"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."
Showing posts with label முஹம்மது நபி. Show all posts
Showing posts with label முஹம்மது நபி. Show all posts

Friday, October 12, 2012

உங்களில் சிறந்தவர்..

                                            ஓரிறையின் நற்பெயரால்.

பொதுவாக தலைமை பொறுப்பை பயன்படுத்தி தனக்கு வேண்டிய ஆதாயங்களை தேடிக்கொள்வது தான் எழுதப்படாத சட்டமாக நம் தலைவர்கள் மத்தியில் கண்டு வருகிறோம். அதிலும் அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி பெறும் ஆதாயங்களை விட ஆன்மீகத்தை பயன்படுத்தினால் கிடைக்கும் ஆதாயத்தின் மடங்கு இரட்டிப்பாகும். சில தலைவர்களின் உண்மை முகங்கள் ஊடகங்களில் செய்திகளாக வரும் போது அதை நாம் தெளிவாக அறிகிறோம்.

மனிதக்குலம் தோன்றிய காலத்திலிருந்தே எந்த ஒரு தலைவரானாலும் அது ஆன்மீகத்திலோ அல்லது அரசியலிலோ அவருக்கென்று சீடர்களோ, தொண்டர்களோ இருப்பது மரபு. அதை தான் இன்று வரையிலும் இந்த உலகம் கண்டு வருகிறது. ஆனால் இப்படி ஆன்மீகம் மற்றும் அரசியலில் ஒரே நேரத்தில் ஒருவர் தலைவராக இருந்து அவருக்கு சீடர்களோ தொண்டர்களோ இல்லையென்றால் அதை விட ஆச்சரியமான செய்தி ஒன்றுமில்லை. அந்த ஆச்சரியத்திற்குரிய தலைவர் மாமனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் குறித்து சில செய்திகள் இங்கே...

தங்களை தலைவர் என மக்கள் மத்தியில் இனங்காட்டும் எவருமே முதலில் செய்யும் ஒரு காரியம் மக்கள் கூட்டத்திலிருந்து தம்மை வேறுப்படுத்தி காட்டுவதற்காக தனக்கென்று தனி உடை, ஆசனங்கள், பின்னாலும் முன்னாலும் தம் தேவையை நிறைவேற்ற சில வேலையாட்களை நியமிப்பார்கள். ஆனால் ஒரு நாட்டை நிர்வகிக்க கூடிய தலைமை பொறுப்பு மற்றும் இறைத்தூதர் என்ற இமாலயப்பொறுப்பு இரண்டையும் கொண்ட முஹம்மத் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறும் வார்த்தைகளை கவனியுங்கள்... சகோஸ்

ஒரு நபித்தோழர் குறிப்பிடுகிறார்...
நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். 'இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்' என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்' என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யக் கூடாது என தடுத்தார்கள். 
அறிவிப்பவர் : கைஸ் பின் ஸஅத் (ரலி) நூல் : அபூதாவூத் 1828

ஏனெனில் காலில் விழுபவரும், விழப்படுபவரும் ஒரே மனிதர்கள் தாம் என சுயமரியாதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள் அதுமட்டுமில்லாமல் தாம் இறந்த பிறகும் கூட தம் அடக்கஸ்தலத்திற்கு கூட சிரை வணக்கம் செய்ய கூடாது கண்டிப்புடன் கூறினார்கள். 

மற்றொரு நிகழ்ச்சி...
எங்கள் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே! என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'மனிதர்களே! இறையச்சத்தைக் கவனமாகப் பேணிக் கொள்ளுங்கள்! ஷைத்தான் உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஆவேன். அல்லாஹ்வின் அடியானும், அவனது தூதருமாவேன். எனக்கு அல்லாஹ் தந்த தகுதிக்கு மேல் என்னை உயர்த்துவதை அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் விரும்ப மாட்டேன்' என்றார்கள்.
நூல் : அஹ்மத் 12093 ,15726, 15717 

ஆன்மீகமோ அரசியலோ, தலைவர்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவோரைக் கண்டித்து எத்தனையோ சீர்திருத்த வாதிகள் இங்கே போராடியதுண்டு. அவர்களின் முகத்திரையைக் கிழித்துக் காட்டியதும் உண்டு. ஆனால், அது போன்ற மரியாதை தங்கள் அபிமானிகளால் தங்களுக்கு தரப்படும் போது அதை அவர்கள் இன்முகத்துடன் ஏற்றுக் கொள்வதை நாம் பார்க்கிறோம். 

அதைக்கூட மக்களை செய்ய விடாமல் அதிலும் குறிப்பாக ஆன்மீகத் தலைவராக இருந்து கொண்டே அந்தச் சீர்திருத்தத்தை தம் இறப்பிற்கு பின்னரும் கூட முழுமையாக அமுல்படுத்திய ஒரே தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமே.

அடுத்த ஒரு நிகழ்ச்சி பாருங்கள்...
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடினமான நஜ்ரான் நாட்டுப் போர்வை ஒன்றை அவர்கள் அணிந்திருந்தார்கள்.
அப்போது எதிரே வந்த கிராமவாசி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போர்வையுடன் சேர்த்துக் கடும் வேகமாக இழுத்தார்.
இழுத்த வேகத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிராமவாசியின் மார்பில் சாய்ந்தார்கள்.
அவர் கடுமையாக இழுத்ததன் காரணமாகப் போர்வையின் கனத்த கரைப்பகுதி அவர்களின் தோள்பட்டையைக் கன்றிப்போகச் செய்தது.
பிறகு கிராமவாசி, 'முஹம்மதே! உம்மிடமுள்ள செல்வத்தில் எனக்கும் தருமாறு கட்டளையிடுவீராக!' என்று கூறினார்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தார்கள்.
பிறகு அவருக்கு ஏதேனும் வழங்குமாறு கட்டளையிட்டார்கள். 
அறிவிப்பாளர்: அனஸ் ரலி நூல்கள்: புகாரி 6088, முஸ்லிம் 2296.

தமக்காக உயிரையும் கொடுக்கும் ஒரு சமூகத்தின் மத்தியில் நின்றுக்கொண்டிருக்கும் போதே ஒரு காட்டரபி நபிகள் மீதுள்ள போர்வையை பிடித்து இழுக்கிறார். அதுவும் அவர்கள் மேனி சிவக்கும் அளவிற்கு. ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள் பாருங்கள்... வந்தவரின் சுபாவம் இப்படியானது தான் என தெளிவான தெரிந்தவர்கள் அவர்கள் அதனால் தான் அவருக்கு சிறை தண்டனை கொடுக்காமல் சிரித்துக்கொண்டே கருவூல நிதியிலிருந்து அவருக்கு சிறிது கொடுக்க சொல்கிறார்கள் .இன்றைய ஆட்சியாளர்கள் முன் இப்படியாய் ஒரு சம்பவம் நடந்தால்...

புகழை விரும்பா தலைவர்கள் கூட அதுவாக தம் மீது விழும் போது மவுனமே சாதிப்பார்கள். ஆனால் இந்த தலைவரோ எப்பேற்ப்பட்ட சூழ் நிலையிலும் தம் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருந்தார் பாருங்கள்...
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது மகன் இப்ராஹீம் மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'எவரது மரணத்திற்காகவோ, வாழ்வுக்காகவோ சூரிய, சந்திர கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே, நீங்கள் (கிரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள்.
நூல் : புகாரி: 1043, 1061, 1063

இங்கே சொன்ன செய்தியை விட சொல்லப்பட்ட தருணமே மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தன் மகன் மரணித்த சோகத்தில் கூட மக்கள் தவறான புரிதலில் சென்று விடக்கூடாது என்ற எண்ணத்தில் தக்க சமயத்தில் விளக்கமளிக்கிறார்கள்.  எந்நிலையிலும் தம் மீது புகழின் நிழல் கூட விழ மறுத்து விட்டார்கள்.
அவர்களின் நீத தன்மைக்கு ஒரு சான்று பாருங்கள்.

யூதர்களில் ஒருவர் முகத்தில் அடி வாங்கிக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அவர், 'முஹம்மதே! உங்கள் அன்சாரித் தோழர் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அவரைக் கூப்பிடுங்கள்' என்றார்கள். அவ்வாறே அவரை அழைத்(து வந்)தார்கள். (அவரிடம்) 'இவரை முகத்தில் அறைந்தீரா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், 'இறைத்தூதர் அவர்களே! நான் யூதர்களைக் கடந்துசென்றேன். அப்போது இவர் 'மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவைத் தேர்ந்தேடுத்தவன் மீது சத்தியமாக' என்று கூறக் கேட்டேன். உடனே நான், 'முஹம்மத்(ஸல்) அவர்களை விடவுமா? என வினவினேன். அப்போது எனக்குக் கோபம் ஏற்பட்டு இவரை அறைந்து விட்டேன்' என்றார். 

நபி(ஸல்) அவர்கள் 'இறைத்தூதர்களிடையே என்னைச் சிறந்தவன் என்று சொல்லாதீர்கள்.ஏனெனில், மக்கள் மறுமை நாளில் மூர்ச்சையடைந்து விடுவார்கள். மூர்ச்சை தெளி(ந்து எழு)பவர்களில் நானே முதல் ஆளாக இருப்பேன். அப்போது நான் மூஸா(அலை) அவர்களுக்கு அருகே இருப்பேன். அவர்கள் இறை அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பிடித்தபடி (நின்றுகொண்டு) இருப்பார்கள். அவர்கள் எனக்கு முன்பே மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டார்களா? அல்லது 'தூர்' (சினாய்) மலையில் (இறைவனைச் சந்தித்த போது) அவர்கள் அடைந்த மூர்ச்சைக்குப் பகரமாக (இப்போது மூர்ச்சையாக்கப்படாமல்)விட்டுவிடப்பட்டார்களா? என்று எனக்குத் தெரியாது' என்று கூறி நபி மூஸாவை விட தம்மை உயர்த்தி பேச வேண்டாம் என தீர்ப்பு கூறுகிரார்கள்.
அறிவிப்பாளர் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) புஹாரி பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6917

இந்த  நிகழ்வை சற்று ஆழமாக சிந்தியுங்கள். வழக்கை கொண்டு வருபவர் ஒரு யூதர் அதுவும் வழக்கே முஸ்லிமுக்கு எதிராக தான். அதிலும் நபி முஹம்மதை காட்டிலும் தம் சமூகத்தின் தலைவரை உயர்ந்தவர் என்கிறார். ஆனால் இங்கே வழக்கை விசாரித்து நீதி சொல்பவர் நபி முஹம்மத் அவர்கள். என்ன ஆச்சரியம் தமக்கு சாதகமில்லாமல் கொண்டு வரப்பட்ட வழக்கிற்கு தானே நீதி சொல்கிறார்கள். அதுவும் நீதமாய். ஏனெனில் நியாயமான தீர்ப்பைதான் நபி முஹம்மத் வழங்குவார்கள் என்பதை அவர்கள் ஆட்சிக்காலத்தில் சிறுபான்மையினராய் இருந்த யூதர்கள் கூட நிதர்சனமாக அறிந்து வைத்திருந்தார்கள்.  

இன்னும் சொல்லலாம்... 
உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : திர்மிதி எண்: 1082

  உலகில் எத்தனையோ செயல்கள் செய்வதன் மூலம் தம்மை உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்வர்கள் உண்டு. ஏன் எத்தனையோ சிறந்த மனிதர்கள் என பெயர் பெற்றவர்கள் கூட தம் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்தார்களா என்பது சந்தேகமே... ஆனால் இங்கு நபி முஹம்மத் அவர்களோ ஒருவன் சிறந்தவனாக இருப்பதற்கு அடிப்படை அவன் மனைவி இடத்தில் நற்பெயர் பெற வேண்டும் என்று சொல்கிறார்கள். இது பெண்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் என்பதோடு மட்டுமில்லாமல் பெண்களை அஃறிணை பொருளாக பயன்படுத்திய அந்த சமூக சூழ்நிலையில் சொல்லி இருப்பது எத்தகைய முற்போக்கான சிந்தனை. 

கலாச்சாரம், நாகரிகம், சுந்தந்திரம் என பெண்களுக்காக குரல் கொடுக்கும் இந்த காலத்திலும் இப்படியான ஒரு வாக்கியத்தை எந்த சிந்தனைவாதியும் முன்மொழியவில்லையென்பது சிந்திக்க தகுந்த ஒன்று!

மனிதக்குல மேன்மைக்காக மட்டுமே தங்கள் வாழ்வை அற்பணித்த அந்த மாமனிதர் அரசியலாகட்டும், ஆன்மிகமாகட்டும், குடும்ப பொருளாதரமாகட்டும் எல்லாவற்றிற்கும் முன்மாதிரியாக வாழ்ந்து உலகிற்கு பாடம் புகட்டினார்கள். வெறுமனே ஏட்டில் மட்டும் வடித்து தங்கள் வாழ்வை மனம் போன போக்கில் அமைத்துக்கொள்ளவில்லை அவர்கள்.

 தலையில் எண்ணெய் தேய்ப்பதிலிருந்து காலில் செருப்பு அணிவது வரை இன்று வரையிலும் ஒரு சமூகம் அவர்கள் சொன்னதை, செய்ததை அவர்கள் அங்கீகாரம் கொடுத்ததை மட்டுமே நிறைவேற்றிக்கொண்டிருக்கிறதென்றால் அவர்கள் மனிதமனங்களில் ஏற்படுத்திய தாக்கம் எவ்வளவு உண்மையானது வலிமையானது என்பதை சிந்திப்போர் புரிந்துக்கொள்வார்கள். 

இறுதியாக... 
அவர்களது இறுதி காலக்கட்டத்தில் ஒரு சம்பவம்!
'மக்களே! நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான். உங்களை விட்டுப் பிரியும் நேரம் நெருங்கி விடலாம். எனவே, உங்களில் எவருடைய மானத்திற்காவது, எவருடைய முடிக்காவது, எவருடைய உடம்புக்காவது, எவருடைய செல்வத்திற்காவது நான் பங்கம் விளைவித்திருந்தால் இதோ இந்த முஹம்மதிடம் கணக்குத் தீர்த்துக் கொள்ளுங்கள்! இதோ முஹம்மதின் மானம், முஹம்மதின் முடி, முஹம்மதின் உடல், முஹம்மதின் செல்வம். பாதிக்கப்பட்டவர் எழுந்து கணக்குத் தீர்த்துக் கொள்ளுங்கள்! 

அவ்வாறு செய்தால் முஹம்மதின் வெறுப்புக்கும், பகைமைக்கும் ஆளாக நேரிடுமோ என்று நான் அஞ்சுகிறேன் என்று உங்களில் எவரும் கூற வேண்டாம். அறிந்து கொள்க! நிச்சயமாக பகைமையும், வெறுப்பும் எனது சுபாவத்திலேயே இல்லாததாகும். அவை எனது பண்பிலும் இல்லாததாகும்' என்று கூறி விட்டுத் திரும்பினார்கள்.

மறு நாளும் இது போன்றே பள்ளிவாசலுக்கு வந்து இவ்வாறே பிரகடனம் செய்தார்கள். 'யார் என்னிடம் கணக்குத் தீர்த்துக் கொள்கிறீர்களோ அவர்கள் தாம் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள்' என்பதையும் சேர்த்துக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்தார். 'அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் ஒருவர் யாசகம் கேட்டு வந்தார். அவருக்கு அளிப்பதற்காக யாரேனும் எனக்குக் கடன் தருகிறீர்களா? என்று நீங்கள் கேட்டீர்கள். அப்போது நான் மூன்று திர்ஹம் (அன்றைய வெள்ளி நாணயம்) கடன் தந்தேன்' என்று கூறினார். உடனே என்னை அழைத்து 'இவர் கேட்டதை இவருக்குக் கொடுங்கள்' என்றார்கள்.
இவ்வாறே பெண்கள் பகுதிக்கும் சென்றார்கள். அவர்களுக்கும் இவ்வாறே கூறினார்கள். 
நூல் : முஸ்னத் அபீ யஃலா 6824

இங்கே பேசுவது ஒரு சர்வசாதரண மனிதர் அல்ல., ஒரு சம்ராஜியத்தின் தலைவர். இஸ்லாமெனும் கட்டி எழுப்பப்பட்ட கோட்டையின் தலைமை தளபதி. கையசைத்தால் ஏவளுக்கு எண்ணற்றோர் காத்திருக்க. அந்த மாமனிதரோ தம்மை பழித்தீர்த்துக்கொள்ள மக்களை அழைக்கிறார்.. என்ன ஒரு சமத்துவம்.. இன்றைய தலைவர்களில் எவராவது இதைப்போன்று செய்ய முன்வருவார்களா.. அல்லது குறைந்த பட்சம் தம் தவறுக்கு பொது மன்னிப்பாவது இந்த சமூகத்திடம் கேட்பார்களா.... ஊழலிலும் இலஞ்சத்திலும் குளிர்காயும் தலைவர்கள் மத்தியில் தனக்கென ஒருவரையும் பழிவாங்காமல் தம் வாழ்வு முழுவதையும் கழித்த அந்த மாமனிதர் மக்கள் மன்றத்தில் தம் மீது ஏதும் குற்றமிருக்கிறதா என முறையிடுகிறார்...

அவர் தாம் உலகில் வாழ்ந்த நாளிலும் இனி இந்த உலகம் வாழும் நாள் வரையிலும் தம் செய்கையின் மூலம் சிறந்தவர் என்பதை நிருபித்து சென்று விட்டார்கள். அவர்கள் பெயரில் அவதூற்றை மட்டுமே அச்சேற்றிக்கொண்டிருக்கும் கூட்டங்கள் இனியாவது பகுத்தறிவு பார்வையோடு சிந்திக்கட்டும் அந்த மாமனிதரின் உண்மை வரலாற்றை..
.

தொடர்புடைய ஆக்கம்

                                                            அல்லாஹ் நன்கு அறிந்தவன்

Reference :
read more "உங்களில் சிறந்தவர்.."

Tuesday, July 20, 2010

முஹம்மது(ஸல்)... என்னும் முழு மனிதர்.

                                                     ஓரிறையின் நற்பெயரால்...
 உலக சரித்திரத்தில் இவருடைய வரலாறே நுணுக்கமான பகுத்தாய்வுகளுடன்  மிக அதிகமான நம்பகத்தன்மை வாய்ந்த ஆதாரங்களுடன் தொகுக்கப்பட்டதாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த வரலாறே ஹதீஸ் என்பதாக அழைக்கப்படுகிறது.

இவரைப்பற்றி பிரிட்டானிகா கலைகளஞ்சியம் 'மதத்தலைவர்களில் தலை சிறந்த வெற்றியாளர்' என்று கூறுகிறது.

 Although his name is now invoked in reverence several billion times every day, Muhammad was the most reviled figure in the history of the West from the 7th century until quite recent times.
...Muhammad is one of the most influential figures in history, his life, deeds, and thoughts have been debated by followers and opponents over the centuries,
    -taken from wikipidia &Britannica Concise Encyclopedia

                        இன்றுவரையிலும் மனித சமுதாயத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் "மா நபி முஹம்மத் (ஸ-ல்) என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. அத்தைகைய தூயோரின் மொத்த வாழ்வும் திறந்த புத்தகமாகவே இன்றவும் உள்ளது.

இன்று தலைவர்கள் என போற்றப்படுபவர்கள் அவர்கள் கொண்ட மதம்,அரசியல் மற்றும் சமுக சார்ந்த எந்த ஒரு துறையில் மட்டுமே அவர்கள் பிரத்தியேக தன்மையுடன் விளங்குகிறார்கள்.

ஆனால் முஹம்மத் (ஸ-ல்) என்ற ஒரு தலைவர் மட்டுமே மேற்குறியவைகளில் மட்டுமல்லாது குடும்பவியல்,பொருளியல்,என அனைத்துத் துறைகளிலும் அனைத்து மக்களும் பின்பற்ற தகுந்த ஒரு வாழ்வு நெறியே ஏற்படுத்தினார்கள்.

ஏன்... சுருங்கக்கூறினால் ஒருவர் காலையில் விழித்ததிலிருந்து இரவு உறங்க சொல்லும் வரை மேற்கொள்ளும்   அன்றாட வாழ்வின் செயல்கள் அனைத்திலும் அவர்களின் வழிகாட்டுதல்களும், பின்பற்றுதல்களும் இருக்கிறது.

எனவே தான் வல்லோன் தன் வான் மறையில் வள்ளல் முஹம்மது(ஸ்-ல்) பற்றி
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.  (33:21) 


    என கூறுகிறான்.எனவே இன்று உலகில் வாழும்  5 ல் ஒருவர் அண்ணல் அவர்களை தம் உயிரினும் மேலாக மதிக்கிறார்கள் என்றால் அவர்களின் வாழ்வு தூயது எனபதில் ஆச்சரியமில்லை!

     ஆனால் இன்று இஸ்லாத்தை விமர்சிப்போரின் தலையாய பணி அன்னாரை கேவலப்படுத்துவதற்காக தங்களது வலை தேசங்களுக்கு வரையறையற்ற எல்லை விரிப்பை ஏற்படுத்தி முகமற்ற முகவரி தந்து வார்த்தை பயங்கரத்தை பயப்படாமல் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் தனது கைக்கு அருகிலிருக்கும் கணிணியின் சுவிட்சை ஆன் செய்வதற்கு முன்பு திறந்திருக்கும் தமது மன கணிணியில் வாழ்கைக்கு தேவையான downloadகள் 60 லிருந்து 70 ஆண்டுகள் வரை மட்டுமே பெற முடியும் எனபதை மறந்து விட வேண்டாம்.

அதுவும் மரணமென்னும் சுவீட்சு முன்னரே OFF செய்யபடாமல் இருந்தால் மட்டுமே சாத்தியம்! எனவே குறுகிய சிந்தனை கொண்டு நிரந்தர, நீண்ட வாழ்வை மறுக்க, இழக்க விளையாதீர்கள்.

 முஹம்மது (ஸ-ல்) அவர்கள் குறித்து பார்க்கும் முன்பு.,
     இறைவனுக்கு மாறு செய்த யுத சமுகம் இறை தூதருக்கான வருகையே தங்கள் சமுதாயமல்லாது பிறிதொரு சமுகத்தில் வருவதற்கு கடும் எதிர்ப்பை கொண்டிருந்தது.அவர்கள் எதிர்பார்த்தது போலலல்லாது  அரேபிய சமுகத்தில் இறுதித்தூதர் வெளிப்பட்டதால் அன்னாருக்கேதிராக காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் தங்களது எதிர்ப்பை நேரடியாகவும், மறைமுகமாகவும் காட்டத் தொடங்கினர்.
(அன்று தொடங்கிய எதிர்ப்பு இன்றுவரையிலும் தொடர்ந்து வருகிறது என்பதை வரலாறு அறிந்தோர் அனைவரும் உணரும் உண்மை)

   சம காலத்திலேயே அன்னாருக்கும்,ஏனைய முஸ்லிம்களுக்கும், மக்கத்து காஃபிர்களுடன் சேர்ந்து தொல்லை விளைவித்தனர்.மேலும் முஸ்லிகள் மத்தியில் குழப்பதை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக வேத வெளிபாடன  குர்-ஆனில் தமது கை சரக்கை சேர்க்க முடியாததென்பதை உணர்ந்து அது  போக ஏனைய வழிகளில் குழப்பத்தை ஏற்படுத்த தலைப்பட்டனர்.

   அதன் உச்சக்கட்டமே இஸ்லாத்தின் பின்பற்றுதலுக்குறிய இரண்டாம் அடிப்படையில் அமைந்த நபிகளாரின் வாழ்வு நெறியில் (ஹதிஸ்களில்) தம் சொந்த கருத்தை புகுத்த முயன்றனர்.அதில் சிறிது வெற்றியும் கண்டனர்.

எனினும் அஃது இரண்டற கலந்த அவ்வதிஸ்களை புஹாரி,முஸ்லிம் போன்ற பெரும் இமாம்கள் பெருமானார்-பெருமானாரிமிருந்து வழிவழியாக அறிவித்தவர் யாரென்றும்,அவரது நம்பக தன்மையை அளவு கோலாக கொண்டும் தரம் பிரித்து ஹதிஸ்களை ஸயி (உண்மையானது) ஹசன் (நல்லது), லைஃப் (பலகீனமானது) மற்றும் மப்ஃளூஆத் (இட்டுக் கட்டப்பட்டது) என வகைபடுத்தியுள்ளனர்.

இன்று இஸ்லாத்திற்கேதிராக நபிகளாரின் வாழ்வை குறை காணும் (அ)சத்தியவான்கள் பெரும்பாலும் இவ்வாறு இனம் பிரித்து இட்டுக் கட்டபட்ட ஹதிஸ்களையே மேற்கொள் காட்டுகின்றனர். எனினும் நியாயமான பார்வைக்கு இஸ்லாத்திலும்,நபிகளாரின் வாழ்விலும் நடு நிலையான பதிவுகள் உள்ளன.

நபிகளாரின் நம்பகதன்மை 
இறைத்தூதராக தம்மை பிரகடனப்படுத்திக்கொள்வதற்கு முன்பே அவர்கள் அச்சமுக மக்களின் நற்பெயரை பெற்றிருந்தார்கள்.அம்மக்களின் அடைக்கலப் (அமானித) பொருட்களை பாதுகாக்கும் பொறுப்பு அன்னாரிடமே இருந்தது. அவர்களின் குணநலன்கள் அடிப்படையில் நாணயமற்றவர் என்றோ, அடுத்தவர் பொருளை அபகரிப்பவர் என்றோ, ஒருகுற்றச்சாட்டு அவர்கள் வாழ்வு முழுவதும் எந்த ஒரு சூழ்நிலையிலும் எழெவே இல்லை.

மாறாக அவர்கள் கொணர்ந்த ஓரிறையின் அடிப்படை நாதமான "அல்லாஹ்விற்கு" இணை கற்பிக்காதீர்கள் என்ற ஒற்றை சொல்லில் அதிருப்தியுற்றவர்களாக தாம் கொண்ட கொள்கைக்கு மாற்றமாக ஒரு கொள்கையே கண்டதால் சமரசம் பேச "ஒரு கையில் சூரியனையும், மறு கையில் சந்திரனையும் தந்து கேட்டாலும் ஏகத்துவப் பிரச்சாரத்தைக் கைவிட மாட்டேன் என்று அண்ணல் இயம்ப" அவர்களை பொய்யர் என்றும்,பைத்திய காரர் என்றும் சொல்ல தொடங்கினர்.

  எனினும் அவர்களின் நீத தன்மையே எந்த ஒரு நிகழ்விலும் அம்மக்கள் குறை கூறவில்லை என்பதை ஒருசில காட்சிகள் நமக்கு  சாட்சியாக உள்ளன
 *பகிரங்கமாக பிரச்சார புரியக்கூறி இறைவசனம் இறங்கிய போது தன் சமுக மக்களை 'ஸபா' மலைக்குன்றின் அருகே முதல் முறையாக ஒன்று திரட்டினார்கள். ஸபா மலை மீது ஏறி நின்ற அவர்கள் தனக்கு முன்னால் நிற்கும் மக்களைப் பார்த்துக் கேட்டார்கள்:

 “ இந்த மலையின் பின்னால் உங்களைத் தாக்க ஒரு படை நிற்கிறது என்று நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
மக்கள்: ‘ஆம், நம்புவோம்’ முஹம்மத்: ‘ஏன் நம்புவீர்கள்’
மக்கள்: ‘ஏனெனில் நீர் பொய் சொன்னதில்லை’ முஹம்மத்: ‘அவ்வாறாயின் இவ்வுலகுக்குப் பின்னால் வரும் இன்னொரு வாழ்வு பற்றியும் அங்கு காத்திருக்கும் தண்டனைப் பற்றியும் நான் உங்களுக்கு எச்சரிக்கிறேன்.’


"உங்களால் மலைக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க முடியாது. எனவே மலையின் மீது நிற்கும் என்னால் பார்க்க முடியும் என்பதாலும் , என் மீதிருக்கும் நம்பிக்கையாலும் என்னை நம்புகிறீர்கள்.


அது போலவே மறைவான உலகுக்கும் உங்களுக்கும் இடையே நான் நிற்கிறேன். அவ்வுலகோடு நான் நேரடித் தொடர்பு வைத்திருக்கிறேன். இப்போது நீங்கள் என்னை நம்புவீர்களாயின் நான் சொல்லும் அவ்வுலகையும் நம்புங்கள்"
     
*முஹம்மத் (ஸ-ல்) அவர்களின் பிரச்சாரத்தை உக்கிரமாக எதிர்த்த அபூஜஹில் கூட
“ முஹம்மதே நீர் ஒரு பொய்யர் என்று நான் கூறவில்லை; நீர் பிரச்சாரம் செய்யும் இச்செய்தி உண்மையானதல்ல என்றே நான் கருதுகிறேன்.



    * மற்றொரு கடும் எதிர்ப்பைக்காட்டிய குறைஷித் தலைவர் அபுஸுப்யான்  ஒரு முறை இஸ்லாத்தை பின்பற்றுவோருக்கு எதிரான தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கி உரோமப் பேரரசன் ஹிராக்ளியசின்  (Heraclius) அவைக்கு சென்ற போது அரசருக்கும் அவருக்கும் மத்தியில் நடந்த உரையாடலில்
   “ முஹம்மத் எப்போதும் பொய் பேசியதில்லை, தாம் கொடுத்த வாக்கை நிறைவேற்றிட ஒரு போதும் தவறியதுமில்லை" என்று கூறியவுடன், இதனைக்கேட்ட ஹிராக்ளியஸ்
 “ மனிதர்களுக்கிடையிலான விவகாரங்களிலேயே பொய் பேசியதில்லை என அனுபவபூர்வமாக தெரிந்து விட்ட பிறகு இவ்வளவு பொய்யை புனைந்திருப்பார் என்று எப்படிச் சொல்ல முடியும்?
 மனிதர்கள் பெயரால் பொய் சொல்ல விரும்பாதவர் கடவுளின் பெயரால் எவ்வாறு பொய் பேச எத்தனிப்பார்..?
   


     என்பதை அறியும் போதே முஹம்மது(ஸ-ல்)அவர்கள் நேர்மை,வாய்மை மிக்கவர்கள் என்பது வரலாற்று வெளிச்சத்தில்  அவர்களின் வாழ்வை உற்று நோக்குபவர்கள் எவரும் அறிந்துக் கொள்ளும் அழகான உண்மை.இங்கு மன்னர் ஹிராக்ளியஸ் கூறிய வாசகங்கள் மாற்று எண்ணங்கொண்ட நண்பர்கள் எண்ணிப் பார்க்க வேண்டிய மற்றுமொரு செய்தி!

மாநபியின் மணங்கள்
       அன்னார் அவர்கள் 8 க்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்துக் கொண்டதை விமர்சிக்கும் எவரும் அவர்களின் முதல் திருமணம் பற்றி வாய் திறப்பதில்லை.

விதவையான அன்னை கதிஜா (ரலி)அவர்களை அவர்களின் விருப்பத்தின் பேரிலே திருமணம் செய்து கொள்கிறார்கள்.அதுவும் அவர்களை விட ஏறத்தாழ 15 அகவை அதிக வித்தியாசத்தில்.,

  அவர்களின் மறைவுக்கு பின்னரே ஆயிசா (ரலி) உட்பட ஏனைய திருமணங்கள்  நபிகளாரின் 50 வயதிற்கு மேலாக தான் நடைப்பெற்றன. இந்நிலையே ஒப்பிடும் யாராக இருந்தாலும் 50 வயதிற்கு மேலாக தான் ஏனைய திருமணங்கள் நடைப்பெற்றது.

இதை அறியும் யாராகிலும் முஹம்மது (ஸ-ல்)அவர்களின் உடற் தேவையே விட மற்றுமொரு முக்கிய தேவைக்காகவே அத்தகைய திருமணங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதை யோசிக்க முற்படுங்கள் முடியாவிட்டால் முயற்சியுங்கள்,அதுதான் உண்மையும் கூட.,

 முஹம்மத் (ஸ்-ல்)அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தூதுத்துவ பணியின் அடிப்படை இறைவனின் வழிக்காட்டுதலுகிணங்க அனைத்து சமுதாய மக்களுக்கும் முன்மாதிரியாக அவர்களின் வாழ்வு விளக்கப்பட வேண்டும்.

 ஏற்று செய்வாதயினும்,விட்டு விலகுவாதயினும் அன்னார் அவர்களின் முழு அங்கிகாரம் வேத வெளிப்பாட்டின் அடிப்படையில் அச்செயலுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.வெளிப்புற நடவடிக்கை தொடர்பான செயல்பாடுகளை விளக்க ஏனைய நபர் சார்ந்த தலையீடு தேவையில்லை.

ஆனால் இல்லறம்,குடும்பம் சார்ந்த செயல் பாடுகளில் அதுவும் பெண்கள் சம்பந்தமாக விளக்கப்பட வேண்டிய செய்திகளுக்கு கண்டிப்பாக மூன்றாம் நபர் அங்கு தேவை.அதுவும் இல்லறத் தொடர்பான செய்திகளுக்கு தன் மனைவியாலே மற்ற எல்லா பெண்களையும் விட  கூச்சப்படாமல் அவைகள் தொடர்பான கேள்விகளை கேட்டு, தெளிவாக, விளக்கமான பதில்களை பெறமுடியும்.

 அதற்காகவே நபிகளாருக்கு திருமணங்கள் என்பதை அறியலாம்.(ஆயிசா(ரலி) மற்றும் ஏனைய மனைவிகள்  அறிவித்த இல்லற மற்றும் அது தொடர்பான செய்திகள் ஹதிதுகளில் நிறைந்து காணக்கிடப்பதே மேற்கூறிய செயலுக்கு சான்றாகவுள்ளது)

   மேலும்,அத்திருமணங்கள் யாவும் காரண,காரியங்களின் அடிப்படையில் அமைந்த சூழ்நிலையிலேயே மேற்கொள்ளப்பட்டது.
ஆயிசா(ரலி) அவர்கள் 6 வயது நிரம்பிய சிறுமியாக இருக்கும்போது நபிகளார் மணமுடித்ததை பெரிய கொடுமையாக சித்தரிக்க முயலும் சமுக பெண் நல(?) விரும்பிகள் அதற்கான சமுக சூழல் நிலையே ஒப்பிட்டு பார்க்க மறுப்பது ஏன் என்று தான்  தெரியவில்லை.

   இத்திருமண சம்பவம் நடந்தது கி.பி.7ம் நூற்றாண்டில் என்பது கவனிக்கத்தக்கது. அன்றைய அரபுகள் தங்களுக்கிடையில் உறவை வலுப்படுத்துவதற்காக திருமண ஒப்பந்தங்களை அதிகமாக ஏற்படுத்துவதை அவர்களின் வழக்கமாக கொண்டிருந்தனர்.

 அதன் அடிப்படையில் அபு பக்கர்(ரலி)அவர்கள் இறைத்தூதரும் தமது ஆருயிர் நண்பருமான அண்ணல் முஹம்மத் (ஸ-ல்)அவர்களுடன் தமது உறவை வலுப்படுத்திக் கொள்ள தமது மகளான ஆயிசா(ரலி) அவர்களை திருமணம் செய்து வைக்கிறார்கள்.எதில் எங்கே தவறு? ஓ அந்த 6 வயது...தான் பிரச்சனையோ...அதற்கு நிகழ்கால ஒப்பீடை அளவுகோலாக கொள்ளலாம்.

   நமது நாட்டில் தற்போதைய "பெண்களின் திருமண வயது 21 என அரசு அறிவிப்பு செய்கிறது.இன்னும் பத்து,பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சென்றால் பெண்களின் திருமண வயது 18 ஆக இருந்தது.இன்னும் சற்று முன்னோக்கி (யா? பின்னோக்கியா ?) சென்று நமது பாட்டி,தாத்தா கால திருமண வயதை அறிந்துக்கொண்டால்  இங்கு 6 வயது கேள்வியே எழாது.

  மேலும் அண்ணலின் அத்தைய திருமணம் சமுக,கால சூழ் நிலை சார்ந்தே மேற்கொள்ளப்பட்டது. எனவே தான் சம காலத்திய எதிரிகள் கூட இத்திருமணக் குறித்து விமர்சனம் எழுப்பவில்லை.

ஏனெனில் இது தவறென்றால் நபிகளரை எதிப்பதற்கு இந்த பால்ய விவாகம் போதுமான ஒரு ஆயுதமாக இருந்திருக்கும்.ஆனால் வரலாற்று சுவடுகளில்  இத்திருமணம் குறித்து எதிர்ப்பதிவுகள் எங்கேணும் எதிரிகளால் பதியப்படவில்லை. .

  மேற்குறிய ஆயிசா(ரலி) திருமண நிகழ்வுக்கான எடுத்து கூறப்பட்ட விளக்கம் இரண்டாம் நிலை காரணங்கள் தான்.ஏனெனில் பால்ய திருமணம் இஸ்லாமிய திருமண சட்டத்தில் பொது விதியாக ஆக்கப்பட வில்லை.இறைத்தூதருக்கு இறைப்புறத்திலிருந்து வழங்கப்பட்ட ஒரு சிறப்பு அனுமதி என்பதையும் விமர்சன விரும்பிகள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்,.

  அன்னை ஆயிசா(ரலி) நபிகள் திருமணத்திற்கு இதுவே முதற்காரணம்.
அதுபோலவே, அன்னை ஸைனப் (ரலி) அனனை ஸப்பிஃயா (ரலி) திருமணங்கள் எந்த சூழ்நிலையில் நடைபெற்றன எனபதையும் அறிந்துக் கொள்ள வேண்டும்.அவ்வாறு கட்டாயப்படுத்தி தான் அப்பெண்களை அண்ணல் முஹம்மது (ஸ-ல்) அவர்கள் மணமுடித்தார்கள் என்றால் அன்னாரின் மரணத்திற்கு பிறகே அனைத்து மனைவிமார்களும் மரணிக்கிறார்கள்.

 மாநபியின் மரணத்திற்கு பிறகு தெளிவாக,பயப்படாமல்  தம் கருத்தை சமுக முன்னிலையில் எடுத்து சொல்லலாம். எனவே நபிகளார் செய்தது தவறென்றால் இச்சமயத்தில் அவர்கள் குறித்து பகிரங்கப்படுத்தலாம். எந்த மனைவியாரின் ஓலக்குரல் வரலாற்றின் எந்த ஓரத்திலாவது ஒலித்திருக்கிறதா ?

போர்களும்,சில பொய்களும்
 இஸ்லாம் வாள்முனையால் பரப்பபட்ட மார்க்கம்,முஹம்மது (ஸ-ல்)அவர்கள் தமது அரசியல் இஸ்லாம் வளர்க்க வன்முறையே கையாண்டார் -என உலகமே நபிகள் நாயகம் (ஸ-ல்)அவர்கள் பிறப்புக்குப் பிறகு தான் வாளையோ, போர்களையோ பார்த்தது போல் பிம்பத்தை ஏற்படுத்த விரும்புவோர் அண்ணல் அவர்கள் போரில் கொண்டவை,கொன்றவை குறித்து பட்டியல் தருவார்களா?

 அவர்கள் மேற்கொண்ட போர்கள் அனைத்தும் தற்காப்பின் அடிப்படையிலோ, நிர்பந்தத்தின் அடிப்படையிலோ நடைப்பெற்றதே ஆகும். நடைப்பெற்ற  அப்போர்களில் எதிர்த்து போரிட்ட ஏனைய படைபலத்துடன் முஸ்லிம் படை வீரர்களின் எண்ணிக்கையே வரலாற்று வெளியில் ஒப்பிட்டு பார்த்தாலே அது புரிந்துப்போகும்.

       மேலும் முஹம்மது (ஸ-ல்)அவர்கள்   வாளைவிட கூர்மையான வன்முறையே கையிளேந்தினார்கள் என அப(பா)ய குரலேப்புவோர் நபிகளார் போர் குறித்த செயல் பாடுகள் வன்முறை அடிப்படையிலமைந்ததாக கூறும்  வரலாற்று ஆவண பதிவுகள் நபிகளாரின் சம காலத்தில் வாழ்ந்த எந்த அரசர் குறிப்பில் இருக்கிறது?

  நபிகளாரின் படையெடுப்பால் வறுமை கோட்டை விட தம் வாழ்வியல் கோடு வலுவிழந்த அத்தகைய நாடு எது?அகிம்சை வியாதிகள் ஆதாரம் தருவார்களா? இன்று நம் கண்ணெதிரே அமெரிக்க,அரோப்பிய மற்றும் ஏனைய நாடுகளில் இஸ்லாத்தை தழுவியோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கதே.அங்கு சென்று வாளேந்தி வன்முறையால் இஸ்லாமிய வருகையே அதிகரித்தவர்கள் யார்?,

இறுதித்தூதின் இறுதி நாட்கள்
    இறுதி மூச்சு உள்ளவரை அந்த மாமனிதர் தங்களின் சமுதாய மக்களின் நலனிலேயே அக்கறை செலுத்தலானார்கள்.இறைபோதனைகளை ஏற்று செயல் பட சொல்லிய அந்த தூயோனின் தூதர் மக்களுக்கு போதித்த தொழுகையாகட்டும், நோன்பாகட்டும் ஏனைய வழிப்படும் முறையாகட்டும். மக்களுக்கு சொல்லி தந்தவைகளை விட செய்து காட்டியது அதிகம்.

அவர்களின் மக்கா முழுவதுமான ஆட்சி,அதிகாரம் வந்த பின்னும் கூட அரசு கட்டிலில் ஏறி ஒய்யாரமாய் அமர்ந்திடவில்லை,தங்கமும்,வெள்ளியும் தனது காலடியில் கொட்டப்பட்ட பிறகும் கூட அவர்களின் மாளிகை மண் குடிலாகவே இருந்தது.சொடுக்கினால் ஏவல் புரிய காத்திருந்த மக்கள் கூட்ட மத்தியில் தனக்கும்,தன் குடுமப தேவைக்கு தானே கைகளால் உழைத்து சம்பாதித்து உண்ணலானார்கள்.

இறைத்தூதெனும் இமாலயப்பணியே  முழு உலகம் நன்மை பெற வெற்றிகரமாக செயல்படுத்திய போதிலும்., ஆறோடு ஏழாய் அண்ணல் அமர்ந்திருக்க.,"உங்களில் யார் முஹம்மது?" என கேட்பதே அவர் அவை நோக்கி வருவோரின் ஆரம்ப கேள்வியாய் இருந்தது.

 இன்றும் தலைவர் வர காத்திருக்கும் கூட்டம்,அமர கையசைக்கும் வரை அயராது நிற்கும்;ஆனால் அண்ணலோ தான் வரும்பொழுது தமக்காக எவரும் எழக்கூடாது என அன்றே உரக்கக் சொல்லிய உண்மை தலைவர், உலக தலைவர்.

பள்ளியில் பாடம் பயிலா அந்த உம்மி நபி உலகமெங்கேணும் ஒரு உருவ படத்தை கூட வடித்திட வாய்ப்பளிக்காத வாய்மையாளர்.கல்லில் கடவுளை காண்பவன் முட்டாள் என கூறியோர்களையே மறைவுக்கு பின் கல்லாய் சமைத்து, அவர்களுக்கு மாலைகளும்,அணிகலங்களும் வித்திடும் இன்றைய உலகம் கடவுள் ஒருவனே என ஒரிறைக் கொள்கையே ஓங்கி எழ செய்த அந்த முழு மனிதருக்கு இன்றவும் எங்கும் சிலையில்லா நிலை பார்த்து உலகமே வியக்கிறது.

மக்கமா நகரத்தின் அரசரான அந்த இறுதித்தூது விட்டுச்சென்ற மொத்த சொத்தின் மதிப்பு
   இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மரணத்தின்போது திர்ஹமையோ, தீனாரையோ, (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ) அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, வேறு எதையுமோ விட்டுச் செல்லவில்லை. தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும், தம் ஆயுதங்களையும், தர்மமாக ஆக்கி விட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர. (அறிவிப்பவர், அன்னை ஜூவைரிய்யா பின்த்து ஹாரிஸ்(ரலி) புகாரி, ஹதீஸ் எண்: 2739)


 வரலாற்று ஒளியில் முஹம்மதை ஆராய்கிறோம் என அடுக்கடுக்காய் ஆவணங்களை அலசும் அதிமேதாவிகள் இங்கு பதியப்பட்ட கடைசி இரு பத்திகள் குறித்த செய்திகளைப் பற்றி பறைச்சாற்றாதது ஏன்? இவை வரலாறு இல்லையா..?அல்லது அவர்கள் காணும் வரலாற்றில் இல்லையா...?

            இந்த வியப்பின் காரணமாக தான் நடு நிலை சிந்தனை கொண்ட அறிஞர்களும் தம் பார்வையில் அவர்களை குறித்து கூறும் போது .,

   "உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, முகம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். சமயஞ் சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே. ”

       M.H.Hart, 'The 100! A ranking of the most influential persons in history' New York, 1978, pp.33)

    " உயர்ந்த இலட்சியம், குறைவான வசதிகள், வியப்பூட்டும் வெற்றி ஆகிய இம்மூன்றும் தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் இந்த நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் "முகம்மத்" உடன் ஒப்பிட எவருக்குத்தான் துணிச்சல் வரும்? புகழ் மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள்; சட்டங்களை இயற்றினார்கள்; பேரரசுகளை நிறுவினார்கள்.

அவர்கள் செய்ததெல்லாம் இவைதாம்! பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்துவிட்ட உலகாயதக் கோட்டைகளைத்தான் அவர்களால் நிறுவ முடிந்தது. ஆனால் முகம்மத் போர்ப்படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள் ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டும் வெற்றி கொள்ளவில்லை; அவற்றுடன் அன்றைய உலகின் மூன்றிலொரு நிலப்பரப்பில் வசித்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களையும் ஈர்த்தார்.

வழிபாட்டுத் தலங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துகளையும், கொள்கைகளையும், நம்பிக்கைகளையும் ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களை பதித்தார். வெற்றியின் போது அவர் காட்டிய பொறுமை, பணிவு, சகிப்புத்தன்மை தாம் ஏற்றுக்கொண்ட ஒரு கருத்துக்காக தம்மையே முழுமையாக அர்பணித்துக்கொண்ட அவரது உயர் விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் இல்லாமல் உலகபற்றற்று வாழ்ந்து வந்த நிலை, அவரது முடிவில்லாத தொழுகைகள், பிரார்த்தனைகள், இறைவனுடனான மெய்ஞ்ஞான உரையாடல்கள் அவரது மரணம், மரணத்திற்கு பின்னரும் அவர் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்றோ மோசடி குணம் உடையவர் என்றோ பறை சாற்றிட வில்லை. மாறாக, சமயக்கொள்கை ஒன்றை நிலை நாட்டிட அவருக்கிருந்த மனோ உறுதியைத்தான் பறைசாற்றுகின்றன."
        - அல்போன்சு டி லாமார்ட்டின் - Historie de la Turquie, Paris, 1854, Vol II,pp 276-277)

  “மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் ஒருவரின் மிகச்சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல்கொண்டேன். (அதை படித்தறியும் போது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தை பெற்றுத்தந்தது வாள் பலமல்ல என்று முன்னெப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன்.

நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை, தம்மை பெரிதாக கருதாமல் சாதாரணமானவராக நடந்து கொள்ளும் உயர் பண்பு, எந்நிலையிலும் வாக்குறுதியை பேணி காத்த தன்மை, தம் தோழர்கள் மீது அவர் கொண்டிருந்த ஆழிய அன்பு, அவரது அஞ்சாமை, இறைவன் மீதும் தமது பிரச்சார பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவைதாம் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலக சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத்தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவைதாம் காரணமே தவிர வாள் பலம் அல்ல"
                                                                           - மகாத்மா காந்தி - (Young India)

               "சண்டையும் சச்சரவும் நிறைந்த குலம் கோத்திரங்களையும், நாடோடிகளையும் தமது முயற்ச்சியால் இணைத்து ஒரு இருபது ஆண்டுக்குள்ளேயே நாகரிகம் மிகுந்த- ஒரு பலம் பொருந்திய சமூகமாக எவ்வாறுதான் அவரால் உருவாக்க முடிந்ததோ     ”
                                                                     - Thomas_Carlyle, Heroes_and_Hero_Worship

    “ அவர்கள் எந்த நபித்துவ அந்தஸ்த்து தமக்குரியது என்று முதன் முதலாக வாதிடத் தொடங்கினார்களோ அதே அந்தஸ்த்தைதான் தமது ஆயுட்காலத்தின் இறுதியிலும் அவர் உரிமை கொண்டாடினார். முகம்மதை உண்மையான இறை த்தூதர் என்கிற அவரது வாதத்தை ஏற்றிட ஒவ்வரு வரும் சம்மதிப்பார்கள் என்று தைரியமாக நான் நம்புகிறேன்.     ”
                                                          - போஸ்வெர்த் ஸ்மித், Benjamin_Bosworth_Smith


       உதாரணத்திற்காகதான்  இங்கு சில மேற்கோள்கள் சர் வில்லியம் மூரின் இஸ்லாமிய எதிர்ப்பு மேற்கொள்களை மட்டுமே கண்டவர்கள் மேற்கண்டவர்கள் சொன்னதும் உண்மைதான் என்பதை உணர்வார்களா? நாயகத்தை தன் நரகல் எழுத்துகளால் உரசிப்பார்க்க விளைவோர் அவர்களின் பெயர் வாக்கியத்திற்கு கூட சிறிதும் கலங்கம் ஏற்படுத்த முடியாது  எழுத,படிக்காத தெரியாத அந்த தனி மனிதர் ஏனைய மத/அரசியல் சார்ந்த தலைவர்களை விட மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதால் தான் அவர்களை வரலாற்று நாயகனாய் பார்க்காமல் வரலாற்றின் நாயனாய் பார்க்கபடுகிறார்கள் .

  முஹம்மத் என்னும் அந்த முழு மனிதரை இறைத்தூதர் என்று ஏற்காவிட்டால் எந்த வித நட்டம் அவர்களுக்கில்லை.அவர்களை இழிவுப்படுத்திப் பார்க்க விளைவோருக்கே இருலகிலும் நட்டம் என்பதை முடிந்தால் உணர முயற்சியுங்கள்...
அண்ணலார் பற்றிய இவ்வாக்கம் குறித்து ஏதேனும் சந்தேகமிருப்பின் கீழ்க்காணும் சுட்டிகளை பார்க்கவும் (இவை யாவும்  ஏற்கனவே கொடுக்கப்பட்ட விளக்கங்கள்)

அன்னை ஸைனப் (ரலி) அவர்கள் திருமணம் குறித்து
http://abumuhai.blogspot.com/2008/09/blog-post_19.html 
அன்னை ஸபிஃயா(ரலி)அவர்கள் திருமணம் குறித்து
http://abumuhai.blogspot.com/2007_03_01_archive.html
பல திருமணங்கள் குறித்து
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/378/

போர்க்களம் குறித்து
http://abumuhai.blogspot.com/2009/08/blog-post.html
http://abumuhai.blogspot.com/2006_09_01_archive.html
http://www.satyamargam.com/363

ஜஸ்யா வரி குறித்து
http://abumuhai.blogspot.com/2008_06_01_archive.html
வாளால் பரப்பப்பட்ட மார்க்கமா இஸ்லாம்
http://www.tamilislam.com/TAMIL/misunderstood/spread_sword.htm
http://www.tamilislam.com/TAMIL/misunderstood/abuasia6.htm#61
அந்த மாமனிதர் தனக்காக யாரையும் பழிவாங்கியதில்லை
http://abumuhai.blogspot.com/2005_07_01_archive.html
தண்டனைகள் குறித்து
http://www.tamilislam.com/TAMIL/misunderstood/thandanai.htm

அடிமைகள் குறித்து
http://abumuhai.blogspot.com/2006_02_01_archive.html
http://www.annajaath.com/qa1-0205.pdf
பெண்களை அடிமைப்படுத்துகிறதா?
http://www.tamilislam.com/TAMIL/misunderstood/oppresses_women.htm

இஸ்லாம் குறித்த அடிப்படை விளக்கங்கள்
http://onlinepj.com/books/arthamulla_kelvikal/

                                                                                               அல்லாஹ் மிக்க அறிந்தவன்



    
read more "முஹம்மது(ஸல்)... என்னும் முழு மனிதர்."

Thursday, July 15, 2010

குர்-ஆன் முஹம்மது நபியால் உருவாக்கப்பட்டதா?

                                                                   ஓரிறையின் நற்பெயரால்...
        குர்-ஆன் முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்) அவர்களின் 40 வயதில் ஹிரா குகையில் ரமலான் மாத கடைசி பத்து இரவுகளில் ஓரிரவு இறை புறத்திலிருந்து வானவர் தலைவர் ஜீப்ரஹில் மூலமாக அருளப்பட தொடங்கியது.பின் சிறுகச்சிறுக அன்னாரின் வாழ்வு முழுவதும் 23 ஆண்டுகளில் சுழலுக்கேற்ப மக்கள் மேற்க்கொள்ளும் நடைமுறை செயல் பாடுகளால் உண்டாகும் நன்மைகளையும்,தீமைகளையும் பிரித்தறிவிக்கும் நோக்குடன் இறக்கியருளப்பட்ட வேதம் தான்  அல்குர்-ஆன்

          இன்று, இஸ்லாத்தில் உள்ள குறைகளை  விமர்ச்சிக்கிறோம் என கிளம்பிய சிந்தனைச்சிற்பிகளில் சிலர் இஸ்லாத்தையும்,முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்) அவர்களையும் தரம் தாழ்த்தி தமிழ் எழுத்தும் வெட்கி  தலை குனியும் அளவிற்கு காழ்ப்புணர்ச்சியின் மொத்த வடிவத்தையும் யுனிக்கோட்டில் எழுத்துருவாய் மாற்றி உலக வலையில் உலவ விட்டிருக்கிறார்கள்.

அவர்களின் வார்த்தை யுத்ததில் சுற்றி வளைக்கப்பட்ட அப்பாவி வாசகம் தான் நான் மேலே குறிப்பிட்ட இக்கட்டுரையின் தலைப்பு.
 குர்-ஆனை உருவாக்கியது முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்) என்று கூறுவோர்  மூன்று வாதங்களை அதற்கு காரணமாக  முன் வைக்கின்றனர்.

1.சமுகத்தில் தன் அந்தஸ்தை உயர்த்திக்கொள்வதற்காக      
2.தன் சுயநலத்திற்கு  தகுந்தாற்போல் சில வாசகங்கள் அமைத்துக்கொண்டார்கள்.மற்றும்
3.விஞ்ஞான,வரலாற்று செய்திகளை ஏனைய கிரகந்தகங்களிருந்து பெற்றார்கள்.


    *முதல் மற்றும் முதன்மை காரணமாக சொல்லப்படும் சமுக அந்தஸ்து பெறுவதற்காக குர்-ஆனை முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்)  உருவாக்கினார்கள் என்பது சரியா?


 அரபுக்குலங்களிலேயே குரைஷி என்னும் உயர்க்குடியில் பிறந்தவர்கள் முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்)  என்பது அரேபிய வரலாறு அறியா மக்கள் கூட அறிந்திருக்கும் மறுக்க இயலா உண்மை.ஆக பிறப்பிலேயே குல அடிப்படையில்(அவர்களால் இஸ்லாம் தொடரப்படுவதற்கு முன்பு) சமுகத்தில் உயர் அந்தஸ்து பெற்றவர்கள்,

மேலும் அவர்களின் நேர்மை,ஒழுக்கம், நம்பக தன்மை, வாக்குறுதி மாறமை, நீதி செலுத்தல் போன்ற உயரிய பண்புகளால் சம காலத்திய மக்களால் வாய்மையாளர், உண்மையாளர் எனப்பொருள்படும் "அல்-அமீன்,அல்-சாதிக்" என போற்றப்பட்டார்கள்.எனவே தன்னின் தனிப்பட்ட சமுக அந்தஸ்து மேம்பட வேண்டும் என்பதற்காகவே  இறைவனின் பெயரால் முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்)  அவர்கள் பொய்யுரைக்க வேண்டிய அவசியமில்லை,

சொல்லப் போனால் தன்னை இறைவனின் தூதுவர் என பிரகடன படுத்திய பின்னர் தான் அவர்கள் பொருள் மற்றும் செல்வ நிலை சேதப்படுத்தப்பட்டத்தோடு அவர்களின் தேகமும் சொல்லோண்ண கொடுமைகளை சந்தித்தது.

(நபியே!) இவர்கள் (இழிவாகப்) பேசுவது உம் நெஞ்சத்தை எப்படி நெருக்குகிறது என்பதை நாம் அறிவோம். (15:97)மேலும் பார்க்க:9:61, 96:9-19


            ஆக தனது பெயர் சமுகத்தில் உயர வேண்டும் என்ற நோக்கிற்காக குர்-ஆனை அவர்கள் உருவாக்கினார்கள் என்று சொல்வது சாத்தியமே இல்லை. மாறாக குர்-ஆன் இறைவனுடைய வார்த்தைகள் என்று சொல்வதால் அவர்கள் சந்தித்த துன்பங்கள் குறித்து மேற்கண்ட வசனங்களில் காணலாம்.

 *இரண்டாம் காரணம், குர்-ஆனில் நபிகளாரை பெருமை(கண்ணிய)ப்படுத்தும் வசனங்கள் ஏராளமாக உள்ளது உண்மைதான்.அதற்காக வேண்டி அவர்கள் தான் குர்-ஆனை உருவாக்கியவர்கள் என சொல்வது ஏற்புடையதா?


(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (21:107)

   உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள். (4:65)


இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார் இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர்.(33:6 ன் சுருக்கம்)


அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (33:21)


 முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்) அவர்கள் குறித்து மேலும் பார்க்க:36:69, 69:41, 69:42, 38:4, 2:143, 4:41, 22:78, 33:45, 73:15,5:19, 3:159, 9:61,128, 7:184, 15:89, 36:6, 53:56, 33:47, 33:40)

 
   மேற்கூறப்பட்ட வசனங்களில் நபியவர்களின் நிலைக்குறித்து உயர்வாக சொல்லப்பட்டாலும், அதற்கு காரணம் அவர்களின் முறையான கிழ்படிதல், பொறுமை,அவர்களின் நேர்மை, அனாதைகள் மற்றும் அமானிதங்களை பராமரித்தல், வாய்மை, இரக்கக்குணம் ஆகியவையே..

சுருங்கக்குறின் அல்லாஹ்வின் ஆணைப்படி அவனது ஏவல்,விலக்கல்களை முன்னிருத்தி  தங்களது வாழ்வை அவர்கள் அமைத்துக் கொண்டார்கள் என்பதாலேயே ஆகும்.இதனை அவர்கள் வரலாறு வழி நெடுக்கிலும் காணலாம்.
சரி., முரண்பாட்டு அடிப்படையில் உடன்பட்டு நபிகள் தான் தன்னை உயர்வு படுத்த இவ்வாக்கியங்களை குர்-ஆனில் உருவாக்கினார்கள் என வைத்துக் கொள்வோம்.,

கிழ்காணும் வாசகங்களும் குர்-ஆனில் தான் உள்ளது


(நபியே!) நீர் கூறும்; "நீங்கள் எதற்கு அசவரப்படுகின்றீர்களோ அது என் அதிகாரத்தில் இருந்திருக்குமானால், உங்களுக்கும் எனக்குமிடையேயுள்ள விவகாரம் உடனே தீர்க்கப்பட்டேயிருக்கும்; மேலும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்." (6:58)    

   அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்-அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,-(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?-அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.-(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.-ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.-ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,-அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.-அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.-எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார். (80:1 -12)

  (நபியே!) நீர் கூறும்; "அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நம்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது - நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை."(7:188)

     அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், "இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும்; அல்லது இதை மாற்றிவிடும்" என்று கூறுகிறார்கள். அதற்கு "என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக. (10:15)

   நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.(66:01)

      அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள்; நீர் கூறும்; "அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது - அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும்; திடுகூறாக அது உங்களிடம் வரும்; அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்; அதன் அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கின்றது - எனினும் மனிதர்களில் பெரும் பாலோர் அதை அறிய மாட்டார்கள்" என்று கூறுவீராக. (07:187)


 மேலும் பார்க்க:06:50,52, 75:16,109, 10:16, 33:52,59, 52:31, 3:144, 6:56,57&68)           
           
        மேற்கண்ட வசனங்களில் முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்)  அவர்களை கண்டிப்பது போலவும்,இறைவன்  ஆட்சியிலும்,அதிகாரத்திலும் உள்ள செயல்கள் குறித்து தனது மனதின் படி அவர்கள் சொல்ல அனுமதி இல்லை என்றும்,மறைவான ஞானம் குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது, நன்மையோ,தீமையோ தனது சுய நாட்டப்படி தான் மேற்கொள்ள முடியாது என்றும்- விளக்கமாக கூறப்படுகிறது.

     பொதுவாக தானே இயற்றிய நூலாக இருந்தால் ஒருவேளை அவர் தன்னைப்பற்றி புகழ்ந்து கூறாமல் வேண்டுமானால் இருக்கலாம்.ஆனால் தன்னை ஒருவர் கண்டித்தைப்பற்றியோ, அதிகாரத்தில் பங்கு இல்லை என்று கூறியது பற்றியோ  நூலில் குறிப்பிட மாட்டார். அதே அடிப்படையில் ஒப்பிடும்பொழுது

  குர்-ஆன் முஹம்மது நபிகள் (ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்) அவர்களால் உருவாக்கப்பட்டதாக இருந்தால் மேற்குறிப்பிடப்பட்ட வசனங்கள் குர்-ஆனில் இடம் பெற வேண்டிய அவசியமென்ன...? தன் நரகல் நடை எழுத்துக்கு நாகரிக வர்ணம் பூசுவோர் சொல்வார்களா?


     குர்-ஆனில் விஞ்ஞானம் குறித்து மிக தெளிவாக செய்முறை விளக்கத்தோடு எந்த ஒரு தகவலும் சொல்லப்படவில்லை.ஏனெனில் அதன் தலையாய பணி மனித சமுதாய முழுமைக்குமான நேர் வழிக்காட்டுவதே ஆகும். அஃதில்லாத விஞ்ஞான விவரிப்புகள் இரண்டாம் பட்சமே (மேலும் அறிவியல் தொடர்பான விபரங்களுக்கு  குர்-ஆனும்-விஞ்ஞானமும் என்ற இடுகை காண்க)
  
 *குர்-ஆனில் கூறப்படும் விஞ்ஞான உண்மைகள்,வரலாற்று நிகழ்வுகள் யாவும் முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்)  அவர்கள் முந்திய சமுகத்திலிருந்து ஒன்று திரட்டி அதை தொகுத்து குர்-ஆனாக வடித்தார் என்ற வாதம் குறித்துப்பார்ப்போம்.


 இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) "எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)" என்று கூறிற்று. (27:18)

"அல்லாஹ் - அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் (வேறு) இல்லை. (அவன்) மகத்தான அர்ஷுக்கு உரிய இறைவன்" (என்று ஹுது ஹுது பறவை கூறிற்று).27:26


    மேற்கூறிய வசனத்தில் சுலைமான் நபி அவர்கள் குறித்தும் அவர்களின் படை குறித்தும் கூறப்படுகிறது. ஒரு உதாரணத்திற்கு சுலைமான் நபி குறித்த பார்வை முந்தைய வேதங்களிலிருந்து திரட்ட பட்டது என வைத்துக்கொண்டாலும்  இங்கு பறவையும், எறும்பும் பேசியது குறித்த மூலத்தை எங்கிருந்து  நபியவர்கள் எடுத்தார்கள்...?

ஏனெனில் எறும்பும், பறவையும்  பேசுவதென்பது  சாதாரண செயலல்ல.. அதுவும் தெளிவாக காரணங்களோடு அது ஒரு விஞ்ஞான உண்மையும் கூட,அந்த அறிவியல் உண்மை அவர்களுக்கு எப்படி தெரிந்தது?

தோரயமாக சொல்லிருப்பார்கள் என சமாளிப்பதற்காக சொல்வார்களேயானால் அன்றைய நேரத்தில் அந்த சம்பவத்தை சொல்ல வேண்டிய அத்தியாவசியம் என்ன...?

மேலும் ஒரு சம கால உதாரணம்


    *அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்
அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள் 111:1-5)



    மேற்குறிப்பிடப்பட்ட வசனம் ஒரு தனிப்பட்ட மனிதனை குறித்து பேசுகிறது. நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்) அவர்களால் தொடரப்பட்ட இஸ்லாத்தின் ஆரம்ப காலகட்டத்தில் நபியவர்களுக்கும் ஏனைய இஸ்லாத்தை தழுவியோருக்கும் பெறும் தீங்கை விளைவித்தவன் தான் இவ்வசனம் குறிப்பிடும் அபுலஹப்.

அவன்  மேற்கொண்ட அட்டுழியங்களின் விளைவாக அவன் இஸ்லாமை ஏற்க மாட்டான்.மேலும் அவன் நரகமே செல்வான் எனவும் இவ்வசனம் கூறுகிறது. இவ்வசனம் அபுலஹப் உயிரோடிருக்கும் பொழுதே  அவனை குறித்து விளிக்கிறது. என்பதுதான் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய செய்தி .

முஹம்மது நபிகள்(ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்)  தன் கோப வெளிபாடாக இவ்வார்த்தையை சொன்னதாக கொண்டால்., அவன் (அபுலஹப்) நினைத்தால் குர்-ஆனை பொய்யாக்க வேண்டும் என்ற நோக்கில் நான் இஸ்லாத்தை ஏற்று கொண்டேன் என்ற ஒற்றை வாக்கியத்தை உதட்டளவில் சொல்லி பெருமானாரின் கரம் பிடித்திருந்தால்  போதும், இஸ்லாம் குறித்து இக்கட்டுரையே இங்கு தேவையிருக்காது,

ஏனெனில்... இஸ்லாமே அங்கு இருந்திருக்காது. ஏன் அவ்வாறு சொல்லவில்லை...? அதுமட்டுமா அவனது மனைவியேயும் சேர்த்தே இந்த வசனம் அவ்வாறு குறிப்பிடுகிறது... அவளாவது சொன்னாளா..? என்றால் அதுவும் இல்லை.. வரலாற்று ஆவணங்களை புரட்டி பார்த்து புட்டு புட்டு வைக்கும் புத்தக(நச்சு)ப்புழுக்கள் அவர்கள் வாய் பொத்திய வரலாறு சொல்வார்களா...?
 
  *இயேசுவை (ஈஸா அலை)கடவுளாக கருதிய சமயத்தில், வந்துதித்த முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்)  அவர்கள் இயேசு (ஈஸா அலை) சிலுவையில் அறையப்பட வில்லை என கிறித்துவர்களின்(?) அடிப்படை க்கொள்கைகளை தகர்த்தெறிந்து அன்னாரை   வணங்குவோருக்கு நரகம் தான் என வேதகாரர்கள் சமுகத்தில் பகிரங்கமாக பிரச்சாரம் புரிய காரணமென்ன...?


இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. (4:157)


    தம் கடவுட்கொள்கையின் பக்கம் அவர்களை வசப்படுத்த இவ்வாக்கியங்கள் அவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி தந்ததாக ஒருவேளை கூறினால் ... இயேசு (ஈஸா அலை) அவர்களும் தம்மைப் போன்றே இறைவனின் ஒரு தூதர் என சொல்ல வேண்டிய அவசியமென்ன...?


... அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்;. நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; (04:171 ன் சுருக்கம்) 
    மேலும் பார்க்க:04:172, 05:75, 19:30)

     *கீழ்காணும் வசனம் மனிதர்களை போல் ஜின்கள் என்ற படைப்பு குறித்து கூறுகிறது


 இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.(51:56) 
மேலும் ஜின்கள் குறித்து பார்க்க:(6:100, 15:27, 17:88, 27:17,39, 34:12,14,41, 46:29, 55:15,38, 72:1-15, 114:6)  
   
     முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்) அவர்கள் குர்-ஆனை இயற்றியதாக இருந்தால் ஜின்கள் குறித்த மூலங்களை எங்கிருந்து பெற்றார்கள்...? சாதாரணமாக நீதி போதனைகளை சொல்லுவதோடு நிறுத்திக் கொள்ளலாமே...ஜின்கள் குறித்து மக்கள் மத்தியில் சொல்லுவதற்கான அவசியமோ,அத்தியாவசியமோ ஏன் வந்தது...?


*அது போலவே மலக்குகள் என்ற படைப்பு குறித்தும்.,
எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான்.2:98


       எந்த மனிதரும் மலக்குகள் குறித்து அறியாதிருக்கும் பொழுது அவர்களின் தன்மை குறித்து மக்கள் மத்தியில் கூற காரணமென்ன...? கற்பனையாக (ஒரு வடிவம் கொடுத்து) தான் அவர்கள் கூறினார்கள் என்றால் அவ்வாறு கூற காரணம் என்ன...?அவ்வாறு சொன்னதால் அவர்கள் பெற்ற பொருளாதார பயன்பாடு என்ன...?   
               
 மேலுள்ள கட்டுரையில் எத்தனை கேள்விக்குறிகள் பல வாக்கிய முடிவுகளில் காழ்ப்புணர்ச்சியே கரைத்து குடித்தவர்களுக்கு அவை அனைத்தும் ஆச்சரியக்குறியை ஏற்படுத்தா விட்டாலும் பரவாயில்லை.அவர்கள் விமர்சிக்க முற்படும் இஸ்லாத்தில் அபாய குறிகளை ஆங்காங்கே ஏற்படுத்த வேண்டாம்.

         வெறுப்பில் வார்த்த சந்தேக சாவிக்கொண்டு  திறக்க முயற்சிக்காதீர்கள்: ஏனெனில் காற்றில் கட்டப்பட்ட கற்பனை கோட்டையல்ல, விமர்சன காற்று தினம் வந்து போக திறந்தே இருக்கும் உங்கள் எதிரில் உள்ள ஒற்றை மாடி வீடுதான்  இஸ்லாம்         

    இப்போது மீண்டும்  ஒருமுறை தலைப்பை உற்று நோக்குங்கள்...

          இன்னும்; "(இறந்து பட்டு) எலும்புகளாகவும், உக்கிப்போனவைகளாகவும் நாங்கள் ஆகிவிட்ட பிறகு, நிச்சயமாக புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுகிறவர்களாக?" என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.
(நபியே!) நீர் கூறும்; "நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகுங்கள்.
"அல்லது மிகப் பெரிதென உங்கள் நெஞ்சங்களில் தோன்றும் வேறொரு படைப்பாய் ஆகுங்கள்;" (எப்படியானாலும் நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்). "எங்களை எவன் (மறுமுறையும் உயிர் கொடுத்து) மீட்டுவான்?" என்று அவர்கள் கேட்பார்கள். "உங்களை எவன் முதலில் படைத்தானோ, அவன் தான்!" என்று (நபியே!) நீர் கூறும்; அப்போது அவர்கள் தங்களுடைய சிரசுகளை உம் பக்கம் சாய்த்து, (பரிகாசமாக) அது எப்போது (நிகழும்)? என்று கேட்பார்கள். "அது வெகு சீக்கிரத்திலும் ஏற்படலாம்" என்று கூறுவீராக! (17:49,50&51)

                                             அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "குர்-ஆன் முஹம்மது நபியால் உருவாக்கப்பட்டதா?"

Wednesday, June 23, 2010

மாநபிக்கு ஓர் மடல்

    மதீன மண்ணில் துயில் கொள்ளும் எங்கள் மஹமூதரே! தாங்கள் கண்ட  தொல்லைகளும்,கொடுமைகளும்,சமுக அவலங்களும் சொல்லிமாளாது.


    சாயம் போன சரித்திர பக்கங்களும் தங்களின் உலர்ந்த உதிர வரலாற்றை காய்ந்திடாமல் இன்னும் வைத்திருக்கிறது.
இறையாணை கொண்டு தமக்கு துன்பம் விளைவித்த கொலைகார மக்களை அழிக்க வாய்ப்பு வழங்கிய போதும் அவர்கள் அறியாதவர்கள் - எனக்கூறி அம்மக்களை சபிக்காமல் நேர்வழி பட வழிந்தோடும் குருதி வாய் துடைத்து கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்த  தூயோரே! அந்த தூயோனின் இறுதி தூதே!

நாயகமே சகிப்புத் தன்மையின் தாயகமே!
படைப்பினம் அல்லாது  படைத்தவனிடம் பாடம் பயின்ற பகுத்தறிவின் பெட்டகமே!  
உண்மைக்கு உயிர் தந்த உத்தமரே!

மனித பிறவிகளின் மத்தியில் நீங்கலோர் மனிதநேய பிறவி!
பொறுமையே உங்கள் மீது பொறாமை கொண்டது; பொறாமையோ உங்கள் பொறுமை கண்டு அகன்று சென்றது. !
வாய்மையும் தங்களிடம் வாழ்வு தேடியது,வலிமையோ வாஞ்சையுடன் துணை நின்றது ..!

உங்கள் உருவ படத்தை அறிந்தவர் உலகில் எம்மில்  இல்லை -உங்களை அறியாதவர் உலக வரைபடத்தில் எவரும் இல்லை

கலப்பின உறவு அது வெறும் கனவு என எண்ணி உறங்கிய சமுகத்தை சகோதர வீதியில் கைக்கோர்த்து சமமாய் நடக்க செய்த எங்கள் உயிரே!


உங்கள் உம்மத்தின் இந்த சமுக நிலை அறிவீரோ...?
*வாளேந்திய சமுகத்தை வாய்மையால் செதுக்கியவர் நீங்கள்
வாயே திறக்க கூடாதென வன்முறையால் கூறுபோடும் சமுகத்தில் நாங்கள்


*தீண்டாமையை திக்கற்ற திசைக்கு திருப்பியவர் நீங்கள்
யாரும் தீண்டினால் அவரை தீக்கு இரையாக்கும் தீய சமுகத்தில் நாங்கள்


*அநாதைகளுக்கும்,அமானிதங்களுக்கும் வரம்பின்றி அடைக்கலம் தந்தவர்  நீங்கள்
அமானிதங்களை திரும்ப கேட்போரை வரம்பு மீறி அனாதைகளாக்கும் வஞ்சக சமுகத்தில் நாங்கள்

*வட்டியை மூர்ச்சையாக்கி வணிகத்தை வளமுடன்  வாழ செய்தவர் நீங்கள்
வணிக வாயடைத்து வட்டியின் வயிறு வளர்க்கும் வழிகெட்ட சமுகத்தில் நாங்கள்


*பெண்ணினத்தை பொன்னென எண்ணி பொத்தி வைக்க சொன்னவர் நீங்கள்
பெண்ணையும்,பொன்னையும் வியாபார பொருளாக்கிய விரச சமுகத்தில் நாங்கள்      
  
*பெருங்கல்லும் சிரம் பணிய கண்டீர் நீங்கள்
சிறுக்கல்லுக்கு சிரம் பணிய காத்திருக்கும் பெருங்கூட்ட சமுகத்தில் நாங்கள்


*தொண்டர்களை ஒழித்து உயிர் கொடுக்கும் தோழர்களை உருவாக்கியவர் நீங்கள்
தொண்டர்களை ஒழித்து உயிர் எடுக்கும் குண்டர்களை உருவாக்கும் கேவல சமுகத்தில் நாங்கள்


*பாவத்தின் சாயல் கூட அறியாதவர் நீங்கள் .,
பாவ முட்டைகளை பொதிகளேன  சுமக்கும் கழுதை சமுகத்தில் நாங்கள்


*உங்கள் நிழல் கூட புகழ் மீது விழ மறுத்த மாமனிதர் நீங்கள்.  
புகழ்தரா மக்களை நிழல் கொண்டு அழிக்கும் நீதியற்ற சமுகத்தில் நாங்கள்


*எளிமையை தோழானாக்கி,பகட்டை பரதேசியாகிய பகலவன் நீங்கள்
எளிமையை ஏளனம் செய்யும் பதவி மோக சமுகத்தில் நாங்கள்  


*பெருமை -இறை ஆடை அது வேண்டாம் இங்கே நமக்கு என உரக்க கூறினீர்கள் நீங்கள்
அவ்வாடையை அகங்கார அலமாரியில் அழகாய் அடிக்கி உடுத்தி மகிழும் உதாசீன சமுகத்தில் நாங்கள்


     மதீனா, மக்கள் பலரை புனிதராக்கியது மாநபி தங்களின் வருகையால் மதீன  மண்ணின் புழுதி கூட புனிதமாகியது

  எங்கள் இரட்சகனின் தூதர் ரவ்லாவை காண அந்த மதீன புழுதிகளோடு நானும் காத்திருகின்றேன் இறை நாடினால்...     
               
 உங்களை வர்ணிக்க வார்த்தைகள் ஏங்குகின்றன., வாய்ப்புக்கு மொழிகளும் காத்திருக்கின்றன
நான் என்ன செய்யஅடியேனுக்கு அவ்வளவே அறிவு!
முதலோனின் இறுதித் தூதே,இறுதி நாளின் முதலாமானவரே.,    நீங்கள் எங்களோடு இருந்திருக்க கூடாதா...? எல்லாம் வல்லவனின் எண்ணம் தானே எல்லாமாகிறது.உங்கள் மீது சாந்தியையும்,சமாதானத்தையும் வல்ல ரஹ்மான் வாரி வழங்குவானாக! உங்களோடு சுவர்க்கத்தில் இருக்கும்  நஸிபை  எங்களுக்கும் நாடுவானாக!! 

குறிப்பு:
எந்த ஒரு வரியும் இறைவனுக்கு இணைவைக்கும் விதத்திலோ,அவனது தன்மைக்கு சமமாகவோ வர்ணிக்கபடவில்லை,பொய்யோ,கற்பனையோ இதில் இடம் பெறவில்லை,மேலும் ஹதிஸ்களின் அடிப்படையிலேயே உருவாக்கபட்டது.  
read more "மாநபிக்கு ஓர் மடல்"

Sunday, June 13, 2010

யார் அந்த கல்கி அவதாரம்?

     இந்துக்களின் வேதங்களில் மிக பிரபலமாக அறியப்படும் "கல்கி அவதாரம்" குறித்து -அவர் பூமியில் குழப்பங்களும்,கொடுமைகளும் மலிந்து காணப்படும் பொழுது தர்மத்தை நிலைநாட்ட அவதரிப்பார் எனவும் நம்பபடுகிறது.இனி அவர் பூமியில் பிறக்க போவதில்லை.,ஆம்! அவர் ஏற்கனவே பிறந்து விட்டார் ... யார் அவர் ?
ஓர் ஆய்வு பார்வை ., 

எப்போது வருவார் கல்கி அவதார்...

  ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும்கடைசி அவதாரமான கல்கிஇறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.

இதை நான் சொல்லவில்லைசமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின்இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால்அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடுஅந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.
ஆனால்கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுபிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம்வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது,தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும்ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.
பண்டிட் வைத் ப்ரகாஷபன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தைஇதே போல ஆய்வு செய்யும் எட்டு கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும்முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்துபலமான ஆதாரங்களினால்,இப்புத்தகத்தின் தகவல்முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.
இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள்குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம்மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார். ஆதனால்,ஹிந்துக்கள்இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல்ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்புஇவ்வுலகில் உதித்துஇறைத்தூதை எத்தி வைத்துவாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்கபண்டிட்தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.
1.வேதங்கள்கல்கி அவதாரம் தான்பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இதுகடைசி தூதர்,முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.
2.ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படிகல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.
3.ஹிந்து புனித நூல்களில்கல்கி அவதாரத்தின் தந்தையைவிஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால்,இறைவன்அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடுபகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.
ஆகவிஷ்னு பகத் என்பதுஅல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில்அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்குசாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக,இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது,உறுதிப்படுகிறது.
4.அதோடுகல்கி அவதாரம்ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும்,வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆகஇது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.
5.கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன.. இதுவும்மிக உயரியமதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால்முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.
6.கல்கி அவதாரத்துக்குஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆகமக்காவிலேயேஅல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.
7.மேலும்கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும்,அதன் மூலம் அவர்இவ்வுலகத்தையும்ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மிஃராஜ்’ இரவில்புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானதுஇதைத்தானே சொல்கிறது?
8.அதோடுகல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும்,இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்குபத்ரு போர்க்களத்தில்இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.
9.மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவதுகல்கி அவதாரம்,குதிரையேற்றத்திலும்அம்பெய்துவதிலும்வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார்.. இந்த இடத்தில்பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பதுஅதி முக்கியமானகவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவதுகுதிரைவாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டதுதற்போதுநவீன ஆயுதங்களானதுப்பாக்கிகள்,பீரங்கிகள்ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால்வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில்வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பதுபுனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.
பேராசிரியர் பண்டிட் வைத் ப்ரகாஷ் எழுதியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது மீர் அப்துல் மஜீத்.
தமிழ் மொழி பெயர்ப்பு: சகோதரி ஸுஹைநா (சுமஜ்லா)
நன்றி :www.islamiyadawa.com
read more "யார் அந்த கல்கி அவதாரம்?"

Categories

அமல்கள் அறியாமை அறிவியல் அல்லாஹ் அவதாரம் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உஜைர் நபி உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் எதிரி ஏன் இஸ்லாம் ஏற்றத்தாழ்வு ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தஜ்ஜால் தண்டனை தாய் திருமணங்கள் தேவை நன்மைகள் நபிமொழி நரகம் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மனசாட்சி மனம் மனிதன் மனிதர்கள் மரணம் மறுமை மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வானவர்கள் வாழ்க்கை விதி விமர்சனம். விளக்கம் ஹராம்