"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Wednesday, July 20, 2011

பகுத்தறிவாளர்களின் கடவுள்..!

                                    ஓரிறையின் நற்பெயரால்.,
                 தான் (மட்டும்) ஏற்கும் அல்லது மறுக்கும் நம்பிக்கை சார்ந்த ஒரு விசயத்தை அறிவு ரீதியாக பிறருக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை. அத்தகைய நிகழ்வை பிறர் விரும்பினால் உண்மையென ஏற்கவும் அல்லது பொய்யென மறுக்கவும் செய்யலாம்.,


         "கடவுள்" - என்ற நிலையை இஸ்லாம் அல்லாத மற்ற மதங்கள் யாவும் மேற்கண்ட நிலைப்பாட்டிலேயே வைத்து காண்கிறது.,ஆகவேதான் கடவுள் குறித்த விமர்சனங்களுக்கு அங்கு பதில் தருவதில்லை என்பதைவிட பதில் இல்லையென அறிந்து கடவுள் மறுப்புக்கு பலர் ஆளாகின்றனர். ஆக கடவுள் மறுப்புக்கு இஸ்லாம் அல்லாத ஏனைய மதங்களின் தவறான கடவுள் சார்ந்த கோட்பாடே பிரதான காரணம் என்றால் அது மிகையாகாது.ஆக இஸ்லாம் கூறும் கடவுள் குறித்த வரைவிலக்கணம் பகுத்தறிவிற்கு பொருத்தமானதா? என்பதை பார்க்கும் முன் கடவுளை மறுக்கும் நாத்திக சிந்தனை பகுத்தறிவிற்கு உகந்ததா... பார்ப்போம்.


  நாத்திகம் -
        பொதுவாக ஒருவரின் நாத்திக சிந்தனைக்கு அடிப்படைக்காரணம் தேடுதலில் விருப்பங்கொண்ட அவரின் சுய அறிவு. அது பாராட்டத்தக்கதே..! எனினும்., அவ்வறிவால் தம்மை சுற்றி நடைபெறும் கடவுள் பெயரால் அரங்கேறும் போலி வழிபாடுகளும், அனாச்சாரங்களும், அறிவிற்கு பொருந்தாத மூட பழக்க வழக்கங்களும், மிக முக்கியமாக கடவுள் பெயரால் நடைபெறும் சமூக புறக்கணிப்பும் தான் ஒருவரது கடவுள் மறுப்புகொள்கைக்கு மிக முக்கிய காரணியாகிறது.. இன்னும் சற்று ஆழமாக அதன் வெளிபாட்டை இஸ்லாத்திலும் காண்பிக்க குர்-ஆன் மற்றும் ஹதிஸ்களுக்கு தவறான புரிதலோடு தங்களின் சுய விளக்கத்தை அளித்து கடவுள் மறுப்புக்கு மேலும் மெருகேற்றுகிறார்கள் எனினும் அதற்கு நமது (இணைய) சகோதரங்கள் பலரால் தெளிவாக மறுப்பும் விளக்கமும் தரப்படுகிறது அல்ஹம்துலில்லாஹ்..!


       இங்கு கவனிக்கத்தக்க ஒரு விசயம் .. கடவுளை மறுக்க கடவுள் பெயரால் ஏற்படும் தவறுகளை முன்னிருத்தி மட்டுமே கடவுள் மறுப்புக்கு சான்று தரப்படுகிறது. மாறாக நேரடியாக கடவுள் இல்லையென மறுக்க தெளிவான காரணம் இல்லை.,


   "பரிணாமம்" அறிவியல் ரீதியாக கடவுள் மறுப்புக்கு மாபெரும் ஆயுதமாக கொண்டாலும் அஃது அதுவும் பயனற்று தான் போகும். ஏனெனில் இதுவரை நிகழ்வுற்ற பரிணாம கோட்பாடுகளை ஒருவேளை உண்மையென நம்பினாலும் (?) கூட "ஏற்பட்ட உயிரின மாற்றத்தை பற்றித்தான் பரிணாமம் பேசுகிறதே தவிர அஃது உயிரினங்கள் ஏன் மாற்றமடைந்தன என்பதற்கு தகுந்த சான்றின்றி இன்னும் கேள்விக்குறியோடு தான் ஆய்வை தொடர்வதாக அறிவியலார் பதில் தருகின்றனர்.


        ஆக அறிவியல் ரீதியான கடவுளை மறுக்க பரிணாமம் துணைக்கு வராது., சுருங்கக்கூறினால் "எதுவுமல்லாத சூன்யத்திலுருந்து ஒரு உயிரை அறிவியலார் உண்டாக்கினால் மட்டுமே விஞ்ஞானத்தால் கடவுள் இல்லை என்பதை ஆணித்தரமாக மறுக்க முடியும். அதுவரை கடவுளை மறுக்க தர்க்கரீதியான வழிகளை தான் தேட வேண்டும். எனினும் பகுத்தறிவு பார்வையில் அதுவும் சாத்தியமா என்றால்... இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..


 எந்த ஒன்றை மறுப்பதும், ஏற்பதும் அவரவர் உரிமை., அதே நேரத்தில் பொதுவில் அறுதியிட்டு கூறும் தம் வாதத்தை மெய்பிப்பதாக இருந்தால் அதற்கான சான்றுகளை தருவது அவரது கடமையாகும்., இதுவே ஒரு செயல், ஒரு தன்மை அல்லது ஒரு நிகழ்வை உண்மைப்படுத்தலின் வரைவிலக்கணம் ஆகும்.


     இதனடிப்படையில் கடவுள் குறித்த நிகழ்வை பொதுவில் நிறுத்தி ஏற்பதாக இருந்தாலும் அல்லது மறுப்பதாக இருந்தாலும் அதற்கான வரைவிலக்கணம் தெளிவாக முன்னிருத்தப்பட வேண்டும். அஃதில்லாமல் கூறும் வாதங்கள் நம்பிக்கை சார்ந்த அளவில் மட்டுமே பார்க்கப்படும். இந்நேரத்தில் கடவுள் குறித்த வரைவிலக்கணம் குறித்துப்பார்க்கும்போது சகோ ஜாகிர் நாயக் அவர்களின் அழகிய எளிய உதாரணத்தையும் இங்கு குறிப்பிடுவது அவசியம் என நினைக்கிறேன்.,


    என் கையில் ஒரு பேனாவை வைத்துக்கொண்டு இது ஒரு புத்தகம் என்று நான் கூறினால் இதனை மறுப்பதாக இருந்தால் கண்டிப்பாக அவருக்கு பேனாவை பற்றி அறிந்திருக்க வேண்டும் அஃது பேனாவை பற்றி தெரியாவிட்டாலும் புத்தகத்தைப்பற்றி கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.அப்போது தான் நான் கையில் வைத்திருப்பது புத்தகம் இல்லை என கூற இயலும்., என அவர் கூறினார்.,


    மேற்கண்ட கேள்வி எதிர் மறையாக இருப்பதால் விடைக்கான இருப்பொருட்களில் ஒன்றை மட்டும் நாம் அறிந்திருந்தாலே போதுமானது மற்றொரு பொருள் குறித்து அறியாமாலிருந்தாலும் நமது நிலைப்பாட்டை உண்மையாக்கலாம். இப்படிதான் மேற்கண்ட நாத்திக சிந்தனை கடவுளுக்கான கேள்விக்கு எதிர்மறை விளக்கத்தை கையாளுகிறது.


   ஆனால் இதே கேள்வி நேர்மறையாக கேட்கப்பட்டால்..!
             என் கையில் ஒரு பொருளை வைத்து கொண்டு. அதை பிறர் முன்னிலையில் காட்டி இது பேனா என்கிறேன். இதை மறுப்பதாக ஒருவர் இருந்தால் மற்ற எல்லா பொருட்களின் வரைவிலக்கணம் குறித்து தெரிந்திருந்தாலும் அஃது இக்கேள்விக்கு பதில் அவரால் சொல்ல முடியாது. மாறாக பேனாவின் வரைவிலக்கணம் தெரிந்திருந்தால் மட்டுமே உண்மையான பதில் தருவது சாத்தியம். 


     ஆக இந்த உதாரணத்தை மேற்கோளாக கொண்டு கடவுள் குறித்த வரைவிலக்கணத்தோடு ஒப்புநோக்கும் போது கடவுளை ஏற்பதாகவோ அல்லது மறுப்பதாகவோ இருந்தால் அவருக்கு கடவுள் குறித்த வரைவிலக்கணம் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும் அப்போது மட்டுமே இக்கேள்விக்கு உண்மையான பதில் தர இயலும்.


 மிக தெளிவாக - எளிதாக இஸ்லாம் 
  • (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.  (112:1)
  • அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.  (112:2)
  • அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.  (112:3)
  • அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.  (112:4)
         
              இப்படி குர்-ஆனில் கடவுளுக்கு வரைவிலக்கணம் தருகிறது. இவ்வரிகளை நம்பிக்கை என்ற அளவுகோலையும் தாண்டி மனித அறிவு ஏற்றுக்கொள்ளும் வாதமாகவும், அதே நேரத்தில் மனித எண்ணங்களால் வரையறுக்க இயலாத ஓர் உயரிய சக்திக்கு பொருந்தும் படியான முறையான செய்கைகளும் இருப்பதால் மேற்கண்ட வரைவிலக்கணத்தை ஏற்றுக்கொள்வதில் பகுத்தறிவாளர்களுக்கு எந்த வித ஆட்சபனையுமில்லை.,
           
          ஆக கடவுளுக்கான ஓர் உயரிய வரைவிலக்கணத்தை முன்னிருத்த்தி இது உண்மையானது என குர்-ஆன் கூறும் போது அஃது மேற்கண்ட கோட்பாட்டை பொய்யென மறுப்பதாக இருந்தால் அவ்வாறு தாங்கள் மறுக்கும் கடவுளுக்கு உண்மையான வரைவிலக்கணம் நாத்திக சிந்தனையாளர்கள் தர வேண்டும். ஆனால் இன்று வரை தாங்கள் மறுக்கும் கடவுளுக்கு உண்டான வரைவிலக்கணத்தை நாத்திக சிந்தனை தரவே இல்லை. இது ஆச்சரியமான விஷயமும் கூட...


           ஏனெனில் கடவுள் குறித்த நிலைப்பாட்டை ஏனைய மதங்கள் நம்பிக்கைச்சார்ந்த விசயமாக அணுகி கொண்டிருக்க... இஸ்லாம் மட்டுமே எப்படிப்பட்டவர் கடவுளாக இருக்க முடியும் அல்லது இருக்க வேண்டும் என கடவுள் குறித்து ஒரு தெளிவான வரைவிலக்கணம் ஏற்படுத்தி தந்திருக்கிறது எனும்போது எதையும் நம்பிக்கை கடந்து பகுத்தறிவு கண் கொண்டு ஆராயும் நாத்திகம் கடவுள் இல்லை என்பதை நிருபிக்க எப்படிப்பட்டவர் கடவுளாக இருக்கமுடியாது அஃது ஏன் கடவுளாக இருக்க முடியாது என்பதற்கு ஒரு வரைவிலக்கணம் நாத்திகம் உண்டான நாள் முதலே இயற்றி இருக்கவேண்டுமல்லவா..? இதுவரைக்கும் அஃது வரைவிலக்கணம் ஏற்படுத்தாதது மிகப்பெரிய கேள்விக்குறியே..! அஃது இனி ஏற்படுத்த முனைந்தாலும் மதங்கள் வணங்கும் போலி கடவுளர்களை தான் இவர்கள் இனங்காட்ட முடியும்


       அஃது அத்தகைய போலி கடவுளர்களை மறுப்பதற்கு பெயர் தான் நாத்திக சிந்தனையென்றால்... நாங்களும் அத்தகைய போலி கடவுளர்களை இல்லை என்று தான் சொல்வோம்.


       பகுத்தறிவு விதையில் மலர்ந்தது நாத்திகப்பூவென்றால் இனிமேலாவது நாத்திகம் மறுக்கும் கடவுளுக்கு ஒரு வரைவிலக்கணம் தரட்டும். அதுவரை கடவுள் மறுப்பாளர்கள் என தங்களை சொல்ல வேண்டாம் வேண்டுமானால் கடவுள் எதிர்ப்பாளர்கள் என்று- அதுவும் மதங்கள் சமைத்த போலி கடவுள்களின் எதிர்ப்பாளர்கள் என்று தங்களை சமூகங்களில் அடையாளப்படுத்தட்டும்.,. உங்களின் அறிவு சிந்தனைக்கு ஆணவ திரையிட வேண்டாம் என்பதே இப்பதிவின் நோக்கம் நாத்திக சகோதரங்களே...


                                                               அல்லாஹ் மிக்க அறிந்தவன் 

22 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

    //"ஏற்பட்ட உயிரின மாற்றத்தை பற்றித்தான் பரிணாமம் பேசுகிறதே தவிர அஃது உயிரினங்கள் ஏன் மாற்றமடைந்தன என்பதற்கு சான்றின்றி இன்னும் கேள்விக்குறியோடு தான் ஆய்வை தொடர்வதாக அறிவியலார் பதில் தருகின்றனர்.//

    தெளிவான சிந்தனை புகட்டும் பதிவு சகோ!!!

    ReplyDelete
  2. வ அலைக்கும் சலாம் வரஹ்
    ஜஸாகல்லாஹ் கைரன்
    நன்றி சகோ

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    அருமையான பதிவு நண்பரே..

    ReplyDelete
  4. வ அலைக்கும் சலாம் வரஹ்
    ஜஸாகல்லாஹ் கைரன்
    நன்றி சகோ

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    சகோ.குலாம்,
    மிகச்சரியான வாதங்களை பதிவு முழுதுமே எடுத்து வைத்து நாத்திகத்தை வெட்டி கூறுபோடும் கூர்மையான வினாக்களாக இப்பதிவை தீட்டியிருக்கிறீர்கள்..!
    மிக அருமையானதொரு இடுகை சகோ.

    ///கடவுளை ஏற்பதாகவோ அல்லது மறுப்பதாகவோ இருந்தால் அவருக்கு கடவுள் குறித்த வரைவிலக்கணம் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்///---நிச்சயமாக..!

    நாத்திகர்களிடம் இதற்கு என்ன பதில்..?

    ஹலோ.. ஹலோ...
    மைக் டெஸ்டிங்...
    ஒன்.. ட்டூ.. த்ரீ...

    நாத்திகர்கள் எனப்படும் கடவுள் மறுப்பாளர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு உடனே வரவும்...!

    ReplyDelete
  6. வ அலைக்கும் சலாம் வரஹ்
    ஜஸாகல்லாஹ் கைரன்
    நன்றி சகோ

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
    சிறப்பான பதிவு
    இதற்கான நற்கூலியை இறைவன் உங்களுக்கு அளிப்பானாக

    ஜஸாக்கல்லாஹ் கைர

    ReplyDelete
  8. வ அலைக்கும் சலாம் வரஹ்
    ஜஸாகல்லாஹ் கைரன்
    நன்றி சகோ

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
    அருமையான,நியாயமான பல கேள்விகளை உள்டக்கிய கட்டுரை உங்களின் கேள்விகளுக்கு விதண்டாவாதம் செய்வோர் களிடமிருந்து பதில் கிடைக்க வாய்ப்பு இல்லை

    ReplyDelete
  10. வ அலைக்கும் சலாம் வரஹ்
    ஜஸாகல்லாஹ் கைரன்
    நன்றி சகோ

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ....

    இறைவனின் இலக்கணம் கூட அறியாமல் இறைவனை மறுப்பவர்கள் இனியாவது சிந்திக்கட்டும்.

    ReplyDelete
  12. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  13. இந்த பதிவிற்கான மறுப்பு
    By senkodi on பகுத்தறிவாளர்களின் கடவுள்..! at 12:40 PM
    PUBLISH SPAM DELETE
    (1)
    நண்பர் குலாம்,
    உங்கள் அறிமுகத்திற்கு நன்றி.
    வாய்ப்பு கிடைக்கும் போது உங்கள் பதிவை படித்து தேவைப்பட்டால் பதிலளிக்கிறேன். ஏனென்றால், பெரும்பாலான இஸ்லாமிய பதிவர்கள் ஓர் எதிர்கருத்து எனும் நிலையைத் தாண்டி இஸ்லாத்திற்கு எதிரான விமர்சனம் என்றாலே வன்மத்துடன் சொற்களை வீசுகிறார்கள். போகட்டும்.
    நீங்கள் சுட்டிய முதல் கட்டுரையை படித்துப் பார்த்தேன். நாத்திகர்கள் மறுக்கும் கடவுளுக்கான வரைவிலக்கணம் என்ன? என்பது உங்கள் மையமான கேள்வி. இது ஒரு குழப்ப வாதம். உங்களின் எடுத்துக் காட்டிலிருந்தே தொடங்கலாம். கையில் ஒரு பேனாவை பிடித்துக் கொண்டிருப்பதைப் போன்று பாவனை செய்து கொண்டு, இது பேனா, இது எழுதுவதற்கு உதவும் பொருள், மையை தேக்கிவைத்து சீராக கசியும் அமைப்புடன் தாளில் தீற்றும் உத்தியில் இது செயல்படுத்தப்படுகிறது. இதுதான் இது பேனா என்பதற்கான வரைவிலக்கணம். இப்போது என்கையில் பேனா இல்லை என்பவர்கள் அவர்கள் மறுக்கும் பேனாவிற்கான வரைவிலக்கணத்தைக் கூறட்டும். இப்படி ஒருவரால் கூறவியலுமா?
    ஒருவர் ஒரு பொருளுக்கு அல்லது ஒரு தன்மைக்கு இலக்கணம் கூறவேண்டும் என்றால் அந்தப் பொருள் அல்லது தன்மை இருப்பதாக அவர் ஏற்றுக் கொண்டாக வேண்டும். இது நேர்வாதம் எதிர்வாதம் எனும் இரண்டு நிலையிலும் பொருந்தும். அதாவது அந்த பொருள் அல்லது தன்மை எது குறித்தானது என்பதில் நேர்வாதமும் எதிர்வாதமும் இருந்து; அந்தப் பொருளின் அல்லது தன்மையின் இருப்பில் வாதமில்லாத நிலையில் நேர்வாதத்தின் சார்பிலும் எதிர்வாதத்தின் சார்பிலும் தனித்தனியே வரைவிலக்கணங்களை முன்வைத்து அது எத்தகையது என்பதை முடிவு செய்யலாம். ஆனால் அந்த பொருள் அல்லது தன்மை இருக்கிறதா இல்லையா என்பதில் வாதமிருக்கும் போது அங்கு வரைவிலக்கணம் தேவைப்படாது. மாறாக அந்தப் பொருள் அல்லது தன்மை என்ன என்பது விளக்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  14. இந்த பதிவிற்கான மறுப்பு
    By senkodi on பகுத்தறிவாளர்களின் கடவுள்..! at 12:40 PM
    (2)
    இப்போது உங்களின் கடவுள் பற்றிய வரைவிலக்கணத்திற்கு வருவோம். அவன் ஒருவன், தேவையற்றவன், பெறவும் இல்லை, பெறப்படவும் இல்லை, நிகரும் இல்லை. இது வரைவிலக்கணம் அல்ல. இது ஒப்பீடு. நீங்கள் குறிப்பிட்டுள்ளவை மனிதனின் வரைவிலக்கணத்தில் அடங்குபவை. மனிதனின் இலக்கணத்தோடு ஒப்பீடு செய்து இது இல்லாதது என்று கூறுவது. ஒரு வாதத்திற்காக, இதை வரைவிலக்கணம் என்று கொண்டாலும், அது எப்போது பொருந்தும்? கடவுள் என்று ஒருவன் இருக்கிறான் என்பதில் என்பதில் எந்த மறுப்பும் இல்லாத நிலையில் ஆனால் அவன் எத்தகையவன் என்பதில் மாறுபட்ட கருத்துகள் இருந்தால், அப்போது ஒரு தரப்பிற்கு ஆதரவாக இதை வரைவிலக்கணமாக பொருத்தலாம்.
    ஆனால் ஆத்திகர்களுக்கும் நாத்திகர்களுக்குமான பிரச்சனை இதுவல்ல. கடவுள் என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா என்பது தான் பிரச்சனை. இருக்கிறது என்பவர்கள் தான் அதற்கு வரைவிலக்கணம் கூறமுடியும். இல்லை என்பவர்கள் என்ன வரைவிலக்கணத்தை கூறுவது? இன்னின்ன இலக்கணங்கள் இல்லை என்றால் அதை மறுப்போம் என்று கூறமுடியுமா? ஆகவேதான் கூறுகிறேன் இது குழப்ப வாதம் என்று.
    கடவுள் என்றால் என்ன? கடவுள் என்ற ஒரு கருத்து உலவத் தொடங்கிய காலத்திலிருந்து அதன் மறுப்பாளர்களால் தொடர்ந்து கேட்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் கேள்வி இது. சற்றேறக்குறைய என்னிடம் கடவுள் குறித்து பேசும் அனைவரிடமும் இந்தக் கேள்வியை நான் கேட்டிருக்கிறேன். யாரும் பதில் கூறியதில்லை. இந்த பேரண்டத்தில் இருக்கும் அனைத்தையும் இரண்டு வகையாக பகுக்கலாம். ஒன்று, பொருள். இரண்டு, கருத்து. இந்த இரண்டும் இல்லாமல் வேறொன்று இருக்கிறது என்று நீங்கள் உட்பட யாராலும் கூறமுடியாது. இந்த இரண்டுக்கும் வரைவிலக்கணம் இருக்கிறது. பொருள் என்பது நான்கு பரிமாணத்தில் அடங்குவது, கருத்து என்பதற்கு பரிமாணம் தேவையில்லை என்றாலும் பொருளைச் சார்ந்து இலங்குவது. இந்த இரண்டைத்தவிர வேறொன்று இப்பேரண்டத்தில் இல்லை. யாரேனும் இந்த இரண்டல்லாத ஒன்று இருக்கக் கூடும் எனக் கூறுவார்களாயின், அது என்ன என்பதை விளக்கும் கடமை அவர்களுக்கு இருக்கிறது. இப்போது நீங்கள் கூறுங்கள் கடவுள் என்பது என்ன? பொருளா? கருத்தா? அல்லது இரண்டுமல்லாத வேறொன்றா? பதில் கூற முயற்சித்துப் பாருங்களேன்.

    ReplyDelete
  15. அன்பு சகோ செங்கொடி.,
    உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமதானமும் நிலவ
    ட்டுமாக!
    பகிர்ந்த பதிலுக்கு நன்றி.,! உங்களின் மையக்கருத்து இப்பேரண்டத்தில் இருப்பது அல்லது இயங்குவது ஒன்று பொருள் மற்றோன்று கருத்து., மிக சரியே., இதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.,
    இப்போது என் கேள்வியே இத்துடன் பொருந்துங்கள்., நான் குறிப்பிட்ட கடவுள் என்பவர் அல்லது கடவுள் என்பது நாம் வரையறை செய்த பிரபஞ்ச எல்லைக்குள் இருப்பதாக கொண்டால் மட்டுமே நீங்கள் குறிப்பிட்ட மேற்கண்ட இரு வரையறைக்குள் வந்தாக வேண்டும் அப்படி இல்லையெனில் கடவுள் என்ற மூன்றாம் நிலைக்கு காரணம் தேவைப்படுகிறது அஃது கிடைக்காத பட்சத்தில் கடவுள் என்ற ஒன்று பூஜ்யாக்கப்படுகிறது.,
    ஆனால் கடவுள் என்பவரை அல்லது என்பதை இப்பிரஞ்சத்தில் உள்ளடக்க முடியா ஆனால் இப்பிரபஞ்சதை ஆளும் ஒரு நிலையாக கொள்ளும் போது எப்படி நீங்கள் குறிப்பிடும் பொருளியல் அல்லது கருத்தியல் கோட்பாட்டில் வரும். அத்தோடு மட்டுமில்லாமல் நீங்கள் குறிப்பிடும் மேற்கண்ட இரு நிலைகளில் ஒன்றின் கீழ் கடவுள் என்பவர் /என்பது வந்தால் சார்பு நிலையில் அது ஒரு தன்மையை பெறுகிறது என்பதோடு அதற்கான கட்டுப்பாடுகளும் வடிவிலக்கணமும் கிடைத்து விடுகிறது அப்படியிருந்தால் அதற்கு பெயர் கடவுளும் இல்லை.ஆக மனிதன் வரையறுத்த விதிகளில் சிக்காத
    கடவுளுக்கான தெரிதல்கள் இப்படி இருக்க
    நாத்திக /பரிணாம வாதிகள் நீங்களும் உட்பட
    1.மனிதன் ஏனைய அல்லது ஏதாவது ஒரு வழியில் உணரக்கூடிய வகையில் அமைந்திருக்க வேண்டும்.
    2. பிரபஞ்ச விதிகளுக்குள் வரையறை செய்யக்கூடிய கருத்தியல் கோட்பாட்டிற்குள் வடிவம் பெற்றிருக்க வேண்டும்
    3.இன்னும் சில காலங்களுக்கு முன் சென்றால்.,
    கண்களால் பார்த்து அறியப்பட வேண்டிய பொருளாக இருக்க வேண்டும்-
    கடவுள் என்பவர் மேற்கண்ட பண்பியலை சார்ந்திருக்கவேண்டும் என்ற அளவுகோலை உங்களுக்கு அளித்தது யார்? இந்த வரையறையே எங்கிருந்து எடுத்தீர்கள்?

    ReplyDelete
  16. ஆய்வு ரீதியாக காணக்கிடைக்காத ஒரு பொருளுக்கு வேண்டுமானால் நீங்கள் குறிப்பிட்ட இரு சார்பு கோட்பாட்டில் ஒன்றை தாங்கி இல்லையென்றால் அப்பொருள் இல்லையென்றே அறிவார்ந்து முடிவு செய்யலாம் அதுதான் உண்மையும் கூட., ஆனால் இந்த இரண்டோ அல்லது இதுவல்லாத மூன்றாவது ஒரு மூலக்கூறு அல்லது நிலை இப்பிரபஞ்சத்தில் உருவாகி நாளை அறிவியலார் கண்டறிந்தாலும் அத்தகைய நிலை பண்புகளோடு கடவுள் என்பது பொருந்தி வராது சகோ.,
    சாத்தியக்கூறுகள் பொதுவான விதிப்படி எண்ணற்ற பதில்களைக் கொண்ட ஒரு செயலுக்கு, இல்லையென்பதை விட இருக்கிறது என்பதை உண்மைப்படுத்தவே அதிக நிரூபணம் வேண்டும். அதாவது ஒரு திட திரவ பொருளின் இருப்பை குறித்து அறிய அப்பொருளை கண்ணால் காணவில்லையென்று ஒருவர் பதில் தருவாரானால் அப்பொருள் அவர் முன் அல்லது அவரது கண்ணுக்கு தெரியாமல் இருப்பதே போதுமான சான்று ஆக கண்ணுக்கு தெரியவில்லை என்ற ஒரு சதவீகித வாதமே அவரது உண்மை நிலைக்கு போதுமானதாகும்., மாறாக கண்ணுக்கு தெரியாத அத்திட, திரவப்பொருள் உண்டென்று வாதிடும் ஒருவர் அதை நிருபிக்க 99 சதவீகித சான்று தர வேண்டும் .
    ஏனெனில் நாம் எல்லோரும் எந்த ஒரு திட திரவப்பொருளின் ஒழுங்குப்படுத்தப்பட்ட தன்மை மற்றும் வடிவிலக்கணம் குறித்து அறிவியல் ரீதியாக அறிந்து வைத்திருப்பதே அதற்கு காரணம். அதுப்போல இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கான இலக்கணமும் மிக சரியாக தெளிவாக நம்மிடம் இருக்கிறது.ஆக எந்த ஒன்றை ஏற்பதையும் மறுப்பதையும் விஞ்ஞானரீதியில் உண்மைப்படுத்தலாம்.,
    நிற்க.,
    சரி வரைவிலக்கணத்திற்கு வருவோம் ., உங்கள் பார்வையில் இது ஓப்பிட்டு வாக்கியமாக எடுத்துக்கொண்டாலும்., பிரச்சனையில்லை
    ஆம் இல்லை என்ற இரண்டில் ஒரு பதிலால் மட்டுமே நூறு சதவீகித உண்மையாகும் ஒரு கேள்விக்கு சாத்தியக்கூறுகள் விதிப்படி மிக சரியாக இரண்டுக்கும் 50 சதவீகித வாய்ப்பு இருக்கிறது
    ஆக கடவுள் உண்டென்பதை நிருபிக்க இருக்கும் 50 சதவீகிதம் போலவே இல்லையென்பதை நிருபிக்கவும் 50 சதவீகிதம் வாய்ப்பிருக்கிறது.,ஆனால் அறிவியல் வரையறுத்த பண்பில் அடங்கும் பொருளுக்கே இவ்விதி அடங்கும் ,
    ஆனால் எந்த வழிகளிலும் அறிவியல் சாதனங்களால் சோதிக்க முடியாது அல்லது அறிவியல் வரையறுக்கும் வடிவிலக்கணங்களில் பொருந்தாது என்பதை மிக தெளிவாக விவரிக்கும் கடவுள் என்ற நிலைக்கு அதை அறிவியல் ரீதியாக நிருபிக்க ஒரு சதவீகிதம் கூட நிருபணம் தேவையில்லை.ஆனால் அறிவியல் வரையறுக்கும் பண்புகளில் பொருந்தாத நிலையில் உள்ள ஒன்றை விஞ்ஞான ரீதியில் இல்லையென்று நிரூபித்தாக இருந்தால் நூறு சதவீகித மூன்றாம் நிலை காரணத்தை தேட வேண்டும்.
    ஆக இங்கு கடவுள் இருப்பதை அறிவியல் ரீதியாக நிருபிக்க அவசியமில்லை., ஆனால் இல்லை என்பதை நிருபிக்க அறிவியலுக்கு வழியே இல்லை., ஆக குழப்பான வாதத்தை கையில் கொள்வது கடவுளை ஏற்பவர் அல்ல மறுப்பவரே
    ஆக நாம் மீண்டும் கேட்பது இதுதான்… கடவுள் இல்லையென்பதை வரையறுப்பதற்கான விஞ்ஞான ரீதியான குறீயிடுகள் என்ன என்பதும் அதை எங்கிருந்து பெற்றீர்கள் என்பதே?

    ReplyDelete
  17. Assalam Alaikum,
    Bro.Gulam avargalay ungal padivai veda, ungal pinnottam(Sengodikku reply)miga nandraga irukkirathu..eduthan en mudal varugai..
    Muhammad Nasar Navas...Kuwait

    ReplyDelete
  18. வ அலைக்கும் சலாம் வரஹ்
    அன்பு சகோ Muhammad Nasar Navas
    உங்கள் முதல் வருகைக்கும் - கருத்திற்கும் நன்றி
    இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து வருகை தாருங்கள்
    ஜஸாகல்லாஹ் கைரன்

    ReplyDelete
  19. நண்பர் குலாம்,

    விவாதத்தின் சுட்டியை இட்டிருந்த என்னுடைய பின்னூட்டத்தை ஏன் நீக்கி விட்டீர்கள் எனத் தெரியவில்லை. தொடர்ச்சியாக நடந்த விவாதத்தின் முதல் பகுதியை மட்டும் வெளியிட்டுவிட்டு ஏனையவற்றை விட்டுவிட்டீர்கள்.

    வாசகர்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் முழு விவாதத்தையும் இங்கு வெளியிடுவது தான் சரியாக இருக்கும். அல்லது அந்த விவாதத்தின் சுட்டியை அனுமதியுங்கள்.

    அந்த விவாதங்களை நானே இணைத்தால் பிளக்கர் ஏற்க மறுக்கிறது.

    விவாதம் முழுமையையும் காண விரும்புபவர்கள் இந்த சுட்டியில் தொடரலாம்.
    http://senkodi.wordpress.com/2011/09/07/man-evolution-4/

    தோழமையுடன்
    செங்கொடி

    ReplyDelete
  20. சகோ செங்கொடி.,
    சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக!
    நீங்கள் கொடுத்த அந்த சுட்டியில் நாம் உரையாடியவரை உள்ளவனவற்றை நானே இங்கு பதிந்ததால் அந்த சுட்டியை இணைக்கவில்லை.,

    அதைத்தொடர்ந்த உரையாடல்கள் உங்கள் தளத்தில் தொடர்ந்ததால் நான் அந்த உரையாடலை இத்தளத்தில் மறுபதிப்பு செய்யவில்லை.,

    ஓகே உங்கள் எண்ணப்படி அந்த சுட்டியை இங்கு இணைக்கிறேன்., நீங்களே உங்கள் கருத்தை இங்கு பதியுங்கள்., இது பிளாக்கர் என்பதால் வேர்டு பிரஸ் போல நீண்ட பின்னூட்டம் இட முடியாது.,

    ஆக பிரித்து பிரித்து பகுதியாக இடுங்கள்., இறை நாடினால் விவாதத்தை இங்கேயே தொடரலாம்.,

    ReplyDelete
  21. வணக்கம் நண்பர் குலாம்,

    கடவுள் குறித்த விவாத அறிவிப்பு
    முதல் பகுதி வெளியிடப்பட்டிருக்கிறது, பார்வையிடுக.

    http://nallurmuzhakkam.wordpress.com/2011/11/21/gulam-senkodi/

    ReplyDelete
  22. salam.,
    வழக்கம்போல் சகோதரருக்கான மறுப்பும் - விளக்கமும் அங்கேயே அளிக்கப்பட்டிருக்கிறது.

    ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்