ஓரிறையின் நற்பெயரால்...
குர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் ஏசுவும் ஒன்றா...? இஸ்லாமியர் சிலர் மனதில் கூட ஊசலாடும் கேள்வி இது தான்.
சுருக்கமாக கூறினால் "ஒன்று" என்று சொல்லலாம்.விளக்கமாக கூறினால் "இல்லை" என்று சொல்லலாம்.என்ன தெளிவான குழப்பமாக இருக்கிறதா? அதை விளக்கவே இக்கட்டுரை.
இயேசுவை கடவுளாகவோ, கடவுளின் மகனாகவோ உயர்த்தி வர்ணிக்கப்படும் கிறித்துவத்தில் அவரது ஏனைய அற்புத நிகழ்வுகள் குறித்து சிலாகித்து கூறப்பட்டாலும் இயேசு கிறித்துவை பற்றி பைபிள் இப்படியும் குறிப்பிடுகிறது.
34.பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள், சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.
35.எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
(மத்தேயூ அதிகாரம்:10)
17.பின்பு, அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்;
18.அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே; (மாற்கு அதிகாரம்:10)
49.பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.
50.ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்.
51.நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
52.எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள்.
53.தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார். (லூக்கா அதிகாரம்:12)
34. ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். (மாற்கு அதிகாரம்:15)
19.அப்பொழுது, வேதபாரகன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
20.அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
( மத்தேயூ அதிகாரம்:8)
இவ்வாறு கடவுள் ஸ்தானத்திற்கு அல்லது கடவுளின் மகனாக மகிமைப்படுத்தி கூறப்படும் இயேசு கிறித்துவை பற்றிதான் மேலுள்ள வாக்கியங்களும் உள்ளன.அவ்வாறு கடவுளாகவோ அல்லது கடவுளின் மகனாகவோ கருதப்படுபவர் குறித்து சராசரி மனித பண்புகளோடு அல்லது அதற்கு கீழாக விவரிக்கப்பட்டிருக்கிறது.
இங்கு பைபிள் குறித்து நான் விமர்ச்சிக்க வரவில்லை. மாறாக கடவுளாகவோ அல்லது கடவுளின் மகனாகவோ சித்தரிக்கப்படும் ஒருவரின் தகுதிக்கு இவ்வாசகங்கள் ஏற்புடையதா என்பதே என் கேள்வி?
ஆனால் இஸ்லாம் இயேசு கிறிஸ்து குறித்து கூறும்போது கடவுளின் மகன் இல்லையேன்று ஆணித்தரமாக கூறினாலும் இறைவனின் தூதுவர்களில் ஒருவர் என்பதை முன்மொழிந்து அவரது தூது தன்மைக்கு கலங்கமோ, தவறான கற்பிதங்களோ கொடுக்காமல் தூதரும்,தூய மனிதர் என்ற நிலைப்பாட்டிலும் இயேசுவை மிகச்சரியாக கண்ணியப்படுத்துகிறது.
இங்கு ஒரு தெளிவு "பைபிளும், குர்-ஆனும் முன்மொழியும் அந்த இறைத்தூதரை "இயேசு கிறித்து" என்ற பெயரில் உச்சரிக்கும் பொழுது சிலுவையில் அறையப்பட்டு,கை,கால்களில் ஆணிகள் ஊடுருவப்பட்ட நிலையில், முள் கீரிடம் சுமந்தவராக, செங்குருதி வடிந்தவராக மனித கரங்களால் உருவாக்கப்பட்ட இடதுபுறம் தலைச்சாய்த்த முகம் தான் ஏனோ...ஞாபகம் வருகிறது.
கடவுளின் மகன்(?) என கூறப்படும் அந்த தூயவருக்கு கொடுக்கும் கண்ணியமா இது? அதே நேரத்தில் திருக்குர்-ஆன் கூறும் நபி ஈஸா (அலை) அவர்கள் பெயரை உச்சரிக்கும் பொழுது எந்தவித எண்ணத்தோன்றங்களும் எழாது என்பதால் இனி அந்த தூய இறைத்தூதரை "ஈஸா (அலை) என்ற பதத்திலே இங்கு பெரும்பாலும் பயன்படுத்துகின்றேன். அல்லாஹ் அவன் திருத்தூதரை குறித்து சொல்வதை கேளுங்கள்.,
மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்;. மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;. (3:45)
"மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்." (3:46)
"ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்;. இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்;. நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்;. மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்;. பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது. (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்" என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)! (3:55)
அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்;. அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்;. தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்;. இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்;... (2:253 ன் சுருக்கம்)
மேலும் பார்க்க நபி ஈஸா அலை குறித்து : (2-87, 3-45>59, 4-157,171,
5-17,72,75,78,110>120, 9-30, 19-16>34, 23-50, 42-13, 43-57,61,63, 61-6, 3-52, 57-27, 61-14)
மேற்குறிப்பிடப்பட்ட அல்லது குர்-ஆன் முழுவதும் நபி ஈஸா அலை அவர்களை பற்றி குறிப்பிடும் எந்த ஒரு வசனமும் அவர்களின் தூதுத்துவ தன்மைக்கு இழிவாகவோ தனி மனித கண்ணியத்திற்கு குறைவான நிலையிலோ குறிப்பிடுவதாக இல்லவே இல்லை.
நான் மர்யமின் மைந்தருக்கு மிகவும் நெருக்கமானவன் ஆவேன் - இறைத் தூதர்கள் தந்தை வழிச் சகோதரர்கள் ஆவர் - எனக்கும் அவருக்கும் இடையே இறைத்தூதர் எவருமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புஹாரி : 3442 அபூஹுரைரா (ரலி))
'ஆதமின் மக்களில் (புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை கூக்குரலெழுப்பும். மர்யமையும் அவரின் மகனையும் தவிர' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூஹுரைரா (ரலி) அறிவித்துவிட்டு பிறகு, 'நான் இக்குழந்தைக்காகவும் வருங்கால வழித்தோன்றலுக்காகவும் சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்னும் (மர்யமுடைய தாய் செய்த பிரார்த்தனையை கூறும் - என்ற 3:36-வது) இறைவசனத்தை ஓதுவார்கள்.
(புஹாரி : 3431 ஸயீத் பின் அல் முஸய்யப் (ரலி)
.
இவ்வாறு இறைவனும் அவனது இறுதித்தூதரும் நபி ஈஸா (அலை) அவர்ககளை கண்ணியப்படுத்தி கூற என்ன காரணம்? ஆக, கிறித்துவம் கூறும் இறைமகன் பண்புகள் ஈஸா (அலை) அவர்களுக்கு பொருந்தி வருகின்றதா? இஸ்லாம் கூறும் இறைத்தூதர் என்ற நிலை ஈஸா (அலை) அவர்களுக்கு பொருந்துன்றதா?
நன்றாக சிந்தியுங்கள் கிறித்துவ சகோதரங்களே., இஸ்லாமியர்கள் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் புனித வேதமாக வர்ணிக்கப்படும் பைபிள் குறித்தும் அது கடவுளின் மகனாக உருவப்படுத்தும் இயேசு குறித்தும் தான்.மாறாக கிறித்துவ சமுகத்திற்கு உண்மையாக அனுப்பப்பட்ட இஞ்ஜில் வேதங்குறித்தோ அல்லது உண்மைத்தூதர் ஈஸா(அலை) அவர்கள் குறித்தோ அல்ல.,
ஏனெனில் உண்மையான இயேசுவை விமர்சிப்பவன் தூய முஸ்லிமாக இருக்க முடியாது., தூய இயேசுவை பின்பற்றாதவன் உண்மை கிறித்துவனாக இருக்க முடியாது.ஆக அந்த தூய இறைத்தூதர் ஈஸா(அலை)அவர்கள் சொன்னது என்ன? செய்ய சொன்னது என்ன ? என்பதை அறிய முற்படுங்கள்.,
நீங்கள் உண்மை தேடுதலில் விருப்பம் உடையவராக இருந்தால் இரண்டில் ஒன்றுதான் கலங்கப்படுத்தப்படாத உண்மையாகவே இறைவனின் வார்த்தைகளாக இருக்க முடியும் என்ற நடு நிலை எண்ணத்தோடு பைபிளையும் குர்-ஆனையும் ஆராயுங்கள். சர்வ வல்லமை படைத்த இறைவன் உங்களுக்கும் எனக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்.
பின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம், மர்யமின் குமாரர் ஈஸாவை (அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் - அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம், ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்க வில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்); ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப் பேணவில்லை அப்பால், அவர்களில் ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்)கூலியை நாம் வழங்கினோம்; எனினும், அவர்களில் பெரும் பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாகவே இருக்கின்றனர். (திருக்குர்-ஆன் 57:27)
அல்லாஹ் மிக்க அறிந்தவன்

Tweet | |||||
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நெஞ்சம் நிறைந்த ஈத் முபாரக்!!
வ ஸலாம்
அன்னு
// 34. பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள், சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.
ReplyDelete35. எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
(மத்தேயூ அதிகாரம்:12) //
ஸலாம். சகோதரரே இந்த வசனங்கள் இருப்பது மத்தேயூ 12 வது அதிகாரத்தில் இல்லை. இவை மத்தேயூ 10 வது அதிகாரத்தில் இருக்கிறது.
வ அலைக்கும் ஸலாம் வரஹ்
ReplyDeleteதிருத்தப்பட்டுள்ளது.சுட்டிக்காட்டியமைக்கு நன்றி., சகோதரரே!
جَزَاكَ الله خَيْراً
ReplyDeleteஅன்புள்ள நண்பருக்கு மத்தேயு 10.34 வசனத்திற்கான விளக்கம்
ReplyDeletehttp://www.answering-islam.org/Authors/Arlandson/matthew_10_34.htm
\\இரண்டில் ஒன்றுதான் கலங்கப்படுத்தப்படாத உண்மையாகவே இறைவனின் வார்த்தைகளாக இருக்க முடியும் என்ற நடு நிலை எண்ணத்தோடு பைபிளையும் குர்-ஆனையும் ஆராயுங்கள். சர்வ வல்லமை படைத்த இறைவன் உங்களுக்கும் எனக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்.\\
மிக்க நன்றி. நாங்களும் இதைதான் சொல்லுகிறோம்
உங்கள் நபி 52 வயதில் 8 வயது சிறுமியை திருமணம் முடித்தார். அத்துடன் வளர்ப்பு மகனின் மனைவி, இன்னும் 11 பெண்களை திருமணம் முடித்திருந்தார்.இன்னும் சாத்தானைக் கண்டு பயந்தார்.
இதுவெல்லாம் ஒருநபிக்குரிய அடையாளங்களா என சிந்தித்துப் பாருங்கள் உண்மை உங்களுக்குப் புரியும்
முகமது பாவம் செய்தார் என கூறும் குர் ஆன் வசனங்கள்
ReplyDelete40:55 ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டு இருப்பீராக!
48:2 உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்.
ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களாகன ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக - அன்றியும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)
ReplyDelete'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை' என்பதை அறிந்து கொள்வீராக! உமது பாவத்திற்காகவும், நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் நீர் மன்னிப்புக் கேட்பீராக! நீங்கள் இயங்குவதையும், தங்குவதையும் அல்லாஹ் அறிவான். (பீஜே தமிழாக்கம்)
குர்-ஆன்:
ReplyDeleteசாட்சி சொல்வதிலும் பெண்கள் ஆண்களைவிட தாழ்த்தப்பட்டுள்ளார்கள்
ஸீரா 2: 282 உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள். ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள் (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்.
குர் ஆனே முகமதுவை விட இயேசுவை மிக உயர்வாக பேசும்போது நீங்கள் இன்னும் ஏன் முகமது முகமது என்று அவருக்கு மட்டுமே பதிவிடுகிறீர்கள்? இயேசுவை சைத்தான் தொடமுடியாது என்றும், இம்மையிலும் மறுமையிலும் மிக கம்பீனரானவார், கடவுளின் வார்த்தையானவர், அற்புதங்களை செய்தார் என்றும், இன்னும் அவரில் பாவமில்லை என குர்ஆன் சாட்சியிடுகிறது. என்றைக்காவது அவற்றை ஆராய்ந்துள்ளீர்களா? ஈஸா நபியைப் பற்றி எத்தனைப் பதிவு போட்டுள்ளீர்கள்? தயவு செய்து பதில் தாருங்கள்.
ReplyDeleteசகோதரர் colvin நம் அனைவரின் மீதும் ஓரிறையின் சாந்தியும்,சமாதானமும் நிலவட்டுமாக
ReplyDeleteதாங்கள் ஈஸா குர்-ஆன் வலைப்பூவை பார்வையிட்டு அதன் அடிப்படையில் குற்றச்சாட்டை இங்கு பதிந்திருக்கிறீர்கள். ஆன்ஸரிங்க் இஸ்லாம் என்ற மேற்கத்திய இணையத்தின் பெரும்பாலானவற்றை மொழி பெயர்த்து இஸ்லாத்திற்கு எதிரான கருத்தாக முன்வைத்திருக்கிறார்கள்.நன்று அவை யாவும் ஒன்று இஸ்லாத்தை பற்றிய தவறான புரிதலுடன் வரையப்பட்டது அஃதில்லையென்றால் காழ்ப்புணர்ச்சியே காரணம். சரி உங்கள் குற்றச்சாட்டிற்கு வருகிறேன்.
//உங்கள் நபி 52 வயதில் 8 வயது சிறுமியை திருமணம் முடித்தார். அத்துடன் வளர்ப்பு மகனின் மனைவி, இன்னும் 11 பெண்களை திருமணம் முடித்திருந்தார்....
இதுவெல்லாம் ஒருநபிக்குரிய அடையாளங்களா என சிந்தித்துப் பாருங்கள் உண்மை உங்களுக்குப் புரியும்//
நபி அவர்களின் இந்த திருமண நிகழ்வை பல முறை தகுந்த முறையில் விளக்கம் தரப்பட்டுள்ளது சகோதரர் கண்ணில் இதுவரை படவில்லை என நினனக்கிறேன் சகோதர் அதை குறித்து href="http://tamilislam-qa.blogspot.com/search/label/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8Dஇளவயது திருமணம் மற்றும்வளர்ப்பு மகன்-திருமணம் குறித்து இங்கே பார்வையிடவும்.மீண்டும் சந்தேகமிருந்தால் தாராளமாக தெரியப்படுத்தவும்.
இஸ்லாம் குறித்த ஏனைய குற்றச்சாட்டிற்கு இங்கேபார்வையிடவும்
//இன்னும் சாத்தானைக் கண்டு பயந்தார். // நேரில் பார்த்தா? என்ன சொல்ல வருகிறீர்கள்,ஆதாரம் தாருங்கள்
//முகமது பாவம் செய்தார் என கூறும் குர் ஆன் வசனங்கள்//
ReplyDeleteஉலகில் பிறக்கும் ஆதமுடைய வழித்தோன்றல்கள் யாவரும் பாவம் செய்தவர்களே.அவர்களில் நல்லவர் திருந்தி பாவமன்னிப்பு கோருபவரே! இதை முஹம்மது நபி அவர்களே கூறியது தான். நீங்கள் மேற்கோள் காட்டிய வசனம் முஹம்மது நபி அவர்களை பாவ மன்னிப்பு தேட சொன்னாலும் நீங்கள் சுட்டிக்காட்டிய கீழுள்ள வசனம்
// உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து...// என்று அவர்களின் அனைத்து வித பாவங்களையும் மன்னித்ததாக இறைவன் கூறுகிறான்.முன்,பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர் எப்படி பாவம் புரிந்தவராக இருக்க முடியும்?
சகோதரரே ஒன்றை தெளிவாக புரிந்துக்கொள்ளுங்கள் முஹம்மது என்பவர் ஒரு சராசரி மனிதர் அல்லர்.இறைத்தூதர் என்ற நிலையில் உலகில் அவரை அனைவரும் பின்பற்ற தகுந்த ஒரு முன்மாதிரியாக வாழ வேண்டியவர்.இதை குர்-ஆன்
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (33:21)
ஆக இறைவன் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக பின்பற்ற தகுந்த அனைத்து நடைமுறை செயல்களையும் நபி அவர்கள் வாயிலாகவே வெளிப்படுத்த வேண்டும்.அந்த அடிப்படையில் மக்கள் யாவரும் எவ்வாறு இறைவனிடம் பிரார்த்திப்பது,தேவையானதை கேட்பது, அத்தோடு எவ்வாறு தொழுவது போன்றவற்றை நபி அவர்கள் வாயிலாகவே தான் கற்பிக்க வேண்டும் அதன் அடிப்படையில் பாவமன்னிப்பு கோருவது தொடர்பானது தான் நீங்கள் சுட்டிக்காட்டிய அந்த ஆயத்.அப்படியே அவர்கள் பாவம் செய்தார்கள் என்றால் என்னன்ன பாவங்களை யாயாருக்கு செய்தார்கள் என்பதை தெரியப்படுத்துங்கள்.
//சாட்சி சொல்வதிலும் பெண்கள் ஆண்களைவிட தாழ்த்தப்பட்டுள்ளார்கள்//
ReplyDeleteசகோதரரே., ஆண்களை விட பெண்கள் தாழ்ந்தவர்கள் என்று குர்-ஆனில் எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா....நீங்கள் கூறிய வசனத்திலேயே அவ்வாறு இரண்டு சாட்சிக்கள் ஏன் என்று தெளிவாக இறைவன் கூறுகிறான் //பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் // பிறகெங்கே
வந்தது ஆணாதிக்க அடக்கு முறை..,
நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான். (33:35)
சகோதரரே இந்த வசனமும் குர்-ஆனில் தான் உள்ளது குர்-ஆனில் நடுநிலையோடு உங்கள் பார்வையே செலுத்துங்கள்
//ஏன் முகமது முகமது என்று அவருக்கு மட்டுமே பதிவிடுகிறீர்கள்? இயேசுவை சைத்தான் தொடமுடியாது என்றும், இம்மையிலும் மறுமையிலும் மிக கம்பீனரானவார், கடவுளின் வார்த்தையானவர், அற்புதங்களை செய்தார் என்றும், இன்னும் அவரில் பாவமில்லை என குர்ஆன் சாட்சியிடுகிறது.//
ReplyDeleteமிக சரியான வார்த்தைகள் நான் ஒத்துக்கொள்கிறேன். இறைவன் பால் அனுப்பிய இயேசு (அலை) போதித்த மார்க்கத்தையா இன்று கிறித்துவ உலகம் பின்பற்றுகிறது.? அவ்வாறு அவர் போதித்த உண்மையான கடவுட்கோட்பாட்டை ஏனையொருர்கள் தெளிவாக புரிந்து பின்பற்றி இருந்தால். அல்லாஹ்வால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம். இன்று உலகம் முழுவதும் கிறித்துவமாக இருந்திருக்கும்.இறுதித்தூதரும் நபி இயேசுவாக இருந்திருப்பார்கள்.முஹம்மது நபி அவர்களின் வருகையும் தேவையிருக்காது,ஆனால் நடந்தது என்ன? ஓரிறை கொள்கையே போதித்த வந்த நபி இயேசுவையே கடவுளாக கண்டது கிறித்துவ உலகம்.நன்றாக சிந்தித்து பாருங்கள் தன்னைப்பற்றி மனித சமுகத்திற்கு அறிய செய்வதற்கே கடவுளுக்கு மகன் தேவைதானா...? இது அறிவுக்கு பொருந்தக்கூடிய வாதமா?இது தான் நாம் அனைத்தும் முடியும் என கூறும் கர்த்தாவுக்கு கொடுக்கும் உயரிய கண்ணியமா? கடவுளே மகன் மீது தேவையுடையவரென்றால் எத்தகைய தேவையும் உடையாதவன் கடவுள் என்று கூறுவது எப்படி பொருந்தும்?.ஆக நபி இயேசு அவர்கள் கூறிய உண்மை இஸ்லாம் அதன்படி வழி நடக்க மக்கள் தவறியபோது தான் நபி முஹம்மது அவர்களின் வருகை இந்த சமுகத்திற்கு தேவையானது. நபி இயேசு இறைவன் குறித்து என்ன பிரச்சாரம் செய்தார்களோ.அதை தான் முஹம்மது நபி அவர்களும் செய்தார்கள்.ஆனால் ஒரு சிறிய வித்தியாசம்.நபி இயேசுவை கடவுள் ஸ்தானத்திற்கு கொண்டு சென்றதை போல் தன்னையும் அஃது கொண்டு சென்றுவிட கூடாது என்பதற்காக அனைத்து முன்னெசரிக்கைகளையும் மேற்கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்! அதில் வெற்றியும் கண்டார்கள் அதனால் இறைவனிடத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாமானது வேறோரு இறைத்தூதரின் வருகையும் தேவையில்லாமல் போனது.எனவேதான் முஹம்மது எனும் அந்த முழு மனிதரை உலகம் முழுதும் வாழும் முஸ்லிம்கள் தம் உயிரினும் மேலாக மதிக்கிறார்கள். இப்போது சொல்லுங்கள் நாங்கள் ஏசு நாதருக்கு(அலை) கொடுக்கும் கண்ணியத்தை நீங்கள் கொடுக்கிறீர்களா? நாங்கள் உண்மை முஸ்லிம்கள் அதனால்தான் கிறித்துவ சமுகத்திற்கு மட்டும் நபியாக வந்த ஈஸாவை (அலை) இன்றளவும் கண்ணியம் குறைவாக பேசுவதில்லை. ஆனால் இன்று உலகிற்கு நபியாக அனுப்பப்பட்ட முஹம்மது நபி குறித்த உங்கள் பார்வையென்ன....? உங்களைப்போன்ற ஏனைய கிறித்துவ சகோதர்களின் பதிவுகள் என்ன...?
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனுடைய (இறுதித்) தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; அவன்தன் கிருபையிலிருந்து இரு மடங்கை உங்களுக்கு வழங்கி, ஓர் ஒளியையும் உங்களுக்கு அருள்வான், அதைக் கொண்டு நீங்கள் (நேர்வழி) நடப்பீர்கள், இன்னும், உங்களுக்காக (உங்கள் குற்றங்களையும்) அவன் மன்னிப்பான் - அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபை உடையவன். (57:28)
சிந்தித்து முடிவெடுக்க வேண்டியது நீங்கள் தான் சகோதரரே., கர்த்தாவுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் நபி முஹம்மதுவும்,இயேசுவும் மட்டுமல்ல... அவர்களோடு சேர்ந்து நீங்களும் நானும் தான்.
இஸ்லாம் இயேசு கிறிஸ்து குறித்து கூறும்போது கடவுளின் மகன் இல்லையேன்று ஆணித்தரமாக கூறினாலும் இறைவனின் தூதுவர்களில் ஒருவர் என்பதை முன்மொழிந்து அவரது தூது தன்மைக்கு கலங்கமோ, தவறான கற்பிதங்களோ கொடுக்காமல் தூதரும்,தூய மனிதர் என்ற நிலைப்பாட்டிலும் இயேசுவை மிகச்சரியாக கண்ணியப்படுத்துகிறது........very very super nana@gulam
ReplyDelete18/10/10.அஸ்ஸலமு அழைக்கும்.....உங்களுடைய விளக்கம் மிக அற்புதமாய்
ReplyDeleteஇருக்கு நன்றி..................................
//நான் மர்யமின் மைந்தருக்கு மிகவும் நெருக்கமானவன் ஆவேன் - இறைத் தூதர்கள் தந்தை வழிச் சகோதரர்கள் ஆவர் - எனக்கும் அவருக்கும் இடையே இறைத்தூதர் எவருமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புஹாரி : 3442 அபூஹுரைரா (ரலி))//எனக்கு இந்த ஹதீஸ்
விளக்கம் புரியல.
அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரர் குலாம்
ReplyDeleteஅருமையான விளக்கங்கள்
அல்லாஹு உங்களுக்கு அருள் பாலிக்கட்டும்
அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரர் நசீர்தீன்
உங்கள் கேள்விக்கு இது தெளிவாக அமையும் என எண்ணியவளாக என் விளக்கம் இதோ ...
முஹம்மது நபி சல்லலாஹு அளைஹிவசல்லம் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழி தோன்றல்
ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழி தோன்றல்
இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களும்
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புதல்வர்கள்
இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார் அன்னை ஹாஜரா
இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார் அன்னை சாரா
இருவரும் இப்ராஹீம் நபியின் மனைவிமார்
அஸ்ஸலாமு அழைக்கும்
ReplyDeleteஅப்துலா..
உக்களுடைய விளக்கம் மிக தெளிவாக இருக்கு
நன்றி.....
Ruqaya Abdulla
பைபிளிலும் இறைவன் ஒருவனையே வணங்குமாறு கட்டளை உள்ளது. சிலை வணக்கத்தை பைபிள் தடை செய்துள்ளது. ஆனால் பைபிளை இறைவேதம் என நம்பும் மக்கள் பைபிளின் தடையை மீறி சிலை வணக்கம் புரிகின்றனர். சிலை வணக்கத்தைப் பற்றி பைபிள் கூறுவதைப் பாருங்கள் :
ReplyDeleteநீ அவர்களுடைய தேவர்களைப் பணிந்து கொள்ளாமலும், சேவியாமலும் அவர்கள் செய்கைகளின் படி செய்யாமலும் அவர்களை நிர்மூலம் பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப் போடுவாயாக. உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக் கடவீர்கள்!
யாத்திராகமம் 23:24,25
விக்கிரகங்களை நாடாமலும், வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
லேவியராகமம் 19:4
நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும் பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
லேவியராகமம் 26:1
உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும், சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்து பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
யாத்திராகமம் 20:2-5
இப்படியிருக்க, தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்? கன்னான் ஒரு சுரூபத்தை வார்க்கிறான். தட்டான் பொன் தகட்டால் அதை மூடி, அதற்கு வெள்ளிச்சங்கிலிகளைப் பொருந்தவைக்கிறான்
ஏசாயா 40:18,19
விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணாமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள். ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை உருவாக்கி, விக்கிரகத்தை வார்ப்பிக்கிறவன் எப்படிப்பட்டவன்? இதோ, அவனுடைய கூட்டாளிகளெல்லாரும் வெட்கமடைவார்கள்; தொழிலாளிகள் நரஜீவன்கள்தானே; அவர்கள் எல்லாரும் கூடிவந்து நிற்கட்டும், அவர்கள் ஏகமாய்த் திகைத்துவெட்கப்படுவார்கள். ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை.
ஏசாயா 44:9,10,11&19
தங்கள் விக்கிரகமாகிய மரத்தைச் சுமந்து இரட்சிக்க மாட்டாத தேவனைத் தொழுது கொள்ளுகிறவர்கள் அறிவில்லாதவர்கள். நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனை பண்ணுங்கள். இதைப் பூர்வ கால முதற்கொண்டு விளங்கப் பண்ணி, அந்நாள் துவக்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத் தவிர வேறொருவரும் இல்லை. பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே! என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை. முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும். நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக் கொண்டே ஆணையிட்டிருக்கிறேன். இந்த ரீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார்.
ஏசாயா 45:20-23
அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
சங்கீதம் 115:4-8
முகம்மது நபி 11 திருமணங்கள் செய்திருந்ததை பெரிதாக பேசுபவர்கள், பைபிளைப் படித்து பார்க்கட்டும்.
ReplyDeleteதீர்க்கத்தரிசி தாவீது தனக்கு உரிமையில்லாத அந்நிய பெண்ணொருத்தி குளிக்கும் போது தவறான கண்ணோட்டத்துடன் பார்த்து அந்த பெண்ணோடு உடலுறவும் கொண்டுள்ளார்.( இரண்டாம் சாமுவேல் 11:1-5).
இந்த கள்ள உறவில் பிறந்தவர் தான் தீர்க்கத்தரிசி சாலமோன். (மத்தேயு 1:6)
இந்த தீர்க்கத்தரிசி சாலமோனுக்கு 700 மனைவிகள், 300 வைப்பாட்டிகள் இருந்தனர். (முதலாம் ராஜாக்கள் 11:1-3)
இவைகள் தான் தீர்க்கத்தரிசிகளின் தகுதிகளா?
24/10/10
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும்.......யார்
மரணத்தையும்,
பலவீனதையம் எதிர்பார்கிராரோ அவருக்குத் தான்
சந்ததி
தேவை......
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteசகோதரர் @ அப்துல் காதிர், நஸ்ருதீன்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
27/10/10...............அன்பு சகோதரர் கோவின்.............எனக்கு
ReplyDeleteபைபிளில் சில சந்தேகம்(ஆதிகாமம்
(அத்தியாயம் 19 )
வசனம் (31 முதல் 36 )உள்ள விளக்கம்
தாருங்கள் ...................@COVIN...........
@Gulam, வஅலைக்கும் ஸலாம் (வரஹ்).
ReplyDelete@Nasrudeen, brother அந்த வசனங்களை குடும்பத்திலுள்ள பெண்களுடன் உட்கார்ந்து படிப்பீர்களா என்று கேளுங்கள் .
அடுத்ததாக நீங்கள் அந்த வசனங்களைப் படித்து விட்டு அதே ரீதியில் தலைப்பு வைத்து விட்டீர்கள் என நினைக்கிறேன்.
அது ஆதிகாமம் இல்லை ஆதியாகமம்.
கிறிஸ்தவ சகோதரர்களே, அப்படியே உன்னதமான போதனைகளை(?) போதிக்கும் எசேக்கியேல் 23 ஆம் அதிகாரத்தின் விளக்கத்தையும் கூறுங்கள். அதை கர்த்தர் எப்படி கூறியதாக நம்ப முடியும். ஒரே இறைவனாகிய கர்த்தரையும் கேவலப்படுத்துகிறிர்கள். கர்த்தரின் பரலோக இராஜ்ஜியத்தில் நித்திய ஜீவனை அடைய வேண்டுமானால் இஸ்லாத்தை பின்பற்றுங்கள்.
ReplyDelete2/11/10..அன்பு சகோதரர் கோவின் எனக்கு விளக்கம் தாருக்கள் .....
ReplyDeleteபைபிளில் சில சந்தேகம் கேட்டு இருதேன் இன்னும் பதில் தரவில்லை .........
(ஆதியாகமம்:வசனம் 19 ) அத்தியாயம் 31 முதல் 36 .....அந்த வசனங்களை குடும்பத்திலுள்ள பெண்களுடன் உட்கார்ந்து படிப்பீர்களா? .
அல்லாஹ்வின் திருப்பெயரால்!
ReplyDeleteஸலாம்!
இஸ்லாத்தை இழிவுபடுத்தி நம் தூதர்களில் ஒருவரான நபி ஈஸா (அலை) அவர்களின்
மீதும் அன்னை மர்யம் (அலை) அவர்கள் மீதும் கிருஸ்தவர்களால் புணையப்பட்ட கட்டுக்கதைகளை களைந்தெடுத்து மக்கள் மத்தியில் உண்மையை எத்திவைக்க வாருங்கள் பாடுபடுவோம்! இதோ நசராக்களுக்கு பாடம் புகட்ட ஒரு தளம்
அறிமுகமாக்கப்படுகிறது! http://injealislam.wordpress.com/
என்றுடைய தளமாகிய http://injealislam.wordpress.com/ என்ற தளத்தில் உள்ள பதிவுகளை தாங்கள் தாராளமாக பயன்படுத்தலாம்! ஈஸா நபி மற்றும் மர்யம் (அலை) அவர்களின் கண்ணியத்தை உயர்த்திக்காட்ட உங்க்ள பங்களிப்பையும் சிந்தித்துப்பாருங்கள்! வாருங்கள் ஒன்றுபடுவோம்! நஸாராக்களின் முகத்திரையை கிழித்தெரிவோம்!
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம் வரஹ்
ReplyDeleteசகோதரர்., விசுவாசம் அவர்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இன்ஷா அல்லாஹ் அவசியம் ஏற்படும்போது உங்கள் பதிவுகளை மீள்பதிவு செய்துக்கொள்கிறேன் அல்லாஹ் நம் யாவருக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்
9/11/10.நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்...இது பைபிளின் வசனம் இதற்க்கு எனக்கு விளாக்கம் தாருக்கள் சகோதரர் கோவின்.............. எக்களுக்கு விமர்சனம் செய்யவேண்டும் என்ற நோக்கம் இல்லை .....உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் நோக்கம் ........
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வா ரஹ்மாடுள்ளஹி வா பரகதுஹ்,
ReplyDeleteசகோதரர் குலம்,
ஜசக்கள்ளஹு க்ஹெயர், நாலா பதிவு !
எனக்கு தெரிஞ்சு ஒரு கிறித்துவ சகோதரி, குரான் படிச்சா பிறகு இஸ்லாத்துக்கு வண்டர்.
இது மாதிரி குரான் எல்லாருக்கும் ஒரு "eyes opener".
sorry for transliteration mistake...
உன்ங்கள் சகோதரி,,
எம்.ஷமீனா
வ அலைக்கும் ஸலாம் வரஹ்
ReplyDeleteசகோதரியின் வருகைக்கும் , வார்த்தைக்கும் நன்றி.,
இறுதி வேதமான குர்-ஆனை அகன்ற பார்வையோடு அணுகினால் இன்ஷா அல்லாஹ் அது உயரிய நேர்வழியை தான் காட்டும் என்பதற்கு அந்த கிறித்துவ சகோதரியும் ஒரு சாட்சி
ஜஸாகல்லாஹ் கைர்.,
கீழ்காணும் சுட்டியை பயன்படுத்தி எளிதாக தமிழில் தட்டச்சு செய்யலாம்...
http://www.azhagi.com/downloads.html
//colvin said...
ReplyDeleteகுர்-ஆன்:
சாட்சி சொல்வதிலும் பெண்கள் ஆண்களைவிட தாழ்த்தப்பட்டுள்ளார்கள்
ஸீரா 2: 282 உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள். ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள் (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்.//
நீங்கள் கேட்ட இக்கேள்வி பெண்களை குறைசொல்வது போல மேலோட்டமாக தெரிந்தாலும் உண்மை அவ்வாறு இல்லை.பதில் நீண்டதாக இருக்கும் என்பதால் இதற்கான பதிலை தேட
www.tvpmuslim.blogspot.com ல் இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற கட்டுரையில் பெண்களை வெறுக்கும் இன்னும் சில வசனங்கள் தலைப்பில் உள்ளதை படியுங்கள்.
என் இனிய நண்பர்களே நான் ஒரு பெரிய குழப்பத்தில் இருந்து தெளிவுர இணையத்தில் தேடிக்கொண்டு இருக்கும்போது தான் இந்த முகவுரையை பார்த்தேன் மற்றும் படித்தேன் .. நண்பர்களே என் கேள்வியே வேறு அதை உங்கள் முன் வைக்கின்றேன் தயவு செய்து விடை அளியுங்கள் ..
ReplyDelete1. கடவுள் யார் ? அவரது மொழி என்ன ?
2. இந்துவா , கிறிஸ்தவரா , முஸ்லிமா ?
3. ஒரு குறிபிட்ட மதத்தை காப்பவரா ?, உலகை காப்பவரா ?
4. உலகை காப்பவர் எனில் எதற்க்காக பல மதத்தினராக பிரித்து உள்ளார் ?
5. அவர் எந்த மதத்தை சேர்ந்தவர் ?
6. உயிரை காப்பவர் எனில் எதற்கு ஆடு மாடு கோழிகளை வெட்ட வேண்டும் ? 7. அவைகளும் உயிர் தானே ?
8. ஏன் மதத்துக்குள் ஜாதி வேறுபாடுகள்
9. என்னை பொறுத்தவரை கடவுள் இருக்கிறார் .
10. யாரும் கணிக்கமுடியாத மகா சக்தி . இவர் இந்துவோ முஸ்லிமோ கிறிஸ்தவரோ கிடையாது ஏன் எனில் நான் கூறிய அனைவரும் தூதுவர்கள் நான் அனைவரையும் மதிக்கிறேன் எல்லா கோவில் மசூதி மற்றும் சார்ச்களுக்கும் செல்கிறேன் . மனிதனை மனிதனாக பார்கிறேன் எந்தவிதத்திலும் வேருபடுதிகொல்வது இல்லை . அந்த மகா சக்தியை யாரும் மற்றும் எந்த விஞ்ஞான ஆராய்ச்சியிலும் காண முடியாது . மனிதனின் தூய உள்ளத்தில் காணலாம் . குழந்தையின் அழகிய சிரிப்பில் காணலாம் .
இது என் தனிப்பட்ட கருத்து . இதை யாரும் தவறாக நினைக்க வேண்டாம் . சரி என்று பட்டால் ஏற்று கொள்ளுங்கள் . தவறு என்று பட்டால் என்னை மன்னியுங்கள் ..
அன்பு சகோ.,
ReplyDeleteஉங்கள் ஐயத்தை தெளிவாக பகிர்ந்தமைக்கு நன்றி!.
பொதுவாக கடவுளை ஏற்று, மதங்களில் உடன்படாத பலரின் புரிதல்கள் தான் உங்கள் கேள்வியிலும் நிற்கிறது.
கடவுள் யார்? எந்த மதம் உண்மையானது ? ஏன் இந்த உலகை படைக்க வேண்டும்? அதிலும் ஏற்றதாழ்வுகள் உண்டாக்க வேண்டும் என்ற பல கேள்விகள் பகுத்தறிவு வேட்கை கொண்ட எவரது சிந்தையிலும் ஏற்படுவது இயல்பே.
மேற்கண்ட உங்களின் கேள்விக்கு பதில் தரும் முன் உங்களிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்.
உங்கள் கருத்துக்கள் கடவுளை ஏற்றுக்கொள்பவர் போல தெரிகிறது.
இங்கே சில கேள்விகளுக்கு நீங்களே பதில் தயார் செய்யுங்கள்.
*கடவுள் என்பவர் எப்படிப்பட்டவராக இருக்க முடியும்?
*பல கடவுள்கள் இருப்பது அறிவுக்கு உகந்த செயலா? அதுவும் சாத்தியமா?
*கடவுள் -குறித்து இஸ்லாம் உட்பட ஏனைய மதங்கள் கூறுவது என்ன?
மேற்கண்ட கேள்விகளுக்கு இன்ஷா அல்லாஹ் எனக்கு உங்கள் புரிதல் அடிப்படையில் பதில் தாருங்கள்.
இன்ஷா அல்லாஹ் அதிலிருந்து எனது பதில்களை தொடர்கிறேன்..