"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Tuesday, December 27, 2011

கடவுளை விமர்சிக்கும் ஓர் அறிவாளி?


                                                        ஓரிறையின் நற்பெயரால்

கடவுள்!
மனித சமூகத்தோடு பிண்ணி பிணைக்கப்பட்ட ஒரு வார்த்தை. இருத்தன்மைகளில் கடவுளை மையப்படுத்தியே மனித வாழ்வு இருக்கிறது.
ஒன்று கடவுளை ஏற்று மற்றொன்று கடவுளை மறுத்து.

 கடவுளை ஏற்பதென்பது அவர்கள் சார்ந்த மத/ மார்க்கத்தின் ஊடாக பிறப்பின் அடிப்படையில் இயல்பாக உருவாகும் நம்பிக்கை சார்ந்த விசயமாக தொடங்கி, பிறந்த இடம், வளர்ந்த சூழல், மற்றும் ஆய்தறிவும் எண்ணங்கள் போன்றவற்றின் தாக்கத்தால் கடவுளின் மீதான நம்பிக்கையை அதிகரித்து வாழும் மக்கள்.

அதைப்போல சுற்றுசூழல், வர்த்தரீதியான சமூகப்பின்னணியில் தம் வாழ்வை தொடர்ந்து பிரிவினைவாதம், அறிவுக்கு பொருந்தாத மூட நம்பிக்கைகள், மதத்தின் பெயரால் அனாச்சாரியங்கள், கடவுளுக்கே பூஜை புனஷ்காரங்கள் போன்றவற்றை பார்த்து சிந்தனை வயப்பட்டு தம்மை "நாத்திகவாதியாக" அடையாளப்படுத்திக்கொண்டு இச்சமூகத்தில் கடவுளை எதிர்த்து அல்லது மறுத்து உலாவரும் மக்களில் ஒரு பிரிவினர்.

ஆக இருபாலருக்கும் தங்களுக்கு எது உணர்த்தப்படுகிறதோ, தங்களின் சிந்தனையில் எது உதிக்கிறதோ அதுவே அவர்கள் சார்ந்து செயல்படுவதற்கு பிரதான காரணமாகிறது.

ஆத்திகர்கள், கடவுளின் பெயரால் தமக்கு போதிக்கப்படுபவற்றை மையமாக வைத்தே கடவுளை ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் தாங்களோ ஆய்வு ரீதியாக சிந்தித்து அதில் காணக்கிடைப்பதை மட்டுமே ஏற்றுக்கொள்வதாக  சொல்கின்றனர் நாத்திகர்கள்.

உண்மைதான். ஆய்ந்தறியாத எந்த செயலின் உண்மை நிலையும் முழுவதும் நம்பகத்தன்மை வாய்ந்ததல்ல என்பது ஏற்புடையது தான். ஆனால், அறிவியலால் எல்லா செயல்களையும் முழுவதும் ஆய்தறிந்து உண்மையான தகவல்களை தர முடியாது. தரும் வரையில் பொறுத்திருந்தால் நம்மால் எந்த செயலையும் முழுமையாக செயல்படுத்த முடியாது.

அதுவரை பொய்பிக்காத நிகழ்வை மட்டுமே உண்மையெனும், அதையே நாம் ஏற்றுக்கொள்கிறோம். இன்னும் அறிவியல் மெய்படுத்தாத விசயங்களும் உலகில் உள்ளன. அதையும் நாம் ஏற்றுதான் கொள்கிறோம். அதனால் தான் கெடு தேதிக்கு முன்னமே கெட்டுப்போகும் உணவுப்பொருட்களுக்கும், காலாவதியாகும் தேதி முடிந்தும் இயங்கும் பேட்டரி போன்ற பொருட்களுக்கும் நாம் அறிவியல் முரண்பாட்டை அங்கு கற்பிப்பதில்லை.

அறிவியலால் நிருபிக்கப்படாமலும் ஒன்றை நாம் உண்மைப்படுத்தலாம்.  ஆம்!  ஒருபுறம் தலை, மறுபுறம் பூ என இரு பக்கங்களைக்கொண்ட நாணயம் சுண்டிவிடப்படும் போது தலை அல்லது பூ என நம்மால் நூறு சதவீகிதம் சரியான பதிலை சொல்ல முடியும். அதுவும் ஒரு முறையல்ல... ஆயிரம் முறைக்கூட நம்மால் சொல்ல முடியும். ஆனால் அவையெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நமக்கு கிடைத்த முடிவுகளை வைத்தோ அல்லது நமது சிந்தனைரீதியான அறிவை வைத்தோ அல்ல.. வெற்று ஊகங்களை வைத்து மட்டுமே அவற்றை உண்மைப்படுத்துகிறோம்.

இப்படியான கடவுள் குறித்த அனுமானங்கள் - எண்ணங்களை தான் அறிவியலா(க்)க பெரும்பாலான நாத்திகர்கள் நினைக்கிறார்கள் 

சரி, சிந்தனைரீதியாக எடுக்கும் முடிவுகளும் முழுவதும் சரியாக இருக்கவும் வாய்ப்பில்லை. ஏனெனில் நமது சிந்திக்கும் திறன் நாம் பெற்ற அறிவின் அளவிற்கு மட்டுமே செயல்பட முடியும். ஆகவே தான் சில நேரங்களில் மற்றவர்களின் பார்வையில் சரியாக தெரிகின்ற ஒரு செயல் நமது சிந்தனைக்கு தவறாக தெரிந்தும், நிதர்சனமாக பின்னாளில் உணரும் போது பிறரின் நிலைப்பாடே சரியானதாக நமக்கு படுகிறது. இதை நம் வாழ்நாளில் பலமுறை உணர்ந்தும் இருப்போம்,

காரணம், நமது சிந்தனைக்கு உட்பட்டே எல்லா முடிவுகளையும் நாம் எடுக்கிறோம். நமது சிந்தனையின் திறம் தாண்டி செயல்படும் பிறரால் அச்செயலின் தன்மை ஆராயப்படும் போது நமது தவறு தெளிவாய் விளங்கும். இப்படி மனிதர்களுக்கு மனிதர் சிந்தனை மாறுபடுவதால் ஒரு செயலில் உண்மையான விளைவு நாம் எடுக்கும் முடிவுக்கு நேர்மாறாக இருக்கவும் வாய்ப்ப்பிருக்கிறது. 


ஒன்றை குற்றப்படுத்தவோ விமர்சிப்பதாகவோ இருந்தால் விமர்சனத்திற்கு உள்ளாகும் அந்த நிலைகளை விட விமர்சிக்கும் நிலை மேலான தன்மைகளை கொண்டிருக்க வேண்டும்.

அதாவது, கடவுளை மனிதன் விமர்சிப்பதாக இருந்தால் கடவுளின் விளக்கப்பட்ட எல்லா தன்மைகளையும் விட விமர்சிக்கும் மனித அறிவு ஒரு படி மேல் இருக்கவேண்டும். குறைந்த பட்சம் கடவுளின் தன்மைகளோடு சமமான அறிவையாவது மனிதன் பெற்றிருக்க வேண்டும்.

ஆக்ஸிஜன் முதல் முதல் ஆகாய விமானம் வரை எந்த ஒன்றின் தன்மையும் விமர்சிக்க அல்லது குற்றப்படுத்த ஒரு துணை சாதனத்தின் உதவிக்கொண்டு ஆராயும் நாம்...கடவுள் என்ற நிலையை மட்டும் புறக்கண்ணில் தெரியும் காட்சிகளையும் நமக்கு மட்டுமே திருப்தியை ஏற்படுத்தும் நமது பகுத்தறிவின் வெளிப்பாட்டையும் வைத்து விமர்சிப்பது எப்படி பொருத்தமான செயலாக இருக்கும்?

பேரண்ட படைப்பாளனான கடவுளை அதுவும் அவன் சார்ந்த இனத்தில் அவன் ஒருவன் மட்டுமே இருக்கும் போது அவன் செயலை / தன்மைகளை விமர்சிக்க நமதறிவை அளவுகோலாக வைப்பது எப்படி சாத்தியமாகும்? ஏனெனில் கடவுள் சார்ந்த இனம் என்னவென்றே அறியாதபோது நாம் பெற்ற அறிவை உலகின் உச்சமாக வைத்து கடவுளை குறைப்படுத்தி விமர்சிப்பதென்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்?

ஆனால் மனித அறிவு மற்றோருவருடன் ஒப்பிடாதவரை மட்டுமே நிறைவானதாக நம்ப முடியும். அவனைக்காட்டிலும் அறிவார்ந்தவருடன் ஒப்பிடும் போது குறைப்படுத்தபடுகிறது.

இலட்சகணக்கான யுகங்களாக பயணிக்கும் இவ்வுலகத்தில் முடிவுற்ற பெரும்பாலான நிகழ்வுகளுக்கே காரணம் கண்டறியப்படா நிலையில் சிறுப்புள்ளியாய் தோன்றி மறையும் மனிதன் பேரண்ட விதிகளை தாண்டி செயல்படும் முடிவுறா நிலையில் இயங்கும் ஒன்றை விமர்சிக்கும் அறிவாளியாக தன்னை சொல்லிக்கொள்வது தான் ஆச்சரியமான அறியாமை!

                                                    அல்லாஹ் நன்கு அறிந்தவன்

21 comments:

  1. ஸலாம் சகோ.குலாம்,
    நல்ல பதிவு. இந்த நிகழ்தகவு பற்றி நான் முன்பு ஒரு பதிவில் சொல்லி இருக்கிறேன். பூவா தலையா 50:50 சொல்லி விடலாம். ஆனால், ஒரு தேன்கூட்டில்..?
    சிந்திப்போருக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன இவ்வுலகில். இறைவனை அறிய.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ குலாம்!

    சிறந்த பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வாழ்த்துகள்.


    தாங்களின் சிறப்பான‌ பணி தொடரட்டும்........

    ReplyDelete
  4. வ அலைக்கும் சலாம் வரஹ்

    சகோ @ சிட்டிசன்

    // பூவா தலையா 50:50 சொல்லி விடலாம்//

    இப்படியான ஊகங்களில் அவர்கள் எடுக்கும் முடிவுகள்தான் கடவுள் மறுப்புக்கு அல்லது கடவுள் இல்லையென்ற நிலைக்கு ஆதரவாக கொள்கின்றனர்.

    //ஆனால், ஒரு தேன்கூட்டில்..?//

    சிந்திக்க வேண்டும் அவர்கள்...

    கருத்திற்கு ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

    ReplyDelete
  5. வ அலைக்கும் சலாம் வரஹ்

    சகோ @ சுவனப்பிரியன்

    வருகைக்கும் கருத்திற்கும்
    ஜஸாகல்லாஹ் கைரன் நன்றி
    சகோ

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    அன்பு VANJOOR அப்பா.,

    வருகைக்கும் துஆவிற்கு நன்றி

    ஜஸாகல்லாஹ் கைரன்

    ReplyDelete
  7. ஒரு முடிவை மனதில் வைத்து கொண்டு, எதை ஆராய்ந்தாலும் சரியான பதில் கிடைக்காது, இதைத்தான் நம்மில் பலர் செய்து கொண்டிருக்கிறோம், எதையும் அறிந்து கொள்ளும் நோக்கத்தோடு ஆராய்தல் வேண்டும் ...

    நல்லா சொல்லியிருக்கீங்க ...

    ReplyDelete
  8. Kadavulai vimarsikkum thaguthi manithanukku kidaiyathu. Vimarsippavan Moodan aavaan.

    ReplyDelete
  9. Dont trust the christian khafir

    5:72. “நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்” என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: “இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.

    5:51. முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.

    9:30. யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?

    ReplyDelete
  10. இஸ்லாம் சம்மந்தமான உங்கள் பதிவுகள் அருமை.....இனியும் இது தொடரட்டும் இன்ஷா அல்லாஹ்......
    அன்பு நண்பர்களே இஸ்லாத்திற்கு எதிரான பதிவுகளுக்கு பதில்தேட tvpmuslim.blogspot.com பாருங்கள்.அந்த தளத்தில் இணையுங்கள்....உங்கள் கருத்துகளை பதியுங்கள்....
    புதிய பதிவுகள்: நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி 1), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி-சூடான விவாதம்

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    அன்பு சகோ @ ஜமால்

    //ஒரு முடிவை மனதில் வைத்து கொண்டு, எதை ஆராய்ந்தாலும் சரியான பதில் கிடைக்காது, இதைத்தான் நம்மில் பலர் செய்து கொண்டிருக்கிறோம், எதையும் அறிந்து கொள்ளும் நோக்கத்தோடு ஆராய்தல் வேண்டும் ...//

    உண்மை சகோ., நமக்கு இப்படிதான் பதில் வேண்டும் என்ற கோணத்தில் எதையும் ஆராயும் போது கிடைக்கும் பதில்கள் நடுநிலையாக இருந்தாலும் கூட நம்மால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது...


    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
    ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

    ReplyDelete
  12. அன்பு சகோ @ துரைடேனியல்
    //Kadavulai vimarsikkum thaguthi manithanukku kidaiyathu. //

    நிச்சயமாக., ஏனெனில் கடவுளை விமர்சிக்க அல்லது குறைப்படுத்த நாம் வைத்திருக்கும் அளவுகோல் கடவுளின் நிலையை விமர்சிக்கும் வகையில் இல்லையென்பதே இங்கு நாம் சொல்ல வருவது.

    மனித உருவாக்க சாதனங்களை மட்டுமே வைத்திருந்து அதில் மனிதன் கண்டறிந்த குறியீடுகளை மட்டுமே பயன்படுத்தி அதில் கடவுளை பொருத்தி விமர்சிப்பதென்பது அவனின் அறியாமையை தான் காட்டுகிறது சகோ

    //Vimarsippavan Moodan aavaan.//
    இல்லை சகோ இந்த கருத்தில் என்னால் முழுவதும் உடன்பட முடியவில்லை.. ஏனெனில் பொதுவில் வைக்கும் எதன் மீதும் விமர்சனம் என்பது தவிர்க்க இயலாதது. அது யாராகிலும், எந்த நிலையில் இருந்தாலும் ....

    ஆனால் கடவுளை விமர்சிப்பதாக இருந்தால் முதலில் நாம் கடவுளை குறித்து நமக்கு விளக்கமாக அறிந்திருக்க வேண்டும். அப்போது தான் கடவுள் மீதான விமர்சனம் என்பது நியாயமானது. ஆனால் கடவுளை விமர்சிக்கிறேன் என்றே பெயரில் இன்று கடவுளாக உருவகப்படுத்தப்பட்டவற்றை மட்டுமே விமர்சித்துக்கொண்டிருப்பது தான் மூடத்தனம்.

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ

    ReplyDelete
  13. ஆழமான வசனங்களை முன்னிருத்தி அழகான வாசகத்தை பதிந்து இங்கு "அரசியல்" பண்ண பார்க்கும் சகோ @ அனானி உங்கள் மீது சாந்தி நிலவட்டும்

    //Dont trust the christian khafir/

    உண்மைதான்... ஆனால் பாருங்கள் அவர்கள் மீது நம்பிக்கை (மற்றும் அவர்களுடன் நெருங்கிய நட்பு ) வைக்கவேண்டாம் கூறும் குர்-ஆன் வசனங்களிலெல்லாம். ஏன் அவ்வாறு கூடாது என்றும் தெளிவாக அல்லாஹ் கூறுகிறான்.. உங்கள் பார்வையில் அது படாதது ஆச்சரியமே.,

    //5:72. “நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்” என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்;//

    //9:30. யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; //

    இப்படி, இஸ்லாத்தின் அடிப்படைகளிலே ஒன்றுப்படாத இவர்களை முஸ்லிம்கள் உற்ற நண்பர்களாக்கி அதிக நம்பிக்கையாளாராக ஆக்க வேண்டாம் என அல்லாஹ் சொல்கிறேன்

    ஏனெனில் ..
    //5:51. முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்;//

    இந்த வசனத்திலே தெளிவாக " எதிரிக்கு எதிரி நண்பன் என்பதுப்போல" அவர்கள் முஸ்லிம்களுக்கெதிராக சதி செய்வார்கள் என்பதால்...

    மாறாக
    மோஸஸ் போதித்தப்படி வாழும் (உண்மை) யூதரையோ
    இயேசு போதனைப்படி வாழும் (உண்மை) கிறித்துவரையோ நோக்கி இவ்வசனங்கள் சுட்டவில்லை...

    இப்படி ஒரு வசனமும் குர்-ஆனில் இருக்கிறது. நீங்கள் காப்பி செய்த இடத்தில் இந்த வசனமும் நிச்சயமாக இருக்கும் தேடிப்பாருங்கள்...

    5:69. முஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

    ReplyDelete
  14. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    அன்பு சகோ @ திருவாளத்தூர் முஸ்லீம்

    //இஸ்லாம் சம்மந்தமான உங்கள் பதிவுகள் அருமை.....இனியும் இது தொடரட்டும் இன்ஷா அல்லாஹ்......//
    அல்ஹம்துலில்லாஹ் துஆ செய்யுங்கள் சகோ.

    இன்ஷா அல்லாஹ் உங்கள் தளத்தையும் பார்வையிட்டு வாய்ப்பிருந்தால் கருத்திடுகிறேன் சகோ

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
    ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

    ReplyDelete
  15. இப்பதிவின் மறுப்பு நல்லூர் முழக்கம் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் காண்க.

    http://nallurmuzhakkam.wordpress.com/2012/01/22/gulam-senkodi-4/

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோ செங்கொடி.

      உங்கள் மறுப்பு ஆக்கத்திற்கு நன்றி., ஆனால் பெரும்பாலான இடங்களில் பொருந்தமில்லாத வாதங்களை வைத்து இருக்கிறீர்கள்.

      இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்

      //இனி அவரின் ”கடவுளை விமர்சிக்கும் ஓர் அறிவாளி?” எனும் பதிவை எதிர் கொள்ளலாம். கடவுளை விமர்சிக்கும் அறிவாளிகள் என்று பொதுத் தலைப்பை தன் பதிவுக்கு இட்டிருந்தால் அதை பொதுவானதாக கருதியிருக்கலாம். ஆனால் ‘ஓர்’ எனும் இலக்க உருபை பயன்படுத்தியிருப்பதால் தனிப்பட்ட யாரையோ உத்தேசித்துத்தான் தன் பதிவை இட்டிருக்கிறார் என்பது புலனாகிறது. ஆனால் அது யார் என்பதை அவர் வெளிப்படுத்தாததால் (வெளிப்படுத்தினால் பதில் கூறும் கடமை வந்துவிடுமே) பொதுவில் நானும் ஒருவன் என்பதாகவே அதை அணுகுகிறேன். //

      இப்படி தொடங்குகிறீர்கள்...

      நன்று

      என்னைப்பொருத்த வரை ஒரு தலைப்புக்கு அதிக சிரத்தை எடுத்துக்கொள்வேன். தலைப்பு., முடிவுறா வாக்கியமாக, வஞ்சகபுகழ்ச்சி அணியில் அமைந்ததாக இருக்கவே பெரிதும் விரும்புவேன். அஃது இல்லாத வேளையில் மட்டுமே சாதரண எதிர் நிலை வாக்கியத்தை தேர்ந்தெடுக்கிறேன்.
      அப்படி தேர்ந்தடுத்த ஒரு தலைப்பு தான் இவ்வாக்கத்தின் தலைப்பு.

      வஞ்சக புகழ்ச்சியணியில் அமைந்த ஒரு முற்றுபெறா வாக்கியம் தான் இது. மற்றப்படி யாரையும் மையப்படுத்தியோ அல்லது யாரையும் விமர்சித்தோ தலைப்பிட்டு கருத்திடும் பழக்கம் எனக்கில்லை. அதற்காகவும் இந்த தளத்தை நான் உருவாக்கவும் இல்லை.
      அறிவாளிகள் என்பதை விட அறிவாளி என வைத்தால் இந்த பதிவின் தலைப்பு நன்றாக இருக்கும் என்ற எண்ணத்திலே இத்தலைப்பு இடுகை
      ஆக உங்கள் தலைப்பு குறித்த ஆய்வு தேவையில்லாது என்பதைவிட தேவையற்ற கருத்துக்கள் கொண்டிருப்பது தான் தேவையில்லாதது.,

      கைர் ஆக்கத்திற்கு வருவோம்.,

      // நண்பர் குலாம் அந்த பதிவை எழுதி வெளியிடுவதற்கு முன் சற்று சீர்தூக்கி பார்த்திருக்கலாம். என்ன சொல்கிறோம்? அதை எந்த அடிப்படையில் நின்று சொல்கிறோம்? அவைகளில் உண்மையோ பொருத்தப்பாடோ இருக்கிறதா? போன்ற எதுவும் அவருக்கு அவசியமில்லை. கடவுள் இருக்கிறார், அவர் இந்த பேரண்டத்தை நிர்வகிக்கிறார் என்பது அவரது நம்பிக்கை.//

      இது எந்த மாதிரியான புரிதல் என்று எனக்கு விளங்கவில்லை.

      நம்பிக்கை ஒன்று மட்டுமே எனது பிரதானதாக கூறுகிறீர்கள் அதை மட்டுமே நான் முன்னிலைப்படுத்தியிருந்தால் இதைபோன்ற ஆக்கங்கள் இங்கே தேவையே இல்லை.
      நான் நம்பும் இறைவனின் வார்த்தைகளையும், நபிகளாரின் பொன்மொழிகளையும் கோடிட்டு ஆக்கம் புனைந்தாலே போதும். இங்கு விமர்சனத்தையும் எதிர்பார்க்க மாட்டேன். எதிர்மறை பின்னூட்டங்களையும் வெளியிட மாட்டேன். தயவு செய்து எழுதுவதற்கு முன் சிறிது யோசித்து எழுதுங்கள்,

      Delete
    2. //கடவுள் இருக்கிறார் என்பதற்கு அறிவியல் ரீதியாகவோ, தர்க்க ரீதியாகவோ அல்லது வேறொந்த வடிவிலோ ஒரு நிரூபணமும் இல்லை. ஆனால் நம்பிக்கை சார்ந்த அந்த கற்பிதத்தை, அறிவியல் இன்னும் தொடாத உயரங்களில் நின்று கொண்டோ, மக்களின் அறிதல் ஐயங்களை பயன்படுத்திக் கொண்டோ சில கேள்விகளை எழுப்பிவிடுவதன் மூலம் மெய்ப்படுத்திவிட முனைகிறார்கள். //

      அதென்ன... ? அறிவியல் இன்னும் தொடாத உயரங்கள்

      ஆக அறிவியலும் இன்னும் கடவுள் மறுப்பை மெய்படுத்தவில்லை என்பது தான் தானே மெய். அது தான் உங்களின் புரிதலாகவும் இருக்கிறது.
      சகோ இங்கே யாரும் எதையும் மெய்படுத்த முனைவதில்லை. மெய்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை தான் சொல்கிறோம்.

      //ஒன்று இருக்கிறது என உறுதியாக கூறவேண்டும் என்றாலே அதன் இருப்பு ஐயந்திரிபற நிரூபிக்கப் பட்டிருக்க வேண்டும். அவ்வாறு நிரூபிக்கப் பட்டிருக்கவில்லை என்றால் அதை யூகமாக மட்டுமே கொள்ள முடியும். கடவுள் இருக்கிறார் என்பது ஐயந்திரிபற நீருபிக்கப்பட்டிருக்கிறதா? என்றால் இல்லை என்பார்கள். கடவுள் மெய்யாக இருக்கிறாரா? என்றால் ஆம் என்பார்கள். இந்த முரண்பாடுகளுக்கு இடையில் நம்பிக்கை எனும் பாலத்தை கட்டிவைத்திருக்கும் வரையில், அவர்களால் உண்மைக்கு அருகில் வரமுடியாது.//

      ஐயா
      இஸ்லாம் தெளிவாக இவ்வுலகம் சோதனைக்கூடம் என்றும் இவ்வுலக மக்கள் மத்தியில் கடவுளின் வெளிக்காட்டல் இருக்காது என வரையறுக்கும் போது அவர் குறித்த தன்மைகள் ஏனைய வழிகளில் தான் அறிய பட வேண்டுமே ஒழிய
      ஐயந்திரிபுற நிருபிக்கபட்டு கடவுளின் இருப்பு உணர்த்தப்பட வேண்டுமென்றால் எப்படி அவர் நேரடியாக நமக்கு முன்னால் வரவேண்டும் என்கிறீர்களா...?
      வந்தால் அல்லது நேரடியான குறிப்புகளால் உணர்த்தினால் அதை அறிந்துக்கொள்ள உங்களுக்கும் எனக்கும் பகுத்தறிவு தேவையில்லை.

      நம்பிக்கை விடுத்து எதையும் ஆராய்ந்து உண்மைப்படுத்துவதாக கூறும் அறிவியலுக்கும் அதே ஐயந்திரிபற நீருபிக்கபடல் பொருந்தும்...
      கடவுள் இல்லாமைக்கு எங்கே அறிவியல் சான்று?


      //கடவுள் மறுப்பு என்பது, கடவுள் இருப்பின் விளைவால் ஏற்பட்ட சீர்கேடுகளைக் கண்டு உருவானதல்ல. என்று கடவுள் எனும் சிந்தனை தோன்றியதோ அந்தக் கணமே அதன் மறுப்பும் தோன்றிவிட்டது. கடவுள் இருப்பு எப்படி மனிதச் சிந்தையில் தோன்றியதோ ஆதுபோலவே கடவுள் மறுப்பும் மனிதச் சிந்தையில் தோன்றியது தான். அதை மதத்தின் பெயரால் செய்யப்படும் மூடநம்பிக்கைகளைப் பார்த்து தான் தோன்றியது என்பது, கடவுள் இருப்பும் கடவுள் மறுப்பும் சமநிலையில் இருப்பதல்ல நிலை தாழ்ந்தது என்பதை உணர்த்தும் ஒருவித குறியீடு.//

      இல்லை, இது உங்கள் சொந்த கருத்தாக இருக்கலாம். அதை உங்களில் வாழ்விலிருந்தே மெய்படுத்தலாம்.

      எங்கே சொல்லுங்கள் இவ்வுலகை படைக்க ஒரு கடவுள் இல்லையென்பதாலோ அல்லது, பரிணாமமே மனித வாழ்வை வ(ள)ர செய்தது என்ற எண்ணமுமா உங்களின் கடவுள் மறுப்புக்கு காரணம்...?
      தவறான கடவுட் கோட்பாடுகள் நீங்கள் சார்ந்த கொள்கையில் இருக்கிறது உங்களின் மனம் உண்மைப்படுத்தியாக நீங்கள் உணர்ந்ததாலே நாத்திக பரிமாற்றம் .அத்தோடு சமூகம் உங்களை ஆட்கொண்ட விதம் உங்களின் பிறப்பில் உருவான மார்க்கத்தை துறக்க செய்தது., ஆக தற்போது உங்களுக்கு சாதகமான சூழலை மேற்கண்ட பதில் உருவாக்கி தந்தவுடன் உங்கள் தரப்பை மாற்ற முயல்கிறீர்கள்.

      எனினும் கலாச்சார மரபுகள் மதங்களை அடிப்படையாக வைத்து தொடரப்படுவதால் அதை சார்ந்து செயல்படுகிறீர்கள், அதற்கு கடவுள் இருப்பு மறுப்பு நிலை தேவையில்லையென என கூறி உங்கள் தரப்பை நியாயப்படுத்துகிறீர்கள்.

      கடவுளின் மறுப்பாளர்கள் ஒரு நிலையின் கீழ் தெளிவாக செயல்பட முடியாத போது அசெயலை மதம் கூறும் பிண்ணனியில் செயல்படுத்தி வருகிறார்கள். பெயர், திருமணம், உறவின் முறை போன்றவற்றில் இன்றும் தனித்து செயல்படுவதில்லை. அப்போது மட்டும் மதப்போர்வை தேவைப்படுகிறது.

      Delete
    3. //அறிவியல் விளக்கமளிக்காததை ஏற்பதும், அறிவியலை மறுப்பதும் வேறுவேறான நிலைகள். கடவுளை ஏற்பது என்பது அறிவியலை மறுக்கும் நிலை. விளக்கமளிக்காததையும் ஏற்பது என்பது அறிவியலை மறுக்கும் நிலையல்ல. தெளிவாகச் சொன்னால் அறிவியல் விளக்கமளிக்காத நிலை //

      சகோ இதை தான் நானும் சொல்கிறேன். அறுதிட்டு கூறப்பட்ட கேடுதேதிகளுக்கு பின்னோ அல்லது பின்னோ ஏற்படும் மாற்றங்களுக்கு நாம் அறிவியலில் ஏற்படும் குறைபாடாக முன்மொழிவதில்லை. ஏனெனில் அவை அது பொழுவது வரை உண்மைப்படுத்தியதை மட்டுமே சொல்லும். ஆக ஒரு முழுமைப்பெறாத ஒன்றை வைத்து எப்படி மிக தெளிவாக ஒன்றீன் மீது குற்றப்படுத்த முடியும்?

      // இது போல் மனித வாழ்வின் ஒவ்வொரு செயலும் அறிவியலுக்கு உட்பட்டே அமைகிறது. இவ்வாறு செயல்படும் அறிவியலை யாரும் மறுப்பதில்லை, மறுக்கவும் முடியாது, ஒருவர் கடவுளை ஏற்றாலும் மறுத்தாலும் இது தான் நிலை. இதில் எங்கிருந்து அறிவியல் மெய்பிக்காத நிலை வருகிறது? //

      இதை யாரும் மறுக்கவில்லை. உங்களின் மிக தெளிவான குழப்பத்திற்கு நீங்களே சான்று பகிர்கிறீர்கள். ஒரு உதாரணம்.,

      எல்லாம் இறைவன் நாட்டப்படித்தான் நடக்கும் என்றேன் நான்
      கடவுளை மறுப்பவர் எழுந்து நடந்துக்கொண்டே சொன்னார். இப்போது நானல்லவா நடக்கிறேன் எங்கே கடவுள் நடக்க வைக்கிறார். என்று இதுப்போல தான் உங்கள் உதாரணம் இருக்கிறது.

      எப்படி செய்கைகளை நடந்தேறுவது சமூகங்களில் சாத்தியமோ அப்படியான வழிகளில், சூழலில் நடத்த செய்வதே கடவுளின் வேலை. அதற்கு அறிவியலும் ஒரு கருவி அவ்வளவே!
      கடவுளை மெய்கடவுளை மறுபிக்க இங்கு யாரும் அறிவியலி பொய்பிக்கவில்லை. மாறாக கடவுளை மறுக்க அறிவியலை துணைக்கு அழைக்கும் மனிதர்களை நோக்கியே மெய்பிக்கும் அறிவியல் சோதனை!

      //சரி, ஒருவன் அறிவியலின் அடிப்படையில் சிந்தித்து எடுக்கும் முடிவுகள் எப்போதும் சரியாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறதா? இல்லை. எப்போதும் சரியாக இருப்பது சாத்தியமும் அல்ல. சரி, தவறு என்பதும் உண்மை என்பதும் எப்போதும் எல்லா இடத்திலும் பொருந்தக் கூடியதும் அல்ல. சூரியன் கிழக்கில் உதிக்கும் என்பது பூமியில் தான் உண்மை வேறொரு சூரியக் குடும்பத்திலுள்ள கோளில் சூரியன் கிழக்கில் உதிக்கும் என்று கூற முடியுமா? வேண்டுமானால் எந்த திசையில் உதிக்கிறதோ அந்த திசைக்கு கிழக்கு என பெயர் வைத்துக் கொள்ளலாம்//

      இதெல்லாம உங்கள் வார்த்தை ஜாலத்திற்கு வேண்டுமானால் வலுக்கூட்டலாம். இங்கு மனிதனின் வல்லமையாக் இறைவனின் இருப்பை தீர்மானிக்க வாய்ப்பில்லையென்பதே.
      மீண்டும் உங்களின்
      இருக்கலாம்
      செய்யலாம்
      முடியலாம்.. என்பதெல்லாம் கொள்ளலாம் தான்!

      Delete
    4. //பன்றியை உண்ணக்கூடாது என்பது முகம்மதியர்களுக்கான விதி. இந்த விதி எப்போதும் எல்லா இடத்திலும் பொருந்துமா? முக்காலமும் அறிந்த எல்லாவற்றையும் செய்யும் திறனுள்ளதாக இவர்களால் கூறப்படும் அல்லாவுக்கே எல்லா நேரத்திலும் இது ஒன்றே சரியானது என்று கூற முடியவில்லை //

      தமாஷ் பண்ணாதீங்க சகோ

      நீங்கள் உங்கள் பிள்ளையே பொய் பேச கூடாதென்கிறீர்கள்.. அவர் மீண்டும் மீண்டும் பொய் பேசுகிறார் என்றால் என்ன செய்வீர்கள்?
      உண்மையே மட்டும் பேசி பொய் பேச கூடாதென்ற சாதரண நிலையே கூட அறியாத புள்ளையே ஏன் பெத்தீங்கன்னு யாராவது கேட்டால்...?

      நீங்கள் சொன்னது வாழ்வியல் முறையில் தவரிக்க வேண்டியது குறித்த கடவுளின் எச்சரிக்கை.
      http://iraiadimai.blogspot.com/2012/01/blog-post_17.html?showComment=1327415891952#c2863774893572741393
      மேலும் இதுக்குறித்து இந்த ஆக்கதை படித்து பாருங்கள்
      எப்படி பொருந்தாத உதாரணங்களை மேற்கோளாக காட்டுகிறீர்கள் சகோ.

      //பொதுவாக மனிதர்கள் எந்த ஒரு பிரச்சனையிலும் தனக்கு சாதகமானதா? பாதகமானதா? என்பதைக் கொண்டே முடிவெடுக்கிறார்கள். ஆனால் அது சரியா? தவறா? எனும் அடிப்படையில் எடுக்கும் முடிவே அவர்களை சரியான நிலைப்பாட்டில் இருத்தி வைக்கும். சரியான நிலைப்பாட்டில் தாம் இருக்க வேண்டும் எனும் நினைப்பு இருக்கும் வரை ஒருவனால் சொந்த சாதக பாதகங்கள் குறித்து கவலைப்பட முடியாது.//

      குட்... இப்பத்தான் உங்களிடமிருந்து ஒரு தெளிவான கருத்து.

      உண்மைத்தான் நமது மனது எதை சரியென்கிறதோ அதை தான் நாம் உண்மையென்கிறோம். அதை செயல்படுத்தவும் செய்கிறோம்.
      ஆனால் அந்த "உண்மை" எல்லா நேரங்களிலும் உங்கள் மனதிற்கும் எனது மனதிற்கும் ஒரே அளவில் இருக்க வாய்பில்லையே .ஆக அந்நேரங்களில் உங்கள் மனது சொல்வது சரியா இல்லை என் மனது சொல்வது சரியா? என்ற மூன்றாம் நிலை கேள்விக்கு என்ன சகோ பதில் வைத்து இருக்கிறீர்கள்?

      //மனிதனின் தகுதி எவ்வளவு உயர்ந்தாலும் கடவுளின் தகுதிக்கு அருகில் வருவதாக நம்பிக்கையாளர்கள் ஏற்றுக் கொள்வார்களா? கடவுள் எனும் கருத்து மனிதனுக்கு தோன்றிய காலத்தில் கடவுளுக்கு என்னென்ன தகுதிகளை மனிதன் ஏற்படுத்தியிருந்தானோ அதைவிட அதிக தகுதிகளோடு இன்று மனிதன் இருக்கிறான். //

      உங்களின் பதில் சரியான இலக்கை நோக்கி செல்லவில்லையோ என்பது எனது எண்ணமாக மாறிவிட்டது சகோ...

      எப்படி கடவுளை விட மனிதன் உயர்ந்தவன் என்பதை பட்டியலிடுவீர்களா..?

      ஒரு சின்ன கேள்வி உங்கள் அறிவார்ந்த மனித சமூகத்தில் அத்தனை பேர்களையும் ஒன்றுக்கூட்டி நாளை மரணிக்கும் ஒருவரின் நேரத்தை துல்லியமாக சொல்ல முடியுமா...? முடியாவிட்டால் நாளை மறு நாள் மரணிக்கும் நபரின் நேரத்தையாவது எனக்கு சொல்லுங்கள்?

      Delete
    5. // கடவுளின் மீது என்ன கற்பனைகளை நாங்கள் ஏற்றிவைத்தாலும், ஏற்றுக் கொள் அல்லது விலகிச் செல் மாறாக அதை விமர்சிக்கக் கூடாது என்பது தான். இதைவிட கடவுளை வேறு யாரும் கேவலப்படுத்த முடியாது. //

      சகோ அப்பா என்ற ஒன்று எல்லோர் வாழ்விலும் இருந்தாலும் உங்கள் அப்பாவை மட்டும் தான் நீங்கள் அப்பா என்று சொல்வீர்கள் நானும் அப்படி தான் என்னை பெற்றவரை மட்டும் தான் அப்பா என சொல்வேன். உலகில் ஆயிரம் அப்பாக்கள் இருந்த போதிலும் அவர்களை அப்பா என நானும் விளிப்பதில்லை.
      நீங்களும் விளிப்பதில்லை.
      ஏன்? அவரும் யாருக்கோ அப்பா தானே?

      அப்பா என்பதற்கு ஒரு இலக்கணம் நாம் கொடுத்து வைத்திருக்கிறோம். அவர் தன்னை பெற்றவராக இருக்க வேண்டும். நமது தாயுடன் குடும்பம் நடத்துவராக இருக்கவேண்டும். இச்சமூகத்தால் நம் அப்பாவாக அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும் அப்போது தான் அவர் அப்பாவாகிறார்!

      இப்படி தான் உலகில் ஆயிரம் கடவுளாக சொல்லப்பட்டாலும் கடவுள் என்ற ஒன்று குறித்து முதலில் நாம் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.
      கண் விழிந்ததிலிருந்து இரவு படுக்கும் வரை நான் பார்க்கும், பயன்படுத்தும், பேசும், எழுதும், மிதிக்கும், பயப்படும், பயங்காட்டும், வளர்க்கும், அருந்தும், குடிக்கும் .... இவையெல்ல கடவுள். உங்களையும் என்னையும் எவன் உண்மையாய் படைத்தானோ அவன் தான் என் கடவுள்!
      கடவுள் என சமூகத்தில் இனங்காட்டப்பட்டு புறக்கணிப்பதையெல்லாம் தான் கடவுளாக நீங்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.
      அதுல்ல கடவுள்! அதை விமர்சிப்பதில் தவறில்லை.
      இங்கு நான் விமர்சனம் வேண்டாம் என சொல்ல வந்த காரணம் விமர்சிக்கும் தகுதி மனிதனுக்கு இல்லையென்ற பணிக்கிறேன் .உங்களின் இந்த கருத்து ஆக்கத்தை சரியாக நீங்கள் படிக்கவில்லையோ என எண்ண தோன்றுகிறது.

      //மனிதனுக்கு மனிதனே அடிமையாக இருத்தல் கூடாது எனும் போது ஆண்டவனுக்கு தான் அடிமை என அறிவித்துக் கொள்பவர்களிடமிருந்து வேறெதை எதிர்பார்க்க முடியும்?//

      என்ன சொல்ல வருகிறீர்கள் என்று சத்தியமாய் புரியவில்லை!@#$%^&*???

      //ஒன்றின் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது என்றால், அது சரியாக செய்யப்பட்டிருக்கிறதா? தவறாகவா? என்று பார்ப்பது தான் சரியான அணுகுமுறை. சரியாக செய்யப்பட்டிருந்தால் அதை எதிர்கொண்டு விளக்கம் கூறுங்கள். தவறாக செய்யப்பட்டிருந்தால் எந்த விதத்தில் அது தவறான விமர்சனம் என்று தெளிவியுங்கள். அதை விடுத்து, கடவுளை விமர்சிக்க மனிதனுக்கென்ன தகுதி இருக்கிறது//
      இப்படி சொல்வதற்கு பெயர் தான் விமர்சனம்! ஆனால் அதற்கு காரணம் சரியாக சொல்ல வேண்டும்

      ஸாரி ஒரு சின்ன டவுட்.,
      ஆக்கத்தை முழுமையாக படித்தீர்களா?

      Delete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்