"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Saturday, July 03, 2010

சொர்க்கம்-முஸ்லிம்களுக்கு மட்டுமா?

                               ஓரிறையின் நற்பெயரால்...

 கேள்விக்குறியுடன் முடிந்த இவ்வாக்கியத்தை பார்த்ததும்,சிலர் முகத்தில் ஆச்சரியக்குறி,பலர் முகத்தில் கோபத்தின் அறிகுறி
ஆனால் உண்மையில் -கேள்விக்குறியுடன் முடிந்த அவ்வாக்கியமே உண்மை.


   பார்த்தீர்களா...உலகத்தை படைத்து அனைத்து மக்களையும் இரட்சிக்கும் கடவுள் இப்படி பாரபட்சமாக நீதி செலுத்தலாமா.?-என போர்க்கொடி தூக்கும் சக மனித நல விரும்பிகள் அதற்கு முன்பாக இஸ்லாம் ஏன் அவ்வாறு கூறுகிறது என்பதை அறிய நடுநிலை சிந்தனையை மேற்கொள்ளவேண்டும் என அன்புடன் அழைக்கின்றேன்.

    இந்நிலையில் யாராக இருந்தாலும்  ஒரு விசயத்தில் உடன் பட வேண்டும்.  ஒன்றுஇஸ்லாத்தின் அடிப்படையில் இக்கோட்பாட்டை விளங்குவதற்கு முன் வர வேண்டும்அவ்விளக்கங்களில் உடன்பாடு இல்லையென்றால் குறைந்தபட்சம் சமுக நிலை ஒப்பிட்டு அடிப்படையிலாவது அதை ஏற்க முன் வர வேண்டும்.

முதலில் சமுக நிலை ஒப்பிடு -புரிதலுக்காக...
    ஒரு தேர்ந்த பள்ளியில் மாணவர்கள் சேர்வதாக இருந்தால் முதலில் அப்பள்ளியின் சட்டத்திட்டங்களுக்கு உடன்பட்ட பிறகே அப்பள்ளியில் சேர்க்கப்படுவர்.மாறாக சமுக அந்தஸ்து பெற்றவராக இருப்பினும்பொருள் வளம் நிரம்ப பெற்றவராக இருப்பினும்மக்கள் மத்தியில் நற்பெயர் கொண்டவராக இருந்தாலும்-மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காக அப்பள்ளியில் அவரது சேர்க்கை இருக்காது


   வேண்டுமானால் அச்சேர்க்கைக்கான கூடுதல் காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்இன்னும் சொல்லப்போனால் மேற்குறிப்பிட்ட பண்புகள் பெற்றிருப்பினும் அப்பள்ளியின் சட்டத்திட்டங்களுக்கு உடன்படவில்லையென்றால் அப்பள்ளியில் சேர்க்கவே படமாட்டார் ஏனெனில் அப்பள்ளியின் செயல் திட்டங்கள் யாவருக்கும் பொதுவாக முன்னரே வகுக்கப்பட்டுள்ளது


  இந்நிலையில் எந்த ஒரு மாணவனும், ஒன்று அப்பள்ளியின் வரையறைக்கு உட்பட்டு அதில் சேரலாம் அல்லது தன் சுய விருப்பத்தின் பேரில் அப்பள்ளியில் சேராமலும் இருக்கலாம்.சேர்ந்த மாணவர்களை மட்டுமே அப்பள்ளியின் நிர்வாகம் கட்டுப்படுத்தும்அஃதில்லாத ஏனைய மக்களை அப்பள்ளி கட்டும் படுத்தாது தம் மாணவர்கள் என்றும் சொல்லாது,அப்படி ஒரு நிலையை அத்தகையோரும் எதிர்ப்பார்க்கவும் மாட்டார்கள்.


   மேலும் கல்விப்பயிலும் தம் மாணவர்களை மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கும்.அதன் விளைவால் அவர் பெற்ற வெற்றிக்காக அவருக்கும் பாராட்டும்,வெகுமதியும் அப்பள்ளி வழங்கும்மாறாக அப்பள்ளியின் சட்டடத்திட்டங்களை பேணாதபடிக்கவும் செய்யாத ஏனையோர் பாராட்டையோவெகுமதியையோ எதிர்ப்பார்க்கவும் கூடாதுஎதிர்ப்பார்ப்பதில் எத்தகையே நியாயமும் கிடையாது (இங்கு ஒரு +)எனினும் அப்பள்ளியின் அடிப்படை சட்டத்திட்டங்களை உணர்ந்து கல்வி பயில விரும்பும் எவராக இருப்பினும் அவரின் செயல் திறன் அடிப்படையில் அவருக்கு வெகுமதியோ பாராட்டோ வழங்கப்படும்.(இங்கு ஒரு -)    
    
   இந்த சம கால நிகழ்வு உதாரணத்தை ஒப்பிடாக கொண்டு (அளவு கோலாக அல்ல)மேற்காணும் தலைப்பின் கீழ் செல்லுங்கள்.,
இஸ்லாத்தின் பார்வையில்...
   முஸ்லிம்-என்ற பதத்தை அறிந்துக் கொள்வதற்கு முன் இஸ்லாம்  மீதான காழ்ப்புணர்ச்சியின் காரணமாக குர்-ஆன் மீது வைக்கப்படும் முதல் மற்றும் பொதுவான குற்றச்சாட்டான "காஃபிர்" என்ற பதம் குறித்து அறிவோம்.
காஃபிர் யார் ..?
   காஃபிர்- இந்த ஒரு வார்த்தை மதம் சார்ந்த /சாரா மக்களால் அருவறுக்கத்தக்க வகையில் பார்க்கப்படுகிறது. இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகள் குறித்து குர்-ஆன் கூறும் போது ஓரிறைவனை நிராகரிப்போரைஅவனுக்கு இணை கற்பிப்போரை அவன் கூறும் வழிமுறைகளை பின்பற்றாதவர்களைசட்டத்திட்டங்களை ஏற்காதோரை காஃபிர்கள் என்கிறது.


  அதன் விளைவாக அவர்களுக்கு "சொர்க்கமும்" கிடைக்க வாய்ப்பே இல்லைஏனெனில் பொதுவாக ஒருவருக்கு கிடைக்கப்பெறும் பரிசோ,கூலியோ அவரின் நன்னடத்தை மற்றும் சொல்லிற்கிணங்க மேற்கொண்ட செயல்களுக்கே கொடுக்கப்படும்எனும்போது இறைவனின் கட்டளைக்கிணங்க செயல் பாடாத காஃபிர்களுக்கு சொர்க்கம் மட்டும் கொடுக்க வேண்டும் என கேட்பது என்ன நியாயம்?

      இங்கு ஒரு விசயம்., காஃபிர் என்ற வார்த்தைக்கு நேரடி அர்த்தம் இறை நிராகரிப்பாளர் என்பதே ஆகும்குர்-ஆனில் சில வார்த்தைகள் ஏனைய மொழிபெயர்ப்புகளிலும் அதன் மூல(அரபி)மொழியிலேயே பயன்படுத்தப்படுகின்றனஈமான்(இறையச்சம்), தக்வா(பயபக்தி), தவ்பா(பாவ மன்னிப்பு), ஸலாம்(சாந்தி), முனாஃபிக் (நயவஞ்சகன்போன்றவைகள் அவற்றில் சில,
   
    அதன் அடிப்படையிலே காஃபிர் என்ற வார்த்தையும் குர்-ஆனிய மூலமொழியிலேயே உபயோகப்படுத்தப்படுகிறதுஒருவேளை அச்சொல்லின் அவசியம் உணர்ந்தோவிளங்குவதற்கு எளிதாக இருப்பதற்கோ அவ்வாறு பயன்ப்படுத்தப்பட்டிருக்கலாம்


   ஏனெனில் நிய்யத்,அமல்,பர்ளூ,சுன்னத்போன்ற வார்த்தைக்கு நிகரான தமிழ் சொற்கள் இருப்பினும் பெரும்பாலும் முஸ்லிம்கள் அதனை நடைமுறையில் அரபி(மொழி)யிலேயே பயன்படுத்துவதிலிருந்து மேற்கூறிய செயல்முறை காரணமே சரியானது என்பது தெளிவாகிறது


  இதையும் மீறி காஃபிர் என்ற பதம் கேவலப்படுத்துவதற்கோ,மததுவேசத்திற்கோ பயன்படுத்தபடுவதாக யாரும் கூறுவாரானால் அதனை தக்க சான்றுகளோடு நிறுவட்டும்.


 யார் முஸ்லிம் ?
  தாடி வைப்பதோ தொப்பி அணிவதோமுஸ்லிம் குடும்பத்தில் பிறப்பதோ ஒருவன் முஃமீன் என்பதற்கு போதுமானதன்று. இவை முஸ்லிம் என்பதற்கான சமுக குறியீடுகள் தான். மாறாக யாராக இருப்பினும்,, எக்குடும்பத்தில் பிறப்பினும் "ஒரே இறைவனை ஏற்று அவனது இறுதித் தூதரை உண்மைப்படுத்தி இறைவன் கூறிய நேரிய பாதையில் தமது செயல்களை யார் தம் வாழ்வில் அமைத்து கொள்கிறார்களோ அவர்கள் தான் -"முமீன்கள்".


   இறை பார்வையில் அவன் சொல்லிற்கிணங்க செயல்ப்பட்ட தூயவர்கள். அதற்காகவே அவர்களுக்கு சொர்க்கம் தருகிறான்இதில் எங்கிருந்து வந்தது பாரபட்ச நிலை? போர்க்கொடி தூக்குவோர்கள் விளக்குவார்களா?

மேலும் சிறு விளக்கம்,  
    குர்-ஆன் மற்றும் அல்லாஹ் (என்ற அரேபிய சொல்லுக்கு கடவுள் என்றுதான் அர்த்தம்) இவ்வுலக அனைத்து மக்களுக்கும் பொதுவானவை தவிர முஸ்லிம் என்ற சமுகத்திற்கு மட்டும் உண்டானவை அல்ல


  மாறாக கடவுள் தேர்ந்தெடுத்தது (குர்-ஆன் அடிப்படையில்நபிகாளாரின் வழிகாட்டுதலுகிணங்க வாழ்வை அமைத்துக்கொண்ட)"முஸ்லிம்களை" -அது தான் உண்மையும் கூட! (முஸ்லிம் -பெயர் காரணம் முதல் பத்தியில் மிக தெளிவாக


 ஏனெனில் குர்-ஆன் மொத்த மனித சமுதாயத்திற்கும் பொதுவானது என்பதை விளகக தன்னை இவ்வாறே அறிமுகப்படுத்துகிறது.

 . . . இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை" என்றுங் கூறுவீராக.-6:90 மேலும் பார்க்க (42:7, 81:27)


   அதைப்போலவே அல்லாஹ் என்ற (அரேபிய கடவுள் அல்ல) உலகத்தின் ஒரே கடவுள் தன்னை குர்-ஆனில் அனைத்து மக்களின் இரட்சகன் என்ற தன்னை பிரகடனப்படுத்துகிறான்.

  மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகளாம். -2:21

   ஏனைய வசனங்களிலும் இறைக்குறித்து மேலும் பார்க்க (11:123, 18:28, 39:3,11,14, 53:62, 94:8)  

அல்லாஹ் விடுத்து அவனுக்கு இணைக்கற்பிக்கும் வகையிலோ,அவனது தன்மைக்கு பொருந்தாத நிலை தவிர்த்து ஏனைய பெயர்களால் அவனை அழைக்கலாம் எனவும் குர்-ஆன் விளிக்கிறது

"நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள்; எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன" என்று (நபியே!) கூறுவீராக இன்னும், உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர்; மிக மெதுவாகவும் ஓதாதீர். மேலும் இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தியமான வழியைக் கடைப்பிடிப்பீராக -17:110 
மேலும் பார்க்க (7:180, 20:8, 40:3, 57:3, 59:22-24)

 மக்களை மாய்க்கும் போலி மதச்சடங்குகள் அழித்து மனித நேயம் காக்க விரும்புவதாக கூறி இஸ்லாத்தையும் அத்தகையை பட்டியலில் சேர்க்காதீர்கள்புரோகித விலங்கொடைத்து மனித இறைத்தொடர்புக்கு இடையில் எதனையும்எவரையும் எற்படுத்தாதே எனக்கூறிய மனித நேய மார்க்கம்


 படைப்பாளன் அனைத்து படைப்புகளையும் சமமாக பார்க்கும் பொழுது படைப்பினம் மட்டும் படைத்தவன் குறித்து பாகுபாடு பார்ப்பதேன்....? (பெரும்பான்மை மக்களால் மிக தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட மிக அழகான வாசகம்படைத்தவன் அல்லாது படைப்பினங்களை வணங்குவோரும்,படைப்பினங்களை தாண்டி படைத்தவன் அல்ல என சொல்வோரும் படத்தவன் சொல்வதை மட்டும் கேட்க மறுப்பதேன்?
(((அந்த + - ம் விவாத விரும்பிகள் கேள்விகள் எழுப்பினால்)))

                            அல்லாஹ் மிக அறிந்தவன்

14 comments:

  1. ஹோண்டுராஸ், எல் சல்வடார் போன்ற பல மத்திய அமெரிக்க நாடுகளில் ஒரு முஸ்லிம் கூட கிடையாது. இஸ்லாம் பற்றிய எவ்வித அறிமுகமும் இல்லாததால், அவர்கள் இஸ்லாமிய நெறிமுறைகளைப் பின்பற்ற வாய்ப்பு கிடையாது.

    அவர்களுக்கு நரகம் கிடைக்குமா? சொர்க்கம் கிடைக்குமா?

    ReplyDelete
  2. சகோதரர் கும்மி அவர்கள் வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி
    //ஹோண்டுராஸ், எல் சல்வடார் போன்ற பல மத்திய அமெரிக்க நாடுகளில் ஒரு முஸ்லிம் கூட கிடையாது. இஸ்லாம் பற்றிய எவ்வித அறிமுகமும் இல்லாததால், அவர்கள் இஸ்லாமிய நெறிமுறைகளைப் பின்பற்ற வாய்ப்பு கிடையாது.அவர்களுக்கு நரகம் கிடைக்குமா? சொர்க்கம் கிடைக்குமா?//
    நன்றாக பாருங்கள் தங்களின் பதிவிலே பதில் இருக்கிறது.மனிதர்கள் செய்யும் தீய செயல்களின் அடிப்படையில் நரகம் கொடுப்பதற்கு இறைவன் அதிக பட்ச அளவுகோலை இந்த வசனத்தில் வரையறுக்கிறான்.
    நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்;. இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்;. யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.(4:48)
    எனவே இணை வைத்தால் ஏற்படும் விளைவை தெளிவுறுத்தி,அததகையை இணை வைத்தல் கூடாதென்று அறிவுறுத்தி
    "என் இறைவன் ஹராம் எனத் தடுத்திருப்பவையெல்லாம், வெளிப்படையான அல்லது அந்தரங்கமான, மானக்கேடான செயல்கள்,பாவங்கள்;, நியாயமின்றி (ஒருவருக்கொருவர்) கொடுமை செய்வது ஆதாரமில்லாமலிருக்கும் போதே நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல், நீங்கள் அறியாவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவது (ஆகிய இவையே என்று நபியே!) நீர் கூறுவீராக.(7:33)
    பின்பு அதற்கு மாற்றமாக இறைவனது போதனைகளை தெரிந்த பின், அவற்றை ஏற்க மறுத்து அவனுக்கு இணை கற்பிப்போருக்கே நரகம் என விவரிக்கிறான்
    "நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்" என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிடடார்கள்;. ஆனால் மஸீஹ் கூறினார்; "இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்" என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை. (5.72) மேலும் பார்க்க (22:31,40:12)
    சிறு வயது மரணம்,மனநிலை பாதிக்கப்படுதல் போன்ற நிலைகளே ஒருவர் இஸ்லாத்தை அறியாமல் இருப்பதற்கு பொதுவான காரணிகளாக இருக்கின்றன. இதை தவிர்த்து இன்றைய காலத்தில் இஸ்லாம் பற்றி அறிய ஏனைய பாதைகள் அவரவர் சூழலுக்கேற்ற வகையில் தெளிவாகவே உள்ளது.எனினும் பிறரால் இஸ்லாம் குறித்தோ,இறைவன் குறித்தோ நேரடியாக விளக்க வாய்ப்பில்லாத பொழுது தன்னார்வ மிகுதியால் அவரின் திறனுக்கேற்ப எழுத்து வடிவிலோ,செவி வழியிலோ.இணைய தளங்களிலோ இஸ்லாத்தை அறிந்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.ஏனெனில் யாராக இருந்தாலும் பிறப்பின் மற்றும் வளர்ப்பின் போதே கடவுள் குறித்த நேர்மறை /எதிர்மறை சிந்தனைகளோடே இயல்பாகவே உருவாகிறார்கள்.இவ்வனைத்தையும் தாண்டி ஒருவர் கடவுள் குறித்து அறிய முயன்றும் இஸ்லாம்,மற்றும் அதன் நேரிய போதனைகளை அவரால் அறிந்துக் கொள்ள முடியாவிட்டாலோ,அறிந்துக்கொள்ளும் வாய்ப்பு கிட்டாவிட்டாலோ அதற்கு இஸ்லாம் அவர் மீது பொறுப்பை சாட்டவில்லை.ஏனெனில் ஒருவருக்கு பரிசோ,தண்டனையோ தருவதாக இருந்தால் எச்செயலின் விளையாக தமக்கு தரப்படுகிறது என்பதை அவர் அறிய வேண்டும்.அப்போதுதான் அச்செயலின் உண்மை நிலை தெரியும்.அதன் காரணமாக பின்னாட்களில் அவர் அச்செயலை தொடர்ந்து செய்யாவோ அல்லது தவிர்க்கவோ நாடுவார். மேற்கூறிய நிகழ்வுகளும் அதைப் போன்றதே! எனவே நரகம் இறைவனின் நேரான வழியை முற்றிலும் தெரிந்து அதன் படி தம் வாழ்வை அமைக்காமல் தனது மனோ இச்சையை பின்பற்றி தீமையான காரியங்களின் பால் யார் செல்கிறாரோ அவருக்கே ஆகும்.இதை திருக்குர்-ஆனும் தெளிவாக குறிப்பிடுகிறது
    "எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறே கணக்கெடுக்க நாமே போதும். (21:47)
    ஏனெனில் ...அவன் நியாய தீர்ப்பு நாளின் அதிபதி (1:3)
    -இறை நாடினால் இனியும் தொடர்வோம்

    ReplyDelete
  3. எதிர்க்குரல் தளத்தில் நாம் உரையாடிய, மனிதனை மனிதனாக பார்ப்பது, தொடர்பாகவே இந்தப் பதிவை இட்டுள்ளீர்கள். நன்று.

    ஹோண்டுராஸ் நாட்டில் பிறந்த ஒருவன், இஸ்லாம் பற்றிய அறிமுகமே இல்லாவிட்டாலும், அவன் பிறந்த மதத்தின் அடிப்படையில் அவனுக்கு நரகம் என்றால், பிறப்பிலேயே வேறுப்பாடு பார்க்கின்றதே இஸ்லாம்? எங்கே அய்யா மனிதனை மனிதனாக மட்டுமே பார்க்கும் பார்வை?

    ReplyDelete
  4. அய்யா., இஸ்லாததை பற்றிய அறிமுகமோ,அது கூறும் இறைவனின் தன்மைகளோ குறித்து அறிய வாய்ப்பில்லாத ஒருவர் எந்த நாட்டில இருந்தாலும் சரி,ஏன் தமிழகத்தில் ஒரு குக்கிராமத்தில் இருந்தாலும் சரியே!அது குறித்து அவர் இறைவனிடத்தில் குற்றவாளியாக மாட்டார்.ஏனெனில் இறை போதனைகள் அவரது கட்டுப்பாட்டில் வரவில்லை என்பதே போதுமானது.
    மாறாக குடும்ப பின்னணி காரணமாக ஒருவர் சிலை வணக்கத்தை மேற்கொள்வோரகவோ,கடவுள் மறுப்பு கொள்கையே பின்பற்றுபவராகவோ இருந்தால் அவர்கள் எதன் அடிப்படையில் தமது கொள்கைகளை தேர்ந்தெடுத்தார்கள் என்பது இங்கு கவனிக்கதக்கது., ஏனெனில் தமது சுய கட்டுபாட்டின் அடிப்படையில் அக்கொள்கைகளை தேர்தெடுப்பின் அதற்கு இறைவனிடத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
    -இறை நாடினால் இனியும் தொடர்வோம்

    ReplyDelete
  5. பிறக்கும் குடும்பத்தைச் சார்ந்தே பலருக்கும் அவர்களது மதம் தீர்மானிக்கப்படுகிறது. நான் தெளிவாக கேட்டுள்ளேன். ஹோண்டுராசில் பிறந்த ஒருவர், இஸ்லாமியராய் அல்லாமல் வேறு மதத்தை, தனது குடும்பப் பின்னணி காரணமாக பின்பற்றுகின்றார். அவருக்கு நரகம்தானே உங்கள் அல்லாஹ் கொடுப்பார்?

    ReplyDelete
  6. அய்யா பதிலும் மிக தெளிவாக கூறியுள்ளேன்.எந்த ஒரு செயலும் தமது சுய கட்டுப்பாட்டின் அல்லது சுய சிந்தனையில் மேற்கொள்ளப்படும்போது தான் அதன் நன்மை/தீமைக் குறித்து இறைவனிடம் விசாரிக்கப்படுவார்.மாறாக பிறப்பின் அடிப்படையில் அவர் முஸ்லிமாக இருந்தாலும் கூட அவருக்கு சொர்க்கம்,நரகம் தீர்மானிக்க படுவதில்லை.ஏனெனில் கடவுள் ஒருவனது பிறப்பு சார்ந்த நடவடிக்கைகளை விட இறப்பு வரை அவன் மேற்கொண்ட நடவடிக்கைகளை அடிப்படையாக கொண்டே அவனுக்கு சொர்க்கம்,நரகம் வழங்கப்படுகிறது.தாங்கள் கூறுவதுப் போல் அந்நாடுகளில் உள்ளோர் பிறப்பின் அடிப்படையில் இஸ்லாம் அல்லாத சூழ்நிலையில் இருந்தாலும் அவர்கள் வாழ்வு முழுவதும் இஸ்லாம் குறித்து எந்த வித அறிமுகமும் கிடைக்கப்பெறவில்லையென்றால் அவர்களுக்கு இறைவன் நரகம் வழங்க மாட்டான்.அவர்கள் வாழ்வு முடிவதற்குள் இஸ்லாம் குறித்து அறிந்துக்கொண்டால் அதன் கொள்கைகளை சீர் தூக்கி பார்ப்பது அவர் மீது கடமையாகிறது.அதற்காகவே மறுமை நாளில் அவர் தணடனையோ,வெகுமதியோ அளிக்கப்படுவார்.
    -இறை நாடினால் இனியும் தொடர்வோம்

    ReplyDelete
  7. //அந்நாடுகளில் உள்ளோர் பிறப்பின் அடிப்படையில் இஸ்லாம் அல்லாத சூழ்நிலையில் இருந்தாலும் அவர்கள் வாழ்வு முழுவதும் இஸ்லாம் குறித்து எந்த வித அறிமுகமும் கிடைக்கப்பெறவில்லையென்றால் அவர்களுக்கு இறைவன் நரகம் வழங்க மாட்டான்//

    இது குறித்து பேசும் குர் ஆன் வசனம் அல்லது ஹதீஸ் ஆதாரம் கொடுங்களேன்.

    ReplyDelete
  8. அன்பு சகோதரர்.,
    குர்-ஆனை அதன் எழுத்து நடையே சற்று கூர்ந்து கவனித்தீர்களேயானால் படிக்கும் நம்மை நோக்கியே கட்டளைகள் மற்றும் ஏனைய செயல் பாடுகள் குறித்து நேரடியாக விளிப்பதுபோல் இருக்கும். மூன்றாம் நபர் குறித்து சொல்லப்படும் படிப்பினை செய்திகள் கூட நம்மை (படிப்போரை) முன்னிருத்தியே. சொல்வதுபோல் இருக்கும்.ஆ க, தாங்கள் குறிப்பிடுவது போல் நேரடியாக "இஸ்லாமிய அறிமுகம் இல்லாத உங்களுக்கு நரகம் கிடையாது" என்றோ இஸ்லாமிய அறிமுகம் இல்லாத அவர்களுக்கு நரகம் கிடையாது என்றோ சொல்ல முடியாது.ஏனெனில் குர்-ஆனில் உள்ள வார்த்தைகள் படிப்போருக்கும் அதை கேட்போருக்கும் அல்லது அதை பிறரிடமிருந்து கேட்போருக்கும் அறவுரையாக அமைந்திருக்கிறது -இதுவே குர்-ஆன் சொல்லாடலின் தனித்தன்மை. அறிமுகமில்லாத தன்மையின் விளைவை அறிமுகமில்லதவருக்கு அறிவிப்பது போன்று நேரடி வார்த்தையே பயன்படுத்த முடியாது.எனவே குர்-ஆனில் முன்றாம் நபர் குறித்து கூறும்(INDIRECT) வாக்கியங்களில் இஸ்லாம் அறிமுகமாகாத காரணத்தால் அவர்களுக்கு நரகம் இல்லை என்ற நேரடியாக சொல்லப்படவில்லை.அதே நேரத்தில் நரகம் தரப்படும் காரணங்களில் இது ஒன்றாகவும் சொல்லப்படவில்லை.நேரடி வசன விளக்கம் கிடைக்காத பொழுது ஏனைய வசனங்கள் இது தொடர்பான வாதத்திற்கு என்ன சொல்கிறது என்பதை பார்க்க வேண்டும்.அல்லாஹ் இறுதி நாளில் மக்களுக்கு வழங்கப்படும் தீர்ப்பு க்குறித்து சொல்லும்போது,
    அந்நாளில் ஒவ்வோர் ஆத்மாவும், அது சம்பாதித்ததற்குக் கூலி கொடுக்கப்படும்; அந்நாளில் எந்த அநியாயமும் இல்லை. நிச்சயமாக, அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.(40:17)
    எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறே கணக்கெடுக்க நாமே போதும்(21:47)

    ReplyDelete
  9. அன்றியும், அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவுக்கும் ஏதம் அநியாயம் செய்யப்பட மாட்டாது இன்னும், நீங்கள் செய்தவற்றிற்கேயன்றி (வேறு எதற்கும்) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள். (36:54)
    எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது. தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ. (அல்லது) தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது. (2:233 சுருக்கம்)
    (நபியே!) நாம் எல்லா மக்களையும் அவரவர்களுடைய தலைவர்களுடன் அழைக்கும் நாளை (நீர் நினைவூட்டுவீராக அந்நாளில்) எவருடைய (செயல் குறிப்பு) ஏடு அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுகிறதோ, அ(த்தகை நற்பேறுடைய)வர்கள் தம் ஏடுகளை (நிம்மதியுடன்) படிப்பார்கள்; இன்னும், அவர்கன் அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (17:71)
    அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே!(2:286 சுருக்கம் )
    எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப்போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.(6:160)
    மேற்குறிய வசனங்களே போதுமானது இறைவன் நடுநிலை அறிய சிந்தித்துணரும் எவருக்கும்!
    அதே நேரத்தில் உங்களுக்கும்,எனக்கும் இந்த கட்டுரையை படிக்கும் வாய்ப்புள்ள எவருக்கும் இஸ்லாமிய அறிமுகமும் அது தொடர்பான செய்திகளும் கிடைக்கிறது.அது குறித்து நாளை கண்டிப்பாக பதில் சொல்லியே ஆ க வேண்டும்.
    "இந்தக் குர்ஆனையும், இதற்கு முன்னுள்ளதையும் நிச்சயமாக நாங்கள் நம்பமாட்டோம்" என்று காஃபிரானவர்கள் கூறுகிறார்கள் இந்த அநியாயக் காரர்கள் தங்கள் இறைவனிடம் நிறுத்தப்படும் போது நீர் பார்ப்பீரானால் அவர்களில் சிலர் சிலர் மீது பேச்சைத் திருப்பி பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்கள் பெருமையைத் தேடிக் கொண்டிருந்தோரை நோக்கி, "நீங்கள் இல்லாதிருப்பின், நிச்சயமாக நாங்கள் முஃமின்களாகியிருப்போம்" என்று கூறுவார்கள் (34:31)

    ReplyDelete
  10. 72.23 : and whoever disobeys Allah and His Apostle surely he shall have the fire of hell to abide therein for a long time.


    அல்லாஹ் வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்வோருக்கு நரக நெருப்பு உள்ளது. அதில் என்றென்றும் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.


    98.6 : Surely those who disbelieve from among the followers of the Book and the polytheists shall be in the fire of hell, abiding therein; they are the worst of men.


    (ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்

    மேற்குறிப்பிட்ட வசனங்கள் இதுபோன்ற மக்களுக்கும் நரகம் என்றுதானே கூறுகின்றது?

    ReplyDelete
  11. சகோதரர்., அவர்களுக்கு.,
    தாங்கள் மேற்கோள் காட்டிய வசனத்திலேயே., ஒரிறைவனை மறுப்போர் என தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.பின்பு என்ன சந்தேகம்...? மறுப்பது வேறு,அறியாதிருப்பது என்பது வேறு...

    ReplyDelete
  12. அல்லாஹ் தவிர வேறு இறைவனை வணங்குபவர்கள் இணை வைப்பவர்கள்தானே?

    ReplyDelete
  13. அல்லாஹ் என்ற ஒரே கடவுள் குறித்து தெளிவாக தெரிந்தப்பின் அவனை விடுத்தோ, அவனுக்கு இணையே ஏற்படுத்தினாலோ இஸ்லாமிய பார்வையில் அவன் மிக பெரும் பாவம் புரிந்தவனாகிறான்.

    ReplyDelete
  14. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    கும்மி அவர்களுக்கு,
    // 72.23 : அல்லாஹ் வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்வோருக்கு நரக நெருப்பு உள்ளது. அதில் என்றென்றும் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

    98.6 : (ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்.


    அல்லாஹ் தவிர வேறு இறைவனை வணங்குபவர்கள் இணை வைப்பவர்கள்தானே?//

    ஒரு விஷயத்தை மறுப்பது என்றால் என்ன அர்த்தம்? அதை பற்றி கேள்விப்பட்டு பிறகு அதை மறுப்பது தானே?
    ஒரு விஷயத்தை பற்றி கேள்விப்படாமலேயே அதை எப்படி மறுக்க முடியும்?
    அல்லாஹ்வை பற்றியும், இஸ்லாத்தைப் பற்றியும் தெரிந்துக் கொண்டு பின் அதை மறுப்போருக்கும், அவனுக்கு இணைவைப்போருக்கும் தான் மேற்கூறிய தண்டனைகள். இஸ்லாத்தைப் பற்றி தெரிய வாய்ப்பில்லாமல் பிறப்பால் வேறு மதத்தில் பிறந்து, வளர்ந்து, இறப்பவர்களுக்கு அது பொருந்தாது.

    இறைவன் மிக அறிந்தவன்.

    ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்