"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Wednesday, February 29, 2012

எதை தீர்மானிக்க வேண்டும்- "நாம்" ?

                                         ஓரிறையின் நற்பெயரால்

பிறர் செய்யும் செயல்கள் அங்கீகாரம் பெறும் போது பாராட்டும் நாம் அந்த செயலை தொடர்வதற்கு சற்று யோசிக்கதான் செய்கிறோம்.

இந்த சமூகம் நம்மை எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ற நினைவு அல்லது பார்த்துக்கொண்டிருப்பதாக ஓர் உணர்வு நம் உள்ளத்தில் ஆழ பதிந்திருப்பதே ஒருசெயலை செய்வதற்கும் அல்லது செய்ய மறுப்பதற்கும் பொதுவான காரணமாக இருக்கிறது.

 அட! நமது விருப்பு-வெறுப்புகளை தீர்மானிப்பதில் கூட அடுத்தவரின் விமர்சனமும் முக்கிய நிலையில் இருப்பது தான் ஆச்சரியமான உண்மை.
இதற்கு பெரிய உதாரணமெல்லாம் தேவையில்லை.

கடைக்கு போயி ஒரு சட்டை எடுப்பதாக இருந்தால் கூட அது நம் உடலுக்கு பொருத்தமாக இருக்கிறதா... நமக்கு பிடித்த கலரில் இருக்கிறதா என்று பார்ப்பதை விட நாளை அதை உடுத்தும் போது எதாவது ஒரு காரணம் சொல்லி பிறர் நம்மை கேலி பேசி விட கூடாது என்ற எண்ணத்திலே பெரும்பாலும் தேர்ந்தேடுக்கிறோம்.

பாருங்கள்... சாதாரண ஒரு சட்டையை தீர்மானிப்பதில் கூட நமது எண்ணங்கள் வசதிகளை விட இந்த உலகத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறோமென்றால் ஏனைய முக்கிய விசயங்கள் குறித்து என்ன சொல்வது..?

இப்படியான நம் மன நிலைக்கு என்ன காரணம்?
எந்த சந்தர்பத்திலும் நமது தீர்மானிப்பு பிறரால் தவறு என சொல்லப்பட்டு விடக்கூடாது என்ற அச்ச உணர்வும், நாம் எடுக்கும் முடிவுகள் எப்போதும் வெற்றி பெற்றதாக இருக்க வேண்டும் என்ற ஒரு வறட்டு எண்ணமும் எப்போதும் நம்மை ஆட்கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட எண்ணங்களால் நமக்கு நிலையாக எந்த பயனும் இல்லை
முதலில், எப்போதும் வெற்றி என்ற எண்ணம் தேவையை இல்லாதது. வெற்றி என்பதும் தோல்வி என்பதும் நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் ஒன்றல்ல. எப்போதும் வெற்றியாய் தேர்ந்தெடுத்துக்கொள்ள!

 மாறாக இந்த சமூகத்தால் நமக்கு வழங்கப்படும் ஒன்று. சென்ற முறை வெற்றி என்ற சமூகம் இந்த முறை தோல்வி என்கிறது. அதே சமூகம் அடுத்த முறை வெற்றி அல்லது தோல்வியை கொடுக்கும்.

நம்மை பொருத்தவரை இவை மாறி மாறி வரும் ஒரு செய்தி அவ்வளவே! நம்மால் முடிந்தவரை எதையும் செய்வது போதுமானது. ஏனெனில் இறுதி வரை நம்மால் வெற்றியை மட்டுமே தக்க வைத்துக்கொள்ளவும் முடியாது. அப்படி வைத்திருந்தால் வெற்றி என்பதன் சுவையை முழுதாய் உணரவும் முடியாது. இதை தெளிவாய் உணர்ந்தால் போலியான அச்ச உணர்வு நம்மை விட்டு அகன்று போகும்



அடுத்தாய் விமர்சனம்.,
பிறர் விமர்சனத்திற்கு பயந்தே நம்மில் பெரும்பாலானோர் எதையும் செய்வதில் முனைப்பு காட்டுவதில்லை.

இதை செய்தால் பிறர் நம்மை விமர்சிப்பார்களோ... என்றெண்ணி
"நமக்கு ஏன்டா இந்த தேவையில்லாத வேலையினு.." ஒதுங்கியும் அப்படியே அச்செயல் குறித்து பிறரிடம் கேட்டாலும் "உனக்கு ஏன்டா இந்த வேண்டாத வேலையினு..!"  சொல்லும் அந்த ஏளனமும் எந்த ஒன்றையும் செயல்படுத்த நமக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. (நல்ல முறையில் ஆலோசனை வழங்கி நம்மை ஊக்கப்படுத்தும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது வேறு விசயம்)

அப்படீனா விமர்சனமே வேண்டாமா... ?
வேண்டும்! விமர்சனம் என்பது நமது நிலைகளை மாற்றியமைக்கும் ஒரு ஆரோக்கியமான விசயம் தான். ஆனால் அந்த விமர்சனம் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். விமர்சிக்கும் எதுவும் உண்மையாக இருக்க வேண்டும், ஊகத்தின் அடிப்படையில் இருக்ககூடாது. நேர்மையானதாக இருக்கவேண்டும். பிழைகள் -தவறுகள் குறித்து தெளிவாக சுட்டிக்காட்டவேண்டும்.

அதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

"ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு கண்ணாடி..!" என்றார்கள்.

அறிவிப்பாளர் :அபூ ஹூரைரா (ரலி) அவர்கள்
நூல் :அபுதாவூது

முகம் பார்க்கும் கண்ணாடியின் மிக முக்கிய சிறப்பம்சம், தன் முன் நிற்பவரிடம் என்ன உண்டோ அதை மட்டும் தான் காட்டும்.. பொய்யாகவோ, போலியாகவோ எதையும் காட்டாது. அது சுட்டிக்காட்டும் குறைகளை திருத்திக்கொள்ள தான் முயற்சிப்போமே தவிர அதன் மீது கோபம் கொள்ள மாட்டோம்.

அது மட்டுமல்ல. கண்ணாடியானது நம்மிடம் மட்டுமே எதையும் சொல்லும். நாம் சென்ற பிறகு நம் முகத்தில் உள்ள குறைகளை அடுத்து வருபவருக்கு காட்டாது!

இந்த கண்ணாடியை போல...

எதை சொல்ல வேண்டுமோ
எப்படி சொல்லவேண்டுமோ
யாரிடம் மட்டும் சொல்லவேண்டுமோ -
அப்படி சொல்லப்படவேண்டும் உண்மையான விமர்சனம்!

அப்படியான விமர்சனத்தை எதிர் நோக்குங்கள் . முடிந்தால் விளக்கம் கொடுங்கள். தவறேன்றால் திருத்திக்கொள்ளுங்கள்! அஃதில்லாத தேவையற்ற சாடல் விமர்சனத்தை சட்டை செய்யாதீர்கள்!

பிறர் அதை சொல்வார்களோ இதை சொல்வார்களோ என்ற எண்ணத்தில் நமக்கு அனுமதிக்கப்பட்ட ஒரு செயலை நாம் ஏன் செய்யாமல் விட வேண்டும்? நமக்கு விலக்கப்பட்ட ஒன்றை ஏன் அடுத்தவருக்காக பிடித்ததுப்போல் காட்ட வேண்டும்.?

எதையும் செய்வதற்கு தூதரின் வழிக்காடுதல்கள் தெளிவாய் இருக்க அதன் வழி நமது விருப்பமானதை பின்பற்றி போவதில், தேவையற்றதை தவிர்ந்துக் கொள்வதில் நிலையாய் இருங்கள்.

எதை தீர்மானிக்க வேண்டும் நாம்? என்பதை விட எதையும் தீர்மானிக்க வேண்டும் நாம்!

                                                  அல்லாஹ் நன்கு அறிந்தவன்


24 comments:

  1. சலாம் சகோ

    நல்லதொரு பதிவு

    சுருக்கமா இருக்கு. பட் நிறைய அர்த்தம் சொல்லுது

    வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      வருகைக்கும் கருத்திற்கும்
      ஜஸாகல்லாஹ் கைரன் சகோ
      நன்றி!

      Delete
  2. அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மாதுல்லாஹ்!
    அழகிய உபதேசத்தை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்தியமைக்கு ஜசாக்கல்லாஹு கய்ரன்! உண்மையில் இது அடிக்கடி நினைவு படுத்தப்பட வேண்டியது விடயம் தான்.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்மத்துல்லாஹி த ஆலா வ பரக்காத்துஹூ

      //அடிக்கடி நினைவு படுத்தப்பட வேண்டியது விடயம் தான்.//

      உண்மையாக!

      கருத்திற்கு நன்றி சகோ

      Delete
  3. சலாம் சகோ!

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      நன்றி சகோ
      வருகைக்கும் கருத்திற்கும்!

      Delete
  4. சலாம்...

    வெற்றி என்பதும் தோல்வி என்பதும் நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் ஒன்றல்ல. எப்போதும் வெற்றியாய் தேர்ந்தெடுத்துக்கொள்ள!#

    சான்சே இல்லை..அருமையான வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      //வெற்றி என்பதும் தோல்வி என்பதும் நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் ஒன்றல்ல. எப்போதும் வெற்றியாய் தேர்ந்தெடுத்துக்கொள்ள!#
      சான்சே இல்லை..அருமையான வரிகள்... //

      ஜஸாகல்லாஹ் கைரன்
      வருகைக்கு நன்றி சகோ

      Delete
  5. மாஷா அல்லாஹ். அழகான முறையில் எளிமையான உதாரணங்களை கொண்டு விளக்கி இருக்கிறீர்கள் சகோ.

    கண்ணாடி விளக்கம். அருமை.மாஷா அல்லாஹ். உங்களுக்கு அல்லாஹ் மார்க்க ஞானத்தை விசாலப்படுத்தி இதை போன்று பல விஷயங்கள் எழுத கிருபை செய்வானாக.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      வருகைக்கும் கருத்திற்கும்
      கனிவான துஆவிற்கும்
      நன்றி சகோ

      Delete
  6. அஸ்ஸலாமு அலைக்கும்,

    அருமையான ஆக்கம் குலாம். அல்ஹம்துலில்லாஹ்.

    இறைவனுக்கு பிடித்த ஒன்றை, மற்றவர்களுக்கு பிடிக்காது என்று கருதி செய்யாமல் விட்டால் நாளையே அந்த மற்றவர்களை இறைவன் நம்மை வெறுக்க செய்திடலாம். அதே நேரம், எதற்கும் தயங்காமல் இறைவன் காட்டிய வழிப்படி செயல்பட்டால், இன்று நம்மை வெறுப்பவர்களை இறைவன் நாளை நேசித்திட செய்வான். இன்ஷா அல்லாஹ்

    ஜசாக்கல்லாஹ்.

    வஸ்ஸலாம்...

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      //இறைவன் காட்டிய வழிப்படி செயல்பட்டால், இன்று நம்மை வெறுப்பவர்களை இறைவன் நாளை நேசித்திட செய்வான்.//

      இறை நாடினால் நிச்சயமாக...

      கருத்திற்கு நன்றி
      ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

      Delete
  7. சலாம் சகோ குலாம்,

    /* எந்த சந்தர்பத்திலும் நமது தீர்மானிப்பு பிறரால் தவறு என சொல்லப்பட்டு விடக்கூடாது என்ற அச்ச உணர்வும், நாம் எடுக்கும் முடிவுகள் எப்போதும் வெற்றி பெற்றதாக இருக்க வேண்டும் என்ற ஒரு வறட்டு எண்ணமும் எப்போதும் நம்மை ஆட்கொண்டிருக்கிறது. */

    எல்லாரும் இப்படி இல்லை என்றாலும். பெரும்பாலானோர் இப்படித் தான் இருக்கிறார்கள்.
    வித்தியாசமான பதிவிற்கு வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      // எல்லாரும் இப்படி இல்லை என்றாலும். பெரும்பாலானோர் இப்படித் தான் இருக்கிறார்கள். //

      அப்படி இருக்கும் அந்த நபர்களுக்காகவும் தான் இந்த பதிவு சகோ

      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ

      Delete
  8. தெளிவான விளக்கம் சகோ. நல்ல உத்வேகத்தை கொடுப்பதாகவும் அமைந்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

      ஜஸாகல்லாஹ் கைரன் சகோ
      கருத்திற்கும் வருகைக்கும்....

      Delete
  9. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    மச்சான் மிக அருமையான பதிவு

    ReplyDelete
  10. வ அலைக்கும் சலாம் வரஹ்

    // அருமையான பதிவு//

    மச்சான் சொன்ன சரிதான்!

    வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  11. ஸலாம் சகோ.குலாம்,
    ///எதை சொல்ல வேண்டுமோ
    எப்படி சொல்லவேண்டுமோ
    யாரிடம் மட்டும் சொல்லவேண்டுமோ -
    அப்படி சொல்லப்படவேண்டும் உண்மையான விமர்சனம்!///---ஓகே சகோ.
    நல்லதொரு சுய பரிசோதனை பதிவு..!
    நன்றி சகோ.குலாம்.

    ReplyDelete
  12. வ அலைக்கும் சலாம் வரஹ்

    வருகைக்கும் கருத்திற்கும்
    ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

    ReplyDelete
  13. என் மனதில் உள்ளதை அப்படியே ஆக்கமா வெளியிட்டீங்கலே ... பதிவு அருமை ...

    ஜஸாகல்லாஹ் கைரன் ....

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      பெயர் பதிந்திருக்கலாமே சகோ.,

      வருகைக்கும் கருத்திற்கும்
      ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

      Delete
  14. Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      ஜஸாகல்லாஹ் கைரன் சகோ
      அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.,
      இன்ஷா அல்லாஹ் பார்வையிட்டு கருத்திடுகிறேன் சகோ.,

      Delete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்