"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Monday, October 11, 2010

யார் கடவுள்...?

                                    ஓரிறையின் நற்பெயரால்

    இன்று உலகத்தில் எத்தனையோ விஷயங்கள் பேசுவதற்கு இருக்க. "கடவுளை குறித்து மட்டும் கட்டுரை வடிக்க காரணம் என்ன? என்ற எண்ணம் சிலருக்கு ஏற்படலாம்.
இஸ்லாத்தை பொருத்தவரை மனிதர்களை இறைவன் படைத்ததே அவனை வணங்குவதற்காக தான்! எனும்போது உலக மானிட படைப்பின் நோக்கம் ஈடேற அவனை வணங்கும் முறையும் அதை விட அவ்வாறு வணங்குவதற்குறியவன் யார் என்பதையும் நினையுட்டவே இங்கு ஒரு சிறிய ஆக்கம்.

   கடவுளை வணங்குவது இருக்கட்டும் அதற்கு முன்பாக அத்தகைய கடவுள் இருப்பது உண்மைதானா? கடவுளை ஏற்பது நமது அறிவுக்கு பொருத்தமானதா? முதலில் பார்ப்போம்.

இயற்கையா? இறைவனா?


     இன்று கடவுளை மறுப்போர், உலக தோன்றங்கள் குறித்தும் இப்பிரபஞ்ச உருவாக்கம் குறித்தும் கூறும்போது மிக தெளிவாக அறிவியல் ரீதியாக காரணங்கள் கொண்டு விளக்கி கூறுகின்றனர்.எனினும் இத்தகைய இப்பிரபஞ்ச உருவாக்கம் குறித்து பதில் அறிவு பூர்வமாக கூறினாலும் "அஃது ஏன் உலகம் உண்டாக வேண்டும்?" என்ற கேள்விக்கு எந்த பதிலும் அறிவு பூர்வமாக இதுவரை இல்லை.

     அதுப்போலவே ஏனைய கோள்களும், சூரியன், சந்திரன்,நட்சத்திர கூட்டங்கள், ஆகியவை உண்டான முறை குறித்தும் அவைகள் தற்போது வரை செயல்படும் நிலை குறித்தும் இனி அவைகளுக்கு ஏற்படும் மாற்றம் குறித்தும் மிக துல்லியமாக தகவல்கள் தந்த போதிலும் சூரியனும் சந்திர பூமி இயக்கமும் ஏனைய கோள்களும் தத்தமது பாதையில் மிக நேர்த்தியாக செயல்பட எந்த மூலங்கள் அதற்கு அடிப்படை? என்ற கேள்விக்கும் விடையில்லை.

   சுருக்கமாக கூறினால் நடைபெறும் அனைத்து வித செயல்களும் அறிவியல் ரீதியாக சொல்ல முடிந்த கடவுளி மறுக்கும் விஞ்ஞானம் அத்தகைய பால்வெளியில் நடைபெறும் நிலையான மற்றும் சமச்சீரான இயக்கத்தை எது அவைகளுக்கு கற்று தந்தது?
  
   இந்த வினாவிற்கு விடை கூறவேண்டும் எனபதற்காக ஒரு பதில் முன்னிறுத்தி சொல்லப்பட்டது தான் "இயற்கை" அதாவது மேற்கண்ட நிகழ்வுகள் உருவாக்க மூலம் இயற்கையாக அதாவது "தற்செயலாக" -எதிர்பாராத விதமாக ஏற்பட்டது என்கின்றனர்.

இது கடவுள் படைத்தார் என்பதற்கு மாற்றமாக சொல்ல வேண்டுமென்பதற்காக கூறப்பட்ட வாதமே தவிர அறிவு பூர்வமானவாதமல்ல.
   ஏனெனில் தற்செயல் என்பது எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல், யாதொரு திட்டமிடலும் இல்லாமல் நிகழும் ஒரு செயலாகும்.

   இச்செயலின் மூலம் அந்நிகழ்வு மிக நேர்த்தியாக இருப்பதற்கு நூறில் ஒரு பங்கே வாய்ப்புள்ளது.அதுவும் ஆயிரத்தில் ஒரு முறை மட்டுமே அத்தகைய சமச்சீர் ஒழுங்குமுறை சாத்தியம். அதன் அடிப்படையில் தற்செயல் அல்லது எதிர்பாராவிதமாகவே இப்பிரபஞ்ச உருவாக்கம் ஏற்பட்டது என ஏற்றுக்கொண்டாலும் அதை தொடர்ந்த நிகழ்வுகள் அதாவது சூரியன், சந்திரன் மற்றும் ஏனைய கோள்கள் மிக நேர்த்தியாக தத்தமது நீள்வட்ட பாதையில் சொல்லிவைத்ததுப்போல சிறிதும் ஒழுங்கினமின்றி சுழல்கின்றதே இது எப்படி தற்செயலால் சாத்தியமாகும்.

    ஏனெனில் தற்செயல் ஏற்படுத்தும் விளைவுகள் பெரும்பாலும் ஒரு சமச்சீரற்ற நிலையே உருவாக்கும். அஃது ஒரு முறை நேர்த்தியாக தற்செயல் விளைவகளை வெளிப்படுத்தினாலும் தொடர்ந்து மிக தெளிவான ஒழுங்கான விளைவுகளை தரமுடியாது., அஃது அவ்வாறு தந்தால் அதற்கு பெயர் தற்செயல் அல்ல! முன்கூட்டியே திட்டமிட்ட ஒரு செயல்.

  ஆக! மேற்குறிப்பிட்ட பால்வெளி நிகழ்வுகள் அனைத்தையும் ஆராயும் எந்த ஒரு சாரசரி அறிவுள்ளவனும் அதன் இயக்கம் ஏதோ திடீரென்று எதுவென்ற தெரியாத ஒரு நிலையோ அல்லது "தற்செயல்" மூலத்திலோ ஏற்பட்டதன்று. மாறாக முன்கூட்டியே அதன் விளைவுகளை நன்கு ஆராய்ந்து தீர்க்கமாக முடிவெடுக்கப்பட்ட ஒரு புத்திசாலித்தனத்தால் தான் உருவாக்க முடியும் என்பதை உணர்ந்துக்கொள்வான்.

  எனவே தற்செயல் என்பது புத்திசாலித்தனம் ஆகாது!அஃது புத்திசாலித்தனமாக செயல்படுவதாக இருந்தால் அது எப்படி தற்செயலாகும்? எனவே இத்தகைய புத்திசாலித்தனம் நமது அறிவுக்கும் பொருந்தக்கூடிய நிலையிலேயே இருக்கிறது.மேலும் அந்த புத்திசாலித்தனத்தை இதுவரையிலும் நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் முடியவே இல்லை.

  ஆக அறிவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஐம்புலன்களுக்கும் ஆட்கொள்ளப்படாத அந்த ஒரு சக்தியே "கடவுள்" என ஏற்றுக்கொள்வதில் என்ன தடை இருக்கிறது?யார் கடவுள்?

    சரி., கடவுள் இருப்பதாக ஏற்றுக்கொள்கிறோம். எத்தனை கடவுள்? ஒருவரா? பலரா? அல்லது ஒருவர் தான் என்றால் எந்த கடவுள் உண்மையானவர்? இது கடவுளை ஏற்போர்களும் சிந்திக்கவேண்டிய கேள்வி., நீங்களோ நானோ பிறந்த மதத்தின் அடிப்படையில் கடவுளை பின்பற்றினால் போதுமென்றிருந்தால் "கடவுள்' நமக்கு பகுத்தறிவு என்ற ஒரு அறிவை வழங்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.

  பிறப்போர் உண்மையான கடவுள் யார் என அறியவும் அஃது அதிலே இருப்போர் உண்மையான கடவுள் வழி அறிந்து நடந்திடவுமே நமக்கு ஏனைய உயிரினத்திற்கு தரப்படாத ஒரு சிறப்பம்சத்தை தந்திருக்கிறான். ஆக கடவுள் என்று சொல்லக்கூடியவர் எப்படி இருக்கவேண்டும் என்பதை முதலில் தேர்வு செய்யுங்கள் அந்த நிலைக்கு ஒருவர் இருந்தால் அவர் தான் உலகின் கடவுள் ஒரே கடவுள்.
 • கடவுள் என்று சொல்லக்கூடியவர் தான் தோன்றியாக இருக்க வேண்டும். அவருக்கு தகப்பனோ,மகனோ வம்சாவழிகளோ இருக்கக்கூடாது.
 • அவர் இணை துணை இல்லாதவராக இருக்கவேண்டும், மனைவி மக்கள் இல்லாதவராக இருக்கவேண்டும்.
 • எந்த ஒரு உயிரினத்திடமிருந்தும் எந்தவித தேவையும் அற்றவராக இருக்கவேண்டும்.
 • மனிதர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டவராக; கட்டுப்பாட்டிற்குள் அகப்படாதவராக இருக்கவேண்டும்.
 • மனித மற்றும் ஏனைய உயிரினங்களின் பலகினங்களை தன்னுள் கொண்டவராக இருக்கக்கூடாது
 • அவரை பற்றிய வரையறைகள் முழுதாக மற்றும் தெளிவாக நமக்கு விளக்கப்பட்டிருக்க வேண்டும்.
 • மனித சமுதாய முழுவதற்கும் கடவுளை ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் "அத்தாட்சிகள் கடவுள் புறத்திலிருந்து" அந்தந்த சமுகத்திற்கு வழங்கப்பட்டிருக்கவேண்டும்.
 • எக்காலத்திற்கும் பின்பற்றத்தகுந்த செயல்முறைகள் உலகம் அழியும் வரையிலும் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கவேண்டும்
 • நன்மைகள் புரிந்தால் பரிசும், தீமைகள் புரிந்தால் தண்டனையும் அளிக்கவேண்டும் அதுவும் மேற்கொள்ள மற்றும் தவிர்க்கவேண்டியவை குறித்த விளக்கங்கள் மற்றும் சட்டமுறைமைகள் எந்த ஒரு தனிமனிதனுக்கும் இலகுவாக வழங்கப்பட்டிருக்கவேண்டும்.
 • மனித நலத்திற்கோ சமுகத்திற்கோ பிரயோஜனமற்ற சடங்குகள் சம்பிரதாயங்கள் ஏற்படுத்தபடாமல் இருக்கவேண்டும்.
 • இறுதியாக, தனி மனித வாழ்வுக்கு ஏதுவான அனைத்து நடைமுறை சாத்தியக்கூறுகளும் அவரால் மனித சமுதாய முழுமைக்கும் தெளிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும்
இதை அடிப்படையாக கொண்டு எவர் இருக்கிறானோ "அவர் தான் கடவுள்"

                                                                அல்லாஹ் மிக்க அறிந்தவன்.


25 comments:

 1. //பிறப்போர் உண்மையான கடவுள் யார் என அறியவும் அஃது அதிலே இருப்போர் உண்மையான கடவுள் வழி அறிந்து நடந்திடவுமே நமக்கு ஏனைய உயிரினத்திற்கு தரப்படாத ஒரு சிறப்பம்சத்தை தந்திருக்கிறான்.//
  //இதை அடிப்படையாக கொண்டு எவர் இருக்கிறானோ "அவர் தான் கடவுள்"//

  வாக்கியங்களை மாற்றி (இலகுவாய் புரிந்து கொள்ளும்படி) அமைத்தால் நல்லது பாய். மற்றபடி, நல்லதொரு பதிவு.

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் குலாம்.
  //இதை அடிப்படையாக கொண்டு எவர் இருக்கிறானோ "அவர் தான் கடவுள்"//
  //அல்லாஹ் மிக்க அறிந்தவன்.//
  நல்ல இடுகை. நன்றி.

  ReplyDelete
 3. வ அலைக்கும் சலாம்
  சகோதரர் mohamed ashik அவர்களுக்கு தங்களின் பகிர்வுக்கு நன்றி
  சகோதரி @அன்னு அவர்களுக்கு நான் தற்போது இணையத்தில் தொடர்ந்து இருக்கும் வாய்ப்பு குறைவு இன்ஷா அல்லாஹ் விரைவில் விளக்குகிறேன்.

  ReplyDelete
 4. assaamu alaikum warh
  GOOD aritical

  ReplyDelete
 5. அஸ்ஸலாமு அழைக்கும். கடவுள்
  உடைய பண்புகளை
  மிகத்தெளிவாக விளைக்கி இருகிறிர்கள்
  நன்றி.@ gulam nana

  ReplyDelete
 6. தற்காலத்திற்கு தேவையான பதிவு!

  ReplyDelete
 7. , தனி மனித வாழ்வுக்கு ஏதுவான அனைத்து நடைமுறை சாத்தியக்கூறுகளும் அவரால் மனித சமுதாய முழுமைக்கும் தெளிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும்.......இறைவன்
  : மனிதர்க்கு
  செய்ய வேண்டிய அருள் கொடைகளை பற்றி விளக்கி
  இருபது நன்று...

  ReplyDelete
 8. இன்ஷா அல்லாஹ்...
  மீண்டும் சந்திக்கலாம்......
  எனக்கு துஆ செய்கள்........

  ReplyDelete
 9. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
  சகோதரர் நஸ்ருதீன் அவர்களுக்கு தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
  அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்

  ReplyDelete
 10. 22/10/10
  என் அன்பு சகோதரர் குலாம் அவர்களுக்கு
  அஸ்ஸலாமு அழைக்கும்...அல்லாஹ் உக்களுடைய இந்த பணிய மேலும்
  சிறப்பித்து தருவானாக
  ஆமின்.....

  ReplyDelete
 11. 22/10/10இயசு சிறுவாயில் அடயப்பட்டாரா...
  எனக்கு விளக்கம் தான்க
  ........gulam nana

  ReplyDelete
 12. 25/10/10.......அஸ்ஸலாமு அழைக்கும்..........
  எனக்கு ஜியாரத் பற்றி விளக்கம் வேண்டும்..........
  எனக்கு உடனடியாக
  எனக்கு விளக்கம்
  தாங்க.................அஸ்ஸலாமு அழைக்கும்..........
  எனக்கு ஜியாரத் பற்றி விளக்கம் வேண்டும்..........
  எனக்கு உடனடியாக
  எனக்கு விளக்கம்
  தாங்க...............gulaam

  ReplyDelete
 13. 25/10/10......குரான் ஆயத்தை (அல்லா தவிர யாரை
  அளக்கிறீர்களோ)
  போன்ற வசனத்தை
  சொன்னால் அது
  காபிகளுக்கு சொன்ன வசனம்
  என்று சொல்றாங்க.....
  எனக்கு விளக்கம்
  தாங்க.........
  ....gulam

  ReplyDelete
 14. Assalamu alaikkum......unggaludaiya artical very very gud.

  ReplyDelete
 15. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி அன்னு
  இஸ்லாமியராக பிறப்பதாலோ அல்லது ஏனைய மத மற்றும் மதம் சாரா கோட்பாடுகளின் அடிப்படையில் ஒருவர் பிறப்பதாலோ அவருக்கு சொர்க்கம் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக எவராக இருப்பினும் நல்ல செயல்களை செய்வதும் தீய காரியங்களிலிருந்து விலகியும் இறைவன் கூறியப்படி தங்கள் வாழ்க்கையே இறுதி வரை அமைத்து கொள்கிறாரோ அவருக்கு இறைவன் வெகுமதி அளிக்கிறான். ஆக இஸ்லாமியராக இருந்தாலும் ஏன இறைவன் வகுத்த கோட்பாடுகளின் வழி தன் வாழ்வை அமைத்தால் மட்டுமே சொர்க்கம் சாத்தியம்... ஆக ஏனைய மத மற்றும் மதம் சாரா சமுகத்தில் பிறந்த மக்கள் எவ்வாறு இஸ்லாத்தை அறிந்துக்கொள்ள வேண்டுமோ அதுப்போல இஸ்லாத்தில் இருப்பவர்களும் அஃது தூய இஸ்லாத்தை புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதே அவ்வாக்கிய கருத்து..

  ReplyDelete
 16. வ அலைக்கும் சலாம் சகோதரர் நஸ்ருதீன் இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா? அதுக்குறித்து இங்கு காணுங்கள் மேலும் தகவல்களுக்கு என் மெயில் ID க்கு தொடர்புக்கொள்ளுங்கள் ஏனைய விவரங்கள் இன்ஷா அல்லாஹ் தருகிறேன்

  ReplyDelete
 17. அஸ்ஸலாமு அழைக்கும் ....................
  உக்களுடைய விளக்கம்
  மிக நன்று...........எல்லா
  புகழும் இறைவனுக்கே
  .........

  ReplyDelete
 18. 2/11/10.......அஸ்ஸலாமு அழைக்கும்.....அன்பு சகோதரர் குலாம் உக்களுடைய இந்த் இறைஅடிமை பணிகள்
  மேலும் அல்லா சிறப்பாகி வைபானாகே ஆமின் .........உக்களுக்கும் ,எனக்கும் நேர்வழி காட்டக்குடியவன் அல்லா ஒருவன்தான் ...@GULAM.....

  ReplyDelete
 19. Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....


  www.ellameytamil.com

  ReplyDelete
 20. மாஷா அல்லாஹ் அருமையான ஆக்கம் தொடருங்கள்
  அப்துல் கபூர் அபுதாபி

  ReplyDelete
 21. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
  ஜஸாகல்லாஹ் கைரன்.,
  அப்துல் கபூர் அவர்களுக்கு தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

  ReplyDelete
 22. //இஸ்லாத்தை பொருத்தவரை மனிதர்களை இறைவன் படைத்ததே அவனை வணங்குவதற்காக தான்! //
  //எந்த ஒரு உயிரினத்திடமிருந்தும் எந்தவித தேவையும் அற்றவராக இருக்கவேண்டும்.//

  இது முரண்பாடாக இல்லை??

  ReplyDelete
 23. //இஸ்லாத்தை பொருத்தவரை மனிதர்களை இறைவன் படைத்ததே அவனை வணங்குவதற்காக தான்! //
  //எந்த ஒரு உயிரினத்திடமிருந்தும் எந்தவித தேவையும் அற்றவராக இருக்கவேண்டும்.//
  இது முரண்பாடாக இல்லை??
  உங்கள் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக..!
  சகோதரர் ஆனானி., இக்கேள்வியே பெயர் கூறி பதிந்திருக்காலாமே....?
  முதலில் வணங்குதல் என்பதும் தேவை என்பதும் ஒன்றா...?
  வணங்குதல் என்பது ஆளுமையை அடிப்படையாக கொண்டது அதாவது படைக்கப்பட்டவனின் ஆளுகையின் கீழ் படைப்புகள் யாவும் துதித்து அவனை சங்கைப்படுத்துவது அல்லது கௌவரவிப்பது ஆகும் மேலும் இது படைப்புகளின் கடமையாகும். அஃதில்லாமல் கடவுளின் பெயரால் பூஜை, புனஷ்காரங்கள் செய்வதோ அல்லது கடவுளுக்காக உணவு மற்றும் ஏனையவைகளை படையலிடுவதோ தான் தேவை என்ற அளவுகோலில் அடங்கும்... ஆக வணக்கம் ஒரு போதும் தேவையாகாது...சகோதரரே... மேலும் இங்கு மனிதனை படைத்து வணங்க சொல்லவில்லை., மாறாக படைக்கப்பட்டதன் நோக்கமே வணங்குவதற்காக தான்., ஆக வணங்குவதற்காகவே படைக்கப்பட்ட ஒன்று அஃது வணங்குதலை எவ்வாறு எவ்வாறு தேவை எனபதோடு ஒப்பிட முடியும்., அப்படியானால் தொழுகை ,நோன்பு ஹஜ் போன்றவைகள் அல்லாஹ்விற்காக செய்வது ஏன் என்ற கேள்வி இங்கு எழலாம்... இன்ஷா அல்லாஹ் இந்த ஆக்கம் அதற்கு பதில் தரும் என எண்ணுகிறேன் பாருங்கள் தேவையுடையவனா...இறைவன்? மேலும் கேள்விகள் தோன்றின் எழுதுங்கள்
  இறை நாடினால் இனியும் சந்திப்போம்
  -ஓர் இறை அடிமை

  ReplyDelete
 24. பால்வெளியில் உள்ள மிகப்பெரிய கிரகங்கள், நட்சத்திரங்கள் போன்ற பிரம்மாண்டமான படைப்புகளை வழி நடத்தும் கடவுளால் மனிதர்களை மட்டும் ஏன் சரியான பாதையில் வழிநடத்தி கொண்டு செல்ல முடிவதில்லை?

  இன்னொரு விஷயம். அறிவியல் கடவுளுக்கு எதிரி அல்ல. ஆதாரமே இல்லாமல் யாரோ ஒருவர் அல்லது சிலர் சொல்லி விட்டு சென்ற விஷயங்களின் ஆதாரங்களை தேடுவதே அறிவியலின் பணி. பிரபஞ்சத்தைப் பற்றி மத நூல்களில் சொல்லியிருந்த பல விஷயங்கள் பொய் என்று ஆதாரத்துடன் அறிவியல் நிரூபித்திருக்கிறது. ஒருவேளை உண்மையான கடவுளை அறிவியலே கண்டுபிடித்து விட்டால் மத சண்டைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வருமல்லவா?

  ReplyDelete
 25. அன்பு சகோ விஜய்
  உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
  //கடவுளால் மனிதர்களை மட்டும் ஏன் சரியான பாதையில் வழிநடத்தி கொண்டு செல்ல முடிவதில்லை? //

  சூரியன் பூமி உட்பட கோள்கள் போன்ற அஃறிணை பொருட்கள் மற்றும் ஐந்தறிவு உயிரினங்கள் போன்றவைகளுக்கு, அவை செயல்பாடுகள் குறித்து இறைவன் ஒரு வரையறையை ஏற்படுத்தி அதனதன் இயக்கம் குறித்தும் தெளிவாய் அறிவுறுத்தி அவனது கட்டுப்பாட்டுக்குள் இயங்க செய்கிறான்.,

  மாறாக மனித உயிரிக்கு மட்டுமே எதையும் பகுத்து ஆராயும் ஒரு கூடுதலான அறிவை வழங்கி அதனடிப்படையில் வாழ்வை அமைக்க சொல்கிறான். ஆக அவன் நேர்வழி பெரும்பொருட்டு அவன் புறத்திலிருந்து வேதத்தையும், தூதரையும் அந்தந்த சமுகத்திற்கு அளித்து நன்மை / தீமையை பிரித்தறிவித்து அதன் வழி நடக்க பணிக்கிறான்.ஏனெனில் இவ்வுலகம் ஒரு சோதனைக்கூடமாகவே இருப்பதால் மனித சுய சிந்தனையுடன் எதையும் தேர்ந்தேடுக்கும் உரிமையும் வழங்குகிறான்.,

  இஸ்லாமும் அறிவியலுக்கு எதிரானதல்ல., அஃது இருப்பின் குர்-ஆன் கூற்றில் பொய்யாக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை எடுத்து தாருங்கள்., உங்கள் கவனத்திற்கு ஒரு விசயம்., உண்மையான அறிவியல் இதுவரை கடவுள் இல்லையென்றும் நிருபிக்கவில்லை.,

  மாற்றுக்கருத்துக்கள் இருப்பின் மேலும் தொடருங்கள்.
  உங்கள் உள்ளம் உண்மையான தேடுதலின்பால் செல்ல இறைஞ்சிகிறேன்
  -இறை நாடினால் இனியும் சந்திப்போம்

  ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்