"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."
Showing posts with label பகுத்தறிவு. Show all posts
Showing posts with label பகுத்தறிவு. Show all posts

Friday, April 12, 2013

உடையும் பகுத்தறிவு..!


                                      ஓரிறையின் நற்பெயரால்

பகுத்தறிவு என்றாலே நம் சிந்தைக்கு முதலில் வருவது நாத்திகமும்- அதை பின்பற்றுபவர்களும் தான்.. அப்படியான ஒரு தோற்றதை தான் இந்த சமூகம் பொதுவெளியில் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. முதலில் பகுத்தறிவு என்பதோடு, நாத்திகத்தின் அடிப்படை கோட்பாடுகள் (?) எந்த விதத்தில் உடன்படுகிறது என்பதை கொஞ்சம் அலசுவோம்

பகுத்தறிவு எனப்படுவது  நிகழ்வுகளின் அல்லது கருத்துக்களின் கூறுகளை ஆராய்ந்து அவற்றின் இயல்புகளிலிருந்து ஆதாரப்பூர்வமான நிருபிக்கக்கூடிய முடிவுகளை முன்வைப்பது ஆகும். சுருக்கமாக கூறினால் பகுத்தறிவின் நோக்கம் மெய்ப்பொருளை அல்லது உண்மையக் கண்டறிவதே.

நாத்திகம் (Atheism) என்பது கடவுள் இல்லை என்ற நிலைப்பாடு, கடவுள் பற்றிய எத்தகைய நம்பிக்கையும் இல்லாமல் இருத்தல் அல்லது கடவுள் தொடர்பான நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் மறுக்கும் கொள்கை.  

பகுத்தறிவு மற்றும் நாத்திகம் இவை இரண்டிற்கும் விக்கி பீடியா கொடுக்கும் வரைவிலக்கணம் இவை. ஆனால் மேற்கண்ட இரண்டு செயல்முறைகளும் முற்றிலும் தொடர்பற்றவை. அப்படியிருக்க இன்று பகுத்தறிவாதிகள் என சமூகத்தில் நாத்திகர்கள் அடையாளப்படுத்தப் பட்டதற்கு என்ன காரணம்..?

தொடர்வோம்.

நாத்திகர்களின் பிரதான கொள்கை மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஒரே கொள்கை "கடவுள் மறுப்பு" ஒன்றே. கடவுளை மறுக்க ஆரம்பத்தில் அவர்கள் கையாண்ட வழிமுறைகள் * கடவுளின் பெயரால் சமூகத்தில் வர்த்தகரீதியான பிளவு, * கடவுளின் பெயரால் தேவையற்ற சடங்கு, சம்பிரதாயங்கள், * அறிவுக்கு ஒத்து வராத மூட பழக்க வழக்கங்கள்.

இவற்றை நன்கு கவனித்தால் ஒரு குறிப்பிட மதம் கொண்ட கொள்கைக்கு எதிர்ப்பாக மட்டுமே பொருள் கொள்ள முடியும். ஏனெனில் உலக அளவில் பெரும்பாலானோர் பின்பற்றும் கொள்கையை எதிர்ப்பதாக இருந்தால் அந்த கொள்கைகள் கூறும் அனைத்து விசயங்களையும் எதிர்க்க தன்னிடம் ஆணித்தரமான ஆதாரங்களை வைத்திருக்க வேண்டும். வரையறைகளை தன்னிடம் தெளிவாக வைத்திருக்காத மதங்கள் கூற்றை எதிர்த்தே தன்னை இந்த மண்ணில் நாத்திகம்  நிலை  நிறுத்திக்கொள்ள முயல்கிறது.

 ஆனால் இஸ்லாம் தனது கோட்பாடுகளை முன்வைத்து, கடவுள் குறித்த அனுமானங்கள், கடவுளின் பெயரால் மூட பழக்க வழக்கங்கள், கடவுளுக்கு சடங்கு சம்பிரதாயங்கள் போன்றவை கூடாது என தெளிவாக பிரகடனப்படுத்திய பிறகு நாத்திகம் தனது எதிர்ப்பை இஸ்லாத்திலும் நுழைக்க, மேற்கண்ட பட்டியலோடு தற்காலத்தில் அறிவியலையும் கடவுளை மறுக்க துணைக்கு அழைக்கிறது.

ஆகவே தான் நாத்திகம் எங்கே தனது உரையாடலை தொடங்கினாலும் கடவுள் மறுப்பு, கடவுள் இருப்பு என்ற வட்டத்தில் மட்டுமே நின்று விவாதித்துக்கொண்டிருக்கிறது. அதிலும் எதிரில் இஸ்லாம் இருந்தால் உடனே இஸ்லாமிய சட்டத்துக்குள்ளும் தம் கிளை கேள்விகளை தொடர்கிறது. இதை தான் இன்று வரையிலும் நேரடியாகவும், இணைத்திலும் கண்டு வருகிறோம்.

அதே நேரத்தில் தம் கொள்கைகளை விவரித்து, அவை மட்டுமே இந்த சமூகத்தின் நடைமுறை வாழ்வுக்கு உயர்ந்த வழியென்றும், சிறந்த வழியென்றும் எங்கேயும், எப்போதும் எடுத்து கூறி மக்களை தம் பால் அழைப்பதில்லை. மாறாக கடவுள் மறுப்பை மட்டுமே கொள்கையாக வைத்துக்கொண்டு அதையை இச்சமூகத்தில் ஒரு பிரதான ஆயுதமாக்கி தம் இருப்பை தக்கவைத்து கொண்டிருக்கிறது.


   தனக்கென பிரத்தியேகமான கொள்கை கோட்பாடுகள் இல்லாமல் எதிர்ப்பு என்ற ஒற்றை அணுகுமுறையை வைத்திருக்கும் ஒன்றை எப்படி அறிவார்ந்த பேரியக்கம் என்பதாக ஏற்றுக்கொள்ள முடியும்? இன்றைய சமூக சூழலில் இஸ்லாத்திற்கெதிராக விமர்சனங்கள் பதிவு செய்யப்படுவதுப்போல நாத்திகத்திற்கு எதிராக விமர்சனங்கள் பதிவு செய்யப்படுவதில்லையே அது ஏன்...? இப்படி ஒரு அறிவார்ந்த கேள்வியும் நாத்திகர்களிடையே உண்டு.

விமர்சனம் ஒன்றின் மீது பதிவு செய்யப்படுவதாக இருந்தால் அதை விமர்சிக்க முற்படும் அளவிற்கு அதன் கொள்கை- கோட்பாடுகள் வெளிப்படையாக நமக்கு முன்மொழியப் பட்டிருக்க வேண்டும். அந்த அடிப்படையில் இன்று இஸ்லாத்தின் கோட்பாடுகள் பதிவு செய்து வைக்கப்பட்டிருப்பதுப் போல நாத்திகம் தனது கொள்கை கோட்பாடுகளை இந்த உலகத்திற்கு தெளிவாக முன் மொழிந்து இருக்கிறதா...? 

இன்னும் சொல்ல போனால் கடவுள் மறுப்பு என்பது தனிமனித வாழ்வில் ஒருவர் மேற்கொள்ளும் ஒரு நிலைப்பாடு அவ்வளவே... மாறாக, அதுக்கொள்கையல்ல... ஒருவர் தன்னை நாத்திகராக இந்த உலகில் நிலை நிறுத்திக்கொள்ள, தம் வாழ்வை தொடர எத்தகைய வாழ்வியல் கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும்? அதற்கு நாத்திகம் பதில் சொல்லுமா...?

மனித வாழ்வுக்கு ஏற்புடையதல்ல என்று ஒரு கொள்கையை விமர்சித்து அதை பொதுப்படுத்தினால் அதை விட மேலான ஒரு கொள்கையை இவ்வுலகிற்கு அதுவும் எல்லா காலத்திலும், எல்லா மக்களும் பின்பற்றும் வகையில் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.. அப்படி எங்காவது நாத்திகம் தம் கொள்கையை பிரகடனப்படுத்தி இருக்கிறதா...? 

தனக்கென கொள்கையையும் தெளிவான பின்பற்றலும் இல்லாத ஒன்றின் மீது எப்படி விமர்சனங்களை பதிவு செய்ய முடியும்..? அதனால் தான் அதிகமாக நாத்திகத்தின் மீதான விமர்சனங்கள் பதிவு செய்யப்படுவதில்லை. அது மட்டுமில்லை இன்று சமூகத்தில் நாத்திகராக வலம் வருபவர்கள் பெரும்பாலும் தங்களுக்கென்று எந்த பிரத்தியேக வாழ்வியல் நடைமுறைகளையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கவில்லை. இணையத்தில் கூட அஃறிணை பெயர்களோடு தான் உலா வருகிறார்கள். மதம் சார்ந்த குறியீடுகள் தம் மீது விழாமல் இருப்பதற்காக... ஆனால்

பிறப்பு, திருமணம், இறப்பு போன்ற அடிப்படை மனித நிகழ்வுகளில் ஏதாவது ஒரு மதத்தின் அடிப்படையிலேயே தங்களை வழி நடத்திக்கொள்கின்றனர். அப்படி இல்லை என ஒரு நாத்திகர் சொல்வாரானால் பிறப்பு முதல் இறப்பு வரையிலான தனது வாழ்க்கை முறை எந்த கொள்கை அடிப்படையில் அமைந்திருக்கிறது என பொதுவில் கூறப்பட்டும்.

உள்ளூர் முதல் உலக வர்த்த மையம் வரை ஏற்படும் பிரச்சனைகளுக்கு சமூகத்தையும், அச்சமூகம் சார்ந்திருக்கும் மதத்தையும் குறை கூறி முக நூல் பக்கத்திலும், தளங்களிலும் தம் எண்ணங்களுக்கு எழுத்து வர்ணம் அடிக்கும் நாத்திகர்கள், அதற்கான தீர்வாக தாம் கொண்ட கொள்கை என்ன சொல்கிறது.. என்பதை பதிவு செய்தார்களா..? தினம் தினம் நடைமுறை வாழ்வில் நாம் காணும் ஆயிரமாயிரம் பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வு நாத்திக கொள்கையில் (?) மட்டுமே சாத்தியம் என்றாவது பகிரங்கப்படுத்துவார்களா..?

தம் நிலை குறித்து எங்கும் விவாதிக்க முற்படாமல், எதிர் தரப்பை மட்டுமே விமர்சித்து, விவாதிக்க முற்படுவதே நாத்திகத்தின் "லாவக போக்கு". இனி வரும் காலங்களிலாவது நாத்திகர்கள் தங்கள் கொள்கை கோட்பாடுகளை தெளிவாக பிரகடனப்படுத்தட்டும். அது எப்படி மனித வாழ்க்கை முழுவதற்கும் ஏற்புடையது என்பதை விளக்கி கட்டுரை எழுதட்டும். எதிர் கருத்துக்கள் இருந்தால் அதுக்குறித்து விவாதிக்க அழைப்பு விடட்டும். அப்போது உடைந்து போகும், பகுத்தறிவு முலாம் பூசப்பட்ட பானைகள்...

தனிமனித வாழ்வியல் கொள்கைகளையும், சமுகத்திற்கான சமமான கோட்பாடுகளையும் கொண்டிராத நாத்திகத்தை இனியாவது பகுத்தறிவோடு யாரும் முடிச்சிடாதீர்கள். இல்லையேல் பகுத்தறிவு என்பதற்கு அகராதியில் பொருள் மாற்றம் செய்ய வேண்டி வரும்.

தொடர்புடைய ஆக்கம் :
நடைமுறை வாழ்வில் நாத்திகத்தின் 'முரண்பாடு'..!


                                                     அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
read more "உடையும் பகுத்தறிவு..! "

Monday, November 21, 2011

நாத்திகனுக்குள் உண்மையைத் தேடி...

                                         ஓரிறையின் நற்பெயரால்.

     பொதுவாக எல்லா மதம் சார்ந்த / சாரா கொள்கைகள் நன்மை செய்வதை முன்னிலைப்படுத்தி கோட்பாடுகளை வகுத்தாலும் ஏனைய மதங்களை விட இஸ்லாமே நாத்திகவாதிகளால் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.

 ஏனெனில் ஏனைய கொள்கைகள் போல நன்மைகள் மேற்கொள்வதை முன்னிலைப்படுத்துவதோடு மட்டுமல்லாது, அதன் எதிர் விளைவான தீமையை தடுக்கவும் இஸ்லாம் அதை பின்பற்றுவோர் மீது சமூக கடமையாக பணிக்கிறது.

  ஆக அதனடிப்படையில் இன்று எல்லா ஊடகங்கள் வாயிலாகவும் இஸ்லாமியர்கள் அவரவர் பங்களிப்பை முடிந்த வரையில் அளித்து வருகிறார்கள்.  குறிப்பாக இணையத்தில் அதன் தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது., எல்லா துறைச்சார்ந்த கோட்பாடுகளை விளக்கும் தளங்களை விட இஸ்லாத்தை விளக்கும் தளங்கள் தமிழில் அதிகம்., நான் வாசித்த வரையில் சுமார் இருநூற்று ஐம்பதிற்கும் மேலாக இருக்கிறது 

   ஒரு கொள்கையை விளக்கும் போது நேர்மறை எதிர்மறை கருத்துக்கள் எழ தான் செய்யும் ஆனால் எந்த ஓரு நிகழ்வையும் ஏற்பதும் மறுப்பதும் ஒருவரது நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட விஷயம். ஆனால் தான் கொண்ட கொள்கை தான் உண்மையானது எனக் கூறி பிறரை ஏற்க செய்வதாக இருந்தால் அச்செய்கையை பொதுவில் நிறுத்தி, 
  • அறிவியல் ரீதியாக 
  • தர்க்கரீதியாக 

     ஒன்றின் கீழாக நிறுத்தி அவை விளக்கப்பட வேண்டும். அது இஸ்லாத்திற்கும் பொருந்தும் -நாத்திகத்திற்கும் பொருந்தும்., ஆனால் இஸ்லாம் எப்படி குர்-ஆன் சுன்னாவை முன்னிருத்தி பிறரை தன்பால் அழைக்கிறதோ, அதுப்போல நாத்திகம் அதுக்கொண்ட கொள்கையே முன்னிருத்தி அழைப்பதில்லை. மாறாக ஒரு நிலையில் இஸ்லாத்தை விமர்சித்து -தவறான புரிதலுடன் குற்றப்படுத்தி தம் கொள்கையை பறைச்சாற்றுகிறது. எண்ணற்ற தளங்கள் இஸ்லாம் சார்ந்த விமர்சனத்திற்கு / குற்றச்சாட்டிற்கு தெளிவான விரிவான விளக்கம் தந்துக்கொண்ட இருக்கின்றன.

     மேலும் ஒரு கோணத்தில் உயிரின தோற்றத்தின் மூலத்திற்கு பரிணாமத்தை அடிப்படையாக கொண்ட சித்தாந்தத்தை அறிவியலாகவும்,  கண் முன் இல்லா கடவுளை ஏற்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாது என தர்க்க ரீதியாகவும் வாதமெழுப்ப நாத்திகம் முயல்கிறது., அவற்றை மறுக்கும் விதமாக கீழ்கண்ட தளங்களில்  நாத்திகத்தை பொய்ப்பித்து படைப்பியல் கொள்கையை நிறுவ இஸ்லாத்தை முன்னிருத்தாமல் அவர்களிலும் வழியிலேயே பரிணாமம் -கடவுள் -கம்யூனிசம் குறித்து ஆய்வு ரீதியாவும் தர்க்கரீதியாகவும் ஆக்கங்களை வெளியிடுகிறது.



     நீங்களும் பார்வையிடுங்கள் இந்த ஆக்கங்கள் சமூக பயன்பாடு உடையது என நீங்கள் நினைத்தால் இந்த பதிவை மீள்பதிவாகவோ அல்லது தனிப்பக்கமாகவோ உங்கள் வலைத்தளத்தில் வெளியிடுங்கள். குறைந்த பட்சம் நாத்திக சகோதரர்களுக்காவது இப்பக்கத்தை அறிய செய்யுங்கள். 


* * *

" சகோதரர் ஆஷிக் அஹ்மத்தின் பரிணாமம் குறித்த பதிவுகள் "  
  

1. பரிணாமவியலாளர்கள் செய்த பித்தலாட்டங்கள், 
2. பரிணாமம் என்றால் என்னவென்று விளக்குவதிலேயே குழப்பங்கள் இருப்பது, 
3. முதன் முதலாக உயிரினப்படிமங்களில் காணப்படும் உயிரினங்கள் திடீரென தோன்றியிருப்பது, 
4. பெரும்பாலான உயிரினங்கள் மாற்றமடையால் தொடர்ந்தது, 
5. பரிணாமவியலாளர்களுக்குள் இருக்கும் குழப்பங்கள், 
6. நவீன வர்ணாசிரமமாக மனிதர்களிடையே இனபேதத்தை கற்பித்து பலரின் அழிவுக்கு காரணமாக பரிணாமம் இருந்தது மற்றும் ஹிட்லரின் வெறிக்கு பின்னால் முக்கிய காரணகர்த்தாவாக பரிணாமம் இருந்தது,
7. ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இறைநம்பிக்கையாளர்களாக இருப்பது, 
8. பரிணாமம் குறித்து மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள்,
9. பரிணாமம் குறித்து ஆசிரியர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வுகள்.
10. குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்தானா?
11. பரிணாமம் உண்மையாக இருந்தால் கூட அதனை வைத்து இறைவனை மறுக்க முடியுமா? 

12. பரிணாமத்தின் துணை கொண்டு நடந்த அட்டுழியங்கள் - மனித ZOO 


மேலும் பரிணாமம் குறித்து இந்த தளத்தில் உள்ள கட்டுரைகள்

1. எழுத்து விவாதங்களில் பங்கேற்கும் முஸ்லிம்கள் கவனத்திற்கு - I 
2. புரியாதப் புதிர்கள்..
3. Evolution Theory --- மக்கள் என்ன சொல்கிறார்கள்?
4. பரிணாமவியலை நம்புபவர்கள் இதையும் நம்புவார்களா?
5. பரிணாமவியல் உண்மையென்றால் அறிவியலாளர்களிடம் ஏன் இவ்வளவு கருத்து வேறுபாடுகள்? 
6. Evolution St(he)ory > Harry Potter Stories - I
7. Evolution St(he)ory > Harry Potter Stories - II
8. Evolution St(he)ory > Harry Potter Stories - III
9. Evolution St(he)ory > Harry Potter Stories - IV 
10. தற்செயலாய் வீடு உருவாகுமா?
11. "செயற்கை செல்(?)" (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா நாத்திகத்தையா? 
12. Evolution St(he)ory > Harry Potter Stories - V
13. (பல) நாத்திகர்கள் அறியாமையில் இருக்கின்றார்களா?
14. Evolution St(he)ory > Harry Potter Stories - VI
15. சில ஆச்சர்யங்கள், சில கேள்விகள் - I
16. சில ஆச்சர்யங்கள், சில கேள்விகள் - II
17. இதுவும் சரி, அதுவும் சரி - எதுதான் தவறு?
18. Evolution St(he)ory > Harry Potter Stories - VII 
19. தயங்குகின்றார்களாம் ஆசிரியர்கள்...பரிணாமத்தை ஆதரிக்க !!!!!!!!!!! 
20. விஞ்ஞானிகளால் உயிர்பெற்ற பெண்ணடிமைத்தனம்...  
21. டாகின்ஸ் VS வென்டர் - யார் சரி? யார் தவறு?
22. உலக நாத்திகர் மாநாட்டில் முஸ்லிம்கள் விவாதம்...
23. உலகின் 'முதல்' பறவை இறந்தது...bye-bye birdie
24. மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்... 

25. வாட்சின்:ஆச்சர்யங்கள்-மர்மங்கள்-குழப்பங்கள்.

* * *






" சகோதரர் பைசலின் பரிணாமம் குறித்த பதிவுகள் ".
     


* * *



" சகோதரர் ஹைதரின் கம்யூனிசம் குறித்த பதிவுகள். "
     


அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "நாத்திகனுக்குள் உண்மையைத் தேடி..."

Friday, September 23, 2011

நடைமுறை வாழ்வில் நாத்திகத்தின் 'முரண்பாடு'..!


                                       ஓரிறையின் நற்பெயரால்.,
           தம் கொள்கைப்படி வாழ மக்களை பின்பற்ற அழைக்கும் ஒரு மதமோ அல்லது மதம் சாரா இயக்கங்களோ தங்களுக்கென ஒரு கோட்பாட்டை ஒரு வரையறை செய்திருக்க வேண்டியது அவசியம். அக்கோட்பாடு சரியானதா அல்லது தவறானதா என்பது அதுக்குறித்து விவாதிக்க படும்போது அறிந்துக்கொள்ளலாம். 

       ஆனால் கடவுளை ஏற்றுக்கொள்ளாமல் அதை எதிர்க்கும் நாத்திகம் என்ற ஒரு கொள்கை(?) கடவுள் மறுப்பு அல்லது எதிர்ப்பு என்ற பிரதான ஒரு காரணத்தை மட்டுமே முன்னிருத்தி இச்சமுகத்தில் தன்னை ஒரு இயக்கமாக நிறுவ முயல்கிறது, கம்யூனிஷ மற்றும் திராவிட இயக்க சாயல் இவற்றில் இருந்தாலும் உலகம் தழுவிய அளவில் ஒரே கொள்கை கோட்பாடுகளை கொண்ட ஒரு பேரியக்கமாக நாத்திகம் இல்லை., கொள்கைரீதியில் தனக்கென வரையறை கொள்ளாவிட்டாலும் வாழ்வியல் முறையிலாவது தனக்கென தனிச்சட்டங்கள் ஏற்படுத்தி இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.,  

        மதங்கள் முன்னிறுத்தும் சடங்கு சம்பிரதாயங்கள் போலியானது என புறந்தள்ளி வாழ்க்கைக்கும் வாதத்திற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் எந்த ஒரு செய்கையும் நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்துபவர்களே நாத்திகர்கள் என இச்சமுகத்தில் அவர்களுக்கு ஒரு குறீயிடு உண்டு. ஆனால் எதை மதங்கள் மேற்கொள்வதாக விமர்சித்து அதை விடுத்தார்களோ அத்தகைய செயலை பகுத்தறிவு போர்வையில் தமது அன்றாட நடைமுறை வாழ்வில் அவர்கள் மேற்கொள்வது தான் அபத்தமானது... ஏன் அறிவுக்கு பொருந்தாததும் கூட., அவற்றில் ஓரிரண்டு குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

 வணக்கம்???
    பொதுவாக மதங்களின் அடிப்படை கொள்கை "இறையை வணங்குதல்" ஆகும். ஆக வணங்குதல் அவசியமற்ற ஒன்று என்று அசெய்கையே எதிர்க்கும் நாத்திகர்கள்., அச்செயலுக்கு சொல் வடிவம் கொடுத்து ஏற்பது தான் நடை முறை வாழ்க்கையில் நாத்திகம் கொள்ளும் நூறு சதவீகித தெளிவான முரண்பாடு.

         இஸ்லாம் தவிர்த்த ஏனைய மதங்களை பின்பற்றுவோர் சர்வசாதாரணமாக ஒருவரை ஒருவர் சந்திக்கின்ற போது பெரும்பாலும் "வணக்கம்" என்ற வார்த்தையையே உபயோகப்படுத்துகிறார்கள். இது அறிமுகப்படுத்தும்போது வாழ்த்துச்செய்தியாக கொண்டாலும் இது இறைவனுக்கு மட்டுமே உரித்தாக வேண்டிய ஒரு செயல் வடிவ வார்த்தை.

   சரி மதங்களை பின்பற்றோர் தான் தவறாக இறைவனுக்கு மட்டுமே கொடுக்கவேண்டிய கண்ணியத்தை சக மனிதர்கள் மத்தியில் சொல்கிறார்களென்றால் பகுத்தறிவில் செயல்படும் நாத்திகர்களும் அதே வார்த்தையே சொல்வது தான் ஏற்றுக்கொள்ள முடியாதது.

        ஏனெனில் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொள்ளும் போது உங்கள் மீது அமைதியும் சமாதானமும் நிலவட்டும் என்று சொல்வதே ஏற்புடைய வார்த்தையாக இருக்கும் ஏனெனில் எந்த ஒரு மனிதருக்கும் அமைதி மற்றும் சமாதானம் என்பது எல்லா காலங்களிலும் தேவையான ஒன்று. மேலும் இவ்வாக்கியத்தை ஒருவரை சந்திக்கும் எல்லா தருணங்களிலும் உபயோகப்படுத்தலாம். ஆக மேற்கண்ட வரிகளே மனித அறிமுக பொழுதுகளில் சொல்வது ஏற்புடையதும் பிறிதொருவர் மேல் கொண்ட அக்கறைக்கு உரித்தான வார்த்தையாக இருக்கும்.,

  எனினும் அவ்வார்த்தை ஒரு மார்க்க/ மத ரீதியான அடையாளத்தை ஏற்படுத்தும் என குறை சொன்னாலும் பரவாயில்லை., உடன்பாட்டு முறையில் அதை ஏற்றுக்கொள்வோம்., மேற்கண்ட வார்த்தைகள் சொல்வது வேண்டாம் என்ற போதிலும் குறைந்த பட்சம் நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? என்று கேட்பதே ஏற்புடைய வார்த்தையாகும்.

             வணக்கம் என்ற வார்த்தையின் விளக்கம் குறித்து சற்று ஆராய்ந்தால் இவ்வார்த்தை தமிழ் மொழியில் இருவேறு அர்த்ததில் கையாளப்படவில்லை., மேலும் இதற்கு வேறு மறைமுக பொருளும் இல்லை., இவ்வார்த்தை வணங்குதல் அல்லது வணங்கப்படுதலை மட்டுமே மையப்படுத்திய ஒரு  இணைப்பு வார்த்தையாகும்-  தமிழ் பொருளகராதியில் இவ்வார்த்தையின் பொருள் குறித்து பார்த்தாலும் வணக்கம் என்ற தனிச்சொல்லுக்கு எந்தவித அர்த்தமும் கிடையாது வேறு வினை/பெயர்ச்சொல்லுடன் சேரும் போதே பொருள்கொள்ளப்படுகிறது. உதாரணமாக வணக்கம் தெரிவிக்கிறேன்., உன்னையே வணங்குகிறேன்.. இப்படி.,

    ஆக எதிரில் நிற்கும் ஒருவரை சுட்டி "வணக்கம் என்ற சொல்லை உபயோகித்தால் அச்சொல் அர்த்தம் பெற்று அவர் வணக்கத்திற்குரியவராக பொருள்படும். எதையும் அறிவுரீதியாக அணுகி சம்பிரதாயங்களை மறுக்கும் நாத்திகம், அடிபணிதலுக்குறிய பிரத்தியேகமான சொல்லாடல் வார்த்தையை பயன்படுத்துவது ஏன்? அதுவும் அவர்களின் அடிப்படைக்கு கூற்றுக்கு எதிராக அவ்வார்த்தை இருந்தும்..?

   இல்லை...இல்லை வணக்கம் என்ற வார்த்தையை வணங்குதல் என்ற பொருளில் பயன்படுத்த வில்லை மாறாக ஒருவரின் அறிமுக துவக்கத்தில் வெறும் வழக்கு சொல்லாக தான் பயன்படுத்துகிறோம் என்றால்., மேற்குறிப்பிட்ட அற்புத முகமனோடு அனேக வார்த்தைகள் அழகிய தமிழில் அணிவத்திருக்க வெறுமனே வாய் உச்சரிப்பிற்காக பொருளற்ற வெற்று வார்த்தையே பயன்படுத்த வேண்டிய அவசியமென்னே?



அடுத்து, பிறந்த நாள் கொண்டாட்டம்.

      மதம் தவிர்த்தும் ஏனைய இயக்கம் சாந்தவர்களாலும் பிறந்த நாள் கொண்டாடுவதை நாம் அன்றாடம் வாழ்வில் பார்த்து தான் வருகிறோம்., அதிலும் இறந்த தலைவர்களுக்கு மாலை அணிவித்து அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் வழக்கம் தேவையா இல்லையா என்பதை விட முதலில் அது அறிவுக்கு பொருத்தமானதா...?
(( இங்கு எல்லோரையும் குறித்து பேசவில்லை, பகுத்தறிவு பேசும் நாத்திகர்களை குறித்தே ))

      ஏனெனில் ஒருவர் இறந்தவுடனேயே அவரது வாழ் நாள் வரையறுக்கப்பட்டு அவரது ஆயூட்காலமும் கணக்கிடப்பட்டு அவரது செய்கைகள் முடிவுறுகின்றன. அப்படியிருக்கும் போது இறந்த மனிதர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவதென்பது எப்படி சாத்தியமாகும்..? வருடா வருடம் பிறந்த நாள் என்ற பெயரில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் சடங்கு தமிழகத்தில் திராவிட கழக பெயரில் நாத்திகர்கள் நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

   உயிருள்ளவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவது தேவையில்லையென்ற போதிலும் அது அவர்களுக்கு மன மகிழ்ச்சியளிக்கும் என்ற விதத்திலாவது அச்செய்கையை நியாயப்படுத்தலாம்., ஆனால் இறந்தவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவதற்கு பெயர் தானா.. பகுத்தறிவு???

      இச்செயலை நியாயப்படுத்த, நாங்கள் பெரியார் புரிந்த சேவைக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கும் முகமே அவர் சிலைக்கு மாலை அணிவிக்கிறோம் என சமாதானம் சொல்கின்றனர்., ஆனால் ஒரு மனிதர் மேற்கொண்ட சேவைக்கு கொடுக்கும் கண்ணியத்தின் வழிமுறை அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவிப்பதிலா இருக்கிறது..? அதுவும் எதை வணங்கும் பொருளாக ஆக்க வேண்டாம் என்று மறுத்தாரோ அத்தகைய கல்லிலே அவரை வடித்து மரியாதை எனும் பெயரில் வருடத்திற்கு ஒரு முறை மாலை அணிவிப்பதை சடங்காக செய்து வருவதுதான் உச்சக்கட்ட கொடுமை.,

     ஆக இறந்த ஒருவரை கண்ணியப்படுத்துதல் என்பது அவரது எண்ணத்தை பூர்த்தி செய்வது , அல்லது அவரது சொல்லுக்கு செயல்வடிவம் கொடுப்பதில் இருக்கிறது., இன்னும் அதிகப்பட்சமாக அவர் பெயரில் பொது மக்களின் நலத்திற்கு தேவையானவற்றை ஏற்படுத்துவது மற்றும் உருவாக்குவது அவர் கொணர்ந்த கொள்கைக்கு மதிப்பு கொடுக்கும் விதமாக அமையும். மாறாக "மாலை அணிவிப்பதில் மாற்றமடைய போவதில்லை மரித்தவரின் மரியாதை.!"
   
          இச்செயலை நாடு தழுவிய அளவில் உள்ள அனைத்து நாத்திகர்களும் செய்யவில்லை மாறாக சில "இயக்க தோழர்கள்" மட்டுமே செய்வதாக சொன்னாலும் .இஃது அறிவுக்கு பொருந்தாத இச்செயலை ஏன் ஏனைய நாத்திகர்கள் எதிர்க்கவில்லை... குறைந்த பட்சம் விமர்சிக்கக்கூட வில்லை?
 
ஆக,
     1. இறந்தவருக்கு பிறந்த நாள் கொண்டாடுவதும்
     2. ஒருவரை கண்ணியப்படுத்த அவரது உருவப்படத்திற்கு அல்லது சிலைக்கு மாலை அணிவிப்பதும்
  நடைமுறை வாழ்வில் நாத்திகம் சந்திக்கும் இரண்டாவது தெளிவான முரண்பாடு.  

எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே!
-தந்தைபெரியார் - "விடுதலை" 15-2-1973
(This quote taken from tamil oviya blogspot)

அதுப்போல,
பெரியாரின் போதனைகளை பின்பற்றுவோரை குறித்து இங்கு நான் விமர்சிக்க வில்லை மாறாக அவரது பெயரை வைத்து பகுத்தறிவுக்கு பொருத்தமில்லாத செய்கைகளின் ஈடுபடும் நாத்திகர்களை குறித்தே இங்கு விமர்சனம்.!


சார்ட்டா சொல்லணும்னா...
   மதங்களின் போலி சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை மறுக்கும் நாத்திகர்கள் அதே, மதம் சார்ந்த நபர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏன்? அதுவும் பகுத்தறிவிற்கு பொருத்தமில்லாத வகையில் இருந்தும் கூட???


இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும் - இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை. (39:23)
                                                                             அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

read more "நடைமுறை வாழ்வில் நாத்திகத்தின் 'முரண்பாடு'..!"

Wednesday, July 20, 2011

பகுத்தறிவாளர்களின் கடவுள்..!

                                    ஓரிறையின் நற்பெயரால்.,
                 தான் (மட்டும்) ஏற்கும் அல்லது மறுக்கும் நம்பிக்கை சார்ந்த ஒரு விசயத்தை அறிவு ரீதியாக பிறருக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை. அத்தகைய நிகழ்வை பிறர் விரும்பினால் உண்மையென ஏற்கவும் அல்லது பொய்யென மறுக்கவும் செய்யலாம்.,


         "கடவுள்" - என்ற நிலையை இஸ்லாம் அல்லாத மற்ற மதங்கள் யாவும் மேற்கண்ட நிலைப்பாட்டிலேயே வைத்து காண்கிறது.,ஆகவேதான் கடவுள் குறித்த விமர்சனங்களுக்கு அங்கு பதில் தருவதில்லை என்பதைவிட பதில் இல்லையென அறிந்து கடவுள் மறுப்புக்கு பலர் ஆளாகின்றனர். ஆக கடவுள் மறுப்புக்கு இஸ்லாம் அல்லாத ஏனைய மதங்களின் தவறான கடவுள் சார்ந்த கோட்பாடே பிரதான காரணம் என்றால் அது மிகையாகாது.ஆக இஸ்லாம் கூறும் கடவுள் குறித்த வரைவிலக்கணம் பகுத்தறிவிற்கு பொருத்தமானதா? என்பதை பார்க்கும் முன் கடவுளை மறுக்கும் நாத்திக சிந்தனை பகுத்தறிவிற்கு உகந்ததா... பார்ப்போம்.


  நாத்திகம் -
        பொதுவாக ஒருவரின் நாத்திக சிந்தனைக்கு அடிப்படைக்காரணம் தேடுதலில் விருப்பங்கொண்ட அவரின் சுய அறிவு. அது பாராட்டத்தக்கதே..! எனினும்., அவ்வறிவால் தம்மை சுற்றி நடைபெறும் கடவுள் பெயரால் அரங்கேறும் போலி வழிபாடுகளும், அனாச்சாரங்களும், அறிவிற்கு பொருந்தாத மூட பழக்க வழக்கங்களும், மிக முக்கியமாக கடவுள் பெயரால் நடைபெறும் சமூக புறக்கணிப்பும் தான் ஒருவரது கடவுள் மறுப்புகொள்கைக்கு மிக முக்கிய காரணியாகிறது.. இன்னும் சற்று ஆழமாக அதன் வெளிபாட்டை இஸ்லாத்திலும் காண்பிக்க குர்-ஆன் மற்றும் ஹதிஸ்களுக்கு தவறான புரிதலோடு தங்களின் சுய விளக்கத்தை அளித்து கடவுள் மறுப்புக்கு மேலும் மெருகேற்றுகிறார்கள் எனினும் அதற்கு நமது (இணைய) சகோதரங்கள் பலரால் தெளிவாக மறுப்பும் விளக்கமும் தரப்படுகிறது அல்ஹம்துலில்லாஹ்..!


       இங்கு கவனிக்கத்தக்க ஒரு விசயம் .. கடவுளை மறுக்க கடவுள் பெயரால் ஏற்படும் தவறுகளை முன்னிருத்தி மட்டுமே கடவுள் மறுப்புக்கு சான்று தரப்படுகிறது. மாறாக நேரடியாக கடவுள் இல்லையென மறுக்க தெளிவான காரணம் இல்லை.,


   "பரிணாமம்" அறிவியல் ரீதியாக கடவுள் மறுப்புக்கு மாபெரும் ஆயுதமாக கொண்டாலும் அஃது அதுவும் பயனற்று தான் போகும். ஏனெனில் இதுவரை நிகழ்வுற்ற பரிணாம கோட்பாடுகளை ஒருவேளை உண்மையென நம்பினாலும் (?) கூட "ஏற்பட்ட உயிரின மாற்றத்தை பற்றித்தான் பரிணாமம் பேசுகிறதே தவிர அஃது உயிரினங்கள் ஏன் மாற்றமடைந்தன என்பதற்கு தகுந்த சான்றின்றி இன்னும் கேள்விக்குறியோடு தான் ஆய்வை தொடர்வதாக அறிவியலார் பதில் தருகின்றனர்.


        ஆக அறிவியல் ரீதியான கடவுளை மறுக்க பரிணாமம் துணைக்கு வராது., சுருங்கக்கூறினால் "எதுவுமல்லாத சூன்யத்திலுருந்து ஒரு உயிரை அறிவியலார் உண்டாக்கினால் மட்டுமே விஞ்ஞானத்தால் கடவுள் இல்லை என்பதை ஆணித்தரமாக மறுக்க முடியும். அதுவரை கடவுளை மறுக்க தர்க்கரீதியான வழிகளை தான் தேட வேண்டும். எனினும் பகுத்தறிவு பார்வையில் அதுவும் சாத்தியமா என்றால்... இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..


 எந்த ஒன்றை மறுப்பதும், ஏற்பதும் அவரவர் உரிமை., அதே நேரத்தில் பொதுவில் அறுதியிட்டு கூறும் தம் வாதத்தை மெய்பிப்பதாக இருந்தால் அதற்கான சான்றுகளை தருவது அவரது கடமையாகும்., இதுவே ஒரு செயல், ஒரு தன்மை அல்லது ஒரு நிகழ்வை உண்மைப்படுத்தலின் வரைவிலக்கணம் ஆகும்.


     இதனடிப்படையில் கடவுள் குறித்த நிகழ்வை பொதுவில் நிறுத்தி ஏற்பதாக இருந்தாலும் அல்லது மறுப்பதாக இருந்தாலும் அதற்கான வரைவிலக்கணம் தெளிவாக முன்னிருத்தப்பட வேண்டும். அஃதில்லாமல் கூறும் வாதங்கள் நம்பிக்கை சார்ந்த அளவில் மட்டுமே பார்க்கப்படும். இந்நேரத்தில் கடவுள் குறித்த வரைவிலக்கணம் குறித்துப்பார்க்கும்போது சகோ ஜாகிர் நாயக் அவர்களின் அழகிய எளிய உதாரணத்தையும் இங்கு குறிப்பிடுவது அவசியம் என நினைக்கிறேன்.,


    என் கையில் ஒரு பேனாவை வைத்துக்கொண்டு இது ஒரு புத்தகம் என்று நான் கூறினால் இதனை மறுப்பதாக இருந்தால் கண்டிப்பாக அவருக்கு பேனாவை பற்றி அறிந்திருக்க வேண்டும் அஃது பேனாவை பற்றி தெரியாவிட்டாலும் புத்தகத்தைப்பற்றி கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.அப்போது தான் நான் கையில் வைத்திருப்பது புத்தகம் இல்லை என கூற இயலும்., என அவர் கூறினார்.,


    மேற்கண்ட கேள்வி எதிர் மறையாக இருப்பதால் விடைக்கான இருப்பொருட்களில் ஒன்றை மட்டும் நாம் அறிந்திருந்தாலே போதுமானது மற்றொரு பொருள் குறித்து அறியாமாலிருந்தாலும் நமது நிலைப்பாட்டை உண்மையாக்கலாம். இப்படிதான் மேற்கண்ட நாத்திக சிந்தனை கடவுளுக்கான கேள்விக்கு எதிர்மறை விளக்கத்தை கையாளுகிறது.


   ஆனால் இதே கேள்வி நேர்மறையாக கேட்கப்பட்டால்..!
             என் கையில் ஒரு பொருளை வைத்து கொண்டு. அதை பிறர் முன்னிலையில் காட்டி இது பேனா என்கிறேன். இதை மறுப்பதாக ஒருவர் இருந்தால் மற்ற எல்லா பொருட்களின் வரைவிலக்கணம் குறித்து தெரிந்திருந்தாலும் அஃது இக்கேள்விக்கு பதில் அவரால் சொல்ல முடியாது. மாறாக பேனாவின் வரைவிலக்கணம் தெரிந்திருந்தால் மட்டுமே உண்மையான பதில் தருவது சாத்தியம். 


     ஆக இந்த உதாரணத்தை மேற்கோளாக கொண்டு கடவுள் குறித்த வரைவிலக்கணத்தோடு ஒப்புநோக்கும் போது கடவுளை ஏற்பதாகவோ அல்லது மறுப்பதாகவோ இருந்தால் அவருக்கு கடவுள் குறித்த வரைவிலக்கணம் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும் அப்போது மட்டுமே இக்கேள்விக்கு உண்மையான பதில் தர இயலும்.


 மிக தெளிவாக - எளிதாக இஸ்லாம் 
  • (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.  (112:1)
  • அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.  (112:2)
  • அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.  (112:3)
  • அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.  (112:4)
         
              இப்படி குர்-ஆனில் கடவுளுக்கு வரைவிலக்கணம் தருகிறது. இவ்வரிகளை நம்பிக்கை என்ற அளவுகோலையும் தாண்டி மனித அறிவு ஏற்றுக்கொள்ளும் வாதமாகவும், அதே நேரத்தில் மனித எண்ணங்களால் வரையறுக்க இயலாத ஓர் உயரிய சக்திக்கு பொருந்தும் படியான முறையான செய்கைகளும் இருப்பதால் மேற்கண்ட வரைவிலக்கணத்தை ஏற்றுக்கொள்வதில் பகுத்தறிவாளர்களுக்கு எந்த வித ஆட்சபனையுமில்லை.,
           
          ஆக கடவுளுக்கான ஓர் உயரிய வரைவிலக்கணத்தை முன்னிருத்த்தி இது உண்மையானது என குர்-ஆன் கூறும் போது அஃது மேற்கண்ட கோட்பாட்டை பொய்யென மறுப்பதாக இருந்தால் அவ்வாறு தாங்கள் மறுக்கும் கடவுளுக்கு உண்மையான வரைவிலக்கணம் நாத்திக சிந்தனையாளர்கள் தர வேண்டும். ஆனால் இன்று வரை தாங்கள் மறுக்கும் கடவுளுக்கு உண்டான வரைவிலக்கணத்தை நாத்திக சிந்தனை தரவே இல்லை. இது ஆச்சரியமான விஷயமும் கூட...


           ஏனெனில் கடவுள் குறித்த நிலைப்பாட்டை ஏனைய மதங்கள் நம்பிக்கைச்சார்ந்த விசயமாக அணுகி கொண்டிருக்க... இஸ்லாம் மட்டுமே எப்படிப்பட்டவர் கடவுளாக இருக்க முடியும் அல்லது இருக்க வேண்டும் என கடவுள் குறித்து ஒரு தெளிவான வரைவிலக்கணம் ஏற்படுத்தி தந்திருக்கிறது எனும்போது எதையும் நம்பிக்கை கடந்து பகுத்தறிவு கண் கொண்டு ஆராயும் நாத்திகம் கடவுள் இல்லை என்பதை நிருபிக்க எப்படிப்பட்டவர் கடவுளாக இருக்கமுடியாது அஃது ஏன் கடவுளாக இருக்க முடியாது என்பதற்கு ஒரு வரைவிலக்கணம் நாத்திகம் உண்டான நாள் முதலே இயற்றி இருக்கவேண்டுமல்லவா..? இதுவரைக்கும் அஃது வரைவிலக்கணம் ஏற்படுத்தாதது மிகப்பெரிய கேள்விக்குறியே..! அஃது இனி ஏற்படுத்த முனைந்தாலும் மதங்கள் வணங்கும் போலி கடவுளர்களை தான் இவர்கள் இனங்காட்ட முடியும்


       அஃது அத்தகைய போலி கடவுளர்களை மறுப்பதற்கு பெயர் தான் நாத்திக சிந்தனையென்றால்... நாங்களும் அத்தகைய போலி கடவுளர்களை இல்லை என்று தான் சொல்வோம்.


       பகுத்தறிவு விதையில் மலர்ந்தது நாத்திகப்பூவென்றால் இனிமேலாவது நாத்திகம் மறுக்கும் கடவுளுக்கு ஒரு வரைவிலக்கணம் தரட்டும். அதுவரை கடவுள் மறுப்பாளர்கள் என தங்களை சொல்ல வேண்டாம் வேண்டுமானால் கடவுள் எதிர்ப்பாளர்கள் என்று- அதுவும் மதங்கள் சமைத்த போலி கடவுள்களின் எதிர்ப்பாளர்கள் என்று தங்களை சமூகங்களில் அடையாளப்படுத்தட்டும்.,. உங்களின் அறிவு சிந்தனைக்கு ஆணவ திரையிட வேண்டாம் என்பதே இப்பதிவின் நோக்கம் நாத்திக சகோதரங்களே...


                                                               அல்லாஹ் மிக்க அறிந்தவன் 
read more "பகுத்தறிவாளர்களின் கடவுள்..!"

Thursday, December 02, 2010

விதி! மாற்றமா -ஏமாற்றமா?

                                                ஓரிறையின் நற்பெயரால்

           அனைத்தும் விதிப்படி தான் நடக்கிறது என்றால் நாம் செய்யும் எந்த ஒரு செயலுக்கும் பொறுப்புதாரி கடவுளே எனவே நாம் செய்யும் தவறும் இறைவனின் விதிப்படி தானே நடக்கிறது பிறகேன் அதற்கான தண்டனையை கடவுள் நமக்கு வழங்க வேண்டும் ..
   நியாயமாக தெரியும் இக்கேள்விக்குள் அனேக சுயநலங்கள் அநியாயமாய் பகுத்தறிவு போர்வை போர்த்திருக்கின்றன.,

இப்னு மாஜா ஹதிஸ் நூலிலிருந்து
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் வாயிலாக
"உங்களுக்கு முன்னால் உள்ள சமுகங்கள் அழிந்தது விதியே குறித்து அதிகம் தர்க்கம் செய்த காரணத்தினாலே....!"


  என்ற மாநபி கூற்றுகிணங்க விதி குறித்து மேலதிக தர்க்கம் செய்யாமல் மாமறை வரிகளுக்கு உட்பட்டு இங்கு காண்போம்.
                                                                                    
     பொதுவாக அனைத்து செயல்களும் இறைவனின் நாட்டப்படித்தான் நடக்கிறதென்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை. இங்கு விதி குறித்த இக்கருத்து அல்லாஹ்வின் பேராற்றலை பிரதிபலிக்கும் வல்லமையின் வெளிபாடாக சொல்லப்படுகிறது அதாவது இப்பூவியில் இருக்கும் எந்த ஒரு உயிரினத்தின் செயல்பாடுகளும் அவன் அறியாமல் நடந்தேறாது.

(நபியே!) நீர் கூறும்; "உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான்;. இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான்;. அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்." 3:29

     எனினும் தர்க்கரீதியாக விதிக்கு கடவுளை காரணம் காட்டி தமது தீய செயலுக்கு நியாயம் கற்பிப்பது பொருத்தமான வாதமா?

     அல்லாஹ் மனித இனத்திற்கு ஏனைய படைப்புகளை போலல்லாமல் எந்த ஒரு செயலையும் சிந்தித்து செயல்படுத்ததும் திறனுடன் படைத்திருக்கிறான். ஆக எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒருவன் தனது சிந்தனைக்கு உட்பட்டு இது தவறு இது சரி என தெளிவாக ஆராய்ந்து முடிவெடுக்க முடியும்.

    இன்று விதியின் மேல் பழிபோடும் ஒரு இறை நிராகரிப்பாளர் இறைவன் நாடியதால் தான் நான் இறை நிராகரிப்பாளான இருக்கிறேன் என்று கூறுவாரேயானால் அது அவர் இறை குறித்து தனது சிந்தனையை ஆராய முற்படாததே தவிர இறைவன் காரணமல்ல.
 
     ஏனெனில் அஃது அவரது வீட்டில் திருட்டோ அல்லது அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டாலோ இதுவும் இறைவன் நாட்டப்படி (விதிப்படி) தான் நடக்கிறது என்று சும்மா உட்கார மாட்டார் அதை தொடர்ந்த ஆயத்த பணிகளை செய்து தான் தீருவார்,  அஃதில்லாமல் தமது வாழ்வாதார  தேவைக்கும், அதிகப்படியான பொருளாதார தேவைக்கும் நாமே முயன்று தேடித்தேடி நல்லவற்றை பெற முயலும் ஒருவர் இறைக்குறித்தும் அவனது போதனை குறித்தும் அறிய முற்படாமல் அவனது நாட்டத்தால் தானே நான் இறைவன் குறித்து அறியாமல் இருக்கிறேன் என்று கூறுவது அறிவுடைய வாதமா?

      இறுதியாக, அனைத்து நிலைகளிலும் இறைவன் தான் மக்களின் அனைத்து காரியங்களுக்கும் முழு முதற் பொறுப்பு என்று கூறி தீமையான செயல்களுக்கு விதி மூல(லா)ம் பூச முற்பட்டால் அதே இறைவன் தான் மனிதர்கள் எல்லா நிலையிலும் நல்லனவற்றை பின்பற்றி வாழ அந்தந்த கால கட்டத்தில் இறைத்தூதர்களை மக்கள் மத்தியில் அனுப்பியும் வைத்தான்.
 
        அவர்களை பின்பற்ற வேண்டியதும் இறைவனின் நாட்டம் தானே அவர்களை பின்பற்ற தவறியது ஏனோ...? நாத்திகம் வளர்க்கும் பகுத்தறிவின் பதில் என்ன?

ஏனெனில் வேத வரிகள் மனித மனங்களைப்பற்றி கூறும் போது


எந்தவொரு சமுதாயத்திற்கும் அல்லாஹ் நேர்வழி காட்டிய பின் அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டியவைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்தும் வரை அவர்களை அவன் வழி கெடுப்பவனாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் அறிந்தவன்.9:115

    முடிவுற்ற ஒரு செயல் நமக்கு பாதகமாக அமைந்தாலோ அல்லது நன்கு முயற்சித்து மேற்கொண்ட ஒரு செயலின் விளைவு தோல்வியில் முடிந்தாலோ அங்கே விதி என்னும் அளவுகோலை அல்லாஹ் பயன்படுத்த சொல்கிறான்.,

     ஏனெனில் அவற்றின் மூலம் நாம் படிப்பினை பெறவும் நம்மை நாமே தாழ்வு மனப்பான்மையில் ஆளாக்கி கொள்ளமாலும் இருக்க செய்வதற்கே; அதுப்போல நாம் ஒரு திறன் மிக்க செயலை மேற்கொண்டு கிடைக்கும் புகழ், பொருள் மூலம் நாம் (அதிகம்) கர்வமடையாமல் இருக்கவுமே எல்லாம் இறை நாட்டம் எனும் விதி அங்கு அவசியமாகிறது.,

உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. -57:23

    ஆக விதி என்பது இறைவன் மேல் முழு நம்பிக்கை கொண்டு நாம் மேற்கொள்ளவேண்டியவைகளை தொடர்ந்து செயலாற்றி தான் வரவேண்டுமென்ற நிலையில் அமைந்ததே  தவிர மாறாக விதிப்படித்தான் எல்லாம் நடக்குமென்று எண்ணி வெறுமனே கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருக்குமாறு எங்கேணும் இறைவன் கூறவில்லை., ஏனெனில்


    ...மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை. 53:39
                        
                                       அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "விதி! மாற்றமா -ஏமாற்றமா?"

Monday, October 11, 2010

யார் கடவுள்...?

                                    ஓரிறையின் நற்பெயரால்

    இன்று உலகத்தில் எத்தனையோ விஷயங்கள் பேசுவதற்கு இருக்க. "கடவுளை குறித்து மட்டும் கட்டுரை வடிக்க காரணம் என்ன? என்ற எண்ணம் சிலருக்கு ஏற்படலாம்.
இஸ்லாத்தை பொருத்தவரை மனிதர்களை இறைவன் படைத்ததே அவனை வணங்குவதற்காக தான்! எனும்போது உலக மானிட படைப்பின் நோக்கம் ஈடேற அவனை வணங்கும் முறையும் அதை விட அவ்வாறு வணங்குவதற்குறியவன் யார் என்பதையும் நினையுட்டவே இங்கு ஒரு சிறிய ஆக்கம்.

   கடவுளை வணங்குவது இருக்கட்டும் அதற்கு முன்பாக அத்தகைய கடவுள் இருப்பது உண்மைதானா? கடவுளை ஏற்பது நமது அறிவுக்கு பொருத்தமானதா? முதலில் பார்ப்போம்.

இயற்கையா? இறைவனா?


     இன்று கடவுளை மறுப்போர், உலக தோன்றங்கள் குறித்தும் இப்பிரபஞ்ச உருவாக்கம் குறித்தும் கூறும்போது மிக தெளிவாக அறிவியல் ரீதியாக காரணங்கள் கொண்டு விளக்கி கூறுகின்றனர்.எனினும் இத்தகைய இப்பிரபஞ்ச உருவாக்கம் குறித்து பதில் அறிவு பூர்வமாக கூறினாலும் "அஃது ஏன் உலகம் உண்டாக வேண்டும்?" என்ற கேள்விக்கு எந்த பதிலும் அறிவு பூர்வமாக இதுவரை இல்லை.

     அதுப்போலவே ஏனைய கோள்களும், சூரியன், சந்திரன்,நட்சத்திர கூட்டங்கள், ஆகியவை உண்டான முறை குறித்தும் அவைகள் தற்போது வரை செயல்படும் நிலை குறித்தும் இனி அவைகளுக்கு ஏற்படும் மாற்றம் குறித்தும் மிக துல்லியமாக தகவல்கள் தந்த போதிலும் சூரியனும் சந்திர பூமி இயக்கமும் ஏனைய கோள்களும் தத்தமது பாதையில் மிக நேர்த்தியாக செயல்பட எந்த மூலங்கள் அதற்கு அடிப்படை? என்ற கேள்விக்கும் விடையில்லை.

   சுருக்கமாக கூறினால் நடைபெறும் அனைத்து வித செயல்களும் அறிவியல் ரீதியாக சொல்ல முடிந்த கடவுளி மறுக்கும் விஞ்ஞானம் அத்தகைய பால்வெளியில் நடைபெறும் நிலையான மற்றும் சமச்சீரான இயக்கத்தை எது அவைகளுக்கு கற்று தந்தது?
  
   இந்த வினாவிற்கு விடை கூறவேண்டும் எனபதற்காக ஒரு பதில் முன்னிறுத்தி சொல்லப்பட்டது தான் "இயற்கை" அதாவது மேற்கண்ட நிகழ்வுகள் உருவாக்க மூலம் இயற்கையாக அதாவது "தற்செயலாக" -எதிர்பாராத விதமாக ஏற்பட்டது என்கின்றனர்.

இது கடவுள் படைத்தார் என்பதற்கு மாற்றமாக சொல்ல வேண்டுமென்பதற்காக கூறப்பட்ட வாதமே தவிர அறிவு பூர்வமானவாதமல்ல.
   ஏனெனில் தற்செயல் என்பது எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல், யாதொரு திட்டமிடலும் இல்லாமல் நிகழும் ஒரு செயலாகும்.

   இச்செயலின் மூலம் அந்நிகழ்வு மிக நேர்த்தியாக இருப்பதற்கு நூறில் ஒரு பங்கே வாய்ப்புள்ளது.அதுவும் ஆயிரத்தில் ஒரு முறை மட்டுமே அத்தகைய சமச்சீர் ஒழுங்குமுறை சாத்தியம். அதன் அடிப்படையில் தற்செயல் அல்லது எதிர்பாராவிதமாகவே இப்பிரபஞ்ச உருவாக்கம் ஏற்பட்டது என ஏற்றுக்கொண்டாலும் அதை தொடர்ந்த நிகழ்வுகள் அதாவது சூரியன், சந்திரன் மற்றும் ஏனைய கோள்கள் மிக நேர்த்தியாக தத்தமது நீள்வட்ட பாதையில் சொல்லிவைத்ததுப்போல சிறிதும் ஒழுங்கினமின்றி சுழல்கின்றதே இது எப்படி தற்செயலால் சாத்தியமாகும்.

    ஏனெனில் தற்செயல் ஏற்படுத்தும் விளைவுகள் பெரும்பாலும் ஒரு சமச்சீரற்ற நிலையே உருவாக்கும். அஃது ஒரு முறை நேர்த்தியாக தற்செயல் விளைவகளை வெளிப்படுத்தினாலும் தொடர்ந்து மிக தெளிவான ஒழுங்கான விளைவுகளை தரமுடியாது., அஃது அவ்வாறு தந்தால் அதற்கு பெயர் தற்செயல் அல்ல! முன்கூட்டியே திட்டமிட்ட ஒரு செயல்.

  ஆக! மேற்குறிப்பிட்ட பால்வெளி நிகழ்வுகள் அனைத்தையும் ஆராயும் எந்த ஒரு சாரசரி அறிவுள்ளவனும் அதன் இயக்கம் ஏதோ திடீரென்று எதுவென்ற தெரியாத ஒரு நிலையோ அல்லது "தற்செயல்" மூலத்திலோ ஏற்பட்டதன்று. மாறாக முன்கூட்டியே அதன் விளைவுகளை நன்கு ஆராய்ந்து தீர்க்கமாக முடிவெடுக்கப்பட்ட ஒரு புத்திசாலித்தனத்தால் தான் உருவாக்க முடியும் என்பதை உணர்ந்துக்கொள்வான்.

  எனவே தற்செயல் என்பது புத்திசாலித்தனம் ஆகாது!அஃது புத்திசாலித்தனமாக செயல்படுவதாக இருந்தால் அது எப்படி தற்செயலாகும்? எனவே இத்தகைய புத்திசாலித்தனம் நமது அறிவுக்கும் பொருந்தக்கூடிய நிலையிலேயே இருக்கிறது.மேலும் அந்த புத்திசாலித்தனத்தை இதுவரையிலும் நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் முடியவே இல்லை.

  ஆக அறிவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஐம்புலன்களுக்கும் ஆட்கொள்ளப்படாத அந்த ஒரு சக்தியே "கடவுள்" என ஏற்றுக்கொள்வதில் என்ன தடை இருக்கிறது?



யார் கடவுள்?

    சரி., கடவுள் இருப்பதாக ஏற்றுக்கொள்கிறோம். எத்தனை கடவுள்? ஒருவரா? பலரா? அல்லது ஒருவர் தான் என்றால் எந்த கடவுள் உண்மையானவர்? இது கடவுளை ஏற்போர்களும் சிந்திக்கவேண்டிய கேள்வி., நீங்களோ நானோ பிறந்த மதத்தின் அடிப்படையில் கடவுளை பின்பற்றினால் போதுமென்றிருந்தால் "கடவுள்' நமக்கு பகுத்தறிவு என்ற ஒரு அறிவை வழங்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.

  பிறப்போர் உண்மையான கடவுள் யார் என அறியவும் அஃது அதிலே இருப்போர் உண்மையான கடவுள் வழி அறிந்து நடந்திடவுமே நமக்கு ஏனைய உயிரினத்திற்கு தரப்படாத ஒரு சிறப்பம்சத்தை தந்திருக்கிறான். ஆக கடவுள் என்று சொல்லக்கூடியவர் எப்படி இருக்கவேண்டும் என்பதை முதலில் தேர்வு செய்யுங்கள் அந்த நிலைக்கு ஒருவர் இருந்தால் அவர் தான் உலகின் கடவுள் ஒரே கடவுள்.
  • கடவுள் என்று சொல்லக்கூடியவர் தான் தோன்றியாக இருக்க வேண்டும். அவருக்கு தகப்பனோ,மகனோ வம்சாவழிகளோ இருக்கக்கூடாது.
  • அவர் இணை துணை இல்லாதவராக இருக்கவேண்டும், மனைவி மக்கள் இல்லாதவராக இருக்கவேண்டும்.
  • எந்த ஒரு உயிரினத்திடமிருந்தும் எந்தவித தேவையும் அற்றவராக இருக்கவேண்டும்.
  • மனிதர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டவராக; கட்டுப்பாட்டிற்குள் அகப்படாதவராக இருக்கவேண்டும்.
  • மனித மற்றும் ஏனைய உயிரினங்களின் பலகினங்களை தன்னுள் கொண்டவராக இருக்கக்கூடாது
  • அவரை பற்றிய வரையறைகள் முழுதாக மற்றும் தெளிவாக நமக்கு விளக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • மனித சமுதாய முழுவதற்கும் கடவுளை ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் "அத்தாட்சிகள் கடவுள் புறத்திலிருந்து" அந்தந்த சமுகத்திற்கு வழங்கப்பட்டிருக்கவேண்டும்.
  • எக்காலத்திற்கும் பின்பற்றத்தகுந்த செயல்முறைகள் உலகம் அழியும் வரையிலும் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கவேண்டும்
  • நன்மைகள் புரிந்தால் பரிசும், தீமைகள் புரிந்தால் தண்டனையும் அளிக்கவேண்டும் அதுவும் மேற்கொள்ள மற்றும் தவிர்க்கவேண்டியவை குறித்த விளக்கங்கள் மற்றும் சட்டமுறைமைகள் எந்த ஒரு தனிமனிதனுக்கும் இலகுவாக வழங்கப்பட்டிருக்கவேண்டும்.
  • மனித நலத்திற்கோ சமுகத்திற்கோ பிரயோஜனமற்ற சடங்குகள் சம்பிரதாயங்கள் ஏற்படுத்தபடாமல் இருக்கவேண்டும்.
  • இறுதியாக, தனி மனித வாழ்வுக்கு ஏதுவான அனைத்து நடைமுறை சாத்தியக்கூறுகளும் அவரால் மனித சமுதாய முழுமைக்கும் தெளிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும்
இதை அடிப்படையாக கொண்டு எவர் இருக்கிறானோ "அவர் தான் கடவுள்"

                                                                அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

read more "யார் கடவுள்...?"

Sunday, September 26, 2010

பதில் தருமா பரிணாமம்..?

                                                                        ஓரிறையின் நற்பெயரால்

   மனிதன் படைப்புருவாக்கத்தை குறித்து பல்வேறு இணையங்களில் அவ்வபோது விவாதங்கள் நடைப்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. 
   எனினும் பரிணாமம் மூலம்தான் மனிதன் உட்பட ஏனைய அனைத்து உயிர்களும் தோன்றின என வாதிடும் நண்பர்கள் அவர்களுக்கு (பரிணாமத்திற்கு) எதிராக கேள்விகள் கேட்கப்படும்போது ஒரு நிலை தாண்டி அக்கேள்விக்கு பதிலாக கடவுளை முன்னிருத்தி பேசுபொருளை திசை திருப்புகின்றனர்.

   அத்தோடு முடிந்து விடுகிறது அதற்கு பிறகு அவர்கள் அடுத்த ஆக்கம் வரை தலை காட்டுவதில்லை.ஏனைய ஆக்கங்களிலும் இதே நிலைதான்...


பரிணாமம் குறித்து எளிய இலக்கணம்:
  
சூழ்நிலைக்குத் தகுந்தவாறு ஒரு உயிரினம் தன்னை தகவமைத்துக்கொள்வதே பரிணாமம். என்பதே "பரிணாமம்" குறித்த எளிய முன்னுரை

    அதாவது எந்த ஒரு உயிரினமும் தாம் இருக்கின்ற சூழலுக்கேற்றவாறு தன்னை தயார்ப்படுத்தி தன் உணவு,உறைவிடம்,மேலும் தன் சுய தேவை தொடர்பான மூலங்களை செயல்படுத்தி காலப்போக்கில் தன்னையே பிறிதொரு உயிரினமாக தகவமைத்துக் மாற்றிக் கொள்கிறது என்பது ஆகும்.
  
  ஆக எந்த ஒரு உயிரினமும் சங்கிலிதொடர் முறையிலேயே ஏனைய காலகட்டத்தில் பிறிதொரு உயிரினமாக மாறுகிறது (அவ்வாறு ஏற்படும் தன்னிலை மாற்றத்திற்கு நீண்ட காலங்கள் ஆகும் என்பதையும் உடன்பாட்டு அடிப்படையில் ஏற்றுக்கொள்வோம்) அதன் அடிப்படையில் நமக்கு இந்த உயிரின மாற்றம் தொடர்பாக இயல்பாக சில கேள்விகள் பிறக்கிறது., 
  
  •  முதன்முதலில் ஒரு செல் உயிரி மூலம் தான் உலக உயிரினங்களின் வளர்ச்சி ஏற்பட்டதென்றால் எந்த உயிரன மூலத்தின் தொடர்ச்சியாக தாவரங்கள் உருவாயிற்று. அந்த உயிரி தாவரமாக உருமாற்றமடைய கால சூழ்நிலை அவசியமென்ன?

  •        முள்ளம் பன்றிகள் பெற்றிருக்கும் தன் உடலில் முட்களை பரிணாம ரீதியாக எந்த உயிரின மூலத்திலிருந்து பெற்றது?அது வாழும் கால சூழலில் தன்னை பிற உயிரினங்களிருந்து காத்துக்கொள்வதற்காக அஃது உருவானதாக கொண்டால,அந்த இன்றியமையாத பயன்பாடு அவ்வுயிரினம் மூலமாக ஏனைய விலங்குகளுக்கு தொடராதது ஏன்?

  • அதுப்போலவே பச்சோந்தி என சொல்லப்படும் ஓணான் போன்ற ஒருவகை உயிரினம் தேவைகேற்ப தன் தோலின் நிறத்தை மாற்றும் பண்பை எந்த பரிணாக அடிப்படையில் பெற்றுக் கொண்டது? பாதுகாப்பின் அடிப்படையில் தான் அஃது மாற்றமடைவதாக கொள்ளும்போது அதன் இந்த தேவையை ஓணான் போன்ற அதன் கிளை உயிரினம் பெறாதது ஏன்? -இந்த இரண்டு உயிரினமும் வெவ்வேறு கால கட்டங்களில்,கால சூழலில், மாறுப்பட்ட எதிரின விலங்குகளோடு வாழ்பவையல்ல.இரண்டும் ஒன்றாக அதுவும் நம் கண்ணெதிரே உலா வரும் உயிரினங்களே.ஆக சம காலத்தில் வாழும் ஒரே வகையில் இருக்கும் இரு உயிரினங்கள் வெவ்வேறு நிலைகளில் இருப்பது ஏன்? அல்லது இரண்டும் வெவ்வேறு திணை,தொகுதி,வகுப்பு,வரிசை, துணைவரிசை, குடும்பம் கொண்டதாக இருந்தாலும் பச்சோந்தியின் சிறப்பு பண்பை ஓணான் பெறாதது ஏன்?

  •  ஆமைகளுக்கு அதன் பாதுகாப்பு அவசியம் கருதி மேல்புறமாக இருக்கும் ஓடு எந்த உயிரின மூலத்திலிருந்து எந்த சமயத்தில் பெற்றது?

  • தேனீக்கள் தனது அபார சக்தியால் தனது (வீட்டை) கூட்டை அறுங்கோண வடிவில் அதுவும் சற்றும் கோணாலாக இல்லாமல், கணித ரீதியாக அறுகோண வடிவம் என்பது அதிக எடையைத் தாங்கும் அமைப்பாகும்-இதனை எந்த பரிணாம நிலையின் போது பெற்றது?

  • மேலும் தன் தேவைகேற்ப தேனெடுக்கப் போகும்போது தேன் இல்லாத பூக்களை விடுத்து அதிக தேனுள்ள பூக்களை மிக எளிதாக ,லாவகமாக அவற்றால் எப்படி கண்டறிய முடிகிறது? பகுத்தறிவின் மொத்த உலகமாக வர்ணிக்கப்படும் மனிதனால் அத்தகையே தேனீக்களின் சாதரண செயல்களை செயல் படுத்த முடியாதது ஏன்?

  • ஒரு நல்ல திடமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் தேனீக்கள் வரை இருக்கும். இத்தகைய பிரம்மாண்டமான எண்ணிக்கையில் இருப்பினும் கூட இவற்றிற்கிடையே எந்த விதமான நிர்வாகக் கோளாறுகளோ அல்லது குளறுபடிகளோ வருவதில்லை.-இந்த நிர்வாக திறனை எந்த கட்டத்தில் பெற்றது,அதன் பின் அதன் மூலம் உண்டான(?) ஏனைய உயிரினங்களுக்கு வீடுகட்டும் ஒழுங்குமுறையும்,திறம்பட செய்ய வேண்டிய நிர்வாக திறனும் தேனீக்கள் போன்று இல்லாமல் போனது ஏன்?

  • ஒரு நல்ல கூட்டின் சுற்றளவு 3 மீட்டர் வரை கூட இருக்கும். இவற்றின் கூடு அதிகமான தேனீக்களின் எண்ணிக்கையினால் ஏற்படும் அதிக படியான எடையால் விழுந்து விடாமல் இருப்பதற்காக வேலைக்கார தேனீக்கள் மரங்களின் பிசினைக் கொண்டு, அவற்றில் சில நொதியங்களைச் சேர்த்து புரொபோலிஸ் என்னும் பிசின் போன்ற பொருளைக் கொண்டு உறுதியாக ஒட்டப்படுகின்றது.-தனது கூடு அதிகப்படியான எடையால் விழுந்துவிடாமல் இருக்க இந்த பாதுகாப்பான முன்னேற்பாடு அவ்வுயிர்களுக்கு எப்படி தெரிந்தது?அல்லது கால சூழலுக்கு தகுந்தவாறே தனது நிலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது எனக் கொண்டால் இந்த வகையில் அமைந்த கூடு கட்டுமானத்திற்கு முன்பாக அதன் கூடுகள் எத்தனை முறை விழுந்துள்ளது அல்லது விழும் என்ற முன்னேச்சரிக்கை உணர்வு அதற்கு எப்படி தெரியும்? 

  • வண்ணத்துப்பூச்சிகள்- அதன் இறக்கைகள் பல்வேறு நிறங்களில் அமைந்திருக்க பரிணாம அடிப்படையில் என்ன காரணம்? ஏனெனில் பரிணாம அடிப்படையில் அதன் இறக்கையின் நிறங்கள் என்பது தேவையில்லாத ஓன்று. பச்சோந்திகள் போல தனது பாதுக்காப்புக்காக வண்ணத்துப்பூச்சிகள் தனது நிறங்களை பயன்படுத்துவதில்லை. சூழ்நிலைக்குத் தகுந்தவாறு ஒரு உயிரினம் தன்னை தகவமைத்துக்கொள்வதே பரிணாமம்- எனும்போது எந்த சூழ் நிலையிலும் தனது இறக்கையின் வண்ணத்திற்கு மூலமான தேவைகளுக்கு அப்பூச்சிகளுக்கு அவசியமே ஏற்படவில்லை.அப்படி வர்ண தேவைகள் அவசியமென்றால் பரிணாம அறிவியலில் அதற்கான ஆதாரம்?

  • அதுவும் அவைகளில் 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு உள்ளினங்கள் உள்ளன அதுவும் வெவ்வேறான வர்ண மூலத்துடன்-? வர்ணங்கள் அழகுக்காவே என்றாலும் (அதுதான் உண்மையும்) கூட எந்த நிலையிலும் ஒரு உயிரினம் தனக்கான அழகை தேர்ந்தெடுக்க முடியாது.அப்படி தானே தேர்ந்தெடுப்பதாக இருந்தால் இன்றளவும் மனிதனால் தன் அழகை தானே தெரிவு செய்ய முடிவதில்லை ஏன்?

  • சிறுத்தைகளுக்கு அதி வேகமான ஓட்டம் இரைப்பிடிப்பிற்காக தன் சுய தேவையின் அடிப்படையில் காலப்போக்கில் ஏற்பட்டதாக இருக்கலாம். ஆனால் தம் உடம்பில் உண்டான(இருக்கும்) கோண வடிவ வர்ண தோற்றத்திற்கு என்ன காரணம்?அதுப்போலவே வரிக்குதிரைக்கும்,ஓட்டகசிவிங்கிகளுக்கும், மான்களுக்கும், புலிகளுக்கும் -தம் உடம்புகளில் இருக்கும் பிரத்தியேக வண்ண அமைப்புகளுக்கு எந்த சூழல் அந்த மாற்றங்களை அவைகளுக்கு ஏற்படுத்தியது?

  • மற்ற பறவைகள் போலல்லாமல் ஆந்தைகளுக்கு மட்டும் மனித முக அமைப்பு இருப்பது ஏன்? அதனை தொடர்ந்த உயிரினங்கள் அத்தகையை இயல்பை பெறாதது ஏன்? 

  • மனிதனை விட 14 மடங்கு அதிகமாக நுகரும் சக்தி கொண்ட பூனைகளுக்கு பார்வையின் மூலம் வண்ணங்களை பிரித்தறிய முடியாமல் நிறக்குருடு தன்மையே பெற்றிருப்பது ஏன்? ஏனெனில் பரிணாமத்தின் மூலம் தன் சுய தேவை அடிப்படையில் தன்னின நிலையில் வளர்ச்சி பெறுவதே சாத்தியம்,ஆனால் இங்கு ஏனைய உயிரினங்களின் நிலைகளை தாங்கி உருவாகும் ஒரு உயிர் அதன் இயல்பை ஒத்து வளர்ச்சி பெற வேண்டும்.ஆனால் இங்கு பூனை என்ற ஒரு விலங்கு ஏனைய உயிரினங்களின் நிலை தாங்கி மெல்ல மெல்ல மாற்றமடையும்போது பார்வை அடிப்படையில் நிறக்குருடு எனும் குறைப்பாட்டை தன்னகத்து கொண்டு உருவாகிறது, இது எதன் அடிப்படையில் சாத்தியம்? அவ்வாறு நிறக்குருடு அடைவதற்கு கால,சூழல் பரிணாம பிண்ணனி என்ன?

  • நண்டு எனும் நீர் வாழ் உயிரினம் எந்த உயிரின தோற்ற வளர்ச்சியின் விளைவாக வித்தியாசமான கூட்டுக்கண்கள் அமைப்பை பெற்றுள்ளது? 

  • சிலந்தி தன் இரைக்காக தனது தன் உடலில் உள்ள சுரப்பிகள் மூலம் வீடு (நூலாம் படை) கட்டுவது தன் சுய தேவை அடிப்படையில் என்பது ஏற்புடையது.ஆனால் அவ்வாறு உருவாக்கிய தம் வீடு மிக மெல்லிய இழையாக இருந்த போதிலும் தான் மட்டும் அந்த சிக்கல் வழியாக இலகுவாக செல்வதற்கும்,அவ்வீட்டின் எடை அச்சிலந்தியின் எடையே விட மிக சொற்பான இருந்தாலும் எடை கணத்தால் ஒடிந்தோ,விழுந்தோ விடாமல் இருக்க எந்த கால சூழலில் அல்லது எந்த பரிமாண வளர்ச்சி கட்டத்தில் எந்த கற்றுக்கொண்டது?

  •  ஏனைய எல்லா உயிரினத்தின் தொடர்பில் கடைசியாய் உலா வரும் மனிதன் ஏனைய உயிரினங்கள் போலலல்லாது தாயிக்கும்.தாரத்திற்கும்,மகளுக்கும் வித்தியாசம் உணர்ந்து அஃது மனைவியோடு மட்டும் வீடு கூடும் அந்த திறமையான ஒழுங்க மாண்பை பெற்றது எப்படி? அஃது அவ்வாறு எந்த காலகட்டத்தில் எந்த பரிணாம் வளர்ச்சியின் மூலம் பெற்றான்? அதுப்போல அவனுக்கு இருக்கும் நாணமும்,வெட்கமும் எந்த உயிரின மூலத்திலிருந்து எத்தகைய பரிணாம கால சூழ் நிலை கற்றுக்கொடுத்து?

              மேலே குறிப்பிட்ட விளக்கத்தின் (வினாவின்) படி உயிரினங்கள் ஒவ்வொன்றும் பொதுவான உயிரினங்களின் தொடர்பு அடிப்படை இயல்புகளில் கூட ஒற்றுமையில்லாமல் அவையாவும் தனக்கென்று தனித்தனி சிறப்பியல்புகளுடனேயே அமைய காண்கிறோம்.
   
    எனவே அத்தகையே தனி இயல்புகள் என்பது பரிணாம மாற்றத்தால் எப்படி ஏற்பட்டது என்பதை விட ,ஏற்பட வாய்ப்பே இல்லை என்பது சிந்தனைக்கு உரிய வாதம்.
    
     இப்படி ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு தனித்தன்மை சிறப்பியல்புகளுடன் அமைய வாழ்வதென்பது இவ்வுயிர்கள் பிரத்தியேகமாக படைப்பாக இருந்தால் மட்டுமே சாத்தியம்.  எனவே இந்நிலைகளை கடவுள் என்ற சக்தியால் மட்டுமே உண்டாக்க முடியும் என்பதே உண்மை.

                பரிணாமவியலார் கூற்றுப்படி உலகில் முதன்முதலில் தான்தோன்றியான முதல் உயிரின உருவாக்க மூலம் தவிர்த்து அதை தொடர்ந்த ஏனைய உயிரின தோற்றம், வளர்ச்சி படி நிலை ஆகியவற்றிற்கு தெளிவான விளக்கங்கள் பரிணாமவியல் கோட்பாட்டில் இருப்பதாக சான்றுப் பகிர்கிறார்கள்.

    அதன் அடிப்படைப்பில் மேற்குறிப்பட்ட உயிரினங்கள் தாங்கள் கூறும் பரிணாமவியல் ஊடாக வலம் வந்ததற்கு சான்றுகள் இருக்க வேண்டும்.அதுவும் மேலே குறிப்பிட்டவைகள் உயிரினங்கள் ஏதாவது ஒரு உயிரினங்களின் தொடர் வரிசையில் வந்தே ஆக வேண்டும்.

  ஏனெனில் ஆரம்ப நிலை மீன்கள் >தலைப்பிரட்டை >தவளை உதாரணமும், இறுதியாக குரங்கினம்> நியாண்டர்தால் > மனிதன் உதாரணமும் -போன்ற மேற்கோள்கள் பரிணாம் குறித்த உயிரின தொடர்வரிசைக்கு ஆதாரமாக (?) காட்டுகிறார்கள். எனவே மேற்குறிப்பிட்ட வினாவிற்கு பதில் தருமா பரிணாம வாத சிந்தனை....?

பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும்தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை... (6:38)

                                                               அல்லாஹ் மிக்க அறிந்தவன்

read more "பதில் தருமா பரிணாமம்..?"

Monday, August 09, 2010

கடவுளில்லா உலகம்...?

ஓரிறையின் நற்பெயரால்...

  கடவுளை ஏன் பார்க்க முடியவில்லை...?

    இன்று உலகில் கடவுளை ஏற்போர் \ மறுப்போர் உட்பட யாரும் கடவுளை நேரில் பார்த்ததில்லை.கடவுளை காணமுடியாதற்கு காரணம் குறித்துக்காணும்பொழுது இவ்வுலகத்திலுள்ள அனைத்தையும் படைத்தது கடவுள் என்று சொல்வதாக இருந்தால் அவர் மிகப்பெரிய ஒரு சக்தியாக தான் இருக்கமுடியும்.

   அவ்வாறு மிகப்பெரும் சக்தி மிகுந்த ஒன்றை அனைத்து படைப்புகளை விடவும் பலவிதமான பலஹீனங்களை தன்னுள் கொண்ட மனிதன் தனது கண்களால் பார்க்க வேண்டும் என நினைப்பது என்பது எந்த விதத்தில் நியாயம்?

   பார்த்து தான் கடவுளை நம்புவேன் என்பது சிந்திக்கக்கூடியவர் ஏற்றுக்கொள்ளும் சீரிய வாதமா? சர்வ வல்லமை படைத்த கடவுளை நம் சாதாரண கண்களால் பார்க்க முடியாது என எண்ணுவது அறிவுக்கு உகந்ததா..?
பொதுவாகவே

  ஒருவர் இறை மறுப்பாளாராக இருக்க இரண்டு அடிப்படை காரணங்களே உள்ளது ஏனெனில் நாத்திகனாக யாரும் உருவாவதில்லை., மாறாக உருவாக்க படுகிறார்கள் .,
  • தனக்கோ தன் குடும்ப,சமுக மக்களுக்கோ மதத்தின் பெயரால் நேரடியவோ,மறைமுகமாகவோ ஏற்படும் பாதிப்பின் விளைவே -கடவுள் மறுப்புக்கு அடிப்படை காரணம்.இதுவே நாத்திக உருவாக்கத்திற்கு முதற்காரணம்

  • நமக்கு ஒரு இக்கட்டான நேரத்தில் ஏற்படும் இல்லாமையோ,அல்லது கோபத்தின் அடிப்படையில் ஏற்படும் இயலாமையோ ஏனைய செயல்பாட்டின் மீது வெறுப்பு கொள்ள வழிவகுக்கிறது., அவ்வெறுப்பின் வெளிப்பாடு நமக்கு எது நமக்கு பலன் தரவில்லை என எண்ணுகிறோமோ அதன் மீது நிலைத்து விடுகிறது. அப்படித்தான், 
    நாத்திகர்களுக்கு கடவுள் குறித்த கோட்பாட்டில் ஏற்பட்ட வெறுப்புகள்.,
மூன்றாவதாய் ஒரு காரணமொன்று இருக்குமேயானால் அது அவர்களின் "பிடிவாதமே"

   ஆக பாதிப்பு,வெறுப்பு மற்றும் பிடிவாதம் ஆகியவையே பிரதான காரணங்களாகும். கடவுள் மறுப்புக்கு இதை தாண்டி ஆயிரம் காரணங்கள் அவர்கள் மனதில் அடியாளாய் அணிவகுத்து நின்றாலும் இஸ்லாம் என்ற ஒற்றை சொல் குறித்து அவர்களை தெளிவாக அறிய செய்தால் போதும் கடவுள் இல்லை என்றுசொல்வோர்கள் சொல்வார்கள் அல்லாஹ்வை தவிர கடவுள் இல்லை என்று.,

   இன்று இஸ்லாத்தை நோக்கி வரும் ஏனையோர் அதற்கு சான்றாக உள்ளனர். அல்லாஹ் அத்தகையே நல்ல மக்களாக நம்மையும் ஆக்கட்டுமாக!

   இன்று கடவுளை நிராகரிப்போர் அல்லது மறுப்போர் அவ்வாறு கடவுள் இல்லை என்று சொல்வதற்கு அறிவியல் ரீதியான காரணமென "பரிணாமவியல் கோட்பாட்டை" தாங்கிப்பிடித்து ஆதாரமாக காட்டுகின்றனர்.ஆனாலும் அதற்கான பதில்கள் மிக நேர்த்தியான முறையில் நம் சகோதர இணையங்களில் அறிவுப்பூர்வமாக தரப்படுகின்றன,

  மக்களுக்கு அறிவியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கில்லாமல் படைப்புவாத கொள்கைக்கு மாற்றமாக நாம் ஒன்றை கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே இங்கு பரிணாமவியல் கோட்பாட்டை கையிலேடுத்திருக்கிறார்கள்.

     ஏனெனில்,இதுவரை ஏற்பட்ட உயிரின வளர்ச்சிக்கு உண்டான காரணங்களை (அறிவியல் ரீதியாக (?) பதில் என்று) சொல்கிறார்களே தவிர ஏற்பட்ட உயிரின மாற்றம் குறித்து தெளிவான பதில் அவர்களிடம் இன்னமும் இல்லை.

     மேலும் பரிணமாவியல் விஞ்ஞான அடிப்படையில் முழுக்க முழுக்க நிருப்பிக்கப்பட்ட நம்பகத் தன்மை வாய்ந்த ஓர் கோட்பாடல்ல என்பதை அக்கொள்கையே ஆதாரிப்பவர்கள் கூட வேறுவழியின்றி ஒப்புக்கொள்கிறார்கள் என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்!

    அடுத்து,அவர்கள் கடவுள் இல்லை என்பதை தர்க்க ரீதியாக நிருபிக்கிறோம் என குழம்பி ஸாரி,,, கிளம்பி இரு முக்கிய பதிவுகளை முன் வைக்கின்றனர்

1.கடவுள் பெயரால் மக்கள் மத்தியில் குழப்பங்கள்,கொலைகள் பயங்கரவாதங்கள் ஏற்படுகிறது

2.கடவுள் தன் படைப்பில் மக்களிடையே ஏன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்த வேண்டும்

ஒன்று கடவுளால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினை மற்றொன்று கடவுள் மக்களுக்கு ஏற்படுத்திய பிரச்சனை- அதுக்குறித்து இனி காண்போம்


   கடவுள் பெயரால் மனிதர்களிடையே இனக்கலவரங்கள், சண்டைகள், கலகங்கள், தற்கொலைப்படை தாக்குதல்கள் நடைபெறுவது உண்மைதான்.ஆனால் இதற்கெல்லாம் காரணம் கடவுளா...? அல்லது தன் போக்கில் இச்சைகளை பின்பற்றும் மனித மனங்களா?

    மனிதன் தனது ஆசை,கோபம்,விரக்தி,பாதிப்பு,அதிகப்படியான தேவை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வாழும் காலசூழலில் தனது எண்ணத்தை ஈடேற்றம் செய்ய நன்மை மற்றும் தீமையான காரியங்களை மேற்கொள்கிறான்.

   அவ்வாறு பேராசை காரணமாக தீமையான காரியங்கள் மேற்கொள்ளப்படும் போது மடமைக்கொண்ட மக்களின் மூலம் மதத்தின் பெயரால் தனக்கு வேண்டியதை சாதித்துக்கொள்கிறான்.தன் மார்க்கம் குறித்து போதிய அறிவற்ற அறிவிலிகளும் அவனுக்கு தூணை போகின்றனர். ஏனெனில் ஒருவன் மதப்பெயரால் மேற்கொள்ளும் அட்டுழியங்களுக்கு காரணம் தான் சார்ந்த சமுக இன மக்களால் தனக்கு பாதுக்காப்பு கிடைக்க வேண்டும் என்ற சுயநலமே தவிர மாறாக கடவுளோ.கடவுள் கோட்பாடுகளோ சொன்னதாக ஆதாரத்தை முன்னிறுத்தியல்ல.

    மேலும் சொல்லப்போனால் இஸ்லாம் இத்தகையே மனிதக்குல தாக்குதலை கண்டிப்பதோடு தனியானதொரு மனிதனுக்கு கூட துன்பம் விளைவிக்கக்கூடாது என்கிறது. அல்லாஹ் தன் திருமறையில் சட்டத்திட்டங்கள் குறித்துக்கூறும் பொழுது.,

இதன் காரணமாகவே, "நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.(5:32)

ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்;, அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.
நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம். (2:178&179)

மேலும் பார்க்க:17:33, 6:140, 4:92, 2:111&217

      மேற்கூறிய திருவசனங்கள் தேவையில்லாமல் ஒருவனை கொலை செய்யக்கூடாது என்று சொல்வதோடு நின்றுவிடாமல்,அவ்வாறு ஒருவனை கொன்றால் அஃது அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான் என்ற எச்சரிக்கையும் விடுக்கிறது. இதை விட தனி மனித பாதுக்காப்புக்கு ஓர் உயர் வரையறை அளவுகோலை யாராலும் நிர்ணையிக்க முடியுமா?
   ஆக,மனிதன் தனது சுயநலத்தின் மூலம் ஆதாயம் பெற வேண்டும் என்ற அடிப்படையே எந்த ஒரு கொலைக்கும்,கொள்ளைக்கும்,ஏனைய கலவரங்களுக்கும், பயங்கரவாதத்திற்கும் காரணமே தவிர கடவுளோ.அவரது கோட்பாடுகளோ அல்ல, தன் மார்க்கம் கூறும் ஒரு செயல்பாடு குறித்த காரணத்தை சரிவர புரிந்துக்கொள்ளாததும் மதத்துவேசத்துக்கு ஒரு காரணம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

    இதையும் தாண்டி தனி மனித உயிர் இழப்புக்கும் ஏனைய சமுக நல பாதிப்புக்களுக்கும் மதம் தான் காரணம் என உச்சாணி கொம்பில் ஒய்யரமாய் அமர்ந்து உச்சஸ்தாயில் உரக்க கத்துவோர் கீழ்காணும் கேள்விக்களுக்கு காரணம் சொல்லட்டும்...
<> ஒரே குடும்பத்தில் பிறந்து ஒன்றாய் வாழும் அண்ணன் தம்பிக்குள் வயல்வெளி,வாய்க்கால்,வரப்பு தகராறில் ஒருவரை ஒருவர் வெட்டிச்சாய்த்து கொள்கிறார்களே அதற்கு எந்த மதம் காரணம்...?

<>பூர்விக சொத்தை அடைவதில் தகப்பன்,மகனுக்கு இடையில் ஏற்படும் போட்டி பொறாமைகளில் ஏற்படும் உயிர் இழப்பிற்கு யாரின் மதம் காரணம்..?
<>அடுத்தவன் மனைவியே அடைவதற்கு அவளின் கணவனையே கொல்வதற்கு மேற்கொள்ளும் மட்டரகமான செயல்களுக்கு எவர்களின் மதம் காரணம்...?

<> உதாரணத்திற்கு தான் மேற்குறிப்பிட்ட செய்திகள் எல்லாம். இன்னும் எத்தனையோ மோசங்கள்,அசிங்கங்கள்,குற்றங்கள் ஆயிரமாயிரம் உள்ளன.இந்நிகழ்வுகள் யாவும் அங்கொன்றும்,இங்கொன்றுமாய் நடக்கவில்லை,மாறாக செய்திதாள்களிலும் ஏனைய ஊடங்கள் வாயிலாகவும் நாம் அன்றாடம் காணும் அவலங்கள் தான்!

  இதன் மூலம் தனி மனித கொடுமைகளுக்கும்,சமுக நல கெடுதிக்கும் காரணம் சுயநலம் என்பது தெளிவு.,

அடுத்து இரண்டாவது கேள்விக்கு வருவோம்,



  • கடவுள் ஏன் ஏற்றத்தாழ்வுகளோடு மனிதர்களை படைத்தார் என பார்ப்பதற்கு முன்பு..

      ஒருவேளை உலகிலுள்ள அனைத்து மனிதர்களையும் சம்மாய்,அதாவது அவர்கள் வாழ தேவையான வாழ்வாதார வசதிகளுடனும் ஒரு மனிதனுக்கு கொடுக்கப்பட்டதுப்போலவே உயரம்,நிறம்,பருமன், ஏனைய உறுப்புகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் மற்ற மனிதர்கள் யாவருக்கும் அதே அளவில் வழங்கப்பட்டால் தான் உலக மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு இல்லா நிலை ஏற்படும்.

   இப்படி ஒரு நிலையில் உலகம் இயங்குவதாக கொண்டால், உலகில் பொருளாதார விசயங்களில் யாருக்கும் எந்த ஒரு பிரச்சினையும் வராது சரிதான்.,ஆனால் அனைத்து ஆண்களும் ஒரே முகச்சாயலுடனும். அதேப்போல அனைத்து பெண்களும் ஒரே முகச்சாயலுடனும் தான் இருப்பார்கள்.

   அப்படி இருந்தால்தான் கடவுள் மனிதர்கள் மத்தியில் அணு அளவிற்கு கூட ஏற்றத்தாழ்வை உண்டாக்கவில்லை என்று சொல்ல முடியும். கற்பனை செய்துப்பாருங்கள்...

  தாயிக்கும்,தாரத்திற்கும்,மகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஆண்களும், தந்தைக்கும், கணவனுக்கும். பிள்ளைக்கும்,வித்தியாசம் தெரியாமல் பெண்களும் எவ்வளவு சிரமப்படுவார்கள்,  பாதிப்படைவார்கள்.,இப்படிப்பட்ட நிலையில் உலகம் சமச்சீராய் இயங்குமா? 

   ஆக உலகம் சீராய் இயங்குவதற்கு மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு வேண்டும் என்பதை கடவுள் மறுப்போர் கூட உடன்பட்டோ,முரண்பட்டோ ஏற்றுத்தான் ஆக வேண்டும் இல்லை...இல்லை.. உருவத்தில் வேண்டாம் உலகளவில் மட்டும் கடவுள் ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்க செய்யலாமே என பாதி சமச்சீர் நிலைக்கு பலத்த ஆதரவு தெரிவிப்போர் கீழ்காணும் சுட்டியே பார்வையிடவும்.

    பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மக்கள் மத்தியில் இருந்தால் தான் உலகில் அனைத்து செயல்களும் தொடர்ந்து இயங்க முடியும்.
சொல்லப்போனால் கடவுள் மறுப்போர் உலகம் இவ்வாறு ஏற்றத்தாழ்வுடன் இருப்பதற்கு காரணம் என்னவென்று சொல்ல முடியுமா...?உருவ மாறுப்பாட்டிற்கு வேண்டுமானால் வாழும் கால சூழல்,தட்ப வெப்ப நிலை காரணம் என்று பதில் சொல்லலாம். பொருளாதார ஏற்றத்தாழ்விற்கு என்ன காரணம் கூறுவார்கள்?

 ஏனெனில் ஒருசெல் உயிரி உட்பட அனைத்து உயிரினங்களும் தனக்கு உடல் மட்டும் ஏனைய செயல்களுக்கு தேவையானவைகளை தானாகவே பிறர் தயவின்றி பெறும் போது அனைத்து உயிரினத்தின் சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டு உருவாகும் மனிதன் தனது அடிப்படை தேவைகளுக்கு கூட பிறரை சார்ந்து வாழ்வதேன்?

விடை தருமா கடவுளில்லா உலகம் செய்ய விரும்பும் பகுத்தறிவாளர்களின் (?) பரிணாம்...?

கடவுள் படைப்பில் மனிதர்களிடையே ஏற்ற தாழ்வு ஏன்?
http://iraiadimai.blogspot.com/2010/06/blog-post_15.html

                                 அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "கடவுளில்லா உலகம்...?"

Categories

அமல்கள் அறியாமை அறிவியல் அல்லாஹ் அவதாரம் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உஜைர் நபி உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் எதிரி ஏன் இஸ்லாம் ஏற்றத்தாழ்வு ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தஜ்ஜால் தண்டனை தாய் திருமணங்கள் தேவை நன்மைகள் நபிமொழி நரகம் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மனசாட்சி மனம் மனிதன் மனிதர்கள் மரணம் மறுமை மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வானவர்கள் வாழ்க்கை விதி விமர்சனம். விளக்கம் ஹராம்