
பொய் சொல்லுவியாடா... -ஏதோ போலி காரணம் சொல்லி காலையில் ஸ்கூலுக்கு போக மறுத்த மகனை அடித்து பொய்க்கு எதிரான சீர்திருத்தத்தை தொடங்கும் நாம். அப்பா வீட்டுல இல்லேன்னு சொல்லு கண்ணு... மொபைலில் கடன்காரனிடம் சொல்லப்பணிக்கும் மாலை பொழுகளில் ஏனோ மறக்க தான் செய்கிறோம்...
இன்று பொய் பேசுபவர்கள் யாரும் இல்லை என்பதை விட பொய் பேசாதவர்கள் நம்மில் யாரும் இல்லையென்றே சொல்லலாம். விளையாட்டிற்காகவோ, பிறர் சிரிக்க வேண்டுமென்பதற்காகவே சொல்லும் பொய்யானது இந்த சமூகத்தின் பார்வையில் ஒரு பொழுதுப்போக்காகவே பேசப்படுகிறது. அதைவிட ஆச்சரியமான விசயம் பொய் என்பது ஒரு சமூகத்தீமையாக கூட கணக்கில் எடுத்துக்கொள்ள படுவதில்லை.
உணவகங்களில், வர்த்த நிறுவனங்களில், தெருவோர கடைகளில், மக்கள் கூடும் வியாபார தளங்களில் இயல்பாகவே மக்கள் பொய் பேசும் நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. பொய் பேசுவது என்பது வேலை பெற நமது கூடுதல் தகுதியுடன் இன்று சேர்க்கப்பட்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை.
இன்று பலரும் பிறர் மத்தியில் தமது ஹூரோயிஸம் பேசப்பட வேண்டும் என்பதற்காக பொய் பேசுவதை ஒரு ஆயுதமாக வைத்திருக்கிறோம். தீமையென்று உணரமாலே இந்த சமூகத்திற்கு எதிராய் ஒன்றை நாம் செய்துக்கொண்டிருக்கிறோமென்றால் அது 'பொய்'. என்று சொல்வதில் பொய்யில்லை.!
இப்படி தனி மனித ஒழுக்கத்திற்கும், பிறர் நலனுக்கும் கேடுவிளைவிக்கும் இத்தகைய செயலை விட்டொழிக்க தெளிவான எச்சரிக்கையை நபி (ஸல்) அவர்கள் மனிதக்குலம் முழுமைக்கும் மிக கவனமாக பிரகனப்படுத்தினார்கள்.
ஒருமுறை நபித்தோழர்களில் ஒருவர்.,
'நம்பிக்கையாளர் கோழையாக இருக்க இயலுமா?' என நபிகளாரிடம் வினவப்பட்ட போது, அதற்கு 'ஆம்' என்றனர். 'கஞ்சனாக இருக்க இயலுமா?' என்றபோது அதற்கும் 'ஆம்' என்று பதிலளித்தனர். 'பொய்யனாக இருக்க இயலுமா?' என்று கேட்டபோது அதற்கு அவர்கள், 'இல்லை (இருக்க இயலாது)' என்று பதிலளித்தார்கள்.
இறைவனுக்கு இணைவைத்தல் இஸ்லாத்தில் மன்னிக்க முடியாத குற்றமாக இருக்கிறது. அத்தகைய இணை வைத்தல் எனும் முதன்மை பாவப் பட்டியலில் பொய் பேசுவதையும் இணைத்தார்களென்றால் பொய் தவிர்க்க பட வேண்டிய ஒன்று என்பதை, இதை விட ஒரு இறை நம்பிக்கையாளனுக்கு எளிதாக அழுத்தமாக புரிய வைத்திட முடியாது.
வாழ்வில் மோட்சம் அடைய இறைவனை வழிப்பட்டால் போதுமானது என ஆன்மிகவாதிகள் உபதேசித்துக்கொண்டிருக்க
இறை நம்பிக்கையாளர் ஒருக்காலும் பொய் சொல்வராக இருக்க முடியாதென்பதை மிக தெளிவாக கோடிட்டு அப்படி பொய் சொல்பவராக இருந்தால் அவரது இறை நம்பிக்கையானது அர்த்தமற்றது என ஆன்மிகத்திற்கு புது இலக்கணம் வகுத்தவர்கள் முஹம்மது ஸல்...
அதனால் தான்
அகிலத்தின்
அருட்கொடை
அவர்கள்...
-இன்ஷா அல்லாஹ் வளரும்
Tweet | |||||
No comments:
Post a Comment
ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!