"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."
Showing posts with label குர்-ஆன். Show all posts
Showing posts with label குர்-ஆன். Show all posts

Wednesday, June 01, 2011

உஜைர் நபி வரலாற்றில் பிழை.?


                                            ஓரிறையின் நற்பெயரால்.,
            இன்று நேற்றல்ல.. மனித அறிவு இந்த மண்ணில் மதியிழக்கும் போதெல்லாம் அதற்கு நேர்வழி வழங்கும் இஸ்லாமிய வாழ்வியல் நெறியை குறைகாண்பதோடு, தனது அதி மேதாவித்தனமாக (அறைகுறை) ஆய்வறிவில் குர்-ஆனில் அங்காங்கே, கைவைத்து வரலாற்றுப் பிழையும், வாழ்வியல் பிழையும் நிறைந்திருக்கிறது என்ற தன் மனம்போனப்போக்கில் வெளியிடும் போலி குற்றச்சாட்டில் ஒன்று தான் நாம் இங்கு பார்க்க போவது.,

உஜைர் நபி குறித்து குர்-ஆன் கூறுவது என்ன...?


  யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?  (9:30)


    இந்த வசனத்தை மேற்கோள் காட்டி ஈஸா நபியை கிறித்துவர்கள் கடவுளின் மகனாக கூறுவது உண்மை தான், ஆனால் நபி உஜைரை எந்த யூதனும் கடவுளின் மகனாக கூறவில்லையே...ஆக குர்-ஆனின் வரலாற்றுப்பிழை என நிறுவ முயல்கின்றன சில திரித்துவ கொள்கைகள்.,

இங்கு உஜைர் நபியை கடவுளின் மகனாக யூதர்கள் சொன்னார்களா என்பதை பார்க்கும் முன்பு சொல்ல வேண்டிய காரணம் குறித்து அறிந்தாலே.. இது வரலாற்றுப் பிழை இல்லை வழிகெட்டவர்களின் பார்வையில் பிழை என்பதை அறியலாம்.,அதற்கு முன்பாக,
குரானிய பார்வையில் நபி ஈஸா அலை மற்றும் உஜைர் நபி குறித்த ஓப்பிட்டு பார்வை


முதலி நபி ஈஸா அலை அவர்கள் குறித்து பார்ப்போம்.,

அவர்களது பிறப்புக்குறித்து,
         அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே. அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப்பின் "குன்" (ஆகுக) எனக் கூறினான்;. அவர் (மனிதர்) ஆகிவிட்டார் ((3 :59))
மர்யம் அலை இறைவனிடம் "என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?" 
(அதற்கு)  "அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக' எனக்கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது. ((9 :47))


  மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார் ((3:46))

மேலும், அதை தொடர்ந்த வசனங்களில்,
     இஸ்ராயீலின் சந்ததியனருக்கு அவரை தூதராகவும் ஆக்குவான், 
"நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்;. நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்;. அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்;. அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்;. நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன்
பின் மர்யம் அலை அவர்கள் நபி ஈஸாவை பெற்றெடுத்தப்பின் மக்கள் முன்பாக அவர்கள் தொட்டிலிருந்தவாறே மக்களை நோக்கி
நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான். ((19 30))


ஆக நபி ஈஸா அலை அவர்கள்

  • ஏனையோரை போல் தாம்பத்திய உறவில்லாமல் இறைவனின் பிரத்தியேக ஆற்றல் மூலமாக அவனது ரூஹ் (ஆன்மா) கொண்டு படைக்கப்பட்டவர்கள்
  • சிறுபிரயாத்திலேயே... மக்களுடன் பேசினார்கள்.
  • சாதாரண களிமண்ணை பறவையாக்கினார்கள்
  • கடும் நோயுடையவர்களை வெறும் கைகளால் தடவியே குணப்படுத்தினார்கள்.
  • எல்லாவற்றையும் விட மிக பெரும் அற்புதமாக இறந்தவர்களை உயிர்பித்தார்கள்.

   
    நபி உஜைரை குறித்து பார்ப்போமேயானால், குர்-ஆனில் இந்த ஒரு வசனம் தவிர (9 30)  அறிந்த வரையில் வேறெங்கும் காணக்கிடைக்கவில்லை, அவர்கள் குறித்து சில ஹதிஸ்களே இருக்கிறது


குர்-ஆனின் விளக்கவுரை நூல்களில் ஒன்றான இப்னு கஸீர் நபி உஜைரை பற்றி பின்வருமாறு கூறுகிறது,

 (எஸ்ரா) கி.மு. 487 வாக்கில் யூதர்களிடையே வாழ்ந்த நல்ல மனிதர் ஒருவரின் பெயர். இவர் ஓர் இறைத்தூதாரா என்பது தொடர்பாகக் கருத்து வேறுபாடு உள்ளது. புக்த்தநஸ்ஸர் (நெபுகாட்நேஸர்- கி.மு 561) ஜெருசலத்தைக் கைப்பற்றி (கி.மு 568) அழித்தப்பின், தவ்ராத் (தோரா) வேதப் பிரதிகள் அனைத்தும் காணாமல் அல்லது அழிந்து போய்விட்டன.அப்போது உஸைர் (அலை) அவர்கள் தமது நினைவில் இருந்த தவ்ராத்தை எழுதினார்கள். இதனால் யூதர்கள் உஸைரை நபி மூஸா (அலை) அவர்களுக்கு இணையானவராகக் கருதினார்கள்.


  இவர்களை இறைத்தூதராகவே கருத்தில் கொண்டே நாம் பார்ப்போம்

  • உஜைர் நபி அவர்கள் தவ்ராவை மீண்டும் மக்கள் மத்தியில் எடுத்தியம்பினார்கள்
  • மக்கள் மூஸா அலை அவர்களுக்கு இணையாக கருதியிருந்தனர்.

       ஆக நபி ஈஸாவை போல "அற்புத செயல்கள்" என்ற பிரத்தியேக பண்புகளால் நபி உஜைர் அவர்கள் தன்னை இனங்காட்டவில்லை.
மாறாக மேற்குறிப்பிட்ட சம்பவத்தின் மூலமே அச்சமுக மக்களுக்கு மத்தியில் நன்கு பரிச்சயம் ஆனார்கள்.


    ஆக இவ்விரு இறைத்தூதர்களின் வாழ்வியல் நிகழ்வுகளை வைத்து ஒப்பு நோக்கும் போது நபி ஈஸா போன்று அசாதாரண செயல்கள் (ஒன்றுக்கூட) உஜைர் நபி புரியவில்லை என்பது தெளிவு!. எனவே அவர்கள் கடவுளின் மகன் என்றழைக்கப்படுவதற்கு நிரந்தர வாய்ப்புகள் குறைவு அதாவது,
    இறைவனின் வேதத்தை நினைவில் நிறுத்தி அதை புரனமைப்பு செய்ததே அவர்களின் பிரதான செயல். இச்செயலை அஃது சாதாரண மனிதரால் செய்ய இயலாது எண்றெண்ணியே இதை தெய்வீக செயலாக அங்கிகரித்து அம்மக்கள் அவர்களுக்கு ஒரு தெய்வீக அந்தஸ்தை கொடுத்து அவர்களை கடவுளின் மகன் என்றழைக்கலாயினர்.,
 
                ஆக இவர்கள் ஒரு குறிப்பிட்ட இட, சமுக சூழ்நிலையில் மட்டுமே மேற்கண்ட நிகழ்வை செயல்படுத்தி அம்மக்களிடையே வாழ்ந்ததால் அற்புத மிகுதியால் தன்னை நிலை நிறுத்திய நபி ஈஸாவைப்போல கடவுளின் மகன் என்ற தொடர் அந்தஸ்தை அக்காலம் தாண்டி அவர்கள் பெறவில்லை... ஆக இங்கு வரலாற்றுப் பிழைக்கோ /புரட்டுக்கோ வேலையே இல்லை.,
     
    இதையும் தாண்டி தங்களது திரி(பு)த்துவ வாதத்தை முன்னிருத்தி எந்த யூதருமே..... நபி உஜைரை கடவுளின் மகனாக கூறவில்லையென்று மீண்டும் முரண்பாட்டு அறிவை முன்னிருத்தினால்....அதற்கு அடுத்த வசனமே அவர்களுக்கு பதில் சொல்ல காத்திருக்கிறது...இல்லை இல்லை அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறது


அத்தவ்பா அத்தியாயம் 9 வசனம் 31 ல் அல்லாஹ் 


   அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; 
 
  இங்கு கிறித்துவர்கள் நபி ஈஸாவோடு சேர்த்து பாதிரிகளையும், சந்நியாசிகளையும் கடவுள்களாக ஆக்கிக்கொண்டதாக குர்-ஆன் கூறுகிறது. ஆனால் எந்த கிறித்துவரும் எந்த பாதிரிகளையும் சந்நியாசிகளையும் இன்று கடவுளாக கொள்ளவில்லை.,
  உஜைர் நபி குறித்து விழி அகல வரலாற்றைத் தோண்டியவர்கள்., இந்த வசனம் பொய்யுரைக்கிறது என தற்கால ஓப்பிட்டில் திறம்பட கூறலாமே.. போலி சிந்தனை இவ்வசனம் குறித்து சிறிதும் வாய் திறக்காதது ஏன்..?
விளக்கம் வேண்டுமானால் தெளிவாக இருக்கிறது

    மேற்கூறிய உஜைர் நபி குறித்த அதே பார்வை தான் இங்கேயும்., ஒரு குறிப்பிட்ட இட மற்றும் சமுக சூழ்நிலையில் வாழ்ந்த கிறித்துவர்கள் அஃது அந்த தருணத்தில் மேற்கூறிவர்களை கடவுளாக கொண்டனர் என்பதே மிக்க பொருத்தும்... சரி இருக்கட்டும் இன்றும் நபி ஈஸாவை கடவுளின் மகனல்ல நபி முஹம்மதைப் போல அவரும் கடவுளின் தூதர் என குர்-ஆன் கூறுவதை நம்பும் கிறித்துவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...?

       அவர்களின் கூற்று குர்-ஆனுக்கு ஆதாரமாக இருக்கிறதா....அல்லது கிறித்துவ கொள்கைக்கு மாற்றமா இருக்கிறதா? அவர்களை எந்த பட்டியலில் சேர்க்கிறது  உலகாதாய அறிவு...உஜைர் நபி குறித்து உரத்து கூறியவர்கள்,,,, மேற்கண்ட வினாக்களுக்கும் விடையளிக்கட்டும்...ஆங்கில எண்ணங்களுக்கு தங்கள் தளங்களில் எழுத்து வர்ணம் பூசுவோர்., ஒரு கணம் எழுத்தோடு சேர்த்து சிந்தனையும் விதைக்க முற்படட்டும்...  


 தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். ((9 32))

                                                                                 அல்லாஹ் மிக்க அறிந்தவன்

read more "உஜைர் நபி வரலாற்றில் பிழை.?"

Sunday, November 21, 2010

இறைவனின் எதிரியா -இப்லிஸ்?

                                          ஓரிறையின் நற்பெயரால்

     குர்-ஆனையும் இஸ்லாம் கூறும் கோட்பாடுகளையும் சரிவர புரிந்துக்கொள்ளாமல் குறை காணும் நோக்கிலோ அல்லது காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையிலோ அணுகும் பலரின் அறிவின் மிகுதி உருவாக்கிய  வாதம் தான் \
இப்லிஸ் இறைவனுக்கு எதிரி  ,இப்லிஸ் இறைவனுக்கு எதிரியாக இருக்கிறான் எனும்போது அனைத்தும் முடியுமென்று சொல்லும் கடவுளுக்கே எதிரியா...? பார்த்தீர்களா இங்கு கடவுளுக்கே எதிரி இருக்கும் போது நம்மை எவ்வாறு காப்பாற்றுவார்  என்று தங்களது திரிபுத்துவ வாதத்தை நிறுவ முயல்கின்றன சில நாத்திக சிந்தனைகள்

  உண்மையாக இப்லிஸ் இறைவனின் எதிரியா? அவன் குறித்த குர்-ஆன் வசனங்கள் என்ன சொல்கிறது ... பார்ப்போம்.


 இறைவனின் படைப்பினங்களை மூன்று பெரும் பிரிவாக பிரிக்கலாம்


1. மலக்குகள் (வானவர்கள்)
2. ஜின்கள்                
3. மனிதர்கள்       
       

இப்லிஸ் குறித்து இப்னு கஸீர் இவ்வாறு விளக்கமளிக்கிறது

  சைத்தான்களின் தந்தையின் பெயர்.ஜின் இனத்தைச் சேர்ந்தவனான இவனுக்குச் சந்ததிகளும் சேனைகளும் உண்டு. மறைவாக இருந்துக்கொண்டு மனிதர்களை வழி கெடுப்பதே இவர்களின் தலையாய பணியாகும்.

     இப்லிஸ் என்ற பதம் ஜின்னினத்தின் மூல பிதாவை குறிக்கப் பயன்படுத்த பயன்படுத்தப்பட்டாலும் பொதுவாக தீய செயல் புரிய தூண்டும் ஜின்களுக்கு இப்பெயர் பொருந்தும்.மேலும்


நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான். (55:15)

  இறை படைப்பில் இரண்டாம் நிலை படைப்பான ஜின்கள் நெருப்பிலிருந்து படைக்கப்பட்டதாக குர்-ஆன் இயம்புகிறது. இத்தகைய படைப்பான இப்லிஸ் மீது இறைவன் கோபமுற காரணமென்ன?

    இறைவன் மலக்குகளையும், ஜின்களையும் படைத்தபிறகு மூன்றாம் படைப்பான மனித படைப்பின் முதல் மனிதராக ஆதம் (அலை) அவர்களை படைத்த போது அந்த முதல் மனிதருக்கு மலக்குகள் மற்றும் ஜின்களின் தலைவனாக இப்லிஸை சிரம் பணிய பணித்தான். மலக்குகள் சிரம் பணிந்தார்கள் இப்லிஸோ சிரம் பணிய மறுத்தான் அந் நிகழ்வை குர்-ஆன் சூரா அல்-ஹிஜ்ரில் பின்வருமாறு எடுத்துரைக்கிறது
 
   (நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்; "ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்" என்றும்,
அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்து ஊதியதும், "அவருக்கு சிரம் பணியுங்கள்" என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)!
அவ்வாறே மலக்குகள் - அவர்கள் எல்லோரும் - சிரம் பணிந்தார்கள்.
இப்லீஸைத்தவிர - அவன் சிரம் பணிந்தவர்களுடன் இருப்பதை விட்டும் விலகிக்கொண்டான்.
"இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன?" என்று (இறைவன்) கேட்டான்.
அதற்கு இப்லீஸ், "ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை!" என்று கூறினான்.
"அவ்வாறாயின், நீ இங்கிருந்து வெளியேறிவிடு நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாக இருக்கிறாய்."
"மேலும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உண்டாவதாக!" என்று (இறைவனும்) கூறினான். (15:28 லிருந்து 35 வரை)
     
   இப்லிஸ் இங்கு இறைவன் புறத்திலிருந்து கோபமுற காரணம் அவனை வணங்கவில்லையென்பதற்காக அல்ல மாறாக தன்னை விட தாழ்ந்த படைப்பாக மனிதப் படைப்பை கருதி ஆதமுக்கு சிரம் பணிய மறுத்தால் தான். ஆக அவனது ஏவலுக்கு கட்டுபடாததே இங்கு இறைவனின் சாபம் அவன் மீது உண்டாக பிரதான காரணம் (பார்க்க குர்-ஆன் 07:12)

இவ்விடத்தில் இரு முக்கிய கேள்வி தோன்றலாம்

(1) மலக்குகள் போல் ஏன் இப்லிஸ் சிரம் பணியவில்லை?
(2)இறைவன் நாட்டப்படிதான் எல்லாம் நடக்கிறது என்றால் இங்கு இப்லிஸ்  அஃது சிரம் பணியாமல் இருந்தற்கு இறைவன் தானே காரணம்?


   * மலக்குகள் இறைவனின் சொல்லுக்கு சிறிதும் மாறு செய்யாத நிலையுடனே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு படைப்பாகும். இறைவன் ஏவியவற்றை செய்வார்கள்.அவன் தடுத்தவற்றை விட்டு விலகி கொள்வார்கள்.


  அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (66:06 ன் சுருக்கம்)
 
  அஃதில்லாமல் ஜின்கள் மலக்குகள் போலன்றி மனிதன் போன்று எதையும் சிந்தித்து செயல்படுத்தும் முறையில் இறைவனால் சிந்தனையுடன் படைக்கப்பட்ட படைப்பு. எனவே தான் மலக்குகள் இறை சொல்லுகிணங்க ஆதம்(அலைக்கு) சிரம் பணிய இப்லிஸோ (ஜின்) இறைவன் சொல்கிறான் என்றும் பாராமல் தன்னைவிட கீழ் நிலை படைப்புக்கு சிரம் தாழ்த்துவதா என இருமார்பு கொண்டான்.

 அவனது சிந்தனை இறைவன் சொல்லுக்கு மாறு செய்ய தூண்டியது.


"நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?" என்று அல்லாஹ் கேட்டான்; "நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்" என்று (இப்லீஸ் பதில்) கூறினான். (7:12)

  * அடுத்து இறை நாட்டப்படி தான் எல்லாம் நடக்கிறது.,என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இறைவன் நன்மை -தீமைகளை ஆராய்ந்து உணரும்  பொருட்டு  சில சோதனைகளை ஜின் -மனித  மனங்கள் மத்தியில் ஏற்படுத்துகிறான். ஏனெனில் நாம் அவற்றை பகுத்து ஆய்ந்து இது சரியானதா? அல்லது தவறானதா? என்று அறிந்து அதை செயலாற்றுவதற்காக.,

     உதாரணத்திற்கு இப்போதும் நாம் காண்கிறோம் சிலர் இறை மறுப்பாளானாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களின் செயல்களும் அவர்கள் சரியென்று காணும் அவர்களின் எண்ணமுமே தான் காரணமே தவிர இறைவன் அல்ல ஏனெனில் இறைவனின் ஏவல்களும் -விலக்கல்களும் மிக தெளிவாக நம்மை வந்தடைந்துவிட்டது மேலும் எவர்களுக்கும் எந்த ஒரு செயல் குறித்தும் சுயமாய் முடிவுகளை எடுக்கும் உரிமைகளையும் இறைவன் கொடுத்திருக்கிறான்.

  எனவே தமது அறிவுக்கு உட்பட்டே இது நல்லது இது கெட்டது என நம்மால் முடிவெடுக்கும் நிலை இருக்கிறது இதே நிலையே தான் இறைவன் அங்கு இப்லிஸுக்கும் கொடுத்தான். தனது சிற்றறிவால் படைத்தவன் கூற்றை ஏற்க தயங்கினான்

      அவ்வாறு இறைவனின் கோபத்திற்கு ஆளான இப்லிஸ் அடுத்து இறைவனிடம் கேட்டது குறித்து குர்-ஆன் கூறுகிறது.ஆதி மனிதருக்கு சிரம் தாழ்த்த மறுத்ததால் தன்னை சபித்த இறைவனிடம் இப்லிஸ் அவகாசம் கேட்கிறான் எதற்கு? இறுதி நாள் வரை வருகின்ற மனிதர்கள் யாவரையும் வழிகெடுத்து இறைவனுக்கு மாறு செய்வதற்காகவே... அதற்கு இறைவனும் ஒப்புதல் அளிக்கிறான்.

     "என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!" என்று இப்லீஸ் கூறினான். (15:36)
"நிச்சயமாக, நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவானாவாய்;" (15:37)  
(அதற்கு இப்லீஸ்,) "என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன். (15:39)

       இங்கு ஒரு விசயம், இப்லிஸூக்கென்று எந்த ஒரு பிரத்தியேக சக்தியும் இல்லை. மாறாக இறைவனிடத்தில் வேண்டி இறைவன் அவனுக்கு அத்தகைய அவகாசத்தை தருகிறான். எனவே இங்கு ஆற்றல் இறைவனால் தான் இப்லிஸூக்கு வழங்கப்படுகிறது என்பது தெளிவு!.அவ்வாறு இப்லிஸூக்கு அத்தகைய ஆற்றல் வழங்கப்பட்ட போதிலும் அவன் குறித்தும் அவனது செயல்களின் விளைவு குறித்தும் மனித சமுதாயத்திற்கு மிக தெளிவாக எச்சரிக்கை செய்கிறான்.


மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (2:168) 

மேலும் பார்க்க:2:208, 5:91, 6:142, 7:27, 7:200, 16:36, 19:44)

    இவ்வாறு மிக தெளிவாக வழிகெடுக்கும் ஜின்கள் குறித்து மனிதர்களுக்கு எச்சரிக்கை செய்து அவனது சூழ்ச்சிக்கு இரையாகாமல் உங்களை காத்துக்கொள்ள்ளுங்கள் என்றே  கட்டளை பிறப்பிக்கிறான்., காவல் நிலையத்தில் இருக்கும் அதிகாரிகள் திருட்டு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க சொல்வார்களோ அதுப்போல.
  ஏனெனில் திருடன் காவல் நிலையத்தில் திருட முனைவதில்லை மாறாக ஊர் மக்களின் வீடுகளில் தான் திருடுவான். (இது ஒரு அளவுகோல் அல்ல ஒரு உதாரணமே) ஆக,இங்கு மனிதர்களுக்கும் -தீய செயல் புரிய தூண்டும் இப்லிஸூக்கும் (ஜின்களுக்கும்) தான் பிரச்சனையே ஒழிய இறைவனுக்கும் இப்லிஸுக்குமல்ல...

   சுமார் நூறு வசனங்களுக்கு மேலாக குர்-ஆனில் இப்லிஸ் (ஜின்கள்) குறித்து இறைவன் மனிதர்களுக்கு தான் எச்சரிக்கை விடுக்கிறானே தவிர தன்னின் இயலாமையால் உருவான எதிரியாக எங்கேணும் இப்லிஸ் கூறப்படவே இல்லை.

                                  அல்லாஹ் மிக்க அறிந்தவன் 
read more "இறைவனின் எதிரியா -இப்லிஸ்?"

Thursday, November 04, 2010

குர்-ஆன் கூறும் பூமி...

                                           ஒரிறையின் நற்பெயரால்

      விஞ்ஞான கருத்துக்களை உள்ளடக்கிய வசனங்கள் குர்-ஆனில் அதிகமாக இடம்பெற்றாலும் அவ்வனைத்து வசனங்களிலும் அல்லாஹ்வுடைய வல்லமையை பறைச்சாற்றறுவதே பிரதான நோக்கமே தவிர அறிவியல் புத்தகமாக தன்னை காட்டிக்கொள்வதற்காக அல்ல.

    எனினும் குர்-ஆன் மீது அவதூறு கற்பிக்கும் நோக்கோடு களமிறங்கிய பரிணாமம் மூலம் பகுத்தறிவு பெற்றவர்கள் அவ்வபோது குர்-ஆன் கூறும் பொருளை வழக்கம்போல் தவறாக புரிந்து அதன் அடிப்படையில் கேள்விகளை எழுப்புவது வழக்கம்.

     அதன் அடிப்படையில் சில வசனங்களை மேற்கோள் காட்டி பூமி தட்டை என குர்-ஆன் கூறுவதாக சொல்ல முயற்சிக்கிறார்கள்.


அவர்கள் சுட்டிக்காட்டும் வசனங்கள் தான் இவை
  • அல்பகரா(2) வசனம்:22 , 
  • அர்-ராத்(13) வசனம்:3 , 
  • அல்-ஹிஜ்ர்(15) வசனம்:19 , 
  • தாஹா(20) வசனம்:53 , 
  • அல்-ஸூக்ருஃப்(43) வசனம்:10 ,
  • காஃப்(50) வசனம்:7 , 
  • அத்தாரியாத்(51) வசனம்:48 , 
  • அர்-ரஹ்மான்(55) வசனம்10 , 
  • நூஹ்(71) வசனம்:19 , 
  • அந்நபவு(78) வசனம்:6; 
  • அந்நாஸிஆத்(79) வசனம்:30; 
  • அல்-இன்ஷிகாக்(84) வசனம்:3 .
      குர்-ஆனில் மேற்கண்ட வசனங்களில் பூமி குறித்து கூறும்போது பூமியை விரிப்பாக அமைத்தாகவே வருகிறது. இவ்வசனங்கள் அறிவியலுக்கு முரண்படுகிறதா? ஏன் அல்லாஹ் அவ்வாறு கூறுகிறான்.

    முதலாவதாக,பொதுவாக ஏனைய வசனங்கள் போலவே இவ்வசனங்களிலும் அல்லாஹ் தன் வல்லமையே குறிப்பிடுவதற்காகவும் அவனின் அத்தாட்சிக்காவும் இவ்வாக்கிய அமைப்புக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

  ஏனெனில் மேற்கண்ட வசனங்களில்...

 உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து, அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.  (2:22)


அவனே பூமியை விரித்து...-நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.  (13:3)


பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, (அசையா) மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளிவின் படி அதில் நாம் முளைப்பித்தோம்.  (15:19)


இன்னும், பூமியை - நாம் அதனை விரித்தோம்; எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம்.  (51:48)
    
  மேற்கண்ட வசனங்களிலெல்லாம் இறுதியாக அவனது வல்லமையின் வெளிப்பாட்டு வாக்கியம் அமைந்திருப்பதை காணலாம்.
  
 அடுத்து பயன்பாட்டிற்காக ., 
         மனிதர்களுக்கும்-ஏனைய படைப்பினங்களும் பயனடைய வேண்டும் என்பதற்காகவே இப்பூமியை விரிப்பாக்கி வைத்திருப்பதாக சொல்கிறான். அதாவது பயணம் செய்வதற்கு இலகுவாக பயணிப்போருக்கு வசதியாக பாதைகள் இருக்க பூமியை ஒரு விரிப்புப்போல அமைத்திருக்கிறான்


   இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.  (55:10)


"(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; (20:53)


அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கி, அதில் நீங்கள் (விரும்பி இடத்திற்குச்) செல்லும் பொருட்டு வழிகளையும் ஆக்கினான்.  (43:10)
"அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.  (71:19)
"அதில் நீங்கள் செல்வதற்காக விசாலமான பாதைகளையும் அமைத்தான்" (71:20)


...அவனே பூமியை விரித்தான்.  (79:30)


அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.  (79:31)

       ஆக இங்கு பூமி குறித்த வசனங்கள் யாவும் அதன் வடிவம் குறித்து முன்னிருத்தி பேசபடவில்லை. மாறாக அப்பூமியின் மூலம் மனிதர்களும்- ஏனைய உயிரனங்களும் அடையும் பயன்பாட்டை குறித்து தான் பேசுகிறது.  இங்கு பூமி விரிப்புபோல் இருக்கிறது என்று ஒரு பயன்பாட்டு பொருளாக தான் (Materiel) உருவகப்படுத்தப்படுகிறதே தவிர தட்டையாகவோ அல்லது வேறு எந்த வடிவிலோ இருப்பதாக வடிவத்தை (Shape) முன்னிருத்தி கூறவில்லை.
 
     ஏனெனில் வடிவம் குறித்து இவ்வாசக அமைப்புகள் அமைக்கப்பெற்றிருந்தால் பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான். என்று பூமி விரிக்கப்பட்டதன் பயன்பாட்டு நோக்கத்தை இங்கு குறிப்பிடவேண்டிய அவசியமில்லை.மாறாக அதன் வடிவத்தை மட்டும் மேற்கோள் காட்டி சொல்லியிருக்கலாம்.

    ஆக,விரிப்புப்போல் இருக்கிறது என்பது தட்டை வடிவம் என்பதோடு பொருந்தாது எனவே மேற்குறிய வசனங்கள் மட்டுமல்ல குர்-ஆனில் பூமி குறித்து சுமார் 457 வசனங்களில் 483 முறை சொல்லப்பட்டிருக்கிறது. அவை அனைத்திலும் அறிவியலுக்கு முரணாக தட்டை வடிவத்தை முன்னிறுத்தி எந்த வசனமும் இல்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

 அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.  (88:2)

அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.  (88:3)


                                                         அல்லாஹ் நன்கறிந்தவன்
read more "குர்-ஆன் கூறும் பூமி..."

Thursday, September 09, 2010

இஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து

                                              ஓரிறையின் நற்பெயரால்...
   குர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் ஏசுவும் ஒன்றா...? இஸ்லாமியர் சிலர் மனதில் கூட ஊசலாடும் கேள்வி இது தான்.

  சுருக்கமாக கூறினால் "ஒன்று" என்று சொல்லலாம்.விளக்கமாக கூறினால் "இல்லை" என்று சொல்லலாம்.என்ன தெளிவான குழப்பமாக இருக்கிறதா? அதை விளக்கவே இக்கட்டுரை.



 இயேசுவை கடவுளாகவோ, கடவுளின் மகனாகவோ உயர்த்தி வர்ணிக்கப்படும் கிறித்துவத்தில் அவரது ஏனைய அற்புத நிகழ்வுகள் குறித்து சிலாகித்து கூறப்பட்டாலும் இயேசு கிறித்துவை பற்றி பைபிள் இப்படியும் குறிப்பிடுகிறது.


 34.பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள், சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.
 35.எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.                                
                                                                                     (மத்தேயூ அதிகாரம்:10)

17.பின்பு, அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்;

 18.அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே; (மாற்கு அதிகாரம்:10)

 49.பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.
 50.ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்.
 51.நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
 52.எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள்.
 53.தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்.   (லூக்கா அதிகாரம்:12)

34. ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.  (மாற்கு அதிகாரம்:15)

 19.அப்பொழுது, வேதபாரகன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
 20.அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
                                                                                        ( மத்தேயூ அதிகாரம்:8)

                 இவ்வாறு கடவுள் ஸ்தானத்திற்கு அல்லது கடவுளின் மகனாக மகிமைப்படுத்தி கூறப்படும் இயேசு கிறித்துவை பற்றிதான் மேலுள்ள வாக்கியங்களும் உள்ளன.அவ்வாறு கடவுளாகவோ அல்லது கடவுளின் மகனாகவோ கருதப்படுபவர் குறித்து சராசரி மனித பண்புகளோடு அல்லது அதற்கு கீழாக விவரிக்கப்பட்டிருக்கிறது.

   இங்கு பைபிள் குறித்து நான் விமர்ச்சிக்க வரவில்லை. மாறாக கடவுளாகவோ அல்லது கடவுளின் மகனாகவோ சித்தரிக்கப்படும் ஒருவரின் தகுதிக்கு இவ்வாசகங்கள் ஏற்புடையதா என்பதே என் கேள்வி? 
  
    ஆனால் இஸ்லாம் இயேசு கிறிஸ்து குறித்து கூறும்போது கடவுளின் மகன் இல்லையேன்று ஆணித்தரமாக கூறினாலும் இறைவனின் தூதுவர்களில் ஒருவர் என்பதை முன்மொழிந்து அவரது தூது தன்மைக்கு கலங்கமோ, தவறான கற்பிதங்களோ கொடுக்காமல் தூதரும்,தூய மனிதர் என்ற நிலைப்பாட்டிலும் இயேசுவை மிகச்சரியாக கண்ணியப்படுத்துகிறது.

    இங்கு ஒரு தெளிவு "பைபிளும், குர்-ஆனும் முன்மொழியும் அந்த இறைத்தூதரை "இயேசு கிறித்து" என்ற பெயரில் உச்சரிக்கும் பொழுது சிலுவையில் அறையப்பட்டு,கை,கால்களில் ஆணிகள் ஊடுருவப்பட்ட நிலையில், முள் கீரிடம் சுமந்தவராக, செங்குருதி வடிந்தவராக மனித கரங்களால் உருவாக்கப்பட்ட இடதுபுறம் தலைச்சாய்த்த முகம் தான் ஏனோ...ஞாபகம் வருகிறது.

   கடவுளின் மகன்(?) என கூறப்படும் அந்த தூயவருக்கு கொடுக்கும் கண்ணியமா இது? அதே நேரத்தில் திருக்குர்-ஆன் கூறும் நபி ஈஸா (அலை) அவர்கள் பெயரை உச்சரிக்கும் பொழுது எந்தவித எண்ணத்தோன்றங்களும் எழாது என்பதால் இனி அந்த தூய இறைத்தூதரை "ஈஸா (அலை) என்ற பதத்திலே இங்கு பெரும்பாலும் பயன்படுத்துகின்றேன். அல்லாஹ் அவன் திருத்தூதரை குறித்து சொல்வதை கேளுங்கள்.,

மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்;. மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;.  (3:45)

     "மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்."  (3:46)


"ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்;. இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்;. நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்;. மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்;. பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது. (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்" என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!  (3:55)

 அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்;. அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்;. தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்;. இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்;... (2:253 ன் சுருக்கம்


மேலும் பார்க்க நபி ஈஸா அலை குறித்து :    (2-87, 3-45>59, 4-157,171, 
5-17,72,75,78,110>120, 9-30, 19-16>34, 23-50, 42-13, 43-57,61,63, 61-6, 3-52, 57-27, 61-14)  

    மேற்குறிப்பிடப்பட்ட அல்லது குர்-ஆன் முழுவதும் நபி ஈஸா அலை அவர்களை பற்றி குறிப்பிடும் எந்த ஒரு வசனமும் அவர்களின் தூதுத்துவ தன்மைக்கு இழிவாகவோ தனி மனித கண்ணியத்திற்கு குறைவான நிலையிலோ குறிப்பிடுவதாக இல்லவே இல்லை.

  நான் மர்யமின் மைந்தருக்கு மிகவும் நெருக்கமானவன் ஆவேன் - இறைத் தூதர்கள் தந்தை வழிச் சகோதரர்கள் ஆவர் - எனக்கும் அவருக்கும் இடையே இறைத்தூதர் எவருமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(புஹாரி : 3442 அபூஹுரைரா (ரலி))


 'ஆதமின் மக்களில் (புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை கூக்குரலெழுப்பும். மர்யமையும் அவரின் மகனையும் தவிர' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூஹுரைரா (ரலி) அறிவித்துவிட்டு பிறகு, 'நான் இக்குழந்தைக்காகவும் வருங்கால வழித்தோன்றலுக்காகவும் சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்னும் (மர்யமுடைய தாய் செய்த பிரார்த்தனையை கூறும் - என்ற 3:36-வது) இறைவசனத்தை ஓதுவார்கள். 


(புஹாரி : 3431 ஸயீத் பின் அல் முஸய்யப் (ரலி)

.
  இவ்வாறு இறைவனும் அவனது இறுதித்தூதரும் நபி ஈஸா (அலை) அவர்ககளை கண்ணியப்படுத்தி கூற என்ன காரணம்? ஆக, கிறித்துவம் கூறும் இறைமகன் பண்புகள் ஈஸா (அலை) அவர்களுக்கு பொருந்தி வருகின்றதா? இஸ்லாம் கூறும் இறைத்தூதர் என்ற நிலை ஈஸா (அலை) அவர்களுக்கு பொருந்துன்றதா?

    நன்றாக சிந்தியுங்கள் கிறித்துவ சகோதரங்களே., இஸ்லாமியர்கள் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் புனித வேதமாக வர்ணிக்கப்படும் பைபிள் குறித்தும் அது கடவுளின் மகனாக உருவப்படுத்தும் இயேசு குறித்தும் தான்.மாறாக கிறித்துவ சமுகத்திற்கு உண்மையாக அனுப்பப்பட்ட இஞ்ஜில் வேதங்குறித்தோ அல்லது உண்மைத்தூதர் ஈஸா(அலை) அவர்கள் குறித்தோ அல்ல.,

   ஏனெனில் உண்மையான இயேசுவை விமர்சிப்பவன் தூய முஸ்லிமாக இருக்க முடியாது., தூய இயேசுவை பின்பற்றாதவன் உண்மை கிறித்துவனாக இருக்க முடியாது.ஆக அந்த தூய இறைத்தூதர் ஈஸா(அலை)அவர்கள் சொன்னது என்ன? செய்ய சொன்னது என்ன ? என்பதை அறிய முற்படுங்கள்.,

      நீங்கள் உண்மை தேடுதலில் விருப்பம் உடையவராக இருந்தால் இரண்டில் ஒன்றுதான் கலங்கப்படுத்தப்படாத உண்மையாகவே இறைவனின் வார்த்தைகளாக இருக்க முடியும் என்ற நடு நிலை எண்ணத்தோடு பைபிளையும் குர்-ஆனையும் ஆராயுங்கள். சர்வ வல்லமை படைத்த இறைவன் உங்களுக்கும் எனக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்.

    பின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம், மர்யமின் குமாரர் ஈஸாவை (அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் - அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம், ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்க வில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்); ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப் பேணவில்லை அப்பால், அவர்களில் ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்)கூலியை நாம் வழங்கினோம்; எனினும், அவர்களில் பெரும் பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாகவே இருக்கின்றனர்.  (திருக்குர்-ஆன் 57:27)

                                                      அல்லாஹ் மிக்க அறிந்தவன்

read more "இஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து"

Monday, August 23, 2010

உலகின் இறுதி நாள்!

                                               ஓரிறையின் நற்பெயரால்
     உலகம் ஒரு நாள் அழியும் என்பது இஸ்லாம் முன்மொழியும் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்று!இன்று உலகம் சந்திக்கும் அபாயங்களை பார்த்து இதை இஸ்லாம் முன் மொழியவில்லை மாறாக உலகம் தோன்றிய காலத்திலிருந்தே இறைவன் புறத்திலிருந்து அனுப்பட்ட அனைத்து இறைத்தூதுவர்களும் மக்கள் மத்தியில் "உலக அழிவு"பற்றி எச்சரிக்காமல் இல்லை.

     இறைப்புறத்திலிருந்து ஏனைய இறைத்தூதுவர்கள் மூலம் இதுக்குறித்து அறிவிக்கப்பட்டிருந்தாலும் இறுதி வேதம் மூலமும் இறுதித்தூதுவர் மூலமும் நாம் அதிகமாக அறியலாம் அதற்கு முன்பாக.,
ஏன் உலகம் அழியா வேண்டும்..?

  நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து நலமுடன் வாழ இந்த உலகம் நீலையாக இருக்க வேண்டியது அவசியம் தானே... நடு நிலையோடு ஒப்பு நோக்கும் எவருக்கும் இந்த எண்ணம் எழத்தான் செய்யும்.அதற்கு முன்பு இந்த உலகம் அழியாமல் நீடித்து நிலைத்திருந்தால் இது மட்டுமா சாத்தியம்?

   நல்ல முறையில் செயல்களை புரிவோர்கள் தொடர்ந்து செயலாற்றி உலகிற்கு நன்மை பயக்குவது போல் தவறுகள் புரியும் தீயவர்கள் தொடர்ந்து இவ்வுலகத்தில் தீமையே செயல் படுத்தி வருவார்கள் என்பதையும் யாராலும் மறுக்க முடியாது மேலும் எந்த ஒரு தொடர்ந்து நடைபெறும் செயலும் ஒரு முடிவுக்கு வந்தே ஆக வேண்டும் என்பதே அறிவுடையோர் எவரும் ஏற்கும் பொதுவான வாதம் ஆகும்.அந்த அடிப்படையில் லாஜிக் என்ற பார்வையிலும் உலக அழிவு என்பது சாத்தியமே!

       மேலும் நாம் அன்றாட வாழ்வில் பார்க்கும் அனைத்து உயிருள்ள பொருட்களும் சாதரண ஒரு செல் உயிரியிலிருந்து, ஊர்வன, கால் நடைகள், பறப்பன முதலிய மனிதன் வரை ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே உயிரோடிருப்பதை நாம் கண்கூடாக காண்கிறோம்.

    இருப்பினும் அவைகளுக்கு வழங்கப்படும் சாரசரி ஆயுளுக்கு முன்பாகவோ அல்லது பின்போ நிலையான கால கணிப்பின்றி அவைகள் மரணமடைவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.இதில் நாம் ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும்,

      எந்த உயிரினமும் எத்தகையே சிறப்பை தம் வாழ் நாளில் பெற்றிருப்பினும் அவை வாழும் தம் காலத்தை சற்று அதிகமாக்க தான் அவை பயன்படுமே தவிர தனது இறப்பை இல்லாமல் ஆக்க முடியாது., இதற்கு படைப்பினங்களின் உச்சமாக இருக்கும் மனிதன் உட்பட சாட்சியாக இருக்கிறான்.,

     இன்னும் சொல்லப்போனால் ஏனைய உயிர்கள் அவை பெற்ற திறன், உணவு, கால சூழல் மற்றும் அறிவின் சதவீகித அளவிற்கு தம் வாழ்க்கையே அமைத்து வாழும் கால சாரசரியே அனைத்தையும் ஒருங்கே மிக நுட்பமாக, தெளிவாக, கட்டமைப்புடன் பெற்ற மனிதனின் ஆயுள் சாரசரியுடன் ஒப்பிடும் போது மனித வாழ்வு மிகவும் சொற்பமே!

    இதற்கு உயிரின தொடக்கம் ஒரு உயிரியின் மூலமே நடைப்பெற்றது என கூறும் பரிணாமம் இவ்வாறு மனித ஆயுள் மனித சிறப்பியல்புகளை விட பின் தங்கிய ஏனைய உயிரின சாரசரியோடு குறைவாக இருக்க காரணம் கூறுமா....?

   அதுப்போலவே கோடிக்கணக்கான ஆண்டுகள் தொடந்து இயங்கிவரும் இவ்வுலக செயலாக்கமும் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும் என்பதும் மேற்கூறிய தர்க்க ரீதியாக வாதத்தால் உண்மையாகிறது.

     அறிவியல் ரீதியாக பார்த்தாலும் கூட உலக அழிவு என்பது ஏற்படக்கூடியதே., நாம் உலகமெங்கும் பார்க்கும் இயற்கைச்சீற்றங்களான நில நடுக்கம் பூகம்பமும் போன்றவைகளும் சுனாமி போன்ற கடல் கொந்தளிப்புகளும் எரிமலை சீற்றங்களும் பனிமலை உருகுதலும் வெப்பமயமாகுதலும் மற்றும் பேரிடர்பாடுகளும் ஏற்படுத்திய தாக்கத்தைப்பற்றி குறிப்பிடும் போது புவி தன் சமநிலையில் இருந்து தளர்ந்துப் போக வாய்ப்புள்ளது.

  அதனால், எண்ணில்லா மாற்றங்களை நாம் எதிர் நோக்க நேரிடலாம்.எனவும் புவியியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள் பூமியில் நாள்தோறும் ஏற்படும் இத்தகையே மாற்றங்கள் உலகம் ஒரு சமச்சீர் நிலையிலிருந்து மாறி போகிகொண்டிருப்பதை தான் காட்டுகிறது

    லண்டனிலுள்ள ‘ஆன் யு.சி.எல்., ஹசார்ட் ஆய்வு மைய’த்தின் பில் மெக் கைர் என்ற ஆராய்ச்சியாளர் பருவநிலை மாற்றத்தால் பூமியில் ஏற்படும் பேரழிவுகள் குறித்து ஆய்வு செய்கிறார்.
   இதுபற்றி அவர் கூறியபோது பருவநிலை மாற்றம் இனி பேரழிவுகளை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நிகழக் கூடியவை சில நூற்றாண்டுகளிலேயே நிகழ்ந்து விடும். இதற்காக, பருவநிலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பது கூட கட்டாயம் இல்லை. சிறிய அளவில் ஏற்படும் மாற்றம் கூட பேரழிவுகளை உருவாக்கும்.

      கிரீன்லாந்து, அண்டார்டிகா போன்ற இடங்களில் பல கிலோ மீற்றர்களுக்குப் பரவி கிடக்கும் ஐஸ் மலைகள் உருகுவதால், பூமியின் மீதுள்ள அடுக்குகள் தம் எடையை இழக்கும். அதனால் நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக ஏற்படும். தைவானில் சமீபத்தில் திடீரென குறைந்த காற்றழுத்தத்தால் சூறாவளி ஏற்பட்டது. இந்தச் சூறாவளிதான் நிலநடுக்கத்தையும் உருவாக்கியது.

    இதுபோல சிறிய மாற்றங்கள் பருவநிலையில் ஏற்பட்டால் கூட எரிமலை சீற்றம், நிலச்சரிவு போன்றவை அடிக்கடி நிகழும். வெப்பம் அதிகரிப்பதால், மலைப் பகுதிகளிலுள்ள ஐஸ் ஏரிகள் உடைப்பெடுத்து திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அதோடு நிலச்சரிவும் நடக்கும். இவ்வாறு மெக் கைர் தெரிவித்தார்
நன்றி:http://www.tamiluk.net/

         இவ்வாறு இயற்கையான சீற்றங்கள் மட்டுமில்லாது உலகநாடுகளும் தங்களுக்குள் போரின் மூலமும் தங்களை தாங்களே அழித்துக்கொள்ள அனைத்து முயற்சிகளும் எடுத்து வருகின்றன ஆக இயற்கைச்சீற்றங்களும் சுயநலம் கொண்ட மனித எண்ணங்களும் உலகை அழிவு பாதையின் பால் நோக்கியே அழைத்து செல்கின்றன என்பது அறியப்பட்ட உண்மை

    இறுதியாக, உலக அழிவு குறித்து இறுதி வேதம் இயம்புவதை கேளுங்கள்

இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் -  (69:14)
அந்த நாளில் தாம் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும்.  (69:15)
வானமும் பிளந்து, அன்னாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து விடும்.  (69:16)
வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்-  (70:8)
இன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்)-  (70:9)
இன்னும், நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது-  (77:8)
மேலும், வானம் பிளக்கப்படும் போது-  (77:9)
அன்றியும், மலைகள் (தூசிகளைப் போல்) பறக்கடிக்கப்படும்போது-  (77:10)

  நம்புவோர் உலக அழிவை எதிர் பார்த்திருங்கள் அஃது நம்பாதோர் அதற்காக காத்திருங்கள்

          நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும்.  (77:7)
              
                                          அல்லாஹ் மிக்க அறிந்தவன்

read more "உலகின் இறுதி நாள்!"

Tuesday, July 27, 2010

குர்-ஆன் பாதுகாக்கப்பட்டதே!

ஓரிறையின் நற்பெயரால்..
பொதுவாக வேறு எந்த ஒரு வேத நூலுக்கும் இல்லா சிறப்பு குர்-ஆனுக்கு மட்டும் வழங்கப்பட்டது யாதெனில் அந்நூலின் "பிரத்தியேக பாதுகாப்பு".இங்கு குர்-ஆனின் பாதுகாப்பை மற்ற வேத நூல்களுடன் ஒப்பிட்டு சொல்லும்போது, இக்கூற்றை எதிர்க்க விரும்புவோர்.,ஆரம்பமாக வைக்கும் வாதம் தாம்
1.குர்-ஆன் பாதுகாக்கப்பட்டது எப்படி?
2.குர்-ஆன் பாதுகாக்கப்பட்டது போல் அதற்கு முந்தைய வேதங்களை ஏன் இறைவன் பாதுக்காக்கவில்லை?அஃது இறைவனால் ஏன் பாதுக்காக்க முடியவில்லை?
இந்த இரண்டும் இரு வேறு கேள்விகளாக இருந்தாலும் இரண்டும் ஒரே பதிலைதான் அடிப்படையாக கொண்டிருக்கிறது எப்படி?.. காண்போம்.,
குர்-ஆனின் பாதுக்காப்பு:
Qur'anic_Manuscript
அண்ணல் அவர்களுக்கு அல்குர்-ஆன் "ஒலி" வடிவிலேயே இறக்கியருளப்பட்டது; மாறாக "வரி" வடிவில்லல்ல என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை எனவே நபிகளுக்கு முழு குர்-ஆனும் அருளப்பட்டது எழுத்து வடிவத்தில் இல்லை என்பது தெளிவாகிறது. மேலும்.,
நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.
(15:9)
இங்கு குர்-ஆனின் பாதுக்காப்புக்கு தானே பொறுப்பேற்பதாக இறைவன் கூறுகிறான்.ஆதாவது மனிதர்களிடம் குர்-ஆனை பாதுக்காக்கும் பொறுப்பை சாட்டாமல் அதனை தன்னளவில் வைத்துக்கொண்டான்.இதன் மூலம் உலகமுடிவு நாள் வரையிலும் குர்-ஆன் பாதுக்காப்பிற்கு எந்த ஒரு மனிதனும் தனிப்பட்ட முறையில் சிரத்தை மேற்கொள்ள தேவையில்லை என்பதை தெளிவாக இவ்வசனத்தில் விளங்கலாம்., ஒலி வடிவில் இறக்கப்பட்ட குர்-ஆனை மக்கள் மத்தியில் பாதுக்காக்க இப்படி ஒரு பிரத்தியேக ஏற்பாட்டையும் இறைவன் செய்தான்.
அப்படியல்ல! எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது - அநியாயக்காரர்கள் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள். (29:49)
மேற்கூறப்பட்ட வசனத்தில் "கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில்" என்ற வாசக அமைப்பை இறைவன் குறிப்பிடுவதன் மூலம் அறிவுமிகுந்தவர்களுக்கு மனன சக்தி மூலம் அவர்களின் மனங்களில் இறைவசனங்கள் பாதுக்காக்கப்படுகின்றன எனபதையும் அறியலாம். நம்மில் பலருக்கு பள்ளிக்காலங்களில் படித்த பாடங்களில் சில வரிகள் இன்றளவும் நம் மனதில் ஞாபகம் இருக்க காண்கிறோம். குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட நோக்கத்திற்காக பயிலும் பள்ளிப்பாடங்களே இன்றும் மனதின் ஓரத்தில் ஒட்டிருக்கும்பொழுது தினம் ஐவேளை தொழுகையில் குர்-ஆனிய வசனங்கள் அதுவும் பார்க்காமல் திரும்ப திரும்ப ஓதப்பட வேண்டும் எனும்போது அத்தகைய இறை வசனங்கள் மனதிலேயே பதிய செய்வதற்கு வாய்ப்புகள் மிக மிக அதிகம்!ஏனெனில் தொழுகையானது வாழ்நாள் முழுவதும் மேற்கொள்ளப்படும் ஒரு நிகழ்வு.உளத்தூய்மைக்காக இது பின்பற்றப்பட்டாலும் இயற்கையாகவே மனித மனங்கள் மனனம் செய்வதற்கு இறைவன் உருவாக்கிய மிக சிறப்பான,அழகான ஏற்பாடாகும்.
இந்த இடத்தில் ஒரு அடிப்படை கேள்வி அனைவருக்கும் எழலாம் (சிலருக்கு ஏற்படாமல் இருக்கலாம்-அவர்களுக்கும் சேர்த்தே இங்கு விளக்கம் -ஏனெனில் தன்னிலை விளக்கமளிப்பதே குர்-ஆனுக்கு மட்டுமே உள்ள ஒரு தனிச்சிறப்பு)
சஹாபாக்கள் முதல் அவர்களை தொடர்ந்து இன்றுமுள்ளவர்கள் வரை குர்-ஆன் மனதளவில் மனனம் செய்யப்பட்டு பாதுக்காக்கப்பட்டது சரிதான்.ஆனால் குர்-ஆன் அக்கால மக்கள் அனைவருக்கும் கேட்றியும் பொருட்டு பொதுவாக அருளப்படவில்லை.நபிகளாருக்கு அவர்கள் மட்டும் தனியாகவே அறிந்துக் கொள்ளும் பொருட்டும் பிரத்தியேகமாக அருளப்பட்டது.எனவே வான்வழி வந்த இறைச்செய்தியை வாய்வழி அறிவிக்கும் பொழுது நபிகளார் மிக சரியாக கருத்து சிதைவின்றி உள்ளதை உள்ளபடி சொல்லிருப்பார்களா., ஏனெனில் அவர்கள் எழத,படிக்க தெரியாதவராயிற்றே என அவர்களது ஞாபக சக்தியின் மேல் யாரும் சந்தேகம் கொள்ளவாராயின் அக்கேள்விக்கு பதில் சொல்லும் முகமாக இறைவன் குர்-ஆனை மக்களிடத்தில் சேர்ப்பிக்க நபிகளார் மேற்கொள்ளும் செயல்களுக்கும் தாமே பொறுப்பு என்கிறான்.
(நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதவதற்காக) உம் நாவை அசைக்காதீர்கள் (75:16)
நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன. (75:17)
எனவே (ஜிப்ரயீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள். (75:18)
பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது. (75:19) சுப்ஹானல்லாஹ்! எத்தகையதொரு தெளிவானதொரு விளக்கம்.

எனவே குர்-ஆனின் பாதுகாப்பு எழுத்துவடிவில் இருப்பதாக சொல்வதைவிட ஒலி வடிவில் மனதில் இருப்பதாக கொள்வது நல்லது.இதன் காரணமாக குர்-ஆன் எழுத்து வடிவில் பாதுகாக்கப்படவில்லையென யாரும் (வேண்டுமென்ற) பொருள் கொண்டு அதன் எழுத்து வடிவிலான நம்பகத்தன்மை குறித்து கேள்வியெழுப்பினார்களால் அஃது ஏற்பட்ட மாற்றம் குறித்து வரலாற்று சான்றுகள் தர வேண்டும்.ஏனெனில் உஸ்மான் (ரலி)அவர்களால் தொகுக்கப்பட்ட குர்-ஆன் அதன் மூல மொழியி(அரபி)லேயே துருக்கியிலும்,ரஸ்யாவிலும் மக்களின் பார்வை மத்தியில் இன்றளவும் இருக்கிறது.
குர்-ஆன் பற்றிய எதிர்மறை கருத்துக்களுக்கு சரியான விளக்கம் குறித்த அனைத்துவிதமான ஆய்வுகளும் அந்தந்த கால கட்டங்களிலேயே அறிஞர்ப் பெருமக்களால் மேற்கொள்ளப்பட்டு மிக தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
அதனை கீழ்காணும் சுட்டிகள் வாயிலாக காணலாம்


அருளப்பட்ட வரலாறு
http://www.tamililquran.com/revelation.asp?file=history.html
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/munnurai/arulappatta-varalaru/

குர்-ஆன் குறித்து கேட்கப்பட்ட வினாக்களுக்கான விளக்கங்களுக்கு
http://abumuhai.blogspot.com/2008/09/blog-post_05.html
http://abumuhai.blogspot.com/2008/09/7.html
http://abumuhai.blogspot.com/2008/09/blog-post_14.html

இரண்டாவது கேள்விக்குறித்த குற்றச்சாட்டை க்காண்போம்.
ஏனைய கிரந்தங்களை இறைவன் ஏன் பாதுகாக்கவில்லை என்ற கூற்றுக்கு குர்-ஆனை மட்டும் பாதுக்காத்த காரணம் அறிந்தாலே போதுமானது. நூஹ்,ஸாத்,லூத் போன்ற ஏனைய சமுகங்கள் குர்-ஆன் முன்மொழிந்திருப்பினும் முஹம்மது நபிக்கு முன்பாக வந்த இரு சமுகங்கள் மற்றும் அவற்றிற்கு கொணர்ந்த வேதங்கள் குறித்த பார்வை இங்கே.நபி மூஸா(மோசஸ்) அவர்களுக்கும் நபி ஈஸா(ஜீஸஸ்) அவர்களுக்கும் கொடுக்கப்பட்ட தவ்ராவும்,இஞ்ஜிலும் அந்தந்த சமுக மக்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டன அதாவது அப்போதைக்கு இருந்த (வாழ்ந்த) யூத,கிறித்துவ சமுகத்திற்கு அவர்கள் மேற்கொள்ளவேண்டிய வணக்கங்கள் மற்றும் வாழ்வியல் முறைக்கு தேவையான சட்டங்கள் (விதிமுறைகள்-விதி விலக்குகள், அனுமதிக்கப்பட்டவைகள், விலக்கப்பட்டைவைகள் போன்றவை) குறித்து தெளிவுறுத்தப்பட்டது.எனவே ஒரு குறிப்பிட்ட சமுகம் சார்ந்த மக்களுக்காகவே அருளப்பட்ட வேதங்கள் எனும்போது எல்லா மனிதர்களுக்கும் அஃது அது பொதுவான விதிகள் குறித்த மூலங்கள் வரையறுக்கப்பட்ட வேதமாக அணுகமுடியாது.ஏனெனில் அவ்வேதங்கள் அனைத்து மக்களின் அதாவது,யுக முடிவு நாள் வரை வரக்கூடிய மனிதர்களுக்கு பொருந்தும்படியான கருத்துக்கள் வகுக்கப்படவில்லை.அந்த காலகட்டத்தில் உள்ள மக்களின் செயல்பாடுகளுக்கு தகுந்தாற்போல் இறைவேதங்கள் அருளப்பட்டன.(எனினும் அவைகள் குறைப்பாடுடைய வேதங்கள் அல்ல., அல்லாஹ்வின் ஏற்பாடு அப்படி) எனவே எல்லோருக்கும் பொதுவானதாக கருத்துக்களை அடங்கிய வேதமாக அல்லாஹ் முஹம்மது நபிகளின் மூலமாக இவ்வுலகத்திற்கு வழங்கினான்.அரபு மொழி பேசும் சமுக மத்தியில் இவ்வேதம் வழங்கப்பட்டாலும்,உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழிப்பொருட்டு மேற்கொள்ளப்படும் ஏவல்களும்-விலக்கல்களும், முழுமைப்பெற்ற வாழ்வியல் சட்டத்திட்டங்களும் தெளிவாக வரையறுக்கப்பட்டு நம் முன் இறுதி வேதமாக காட்சி தருகிறது

இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும். (81:27)
நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம்; எனவே, எவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது) எவர் வழிதவறி கெடுகிறாரோ அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார் அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர். (39:41)
இவர்கள் யாவரையும் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தினான்; ஆதலால், இவர்களுடைய நேர்வழியையே நீரும் பின்பற்றுவீராக "இதற்காக நாம் உங்களிடம் எவ்வித பிரதிபலனையும் கேட்கவில்லை இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை" என்றுங் கூறுவீராக. (06:90)
மேலும் பார்க்க:(2:2,17:9,82,18:2, 19:97, 20:2, 27:2, 31:3, 43:44, 50:45, 80:11)

கீழ்காணும் வசனங்களும் முன்னர் வருகை புரிந்த இறைத்தூதர்களையும், அவர்கள் கொணர்ந்த வேதங்களையும் உண்மைப்படுத்துவதாக கூறுகிறது
இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருந்தது (குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும்; இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. (46:12)
(நபியே!) உமக்கு முன்னர் வந்த தூதர்களுக்குக் கூறப்பட்டதேயன்றி உமக்குக் கூறப்படவில்லை நிச்சயமாக உம்முடைய இறைவன் மிக மன்னிபோனாகவும் நோவினை செய்யும் வேதனை செய்யக் கூடியோனுமாக இருக்கின்றான்.(41:43)
மேலும் பார்க்க ( 2:91,4:47, 5:48, 6:92,29:47, 43:45)
மேலும் எதுக்குறித்து தூதுவர்கள் இறைப்புறத்திலிருந்து அனுப்பப் பட்டார்களோ அந்த தூதுத்துவப்பணியின் நோக்கமும் முஹம்மது நபிகளாரோடு முடியுற்றது -அதாவது மக்களுக்கு தெளிவுறுத்த வேண்டிய- சேர்க்க வேண்டிய அனைத்து செயல்பாடுகளையும் இறுதித்தூதின் மூலமாக இறைவன் முழுமைப்படுத்திவிட்டான்.
...இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; (05:03 சுருக்கம்)
அல்லாஹ்வே இஸ்லாத்தை முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கமாக தேர்ந்தெடுத்தால் உலக இறுதி நாள் வரை வரும் மக்களுக்கு வழிக்காட்டியாக குர்-ஆன் இலங்கவேண்டும் என்பதற்காகவே குர்-ஆனின் பாதுகாப்பு மட்டும் அவசியாமாகிறது "முழுமைப்படுத்தப்பட்ட தொகுப்பு மட்டுமே பாதுக்காக்கப்படுவதற்கு தகுதியானது!" என்ற அடிப்படையில் தான் முன்னர் அருளப்பட்ட ஏனைய வேதங்களை பாதுக்காக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லையேயொழிய வேலி தாண்டி ஆடுகள் தோட்டத்தை மேய்வதை தடுக்க சக்தியற்ற தோட்டக்காரன் அல்ல...உலகின் இறைவன்!

மனிதன் என்ற முறையில் இவ்வாக்கத்தில் எங்கேனும் தவறிருப்பின் அதற்குநானே பொறுப்பு
ஆதாரத்துடன் சொன்னால் -திருத்தலாம்

அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "குர்-ஆன் பாதுகாக்கப்பட்டதே!"

Thursday, July 15, 2010

குர்-ஆன் முஹம்மது நபியால் உருவாக்கப்பட்டதா?

                                                                   ஓரிறையின் நற்பெயரால்...
        குர்-ஆன் முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்) அவர்களின் 40 வயதில் ஹிரா குகையில் ரமலான் மாத கடைசி பத்து இரவுகளில் ஓரிரவு இறை புறத்திலிருந்து வானவர் தலைவர் ஜீப்ரஹில் மூலமாக அருளப்பட தொடங்கியது.பின் சிறுகச்சிறுக அன்னாரின் வாழ்வு முழுவதும் 23 ஆண்டுகளில் சுழலுக்கேற்ப மக்கள் மேற்க்கொள்ளும் நடைமுறை செயல் பாடுகளால் உண்டாகும் நன்மைகளையும்,தீமைகளையும் பிரித்தறிவிக்கும் நோக்குடன் இறக்கியருளப்பட்ட வேதம் தான்  அல்குர்-ஆன்

          இன்று, இஸ்லாத்தில் உள்ள குறைகளை  விமர்ச்சிக்கிறோம் என கிளம்பிய சிந்தனைச்சிற்பிகளில் சிலர் இஸ்லாத்தையும்,முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்) அவர்களையும் தரம் தாழ்த்தி தமிழ் எழுத்தும் வெட்கி  தலை குனியும் அளவிற்கு காழ்ப்புணர்ச்சியின் மொத்த வடிவத்தையும் யுனிக்கோட்டில் எழுத்துருவாய் மாற்றி உலக வலையில் உலவ விட்டிருக்கிறார்கள்.

அவர்களின் வார்த்தை யுத்ததில் சுற்றி வளைக்கப்பட்ட அப்பாவி வாசகம் தான் நான் மேலே குறிப்பிட்ட இக்கட்டுரையின் தலைப்பு.
 குர்-ஆனை உருவாக்கியது முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்) என்று கூறுவோர்  மூன்று வாதங்களை அதற்கு காரணமாக  முன் வைக்கின்றனர்.

1.சமுகத்தில் தன் அந்தஸ்தை உயர்த்திக்கொள்வதற்காக      
2.தன் சுயநலத்திற்கு  தகுந்தாற்போல் சில வாசகங்கள் அமைத்துக்கொண்டார்கள்.மற்றும்
3.விஞ்ஞான,வரலாற்று செய்திகளை ஏனைய கிரகந்தகங்களிருந்து பெற்றார்கள்.


    *முதல் மற்றும் முதன்மை காரணமாக சொல்லப்படும் சமுக அந்தஸ்து பெறுவதற்காக குர்-ஆனை முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்)  உருவாக்கினார்கள் என்பது சரியா?


 அரபுக்குலங்களிலேயே குரைஷி என்னும் உயர்க்குடியில் பிறந்தவர்கள் முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்)  என்பது அரேபிய வரலாறு அறியா மக்கள் கூட அறிந்திருக்கும் மறுக்க இயலா உண்மை.ஆக பிறப்பிலேயே குல அடிப்படையில்(அவர்களால் இஸ்லாம் தொடரப்படுவதற்கு முன்பு) சமுகத்தில் உயர் அந்தஸ்து பெற்றவர்கள்,

மேலும் அவர்களின் நேர்மை,ஒழுக்கம், நம்பக தன்மை, வாக்குறுதி மாறமை, நீதி செலுத்தல் போன்ற உயரிய பண்புகளால் சம காலத்திய மக்களால் வாய்மையாளர், உண்மையாளர் எனப்பொருள்படும் "அல்-அமீன்,அல்-சாதிக்" என போற்றப்பட்டார்கள்.எனவே தன்னின் தனிப்பட்ட சமுக அந்தஸ்து மேம்பட வேண்டும் என்பதற்காகவே  இறைவனின் பெயரால் முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்)  அவர்கள் பொய்யுரைக்க வேண்டிய அவசியமில்லை,

சொல்லப் போனால் தன்னை இறைவனின் தூதுவர் என பிரகடன படுத்திய பின்னர் தான் அவர்கள் பொருள் மற்றும் செல்வ நிலை சேதப்படுத்தப்பட்டத்தோடு அவர்களின் தேகமும் சொல்லோண்ண கொடுமைகளை சந்தித்தது.

(நபியே!) இவர்கள் (இழிவாகப்) பேசுவது உம் நெஞ்சத்தை எப்படி நெருக்குகிறது என்பதை நாம் அறிவோம். (15:97)மேலும் பார்க்க:9:61, 96:9-19


            ஆக தனது பெயர் சமுகத்தில் உயர வேண்டும் என்ற நோக்கிற்காக குர்-ஆனை அவர்கள் உருவாக்கினார்கள் என்று சொல்வது சாத்தியமே இல்லை. மாறாக குர்-ஆன் இறைவனுடைய வார்த்தைகள் என்று சொல்வதால் அவர்கள் சந்தித்த துன்பங்கள் குறித்து மேற்கண்ட வசனங்களில் காணலாம்.

 *இரண்டாம் காரணம், குர்-ஆனில் நபிகளாரை பெருமை(கண்ணிய)ப்படுத்தும் வசனங்கள் ஏராளமாக உள்ளது உண்மைதான்.அதற்காக வேண்டி அவர்கள் தான் குர்-ஆனை உருவாக்கியவர்கள் என சொல்வது ஏற்புடையதா?


(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (21:107)

   உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள். (4:65)


இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார் இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர்.(33:6 ன் சுருக்கம்)


அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (33:21)


 முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்) அவர்கள் குறித்து மேலும் பார்க்க:36:69, 69:41, 69:42, 38:4, 2:143, 4:41, 22:78, 33:45, 73:15,5:19, 3:159, 9:61,128, 7:184, 15:89, 36:6, 53:56, 33:47, 33:40)

 
   மேற்கூறப்பட்ட வசனங்களில் நபியவர்களின் நிலைக்குறித்து உயர்வாக சொல்லப்பட்டாலும், அதற்கு காரணம் அவர்களின் முறையான கிழ்படிதல், பொறுமை,அவர்களின் நேர்மை, அனாதைகள் மற்றும் அமானிதங்களை பராமரித்தல், வாய்மை, இரக்கக்குணம் ஆகியவையே..

சுருங்கக்குறின் அல்லாஹ்வின் ஆணைப்படி அவனது ஏவல்,விலக்கல்களை முன்னிருத்தி  தங்களது வாழ்வை அவர்கள் அமைத்துக் கொண்டார்கள் என்பதாலேயே ஆகும்.இதனை அவர்கள் வரலாறு வழி நெடுக்கிலும் காணலாம்.
சரி., முரண்பாட்டு அடிப்படையில் உடன்பட்டு நபிகள் தான் தன்னை உயர்வு படுத்த இவ்வாக்கியங்களை குர்-ஆனில் உருவாக்கினார்கள் என வைத்துக் கொள்வோம்.,

கிழ்காணும் வாசகங்களும் குர்-ஆனில் தான் உள்ளது


(நபியே!) நீர் கூறும்; "நீங்கள் எதற்கு அசவரப்படுகின்றீர்களோ அது என் அதிகாரத்தில் இருந்திருக்குமானால், உங்களுக்கும் எனக்குமிடையேயுள்ள விவகாரம் உடனே தீர்க்கப்பட்டேயிருக்கும்; மேலும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்." (6:58)    

   அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்-அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,-(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?-அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.-(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.-ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.-ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,-அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.-அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.-எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார். (80:1 -12)

  (நபியே!) நீர் கூறும்; "அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நம்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது - நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை."(7:188)

     அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், "இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும்; அல்லது இதை மாற்றிவிடும்" என்று கூறுகிறார்கள். அதற்கு "என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக. (10:15)

   நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.(66:01)

      அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள்; நீர் கூறும்; "அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது - அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும்; திடுகூறாக அது உங்களிடம் வரும்; அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்; அதன் அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கின்றது - எனினும் மனிதர்களில் பெரும் பாலோர் அதை அறிய மாட்டார்கள்" என்று கூறுவீராக. (07:187)


 மேலும் பார்க்க:06:50,52, 75:16,109, 10:16, 33:52,59, 52:31, 3:144, 6:56,57&68)           
           
        மேற்கண்ட வசனங்களில் முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்)  அவர்களை கண்டிப்பது போலவும்,இறைவன்  ஆட்சியிலும்,அதிகாரத்திலும் உள்ள செயல்கள் குறித்து தனது மனதின் படி அவர்கள் சொல்ல அனுமதி இல்லை என்றும்,மறைவான ஞானம் குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது, நன்மையோ,தீமையோ தனது சுய நாட்டப்படி தான் மேற்கொள்ள முடியாது என்றும்- விளக்கமாக கூறப்படுகிறது.

     பொதுவாக தானே இயற்றிய நூலாக இருந்தால் ஒருவேளை அவர் தன்னைப்பற்றி புகழ்ந்து கூறாமல் வேண்டுமானால் இருக்கலாம்.ஆனால் தன்னை ஒருவர் கண்டித்தைப்பற்றியோ, அதிகாரத்தில் பங்கு இல்லை என்று கூறியது பற்றியோ  நூலில் குறிப்பிட மாட்டார். அதே அடிப்படையில் ஒப்பிடும்பொழுது

  குர்-ஆன் முஹம்மது நபிகள் (ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்) அவர்களால் உருவாக்கப்பட்டதாக இருந்தால் மேற்குறிப்பிடப்பட்ட வசனங்கள் குர்-ஆனில் இடம் பெற வேண்டிய அவசியமென்ன...? தன் நரகல் நடை எழுத்துக்கு நாகரிக வர்ணம் பூசுவோர் சொல்வார்களா?


     குர்-ஆனில் விஞ்ஞானம் குறித்து மிக தெளிவாக செய்முறை விளக்கத்தோடு எந்த ஒரு தகவலும் சொல்லப்படவில்லை.ஏனெனில் அதன் தலையாய பணி மனித சமுதாய முழுமைக்குமான நேர் வழிக்காட்டுவதே ஆகும். அஃதில்லாத விஞ்ஞான விவரிப்புகள் இரண்டாம் பட்சமே (மேலும் அறிவியல் தொடர்பான விபரங்களுக்கு  குர்-ஆனும்-விஞ்ஞானமும் என்ற இடுகை காண்க)
  
 *குர்-ஆனில் கூறப்படும் விஞ்ஞான உண்மைகள்,வரலாற்று நிகழ்வுகள் யாவும் முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்)  அவர்கள் முந்திய சமுகத்திலிருந்து ஒன்று திரட்டி அதை தொகுத்து குர்-ஆனாக வடித்தார் என்ற வாதம் குறித்துப்பார்ப்போம்.


 இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) "எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)" என்று கூறிற்று. (27:18)

"அல்லாஹ் - அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் (வேறு) இல்லை. (அவன்) மகத்தான அர்ஷுக்கு உரிய இறைவன்" (என்று ஹுது ஹுது பறவை கூறிற்று).27:26


    மேற்கூறிய வசனத்தில் சுலைமான் நபி அவர்கள் குறித்தும் அவர்களின் படை குறித்தும் கூறப்படுகிறது. ஒரு உதாரணத்திற்கு சுலைமான் நபி குறித்த பார்வை முந்தைய வேதங்களிலிருந்து திரட்ட பட்டது என வைத்துக்கொண்டாலும்  இங்கு பறவையும், எறும்பும் பேசியது குறித்த மூலத்தை எங்கிருந்து  நபியவர்கள் எடுத்தார்கள்...?

ஏனெனில் எறும்பும், பறவையும்  பேசுவதென்பது  சாதாரண செயலல்ல.. அதுவும் தெளிவாக காரணங்களோடு அது ஒரு விஞ்ஞான உண்மையும் கூட,அந்த அறிவியல் உண்மை அவர்களுக்கு எப்படி தெரிந்தது?

தோரயமாக சொல்லிருப்பார்கள் என சமாளிப்பதற்காக சொல்வார்களேயானால் அன்றைய நேரத்தில் அந்த சம்பவத்தை சொல்ல வேண்டிய அத்தியாவசியம் என்ன...?

மேலும் ஒரு சம கால உதாரணம்


    *அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்
அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள் 111:1-5)



    மேற்குறிப்பிடப்பட்ட வசனம் ஒரு தனிப்பட்ட மனிதனை குறித்து பேசுகிறது. நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்) அவர்களால் தொடரப்பட்ட இஸ்லாத்தின் ஆரம்ப காலகட்டத்தில் நபியவர்களுக்கும் ஏனைய இஸ்லாத்தை தழுவியோருக்கும் பெறும் தீங்கை விளைவித்தவன் தான் இவ்வசனம் குறிப்பிடும் அபுலஹப்.

அவன்  மேற்கொண்ட அட்டுழியங்களின் விளைவாக அவன் இஸ்லாமை ஏற்க மாட்டான்.மேலும் அவன் நரகமே செல்வான் எனவும் இவ்வசனம் கூறுகிறது. இவ்வசனம் அபுலஹப் உயிரோடிருக்கும் பொழுதே  அவனை குறித்து விளிக்கிறது. என்பதுதான் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய செய்தி .

முஹம்மது நபிகள்(ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்)  தன் கோப வெளிபாடாக இவ்வார்த்தையை சொன்னதாக கொண்டால்., அவன் (அபுலஹப்) நினைத்தால் குர்-ஆனை பொய்யாக்க வேண்டும் என்ற நோக்கில் நான் இஸ்லாத்தை ஏற்று கொண்டேன் என்ற ஒற்றை வாக்கியத்தை உதட்டளவில் சொல்லி பெருமானாரின் கரம் பிடித்திருந்தால்  போதும், இஸ்லாம் குறித்து இக்கட்டுரையே இங்கு தேவையிருக்காது,

ஏனெனில்... இஸ்லாமே அங்கு இருந்திருக்காது. ஏன் அவ்வாறு சொல்லவில்லை...? அதுமட்டுமா அவனது மனைவியேயும் சேர்த்தே இந்த வசனம் அவ்வாறு குறிப்பிடுகிறது... அவளாவது சொன்னாளா..? என்றால் அதுவும் இல்லை.. வரலாற்று ஆவணங்களை புரட்டி பார்த்து புட்டு புட்டு வைக்கும் புத்தக(நச்சு)ப்புழுக்கள் அவர்கள் வாய் பொத்திய வரலாறு சொல்வார்களா...?
 
  *இயேசுவை (ஈஸா அலை)கடவுளாக கருதிய சமயத்தில், வந்துதித்த முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்)  அவர்கள் இயேசு (ஈஸா அலை) சிலுவையில் அறையப்பட வில்லை என கிறித்துவர்களின்(?) அடிப்படை க்கொள்கைகளை தகர்த்தெறிந்து அன்னாரை   வணங்குவோருக்கு நரகம் தான் என வேதகாரர்கள் சமுகத்தில் பகிரங்கமாக பிரச்சாரம் புரிய காரணமென்ன...?


இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. (4:157)


    தம் கடவுட்கொள்கையின் பக்கம் அவர்களை வசப்படுத்த இவ்வாக்கியங்கள் அவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி தந்ததாக ஒருவேளை கூறினால் ... இயேசு (ஈஸா அலை) அவர்களும் தம்மைப் போன்றே இறைவனின் ஒரு தூதர் என சொல்ல வேண்டிய அவசியமென்ன...?


... அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்;. நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; (04:171 ன் சுருக்கம்) 
    மேலும் பார்க்க:04:172, 05:75, 19:30)

     *கீழ்காணும் வசனம் மனிதர்களை போல் ஜின்கள் என்ற படைப்பு குறித்து கூறுகிறது


 இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.(51:56) 
மேலும் ஜின்கள் குறித்து பார்க்க:(6:100, 15:27, 17:88, 27:17,39, 34:12,14,41, 46:29, 55:15,38, 72:1-15, 114:6)  
   
     முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்) அவர்கள் குர்-ஆனை இயற்றியதாக இருந்தால் ஜின்கள் குறித்த மூலங்களை எங்கிருந்து பெற்றார்கள்...? சாதாரணமாக நீதி போதனைகளை சொல்லுவதோடு நிறுத்திக் கொள்ளலாமே...ஜின்கள் குறித்து மக்கள் மத்தியில் சொல்லுவதற்கான அவசியமோ,அத்தியாவசியமோ ஏன் வந்தது...?


*அது போலவே மலக்குகள் என்ற படைப்பு குறித்தும்.,
எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான்.2:98


       எந்த மனிதரும் மலக்குகள் குறித்து அறியாதிருக்கும் பொழுது அவர்களின் தன்மை குறித்து மக்கள் மத்தியில் கூற காரணமென்ன...? கற்பனையாக (ஒரு வடிவம் கொடுத்து) தான் அவர்கள் கூறினார்கள் என்றால் அவ்வாறு கூற காரணம் என்ன...?அவ்வாறு சொன்னதால் அவர்கள் பெற்ற பொருளாதார பயன்பாடு என்ன...?   
               
 மேலுள்ள கட்டுரையில் எத்தனை கேள்விக்குறிகள் பல வாக்கிய முடிவுகளில் காழ்ப்புணர்ச்சியே கரைத்து குடித்தவர்களுக்கு அவை அனைத்தும் ஆச்சரியக்குறியை ஏற்படுத்தா விட்டாலும் பரவாயில்லை.அவர்கள் விமர்சிக்க முற்படும் இஸ்லாத்தில் அபாய குறிகளை ஆங்காங்கே ஏற்படுத்த வேண்டாம்.

         வெறுப்பில் வார்த்த சந்தேக சாவிக்கொண்டு  திறக்க முயற்சிக்காதீர்கள்: ஏனெனில் காற்றில் கட்டப்பட்ட கற்பனை கோட்டையல்ல, விமர்சன காற்று தினம் வந்து போக திறந்தே இருக்கும் உங்கள் எதிரில் உள்ள ஒற்றை மாடி வீடுதான்  இஸ்லாம்         

    இப்போது மீண்டும்  ஒருமுறை தலைப்பை உற்று நோக்குங்கள்...

          இன்னும்; "(இறந்து பட்டு) எலும்புகளாகவும், உக்கிப்போனவைகளாகவும் நாங்கள் ஆகிவிட்ட பிறகு, நிச்சயமாக புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுகிறவர்களாக?" என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.
(நபியே!) நீர் கூறும்; "நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகுங்கள்.
"அல்லது மிகப் பெரிதென உங்கள் நெஞ்சங்களில் தோன்றும் வேறொரு படைப்பாய் ஆகுங்கள்;" (எப்படியானாலும் நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்). "எங்களை எவன் (மறுமுறையும் உயிர் கொடுத்து) மீட்டுவான்?" என்று அவர்கள் கேட்பார்கள். "உங்களை எவன் முதலில் படைத்தானோ, அவன் தான்!" என்று (நபியே!) நீர் கூறும்; அப்போது அவர்கள் தங்களுடைய சிரசுகளை உம் பக்கம் சாய்த்து, (பரிகாசமாக) அது எப்போது (நிகழும்)? என்று கேட்பார்கள். "அது வெகு சீக்கிரத்திலும் ஏற்படலாம்" என்று கூறுவீராக! (17:49,50&51)

                                             அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "குர்-ஆன் முஹம்மது நபியால் உருவாக்கப்பட்டதா?"

Categories

அமல்கள் அறியாமை அறிவியல் அல்லாஹ் அவதாரம் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உஜைர் நபி உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் எதிரி ஏன் இஸ்லாம் ஏற்றத்தாழ்வு ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தஜ்ஜால் தண்டனை தாய் திருமணங்கள் தேவை நன்மைகள் நபிமொழி நரகம் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மனசாட்சி மனம் மனிதன் மனிதர்கள் மரணம் மறுமை மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வானவர்கள் வாழ்க்கை விதி விமர்சனம். விளக்கம் ஹராம்