"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Wednesday, April 11, 2012

"பொய்யும், பொய் சார்ந்த இடமும்..."

                                                  ஓரிறையின் நற்பெயரால்

இன்று பொய் பேசுபவர்கள் யாரும் இல்லை என்பதை விட பொய் பேசாதவர்கள் நம்மில் யாரும் இல்லையேன்றே சொல்லலாம். விளையாட்டிற்காகவோ, பிறர் சிரிக்க வேண்டுமென்பதற்காகவே சொல்லும் பொய்யானது இந்த சமூகத்தின் பார்வையில் ஒரு பொழுதுப்போக்காகவே பேசப்படுகிறது. அதைவிட ஒரு ஆச்சரியமான விசயம் பொய் என்பது ஒரு சமூகத்தீமையாக கூட கணக்கில் எடுத்துக்கொள்ள படுவதில்லை.

உணவகங்களில், வர்த்த நிறுவனங்களில், தெருவோர கடைகளில், இப்படி மக்கள் கூடும் வியாபார தளங்களில் எல்லாம் இயல்பாகவே மக்கள் பொய் பேசும் நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. பொய் பேசுவது என்பது வேலை பெற நமது கூடுதல் தகுதியுடன் இன்று சேர்க்கப்பட்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை.

நம்மிடம் அரை மணி நேரம் ஒருவர் கூடுதலாக பேசினால் கூட அர்ஜன்ட்டா சின்ன வேலை இருக்கு என...அவரிடமிருந்து தப்பிப்பதற்கு பொய்யாக தான் ஒரு காரணத்தை தேர்ந்தெடுக்கிறோம். பொய் என்பதற்கு தற்கால அகராதியில் பொருள் தேடினால் சாமர்த்தியம் என்றே பொருள் மாற்றம் செய்யப்பட்டிருக்கும்.பொய் பேச மறுப்பவனை பிழைக்க தெரியாதவன் என்று கேலி பேசுகிறது இந்த சமூதாயம்.

இன்று பலரும் பிறர் மத்தியில் தமது ஹூரோயிஸம் பேசப்பட வேண்டும் என்பதற்காக பொய் பேசுவதை ஒரு ஆயுதமாக வைத்திருக்கிறோம். இந்த பழக்கம் பின்னாளில் நமக்குள் பல்வேறு தீய எண்ணங்களையும் உள்வாங்கிக்கொள்கிறது நெருப்பு விறகினை தின்பதுப்போல்...

இந்த சமூகத்திற்கு தீமையென்று என்று தெரியாமலே இந்த சமூகத்திற்கு எதிராய் ஒன்றை செய்துக்கொண்டிருக்கிறோமென்றால் அது பொய் என்று சொல்வதில் பொய்யில்லை.! சகோஸ்

பொய்யானது பிறர் மீது வெறுப்பையும், பொறாமையும், பிறரை மதிக்காமல் ஏளனம் செய்யும் நிலையையும் இயல்பாகவே நம்முள் ஏற்படுத்த வழிவகுக்கிறது. உதாரணம் சில சொல்லணும்னா.,

நம்மை கடக்கும் ஒருவர் கால் வழுக்கி சறுக்கினால் கூட ஒரு நமட்டு சிரிப்பிற்கு பின்னரே அவருக்கு உதவ விரைகிறோம். சாலையோர கூட்டத்தை பிளந்து என்னமோ ஏதோ என வேகமாய் முண்டியடித்து போய் பார்க்கும் போது ஏற்பட்ட விபத்து அவ்வளவு பெரிதொன்றுமில்லையென்றால் நமக்கு ஏற்படும் நிம்மதியை விட ஏமாற்றமே அதிகம்.

இப்படி பிறர் நலனில் கொள்ளவேண்டிய அக்கறையை கூட பொழுதுப்போக்காக்கும் இந்த கொடிய பழக்கத்தை நாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லையென்றால் பொய் என்னும் போதை நம் உள்ளத்தில் ஊடுறவ தொடங்கிவிட்டதென்ற பொருள்.



இப்படி தனி மனித ஒழுக்கத்திற்கும், பிறர் நலனுக்கும் கேடுவிளைவிக்கும் இத்தகைய செயலை விட்டொழிக்க தெளிவான எச்சரிக்கையே நபிகள் நாயகம் அவர்கள் மனிதக்குலம் முழுமைக்கும் மிக கவனமாக பிரகனப்படுத்தினார்கள்.


ஒருமுறை தோழர்கள் மத்தியில் நபியவர்கள்,


‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)' என்று கூறினோம்.‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்' என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)' என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் ‘அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?' என்று நினைக்கும் அளவிற்கு சொல்லிக்கொண்டிருந்தார்கள்.(1)

இறைவனுக்கு இணைவைக்கும் பெரும்பாவ பட்டியலில் பொய்யையும் இணைத்து இருக்கிறார்கள் என்றால் பொய் பேசுவது நம்மை எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்பதை நாம் நிதர்சனமாக உணர்ந்துக்கொள்ளலாம்

அடுத்து பாருங்கள்.
 ‎'நம்பிக்கையாளர் கோழையாக இருக்க இயலுமா?' என நபிகள் நாயகத்திடம் வினவப்பட்ட போது, அதற்கு 'ஆம்' என்றனர். 'கஞ்சனாக இருக்க இயலுமா?' என்றபோது அதற்கும் 'ஆம்' என்று பதிலளித்தனர். 'பொய்யனாக இருக்க இயலுமா?' என்று கேட்டபோது அதற்கு அவர்கள், 'இல்லை (இருக்க இயலாது)' என்று பதிலளித்தார்கள்.(2)


இறை நம்பிக்கையாளர் ஒருக்காலும் பொய் சொல்வராக இருக்க முடியாதென்பதை மிக தெளிவாக கோடிட்டு காட்டி அப்படி பொய் சொல்பவராக இருந்தால் அவரது இறை நம்பிக்கையானது அர்த்தமற்றது என்பதையும் பறை சாற்றுகிறது இந்நபிமொழி..

சிறு பருவத்தில் கற்பிக்கப்படும் எதுவும் அவர்களின் மனதில் ஆழமாக பதிய வாய்ப்பு அதிகம். அப்படி அவ்வயதில் விளையாட்டிற்காக சொல்லப்படும் பொய்களை கூட அங்கீகரிக்கவில்லை நபிகள் நாயகம் ஸல் அவர்கள்

ஒருமுறை எங்கள் வீட்டிற்கு நபி (ஸல்) அவர்கள் வருகை தந்தபோது என் தாயார் என்னை அழைத்து, ‘இங்கே வா! உனக்கு ஒரு பொருள் தருகின்றேன்!' என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார், ‘நீர் அவனுக்குத் எதனைத் தர விரும்புகின்றீர்?' என்று வினவினார்கள். அதற்கு என் தாயார், ‘நான் அவனுக்கு பேரித்தம் பழம் தர விரும்புகின்றேன் என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார் என் தாயாரிடம், ‘நீர் எதனையாவது அவனுக்குக் கொடுப்பதாக அழைத்து கொடுக்கவில்லையென்றால், உம் வினைப்பட்டியலில் இந்தப் பொய் எழுதப்பட்டுவிடும்' என்று கூறினார்கள்.(3)


பொய் என்பதின் அளவுக்கோல் என்னவென்பதை உண்மையாய் விளக்க இந்த ஒரு நபிமொழியே போதுமென்று நினைக்கிறேன்.

பொய் சொல்லுவியாடா... -ஏதோ போலி காரணம் சொல்லி காலையில் ஸ்கூலுக்கு போக மறுத்த சிறுவ(யது மக)னை அடித்து பொய்க்கு எதிரான சீர்திருத்தத்தை தொடங்கும் நாம்..
அப்பா வீட்டுல இல்லேன்னு சொல்லு கண்ணு... மொபைலில் கடன்காரனிடம் சொல்லப்பணிக்கும் மாலை பொழுகளில் ஏனோ மறக்க தான் செய்கிறோம்...

அந்நிலை மாற்றப்பட வேண்டுமென்றால்
மலையோ, மணலோ, காடோ, வயலோ, கடலோ இப்படி எதுவாக இருப்பீனும் அது

பொய்யும், பொய் சார்ந்த இடமும் ஆகாமல் பார்த்துக்கொண்டால் போதும்.!


                                             அல்லாஹ் நன்கு அறிந்தவன்


(1).அறிவிப்பவர்: ஸஃப்வான் இப்னு ஸலீம்
ஆதாரம்: முஅத்தா
(2).அறிவிப்பவர்: அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி)
ஆதாரம்: புகாரி.
(3).அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஆமிர் (ரலி)
ஆதாரம்: அபூதாவூத்.

26 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,

    மிக அருமையான ஆக்கம்..மாஷா அல்லாஹ்.

    நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள் - குர்ஆன் 2:42.

    வஸ்ஸலாம்..

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      == நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள் - குர்ஆன் 2:42. ==

      எவ்வளவு தெளிவாய் பொய் குறித்து எடுத்துரைக்கிறது இறை மறை
      ஜஸாகல்லாஹ் கைரன்
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ

      Delete
  2. சலாம் சகோ குலாம்,

    மாஷா அல்லாஹ். அழகான பதிவு சகோ. வித்தியாசமான கோணத்தில் அணுகி உள்ளீர்கள். அறியாமையில் சிறு சிறு பொய்களை சொல்பவர்களாகவே இருக்கிறோம். நபி மொழிகளை பார்த்ததும்,
    இனி யாருக்கும் பாதிப்பில்லாத பொய்களைக் கூட சொல்லக் கூடாது என்று உறுதி எடுத்துள்ளேன் சகோ.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்
      == இனி யாருக்கும் பாதிப்பில்லாத பொய்களைக் கூட சொல்லக் கூடாது என்று உறுதி எடுத்துள்ளேன் சகோ. ==

      இது என்னை உட்பட எல்லோருக்கும் பொருந்தும் சகோ முடிந்தவரை கடைப்பிடிப்போம் இன்ஷா அல்லாஹ்

      கருத்திற்கு
      ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

      Delete
  3. சலாம் சகோ குலாம்!

    அருமையான ஆக்கம். இறைவன் உங்களுக்கு மென் மேலும் அறிவு ஞானத்தை அதிகப்படுத்துவானாக!

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்
      வருகைக்கும் மேலான துஆவிற்கும்
      ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

      Delete
  4. நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான். (அல்குர்ஆன் 40:28)

    நபி (ஸல்) அவர்கள், "வெறுக்கத்தக்க மற்றொரு பண்பான மோசடியும் பொய்யின் மூலமாகவே ஆரம்பமாகிறது" என்று கூறியுள்ளார்கள்.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், உம் சகோதரர் உன்னை உண்மையாளர் என்று நம்பிகொண்டிருக்க நீ அவரிடம் பொய்ச் செய்தியை சொல்வது மாபெரும் மோசடியாகும். (ஆதாரம்: அபூதாவூத்)

    ReplyDelete
  5. பிறரை சிரிக்க வைக்க பொய் சொல்லுதல் ....

    பொய் சொல்லி சிரிக்க வைக்கக் கூடாது

    பிறரைச் சிரிக்க வைப்பதற்காக நடக்காத நிகழ்வுகளையெல்லாம் நடந்ததாகச் சொல்வது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று! நான்கு பேர் கூடிவிட்டாலே வாய்க்கு வந்ததையெல்லாம் கூறி சிரித்துக் கொண்டிருக்கும் வழக்கம் ஆண்களிடத்திலும் பெண்களிடத்திலும் அதிகமாகப் பரவியிருக்கிறது.

    சின்னத் திரைகளில் ஒளிபரப்பப்படும் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பெரும்பாலான நகைச்சுவைக் கருத்துக்கள் கற்பனையாக உருவாக்கப்பட்டவை. நகைச்சுவையிலும் உண்மையைத் தான் சொல்ல வேண்டும் என்று மார்க்கம் பணிக்கிறது. சிரிக்க வைப்பதற்காகப் பொய் சொல்வதை தடைசெய்துள்ளது. மக்கள், அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களிடத்தில் தமாஷ் செய்கிறீர்களே? என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நான் உண்மையைத் தவிர வேறெதையும் சொல்லவில்லையே! என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி 1913)

    நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: எவன் ஒரு கூட்டத்தினரைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய்யான செய்தியைக் கூறுகிறானோ அவனுக்குக் கேடு தான். அவனுக்கு கேடு தான். (அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதா (ரலி) நூல்: திர்மிதி 2237)

    ReplyDelete
  6. பிறரைப் பாதிப்புக்குள்ளாக்கி சிரிக்க வைக்கக் கூடாது

    அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அவர்களின் தோழர்கள் ஒரு பயணத்தில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களில் ஒருவர் உறங்கி விட்டார். வேறு சிலர் (அவரது) அம்புகளுக்கு அருகில் சென்று அதை எடுத்து வைத்துக் கொண்டார்கள். அம்மனிதர் உறங்கி எழுந்தவுடன் (அம்பு காணாமல் போனதைக் கண்டு) திடுக்குற்றார். (இதைப் பார்த்த) கூட்டம் சிரித்து விட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஏன் நீங்கள் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், இவரது அம்புகளை நாங்கள் எடுத்து (மறைத்து) வைத்துக் கொண்டோம். அவர் விழித்தவுடன் திடுக்குற்றார் என்று கூறினார்கள். ஒரு முஸ்லிமை திடுக்குறச் செய்வது எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா, நூல்: அஹ்மத் 21986)

    ReplyDelete
  7. //பொய் சொல்லுவியாடா... -ஏதோ போலி காரணம் சொல்லி காலையில் ஸ்கூலுக்கு போக மறுத்த சிறுவ(யது மக)னை அடித்து பொய்யிக்கு எதிரான சீர்திருத்தத்தை தொடங்கும் நாம்..
    அப்பா வீட்டுல இல்லேன்னு சொல்லு கண்னு... மொபைலில் கடன்காரனிடம் சொல்லப்பணிக்கும் மாலை பொழுகளில் ஏனோ மறக்க தான் செய்கிறோம்...
    //


    நம்முடைய இஸ்லாமிய மார்க்கம் குழந்தைகளுடைய உள்ளங்களில் உண்மையை விதைக்கவே நம்மைத் தூண்டுகிறது.

    நபி(ஸல்) அவர்கள். "தாய் தான் ஒரு குழந்தையின் ஆரம்பப்பள்ளி" என்று கூறியுள்ளார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
      மாஷா அல்லாஹ்

      மேலதிக ஹதிஸ்கள் அழகான விளக்கத்துடன்
      பகிர்ந்தமைக்கு
      ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

      Delete
  8. இதை இந்த பதிவை ஏப்ரல் 1 ம் தேதிக்கு முன்னாடி சொல்லலாம்ல ....

    ReplyDelete
    Replies
    1. சரிதான் சகோ.. ஆனால் இணையத்தில் இணையும் நேரம் எனக்கு மிக குறைவே... அத்தோடு வேலைப்பளு...

      இருந்தால் என்ன. ஏப்ரல்-1 குறித்த கட்டுரைகள் நம் சகாக்களிடமிருந்து முன்னமே வந்திருக்கிறது சகோ

      Delete
  9. சலாம் சகோ குலாம், அருமையான பதிவு. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்.

    ‎'நம்பிக்கையாளர்..."பொய்யனாக இருக்க இயலுமா?' என்று கேட்டபோது அதற்கு அவர்கள், 'இல்லை (இருக்க இயலாது)' என்று பதிலளித்தார்கள்.

    இறை வணக்கத்தின் அடிப்படையே இறை நம்பிக்கை தான். ஒருவன் இறை ந்ம்பிக்கையுடையவனாக இருக்க வேண்டுமென்றால உண்மை மட்டுமே பேச வேண்டும். பொய்களை பேசக்கூடாது. பொய் பேசுபவன் இறை நம்பிக்கையுடவனாக இருக்க முடியாது என்பதை தெளிவாகவே இப்பதிவில் பதியப்பட்ட நபிமொழி நமக்கு விளக்குகின்றன.

    ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். (33:70)

    அல்லாஹ் நம் அனைவரையும் உண்மை பேசுபவர்களில் சேர்ப்பனாக!

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்
      == பொய் பேசுபவன் இறை நம்பிக்கையுடவனாக இருக்க முடியாது ==
      முற்றிலும் உண்மை சகோ...

      அல்லாஹ் நம் அனைவரையும் உண்மை பேசுபவர்களில் சேர்ப்பனாக!
      இன்ஷா அல்லாஹ்

      வருகைக்கு நன்றி சகோ

      Delete
  10. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    மாஷா அல்லாஹ்..அருமையான ஆக்கம்..நாம் ஒவ்வொருவரும் மனதில் நிறுத்தி கடை பிடிக்க வேண்டிய தகவல்.. வழமை போல தங்கள் எழுத்தால் சரியான முறையில் வெளிப்பட்டு இருக்கிறது..

    இறை நம் அனைவரையும் நேர் வழியில் செலுத்தட்டும்..

    நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்” (அல்-குர்ஆன் 16:105)

    நல்லதொரு பதிவுக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      == மாஷா அல்லாஹ்..அருமையான ஆக்கம்..நாம் ஒவ்வொருவரும் மனதில் நிறுத்தி கடை பிடிக்க வேண்டிய தகவல்.. வழமை போல தங்கள் எழுத்தால் சரியான முறையில் வெளிப்பட்டு இருக்கிறது..==

      ஜஸாகல்லாஹ் கைரன்.,
      வருகைக்கும் கருத்திற்கும்

      இறை நம் அனைவரையும் நேர் வழியில் செலுத்தட்டும்..

      இன்ஷா அல்லாஹ்

      Delete
    2. வ அலைக்கும் சலாம் வரஹ்

      == மாஷா அல்லாஹ்..அருமையான ஆக்கம்..நாம் ஒவ்வொருவரும் மனதில் நிறுத்தி கடை பிடிக்க வேண்டிய தகவல்.. வழமை போல தங்கள் எழுத்தால் சரியான முறையில் வெளிப்பட்டு இருக்கிறது..==

      ஜஸாகல்லாஹ் கைரன்.,
      வருகைக்கும் கருத்திற்கும்

      இறை நம் அனைவரையும் நேர் வழியில் செலுத்தட்டும்..

      இன்ஷா அல்லாஹ்

      Delete
  11. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ்,

    மாஷா அல்லாஹ் மிக அருமையான பதிவு சகோ.நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சகோ.உண்மை பேசுபவர்களை கண்டால் இவர் பெரிய அரிச்சந்திரன் உண்மைய சொல்ல வந்துட்டாரு என்று கேலி செய்யும் உலகத்தில் நாம் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பது நிதர்சனமான உண்மை..
    அல்லாஹ் சுபஹானஹு தஆலா நம் அனைவரையும் போய் பேசும் பெரும் பாவங்களில் இருந்து பாதுகாத்து அருள் புரிவானாக.

    உங்கள் சகோதரன் முஹமத் இக்பால்

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      = மாஷா அல்லாஹ் மிக அருமையான பதிவு சகோ.நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சகோ.உண்மை பேசுபவர்களை கண்டால் இவர் பெரிய அரிச்சந்திரன் உண்மைய சொல்ல வந்துட்டாரு என்று கேலி செய்யும் உலகத்தில் நாம் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பது நிதர்சனமான உண்மை.. =

      சரிதான் சகோ பொய் பேச மறுப்பவனை பிழைக்க தெரியாதவன் என்றே உலகம் வர்ணிக்கிறது

      வருகைக்கும் கருத்திற்கும்
      ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

      Delete
  12. இணை வைத்தல், பெற்றோரை நோகடித்தல், .இவைக்கு நிகரானது பொய்...

    இணை வைத்தலை மட்டுமே பெரும் பாவமாக கருதும் நம்மவர்களுக்கு இந்த

    ஹதீஸ் சென்றடைய வேண்டும் ....

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

      =
      இணை வைத்தலை மட்டுமே பெரும் பாவமாக கருதும் நம்மவர்களுக்கு இந்த ஹதீஸ் சென்றடைய வேண்டும் ....
      =

      நிச்சயமாக! சகோ அதற்கு இறைவன் நாடுவானாக!

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
      ஜஸாகல்லாஹ் கைரன்

      Delete
  13. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    வருகைக்கு
    ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

    ReplyDelete
  14. மாஷா அல்லாஹ் மிக அருமையான பதிவு
    ஜஸாகல்லாஹ் கைரன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு
      ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

      Delete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்