"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Friday, December 10, 2010

தூயோனின் தூதரகம்..!

படைத்தவனை வணங்குவதற்காக
படைப்பினங்கள் ஒன்றுகூடும்
பயிற்சி பாசறை!

அல்லாஹ்வின் பெயர்தனை - 
ஐவேளை தினம் கூறி 
அனைவரையும் வரவேற்கும் 
அருளால் அலங்கரிக்கப்பட்ட
ஆன்மிக ஆபரணம்... 

இபாதத்தோடு இணக்கத்தையும்
சலாத்தோடு சகிப்புத்தன்மையும்
மனித மனங்களில்
இறுகக் கட்டும்
இறைவனின் இல்லம்...!

இங்கு, 
தீண்டாமையையும்
தீண்டுவோர் இல்லை
மொத்த உலகமும் பேசி தீர்க்க யோசிக்க
தம் மௌனத்தால் சாதித்தது 
மறை ஓதும் மாளிகை.

ஏற்றத்தாழ்வுகள்
எங்கே? - என
எவரையும்
கேட்க வைக்கும்
இஸ்லாத்தின் அத்தாட்சி.,

ஆள்பவனும் -ஆமோதிப்பவனும்
பணம் கொண்டவனும்
தினம் உழைப்பவனும்
வாழ்வில் தேரியவனும்
வாழ்வை தேடுபவனும்
ஆகாய விமான ஓட்டியும்
அன்றாட காட்சியும்...
அருகருகே தொழ வைக்கிறது  - 
தூர தேசத்திலும்...
சகோதரத்துவத்தை எழ செய்கிறது

வணக்கத்தோடு
வாழ்வியல் வெற்றிக்கும்
வழிக்காட்டும்
வசந்தங்களின் கூடாரம்

மார்க்கத்தை முன்னிருத்தி
மற்றவை பிற -என
மனித நல்லெண்ணங்களுக்கு
மாசற்ற வர்ணம் பூசும்
மனிதநேய ஆலயம்

அல்லும் -பகலும்
அனைத்துக்காகவும்
அலைந்து திரியும்
அற்ப மனிதர்களுக்கு
அல்லாஹ்வின் நினைவை
அதிகம் ஊட்டி
அழகிய ஆதாயத்தை
அன்றாடம் தரும்
அருளாளனின் சின்னம்..!

உள்ளே ஏதுமில்லையென்றாலும்
வெளியே வரும்போது
மனது நிறைய
நம்பிக்கையும், நன்மைகளையும்
கொடுக்கும் 
தூயோனின் தூதரகம்..!

சமுகத்தில் ஓரு சிலரை
முன்னிலைப்படுத்தும்
அரங்கங்களுக்கு மத்தியில்
ஓர் சமுகத்தையே
கண்ணியப்படுத்தும்
கருணை தளம்...

வல்லோன் சொல் கேட்டு
வாக்களித்ததை நிறைவேற்ற..
விரையும் எவருக்கும்
வரையறையற்ற 
இலாபத்தினை மட்டுமே தரும் 
வாழ்வியல் வர்த்தக மையம்...
11 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  //ஆள்பவனும் -ஆமோதிப்பவனும்
  பணம் கொண்டவனும்
  தினம் உழைப்பவனும்
  வாழ்வில் தேரியவனும்
  வாழ்வை தேடுபவனும்
  ஆகாய விமான ஓட்டியும்
  அன்றாட காட்சியும்...
  அருகருகே தொழ வைக்கிறது - //
  அருமையான வரிகள் சகோ
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. வ அலைக்கும் ஸலாம் வரஹ்
  நன்றி சகோதரி மஸ்ஜிதுகள் குறித்து எண்ணற்ற ஆக்கங்கள் இணையமெங்கும் நிறைந்து கிடக்கிறது எனவே கவிதை வடிவில் எழுதலாம் என்ற எண்ணத்தில் தொடங்கினேன்... அப்போது தான் இப்படி வார்த்தைகள் தோன்றின., ஜஸாகல்லாஹ் கைரன்.,

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  சகோதரர் குலாம்...

  தலைப்பே கவிதைபோல பற்பல அர்த்தங்கள் சொல்கின்றனவே..!

  அப்புறம் உள்ளே, எதை சொல்வது எதை விடுவது..!

  சிந்திக்கவைத்து நேர்வழியை விசாலமாக்கும் விவரமான கவிதை.

  மாஷாஅல்லாஹ்.

  நன்றி, கவிஞர் குலாம்.

  ReplyDelete
 4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  ///இங்கு,
  தீண்டாமையையும்
  தீண்டுவோர் இல்லை///
  அருமையான வரிகள் மாஷா அல்லாஹ்

  மண்ணுக்காக அல்லநீ
  வானுக்காக அல்லநீ
  உலகம் என்பது உனக்காக
  உலகிற்காக அல்லநீ
  அல்லாஹ்விற்காக நட்புக் கொள்
  அல்லாஹ்விற்காக பகைமை கொள்

  வாருங்கள் சகோதரர் அல்லாவுக்காக நட்பு கொள்வோம்

  ReplyDelete
 5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
  சகோதரர்., NKS.ஹாஜா மைதீன் வருகைக்கு நன்றி,

  வ அலைக்கும் சலாம் வரஹ்
  @சகோதரர் முஹம்மத் ஆஷிக்
  நீங்க வேற எனக்கு கவிதை எல்லாம் எழுத தெரியாது ஏதோ என் எண்ணங்களுக்கு எழுத்து முலாம் பூசி வைத்திருக்கிறேன் அவ்வளவு தான்.,ஏதும் தவறிருப்பின் இன்ஷா அல்லாஹ் அறிய தாருங்கள்

  @சகோதரர் ஹைதர் அலி
  //அல்லாஹ்விற்காக நட்புக் கொள் //
  என்ற அடிப்படையில் தான் அறிவாலும், அனுபவத்தாலும் முதிர்ச்சிப்பெற்ற உங்களைப் போன்றவர்களுடன் இணையத்தில் இணைய இன்ஷா அல்லாஹ் முயற்சிக்கிறேன்

  ஜஸாகல்லாஹ் கைரன்.,

  ReplyDelete
 6. 12/12/10........அஸ்ஸலாமு அழைக்கும் .....
  கவிகர் குலாம்.....
  மச்ஜிதுகலப்பற்றி
  மிக அழகாக சொல்லி
  இருக்கிறிர்கள்.......
  மாஷா அல்லா....
  உக்களுடைய அறிவை அல்லாஹ்
  மேலும் அதிகமாகுவானாக ஆமின்!@ sagadharar GULAAM.......

  ReplyDelete
 7. வ அலைக்கும் ஸலாம் வரஹ்
  @சகோதர் நஸூருதீன் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
  இன்ஷா அல்லாஹ் துஆ செய்யுங்கள்.

  @சகோதரி Geetha6 அவர்களின் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 8. 20/12/10....அஸ்ஸலாமு அலைக்கும்....சகோதரர் குலாம்.........பிறந்த
  நாள் கொண்டாலாமா ....
  நபி(ஸல் )அவர்களுடைய காலத்தில் இதை
  போன்ற வழக்கம்
  இருத்த தா எனக்கு
  விளக்கம் தாங்க.........எனக்கும்,உக்களுக்கும் நேர்வழி காட்ட குடியவன் அல்லாஹ் ஒருவனே........

  ReplyDelete
 9. வ அலைக்கும் ஸலாம் வரஹ்
  தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் கீழுள்ள லிங்கில் உங்கள் வினாவிற்கு விடை காணுங்கள் இன்ஷா அல்லாஹ் எனக்காகவும் துஆ கேளுங்கள் அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்பிறந்த நாளும், திருமண நாளும் குறித்து இஸ்லாமிய பார்வையில்

  ReplyDelete
 10. 2/1/11/அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரர் குலாம்....
  விளக்கம் மிக தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது .அல்ஹம்துளிலாஹ்..........அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்........

  ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்