"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Thursday, January 05, 2012

நிறம் மா(ற்)றும் பதிவுலகம்!


                                                     ஓரிறையின் நற்பெயரால்


இணைய வாசிப்பை தாண்டி., இணையத்தில் தம் வசிப்பை உறுதியாக்கும் நோக்குடனே பதிவுலகில் கரம் பதிந்தவர்கள் நம்மில் அதிகம்! நாம் சார்ந்த ஒரு கொள்கை கோட்பாடுகளை முன்னிருத்தியோ அதுவல்லாத மக்கள் பயன்பெறும் ஆக்கங்களையோ குறைந்தபட்சம் வெறும் பொழுதுப்போக்கான செய்திகளை வெளியிட்டோ நமது இருப்பை இணைய வாழ் உள்ளங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

குறிப்பாக சமூகம் பயனடைய வேண்டும் என்ற நோக்கில் தங்கள் வலைத்தளங்களை பலர் தொடங்கினாலும் இஸ்லாம் பணிக்கும் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் விசயங்களில் முஸ்லிம் பதிவர்கள் அவ்வாறு செயல்படுவதில்லை என்பதே பொதுவான பிற சமயம் சார்ந்த/சாரா பதிவர்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு.! அதன் உண்மை நிலையை அசைப்போடுவதற்காகவே இப்பதிவு...  

முஸ்லிம் பதிவர்கள் குறித்து பரவலாக சொல்லப்படும் இரு குற்றச்சாட்டுகள்,

(1) அவர்கள் கொண்ட மதமான இஸ்லாத்தை பெரிதுப்படுத்தியும் அவர்களின் கடவுளான அல்லாஹ்வை முன்னிலைப்படுத்தியும் எந்த ஒரு சின்ன விசயமானாலும் சொல்கிறார்கள்.

(2) அவர்களில் சிலர், தீமை ஏற்படுத்தும் விசயங்களையும் பதிவிடுகிறார்கள்

  • ஒன்று., முஸ்லிம் பதிவர்களின் மீது தவறு
  • மற்றொன்று முஸ்லிம் பதிவர்களின் தவறு

அதற்கு முன்பாக...

நாம் பின்பற்றும் ஒரு கொள்கையானது அது எல்லா நிலையிலும், எல்லா காலங்களிலும் நமது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாக இருக்கவேண்டும். அஃதில்லாமல் சில நேரங்களில் மட்டுமே அக்கொள்கையின் நிலைப்பாடுகளை பின்பற்றி ஏனைய காலங்களில் நமது எண்ணத்தின் படி நமது வாழ்வை அமைத்துக்கொள்ளலாம் என இருந்தால் நாம் பின்பற்றும் அந்த கொள்கை முழுமையானதல்ல என்று தான் சொல்ல வேண்டும்.

மேற்கண்ட விதிமுறை, கொள்கைகளை அடிப்படையாக கொண்டு வாழ எத்தனிக்கும் எல்லா மதங்களுக்கும், மதம் சாரா இயக்கங்களுக்கும் பொருந்தும். மதங்களோ அல்லது வேறு கோட்பாடுகளோ மனித வாழ்வை சீர் செய்யவே உருவானதாக கூறினால் அதன் தலையீடு மனிதனின் ஒவ்வொரு செயலிலும் பிரதிபலிக்க வேண்டும்.

நம் வாழ்வில் எல்லா நிலைக்கும் வழிகாட்டுதலை நாம் பின்பற்றும் கொள்கை வகுக்கவில்லையென்றால் அதை எப்படி முழுமைப்பெற்ற ஒரு கோட்பாடாக சொல்ல முடியும்...?

முழுமைப்பெற்ற தொகுப்பாக இஸ்லாம் இருப்பதால் ஒரு முஸ்லிமின் எல்லா செயல்களிலும் அதன் தாக்கம் பிரதிபலிக்கிறது. காலையில் எழுந்து கழிவறை செல்வதிலிருந்து உண்டு, உழைத்து, உறங்க செல்லும் வரை இறைவனின் நெறிமுறைகள் அவன் தூதரின் வழிமுறையில் ஒரு முஸ்லிமீன் வாழ்வில் எல்லா நிலைகளிலும் அங்கம் வகிக்கிறது.

அப்படியிருக்க உலகத்தில் எங்கிருந்தாலும் வாழும் நிலைக்கு தோதான வாழ்வியல் நெறிகளை பின்பற்றும் இஸ்லாத்தையும், ஏற்படுத்தி தந்த அல்லாஹ்வையும் எந்த இடத்திலும் நினைவு கூற என்ன தயக்கம்? அதற்கு இணையம் மட்டுமென்ன விதிவிலக்கா?

நீங்க பின்பற்றுவதோட இருக்க வேண்டியது தானே.. மற்றவர்களையும் ஏன் இங்கே வா இங்கே வானு கூப்பிடுறீங்க? - படிக்கும் உங்களில் ஒருசிலர் இப்படி கேட்கலாம்.

அழைக்கிறோம் சரிதான்..

எதற்கு?

இங்கே வந்தா நாலு பொண்டாட்டி கட்டிகிட்டு ஜாலியா வாழ்க்கைய நடத்தலாம் அப்படின்னா.? 

  • ஏனைய மதங்கள் இப்படி வாழுங்கள் என்று சொல்லும் போது இஸ்லாம் மட்டுமே எப்படி வாழக்கூடாதென்றும் சொன்னது.
  • ஏனைய கோட்பாடுகள் உழையுங்கள் என்று சொன்னபோது போது இஸ்லாம் மட்டுமே வட்டி வாங்கி உண்ணாதீர்கள் என்றது.

அதுமட்டுமா...

  • இந்த சமூகம் முறையற்ற உறவுக்கு பாதுக்காப்பு அவசியம் என்று விளம்பரப்படுத்திக்கொண்டிருக்கும்போது விபச்சாரத்தின் பக்கமே நெருங்காதீர்கள் என்று எச்சரிக்கை விடுக்கிறது.
  • அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் மட்டுமே வாங்கி அருந்துங்கள் என்ற போது அல்கஹாலுடனான இறை வணக்கத்தால் எந்த பயனும் இல்லையென்று அறைகூவலிடுகிறது.

அரேபிய பாலையில் தொடரப்பட்ட அந்த இஸ்லாம் இங்குள்ள பாமர மக்களிலும் வாழ்விலும் படர என்ன காரணம்?
சிந்திக்க வேண்டும் சகோ..!

இனத்தால் அடையாளப்படுத்தினால்...
பிறிதொரு நிலப்பரப்பில் வேற்றினம் நாம்

மொழியால் அடையாளப்படுத்தினால்...
பிராந்திய மொழிகளுக்கு வேற்றாள் நாம்

எல்லைகளால் அடையாளப்படுத்தினால்
அயல் நாட்டிற்கு அந்நியம் நாம்

இப்படி எங்காவது ஒரு இடத்தில் முற்றுகையிடப்படும் அடையாளங்களை வைத்துக்கொண்டு எப்படி உலகளாவிய சகோதரத்துவத்தை அடைய முடியும்???

இப்படி இனம், மொழி, எல்லை கடந்து அனைவரையும் ஒரே அணியில் மட்டுமே நிற்க செய்யும் அந்த தூய மார்க்கத்தின்பால் மக்களை அழைப்பதில் என்ன தவறை கண்டு வீட்டீர்கள் சகோ..?

உங்கள் மீதும் உண்மையில் சாந்தியும் சமாதானமும் ஏற்படவேண்டும் என்பதற்காக அழைக்கும் அந்த அழைப்பை தவறென்று சொல்கிறீர்களா...? உங்கள் பார்வையில் இது தவறென்றால் நிச்சயமாக அதே தவறுகள் இனியும் தொடரத்தான் செய்யும் .....
* * * 
                                       

முஸ்லிம் பதிவர்களுக்கு இந்நேரத்தில் ஒரு ...

  • கோரிக்கை - 
  • அறிவிப்பு
  • வேண்டுகோள் - அல்லது
  • எச்சரிக்கை

(படித்த பிறகு உங்கள் மன நிலைக்கு தகுந்த ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்)

தனிமனித ஒழுக்கம் மற்றும் பிறர் நலன் போன்றவற்றை மையமாகக்கொண்டு இங்கு எத்தனையோ முஸ்லிம் பதிவர்கள் ஆக்கத்தை ஒருபுறம் எழுதி வந்தாலும் மறுபுறம் அனேக அபத்தங்கள் நிறைந்த ஆக்கங்கள் வலம் வரத்தான் செய்கின்றன இஸ்லாமிய பதிவர்கள் சிலரின் பெயர்களில்...

ஏனைய பதிவர்கள் தேவையற்ற அருவறுக்கதக்க பதிவிடும் போது வரும் எதிர்மறை பின்னூட்டத்தை விட இஸ்லாமிய பதிவர்கள் வெளியிடும் அத்தகைய நெருடல் பதிவுகளுக்கு வரும் கண்டனங்கள் மிக அதிகம். இது தான் இச்சமூகம் இஸ்லாம் மீது வைத்திருக்கும் கண்ணியத்தின் அடையாளம்.

வீண், கொச்சை பதிவுகளை பதிவிடுவதால் ஒருவேளை மக்களில் ஒரு பகுதினரிடம் வேண்டுமானால் பிரபலம் அடையலாம். ஆனால் நடுநிலை மக்களின் பார்வையில் தங்களின் தரம் தாழ்ந்து போவதோடு இஸ்லாம் மீதான அதிருப்தியையும் அத்தகைய பதிவுகள் ஏற்படுத்தும்.

ஏனெனில் இஸ்லாம் அங்கீகரிக்காத செயல்களை இஸ்லாமிய பெயர்தாங்கிகளாக பதிவிடும் போது அங்கு நமது பெயர் மறையப்பட்டு முதல் நிலையில் வைத்து இஸ்லாமே விமர்சிக்கப்படுகிறது. அடுத்தவர் இஸ்லாம் குறித்து வசைப்பாடும் போது அதை விளக்கி பதிவிட முடியாவிட்டால் கூட பரவாயில்லை. மட்டமான, ஆபாசமான செய்திகளை பதிவிட்டு இஸ்லாத்தை கேவலப்படுத்தாதீர்கள்!

நம் எழுத்துகளால் ஆயிரம் பேர்கள் நன்மையை நோக்கி வராவிட்டால் கூட நமக்கு ஒரு பாதகமும் இல்லை. மாறாக ஒருவர் தீமை நோக்கி செல்ல நமது எழுத்துக்கள் காரணமாகின் நிச்சயமாக அதற்கு இறைவனிடத்தில் நாம் பதில் சொல்லியாக வேண்டும்!

மஸ்ஜிதுகளின் வாசலோடு மார்க்கத்தை நிறுத்திவிட்டு மாற்று எண்ணங்களோடு எதையும் செய்வதற்கு இஸ்லாத்தில் இடமில்லை. அது இணையமாக இருந்தாலும் சரியே! ஏனையவைகளை போல இறைவன் நமக்களித்த அமானிதம் இணையம். அத்தகைய அமானிதம் குறித்தும் நாளை நாம் வினவப்படுவோம் என்பதை மறந்து விட வேண்டாம்!

டிஸ்கி: இது எதிர்ப்பதிவு / உள்குத்து பதிவோ அல்ல.. இணையத்தில் முஸ்லிம் பதிவர்கள் குறித்த என் பார்வையும், ஏனையவர்கள் குறித்த முஸ்லிம் பதிவர்கள் பார்வையின் விளைவே இவ்வாக்கம். 

பிற சேர்க்கை: இஸ்லாமிய பதிவர் வட்டம் எனும்போது அதில் நானும் அடக்கம். மேற்சொன்ன விசயங்கள் முதலில் எனக்கே பொருந்தும். பின்னரே ஏனைய பதிவர்களுக்கு சொல்கிறேன். இத்தளத்தில் மார்க்கத்திற்கு முரணாக விசயங்கள் இருப்பீன் சுட்டிக்காட்டுங்கள் இன்ஷா அல்லாஹ் நீக்கி விடுகிறேன்.

அப்புறம் ஒரு விசயம்
மைனஸ் வோட்டு போடுவதாக இருந்தால் ஒருவரியில் காரணத்தை சொல்லிவிட்டு தாரளமாக போட்டுக்கொள்ளவும்.
  

                                                          அல்லாஹ் நன்கு அறிந்தவன்

62 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    //ஆனால் இஸ்லாம் அல்லாத வேறு எந்த மத கொள்கைகளோ அல்லது மதம் சாரா கோட்பாடுகளோ அதை பின்பற்றுவரின் வாழ்வில் நூறு சதவீகிதம் நுழைவதில்லை.//

    நம்முடைய செயல்படுகளை பள்ளிவாசலோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள் அப்படி இருந்தால் நாம் சிறந்தவர்கள் என்பது அவர்களது கணிப்பு.
    ஆனால் இஸ்லாம் இப்படி கூறுகிறது

    அவர்களுடைய தொழுகை வெட்கக கெடான விஷயங்களிலிருந்தும் மானங்கெடான விஷயங்கலிலிருந்தும் தடுக்க வேண்டும் அப்படி தடுக்க விலையேன்றால் அது போலித் தொழுகை என்று அல்லவா சொல்கிறது

    ReplyDelete
  2. இஸ்லாத்தை ஏற்காத/உணராதவர்கள் சொல்வதை பிறகு பார்க்கலாம், இஸ்லாம் சொல்வதை நான் செய்கிறேனா என்று சுய பரிசோதனை செய்து கொள்ள இந்த பதிவு மிகவும் உதவுகிறது, ஜஸாக்கல்லாஹ் சகோ! இன்ஷா அல்லாஹ், உண்மையை உறக்க சொல்ல பயில வேண்டும் கொண்ட கொள்கையின் உறுதியை, உறுதியாய் கொள்ள பின் சொல்ல வேண்டும், வல்ல ஏகன் அல்லாஹ்விடமே அதை வேண்டுகிறேன் - ஆமின்...

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் குலாம்...

    அல்ஹம்துலில்லாஹ்...அல்ஹம்துலில்லாஹ்...மிக அருமையான விளக்கங்கள் மற்றும் சுய பரிசோதனை கேள்விகள். உங்களின் பல பாய்ன்ட்கள் நான் எழுதி இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கின்றது.

    இஸ்லாம் குறித்து அடுத்தவருக்கு எடுத்து கூறுவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமை. ஒரு குர்ஆன் வசனேமேனும் தெளிவாக தெரிந்தால் அதனை அவர்கள் அடுத்தவருக்கு ஏத்தி வைக்க வேண்டும். அதேநேரம் வற்புறுத்தலோ, திணித்தலோ இஸ்லாம் தடுத்த ஒன்றாகும். நாயகம் (ஸல்) அவர்களுக்கே அடுத்தவரை வற்புறுத்தும் உரிமையை இறைவன் கொடுக்கவில்லை. விரும்புவர்கள் ஏற்கட்டும், விரும்புபவர்கள் புறக்கணிகட்டும்.

    நம் அழைப்பு பணியை யாரேனும் விடச் சொன்னால், அல்லது விமர்சித்தால் அது எத்தகைய விளைவுகளையும் நம்மிடையே ஏற்படுத்த போவதில்லை. மறுமையில் பதில் சொல்ல வேண்டியது நாம் தான். அடிப்படைவாதி என்றோ மிதவாதி என்றோ அழைத்தாலும் அதனை பெரிதுபடுத்தவோ, சட்டை செய்யப்போவதில்லை நாம்.

    இஸ்லாம் சொன்னபடி வாழ்ந்தோமா, நன்மைகளை செய்தோமா என்று போய்க்கொண்டே இருப்போம்.

    முஸ்லிம் பதிவர்கள் இஸ்லாம் என்னும் அளவுகோலை கொண்டு நம் பதிவுகளை எடைப்போட்டு கொள்வோம். அப்படி செய்வோமானால் நம் பதிவுகள் தரமானதாக, சமூகத்திற்கு பயனுள்ளதாக அமையும்.

    முஸ்லிம் பதிவர்கள் தொடர்ந்து சிறந்த முறையில் செயல்படவும், இஸ்லாம் சொல்லாத செயல்களில் ஈடுபடுபவர்கள் இறைவனுக்கு அஞ்சி தங்கள் தவறான வழிமுறைகளை திருத்திக்கொள்ளவும் பிரார்த்திக்கின்றேன்.

    வஸ்ஸலாம்...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும்!

    சிந்திக்க வைத்த பதிவு தோழரே!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் வராஹ்....
    முஸ்லிம் பதிவர்கள் எந்த நன்மையான விடயங்கள் பற்றி பேசுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளாமல் இஸ்லாம் அதற்குள் பிரயோகிக்கப்படுகிறதே என்பது தான் பிற சகோதரர்களுக்கு நெருடலாக அமையுமானால் அது அவர்களின் வெறுப்புணர்ச்சி தான். எங்கள் ஊரில் இப்படி,எங்க நாட்டில் இப்படி என்றெல்லாம் சொன்னா ஆஹா ஓஓஹோ என்று புகசக்கஊடியவர்கள் எங்க மார்கத்தில் இப்படி என்றதும் முகத்தை மாற்றிக்கொள்வது ஏனோ? ஆனாலும் எப்போதும் நேரிய முகம் கொண்ட மாற்று சகோதரகளையும் காணத்தான் செய்கிறோம் என்பதில் நமக்கு மகிழ்ச்சி...

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் w.r.b.

    சிந்திக்க, சுய பரிசோதனை செய்து கொள்ள மிக உதவும் பதிவு .

    வாழ்த்துகள்!
    ---------------

    ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட
    இன அழிப்பு செய்யப்பட்ட‌
    இஸ்லாமியர்கள் குறித்து

    பேச மறுப்பவனும்

    பேசுவதைத் தடைசெய்பவனும்

    தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும்

    இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.


    சுட்டியை சொடுக்கி படியுங்கள்

    ******1.
    புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. பாகம் 2.
    மன்னிப்போம் மறக்கமாட்டோம்.

    புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை .புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.
    பிரபாகரன் ஏன் முஸ்லீம்களிடம் பகிரங்க மண்ணிப்புக் கோரினார்?……..
    *************************************************

    2. *******
    ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1

    மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம்.
    ********

    .

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) நல்லதொரு ஆக்கம் சகோ.... நானும் என்னை சுய பரிசோதனை செய்து கொள்கிறேன்

    ReplyDelete
  8. இஸ்லாம் என்பது வணக்கம் புரிவது மட்டுமல்ல. ஒரு பூர்த்தியான வாழ்க்கைத் திட்டம். எதை எப்படி வேண்டுமானாலும் செய்து கொள் என இஸ்லாம் எங்களை கைவிட்டு விடவில்லை. எச்சில் துப்புவதிலிருந்து அரசாட்சி செய்வது வரை, குழந்தை பிறந்ததிலிருந்து இறக்கும் வரை இஸ்லாம் தெளிவாக சொல்லிவிட்டது. அது ஒவ்வொரு முஸ்லீமின் ஒவ்வொரு செயலிலும் இஸ்லாம் பிரதிபளிக்கும்.

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோதரர் குலாம் பாய்,
    ஆழமான புரிதலுடன் எழுதப்பட்ட சிறந்த பதிவு. பதிவுலகத்தில் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி தம்மை , தம்முடைய இருப்பை அடையாளப்படுத்துவோருக்கு சிறந்ததொரு புரிதலை இந்த பதிவு ஏற்படுத்த வேண்டும் இன்ஷா அல்லாஹ். ஏனெனில் பதிவுகளிலுள்ள ஒவ்வொரு வார்த்தைகளும் ஓங்கி அறைகின்ற மாதிரியே இருக்கிறது.

    முஸ்லிம் பதிவர்களுக்கு தாங்கள் கொடுத்திருக்கும் அறிவுரை (கோரிக்கை, எச்சரிக்கை, அறிவிப்பு அல்லது வேண்டுகோள்) ஒவ்வொரு முஸ்லிம் பதிவர்களையும் தம்மை தாமே சுயபரிசோதனை செய்து கொள்ள வைக்கிறது.

    ReplyDelete
  10. சில திருத்தங்கள்: பொதுவாக சமூகம் சார்ந்து சொல்கிற போது இஸ்லாமிய சமூகம் அல்லது முஸ்லிம் சமூகம் என்ற சொற்களை பயன்படுத்தலாம். ஆனால் இஸ்லாமிய பதிவர்கள் என்கிற வார்த்தை சரியானதன்று. முஸ்லிம் பதிவர்கள் என்ற வார்த்தையே மிக சரியானது. அதை போன்று இஸ்லாமியர்கள் என்ற வார்த்தையும் சரியானது கிடையாது. அதை முஸ்லிம்கள் என்று எழுதுவது தான் சரி. இது பொதுவாக அனைவருக்குமான திருத்தம்.

    ReplyDelete
  11. இஸ்லாமியர்களுக்கு வழங்கிய அறிவுரை மிகவும் அருமை,

    //இனத்தால் அடையாளப்படுத்தினால்...
    பிறிதொரு நிலப்பரப்பில் வேற்றினம் நாம்


    மொழியால் அடையாளப்படுத்தினால்...
    பிராந்திய மொழிகளுக்கு வேற்றாள் நாம்


    எல்லைகளால் அடையாளப்படுத்தினால்
    அயல் நாட்டிற்கு அந்நியம் நாம் //

    அருமையான வரிகள்!.

    ReplyDelete
  12. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    என்னை முதலில் சுயபரிசோதனை செய்துக்கொள்கிறேன் :-)

    ReplyDelete
  13. நல்ல அலசல் நண்பா

    ReplyDelete
  14. சலாம் சகோ குலாம்,

    மாஷா அல்லாஹ். அற்ப்புதமான பதிவு சகோ. உளமார்ந்த வாழ்த்துக்கள். ரொம்ப கண்ணியமா எழுதி இருக்கீங்க. எங்களோட பொறுப்புணர்வை ரொம்பவே அதிகரிக்கச் செய்துள்ளது உங்கள் பதிவு.

    நானும் எனது கோரிக்கையை இஸ்லாமிய பதிவர்களிடம் வைக்கிறேன். தயவு செய்து ஆபாச பதிவுகளை பதிவிடாதீர்கள், அதேபோல் எந்த சூழ்நிலையிலும்(இஸ்லாத்தை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தாலும்) கெட்ட வார்த்தையில் மறு மொழி சொல்லாதீர்கள். முடிந்தால் கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்தி வாதிடுங்கள், இல்லாவிட்டால் அப்படியே விட்டு விடுங்கள். ஒன்றும் கெட்டுவிடாது சகோ. நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எந்த சூழ்நிலையிலும் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தியது இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் சகோதரர்களே.

    ReplyDelete
  15. /*
    இனத்தால் அடையாளப்படுத்தினால்...
    பிறிதொரு நிலப்பரப்பில் வேற்றினம் நாம்


    மொழியால் அடையாளப்படுத்தினால்...
    பிராந்திய மொழிகளுக்கு வேற்றாள் நாம்


    எல்லைகளால் அடையாளப்படுத்தினால்
    அயல் நாட்டிற்கு அந்நியம் நாம்


    இப்படி எங்காவது ஒரு இடத்தில் முற்றுகையிடப்படும் அடையாளங்களை வைத்துக்கொண்டு எப்படி உலகளாவிய சகோதரத்துவத்தை அடைய முடியும்??? */

    முற்றிலும் உண்மை. பொன்னெழுத்துக்களில் குறிக்கப்பட வேண்டிய வைர வரிகள் சகோ.

    ReplyDelete
  16. ஸலாம்

    நன்மையை ஏவி தீமையை தடுப்பவர்கள்.. நம்மையும்

    சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்..

    ஊருக்கு தான் உபதேசம் என்று இல்லாமல் நாமளும் அதை கடைபிடித்து வாழ வேண்டும்..

    சொல்லிய வண்ணம் செயல் .. இதை தான் அல்லாஹ் விரும்புகிறான் ..

    இதை பற்றி நிறையவே குரான் ஹதீஸ் இருக்கு நேரக் குறைபாடு அதான் போடா முடியவில்லை ...

    ReplyDelete
  17. ஒவ்வொரு முஸ்லிம் பதிவரின் மனதில் இருப்பதை, அவர்கள் சார்பில் சொன்னது போல இருக்கிறது. ஜஸாக்கல்லாஹ்.

    ReplyDelete
  18. Masha allah, good one.

    We are muslims, so we have to be muslims always.
    We cannot be a weekend muslim or friday muslim.

    We are following Islam, that is the way of life.

    Most of the non muslims do not understand it.

    May Allah help us to make them understand it in a nice way.


    Jazakumullah brother.

    Imran Mohamed
    (Facebook friend)

    ReplyDelete
  19. இந்த பதிவு பழைய பதிவு ஆயி போனது .. இந்த பதிவுக்கு கருத்து இட்டு இருப்பவர்கள் மிகவும் சுய பரிசோதனை செய்து தம்முடைய நிலையை மாற்றி கொள்ள வேண்டும் ... ஏன் என்றால் அவர்களுடைய blog profile பாத்தாவே இஸ்லாத்திற்கு எதிரானதாக இருக்கிறது .. அது தான் பரிதாபத்துக்குரிய செயல் ...!!!!

    சில முஸ்லிம் பதிவர்கள் இணையத்தில் காலத்தை ஓட்டுபவர்கள் .. பல முகமாக இருகிறார்கள்..

    காமெடி பண்றேன் நு சொல்லிட்டு மற்றவர்களை சிரிக்க வைக்கணும் நினைத்து தன்னுடைய பாவத்தை எல்லாம் வெட்ட வெளியில் [இணையத்தில் ] வெளியிடுகிண்றனர் .. நிறைய இருக்கு ...

    எல்லா முஸ்லிம் பதிவேற்கும் சேர்த்து ஒரு பதிவு இடனும் போல இருக்கு ...

    ReplyDelete
  20. அஸ்ஸலாமு அலைக்கும்

    // ஏனைய கோட்பாடுகள் உழையுங்கள் என்று சொன்னபோது போது இஸ்லாம் மட்டுமே வட்டி வாங்கி உண்ணாதீர்கள் என்றது. //

    இந்த இடம் என்ன சொல்ல வருகிறது எனக்கு சரியாக புரியவில்லை

    ஏனைய மார்க்கம் உழைக்க வேண்டும் என்று சொன்னால் நம் மார்க்கம் வேண்டாம் என சொல்கிறாதா என குழப்பம் வரும்

    ஏனையவை எவ்விதமாகவும் உழைக்க சொல்லும் போது இஸ்லாம் ஹலாலாக உழைக்கவே சொல்கிறது

    இன்னும் தெளிவாக சொன்னால் சரியாக இருக்கும் என தோன்றுகிறது

    ReplyDelete
  21. சலாம் சகோ...

    அருமையான பதிவு..மிகவும் தெளிவுபட கூறியுள்ளீர்கள்...

    ReplyDelete
  22. வ அலைக்கும் சலாம் வரஹ்

    அன்பு சகோ@ ஹைதர் அலி .,

    //நம்முடைய செயல்படுகளை பள்ளிவாசலோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள் அப்படி இருந்தால் நாம் சிறந்தவர்கள் என்பது அவர்களது கணிப்பு. //

    சமூகத்தில் இஸ்லாமியர் தங்கள் அடையாளங்களை மறைக்க முற்படுவது தான் இதற்கெல்லாம் தலையாய காரணம், எங்கும் எதிலும் எவ்விடத்திலும் நம் இருப்பை முஸ்லிமாக காட்டிக்கொள்வதால் யாருக்கும் எந்த வித பாதிப்புமில்லை. இதை உணரா மக்களே போலி வாழ்க்கையில் தங்களை தொலைக்கின்றனர்.

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ
    ஜஸாகல்லாஹ் கைரன்
    :)

    ReplyDelete
  23. முஸ்லிம் பதிவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டி இந்த ஆக்கம் அமைந்திருந்தால் நலம்?

    ReplyDelete
  24. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    அன்பு சகோ@ ஜமால்

    //இஸ்லாத்தை ஏற்காத/உணராதவர்கள் சொல்வதை பிறகு பார்க்கலாம், இஸ்லாம் சொல்வதை நான் செய்கிறேனா என்று சுய பரிசோதனை செய்து கொள்ள இந்த பதிவு மிகவும் உதவுகிறது//

    இச்சுயபரிசோதனை உண்மையாக ஆய்வுக்குரியதே! ஏனெனில் நாளை இறைவன் முன் நிற்கும்போது நம்மால் வீண்டிக்கப்பட்ட அமானிதங்கள் குறித்து வினவப்படும் போது நம்மால் என்ன சொல்ல முடியும் சகோ ?


    வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி சகோ
    ஜஸாகல்லாஹ் கைரன்
    :)v

    ReplyDelete
  25. அன்பு சகோ@ ஆஷிக் அஹமது

    //மிக அருமையான விளக்கங்கள் மற்றும் சுய பரிசோதனை கேள்விகள். உங்களின் பல பாய்ன்ட்கள் நான் எழுதி இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கின்றது.//

    அல்ஹம்துலில்லாஹ் எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே!

    கட்டாயத்திற்கோ வற்புறுத்தலுக்கோ இஸ்லாத்தில் வேலையில்லை. உண்மைத்தான்., எனினும் உணரா சில உலமாக்கள்(?) கொடுக்கும் மார்க்க புரிதலற்ற ஃபத்வாக்களை இஸ்லாமிய ஷரியாவாக உருவப்படுத்தி விமர்சிக்க முற்படுவது தான் வருத்தம்.

    இஸ்லாத்தை ஏற்பதாலோ விட்டு விலகுவதாலோ இறைவனின் கண்ணியத்திற்கு குறையோ நிறைவோ ஏற்பட போவதில்லை. மாறாக பின்பற்றும் மனித மனங்களுக்கே எந்த விளைவும்!


    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ
    ஜஸாகல்லாஹ் கைரன்
    :)

    ReplyDelete
  26. வ அலைக்கும் சலாம் வரஹ்

    அன்பு சகோ@ சுவனப்பிரியன்

    //சிந்திக்க வைத்த பதிவு தோழரே!//

    அல்ஹம்துலில்லாஹ்!
    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ
    ஜஸாகல்லாஹ் கைரன்
    :)

    ReplyDelete
  27. வ அலைக்கும் சலாம் வரஹ்

    அன்பு சகோ@ Zalha
    //எங்கள் ஊரில் இப்படி,எங்க நாட்டில் இப்படி என்றெல்லாம் சொன்னா ஆஹா ஓஓஹோ என்று புகசக்கஊடியவர்கள் எங்க மார்கத்தில் இப்படி என்றதும் முகத்தை மாற்றிக்கொள்வது ஏனோ?//

    இதற்கு பெரும்பாலும் காழ்ப்புணர்ச்சியே காரணம் சகோ., மேற்கோள் காட்டப்பட்டது போன்று இஸ்லாம் என்ற ஒற்றைப்புள்ளியை மையமாக வரைந்தால் மட்டுமே சகோதரத்துவ வட்டம் உலகளாவில் உருவாகும் என நாம் உரத்துக்கூறுவதால்...

    இஸ்லாம் குறித்து நடுநிலையில் சிந்தித்தால் அவர்கள் கூற்றும் இதுவாகதான் இருக்கும்! அதற்கு நிதர்சனமான எவ்வளவோ உண்மைகள் நாடக்னி நடந்தேறிதான் வருகின்றன...

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ
    ஜஸாகல்லாஹ் கைரன்
    :)

    ReplyDelete
  28. வ அலைக்கும் சலாம் வரஹ்

    அன்பு அப்பா VANJOOR அவர்களின்

    வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி

    சுயபரிசோதனை நிச்சயமாக மறுமைக்கு தயாராகும் நம் ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்றே!

    ஜஸாகல்லாஹ் கைரன்
    :)

    ReplyDelete
  29. வ அலைக்கும் சலாம் வரஹ்

    அன்பு சகோ@ ரஹீம் கஸாலி

    //நானும் என்னை சுய பரிசோதனை செய்து கொள்கிறேன்//
    நீங்கள் மட்டுமல்ல சகோ இஸ்லாமிய வட்டத்திற்குள் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த சுயபரிசோதனை அவசியமானதொன்று

    என்னை உட்பட....

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ
    ஜஸாகல்லாஹ் கைரன்
    :)

    ReplyDelete
  30. வ அலைக்கும் சலாம் வரஹ்

    அன்பு சகோ@ Mohamed Faaique

    //இஸ்லாம் என்பது வணக்கம் புரிவது மட்டுமல்ல. ஒரு பூர்த்தியான வாழ்க்கைத் திட்டம்//

    இது தான் இங்கே விசயமே சகோ. இதை புரிவதற்கும் புரியவைப்பதற்கும் இடையில் தான் பிரச்சனையே., இதை மட்டும் சரியாக விளங்கி- விளக்கி விட்டால் அல்ஹம்துலில்லாஹ் பிரச்சனை தீரும் சகோ இன்ஷா அல்லாஹ்

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ
    ஜஸாகல்லாஹ் கைரன்
    :)

    ReplyDelete
  31. வ அலைக்கும் சலாம் வரஹ்

    அன்பு சகோ @ ஷேக் தாவூத்
    //பதிவுலகத்தில் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி தம்மை , தம்முடைய இருப்பை அடையாளப்படுத்துவோருக்கு சிறந்ததொரு புரிதலை இந்த பதிவு ஏற்படுத்த வேண்டும் //

    இன்ஷா அல்லாஹ். -அதற்காகவே இவ்விடுகை சகோ

    திருத்தங்களுக்கு சில விளக்கங்கள்

    நான் குறிப்பிட்டது சமூகம் சார்ந்த நல்ல கருத்துக்களை இஸ்லாமியரல்லாதவரும் சொல்லத்தான் செய்கிறார்கள். ஆனால் மாறாக முஸ்லிம்கள் அறுவறுக்கத்தக்க பதிவுகள் இட்டால் அது மார்க்க பூலாம் பூசப்பட்டு பூதாகரமாக காட்டப்படுகிறது. ஆக சமூக ஒப்பிட்டில் கூட சம நிலை அந்த சொல்லாடலில் இல்லையென்பதற்காகவே அந்த வாக்கிய அமைப்பு.

    இஸ்லாத்தை பின்பற்றுவோர்கள் முஸ்லிம்கள் அல்லது இஸ்லாமியர்கள் என்ற பதத்தில் உபயோகப்படுத்துவதை எல்லோரும் அறிந்தது தான். குறிப்பாக தமிழ் மொழியில் இஸ்லாமியர் என்ற பதம் அதிகமாக பயன்படுத்தப்படுவதால் நானும் அதைப்பயன்படுத்தினேன்.

    ஆனால் இஸ்லாமியர் என்ற பதத்திற்கும் முஸ்லிம் என்ற பதத்திற்கும் அதிகப்பட்ட வேறுபாடுகளோ அல்லது இந்த இடத்தில் முஸ்லிம்கள் என பயன்படுத்தல் தான் சரி என்பதற்கான காரணம் அறிந்தால் இன்ஷா அல்லாஹ் தாரளமாக மாற்றி அமைத்துக்கொள்கிறேன் சகோ

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
    ஜஸாகல்லாஹ் கைரன்
    :)

    ReplyDelete
  32. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    அன்பு சகோ @ Syed Ibramsha
    //அருமையான வரிகள்!.//

    அல்ஹம்துலில்லாஹ்

    வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி சகோ
    ஜஸாகல்லாஹ் கைரன்
    :)

    ReplyDelete
  33. வ அலைக்கும் சலாம் வரஹ்

    அன்பு சகோ @ஆமினா

    //என்னை முதலில் சுயபரிசோதனை செய்துக்கொள்கிறேன் :-)//

    இந்த பரிசோதனை உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் இஸ்லாமிய பதிவர் அல்லது முஸ்லிம் பதிவர்கள் என தம்மை இவ்விணையத்தில் இனங்காட்டக்கூடிய ஒவ்வொருக்கும் மிக முக்கியம்

    நான் மதிக்கும் பதிவர்களில் நீங்களும் ஒருவர் என்பதை இந்த நேரத்தில் நினைவூட்டிக்கொள்கிறேன்.

    வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி சகோ
    ஜஸாகல்லாஹ் கைரன்

    ReplyDelete
  34. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    அன்பு சகோ @"என் ராஜபாட்டை"- ராஜா

    வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி சகோ
    ஜஸாகல்லாஹ் கைரன்
    :)

    ReplyDelete
  35. வ அலைக்கும் சலாம் வரஹ்
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    அன்பு சகோ @ சிராஜ்

    //முற்றிலும் உண்மை. பொன்னெழுத்துக்களில் குறிக்கப்பட வேண்டிய வைர வரிகள் சகோ.//

    இல்லை சகோ ஆயிரத்திற்கு நானூறு ஆண்டு பழமை வாய்ந்த ஒரு சாதாரண வார்த்தைதான் இது சகோ

    ஆம்! நபிகளாரின் வருகையை இதற்காகதான் என்பது நாமறிந்ததே... ஆனால் அதை நாமே பிறர் மத்தியில் நினைவுறுத்த தவறி விட்டதில்ன் விளைவு தான் பல தேவையற்ற விமர்சனங்களை சந்தித்து வருகிறோம்.

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ
    ஜஸாகல்லாஹ் கைரன்
    :)

    ReplyDelete
  36. வ அலைக்கும் சலாம் வரஹ்

    அன்பு சகோ @ அனானி -1
    //ஊருக்கு தான் உபதேசம் என்று இல்லாமல் நாமளும் அதை கடைபிடித்து வாழ வேண்டும்..
    சொல்லிய வண்ணம் செயல் .. இதை தான் அல்லாஹ் விரும்புகிறான் .. .//

    நிச்சயமாக ! அல்லாஹ் அந்த நற்பாக்கியத்தை நமக்கு நாடுவானாக!

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ
    ஜஸாகல்லாஹ் கைரன்
    :)

    ReplyDelete
  37. வ அலைக்கும் சலாம் வரஹ்

    அன்பு சகோ @ ஹூசைனம்மா

    //ஒவ்வொரு முஸ்லிம் பதிவரின் மனதில் இருப்பதை, அவர்கள் சார்பில் சொன்னது போல இருக்கிறது. ஜஸாக்கல்லாஹ். .. .//

    உண்மைதான் இதே ஆதங்கங்கள் இணைய வாசிப்போடு நிறுத்திக்கொள்ளும் எத்தனையோ சகாக்களுக்கும் இருக்கும். அதை ஓரளவு பூர்த்தி செய்யும் எண்ணத்திலே இவ்வாக்கத்தின் இடுகை

    வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி சகோ
    ஜஸாகல்லாஹ் கைரன்
    :)

    ReplyDelete
  38. Assalamu alaikum warh

    Dear bro @ Imran Mohamed

    //We cannot be a weekend muslim or friday muslim.//

    very important point for all muslims

    jzahkllah kharian

    thanks for your valuable commnet

    ReplyDelete
  39. அன்பு சகோ @ அனானி -3

    //சில முஸ்லிம் பதிவர்கள் இணையத்தில் காலத்தை ஓட்டுபவர்கள் .. பல முகமாக இருகிறார்கள்.. .//

    உண்மைதான் அந்த நிலை மாற துஆ செய்வோம். மாற்றவும் வழி செய்வோம் இன்ஷா அல்லாஹ்

    வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி சகோ
    ஜஸாகல்லாஹ் கைரன்
    :)

    ReplyDelete
  40. வ அலைக்கும் சலாம் வரஹ்

    அன்பு சகோ @ அனானி -4

    //ஏனைய மார்க்கம் உழைக்க வேண்டும் என்று சொன்னால் நம் மார்க்கம் வேண்டாம் என சொல்கிறாதா என குழப்பம் வரும் .//

    இல்லை சகோ ஏனைய மதமோ அல்லது கோட்பாடுகளோ செய்ய வேண்டிய எந்த ஒரு செயலை பற்றி விளக்கம் தரும். ஆனால் இஸ்லாம் மட்டுமே அத்தோடு தவிர்க்க வேண்டியையும் வரையறுத்து அங்கு சொல்லும்
    அதற்கு உதாரணமாக தான் மேற்கண்ட வாக்கியம்

    வியாபாரம் செய்யுங்கள் என ஏனைய கோட்பாடுகள் பணிக்க., இஸ்லாமோ எவ்வாறு வியாபரம் செய்தால் மனித சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தெளிவாக வரையறுத்து அதனடிப்படையில் "வட்டியை " தடை செய்கிறது.
    இதைப்போல இன்னும் ஏராளம்...

    நீங்கள் சொல்லியதுப்போல

    ஏனையவைகள் உழைக்க சொல்லும் போது இஸ்லாம் ஹலாலாக உழைக்கவே சொல்கிறது


    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ
    ஜஸாகல்லாஹ் கைரன்
    :)

    ReplyDelete
  41. வ அலைக்கும் சலாம் வரஹ்

    அன்பு சகோ @NKS.ஹாஜா மைதீன்

    //அருமையான பதிவு..மிகவும் தெளிவுபட கூறியுள்ளீர்கள்... .//

    அல்ஹம்துலில்லாஹ்!


    வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி சகோ
    ஜஸாகல்லாஹ் கைரன்
    :)

    ReplyDelete
  42. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    அன்பு சகோ @ கலில் ரஹ்மான்

    //முஸ்லிம் பதிவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டி இந்த ஆக்கம் அமைந்திருந்தால் நலம்? .//

    நலம்?... அந்த எண்ணத்தில் தான் சகோ இந்த அக்கமே!

    வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி சகோ
    ஜஸாகல்லாஹ் கைரன்
    :)

    ReplyDelete
  43. Visit here:

    காவி தீவிரவாதிகளின் கயவாளித்தனம்!

    http://meiyeluthu.blogspot.com/2012/01/blog-post.html

    ReplyDelete
  44. நல்ல பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  45. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோதரர் குலாம் பாய்,
    //இஸ்லாத்தை பின்பற்றுவோர்கள் முஸ்லிம்கள் அல்லது இஸ்லாமியர்கள் என்ற பதத்தில் உபயோகப்படுத்துவதை எல்லோரும் அறிந்தது தான். குறிப்பாக தமிழ் மொழியில் இஸ்லாமியர் என்ற பதம் அதிகமாக பயன்படுத்தப்படுவதால் நானும் அதைப்பயன்படுத்தினேன்.
    ஆனால் இஸ்லாமியர் என்ற பதத்திற்கும் முஸ்லிம் என்ற பதத்திற்கும் அதிகப்பட்ட வேறுபாடுகளோ அல்லது இந்த இடத்தில் முஸ்லிம்கள் என பயன்படுத்தல் தான் சரி என்பதற்கான காரணம் அறிந்தால் இன்ஷா அல்லாஹ் தாரளமாக மாற்றி அமைத்துக்கொள்கிறேன் சகோ//
    இஸ்லாத்தை பின்பற்றுவோர்களை இஸ்லாமியர்கள் என்ற சொல்லில் அழைப்பது தமிழ் மொழியில் புழக்கத்தில் இருப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அந்த வார்த்தை சரியான சொல்லாடலா என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஏனெனில் நமக்கு இறுதி தூதராக முஹம்மத் நபியவர்கள் இருப்பதால் நம்மை முகமதியர்கள் என்றும் சிலர் தமிழில் அழைக்கின்றனர். எனவே முகமதியர்கள் என்ற சொல்லாடல் புழக்கத்தில் இருப்பதால் நீங்கள் அதை சரியென்று சொல்வீர்களா? முஸ்லிம்கள் என்ற வார்த்தை தான் இஸ்லாத்தை பின்பற்றும் சமூகத்தை குறிக்க சரியான சொல்லாடல் என்பது எனது கருத்து.

    ReplyDelete
  46. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    முஸ்லிம் பதிவர்கள் சிந்திக்க,
    அவ்வப்போது தம்மை சுய பரிசோதனை செய்து கொள்ள,
    மிக மிக அவசியமான பதிவு, சகோ.குலாம்..!

    வாழ்த்துகள்..!

    அதே சமயம்...

    இந்தியாவில் பாகிஸ்தான் கோடியை ஏற்றி கலவரத்தை உண்டாக்கி, பின் அவர்களே முஸ்லிம்களின் சொத்துக்கு நாசம் விளைவிப்பது போல...

    பதிவுலகிலும் சிலர் முஸ்லிம் பெயர்களில், பொய்யான ப்ரோஃபைலுடன், முகம் மறைத்து... இஸ்லாமிய வரம்புகளுக்கு வெளியே,
    கீழ்த்தரமான பதிவுகளை இடுவோரும் இருக்க வாய்ப்புண்டு என்பதையும் இத்தருணத்தில் நாம் உணர/உணர்த்த வேண்டும்.

    ReplyDelete
  47. சகோ. முதல்பாதி ரொம்ப சரிதான். தன் அனுபவத்தில் கண்ட நல்லவற்றை மற்றவர்களும் பெறவேண்டும் எனவும், பரப்ப வேண்டும் என்பதோடும் முழுமையாக உடன்படுகிறேன்.

    இரண்டாம் பகுதி முஸ்லீம் பதிவர்களுக்கான வேண்டுகோளும் தனித்தனி இடுகையாக வந்திருக்க வேண்டியது.

    தூயமார்க்கம் என பிரகடனப்படுத்தப்படும் மதத்தை பின்பற்றுபவர்கள் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இல்லை என்பதை நீங்களே சொல்லி விட்டீர்கள்.:)

    உங்கள் மதத்தை பற்றி ஒன்றுமே தெரியாத என்னைப்போன்றவர்கள் முஸ்லீம் பதிவர்களைப் பார்த்துதானே மதத்தை எடைபோட முடியும்.

    பின்பற்றுபவர்கள் சரி இல்லை, மார்க்கம் சரி என்றால் முதலில் பின்பற்றுபவர்கள் முழுமையாக சரி ஆக வேண்டும். இல்லையென்றால் மற்றவர்க்ள் கேலி செய்யத்தான் செய்வார்கள் :)

    எனக்குத் தெரிந்த சாமியார் 50 வயசு இருக்கும். ஆனால் 120 வயது வாழ வழி சொல்வார். எப்படி நம்புவது? தனக்கு ஒரு 100 வயது ஆனபின் அவர் சொன்னால் நம்பலாம். பின்பற்றலாம்.

    கோடிஸ்வரன் ஆவது எப்படி என சாதரண வசதி படைத்தவன் புத்தகம் எழுதினால் எப்படி இருக்கும்.? அதை ஒரு அரைகோடியாவது சம்பாதித்தவன் எழுதினால் ஓரளவு கேட்கலாம்.

    முதலில் உங்கள் மதத்தைச் சார்ந்தவர்கள் சரியாக இருந்தால் நீங்கள் பரப்பவேண்டிய அவசியமே இல்லை, தூயமார்க்கமே மற்றவர்களை தன்பால் ஈர்த்துக்கொள்ளும்.

    தூற்றுபவர்களுக்கு புத்தி சொல்வதைவிட உங்கள் தரப்பில் சரி செய்ய முடியுமா என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என்பது சொந்த கருத்து.

    முதல்பாதியோடு இரண்டாம் பாதி முழுமையாக முரண்படுகிறது என்கிற ஒரு வரியை இறுதி விமர்சனமாக வைத்து என் கருத்தினை ஆக்கபூர்வமாக எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

    பதிவர்களுக்குள் தவறான புரிதல் வரக்கூடாது என்பதே என் விருப்பம்.

    ஓரிறை என்பதில் உடன்பாடு இருப்பதால் உங்களோடு உரையாடி இருக்கிறேன் ))

    ReplyDelete
  48. சகோதரர் சிவா,

    உங்கள் மீது அமைதி நிலவுவதாக..ஆமீன்

    //தூயமார்க்கம் என பிரகடனப்படுத்தப்படும் மதத்தை பின்பற்றுபவர்கள் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இல்லை என்பதை நீங்களே சொல்லி விட்டீர்கள்.:)//

    தவறான புரிதல் சகோதரர். முஸ்லிம் பெயர்களை வைத்துக்கொண்டு தவறாக செயல்படும் ஒரு சிலரை தான் சாடுகின்றது இந்த கட்டுரை. இதனை தெளிவாக பின்வருமாறு குறிப்பிடவும் செய்கின்றது //மறுபுறம் அனேக அபத்தங்கள் நிறைந்த ஆக்கங்கள் வலம் வரத்தான் செய்கின்றன இஸ்லாமிய பதிவர்கள் சிலரின் பெயர்களில்...// -- இப்படி

    பதிவுலகில் எத்தனையோ முஸ்லிம் பதிவர்கள் இஸ்லாம் காட்டித்தந்த வழிப்படி மிக ஆக்கப்கூர்வமான முறைகளில் செயல்படுகின்றனர். அதனை இந்த கட்டுரை குறிப்பிடவும் செய்கின்றது. இதற்கு நேர்மாறாக இஸ்லாம் மார்க்கத்திற்கு தீங்கு விளைவிக்குமாறு செயல்படும் சிலரையே சாடுகின்றது இந்த கட்டுரை. அந்த சிலர் கூட ஒருபுறம் இஸ்லாமை சொல்லிக்கொண்டு மறுபுறம் அதற்கு நேர்மாறாக நடப்பவர்கள் இல்லை. அரேபிய பெயரை மட்டும் வைத்துக்கொண்டு இஸ்லாமிலிருந்து தூர இருப்பவர்கள்.

    இதோ இந்த தளம், என் தளம் (எதிர்க்குரல்), ரஜின் (சன்மார்க்கம்), சுவனப்பிரியன், ஹைதர் அலி (வலையகம்), முஹம்மது ஆஷிக் (பின்னூட்டவாதி), கார்பன் கூட்டாளி, சகோதரி அஸ்மா (பயனிக்கும்பாதை), சகோதரி ஹுசைனம்மா, சகோதரி ஆயிஷா etc என்று இப்படி பல தளங்கள் தங்கள் அனுபவிக்கும் கொள்கையை தாங்களும் அழகாக வாழ முயற்சித்து, அதனை அழகிய முறையில் எடுத்தும் சொல்கின்றனவே. அவைகளை தாங்கள் பார்க்கலாமே.

    அதுமட்டுமல்லாமல், ஒரு கொள்கையின் உண்மையை அறிய விரும்பினால் அதன் மூலத்திற்கு சென்று பார்த்து அளவிடுவதே சிறந்தது.

    தவறாக ஏதும் இருந்தால் மன்னிக்கவும்..

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  49. //பொதுவான பிற சமயம் சார்ந்த/சாரா பதிவர்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையை அசைப்போடுவதற்காகவே இப்பதிவு... //

    தவறான புரிதல் அல்ல சகோ.

    //மறுபுறம் அனேக அபத்தங்கள் நிறைந்த ஆக்கங்கள் வலம் வரத்தான் செய்கின்றன இஸ்லாமிய பதிவர்கள் சிலரின் பெயர்களில்...//

    அதையும் நான் படித்தேன். கட்டுரை சொன்ன விச்யங்களில் இதுவும் ஒன்று. இதை முதலில் முக்கியத்துவப்படுத்தி இருந்தால் என்னைப்போன்றவர்கள் படித்துவிட்டு சற்றே மாறுபட்ட கருத்தை பகிரவேண்டி இருக்காது.

    இதை நான் நன்கு படித்து புரிந்து கொண்டதால்தான் உங்களோடு உரையாடுகிறேன். மார்க்கத்தில் சரி அல்லாதவர் எனில் ஒதுங்கி இருப்பேன்.. :)

    ReplyDelete
  50. மன்னிப்பு என்பது நட்புகளுக்கள் தீண்டத்தகாத வார்த்தை..

    கருத்து பரிமாற்றம் நடைபெறுகிறது அவ்வளவுதான. ஏற்புத்தன்மை இருந்தால் போதும் இயல்பாக உரையாடமுடியும்.. ரொம்ப கூச்சமா இருக்கு மன்னிக்க ;)))

    ReplyDelete
  51. சகோதரர் சிவா,

    சலாம்...

    //தூயமார்க்கமே மற்றவர்களை தன்பால் ஈர்த்துக்கொள்ளும்.//

    இஸ்லாத்தை தழுவிய பலர், தாங்களாக குரான் நபிமொழிகளை படித்து இஸ்லாத்திற்குள் வருகின்றனர். இன்னும் பலர், முஸ்லிம்களின் நடவடிக்கைகளை பார்த்து அதன் மூலமாக கவரப்பட்டு குரானை படித்து இஸ்லாத்தை தழுவுகின்றனர்.

    மேலே கூறியுள்ள பலருக்கும் ஏதோ ஒரு வகையில் இஸ்லாம் குறித்து விளக்கம் தேவைப்படுகின்றது. சுருக்கமாகவோ, விளக்கமாகவோ, தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளவோ - இப்படி எதோ ஒரு வகையில் விளக்கம் தேவைப்படுகின்றது.

    என் நண்பர்களில் பலரும் இஸ்லாம் குறித்து கேட்பதுண்டு. 'குர்ஆன் இருக்கின்றது, நீங்களாக படியுங்களேன்' என்று சொன்னால், 'இல்லை ஆஷிக் சுருக்கமாக இஸ்லாம் என்ன சொல்கின்றது என்று சொல்லுங்களேன்' என்று கேட்கின்றனர். நான் விளக்கம் சொன்னால் அதிலிருந்து கேள்வி கேட்டு மேலும் விளக்கம் பெற பார்ப்பார்கள்.

    அதுபோல், நான் அறிந்த பலர் இப்படியும் கேட்பது உண்டு "இஸ்லாம் குறித்து ஏன் எங்களிடம் இதுவரை சொல்லவில்லை/விளக்கவில்லை?"...

    ஆகையால், இங்கு ஏதோ ஒரு நிலையில் பலருக்கும் விளக்கம் தேவைப்படுகின்றது. ஆகையால், ஒரு மார்க்கம் குறித்து நாமாக முன்வந்து அடுத்தவருக்கு தெரிவிப்பதில் தவறிருப்பதாக தெரியவில்லை. இறுதித்தூதர் அவர்கள் கடுமையான வேதனைகளையும் தாண்டி மார்க்கத்தை எடுத்து சொன்னார்கள், எழுதி வைக்க சொல்லிவிட்டு போய்விடவில்லை.

    இவை அனைத்தையும் தாண்டி, மார்க்கத்தை எடுத்து சொல்வதென்பது முஸ்லிம்களுக்கு இறைவன் இட்ட கட்டளை. ஒரு முஸ்லிமாக அதனை அவர்கள் செய்வது அவசியம்.

    அதுமட்டுமல்லாமல், மனிதர்கள் தவறு செய்யக்கூடியவர்கள். அவர்கள் பலகீனமாகவே படைக்கப்பட்டுள்ளார்கள். இங்கு பல முஸ்லிம்கள் இஸ்லாம் சொல்லியுள்ளவாறு நடக்க முயற்சித்தாலும், சிலர் அதனை பெரிதுபடுத்தாது தவறான வழிகளிலேயே இருக்கின்றனர். ஆகையால், முஸ்லிம்களை பார்த்தே நான் இஸ்லாத்தை புரிந்துக்கொள்வேன் என்பதற்கு முன்னுரிமை கொடுக்காமல், இஸ்லாத்தின் மூலமான குரானுக்கு முன்னுரிமை கொடுத்து இஸ்லாம் குறித்து அறிய முற்படுவதே சிறந்தது.

    நன்றி..

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  52. //அதையும் நான் படித்தேன். கட்டுரை சொன்ன விச்யங்களில் இதுவும் ஒன்று. இதை முதலில் முக்கியத்துவப்படுத்தி இருந்தால் என்னைப்போன்றவர்கள் படித்துவிட்டு சற்றே மாறுபட்ட கருத்தை பகிரவேண்டி இருக்காது.//

    ஆம் சகோதரர். இதனை முதலிலேயும் சொல்லிருக்கலாம். இந்த கட்டுரை இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பகுதி முஸ்லிம் பதிவர்களுக்கு. அந்த பகுதி ஆரம்பிக்கும் போதே, இந்த பகுதி யாருக்கென தெளிவுபடுத்திவிடுகின்றது.

    //தனிமனித ஒழுக்கம் மற்றும் பிறர் நலன் போன்றவற்றை மையமாகக்கொண்டு இங்கு எத்தனையோ முஸ்லிம் பதிவர்கள் ஆக்கத்தை ஒருபுறம் எழுதி வந்தாலும் மறுபுறம் அனேக அபத்தங்கள் நிறைந்த ஆக்கங்கள் வலம் வரத்தான் செய்கின்றன இஸ்லாமிய பதிவர்கள் சிலரின் பெயர்களில்...//

    இருப்பினும் தாங்கள் சொல்வதில் நியாயம் இருக்கின்றது. குழப்பம் ஏற்பட்டதற்கு வருந்துகின்றேன். அதனை திருத்திவிடுகின்றோம். சுட்டி காட்டியதற்கு மிக்க நன்றி...

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஏக இறைவன் மகிழ்ச்சியையும், அமைதியையும் தந்தருள வேண்டுமென்று பிரார்த்திக்கும்

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  53. சகோ @ உதயம்
    வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  54. அன்பு சகோ @ ரத்னவேல்
    வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி!

    ReplyDelete
  55. வ அலைக்கும் சலாம் வரஹ்
    அன்பு சகோ @ பி.ஏ.ஷேக் தாவூத்

    //முஹம்மத் நபியவர்கள் இருப்பதால் நம்மை முகமதியர்கள் என்றும் சிலர் தமிழில் அழைக்கின்றனர். எனவே முகமதியர்கள் என்ற சொல்லாடல் புழக்கத்தில் இருப்பதால் நீங்கள் அதை சரியென்று சொல்வீர்களா? //

    நிச்சயமாக இல்லை! ஏனெனில் முஹம்மது நபியவர்களால் இஸ்லாம் தோற்றுவிக்கப்பட்டதை போன்ற ஒரு புனைவை இவ்வார்த்தை ஏற்படுத்துவதால் இதை தவிர்ப்பது நல்லது

    ஆனால் இஸ்லாமியர்கள் என்பது இஸ்லாத்தை பின்பற்றுவோர்கள் என்பதை தாண்டி பிறிதொரு நிலையில் சொல்லாட படவில்லையென்பது என் எண்ணம்.க எனினும் "அவனே உங்களுக்கு முஸ்லிம்" என பெயரிட்டான் என குர்-ஆன் விளிப்பதால் இனிவரும் பதிவுகளில் முஸ்லிம் என்ற பதத்தை உபயோகப்படுத்துகிறேன்

    கருத்திற்கு நன்றி
    ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

    ReplyDelete
  56. வ அலைக்கும் சலாம் வரஹ்
    அன்பு சகோ @ சிட்டிசன்

    //பதிவுலகிலும் சிலர் முஸ்லிம் பெயர்களில், பொய்யான ப்ரோஃபைலுடன், முகம் மறைத்து... இஸ்லாமிய வரம்புகளுக்கு வெளியே,
    கீழ்த்தரமான பதிவுகளை இடுவோரும் இருக்க வாய்ப்புண்டு என்பதையும் இத்தருணத்தில் நாம் உணர/உணர்த்த வேண்டும்.//

    சகோ நூறு சதவீகிதம் உண்மையான வார்த்தை.,
    உணர்த்திதான் கொண்டிருக்கிறோம் அல்ஹம்துலில்லாஹ்!
    எனினும் உணர்ந்தார்களா...?
    இதற்கு நாம் (முஸ்லிம் பதிவர்கள்) பதில் சொல்வதற்கு பதிலாக..

    இஸ்லாமிய பெயர்தாங்கிகள் பெயரிலோ, பொதுப்பெயரிலோ இஸ்லாத்தை விமர்சிக்கிறேன் பேர்வழி என அசிங்கமான எழுத்துக்களை தங்கள் தளங்களில் அச்சேற்றித்தான் கொண்டிருக்கிறார்கள் சில சிந்தனைவாத(?) பதிவர்கள்.அதையும் இந்த நடு நிலைப்பதிவாளர் சமூகம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது...

    இவ்வாக்கத்தில் குறிப்பிட்டதுப்போல முஸ்லிம் பதிவர்கள் ஏதெனும் தேவையற்ற / பொறுப்பற்ற பதிவுகள் இட்டால் கண்டனங்களும் எதிர்மறை பின்னூட்டங்களும் தொடுக்கும் அந்த பதிவர்கள் அதே அக்கறையுடன் மேற்கண்ட பதிவர்களுக்கு குறைந்த பட்ச கண்டனத்தையாவது தெரிவி(க்க வேண்டும்!)த்தார்களா. ???

    பதில் தரும் பொறுப்பை அவர்களிடமே விட்டு விடுவோம்!

    வருகைக்கும் கருத்திற்கும்
    கருத்திற்கு நன்றி
    ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

    ReplyDelete
  57. அன்பு சகோ @ சிவா

    சகோ ஆஷிக் இடையேயான உங்கள் உரையாடலுக்கு மத்தியில் நுழைவதற்கு மன்னிக்கவும்!

    உங்கள் புரிதலில் சில தவறுகள் இருப்பதாக எண்ணுகிறேன்.

    //தூயமார்க்கம் என பிரகடனப்படுத்தப்படும் மதத்தை பின்பற்றுபவர்கள் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இல்லை என்பதை நீங்களே சொல்லி விட்டீர்கள்.:)//

    தூயமார்க்கத்தை அறிந்தவர்கள் சரியாக தான் பின்பற்றுகிறார்கள். சகோ ஆனால் அத்தகைய மார்க்கத்தை சரிவர விளங்காதவர்களே பின்பற்றுதலில் தவறிழைக்கிறார்கள். அவர்களின் அறியாமை அல்லது தவறான புரிதல்கள் களையப்படவேண்டும் என்பதற்கே இதைப்போன்ற ஆக்கங்கள் பலர் தளங்களில் இடப்படுகிறது

    ReplyDelete
  58. //உங்கள் மதத்தை பற்றி ஒன்றுமே தெரியாத என்னைப்போன்றவர்கள் முஸ்லீம் பதிவர்களைப் பார்த்துதானே மதத்தை எடைபோட முடியும்.//

    சகோ இணையம் ஒரு சக்தி வாய்ந்த ஊடகம் தான். ஏனைய நிலைகளை விட எந்த செய்தியும் இணையத்தில் விரைவாக மக்கள் மத்தியில் சேரும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.

    ஆனால்!

    இதுவரை யாரும் அறியாத அல்லது புதிததாக ஒன்றை மக்கள் மத்தியில் சொல்லும்போது தான் அது எப்படி நமக்கு சொல்லப்படுகிறோ அதுவே உண்மையென நம்ப அல்லது ஏற்க வாய்ப்புண்டு. ஆனால் இஸ்லாம் குறித்து அறிய வேண்டுமானால் அதற்கு குர்-ஆனும் நபிகளாரின் வாழ்வே மூலாதாரம். ஆக அவற்றை தான் முதலில் நீங்கள் படிக்க வேண்டும்.

    என் தளத்தை படிக்க செலவிடும் நேரத்தை விட மேற்கண்டவைகளை படிக்க முயற்சி செய்யுங்கள் சகோ., இணையத்தில் எளிதில் தேடினால் இவை இரண்டும் கிடைக்கிறது.

    ஏனெனில் இஸ்லாத்தை சரியாக புரிந்துக்கொள்ள இவை இரண்டு மட்டுமே மிக சரியான அளவுகோல். ஆக இங்குள்ள இஸ்லாமிய இணையங்களின் தொகுப்பு அவற்றை விளக்க (திறக்க) முயற்சிக்கும் ஒரு திறவுகோல் மட்டுமே.

    ஏனெனில் இஸ்லாம் குறித்த தவறான புரிதல்களோடு அவை சார்ந்த கருத்துக்கள் இணையத்தில் வலம் வரவும் வாய்ப்பிருக்கிறது. அதை படித்துவிட்டு இஸ்லாத்தின் மேல் சொல்லும் குற்றச்சாட்டிற்கு என்ன பதில் சொல்ல முடியும் சொல்லுங்கள்?

    பதிவர்கள் இஸ்லாத்தின் மூல கர்த்தா அல்ல!

    ReplyDelete
  59. //பின்பற்றுபவர்கள் சரி இல்லை, மார்க்கம் சரி என்றால் முதலில் பின்பற்றுபவர்கள் முழுமையாக சரி ஆக வேண்டும். இல்லையென்றால் மற்றவர்க்ள் கேலி செய்யத்தான் செய்வார்கள் :)//

    மீண்டும் தவறான ஒப்பீடு.


    ஒரு கோட்பாட்டை உறுதியாக ஏற்று அதை சரிவர தொடர்ந்தால் மட்டுமே அதற்கு பெயர் பின்பற்றுதல்., ஆக இஸ்லாம் விளிக்கும் செயல்களை பின்பற்றுவர் ஒருக்காலும் தவறிழைக்க வாய்ப்பில்லை. மாறாக அக்கோட்டை சரியாக விளங்கிக்கொள்ளாமல் தொடர்ந்து செய்வதாக சொன்னால் எப்படி அதற்கு பெயர் முழுமையான பின்பற்றுதல் ஆகும்?

    பின்பற்றுதல் என்பது மிக ஒரு நிலைப்பாட்டை நோக்கிய தெளிவான பயணம். இங்கு குற்றப்படுத்தபடுவர்கள் பின்பற்றப்படுவர்கள் அல்லர். மாறாக இஸ்லாத்தை விளங்காத பின்பற்றும் நிலையை இன்னும் அடையாதவர்களை குறித்தே

    //கோடிஸ்வரன் ஆவது எப்படி என சாதரண வசதி படைத்தவன் புத்தகம் எழுதினால் எப்படி இருக்கும்.? அதை ஒரு அரைகோடியாவது சம்பாதித்தவன் எழுதினால் ஓரளவு கேட்கலாம்.//

    சரிதான்!
    ஆனால் அரைக்கோடியோடு அரைக்கோடியை சேர்த்தால் ஒரு கோடி கிடைக்கும் என சொல்வதற்கு அவற்றை சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியமில்லை சகோ பிச்சைக்காரான இருந்தாலும் சொல்லலாம். உண்மை மட்டும் இருந்தால் போதும்.

    //தூற்றுபவர்களுக்கு புத்தி சொல்வதைவிட உங்கள் தரப்பில் சரி செய்ய முடியுமா என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என்பது சொந்த கருத்து.//

    சாலைவிதிகளை மதித்து, மது அருந்தாமல், மிக கவனமாக, மித வேகமில்லாமல், பொறுமையாக, எல்லாம் சரிப்பாத்து சாலையில் நாம் வாகனம் ஓட்டினால் விபத்து ஏற்படாது சரிதான்

    எதிரில் நம்மை நோக்கி மிக வேகமாக வரும் பிரக்கில்லா அந்த வாகனத்தை என்ன செய்வது சகோ?

    //பதிவர்களுக்குள் தவறான புரிதல் வரக்கூடாது என்பதே என் விருப்பம்.
    ஓரிறை என்பதில் உடன்பாடு இருப்பதால் உங்களோடு உரையாடி இருக்கிறேன் ))//
    நமது எண்ணமும் அதுவே!

    -மாற்றுக்கருத்து இருப்பீன் மற்றவை பிற
    இறை நாடினால் இனியும் தொடர்வோம்.

    வருகைக்கும் கருத்திற்கும்
    கருத்திற்கு நன்றி
    ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

    ReplyDelete
  60. அன்பு சகோ @ அனானி -3

    //சில முஸ்லிம் பதிவர்கள் இணையத்தில் காலத்தை ஓட்டுபவர்கள் .. பல முகமாக இருகிறார்கள்.. .//

    உண்மைதான் அந்த நிலை மாற துஆ செய்வோம். மாற்றவும் வழி செய்வோம் இன்ஷா அல்லாஹ்

    மாற்ற வழி செய்தால் நாம், அவர்கள் பதில் என்னோமோ குறை சொல்கிறோம ... [இவர்கள் பார்வையில் நன்மையை ஏவி தீமையை தடுப்பது கூட குரையாம் ] கேட்கவே வித்தியாசம இருக்குல .. இப்படிதான் நடுக்குது இணையத்தில் ..

    அவர்கள் பதிவ ஆராயனுமா ... ஓகே ஆராய்ந்து ஆதாரத்தோடு சொன்னால் ... ஊருக்கு உபதேசம் செயரியா .. உன் குடும்பதை திருத்து அப்புறம் இங்க வந்து பேசு நு கூட சொல்றாக ... அண்ணா ஹசரேவா நீ நு கேட்குறாங்க ... இத சொன்ன குத்தம் நு சொல்றாங்க ..

    இதுல ஒரு build-up வேற .. நாம் ஒரு கருது சொன்னால் அவர்கள் சொல்றாங்க இஸ்லாமிய பதிவு எழுத என்னை தடுக்குதே உங்க கருத்துனு சொல்றாங்க ...

    நடுநிளையாலேர்கள் சிந்திக்கவும் ....

    கருத்தை பிரசுரம் செய்யவும் ...

    உங்க பதிவுக்கு ஏற்ற கருத்து தான் .. யாருடைய தூண்டதாலும் நீக்க வேண்டாம் ...

    உங்க மீது எனக்கு மதிப்பு இருக்கு ...

    நன்மையை ஏவி தீமையை தடுப்பவேர்களுக்கு

    2:44. நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா?

    சிந்தனை ...............

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
      ஜஸாகல்லாஹ் கைரன்

      Delete
  61. Ibnu Shakir has left a new comment on your post "நிறம் மா(ற்)றும் பதிவுலகம்!":

    எதிரில் நம்மை நோக்கி மிக வேகமாக வரும் பிரக்கில்லா அந்த வாகனத்தை என்ன செய்வது சகோ?//
    Good question!

    ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்