"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Monday, May 23, 2011

உயிரின் நிழல்...

உயிரும் உருகும் என்று
உணர்ந்தேன் உன்னால்
இன்று....


நான்..தேடாமல் கிடைத்தாலோ
என்னவோ....
நீ..தேடிய போது(ம்) 
நான் உன்னை விட்டு தூரமானேன்....


தேவையற்ற நேரத்தில் கூட
தேவையானவை உணர்ந்து
தெளிவாய் தந்தவளே...


இல்லாமை வாசலில்
இயலாமை பூட்டிட்டு
நீ உறங்கிய போதும்
உள் வந்து
கல்லாமை போக்கியவளே


சோற்றில் உப்பு அதிகம் என 
அங்கலாய்த்த போது....உன் 
வேர்வைத்துளிகளை 
வேகமாக துடைத்தாய்...
அன்று உணரவில்லை...
என் உணவின் சுவை
உன் உணர்வுக
ளில் என்று




இரண்டும் இரண்டும் ஐந்தென்றேன்...
அறியாமலே...
தெரிந்தும் உண்மை என்றாய்...
நிலா சுடும் என்றேன்.. 
என் போலி பொது அறிவுக்கண்டு
உளம் பூரித்தாய்....


இடையில் மறைத்த
இறுதி ரொட்டித்துண்டும்
எனக்காகதான் என்று
உணராமலே உண்டுக்கொண்டிருந்தேனே....
நான் நானாக ஆவதற்கு
நீ நாராக ஆனாயே...


என்னவெல்லாமோ...
சாப்பிட தந்தாயே...
என்ன சாப்பிட்டாய் என நான் கேட்கின்ற போது
எண்ணற்றவைகள் என சொன்னாயே- 
எதுவும் இல்லையே நான் யோசிக்க மறந்த போது
என் எண்ணங்களை மட்டும் சாப்பிட்டு வாழ்ந்தாயே...


எனக்காக நிஜமாய்
வாழ்ந்த உனக்காக
நிழலாக கூட
வாழமுடியவில்லையெனும் போது...

விதைக்கும் நிழலுண்டு..
வந்தமரும் வழிப்போக்கன் 
யோசிப்பதில்லை ..
அதுப்போல...நானும் நேசித்ததில்லை
உன் உயிரின் நிழலை...


மொத்த நேரமும் உன் கணவருக்காக -எஞ்சிய
மற்ற நேரம் எனக்காக
எப்போது வாழ்ந்தாய்...
நீ
உனக்காக...?

தூர தேசத்திலும் பொருள் சேர்க்கும் கவனத்தில்...
நெற்றிச்சுருக்கத்தில் 
எனக்காக
உன் வாழ்வு சுருங்கி போனதை..
இறுதிவரை
நானறியாமலே...



6 comments:

  1. வரிகள் ஒவ்வொன்றும் மிகவும் அற்புதம். அருமையான தாய்கவிதை உணர்வுகளைக்கொண்டு செதுக்கப்படதாய்..

    ReplyDelete
  2. அருமை நண்பரே!

    தமிழன்....

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    @சகோதரி மலிக்கா
    வருகைக்கும் முத்'தாய்'ப்பான கருத்துக்கும் நன்றி
    ஜஸாகல்லாஹ் கைரன்

    @சகோதரர் தமிழன்
    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  4. ஆரம்ப வரிகளே அசத்தல்.... நெற்றிச்சுருக்கம், வேர்வைத்துளிகளில் கூட அவர்களின் பாசம் உணர்ந்து வெளிப்படுத்தியது எனக்குப் பிடித்த வரிகள்.

    ReplyDelete
  5. அன்புடன் மலிக்காJune 30, 2017 at 8:59 PM

    தாய்மையின்
    தனித்துவம்
    தனயனின்
    வரிகளில்..
    அன்றும் இன்றும் என்றும்..

    ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்