3D!
பொதுவாகவே பெரும்பாலானவர்களுக்கு நன்கு பரிச்சயமான வார்த்தையாக இருந்தாலும் தொழில் நுட்பம் சார்ந்தவர்களுக்கு அதிகம் பயன்பாட்டுமிக்க வார்த்தை இது. 3D என்றால் சட்டென நினைவுக்கு வருவது இதன் ஊடாக எடுக்கப்பட்ட ஆங்கில மற்றும் அனிமேஷன் திரைப்படங்கள் தான். அவைகள் 3D தொழில் நுட்பத்தின் முதிர்ச்சி தான் தவிர முழுவதும் திரைப்படங்களுக்காக உருவாக்கப்பட்டதல்ல அதன் நுட்பங்கள்...
முப்பரிமாணம்

பெரும்பாலும் இது இயற்பியல் மற்றும் பொறியியல் துறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. முப்பரிமாண தோற்றத்தின் மூலம் ஒரு பொருளின் அமைப்பை மற்றும் வடிவத்தை சுலபமாக புரிந்து கொள்ள முடியும்.
3D தொழில் நுட்ப யுக்தி வணிக ரீதியாக இன்றும் ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் விளையாட்டுகளிலும் பயன்படுத்திக்கொள்ளப்படுகிறது . மேலும் பொழுதுப்போக்குத்துறையிலும் இதன் தாக்கம் எதிரொலித்தது 3D பயன்படுத்தி சில புகைப்படங்களும் உருவாக்கப்பட்டன. அப்படி உருவாக்கப்பட்ட சில புகைப்படங்களை காணுவதற்கே இப்பதிவு
அதற்கு முன்பாக,
இந்த வகை புகைப்படங்களை சாதரணமான நிலையில் எளிதாக பார்வையிட முடியாது. முதலில் இரு கண்களையும் ஒரே இடம் நோக்கி சீராக இணைக்க வேண்டும். அதாவது நம் இருகண்களும் மூக்கை பார்க்கும் வண்ணம் ஒரே மூலையில் ஒருங்கிணைக்க வேண்டும். அதற்கு முன் நமது மானிட்டரின் மையப்பகுதி நமது கண்ணிற்கு நேராக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த முறை படங்கள் அதற்குரிய தோற்றத்தில் நேரிடையாக தெரியாது. மாறாக அதன் வடிவில் மட்டுமே தெரியும். அதாவது ஜஸ்கிரீமில் ஒரு பகுதி எடுக்கும் போது, எடுக்கப்பட்ட பகுதியில் எப்படி குழியாக தோன்றுமோ அந்த அமைப்பில் இவ்வமைப்பு படங்கள் தெரியும். படங்கள் மிக தெளிவாக உங்களுக்கு தெரிந்தவுடன் உங்களுக்கும் அப்படத்திற்கும் உள்ள இடைவெளியே பின்னோக்கி, அதிகப்படுத்தினால் அப்படத்தின் உள்ளளவு அதிகரித்துக்கொண்டே போகும்.
சரிவர பார்க்கமுடியவில்லையென்றால் நான்காம் படத்தை மட்டும் முயற்சிக்கவும்.
முதலில் எளிதாக ஒரு படம்
இந்த மஞ்சள் நிறப்படத்தில் மேற்சொன்ன முறையே பயன்படுத்தி பார்வையிட்டால்., நடுவிற்கு சற்று நகர்ந்து இடதுபக்கத்தில் ஒரு கோழிக்குஞ்சு ஒன்று உள்ளதை பார்க்கலாம்.
அடுத்து, (2)
இந்த படத்தில் ஆறு செங்குத்தான மலை வடிவ கூம்புகளும் அவற்றிற்கு இடையிடையே குழிகளும் இருக்கிறது., இன்னும் எளிதாக சொல்வதாக இருந்தால் நமது வீட்டில் உபயோகப்படுத்தும் இட்லி சட்டிப்போன்று பள்ளங்களும் மேடுகளும்..
அடுத்து,(3)
இந்த படத்தின் விளைவை எளிதாக விளங்கிக்கொள்ளலாம்., அதாவது நடுவில் இருக்கும் நீல வண்ணக்கோடு சாதாரணமாக பார்பதற்கு மேலெழும்பி இருப்பதுப்போல் தோன்றினாலும்., உண்மையாக 3ட் அமைப்பில் பார்க்கும் போது மிக செங்குத்தாக கீழ் நோக்கி போகிறது. கீழ் நோக்கி செல்லும் இருப்பக்க நீலகோடுகளையும் நடுவில் இருக்கும் வெள்ளை நிறக்கோடு இறுதியில் ஒரே புள்ளியில் இணைக்கிறது.
இறுதியாக, (4)
இவ்வமைப்பு புகைப்படங்களில் இதை, மாஸ்டர் பீஸ் என்றே சொல்லலாம். ரோஜாக்களின் பின்னணியில் தெரியும் இந்த புகைப்படத்தில் நடுவில் ஒரு ஹார்ட் (வடிவம்) தெளிவாக இருக்கிறது. (தொண்ணுறாம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ஆனந்த விகடனின் பின்பக்க அட்டைப்படத்தில் இப்படத்தை பார்த்ததாக நினைவு.)
தொடக்க காலத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்களே இவை. ஆனால் இதை பார்வையிடுவதை காட்டிலும் இன்னும் எளிதாக Stereoscopic imaging எனப்படும் முப்பரிமாண படிம படங்களால் பார்வையிட முடியும்
* * *
முப்பரிமாண படிமம்,
ஓர் படிமத்தில் உயரம்,அகலம் தவிர ஆழத்தின் தோற்றத்தை உருவாக்கவும் மூன்று பிரிமாணங்களில் காட்சித் தகவலை பதிவதற்கும் திறனுள்ள நுட்பமாகும்.
ஒவ்வொரு கண்ணிற்கும் சற்றே வேறுபட்ட படிமத்தை ஏற்படுத்தி இருப்படத்திலும் ஒரே இயல்புத்தன்மையே உருவாக்குகிறது. பல முப்பரிமாண காட்சிகள் இந்த நுட்பத்தையே பயன்படுத்துகின்றன. இதனை முதலில் சர் சார்லெஸ் வீட்ஸ்டோன் என்பவர் 1840ஆம் ஆண்டு கண்டறிந்தார். இவ்வகை படிமங்கள் 3D ஒளிவருடிகளை கொண்டு உருவாக்கப்படுகின்றன.
படங்களின் துல்லியம், தெளிவு, நம் கண் முன்னே இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தும் பிரமிப்பு -இவ்வகை புகைப்படத்தின் கூடுதல் சிறப்பு.
இவ்வகைப்படத்திற்கு அதிக சிரத்தை தேவையில்லை. இருக்கும் இரண்டு படங்களை ஒரே படமாக இருக்குமாறு ஒன்றின் மீது ஒன்றை அடுக்கும் வண்ணம் கண்களை சுழற்றினால் போதும். கீழுள்ள படத்தில் இன்னும் எளிதாக இதை அறியலாம்.
இதனடிப்படையில் முதல் படத்தை பார்வையிவோம்.
(2)
(4)
இம்முறையில் இது ஒரு வித்தியாசமான படம் என்றே சொல்லலாம். முன்னே தெரியும் குட்டி டைனோசரஸ் 3D அமைப்பில் பின்னோக்கி இருக்கிறது.. (5)
இப்புகைப்படமும் 3D தொழில் நுட்பத்திற்கொரு சான்று! வலமிருந்து இடமாக வளைந்து செல்லும் பாலம் அத்தோடு எங்கோ தெரியும் ஆரஞ்சு நிற போர்டு., பார்த்தால் பிரமிப்பை தான் ஏற்படுத்தும்.
(6)
சுவாலைகள் முன்னும் பின்னும் ....இறுதியாக (7)
நான் பிரமித்த புகைப்படம் இது தொழில் நுடபத்தின் விளைவு மிக நேர்த்தி! திறக்கப்பட்ட கதவு முன்னோக்கி...அதிலும் இடது பக்கம் தெளிவாய் தெரியும் தாழ்பாள், தூரத்தில் மரங்கள்... அவசியம் பார்வையிட வேண்டிய புகைப்படம்...
இந்த பதிவிற்கு இது 3D போட்டோ பதிவு என பெயரிட நினைத்தேன் எனினும் இது தொழில் நுட்பம் சார்ந்த பதிவேன நினைத்து வருபவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்! இன்னும் crossed eye 3d photos என தேடினால் அனேக புகைப்படங்கள் அணிவகுக்கின்றன., நீங்களும் பார்வையிடுங்கள்.,
நன்றி
1.சகோ ஆமினா
2.சகோ ஜெயமாறன்
3. சகோ நிருபன்
Ref: