"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Saturday, July 10, 2010

குர்-ஆனும் விஞ்ஞானமும்

           ஓரிறையின் நற்பெயரால்...

        திருக்குர்-ஆன் உலக மக்கள் யாவரும் நேர்வழிப்பெறும் பொருட்டு உலக இரட்சகனால் வழங்கப்பட்ட இறுதி மற்றும் கடைசி வேத வெளிபாடு.
     ...இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை" என்றுங் கூறுவீராக. (6:90 சுருக்கம்)
      இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும். (81:27)
        ஆக,தன்னை மக்களுக்கான ஒரு தூய வழிக்காட்டியாகவே பிரகனப்படுத்துகிறது. மேலும் இது இறைவனின் வேதம் என்பதை மக்களுக்கு பறைச்சாற்றும் முகமாக இதில் எந்த ஒரு வசனமும், பிறிதொரு வசனத்திற்கும் முரண்படாமல் இருக்கிறது எனவும் உரைக்கிறது.
    அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (4:82)
மேலும் பார்க்க: 18:1, 39:23,28
        இது இறைவேதம் என்பதில் எவரேனும் சந்தேகம் கொண்டால் குர்-ஆனிலுள்ளதை போன்று ஒரெயொரு வசனத்தையாவது கொண்டு வர சொல்லுகிறது
இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை(யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொன்டு வாருங்கள். (2:23)
மேலும் பார்க்க: 10:38, 11:13,17:88
            14 நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் விடப்பட்ட சவால் இன்னும் முறியடிக்கவும் படவில்லை.உலக அழிவு நாள் வரையிலும் இதற்கு பதில் தர வாய்ப்பும் இல்லை.கூறப்பட்ட செய்திகள் அனைத்தும் உண்மைக்கு மாறுபாடற்றது எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது,பொய்யோ தேவையற்ற எந்த ஒரு செய்தியோ குர்-ஆனில் இடம் பெறவில்லை.
      அதனிடம், அதற்கு முன்னிருந்தோ அதற்குப் பின்னிருந்தோ உண்மைக்குப் புறம்பான எதுவும் நெருங்காது (இது) புகழுக்குரிய ஞானம் மிக்கவன் - (அல்லாஹ்)விடமிருந்து இறங்கியுள்ளது. (41:42)
       சுருங்கக்கூறின்,குர்-ஆன் தனிமனித வாழ்க்கைக்கு ஏதுவாக அனைத்து நடைமுறை செயல்களிலும் ஒருவன் தன் சுய சிந்தனை அடிப்படையில் செயல் பட நன்மைகளையும், தீமைகளையும் பிரித்தறிவிக்கும் இறைவனால் அவன் புறத்திலிருந்து வழங்கப்பட்ட ஒரு தூய வாழ்வு நெறி என்பதை அறியலாம்.
நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம்; எனவே, எவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது) எவர் வழிதவறி கெடுகிறாரோ அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார் அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர்.(39:41)
மேலும் பார்க்க:2:2, 17:9,82, 18:2, 19:97, 20:2, 27:2, 31:3, 43:44,50:45,80:11)
          குர்-ஆன் தன் நிலை,செயல்பாடுகளை விரிவாக விளக்கி அதனை நிராகரிப்போருக்கு ஓர் அறைகூவலையும் முன்வைக்கிறது.எனவே குர்-ஆனை எதிர்த்து கூப்பாடு போடுவோர் முதலில் அது கூறும் சவால்களை ஏற்க முன் வரவேண்டும். இதை தொடாமல் விஞ்ஞான பிழை குர்-ஆனில் விளைந்துள்ளது என கூறுவோர் கிழ்காணும் பதிவையும் பார்வையிடவும்

                   மேற்கூறிய விளக்கங்களால் குர்-ஆன் அருளப்பெற்ற காரணம் தெளிவாக விளங்கும். இஃதில்லாமல் குர்-ஆன் ஒரு விஞ்ஞான நூலாகவோ, மருத்துவ,வரலாற்று நூலாகவோ எங்கேணும் தன்னை பெருமை ப்படுத்தி கூறவில்லை.அவ்வாறு மனித சமுகத்திற்கு தேவையான உபதேசங்களை வழங்கும் வழியில் மனிதர்கள் நல்லுணர்வு பெறும் பொருட்டு முன்சென்ற சமுகங்களின் வரலாறுகளையும், சிந்தனையை தூண்டும் பொருட்டு அறிவியல் மேற்கோள்களும் குர்-ஆன் முழுவதும் இரைந்து கிடக்கிறது.அறிவியல் உண்மைகளை உலகுக்கு முன்னிறுத்தி தான் தன்னை இறை வேதம் என பறைச்சாற்றி கொள்ள வேண்டிய அவசியம் அதற்கில்லை.அதன் தெளிவான எழுத்து நடை, உயர்ந்த சிந்தனை கருத்தோட்டம் ,முரண்பாடின்மை, எக்காலத்திற்கும், எத்தகையை மனிதர்களுக்கும் பொருந்தக்கூடிய பொதுவான நடைமுறை சாத்தியக்கூறுகள்,எதை சொல்ல விழைந்ததோ அதை குறித்த தெளிவான பார்வை விரிவான விளக்கம்- குற்றவாளிகளை குறைக்க சட்டம் இயற்றாமல்,குற்றங்களை குறைக்க சட்டம் இயற்றிய முறையான இறையாணை- இதுவே போதுமானது திருக்குர்-ஆன் இறைவேதம் என எற்க!
      எனினும் திருக்குர்-ஆனில் விஞ்ஞான உவமைகளும், உண்மைகளும் மெல்லிய ஊடாக வலம் வருவதற்கு
1.இறைவன் மனிதர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை நினைவுறுத்துவதற்காகவும்,
2.மனிதர்களிடத்தில் தம் அத்தாட்சியை நிறுவுவதற்காகவும்,
3.தமது வல்லமையே மனிதர்கள் மத்தியில் தெளிவுறுத்துவதற்காகவும்  விஞ்ஞான விவரிப்புகள் முக்கிய காரணிகளாக இருக்கின்றன.
    இதனை இந்த இறை வசனம் மூலம் எளிமையாக உறுதிப்படுத்தலாம்.
சூரா அந்நம்ல்(27) வசனம் 18 மற்றும் 19
    இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) "எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)" என்று கூறிற்று.
   அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், "என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!" என்று பிரார்த்தித்தார்.
    *இவ்வசனத்தில் இரு சம்பவங்கள் கூறப்படுகின்றன, எறும்புகள் சுலைமான் நபி குறித்தும் அவர்கள் படை குறித்தும் சக எறும்புகளிடம் அறிவிக்கிறது.
*அது கேட்டு நபி சுலைமான் அவர்கள் சிரித்தார்கள்.
     இவ்விரு வாக்கியங்களில் எறும்புகள் பேசியது என்ற நிகழ்வு முன்னிலைப்படுத்த பாடாமல், அவை பேசும் மொழியை புரிந்துக்கொள்ளும் ஆற்றல் நபியவர்களுக்கு (இறைவன் புறத்திலிருந்து) அருட்கொடையாக வழங்கப்பட்டதே இங்கு முன்னிலைப்படுத்தப்படுகிறது,குர்-ஆனை பொருத்தவரை இங்கு சுலைமான் நபியவர்களின் படையின் தன்மை குறித்தே விவரிக்கிறது.
    எனினும் இங்கு எறும்பு பேசிய விஞ்ஞானம் இலைமறை காயாக உணர்த்தப்படுகிறது. இன்றைய அறிவியலும் இது குறித்து முரண்பாடான தகவல்கள் தந்தால் குர்-ஆனிய வார்த்தைகள் பொய்யென ஆகும்.மாறாக எறும்புகளுக்கும் பேசுமொழி உண்டு,அவை தன்னின தொடர்புக்கு கமிஞ்சை வடிவிலான உரையாடலை மேற்கொள்கிறது மேலும் அவைகளுக்கிடையே கட்டளைகளும், பின்பற்றுதலும் சீராக பரிமாற படுகின்றன என்று இவ்வசனத்திற்கு வலுச்சேர்க்க மேலதிக விபரத்தையும் இன்றைய விஞ்ஞானம் தருகிறது.
   ஒரு குறிப்பிட்ட குமுகத்தில் (சமூகத்தில்) அல்லது குழுவில் உள்ள எறும்புகள் தமக்கிடையே செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வேதிப்பொருள்களைப் பயன்படுத்துகின்றன (chemical communication). இது நுட்பமானதும் மிகவும் சிக்கலானதும், இலகுவில் புரிந்து கொள்ளப்படாததாகவும் இருக்கிறது. ((taken from wikipida))
 உதாரணத்திற்காக தான் இங்கு ஒன்று
     இதுபோலவே குர்-ஆன் கூறும் ஏனைய விஞ்ஞான கூற்றுக்களும்.,
 இன்று விஞ்ஞான விளிம்பில் இருக்கும் எண்ணற்ற நிருப்பிக்கப்பட்ட உண்மைகளும்,நிருப்பிக்கப்பட இருக்கும் ஏனைய நிகழ்வுகளும் குர்-ஆனின் ஒரு அறிவியல் சார்ந்த எந்த கருத்தையும் எதிர்க்கவில்லை. மாறாக நிதர்சனமாக நிருபணமாகும் உண்மைகளுக்கு செவி சாய்க்கவே செய்கிறது.எனினும் குர்-ஆன் அறிவியலோடு முரண்படுவதாக கூக்கூரலிடுவோர் எந்த வசனம் அறிவியல் முரண்பாட்டை ஆமோதிக்கிறது என்பதை தெளிவுறுத்தட்டும்.அஃதில்லாமல் ஏனைய குர்-ஆனின் விஞ்ஞான நிலை அறிவியல் விளக்க உண்மைகளுக்கு கீழ் காணும் சுட்டியை பார்வையிடுக., இவை யாவும் இஸ்லாமிய இணையங்களில் தொகுக்கப்பட்டவையே தவிர,இஸ்லாமியர் தொகுத்தவையல்ல மாறாக மேற்கத்திய துறைச்சார் வல்லுனர்களால் நம்பகதகுந்த அடிப்படையில் திரட்டப்பட்ட அறிவியல் பதிப்புக்கள்.

கருவியல் குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/KARU.HTM

மலைகள் குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/malai.htm

உலகத் தோற்றம் குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/world.htm

மனித மூளை குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/brain.htm

ஆறுகள் மற்றும் கடல்கள் குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/sea.htm

ஆழ்கடல் அதனுள் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/ulalai.htm

மேகங்கள் குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/eraimaililscience.htm

மனித வளர்ச்சியின் படிநிலை குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/truth_creation_human.htm

கரு வளர்ச்சி குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/truth_embryology.htm

சிசுவின் உள்/வெளித்தோற்றம் குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/truth_in_out.htm

வலி உணரும் நரம்புகள் குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/truth_skin.htm

வானவியல் குறித்து
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/truth_astronomy.htm

ஒட்டக படைப்பைக்குறித்து
http://www.tamilislam.com/science/camel_science.htm  

மேலும்
*விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்
*பாலின் உற்பத்தி குறித்து
*அனைத்து படைப்பினங்களிலும் ஜோடி
*பெருவெடிப்பு கொள்கை
*சூரியனும் இதர கோள்களும்
*ஓரங்களில் குறைந்து வரும் பூமி
*தேனின் மருத்துவ குணம் -ஆகியவைப் பற்றி அறிய
http://www.tamililquran.com/quranscience.asp

 துறைச்சார் வல்லுனர்களின் குர்-ஆன்,அறிவியல் குறித்த ஒப்பிட்டு எண்ணப்பதிவு This is the TRUTH)-VIDEO
http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/scientist.htm

    அநேக இணைய பக்கங்களில் இதைப் போன்ற ஆயிரமாயிரம் அறிவியல் உண்மைகள் குர்-ஆனின் வசனங்களோடு கைக்கோர்த்து அணியணியாய் நிற்கின்றன. வேண்டுவோர் இப்பக்கங்களை சந்திக்கட்டும்,பின் சிந்திக்கட்டும்.,
       பொதுவாக எந்த ஒரு மத சிந்தாந்தாமோ, சமயம் சாரா கொள்கை கோட்பாடுகளோ, ஏனைய சமுகம் சார்ந்த சட்ட திட்டங்களோ தான் கூறும் கருத்துகளை ஏற்று மக்களை அதன்படி நடக்கவே பணிக்கும், மாறாக அத்தகையை அறவுரைகளை பேணுவதோடு நின்று விடாமல் அது கூறும் எந்த ஒரு செயல்பாடுகளையும் சிந்தித்து பின்பற்றுவதற்கு தகுந்ததா...என மனித அறிவை செயல்படுத்த தூண்டும் தனித்தன்மை இஸ்லாத்திற்கு மட்டுமே உண்டு என்பதை குர்-ஆன் எவ்வளவு அழகாக எடுத்துரைக்கிறது பாருங்கள்
  மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (47:24)
 இவ்வாறு தனிமனித சிந்தையே தட்டி எழுப்பும் ஓர் உயர் வேதம் மொத்த உலக அறிவியலை முரண்பாடென்னும் பாலுட்டி உறங்க செய்திடுமா..?
   
                                                    அல்லாஹ் மிக்க அறிந்தவன்

No comments:

Post a Comment

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்