ஓரிறையின் நற்பெயரால்
கடவுளின் இருப்பே தெரியவில்லை. இதில் அவர் கூறும் சொர்க்கம், நரகம் எனும் மறு உலகக் கோட்பாடு இருப்பது உண்மைதானா....?
அடிப்படை மற்றும் ஆரம்பமாக இன்று வரை நாத்திகர்கள் முன்வைக்கும் கேள்வி இதுதான்... உண்மையாகவே இவை சிந்தனை ரீதியாக உயர்ந்த கேள்விகள் என்பதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை., கவனிக்க., இவை கேள்விதான் ஒழியே வரையறுக்கப்பட்ட முடிவுகளல்ல
(ஏற்கனவே கடவுள் குறித்த ஆக்கங்கள் இத்தளத்தில் காணக்கிடைப்பதால் மறுமைக்குறித்து இங்கு காண்போம்)
இப்பிரபஞ்சத்தில் செயல்படும் எந்த ஒரு மூலத்தின் செயல்பாடுகளும் இருப்பெரும் தலைப்பின் கீழ் தான் வந்தாக வேண்டும்,
1.கருத்தியல் கோட்பாடு (Ideological theory)
2.இயங்கியல் கோட்பாடு (Dialectical theory)
இவற்றின் அடிப்படையில் நாம் ஒப்பு நோக்கும் ஒரு செய்கை கருத்தாகவோ அல்லது பொருளாகவோ இவற்றில் ஒரு வாதத்தை மையப்படுத்தி இருக்கவேண்டும். இதைத்தாண்டி மூன்றாம் நிலையில் ஒன்று இருந்தால் அது நம்பிக்கைச்சார்ந்த -விளக்கமுடியாத வெற்று ஊகங்களில் அமைந்ததாக அறிவியல் உலகம் கொள்ளும்.
இவ்விதிகளே இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களுக்கும் அளவுகோல்., ஆக, இவற்றை அடிப்படையாக வைத்தே எந்த ஒன்றின் மூலத்தின் நம்பக தன்மையும் அறிய அதற்குரிய இலக்கணத்தோடு நிருபணமான ஆய்வு முடிவுகளை ஒப்பு நோக்க வேண்டும். அதன் வடிவிலக்கணம் ஒப்பிடும் அல்லது சோதிக்கும் அவ்வாய்வோடு நேர்கோணத்தில் அமைய பெற்றால் அந்த மூலம் நம்பக தன்மை வாய்ந்தது. அப்படி இல்லாது அவ்வாய்விற்கு நேர் எதிராக முரண்பட்டால் அச்செய்கை பிழையானது அல்லது பொய்யானது என முடிவு செய்யலாம்.
. . .
சரி இப்போது பதிவிற்கு செல்வோம்.,
ஒரு செய்கைக்குறித்து இரு வேறுக்கருத்துக்கள் நிலவினால் அதன் உண்மை நிலையறிய அச்செய்கையின் வரைவிலக்கணத்தோடு மாறுபடும் அக்கருத்துக்களை ஒப்பு நோக்கவேண்டும். பின்பு எந்த கருத்துக்களோடு வரையறை செய்யப்பட்ட அதன் மூலம் பொருந்தி வருகிறதோ அக்கருத்து முன்மொழிவதே உண்மை.
உதாரணத்திற்கு ஒரு திட அல்லது திரவ பொருளின் இருப்புக்குறித்து இருக்கருத்துக்கள் நிலவினால் இல்லையென்பதை விட இருக்கிறது என்பதை உண்மைப்படுத்தவே அதிக நிரூபணம் வேண்டும். இல்லையென வாதிடுவோர் அப்பொருளை தம் கண்ணால் காணவில்லையென்று பதில் தருவாரானால் அப்பொருள் அவர் முன் அல்லது அவரது கண்ணுக்கு தெரியாமல் இருப்பதே போதுமான சான்று. ஆக கண்ணுக்கு தெரியவில்லை என்ற ஒரு சதவீகித வாதமே அவரது உண்மை நிலைக்கு போதுமானதாகும்., மாறாக கண்ணுக்கு தெரியாத ஆனால் கண்ணுக்கு புலப்படக்கூடிய அத்திட, திரவப்பொருள் உண்டென்று வாதிடும் ஒருவர் அதை நிருபிக்க 99 சதவீகித சான்று தர வேண்டும் .
ஏனெனில் நாம் எல்லோருக்கும் நன்றாய் தெரியும் எந்த ஒரு திட திரவ பொருளும் கண்களால் பார்த்து அறியக்கூடியதே மேலும், இப்பிரபஞ்சத்தில் உள்ள எந்த ஒரு பொருளுக்கான இலக்கணமும் மிக சரியாக தெளிவாக நம்மிடம் இருக்கிறது. ஆக எந்த ஒன்றை ஏற்பதையும் மறுப்பதையும் விஞ்ஞானரீதியில் உண்மைப்படுத்தலாம்.,
இச்சோதனை முறையோடு மறுமைக்கோட்பாட்டை ஒப்பு நோக்குவோம்
ஆம் இல்லை என்ற இரண்டில் ஒரு பதிலால் மட்டுமே நூறு சதவீகித உண்மையாகும் மறுமைக்குறித்த கேள்விக்கு மிக சரியாக இரண்டுக்கும் 50 சதவீகித வாய்ப்பு இருக்கிறது. ஆக மறுமை உண்டென்பதை நிருபிக்க இருக்கும் 50 சதவீகிதம் போலவே இல்லையென்பதை நிருபிக்கவும் 50 சதவீகிதம் வாய்ப்பிருக்கிறது.,
ஆனால் பொதுவாக சாத்தியக்கூறுகள் விதிப்படி இல்லை என்பதை விட இருக்கிறது என்பதை நிருபிக்கவே அதிக சிரத்தை எடுக்க வேண்டும் என்பதை மேற்கண்ட உதாரணம் வாயிலாக அறிந்தோம். ஆனால் மறுமைக் கோட்பாட்டின் மூலம் (Origin) அறிவியல் வரையறுத்த பண்பில் அடங்கும் பொருளாகவோ அல்லது கருத்தாகவோ இருந்தால் நிருபிக்க வழியின்றி இச்சோதனையில் மறுமைக்கோட்பாடு முரணான பதிலை தான் தரும்.,அதை மறுக்கும் நாத்திகம் நூறு சதவீகித வெற்றி காணும்.
ஆனால் அறிவியலோடு ஒப்பு நோக்கி அதை தவறு என்று பொய்பிக்க முதலில் மறுமைக்கோட்பாடின் இலக்கணம் நமக்கு தெரிந்திருக்க வேண்டும்
மறுமை எனும் கோட்பாட்டை குறித்து இங்கு நீங்களும் நானும் பேசுகிறோம் என்றால் அதற்கான மூலம் குர்-ஆனிலிருந்தே பெறப்படுகிறது. மாறாக இதுவல்லாத வேறு ஒன்றின் வழியாக அறியப்படவில்லை.
ஆக மறுமையெனும் மூலத்தின் வரையறையை குர்-ஆன் கூற்றை அடிப்படையாக வைத்தே எதனுடனும் ஒப்பு நோக்க வேண்டும். ஆனால் குர்-ஆனோ மறுமையென்பது இப்பேரண்ட விதிகளை தாண்டி உருவாக்ககப்பட்டதாக கூறும் போது இருப்பெரும் (கருத்து அல்லது பொருள் எனும்) பிரிவுகள் கீழ் நிறுத்தி மறுமைக் கோட்பாட்டை விஞ்ஞான ரீதியாக எப்படி பொய்பிக்க முடியும்?
மேலும் எந்த வழிகளிலும் அறிவியல் வரையறுக்கும் வடிவிலக்கணங்களில் மறுமையை சுட்ட முடியாது என்பதை மிக தெளிவாக விவரிக்கும் போது மனித உருவாக்க சாதனங்களால் மறுமைக்கோட்பாட்டை சோதித்து அறிய முடியும்? அல்லது சோதித்தல் என்பது எப்படி பொருந்தும்?
ஆக அறிவியல் ரீதியாக இப்பிரபஞ்ச விதிகளுக்குள் வரையறை செய்யப்படாத மறுமையை உணடு என வாதிடுவோர் அறிவியல் ரீதியாக நிருபிக்க ஒரு சதவீகிதம் கூட நிருபணம் தர தேவையில்லை.ஆனால் அறிவியல் வரையறுக்கும் பண்புகளில் பொருந்தாத ஒன்றை விஞ்ஞான ரீதியில் இல்லையென்று நிரூபிப்பதாக இருந்தால் நூறு சதவீகித மேற்கண்ட இரு பிரிவுகளை தாண்டி மூன்றாம் நிலை காரணத்தை தேட வேண்டும்.
ஆக இங்கு மறுமை உண்டு என்பதை அறிவியல் ரீதியாக நிருபிக்க அவசியமில்லை. என்பதை விட மறுமை என்ற ஒன்று இல்லை என்பதை நிருபிக்க அறிவியலுக்கு வழியே இல்லை.
சரி, தர்க்கரீதியாக மறுமையை மறுப்பதால் நாத்திகத்திற்கு பயனுண்டா... என்றால் வழக்கம்ப்போல் அதுவும் இல்லை...
இஸ்லாம் கூறும் மறுமைக் கோட்பாட்டை ஏற்பதால் தனி மனித ஒழுக்கமும் பிறர் நலன் பேணுதலுமே இச்சமுகத்திற்கு அதிகம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. காரணம் இறப்பிற்கு பின்னுண்டான வாழ்வில் தமது செய்கை குறித்து வினவப்படுவோம் என்ற இறையச்ச உணர்வே பாவமாக காரியங்களில் ஈடுபடும் எண்ணத்தை குறைக்கும்.
மாறாக தன் மன இச்சைகளை பின்பற்றி தான் எடுக்கும் முடிவுகளின் படி வாழ்வை மேற்கொள்வதால் எல்லா தருணங்களிலும் நூறு சதவீகித நன்மையான மற்றும் பிறருக்கு தீங்கு தராத முடிவுகளை நாம் மேற்கொள்ள முடியாது.,-
சரி இப்போது முரண்பாட்டின் அடிப்படையில் ஒரு சோதனைக்கு தயாராவோம்..!
இவ்வுலகில் இறப்பிற்கு பிறகு ஒரு மறுமை வாழ்வு என்றொன்று இல்லை., நாம் அனைவரும் மண்ணோடு மண்ணாக மக்கி போய்விடுவோம் என வைத்துக்கொள்வோம்.
இதனால் கடவுளை ஏற்றவர்- நிராகரித்தவர் அடையும் பயன்பாடு என்ன என்பதையும் காண்போம்.
சராசரியாக மனிதர்களின் ஆயூட்காலம் அறுபது என வைத்து இரு தரப்பினரின் வாழ்வியல் நிலைக்குறித்த கணக்கீட்டை காண்போம்
கடவுள் இல்லையென்று எண்ணத்துடன் வாழ்ந்து கடவுளுக்கு செய்யவேண்டிய செயல்ரீதியான வழிப்பாடு பணிகளையும் செய்யாமல் தம் வாழ்வின் எல்லா தருணங்களையும் கழித்து கடவுளுக்காக எப்பணிகளையும் மேற்கொள்ளாமல் சிரமமின்றி வாழ்ந்ததால் அவருக்கு எந்த நஷ்டமும் ஏற்பட போவதில்லை.,
அறுபது வருட வாழ்வு முழுவதும் இலாபம்
- ஆக அவர் வாழ்வின் பெற்ற இழப்பு = 0 %
- மாறாக பெற்ற வாழ்வியல் பயன்பாடு = 100 %
மாறாக கடவுள் உண்டு என நம்பி அவனுக்காக வணங்குதல் மற்றும் இதர கடமைகளை மேற்கொண்டவரின் வாழ்வியல் பயன் மற்றும் இழப்பை கணக்கிட்டால்.,
பொதுவாக இஸ்லாம் எல்லா தருணங்களிலும் இறையை நினைக்க சொன்னாலும் அஃது இது உணர்வுரீதியான கணக்கீட்டில் வருமே தவிர செயல்ரீதியான கணக்கீட்டில் சேராது ஆக செயல்ரீதியாக தொழுகை, நோன்பு , ஹஜ் போன்றவற்றிற்காக ஒரு இறை ஏற்பாளன் அடைந்த இழப்பை காண்போம்
முதலில் தொழுகை
ஒரு நாளைக்கு கண்டிப்பாக ஐந்து நேர தொழுகைக்காக சராசரியாக பதினைந்து நிமிடங்களை ஒருவர் எடுத்துக்கொள்கிறார் எனில் அவர் ஒரு நாளைக்கு எழுபத்தைந்து நிமிடங்களை இறைவனுக்காக செலவழிக்கிறார். அதாவது
5 x 15 = 75
ஒரு நாளைய எழுபந்தைந்து நிமிடத்தை ஆண்டிற்கான எண்ணிக்கைக்கு உட்படுத்தினால்
0.000142694 ஒரு ஆண்டிற்கு வரும்
இதை அவரது ஆயுள் சராசரியோடு சமன்படுத்தினால்
0.000142694 X 60
ஆக வாழ் நாள் முழுவதும் அவர் தொழுகைக்காக செலவழித்த ஆண்டுகள்
0.00856164 வருடம்
ஆயுளில் ஒரு வருடத்திற்கும் குறைவான நேரத்தையை ஒரு சராசரி இறை ஏற்பாளன் தொழுகைக்காக பயன்படுத்துகிறார்.எனினும் குறைந்தபட்சமாக ஆண்டு கணக்கீட்டில் ஒரு வருடமாக எடுத்துக்கொள்வோம்.
ஆக தொழுகைக்காக தம் வாழ் நாளில் ஒரு வருடம் செலவழிக்கிறார்
அடுத்து நோன்பு
ஒரு வருடத்திற்கு ஒரு முறை ரமலான் மாதம் முழுவதும் கண்டிப்பாக நோன்பு நேற்பது கடமையாக பணிப்பதால் வருடத்திற்கு ஒரு மாதத்தை நோன்பிற்காக செலவழிக்கிறார். ஆக அவரது ஆயூளின் சராசரியோடு அவர் நோன்பிற்காக செலவழித்த மாத்த்தை கணக்கிட்டால்
1 X 60 = 60 ÷ 12 = 5
ஆக நோன்பிற்காக தம் வாழ் நாளில் ஐந்து வருடம் செலவழிக்கிறார்
இறுதியாக ஹஜ்
மற்ற இரண்டைப்போல கட்டாய கடமையல்லாமல் வாய்ப்புள்ளோருக்கு மட்டுமே இக்கடமை பணிக்கப்பட்டதாக இருப்பதால் இதற்கான ஒருவர் செலவழிக்கும் காலத்தை அறுதிட்டு கூற முடியாது.காரணம் எல்லோரும் ஹஜ் செய்வதில்லை அதேப்போல ஒருசிலர் ஒன்றிற்கு மேற்பட்டும் ஹஜ் செய்கிறார்கள்.ஆக தோரயமாக எல்லா இறை ஏற்பாளர்களும் வாழ் நாளில் ஒரு முறை ஹஜ் செய்வதாக கொள்வோம்.,
ஆக இந்த கடமைக்காக ஒருவர் மேற்கொள்ளும் பயணத்திற்காகவும், திரட்டும் நிதிக்காகவும் உடலியல் உழைப்புக்காகவும் சராசரியாக இரண்டு வருடங்களை செலவழிக்கிறார் என கொள்வோம்
ஆக வாழ் நாளில் ஹஜ் எனும் கடமைக்காக இரண்டு வருடங்கள் செலவழிக்கிறார்.
இதுவே முக்கியமாக மற்றும் முதன்மையாக ஒரு இறை ஏற்பாளன் வாழ் நாளில் செயல்ரீதியாக இறைவனுக்கு செலவிடும் காலங்கள் ஆகும். மேலும் சுன்னதான தொழுகை, நோன்பு மற்றும் இதர உபரியான வணக்கங்களுக்கு மேலும் ஒரு வருடத்தை செலவழிப்பாக வைத்துக்கொள்வோம்
ஆக உபரியான வணங்களுக்காக ஒரு வருடம் செலவழிக்கிறார்.
- தொழுகைக்காக = ஒரு வருடம்
- நோன்பிற்காக = 5 வருடங்கள்
- ஹஜ்ஜூக்காக = 2 வருடங்கள்
- உபரி வணக்கத்திற்காக = ஒரு வருடம்
இது தவிர்த்த ஏனைய வாழ்வியல் நடத்தைகளில் உண்ணுதல், உறங்குல், குடும்பம், அரசியல் மேலும் பல பொதுவான செய்கைகளில் இறை மறுப்பாளர்களைப்போலவே காலத்தை கழிக்கிறார்
ஆக வாழ் நாளில் இறைவனை வழிப்படுவதற்காக செயல்ரீதியான சிரமத்தின் அடிப்படையில் சராசரியாக ஒன்பது ஆண்டுகளை செலவழிக்கிறார்
60 : 9
எனில் இதை
100 % வாழ்வாக கொள்ளும் போது
100 / 60 X 9 = 15
ஆக ஒரு இறை நிராகரிப்பாளரை விட இறை ஏற்பாளர் இறைப்பணிக்காக தமது மொத்த வாழ்வில் 15 % இழக்கிறார். (ஆக 100-15 = 85 % வாழ்வியல் இலாபம்)
மறுமை வாழ்வு என்ற ஒன்று இல்லையென்றால்
- இறை நிராகரிப்பாளர் அடையும் பயன் = 100 %
- இறை ஏற்பாளர் அடையும் பயன் = 85 %
. . .
சரி., இப்போது மறுமை வாழ்வு உண்மையென்ற கோணத்தில் அணுகுவோம்.
இறை உண்டென நம்பி அவனை வணங்குவதில் தம் வாழ் நாளில் செயல்ரீதியாக ஓரு பகுதியை கழித்தால் அதற்கு பகரமாக சொர்க்கம் பெறுவார்.
ஆக இறை ஏற்பாளர் அடையும் வாழ்வியல் பயன்பாடு = 100 %
மாறாக வாழும் காலம் முழுவதும் இறை வழிக்காடுதலின் படி அவனது வழிமுறைகளை பின்பற்றாது இறை நிராகரிப்பாளர் வாழ்ந்ததால் அவருக்கு சொர்க்கம் இல்லை. சொர்க்கம் மட்டும் இல்லையென்பதோடு மட்டும் வரையறை செய்யப்பட்டிருந்தால்
அவர் வாழ்வியல் பயன்பாடு = 0 சதவீகிதமாக மட்டும் இருக்கும். ஆனால் இறையை வணங்காது வாழ்ந்ததால் நரகம் கிடைக்கும் என்கிறது. ( + >> 0 >> - )
ஆக அவரது வாழ்வியல் பயன்பாடு = -100%
மறுமை வாழ்வு உண்டென்றால்
- இறை நிராகரிப்பாளர் அடையும் பயன் = -100 %
- இறை ஏற்பாளர் அடையும் பயன் = 100 %
இவ்விரு நிலைகளின் படி இரு சாராரும் அடைந்த பயன்கள்
மறுமை இல்லை
இறை நிராகரிப்பாளர் = 100 %
இறை ஏற்பாளர் = 85 %
மறுமை உண்டு
இறை நிராகரிப்பாளர் = - 100 %
இறை ஏற்பாளர் = 100 %
ஆக மறுமை என்ற ஒன்று இருந்தாலும் இல்லாவிட்டாலும் இருசாரார் அடையும் பயன்பாடு
இறை மறுப்பாளர்:
100 + (-100)
------------------ = 0 %
2
இறை ஏற்பாளர்
85 + 100
-------------- = 92.50 %
2
அல்ஹம்துலில்லாஹ்! அறிவியல் ரீதியாகவும் தர்க்கரீதியாகவும் மறுமைக்கோட்பாடு இறை நம்பிக்கையாளர்களுக்கே சாதகமான நிலையில் அமைந்திருக்கிறது ஆக,
\
- அதீத கற்பனையால் ,
- தவறான புரிந்துணர்வால்,
- முரண்பாடான அறிவியல் அணுகுமுறையால்,
- தான் தோன்றித்தனமான விளக்கத்தால்,
- வீம்பான (பிடி)வாதத்தால்,
- பொறுப்பற்ற வெறுப்புணர்ச்சியால்
இறைக்குறித்து விமர்சிக்கும் நாத்திக
"வாழ்வை பூஜ்யமாக்கும் மறுமைக்கோட்பாடு"
என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.,
குறிப்பு
மேற்கண்ட விளக்கமெல்லாம் இரண்டாம் (நிலைக்)காரணம் தான்.
மறைவான வற்றின் மீதும் நம்பிக்கை வைத்தல் என்ற இஸ்லாத்தின் அடிப்படைக்கோட்பாடுகளின் கீழ் தான் மறுமையை நம்புவது வருகிறது.ஆக மறுமையே ஏற்பதற்கு இதுவே இறை நம்பிக்கையாளர்களுக்கு முதன்மைக்காரணம்.
அல்லாஹ் நன்கு அறிந்தவன்
Tweet | |||||
அஸ்ஸலாமுன் அலைக்கும் வரஹ்...
ReplyDeleteமாஷாஅல்லாஹ்,
அருமையான ஆக்கம்.
தெளிவான கருத்துக்கள்.
கணக்கீடுகள் எல்லாம் போட்டு கலக்கி இருக்கீங்க சகோ.குலாம். நன்றி.
பிரபஞ்ச தோற்றம் (பிக் பேங்) பற்றி -'விரிவடையும் பிரபஞ்சம்' என்று பிரபஞ்ச தோற்றம் பற்றி சொன்ன அதே குர்ஆனில்தான்... அதன் முடிவு பற்றியும் இறைவன் சொல்லி இருப்பதை நாம் பார்க்கிறோம்.
இந்த பூமி உட்பட மொத்த பிரபஞ்சமும் ஒருநாள் அழிக்கப்பட்டு அதன் பின்னர்தான் 'நியாயத்தீர்ப்புநாள்', மறுமை, சுவர்க்கம், நரகம் எல்லாமே உருவாகும்.., என்று குர்ஆனில் இறைவன் கூறுவதை காணலாம்..!
1.1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்.
1.2. அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.
1.3. நியாயத்தீர்ப்பு நாளின் அதிபதி.
21.104. எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் (அந்)நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்.
14.48. அந்நாளில் பூமி, வேறு பூமியாகவும், வானங்களும் (வேறு வானங்களாகவும்) மாற்றப்படும். ஏகனாகிய அடக்கியாளும் அல்லாஹ்விடம் திரளுவார்கள்.
ஆகவே,,,
அப்புறம் எங்கிருந்து இவ்வுலக கணக்கீடுகள் கொண்டு... மறுமை பற்றி கருத்தியல் கோட்பாடோ (Ideological theory) இயங்கியல் கோட்பாடோ (Dialectical theory) இவர்களால் வரையறுக்க முடியும் சகோ.குலாம்..?
மறுமையை நம்பினால் ஜெயம். நம்பாவிட்டால் என்றுமே அவர்களின் நிலை பயம். இதை பொய் என நிரூபிக்க இவ்வுலக மாந்தர் எவராலும் இயலாது என்பது நிதர்சனம்.
ஆனால், மறுமை என்பது உண்மை என்று நிரூபிக்கத்தான் வழி இருக்கிறது..!! :-))
அது....
விரிவடையும் பிரபஞ்சம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அதன் வேகத்தை குறைத்து விரிவடையும் உச்சத்தை அடையும், பிறகு விரிவடைந்த பிரபஞ்சம் மீண்டும் அதே அழுத்தத்துடன் அதே வேகத்தில் சுருங்க ஆரம்பிக்கும், இதை விவரிக்கும் விதமாக உள்ளதே இன்றைய நவீன அறிவியலின் பிக் கிரன்ச் கொள்கை.(Big-Crunch Theory)
http://science.howstuffworks.com/dictionary/astronomy-terms/big-crunch3.htm
இந்த கொள்கையும் குர்ஆனைத்தான் மெய்ப்பிக்கிறது; அதன் மூலம் மறுமையையும்..!!!
ஸலாம் சகோ குலாம்....
ReplyDeleteநிதானமான விளக்கமான பதிவு...நன்றி...மனிதனின் சராசரி வாழ்நாளில் முதல் ஏழு ஆண்டுகளை கடந்த பின்னே தொழுகை கடமை ஆகிறது..ஏழு வயதில் தொழுகைக்கு அறிவுறுத்த சொல்கிறது இஸ்லாம்..பின் நோன்பு...அதற்கு முந்திய வயதுகளில் தொழுகையோ நோன்போ,கடமையில்லை..அவரவர் ஆர்வம்,விருப்பம் சார்ந்து சிறுவ சிறுமியர் தொழுக நோன்பு வைக்க செய்வார்கள்..ஆக அதிகார பூர்வ கணக்கீடாக சராசரி ஆண்டில் ஏழு வருடங்களை கழித்து விடலாம்,ஆக அந்த 15 % இன்னும் குறையும்...அதனூடாக அவர் அடையும் ஈருலக பலன் சதவிகிதம் இன்னும் அதிகரிக்கும்..
அன்புடன்
ரஜின்
வ அலைக்கும் சலாம் வரஹ்
ReplyDeleteஅன்பு சகோ சிட்டிசன் ஆப் வேர்ல்டு
மறுமையை நம்பினால் ஜெயம். நம்பாவிட்டால் என்றுமே அவர்களின் நிலை பயம்.
நிச்சயமாக ., மறுமையை ஏற்கும் நாம் மறைவான வற்றின் மீது நம்பிக்கை வைத்தல் என்ற இஸ்லாமிய அடிப்படை விதிகளின்படி ஏற்றாலே போதுமானது ஆனால் அதை மறுக்கும் நாத்திகத்திற்கு ஆன்மிக செய்கைகளை அறிவியல் குறியீட்டோடு சொல்வதே பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். அதற்கான சிறு முயற்சியை இப்பதிவு..,
ஆக்கத்திற்கு பொருத்தமான மறுமைச்சார்ந்த அழகிய(ல்) வசனங்களை மேற்கோள் காட்டியது மிக்க அருமை
ஜஸாகல்லாஹ் கைரன்.
நன்றி சகோ
வ அலைக்கும் சலாம் வரஹ்
ReplyDeleteஅன்பு சகோ ரஜின்
நீங்கள் குறிப்பிடும் கணக்கீடு சரிதான். நானும் ஆரம்பத்தில் மனித சராசரி ஆயுளை 67 ஆக நிர்ணயித்து அதில் ஏழு ஆண்டுகளை மேற்சொன்ன மதிப்பிட்டில் கழித்து தான் அறுபதாக வரையறுத்தால் இறை நம்பிக்கையாளர்களின் வாழ்வியல் பயன்பாடு இன்னும் அதிகரிக்கும் என்பது உண்மைதான்.
ஆனால் இப்படி 7 ஆண்டுகளை இறை நம்பிக்கையாளர்களுக்கு சாதமாக அளித்தால் அதே வாய்ப்பை இறை நிராகரிப்பாளர்களுக்கும் அளிக்கவேண்டும் .ஏனெனில் அவர்களும் அவ்வயது வரை இறை குறித்து அறியாமல் - அவனை வணங்குவது தேவையற்ற செயலாக எண்ணி வாழாமலும் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஆக இரு சாராருக்கும் ஒப்பிட்டு முறை சமமாக இருக்கவேண்டும் என்பதற்காக ஆயுட் சராசரியை அறுபது ஆண்டுகளாக வரையறை செய்தேன். கருத்துக்கு நன்றி சகோ
ஜஸாகல்லாஹ் கைரன்.
நன்றி சகோ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ReplyDelete//அதீத கற்பனையால் ,
தவறான வாதத்தால்,
முரண்பாடான அறிவியல் அணுகுமுறையால்,
தான் தோன்றித்தனமான விளக்கத்தால்,
வீம்பான (பிடி)வாதத்தால்,
பொறுப்பற்ற வெறுப்புணர்ச்சியால்//
நல்ல அடுக்கி இருக்கிங்க
வாழ்த்துக்கள் சகோ
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteசகோ. ஆஷிக் கூறியது போல பொறுமையாக படிக்க வேண்டிய பதிவு தான். மிகவும் ஆழமான கருத்துக்கள்.
இருப்பினும்,
//இது தவிர்த்த ஏனைய வாழ்வியல் நடத்தைகளில் உண்ணுதல், உறங்குல், குடும்பம், அரசியல் மேலும் பல பொதுவான செய்கைகளில் இறை மறுப்பாளர்களைப்போலவே காலத்தை கழிக்கிறார்//
இதில் எனக்கு உடன்பாடு இல்லை, வாழ்க்கை என்பதை இறை வணக்கங்களை மட்டுமே இஸ்லாம் போதிக்கவில்லை, மனைவியின் வாயில் ஊட்டப்படும் ஒரு கவளம் உணவிற்கும் நன்மை என்று இஸ்லாம் கூறுகிறது, இதுபோன்று வாழ்நாள் முழுவதும் வாழ்வதற்கு வழிமுறை காண்பிக்கப்பட்டுள்ளது.அதையும் கணக்கில் எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
தொடர்ந்து சிறந்த பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteகுர் ஆன் வசனங்களை மேற்கோல் காட்டினால் இறைமறுப்பாளர்களுக்கு அலர்ஜி ஏற்படும் என்பதை உணர்ந்து வித்தியாசமகவும் மிகத்தெளிவாகவும் கருத்துக்களை பதிவு செய்துள்ளிர்கள்.
வாழ்த்துக்கள்.
வ அலைக்கும் சலாம் வரஹ்
ReplyDelete@ ஹைதர் அலி பாய்.,
இவ்வளவு லேட்டாவா வரது நீங்க., ஹி ஹி
ஜஸாகல்லாஹ் கைரன்
நன்றி சகோ
வ அலைக்கும் சலாம் வரஹ்
ReplyDeleteசகோ@ கார்பன் கூட்டாளி
//இதில் எனக்கு உடன்பாடு இல்லை, வாழ்க்கை என்பதை இறை வணக்கங்களை மட்டுமே இஸ்லாம் போதிக்கவில்லை, மனைவியின் வாயில் ஊட்டப்படும் ஒரு கவளம் உணவிற்கும் நன்மை என்று இஸ்லாம் கூறுகிறது, இதுபோன்று வாழ்நாள் முழுவதும் வாழ்வதற்கு வழிமுறை காண்பிக்கப்பட்டுள்ளது.அதையும் கணக்கில் எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.//
உண்மை தான், நீங்கள் குறிப்பிடும் வாழ்வியல் செயல்கள் இறைவனிடத்தில் நன்மையை சார்ந்ததது என்பதில் சந்தேகமில்லை., அதுமட்டுமில்லை வாழ்வியல் முழுவதும் நாம் இறை நினையூடனே இருக்கிறோம்- இருக்கவேண்டும் என்பதையும் நான் ஆக்கத்தில் குறிப்பிட்டு தான் இருக்கிறேன் சகோ
//பொதுவாக இஸ்லாம் எல்லா தருணங்களிலும் இறையை நினைக்க சொன்னாலும்.. //
ஆக நான் இங்கு மேற்கோள் காட்டிய வருட கணக்கு முழுக்க முழுக்க இரண்டாம் நபர் தலையீடுன்றி இறைவனுக்காக ஒரு இறை ஏற்பாளர் செலவழித்த செயல்ரீதியான காலங்களை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன் சகோ.,
ஜஸாகல்லாஹ் கைரன்
நன்றி சகோ
வ அலைக்கும் சலாம் வரஹ்
ReplyDelete@ சகோ அன்சாரி
குர்-ஆன் வசனங்களை மேற்கோள் காட்டினாலும் அதிலும் தங்களின் சுய விளக்கத்தை புகுத்த தான் பார்க்கும் நாத்திக சிந்தனை. ஆக அவர்களின் தர்க்கரீதியாக இவர்களிடம் விவாதிப்பதே., உகந்தது என நினைக்கிறேன்., இன்ஷா அல்லாஹ் பொறுத்திருப்போம் இவ்வாக்கம் குறித்த நாத்திகர்களின் கேள்விக்காக
இன்ஷா அல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDelete@ சகோ தமிழன் நீங்கள் கொடுத்த சுட்டி.,
//Page not found Sorry, the page you were looking for in the blog தமிழன் does not exist.//
என வருகிறது.
தாரளமாக உங்கள் விமர்சனத்தை / சந்தேகத்தை /கேள்வியை இங்கேயே பதியுங்கள், வார்த்தைகள் கண்ணியமாக இருக்கும் பட்சத்தில் வெளியிடுகிறேன் - இறை நாடினால் பதில் சொல்ல முயற்சிக்கிறேன்.
வானத்தையும் பூம்யையும் ஹக்கை கொண்டு படைத்திரிக்கின்றேன் என்று அல்லா கூறுகின்றான் !
ReplyDeleteஇல்லாததில் இருந்து எப்படி? எது ? எங்கனம் தோன்றும் ?
இறந்தவற்றிலிருந்து உயிர் உள்ளது தோன்றுகின்றதே ! நிச்சயம் அப்படி மறுமை தோன்றியே ஆகும் !
காலம் அல்லாஹ்வாக இருப்பதால் இதில் முன் பின் இல்லை !
முஸ்லீம்கள் இம்மை மறுமை பற்றி ,இன்னும் விளங்கவில்லை ! அதனால் அது பற்றி விபரிப்பதில்
தயங்குகின்றேன் !அது அனுபவத்தில் மூமின்கள் அறிந்து கொள்ள முடியும் !
உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
ReplyDelete@சகோ Anony
// இல்லாததில் இருந்து எப்படி? எது ? எங்கனம் தோன்றும் ? //
நல்ல கேள்வி., சர்வ வல்லமைப் பெற்றவரை தான் நாம் கடவுளாக ஏற்றுக்கொள்கிறோம். ஆக சர்வ வல்லமை பெற்ற ஒரு மூலம் எதுவுமில்லாத சூன்யத்திலிருந்து எதை வேண்டுமானாலும் படைக்க முடியும்., இறந்தவரை உயிர்ப்பிப்பது மட்டுமில்லை., இறந்தவரின் விரல் ரேகையை கூட தெளிவாய் மீண்டும் உருவாக்க முடியும்.
ஆனால் எந்த ஒன்றின் மூலமே ஏனைய பிற செய்கைகள் உருவாகும் என்பது அறிவியல் விதி., ஆக இக்கேள்விக்கு பெருவெடிப்பு கொள்கை வரை விவரித்து செல்லும் விஞ்ஞானம் அதற்கு முந்தைய ஆதி நிலை குறித்து விளக்க வழியின்றி தற்செயல் அல்லது விபத்து என முடிக்கும்., ஆக அனைத்திற்கும் வழியுண்டு என அறியப்படும் அறிவியலும் பயணிக்க வழியின்றி ஒரு இடத்தில் கேள்விக்குறியோடு தான் தேங்கி நிற்கிறது.
ஆக பதில் காணா முடியாத கேள்விக்கு இவ்விரு இடத்திலும் எந்த செய்கை ஏற்புடையது என நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்.
மேலும் அதைத்தொடர்ந்த உங்கள் சொல்லாடல் எந்த சார்பை சார்ந்து பேசுகிறீர்கள் என்று தெளிவாக விளங்கவில்லை
//முஸ்லீம்கள் இம்மை மறுமை பற்றி ,இன்னும் விளங்கவில்லை ! அதனால் அது பற்றி விபரிப்பதில்
தயங்குகின்றேன் !அது அனுபவத்தில் மூமின்கள் அறிந்து கொள்ள முடியும் !//
*இம்மை/ மறுமைப்பற்றி முஸ்லிம்களுக்கு என்ன விளங்கவில்லை?
*எதனால் விவரிக்க தயங்குகிறீர்கள்..?
*உங்கள் அனுபவத்தில் கண்டது என்ன ?
இறை நாடினால் சொல்லுங்கள் நானும் தெரிந்துக்கொள்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஆடுற மாட்டை ஆடிக்கறக்கனும் பாடுற மாட்டை பாடிக்கறக்கனும் என்ற பழமொழிக்கேற்ப்ப நாத்திகர்களுக்கு அவர்கள் போகிற போக்கிலெல்லாம் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லும்
விதத்தில் இதுவும் ஒருவகை அருமை சகோ
அல்லாஹ் நம்மனைவருக்கும் கல்விஞானத்தை அதிகப்படுத்துவானக
வ அலைக்கும் சலாம் வரஹ்
ReplyDeleteசகோ @ abdul hakkim
//ஆடுற மாட்டை ஆடிக்கறக்கனும் பாடுற மாட்டை பாடிக்கறக்கனும்//
சரிதான்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ
ஜஸாகல்லாஹ் கைரன்
அஸ்ஸலாமுன் அலைக்கும் வரஹ்.
ReplyDeleteமாஷாஅல்லாஹ்,அனைவரும் எளிதில் புரிந்து கொள்ள கூடிய வாழ்வியல் கணக்கோடு கூடிய அருமையான பதிவு.
பகிர்வுக்கு நன்றி.
வ அலைக்கும் சலாம் வரஹ்
ReplyDeleteசகோ @ Anony
பெயர் கூறீ பதிந்திருக்கலாமே.,சகோ
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
ஜஸாகல்லாஹ் கைரன்.
அல்லாஹ் அக்பர் அப்படினு சொல்றதைத் தவிர இந்த பதிவி்ற்கு வேறென்ன சொல்ல முடியும்...இந்த மாதிரியான நற்சிந்தனைகளை உங்கள் உள்ளத்தில் உதிக்கச் செய்து அதை இணையம் மூலம் உலகறியச் செய்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.....
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வரஹ்
ReplyDeleteஅன்பு சகோ yasaru
எல்லாப்புகழும் இறைவனுக்கே.!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
ஜஸாகல்லாஹ் கைரன் சகோ