தை வரவழைத்து தான் கொண்டிருக்கிறது. இதைப்போல என்னால் ஒரு பட்டியலை தர முடியும்.

    ஆக முடிவுறா அல்லது பதில் தரா கேள்விகளில் இறைவனின் இருப்பின் உறுதிப்பாட்டை தான் அறிவார்ந்து பகுத்தறிவோடு ஒப்பு நோக்கும் எவரும் புரிந்துக்கொள்வார்கள்

    ReplyDelete
  90. //எதிர்காலம் தான் பதிலைத் தருமென்றால் பதில் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும் இல்லை என்று கூறக்கூடாது என்கிறீர்கள். இதுவும் வேறு ரூபத்தில் ஏற்கனவே எழுதியது தான். பதில் வரும்வரை காத்திருக்காமல் நீங்கள் ஏன் உறுதியாக இருக்கிறது என்று கூறுகிறீர்கள்? வாருங்கள், இருவரும் காத்திருப்போம். ஆதாரபூர்வமாக பதில் கிடைத்த பிறகு கடவுளை ஏற்கவோ மறுக்கவோ செய்வோம். அதுவரை கடவுளை ஒத்தி வைப்போம். நீங்கள் தயாரா? //

    மிக்க சந்தோசம்... இதில் நீங்கள் உண்மையாளாராக இருந்தால்.. நீங்கள் தான் கடவுளை மறுக்க வழியின்றி காத்திருக்க வேண்டும். ஏனெனில் கடவுள் ஏற்பு முதலாவது, எனது நம்பிக்கை சார்ந்த ஒன்று. கடவுள் மீது நம்பிக்கையில்லா உங்களை போன்றவர்களையும் கடவுளை ஏற்க அழைக்கவே உறுதிப்பாட்டின் மீதான சாத்தியக்கூற்றை குறித்து பேசுகிறேன்.

    ஆக எதிர்க்காலத்தின் மீது நாம் இருவரும் பொறுப்பு சாட்டினாலும் கூட என்னால் என் முந்தைய எனது நிலையை அப்படியே தொடர முடியும். ஆனால் எதிர்க்காலம் பதில் தரும் வரை நீங்கள் கடவுள் தெரியவில்லையென்று தான் சொல்ல வேண்டும் மாறாக கடவுள் இல்லையென்று சொல்ல முடியாது... எதிர்க்காலம் பதில் தரும் வரை தயாராக இருங்கள்...!

    கடவுள் / இஸ்லாம் இதில் உங்கள் சந்தர்ப்ப வாத கருத்தை இங்கே பயன்படுத்துகிறீர்கள்.

    உதாரணமாக 'அர்ஷ்க்கு' வருவோம்

    ReplyDelete
  91. //கடவுளைத் தவிர அனைத்தும் படைப்பு என்றால், கடவுளுக்கும் படைப்புக்குமான இடைவெளியில் கடவுள் எங்கு எப்படி இருந்தது? இந்தக் கேள்வியை விளக்கும் கருவியாகத்தான் அர்ஷ் பயன்படுத்தப்பட்டிருந்தது //

    சரி இங்கே கடவுள் அர்ஷில் அமர்வதில் எந்த பிரச்சனை சகோ செங்கொடி? இதில் எங்கே முரண்பாடு என்றும் எனக்கு உண்மையா புரியவில்லை.

    // அர்ஷ் என்பது அரியணை என்றால், அது ஒரு பொருள். ஒரு பொருளை பாவிப்பது என்றால் அது இன்னொரு பொருளால்தான் முடியும். இதன்படி அர்ஷை பாவிக்கும் கடவுளும் ஒரு பொருளாகிறது. //

    என்ன ஒரு புரிதல்...?
    உங்களின் சுய விளக்கங்களுக்கு சற்று ஒய்வு கொடுத்து விட்டு முன்முடிவுகளற்று இஸ்லாமிய மூலங்களை உள்வாங்க முன் வாருங்கள்.
    அர்ஷ் என்பது அரியணை தான் இங்கே அவனது வல்லமையென்று சொன்னது... கொஞ்சம் புரிதலுடன் பேசுங்கள். அவனது வல்லமையின் வெளிப்பாடு என்றே இஸ்லாம் சொல்கிறது.
    ஒரு பொருளை பாவிப்பது ஒரு பொருளாக தான் இருக்க வேண்டும் என்ற பொது நிலை சட்டத்தில் கடவுளின் வல்லமையும் உட்படுத்த பார்க்கிறிர்கள், நான் முன்னரே சொல்லி இருக்கிறேன்

    இஸ்லாம் குறித்து பேசினால் ஆனால் அவற்றை விளக்க மறுக்க குர்-ஆன் மற்றும் சுன்னாவின் மூலத்தை தான் நீங்கள் சுட்டிக்காட்டவேண்டும். மாறாக பொது நிலை புரிதலை இங்கே முன்மொழிய கூடாது. அர்ஷ் என்பது அவனது வல்லமையின் வெளிப்பாட்டிற்காக அவனது பிரம்மாண்டத்தை தனது படைப்பினங்களுக்கு வார்த்தைகளில் உணர்த்த ஒரு குறியீடு. ஆக இங்கே

    //அவனைத் தவிர அனைத்துமே படைப்பு என்றால் அவனுக்கும் படைப்புக்குமான இடைவெளியில் எங்கு எப்படி அவனால் இருக்க முடிந்தது //
    என்பது தேவையற்ற கேள்வி என்பதை விட அபத்தம் நிறைந்த கேள்வி.. ஏனெனில் கடவுள் அப்போது எங்கே இருந்தார்..? என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை கண்டறிய நான் முடிந்தால் அதற்கு பெயர் கடவுளில்லை.

    ஆக அர்ஷ் விசயத்தில் நீங்கள் கடவுளை மறுப்பதாக இருந்தால் அறிவுப்பூர்வமாக இரு கேள்விகளை தான் கேட்க வேண்டும்.

    1. கடவுளுக்கு ஏதும் தேவையில்லையென்றால் அர்ஷ் மீது அமர்வது அவனுக்கு தேவையா?
    2. அல்லது அர்ஷ் மீது அமர்வது அவனது நிலைக்கு முரண்பாடகும் ?.

    இவை தான் உங்களுடைய கேள்விகளாக இருப்பீன் அதற்கான பதில்களு, முன்னரே சொல்லியும் இருக்கிறேன். அவற்றில் கிளை கேள்விகள் தோன்றீன் இன்ஷா அல்லாஹ் இன்னும் விளக்குகிறேன்.

    ReplyDelete
  92. //மலக்குகள் குறித்து நான் கேட்பதற்கும்.. //

    அண்ணே மறுபடியும் உங்கள் சுய புரிதல்...

    மலக்குகள்
    சைத்தான்
    சொர்க்கம்
    நரகம்
    மறுமை
    கப்ரு வாழ்க்கை

    இதைப்போன்ற விளக்க சாத்தியமில்லா கோட்பாடுகளை உங்களுக்கு இங்கே அறிமுகப்படுத்தியது யார்?

    அறிவியலா,,,?
    குர்-ஆனா?

    இதற்கு முதலில் யோசித்து விட்டு... உங்கள் கேள்விகளை பதியுங்கள்..

    இரட்டை நிலைப்பாட்டிற்கு வருவோம்

    இவ்வளவு பத்தி பத்தியாக பின்னூட்டமிட்ட நீங்கள் வணக்கம் என்ற சொல்லாடலில் கொடுத்த விளக்கத்தையும் இங்கே கூறி இருக்கலாமே...

    செங்கொடி அண்ணே... செயலும் சொல்லும் ஒரே நிலையில் இருப்பதே தெளிவாக ஒரு கொள்கையே பின்பற்றுவதாக அர்த்தம்

    நான் இஸ்லாத்தை பின்பற்றுவதால் எவருக்கும் எங்கும் வணக்கம் சொன்னது இல்லை. எங்கும் முஸ்லிமாக என்னை நிலை நிறுத்திக்கொள்கிறேன். ஆனால் உங்களது தனிப்பட்ட வாழ்க்கை எந்த அடிப்படையில் வைத்து தொடகிறீர்கள்..? வணக்கம் என்ற உங்கள் சொல்லின் விளக்கம் அறிந்து இன்னும் தொடர்கிறேன்,

    கடவுள் இருப்பு எந்த விதத்தில் உறுதி பாடானது என்பதை ஏற்க மிக தெளிவான நிலையில் கருத்தை எடுத்து வைத்தாகவே நினைக்கிறேன். மீண்டும் இந்த விவாதம் குறித்து இதுவல்லாத துணை அல்லது கிளை கேள்விகள் இருந்தால் இங்கே பதியுங்கள் அப்படியில்லாமல் மீண்டும் மீண்டும் ஆரம்ப பொது நிலை புரிதலை இங்கே உங்கள் கேள்வியாக்காதீர்கள்.

    பரிணாமம் குறித்து இந்த விவாதத்திற்கு தொடர்பில்லையென்கிறீர்கள். அப்படியானால் பரிணாமம் குறித்து இரண்டு ஆக்கங்கள் இங்கே இருக்கின்றன
    அவற்றிற்கான சுட்டிகள் பாருங்கள் அவற்றின் கீழாக நமது விவாதத்தை தொடர்வோம்.
    1. http://www.naanmuslim.com/2010/12/blog-post_27.html

    2.http://www.naanmuslim.com/2010/09/blog-post_26.html

    ReplyDelete

  93. அப்புறம் ஒரு முக்கிய விசயம்...

    குர்-ஆனில் அறிவியல் என்பதை கேலி செய்யும் விதமாக அவியல்??? போன்ற வார்த்தைகள் இங்கே வேண்டாம்... நீங்கள் ஏற்றாலும் மறுத்தாலும் எனக்கு அது இறைவனின் வார்த்தைகள் என்பதில் நூறு சதவீகிதம் நம்பிக்கை இருக்கிறது,

    தாம் மறுக்கும் ஒன்றை பிறிதொருவர் ஏற்றால் அது தவறானது என்பது நமது எண்ணமென்றால் என்றால் அழகிய முறையில் அல்லது ஆதார ரீதியில் அவருக்கு தெரியப்படுத்த வேண்டும். குறைந்த பட்சம் தனி மனித நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்க தெரிந்திருக்க வேண்டும். இது தான் பகுத்தறிவுடைய எவரின் செயலாகவும் இருக்கும். அஃதில்லாமல் இதை போன்ற தேவையற்ற வார்த்தை பிரயோகங்கள் தொடர்ந்தால் அத்தகைய பின்னூட்டங்களுக்கு இங்கே இடமில்லை.

    பாருங்கள் சுமார் 100 பின்னூட்டங்களுக்கு மேலாகியும் வேறு எவருடைய எந்த தேவையற்ற பின்னூட்டமோ, கிண்டல் பேச்சுக்கள், நமது விவாதத்திற்கு இடையில் நான் இருக்கவே அனுமதிக்க இல்லை. ஆக ஒருவரின் நம்பிக்கையை கேலி செய்யும் வார்த்தைகள் இனிமேல் இங்கே பகிரப்படாது.. கவனத்தில் வைத்து தொடருங்கள். ஆனா பாருங்க
    சகோ செங்கொடி எங்களுக்காகவது குர்-ஆன், சுன்னா இருக்கிறது அதன் அடிப்படையில் உலகம் முழுவதும் ஒரே சீரான வாழ்க்கை முறையை வாழ முயற்சித்துக்கொண்டிருக்கிறோம்.

    ஆனால் பாருங்கள் உங்களுக்கென்று சமூகம் தழுவிய முறையில் ஏதாவது கொள்கை கோட்பாடுகள் ஒருங்கிணைத்து இருக்கின்றனவா...?
    அட குறைந்த பட்சம். நன்மை தீமைகள் என்பதன் அளவுகோலாவது உங்களிடத்தில் நிலையாக இருக்கின்றனவா....?
    யோசிச்சி பாருங்க அடுத்து எதையும் குறை கூறலாம்...

    உங்களது கற்பனை கோட்டையை இலங்கையே சார்ந்த இக்ஸான் என்ற சகோதரர் இடித்து கொண்டிருப்பதாக எனக்கு செய்தி வந்தது. ஆக நீங்கள் தான் மீண்டும் ஒரு முறை உங்கள் கற்பனை கோட்டையே பலப்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  94. எனது பதிலில் வீரியம் இருக்கிறதா இல்லையா எனபதை விட உங்களிடத்தில் இதற்கு அக்மார்க் குத்தப்பட்ட ஆதாரப்பூர்வ பதில் இருக்கிறதா பார்ப்போம்

    1. ஆதிமனிதன் கடவுளை வணங்கவில்லை... என்பதற்கு தொல்லியல் சான்றுகள் எங்கே?
    2. குகை ஓவியங்களை கடவுள் மறுப்பை உண்மைப்படுத்தும் ஆவணங்கள் என்னென்ன?
    3. கடவுள் என்றால் என்ன? அறிவியல் ரீதியான இலக்கணம்?
    4. ஒருவர் பிறக்கும் நேரம் - இறக்கும் நேரம் துல்லியமாக என்ன?
    5. மழை பொழிவை ஏன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை?
    6. பெருவெடிப்புக்கொள்கை ஏன் நிகழ வேண்டும்.?
    7. கோள்கள் எப்படி பால்வெளியில் இயங்குகிறது? யார் இயக்குவது?
    8. வீண்ணில் ஏற்படும் மோதல்களும், சீரற்ற விபத்துகளையும் நவீன அறிவியல் நிகழ்த்தியதா..? இல்லையென்றால் அறிவியலால் அதை ஏன் தடுக்க முடியவில்லை?
    9. அறிவியலில் தர்செயல் எப்படி சாத்தியம் ? அதற்கு நிருபணம்?
    10. எதிர்க்காலம் எப்படி உண்மை அறிவியலாகும்?


    //பின்குறிப்பு: \\\அறிவியல் மட்டுமே எல்லாவற்றிற்கும் மூலாதாரம். அவற்றில் சிக்காத எதுவும் எங்கும் இல்லை. என்றீர்கள்/// இப்படி நான் கூறியிருக்கிறேனா? ஆம் என்றால் அதை மேற்கோள் காட்டுங்கள். அப்படி உங்களால் காட்ட முடியாவிட்டால் என்னுடைய கருத்தை திரிக்கிறீர்கள் என்று பொருள். //

    மிக நன்று! அப்படியில்லையென்றால் அறிவியல் எல்லாவற்றிற்கும் மூலாதாரம் இல்லையென்றால் கடவுள் மறுப்பை அறிவியல் அல்லாத வழியில் இங்கே பட்டியலிடுங்களேன்.. சகோ?


    உங்கள் சகோதரன்
    குலாம்.

    ReplyDelete
  95. 1
    தம்பி குலாம்,

    \\\கடவுள் - எனது நம்பிக்கையென்றாலும் உங்களையும் கடவுளை ஏற்க நான் அழைப்பு விடுத்ததால் நம்பிக்கை தாண்டி உறுதியான நிலைப்பாடு என்ற நிலையில் கடவுளின் இருப்புக்குறித்து விவாதிக்க ஒப்புக்கொண்டேன்/// கடவுள் என்பது உங்கள் நம்பிக்கையா? உறுதியா? ஏன் ஒற்றைச் சொல்லில் உங்களால் பதில் கூற முடியவில்லை.

    \\\அப்படியானால் கடவுளின் இருப்பை எப்படி உறுதியாக நம்ப முடியும் என்பது அறிவார்ந்த கேள்வி தான்/// அறிவார்ந்த கேள்வி தான் என்றால் பதில் கூறியிருக்க வேண்டியது தானே. ஏன் பதில் கூறவில்லை?

    \\\இறந்த கால .. .. .. நிலைப்பாடுகள் குர்-ஆனில் 20 சதவீகிதம் உண்டு. நிகழ்கால .. .. .. நிலையில் குர்-ஆனில் சுமார் 50 சதவீகித செய்திகள் உண்டு. .. .. .. ஆதார சான்றுகள் தராமல் சவுதியின் துணையுடன் ஏன் அந்த ஆய்வுகள் நடத்தப்பட்டது என்ற ஒற்றை வரியில் உங்களின் லாகவமான பதிலை முடித்து இருக்கிறீர்கள்/// தம்பி, உங்களின் 50 சதவீதத்துக்கு நான் ஒற்றை வரியில் பதிலை முடித்துக் கொண்டேனா? நன்றாக முகத்தை கழுவி விட்டு பாருங்கள். சவால் விட்டிருக்கிறேன். அந்த சவாலை எதிர் கொள்வதற்கு தைரியம் இருக்கிறதா? \\\ஐம்பது சதவீகிதம் கேட்கப்பட்ட தொகுப்பட்ட செய்திகளில் இன்றைய அறிவியலில் எதுவும் முரண்பட வில்லை/// தம்பி ரெம்ப சிரிக்க வைக்காதிங்க தம்பி. பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எடுத்துக்காட்டு தரவா? அறிவியலோடு முரண்படவே செய்யாத குரான் வசனத்தின் அதிசயம், அற்புதம் ‘தேனீ கனிகளை உண்கிறது.’

    \\\கடவுளின் வல்லமை, நிலைப்பாடு மறுமை, சொர்க்கம், நரகம் போன்ற செய்திகளை நம்புவதற்கு என்ன தடை ஐயா செங்கொடி?/// “ஐயய்யோ! என்ன தம்பி நீங்க, நம்புறதுக்கு என்ன தடை தம்பி, நீங்க தாராளமா நம்பிக்கோங்க. ஆனா அதை உறுதின்னு சொல்லாதிங்க” என்று மட்டும் தான் சொல்கிறேன்.

    \\\இதுவரை தற்செயல் மற்றும் எதிர்க்காலத்தை தான் பதிலாக்கி வருகிறீர்கள்/// இது அப்பட்டமான பொய். என்னுடைய பதிலில் இந்தக் கூறுகளும் இருக்கின்றன. அதேநேரம் இவை மட்டுமே என்னுடைய பதிலல்ல. இதற்கு அப்பாற்பட்டும் கடவுள் மறுப்பை நிருவி இருக்கிறேன்.

    \\\இது நாத்திகர்கள் முன்வைத்து ஆத்திகர்கள் பதிலளிக்க வேண்டிய கேள்வி. // சபாஷ்!.. உங்களைப் போல எனது விருப்புக்காக என்னிடம் பதில் இல்லையென்றால் எதிர்ப்போரை குறைப்படுத்த விரும்ப மாட்டேன்/// அட! உங்களுக்கு அவையடக்கம் புளகமடைய வைக்கிறது தம்பி. ஆனால் அத்தனையும் போலி. என்னிடம் பதில் இல்லை என்பதால் அதை உங்களிடம் தள்ளி விடவில்லை. மெய்யாகவே அது ஆத்திகர்கள் விடையளிக்க வேண்டிய கேள்வி. எந்த அடிப்படையில் அது ஆத்திகர்களுக்கான கேள்வி என்பதையும் விளக்கியிருக்கிறேன். அதை பரிசீலித்தாலோ, பதில் சொன்னாலோ உங்கள் நிலை ஊசலாட்டம் கண்டுவிடும் என்பதால் திருகலான பதில் சொல்லி, அதையும் நான் உடைத்து விட்டதால், மீண்டும் ‘மொதல்ல இருந்து புச்சா வர்றீங்க’ அம்புட்டுத்தேன்.

    \\\இதோ கடவுளை மறுக்கும் ஆதார ரீதியான நிருபண சான்றுகள் என இங்கே தாருங்கள்/// கண்ணை திறந்து பாருங்கள் தம்பி. நிறைய தந்திருக்கிறேன்.
    \\\எதிர்க்காலமே பதில் தருமென்றால் அதை ஒதுக்கி வைத்து விட்டு நிகழ்காலத்தில் கடவுள் மறுப்பு வழியில்லையென்று ஒத்துக்கொள்ளுங்கள்/// எப்படி உறுதியாக கூறுகிறேன் என்றும் எழுதியிருக்கிறேன். நீங்கள் காத்திருக்கத் தயாரா என்று கேட்டிருக்கிறேன். செலக்டிவ் அம்னீஷியா என்று கூறுவார்களே, உங்கள் பார்வையில் அதுவும் வந்து விட்டதா?

    ReplyDelete
  96. 1
    தம்பி குலாம்,

    \\\கடவுள் - எனது நம்பிக்கையென்றாலும் உங்களையும் கடவுளை ஏற்க நான் அழைப்பு விடுத்ததால் நம்பிக்கை தாண்டி உறுதியான நிலைப்பாடு என்ற நிலையில் கடவுளின் இருப்புக்குறித்து விவாதிக்க ஒப்புக்கொண்டேன்/// கடவுள் என்பது உங்கள் நம்பிக்கையா? உறுதியா? ஏன் ஒற்றைச் சொல்லில் உங்களால் பதில் கூற முடியவில்லை.

    \\\அப்படியானால் கடவுளின் இருப்பை எப்படி உறுதியாக நம்ப முடியும் என்பது அறிவார்ந்த கேள்வி தான்/// அறிவார்ந்த கேள்வி தான் என்றால் பதில் கூறியிருக்க வேண்டியது தானே. ஏன் பதில் கூறவில்லை?

    \\\இறந்த கால .. .. .. நிலைப்பாடுகள் குர்-ஆனில் 20 சதவீகிதம் உண்டு. நிகழ்கால .. .. .. நிலையில் குர்-ஆனில் சுமார் 50 சதவீகித செய்திகள் உண்டு. .. .. .. ஆதார சான்றுகள் தராமல் சவுதியின் துணையுடன் ஏன் அந்த ஆய்வுகள் நடத்தப்பட்டது என்ற ஒற்றை வரியில் உங்களின் லாகவமான பதிலை முடித்து இருக்கிறீர்கள்/// தம்பி, உங்களின் 50 சதவீதத்துக்கு நான் ஒற்றை வரியில் பதிலை முடித்துக் கொண்டேனா? நன்றாக முகத்தை கழுவி விட்டு பாருங்கள். சவால் விட்டிருக்கிறேன். அந்த சவாலை எதிர் கொள்வதற்கு தைரியம் இருக்கிறதா? \\\ஐம்பது சதவீகிதம் கேட்கப்பட்ட தொகுப்பட்ட செய்திகளில் இன்றைய அறிவியலில் எதுவும் முரண்பட வில்லை/// தம்பி ரெம்ப சிரிக்க வைக்காதிங்க தம்பி. பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எடுத்துக்காட்டு தரவா? அறிவியலோடு முரண்படவே செய்யாத குரான் வசனத்தின் அதிசயம், அற்புதம் ‘தேனீ கனிகளை உண்கிறது.’

    \\\கடவுளின் வல்லமை, நிலைப்பாடு மறுமை, சொர்க்கம், நரகம் போன்ற செய்திகளை நம்புவதற்கு என்ன தடை ஐயா செங்கொடி?/// “ஐயய்யோ! என்ன தம்பி நீங்க, நம்புறதுக்கு என்ன தடை தம்பி, நீங்க தாராளமா நம்பிக்கோங்க. ஆனா அதை உறுதின்னு சொல்லாதிங்க” என்று மட்டும் தான் சொல்கிறேன்.

    \\\இதுவரை தற்செயல் மற்றும் எதிர்க்காலத்தை தான் பதிலாக்கி வருகிறீர்கள்/// இது அப்பட்டமான பொய். என்னுடைய பதிலில் இந்தக் கூறுகளும் இருக்கின்றன. அதேநேரம் இவை மட்டுமே என்னுடைய பதிலல்ல. இதற்கு அப்பாற்பட்டும் கடவுள் மறுப்பை நிருவி இருக்கிறேன்.

    \\\இது நாத்திகர்கள் முன்வைத்து ஆத்திகர்கள் பதிலளிக்க வேண்டிய கேள்வி. // சபாஷ்!.. உங்களைப் போல எனது விருப்புக்காக என்னிடம் பதில் இல்லையென்றால் எதிர்ப்போரை குறைப்படுத்த விரும்ப மாட்டேன்/// அட! உங்களுக்கு அவையடக்கம் புளகமடைய வைக்கிறது தம்பி. ஆனால் அத்தனையும் போலி. என்னிடம் பதில் இல்லை என்பதால் அதை உங்களிடம் தள்ளி விடவில்லை. மெய்யாகவே அது ஆத்திகர்கள் விடையளிக்க வேண்டிய கேள்வி. எந்த அடிப்படையில் அது ஆத்திகர்களுக்கான கேள்வி என்பதையும் விளக்கியிருக்கிறேன். அதை பரிசீலித்தாலோ, பதில் சொன்னாலோ உங்கள் நிலை ஊசலாட்டம் கண்டுவிடும் என்பதால் திருகலான பதில் சொல்லி, அதையும் நான் உடைத்து விட்டதால், மீண்டும் ‘மொதல்ல இருந்து புச்சா வர்றீங்க’ அம்புட்டுத்தேன்.

    \\\இதோ கடவுளை மறுக்கும் ஆதார ரீதியான நிருபண சான்றுகள் என இங்கே தாருங்கள்/// கண்ணை திறந்து பாருங்கள் தம்பி. நிறைய தந்திருக்கிறேன்.
    \\\எதிர்க்காலமே பதில் தருமென்றால் அதை ஒதுக்கி வைத்து விட்டு நிகழ்காலத்தில் கடவுள் மறுப்பு வழியில்லையென்று ஒத்துக்கொள்ளுங்கள்/// எப்படி உறுதியாக கூறுகிறேன் என்றும் எழுதியிருக்கிறேன். நீங்கள் காத்திருக்கத் தயாரா என்று கேட்டிருக்கிறேன். செலக்டிவ் அம்னீஷியா என்று கூறுவார்களே, உங்கள் பார்வையில் அதுவும் வந்து விட்டதா?

    ReplyDelete
  97. 2
    \\\கடவுளை மறுப்பது உங்களின் உறுதியான நிலைப்பாட சொன்னால் அதற்கு நூறு சதவீகிதம் ஆதார / விஞ்ஞான / அறிவுபூர்வமான அறிவியல் சான்றுகள் சமர்பிக்க வேண்டும்/// இதுவரையான என்னுடைய வாதங்களெல்லாம் வேறென்ன?

    \\\கடவுள் இல்லையென்றால் பதில் தரா கேள்விகள் என்ற ஒரு நிலை அறிவியல் மற்றும் சமூகத்தில் இருக்கவே கூடாது/// ஏன் அப்படி? சான்று தந்து நிருவுங்கள்.

    அர்ஷ் .. .. .. ? ஹைய்யோ! ஹைய்யோ!! தம்பி, உங்களுக்கு என்ன கேட்டிருக்கிறேன் என்பதும் புரியவில்லை. எப்படி பதில் சொல்ல வேண்டும் என்பதும் தெரியவில்லை. ஆனாலும் ஏதோ பதில் சொல்கிறீர்கள் பாருங்கள். உங்களை எனக்கு ரெம்ப புடிச்சிருக்குது தம்பி.

    \\\இஸ்லாம் குறித்து பேசினால் ஆனால் அவற்றை விளக்க மறுக்க குர்-ஆன் மற்றும் சுன்னாவின் மூலத்தை தான் நீங்கள் சுட்டிக்காட்டவேண்டும். மாறாக பொது நிலை புரிதலை இங்கே முன்மொழிய கூடாது/// எப்படி, எப்படி? பொது உண்மைகளை, பொதுவான் புரிதல்களை பயன்படுத்தக் கூடாது. ஆனால் குரான் சுன்னா மூலங்களை மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமா? அதாவது பாருங்கள் குரானின் இந்த வசனத்தில் கடவுள் என்பது பொய் என்று எழுதி இருக்கிறது. அதற்கு விளக்கமாக புஹாரியில் இந்த ஹதீஸில் கடவுள் உறுதியான ஒன்றல்ல அது கற்பனை என்று முகம்மது விளக்கமளித்துள்ளார். இதே பொருளில் திர்மிதியிலும், இப்னு மாஜாவிலும் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காட்ட வேண்டுமோ. இது என்ன விவாதக்களமா? இல்லை மதரஸாவா? ஆனாலும் ரெம்ப நல்லவரு தம்பி நீங்க.

    \\\அண்ணே மறுபடியும் உங்கள் சுய புரிதல்/// தம்பி என்னுடைய புரிதலைத்தான் நான் கொண்டிருக்க முடியும். அது சரியா தவறா? என்பதைத்தான் பார்க்க வேண்டும். தவறென்றால் விளக்குங்கள் எந்த விதத்தில் தவறு என்று. இதற்காக நான் இரவல் புரிதலையா இரக்க முடியும்? ஓர் இடத்தில் பொதுப் புரிதலை இங்கே முன் மொழியக் கூடாது என்கிறீர்கள். மற்றோர் இடத்தில் இது உங்கள் சுய புரிதல் என்கிறீர்கள். பொதுப் புரிதலும் கூடாது, சுய புரிதலும் கூடாது என்றால், நான் என்ன செய்ய வேண்டும்? உங்களுடைய புரிதலை மட்டும் வழிமொழிய வேண்டுமோ?

    \\\இதைப்போன்ற விளக்க சாத்தியமில்லா கோட்பாடுகளை உங்களுக்கு இங்கே அறிமுகப்படுத்தியது யார்?
    அறிவியலா,,,? குர்-ஆனா?/// அடேங்கப்பா, நல்லா கேட்கிறீங்க டீடைலு. ஆனால் நான் ஏற்கனவே பதில் கூறிவிட்டேனே. வழக்கம் போல் பார்க்காமல் விட்டு விட்டீர்களா? \\\மலக்குகள் மட்டுமல்ல, சைத்தான் உட்பட கடவுள் வரை கடவுளோடு தொடர்புடைய அனைத்து கலைச்சொற்களையும் கடவுளோடு தொடர்புடைய மூலகங்களிலிருந்து தான் பெற முடியும். அதற்காக அந்த மூலகங்கள் கூறும் அனைத்தையும் ஒப்புக் கொள்ள வேண்டுமா?///

    வணக்கம், பின்னூட்டம் போன்றவைகளை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் தம்பி. முதலில் நீங்கள் எழுதியதற்கு விளக்கம் சொல்லுங்கள், \\\இங்கே உங்கள் சொல்லாடலில் எனது நோக்கத்தை உங்கள் எழுத்தில் புறமுகமாக சுட்டி காட்டீனீர்கள் என்றால் உங்களின் இரட்டை முகம் என்பதை... செயலும், செயலும் கொள்கை ரீதியாக உங்களுக்கு மாறுப்பட்டிருப்பதை எனது சொல்லாடல் குறிக்கவில்லையென்பதை எப்படி நீங்கள் மறுக்கலாம் சகோ/// உங்களின் உலகமகா தெளிவான இந்த வாக்கியங்களை புரிந்து கொள்ள தாவு தீர்ந்து விடுகிறது. எனவே, முதலில் விளக்குங்கள் ஏனையவைகளை பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.

    \\\பரிணாமம் குறித்து இந்த விவாதத்திற்கு தொடர்பில்லையென்கிறீர்கள். அப்படியானால் பரிணாமம் குறித்து இரண்டு ஆக்கங்கள் இங்கே இருக்கின்றன. அவற்றிற்கான சுட்டிகள் பாருங்கள் அவற்றின் கீழாக நமது விவாதத்தை

    ReplyDelete
  98. 3
    தொடர்வோம்/// நன்றாக ஒருமுறை கண்களை கசக்கி விட்டுக் கொள்ளுங்கள். பின்னர் பாருங்கள். அப்போது தான் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பது தெரியும்.

    \\\உங்களது கற்பனை கோட்டையை இலங்கையே சார்ந்த இக்ஸான் என்ற சகோதரர் இடித்து கொண்டிருப்பதாக எனக்கு செய்தி வந்தது/// ஐயய்யோ! உங்களுக்கு விசயமே தெரியாதா? அவரு இடிக்கிற வேலையெல்லாம் விட்டுட்டு ஓடிப்போய் ரெம்ப நாளாச்சுதுங்களே.

    \\\அறிவியல் மட்டுமே எல்லாவற்றிற்கும் மூலாதாரம். அவற்றில் சிக்காத எதுவும் எங்கும் இல்லை. என்றீர்கள்/// இப்படி நான் கூறியிருக்கிறேனா? ஆம் என்றால் அதை மேற்கோள் காட்டுங்கள். அப்படி உங்களால் காட்ட முடியாவிட்டால் என்னுடைய கருத்தை திரிக்கிறீர்கள் என்று பொருள். // மிக நன்று! அப்படியில்லையென்றால் அறிவியல் எல்லாவற்றிற்கும் மூலாதாரம் இல்லையென்றால் கடவுள் மறுப்பை அறிவியல் அல்லாத வழியில் இங்கே பட்டியலிடுங்களேன்.. சகோ?/// ஐய, இன்னாபா நீ. என்ன கேட்கப்பட்டிருக்கிறதோ அதற்கு பதில் கூறுங்கள். திரிக்கிறீர்கள் என்பது உறுதியாகிவிட்டது. அதை வெளிப்படையாக செய்து விடலாமே.

    \\\எனது பதிலில் வீரியம் இருக்கிறதா இல்லையா எனபதை விட/// தம்பி, தம்பி நில்லுங்க தம்பி ஓடாதீங்க. நான் என்ன சொல்லியிருக்கிறேன். \\\நீங்கள் என் கேள்விகளுக்கு பதில் கூற மறுக்கிறீர்கள் என்று கூறிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய பதில்களை பரிசீலிக்க மறுக்கிறீர்கள் எனக் கூறிக் கொண்டிருக்கிறேன். மாறாக உங்கள் பதிலில் வீரியம் குறைவாக இருக்கிறது எனக் கூறவில்லை. முதலில் நீங்கள் பதில் கூறுங்கள் பின்னர் அதில் வீரியம் இருக்கிறதா இல்லையா என்று பார்க்கலாம்/// புரிஞ்சுதா தம்பி அல்லது இன்னுமொரு முறை புளி போட்டு விளக்கணுமா?

    தம்பி உங்கள் அத்தனை கேள்விகளுக்கும் ஏற்கனவே பதில் தந்திருக்கிறேன். தேவைப்பட்டால் அவைகளை மேற்கோள் காட்டுகிறேன். சில புதிய கேள்விகளுக்கும் பதில் தருவதில் எனக்கு தயக்கமோ குலை நடுக்கமோ கிடையாது. சமாளித்து ஏதேதோ கூறி நழுவுவதும் எனக்கு அவசியமில்லை. அவைகளெல்லாம் நெஞ்சுரம் இல்லாதவர்களும், நேர்மையற்றவர்களும் செய்வது. ஆனால், நீங்கள் கேள்வி மட்டும் கேட்டுக் கொண்டிருப்பீர்கள் நான் பதில் மட்டும் கூறிக் கொண்டிருக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாதல்லவா? எனவே, ஏற்கனவே வைக்கப்பட்டிருக்கும் என்னுடைய கேள்விகளுக்கு முதலில் நீங்கள் பதில் கூறுங்கள்.

    1. எந்தவித அளவுகோலிலும் கடவுள் அகப்படமாட்டார் என்றால் அவர் உறுதியாக இருக்கிறார் என்று நீங்கள் எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்?
    2. அறிவியல் குறைபாடுடையது என்றால் உங்கள் யதார்த்த வாழ்வில் அறிவியலை விலக்கி வைத்து முடிவெடுத்த நிகழ்வு ஏதேனும் உண்டா? பட்டியலிடுங்கள்.
    3. முதலில் அண்ட வெளியில் மோதல்களே நிகழ்வில்லை என்றீர்கள். பின்னர் மோதல்களை யார் நிகழ்த்தியது என்றீர்கள். கடவுள் தான் நிகழ்த்துகிறார் என்றால் அதை நிரூபியுங்கள்?
    4. கடவுள் என்றால் என்ன? (கவனிக்கவும் கடவுளின் தகுதிகள் அல்ல)
    5. பேரண்டம் உட்பட அனைத்தையும் படைப்பதற்கு முன் கடவுள் எங்கு இருந்தார்?
    6. இந்த உலகில் சோதித்தறிய முடியும் படியான, மனிதர்கள் கோரிக்கையை இறைவன் நிறைவேற்றியதற்கான சான்று ஏதாவது கூற முடியுமா?
    7. ஆத்திகர்கள் கடவுளை உறுதிப்படுத்துவதாக கூறிக் கொண்டு கேட்கும் எதிர்க் கேள்விகள் அனைத்தும் ஏன் நிகழ்கால அறிவியலைக் கடந்ததாக இருக்கிறது?
    8. ஆன்மீகத்துக்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்பு சாராம்சத்தில் கடவுளைச் சொன்னவரின் சொல் உண்மையா பொய்யா என்பதே. இதை நீங்கள் எப்படி கருதுகிறீர்கள்?

    ReplyDelete
  99. 4
    பின்னர் நான் உங்கள் புதுக் கேள்விகளுக்கு வருகிறேன்.

    அவியல் குறித்து: வாழ்வியல் சுவைகளில் ’அங்கதம்’ என்பதும் ஒரு சுவை. அந்த அடிப்படையில் கூறப்பட்ட சொல் தான் அது. பண்டைய வேதங்களுக்குள் நவீன அறிவியல் என்பது பகுத்தறிவாளர்களின், யாதார்த்தவாதிகளின், உண்மையாளர்களின் மெய்நிலைகளின் மீது செய்யப்படும் தாக்குதல். அதை எதிர் கொள்வதற்காக செய்யப்பட்ட கேலி தான் அவியல் எனும் சொல். மதத்துக்குள் அறிவியல் என்று பீஜப்படுத்தப்படும் போது, அதற்கு எதிராக கேலி செய்வது ஒன்றும் பிழையல்லவே. தாங்க முடியவில்லையோ! உண்மை சுடத்தான் செய்யும். தவிரவும், உங்கள் கொள்கையை நீங்கள் சொல்லுங்கள் எங்கள் கொள்கையை நாங்கள் சொல்கிறோம் என்பதற்கு நாங்கள் ஒன்றும் மதவாதிகளோ, போலி ஜனநாயகவாதிகளோ அல்லர். பொதுவுடமைவாதிகளின் நோக்கமே சமூகத்தில் படிந்திருக்கும் சடப்பழக்கங்களை, செக்குச் சிந்தனைகளை, மூட நம்பிக்கைகளை தாக்கி விமர்சித்து மாற்றியமைப்பது தான். அதன் ஒரு வடிவம் தான் நான் குறிப்பிட்டிருந்த அந்தக் கேலி. அது சரி, இப்படிக் கூறுவது யார்? நீங்களா? \\\தாம் மறுக்கும் ஒன்றை பிறிதொருவர் ஏற்றால் அது தவறானது என்பது நமது எண்ணமென்றால் என்றால் அழகிய முறையில் அல்லது ஆதார ரீதியில் அவருக்கு தெரியப்படுத்த வேண்டும். குறைந்த பட்சம் தனி மனித நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்க தெரிந்திருக்க வேண்டும்/// உங்கள் மத வரலாறுகளை கொஞ்சம் திருப்பிப் பாருங்கள். அன்றிலிருந்து இன்று வரை பிற நம்பிக்கைகள் மீது தாக்குதல் தொடுப்பது தானே உங்கள் வழக்கம். இப்போதென்ன புதிதாய் ஒப்பாரி.

    மீண்டும் வருவேன்.

    பின் குறிப்பு: இந்த என்னுடைய பதிவில் ஒருவித எள்ளல் நடை தொழிற்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கு நான் மட்டுமே பொறுப்பாளி அல்லன். ஏனென்றால் உங்கள் தளத்திலேனும் நேர்மையாக விவாதிப்பீர்கள் என்ற கொஞ்ச எதிர்பார்ப்புடன் தான் உங்கள் தளத்தில் விவாதம் செய்ய வந்தேன். ஆனால் அது பொய்த்துக் கொண்டிருக்கிறது. சரியான திசையில் உங்களை விவாதிக்கச் செய்வதற்கு என்ன வழி என்று யோசித்துத்தான் இந்த உத்தியை பயன்படுத்தி இருக்கிறேன். மெய்யாகச் சொல்லுகிறேன், இந்த நடையில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் உங்களின் போக்கு தான் என்னை இப்படியான நடையை தெரிவு செய்ய தூண்டியிருக்கிறது. நேர்மையாக பரிசீலித்து பதில் கூறி விவாதிக்க முன்வாருங்கள் என மீண்டும் மீண்டும் உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  100. அன்பு சகோ... செங்கொடி...

    உங்கள் கருத்துக்கள் விவாதத்தை இன்னொரு கோணத்திற்கு அழைத்து செல்வதாக உணர்கிறேன். வார்த்தை வார்த்தை தம்பி தம்பீன்னு நீங்க உருகிறத பார்த்த என்னின் மீதான உங்களின் பாசம்(?) பளிச்சிடுகிறது

    எனது பின்னூட்டமும் இனி அதே கோணத்தில் அமைந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை

    தொடர்கிறேன்

    ReplyDelete
  101. 1.
    கடவுள் ஏற்பு- மறுப்பு இரண்டும் நம்பிக்கை தாண்டி உறுதியான நிலைப்பாடாக கொண்டால் அதை பொதுவில் விளக்க வேண்டும்...

    இதை முதலில் நீங்க ஏத்துகிறீங்க செங்கொடி அண்ண்ண்ண்ண்ண்ண்ண்ணே ... ( சாரி ண்.... மீண்டும் மீண்டும் டைப் ஆயிடுச்சி)
    கடவுள் ஏற்பு உறுதியான நிலைப்பாடு.. என்பது எனது கருத்து. -அதற்கு ஆதாரமாக கடவுளின் ஏற்பை

    *அறிவியல் நிருபணம் மூலம் விளக்க வாய்ப்பில்லை
    * நேரடியாக புலன்களின் கண்டறிய வாய்பில்லை
    இப்படி கூறி பின்னர் இவை இல்லாத பிற காரணிகள் மூலமாக தான் உணர வேண்டும்... அதை இன்னும் தெளிவாக அறிவியலின் பதில் தர முடியா பல கேள்விகளில் இறைவனின் இருப்பை அறியலாம் என்றேன்..

    இன்னும் குர்-ஆனின் வார்த்தைகளில் உள்ள உண்மைப்பாட்டின் மூலம் அவை கடவுளின் வார்த்தைகள் என்றேன்.. நீங்களோ.. தேனீ உதாரணம் ஒன்றே போதுமானது... குர்-ஆன் பொய் என்பதை நிருபிக்க என்று சொன்னீங்க பாருங்க அங்கே தான் நீங்க நிற்கிறீங்க,..

    அண்ணே,,, ஆயிசா ரலி திருமணம், குர்- ஆன் போரை ஆதாரிக்கிறது, மலைகள், மேகங்கள் இதோ இப்ப சொன்னிங்க பாருங்க தேனீ குறித்து இதுக்கெல்லாம் நான் இணையத்தில் கரம் பதிக்கும் முன்னமே பதில் சொல்லியாகி விட்டது.. அட.... இன்னுமா நீங்க அந்த பதில்களையெல்லாம் படிக்கல... உங்களுக்கு தான் லிங்க் கொடுத்தால் பிடிக்காதே அண்ணே... சரி நீங்களே தேடி பிடித்து படித்துக்கொள்ளுங்க ஆமாம்...

    அது சரி கடவுள் மறுப்பு உங்கள் நம்பிக்கையா..?. ஏன் கேட்கிறேனா.. இதுவரை முன்னிருத்தப்பட்ட பல கேள்விகளை எதிர்காலத்திற்கு தள்ளி விட்டுடீங்களே... அதான் கேட்கிறேன்... கடவுள் இல்லையென்பதற்கு அறிவியல் விளக்கம் ஆதாரம் நிருபணம் என்ன...?

    தயவு செய்து இனி வரும் பின்னூட்டத்திலாவது கொஞ்சம் சொல்லுங்க அண்ணே,,,

    ReplyDelete
  102. 2.
    அப்புறம் // கொட்டேசன் // குள்ள என் கருத்தை அடுக்கி எதுகை மோனையில் பதில் சொல்லும் பாங்கெல்லாம் ரொம்ப பழசுண்ணே... இதுவரைக்கும் உங்களோடு சீரியஸா தான் விவாதித்துக்கொண்டு இருந்தேன்.. ஆனா இப்ப உங்க கமெண்ட்டலாம் பார்க்கும் போதும் ரொம்ப காமெடியா இருக்கு.

    சரி சொல்லுங்கள் கடவுள் இல்லையென்பதற்கு தெளிவான சான்று என்ன? நான் கண்ணை திறந்து தான் வைத்திருக்கிறென் அண்ணே,,, உங்களின் ஆதார மழை தான் மொழிய மறுக்கிறது..

    // \\\கடவுள் இல்லையென்றால் பதில் தரா கேள்விகள் என்ற ஒரு நிலை அறிவியல் மற்றும் சமூகத்தில் இருக்கவே கூடாது/// ஏன் அப்படி? சான்று தந்து நிருவுங்கள். //

    உண்மையா செம காமெடி தான் போங்க அண்ணே...

    பொதுவாக மனிதர்களால் செய்ய சாத்தியமில்லா செயல்களை செய்ய கடவுளால் மட்டும் தான் முடியும் என்கிறேன்... இதை மறுப்பதாக இருந்தால் உண்மையில் நீங்க என்ன செய்ய வேண்டும்.. எனது வாதம் போலியானது என்பதை நிறுவ உலகில் நடக்கும் எல்லா செயல்களுக்கும் காரணம் உண்டு, அது மனித சிந்தையால் சாத்தியமான ஒன்று! என்றல்லவா கூற வேண்டும்...

    முந்தைய எனது ஆக்கத்தில் இந்த சமூகத்தில் நீதிக்குறித்தும் தண்டனை குறித்தும் விரிவாக கேட்டிருந்தேன்.. எங்கே உங்கள் தெளிவான பதில்...? உண்மையா சொல்லுங்க... உங்களுக்கு புரியலையா...? இல்லை வழக்கம் போல் தூங்குறவன் பழமொழி போன்றா...

    அப்புறம் இதற்கு ஒற்றை வரியில் பதில் தந்துவிட்டு அர்ஷ்க்கு போய் விட்டீர்கள்....

    //அர்ஷ் .. .. .. ? ஹைய்யோ! ஹைய்யோ!! தம்பி, உங்களுக்கு என்ன கேட்டிருக்கிறேன் என்பதும் புரியவில்லை. எப்படி பதில் சொல்ல வேண்டும் என்பதும் தெரியவில்லை. ஆனாலும் ஏதோ பதில் சொல்கிறீர்கள் பாருங்கள். உங்களை எனக்கு ரெம்ப புடிச்சிருக்குது தம்பி. //

    ரொம்ப நன்றிண்ணே.... ஆனா என்ன விட உங்கள தான் எல்லோருக்கும் பிடிச்சிருக்காம்., ஆமா வெளியே சொன்னாங்க...

    ReplyDelete
  103. 3.
    அண்ணே பொது புரிதல் என்று உலகில் உள்ளது. அத எப்படி உங்களுக்கு விளக்குறதுன்னு இனிமே மறுபடியும் நான் படித்து விட்டு வரணும் போல... உண்மையா உங்க காமெடி இந்த கருத்தில் உச்சம் பெற்று விட்டது என்றால் மிகையில்லை...

    அர்ஷ் குறித்து குர்-ஆன் சொல்லாடால் என்ன? நான் பொது விதியில் கடவுள் குறித்து சொன்னது என்ன?

    அண்ணே.... இடம், காலம் பொறுத்தே ஒரு செய்கை குறித்து கூறப்படும் சொல்லாடலில் முக்கியத்துவம் மையப்படுத்தப்படும்.

    அதாவது... என்ன செய்ய இருங்க இதுக்கும் உதாரணம் சொல்றேன்.

    நீங்கள் என்னிடம் சொர்க்கம் செல்ல வேண்டுமானால் நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்கிறீர்கள்.? ஐ மீன் ஒரு நாத்திகவாதி இந்த கேள்வி கேட்டால்...
    நான் சொல்வேன் இறைவன் ஒருவன் என்று மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. சொர்க்கம் செல்லலாம் என்பேன்.

    அதே கேள்வியே பல கடவுள்களை வணங்குபவர் கேட்டால்
    இறைவன் ஒருவன் என்று ஏற்றுக்கொள்ளுங்கள் அவனுக்கு வேறு எவரையும் இணை வைக்காதீர்கள் என்பேன்.

    அடுத்து ஒரு முஸ்லிம் கேட்டால்
    இறைவனை வணங்குவதோடு தொழுகை, நோன்பு ஜகாத், ஹஜ் இவற்றையும் பேண வேண்டும் என்பேன்...

    இங்கே எவரும் இடைமறித்து என்னங்க தம்பீ (உங்க ஸ்டைல் நல்லா இருக்கு) முதல்ல ஒருத்தர் கிட்ட கடவுளை ஏற்றுக்கொண்டால் போதுமென்றீர்கள், அடுத்தவருக்கோ இணை வைக்க கூடாது என்கிறீங்க, மூன்றாமனவருக்கோ அடிசனலா சில செயல்களையும் செய்ய சொல்கிறீர்கள்... இதென்ன முரண்பாடு என கேட்டால் அவரை விட அறிவீலி யாரும் இல்லையென்று தான் சொல்ல முடியும்..

    ஏன்னா.. கடவுளை ஏற்காதவர் எந்த கடவுளையும் இணை வைக்கவும் மாட்டார், அடுத்து கடவுளின் அடுத்தடுத்த கட்டளை பேணவும் மாட்டார். ஆக முதலில் கடவுளை ஏற்காதவருக்கு தொழுகை நோன்பை பேண சொல்வதில் அர்த்தம் இல்லை, மாறாக ஆரம்பம் மற்றும் முதல் கூற்றாக ஓர் கடவுளை அவரை ஏற்க சொல்வது மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்த முதல் செய்கை. இப்படியான உதாரணத்தை தான் பொதுவெளியில் கடவுள் குறித்து பயன்படுத்தி இருக்கிறேன்..

    இப்பவும் சொல்கிறேன் கடவுள் தேவையற்றவர்.. ஆனால் இங்கே அர்ஷ் என்பது அவரது தேவைக்கான ஒரு பொருளாக நீங்கள் குற்றம் சாட்டினால் அதற்கு இதே அர்ஷ் குறித்த செய்திகளை எங்கே எடுத்தீர்களோ அதே மூலத்திலிருந்தே நீங்கள் அர்ஷ் கடவுளுக்கு தேவையுடைய பொருள் என்பதற்கு ஆதாரம் தர வேண்டும்?
    இப்படி சொன்னா... ஏன் உங்களுக்கு புரியலன்னு எனக்கு உண்மையா இப்ப தான் புரியுது.

    ReplyDelete
  104. 4.
    // குரானின் இந்த வசனத்தில் கடவுள் என்பது பொய் என்று எழுதி இருக்கிறது. அதற்கு விளக்கமாக புஹாரியில் இந்த ஹதீஸில் கடவுள் உறுதியான ஒன்றல்ல அது கற்பனை என்று முகம்மது விளக்கமளித்துள்ளார். இதே பொருளில் திர்மிதியிலும், இப்னு மாஜாவிலும் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காட்ட வேண்டுமோ. //
    இதை இங்கே பதியும் நேரத்தில் வசன எண்ணையும் அந்த ஹதிஸ்களையும் இங்கே பகிர்ந்து இருக்கலாமே ????

    சம்பந்தம் சம்பந்தமில்லா ஏன் எதையாவது உளறிக்கொட்டிக்கொண்டு இருக்கிறீர்கள் அண்ணே...
    எங்கே கடவுள் கற்பனைன்னு இருக்கு.. நீங்கள் சொல்லில் உண்மையாளராக இருந்தால் அந்த ஆயத் மற்றும் ஹதிஸை தாருங்கள்.. .

    புரிதல்-
    பொதுபுரிதல் அல்லது சுய புரிதல், மற்றும் ஆதார ரீதியான செய்கைகளை கொண்ட ஒப்புக்கொள்ளப்பட்ட புரிதல் இவற்றில் எதை எங்கே பயன்படுத்த வேண்டுமோ அதை அங்கே பயன்படுத்தவது முறையானது அண்ணே,,,, கடவுள் இல்லையென்ற உங்கள் புரிதல்...? சுயமா,,, இல்லை ஆதார ரீதியாக அமைந்ததா...?
    இப்ப வரைக்கும் சொல்ல மாட்டேங்கிறீங்களே அண்ணே

    //மலக்குகள் மட்டுமல்ல, சைத்தான் உட்பட கடவுள் வரை கடவுளோடு தொடர்புடைய அனைத்து கலைச்சொற்களையும் கடவுளோடு தொடர்புடைய மூலகங்களிலிருந்து தான் பெற முடியும். அதற்காக அந்த மூலகங்கள் கூறும் அனைத்தையும் ஒப்புக் கொள்ள வேண்டுமா?///

    செங்கொடி அண்ணே... யார் உங்களை ஒப்புக்கொள்ள் சொன்னது...? மலக்குகள், சைத்தான் ,மறுமை, சொர்க்கம், நரகம் எல்லாம் போட்டோ எடுத்து சுவற்றில் மாட்டி வைத்து யாரையும் நம்புங்கண்ணே,,, நம்புங்க... அப்படினு யார் கிட்டவும் சொல்லல...

    முதலில் நான் மேல சொன்ன உதாரணம் போல தான்.. முதலில் கடவுள் இருப்பை பொய்பித்தால் அத்தோடு சேர்ந்து மேல் சொன்ன விசயங்களும் பொய் என்று நிருபித்து விடலாம்.. ஆனால் கடவுள் இல்லையென்பதற்கு தெளிவான ஆதாரம் கேட்டால் அதை சொல்லாமல் அதை விடுத்து மலக்குகள், சைத்தானுக்கு சென்று விட்டீர்கள்.. இதேல்லாம் முஸ்லிம்கள் மறைவானவற்றின் மீதாக நம்பிக்கை கொள்வது கீழாக வருகிறது அண்ணே,,,

    ஆக இங்கே கேள்வி ரொம்ப சிம்பிள் அண்ணே,,, கடவுள் இல்லைன்னு உங்களால நிருபிக்க முடியுமானால்.... அப்ப நானும் சொல்றேன் மலக்குகளும் சைத்தானும் இல்லன்னு... அதுவரை எதிர்க்காலம் தன் கடமையே செய்யும்ன்னா பொறுமையா இருங்க...

    ReplyDelete
  105. 5.
    // உங்களின் உலகமகா தெளிவான இந்த வாக்கியங்களை புரிந்து கொள்ள தாவு தீர்ந்து விடுகிறது. எனவே, முதலில் விளக்குங்கள் ஏனையவைகளை பின்னர் பார்த்துக் கொள்ளலாம். //

    உண்மையா உங்களுக்கு புரியலன்னா எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு... உங்களின் ஐயந்திரிபுற தமிழ் இலக்கிய சொல்லாடலில் எனது எளிமை தமிழ் புரியவில்லையா.. ஐய்யகோ.... சரி... சிம்பிளா சொல்ல ட்ரை பண்றேன்.

    அண்ணே. இரட்டை முகம் அல்லது இரட்டை நிலைப்பாடு என்பது அகமும் புறமும் நமது சொல், செயல் ஒன்றாக இல்லாமல் இருப்பதே... அதற்கு எளிய உதாரணமாக
    எதையும் வணங்க மாட்டேன். என்று சொல்லும் நீங்கள் "வணக்கம்" என்ற வணங்கப்படும் ஒன்றோடு தொடர்புப்படுத்தி பயன்படுத்தப்படும் ஒரு சொல்லை மிக சாதரணமாக அறிமுகமாகும் தருணங்களில் சொல்வது ஏன்? அதை தான் உங்கள் இரட்டை நிலை என்கிறேன்.. இருங்க.. இன்னொரு துணைக்கேள்வியும்... நீங்கள் சவுதியில் இருந்ததாக (அல்லது இப்பவும் இருப்பதாக?) கேள்விப்பட்டேன்.. அங்கே உங்கள் பெயர்? அக்கமா எல்லாம் எப்படி இருந்தது... ? கம்யுனிஸ அடையாளத்தோடா... ?

    இப்போது புரிந்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.

    // ஐயய்யோ! உங்களுக்கு விசயமே தெரியாதா? அவரு இடிக்கிற வேலையெல்லாம் விட்டுட்டு ஓடிப்போய் ரெம்ப நாளாச்சுதுங்களே.
    அட.. கற்பனை கோட்டைங்கிறத அவர் தெளிவா புரிஞ்சிக்கிட்டார். அதான் மிக விரைவிலே அவர் பை பை சொல்லிட்டார்.. நான் தான் ரொம்ப லேட்டு... சரி விடுங்க செங்கொடி அண்ணே.... உங்க கற்பனை திறன் அபாரம்...

    // ஐய, இன்னாபா நீ. என்ன கேட்கப்பட்டிருக்கிறதோ அதற்கு பதில் கூறுங்கள். திரிக்கிறீர்கள் என்பது உறுதியாகிவிட்டது. அதை வெளிப்படையாக செய்து விடலாமே. //

    அண்ணே செங்கொடி வார்த்தைகளை பிடித்து பிடித்து விளையாடுவதற்கு தான் உங்களுக்கு ஒரு வார காலம் டைமா...? ஏப்பா... பிண்றீங்க போங்க...
    சரி நான் திரிக்கிறேன். ரைட்டு கடவுள் இல்லைங்கிறதுக்கு எங்கப்பா... சான்று... அட இன்னும் டீ வரல ஸாரி அண்ணே பதில் வரல..?

    அண்ணே.. இன்னைக்கு லீவு நல்ல வேல கூட வேற யாரும் இல்ல உங்க கமெண்ட்ஸ் என்னை வயிறு வலிக்க சிரிக்க வைத்தது
    அதற்கு ஒரு ஸ்பெசல் தாங்க்ஸ்.

    ReplyDelete
  106. 6.
    சகோ செங்கொடி... விவாதம் என்பது வெளிச்சத்தை அடையும் நோக்கில் புறப்பட தயாராகும் ஒரு பயணம். ஆனால் உங்கள் சந்தர்ப்பவாத பதிலும் சுய விளக்கங்களும் உண்மையாகவே எனக்கு சலிப்பை தந்துவிட்டது... உங்களிடமிருந்து பின்னூட்டங்கள் என்றவுடன் அறிவார்ந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராகுவோம் என்று அமர்ந்தால் எனது எண்ணத்தில் பூஜ்யம் மட்டுமே மிஞ்சியிருந்தது.

    கடவுள் இருப்பு எனது நம்பிக்கையென்றால் - உங்களை பொறுத்தவரை கடவுள் மறுப்பு என்பதென்ன... இதுவரை தெளிவில்லாத பதில்.. கேட்டால் ஏற்கனவே சொல்லியாகி விட்டது கண்ணை திறந்து பாருங்கள், காதை கழுவி கேளுங்கள் என்ற அங்கலாய்ப்பு வேறு... இதைப்போன்ற நடைகளுக்கு எனது வார்த்தைகளே மூலக்காரணம் என்று முக்கிய குறிப்பு வேறு தந்திருக்கிறீர்கள்.

    மீண்டும் மீண்டும் பதில் சொல்லியும் தொடரும் மீள் கேள்விகள். பதில்களை புரிய மறுப்பதற்கு அடிப்படை காரணம் உங்களின் முன்முடிவுகள். அதற்கு என் எந்த பதிலும் எத்தனை முறை சொன்னாலும் உங்களுக்கு சமாதானத்தை ஏற்படுத்தாது.

    கேள்விகளுக்கு எல்லா நிலையிலும் எதிர்க்கேள்விகள் பதிலாகாது சகோ செங்கொடி ஆரோக்கிய விவாதத்திற்கு தான் இந்த களம் அமைத்து கொடுக்கப்பட்டிருக்கிறது.. இப்படி தேவையில்லாமல் விவாதத்தை திசை திருப்பி என்னையும் கேலிப்பேச்சுக்கள் பேச வைப்பது உங்கள் பின்னூட்டத்தின் நோக்கமென்றால் ஸாரி உங்கள் நேரத்தையும் வீணாக்கி என் நேரத்தையும் விரயமாக்காதீர்கள். எனக்கு கிடைக்கும் ஒய்வு நேரங்கள் மிகவும் குறைவு. அதையும் பாழாக்க விரும்பவில்லை. அதுமட்டுமின்றி இதுப்போன்ற பின்னூட்டத்தின் எதிர் விளைவுகள் என் மீதான மதிப்பை பொதுவெளியில் குறைக்குமென்றே உணர்கிறேன்.

    புரிந்துக்கொண்டால் தொடருங்கள்.
    உங்கள் சகோதரன்
    குலாம்..

    ReplyDelete
  107. 1
    தம்பி குலாம்,

    ஆச்சரியமாக இருக்கிறது, நீங்களா சொல்லியிருக்கிறீர்கள் இப்படி, \\\விவாதம் என்பது வெளிச்சத்தை அடையும் நோக்கில் புறப்பட தயாராகும் ஒரு பயணம்/// மெய்யாகவே இந்த விவாதம் வெளிச்சத்தை அடையும் நோக்கில் பயணப்பட வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? விவாதத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு நேர்மையாக பதில் கூற வேண்டும். கூறப்படும் பதில்களை வெளிப்படையாக பரிசீலிக்க வேண்டும். செய்யப்படும் விமர்சனங்களை கூர்மையாக எதிர் கொண்டு விளக்கமளிக்க வேண்டும். இவைகளின் ஒட்டுமொத்த நோக்கம் விவாதத்தின் தலைப்பில் முடிவு காணும் திசையில் இருக்க வேண்டும். இதை நீங்கள் செய்ய மறுக்கிறீர்கள் என உங்கள் மீது நான் ஏற்கனவே குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறேன். அதை இப்போது மீண்டும் அழுத்தம் திருத்தமாக உங்கள் மீது வைக்கிறேன். மறுக்க முடியுமா தம்பி. தெரியும், எனக்குத் தெரியும். இதே கேள்வியை என் மீது திருப்பி விடுவீர்கள் என்று. வழக்கமாக நீங்கள் செய்வதும் அதுதானே. அப்படி நீங்கள் கேட்டால் உங்களில் எழுத்துகளிலிருந்தே உங்களுக்கு பதிலளிக்க ஆயத்தமாக இருக்கிறேன்.

    \\\நீங்கள் உருகுவதில் என் மீதான பாசம்(?) பளிச்சிடுகிறது/// தம்பி அது வெறும் சுயநலமான நிலப்பிரபுத்துவ உறவுப் பாசம் இல்லை தம்பி. பாட்டாளி வர்க்க குணாம்சத்தில் மிளிரும் உங்களை நேர்மையாக இருக்கச் செய்ய வேண்டுமே எனும் ஆதங்கத்தில் வெளிப்படும் பாசம்.

    கடவுள் வெற்று நம்பிக்கையா? உறுதியான இருப்பா? எனும் கேள்விக்கு உறுதியான இருப்பு என பதில் கூறும் தம்பி! இதற்கான உங்கள் வாதம், அறிவியல் மூலம் அதை கண்டறிய முடியாது, புலன்களின் மூலம் உணர முடியாது. எனவே, வேறு கேள்விகளின் மூலம் தான் உணர்த்த முடியும். அந்த வேறு கேள்விகளாக ஏன் பெருவெடிப்பு நிகழவேண்டும்? அண்ட வெளி மோதல்களை யார் நிகழ்த்துவது? பிறக்கும் இறக்கும் மழை பொழியும் போன்ற நேரங்கள். இவைகள் தான் உங்களின் அந்த பிற காரணிகள் அல்லது கேள்விகள். தம்பி உங்களின் இந்த எல்லாக் கேள்விகளுக்குமே எதிர்காலத்தை பதிலாக கூறியது போன்ற மாயையில் தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறீர்கள். மீண்டும் நான் அதைத்தான் சொல்வேன். கண்களை கழுவிக் கொண்டு தூக்கத்திலிருந்து விடுபட்ட பின் படித்துப் பாருங்கள். அப்போது தான் இவைகளுக்கான பதில் கொடுக்கப்பட்டிருக்கிறதா இல்லையா, அவை எதிர்காலமாக மட்டும் இல்லாமல் வேறு கூறுகளையும் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குப் புரியும். அல்லது உங்களுக்கு துணிவிருந்தால் உங்கள் கேள்விகளுக்கு நான் பதில் கூறவே இல்லை என்று சொல்லிப் பாருங்கள். அப்போது என் பதில்களை மேற்கோள்களாக காட்டுகிறேன். சம்மதமா தம்பி. இதே போல் என்னுடைய கேள்விகளுக்கு ஏற்கனவே பதில் கூறியதைப் போல் நடிக்கிறீர்கள். நான் தைரியமாக கேட்கிறேன் உங்களிடம். எங்கே! என்னுடைய கேள்விக்கான பதில்களை மேற்கோள்களாக காட்டுங்கள் பார்ப்போம். உதார் விடுவதற்கும் ஒரு அளவிருக்கிறது தம்பி.

    மற்றொரு புறம் இந்தக் கேள்விகளெல்லாம் கடவுளின் இருப்பை உறுதி செய்யுமா தம்பி? பெருவெடிப்புக்கான காரணத்தை மனிதன் அறிய முடியாமல் போனாலோ, அண்டவெளியின் மோதல்கள் யாரால் நிகழ்கிறது என்று தெரியாமல் போனாலோ, பிறப்பு இறப்பு மழை நேரங்களை துல்லியமாக மனிதனால் கணிக்க முடியாவிட்டாலோ அது கடவுளின் இருப்புக்கு சான்றாகுமா? ஒருபோதும் சான்றாகாது. மாறாக, கடவுளுக்கு மட்டும் தான் இவைகளெல்லாம் தெரியும் என்று நீங்கள் நிரூபித்தால் மட்டுமே கடவுளின் இருப்பை உணர்த்தியதாக ஆகும். அவ்வாறு எந்த நிரூபணமாவது நீங்கள் தந்திருக்கிறீர்களா? யோசித்துப் பாருங்கள் தம்பி. வெறுமனே உங்கள் நம்பிக்கையை மட்டும் கிளிப்பிள்ளை போல கூறிக் கொண்டிருந்தால் அதற்கு வாதம் என்றும் பொருளாகாது, அதை விவாதம் என்றும் கூற முடியாது. அட குறைந்த பட்சம் பெருவெடிப்பு என்பது அறிவியல் யூகம் தான் உறுதிப்படுத்தப்பட்ட செயல் அல்ல என்பதைக்கூட கண்டு கொள்ளாமல் கடந்து செல்கிறீர்களே ஏன் தம்பி. அது உறுதியாக நிகழ்ந்தது என்று சொன்னால் தான், ஏன் நிகழ்ந்தது என்று கேட்டுக் கொண்டே காலம் கடத்த முடியும் என்பதாலா? நீங்கள் நேர்மையாக சிந்திப்பதற்கு இதை விட்டால் வேறு வாய்ப்புகள் கிடைக்காது தம்பி.

    ReplyDelete
  108. 2
    ஆனால் என்னுடைய கேள்விகள் அப்படி அல்ல. அந்தக் கேள்விகளுக்கான பதிலை நீங்கள் கூறினால் அது கடவுள் இல்லை என்பதை போட்டுடைக்கும். அதனால் தானே அவைகளுக்கு பதில் கூறாமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். பதில் கூறவும் முடியாமல், பதில் கூற முடியவில்லை என நேர்மையாக ஒப்புக் கொள்ளவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்கள் எழுத்துகளில் வெளிப்படையாக தெரிகிறது. பிறகு எதற்கு தம்பி இப்படி வெற்று குதியாட்டங்கள்?

    இன்னொரு திருகு தாளத்தையும் செய்கிறீர்கள் தம்பி. கடவுள் தான் எல்லாவற்றையும் படைத்தார் என்பதை நிரூபியுங்கள் என்றால் அதற்கு எதிர்க்கேள்விகள் கேட்கிறேன் பேர்வழி என்று மனிதனா படைத்தான் அறிவியலா காரணம் என்றெல்லாம் எகிறுகிறீர்கள். கூல்டௌன் தம்பி. கடவுள் தான் படைத்தார் என்று நீங்கள் தான் கூறிக் கொண்டிருக்கிறீர்கள். மனிதன் தான் படைத்தான், அறிவியல் தான் காரணம் என்றெல்லாம் நாங்கள் கூறிக் கொண்டிருக்கவில்லை. எப்படி வந்தது என்று தற்போது உறுதியாக தெரியாது அவ்வளவு தான்.

    அப்புறம் என்ன சொன்னீங்க தம்பி? குரானின் உண்மைப்பாட்டின் மூலம் கடவுளின் ம்ம்ம் அதுவும் நீங்கள் இணையத்தில் கரம் பதிக்கும் முன்னமேவா? சவால் விடுகிறேன் தம்பி சவால். தேனீ கனிகளை உண்ணும் என குரான் பொய் சொல்லியதை விளக்கி இணையப் பரப்பில் எங்கேனும் நேர்மையான பதிலிடப்பட்டிருக்கிறதா? உங்களுக்கு மெய்யாகவே அறவுணர்ச்சியோ, அகச் சீற்றமோ இருந்தால் கொஞ்சம் காப்பி பேஸ்ட் பண்ணுங்கள் தம்பி. சவடால் எனும் சொல்லுக்கு பொருள் என்ன என்று யாரும் கேட்டால் உங்களிடம் தான் அனுப்பி வைக்க வேண்டும்.

    அர்ஷ் .. .. .. அரஷ் .. .. .. அரஷ் பட்டுக் கோட்டையையும் கொட்டைப் பாக்கையும் தொடர்பு படுத்தி தமிழில் ஒரு பழமொழி கூறுவார்கள். அது தான் நினைவுக்கு வருகிறது. அர்ஷ் என்பது ஒரு பொருள் என்பதால் அதை பயன்படுத்துவதும் ஒரு பொருளாகத்தான் இருந்தாக வேண்டும். அப்படியென்றால் ஒருபோதும் எக்காலத்திலும் அறிவியலுக்குள் கடவுள் அகப்பட மாட்டார் என்று டபாய்க்க முடியாது. எனவே தன்க்கும் படைப்புக்குமான இடைவெளியில் அவர் எங்கிருந்தார். இவ்வளவு தான் நான் கேட்பதும் நீங்கள் பதிலளிக்க வேண்டியதும். இதை விட்டு விட்டு ஏன் தம்பி வளவளன்னு அவுட் ஆஃப் சிலபஸ் எல்லாம் தூக்கிக் கொண்டு வருகிறீர்கள்?

    அது எப்படி தம்பி. உங்களால் ஒன்றுமே தெரியாதது மாதிரி நடிக்க முடிகிறது. ஹதீஸ் எண்ணும் ஆயத்தையும் கேட்டிருக்கிறீர்களே அதைத்தான் சொல்லுகிறேன். மெய்யாகவே நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று உங்களுக்கு புரியவில்லையா? இதற்கு மேலும் வலிக்காதது போல் நீங்கள் நடிக்க முடியாது தம்பி.

    கடவுள் இல்லை எனும் என்னுடைய நிலை சுயமா? ஆதார ரீதியிலான புரிதலா என்பது என்னுடைய பதில்களை உள்வாங்கினால் தான் புரியும் கொஞ்சம் முயற்சி செய்யுங்கள் தம்பி.

    பொதுபுரிதல் ஆல்லது சுயபுரிதல் கமா மற்றும் ஆதார ரீதியிலான புரிதல். சொற்களை வளைத்து திரித்து சாதகமான பொருளை கொண்டு வரும் கலையை உங்களிடம் தான் டியூசன் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் தம்பி. பொதுபுரிதலும் சுயபுரிதலும் அல்லது போடும் அளவுக்கு ஒன்றியவைகளா? நேர்மையாக நடந்து கொள்வது என்றால் என்ன என்று யாரேனும் பக்கத்தில் இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

    தம்பி, தம்பி, தம்பி நில்லுங்க தம்பி. இரட்டை நிலைபாடு எனும் சொல்லுக்கு என்ன பொருள் என்பது எனக்கு தெரியும் நீங்கள் பாடம் நடத்த வேண்டாம். நான் கேட்டது மடக்கி மடக்கி நீங்கள் என்ன எழுதியிருந்தீர்களோ அதைத்தான் சொல் பிரித்து விளக்குங்கள் என்று கேட்கிறேன். அதை புரிந்து கொள்ளத்தான் தாவு தீர்ந்து விடுகிறது என்று சொல்லியிருக்கிறேன். முதலில் அதை விளக்குங்கள் பின்னர் மற்றதை பார்த்துக் கொள்ளலாம். \\\இங்கே உங்கள் சொல்லாடலில் எனது நோக்கத்தை உங்கள் எழுத்தில் புறமுகமாக சுட்டி காட்டீனீர்கள் என்றால் உங்களின்

    ReplyDelete
  109. 3
    இரட்டை முகம் என்பதை... செயலும், செயலும் கொள்கை ரீதியாக உங்களுக்கு மாறுப்பட்டிருப்பதை எனது சொல்லாடல் குறிக்கவில்லையென்பதை எப்படி நீங்கள் மறுக்கலாம் சகோ///

    எது முன்முடிவு? எங்கு பரிசீலனை இல்லையோ அங்கு மூட நம்பிக்கை தொடங்குகிறது, அங்கு முன் முடிவு இடம் பெறுகிறது. இந்த விவாதத்தில் பரிசீலனையற்று பேசிக் கொண்டிருப்பது யார்? அது சரி. இது யோக்கியர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி. நீங்கள் சாய்சில் விட்டு விடுங்கள் தம்பி.

    தம்பி நீங்கள் கூறியவற்றிலேயே அதிகம் சிரிக்க வைத்தது இது தான், எள்ளலான என் நடையினால் உங்கள் மீதான மதிப்பு பொதுவெளியில் குறையுமா? அது எப்படி தம்பி கூசாமல் உங்களால் கூற முடிகிறது? கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூறமாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள் அதனால் பொது வெளியில் உங்கள் மதிப்பு குறைந்துவிடாது. கூறப்பட்ட பதில்களை, விளக்கங்களை பரிசீலிக்க மாட்டேன் என்று பிடிவாதமாய் மறுக்கிறீர்கள் அதனால் பொது வெளியில் உங்கள் மதிப்பு குறைந்து விடாது. இந்த விவாதத்தில் உங்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் கடந்து செல்கிறீர்கள் அதனால் பொது வெளியில் உங்கள் மதிப்பு குறைந்து விடாது. ஆனால் எள்ளல் நடை மட்டும் உங்கள் மதிப்பை குறைத்து விடுமா? போலித்தனங்கள் எதற்கு தம்பி விட்டுவிட்டு நேர்மையின் பக்கம் முகம் திருப்புங்கள்.

    மீண்டும் வருவேன்.

    ReplyDelete
  110. 4
    பின்குறிப்பு: தம்பி நீங்கள் பதிலளித்தாக வேண்டிய குறைந்தபட்ச கேள்விகளின் பட்டியல்

    1. எந்தவித அளவுகோலிலும் கடவுள் அகப்படமாட்டார் என்றால் அவர் உறுதியாக இருக்கிறார் என்று நீங்கள் எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்?
    2. அறிவியல் குறைபாடுடையது என்றால் உங்கள் யதார்த்த வாழ்வில் அறிவியலை விலக்கி வைத்து முடிவெடுத்த நிகழ்வு ஏதேனும் உண்டா? பட்டியலிடுங்கள்.
    3. முதலில் அண்ட வெளியில் மோதல்களே நிகழ்வில்லை என்றீர்கள். பின்னர் மோதல்களை யார் நிகழ்த்தியது என்றீர்கள். கடவுள் தான் நிகழ்த்துகிறார் என்றால் அதை நிரூபியுங்கள்?
    4. கடவுள் என்றால் என்ன? (கவனிக்கவும் கடவுளின் தகுதிகள் அல்ல)
    5. பேரண்டம் உட்பட அனைத்தையும் படைப்பதற்கு முன் கடவுள் எங்கு இருந்தார்?
    6. இந்த உலகில் சோதித்தறிய முடியும் படியான, மனிதர்கள் கோரிக்கையை இறைவன் நிறைவேற்றியதற்கான சான்று ஏதாவது கூற முடியுமா?
    7. ஆத்திகர்கள் கடவுளை உறுதிப்படுத்துவதாக கூறிக் கொண்டு கேட்கும் எதிர்க் கேள்விகள் அனைத்தும் ஏன் நிகழ்கால அறிவியலைக் கடந்ததாக இருக்கிறது?
    8. ஆன்மீகத்துக்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்பு சாராம்சத்தில் கடவுளைச் சொன்னவரின் சொல் உண்மையா பொய்யா என்பதே. இதை நீங்கள் எப்படி கருதுகிறீர்கள்?

    ReplyDelete
  111. அன்பு சகோ., செங்கொடி.

    உங்களின் ஆச்சரியக்குறிகளை விட கேள்விக்குறிகளையே அதிகம் எதிர்ப்பார்த்து கொண்டிருந்தேன்.

    வழக்கத்தை விட இந்த சுற்று பின்னூட்டத்தில் உங்கள் கோபத்திற்கு அழகாய் எழுத்து வடிவை கொடுத்து இருக்கிறீர்கள். எல்லாவற்றையும் அறிவியல் கொண்டு மட்டுமே ஆராய்ந்து அவற்றை அறிவுப்பூர்வமாக ஏற்கும் ஒரு நாத்திகன்...

    ஒரு சாதரண ஆத்திகனின் எதிர் வாத கருத்துக்களால் உணர்ச்சி பெருக்கோடு பின்னூட்டம் முழுவதும் தொடர்வது குறைந்த பட்ச பரிசீலனைகளில் கூட உடன் பட உங்கள் மனம் மறுப்பதை தான் காட்டுகிறது பாராட்டுக்கள் சகோ செங்கொடி...

    முடிந்தால் உங்களை அடிக்கடி ஆசுவாசப்படுத்தி கொண்டு கீழே தொடருங்கள் சகோ செங்கொடி.. இல்லாவிட்டால் இன்னும் இரண்டு நாள் கழிச்சி பொறுமையா படித்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  112. //விவாதத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு நேர்மையாக பதில் கூற வேண்டும். கூறப்படும் பதில்களை வெளிப்படையாக பரிசீலிக்க வேண்டும். செய்யப்படும் விமர்சனங்களை கூர்மையாக எதிர் கொண்டு விளக்கமளிக்க வேண்டும். இவைகளின் ஒட்டுமொத்த நோக்கம் விவாதத்தின் தலைப்பில் முடிவு காணும் திசையில் இருக்க வேண்டும். இதை நீங்கள் செய்ய மறுக்கிறீர்கள் என உங்கள் மீது நான் ஏற்கனவே குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறேன். அதை இப்போது மீண்டும் அழுத்தம் திருத்தமாக உங்கள் மீது வைக்கிறேன்//

    வைக்கலாம் தவறில்லை.. ஆனால் அதற்கு முன் சில அடிப்படைகளை கேள்விகளை உங்களுக்குள் நீங்களே கேட்டுக்கொள்வது இத்தருணத்தில் அவசியமான ஒன்று..

    தெளிவாக ஏற்கனவே கேட்டிருந்தேன்.. உங்களின் கடவுள் மறுப்புக்கு பிரதான காரணம்
    1. கடவுள் பெயரால் மக்கள் மத்தியில் பரவியிருக்கும் மூட நம்பிக்கை பார்த்தா ?
    அல்லது,
    2. கடவுள் பெயரால் அராஜகம், சமூகத்தில் வர்த்தரீதியாக மாறுப்பட்டிருக்கும் மக்களின் ஏற்றதாழ்வு இவற்றை பார்த்தா... என்று கேட்டிருந்தேன்..

    இவையெல்லாம் அல்ல, பகுத்தறிவு ரீதியாக ஆராய்ந்து சமூகத்திலும் அதை தாண்டி இந்த பிரபஞ்ச நெடுகிலும் கடவுள் இல்லையென்பதை உணர்ந்து- அறிந்துக்கொண்டேன் என்றீர்கள்.

    இன்னும் தொடரும் முன் கடவுளை மறுக்கும் உங்களது நிலை இப்படியானது தான் என்ற என் புரிதல் சரியா அல்லது தவறா மிக தெளிவாக சொல்லுங்கள்.

    ReplyDelete
  113. இல்லை இப்படி நான் சொல்லவில்லையென்றால் அதுக்குறித்த உங்கள் பதிலை சொன்னப்பின் தொடர்கிறேன்.

    ஒருவேளை ஆம்! இது தான் கடவுள் மறுப்புக்கு நான் உடன் படும் புள்ளிகள் என்றால் தொடருங்கள்.

    மேற்கண்ட நிலைப்படி கடவுள் மறுப்புக்கு ஆறிவுப்பூர்வமான, விஞ்ஞான ரீதியான குறிகள் இருப்பதால் மட்டுமே கடவுளை மறுக்கிறேன் என நீங்கள் சொன்னால்...

    கடவுளை உறுதியான இருப்பாக ஏற்கும் என்னை நோக்கி நீங்கள் கேட்கும் அனைத்து ஆதார செய்கைகளை போன்ற கடவுளை மறுக்கும் நீங்களும் இதுவரை தந்திருக்க வேண்டும்...

    ஆனால் இதுவரை கடவுள் இல்லையென்பதற்கு எத்தனை அறிவுப்பூர்வமான சான்றுகளை தந்தீர்கள். சகோ செங்கொடி..?

    இன்னும் ஒரு படி மேல போயி கடவுள் இருப்பு எனது நம்பிக்கையென்றீர்கள். அப்படியிருக்க கடவுள் மறுப்பு என்பது உறுதிப்படுத்தப்பட்ட உண்மையாக அல்லவா இருந்திருக்க வேண்டும்...? இதுவரை கடவுள் மறுப்புக்கு எத்தனை விதமான விஞ்ஞான உண்மைகளை இங்கே தந்திருக்கிறீர்கள்..?

    சுமார் 120 பின்னூட்டத்திற்கு மேலாக தொடர்ந்தும் (இதில் சரிபாதி உங்களுடையது) என்னை நோக்கி எழுப்பும் கேள்விகளை தாண்டி... இதோ கடவுள் இல்லையென்பதை மறுக்கும் ஆதார - சான்று -ஆவணங்கள் என எங்காவது ஒரு வரலாற்று ஆவண சான்றை பதிவு செய்தீர்களா...? சகோ செங்கொடி...

    ReplyDelete
  114. தெளிவாக ஒரு உண்மையை புரிந்துக்கொள்ளுங்கள் சகோ

    கடவுள் ஏற்பை அல்லது கடவுள் இருப்பை நூறு சதவீகிதம் பொதுவில் உறுதிப்படுத்த வேண்டுமானால் அதற்கு கடவுள் கடவுளாக மக்கள் மன்றத்தில் நேரடியாக வந்தால் மட்டுமே அது சாத்தியம்.

    "ஆனால் கடவுள் நேரடியாக நம் முன் இன்று இல்லை.! "

    இன்று நீங்களோ, நானோ கடவுளை ஏற்க -மறுக்க இந்த பொது நிலை புரிதலை தான் நம் வாதத்திற்கு பயன்படுத்துகிறோம்

    அதாவது கடவுள் கண் முன்னும், இப்பிரபஞ்சத்ததில் எங்கும் இல்லை ஆக கடவுளை நம்ப தேவையில்லை, என நீங்களும்

    கடவுள் அறிந்துக்கொள்ள கூடிய விதத்தில் நமக்கு கிடைத்தால் அது நமது கட்டுப்பாட்டுக்குள் வந்தாக ஆகி விடும். ஆக கடவுள் நம் முன் இல்லாததே அவனது இருப்பை உண்மையாக்கும் என்றும் நானும் கூறுகிறோம்.

    இங்கே ஒரு விசயத்தை தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும் சகோ செங்கொடி...

    கடவுளை, அவனது வல்லமையோடு கடவுள் என்று நம்புவதாக இருந்தால் அடிப்படையாக, கடவுளை நேரடியாகவோ அல்லது புலனறிவிலோ, ஆய்வறிந்தோ உணர முடியாது. உலகம் அழிந்த பிறகே அவரை- அதனை அதன் உண்மையான ரூபத்தில் காண முடியும் என்பதை ஏற்க சொல்கிறது.

    இங்கே கவனியுங்கள் ! இந்த விதி கடவுளை மறுப்பவருக்கு அல்ல... கடவுளை ஏற்பவர்களுக்கே... ஆக கடவுள் ஏற்புக்கு பிரகடனப்படுத்தப்படும் ஒரு முக்கிய செய்தியை கடவுள் மறுப்பு பயன்படுத்த முனைவது தான் நாத்திகர்கள் யோசிக்க வேண்டிய விசயம்.

    ReplyDelete
  115. ஏனெனில் கடவுள் இருப்பு இந்த பிரபஞ்சத்தில் வெளிப்படும் என்று ஆத்திகர்கள் சொன்னால் தான் பிரபஞ்சத்தில் கடவுளின் இருப்பு எங்கும் வெளிப்படவில்லை என்ற உங்களின் இந்த எதிர்க்கேள்வி நியாயமானது. அது தெளிவான மறுப்புக்கு ஆதார வலுவுள்ள சான்றும் கூட. ஆனால் இங்கே கடவுளின் இருப்பு பிரபஞ்ச நுணுக்கங்களால் அறிந்துக்கொள்ள முடியாது என கடவுளை ஏற்பவர்களே கூறும்போது.. கடவுள் எங்கும் காணக்கிடைக்கவில்லை என்ற எதிர்க்கேள்வி விடுத்து இரண்டாம் நிலை பகுத்தறிவு ரீதியான அல்லது ஆய்வு ரீதியன கேள்விகளுக்கு தான் நாத்திகர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    நீங்கள் மேற்கண்ட நிலையே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு மேற்கொண்டு தொடர்கிறேன்..

    அப்படியானால் நேரடி மூலம் தவிர்த்து கடவுள் ஏற்பை எப்படி ஏற்று அல்லது அறிந்துக்கொள்ள முடியும் என்பது உங்களின் அடுத்தக்கட்ட கேள்வியானால் ...

    வெரி சிம்பிள் சகோ செங்கொடி இங்கே நான் ஒரு கோடு வரைந்து இது பெரியது என்கிறேன். இதை சின்னதாக்க வேண்டுமானால் நீங்கள் என் கோட்டை அழிக்க தேவையில்லை. மாறாக உங்களால் என் கோட்டை விட கொஞ்சம் பெரிய கோடு வரைந்தால் தேட்ஸ் ஆல்... அட்டோமேடிக்காவே எனது கோடு சின்னதாகி விடும்...

    இதை தானே உங்களை நான் செய்ய சொல்கிறேன்...
    கடவுள் இல்லையென்றால் அது வெறும் வெற்று நம்பிக்கையென்றால் அவரது தனித்துவத்தை முன்னிலைப்படுத்தி அவரது வல்லமையின் வெளிப்பட்டால் மட்டுமே இவ்வுலகிலும், இப்பேரண்டத்திலும் அதையும் தாண்டி நிகழ்வுறும் நிகழ்வுகளுக்கு...

    அதெல்லாம் பொய் இவற்றை செய்தது, செய்து கொண்டிருப்பது கடவுள் இல்லை இவை எல்லாம் மனித அறிவின் மற்றோரு முயற்சியே.. என


    ஆதார ரீதியாக...
    அறிவுப்பூர்வமாக...
    வரலாற்று நிகழ்வாக...

    அறிவியல் மற்றும் தர்க்க ரீதியாக ஆதாரங்கள் தந்தால் கடவுள் இருப்பு பிரச்சனை ஓவர்...

    என்ன செய்தீர்கள் நீங்கள்?

    ReplyDelete
  116. எத்தனை எத்தனை கேள்விகள்... இப்படி உங்களை நோக்கி

    1. ஆதிமனிதன் கடவுளை வணங்கவில்லை... என்பதற்கு தொல்லியல் சான்றுகள் எங்கே?
    2. குகை ஓவியங்களை கடவுள் மறுப்பை உண்மைப்படுத்தும் ஆவணங்கள் என்னென்ன?
    3. கடவுள் என்றால் என்ன? அறிவியல் ரீதியான இலக்கணம்?
    4. ஒருவர் பிறக்கும் நேரம் - இறக்கும் நேரம் துல்லியமாக என்ன?
    5. மழை பொழிவை ஏன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை?
    6. பெருவெடிப்புக்கொள்கை ஏன் நிகழ வேண்டும்.?
    7. கோள்கள் எப்படி பால்வெளியில் இயங்குகிறது? யார் இயக்குவது?
    8. வீண்ணில் ஏற்படும் மோதல்களும், சீரற்ற விபத்துகளையும் நவீன அறிவியல் நிகழ்த்தியதா..? இல்லையென்றால் அறிவியலால் அதை ஏன் தடுக்க முடியவில்லை?
    9. அறிவியலில் தர்செயல் எப்படி சாத்தியம் ? அதற்கு நிருபணம்?
    10. எதிர்க்காலத்தை சார்ந்திருப்பது எப்படி உண்மை அறிவியலாகும்?

    ஆனால் இவற்றிற்கெல்லாம் பதில் எங்கே சகோ...? உங்களின் பெரிய கோடு எங்கே என கேட்டால்? என் கோட்டையல்லவா அழித்து சிறியாதாக்க முயல்கிறீர்கள்...? இதுவா விவாத முறைமை..

    ReplyDelete
  117. கடவுள் இருப்புக்கு எங்கே ஆதாரம் என கேட்கும் நேரத்தில் கடவுளை மறுக்க நானே வலிய வந்து வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறேனே.. மேற்கண்ட கேள்விகள் மூலமாக...

    ஆனால் நீங்களோ எதிர்க்காலத்தை சார்ந்திருப்பது அவதானிப்புகள் அல்ல அறிவுப்பூர்வமான அணுகுமுறை என்கிறீர்கள்...

    இது எப்படி பொருத்தமான வாதம் ஆகும் சகோ செங்கொடி..?
    சரி பராவயில்லை எதிர்க்காலத்தை எதிர் நோக்க சொல்லும் உங்களிடம் இறந்த காலத்தை குறித்து அறிய கேட்டால் அதையும் தற்செயல் அல்லது விபத்து என்கிறீர்கள்...

    அட நிகழ்காலத்திலாவது நீதிமுறைமைகள் குறித்து கேள்விகள் எழுப்பி கடவுள் இருப்பை மறுக்கும் தெளிவான சான்றுகள் கேட்டால்
    ம்ஹூம்.... வர்த்தக ரீதியான சமூக பிளவை முன்னிருத்தி மனித அறிவுக்கு உட்பட்டு மட்டும் என.. பதில் சொல்லி நகர்கிறீர்கள்...

    இதில் என் தரப்பு வாதங்கள் தவறு என்கிறீர்கள் இன்னும் ஒரு படி மேல போய் சந்தர்ப்ப வாத நிலை பார்த்து உங்கள் மீது திருப்பிவிடுகிறேன் என்று குற்றச்சாட்டும் இடுகிறீர்கள்,

    ReplyDelete
  118. சுருக்கமாக சொல்கிறேன்.. சகோ செங்கொடி.. கடவுளை மறுப்பதாக இருந்தால் இறந்த / நிகழ்காலம் என காலந்தோறும் நிகழும் எல்லா நிகழ்விலும் கடவுளின் தலையீட்டை முன்னிருத்தி ஆத்திகர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் நாத்திக சிந்தனை
    இருக்கலாம்...
    கலாம்...
    லாம்..
    என்ற எதிர்க்காலத்தின் மீது பாரத்தை சுமத்தும் பரிதாப பதில்களை தரக்கூடாது...
    இன்னும் சொல்லப்போனால் விஞ்ஞான குறீயிடுகளால் கடவுளின் இருப்பை நான் மறுக்கிறேன் என்று எந்த ஒரு நாத்திகனும் கூறுவானால் அதற்கு முதலில்

    கடவுள் ஏற்பை முன்னிருத்தும் மேற்கண்ட கேள்விகள் என்ற ஒரு நிலையை இல்லாது அமைத்திருக்க வேண்டும்... ஏனெனில் இயவையெல்லாம் கடவுளின் செயலாக கடவுளால் மட்டும் முடிவுற்ற.. தொடரும் செயலாக ஆத்திகர்கள் சொன்னால் இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் ஏற்கனவே உலகின் ஏதோ ஒரு மூலையில் கொட்டி கிடக்கிறது என நாத்திகர்களின் பகுத்தறிவு மூளை சொல்லி இருந்திருக்க வேண்டும்...

    ஆனால் இன்றளவிலும் கேட்கப்பட்ட கேள்விகள் அப்படியே இருக்கிறதென்றால்....
    கடவுள் மறுப்பு உறுதியானது அல்ல என்பது மட்டும் உறுதியாக்கப்பட்ட உண்மை... என்று தான் பறைச்சாற்ற தோன்றுகிறது

    ReplyDelete
  119. தேவையற்ற வசை சொல்களுக்கெல்லாம் விளக்கம் கொடுத்து எனது நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்க விருப்பமில்லை. அதைவிட விளக்கம் கொடுத்து உங்களுக்கு அதிக டென்சன் கொடுக்கவும் எனக்கு கஷ்டமாக இருக்கிறது.

    கடவுள் இருப்பை உறுதிப்படுத்தும் அந்த இரண்டாம் நிலை கேள்விகளை கேளுங்கள் அப்படியே தயவு செய்து இனியாவது கடவுள் மறுப்புக்கு உங்களது உறுதியான உண்மைகளை பகிருங்கள் சகோ செங்கொடி..

    // அது எப்படி தம்பி. உங்களால் ஒன்றுமே தெரியாதது மாதிரி நடிக்க முடிகிறது. ஹதீஸ் எண்ணும் ஆயத்தையும் கேட்டிருக்கிறீர்களே அதைத்தான் சொல்லுகிறேன். மெய்யாகவே நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று உங்களுக்கு புரியவில்லையா? //

    மன்னிக்கவும் சகோ, உங்களுக்கு புரியும் விதத்தில் நான் விளக்கவில்லையென நினைக்கிறேன். பொது புரிதல் இன்றி இஸ்லாம் சார்ந்த மூலங்களை நீங்கள் மேற்கோள் காட்டி உங்கள் தரப்பு வாதமாக பயன்படுத்த முயன்றால் அதற்கு அதே இஸ்லாமிய மூலங்களிலிருந்தே உங்கள் தரப்பை நியாயப்படுத்த வேண்டும்... உங்கள் சாதக வாதத்திற்கு குர்-ஆன் /ஹதிஸ் கூற்றில் அப்படியான ஒன்றை நீங்கள் தந்தீர்களா என்றேன்... ? பதிலுக்கு உங்களுக்கு கோபம் தான் வருகிறது. என்ன செய்ய...

    ReplyDelete
  120. தேனீக்கள் குறித்து சவால் விட்ட உங்களுக்கு குர்-ஆன் வசனங்கள் தேனீக்கள் - கனிகள் குறித்து என்ன சொல்ல வருகிறது என்பதை ஆழ்ந்து நோக்க அவகாசமில்லை. இதற்கு பெயர் தான் முன்முடிவுகளோடு ஒன்றை அணுகுவது என்பது. அரபு மூலத்தை பாராமல் மொழிப்பெயர்ப்பை மட்டுமே பார்த்து புளங்காகிதம் அடையும் உங்கள் அறிவை என்னவென்பது?

    தேனீக்கள் குறித்து நீங்கள் குறிப்பிடும் வசனம் இது தான்,
    அத்தியாயம் 16 வசனம் 68 மற்றும் 69

    (1.)"மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக்கொள்..! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு..! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச்செல்..!" என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.

    (2) எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் ...
    இருவேறு மொழிப்பெயர்ப்புகளில் உள்ள தமிழாக்கம் இவை

    இதில் எங்கே கனிகளை சாப்பிடுவதாக விளங்கிக்கொள்ள முடிகிறது சகோ செங்கொடி..?

    . தேனீ பூக்களிலிருந்தும் கனிகளிருந்தும் உணவாக உள்ள நெக்டாரை உறிஞ்சி எடுத்துக்கொண்டாலும் அதை உடனே சாப்பிடுவதில்லை
    இன்னும் தெளிவா பாருங்க.
    http://vrcitizenofworld.blogspot.in/2012/02/blog-post_7947.html

    வணக்கம் மற்றும் உங்கள் வாழ்வு குறித்தும் நான் கேட்ட கேள்விகள் புலம் பெயர்ந்து உங்களின் அகச்சீற்றத்தை அழகாய் பின்னூட்டங்களில் எனக்கு காட்டுகிறது சகோ செங்கொடி.. என்னை குற்றப்படுத்தியே மெருகேரும் உங்கள் மேற்கண்ட பின்னூட்டங்கள் உங்கள் சகிப்பு தன்மையின் அளவை தெளிவாய் எனக்கு விளக்குகிறது.

    இனி உங்களை குற்றம் பிடிக்கவோ, எதிர்க்கேள்விகளோ கேட்க போவதில்லை... பாவம் என்னால் உங்களுக்கு வீண் சென்டன் வேண்டாம்..

    எனது யோக்கியதனத்தை விளக்க உங்களை இங்கே நான் அழைக்கவில்லை. வார்த்தைகளில் கண்ணியம் காத்துக்கொள்ளுங்கள். உங்கள் தளங்களில் எப்படி வேண்டுமானாலும் வார்த்தைகளை அலைய விடுங்கள்.. இங்கே வேண்டாம்.. இதைப்போன்ற தேவையற்ற வார்த்தை பிரயோக பின்னூட்டங்களும் வலம் வர வேண்டாமென்று சென்ற முறையை சொல்லி இருந்தேன்.
    இதே தோணியில் அடுத்த உங்கள் பின்னூட்டங்களும் தொடருமானல் அதை வெளியிட மாட்டேன்..

    நீங்களே புரிந்துக்கொண்டால் நலம்...

    ReplyDelete
  121. சகோ செங்கொடி நீங்கள் என்னை நண்பர் என்று அழைக்கும் காலத்திற்கு முன்பே உங்களை நான் சகோதரன் என்று அழைத்தவன். ஆக பட்டாளியிடம் மட்டுமல்ல எதிர் கருத்துக் கொண்டவனிடம் கூட சகோதரத்துவத்தை பேணுவது தான் உண்மையான பாசம் என நான் நினைக்கிறேன்.

    இறுதியாக
    மேற்கண்ட உங்களது பின்னூட்டங்கள் அனைத்தும் கோபக்கணலாய் தெரிக்கிறது.

    இந்த விவாதம் அதன் நிலை தாண்டி ஒரு நிலையில் பயணித்தது என்னமோ உண்மைதான்.! அந்த வளைவுகளில் என் வார்த்தைகள் உங்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தால் அதற்காக நான் மன்னிப்புக்கேட்டு கொள்கிறேன்.

    உங்கள் சகோதரன்
    குலாம்.

    ReplyDelete
  122. சகோ செங்கொடி, தேனீக்கள் - கனிகள் தொடர்பான சில தரவுகள் உங்கள் கவனத்திற்காக சில சகோதரர்கள் கொடுத்திருக்கிறார்கள் இதுவும் பாருங்கள் உங்களுக்கு புரிதலை ஏற்படுத்தும்...


    நிஜாம் கோவை
    http://www.youtube.com/watch?v=Tk56jZgWysM


    Umm Omar
    http://www.beesource.com/forums/showthread.php?246182-Honey-bees-eating-Peaches

    ReplyDelete

  123. Jeelani Khan http://onlinepj.com/VIVATHAM%20VIDEO/QURAN_IRAI_VETHAMA_1.wmv

    Go to 46:43 in that part. You will see an amazing explanation for what Quran says about honey.

    Regarding the question if honey bees eat fruits, please see this link.

    http://www.pest-control.com/bees/honey-bees/western-honey-bee/what-do-honeybees-eat/

    "When fruits are in season, they also eat fruit juice. Honeybees gather plant nectar. They use it in a way that ants and wasps (and other kinds of bees) do not."

    Note:This is NOT an Islamic or a religious website.

    ----------------------------------------------------------

    One more: "When Honey Bees seek out nectar and pollen to make honey with, they visit many different types of flowers, including clover, dandelions, goldenrod, fruit trees, and milkweed."

    http://www.fcps.edu/islandcreekes/ecology/honey_bee.htm

    Note: Again this is NOT an Islamic or a religious website.

    -----------------------------------------------------------
    Question to brother செங்கொடி is: If he does not have knowledge about the diet habits of honey bee despite the information overflow we have due to internet, how can an illiterate man who could not even write his name mention this 1400 years ago????

    Indeed Allah said the truth when He said in the verse in question "Then eat from all the fruits and follow the ways of your Lord laid down [for you]." There emerges from their bellies a drink, varying in colors, in which there is healing for people. INDEED IN THAT IS A SIGN FOR A PEOPLE WHO GIVE THOUGHT."

    Will செங்கொடி give thought????

    -------------------------------------

    Brother Ghulam, I have been an atheist myself in the past. From my own experience as an atheist and from the experience of interacting with several atheists and from reading about atheism, let me tell you:

    Sincere atheists (who are atheists because of lack of evidence for God) will accept the truth and will be ready to reason when shown evidence.

    Most atheists today claim to be atheists BUT are actually liars. We need to understand that this is a deliberate trick to fool people. Did you know one of the founders of the modern Hindutva movement, V. Savarkar, was an atheist? I am told, L.K. Advani is also an atheist.

    Atheism is a garb which these people wear to fool people but if you really see, they have a belief system which they conceal cleverly.

    Moreover, many claim to be atheists because, it helps them to follow their own desires. No accountability to anyone whatsoever.

    Allah speaks about such people. Let me quote 2 verses here.

    "Have you seen the one who takes as his god his own desire? Then would you be responsible for him?" Chapter 25: Verse 43

    "Does man think that We will not assemble his bones?, Yes. [We are] Able [even] to proportion his fingertips. But MAN DESIRES TO CONTINUE IN SIN." Chapter 75: Verses 3,4 and 5.

    Insha Allah, convey the message and do lots of dua for செங்கொடி. If he does not listen or show any change, do not be surprised.

    Infact, one of the places where Allah speaks about design of creation in the Quran is in Surah Ghaashiyah (Chapter 88, Verses 17 to 20).

    Right after the points, Allah mentions : "So remind, [O Muhammad]; you are only a reminder.You are not over them a controller.However, he who turns away and disbelieves –Then Allah will punish him with the greatest punishment.Indeed, to Us is their return.Then indeed, upon Us is their account."

    Subhanallah, what a prediction!! You will see most people who claim to be "atheists" unmoved by the overwhelming evidence that is shown to them and will decide to turn away from evidence and disbelieve.

    May Allah help you in your pursuit to convey the truth! Ameen ya rabb!

    http://onlinepj.com/VIVATHAM%20VIDEO/QURAN_IRAI_VETHAMA_1.wmv
    onlinepj.com

    ReplyDelete
  124. Peer Mohamed

    சகோ குலாம்,
    அஸ்ஸலாமு அலைக்கும் !!
    கேள்விகளுக்கு பதிலே தராமல் உங்கள் ஒவ்வொரு பிடியிலிருந்தும் நழுவி வெவ்வேறு கேள்விகளுக்கும் வெவ்வேறு தளங்களுக்கு சகோதரர் செங்கொடி செல்வதை பார்க்கமுடிகிறது. ஆனாலும் உங்க பொறுமை அடடா
    பரவாயில்லை. அவர் எங்கே சென்றாலும் பொறுமையுடனும் அறிவுடனும் பதிலளிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு அருள்புரியட்டும்.
    தேனீ பற்றி மட்டுமல்ல, சகோ செங்கொடியின் பல கேள்விகள் மேற்குலக கிறிஸ்தவ அழைப்பாளர்களில் சிலர் எடுத்து வைத்த கேள்விகளாகவே தெரிகிறது. இது தற்போது நாத்திகர்கள் பயன்படுத்தும் புதிய டெச்னிக். வேண்டுமானால் பாருங்கள், நீங்கள் இதற்குப் பதிலளித்தால் ஒடனே இன்னும் இரண்டு கேள்விகள் இன்டர்நெட்டில் இருந்து எடுக்கப்பட்டு இங்கே பேஸ்ட் செய்யப்படும் ..ஆதலால் , நீங்கள் சென்கொடியொடல்ல , இணையத்தோடு மோதுகிறீர்கள் ன்பதை நினைவில் கொள்ளுங்கள்

    ReplyDelete
  125. Peer Mohamed

    1. கனிகள் , fruits என்ற அர்த்தத்தில் பல குரான் தர்ஜுமாக்கள் இந்த வசனத்தை மொழிபெயர்த்திருப்பதை நீங்கள் காணலாம். அரபி வார்த்தை "தமராத் "என்பதை பழங்கள் கனிகள் என்று மொழிபெயர்த்திருப்பார்கள். ஆனால் அரபி அகராதிப்படி இதற்கு பல அர்த்தங்கள் உண்டு. "தமராத் " என்பதை விளைச்சல் அல்லது ஒரு பொருளில் இருந்து நமக்கு கிடப்பது என்றும் பொருள் கொள்ளலாம். பூக்களும் கனிகளும் மரத்தின் விளைச்சல் தான். இவர்ற்றில் எதை தேனீ பயன்படுத்தினாலும் குரானின் பொருள் நமக்கு அழகாப் புரிகிறது.

    2. Fruits என்பதைக் கூட ஆங்கிலத்தில் வேறு மாதிரி சொல்வார்கள். He got the fruits of his hard work என்று சொன்னால் அவரது கடின உழைப்பி பலனை அவர் அடைந்து கொண்டார் என்பது தான் பொருளே அன்றி அவருக்கு பழங்கள் கிடைத்தது என்பது பொருளல்ல. ஆக தாவரத்தின் பலனை தேனீ அடைந்துகொண்டது என்று எடுத்துக் கொண்டாலும்கூட பூவில் இருந்து நெக்டாரை தேனீ பருகுகிறது என்று கொள்ளலாம்.

    3. "தமராத் " என்பதை மனோ இச்சைப்படி மொழிபெயர்த்து தப்பர்த்தம் செய்கிறோம் என்று உங்களிடம் சொன்னால் அல்குரான் 2.155 பாருங்கள்.. அச்சத்தாலும் பசியாலும், பொருள் இழப்பாலும், உயிரழப்பாலும் அல்லாஹ் உங்களை சோதிப்பான் என்ற இந்த வசனத்திலும் "தமராத் " வருகிறது. இங்கே கனிகள் என்று கொள்ள முடியாது..விளைச்சல்கள், உடைமைகள் பொருட்கள் என்று விளங்கி கொள்கிறோம். தாவரத்தின் விளைச்சலை தேனீ எடுத்துக்கொள்கிறது என்று அர்த்தம் எடுத்தாலும் சரியாகவே உள்ளது.

    4. சுராஹ் நஹ்லின் (16:68,69) வசங்களை மொழிபெயர்ப்பு செய்த யூசுப் அலி அவர்கள் "Then to eat of all the produce, and find with skill the spacious paths of its Lord: " என்று அழகாக மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். தாவரத்தின் Produce என்பதில் பூக்கள் அடங்கும்தானே ...

    ReplyDelete
  126. Peer Mohamed

    5. "தமராத் " என்பதற்கு "அவ்லாத் " (குழந்தைகள் ) என்ற பொருளும், பேரக்குழந்தைகள் என்ற பொருளும் உண்டு என்று புகழ் பெற்ற ஆங்கில அரபி சொற்களஞ்சியம் (Arabic-English Lexicon by Edward William Lane ) கூறுகிறது. பூக்கள் தாவரத்தின் குழந்தைகள் என்று கொள்ளலாம் தானே?

    6. சரி. ஒரு வாதத்திற்காக கனிகள் என்றே பொருள்கொள்வோம் . தேனீக்கள் நன்றாக பழுத்த பழங்களில் இருந்தும் நேக்டாரை உறிஞ்சும். பூக்களில் இருந்து நெக்டார் கிடைப்பது குறைவாக இருக்கும் காலங்களில் wild bees பழுத்த பழங்களில் இருந்தும் நெக்டார் எடுப்பதாக தெரிகிறது.
    உதாரணமாக
    http://www.beesource.com/forums/showthread.php?246182-Honey-bees-eating-Peaches
    என்ற சுட்டியிலும்
    http://www.pest-control.com/bees/honey-bees/western-honey-bee/what-do-honeybees-eat/
    என்ற சுட்டியிலும்
    http://www.fcps.edu/islandcreekes/ecology/honey_bee.htm

    என்ற சுட்டியிலும் நீங்கள் தகவல்கள் பார்க்கலாம்.

    7. பழுத்த ஒரு பழத்தில் இருந்து நெக்டாரை தேனீ உறிஞ்சும் படத்தை நீங்கள் கீழ்க்கண்ட சுட்டியில் பார்க்கலாம்
    http://tangledwing.wordpress.com/2007/10/07/bee-on-fruit-wallpaper-huge-corporate-companies-buying-solar/

    8. அறிஞர் தகி உஸ்மானி இந்த வசனத்துக்கு எழுதிய விரிவுரையில்
    Maulana Muhammad Taqi Usmani - Ma'ariful Quran - Volume 5 - Page 377:
    "But, obviously, the word kull used here does not mean the fruits and flowers of the whole world. Instead of that, it means those within easy reach, and which serve the desired purpose. This word kull has also appeared in relation to the event concerning the queen of Saba' where it was said that "she has got everything - An-Naml, 27:23). It is obvious that 'all' or 'every' in this sense do not denote totality without exception to the limit that the queen of Saba' be required to have a personal aeroplane, Rolls Royce and palace train! What is meant here is what she needed to have as complement to her function as the ruler of the time. So, here to, the explanation from all the fruits means nothing but this. As for the bee sucking juices from fruits and flowers, it can be said that molecular composition of juices she sucks is extremely refined and precious, the extraction of which is identical and measure through mechanical means even in our advanced scientific age cannot be accomplished as efficiently."

    அந்த தாவரத்தின் மூலம் தேனீக்களுக்கு எதுவெல்லாம் கிடைக்குமோ அதுவெல்லாம் என்று சொல்கிறார். மாஷா அல்லாஹ் !!!

    ReplyDelete
  127. 1
    தம்பி குலாம்,

    இந்த விவாதத்தின் பேசு பொருளை நகர்த்தி விட்டு நீங்கள் இந்த விவாதத்தை நடத்தும் முறையை விரிவாக எடுத்துவைக்கும் அவலத்திற்கு என்னை ஆளாக்கியிருக்கிறீர்கள் தம்பி. உங்கள் நடிப்பின் எல்லை உச்சத்திற்கு எகிற எகிற உங்களின் போலித்தனங்களை நீங்களே அம்பலப்படுத்திக் கொள்கிறீர்கள். பலமுறை உங்கள் கேள்விகளுக்கு குறிப்பாய் பதில் கூறிய பின்னும் பதிலில்லை என பொய் சொல்லிக் கொண்டிருக்கும் நீங்கள் என்னுடைய கேள்விகளுக்கு குறிப்பாய் பதில் கூற பிடிவாதமாய் மறுக்கிறீர்கள். தம்பி, நான் ஏதோ உங்கள் மீது வசைச் சொல் வீசி விட்டதாய், இனி வெளியிட மாட்டென் என்று பூச்சாண்டி காட்டியிருக்கிறீர்கள். கேள்விகள் நொறுக்கி வரும்போது இது போன்ற ஆயுதங்களைத் தான் நீங்கள் கையிலெடுப்பீர்கள் என்பதை தொடக்கத்திலேயே நான் உணர்ந்திருந்தேன். அதனால் தான் இந்த விவாதத்தை செங்கொடி தளத்திலும் தொகுத்து வருகிறேன். தம்பீ! நீங்கள் வெளியிடுவீர்களோ மாட்டீர்களோ என்றெல்லாம் என்னால் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியுமா? நான் நேர்மையானவன். நான் வெளிப்படையானவன். அதனால் தான் நான் நினைப்பவைகள் என்னுடைய சொற்களில் தெறிக்கின்றன. உள்ளாடும் இயலாமையையும், பதில் கூற முடியாத கோபத்தையும் உள்ளுக்குள் அடக்கி வைத்துக் கொண்டு சகோ, சகோ என்று நேர்மையற்று வெளி வேடம் போட என்னால் இயலாது. தம்பி! ஒட்டு மொத்தமாக நீங்கள் யோக்கியமானவரா இல்லையா என்பது எனக்கு தேவையற்றது, அதற்காக நான் விவாதம் செய்ய வரவில்லை. ஆனால், இந்த விவாதத்தில் நீங்கள் நேர்மையற்று நடந்து கொண்டிருக்கிறீர்கள். அதை உரத்துக் கூறுவதில் ஒருபோதும் நான் தயங்கப் போவதில்லை. ஏனென்றால் அவை உண்மை. அந்த உண்மை உங்கள் போலித்தனத்தை உடைக்கிறது அதனால் தான் சொற்களால் நடித்து நான் டென்சனாவது போலவும், கோபப்படுவது போலவும் பிம்பம் காட்டியிருக்கிறீர்கள். நான் ஏற்கனவே சொல்லியிருந்தது தான். நாங்கள் களத்தில் நிற்பவர்கள். அனிச்சம் மலர்களல்ல. நீங்கள் தொட்டதும் வாடிவிடுவதற்கு. இந்த விவாதத்தைப் பொருத்தவரை நீங்கள் நேர்மையற்றவர் என்று வெளிப்படையாகவும், நேரடியாகவும் துணிவுடனும் உங்களைக் குற்றம் சாட்டுகிறேன். உங்களுக்கு துணிவிருந்தால் மறுத்துப் பாருங்கள். இதோ நீங்கள் நேர்மையற்றவர் என்பதற்கு நான் அளிக்கும் சான்றுகள்.

    1. இந்த விவாதத்தின் தொடக்கத்திலேயே மூன்று கேள்விகளை முன்வைத்து இவைகளுக்கு பதில் கூறுங்கள் விவாதத்தை தொடங்கலாம் என்றேன். ஒன்று, நீங்கள் நேரடியாக பதில் கூறியிருக்க வேண்டும். இரண்டு, பதில் கூற முடியாது என வெளிப்படையாய் மறுத்திருக்க வேண்டும். இரண்டையும் செய்யாமல் சொற்களால் பசப்பினீர்கள். தம்பி இது நேர்மையாளர்கள் செயலா?

    2. என்னுடைய கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க மறுக்கிறீர்கள் என்று தொடர்ந்து குற்ற்றம் சாட்டி வருகிறேன். ஒன்று நீங்கள் கூறுவது பொய் இதோ உங்கள் கேள்விக்கு இப்படி பதில் கூறியிருக்கிறேன் என்று மேற்கோள் காட்டியிருக்க வேண்டும். இரண்டு, பதில் கூறியிருக்க வேண்டும். ஆனால் இரண்டையும் செய்யாமல் ஏதோ பதில் கூறியிருப்பதைப் போல் சந்தடி சாக்கில் எடுத்து விட்டீர்கள். நீங்கள் பதில் கூறியிருந்தால் அதை மேற்கோள்களாக காட்டுங்கள் என சிலமுறை கூறியும் இது வரை கண்டு கொள்ளாமல் இருக்கிறீர்கள். தம்பி இது நேர்மையாளர்கள் செயலா?

    3. ஏற்கனவே பதில் கூறப்பட்டவைகளையும் மீள் கேள்விகளாக கேட்பதை வழக்கமாக கொண்டிருக்கிறீர்கள். மெய்யாகவே உங்கள் கேள்விகளுக்கு நான் பதில் கூறவில்லை என்றால், ஒன்று நீங்கள் பதில் கூறவில்லை என்று உரத்துக் கூறியிருக்க வேண்டும். கூறியிருந்தால் பதில் கூறிய தேதியுடன் மேற்கோள் காட்டுங்கள் எனக் கேட்டிருக்க வேண்டும். இரண்டு, இதற்கு நீங்கள் பதில் கூறும் வரை வேறு எதையும் நான் முன்வைக்க மாட்டேன் என்று நான் பதில் கூறாத உங்கள் கேள்விகளை எடுத்து வைத்து போராடியிருக்க வேண்டும். இரண்டையும் செய்யாமல் பூசி மெழுகுவதிலேயே கவனமாக இருக்கிறீர்களே. தம்பி இது நேர்மையாளர்கள் செயலா?

    ReplyDelete
  128. 2
    4. நான் கூறும் பதில்களையும் விளக்கங்களையும் நீங்கள் பரிசீலிக்க மறுக்கிறீர்கள் என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வந்திருக்கிறேன்.ஒன்று, நீங்கள் உங்களின் பதில்களையும் விளக்கங்களையும் இன்னின்ன முறையில் பரிசீலனை செய்து இந்தந்த விதங்களில் எதிர் விள்க்கங்கள் கூறியிருக்கிறேன். அப்படியிருக்க எப்படி நீங்கள் பரிசீலிக்கவில்லை என்று கூறுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். இரண்டு, பரிசீலித்த முடிவுகளைக் காட்டியிருக்க வேண்டும். இரண்டையும் செய்யாமல் அமைதி காக்கிறீர்களே. தம்பி இது நேர்மையாளர்கள் செயலா?

    5. லாம்கு தொடக்கம் பல விசயங்களை வாதமாக எடுத்து வைத்து அவற்றுக்கு எதிர் விளக்கமளித்து உங்களின் நிலை தவறு என நிருவியதும் அவைகளை அப்படியே கைவிட்டு விடுவதும் உங்களின் வழக்கம் தான். அதிலிருந்து என்ன முடிவுகளை வந்தடைந்தீர்கள் என்பது உங்களிடமிருந்து வந்ததே இல்லை. ஆனாலும் கேள்விகள் தொடரும். ஒன்று நீங்கள் உங்கள் எதிர் விளக்கங்கள் இந்த விதங்களில் தவறு என எடுத்துக் காட்டியிருக்க வேண்டும். இரண்டு, என்னுடைய எதிர் விள்க்கங்களிலிருந்து இந்த விதமான முடிவுகளுக்கு வந்தேன் என கூறியிருக்க வேண்டும். இரண்டையும் செய்யாமல் தாவித் தாவி செல்கிறீர்களே. தம்பி இது நேர்மையானவர்கள் செயலா?

    இவை போல் இன்னும் கூறிக் கொண்டே போகலாம் தம்பி. இப்படி நேர்மையற்று செயல்படும் உங்களை நேர்மையற்று நடக்கிறீர்கள் என்று கூறினால் அது வசைச் சொல்லாகி விடுமா? இதோ உங்களின் பிடிவாதம், முன் முடிவு, வறட்டுத்தனம் ஆகிய அனைத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் உங்களின் கூற்று, \\\
    இங்கே உங்கள் சொல்லாடலில் எனது நோக்கத்தை உங்கள் எழுத்தில் புறமுகமாக சுட்டி காட்டீனீர்கள் என்றால் உங்களின் இரட்டை முகம் என்பதை... செயலும், செயலும் கொள்கை ரீதியாக உங்களுக்கு மாறுப்பட்டிருப்பதை எனது சொல்லாடல் குறிக்கவில்லையென்பதை எப்படி நீங்கள் மறுக்கலாம் சகோ/// முகம் எனும் சொல்லை பயன்படுத்தியதற்காக நீங்கள் கூறிய காவியம் இது. நான் காப்பியங்களில் ஆழம் கண்டவனில்லை என்பதால் உங்கள் காப்பிய வரிகளுக்கு நீங்களே பொழிப்புரை வழங்கி விடுங்கள் என்று பலமுறை கேட்டுக் கொண்டும், இன்றுவரை அதை கண்டு கொண்டீர்களா தம்பி? மாறாக பின்னூட்டம், வணக்கம், சௌதி என்று எங்கெங்கோ சுற்றி வந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் எழுத்துக்கு உங்களாலேயே விளக்கம் சொல்ல முடியவில்லை என்றால் என்ன எண்ணத்தில் அதை எழுதினீர்கள் தம்பி. பதில் கூறியது போலும் இருக்க வேண்டும். அது புரியாத மேட்டிமைத் தனத்தோடும் இருக்க வேண்டும், சமாளித்தது போலும் இருக்க வேண்டும். ஆனால் நம் நிலையை விட்டுக் கொடுக்கக் கூடாது. அப்படித்தானே தம்பி. இதில் எந்தப் புள்ளியாவது உங்கள் யோக்கியத்தைக் காட்டுகிறதா?

    இப்போது மன்னிப்பு என்று சொற்களைச் சிந்தியிருக்கிறீர்கள். மன்னிப்பு போன்ற பொருளற்ற வார்த்தைகளில் நம்பிக்கையற்றவர்கள் நாங்கள். சுய விமர்சனம் செய்வதை வழிமுறையாகக் கொண்டவர்கள் நாங்கள். உங்கள் மன்னிப்பு மெய்யானது என்றால், உங்கள் சுய விமர்சனம் என்ன? ஆம் நான் உணர்ச்சிவயப்பட்டு கூறிவிட்டேன். அவ்வாறு கூறியது தவறு. இனி திருத்திக் கொள்கிறேன் என்று உணர்ந்து கூறியிருந்தால் ஆரத் தழுவலாம் உங்களை சகோதரன் எனும் அடிப்படையில், ஒத்த கொள்கையால் அல்ல, சீர்தூக்கிப் பார்க்கும் பண்பால். ஆனால் மன்னிப்பு எனும் சொல்லையும் நீங்கள் பிம்பமாக்கலுக்குத் தான் பயன்படுத்தியிருக்கிறீர்கள். அதாவது, நீங்களாகவே முன் வந்து மன்னிப்பு கோருவதால், சொற்களை மென்மையாகக் கையாள்வதால் நிதானமாகவும், பொறுமையுடனும், நிலப்பிரபுத்துவ பெரிய மனித தோரணையும் கொண்ட ஆளுமையாக உங்களை காட்டிக் கொள்ள உதவும் எனும் நோக்கிலேயே அந்தச் சொல்லை பாவித்திருக்கிறீர்கள்.

    இவைகளெல்லாம் சுட்டிக் காட்டுவது என்ன? எளிதான சுலபமாக தீர்ந்து விடுவதைக் கூட முன் முடிவோடு வறட்டுத்தனம் செய்கிறீர்கள் என்றால், முரண்படும் ஒரு விசயத்தில் விவாதம் செய்வதற்கு என்ன தகுதி இருக்கிறது தம்பி உங்களிடம்? இந்த விவாதத்தின் தொடக்கம் முதலே நீங்கள் முன்முடிவோடு, முடிவு காண விடக்கூடாது எனும் திட்டத்துடன் நீட்டிக் கொண்டே செல்ல வேண்டும் எனும் வழிமுறையிலேயே மேற்கூறிய பலவிதமான உத்திகளைக் கையாண்டு வருகிறீர்கள். அதனால் தான் நான் ஒரு எல்லைக்குப் பிறகு உங்களிடம் நேர்மையைக் கொண்டுவருவதற்கு என்ன செய்யலாம் என நானும் உத்திகளைக் கையாளத் தொடங்கினேன். ஆனால் என்னுடைய

    ReplyDelete
  129. 3
    உத்திகள் விவாதத்தின் முடிவுக்கு உதவும் நோக்கில் அமைக்கப்பட்ட உத்திகள். அதிலொன்று தான் எள்ளல் நடை. மாறாக நீங்களோ அதனைக் காரணம் காட்டியே வசைச் சொற்கள் என்று நிறுத்திவிட எத்தனிக்கிறீர்கள். நீங்கள் எதனைக் காரணம் காட்டி இவ்விவாதத்தை நிறுத்தினாலும் அது உங்கள் பதில் கூற முடியா ஒட்டாண்டித் தனத்தையே வெளிக்காட்டும்.

    இவைகளையெல்லாம் உங்களை காயப்படுத்த வேண்டும் என்றோ, வசையாகவோ பயன்படுத்தவில்லை தம்பி. மாறாக நீங்கள் தேடல் நோக்கில் இந்த விவாதத்தை நடத்த வேண்டும் எனும் ஆதங்கத்தில் பயன்படுத்தி இருக்கிறேன். இதை எப்படி நீங்கள் எடுத்துக் கொள்வீர்களோ தெரியாது. ஆனால், தவறாக புரிந்து கொண்டு என்னவிதமாக இதை நீங்கள் எதிர் கொண்டாலும் அதை நேர்கொள்ள ஆயத்தமாக இருக்கிறேன்.

    இனி விவாதத்தின் கருப் பொருளுக்குத் திரும்பலாம். கடவுள்: வெற்று நம்பிக்கையா? உறுதியான இருப்பா? எனும் தலைப்பிலான இந்த விவாதத்தில் என்னுடைய கேள்விகளுக்கு நீங்களும் உங்களுடைய கேள்விகளுக்கு நானும் பதில் கூறவில்லை என்று கூறிக் கொண்டிருக்கிறோம். அதேநேரம் எதிர்க் கேள்விகளுக்கு பதில் கூறிவிட்டதாகவும் கூறிக் கொண்டிருக்கிறோம். இப்படி மாறி மாறி கூறிக் கொண்டிருந்தால் இதை எப்படி சரி செய்வது?

    நான் ஏற்கனவே முன்வைத்தது போல் இந்த முறையும் என் கேள்விகளை முன்வைக்கிறேன். நீங்களும் அது போல் உங்கள் கேள்விகளை முன் வையுங்கள். உங்கள் கேள்விகளுக்கு நான் ஏற்கனவே பதில் கூறியிருக்கிறேன் என்பதன் அடையாளமாக மேற்கோள்களாக எடுத்துக் காட்டுகிறேன். மட்டுமல்லாது, குறிப்பாகவும் பொதுவாகவும் இரண்டு விதங்களில் பதில் கூறியிருக்கிறேன் என்பதையும் சுட்டிக் காட்டுகிறேன். அதே போல் நீங்களும் உங்கள் கேள்விகளை வரிசைப்படுத்திக் கேளுங்கள். அவை எத்தனை கேள்விகளாக இருந்தாலும் பரவாயில்லை. இருவரும் மேற்கோளாக காட்டாமல் பதிலைக் கூறினால் ஏற்கனவே பதில் கூறவில்லை என்பதாக பொருள் படும். இது கிட்டத்தட்ட முதலிலிருந்து விவாதத்தை தொடங்குவது போலத்தான், என்றாலும், இந்த விவாதத்தை நேர்படுத்த இதைத்தவிர வேறு வழி எனக்கு தெரியவில்லை. அல்லது உங்களுக்கு தென்பட்டால் கூறுங்கள் பரிசீலிக்கலாம்.

    தேனீ குறித்து.

    அந்த வசனங்களில் மிகத்தெளிவாக தேனீ கனிகளை உட்கொள்ளும் என பதிவு செய்யப்பட்டிருக்கிறது. “மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக்கொள் பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு” இதன் இரண்டு வாக்கியங்களையும் கவனித்தால் புரியும். மலைகளிலும், மரங்களிலும், கட்டிடங்களிலும் கூடு கட்டு. கவனிக்கவும்: மரங்களில் கூடு கட்டு என்று மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்து விடவில்லை. மலைகளிலும், மரங்களிலும், கட்டிடங்களிலும் கூடுகட்டு என்கிறது. அதாவது சத்தியமுள்ள எல்லா வழிகளையும் கூறுகிறது. அடுத்த வாக்கியத்தில் எல்லா கனிகளிலிருந்தும் சாப்பிடு என்கிறது. இங்கு கனி என்பது தேனீகளின் முதன்மையான உணவா? என்றால் வேறு வாய்ப்புகளை குரான் ஏன் குறிப்பிடவில்லை. தேனீயின் முதன்மையான உணவு தேன். கூடு கட்டுவதில் மலைகளிலும், மரங்களிலும், கட்டிடங்களிலும் என தனித்தனியே பிரித்துக் குறிப்பிட்ட குரான் முதன்மையான உணவை விட்டுவிட்டு உணவல்லாத வேறொன்றை சாப்பிடு எனும் சொல்லால் குறிப்பிடுவதேன்?

    ஆனால் இங்கே தம்பி குலாம் உட்பட சுட்டி கொடுத்திருப்பவர்களெல்லாம் இந்த அம்சத்தை கணக்கிலெடுத்துக் கொள்ளவே இல்லை. தேனீயின் உணவு என்ன? அந்த வசனங்களில் தேன் தான் தேனீயின் உணவு என ஏதேனும் குறிப்பு இருக்கிறதா? கனிகளின் நெக்டர்களிலிருந்தும் தேனீ சேகரிக்கிறது என விளக்கமோ விளக்கம் அளிக்கிறார்கள். தேனியின் உணவு தேனா? கனிகளா? தமிழர்களின் உணவு அரிசி. தமிழர்களின் உணவு மாங்கொட்டை. இந்த இரண்டில் எதை சரி என்பீர்கள் எதை தவறு என்பீர்கள். மாங்கொட்டை தமிழர்களின் உணவல்ல என்பீர்களாயின் என்னால் நீலகிரி மலை படுகர்கள் சில போதுகளில் மாங்கொட்டைகளை உணவாக உட் கொள்கிறார்கள் என்பதை

    ReplyDelete
  130. 4
    அவர்களிடம் செவி கண்டு வெளியிட்டால், படம் பிடித்துப் போட்டால், இணையச் சுட்டி தந்தால் என்ன சொல்வீர்கள். இந்தப் பிரச்சனை தான் குரானின் அந்த வசனங்களிலும் இருக்கிறது. குரானில் தவறே இருக்க முடியாது எனும் முன் முடிவோடு அதை எப்படி சமாளிப்பது என்று ஆளாளுக்கு விளக்கம் சொல்லியிருக்கிறார்கள், விவகாரம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமலேயே. \\\தேனீ கனிகளை உண்ணும் என குரான் பொய் சொல்லியதை விளக்கி இணையப் பரப்பில் எங்கேனும் நேர்மையான பதிலிடப்பட்டிருக்கிறதா?/// நான் கேட்டிருந்தது நேர்மையான பதில். இங்கே அள்ளிக் கொட்டப்பட்டிருப்பவை மதவாத விளக்கங்கள்.

    அந்த வசனந்த்தில் ஸமர் எனும் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (சிலர் இங்கே தமர் எனும் சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அதற்கு விளைச்சல் என்றும் பொருள் கொள்ளலாம் என அருஞ்சொற்பொருள் கூறியிருக்கிறார்கள். கவனிக்கவும் அங்கே மூன்று நொக்கத்துகள் இருக்கின்றன இரண்டல்ல. இரண்டு நொக்கத்துகள் இருந்தால் தான் த உச்சரிப்பு வரும் மூன்று நொக்கத்துகள் இருந்தால் ஸ தான்) ஸமர் எனும் சொல்லுக்கு கனி என்பது தான் பொருள். 2:155 லும் கனிகள் என கொண்டாலும் பொருள் மயக்கம் ஒன்றும் வருவதில்லை. சரி மதவாத நண்பர்கள் விரும்புவது போல் விளைச்சல் எனும் பொருளையே கொள்வோம். “தும்ம குலி மின் குல்லி ஸமராதி” எல்லா விளைச்சல்களிலிருந்தும் நீ சாப்பிடு என்றால் என்ன பொருள்? எந்த விளைச்சல்களிலிருந்தெல்லாம் தேனி சாப்பிடுகிறது எனும் பட்டியல் ஏதும் இங்கே சுட்டி கொடுத்த நண்பர்கள் வைத்திருக்கிறார்களா? மறந்து விடாதீர்கள் நண்பர்களே! அந்த வசனத்தில் இருப்பது சாப்பிடு என்பது தேனை சேகரிப்பது என்ற பொருளை வலிந்து எடுத்துக் கொண்டு கனி நெக்டர் என்று சுற்றிச் சுழல வேண்டாம்.

    ஸமர் எனும் சொல்லுக்கு 1400 ஆண்டுகலுக்கு முன் கனி எனும் பொருள் பயன்படுத்தப்பட்டதா? விளைச்சல் எனும் பொருளா? இதைத்தான் கருத்து முதல் வாதம் என்பது. சொல் அதே தான் ஆனால் காலம் கடக்க கடக்க அறிவியலின் எல்லைக்கேற்ப அந்தச் சொல்லின் பொருள் மட்டும் மாறுபடும். இதற்கு குரானின் வேறு சில சொற்களையும் எடுத்துக் காட்டாக கூறலாம். இங்கே குறிப்பிடப்பட்டிருப்பது ஒற்றைச் சொல்லில் ஏற்பட்ட பேதம் அல்ல. வாக்கியத்தில் ஏற்பட்ட பொருட் பிழை. எல்லா கனிகளிலிருந்தும் நீ சாப்பிடு என்பதில் தவறான பொருள் ஸமர் எனும் ஒற்றை வார்த்தையில் மட்டுமல்ல. அந்த வாக்கியத்தின் பொருளில். எல்லா கனிகளிலிருந்தும் தேனீ சாப்பிடுகிறதா? எல்லா விளைச்சல்களிலிருந்தும் தேனீ சாப்பிடுகிறதா? இரண்டில் எதுவானாலும் அந்த வாக்கியத்தின் பொருள் தவறு தான்.

    அல்லா முக்காலமும் உணர்ந்தவர் தானே. இப்படி ஒரு சர்ச்சை வரும் என்பது அவருக்கு தெரியுமா தெரியாதா? சர்ச்சை ஏற்படா வண்ணம் தெளிவான, சரியான, துல்லியமான சொல்லை ஏன் அல்லா பயன்படுத்தவில்லை? ஏன் இப்படி பலவீனமான படைப்புகளின் சமாளித்தல்களுக்காக அல்லா காத்திருந்தான்?

    இந்த வசனம் என்ன பொருளில் எடுத்தாளப்பட்டிருந்தது? இது போன்ற மதவாத சமாளித்தல்களில் உயிர் வாழும் குரானின் அறிவியலை (பாருங்கள் தம்பி! உங்களுக்கு கோபம் வந்து விடக் கூடாது என்று தான் அறிவியல் எனும் சொல்லை பயன்படுத்தியிருக்கிறேன். அவியல் என்று பயன்படுத்தவில்லை) சான்றாக வைத்துக் கொண்டு குரான் உன்மையாகி விட்டது. அதனால் மலக்குகள் உட்பட அனைத்தையும் நம்பு என்று மதவாத திரிப்புகளே பொது உண்மை போல் புனையப்படுகின்றன.

    மீண்டும் தொடர்வேன்.

    ReplyDelete
  131. 5
    தம்பி நீங்கள் பதிலளித்தாக வேண்டிய குறைந்தபட்ச கேள்விகளின் பட்டியல்

    1. எந்தவித அளவுகோலிலும் கடவுள் அகப்படமாட்டார் என்றால் அவர் உறுதியாக இருக்கிறார் என்று நீங்கள் எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்?
    2. அறிவியல் குறைபாடுடையது என்றால் உங்கள் யதார்த்த வாழ்வில் அறிவியலை விலக்கி வைத்து முடிவெடுத்த நிகழ்வு ஏதேனும் உண்டா? பட்டியலிடுங்கள்.
    3. முதலில் அண்ட வெளியில் மோதல்களே நிகழ்வில்லை என்றீர்கள். பின்னர் மோதல்களை யார் நிகழ்த்தியது என்றீர்கள். கடவுள் தான் நிகழ்த்துகிறார் என்றால் அதை நிரூபியுங்கள்?
    4. கடவுள் என்றால் என்ன? (கவனிக்கவும் கடவுளின் தகுதிகள் அல்ல)
    5. பேரண்டம் உட்பட அனைத்தையும் படைப்பதற்கு முன் கடவுள் எங்கு இருந்தார்?
    6. இந்த உலகில் சோதித்தறிய முடியும் படியான, மனிதர்கள் கோரிக்கையை இறைவன் நிறைவேற்றியதற்கான சான்று ஏதாவது கூற முடியுமா?
    7. ஆத்திகர்கள் கடவுளை உறுதிப்படுத்துவதாக கூறிக் கொண்டு கேட்கும் எதிர்க் கேள்விகள் அனைத்தும் ஏன் நிகழ்கால அறிவியலைக் கடந்ததாக இருக்கிறது?
    8. ஆன்மீகத்துக்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்பு சாராம்சத்தில் கடவுளைச் சொன்னவரின் சொல் உண்மையா பொய்யா என்பதே. இதை நீங்கள் எப்படி கருதுகிறீர்கள்?

    ReplyDelete
  132. அன்பு சகோ செங்கொடி.,

    இருப்பிடம் மற்றும் பணியிட மாற்றத்தால் கடந்த சில நாட்களாக சூழ்நிலை பிரச்சனைகள், அதிலும் இணைய துண்டிப்பு வேறு,, அல்ஹம்துலில்லாஹ் இப்போது நிலைமை சிறிது பரவாயில்லை... இன்ஷா அல்லாஹ் தொடர்கிறேன்..


    சகோ செங்கொடி....
    உங்கள் மேற்கண்ட கருத்துக்களை படிக்கும் போது மீண்டும் அதே மீள் கேள்விகள், சலிப்படைய வைக்கும் தம்மப்பட்ட வார்த்தைகள், இடை இடையே என்னை விமர்சித்து உங்கள் தரப்பை நியாயப்படுத்தி பத்தி பத்தியாய் பின்னூட்டங்கள் ..!
    எனது சுயங்கள் குறித்த மீண்டும் உங்கள் புலம்பல்கள்.... உங்களோடு சேர்த்து நிறைய நபர்களை பார்த்தாச்சி சகோ., இதற்கெல்லாம் நான் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.. இதைப்போன்ற நடைகள் எனக்கு கோபத்தை வரவழைக்காது... சோ எதாவது புதுசா ட்ரை பண்ணுங்க... மீண்டும் மீண்டும்.. இதுவே தொடர்ந்தால், எதுக்குறித்த விவாதம் நமக்கிடையில் தொடர்கிறது என்பதில் சந்தேகம் வலுக்கிறது எனக்கு ..

    என்னாலும் இரண்டு பத்திகளுக்கு குறையாமல் உங்களை குறித்து எதுகை மோனையோடு விமர்சிக்க முடியும். தயவு செய்து சகோ செங்கொடி,.. என் வருகைக்கு முன்னமே இணைய வெளியில் எழுத்தை உலவ விட்டவர் நீங்கள். நிலை உணர்ந்து உங்கள் எழுத்துகளுக்கு கடிவாளமிட்டால் நலம்!

    ReplyDelete
  133. சரி மேட்டருக்கு வரேன்...
    ரொம்ப சிம்பிள் செங்கொடி., நமது விவாத முதல் பொருள் கடவுள் இருப்பு (அல்லது மறுப்பு இதையும் இங்கே நினைவில் கொள்க) உறுதியான நிலைப்பாடா..? அல்லது நம்பிக்கையா...?

    ஆனால் "அறிவியலில் அகப்படாத எதுவும் கடவுள் இல்லை" என்று எனது நிலைப்பாட்டை பொய்பிக்க உங்கள் தரப்பு வாதங்களை தொடக்கத்தில் எடுத்து வைத்த நீங்கள் அடுத்து -குறைபாடு -முழுமையாடாத அறிவியல் என்று நான் தொடர்ந்த வாதத்தில்... மையப்புள்ளியை விட்டு விட்டு குறைபாடுடைய அறிவியலை நீங்கள் ஏன் உங்கள் வாழ்வில் பின்பற்றுகிறீர்கள் என்ற புரிதலற்ற கேள்விகளில் விவாத போக்கை திசை மாற்றுகிறீர்கள்...

    தொடக்கம் முதலே.... என் கருத்தை வைத்தே உங்கள் கேள்விகளை தயார் செய்து கடவுள் ஏற்பை மறுக்கிறீர்கள்.... கவனியுங்கள் கடவுள் மறுப்புக்கு தெளிவானதொரு பதில் இதுவரை பதியப்படவில்லை. அதே நிலை தான் கடந்த பின்னூட்டம் வரை...

    ReplyDelete
  134. சரி அதிகம் தேவையில்லை.... இன்னும் இதை எளிதாக்குகிறேன்...

    //1. எந்தவித அளவுகோலிலும் கடவுள் அகப்படமாட்டார் என்றால் அவர் உறுதியாக இருக்கிறார் என்று நீங்கள் எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? //
    கடவுளை ஏற்பதாக இருந்தால் மேற்கண்ட கோட்பாட்டை ஏற்றால் மட்டுமே கடவுளை ஏற்றதாக ஆகும்... அப்படியிருக்க கடவுளின் இருப்பை படைப்புகளின் மூலமாக அறிந்துக்கொள்ள முடியும் என்கிறார்... அதுவும் இல்லையென்றால் இறந்த / நிகழ் / எதிர்க்கால நிகழ்வுகளில் தன்னால் மட்டுமே நடக்க சாத்தியமான செயல்களாக சிலவற்றை மனித சமூகத்திற்கு பாடமாக, அறிவிப்பாக, எச்சரிக்கையாக பட்டியலிடுகிறார்...
    இங்கே மேற்கண்ட வழிமுறைகளை சோதித்து, அறிந்து கடவுள் இருப்பை ஏற்க சொல்கிறார்... இதை மறுக்க வழியில்லாத காலம் வரை எப்படி திட்டமாக கடவுள் இல்லையென ஏற்றுக்கொள்ள முடியும்...? இது பதில்
    இது தொடர்பாக கேள்வி உங்களுக்கு?
    கடவுளை ஏற்கும் நிலைப்பாட்டிற்கு இப்படி விளக்கம் கொடுத்தால்.... இதை மறுக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்..?

    1. மேற்கண்ட நிலைப்பாட்டில் முன்மொழியும் நிகழ்வுகள் எல்லாம் சாதரண மனித அறிவாலே சாத்தியம் என்பதை சான்றுகளுடன் நிருவியிருக்க வேண்டும்.. அல்லது
    2. மேற்கண்ட கடவுள் ஏற்பின் அடிப்படை கோட்பாடுகள் கூற்று அல்லாத வேறு வழிகளில் கடவுளின் ஏற்பை உறுதிப்படுத்த மாற்று கேள்விகளை நீங்கள் கேட்டிருக்க வேண்டும்... இந்த இரண்டில் எதை நீங்கள் செய்தீர்கள்.?

    //2. அறிவியல் குறைபாடுடையது என்றால் உங்கள் யதார்த்த வாழ்வில் அறிவியலை விலக்கி வைத்து முடிவெடுத்த நிகழ்வு ஏதேனும் உண்டா? பட்டியலிடுங்கள். //
    கேள்வி புரியவில்லையென்றால் தயவு செய்து மீண்டும் கேளுங்கள். இதற்கான பதிலை மிக தெளிவாக ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். மனித தெரிதலில் நூறு சதவீகிதம் மறுக்கும் நிலைகளற்ற தன்மைகளில் நீங்களோ நானோ அதை ஏற்பதில், பின்பற்றி நடப்பதில் எந்த முரண்பாடும் இல்லை. எதிர்க்கேள்விகள் தோன்றும் பட்சத்தில் மட்டுமே அந்த நிலை குறித்த உண்மை அலசப்பட வேண்டும்.. சரி ஒரு வாதத்திற்கு கேட்கிறேன். உங்கள் உற்றார் உறவினரோடு கொண்ட நட்பு, பாசத்தை எந்த அறிவியல் சோதனை மூலமாக தெரிவு செய்து உறுதியான முடிவெடுத்தீர்கள் சகோ..?

    இங்கே முழுமைப்படுத்துதல் என்பதும் -உண்மைப்படுத்துதல் என்பதும் இரு கூறான வாதங்கள்... எனது பழைய பின்னூட்டத்தை மீண்டும் படியுங்கள். அதில் 24 மணி நேரம் என.. ஒரு துணை உதாரணத்தையும் கொடுத்திருக்கிறேன்.

    ReplyDelete
  135. //3. முதலில் அண்ட வெளியில் மோதல்களே நிகழ்வில்லை என்றீர்கள். பின்னர் மோதல்களை யார் நிகழ்த்தியது என்றீர்கள். கடவுள் தான் நிகழ்த்துகிறார் என்றால் அதை நிரூபியுங்கள்? //

    சகோ சொல்லப்படும் செய்தியின் முதன்மை அறிந்தே அங்கே வார்த்தைகள் முன்னிலைப்படுத்த படும்... அதே போல தான் நான் சொன்ன மேற்கொண்ட நிலைப்பாடும்.. நாம் பயணிக்கும் வாகனத்தில் திடிரென விபத்து ஏற்பட்டு அந்த சந்தர்ப்பத்தில் சகபயணியை பார்க்கும் போது கேட்போம்.. உங்களுக்கு ஏதாவது ஆயிற்றா...? என்று... அவர் எதுவும் இல்லை என்கிறார்... பிறகு சூழல் சாதரண நிலைக்கு திரும்பியிருக்க விசாரித்த அந்த பயணிக்கு கைகளில் சில சிராய்வுகள் ஏற்பட்டு இருப்பதை காண்கிறோமென்றால்... அவரை பார்த்து என்ன முதலில் அடிப்படவில்லையென்றீர்கள்... இப்போது உங்கள் கைகளில் சிராய்வுகள் இருக்கிறதே எனக்கேட்டால் அதற்கு பெயர் என்ன அறிவுடைமையா...? உடலுறுப்புக்கு இழப்பை ஏற்படுத்தும் அளவிற்கு ஏதனும் உங்களுக்கு நடந்ததா.. என்பதே முதலில் கேட்கப்பட்ட கேள்வியின் நோக்கம் என்பதை அறிவுடையோர்கள் உணர்வார்கள்... அப்படி கேட்கப்பட்ட சூழ் நிலை கேள்விதான்... நான் உங்களிடம் கேட்டது,,

    சரி யார் நிகழ்த்தியது,,,? கடவுள் தான்.. என்று கடவுளே சொன்னதாக நான் ஏற்கிறேன்.. நான் நம்பும் கடவுளின் வார்த்தைகள் சொறிந்த ஒரு புத்தகத்தில் அவரே கூறியதை நான் ஏற்கிறென்...

    இப்போது நீங்கள் சொல்லுங்கள் கடவுள் இதை நிகழ்த்தவில்லையென்றால் யார் / எது / எவை நிகழ்த்தியது...? கடவுளின் வார்த்தைகள் என நான் சொல்லும் புத்தகம் உரைப்பது பொய் என்றால் அக்மார்க் உண்மைகளை மட்டுமே ஏற்கும் நீங்கள் கொடுங்கள் எனக்கு அதிகாரப்பூர்வமான ஆதார சான்றுகளை?

    //4. கடவுள் என்றால் என்ன? (கவனிக்கவும் கடவுளின் தகுதிகள் அல்ல) //
    மனிதன் உட்பட எந்த உயிராலும்...
    எதை இயக்க முடியாதோ..
    சுயமாய் எதை படைக்க முடியாதோ
    எதை கட்டுக்குள் கொண்டு வர முடியதோ
    போதுமென்று நினைக்கிறேன்...

    அதை செய்வதாக ஒன்றை சுட்டினால் அதுவே கடவுள்!...
    நீங்கள் சொல்லுங்கள் எதை கடவுள் இல்லையென்கிறீர்கள்?

    ReplyDelete
  136. //5. பேரண்டம் உட்பட அனைத்தையும் படைப்பதற்கு முன் கடவுள் எங்கு இருந்தார்? //
    புத்திசாலித்தனமாக கேள்விகேட்பதாக நினைத்துக்கொண்டு அடிப்படை விசயத்தை விட்டு விட்டீர்களே சகோ... காலத்திற்கும் வெளிக்கும் அப்பாற்ப்பட்டவர் கடவுள் என்கிறேன்.. மீண்டும் மீண்டும் அவரை எங்காவது நிறுத்தியாக வேண்டும் என்ற உங்களின் சுய புரிதலை பிடிவாதம் என்று சொல்லாமல் வேறு என்னவென்பது,,,?

    இதற்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்ப்பார்த்தீர்கள்..? சரி... இதற்கு தெளிவாக பதில் சொல்லுங்கள்..
    எங்கு இருந்தால் அது கடவுள் அல்லது கடவுள் என்றால் எங்கு இருக்க வேண்டும்? நீங்களே சொல்லுங்கள்..

    //6. இந்த உலகில் சோதித்தறிய முடியும் படியான, மனிதர்கள் கோரிக்கையை இறைவன் நிறைவேற்றியதற்கான சான்று ஏதாவது கூற முடியுமா? //

    நிச்சயமா... நான் அதற்கென சுட்டிகளின் ஒரு பட்டியலேயே தந்தேனே சகோ... சவுதிகளில் அது ஆராயப்பட்டது என்ற ஒற்றை வரிகளில் அனைத்து சுட்டிகளுக்கும் முடிவு கட்டி விட்டீர்கள். கடல்களுக்கிடையே தடுப்பு இது ஒரு எளிய நிகழ்வுதாரணம்... இன்னும் ஒரு பட்டியலே என்னால் தர முடியும் இன்ஷா அல்லாஹ்... உங்களின் புரிதல் எப்படி தேனீயில் ரீங்காரமிடுகிறது என்பது எனக்கு தெளிவாக புரிகிறது. ஆக இனி அப்படியான சுட்டிகளுக்கும் அதை சார்ந்த பதிவுகளுக்கும் இங்கே அவசியமில்லையென நினைக்கிறேன்... முதன்மைகள் கேள்விகளில் தொடர்வோம்... உங்கள் சந்தர்ப்பவாத நிலைக்கு சிறிது இடைவெளி விடுங்கள் தேனீக்கள், குர்-ஆன் குறித்து அப்போது தொடர்வோம்.

    உலகில் சோதித்தறியா முடியா எவ்வளவோ நிலைகள் இருக்கின்றனவே... அவற்றீன் மூலம் என்ன சகோ?

    ReplyDelete
  137. //7. ஆத்திகர்கள் கடவுளை உறுதிப்படுத்துவதாக கூறிக் கொண்டு கேட்கும் எதிர்க் கேள்விகள் அனைத்தும் ஏன் நிகழ்கால அறிவியலைக் கடந்ததாக இருக்கிறது? //
    அப்படியானால் எதிர்க்கால அறிவியல் என்ற உறுதியான நிலைப்பாடு என்ற ஒன்று இல்லையென்று ஒப்புக்கொள்கிறீர்களா?
    என்ன சொல்ல வருகிறீகள் நீங்கள்..
    இது ஆறாவது கேள்வியாக உங்களுக்கு பயன்ப்பட்ட ஒரு வாக்கியம் அவ்வளவே...?
    இறந்த காலம் தொடங்கி,,, நிகழ்காலத்தில் நடந்து... எதிர்க்காலத்தில் நிறுத்தி இருக்கிறேன்... தயவு செய்து அனைத்தையும் என்னால் காப்பி & பேஸ்ட் பண்ண முடியாது சகோ.. தயவு செய்து மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள்,,,?

    //8. ஆன்மீகத்துக்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்பு சாராம்சத்தில் கடவுளைச் சொன்னவரின் சொல் உண்மையா பொய்யா என்பதே. இதை நீங்கள் எப்படி கருதுகிறீர்கள்?//

    ஒன்றை ஏற்பதற்கு அடிப்படை அதன் மீதான நம்பக தன்மை... இங்கே கடவுள் குறித்து சொன்னவர் நம்பக தன்மையின் குறைப்பாட்டை பட்டியலிடுங்கள். மற்றப்படி இந்த சமூகத்தில் ஒரு தவறான எதிர் வாத புரிதல் நாத்திக வாதிகளால் பரப்பப்படுகிறது.. அதாவது அறிவியலுக்கும் ஆன்மிகத்திற்கும் சிறிதும் தொடர்பில்லாதது போன்று... இங்கே கடவுள் அறிவியலை நமக்கு ஒரு கருவியாக கொடுத்து இருக்கிறார். இதில் அறிவியலின் எதிர்க்கோட்டில் கடவுளை நிறுத்துவது ஏன் என்று எனக்கு தெரியவில்லை...

    ReplyDelete
  138. இதுவே உங்கள் மீண்டும் மீண்டும் முளைக்கும் மீள் கேள்விகளுக்கு எனது பதில்கள்... இன்ஷா அல்லாஹ் மேலும் இந்த வட்டத்திலே சுற்றிக்கொண்டிருக்க நான் விரும்பவில்லை இன்ஷா அல்லாஹ் இந்த மாதத்திற்குள் முடிந்தால் உங்களின் முதல் கேள்வியை மையப்படுத்தி இன்னும் அதிக விபரத்தோடு ஆக்கமாக வரைய முயல்கிறேன்.

    நீங்கள் மீண்டும் ஒரு முறை எனது கேள்விகளுக்கு தெளிவாக பதில் தாருங்கள்.... எதையும் பரிசிலனையில் எடுத்துக்கொள்ள நான் தயார்... இன்ஷா அல்லாஹ். கடவுளின் இருப்பை இறப்பிற்கு பிறகு மறுப்பின்றி தெளிவாக உணர முடியும் என்ற ஒற்றை வரி பதிலே நம்பிக்கையில் கடவுளை ஏற்பவன் என்ற முறையில் நான் சொல்ல போதுமானது, ஆனால்

    கடவுள் இல்லையென்று நம்பினால், கடவுளின் இருப்பு சாத்தியமற்றது என்று அறியிட்டு உறுதியாக நீங்கள் கூறினால் கடவுள் ஏற்பு நிலைக்கு எதிரான தருணத்தில் இந்த உலகத்தில் விளையும் சமுக பொருளியல் நன்மைகளையும், உளவியல் ரீதியான தனிமனித , பொது நலன்களையும் பட்டியலிடுங்கள்.. நாம் தாரளமாய் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வோம்.. அஃதில்லாமல் இருப்பு நமக்கு உணர்த்தப்படவில்லை ஆக கடவுளை மறுக்கிறேன் என்றால் உங்களின் இந்த கேள்விகளின் தரம் தான் மீண்டுமொரு அலசி பரிசினைக்கு உட்படுத்த வேண்டும்...

    மீண்டுமொரு முறை எனது கேள்விகள் உங்கள் பார்வைக்கு,,,

    1. ஆதிமனிதன் கடவுளை வணங்கவில்லை... என்பதற்கு தொல்லியல் சான்றுகள் எங்கே?
    2. குகை ஓவியங்களை கடவுள் மறுப்பை உண்மைப்படுத்தும் ஆவணங்கள் என்னென்ன?
    3. கடவுள் என்றால் என்ன? அறிவியல் ரீதியான இலக்கணம்?
    4. ஒருவர் பிறக்கும் நேரம் - இறக்கும் நேரம் துல்லியமாக என்ன?
    5. மழை பொழிவை ஏன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை?
    6. பெருவெடிப்புக்கொள்கை ஏன் நிகழ வேண்டும்.?
    7. கோள்கள் எப்படி பால்வெளியில் இயங்குகிறது? யார் இயக்குவது?
    8. வீண்ணில் ஏற்படும் மோதல்களும், சீரற்ற விபத்துகளையும் நவீன அறிவியல் நிகழ்த்தியதா..? இல்லையென்றால் அறிவியலால் அதை ஏன் தடுக்க முடியவில்லை?
    9. அறிவியலில் தர்செயல் எப்படி சாத்தியம் ? அதற்கு நிருபணம்?
    10. எதிர்க்காலத்தை சார்ந்திருப்பது எப்படி உண்மை அறிவியலாகும்?

    இதற்கு விடை திருப்திகரமாக இருந்தால்... இன்ஷா அல்லாஹ் அடுத்த கட்டத்திற்கு பயணிக்கலாம் என்பது என் எண்ணம்...
    அதுவல்லாமல் கொசு வர்த்தி சுருள் கேள்விகள் தொடர்ந்தால்.... நானும் அதன் ஊடாகவே பயணிக்க வேண்டி வரும்.


    உங்கள் சகோதரன்
    குலாம்

    ReplyDelete
  139. 1
    தம்பி குலாம்,

    பதிலளிக்க முன்வந்தது குறித்து மகிழ்ச்சி. அந்த முன்வரலுக்கு முன்னாலான உங்களின் பிலாக்கணங்களுக்கு பின்னால் வருகிறேன். முதலில் உங்கள் முன்வரலையும், என் பதில்களையும் பார்த்து விடுவோம்.

    எந்த அடிப்படையில் உறுதியாக கடவுள் இருக்கிறார் என்று கூறுகிறீர்கள் என்பது முதல் கேள்வி. இதற்கு உங்களில் முன்வரல் கடவுள் குறித்து என்ன கோட்பாடு கூறப்பட்டதோ அதை அப்படியே ஏற்றால் தான் அது கடவுளை ஏற்றதாக ஆகும் என்பது. இதற்குப் பெயர் நம்பிக்கையா? உறுதியான இருப்பா? தம்பி குலாம் முதலில் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆத்திகர்கள் எப்படி கடவுளை ஏற்றால் அது கடவுட் கோட்பாட்டுக்கு உகந்ததாக இருக்கும் என்பது குறித்து நாத்திகனான நான் சிந்திக்க முடியாது. எவ்வித இலக்கணத்தில் கடவுளை ஏற்க வேண்டும் என்பதை நீங்கள் கவலைப்பட்டுக் கொள்ளுங்கள். இங்கு கேள்வி அதுவல்ல என்பதில் கவனம் கொள்ளுங்கள் தம்பி. கடவுட் கோட்பாட்டு இலக்கணத்தின்படி நீங்கள் ஏற்றாலும் அல்லது வழுவமைதி கொண்டு ஏற்றாலும், உங்கள் ஏற்பின் அடிப்படை நம்பிக்கையா? உறுதியா? என்பது தான் கேள்வி. உங்கள் முன்வரல் கடவுள் இருக்கிறார் என்பது நம்பிக்கை என பொருள்படுகிறது. ஆனால் நீங்களோ உறுதியான இருப்பு என கூறிக் கொண்டிருக்கிறீர்கள் இரண்டில் எது சரி?. தம்பி, நீங்கள் கூறுவது எப்படி இருக்கிறது என்றால், கடவுள் உறுதியாக இருக்கிறார் என்று நான் நம்புகிறேன் அதனால் கடவுள் உறுதியாக இருக்கிறார், என்பது போல் இருக்கிறது. ஆக இந்த இடத்தில் இந்த விவாதத்திற்கான மையப் புள்ளி அருகி விட்டது. ஏனென்றால் உங்கள் நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நீங்கள் உறுதியாகக் கூறுகிறார்கள். சரிதானா? தம்பி. இதை நீங்கள் மறுக்காத பட்சத்தில் இந்த விவாதத்தை முடித்துக் கொண்டு நீங்கள் விரும்பினால் நீங்கள் விரும்பும் அடுத்த தலைப்பைக் கூறலாம்.

    கடவுளால் மட்டுமே சாத்தியம் என எந்த ஒன்றையும் நீங்கள் முன்வைக்கவில்லை என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன் தம்பி. அப்படி நீங்கள் நம்பும் சிலவற்றை குறிப்பிட்டீர்கள். அதில் முதன்மையானது பெருவெடிப்பு ஏன்? என்பது. இது கடவுளால் மட்டும் தான் முடியும் என்பதற்கு எந்தச் சான்றையும் நீங்கள் வைக்கவில்லை. மாறாக பெருவெடிப்பு மெய்யாக நடந்தது என இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அது ஓர் அறிவியல் யூகம் என்பதே உண்மை. அல்லது கடவுள் பெருவெடிப்பை மெய்யாகவே நடத்தியிருக்கிறார் என்பதை உங்கள் கடவுளிடம் கேட்டு(!) சொல்லுங்கள், பின்னர் பார்க்கலாம். (ஐயையோ கலாம் என்று வந்துவிட்டதே) உள்ளபடியே கடவுளால் மட்டுமே சாத்தியம் என இப்பேரண்டத்தில் ஏதாவது இருந்தால், அவற்றை சான்றுகளோடு முன்வைக்கவும். கவனிக்கவும், கடவுளல்லாது வேறு யார் படைத்திருக்க முடியும் எனும் உங்கள் நம்பிக்கை சார்ந்த எதிர்நிலைக் கேள்விகளால் அல்ல. சான்றுகளால் கூறுங்கள் நான் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறேன். இன்னும் உங்கள் நம்பிக்கை சார்ந்து

    ReplyDelete
  140. 1
    தம்பி குலாம்,

    பதிலளிக்க முன்வந்தது குறித்து மகிழ்ச்சி. அந்த முன்வரலுக்கு முன்னாலான உங்களின் பிலாக்கணங்களுக்கு பின்னால் வருகிறேன். முதலில் உங்கள் முன்வரலையும், என் பதில்களையும் பார்த்து விடுவோம்.

    எந்த அடிப்படையில் உறுதியாக கடவுள் இருக்கிறார் என்று கூறுகிறீர்கள் என்பது முதல் கேள்வி. இதற்கு உங்களில் முன்வரல் கடவுள் குறித்து என்ன கோட்பாடு கூறப்பட்டதோ அதை அப்படியே ஏற்றால் தான் அது கடவுளை ஏற்றதாக ஆகும் என்பது. இதற்குப் பெயர் நம்பிக்கையா? உறுதியான இருப்பா? தம்பி குலாம் முதலில் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆத்திகர்கள் எப்படி கடவுளை ஏற்றால் அது கடவுட் கோட்பாட்டுக்கு உகந்ததாக இருக்கும் என்பது குறித்து நாத்திகனான நான் சிந்திக்க முடியாது. எவ்வித இலக்கணத்தில் கடவுளை ஏற்க வேண்டும் என்பதை நீங்கள் கவலைப்பட்டுக் கொள்ளுங்கள். இங்கு கேள்வி அதுவல்ல என்பதில் கவனம் கொள்ளுங்கள் தம்பி. கடவுட் கோட்பாட்டு இலக்கணத்தின்படி நீங்கள் ஏற்றாலும் அல்லது வழுவமைதி கொண்டு ஏற்றாலும், உங்கள் ஏற்பின் அடிப்படை நம்பிக்கையா? உறுதியா? என்பது தான் கேள்வி. உங்கள் முன்வரல் கடவுள் இருக்கிறார் என்பது நம்பிக்கை என பொருள்படுகிறது. ஆனால் நீங்களோ உறுதியான இருப்பு என கூறிக் கொண்டிருக்கிறீர்கள் இரண்டில் எது சரி?. தம்பி, நீங்கள் கூறுவது எப்படி இருக்கிறது என்றால், கடவுள் உறுதியாக இருக்கிறார் என்று நான் நம்புகிறேன் அதனால் கடவுள் உறுதியாக இருக்கிறார், என்பது போல் இருக்கிறது. ஆக இந்த இடத்தில் இந்த விவாதத்திற்கான மையப் புள்ளி அருகி விட்டது. ஏனென்றால் உங்கள் நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நீங்கள் உறுதியாகக் கூறுகிறார்கள். சரிதானா? தம்பி. இதை நீங்கள் மறுக்காத பட்சத்தில் இந்த விவாதத்தை முடித்துக் கொண்டு நீங்கள் விரும்பினால் நீங்கள் விரும்பும் அடுத்த தலைப்பைக் கூறலாம்.

    கடவுளால் மட்டுமே சாத்தியம் என எந்த ஒன்றையும் நீங்கள் முன்வைக்கவில்லை என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன் தம்பி. அப்படி நீங்கள் நம்பும் சிலவற்றை குறிப்பிட்டீர்கள். அதில் முதன்மையானது பெருவெடிப்பு ஏன்? என்பது. இது கடவுளால் மட்டும் தான் முடியும் என்பதற்கு எந்தச் சான்றையும் நீங்கள் வைக்கவில்லை. மாறாக பெருவெடிப்பு மெய்யாக நடந்தது என இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அது ஓர் அறிவியல் யூகம் என்பதே உண்மை. அல்லது கடவுள் பெருவெடிப்பை மெய்யாகவே நடத்தியிருக்கிறார் என்பதை உங்கள் கடவுளிடம் கேட்டு(!) சொல்லுங்கள், பின்னர் பார்க்கலாம். (ஐயையோ கலாம் என்று வந்துவிட்டதே) உள்ளபடியே கடவுளால் மட்டுமே சாத்தியம் என இப்பேரண்டத்தில் ஏதாவது இருந்தால், அவற்றை சான்றுகளோடு முன்வைக்கவும். கவனிக்கவும், கடவுளல்லாது வேறு யார் படைத்திருக்க முடியும் எனும் உங்கள் நம்பிக்கை சார்ந்த எதிர்நிலைக் கேள்விகளால் அல்ல. சான்றுகளால் கூறுங்கள் நான் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறேன். இன்னும் உங்கள் நம்பிக்கை சார்ந்து

    ReplyDelete
  141. 1
    தம்பி குலாம்,

    பதிலளிக்க முன்வந்தது குறித்து மகிழ்ச்சி. அந்த முன்வரலுக்கு முன்னாலான உங்களின் பிலாக்கணங்களுக்கு பின்னால் வருகிறேன். முதலில் உங்கள் முன்வரலையும், என் பதில்களையும் பார்த்து விடுவோம்.

    எந்த அடிப்படையில் உறுதியாக கடவுள் இருக்கிறார் என்று கூறுகிறீர்கள் என்பது முதல் கேள்வி. இதற்கு உங்களில் முன்வரல் கடவுள் குறித்து என்ன கோட்பாடு கூறப்பட்டதோ அதை அப்படியே ஏற்றால் தான் அது கடவுளை ஏற்றதாக ஆகும் என்பது. இதற்குப் பெயர் நம்பிக்கையா? உறுதியான இருப்பா? தம்பி குலாம் முதலில் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆத்திகர்கள் எப்படி கடவுளை ஏற்றால் அது கடவுட் கோட்பாட்டுக்கு உகந்ததாக இருக்கும் என்பது குறித்து நாத்திகனான நான் சிந்திக்க முடியாது. எவ்வித இலக்கணத்தில் கடவுளை ஏற்க வேண்டும் என்பதை நீங்கள் கவலைப்பட்டுக் கொள்ளுங்கள். இங்கு கேள்வி அதுவல்ல என்பதில் கவனம் கொள்ளுங்கள் தம்பி. கடவுட் கோட்பாட்டு இலக்கணத்தின்படி நீங்கள் ஏற்றாலும் அல்லது வழுவமைதி கொண்டு ஏற்றாலும், உங்கள் ஏற்பின் அடிப்படை நம்பிக்கையா? உறுதியா? என்பது தான் கேள்வி. உங்கள் முன்வரல் கடவுள் இருக்கிறார் என்பது நம்பிக்கை என பொருள்படுகிறது. ஆனால் நீங்களோ உறுதியான இருப்பு என கூறிக் கொண்டிருக்கிறீர்கள் இரண்டில் எது சரி?. தம்பி, நீங்கள் கூறுவது எப்படி இருக்கிறது என்றால், கடவுள் உறுதியாக இருக்கிறார் என்று நான் நம்புகிறேன் அதனால் கடவுள் உறுதியாக இருக்கிறார், என்பது போல் இருக்கிறது. ஆக இந்த இடத்தில் இந்த விவாதத்திற்கான மையப் புள்ளி அருகி விட்டது. ஏனென்றால் உங்கள் நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நீங்கள் உறுதியாகக் கூறுகிறார்கள். சரிதானா? தம்பி. இதை நீங்கள் மறுக்காத பட்சத்தில் இந்த விவாதத்தை முடித்துக் கொண்டு நீங்கள் விரும்பினால் நீங்கள் விரும்பும் அடுத்த தலைப்பைக் கூறலாம்.

    கடவுளால் மட்டுமே சாத்தியம் என எந்த ஒன்றையும் நீங்கள் முன்வைக்கவில்லை என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன் தம்பி. அப்படி நீங்கள் நம்பும் சிலவற்றை குறிப்பிட்டீர்கள். அதில் முதன்மையானது பெருவெடிப்பு ஏன்? என்பது. இது கடவுளால் மட்டும் தான் முடியும் என்பதற்கு எந்தச் சான்றையும் நீங்கள் வைக்கவில்லை. மாறாக பெருவெடிப்பு மெய்யாக நடந்தது என இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அது ஓர் அறிவியல் யூகம் என்பதே உண்மை. அல்லது கடவுள் பெருவெடிப்பை மெய்யாகவே நடத்தியிருக்கிறார் என்பதை உங்கள் கடவுளிடம் கேட்டு(!) சொல்லுங்கள், பின்னர் பார்க்கலாம். (ஐயையோ கலாம் என்று வந்துவிட்டதே) உள்ளபடியே கடவுளால் மட்டுமே சாத்தியம் என இப்பேரண்டத்தில் ஏதாவது இருந்தால், அவற்றை சான்றுகளோடு முன்வைக்கவும். கவனிக்கவும், கடவுளல்லாது வேறு யார் படைத்திருக்க முடியும் எனும் உங்கள் நம்பிக்கை சார்ந்த எதிர்நிலைக் கேள்விகளால் அல்ல. சான்றுகளால் கூறுங்கள் நான் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறேன். இன்னும் உங்கள் நம்பிக்கை சார்ந்து

    ReplyDelete
  142. 2
    கடவுளால் முடிந்தவை என நீங்கள் கூறிய அனைத்தையும் நான் தகுந்த விளக்கங்களுடன் எதிர் கொண்டிருக்கிறேன்.

    இந்தத் தலைப்பில் எனக்கு இரண்டு கேள்விகளையும் வைத்திருக்கிறீர்கள். 1. தம்பி குலாம் நன்றாக நீங்கள் கவனிக்க வேண்டும். கடவுள் தான் அனைத்தையும் படைத்தார் என்று நீங்கள் தான் கூறிக் கொண்டிருக்கிறீர்கள். அதற்கு எதிர் நிலையில் மனிதன் தான் படைத்தான் என்றோ, அறிவியலே காரணம் என்றோ நான் கூறவில்லை. 2. தம்பி, இந்தக் கேள்வியில் நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்? இதைத்தானே முன்னர் வேறு வார்த்தைகளில் கேட்டீர்கள் நானும் பதில் கூறியிருக்கிறேன். தம்பி வேறு எங்கும் சுற்றித்திரிய வேண்டிய அவசியமில்லை. எந்த இடத்தில் தொலைத்தோமோ அந்த இடத்தில் தான் தேட வேண்டும். தொலைத்த இடம் இருட்டாக இருக்கிறது என்பதால் வெளிச்சமாக இருக்கும் இன்னொரு இடத்திலா தேட முடியும்? அதேநேரம் மாற்றுக் கேள்விகள் கேட்கவே இல்லை என்று கூறாதீர்கள் தம்பி. கடவுள் குறித்த ஐயத்தில் கடவுளை விலக்கி வைத்து விட்டு கேள்விகள் கேட்க முடியுமா? எனவே மாற்றுக் கேள்விகளும் கடவுளைச் சுற்றித்தான் இருக்கும். மலக்குகள், அர்ஷ் போன்றைவையெல்லாம் அவ்வாறான மாற்றுக் கேள்விகள் தாம். இவைகளுக்கு உங்கள் பதிலை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள் தம்பி. அவைகளையும் அப்படியே நம்ப வேண்டும் என்பது தான். ஆக கடவுள் மீதும் கடவுள் சார்ந்த எதன் மீதும் கேள்வி எழுப்பினால் உங்கள் பதில் நம்பு என்பதாகத்தான் இருக்கும். இன்னும் வெளியே சென்றால் அறிவியல் கேள்விகளைத்தான் கேட்க வேண்டும். அதற்கு உங்கள் பதில் என்ன தம்பி? கடவுளை அறிவியலால் அளக்க முடியாது. ஆக இப்படி எல்லா இடத்திலும் முன்முடிவுகளை ஆயுதமாக தூக்கிக் கொண்டு நிற்கும் நீங்கள் வேறு கேள்விகள் கேட்டீர்களா என்று என்னைக் கேட்பது உங்களுக்கே அசூயையாக தெரியவில்லையா தம்பி?

    இரண்டாவது கேள்வி, அறிவியல் குறைபாடுடையது எதையும் முடிவு செய்யத் தகுதியில்லாதது என நீங்கள் கருத்துக் கொண்டிருந்ததால் எழுந்தது தம்பி. எதையும் முடிவு செய்யத் தகுதியில்லாததாக நீங்கள் கூறும் அறிவியலைக் கொண்டுதான் உங்கள் வாழ்வின் அத்தனை முடிவுகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதால் எழுந்தது தம்பி. இதை நான் விவாதப் போக்கை திசை மாற்றுவதற்காக பயன்படுத்தியதாக கூறியிருக்கிறீர்களே. இது நீங்கள் அறிந்து கொண்டே கூறியிருக்கும் பொய் தம்பி. அறிவியலை பலநிலைகளில் விவாதித்து தொடர்ந்து நீங்கள் அறிவியலை உங்களின் வசதிக்கேற்ப வளைத்துத் திரித்ததால் இனிமேல் உங்கள் திரித்தல்களுக்கு பதில் கூற மாட்டேன் என்று கூறும் அளவுக்குச் சென்றீர்கள் நீங்கள். ஆனால் இப்போது ஏதோ அறிவியல் குறித்து இந்தக் கேள்வியை மட்டுமே எடுத்துக் கொண்டு திசை மாற்றுவது போல் போக்குக் காட்டுகிறீர்கள். தம்பி! ஏற்பு நிலை மறுப்பு நிலை எதிர்க்கேள்வி வந்தால் மட்டும் என்பதெல்லாம் சாரமில்லாதவைகள் தம்பி. எல்லா மனிதர்களும் எல்லா நிலையிலும் அறிவியலைக் கொண்டே முடிவு செய்கிறார்கள். செய்த முடிவை ஏற்கிறார்களா? மீறுகிறார்களா? என்ன காரணத்திற்காக மீறுகிறார்கள் என்பதைக் கொண்டே அறிவியலை எப்படி அவர்

    ReplyDelete
  143. 3
    பயன்படுத்துகிறார் என்பதை முடிவு செய்ய முடியும். ஆனால் ஒருபோதும் அறிவியலை விலக்கிவிட முடியாது. இந்த இடத்தில் தான் என்னுடைய கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது தம்பி. எல்லா நிலைகளிலும் அறிவியலைப் பயன்படுத்தும் நீங்கள் கடவுள் விசயத்தில் மட்டும் அறிவியலை குறைபாடுடையது என்கிறீர்கள் தம்பி. அதனால் தான், உங்களின் இந்த முரண்பாட்டை உங்களுக்கு புரிய வைப்பதற்காகத்தான் அந்தக் கேள்வி கேட்கப்பட்டது. ஆக சுற்றி வளைத்து நீங்கள் அறிவியலைக் கொண்டே அனைத்து முடிவுகளையும் எடுக்கிறீர்கள் என்பதும், அறிவியலை விலக்கி உங்கள் வாழ்வில் ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்பதும் தெளிவாகி விட்டது. அதாவது உங்கள் முரண்பாட்டை ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள். இனி தான் என்னுடைய கேள்வியின் முக்கியத்துவம் வருகிறது. எல்லாவற்றிலும் அறிவியலைப் பயன்படுத்தும் நீங்கள் கடவுளிடம் மட்டும் அறிவியலைக் கழற்றி வைத்துவிடுவது ஏன்? இதற்கும் நீங்கள் நேர்மையாக பதில் தேடினீர்கள் என்றால் கடவுள் என்பது வெற்று நம்பிக்கை தான் என்பதை நீங்கள் ஏற்க முடியும் தம்பி. ஆக இந்தக் கேள்வியிலும் நீங்கள் மறுக்கவில்லை என்றால் விவாதம் முடிவுக்கு வந்து விட்டதாகவே பொருள். (முழுமைப்படுத்துதல், உண்மைப்படுத்துதல் பேதம் குறித்து இந்தக் கேள்வி கேட்கப்படவில்லை)

    இதிலும் ஒரு எதிர்க் கேள்வி வைத்திருக்கிறீர்களே தம்பி. அதைப் பார்ப்போம். உற்றார் உறவினர் மீது வைக்கும் நட்பும் பாசமும் அறிவியல் அடிப்படையிலானதா? அறிவியல் முறையில் தான் முடிவெடுத்தோமா? ஐயத்திற்கு இடமே இல்லாமல் ஆம் என்பதே பதில். புதிதாக உங்களுக்கு ஒருவர் அறிமுகமானால் அந்தக் கணத்திலிருந்து ஏற்கனவே இருக்கும் நண்பர்களின் மதிப்புக்கு புதியவரை நண்பராக கொள்வீர்களா? பரிசீலனை செய்வீர்கள் அல்லவா? எந்த அடிப்படையில் பரிசீலனை செய்வீர்கள்? உங்களுடைய குணநலன், அவருடைய குணநலன், நட்பு கொள்வதால் ஏற்படும் சாதக பாதகங்கள், விளைவுகள் உள்ளிட்ட அனைத்தும் ஒரே அலைவரிசையில் இருந்தால் தானே நட்பாவீர்கள் இருவரும். இதில் இருப்பது அறிவியல் இல்லையா? மனிதன் ஒரு சமூக விலங்கு. வாழ்வில் அவன் பலவாறான மனிதனை தொடர்பு கொள்ள வேண்டியதிருக்கிறது. அவ்வாறான தொடர்பில் வாழ்வின் தகவமைதலுக்கு உகந்தவர்கள் மட்டுமே நண்பர்களாகவும் உறவினர்களாகவும் ஆகிறார்கள். உங்கள் உற்ற நண்பரின் மதிப்பை ஒருபோதும் நீங்கள் உங்கள் பகைவனுக்கு தரமாட்டீர்கள் அல்லவா? உறவினர்களை எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொரு உறவினர்களிடமும் ஒரு சமூக எல்லை இருக்கிறது. பயன் மதிப்பு இருக்கிறது. உறவு என்பது தனிச் சொத்துடமையை பாதுகாக்க தோன்றிய வேலிகள். விவசாயத்தையும், உடலுழைப்பையும் மட்டுமே முதன்மையாகக் கொண்டு உலகம் இயங்கிக் கொண்டிருந்த போது இருந்த உறவுகளின் மீதான பிடிப்புக்கும், இப்போது மூளையுழைப்பு முன்வந்து விட்ட இப்போதைய உலகம் கொண்டிருக்கும் உறவுகள் மீதான பிடிப்புக்கும் இடையில் ஏன் வித்தியாசம் இருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள். அதில் இருக்கும் அறிவியல் புரியும் உங்களுக்கு. அவ்வளவு ஏன் தம்பி? உங்களுக்கு நான்கு அண்ணன்கள் இருப்பதாகக் கொள்வோம். அந்த நான்கு அண்ணன்கள் மீதும் நீங்கள் ஒரே மதிப்பு கொண்டிருந்தாலும், ஏற்றத்தாழ்வான அளவில் மதிப்பு கொண்டிருந்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும் அல்லவா? அந்தக் காரணத்தை அலசிப் பாருங்களேன் அறிவியல் இருக்கிறதா என்பது

    ReplyDelete
  144. 4
    விளங்கும். அத்தை, அண்ணன், பெற்றோர் மற்றோர் என எத்தனையோ உறவுகள். அத்தனையும் சமூகம் தொடர்ச்சியாக கொண்டிருக்கும் அனுபவங்களின் விளைவாலான சமூகக் கட்டுகள். ஆனால் ஒவ்வொரு தனி மனிதனைப் பொருத்தவரையிலும் இந்த சமூகக் கட்டுகளின் மதிப்பு ஒரே மாதிரி இருப்பதில்லை. இதற்கான காரணம் என்ன? அறிவியல் ரீதியில் இந்த மாமாவுடன் எந்த அளவுக்கு நெருங்க வேண்டும்? இந்தச் சித்தியிடம் இதற்கு அதிகமாக நெருங்கினால் ஆபத்து என்றொரு தீர்மானம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறதால்லவா? அந்தந்த தீர்மானங்களை அவர்கள் எந்த வழியில் அடைந்தார்கள்? அறிவியல் இல்லாமல் எந்த தேடலும் முழுமையடைவதில்லை தம்பி. அல்லது பாசத்தில் அறிவியல் என்றதும் சோதனைச் சாலையில் இருவழிக் குடுவையில் மாமா மீதான பாசம் இரண்டு சொட்டு அடர் கந்தக அமிலம் இரண்டு சொட்டு விட்டு கலக்கிப் பார்த்து வீழ்படிவை சோதனை செய்வது என்று நினைத்தீர்களா? உறவுகளுக்கே அறிவியல் தேடல் தேவைப்படும் போது எல்லாவற்றையும் தீர்மானிப்பதாய் கருதப்படும் கடவுளுக்கு அறிவியலை கழற்றிப் போடுவது எப்படி சரியாகும் தம்பி?

    மூன்றாவது கேள்வி அண்ட வெளியில் நிகழும் மோதல்கள் குறித்து. இந்தக் கேள்வியில் இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. ஒன்று மோதல்கள் குறித்த முரண்பாடு, இரண்டு கடவுள் நிகழ்த்தினார் என்பதற்கான நிரூபணம். இதில் முரண்பாடு குறித்து ஒரு உதாரணம் தந்திருக்கிறீர்கள் பாருங்கள் தம்பி. புளகமடைந்து விட்டேன். ஆனால் உதாரணங்கள் உண்மைகள் ஆகிவிடுவதில்லை. முதலில் உங்களின் கேள்வி, கேள்வியில் தொக்கி நின்ற நோக்கம் என்ன? ஆயிரம் கேமராக்கள் கண்காணிப்பு கருவிகள் இருந்தும் பூமியில் விபத்துகளை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் வெளியில் பல்லாயிரக்கணக்கான கோள்கள் மிகச் சரியாக சுற்றி வருகிறதே எது அப்படி சாத்தியமாக்கியது? தம்பி! இந்தக் கேள்வியில் எது சிராய்ப்பு மோதல் எது உறுப்புகளை இழக்கும் மோதல் என்று பேதம் இருக்க வழியுண்டா? நீங்கள் கூறியிருப்பது மோதல்களை அல்ல, இறைவனின் வல்லமையை மிகச் சரியாக சுற்றி வருகிறது என்று சான்றிதழ் அளித்திருக்கிறீர்கள். மிகச்சரியாக தத்தமது நீள்வட்டப் பாதைகளில் சுற்றிவந்தால் மோதல்களே இல்லை. ஏனென்றால் மீப்பெரும் ஆற்றல் ஒன்று அதை நிர்வகிக்கிறது. இது தான் நீங்கள் சொல்ல வந்தது இல்லையா தம்பி. இதற்கு நான் என்னென்ன ஒழுங்கீனங்கள் நிகழ்ந்துள்ளன என்று சிலவற்றை நவம்பர் 19ம் தேதிய பின்னூட்டத்தில் பட்டியலிட்டேன். இதன் பிறகு நீங்கள் இப்போது கூறிய சிராய்பு உறுப்பு இழப்பு உதரணத்தைக் கூறி எது சிராய்ப்பு எது உறுப்பிழப்பு என விளக்கியிருந்தால் அது பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால் நவம்பர் 20ல் நீங்கள் கூறியதென்ன? மோதல்கள் நடந்ததாகவே இருக்கட்டும் நடத்தியது யார் கடவுளா மனிதனா என்று புதுக் கேள்வியை நுழைத்தீர்கள். இதற்கு நவம்பர் 24லேயே உங்களின் முரண்பாட்டை சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பிவிட்டேன். ஆனால் நீங்களோ நீள் துயிலுக்கு போய்விட்டீர்கள் தம்பி. விடாமல் மீண்டும் மீண்டும் கேள்விகளை திரும்பத் திரும்ப எழுப்பிய பிறகு இப்போது ஜனவரி 10ல் வேறு வழியில்லாமல் சிராய்ப்பு உதாரணத்தை தூக்கிக் கொண்டு ஓடி வந்திருக்கிறீர்கள். இது அப்பட்டமான சந்தர்ப்பவாத சமாளித்தலாக தெரியவில்லையா தம்பி.

    ReplyDelete
  145. 5
    இரண்டாவது அம்சம் யார் நிகழ்த்தியது? நீங்கள் நம்பும் கடவுள் புத்தகத்தில் அவரே கூறியதால் நீங்கள் ஏற்கிறீர்கள். சபாஷ் தம்பி! சபாஷ். அப்படியானால் அதற்கு பெயர் என்ன நம்பிக்கையா> உறுதியா? எனவே இந்தக் கேள்வியிலும் கடவுள் வெற்று நம்பிக்கையே என்பது உறுதியாகிறது.. தம்பி, இதையும் உங்களால் மறுக்க முடியாவிட்டால் விவாதம் முடிவுக்கு வந்து விட்டதாகவே பொருள்.

    இதில் எனக்கான எதிர்க் கேள்வியின் பதில் ஒற்றை வரிதான், யாராலும் எதுவாலும் முன் திட்டமிடப்படாத தற்செயல் நிகழ்ச்சி. அறிவியலில் தற்செயல் உண்டா இல்லையா என்பதை எளிமையான எடுத்துக்காட்டுகளுடன் நவம்பர் 24ம் தேதி ஐந்தாவது பின்னூட்டத்திலும், டிசம்பர் 13ம் தேதி இரண்டாவது பின்னூட்டத்திலும் தெளிவாக விளக்கியிருக்கிறேன்.

    நான்காவது கேள்வி கடவுள் என்றால் என்ன? இன்னும் இந்தக் கேள்வியில் நீங்கள் பிறழ்ந்து விடக்கூடாது என்பதற்காகவே அடைப்புக்குறியில் கடவுளின் தகுதிகள் அல்ல எனக் குறிப்பிட்டிருந்தேன். உங்கள் முன்வரலோ எந்த உயிராலும் இயக்க முடியாமல் இருப்பது எதுவோ, படைக்க முடியாமல் இருப்பது எதுவோ, கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் இருப்பது எதுவோ அது கடவுள் என்கிறீர்கள். தம்பி இவைகள் கடவுள் என்றால் என்ன என விளக்குவதா? கடவுளின் தகுதிகளைக் கூறுவதா? இவைகள் கடவுள் என்றால் அது இப்படி இருந்தாக வேண்டும் என நீங்கள் கற்பித்து வைத்திருக்கும் தகுதிகள். கடவுள் என்றால் என்ன என்று உங்களுக்கும் தெரியாது என்பதே உண்மை. எல்லா ஆத்திகர்களும் கூறிக் கொண்டிருப்பது கடவுளின் தகுதிகளைத் தவிர வேறில்லை. கடவுள் எப்படி இருந்தாக வேண்டும் என மனிதன் எண்ணுகிறானோ அதுவே கடவுளின் தகுதியாக இருக்கிறது. ஆனால் கடவுள் என்றால் என்ன என்றால் யாருக்கும் தெரியாது. தகுதிகளாக மனிதன் கூறுபவற்றால் மட்டுமே அடையாளப் படுத்தப்பட்டிருக்கும் ஒன்று எப்படி நிலையானதாக இருக்க முடியும்? அல்லது கடவுள் என்றால் என்னவென்றே தெரியாமல் அது இருக்கிறது என்று எப்படி கூற முடியும்? ஆக எல்லாவற்றையும் மிகைத்ததாக கூறப்படும் ஆற்றல் குறித்து மனிதன் என்ன கூறியிருக்கிறானோ அது மட்டுமே இருக்கிறது. என்றால் இதில் நம்பிக்கையை தவிர்த்து வேறு ஏதாவது இருக்க முடியுமா?

    இதில் உங்கள் எதிர்க் கேள்வி எதை கடவுள் இல்லை என்கிறீர்கள்? என்பது. இங்கு கடவுள் இல்லை என்றோ அங்கு கடவுள் இல்லை என்றோ; இது கடவுள் இல்லை என்றோ, அது கடவுள் இல்லை என்றோ நாங்கள் கூறிக் கொண்டிருப்பதில்லை. கடவுள் என்பது கற்பனை என்கிறோம். இது இல்லை அது இல்லை என்று கூறினால் ஏதோ எங்கோ இருக்கிறது எனும் பொருள் வருகிறது. நாங்கள் அப்படி கூறுவதில்லை. அதாவது என்னென்ன தகுதிகளெல்லாம் கடவுளுக்கு கற்பனையாக கொடுத்துவைக்கப்பட்டிருக்கிறதோ அந்த தகுதிகளுடன் உள்ளடக்கிய கடவுளை நாங்கள் இருக்கச் சாத்தியமற்றது, கற்பனை என்கிறோம்.

    ReplyDelete
  146. 6
    ஐந்தாவது கேள்வி படைப்புக்கும் படைப்பதற்குமான இடைவெளியில் கடவுள் எங்கு இருந்திருக்க முடியும் என்பது. இது பிடிவாதம் அல்ல. உங்களுடைய நம்பிக்கையை அப்படியே நானும் ஏற்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களே தம்பி அது தான் பிடிவாதம். காலத்துக்கும் வெளிக்கும் அப்பாற்பட்டவர்தான் கடவுள் என்பது உங்கள் நம்பிக்கையா? உறுதியா? அவருடைய செயல்பாடுகளெல்லாம் அண்டத்திற்கு உள்ளேயே இருக்கிறது. வெளியில் இல்லை. எனவே உங்கள் நம்பிக்கையை என் மீது திணிக்காமல் என்னுடைய கேள்வியிலிருக்கும் முரண்பாட்டை புரிந்து கொண்டு அதற்கு பதிலளிக்க முன்வருமாறு கோருகிறேன். அதாவது, இது இடம் சார்ந்த கேள்வி அல்ல. கடவுள் எங்கிருந்தார் என்றால், நம்பர் 35 கடவுள் வீதி, டிரையோஃபிக்ஸ், ஆண்ட்ரோமீடா என்று முகவரி கேட்கவில்லை. அவரைத் தவிர ஏனைய அனைத்தும் படைப்பு என்பது அவரது ஆற்றலில் உள்ள முரண்பாடு. இந்த முரண்பாட்டை வெளிக் கொணரவே படைப்புக்கும் படைப்பதற்குமான இடைவெளியில் எங்கிருந்தார் என்று கேட்கிறேனேயன்றி முகவரி கேட்டு குசலம் விசாரித்து வருவதற்காக அல்ல. கடவுள் எங்கு வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அவரைத் தவிர ஏனைய அனைத்தும் அவரது படைப்பு என்பது சாத்தியப்படாத, ஒத்துவராத, இருக்கமுடியாத வரட்டுக் கற்பனை என்பதைத்தான் அந்தக் கேள்வி குறிக்கிறது. ஏற்கனவே இதை விளக்கியிருக்கிறேன். விளங்கவில்லை என்றால் மீண்டும் கேளுங்கள் தவறில்லை. விளங்கிக் கொண்டே திசைதிருப்ப வேண்டும் என்பதற்காக ஏதேதோ எழுதாதீர்கள் தம்பி!

    இதற்கு உங்களின் எதிர்க்கேள்வி .. .. ? என்னிடம் கேட்கப்படும் எதிர்க்கேள்வி என்றால் உங்கள் கேள்வி கடவுள் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இருக்க வேண்டும். எதை கடவுள் இல்லை என்கிறீர்கள்? கடவுள் எங்கு இருக்க வேண்டும் என கருதுகிறீர்கள்? கடவுள் இல்லை என்று கூறிக் கொண்டிருக்கும் என்னிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகளா இவை? புரிந்து கொண்டு கேள்விகளை எழுப்புங்கள் தம்பி! கேட்க வேண்டும் என்பதற்காக கேட்காதீர்கள்.

    ஆறாவது கேள்வி, இந்த உலகில் சோதித்தறிய முடியும் படியான, மனிதர்கள் கோரிக்கையை இறைவன் நிறைவேற்றியதற்கான சான்று என்பது. இதற்கு பதிலெழுத முன்வருவதற்கு முன்பு என்ன கேட்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்திருந்தீர்களா தம்பி? ஏன் கேட்கிறேன் என்றால், இதை ஏற்கனவே ஒருமுறை உங்களுக்கு விளக்கியிருக்கிறேன். டிசம்பர் ஒன்றாம் தேதிய பின்னூட்டத்தைப் பாருங்கள். மீண்டும் சொல்கிறேன் மனிதர்கள் கோரிக்கையை இறைவன் நிறைவேற்றியதற்கான சோதறிய முடியும்படியான சான்று. அதாவது இறைவன் நிறைவேற்றியதாக இருக்க வேண்டும், அது மனிதர்கள் கேட்டு இறைவன் நிறைவேற்றியதாக இருக்க வேண்டும், அதுவும் சோதித்தறியும் படியாகவும் இருக்க வேண்டும். புரிகிறதா தம்பி. இனிமேலாவது பதில் தர முயலுங்கள். புரியாதது போலவே நடிக்காதீர்கள்.

    ReplyDelete
  147. 7
    இதில் உங்கள் எதிர்க் கேள்வி, இந்த உலகில் சோதித்தறிய முடியா நிலைகள் இருக்கின்றனவா? அப்படி எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை தம்பி. நீங்கள் எடுத்துக் காட்டினால் பரிசீலிக்கலாம். ஆனால் சோதித்து முடிவு இன்னும் காணாத நிலைகள் இருக்கக் கூடும். அவற்றின் மூலம் .. ..? முடிவு கண்டறியப்பட்டால் இந்த மூலத்திலிருந்து வந்தது எனக் கூற முடியும். கண்டறியப்படாவிட்டால் எந்த மூலத்திலிருந்து வந்தது எனத் தெரியவில்லை என்று தான் கூற முடியும்.

    ஏழாவது கேள்வி, ஏன் ஆத்திகர்களின் கேள்விகள் எப்போதும் நிகழ்கால அறிவியல் எல்லைகளைக் கடந்ததாக இருக்கிறது என்பது. இதை போதுமானவரை விளக்கி டிசம்பர் ஒன்றாம் தேதி இட்ட பின்னூட்டத்தில் எழுதியிருக்கிறேன். எனவே, புதிதாக ஒன்றும் தேவையில்லை தம்பி. இதில் நீங்கள் குறிப்பிட்டவைகளைப் பார்த்தால் எதிர்கால அறிவியல் எனும் உறுதியான நிலைப்பாடு இல்லையா என்றால் ஆம். எதிர்கால அறிவியல் என்பது உறுதியான நிலைப்பாடு இல்லை. இதில் மறுப்பதற்கு ஒன்றுமில்லை, நான் மறுத்திருக்கவும் இல்லை. எதிர்கால அறிவியல் என்பது சாத்தியம் அவ்வளவு தான் அதை உறுதியான நிலைப்பாடாக கொண்டு எதையும் நான் எழுதியதாக நினைவில்லை. இருந்தால் சுட்டிக் காட்டுங்கள் தம்பி, உங்களால் முடிந்தால். எதிர்காலத்தில் கண்டறியப்படும் நிலை வந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம் எனும் பொருளில் தான் எழுதி இருக்கிறேன். அடுத்து தம்பி! இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து உங்கள் கேள்விகளை நீங்கள் வைக்கவில்லை. நீங்கள் எந்தக் காலத்தில் உள்ளவற்றை எழுதியிருந்தாலும் அதில் தொக்கி நிற்கும் கேள்வி நிகழ்கால அறிவியல் எல்லையைக் கடந்து நிற்கும் என்று கூறிவருகிறேன். ஒருவேளை அப்படி நீங்கள் கேட்டிருந்தால் மீண்டும் காப்பி பேஸ்ட் பண்ணுங்கள் தவறில்லை. அப்படி என்ன கேள்வி என் கண்களுக்கு தப்பி விட்டது என்று நானும் கொஞ்சம் பார்க்கிறேன்.
    எட்டாவது கேள்வி கடவுளைச் சொன்னவரின் கூற்று உண்மையா பொய்யா என்பது. அவர் கூறியதை ஏன் நம்ப வேண்டும்? அவரின் மீதான நம்பகத்தன்மையில் குறைபாடு இருக்கிறதா என்றால் ஆம் இருக்கிறது. அதை குறிப்பிடுவதற்கு முன் ஒன்றை தெளிவாக அறிவித்து விடுகிறேன். இது தனி விவாதமாக நீண்டு இந்த விவாதத்தின் மையத்தை நகர்த்திவிடலாகாது, எனவே இது குறித்த தொடர் விவாதங்கள் எழுமாயின் அவைகளை நான் தவிர்த்து விடுவேன் என்பதை அறிவித்துக் கொள்கிறேன். அவர் முக்கியமானவைகளைக் கூட மறந்து விடக் கூடியவர் என்பதற்கு தொழுகையில் ரக்அத்துகளை மறந்திருக்கிறார் என்பது போதுமானது. உயர்வுநவிற்சியாக கூறக் கூடியவர் என்பதற்கு சைத்தானை கட்டி வைக்க நினைத்தேன் என்று கூறியது போதுமானது. முரண்பாடாக பேசக் கூடியவர் என்பதற்கு அலீயின் திருமணத்திற்கு மறுப்புக் கூறியது போதுமானது. தன்னுடைய விருப்பத்தை அதிரடியாக கூறக் கூடியவர் என்பதற்கு ஒற்றை ஒரு குரைஷி இருக்கும் வரை ஆட்சியதிகாரம் அவருக்கே சொந்தம் என்க் கூறியது போதுமானது. இப்படி கூறிக் கொண்டே போகலாம். தம்பி, எல்லாவற்றையும் விட முதன்மையானது, பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் ஆண்டான் அடிமை சமூகத்தில்

    ReplyDelete
  148. 8
    வாழ்ந்த ஒரு மனிதரிடம் உங்களுக்கு புளகாங்கிதமோ, இறும்பூறெய்தலோ இருக்கலாம். ஆனால் அந்த காங்கிதங்கள் அவர்மீது எனக்கும் இருந்தாக வேண்டும் என தம்பி, நீங்கள் எதிர்பார்க்க முடியாதல்லவா? எனவே அவர் கூறியவைகளை என்னால் அறிவியலுக்கு அப்பாற்பட்டு ஒப்புக் கொள்ள முடியாது. இது ஒருபக்கம் இருக்கட்டும் ஆன்மீகமும் அறிவியலும் எதிரெதிர் நிலைப்பாடுகளா? ஆம் அதிலென்ன சந்தேகம். ஆன்மீகமும் அறிவியலும் முற்றாய் பொருந்தாதவைகள். ஏனென்றால் இரண்டும் நேரெதிரான அடிப்படைகளைக் கொண்டவை. ஆன்மீகம் எல்லாவற்றையும் நம்பு என்பதை அடிப்படையாகக் கொண்டது, அறிவியலோ எதையும் நம்பாதே என்பதை அடிப்படையாகக் கொண்டது. எனவே இரண்டும் எதிரெதிர் நிலைப்பாடுகள். போகட்டும் தம்பி கடவுளைக் கூறியவரின் கூற்றை நீங்கள் எந்த அடிப்படையில் ஏற்பதாக கூறியிருக்கிறீர்கள்? நம்பகத் தன்மையின் அடிப்படையில். ஆக தெளிவாய் வாக்குமூலம் அளித்திருக்கிறீர்கள். நீங்கள் கடவுளை ஏற்றிருப்பது நம்பிக்கையினாலேயன்றி உறுதியாக இருக்கிறது என்பதால் அல்ல. அப்படித் தானே. இதற்கு மேல் இந்த தலைப்பில் என்ன விவாதம் வேண்டிக் கிடக்கிறது தம்பி.

    ஆக, நான் கூறிக் கொண்டிருந்தது தம்பி குலாமினால் மெய்யாக்கப் பட்டிருக்கிறது. திரும்பத் திரும்ப என்னுடைய கேள்விகளை வைத்துக் கொண்டிருந்தபோது இந்தக் கேள்விகள் கடவுள் உறுதியான இருப்பு என்பதை உடைக்கக் கூடியவை அதனால் தான் தம்பி குலாம் பதிலளிக்க மறுக்கிறார் என்று கூறிக் கொண்டிருந்தேன். இன்னும் அவர் முறையாக பதில் கூறிவிடவில்லை என்றாலும் கூற முன்வந்திருக்கும் விசயங்களே கூட அவர் கடவுளை வெற்று நம்பிக்கையாகத்தான் கொண்டிருக்கிறார் என்பதை தெரிவித்து விட்டது. இன்னும் அனைத்து கேள்விகளுக்கும் தீர்க்கமான பதிலை கூறினால் சர்வ நிச்சயமாக அந்தப் பதில்கள் கடவுள் என்பது வெற்று நம்பிக்கையே தவிர வேறில்லை என்பதை அவர் வாயாலேயே போட்டுடைக்கும். எப்படி தம்பி, பதில் கூறத் தயாரா?

    இனி தம்பி உங்களின் கேள்விகளுக்கான என்னுடைய பதில்களுக்கு போகுமுன் ஒன்றை தெரிவித்து விடலாம் என எண்ணுகிறேன். நீங்கள் இப்படி குறிப்பிட்டிருக்கிறீர்கள், \\\கடவுள் ஏற்பு நிலைக்கு எதிரான தருணத்தில் இந்த உலகத்தில் விளையும் சமுக பொருளியல் நன்மைகளையும், உளவியல் ரீதியான தனிமனித , பொது நலன்களையும் பட்டியலிடுங்கள்/// இது அவசியமில்லை எனக் கருதுகிறேன். ஏனென்றால் இது விவாதம் செய்து கொண்டிருக்கும் இந்தத் தலைப்புடன் தொடர்பில்லாதது. மட்டுமல்லாது மிக விரிவாய் விவாதிக்கப்பட வேண்டிய தனித் தலைப்பும் ஆகும். எனவே நீங்கள் விருப்பப்பட்டால் இதையே நம்முடைய அடுத்த விவாதத்தின் தலைப்பாக கொள்ளலாம். என்ன சொல்கிறீர்கள் தம்பி.

    இனி, உங்கள் கேள்விகளுக்கான பதில்கள். முதல் இரண்டு கேள்விகளையும் ஒற்றைக் கேள்வியாகவே கொள்ளலாம். இது தொடர்பாக நவம்பர் 24ம் தேதிய மூன்றாவது

    ReplyDelete
  149. 9
    பின்னூட்டத்தில் விரிவாக பதிலளித்திருக்கிறேன் அதன் தொடர்பில் சில கேள்விகளை கேட்டிருந்தேன் அவைகளுக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை என்பதால் அது அப்படியே விடப்பட்டு விட்டது. குகை ஓவியங்கள் எடுத்துக் காட்டுவது என்ன? அவை கடவுள் நம்பிக்கையை காட்டவில்லை. இடி, மழை வெள்ளம், காட்டுத்தீ, வறட்சி போன்ற இயற்கைச் சீற்றங்களையும், அன்றைய நேரத்தில் மனிதனை வேட்டையாடும் பெரு விலங்குகளையும் மனிதன் வணங்கியிருக்கிறான் என்பதைத்தான் குகை ஓவியங்கள் காட்டுகின்றன. இதை கடவுள் என்று கொள்வதா பயம் என்று கொள்வதா? பயம் என்று கொள்வதே சரியானது. ஏனென்றால் எந்த ஆபத்தான விலங்குகளை மனிதன் வணங்கியிருக்கிறானோ அதே விலங்கை கொன்றும் இருக்கிறான். இன்றைய யானையை விட அளவில் பெரியதாய் இருந்த மாமதம் எனும் விலங்கை கொன்று அதன் எலும்புகளை வீடு செய்வதற்கு பயன்படுத்தியிருந்திருக்கிறான் பண்டைய மனிதன். புலிகளைக் கொன்று அதன் கோரைப்பல்லை நெற்றிக்குமேல் அணிந்து கொள்வது வீரத்தின் அடையாளமாய் போற்றப்பட்டிருக்கிறது. கொடிய விலங்குகளைக் கடவுளாகக் கருதியிருந்தான் என்றால் வாய்ப்பு கிடைக்கும் போது அவைகளை கொன்றிருக்க மாட்டான். முடிந்த போது கொல்வதும் முடியாத போது தன்னால் கொல்லப்பட்ட வேறு விலங்குகளை போட்டு வணங்கி தன்னை தற்காத்துக் கொள்வதும் ஆதி மனிதன் உயிர் வாழ்வதற்கான தகவமைப்பு நீட்சிகள். காட்டுத்தீயை, பெரு வெள்ளங்களை மனிதன் கடவுளாக கொண்டிருந்தானென்றால் அவைகளை அணைத்திருக்க மாட்டான், அணைகளைக் கட்டியிருக்க மாட்டான். ஆனால் மனித அறிவு வளர வளர இவைகளை மனிதன் செய்தான். மிகத்தெளிவாகச் சொன்னால் வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களில் எவைகளையெல்லாம் வணங்கினான் என்று குகை ஓவியங்கள் மூலம் அறிகிறோமோ அவை எதுவும் வரலாற்றுக்கு பிந்திய காலங்களில் மனிதனின் கடவுளாக இருக்கவில்லை. இவை நமக்கு காட்டுவது என்ன? தன்னை ஒரு சக்தி படைத்தது அதற்கு பதிலாய் நாம் அந்த சக்தியை வணங்குகிறோம் என்ற எண்ணமெல்லாம் ஆதி மனிதர்களிடையே இல்லை. தன்னுடைய இருத்தலின் தகவமைவுகளுக்கேற்ப உயிர் வாழ்வதற்கான செயல்கள் மட்டுமே அவை. இதில் எந்தப் புள்ளியிலும் இன்று வழங்கப்படும் பொருளிலான கடவுள் இல்லை. ஆனால் உங்களின் கூற்று என்ன தம்பி மனிதன் தொடக்கம் முதலே கடவுளை வணங்கியிருக்கிறான் என்பதல்லவா? குகை ஓவியங்களின் வாயிலாக நீங்கள் கூறும் இந்த முடிவுக்கு வந்தடையவே முடியாது. எனவே குகை ஓவியங்கல் கடவுள் மறுப்பை உண்மைப்படுத்தும் ஆவணங்கள்.

    மூன்றாவது கேள்வி கடவுளுக்கான அறிவியல் ரீதியான் இலக்கணம். இது பிறழ்தலான கேள்வி. அறிவியல் ஒன்றைக் குறித்து இலக்கணம் வழங்கினால் அது இருப்பதாக அறிவியல் கண்டறிந்திருக்கிறது என்பது பொருள். கடவுள் என்ற ஒன்று இருப்பதாக அறிவியல் கண்டறியவே இல்லை. அதனால் கடவுளுக்கான அறிவியல் இலக்கணம் என்று எதுவுமில்லை. இது குறித்து நவம்பர் 19ல் கடவுள் என்றால் என்ன? எனும் கேள்விக்கான பதிலாக கூறியிருக்கிறேன். அறிவியலுக்கும் கடவுளுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அறிவியல் பொருள் கருத்து எனும் இரண்டு நிலைப்பாடுகளுக்குள்ளேயே பேரண்டத்தின் அனைத்தையும் வகைப்படுத்துகிறது. இந்த இரண்டிலும் கடவுள் அகப்படவில்லை. எனவே

    ReplyDelete
  150. 10
    கடவுளுக்கான அறிவியல் ரீதியான இலக்கணம் என்பது குளிரும் நெருப்பு என்பதைப் போல முரணான சொற்றொடர்.

    நான்காவது கேள்வி பிறக்கும் இறக்கும் நேரங்கள். இது குறித்து நவம்பர் 19ல் தெளிவாக எழுதியிருக்கிறேன். மனிதனால் இப்போதைக்கு இந்த நேரங்களை துல்லியமாக கூற முடியாது. ஆனால் துல்லியம் என்பதன் பொருள் என்ன? பெரும்பாலான தருணங்களில் மருத்துவர் குறிக்கும் நேரங்கள் சரியாகவே இருக்கிறது. மற்றொரு புறம் இவை கணிப்புகள். கணிப்புகள் துல்லியமாக இருக்கும் எனக் கூற முடியாது. ஆனால் இவற்றுக்கும் கடவுள் இருப்புக்கும் என்ன தொடர்பு?

    ஐந்தாவது கேள்வி மழை பொழிவதை ஏன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவில்லை. இதுவும் மேற்கூறிய நேரத்தைச் சேர்ந்தே முதலில் தம்பி கேட்டிருந்தார் இப்போது அது கட்டுப்படுத்துவதாக மாறியிருக்கிறது. மழை என்பது இன்னும் முழுமையாக மனிதனின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடாத இயற்கை மூலங்களோடு தொடர்பு கொண்டிருப்பதால் இன்னும் முழுமையான கட்டுப்பாட்டில் வரவில்லை. அதேநேரம் கட்டுப்படுத்திக் கொண்டும் இருக்கிறான். கருமேகங்கள் சூழ்ந்திருந்தால் எழுவூர்தி மூலம் அவைகளைக் கலைத்து வேறு இடங்களுக்கு விரட்டுவதும், மேகங்கள் மீது சில்வர் அயோடைடை தூவி உடனடியாக மழையை வரவழைப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதுசரி இந்தக் கேள்விக்கும் கடவுள் இருப்புக்கும் என்ன தொடர்பு?

    ஆறாவது கேள்வி பெரு வெடிப்புக் கொள்கை ஏன் நிகழ வேண்டும்? இது குறித்து நவம்பர் 30 ஆறாவது பின்னூட்டத்தில் விளக்கியிருக்கிறேன். பெருவெடிப்புக் கொள்கை என்பது அறிவியல் யூகம். பெரும்பாலான அறிவியலாளர்களால் இப்படித்தான் நடந்திருக்கக் கூடும் என ஏற்கப்பட்டிருக்கும் அறிவியல் யூகம். பருப்பொருட்களின் விரைவு, வெளியில் பரவியிருக்கும் சீரான வெப்பம் போன்றவற்ரைக் கொண்டு அந்த யூகத்துக்கு அறிவியலாளர்கள் வந்தடைந்திருக்கிறார்கள். அது அப்படித்தான் நடந்தது என உறுதி செய்யப்பட்ட பின்னர் தான் ஏன் நடந்தது என்பது ஆராயப்படும். இப்போதைக்கு இது பதிலில்லாத கேள்வி. அதுசரி இந்தக் கேள்விக்கும் கடவுள் இருப்புக்கும் என்ன தொடர்பு?

    ஏழாவது கேள்வி கோள்கள் வெளியில் எப்படி இயங்குகின்றன? யார் இயக்குவது? இது முதலில் மோதல் குறித்த கேள்வியாக இருந்தது. பின்னர் இயக்கம் குறித்த கேள்வியாக தம்பி மாற்றியிருக்கிறார். அண்டவெளியில் கோள்கள் ஈர்ப்பு விசையால் இயங்குகின்றன என நியூட்டன் கூறினார். இதன் பின்னர் ஐன்ஸ்டீன் வெளி வளைந்திருக்கிறது எனுமொரு புரட்சிகரமான கருத்தை முன்வைத்தார். இதன்படி பருப்பொருட்களின் நிறையால் வெளி குவிதலுக்கு உள்ளாகி அந்த குவிதலின் விளைவாலும் மைய ஈர்ப்பாலும் சுழன்று கொண்டிருக்கிறது, வேறு பாட்டைகள் இல்லை. என விள்க்கினார். இந்த அடிப்படையில்

    ReplyDelete
  151. 11
    தான் கோள்கள் இயங்குகின்றன. இவைகளை யாரேனும் கொடியசைத்து இயக்கி வைக்கிறார்களா? இல்லை. பருப்பொருட்களுக்கு இடையிலான இயக்கத்திற்கு வெளியிலிருந்து எந்த விசையும் செயல்பட்டு இயங்கவில்லை என்பது தான் அறிவியலின் முடிவு. தம்பி! மெய்யாகவே கோள்களை கடவுள் இயக்குகிறார் என கூறுகிறீர்களா? அதற்கான சான்றுகளை முன்வையுங்கள் பரிசீலிக்கலாம்.

    எட்டாவது கேள்வி அண்ட வெளியில் ஏற்படும் விபத்துகள். இதற்கான விளக்கம் நவம்பர் 19ம் தேதியிலும் நவம்பர் 30ம் தேதியிலும் அளிக்கப்பட்டிருக்கிறது. அவைகள் திட்டமிடப்படாத நிகழ்வுகள். இவைகளை அறிவியல் நிகழ்த்துமா? அறிவியல் என்பது அறியும் முறை என்பதை பல்வேறு முறைகளில் காட்டியுள்ளேன். இது போன்ற மோதல்களால் பூமிக்கு அதாவது மனிதனின் இருப்புக்கு பங்கம் வருமானால் அவைகளை மனிதன் தடுப்பான். தடுக்க முடியும். இந்தக் கேள்விக்கும் கடவுள் இருப்புக்கும் என்ன தொடர்பு?

    ஒன்பதாவது கேள்வி அறிவியலில் தற்செயல் என்பது, இதற்கு தெளிவான விளக்கத்தை டிசம்பர் 13ம் தேதி இரண்டாவது பின்னூட்டத்தில் எடுத்துக்காட்டுடன் தந்திருக்கிறேன். அதுவே போதுமானது புதிதாக எதுவும் தேவையில்லை. வழக்கம் போல இந்தக் கேள்விக்கும் கடவுள் இருப்புக்கும் என்ன தொடர்பு?

    பத்தாவது கேள்வி எதிர்கால அறிவியல் குறித்து இதனை நவம்பர் 30 ஆறாவது பின்னூட்டத்தில் விளக்கியிருக்கிறேன். மட்டுமல்லாமல் இது குறித்து மேலே சில விள்க்கங்கள் தரப்பட்டுள்ளன. உண்மை அறிவியல் பொய் அறிவியல் என்றெல்லாம் பேதமில்லை. அறிவியல் எதிர்காலத்தை சார்ந்திருப்பதில்லை. ஆனால் சில முடிவுகளுக்காக எதிர்காலத்தை நோக்கி காத்திருக்கலாம். இந்தக் கேள்விக்கும் கடவுள் இருப்புக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்ன?

    தம்பி குலாம் நீங்கள் பத்து கேள்விகளை வரிசைப் படுத்திர்யிருந்தீர்கள் பார்ப்போம் இவைகளிலிருந்து கடவுளின் இருப்புக்கு நீங்கள் என்ன தொடர்பை ஏற்படுத்துகிறீர்கள் என்று.

    \\\தொடக்கம் முதலே.... என் கருத்தை வைத்தே உங்கள் கேள்விகளை தயார் செய்து கடவுள் ஏற்பை மறுக்கிறீர்கள்.... கவனியுங்கள் கடவுள் மறுப்புக்கு தெளிவானதொரு பதில் இதுவரை பதியப்படவில்லை/// இது அப்பட்டமான மெய் கலக்காத பொய். நவம்பர் 4ம் தேதி நான்காவது பின்னூட்டத்தில் கடவுளை நான் எந்த அடிப்படையில் மறுக்கிறேன் என்பதற்கு

    ReplyDelete
  152. 12
    மூன்று கூறுகளாக பிரித்து காரணங்களை அடுக்கியிருக்கிறேன். எங்கே உங்களுக்கு திறனிருந்தால் கடவுள் ஏற்பிற்கான அடிப்படைக் காரணங்களாக உங்களால் எதையாவது கூற முடிந்திருக்கிறதா? இது போன்று எடுத்துக் காட்ட இயலுமா? அது எப்படி தம்பி நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட பினூட்டங்கள் கடந்துவிட்டன. யார் மேலே சென்று கவனிக்கப் போகிறார்கள் என்ற அசட்டுத் துணிச்சலா தம்பி? வெற்று சவடால்களுக்கு ஒன்றும் குறைச்சலில்லை உங்களிடம்.

    தம்பி குலாம் எதை நீங்கள் புலம்பல்களாக கருதுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா? தம்பி நீங்கள் எத்தனை பேரை பார்த்திருக்கிறீர்கள் என்பதெல்லாம் எனக்குப் பொருட்டல்ல. என்னுடன் எப்படி பொருதுகிறீர்கள் என்பதை மட்டுமே நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதைத்தான் நான் விமர்சித்துக் கொண்டிருக்கிறேன். கடந்த பதிவின் முதல் வரியிலேயே நீங்கள் விவாதம் நடத்தும் முறையை விமர்சிக்கப் போகிறேன் என அறிவித்துவிட்டே அதைச் செய்திருக்கிறேன். உங்களுக்கு நீங்கள் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டுமென்றால் அந்த விமர்சனங்களுக்கு நீங்கள் விளக்கம் சொல்லியிருக்க வேண்டும். அவை சரியான விமர்சனங்கள் என்றால் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் அல்லது அது உங்கள் ஈகோவிற்கு களங்கம் என்றால் அமைதியாக இருந்திருக்க வேண்டும். மாறாக புலம்பல்கள் எனும் சொல் மூலம் கடந்து சென்றிருக்கிறீர்கள். வெளிப்படையாகவும் வீரியமாகவும் செய்யப்படும் விமர்சனங்களை வசைச் சொல் என்று வீச்சுக் காட்டும் நீங்கள் இப்போது புலம்பல் என்றிருக்கிறீர்கள் எது புலம்பல்? விமர்சனங்களை எதிர்கொள்ளத் திராணியில்லாமல் புலம்பல்கள் என்கிறீகளா தம்பி. ஏன் முக்கியத்துவம் கொடுப்பதில்லை நீங்கள்? அவை உண்மைகாளாக இருக்கின்றன என்பதாலா? அவை பதில் கூற முடியாதவைகளாக இருக்கின்றன என்பதாலா? எந்த அடிப்படையில் அவை புலம்பல்கள்? உங்களைக் கண்டு பரிதாபம் தான் ஏற்படுகிறது தம்பி.

    என்னைப் பற்றியும் உங்களால் விமர்சிக்க முடியுமா? அப்படியா தம்பி! என்றால் அவ்வாறு விமர்சிப்பதிலிருந்து உங்களை தடுத்தது யார்? எது? முயற்சித்துப் பாருங்களேன். நிச்சயமாக உங்களைப்போல் விமர்சனங்களுக்கு அமைதி காப்பவன் நானல்லன். சரியாய் இருந்தால் தயங்காமல் ஏற்று திருத்திக் கொள்வதும், தவறு என்றால் வழுவாமல் விளக்கமளிப்பதும் என் வழக்கங்கள். வெட்கப்படாமல் முயற்சி செய்யுங்கள் தம்பி.

    மீண்டும் வருவேன்

    ReplyDelete
  153. 13
    தேனீ மற்றும் அதன் சுற்றாடல்களை மறந்து விட்டேன். தேனீயை எதற்காக நீங்கள் அழைத்து வந்தீர்கள் என்பது நினைவிருக்கிறதா தம்பி. குரான் இறைவனின் வார்த்தை தான் என்பது தேனீ மூலம் உறுதியாகிறது. அதனால் கடவுளின் இருப்பும் உறுதியாகிறது என்பதற்காகத்தான் தேனீயை அழைத்து வந்தீர்கள். ஆனால் இப்போது வேறு வாய்ப்பில் பார்க்கலாம் என்று விட்டுவிட்டீர்கள். ஆனால் அதனுடன் இன்னொரு சொல்லையும் பயன்படுத்தியிருக்கிறீர்கள், சந்தர்ப்பவாத நிலை என்று. வாயில் என்ன வார்த்தை வருகிறதோ அதை அப்படியே எழுதி விடுவீர்களா தம்பி. எது சந்தர்ப்ப வாதம்? தேனீ குறித்த என்னுடைய விளக்கங்களில் எது சந்தர்ப்ப வாதமாக இருக்கிறது என சுட்டிக் காட்ட முடியுமா தம்பி? உங்களால் அவ்வாறு சுட்டிக்காட்ட முடியவில்லை என்றால், தேனீ குறித்த என்னுடைய நிலைதான் சரியானது தான் என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டீர்கள் என எடுத்துக் கொள்ளலாமா நான்? பதில் கூறமுடியவில்லை என்றால் நேர்மையாக ஒப்புக் கொள்ளுங்கள் அல்லது சத்தமில்லாமல் நகர்ந்து விடுங்கள். மாறாக, உங்களின் இயலாமையை மறைக்க சந்தர்ப்பவாதம் எனும் சொல்லால் முக்காடிடாதீர்கள் தம்பி.

    அப்புறம் என்ன சொன்னீர்கள் தம்பி! நீங்கள் தந்த பட்டியலை சௌதியில் ஆராயப்பட்டது எனும் ஒற்றை வரியில் முடிவு கட்டினேனா? என்னுடைய தொடரில் அவைகளை விளக்கியிருக்கிறேன் என்று கூறி முடிந்தால் பதில் கூறிப் பாருங்கள் என்று சவாலும் விட்டிருந்தேன். நினைவிருக்கிறதா தம்பி? உங்களுடைய அம்னீஷியாக்களுக்கெல்லாம் நான் மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

    நினைவிருக்கட்டும் தம்பி, தேனீ மட்டுமல்ல கடல்களுக்கிடையான தடுப்பு மட்டுமல்ல, எதை நீங்கள் தூக்கிக் கொண்டு வந்தாலும் அதை நீங்களே பின்வாங்கி கொண்டு செல்ல வேண்டிய நிலை வரும். மறந்துவிடாதீர்கள்.


    பின் குறிப்பு: தம்பி என்னுடைய வாதத்தின் முதல் பகுதி தவறுதலாக மூன்றுமுறை வெளியாகி இருக்கிறது. அவைகளில் இரண்டை நீக்கி விடலாம் தவறில்லை.

    ReplyDelete
  154. அன்பு சகோ செங்கொடி.,

    என் கருத்துக்களை பதியும் முன் ஒரு செய்தியை உங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வர ஆசைப்படுகிறேன்.

    இங்கே விவாதம் "கடவுள்" என்ற நிலைப்பாடுக்குறித்தே.. ஆனால் உங்கள் கருத்தாடல்கள் ஒரு நிலையில் கடவுள் மறுப்புக்கு ஆதாரம் கேட்க தொடங்கியவுடன், வழக்கம்போல் நாத்திகவாதிகள் பயன்படுத்தும் பழைய டெக்னிக்கை பயன்படுத்தி இஸ்லாத்தின் மீது மீள் கேள்விகள்..
    உஷ்.... புதுசா ஏதாவது கேட்க மாட்டிங்களே... சரி புதுசா என்ன செய்யலாம் நான் யோசித்து விட்டேன்!

    சரி விடுங்க,
    ஆனா பாருங்க., உங்களிடமே நாணயமும், உண்மையும், சத்தியமும் இருக்கிறதென்றால் அதை விளக்கியை தான் இங்கே உங்களை கருத்திட சொல்கிறேன்...

    மாறாக என்னை நோக்கி எத்தனை வசை பாடல்கள், அது கூட இல்லை எவ்வளவு புலம்பல்கள்... சகோ செங்கொடி மறுபடியும் உங்களை அசுவாசப்படுத்தி கொள்ள சொல்வதற்கு எனக்கே பிடிக்கவில்லை..

    தயவு செய்து இங்கே என்ன விசயமோ அதை மட்டுமே குறித்து விவாதித்தால் நலம். தேவையில்லாமல் என்னையும் உங்களை குறித்து பேச வைத்து விடாதீர்கள் (இதை மையப்படுத்தி என்னை குற்றம் சுமத்துவதற்கு முன் உங்கள் வணக்கம் என்ற சொல்ற்பிரயோகம் மற்றும் உங்கள் சவுதி வாழ்வுக்குறித்து விளக்கி விட்டு தொடருங்கள்)

    சரி , கைர் விசயத்திற்கு செல்வோம்

    ReplyDelete
  155. உங்கள் மிக நீண்ட பின்னூட்டங்கள் உங்களுக்கு அதிக வேலை இல்லையென்பதை காட்டுகிறது. நான் இப்படி சொல்ல காரணமும் இருக்கிறது. அதெப்படி., சுமார் நான்கு சுழற்சி முறை பின்னூட்டத்திற்கு
    November 19, 2012 at 7:54 PM அன்று
    November 25, 2012 at 7:41 AM அன்று
    December 8, 2012 at 8:00 AM அன்று
    December 14, 2012 at 3:31 AM அன்று

    நான் கேட்ட கேள்விகளுக்கு அப்போதெல்லாம் பதில் தராமல் இப்போது பதில் எழுதி இருக்கிறீர்கள். காரணம் உங்கள் கேள்விகளுக்கு நான் விடை தந்தேன் என்பதாலா.? (அட இப்படி கேட்டுவிட்டேனா... இதற்கும் எதையாவது சப்பைக்கட்டு கட்டி விட்டு தான் வருவீர்கள். என்பது எனக்கு தெரியும்) சரி உங்கள் பதிலில் உள்ள அறியாமையை அலசும் முன் என் பதிலில் உண்டான உங்கள் புரிதலுக்கு என் விளக்கங்கள்.

    சகோ

    கடவுள் என்றால் என்ன - அவர் எப்படி உறுதியாக இருக்கிறார்.. எவ்வளவு லாகவமான பேச்சு திறன். ஆனால் இந்த வாதம் ஒன்றை மட்டும் வைத்து வெகு காலம் வண்டி ஓட்ட முடியாது.,

    மனிதன் கடவுளின் வல்லமையை முரண்பாடில்லா நிலையில் எப்படி விளக்க முடியுமோ அப்படி மட்டுமே மனித மூலங்களுக்கு விளக்கம் தர முடியும்.
    அதை அறிவுத்தனமாக தகுதிகள் என்று மட்டுமே கொள்ள வேண்டுமென்றால்., இங்கே நான் கேட்கிறேன்... எதனுள்ளும் சிக்காமல் கடவுளை குறித்து மனிதர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டுமானால் அது எப்படி இருந்தால் மட்டுமே சாத்தியம்? என்பதை எனக்கு விளக்கிவிட்டு அப்படி ஏன் கடவுள்- என்பது அல்லது என்பவர் மனிதர்களுக்கு அறிமுகம் ஆகவில்லையென கேளுங்கள்.,

    ReplyDelete
  156. நீங்கள் எதையும் பகுத்து அராயும் அறிவுடையவர் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
    அஃதில்லாமல் கடவுள்- என்றால் என்ன ? என்ற கொசுவர்த்தி சுருள் கேள்வி மட்டும் கொண்டு வந்தால்...

    சரி சீரியஸா கேட்கிறேன்.. இதுக்கு மட்டும் பதில் சொன்னா விவாதம் ஓவர்
    +++++++++++++++++++++++++++++++++++++++++
    கடவுள் இல்லையென்பதை விளக்கும் ஏதாவது அறிவியல் சான்று இதுவரை உங்களிடம் உள்ளதா..? சவால் விட்டு சொல்கிறேன் இனி வரும் பின்னூட்டத்திலாவது அதை சான்றுகளுடன் பகிர்ந்தால் நான் கடவுள் இல்லையென பரிசிலிக்க தயார்...?
    ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    ஆனா பாருங்க., கடவுள் ஏற்பு எனது நம்பிக்கை என்ற ஒரு பக்கத்தை மட்டுமே காட்டி உங்கள் கடவுள் மறுப்புக்கு ஆதரவை தேடுகிறீர்கள்..?

    இது தான் உங்கள் உண்மையான ஆராயும் திறன் கொண்ட விவாத சிந்தனையா...? நினைத்தால் சிரிக்க தான் மனம் செய்கிறது.

    சரி உங்களை பொருத்தவரை அட... என்னைப்பொருத்தவரை கடவுள் எனது நம்பிக்கையென்ற இருக்கட்டும்...

    கடவுள் மறுப்பு என்பது உறுதி செய்யப்பட்ட உங்கள் வாதம் தானே

    +++++++++++++++++++++++++++++++++++++++++
    நான் மீண்டும் சொல்கிறேன், உங்கள் சொல்லில் நீங்கள் உண்மையாளாராக இருந்தால் கடவுள் இல்லையென்பதற்கும் ஆணித்தரமான அறிவியல் சான்று இதோ, என சமர்பியுங்கள் பார்க்கலாம்!
    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    அப்படியில்லாமல் எனது நிலைப்பாடை மட்டும் வைத்து உங்கள் கேள்விகள் தொடருமானால் கடவுள் ஏற்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து மட்டுமே விவாதித்துக்கொண்டிருக்கிறோம். மாறாக கடவுள் மறுப்பு என்பது ஏற்புக்கு எதிரான வெறும் நம்பிக்கையாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  157. சரி பக்க பக்கமாய் பின்னூட்டமிடும் உங்கள் வேலையை இன்னும் இலகுவாக்கிறென்., சிம்பிள் கொஸ்டீன் தான் சகோ செங்கொடி.

    குர்-ஆன்
    மலக்குகள்
    சொர்க்கம்- நரகம்
    போன்றவற்றை குறித்து விளக்குவதெல்லாம்., கடவுள் ஏற்புக்கு நான் கொடுக்கும் சில பொது நிலை கருத்தாடல்களே., ஏனெனில் கடவுள் என்ற பொது சொல்லில் நான் உடன்பட்டாலும் அல்லாஹ் என்ற மூலமே நான் வணங்கும் கடவுள் என்பதன் அடையாளம் ஆக எனது ஏற்புக்கு நான் குர்-ஆன் ஹதிஸ் என தான் தொடரவேண்டும்.

    ஆனால்..
    ஆனால்..
    ஆனால்..

    உங்களின் சிந்தனை, செயல், ஆராயும் பண்புகளேல்லாம் நம்பிக்கை தொடர்பற்றது., ஆக உங்களை பொருத்தவரை கடவுளை மறுக்க குர்-ஆனை, ஹதிஸை எதிர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை...

    ஒரு சராசரி நிலையில் இருந்து கேட்கும் ஒருவருக்கு எப்படி உங்கள் கடவுள் மறுப்பை உண்மைப்படுத்துவீர்கள்..

    ++++++++++++++++++++++++++++++++++++++
    உங்கள் கடவுள் மறுப்பு என்பது வெற்று நம்பிக்கையில்லை. தெளிவாக விளக்கப்பட்ட ஆதாரங்கள் என்றால்.. உங்கள் சொல்லிம் உண்மையாளராக இருந்தால் இஸ்லாத்தை உரசாமல் நேரடியாக பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்?
    ++++++++++++++++++++++++++++++++++++

    இதை படித்து விட்டு எனது இஸ்லாம் குறித்து கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் குலாம் எஸ்கேப் ஆகிறார் என்று சொன்னாலும் பரவாயில்லை., ஏனெனில் அடிப்படையில் நான் ஒரு சைக்காலஜி ஸ்டுடன்ட் தான்., ஆக, ஆரம்பம் முதல் நன்கு நமது பின்னூட்ட களங்களை அலசிபார்த்தால்., முதல் சுற்றை தவிர அறிவியல் நோக்கி நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் தரும் நிலை கடந்து இஸ்லாத்தை நோக்கி எதிர்க்கேள்விகள் என்ற பெயரில் முன்வைத்த அறிவியல் கேள்விகள் அப்படியே அமிழ்ந்து போய் விட்டது., ஆக இனி இஸ்லாம் குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல போவதில்லை..

    இங்கே எனக்கு கடவுளை மறுக்கும் நேரடி காரணிகள் என்னவென்பதை மட்டுமே உங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்... ஆக இதற்கு மட்டும் தாங்கள் தயகூர்ந்து எனக்கு பதிலை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  158. சில இடங்களில் புத்திசாலித்தனமாக பதில் தருவதாக நினைத்து வழிக்கிறீர்கள்., பாருங்கள்

    // கடவுள் தான் அனைத்தையும் படைத்தார் என்று நீங்கள் தான் கூறிக் கொண்டிருக்கிறீர்கள். அதற்கு எதிர் நிலையில் மனிதன் தான் படைத்தான் என்றோ, அறிவியலே காரணம் என்றோ நான் கூறவில்லை. 2. தம்பி, இந்தக் கேள்வியில் நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்? இதைத்தானே முன்னர் வேறு வார்த்தைகளில் கேட்டீர்கள் நானும் பதில் கூறியிருக்கிறேன். //

    இது அறிவார்ந்த பதிலா.. ? அதற்கு ஒரு உதாரணம் வேறு. கருத்திட வார்த்தை அகப்படவில்லையென்றால் அதற்கு இப்படி ஒரு பதிலா... தயவு செய்து நமது விவாத மையப்புள்ளி கடவுள் தான் சகோ..
    ஆக நான் கடவுளை மையப்படுத்தி எடுத்து வைக்கும் வாதங்களுக்கு எதிர் நிலையில் கடவுளில்லா தன்மைகளில் அது சாத்தியம் என்று தான் நீங்கள் சொல்ல வேண்டும்.. அப்படியில்லாமல் மனிதனோ அறிவியலோ அதற்கு எதிராகவில்லையென்றால்... அது எப்படி கடவுளை மறுக்க உதவும்.

    பாசத்திற்கும் அன்பிற்கும் அறிவிலை அளவுக்கோலாக காட்டியமை.. உங்கள் பிடிவாத வாதத்திற்கு எதையும் சொல்வீர்கள் என்பதை தான் காட்டுகிறது., சரி உங்கள் புரிதல் மத்தியிலே ஒரு கேள்வி.,

    அறிவிலை கொண்டு தான் ஒருவர் மீதான பாசமும், அன்பும் கொள்வது சாத்தியமென்றால் பல நேரங்களில் ஒருவரின் பாசமும், அன்பும் பொய்த்துவிடுகின்றன... இவ்விடத்தில் அறிவியல் எப்படி செயலற்று போனது... ? கொஞ்சம் விளக்குவீர்களா?

    ReplyDelete
  159. அடுத்து அண்ட வெளி மோதல்... ?
    சகோ செங்கொடி, முதலில சீரான இயக்கம் குறித்து கேட்டென்.. அதற்கு சீரான இயக்கம் மட்டும் நிகழவில்லை., மாறாக மோதல்களும் நடக்கவே செய்தது.. என்று எனது கேள்விக்கு மிக விரைவில் இல்லை மிக மிக விரைவில் முரண்பாட்டை கற்பித்தீர்கள்., சரி இருக்கட்டும்.,

    அடுத்து நான் என்ன கேட்டேன். அந்த மோதல்களை எது நிகழ்த்தியது என்று...

    அதே உடனடி பதில் எங்கே?
    அதை தவிர எனது கேள்வியில் முரண்பாட்டை கற்பிப்பதிலே மும்முரமாக இருந்தீர்கள். ஐயா படிக்கும் காலத்திலிருந்தே வீண் மோதல்கள், நிலையற்று விழும் எரிக்கற்களும் குறித்து நாளிதழ்களிலும், செய்திகளிலும் படித்து வருபவன் தான் நான். நீங்கள் சொன்னபோது தான் மோதல்கள் குறித்து அறிந்துக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை.

    சிராய்ப்பு உதாரணத்தை சொன்னவுடன் அதை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறீர்கள்..
    ++++++++++++++++++++++++++++++++++
    உங்கள் சொல்லில் உண்மையாளராக இருந்தால் அண்டவெளி இயக்கத்தை எந்த அறிவியல் இயக்கி கொண்டிருக்கிறது என்பதை ஆதாரத்துடன் பட்டியலிடுங்கள் ?
    +++++++++++++++++++++++++++++++++++++++++

    ReplyDelete
  160. அடுத்து தற்செயல்...!

    உண்மையாகவே கடவுள் மறுப்புக்கு அறிவிலை நீங்கள் ஆயுதமாக கொண்டது தான் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது

    எதிர்க்காலம் அல்லது
    தற்செயல்...

    இந்த இரண்டையும் தூக்கி வைத்து விட்டு நிகழ்க்காலத்தில் கடவுள் இருப்பை பொய்யாக்கும் ஆதார தரவுகள் ஏதாவது ஒன்றாவது உங்களால் இந்த பின்னூட்ட களத்தில் பதிக்க முடியுமா சகோ செங்கொடி.,

    சவால் விடுகிறேன்... இஸ்லாம் மற்றும் கடவுள் ஏற்பு இந்த இரண்டு நிலைக்கு எதிராக உங்கள் காய்களை நகர்த்தாமல்

    அறிவியல் கடவுள் ஏன் இல்லையெங்கிறது.. ?
    கடவுள் என்ற ஒன்று இல்லையென்பதற்கு அறிவியலின் தெளிவான விளக்கம்?

    அதை விட அறிவியல் இல்லையெனும் கடவுள் எது / என்ன?
    அறிவியலாளர் கடவுள் இல்லையென கூற காரணம்?


    தயவு செய்து கொஞ்சம் எளிதாக இங்கே பதியுங்களேன் சகோ..?

    ReplyDelete
  161. அப்புறம் , சகோ நம்பிக்கையென்பது எல்லோரையும் பின்பற்ற அழைக்கும் ஒரு வழிமுறையல்ல.. விரும்புவோர் ஏற்கலாம், அல்லது மறுக்கலாம். ஆக கடவுள் ஏற்பு உங்களை பொருத்தவரை நம்பிக்கையென்றால் தாரளாக உங்களை பின்பற்ற நான் அழைக்கவில்லை..

    ஆனால்

    கடவுள் மறுப்பு உங்கள் உறுதியான நிலைப்பாடாக கொண்டு சுமார் 150 பின்னூட்டத்திற்கு மேல் தொடர்ந்தும் உங்களால் அதை நிருபிக்க வழியில்லை என தெரிந்தும் அதை தெளிவான உறுதிப்பாடாக நம்புகிறீர்கள் பாருங்கள் ., அத்தோடு என் நிலைப்பாட்டை நம்பிக்கையென்று நீங்கள் சொல்வது தான் நூறு சதவீகித முரண்பாடு
    உரக்க சொன்னாலும் பொய் உண்மையாகிடாது என்று எங்கோ படித்த நியாபகம்!

    இனி நோ இஸ்லாமிய விளக்கங்கள்
    மற்றும் அதை சார்ந்த எதிர் மறை கேள்விகள்

    // அறிவியலுக்கும் கடவுளுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.//
    அப்படியா...?

    அப்படியானால் எதை அடிப்படையாக வைத்து கடவுளை மறுக்கிறீர்கள் செங்கொடி!

    ReplyDelete
  162. / அறிவியல் பொருள் கருத்து எனும் இரண்டு நிலைப்பாடுகளுக்குள்ளேயே பேரண்டத்தின் அனைத்தையும் வகைப்படுத்துகிறது. இந்த இரண்டிலும் கடவுள் அகப்படவில்லை. //
    ++++++++++++++++++++++++++++++++++++++++
    அப்படியானால் எதில் அகப்பட்டால் அல்லது எப்படி இருந்தால் கடவுளை ஏற்றுக்கொள்வீர்கள் தயவு கூர்ந்து இதற்கு மட்டும் பதிலை
    சொல்லுங்கள்
    ++++++++++++++++++++++++++++++++++++++++++

    இப்போது கடவுளை மறுக்க அறிவியல் உதவும் என்கிறிர்களா?
    அல்லது அறிவியல் வேண்டாமெங்கிறர்களா?
    ஓரே குழப்பாக இருக்கிறது சகோ செங்கொடி.?

    (1) அறிவியலால் கடவுள் மறுப்பை உறுதிப்படுத்த முடியாது என்றால் எதன் மூலம் கடவுள் இருப்பை உணர்த்த வேண்டும் என சொல்லுங்கள்?
    அதாவது எந்த வழியில் வெளிப்பட்டால் கடவுளை ஏற்கலாம் என சொல்லுங்கள். அல்லது

    (2) அறிவியலே அனைத்திற்கும் மூலாதாரம் என்றால் கடவுள் மறுப்புக்கு நூறு சதவீகிதம் சோதித்து அறியப்பட்ட ஆதார சான்றை தாருங்கள்

    அப்புறம் நான் இனி இஸ்லாமிய விளக்க்மெல்லாம் சொல்ல போவதில்லை எனெனில் உங்களுக்கு கடவுள் குறித்து சந்தேகம் இல்லை. மாறாக அடுத்தவரை மட்டும் பத்திக்கு ஒரு முறை பரிசிலிக்க சொல்லும் முன்முடிவுகளுடன் கடவுளை எதிர்க்கும் ஓர் ஆசாமி! ஆம் அப்படிதான் சொல்ல வேண்டும் ஏனெனில் கடவுள் மறுப்புக்கு சென்ற பின்னூட்டம் வரை வரையறை செய்யப்பட்ட ஆதாரத்தை நீங்கள் தரவே இல்லை. என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஆக தயவு கூர்ந்து தேவையற்ற கொசு வர்த்தி பத்திகளை விட்டு விட்டு உங்களின் கடவுள் மறுப்புக்கு பதிலை பத்தி பத்தியாய் அடுத்த பின்னூட்டத்தில் பதியுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    உங்கள் சகோதரன்
    குலாம்.

    ReplyDelete
  163. 1
    அன்பர்ந்த நான்-முஸ்லீம் தள வாசகர்களே!

    தம்பி குலாமுடன் பேசுவதை விட உங்களுடன் பேசுவதில் சிறிது பயன் இருக்கும் என எண்ணுவதால் உங்களுடன் பேச வந்திருக்கிறேன்.

    கடந்த பதிவில் நான் இப்படி கூறியிருந்தேன் \\\ஆக இந்த இடத்தில் இந்த விவாதத்திற்கான மையப் புள்ளி அருகி விட்டது. ஏனென்றால் உங்கள் நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நீங்கள் உறுதியாகக் கூறுகிறார்கள். சரிதானா? தம்பி. இதை நீங்கள் மறுக்காத பட்சத்தில் இந்த விவாதத்தை முடித்துக் கொண்டு நீங்கள் விரும்பினால் நீங்கள் விரும்பும் அடுத்த தலைப்பைக் கூறலாம் .. .. .. ஆக இந்தக் கேள்வியிலும் நீங்கள் மறுக்கவில்லை என்றால் விவாதம் முடிவுக்கு வந்து விட்டதாகவே பொருள் .. .. .. என்றால் இதில் நம்பிக்கையை தவிர்த்து வேறு ஏதாவது இருக்க முடியுமா? .. .. .. ஆக தெளிவாய் வாக்குமூலம் அளித்திருக்கிறீர்கள். நீங்கள் கடவுளை ஏற்றிருப்பது நம்பிக்கையினாலேயன்றி உறுதியாக இருக்கிறது என்பதால் அல்ல. அப்படித் தானே. இதற்கு மேல் இந்த தலைப்பில் என்ன விவாதம் வேண்டிக் கிடக்கிறது தம்பி/// இவை குறித்து தம்பி குலாம் எதையும் கூறவில்லை, மறுக்கவில்லை, மறுக்க முடியவில்லை. எனவே கடவுள் என்பது வெற்று நம்பிக்கையா? உறுதியான இருப்பா? எனும் இந்த விவாதம் கடவுள் என்பது வெற்று நம்பிக்கை தான் என்பது உறுதியாகி இந்த விவாதம் முடிவை எட்டியிருக்கிறது.

    மட்டுமின்றி, தம்பி குலாமும் இதை ஒப்புக் கொண்டிருக்கிறார், \\\என்னைப்பொருத்தவரை கடவுள் எனது நம்பிக்கையென்ற இருக்கட்டும்/// இது போன்று முன்பும் எழுதியிருக்கிறார். ஆனால் மீண்டும் மீண்டும் இப்படி எழுதிக் கொண்டிருப்பது உண்மையை பொய் போல சொல்கிறார் என எண்ண வைக்கிறது. எனவே திடமாய் இந்த விவதம் கடவுள் என்பது வெற்று நம்பிக்கை தான் என முடிவாகியிருக்கிறது.

    ஆனால் இந்த முடிவு நேரிய முறையில் எட்டப்படவில்லை. நேரிய முறையில் முடிவை எட்டுவதற்கு தம்பி குலாம் எள்ளளவிலும் ஒத்துழைக்கவும் ஆயத்தமாக இல்லை. கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் கூறுவதில்லை, கூற முன்வந்தாலும் கேட்கப்படும் அம்சத்தை விட்டுவிட்டு சுற்றி வளைத்து வேறொன்றில் கூறுவது, கூறப்படும் விளக்கங்களை பரிசீலனை செய்யாமல், மறுக்காமல் அல்லது ஏற்காமல் அப்படியே விட்டுவிட்டு கடந்து செல்வது, பின் பிரிதொரு இடத்தில் அதே கேள்வியை வேறு வார்த்தைகளில் மீண்டும் வைப்பது இவைகள் தான் தம்பி குலாமின் வழக்கமாக இருந்து வருகிறது. மட்டுமல்லாது; அப்பட்டமாக, அண்டப்புழுகு, அகாசப் பொய்களை அவிழ்த்து விடுவதற்கும், தொடர்பே இல்லமல் ஏதேதோ எழுதுவதற்கும், திட்டமிட்டு திசை திருப்புவதற்கும் தம்பி குலாம் கொஞ்சமும் வெட்கப்படவில்லை. இவைகளுக்கெல்லாம் எளிமையான காரணமாக எனக்குத் தெரிவது தம்பி குலாமின் நேர்மையின்மை. இந்த விவாதத்தில் அவருடைய தரப்பை உறுதி செய்ய முடியாது என்பது தெரிந்தவுடன் திட்டமிட்டு குழப்பவும் காலம் கடத்தவும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவைகளையெல்லாம் செய்து வருகிறார் தம்பி. இவைகளை பலமுறை நான் விமர்சனங்களாக சுட்டிக்காட்டி விட்டேன். தம்பி தன்னை மாற்றிக் கொள்ளவும் இல்லை. கூறப்பட்ட விமர்சனங்களை மறுக்கவும் இல்லை.

    தவிரவும் முன்னர் நடந்த விவாதங்களில் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத நிலை வந்தபோது எனக்கு இணையத்தில் அதிக நேரம் இணைந்திருக்க முடியாது என்று ஏதேதோ காரணம் கூறி விவாதத்தை கைவிட்டு விடுவார். இப்போது தன் உத்தியை மாற்றி குழப்பம் ஏற்படுத்துகிறார் அவ்வளவு தான். இப்போதும் தம்பி குலாம் மீதான என்னுடைய இந்த விமர்சனங்களை அவர் மறுத்தால் நான் கூறிய ஒவ்வொன்றுக்கும் அவருடைய எழுத்துகளிலிருந்தே ஆதாரங்களை எடுத்துக் காட்டுவது என்னுடைய கடமை. அதேநேரம், இவ்வளவு திருகு தாளங்களுக்கும் ஆயத்தமாக இருக்கும் தம்பி குலாமிடம் இனி நேரடியாக பேசுவது ஒட்டும் பயனற்றது என்று உணர்ந்திருக்கிறேன். இதை மாற்றுவதற்கு எள்ளல் நடை, கூர்மையான விமர்சனம் போன்ற உத்திகளைப் பயன்படுத்தினேன். அவை போதிய பலனைத் தரவில்லை எனவே, அடுத்த உத்தியை கையாள எண்ணுகிறேன்.

    ReplyDelete
  164. 2
    எனக்கும், தம்பி குலாமுக்கும் அறிமுகமான நண்பர் ஹைதர் அலியை (வலையுகம் எனும் பெயரில் வலை தளம் நடத்தி வருபவர்) இங்கு நடுவராக நான் அழைக்க விரும்புகிறேன். இங்கு நடந்து கொண்டிருக்கும் இந்த விவாதத்தை அவர் வாசித்துக் கொண்டிருக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது. வாசித்துக் கொண்டிருக்கக் கூடும் எனும் எண்ணத்திலேயே அவரை இங்கு அழைக்கிறேன். இதை ஏற்கவும் மறுக்கவும் தம்பி குலாமுக்கும், நண்பர் ஹைதர் அலிக்கும் உரிமை உண்டு. ஆனால் அப்படியான ஒரு நடுவரின்றி தம்பி குலாமுடன் உரையாடுவது எள்ளளவேனும் பயனைத் தரும் என்று நான் கருதவில்லை. இந்த அழைப்பு அவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவாதத்தின் இதுவரையான பகுதிகளை நண்பர் அலசி இந்த விவாத நடைமுறை குறித்து அவருடைய கருத்தையும் இனி இந்த விவாதம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்றும் கூறட்டும். அதன் பிறகு அந்த வழிகாட்டலுடன் தொடரலாம்.

    கடைசியாக தம்பி குலாம் பதிவு செய்ததிலும் நான் கடவுளை மறுக்கும் அறிவியல் சான்று எதையும் வைக்காதது போன்றும், இஸ்லாத்தில் உரசாமல் அவைகளை கூறாதது போன்றும் பலவாறாக பொய்களை அடுக்கியிருக்கிறார். கடந்த என் பதிவுகளிலிருந்து சில பத்திகளை எடுத்து வைக்கிறேன். அவைகள் தம்பி குலாம் எந்த அளவுக்கு பொய்யராக இருக்கிறார் என்பதை விளக்கும்.

    \\\
    கடவுள் என்றால் என்ன?

    கடவுள் என்றால் என்ன? எனும் கேள்விக்கு யாராலும் விடை சொல்ல முடியாது. ஏனென்றால் இது பொருளாகவோ கருத்தாகவோ, அல்லது இரண்டுமல்லாத வேறொன்றாகவோ இதுவரை அடையாளம் காணப்படவில்லை. மட்டுமல்லாது அடையாளம் காண முடியாது என்பதே கடவுளின் தகுதிகளில் ஒன்று என்கிறார்கள் ஆத்திகர்கள். இதுவரை மனித இனம் கண்டறிந்த, இன்னும் கண்டறியப் போகும் அனைத்து வித நுட்பங்களாலும், எந்தக் காலத்திலும் கண்டறியப் படமுடியாததும், அதேநேரம், மனிதனின் செயல்களில் அற்பமான ஒன்றைக்கூட விட்டுவிடாமல் அனைத்தையும் இயக்குவதும் கடவுள் என்ற ஒன்றே.

    மனிதனின் தினப்படி வாழ்க்கையில் ஒரு தொடர்பும் இல்லாமல் பேரண்டத்தைப் படைத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டுவிட்ட கடவுள் என்றால் அவர் இருக்கிறார் என்பதை ஏற்பதில் எங்களுக்கு ஆட்சேபனை ஒன்றுமில்லை. கவனிக்கவும் மனிதனின் தினப்படி வாழ்க்கையை இயக்குகிறார், வழிகாட்டுதல் தருகிறார் என்பதில் தான் சிக்கல் இருக்கிறது. புரிந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

    இப்பேரண்டத்தை கடவுள் தான் படைத்தார் என்று நண்பர் குலாம் தான் கூறிக் கொண்டிருக்கிறார். அதற்கு மாறாக கடவுள் படைக்கவில்லை மனிதன் தான் படைத்தான் என்றோ, கடவுளைத் தவிர்த்த வேறு யாரோ படைத்தான் என்றோ நாத்திகர்கள் ஒருபோதும் கூறவில்லை. அவர்கள் கூறுவதெல்லாம் யாராலும் முன்திட்டமிடப்படாத, தற்செயலான ஒரு வினை என்றுதான் கூறுகிறார்கள்.(கவனிக்கவும் தற்செயல் என்பதற்கு முன் திட்டமிடப்படாதது என்பதைத் தவிர வேறெந்தப் பொருளும் இல்லை)

    அறிவியல் ரீதியான காரணங்கள்:
    1. எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் என்று எதுவுமில்லை.
    2. தொடக்கமோ முடிவோ இல்லாத பொருள் என்று எதுவும் இல்லை.
    3. எந்த ஒரு பொருளையும் சாராமலும், எந்த ஒன்றிலிருந்து சார்பு பெறப்படாமலும் எதுவுமில்லை.

    வரலாற்றுரீதியான காரணங்கள்:
    1. ஆதி மனிதர்கள் வாழ்வில் கடவுள் எனும் நிலை இருந்ததற்கான எந்த சான்றும் கண்டறியப் படவில்லை.

    ReplyDelete
  165. 3
    2. பூமியில் மனிதன் எனும் உயிரினம் தவிர ஏனைய உயிரினங்களுக்கு கடவுள் எனும் உணர்வு இல்லை.

    சமூக ரீதியான காரணங்கள்:
    1. கடவுளின் தகுதிகள் கூறும் படியான ஆற்றல் இருந்திருந்தால் மனித வாழ்வில் அது செலுத்தியிருக்கும் தாக்கம் மக்களிடம் கண்டறியப்படவில்லை. தெளிவாகச் சொன்னால் தெளிவாகச் சொன்னால் மனித வாழ்வின் அறவாழ்வு விழுமியங்கள் அழிந்திருக்கின்றன.
    2. கடவுளிடமிருந்து கிடைத்தது என்று சொல்லத்தக்க, சோதித்தறியத்தக்க எதுவுமே கண்டறியப்படவில்லை.


    நாளையே கடவுள் இருக்கிறது என்பதற்கான சான்றுகள் கிடைத்தால் ஏற்றுக் கொள்ளத் தயார் என்று. பின் எப்படி அது அறிவியலுக்கு எதிரான நிலையாகும்? ஆனால் எது அறிவியலுக்கு எதிரான நிலை தெரியுமா? அறிவியல் இப்படி ஒன்று இருக்கிறது அல்லது இப்படி ஒன்று இருக்கக் கூடும் என்று யூகமாகக் கூட குறிப்பிடாத போது அது உறுதியாக இருக்கிறது என்று கூறுகிறீர்களே அது தான் அறிவியலுக்கு எதிரான நிலைபாடு

    கடவுள் மறுப்பு என்பதை நான் நம்பிக்கையாக கூறவில்லை உறுதியாக மறுக்கிறேன். எப்படி? அறிவியல் ரீதியாக, வரலாற்று ரீதியாக, சமூக ரீதியாக கடவுள் என்ற ஒன்று இருப்பதற்கான எந்தத் தடயமும் இதுவரை கிடைக்கவில்லை. கடவுளின் துணைநிலைகளும் இப்படியான எந்த தடயங்களும் இல்லாதிருக்கின்றன. அதுமட்டுமன்றி, துணை நிலைகள் இடையறாது இயங்கிக் கொண்டிருக்கும் போதும் அந்த இயங்கு விசைகள் கண்டறியப்பட முடியாததாக இருக்கிறது. மட்டுமல்லாது எக்காலத்திலும் அதைக் கண்டறிய முடியாது என ஆத்திகர்கள் கூறுகிறார்கள். எனவே தான் நான் கடவுள் இல்லை என மறுக்கிறேன். இது சான்றாதாரங்களின் அடிப்படையிலான என்னுடைய நிலைப்பாடு. அதேநேரம் எதிர்காலத்தில் கடவுள் குறித்தோ, அதன் துணை நிலைகள் குறித்தோ ஏதேனும் சின்னஞ்சிறு தடயம் கிடைத்தாலும் கூட என்னுடைய நிலையை மாற்றிக் கொண்டு கடவுளை ஏற்றுக் கொள்வதாக கூறியிருக்கிறேன். இது சாத்தியங்களின் அடிப்படையிலான என்னுடைய நேர்மை. மறு பக்கம் ஆதாரங்களோ சான்றுகளோ எதுமற்ற நிலையிலும் கூட பேரண்டத்தை படைத்துவிட்டு மனிதனின் தினப்படி வாழ்வில் குறுக்கிடாதிருக்கும் கடவுள் என்றால் அதை ஏற்பதில் எனக்கு ஆட்சேபனை ஏதுமில்லை என்று தெரிவித்திருக்கிறேன். இது உலகின் கோடிக்கணக்கான மக்கள் அதில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் எனும் அடிப்படையில் எழுந்த என்னுடைய பரிசீலன///

    தேவைப்பட்டால் மீண்டும் வருவேன்.

    ReplyDelete
  166. அன்பு சகோ செங்கொடி.,

    கடவுள் என்பது என் நம்பிக்கையென்று ஏதோ நேற்று புதிதாக பேசுவதுப்போல புளாங்காகிதம் அடைந்து வீட்டீர்கள்., நான் கடவுளை நேரில் பார்த்து ஏற்றுக்கொள்ளவில்லை, ஆக கடவுளை எப்போது நான் ஏற்றேனோ முதலில் அது நம்பிக்கை எனும் வட்டத்தில் தான் வரும்.

    ஆனால் பொதுவில் பிறரை பின்பற்ற அழைத்தால் தம் தரப்பை நியாயப்படுத்த ஆதார தரவுகள் தர வேண்டும்.

    அதன் அடிப்படையில் கடவுள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை தர்க்கரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் இந்த சமூகமும், அறிவியலும் பதில் தரா கேள்விக்களுக்கு மத்தியில் நிறுத்தி இருக்கிறேன்.


    ஆக கடவுள் ஏற்பு என்பது முதன்மையாக எனது நம்பிக்கையென்று கருத்திட்டேன். ஆனால் பாருங்கள், கடவுள் மறுப்பு தெரிவுறுத்தப்பட்ட உறுதியான என் நிலைப்பாடு என கொக்கரிக்கும் நீங்கள் வழக்கம் போல இந்த பின்னூட்டம் வரை ஆதார தரவுகள் தர வில்லை.

    கடவுள் ஏற்புக்கு நான் ஆதாரம் தரவில்லையென சொல்லி அதை நம்பிக்கையென்றால் நான் முன்னிருத்தும் கேள்விகளுக்கு தற்செயலையும், எதிர்க்காலத்தையும் பதிலாக தந்தால் பகுத்தறிவுக்கொண்டு ஒன்றை சிந்திப்பதற்கு டார்வினிச கோட்பாடுகளை விட இவை மோசமான ஊகங்கள் என்று தான் சொல்வேன். உங்கள் பரிசீலனை பெயரளவில் மட்டும் இருக்க வேண்டாம் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்

    ஆக செங்கொடி, கடவுளை மறுக்கும் புள்ளிகள்
    ஆதார ரீதியாக
    தெளிவாக
    சான்றாக
    முடிவுறுத்தப்பட்ட
    நம் கை மேல் இருக்கும் ஆவணங்களாக இருக்கும் பட்சத்தில் அதை இங்கே இரண்டே வரிகளில் பதியுங்கள்.
    கடவுள் இல்லை என ஏற்றுக்கொள்ளலாம்.

    அதுவரை கடவுள் மறுப்பு சந்தர்ப்பவாத நிலையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சித்தாந்தம் மட்டுமே என்பதை வழக்கம்போல் ஏனைய ஆக்கங்களிலும் இன்னும் அழுத்தமாக தொடர்வேன். இன்ஷா அல்லாஹ்

    அப்படியில்லாமல் வழக்கம் போல் பின்னூட்டத்தில் புலம்பி தள்ளிக்கொண்டிருந்தால் கடவுள் மறுப்பு என்பது கடவுள் ஏற்புக்கு எதிராக ஒரு சமூகம் கொண்ட அவ நம்பிக்கை மட்டுமே என்பதை இங்கே படிக்கும் எல்லோரும் அரிந்துக்கொள்வார்கள். அதை நீங்களும் பின்பற்றி தான் தீருவேன் என்றால் அதற்கு நான் ஒன்றும் செய்வதற்காகாது.

    உங்கள் சகோதரன்
    குலாம்.

    ReplyDelete
  167. அன்பார்ந்த நான் முஸ்லிம் தள வாசகர்களே,

    நடுவராக இருக்க நான் அழைத்த நண்பர் ஹைதர் அலி அவ்வாறு இருக்க விருப்பமில்லை என்று தெரிவித்திருக்கிறார். எனவே இந்த என் பதிவே இத்தளத்தில் கடைசியாக இருக்கும்.

    \\\கடவுள் என்பது என் நம்பிக்கையென்று ஏதோ நேற்று புதிதாக பேசுவதுப்போல புளாங்காகிதம் அடைந்து வீட்டீர்கள்., நான் கடவுளை நேரில் பார்த்து ஏற்றுக்கொள்ளவில்லை, ஆக கடவுளை எப்போது நான் ஏற்றேனோ முதலில் அது நம்பிக்கை எனும் வட்டத்தில் தான் வரும்/// தம்பி குலாம் இப்படி கூறியிருக்கிறார். இந்த விவாதத்தின் தலைப்பு என்ன? கடவுள்: வெற்று நம்பிக்கையா? உறுதியான இருப்பா? என்பது தானே. என்றால் முதலிலேயே தம்பி கூறியிருக்கலாமே. கடவுள் என்பது நம்பிக்கை தான் உறுதியான இருப்பல்ல என்று. அப்படியல்ல இரண்டும் இரண்டு நிலைகள். கடவுள் என்பது வெற்று நம்பிக்கைதான் என்பதற்கும், நான் கடவுளை நம்புகிறேன் என்பதற்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது. இந்த விவாதம் கடவுள் என்பது நம்பிக்கையா இருப்பா எனும் தலைப்பில் நடந்தது. ஆனால் குலாம் இன்று கூறியிருப்பது நான் நம்புகிறேன் என்பது. இதைத்தான் திருகு தாளம் என்பது. மட்டுமல்லாது, நான் ஏதோ புளகாங்கிதம் கொண்டுவிட்டதைப் போல் தம்பி எழுதியிருக்கிறார். இது குறித்து நான் எழுதியிருந்தது என்ன? \\\இது போன்று முன்பும் எழுதியிருக்கிறார். ஆனால் மீண்டும் மீண்டும் இப்படி எழுதிக் கொண்டிருப்பது உண்மையை பொய் போல சொல்கிறார் என எண்ண வைக்கிறது/// இதன் பொருள் என்ன என்பதை தம்பி விளங்கிக் கொள்ள மாட்டார், உங்களுக்கு புரிகிறது தானே. அது சரி தம்பி என்ன புதிதாகவா பொய் சொல்கிறார். விட்டு விடுவோம்.

    கடவுள் ஏற்பு என்பதற்கு தம்பி முன் வைத்தவை எதிர் நிலைக் கேள்விகள் மட்டுமே. அவைகள் அனைத்திற்கும் நான் எதிர்கொண்டு பதிலளித்திருக்கிறேன். தொடர்ச்சியில் பதிலளிக்காமல் இருப்பது தம்பி குலாம் தான் என்பதும்; கடவுள் மறுப்பு என்பதை நான் அறிவியல் ரீதியாக, வரலாற்று ரீதியாக சமூக ரீதியாக இவற்றினூடான விளக்கங்களின் வழியாக நிரூபித்திருக்கிறேன். இவற்றின் தொடர்ச்சியிலும் பதிலளிக்க முடியாமல் நின்று கொண்டிருப்பது தம்பி குலாம் தான் என்பதும், தொடக்கத்திலிருந்து இவ்விவாதத்தை படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்குத் தெரியும். ஆனால் ஒரு போதும் தம்பி அதை ஒப்புக் கொள்ளமாட்டார், ஏனென்றால் அவர் மதவாதி. இந்த ஒற்றைச் சொல்லுக்கு மேல் வேறு விளக்கங்கள் தேவையில்லை என எண்ணுகிறேன்.

    நான் எப்போதும் கேட்க விரும்பும் கேள்வி இது தான். தேடலின் கேள்விகள் உங்கள் நம்பிக்கைக்கு வெளியே நீளும் போது ஏன் அவைகளை வெட்டி விடுகிறீர்கள்? வளர அனுமதியுங்கள் அப்போது தான் நீங்கள் பூந்தொட்டிக்குள் பெருமரங்களை வளர்க்க எண்ணுகிறீர்கள் என்பது புரியும்.

    இந்த பின்னூட்டங்களை சில காலம் கழிந்து சத்தமின்றி தம்பி குலாம் நீக்கி விடமாட்டார் என்றே எண்ணுகிறேன். ஏனென்றால் வாசகர்கள் மட்டுமல்ல, சில காலம் கழிந்து தம்பி குலாம் கூட மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும்.

    தம்பி குலாம் அவரது வெற்று நம்பிக்கையை வலியுறுத்தி ஒன்றல்ல ஆயிரம் இடுகைகளை எழுதிக் கொள்ளலாம். அதில் எனக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லை. ஆனால் விவாதம் என்று வந்துவிட்டால் அதில் நேர்மை இருக்க வேண்டும். நேர்மையாய் இருக்க முடியாது என்றால் விவாதிக்க முன்வரக் கூடாது. இதை மட்டும் தான் நான் தம்பி குலாமுக்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

    இந்த விவாதம் மின்னூல் பதிப்பாக பின்னர் வெளியிடப்படும் போது அந்த சுட்டி இங்கும் பகிரப்படும்.

    மற்றப்படி இதுகாறும் இந்த தலைப்பில் நடந்த வாதங்களை கவனித்துக் கொண்டிருந்த, சிந்தையில் பதித்துக் கொண்ட அனைவருக்கும் என்னுடைய நன்றி. இதற்கான களம் அமைத்துத் தந்து விவாதித்த தம்பி குலாமுக்கும் நன்றி.

    தோழமையுடன்
    செங்கொடி

    ReplyDelete
  168. அன்பு சகோ,, செங்கொடி.,

    //நடுவராக இருக்க நான் அழைத்த நண்பர் ஹைதர் அலி அவ்வாறு இருக்க விருப்பமில்லை என்று தெரிவித்திருக்கிறார். //
    ?
    இங்கே விவாதம் உங்களுக்கும் எனக்கும் இடையிலான குடும்ப பிரச்சனைக்குறித்தா...?
    சகோ எனக்கு அதிகம் விளக்க நேரமில்லை. ஏதோ தேர்தல் களத்தில் வாக்குறுதிகளை வீசும் வேட்பாளரை போல வாய்க்கு வந்த வார்த்தைகளை அள்ளி விடாதீர்கள். வாசகம் அமைக்க அது உதவுமே தவிர அவை உண்மை பெற வாய்ப்புக்குறைவு.
    என் மையப்புள்ளி கேள்வியான கடவுள் மறுப்புக்கு நிருபிக்கப்பட்ட ஆதாரத்தை ஒரே வரியில் பதிலாக தரப்படாதவரை இன்னும் ஆயிரம் பின்னூட்டங்கள் தொடர்ந்தாலும் அதன் மூலம் உங்கள் ஊகங்களால் உறுதிப்பாட்டை நிருபிக்க முடியாது.
    //இந்த பின்னூட்டங்களை சில காலம் கழிந்து சத்தமின்றி தம்பி குலாம் நீக்கி விடமாட்டார் என்றே எண்ணுகிறேன். ஏனென்றால் வாசகர்கள் மட்டுமல்ல, சில காலம் கழிந்து தம்பி குலாம் கூட மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும். //

    சில காலம் அல்ல., நான் முஸ்லிம் தளம் இருக்கும் வரை கூட இந்த பின்னூட்டங்கள் நீக்கப்படாது,. இன்ஷா அல்லாஹ்., உங்கள் பின்னூட்டம் மட்டுமில்லை, என்னை நோக்கி வரும் அனைத்து எதிர்மறை பின்னூட்டங்களையும் அவ்வபோது அசை போடும் பழக்கம் உள்ளவன் தான்.,
    என்னைக்குறித்து கவலைப்படாதீர்கள் . உங்கள் ஓய்வு நேரத்தையும் உண்மையான தேடுதலின் பால் செலுத்துங்கள்.
    சுய பரிசோதனை தருணங்கள் நிச்சயம் உங்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்து வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    உங்கள் சகோதரன்
    குலாம்.

    ReplyDelete
  169. இந்த விவாதத்தின் மின்னூல் பதிப்பு செங்கொடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேடலுள்ளவர்கள் காண்க.
    நூலகம் பகுதியில், விவாதம் எனும் தலைப்பில் 30 ம் இலக்கமிடப்பட்டுள்ள நூலாக இருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் எப்போது வேண்டுமானாலும் தரவிறக்கிக் கொள்ளலாம்.

    http://senkodi.wordpress.com/library/

    ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்