"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Sunday, August 15, 2010

நிதியை மிஞ்சும் நீதி -யாரிடம்...?


                                             ஓரிறையின் நற்பெயரால்

   அன்றாட வாழ்வில் மனிதர்கள் மேற்கொள்ளும் எந்த ஒரு செயல்களிலும் இறைவனுக்கு பயந்து நன்மைகளை செய்து தீமைகளிலிருந்து தவிர்த்து வாழ்வதே இஸ்லாம் கூறும் இவ்வுலக வாழ்வின் அடிப்படை சாரம்சம்.

  மேலும் இறைவன் கூறிய இவ்வடிப்படையில் தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்ளும் மனிதர்களுக்கு இறப்பிற்கு பின்னுள்ள வாழ்வில் அதற்கான வெகுமதியாக அவனுக்கு சொர்க்கம் வழங்கப்படுகிறது.

  மாறாக மனிதன் தன் மன இச்சையின் படி செயல்பட்டு கடவுள் சொல்லுக்கு மாறுப்பட்டு சக மனிதனுக்கு துன்பம் விளைவிப்பானால் அவன் மரணத்திற்கு பின்னுள்ள வாழ்வில் அதற்கு பகரமாக நரகமும் கொடுக்கப்படும்.

பிறகு, கியாம நாளன்று, நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள். 23:16

எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்;. அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்;. மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு. 4:14

எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்;. அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும். 4:30

    மேற்குறிப்பிட்ட பத்தியே படித்ததும் தம் கடவாய் பல் தெரிய சிரிக்கும் போலி பகுத்தறிவாளர்கள் கீழ்காணும் பத்தியையும் பார்வையிட்டு பின்பு தங்களது சிரிப்பை அதிகப்படுத்தட்டும், கடவுள் இல்லாத உலகத்தை உருவாக்க முனைவோர்., மார்க்க போதனைகளை விட அழகிய முறையில் அமைந்த சட்டத்திட்டங்களை மனித சமுதாயம் முழுமைக்கும் வழங்க வேண்டும். அதற்காக எந்த ஏற்பாடவது செய்தார்களா...?

  "ஏற்கனவே நாடுக்கு நாடு பின்பற்றும் சட்ட வரையறைகளே மனித சமுகத்திற்கு போதுமானது புதிதாக யாரும் எதுவும் இயற்ற வேண்டாம்" என ஆறறிவின் உள் நின்று அறிவுமிக்க ஒரு பதிலை (?) தருவார்களேயானால் பின்னால் அணிவகுக்கும் கேள்விகளுக்கு பதில் தரட்டும் பரிணாமத்தின் வயிறு வளர்க்கும் பகுத்தறிவாளர்கள்

  1.  முதலில் நாடுக்கு நாடு அதன் எல்லைக்குட்பட்டு தனக்கென தனியானதொரு சட்டம் இயற்றும்போதே மொத்த சமுதாயத்திற்கும் ஓரே மாதிரியாக தீர்ப்பு வழங்க முடியாது என்றாகி விடுகிறது., இவ்வாறு நாடுக்கு நாடு ஏற்படுத்தும் சட்ட வரையறைகளை வைத்து மனித குல முழுமைக்கும் பொது விதியே எப்படி இயற்றுவது...

  2. சரி., ஒவ்வொரு நாட்டிலும் வாழும் அந்த மக்களின் கால சூழலுக்கேற்ப சட்டங்களை உருவாக்கிருந்தாலும் அதன் மூலமும் சட்டங்களை சம்மாக வழங்க முடியாது எப்படி...

 உதாரணத்திற்கு சிலவற்றை பார்ப்போம்

  • ஒருவர் ஒரு கொலை செய்கிறார்., அவருக்கு அதிகப்பட்ச தண்டனையாக தூக்குத்தண்டனை அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது., மற்றொருவர் ஒரு கொலையும் ஒரு கற்பழிப்பும் செய்கிறார் அவருக்கு அரசாங்கம் என்ன தண்டனை கொடுக்கும்? சரி அவருக்கும் அதே தண்டனையே வழங்குவதாக இருக்கட்டும் ஒருவர் பத்து கொலைகளும் பத்து கற்பழிப்பும் அத்தோடு வங்கி கொள்ளையும் செய்தவராக இருந்தால் ...என்ன பத்து முறை அவருக்கு தூக்கு தண்டனையா...?    

  •    கொலையும் கொள்ளையும் பல நாளாய் செய்து இறுதியில் காவல் துறையிடம் மாட்டும் போது தனது பண பலத்தால் அந்த நபர் வெளியே வருவதை நாம் அன்றாடம் பார்க்கிறோம் இதற்கு பெயர் தான் சரியான தண்டனையா..?


  • அப்படியும் காவல் துறை சிறப்பாக நியாயமாக செயல்பட்டு அந்த குற்றவாளியே நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் போது நீதிபதி சரியான மற்றும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் இந்நிலையே குற்றவாளிக்கு சாதமாகி அவரை இந்த நீதிமன்றம் விடுதலை செய்கிறது என்று தீர்ப்பெழுதினால் அதற்கு பெயர் நீதமான தீர்ப்பா...?
  •  அதுப்போலவே அப்பாவி ஒருவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளியாக கருதப்பட்டு அவருக்கு எதிராக பொய் சாட்சியங்கள் புனையப்பட்டு நீதிபதியும் சாட்சியங்களின் அடிப்படையில் அவர் குற்றவாளியாக கருதப்பட்டு அவர் தூக்கு மேடைக்கு அனுப்பப்படுகிறாரே அங்கு என்ன செய்யும் மனித நீதி...?
  • திருடப்பட்ட பொருட்கள் குறித்து காவல் துறையிடம் புகார் செய்தும் அது திரும்ப கிடைக்கவில்லையென்றால்..அல்லது அவரது வாழ் நாள் முடிந்து கிடைக்கப்பெற்றால் அதனால் அவருக்கு என்ன பயன்...?

  •  காப்பீடு மூலம் திரும்ப கிடைக்கப்பெறலாம் என யாரெனும் ஓரத்தில் நின்று மௌன குரல் கொடுத்தால் -அவ்வாறு காப்பீடு செய்யாதவர்களின் நிலை..?
  • வங்கியிலிருந்தோ,யாரிடமோ கடனாக வாங்கிவரும் பணம் தவறுதலாக தொலைந்து போகும் போது அவருக்கு நஷ்ட ஈடு யார் தருவது மனித சட்டமா...?

    பிறரின் உழைப்பை உறிஞ்சி அவர்களின் செல்வத்தையெல்லாம் வட்டியாக மாற்றி வயிறு வளர்க்கும் வணிக பெரு முதலைகளுக்கு நிரந்தர வேலியிட்டு வட்டியின் வாயடைக்க முடியாதது ஏன்...? அதற்கு என்ன காரணம்...?
  •  அனைத்து கெட்ட செயல்களும் தொடர்ந்து செய்யும் மனிதர்கள் அவர்கள் மரணமடைந்தப்பின் அவைக்குறித்து அரசுக்கு தெரிய வரும்போது என்ன செய்ய முடியும் மனித் உருவாக்க சட்டங்கள்...?

  •  அனைத்து நிறுவனங்களிலும் கடன் வாங்கி தன் வாழ்க்கையே ஆடம்பரமாக வாழ் நாள் இறுதிவரை கழித்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகி கொண்டு யாரும் காணாத இடத்திற்கு ஓடிப்போய் விடுகிறான் என்றால் அப்போது என்ன செய்யும் சமுக நீதி...?
  • நஷ்ட ஈடு வேண்டுமானால் பாதிப்படைந்தவனுக்கு தரலாம்., ஓடிப்போயி ஒருக்காலும் மரணம் வரை பிடிபடாதவனுக்கு என்ன தண்டனை தர முடியும்...?
  • அதுப்போலவே ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் பயங்கரவாதிகள் ஒரு நாள் அகப்படும்போது எழுதப்பட்ட சட்டத்தால் என்ன தண்டனை அதிகப்பட்சமாக தரமுடியும்...? இறந்தவர்களின் வாழ்வு என்னாகும்..?
  • மக்கள் திரளாக இருக்கும் இடங்களின் தற்கொலைப்படை தாக்குதல்கள்- தன் உயிர் இழப்புக்கு பகரமாக ஆயிரமாயிர உயிர்கள் எடுத்தவனுக்கு  இலட்சக்கணக்கான நீதிமான்கள் ஒன்றுக்கூடி சட்டம் இயற்றினாலும் அணுவளேவேணும் தண்டனை வழங்க முடியுமா...?
  • பல்லாயிர முறை மோசடி, வட்டி, கொலை,கொள்ளை,கற்பழிப்பு, விபச்சாரம்,போதைப்பொருள் இன்னும் உலகில் எத்தனை உண்டோ அத்தனை தவறுகளும் செய்யும் மனிதர்கள் வாழ் நாள் முழுதும் தன் தவறை நீதியின் கண்களுக்கு மறைத்து வாழ்ந்து மறையும் போது தவறுகளை தண்டிக்கும் சட்டம் என்ன செய்யும்...இவர்களை எப்படி இனங்காணும்?
  • நூறு வயது வரை அயோக்கியனாய் வாழும் மனிதர்களுக்கிடையே நன்மைகளை மட்டும் செய்து தீமைகளிலிருந்து  விலகி வாழும் ஒரு சிறு வயது நற்பிறப்பு தீடிரென்று இயல்பாகவோ,விபத்திலோ மரணமடைய நேரிட்டால் அவர் மேற்கொண்ட தூய வாழ்விற்கு உலக சட்டங்கள் மொத்தமாக கூடினாலும் பகரமாக எதையேனும் வழங்குமா..?
  •  சிசு கருவிலேயே மரணமடைதல்,சிறு வயதில் மரணம் அடையும் ஒன்றுமரியா குழந்தைகள் மற்றவர்கள்(நாம்) அனுபவித்ததைப்போல வாழ்வை அனுபவிக்க எந்த சமுகம் சட்ட இயற்றும்...?
  •  பிறவியேலே ஊமை.நொண்டி,குருடு,செவிடு மற்றும் குணப்படுத்த முடியா ஏனைய உடல் ஊனங்களுக்கு பிரதிப்பலனாய் அவ்வுயிர்கள் நம்மைப்போல இயல்பாய் வாழ இவ்வுலகச்சட்டம் புது வரையறை தருமா...?
  •  மக்கள் நில நடுக்கம். பூகம்பம், புயல் சூறாவளி, வெள்ளப்பெருக்கு, எரிமலை சீற்றம்,சுனாமி போன்ற கடல் மூலம் ஏற்படும் சீரழிவு போன்றவற்றில் உயிரிழக்க நேரிடும் போது அவர்கள் சார்பாக ஏனையோருக்கு நஷ்ட ஈடு தருவது இருக்கட்டும் அரசாங்க பதிவேடுகளில் கூட பெயர் இல்லாத ஆயிரக்கணக்காணோருக்கு மனித உருவாக்க சட்டங்கள் என்ன செய்யும்...?

சுருக்கமாக கூறினால் மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டத்தால் வாழ்நாள் முழுவதும் தீமைகள் செய்வதையே மூலதாரமாக கொண்டு வாழும் மனித மூலங்களுக்கு முழுமையான தண்டனையே தர முடியாது.

      அவ்வாறு நீதியின் முன் நிறுத்தப்பட்டாலும் தனது ,பண,வர்த்தக,அரசியல் செல்வாக்கு பின்புலங்களின் மூலம் மிக எளிதாக நீதியின் கண்களிலிருந்து தப்பி விடுகின்றனர்.

  அஃதில்லாமல் சட்டமும் தன் கடமையே மிகச் சரியாக செய்து அவர்களுக்கும் மரண தண்டனை விதித்தாலும் அவர்கள் வாழ் நாள் முழுவதும் செய்த குற்றங்களுக்கு,அட்டுழியங்களுக்கு பிரதிபலனாக துடிக்கக்துடிக்க உயிர் போகும் வரை தூக்கு மேடையில் ஏற்றினாலும் அதிகப்பட்சமாக அரை மணி நேரம் மட்டுமே அவர்களுக்கு தண்டனை வழங்க முடியும்.

       இந்த தண்டனை அவர்கள் செய்த அனைத்து தீங்குகளுக்கும் போதுமானதா..?

        ஆனால் இவ்வுலக சட்டங்கள் இவ்வாறு நடைமுறை படுத்தப்பட்டாலும் "கடவுள் இருக்கிறார்" எனும்போது அவ்வாறு சமுதாயத்தில் பிறர் நலன் கெடுப்பவனுக்கும் கொலைகள் பல செய்தவனுக்கும் அவன் எந்த அளவிற்கு கொலை,கொள்ளை போன்ற தனி மனித மற்றும் சமுக குற்றங்கள் செய்தானோ அவனுக்கு இறைவன் புறத்திலலிருந்து இறப்பிற்கு பின்னுள்ள வாழ்வில் தண்டனை வழங்கப்படும்.

..எவர் தீமையைச் சம்பாதித்து, அந்தக் குற்றம் அவரைச் சூழ்ந்து கொள்கிறதோ, அத்தகையோர் நரகவாசிகளே, அவர்கள் அ(ந்நரகத்)தில் என்றென்றும் இருப்பார்கள்.2:81

யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்;. அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். 4:56

நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள். 4:10

   இவ்வாறு தாம் செய்யும் குற்றங்களுக்கு தண்டனை இந்த உலகத்தில் போதிய அளவு தரப்படாது என்றிந்தாலும் மறுமையில் இறை புறத்தில் அதே அளவிற்கோ அல்லது அதை விட அதிகமாகவோ தண்டனைகள் வழங்கப்படும் என்ற நிலையே ஒருவன் உணரும் போது மனிதர்கள் மேற்கொள்ளும் சமுக குற்றங்கள் குறைய வாய்பிருக்கிறதா...? இல்லையா...?

    அதுப்போலவே கருவறை ,இளவயது மரணம்,விபத்தில் மரணம்,இயற்கை சீற்றங்களில் மரணமானவர்கள் ஆகிய யாவருக்கும் அவர்கள் அதுவரை மேற்கொண்ட செயல்களின் அடிப்படையில் இறை புறத்திலிருந்து மீண்டும் வாழ்வு வழங்கி வெகுமதியோ,தண்டனையோ தொடர்ந்து வழங்கப்படும். 

     அதுப்போலவே ஏனைய உடல் ஊனங்கள் கொண்டவர்கள் தம் வாழ்வை பொறுமையாக இவ்வுலகில் மேற்கொண்டதற்காக பின்னுள்ள வாழ்வில் நிரந்தர நல்வாழ்வு அமைத்து தரப்படும்.

    மனித மனங்கள் தங்களது மனசாட்சியின் படி இறைவழிகாட்டுதல் இல்லாமல் வாழ்ந்தாலே போதுமானது எனும் போது ஒருவருக்கு தவறேன படுவது பிறிதொருவனுக்கு சரியேனப்படும் எனவே மனச்சாட்சி என்பது ஒரு தற்காலிக தீர்வை மட்டுமே ஏற்படுத்தும்.

  அவ்வாறு தனது மன இச்சையின்படி வாழ்வை மேற்கொள்ளும் போது ஏற்படும் தவறுகள் தவிர்க்க இயலாதாக ஆகிவிடுகிறது எனவே நாளுக்கு நாள் இவ்வுலகில் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன அதற்கு கீழுள்ள FBI யின் குற்றவியல் சார்ந்த ஆய்வறிக்கையே சான்றாக இருக்கிறது

  மேலும் மனித சட்டங்களாலும் பொதுவான நீதியே மனிதக்குல முழுமைக்கும் ஏற்படுத்த முடியாது. இறைவன் உண்டு என்பதை உணர்ந்து அவனது மறுமை தண்டனைக்கு பயந்து வாழ்வை மேற்கொண்டால் மட்டுமே இவ்வுலகம் நேரிய பாதையில் இயங்க முடியும். எனினும் அதைப்பொருட்படுத்தாமல் தீமையே நாடுவோருக்கும் நிலையான தண்டனை இறைவனிடத்தில் உள்ளது.,

கற்பழிப்பு

கள்ளநோட்டு புழக்கம்
வங்கிக் கொள்ளை
போதைப்பொருள் உபயோகம்
தனி மனித கொலைகள்
சொத்துக்கள் தொடர்பான...
வன்முறைகள் தொடர்பான...

நிலுவையிலுள்ள வழக்குகள்


           உண்மையான பகுத்தறிவாளர்கள் இப்போது சொல்லட்டும்
                          நிதியை மிஞ்சும் நீதி எதில் சாத்தியமென்று!

  இவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) இவர்களுடைய இறைவனின் முன் நிறுத்தப்படும்போது இவர்களை நீர் காண்பீராயின் (அது சமயம் இறைவன் கேட்பான்) இது உண்மையல்லவா? என்று "ஆம்! எங்களுடைய ரப்பின் மீது ஆணையாக (மெய்தான்)" என்று இவர்கள் கூறுவார்கள்; அப்போது, "நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் வேதனையை அனுபவியுங்கள்" என்று அல்லாஹ் கூறுவான். 6:30  
                                      
                                                              அல்லாஹ் மிக்க அறிந்தவன்

6 comments:

  1. இந்தக் கட்டுரைக்கான மறுப்பு செங்கொடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுடையவர்கள் பார்வையிடலாம்.

    http://senkodi.wordpress.com/2011/09/07/man-evolution-4/#comment-5881

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    அந்த மறுப்பிற்கான 'மறுப்பும்' அங்கேயும் வெளிடப்பட்டுள்ளது.உண்மை அறியும் எண்ணமுள்ளவர்கள் பார்வையிடலாம்.

    ReplyDelete
  3. நிதியை மிஞ்சும் நீதி .மறுக்கமுடியாத உண்மையான கட்டுரை

    ReplyDelete
  4. நிதியை மிஞ்சும் நீதி .மறுக்கமுடியாத உண்மையான கட்டுரை

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

      தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்

      வருகைக்கு நன்றி சகோ

      இது எனது மெயில் முகவரி
      gulamdhasthakir@gmail.com

      Delete
  5. i am new visitor to this site .. can i know gulam mail id ?

    ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்