mohamedihsas786[at]gmail.com
==============================================================
உலகத்தில் மதம் மற்றும் கடவுள் போன்ற கொள்கைகளை நம்பாமல் போனால், இவ்வுலகில் நடக்கும் பிரச்சனைகளுக்கு மனிதர்கள் எவ்வாறு தீர்வு காணுவர்? அதாவது தீர்வுகள் ஏதும் இல்லாத பட்சத்தில் யாருக்கு எந்த தீஓர்வு சரியெனபடுகின்றதோ அதையே அவர் தீர்வாக எடுத்துக் கொள்வர். அதனால் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் தீர்வு வராது. சரி அப்படியே அவரவருக்கு பிடித்த தீர்வையே வைத்துக் கொண்டாலும் அதை பின்பற்றுபவர்களின் அளவுகோல் என்ன?
அதாவது தமிழ் கலாச்சாரத்தில் ஒருவன் (பகுத்தறிவாதி) வளர்க்கப்பட்டால் அவன் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்வான், ஆந்திர கலாச்சாரத்தில் ஒருவன் (பகுத்தறிவாதி) வளர்க்கப்பட்டால் அவன் ஆந்திர முறைப்படி திருமணம் செய்து கொள்வான். தமிழ் நாட்டு பகுத்தறிவாதிக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டில் நம்பிக்கை இருக்கலாம். ஆந்திர பகுத்தறிவாதிக்கு நம்பிக்கை இல்லாமல் போகலாம். இப்போது தமிழ் நாட்டு பகுத்தறிவாதி ஆந்திர பகுத்தறிவாதியை திருமணம் செய்து கொண்டால் பகுத்தறிவாதிகளுக்குள் பிரச்சனை வருமா? வராதா?
அடுத்து தமிழ் நாட்டு கலாச்சாரத்தில் வளர்ந்த ஒரு பகுத்தறிவாதி Living together கலாச்சாரத்தை பற்றி என்ன முடிவு சொல்வான். அது நன்று என்று கூறுவானா? அல்லது தீமை என்று கூறுவானா? தீமை என்று சொன்னால் என்ன காரணம் சொல்வான்? ஓரினப்புணர்ச்சி பற்றி பகுத்தறிவாதிகளின் முடிவு என்ன?
இந்தியாவில் சொத்து விவகாரங்களில் அவர்கள் எந்த சட்டத்தை பின்பற்றுவார்கள்? விவாகரத்து போன்ற விஷயங்களில் அவர்களின் நிலைபாடு என்ன? விவாகரத்து பண்ணினால் just like that விட்டுவிடுவார்களா? அல்லது பாதிக்கப்பட்டவருக்கு உதவித்தொகை கொடுக்க வேண்டுமா? விவாகரத்து செய்வதற்கு என்ன காரணங்கள் சொல்லலாம்? அதன் அளவுகோல் என்ன? அதை எவ்வாறு வழிவகுத்தார்கள்.
இது போன்ற மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு எந்த பகுத்தறிவாதிக்கு எந்த சட்டம் தன் மன்சாட்சிக்கு சரியன படுகின்றதோ அதை செய்தால், கண்டிப்பாக பிரச்சனைகளுக்கான சரியான தீர்வாக பகுத்தறிவாதிகளின் சட்டம் இருக்காது, தவிர இது மேலும் குழப்பங்களையும், சச்சரவுகளையுமே ஏற்படுத்தும். மதங்கள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று கூக்குரலிட்ட போலி பகுத்தறிவாதிகளே, முதலில் வாழ்க்கை வாழ்வதற்கு நீங்கள் அமைத்த கொள்கைகள் என்ன என்பதை கூறுங்கள். பின்னர் கடவுளை பற்றி பேசலாம்.
தோழைமையுடன்
அபு நிஹான்
hajamydheen[at]gmail.com
=====================================================
நாத்தீகரா நீங்கள்? அப்போ இந்த கேள்விகளெல்லாம் உங்களை பார்த்துதான்..
இந்த பிரபஞ்சம்,இந்த பூமி,அதில் உள்ள உயிரினங்கள்(மனிதன் உட்பட),அதுவல்லாது,உயிர் வாழத்தேவையான நீர்,காற்று ஒளி,இவைகளின் வடிவமைப்பு என ஆதி முதல் அந்தம் வரை அத்துனையும் இயற்கையாகவே உருவானதாக கருதுகிறீர்களா???
உங்கள் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும் இயற்கையாக உருவானது என சொன்னால் நம்பி விடுவீர்களா??ம்ம்ஹும் இல்லை..இதை யாராவது உருவாக்கி இருக்க வேண்டும் என எதை வைத்து ஆணித்தரமாக சொல்கிறீர்கள்?
ஆம்! பகுத்தறிவு...அல்லவா?எந்த ஒரு பொருளும் ஒரு படைப்பாளி இல்லாது தானாக வந்துவிடாது என்ற அறிவு.வீடல்ல,ஒரு குருவிக் கூடானாலும்,எறும்பு தங்கும் புற்றானாலும்,அதை ஒருவர் உருவாக்காமல் வந்து விடுவதில்லை என்பதில் திண்ணமாக இருக்கும் நீங்கள்....முழு மனித சமுதாயமும் முயன்றாலும் முடிந்திடாத,கற்பனைக்கும் எட்டிவிடாத டிஸைனில் இந்த உலகத்தை ஒரு படைப்பாளன் இல்லாது தானாக உருவாகிவிட்டது என வாதிடுவது விந்தையாகவும்,கருத்துமுரணாகவும்,பின் முட்டாள்தனமாகவும் இருக்கிறதே!
நீங்கள் சொல்லலாம்,வீடு உட்பட என் வீட்டில் இருக்கும் அத்துனையும் மனிதன் உருவாக்க அதை நான் நேரடியாக கண்டிருக்கிறேன்,அதனால் படைப்பாளி இல்லாமல் வந்திருக்க முடியாது என சொல்கிறேன் என்று,..சரிதான்..வீடு கட்டும் போது நீங்கள் பார்த்ததால் நம்புகிறீர்கள்...
அதுபோல இவ்வுலகம் படைக்கப்படும் போது குத்துக்கால் போட்டு,கண்ணத்தில் கைவைத்து உக்காந்து நான் பார்க்கவில்லை அந்த ஒரே காரணத்தால் நம்பவில்லை என்கிறீர்கள் சரிதானே!
இயற்கையாகவேதான்,இந்த பூமி 100% பெர்ஃபெக்ஷனுடன் வந்துவிட்டது என உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா???ஒன்றும் இல்லை..கையில் பத்துவிதமான பொருட்களை வைத்துக்கொள்ளுங்கள்..ஒவ்வொன்றும் உங்களின் மேசையில் இன்ன இன்ன இடத்தில் இன்னின்னவாறு இருக்க வேண்டும் என முடிவு செய்து கொள்ளுங்கள் பின் அதை மேசையில் சிதரவிட்டுவிடுங்கள்... அவையாவும் தாங்கள் விரும்பிய பெர்ப்க்ஷனை பூர்த்தி செய்யும் சதவிகிதம் எத்தனை என நீங்களே யூகித்துக்கொள்ளவேண்டியதுதான்...அது ஒன்றில் இருந்து ஐந்து சதவிகிதத்தை கூட எட்டமுடியாது என்பது உறுதி..இதுதான் நீங்கள் சொல்லும் இயற்கையால் கொடுக்கப்பட முடிந்த பெர்ஃபெக்ஷன்...நீங்கள் விரும்பிய,அல்லது,குறைந்த பட்ச ஒழுங்கை எட்டவேண்டும் என்றால் கூட உங்களின் கைவைக்கப்படாமல் அங்கு ஒன்றும் நடக்காது.
அப்படி இருக்க இவ்வுலகில் இருக்கும் அத்துனையும் முழுமைபெற்றும்,அதில் ஒரு நேர்த்தியுடனும் இருக்க,அதுவோ இயற்கையாக வந்துவிட்டது என சொல்வது உங்களின் அறிவை நீங்களே ஏமாற்றிக்கொள்ளும் காரியம் இல்லையா??
ஒரு முறை முழு உலகையும் விழிவிரித்து திறந்த மனதுடன் பாருங்கள்.எத்தனை ரம்யமான படைப்பு,,,மாஷாஅல்லாஹ்...ஒவ்வொன்றும் தெரிவு செய்யப்பட்ட,வடிவமைப்பில் உச்சம் பெற்ற,படைப்பு....எங்கிருந்து வந்துவிட்டன இவை???
உதாரணத்திற்கு ஒன்றை பார்ப்போம்.
நீர்???இப்படியான ஒரு திரவத்தை மனிதன் காண்பதற்கு முன்புவரை சிந்தித்திருக்க முடியுமா?உலகில் மனிதன் உண்டாக்கிய அத்துனை விலைமதிப்புமிக்க பானங்கள்,நிறமற்ற சுவையற்ற எளிய நீரின் சுவையை விஞ்ச முடிந்ததா??இதுவும் இயற்கை என்றால்..இந்த நீர் ஏன் ஒரு அமிலமாக உருவாகி இருக்ககூடாது?..ஏன் வேறுவிதமான அடர்த்தியில் வெளியாகி இருக்ககூடாது...
மாசுக்களால் நிறைந்த உலகத்தில் மாசுமறுவற்று கண்ணாடிபோல் எப்படி உண்டானது...இந்த தன்மையும் தானாக வந்துவிட்டதா?இவ்வாறு எப்படி எப்படியோ இருந்திருக்க வேண்டிய நீர்..ஏன் தனிச்சிறப்பு மிக்க இத்தகைய குணாதிசியங்களை கொண்டதாக இருக்க வேண்டும்?இதை உலகில் உள்ள பிற உயிரினங்கள் பயன்படுத்தும்,அதனால் இப்படித்தான் நீர் இருக்க வேண்டும் என இயற்கை முடிவு செய்துவிட்டதோ???
இயற்கை என்ற அறிவற்ற எந்திரத்தில் இருந்து வெளியாகும் இந்த திரவம் இத்தனை தன்மைகளை கொண்டிருக்கவேண்டும் என்ற நோக்க சிரத்தை யாருடையது?இத்தனை குவாலிட்டி,இத்தனை பெர்ஃபெக்ஷன் யாருடையது???
ஒரு வேலை எல்லாம் சரியாக உருவாகி நீர் மட்டும் கரியமிலமாக இந்த இயற்கையில் இருந்து,இயற்கையாக வெளியாகி இருப்பின்..மனிதன் அதை உண்டுதான் வாழ்ந்திருக்க வேண்டுமா???..இல்லை வெவ்வேறு விதமாக இயற்கையாக உருவான நீரானது...உயிரினங்களின் தேவையறிந்து பரிணாம வளர்ச்சி??? கண்டு இன்று இத்தனை தெள்ளியதாக இருக்கிறதா சகோதரர்களே!!!
இது போல இயற்கை படைப்பு ஒவ்வொன்றையும் சிந்தித்தாலே போதுமே!
நீங்கள் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக்கொள்ள போதுமான ஆதாரங்கள் கிடைத்துவிடுமே!அப்ரம் வருவோம்,அந்த இறைவன் யார்?யாராக இருக்க முடியும்?என்ற கேள்விகளுக்கெல்லாம்...
முன்முடிவுகளை தூர எறிந்துவிட்டு திறந்த மனதுடன் சிந்திப்போம்...
நிச்சயமாக வானங்கள்,பூமி ஆகியவற்றின் படைப்பிலும்,இரவும்,பகலும் மாறி மாறி வருவதிலும்,அறிவுடையோருக்கு திடமான அத்தாட்சிகள் பல இருக்கின்றன
அல்குர்ஆன் - 3:90
அன்புடன்
ரஜின்
askabt.islam[at]gmail.com
====================================================================
யாதுமே இல்லாதிருந்து பின்பு யாதுமே இல்லாதிருந்து பின்பு Cosmic agg ஆக உருவாகி அதனுள் ஏற்பட்ட வெப்ப அழுத்தத்தின் காரணமாக வெடித்துச் சிதறியதில் இருந்து (Big Bang) இன்று வரை இக்கணப்பொழுது வரை இப்பிரபஞ்சம் விரிந்துகொண்டேதான் செல்கின்றது. ஒளி வினாடிக்கு 3 இலட்சம் கி.மீ. வேகத்தில் பயணிக்கின்றது. ஆனால் இப்பிரபஞ்சம் ஒளியையும் விட வேகமாக விரிவடைகின்றது என்பதனை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதனை அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
“(எவரது உதவியுமின்றி) எம் கைகளினாலே நாம் வானத்தை அமைத்தோம். மேலும் நாம் அதனை விசாலப்படுத்துகின்றோம்.” ( 51:47 )
கடவுள் மறுப்புவாதியின் பெயர் பகுத்தறிவுவாதி இந்த பெயரே பகுத்தறிவுக்கு புறம்பானது?
கடவுள் உண்டென வாதிடுபவன் தான் உண்மையான பகுத்தறிவுவாதி!
கடவுள் மறுப்பாளர்கள் தன் கொண்ட கொள்கையின் பால் ஒரு தீர்க்கமான முடிவை இதுவரை உலகிற்க்கு சமர்ப்பிக்கவே இல்லை கடவுள் மறுப்பு வாதம் ஒரு பொய்யான வாதம் என்பதை நாம் நிறும்பிக நான் கடமைப்பட்டுள்ளேன்
எனெனில் நான் முஸ்லிம் இஸ்லாம் கூறும் ஒறிறையின் அடிமை உலகம் ஏற்றுக்கொள்ளும் அறிவார்ந்த கருத்துக்களுக்கு பதிலலிக்க காத்திருக்கிறேன் பின்னூட்டங்களில் சான்றுகளின் அடிப்படையில் வாதிடுங்கள் கற்பனையை புறந்தள்ளிவிட்டு
கடவுள் மறுப்புவாத தோழமைத்தேடி.
ஒ.பி.கலில் ரஹ்மான் எஸ்.பி.பட்டினம்