"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."
Showing posts with label நாத்திகம். Show all posts
Showing posts with label நாத்திகம். Show all posts

Saturday, November 23, 2013

கடவுளின் நிறம்?!

எவனால் மட்டும் இவ்வுலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி..! 

  • பறப்பதாகட்டும்
  • மிதப்பாதகட்டும்
  • நடப்பதாகட்டும்
  • பாசத்தை பொழிவதாகட்டும்


கைத்தேர்ந்த ஆசானிடம் கற்ற பாடம் போன்று பிறப்பிலேயே மனிதனல்லா எல்லா உயிர்களும் வாழ்வியல் நடவடிக்கைகள் அனைத்திலும் தெளிவான மற்றும் பாதுக்காப்பான கட்டமைப்பை வழக்கமாக்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அனைத்தையும் அடக்கி ஆளும் வல்லமைப்பெற்ற மனிதனோ பிறக்கும் போது எல்லாவற்றிலும் கீழாக பூஜ்யம் கூட அறியாதவனாய் பிறக்கிறான்.

மற்ற உயிரினத்தை காட்டிலும் மனித படைப்புக்கு மட்டும் இந்த தலைக்கீழ் மாற்றத்திற்கான காரணம் என்ன? ஏன் அப்படி பிறக்க- அல்லது பிறப்பிக்கப்பட வேண்டும்.? பிறப்பின் அடிப்படையிலேயே மற்ற உயிரினத்திற்கும், மனித படைப்பிற்கும் உள்ள வித்தியாசங்கள் இங்கே நமக்கு தெளிவாய் எதையோ உணர்த்துக்கின்றது. புரிந்துக்கொள்ள முற்படுவதில் தான் நமதறிவில் பிரச்சனை

* * *

மனிதன் உட்பட அனைத்து படைப்பின் நோக்கம் குறித்து ஆராய முற்படும் போது இவ்வுலகில் இரண்டு விதமான கருத்துகள் நிலவுவது நாம் அறிந்ததே. எல்லாவற்றையும் படைத்தது கடவுள் என்று ஆத்திகர்களும், எதையும் படைக்க கடவுள் தேவையில்லை  என்று நாத்திகர்களும் கூறுகின்றனர்.

இங்கே பொது நிலையில் வைத்து விமர்சிக்கப்படுவது கடவுள் என்ற பதமே. படைப்பு நிலை குறித்து பின்னர் பார்ப்போம், கடவுள் என்பது யார் அல்லது என்ன என்பதை இருவருக்கும் பொதுவாக முதலில் வரையறை செய்வோம்,

கடவுள் என்பதனை இவ்வுலகில் இதுவரை எவரும் கண்ணால் கண்டதில்லை. இதுதான் ஆரம்ப மற்றும் பொதுவாக கடவுள் குறித்து எவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. இதை அடிப்படையாக வைத்து கடவுள் இல்லையென்பதை ஒருவர் முடிவு செய்யலாம். ஆனால் அப்படி முடிவு செய்வதாக இருந்தால் ஒரு பொது நிலை உடன்பாட்டிற்கு அவர் வந்தாக வேண்டும். அதாவது,

# புலன்களுக்கு அகப்படாமை
# இப்பிரஞ்சத்தில் காணக்கிடைக்காமை
# நம்புவதற்கான காரண - காரியங்கள் இல்லாமை

இப்பிரஞ்ச முழுக்க தேடினாலும் கடவுள் கண்ணுக்கு தெரிவதில்லை. கடவுளின் இருப்பும் நிருப்பிக்கப் படவில்லை. உறுதி செய்யப்படாத ஒன்றை நம்பவேண்டும் என்ற அவசியமுமில்லை என கடவுளை மறுக்க ஆய்வுகளை துணைக்கழைக்கும் நாத்திகர்கள் அதே அளவுகோலை தான் ஏற்பதாக சொல்லும் அறிவியலுக்கு கொடுப்பதில்லை..

ஏனெனில் காரண காரியங்களின் வெளிப்பாடே அறிவியல். அந்த அறிவியலின் உறுதிப்பாட்டிலே பெரும்பான்மை விசயங்கள் ஏற்கவோ, மறுக்கவோ படுகிறது.

 பொதுவில் இல்லாத, கண்ணுக்கு தென்படாத ஒன்றை நம்ப தேவையில்லையென சொல்லும் அறிவியல் கடவுளின் இல்லாமை குறித்து எந்த பிரகடனத்தையும் தெளிவாக முன்மொழியவில்லை. அப்படியிருக்க

1. கடவுள் என்றால் கண்களுக்கு தெரியும்படியாக இருக்க வேண்டும் என்றோ
2. இப்பிரபஞ்சக்கூட்டுக்குள் இருந்தாக வேண்டும் என்றோ

எந்த ஆதாரத்தை அடிப்படையாக வைத்து நாத்திகர்கள் இந்த கேள்விகளை எழுப்புகின்றனர்.? அறிவியல் ஒன்றை இல்லையென்று சொன்னால் அது பார்க்கும் வடிவில் இருந்தாக வேண்டிய பொருள் என்பது பொதுவில் நிருபணம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போதே அதன் எதிர் நிலையே பொய்யென நிருபிக்க முடியும்

கடவுள் என்பது / என்பவர் பார்க்கும் பொருளாக இருந்தாக வேண்டும் என அறிவியல் வரையறை தந்திருந்தால் மட்டுமே இப்பிரபஞ்சத்தில் அதன் இருப்பு இல்லா நிலை பார்த்து, கடவுள் என்பது ஒரு வெற்று நம்பிக்கையென்பதாக பொருள்கொள்ள முடியும்.

கடவுளின் இருப்பை ஆதாரப்பூர்வமான நிருபிக்க அறிவியல் எங்கும் வரையறை தந்திடா பொழுது கடவுள் என்பது /என்பவர் காணும் வடிவில் இருந்தாக வேண்டும் என்ற அறிவை நாத்திகர்களுக்கு யார் கொடுத்தது..?

ஆய்வு ரீதியாக கடவுளை மறுக்க வழியில்லை எனும் போது தம் சாத்தியக்கூற்றை மெய்ப்பிக்க எதிர் நிலையே தான் கையாள வேண்டும். அதாவது, கடவுள் பெயரால் முன்னிருத்தப்படும் எல்லாவற்றிற்கும் உரிய பதிலை அறிவுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் நாத்திகம் வளர்க்கும் அறிவியல் கொண்டிருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு, இந்த மேஜையையும் அதன் மீது ஒரு பேனாவையும் வைத்தது நான் என்கிறேன். அதை மறுக்கும் நீங்கள் என்னை பொய்ப்படுத்த வேண்டுமென்றால் எனக்கு எதிரான நிருபணம் தந்தாக வேண்டும். அந்த மேஜை மற்றும் பேனாவை வைத்தது நான் இல்லையென்று நீங்கள் சொன்னால் சாத்தியக்கூற்றில் ஐம்பது சதவீகிதத்தை மட்டுமே நீங்கள் நிறைவு செய்து இருக்கீறிர்கள்.

பதிலின் இரண்டாம் பாதியாய் அதனை அங்கே வைத்தது யாரென சொல்லியாக வேண்டும். அப்போதே பதில் முழுமையுறும். மேஜையும், பேனாவும் உங்கள் முன் இருப்பது மட்டும் நிஜம், திடீரென மேஜை தோன்றி அதில் நேர்த்தியாக பேனாவும் வைக்கப்பட்டிருக்கிறது என யாரேனும் சொல்வாரானால்... என்னை பொய்ப்பிக்க அல்ல, என் கேள்வியை உள்வாங்கும் அடிப்படை தகுதி கூட உங்களிடம் இல்லையென தான் சொல்லுவேன்.

இப்படியான உதாரணம் தான் இன்று உண்மைப்படுத்தப்படுகிறது. ஆம்! இப்பிரபஞ்சத்தை, அதில் உள்ள அனைத்தையும் படைத்தது கடவுள் என்று கூறினால் அதை மறுக்கும் நாத்திகக்கூட்டம், எதையும் படைக்க கடவுள் தேவயில்லையென என பதில் கூறுகிறது,

நேர்த்தியாக படைக்கப்பட்டதற்கு காரணம் கேட்டால் அங்கே அறிவுப்பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் பதில் பதிவு செய்யப்படுவதில்லை. திடிரென இயற்கை ஏற்படுத்தியாக சில அறிவார்ந்த(?) பதிலும் அங்கே சொல்லப்படுவதுண்டு. எதற்காக கடவுளை மறுப்பதாக சொல்கிறார்களோ அதே காரணத்தை அறிவியலாக்க முயல்வது தான் நாத்திகர்களின் தெளிவான முரண்பாடு!






கடவுளின் இருப்பை பொய்ப்பிக்க வேண்டுமானால்.. உலக படைப்பின் துவக்கம் முதல் இன்று வரையிலும் இப்பிரபஞ்ச பெருவெளியில் நிகழும் அனைத்து இயக்கங்களுக்கும் காரணங்களையும், அவசியங்களையும், ஆதாரத்தோடு அறிவியல் கையில் வைத்திருக்க வேண்டும். ஆனால் இன்றைய பல கேள்விகளுக்கு அறிவியலிடமும், அதை கடவுளாக்க முயற்சிக்கும் அறிவிலிகளிடமும் பதில் இல்லை

கேள்விகள் விரிந்துக்கொண்டே தான் இருக்கின்றன இப்படி., 

சூரியன், விண்மீன் (Galaxy) மண்டலத்தை 225 (~) மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறையும், அந்த விண்மீன் மண்டலம் அண்ட மையத்தை 550km/s என்ற வேகத்திலும் சுற்றிவருகிறது, ஆனால் அந்த அண்ட மையம் எதை மையமாக  வைத்து சுற்றுகிறது- பதில் வரா கேள்வி?

பூமியும், பிற கோள்களும் அதனதன் ஈர்ப்பு விசையில் தனக்கான பாதைகளை அமைத்துக்கொண்டு மிக நேர்த்தியாக சுற்றி வருகிறதே அந்த எல்லைக்கோடுகளை உருவாக்கியது எந்த அறிவியல்?

சூரியனிடமிருந்து தீங்கு விளைவிக்கும் வகையில் வெளியாகும் புற ஊதா கதிர்களை (UV - Ultra Violet ) தடுத்து நிறுத்தும் கேடயமாக பூமியின் ஓசோன் படலம் இருக்கிறது. ஓசோன் மட்டுமில்லையென்றால் இப்புவியில் எந்த உயிரினமும் உயிர்வாழ முடியாது. உயிர்களின் பாதுக்காப்பு கவசமான ஓசோன் தேவையான இடைவெளியில் 15 முதல் 45 கி.மி உயரத்தில் மட்டும் வளிமண்டத்தில் ஏற்படுத்தப்பட்டது எப்படி?

சந்திரனில் வெப்பம் அதிகம்,  வியாழனில் 350 மடங்கு ஈர்ப்பு விசை அதிகம். இன்னும் சில கிரகங்களில் வெப்பமும் ஈர்ப்பு விசையும் குறைவு, காற்று இல்லை, தண்ணீர் இல்லை இப்படி உயிர்வாழ எந்த தகுதிகளும் ஏனைய கோள்களில் இல்லா நிலையில் பூமியை மட்டும் உயிர் வாழ உகந்த அளவில் தயார் படுத்தியது யார்?

இன்னும் சொல்லப்போனால் இறந்த காலத்திற்கு கூட  இவர்களிடம் தெளிவான சான்று இல்லை. உலகப்படைப்பின் ஆரம்பமான பெருவெடிப்புக்கொள்கை எப்படி ஏற்பட்டது? என விவரித்து சொல்லும் அறிவியல் ஏன் ஏற்பட வேண்டும்? என்ற ஒற்றை கேள்வியில் தன் இயலாமையை இவ்வுலகத்திற்கு வெளிப்படுத்திக்கொண்டு தான் இன்னும் இருக்கிறது.

இந்த கேள்விகள் பரிணாமம் வரையிலும் தொடரத்தான் செய்கிறது. எந்த உயிரினத்தை எடுத்துக்கொண்டாலும் ஒன்று மற்றொன்றிலிருந்து வேறுப்பட்டு பற்பல உடற்கூறுகளையும், சிக்கலான மூலக்கூறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இப்படி தொடர்பற்ற உயிரின வரிசைகள் எந்த சூழலில் எதுவாக மாற்றமடைந்ததன?

ஏற்பட்ட உயிரின மாற்றம் குறித்து மட்டுமே விவரிக்கிறார்களே ஒழிய ஏன் ஏற்பட வேண்டும் என்பதற்கு இதுவரை பதிலில்லை. உதாரணமாய், தாவரங்கள் எந்த உயிரின மூலத்திலிருந்து தோன்றியது என்பதற்கோ, அதன் தொடர்ச்சியாக எந்த உயிரினம் பரிணாமம் அடைந்தது என்பதற்கோ எந்த ஆவண- ஆதாரப்பூர்வ சான்றுகளும் பரிணாம ஆதாரவாளர்களால் பதிவு செய்யப்படவில்லை.

எதற்கெடுத்தாலும் அறிவிலை ஆதாரமாக்குவோர் ஒன்றை கவனிக்க வேண்டும். அறிவியல் எதையும் உருவாக்குவதில்லை. மாறாக ஒன்றை கண்டறிந்து மட்டுமே சொல்கிறது. ஆகவே தான் பலக்கோடி உருவாக்கத்திற்கு பதில் இல்லையென்றாலும் அங்கே அறிவியல் முரண்பாட்டை நாத்திகர்கள் கற்பிப்பதில்லை.

ஒரு விசயம் மட்டும் தெளிவு. விடையில்லா கேள்விகள் நாத்திகர்களிடம் முன்னிருத்தப்பட்டால் விரைவில் விடை கண்டுப்பிடிக்கப்படலாம் என எதிர்க்காலத்தின் பக்கம் கை காட்டுகிறார்கள். அல்லது இயற்கை இறந்த காலத்தில் ஏற்படுத்தியதாக சொல்கிறார்கள்.

கடவுளை மறுக்க இதை ஒரு அறிவார்ந்த விளக்கமாக வேறு சொல்கிறார்கள். மொத்தத்தில், கடவுளை மறுக்க எந்த நிருபிக்கப்பட்ட ஆதார சான்றுகளும் இதுவரையிலும் நாத்திகர்களிடம் இல்லை. கடவுள் இல்லையென எதிர்க்காலத்தில் கண்டறிப்படலாம் என எவராவது சொல்வாரானால்..

குட் இது ஏற்றுக்கொள்ளும் வாதம். ஆனால் அதுவரை கடவுள் இல்லையென பொதுவில் எந்த நாத்திகரும் சொல்ல கூடாது!

அடிப்படை அறிவற்ற ஒரு கோட்பாட்டை வைத்துக்கொண்டு சூழலுக்கும், இடத்திற்கும் தகுந்தார்ப்போல் தங்கள் நிறங்களை மாற்றிக்கொண்டே இருக்கும் நாத்திகம் - தவறான புரிதலுடன் கடவுளை மறுக்க முற்படுவது தான் அபத்தமான ஆச்சரியம்!


புரிதலில் உதவி
பிரபஞ்சம்- ஓர் அறிவியல் பார்வை (Book) 


                                 அல்லாஹ் மிக்க அறிந்தவன்


தொடர்புடைய ஆக்கங்கள் :
கடவுளை மெய்ப்பிக்கும் அறிவியல்.
பரிணாமத்தில் மனிதன்.
read more "கடவுளின் நிறம்?!"

Friday, April 12, 2013

உடையும் பகுத்தறிவு..!


                                      ஓரிறையின் நற்பெயரால்

பகுத்தறிவு என்றாலே நம் சிந்தைக்கு முதலில் வருவது நாத்திகமும்- அதை பின்பற்றுபவர்களும் தான்.. அப்படியான ஒரு தோற்றதை தான் இந்த சமூகம் பொதுவெளியில் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. முதலில் பகுத்தறிவு என்பதோடு, நாத்திகத்தின் அடிப்படை கோட்பாடுகள் (?) எந்த விதத்தில் உடன்படுகிறது என்பதை கொஞ்சம் அலசுவோம்

பகுத்தறிவு எனப்படுவது  நிகழ்வுகளின் அல்லது கருத்துக்களின் கூறுகளை ஆராய்ந்து அவற்றின் இயல்புகளிலிருந்து ஆதாரப்பூர்வமான நிருபிக்கக்கூடிய முடிவுகளை முன்வைப்பது ஆகும். சுருக்கமாக கூறினால் பகுத்தறிவின் நோக்கம் மெய்ப்பொருளை அல்லது உண்மையக் கண்டறிவதே.

நாத்திகம் (Atheism) என்பது கடவுள் இல்லை என்ற நிலைப்பாடு, கடவுள் பற்றிய எத்தகைய நம்பிக்கையும் இல்லாமல் இருத்தல் அல்லது கடவுள் தொடர்பான நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் மறுக்கும் கொள்கை.  

பகுத்தறிவு மற்றும் நாத்திகம் இவை இரண்டிற்கும் விக்கி பீடியா கொடுக்கும் வரைவிலக்கணம் இவை. ஆனால் மேற்கண்ட இரண்டு செயல்முறைகளும் முற்றிலும் தொடர்பற்றவை. அப்படியிருக்க இன்று பகுத்தறிவாதிகள் என சமூகத்தில் நாத்திகர்கள் அடையாளப்படுத்தப் பட்டதற்கு என்ன காரணம்..?

தொடர்வோம்.

நாத்திகர்களின் பிரதான கொள்கை மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஒரே கொள்கை "கடவுள் மறுப்பு" ஒன்றே. கடவுளை மறுக்க ஆரம்பத்தில் அவர்கள் கையாண்ட வழிமுறைகள் * கடவுளின் பெயரால் சமூகத்தில் வர்த்தகரீதியான பிளவு, * கடவுளின் பெயரால் தேவையற்ற சடங்கு, சம்பிரதாயங்கள், * அறிவுக்கு ஒத்து வராத மூட பழக்க வழக்கங்கள்.

இவற்றை நன்கு கவனித்தால் ஒரு குறிப்பிட மதம் கொண்ட கொள்கைக்கு எதிர்ப்பாக மட்டுமே பொருள் கொள்ள முடியும். ஏனெனில் உலக அளவில் பெரும்பாலானோர் பின்பற்றும் கொள்கையை எதிர்ப்பதாக இருந்தால் அந்த கொள்கைகள் கூறும் அனைத்து விசயங்களையும் எதிர்க்க தன்னிடம் ஆணித்தரமான ஆதாரங்களை வைத்திருக்க வேண்டும். வரையறைகளை தன்னிடம் தெளிவாக வைத்திருக்காத மதங்கள் கூற்றை எதிர்த்தே தன்னை இந்த மண்ணில் நாத்திகம்  நிலை  நிறுத்திக்கொள்ள முயல்கிறது.

 ஆனால் இஸ்லாம் தனது கோட்பாடுகளை முன்வைத்து, கடவுள் குறித்த அனுமானங்கள், கடவுளின் பெயரால் மூட பழக்க வழக்கங்கள், கடவுளுக்கு சடங்கு சம்பிரதாயங்கள் போன்றவை கூடாது என தெளிவாக பிரகடனப்படுத்திய பிறகு நாத்திகம் தனது எதிர்ப்பை இஸ்லாத்திலும் நுழைக்க, மேற்கண்ட பட்டியலோடு தற்காலத்தில் அறிவியலையும் கடவுளை மறுக்க துணைக்கு அழைக்கிறது.

ஆகவே தான் நாத்திகம் எங்கே தனது உரையாடலை தொடங்கினாலும் கடவுள் மறுப்பு, கடவுள் இருப்பு என்ற வட்டத்தில் மட்டுமே நின்று விவாதித்துக்கொண்டிருக்கிறது. அதிலும் எதிரில் இஸ்லாம் இருந்தால் உடனே இஸ்லாமிய சட்டத்துக்குள்ளும் தம் கிளை கேள்விகளை தொடர்கிறது. இதை தான் இன்று வரையிலும் நேரடியாகவும், இணைத்திலும் கண்டு வருகிறோம்.

அதே நேரத்தில் தம் கொள்கைகளை விவரித்து, அவை மட்டுமே இந்த சமூகத்தின் நடைமுறை வாழ்வுக்கு உயர்ந்த வழியென்றும், சிறந்த வழியென்றும் எங்கேயும், எப்போதும் எடுத்து கூறி மக்களை தம் பால் அழைப்பதில்லை. மாறாக கடவுள் மறுப்பை மட்டுமே கொள்கையாக வைத்துக்கொண்டு அதையை இச்சமூகத்தில் ஒரு பிரதான ஆயுதமாக்கி தம் இருப்பை தக்கவைத்து கொண்டிருக்கிறது.


   தனக்கென பிரத்தியேகமான கொள்கை கோட்பாடுகள் இல்லாமல் எதிர்ப்பு என்ற ஒற்றை அணுகுமுறையை வைத்திருக்கும் ஒன்றை எப்படி அறிவார்ந்த பேரியக்கம் என்பதாக ஏற்றுக்கொள்ள முடியும்? இன்றைய சமூக சூழலில் இஸ்லாத்திற்கெதிராக விமர்சனங்கள் பதிவு செய்யப்படுவதுப்போல நாத்திகத்திற்கு எதிராக விமர்சனங்கள் பதிவு செய்யப்படுவதில்லையே அது ஏன்...? இப்படி ஒரு அறிவார்ந்த கேள்வியும் நாத்திகர்களிடையே உண்டு.

விமர்சனம் ஒன்றின் மீது பதிவு செய்யப்படுவதாக இருந்தால் அதை விமர்சிக்க முற்படும் அளவிற்கு அதன் கொள்கை- கோட்பாடுகள் வெளிப்படையாக நமக்கு முன்மொழியப் பட்டிருக்க வேண்டும். அந்த அடிப்படையில் இன்று இஸ்லாத்தின் கோட்பாடுகள் பதிவு செய்து வைக்கப்பட்டிருப்பதுப் போல நாத்திகம் தனது கொள்கை கோட்பாடுகளை இந்த உலகத்திற்கு தெளிவாக முன் மொழிந்து இருக்கிறதா...? 

இன்னும் சொல்ல போனால் கடவுள் மறுப்பு என்பது தனிமனித வாழ்வில் ஒருவர் மேற்கொள்ளும் ஒரு நிலைப்பாடு அவ்வளவே... மாறாக, அதுக்கொள்கையல்ல... ஒருவர் தன்னை நாத்திகராக இந்த உலகில் நிலை நிறுத்திக்கொள்ள, தம் வாழ்வை தொடர எத்தகைய வாழ்வியல் கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும்? அதற்கு நாத்திகம் பதில் சொல்லுமா...?

மனித வாழ்வுக்கு ஏற்புடையதல்ல என்று ஒரு கொள்கையை விமர்சித்து அதை பொதுப்படுத்தினால் அதை விட மேலான ஒரு கொள்கையை இவ்வுலகிற்கு அதுவும் எல்லா காலத்திலும், எல்லா மக்களும் பின்பற்றும் வகையில் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.. அப்படி எங்காவது நாத்திகம் தம் கொள்கையை பிரகடனப்படுத்தி இருக்கிறதா...? 

தனக்கென கொள்கையையும் தெளிவான பின்பற்றலும் இல்லாத ஒன்றின் மீது எப்படி விமர்சனங்களை பதிவு செய்ய முடியும்..? அதனால் தான் அதிகமாக நாத்திகத்தின் மீதான விமர்சனங்கள் பதிவு செய்யப்படுவதில்லை. அது மட்டுமில்லை இன்று சமூகத்தில் நாத்திகராக வலம் வருபவர்கள் பெரும்பாலும் தங்களுக்கென்று எந்த பிரத்தியேக வாழ்வியல் நடைமுறைகளையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கவில்லை. இணையத்தில் கூட அஃறிணை பெயர்களோடு தான் உலா வருகிறார்கள். மதம் சார்ந்த குறியீடுகள் தம் மீது விழாமல் இருப்பதற்காக... ஆனால்

பிறப்பு, திருமணம், இறப்பு போன்ற அடிப்படை மனித நிகழ்வுகளில் ஏதாவது ஒரு மதத்தின் அடிப்படையிலேயே தங்களை வழி நடத்திக்கொள்கின்றனர். அப்படி இல்லை என ஒரு நாத்திகர் சொல்வாரானால் பிறப்பு முதல் இறப்பு வரையிலான தனது வாழ்க்கை முறை எந்த கொள்கை அடிப்படையில் அமைந்திருக்கிறது என பொதுவில் கூறப்பட்டும்.

உள்ளூர் முதல் உலக வர்த்த மையம் வரை ஏற்படும் பிரச்சனைகளுக்கு சமூகத்தையும், அச்சமூகம் சார்ந்திருக்கும் மதத்தையும் குறை கூறி முக நூல் பக்கத்திலும், தளங்களிலும் தம் எண்ணங்களுக்கு எழுத்து வர்ணம் அடிக்கும் நாத்திகர்கள், அதற்கான தீர்வாக தாம் கொண்ட கொள்கை என்ன சொல்கிறது.. என்பதை பதிவு செய்தார்களா..? தினம் தினம் நடைமுறை வாழ்வில் நாம் காணும் ஆயிரமாயிரம் பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வு நாத்திக கொள்கையில் (?) மட்டுமே சாத்தியம் என்றாவது பகிரங்கப்படுத்துவார்களா..?

தம் நிலை குறித்து எங்கும் விவாதிக்க முற்படாமல், எதிர் தரப்பை மட்டுமே விமர்சித்து, விவாதிக்க முற்படுவதே நாத்திகத்தின் "லாவக போக்கு". இனி வரும் காலங்களிலாவது நாத்திகர்கள் தங்கள் கொள்கை கோட்பாடுகளை தெளிவாக பிரகடனப்படுத்தட்டும். அது எப்படி மனித வாழ்க்கை முழுவதற்கும் ஏற்புடையது என்பதை விளக்கி கட்டுரை எழுதட்டும். எதிர் கருத்துக்கள் இருந்தால் அதுக்குறித்து விவாதிக்க அழைப்பு விடட்டும். அப்போது உடைந்து போகும், பகுத்தறிவு முலாம் பூசப்பட்ட பானைகள்...

தனிமனித வாழ்வியல் கொள்கைகளையும், சமுகத்திற்கான சமமான கோட்பாடுகளையும் கொண்டிராத நாத்திகத்தை இனியாவது பகுத்தறிவோடு யாரும் முடிச்சிடாதீர்கள். இல்லையேல் பகுத்தறிவு என்பதற்கு அகராதியில் பொருள் மாற்றம் செய்ய வேண்டி வரும்.

தொடர்புடைய ஆக்கம் :
நடைமுறை வாழ்வில் நாத்திகத்தின் 'முரண்பாடு'..!


                                                     அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
read more "உடையும் பகுத்தறிவு..! "

Tuesday, April 17, 2012

ஓர் அழைப்பு!


                                          ஓரிறையின் நற்பெயரால்


நம் அனைவரின் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக..!

முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு -குறிப்பாய் என் நாத்திக சகோதரர்களுக்கு ஒரு சிறிய நினைவூட்டலாய் இப்பதிவு

ஏனையவைகள் போலல்லாமல் எதற்கெடுத்தாலும் இன்று இஸ்லாம் விவாதிக்கும் பொருளாக மாறிவிட்டது. மற்ற எந்த கொள்கை /துறை சார்ந்த கோட்பாடுகளை விட இஸ்லாம் விமர்சித்து குற்றப்படுத்தபடுவது அதிகம் என்றே சொல்லலாம்.

பொதுவில் பகிரப்படும் எதன் மீதும் விமர்சனம் ஏற்படுவது இயல்பே. ஆனால் விமர்சனங்கள் அல்லது குற்றச்சாட்டுகள் என்பன தெளிவு பெறும் நோக்கில் அமைந்தால் சந்தோசமே..! ஆனால் இன்று இணையத்தில் நாத்திகராக தம்மை முன்னிருத்திக்கொள்வோரில் ஒரு பகுதியினர் காழ்ப்புணர்ச்சி ஒன்றை மட்டுமே பிரதானமாக கொண்டு போலி பெயர்களுடன் இஸ்லாத்தை எதிர்க்க முற்படுவதுதான் பலதளங்களில் காண முடிகிறது.

அப்படிப்பட்ட நாத்திக முகமூடியுடன் இணைய உலாவரும் அத்தகையவர்களுக்காக இந்த பதிவு அல்ல.. உண்மையாக கடவுள் கொள்கைகளில் ஏற்பட்ட அதிருப்தி, அறிவுப்பூர்வமான சிந்தனைக்கு இறை மறுப்பே சிறந்த வழி என்ற உண்மையாய் நாத்திகத்தின் பக்கம் சென்றவர்களுக்கே,

தொடருங்கள்...

இன்று உலகில் நடக்கும் வன்முறைகள், வறுமை பட்டினி சாவுகள், இயற்கை சீற்றங்கள், போர்கள் போன்றவற்றால் மக்கள் படும் அவதிகளை கண்டு மனம் பொறுக்காமல் கடவுள் இருந்தால் ஏன் மக்களுக்கு இப்படியான பிரச்சனை...? இந்த கேள்வியே அறிவுப்பூர்வமாக ஏற்று கடவுளை மறுக்கும் நீங்கள் -

ஒருவேளை கடவுளே இல்லையென்பதை ஏற்றுக்கொண்டாலும் அப்பவும் இதே பிரச்சனைகள் இவ்வுலகில் தொடரத்தானே செய்யும்.. இதற்கு என்ன பதில் வைத்து இருக்கீறீர்கள் சகோ...?

கடவுள் இருக்கிறார் என ஏற்றுக்கொண்டாலும் இல்லையென மறுத்தாலும் சில செயல்கள் இவ்வுலகில் நடைபெறத்தான் செய்யும். அப்படியிருக்க இங்கு ஏற்பு அல்லது மறுப்பு இதில் ஒன்றை சார்ந்திருக்க நமக்கு அத்தகையே செயல்களுக்கான காரணங்கள் நமதறிவுக்கு எட்டும் வகையில் தர்க்கரீதியாகவும் -அறிவுப்பூர்வமாகவும் விளக்கப்பட அல்லது விளக்கப்பட்டிருக்க வேண்டும்
மேற்கண்ட வினாவிற்கு

எந்த நாத்திகராவது, உங்களின் முன்முடிவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு உண்மையாய் இஸ்லாம் இந்த நிலைப்பாட்டிற்கு என்ன பதில் வைத்திருக்கிறது என யோசித்து இருக்கிறீர்களா..?

இஸ்லாத்தை விமர்சிக்கும் எந்த நாத்திகரும் அதிகப்பட்சம் நூறு வசனங்களை குர்-ஆனில் படித்திருந்தாலே ஆச்சரியம்... ஆனால் எடுத்த மாத்திரத்திலே சொல்வார்கள் குர்-ஆன் குறைபாடுடையது என்று

நான் சீன மொழியை கற்றுக்கொண்டிருக்கும் போதே அதில் சில வார்த்தைகள் தெரிந்தவுடன் சீன மொழி இலக்கணம் முழுக்க குறைபாடுடையவை என்றால் என்னை என்ன சொல்வீர்கள் நீங்கள் ..?

இப்படித்தான் நாத்திக சகோதரர்களுக்கு குர்-ஆனோடு தொடர்பு. ஆறாயிரம் வசனங்களுக்கு மேலுள்ள குர்-ஆனில் வெறும் நூற்றை மட்டுமே தொட்டு அவை மனித வாழ்வுக்கு ஒத்துவராதவை என்றால் அதற்கு இரண்டு அர்த்தம் மட்டுமே கொடுக்க முடியும்

  • ஒன்று, முன்முடிவுகளோடு அதை அணுகுவது,
  • அல்லது அறியாமை.

வேறன்ன சொல்ல முடியும்?

கடவுளை கண் முன் நிறுத்தினால் தான் நான் நம்புவேன் என்றால் அந்த செயலை நீங்களோ அல்லது நானோ மரணிக்கும் வரை என்னால் நிருபிக்க முடியாது. என்னால் மட்டுமல்ல இவ்வுலகில் எவராலும் நிருபிக்க முடியாது...?

பின் எப்படி தான் கடவுளின் இருப்பை ஏற்பது...?

அதற்கான முயற்சியில் பல தளங்கள் இயங்க., கடவுளின் இருப்பை தர்க்கரீதியாக உணர்த்த இந்த தளத்திலும் சில ஆக்கங்கள் வரையப்பட்டுள்ளது. கடவுளை ஏற்க மறுப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதை ஒவ்வொரு ஆக்கத்திலும் தர்க்கரீதியாக சொல்லப்பட்டிருக்கிறது. அதன் கீழாக நாத்திக சகோதரர்களுடன் நடந்த விவாதமும் பின்னூட்டமாக சில பதிவுகளில் இருக்கிறது. நீங்களே பார்வையிடுங்கள். கண்ணியமாய் விவாதிக்க அல்லது கருத்து பரிமாறவும் நான் தயார் - இன்ஷா அல்லாஹ்

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;. (அல்குர்-ஆன் 04:01)
எனக்கு நாத்திகர்கள் எதிரிகளல்ல.. அவர்களும் என் சகோதரர்களே., இந்த இறைவசனம் அப்படித்தான் எனக்கு கற்றுக்கொடுத்து இருக்கிறது.
என் எதிர்ப்பெல்லாம் போலியாய் சமத்துவம் பேசும் நாத்திகத்திற்கே..!


உங்கள் உள்ளங்கள் உண்மையான தேடுதலில் செல்ல பிரார்த்திக்கும்...
உங்கள் சகோதரன்.
G u l a m 
இறை நாடினால் இனியும் சந்திப்போம்...


                                                             அல்லாஹ் நன்கு அறிந்தவன்



இஸ்லாம் -பெண்ணியம் குறித்த விமர்சனங்களுக்கு
விளக்கமாய்
சகோதரிகளின்
ஒர் புதிய வலைத்தளம்..!





   




  1. கடவுள் இருகின்றானா?
  2. கடவுள் படைப்பில் மனிதர்களிடையே ஏற்ற தாழ்வு ஏன்?
  3. கடவுளை அறிய ஐம்புலன்கள் போதுமா ?
  4. கடவுளில்லா உலகம்...?
  5. நிதியை மிஞ்சும் நீதி -யாரிடம்...?
  6. பதில் தருமா பரிணாமம்..?
  7. தேவையுடையவனா...இறைவன்?
  8. யார் கடவுள்...?
  9. மனித வாழ்வில் மனசாட்சி!
  10. பரிணாமத்தில் மனிதன்..?
  11. கடவுள் இருந்தால்..
  12. கடவுளும்- நாமும்
  13. பகுத்தறிவாளர்களின் கடவுள்..!
  14. "நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்"
  15. மரணம்:- பொய்க்கும் நாத்திகம்
  16. நடைமுறை வாழ்வில் நாத்திகத்தின் 'முரண்பாடு'..!
  17. 'வாழ்வை பூஜ்யமாக்கும்' மறுமைக்கோட்பாடு.
  18. கடவுளின் "பிறப்பும்.- இருப்பும்."
  19. இயற்கையின் தேடலா - தெரிவா கடவுள்..?
  20. கடவுள் ஏன் இருக்க வேண்டும்....?
  21. கடவுளை விமர்சிக்கும் ஓர் அறிவாளி?
  22. இறை வழிக்காட்டுதலும், மனித பின்பற்றுதலும் -எங்கே தவறு?
  23. கி.மு வில் கடவுள்!
  24. நாத்திகம் விரும்பும் இஸ்லாம்..!..?
  25. #கடவுள்# ஒரு மெகா தவறான புரிதல்!



                                     (நாத்திகர் மறுக்கும் இறைவன் நாடினால் இனியும் தொடரும்)

read more "ஓர் அழைப்பு!"

Tuesday, March 27, 2012

நாத்திகம் விரும்பும் இஸ்லாம் ..! ?

                                              ஓரிறையின் நற்பெயரால்

நாத்திகர்கள் - 

பொதுவாக இந்த சமூகத்தில் இறை மறுப்பாளர்களாக அறிமுகப்படுத்தப்பட்டாலும் பதிவுலகில் இஸ்லாத்தை எதிர்ப்பதிலே அவர்கள் குறியீடு அதிகம் அறியப்படுகிறது. இது மிகைப்படுத்தப்பட்ட வாக்கியமல்ல. பதிவுலகில் அவர்கள் சார்ந்த கொள்கைகளை விளக்கி இடும் பதிவுகளை காட்டிலும் இஸ்லாத்தை சாடி வெளியிடும் ஆக்கங்களே மிக மிக அதிகம்!

  • பெண்ணடிமைத்தனம் ,
  • சம நீதியின்மை
  • ஆணாதிக்கம்
  • தீவிரவாதம்
  • மரண தண்டனைகள்
  • அடிமை வாழ்வு

இவைகள் போல பல இஸ்லாத்தோடு இணைக்கப்பட்டு பெரும்பாலும் விமர்சிக்கப்படுகிறது. இன்னும் சிலர் வேத வரிகளுக்கும் தூதர் மொழிகளுக்கும் தன்னிலை விளக்கம் அளித்து அதை பொதுவாக்கி விமர்சிக்கிறார்கள். இன்னும் ஆச்சரியம்! ஆரம்ப நாட்களில் கேட்கப்பட்ட அதே புரிதலும் அதே கேள்விகளும் தான் இன்றளவும் விமர்சனங்களாக இணையத்தில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றது. பதில்கள் தெளிவாய் தரப்பட்ட பின்னரும்...

விளக்கங்கள் அளிக்கப்பட்டால் அவை கண்டிப்பாய் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பது அவசியமில்லை. மாற்றுக்கருத்து தாரளமாய் இருக்கலாம், அது நம் ஆய்வின் சரியான திசை நோக்க பயன்படும். ஆனால் நாத்திகர்களுக்கோ அந்த விளக்கங்கள் என்ன சொல்கிறது என்று பார்ப்பதற்கு கூட மனம் வருவதில்லை. இறுதிவரை அவர்களின் கேள்விகள் எங்கேயும் கேள்விகளாகவே மட்டுமே இருக்கப்பட வேண்டும் என்பதே எண்ணமாக இருக்கும் போலும்!

ஆனால் பாருங்கள் இஸ்லாத்தை கடுமையாக விமர்சிக்கிறார்கள் - அது ஆணாதிக்க மதம் வேண்டாம் என்கிறார்கள். சரி ஒரு வாதத்திற்கு இதை ஏற்றுக்கொண்டாலும் எவை மனிதக்குல முழுமைக்கும் தேவை அவை எப்படி பின்பற்றப்பட வேண்டும் என்பதை விளக்கி எங்கேயும் பதிவுகள் இடுவதில்லை. அதுக்குறித்து விவாதிக்கவும் அழைப்பு விடுப்பதில்லை. 

எவரும் தாம் ஏற்ற கொள்கை கோட்பாடுகளை விளக்கி அதன் பின்பற்றும் நடைமுறை சாத்தியக்கூறுகளை பொதுவில் முன்மொழிவதில்லை. சமூகத்திற்கு நலன் பயக்கும் பெயரில் ஆக்கங்கள் சில இட்டாலும், இஸ்லாம் என்ற ஒற்றைப்புள்ளியை மையப்படுத்தியே அவர்களது பெரும்பாலான கட்டுரைகள் இருக்கின்றன. ஆக என்ன சொல்லவருகிறார்கள் அவர்கள்...?

தம் கொள்கை எப்படியும் இருக்கலாம். ஆனால் இஸ்லாம் மட்டும் விமர்சிக்கப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும் -சமூகத்தின் மீது அக்கறைக்கொண்டவர்கள் நாத்திகர்களென்றால் கொஞ்சம் யோசிக்கவேண்டும் அவர்கள்.

தமிழில் நாத்திகம் - பரிணாமத்தை எதிர்த்து பதிவிடும் முஸ்லிம் தளங்கள் மிகக்குறைவு. (அப்படி விமர்சிக்கும் தளங்களில் கூட கண்ணியமான முறையில் தான் விமர்சனம் செய்யப்படுகிறது.) முஸ்லிம் பதிவர்கள் பெரும்பாலும் இஸ்லாம் சார்ந்த கருத்துக்களை மையப்படுத்தி விளக்கியே மக்களை அதன் பால் அழைக்கிறார்கள். 

ஆக நாத்திகத்தை எதிர்க்கமாலும் முஸ்லிம் பதிவர்களால் தங்களின் நிலைப்பாட்டை இணையத்தில் தக்கவைத்துக்கொள்ள முடியும். 
ஆனால் இஸ்லாத்தை விமர்சிக்காமல் எந்த நாத்திக பதிவராலும் தம்மை பதிவுலகில் தக்கவைத்து கொள்ள முடியவில்லையென்பதை தான் மேற்கண்ட செயல்கள் காட்டுகிறது. 

இதற்கு என்ன காரணம்...? 

ஆயிரமாயிரம் கொள்கைகளும் கோட்பாடுகளும் நாத்திகத்திற்கு எதிராய் உலகில் இருக்க இஸ்லாம் மட்டும் ஏன் பிரதானமாக விமர்சிக்கப்படுகிறது?

பதிவின் மையக் கருத்தே இது தான்.. இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்

                


இங்குள்ள எந்த நாத்திகரும்

  • வானமும்- பூமியும் படைக்கப்பட்டதன் நிலையறிந்து இவை கடவுளால் படைக்கப்பட வாய்ப்பில்லையென உணர்ந்து மதத்திலிருந்து வெளியேறினார்களா..? இல்லை., 
  • காற்றும், மழையும், பிறப்பும், இறப்பும் உண்டாக்க ஒரு கடவுள் தேவையில்லையென்பதை அறிவியல் அளவுகோலில் துல்லியமாக அளந்து கடவுளை மறுத்தார்களா...? என்றால் அதுவும் இல்லை என்பதே உண்மையான பதிலாக இருக்க முடியும் 
பின் எப்படி மத வெளியேற்றம்...? 

எந்த ஒரு மனிதனின் இயல்பு நிலை மாற்றத்திற்கு முதன்மை காரணம் வளரும் சூழலில் பயிற்றுவிக்கப்படும் கருத்துக்கள். அக்காலங்களில் பயிற்றுவிக்கப்படும் எதுவும் பிற்கால செயல்களில் பிரதிபலிக்க நூறு சதவீகித வாய்ப்புள்ளது. அதனடிப்படையில் போதிய அறிவின்றி தவறாகவோ அல்லது புரிதலற்ற முறையிலோ தனக்கு பயிற்றுவிக்கப்படும் கடவுள் கொள்கைகளை உண்மையென ஏற்று பின்னாளில் அவற்றை நிதர்சன வாழ்வில் பொருத்தும் போது நிச்சயமாக அது தனதறிவுக்கு தவறாக தான் காட்டும். அத்தோடு தன் நிலையில் தலைக்கீழ் மாற்றத்தை தான் ஏற்படுத்தும்.

அப்படி பயிற்றுவிக்கப்படுவது இஸ்லாமாக இருந்தாலும் சரியே... அதனால் தான் இணைய உலவிகளில் இஸ்லாத்தை விமர்சிக்கும் அனேகர் சொல்வது நான் முன்னாள் முஸ்லிம் என்று... அவர்களின் இம்மாற்றத்திற்கு காரணம் தனக்கு தவறாக விளக்கப்பட்ட இஸ்லாமே தவிர நபிகளார் விளக்கிய இஸ்லாமல்ல., 

பின்னாளில் பொதுவில் வந்து அறிவியலாக்க முயலும் பரிணாமத்தையும், கடவுள் குறித்த (தவறாக கற்றுணர்ந்த) தர்க்கரீதியான வாதங்களையும் தோதாக வளைத்து தம் மத வெளியேற்றத்திற்கு இதுவே நிலையான காரணம் என சொல்கிறார்கள். ஆனால் இன்று வரையிலும் தங்களின் திருமணம், மற்றும் பொது நிகழ்வுகளை ஏதாவது ஒரு மதம் சார்ந்த அடிப்படையிலே செய்து வருகின்றனர். 

அவ்வபோது பொதுவில் எங்கும் கடவுள் இல்லையென்று சொல்லிக்கொண்டே எல்லாம் கடவுள் என்ற கொள்கைக் கொண்டவர்களுக்கு பண்டிகை கால வாழ்த்து செய்திகளை பின்னூட்டமாய் பரிமாறுகிறார்கள். இது எதுமாதிரியான கொள்கை பிடிப்போ தெரியவில்லை.? ஆனால் இஸ்லாத்தை மட்டும் தொடர்ந்து தாக்கி எழுத பட வேண்டும் ? ஏன்?

 உளவியல் ரீதியாக சிந்தித்தால் எளிதாக உணரலாம்.

நாத்திகத்திற்கு நேர் எதிர் கொள்கை ஒன்று உலகில் உண்டென்றால் அது இஸ்லாம் மட்டுமே! 

பொதுவாக மதங்கள், கடவுள் உண்டென்பதை உறுதியாக நம்பினாலும், கடவுளை வணங்கப்பட வேண்டிய ஒரு நிலையில் மட்டுமே வைத்து பார்க்கிறது. கடவுளின் தலையீடு பூஜை, புனஷ்காரம் போன்ற செயல்களிலோ, பண்டிகை தினங்களிலோ அல்லது விழாக்காலங்களிலோ மட்டுமே பிரதான படுத்தப்படுகிறது.      
  
நடைமுறை வாழ்வின் பெரும்பாலான செயல்களுக்கு தங்களின் சுய விருப்பு, வெறுப்பின் அடிப்படையில் எதையும் தீர்மானிக்கிறார்கள். கடவுளின் கட்டளை ஏற்று நடப்பது நடைமுறைக்கு சாத்தியமில்லையென்பதை மறைமுகமாக ஏற்றும் கொள்கிறார்கள். இன்று ஒரு மதம் சார்ந்த இருவர் பேசிக்கொள்ளும் போது கடவுள் குறித்தோ அல்லது அவனது கட்டளைக்குறித்தோ பேசுவதும் இல்லை, விவாதிப்பதும் இல்லை. கடவுளின் தாக்கம் அவர்களின் செய்கைகளில் வெளிப்படுவது மிக மிக குறைந்தே இருக்கிறது.

இந்நிலை நாத்திகத்திற்கு மிக வசதியாய் போயிற்று மதம் உருவாக்கிய கடவுள்களை விமர்சிக்க வேண்டிய அவசியமும் இல்லை. அப்படி விமர்சித்தாலும் அவற்றை அவர்கள் பொருட்டாய் கொள்வதும் இல்லை.

ஆனால் இஸ்லாம் மட்டுமே வணக்க வழிப்பாட்டோடு கடவுளை ஒரங்கட்டாமல் எந்த ஒரு காரியமெனிலும் அதற்கு கடவுளின் ஓப்புதலை பொருத்தி பார்க்க சொல்கிறது. சரியென்றால் அவற்றை பின்பற்ற சொல்கிறது. தவறேன்றால் விட்டு விலக சொல்கிறது. சர்வ சாதரணமாக சந்திக்கும் தருணங்களில் கூட சலாத்தினையே முதலில் சொல்ல பணிக்கிறது. கல்யாண பத்திரிக்கையில் மட்டும் கடவுள் பெயர் பொதிக்காமல் காலம் முழுவதுமே கடவுளின் தலையீட்டை அவசியமாக்குகிறது.

இப்படி இஸ்லாம் நாத்திகத்திற்கு எதிராய் தம் இருப்பை மௌனத்தால் முன்னிருத்துவதால் நாத்திகத்தின் வெறுப்பும் எதிர்ப்பும் இஸ்லாத்தின் மீது இயல்பாகவே திரும்புகிறது. தமது கொள்கைகளை கட்டிக்காக்க வேண்டிய தருணத்திற்கு நாத்திகம் தள்ளப்படுகிறது. எவ்வளவு பெரிதாய் தம் கோட்டை நாத்திகம் வரைந்தாலும் அதையும் தாண்டி இஸ்லாமிய கோடு பயணிப்பதை நாத்திகம் நிதர்சனமாக உணர்கிறது. 

 இந்நிலை மாற ஒரே வழி எதிரில் இருக்கும் கோட்டை சிறிதாக்க வேண்டும் அதற்கு அக்கோட்டை அழிக்கவேண்டும் மக்களின் மனதில் நாத்திகம் உயர்ந்த கொள்கையாக எண்ணப்பட வேண்டுமானால் அதற்கு எதிராக இருக்கும் இஸ்லாம் குறைப்படுத்த படவேண்டும். ஆம்! அதைத்தான் நாத்திகம் இப்போது செய்ய முயன்றுக் கொண்டிருக்கிறது 

ஆனால்...
பெயரளவிற்கு மட்டும் கடவுளை ஏற்று...
முஹம்மதை (ஸல்) முன்னமே மறந்து... 
வெள்ளிக்கிழமை மட்டுமே இறை தொழுது...
பொழுது போகா விட்டால் மட்டுமே மார்க்கம் பேசி...
எந்த கொள்கையும் தம் சொந்த கொள்கையாக நிறுவி
போலி சமத்துவம் பேச
முஸ்லிம்கள் கற்றுக்கொண்டால்

விமர்சனம் ஏதுமின்றி
பொதுவில் கூட
நாத்திகம் விரும்பும் இஸ்லாம்...! இணையமெங்கும் காட்சியளிக்கும்


பிறச்சேர்க்கை:  இந்த தளம் Blog spot லிருந்து dot Com ற்கு மாறி இருப்பதால் இப்பதிவை மீண்டும் புதிதாக தமிழ்மணம் திரட்டி உள்ளது. ஓட்டு போட்டவர்கள் (குறிப்பாய் மைனஸ் ஓட்டுகளை )மீண்டுமொருமுறை போட்டுக்கொள்ளவும் 

                                               அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "நாத்திகம் விரும்பும் இஸ்லாம் ..! ?"

Tuesday, February 14, 2012

கி.மு வில் கடவுள்!

                                  ஓரிறையின் நற்பெயரால்


"ஆரம்பத்தில் பல தெய்வ கொள்கையில் விற்றிருந்த மனித சமூகம் பின்னாளிலே ஓரிறையின் பக்கம் ஈர்க்கப்பட்டது." 
இப்படிதான் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை கடவுளுக்கும் மனித சமூகத்திற்கும் உள்ள உறவுக்குறித்து கருத்து பொதுவாக இவ்வுலகத்தில் நிலவி வந்தது.

ஆனால் இந்த நூற்றாண்டில் மனித இனம் (ANTHROPOLOGY) தொடர்பான ஆய்வுகளும், அகழ்வராய்ச்சி (ARCHAEOLOGY) குறித்தும் மிகதுல்லியமாக நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் மேற்கண்ட கருத்தியலுக்கு மாற்றமாய் ஒரு முடிவை சொன்னது.
 அதாவது,  மனித சமூகங்கள் மண்ணில் தோற்றுவிக்கப்பட்ட காலத்திலிருந்தே ஓரிறைக்கொள்கை வலம் வர தொடங்கிவிட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக.,
"மனித இன இயலின் ஆதாரப்படி பூர்விக இனங்களின் ஆதிமதம் உண்மையிலேயே ஏக இறைக்கொள்கையாகவே இருந்தது"  - என அகழ்வராய்ச்சித் துறையின் பிரபல பேராசிரியர் சர். சார்லஸ் மார்ஸ்டனும் (SIR. CHARLES MARSTON)
 " ... ஆதி மனிதனின் ஆரம்பக்கால வரலாற்றின் படி, மத நம்பிக்கை ஏக தெய்வ வணக்கத்திலிருந்து பல தெய்வ வணக்கத்தின் பால் சரிந்தது என்பதும் ,  ... ஆதி மனிதன் இறப்பிற்கு பின்னால் ஒரு வாழ்வு உண்டென்பதிலும் நம்பிக்கை வைத்திருந்தான் - என்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பேராசிரியர் டாக்டர். லாங்க்டன் கூறுகிறார்.
இந்த ஆய்வுகளை வைத்து மட்டுமின்றி தர்க்கரீதியாகவும் மனிதமூலங்களின் ஆரம்பம் ஓரிறைக்கொள்கை என்பதை நிருபிக்கலாம்.

இன்று பல தெய்வ கொள்கைகள் மற்றும் கடவுள் மறுப்புகள் இருக்கிறதென்றால். அவை இவற்றிற்கு எதிரான மூலத்திலிருந்து தான் பெறப்பட்டிருக்க வேண்டும். அதாவது இவை இரண்டுக்கும் எதிராக பின்பற்றப்படும் ஒருக்கொள்கை இருந்தால் மட்டுமே இவை இரண்டும் இப்போது பின்பற்றப்பட சாத்தியம். ஆக கடவுள் மறுப்புக்கு எதிராக கடவுள் ஏற்பும், அதே நேரத்தில் பல தெய்வ கொள்கைகளுக்கு எதிராக ஒருக்கொள்கையும் இருக்கவேண்டுமானால் அது ஓரிறைக்கொள்கையாக தான் இருத்தல் வேண்டும்.

     நாத்திகத்தின் பொதுவான சித்தாந்தம் பரிணாமம் மூலமே மனித உயிர்களின் உற்பத்தி தொடங்கியது என்பதே! சரி ஒரு வாதத்திற்கு அதை ஏற்றுக் கொண்டாலும் உயிர் வாழ சிறிதும் தொடர்பே இல்லாத இறை நம்பிக்கை என்ற ஒன்று ஏன் ஆதிமனிதனுக்கு ஏற்பட வேண்டும்..?

 அன்றைய கட்டத்தில் உயிர்வாழ காற்றே பிரதான ஆகாரமாக இருக்க "அக்ஸிஜன் குறித்து அறியவேண்டிய ஆரம்பகால மக்கள் கடவுள் குறித்து அறிந்து வைத்திருப்பது எப்படி?   


இயற்கையே எல்லாவற்றிற்கும் போதுமானதென்றால் ,

  • இல்லாத கடவுள் குறித்து அவர்களுக்கு ஏன் தெரிய வேண்டும்.? 
  • கடவுள் என்ற ஒன்று இருப்பதை அறிந்திடாத அந்த சமூகத்திற்கு கடவுள்  குறித்து யாரால் விளக்க முடியும்...? 
  • அதை விட முக்கிய கேள்வி ஏன் விளக்க வேண்டும்..? - 

தேவையில்லாத ஒன்றை தேவையில்லாத நிலையில் தேவையில்லாமல்...  தெளிவாய் முன்மொழியப்பட வேண்டிய அவசியம் என்ன?

  இதெற்கெல்லாம் ஒற்றை வரியில் பதில் தருவதாக இருந்தால் ஆதிமனிதர்கள் இயற்கையே உயிர் உருவாக்கியாக ஏற்காமல் இயல்பாகவே கடவுளைக்குறித்து அறிந்து வைத்திருந்தார்கள் .எனினும் அவர்களுக்கு பின்பற்ற வேண்டியவைகள் குறித்து விளக்கி கூற அவர்களிலிருந்தே ஒருவர் கடவுளால் தேர்ந்தேடுக்கப்பட்டு அந்தந்த சமுதாயத்திற்கு அனுப்பப்பட்டிருப்பது தான் உண்மை.

இதை அல்லாஹ் தன் மறையில் 


(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்;. அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்;. அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்... (02:213) 
என தெளிவாக ஆதி மனித நிலைக்குறித்து கூறுகிறான்

ஆக ஓரிறையின் பால் மக்களை அழைக்கும் செயலானது முஹம்மது நபி அவர்களால் புதிதாக தொடங்கப்பட்டதல்ல. மாறாக ஆதி மனிதரிலிருந்து தொடங்கி நபி மூஸா, நபி ஈஸா வரையிலுமே பின்பற்றப்பட்டது - பின்பற்றும்படி மக்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சி முஹம்மது நபி அவர்களின் வருகையோடு முற்றுப்பெற்றது.

ஆக எல்லா இறைத்தூதர்களுமே அல்லாஹ் என்ற ஓரிறையை ஏற்க சொல்வதற்கே மனித சமூகத்திற்கு அனுப்பப்பட்டனர். மாறாக அல்லாஹ்வை வணங்குமாறு முஹம்மது நபிகள் மட்டும் புதிதாய் இஸ்லாத்தை போதிக்கவில்லை. இதற்கு ஒரு எளிய உதாரணம் பாருங்கள்.

இஸ்லாத்தை விமர்சிப்போருக்கும் தெரியும் முஹம்மது நபிகளின் தந்தை பெயர் அப்துல்லாஹ் (அப்து (அடிமை) + அல்லாஹ்) என்று . இதற்கு பொருள் அல்லாஹ்வின் அடிமை. முஹம்மது நபிகளின் வருகைக்கு பிறகே அல்லாஹ் என்ற கடவுளை வணங்க வேண்டிய கொள்கை போதிக்கப்பட்டிருந்தால் அவரது தந்தையின் பெயரை அப்துல்லாஹ் என யார் வைத்தது...?


முஹம்மது நபியா....?!

அல்லாஹ் என்ற பதம் முஹம்மது நபியால் அறிமுகப்படுத்தப்பட்டது என்போர் இதற்கு பதில் தரட்டும்.

. . . 
 உண்டு என்பதற்கு பிறகே இல்லையென்ற ஒரு நிலை உண்டாக வேண்டும்! ஆக அல்லாஹ் என்ற ஓரிறைக்கொள்கையை மட்டுமே வணங்கும் பழக்கும் தொடக்க காலத்திலிருந்த பின்பற்றப்பட்ட ஒன்றாகும்.

   எனினும் மனிதனின் சிந்தனையோட்டத்தில் ஏடுக்கும் தவறான முடிவுகள் அவர்களை பல தெய்வ கொள்கைக்கு வழிவகுத்தது. அதிலும் சொற்ப பிரிவு மக்கள் கடவுள் மறுப்புக்கு செல்ல நேரிட்டது. ஆக பல தெய்வ கோட்பாடுகள் தெளிவற்ற முறையிலே உள்ளதால் அவற்றை விமர்சிக்க நாத்திகம் பெருமுயற்சி எடுப்பதில்லை. ஆனால் இஸ்லாம் தன் கோட்பாடுகளை இன்றளவும் தெளிவாக வைத்திருப்பதால் அவை இஸ்லாத்திற்கு எதிராக செயல்பட எத்தனிக்கின்றன.

 ஏனெனில் இன்று இஸ்லாத்தை விமர்சிக்கும் நாத்திகர்கள் எவரும் சொல்லும் வார்த்தை "நான் முன்னாள் முஸ்லிம்" இவ்வார்த்தையை கேட்கும் நடு நிலையாளர்கள் கூட இஸ்லாத்திலும் குறைப்பாடுகள் இருப்பதாக தான் உணர்வார்கள். ஆனால் பாருங்கள் அவர்களில் எவரும் வானம் மற்றும் பூமியின் அமைப்புகளை பார்த்தோ, சந்திர சூரிய இயக்கங்களை அறிந்தோ அல்லது பால்வெளி மாற்றங்களை ஆராய்ந்தோ அவை இறைவனால் படைக்கப்பட வாய்ப்பில்லையென இஸ்லாத்தை விட்டு வெளியே வருவதில்லை.

மாறாக தனக்கு சொல்லிதரப்பட்டவைகளையும் -அறிமுகம் செய்து வைக்கப்பட்டவைகளுமே இஸ்லாமாக உணர்ந்து அதை ஏற்கின்றனர்.அவர்கள் தவறாய் கற்ற இஸ்லாத்தை பின்னாளில் ஆய்வறிவோடு ஓப்பிடும் போது அது இஸ்லாத்தையே தவறாக காட்டுகிறது. ஆக இஸ்லாத்திலிருந்து வெளியேறுகிறார்கள். இஸ்லாத்திற்கு எதிராகவும் விமர்சிக்கிறார்கள். அவர்களின் விமர்சனத்தை பார்க்கும் போதே இதை நம்மால் தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகிறது.

ஆனால் எதையும் தர்க்கரீதியாகவும் ஆய்வுரீதியாகவும் ஆராய்ந்து பின்பற்றும் நாத்திகர்கள் பலர் இஸ்லாம் நோக்கி வருகிறார்கள் இதற்கு என்ன காரணம்...? 

வெற்று ஊகங்களையோ, போதிக்கப்பட்டவைகளை மட்டுமோ ஏற்று இஸ்லாத்தை நோக்கி வருவதில்லை. மாறாக ஆய்வுரீதியான சிந்தித்து அதன் விளைவால் இஸ்லாத்தை நோக்கி வருகிறார்கள்..
 
எது எப்படி நமக்கு அறிமுகப்படுத்த படுகிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு பெயர் தான் நம்பிக்கை! -ஆனால்
அது சரியா அல்லது தவறா என ஆராய்ந்து முடிவெடுத்து அதை ஏற்பதே அறிவு.

ஊகங்களை வைத்து இஸ்லாதை விட்டு வெளியேறுவதும்...
ஆய்ந்தறிந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதும் -
எது மேலானது..?

பதில் தரும் பொறுப்பு உங்களிடமே!

குறிப்பு:
 (ஆக்கம் தொடர்பாக விவாதிக்கும் போது மேற்கண்ட இரண்டு மேற்கோள்களும் எனக்கு நம்பக தன்மை வாய்ந்த சகோதர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற செய்திகள் ஆதார மூலங்களோடு அவைக்குறித்த மேலதிக செய்திகள் கிடைத்தால் இன்ஷா அல்லாஹ் தெரியப்படுத்தவும்). 

                                                     அல்லாஹ் மிக்க அறிந்தவன்

read more "கி.மு வில் கடவுள்!"

Tuesday, December 27, 2011

கடவுளை விமர்சிக்கும் ஓர் அறிவாளி?


                                                        ஓரிறையின் நற்பெயரால்

கடவுள்!
மனித சமூகத்தோடு பிண்ணி பிணைக்கப்பட்ட ஒரு வார்த்தை. இருத்தன்மைகளில் கடவுளை மையப்படுத்தியே மனித வாழ்வு இருக்கிறது.
ஒன்று கடவுளை ஏற்று மற்றொன்று கடவுளை மறுத்து.

 கடவுளை ஏற்பதென்பது அவர்கள் சார்ந்த மத/ மார்க்கத்தின் ஊடாக பிறப்பின் அடிப்படையில் இயல்பாக உருவாகும் நம்பிக்கை சார்ந்த விசயமாக தொடங்கி, பிறந்த இடம், வளர்ந்த சூழல், மற்றும் ஆய்தறிவும் எண்ணங்கள் போன்றவற்றின் தாக்கத்தால் கடவுளின் மீதான நம்பிக்கையை அதிகரித்து வாழும் மக்கள்.

அதைப்போல சுற்றுசூழல், வர்த்தரீதியான சமூகப்பின்னணியில் தம் வாழ்வை தொடர்ந்து பிரிவினைவாதம், அறிவுக்கு பொருந்தாத மூட நம்பிக்கைகள், மதத்தின் பெயரால் அனாச்சாரியங்கள், கடவுளுக்கே பூஜை புனஷ்காரங்கள் போன்றவற்றை பார்த்து சிந்தனை வயப்பட்டு தம்மை "நாத்திகவாதியாக" அடையாளப்படுத்திக்கொண்டு இச்சமூகத்தில் கடவுளை எதிர்த்து அல்லது மறுத்து உலாவரும் மக்களில் ஒரு பிரிவினர்.

ஆக இருபாலருக்கும் தங்களுக்கு எது உணர்த்தப்படுகிறதோ, தங்களின் சிந்தனையில் எது உதிக்கிறதோ அதுவே அவர்கள் சார்ந்து செயல்படுவதற்கு பிரதான காரணமாகிறது.

ஆத்திகர்கள், கடவுளின் பெயரால் தமக்கு போதிக்கப்படுபவற்றை மையமாக வைத்தே கடவுளை ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் தாங்களோ ஆய்வு ரீதியாக சிந்தித்து அதில் காணக்கிடைப்பதை மட்டுமே ஏற்றுக்கொள்வதாக  சொல்கின்றனர் நாத்திகர்கள்.

உண்மைதான். ஆய்ந்தறியாத எந்த செயலின் உண்மை நிலையும் முழுவதும் நம்பகத்தன்மை வாய்ந்ததல்ல என்பது ஏற்புடையது தான். ஆனால், அறிவியலால் எல்லா செயல்களையும் முழுவதும் ஆய்தறிந்து உண்மையான தகவல்களை தர முடியாது. தரும் வரையில் பொறுத்திருந்தால் நம்மால் எந்த செயலையும் முழுமையாக செயல்படுத்த முடியாது.

அதுவரை பொய்பிக்காத நிகழ்வை மட்டுமே உண்மையெனும், அதையே நாம் ஏற்றுக்கொள்கிறோம். இன்னும் அறிவியல் மெய்படுத்தாத விசயங்களும் உலகில் உள்ளன. அதையும் நாம் ஏற்றுதான் கொள்கிறோம். அதனால் தான் கெடு தேதிக்கு முன்னமே கெட்டுப்போகும் உணவுப்பொருட்களுக்கும், காலாவதியாகும் தேதி முடிந்தும் இயங்கும் பேட்டரி போன்ற பொருட்களுக்கும் நாம் அறிவியல் முரண்பாட்டை அங்கு கற்பிப்பதில்லை.

அறிவியலால் நிருபிக்கப்படாமலும் ஒன்றை நாம் உண்மைப்படுத்தலாம்.  ஆம்!  ஒருபுறம் தலை, மறுபுறம் பூ என இரு பக்கங்களைக்கொண்ட நாணயம் சுண்டிவிடப்படும் போது தலை அல்லது பூ என நம்மால் நூறு சதவீகிதம் சரியான பதிலை சொல்ல முடியும். அதுவும் ஒரு முறையல்ல... ஆயிரம் முறைக்கூட நம்மால் சொல்ல முடியும். ஆனால் அவையெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நமக்கு கிடைத்த முடிவுகளை வைத்தோ அல்லது நமது சிந்தனைரீதியான அறிவை வைத்தோ அல்ல.. வெற்று ஊகங்களை வைத்து மட்டுமே அவற்றை உண்மைப்படுத்துகிறோம்.

இப்படியான கடவுள் குறித்த அனுமானங்கள் - எண்ணங்களை தான் அறிவியலா(க்)க பெரும்பாலான நாத்திகர்கள் நினைக்கிறார்கள் 

சரி, சிந்தனைரீதியாக எடுக்கும் முடிவுகளும் முழுவதும் சரியாக இருக்கவும் வாய்ப்பில்லை. ஏனெனில் நமது சிந்திக்கும் திறன் நாம் பெற்ற அறிவின் அளவிற்கு மட்டுமே செயல்பட முடியும். ஆகவே தான் சில நேரங்களில் மற்றவர்களின் பார்வையில் சரியாக தெரிகின்ற ஒரு செயல் நமது சிந்தனைக்கு தவறாக தெரிந்தும், நிதர்சனமாக பின்னாளில் உணரும் போது பிறரின் நிலைப்பாடே சரியானதாக நமக்கு படுகிறது. இதை நம் வாழ்நாளில் பலமுறை உணர்ந்தும் இருப்போம்,

காரணம், நமது சிந்தனைக்கு உட்பட்டே எல்லா முடிவுகளையும் நாம் எடுக்கிறோம். நமது சிந்தனையின் திறம் தாண்டி செயல்படும் பிறரால் அச்செயலின் தன்மை ஆராயப்படும் போது நமது தவறு தெளிவாய் விளங்கும். இப்படி மனிதர்களுக்கு மனிதர் சிந்தனை மாறுபடுவதால் ஒரு செயலில் உண்மையான விளைவு நாம் எடுக்கும் முடிவுக்கு நேர்மாறாக இருக்கவும் வாய்ப்ப்பிருக்கிறது. 


ஒன்றை குற்றப்படுத்தவோ விமர்சிப்பதாகவோ இருந்தால் விமர்சனத்திற்கு உள்ளாகும் அந்த நிலைகளை விட விமர்சிக்கும் நிலை மேலான தன்மைகளை கொண்டிருக்க வேண்டும்.

அதாவது, கடவுளை மனிதன் விமர்சிப்பதாக இருந்தால் கடவுளின் விளக்கப்பட்ட எல்லா தன்மைகளையும் விட விமர்சிக்கும் மனித அறிவு ஒரு படி மேல் இருக்கவேண்டும். குறைந்த பட்சம் கடவுளின் தன்மைகளோடு சமமான அறிவையாவது மனிதன் பெற்றிருக்க வேண்டும்.

ஆக்ஸிஜன் முதல் முதல் ஆகாய விமானம் வரை எந்த ஒன்றின் தன்மையும் விமர்சிக்க அல்லது குற்றப்படுத்த ஒரு துணை சாதனத்தின் உதவிக்கொண்டு ஆராயும் நாம்...கடவுள் என்ற நிலையை மட்டும் புறக்கண்ணில் தெரியும் காட்சிகளையும் நமக்கு மட்டுமே திருப்தியை ஏற்படுத்தும் நமது பகுத்தறிவின் வெளிப்பாட்டையும் வைத்து விமர்சிப்பது எப்படி பொருத்தமான செயலாக இருக்கும்?

பேரண்ட படைப்பாளனான கடவுளை அதுவும் அவன் சார்ந்த இனத்தில் அவன் ஒருவன் மட்டுமே இருக்கும் போது அவன் செயலை / தன்மைகளை விமர்சிக்க நமதறிவை அளவுகோலாக வைப்பது எப்படி சாத்தியமாகும்? ஏனெனில் கடவுள் சார்ந்த இனம் என்னவென்றே அறியாதபோது நாம் பெற்ற அறிவை உலகின் உச்சமாக வைத்து கடவுளை குறைப்படுத்தி விமர்சிப்பதென்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்?

ஆனால் மனித அறிவு மற்றோருவருடன் ஒப்பிடாதவரை மட்டுமே நிறைவானதாக நம்ப முடியும். அவனைக்காட்டிலும் அறிவார்ந்தவருடன் ஒப்பிடும் போது குறைப்படுத்தபடுகிறது.

இலட்சகணக்கான யுகங்களாக பயணிக்கும் இவ்வுலகத்தில் முடிவுற்ற பெரும்பாலான நிகழ்வுகளுக்கே காரணம் கண்டறியப்படா நிலையில் சிறுப்புள்ளியாய் தோன்றி மறையும் மனிதன் பேரண்ட விதிகளை தாண்டி செயல்படும் முடிவுறா நிலையில் இயங்கும் ஒன்றை விமர்சிக்கும் அறிவாளியாக தன்னை சொல்லிக்கொள்வது தான் ஆச்சரியமான அறியாமை!

                                                    அல்லாஹ் நன்கு அறிந்தவன்
read more "கடவுளை விமர்சிக்கும் ஓர் அறிவாளி?"

Thursday, December 08, 2011

கடவுள் ஏன் இருக்க வேண்டும்....?


                                   ஓரிறையின் நற்பெயரால்

     ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்வதே இவ்வுலக வாழ்வின் பொதுவான நியதி! கடவுளை ஏற்றாலும்- மறுத்தாலும் நன்மையை செய்து தீமையை விலக்கி வாழ்வதே பெரும்பாலான மக்களின் செயலாக இருக்கிறது.

   கடவுளின் பெயர் முன்னிருத்தப்படாமலும் மக்களால் நன்மை- தீமை என்ற இரு பண்புகளையும் பிரித்தறிந்து பேண முடியும் என்றாலும் அது எல்லா சூழ்நிலைகளிலும் முடியுமா ? என்பதே இவ்வாக்கம் முன்னிருத்தும் கேள்விகள்

முதலில் நன்மையை எடுத்துக்கொள்வோம். 

   எந்த வித எதிர்ப்பார்ப்புமின்றி சொல், செயல் மற்றும் பொருளாதார ரீதியாக ஒருவருக்கு நம்மால் பயன்பாடு ஏற்படுத்துவதே நன்மை என்பதன் பொருள்!

  ஏதோ ஒரு வகையில் நமக்கு பயன் கிட்டினால் மட்டுமே அதற்கான செய்கைகளை நம்மால் இயல்பாகவே தொடர்ந்து செய்ய முடியும். ஆனால் பிரதிபலனற்ற ஒரு செயலை நாம் மேற்கொள்வதால் எந்த நன்மையும் நமக்கு ஏற்பட போவதில்லை. அப்படியிருக்கும் போது தர்க்கரீதியாக யோசித்தால் அச்செயலை செய்யவேண்டும் என்ற அவசியமே இல்லை..
அப்புறம் ஏங்க நன்மை செய்து வாழ வேண்டும்?
 இருங்க., இன்னும் டீப்பாக போகலாம்

  நமது குடும்பத்திலுள்ளவர்களுக்கு அல்லது உறவினர்களுக்கு நன்மை செய்வதால் அவர்கள் மத்தியில் நமக்கான அந்தஸ்து உயர வாய்ப்பிருக்கிறது. அத்தோடு அவர்மேல் கொண்ட அன்பால் மன திருப்தியும் கிடைக்கிறது.

    அதைப்போல் நம் பழக்க சூழலில் அறியப்பட்டவராக இருப்பவருக்கு நன்மை செய்வதால் அவர் நம் கொடை தன்மையின் புகழை பிறர் மத்தியில் பரவ செய்யலாம் - இப்படி இரு வழிகளில் உண்டாகும் நன்மையின் விளைவு நமக்கு மன திருப்தியையும் - சமூக அந்தஸ்தையும் ஏற்படுத்தும். அதன் ஊடாக பொதுப்படையாக மற்றும், உளவியல் பயன்பாடு ஏற்படுகிறது.

     ஆனால் நம்மை யாரென்ற அறியாத பிறருக்கு அல்லது யாருக்கும் தெரியாத வகையில் அல்லது நேரடி தொடர்பு இல்லாமல் செயல்படுத்தப்படும் நன்மைகளால் சமூக ரீதியான எந்த ஒரு பயனும் நமக்கு ஏற்படாது. சரி மன திருப்தியாவது கிடைக்குமா என்றாலும் அதுக்கும் சான்ஸ் இல்லை..

 ஏன்னா நமது செயலுக்கு பிறரால் அங்கீகாரம் அளிக்கப்படும் நிலையில் மட்டுமே மன திருப்தியை முழுவதும் நாம் அடைந்துக்கொள்ள முடியும். ஆனால் மேற்கண்ட நிலையில் அதற்கான தன்மைகள் ஏற்பட வாய்ப்பில்லை.

 சிரமப்பட்டு ,உண்மையாக சம்பாதித்த பொருளாதாரத்தை பிறருக்கு எந்த வித பிரதிபலனும் இன்றி அளிப்பதால் அத்தகைய சூழலில் நாம் பெறும் வாழ்வியல் பயன்பாடு ஒன்றுமில்லை.

நூறு சதவீகித நன்மைகள் செய்து வாழ்வதென்பது கடவுளை ஏற்காத வாழ்வில் சாத்தியமில்லை! என்பதைவிட பிரதிபலனற்ற நன்மைகளை செய்ய மனம் இயல்பாகவே அவ்விடத்தில் பணிக்காது என்பதே உண்மை.

அப்போ கடவுளை ஏற்பவர்களால் மட்டும் தான் நூறு சதவீகிதம் நன்மையை செய்ய முடியுமா..?
 இல்லை... ஆனால் நன்மை செய்வதற்கான அதிகபட்ச வாய்ப்பு கடவுளை மறுப்பவர்களை விட ஏற்பவர்களுக்கே இருக்கிறது. ஏனெனில் மேற்கண்ட நிலையில் செய்யும் நன்மைகளுக்கு சமூகமத்தியில் பலன்கிட்டா விட்டாலும் இறைவனிடத்தில் அதற்கான பிரதிப்பலன் உண்டு என்ற எண்ணம் இயல்பாகவே ஏற்படும்.


சரி தீமைக்கு வருவோம்.


  நன்மை!  அதை செய்யாவிட்டால் கூட யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை. ஆனால் தீமை நிச்சயம் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்த வல்லது.
  • செல்வந்தர்கள் தம் புகழ் பழிக்கப்பட்டு சமூகத்தில் தனது அந்தஸ்து பாழாக்கப்படும் என்ற எண்ணத்திலும்
  •  ஏழைகள் தனது வறுமையின் காரணமாக பிறருக்கு அஞ்சுவதுமே 
                தீமைகள் செய்வதிலிருந்து தவிர்ந்து வாழ்வதற்கு தோதுவான காரணிகள். மாறாக கடவுளின் மீதான பயமில்லை .. என "மக்களின் சமூகரீதியான தீமைக்குறைவுக்கு" நாத்திகர்கள் காரணங்கள் சொல்கின்றனர்.
சரி, உடன்படுவோம்.  இவையெல்லாம் அவர்களின் எண்ணங்கள் சீராக ஒரே நேர்க்கோட்டில் இறுதிவரை பயணித்தால் மட்டுமே சாத்தியம்! 

   ஆனால் மனித மனங்கள் இயக்க சூழ்நிலையை மட்டுமே மையமாக கொண்டு செயல்படுவதால் நேரத்திற்கு தகுந்தார்போல் நெகிழ்வுத்தன்மை உடையது. ஆக
செல்வந்தர்கள் தம் புகழின் துணைக்கொண்டு தவறு செய்ய தொடங்கினால் ,  ஏழைகள் தம் செல்வ நிலையை பெருக்க வேண்டும் என தீர்மானித்து எப்படியும் வாழலாம் என முடிவெடுத்தால்...

வெயிட்...
அப்படி அவங்க வாழ்ந்தாலும் சட்டங்கள் போட்டு அவர்களை கட்டுப்படுத்தலாம் ஏன்.. மீறும் மக்களுக்கு தண்டனையும் கொடுக்கலாம் தானே! 

  குட்!. ஆனால் மனித சட்டங்கள் என்பது நூறு சதவீகிதம் முழுமையடையாத ஒன்று. ஏனெனில் ஒரு மனிதரின் அறிவை தாண்டி ஒருவரால் சிந்திக்க முடியாது. அவ்வறிவை அடிப்படையாக வைத்தே எந்த ஒன்றையும் சரி தவறு என அவரால் இனங்காண முடியும். ஆனால் அவரைக்காட்டிலும் பிறிதொருவரின் அறிவு சற்றுக்கூடுதலாக அங்கே செயல்பட்டால் முன்னவரின் முடிவில் இருக்கும் சரி தவறை மேலும் தெளிவாக வரையறுக்கும்.

   மூன்றாம் நபர் இன்னும் அறிவுமிகுந்தவராக இருப்பின்...  சரி / தவறை அறியும் விகிதம் அதிகரித்துக்கொண்டே போகும். இப்படியாக அதன் நம்பக தன்மை விரிவடைந்துக்கொண்டே இறுதிவரை போகும்.இது எல்லா மனிதர்களுக்கும் எல்லா காலத்திலும் பொருந்தும். இதனடிப்படையில் மனித உருவாக்கச்சட்டங்கள் என்றுமே முழுமை பெறாத ஒன்று!

சரிங்க... கண்டுப்பிடிக்கப்பட்ட குற்றங்களுக்கு தண்டனை கொடுக்க தானே செய்யுறோம் அப்புறம் என்ன...?

 இருக்கலாம்! ஆனா
 குற்றங்களின் நிருபணம் என்பது கண்ட, கேட்ட, பார்த்த சாட்சியங்களை வைத்தும் , அந்நிகழ்வோடு ஓத்துபோகும் பெரும்பான்மை செய்கைகளின் முடிவுகளுமே தண்டனையை தீர்மானிக்கிறது.

 மேற்கண்ட இரு நிலைகளிலும் "அதுவரை" தெரிவுறுத்தப்பட்ட வற்றை மட்டும் வைத்து சரியென ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவற்றை மையப்படுத்தி மட்டுமே தீர்ப்புகள் வழங்கப்படுவதால் ஒரு நிலையில் குற்றவாளிகள் கூட தப்புவதற்கும்- நல்லவர்கள் தண்டனையுள்ளாவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

அப்படியில்லாமல் நன்கு விசாரிக்கப்பட்டு உண்மையான குற்றவாளிக்கு தண்டனைகள் வழங்கப்பட்டாலும் அவையும் ஒருவர் மேற்கொண்ட குற்றத்தின் அளவிற்கு அளிக்கமுடியாது

உதாரணமாக ஒருகொலைக்கு பதிலாக குற்றவாளிக்கு தூக்கு தண்டனை தரப்படுவதாக கொள்வோம்.
  ஒரு கொலை செய்வதவனுக்கு ஒரு தூக்கு., மிக சரியான தீர்ப்பு
ஐந்து கொலைகள் செய்த ஒரு குற்றவாளியாக இருப்பீன்... என்ன?  ஐந்து முறை தூக்கா!
          1 :  1
          5 :  1 எப்படி இது நியாயமான தீர்ப்பாகும்...?

அதுவுமில்லாமல் இவையெல்லாம் சட்டத்தின் முன் கொண்டு வரப்படும் மனிதர்களுக்கு தான்!
 சட்டங்களில் சிக்கிக்கொள்ளாமல் மரிக்கும் வரை தீமைகளை செய்து வாழும் மனிதர்களுக்கு... மனித நீதிகளால் என்ன செய்ய முடியும் என்பதே இவ்விடத்தில் கேள்வி? 

தீமை செய்து வாழ்ந்து மனித சட்டங்களில் தப்பி மரணித்தாலும் நாளை கடவுள் முன் நிறுத்தப்படும் போது கண்டிப்பாக அத்தீமைக்கான தண்டனை வழங்கப்படும் என்றால்...

அவை நம்பமுடியாத கற்பனைக்கு உட்பட்ட இறை சட்டங்கள் என எள்ளி நகையாடுவோர் அதற்கான மாற்றுத்தீர்வை இவ்வுலகத்திலே ஏற்படுத்த வேண்டும். ஆனால் அதற்கான ஒரு வாய்ப்பை இயற்கை இதுவரை ஏற்படுத்தவில்லை.. ஏன் உலகம் அழியும் நாள்வரையிலும் ஏற்படுத்தவும் போவதில்லை.

கடவுளின் தலையீடு ஒன்றே அதிகப்பட்சமாக நன்மை செய்வதற்கும் தீமை செய்வதிலிருந்து விலகி இருப்பதற்கும் வழிமுறைகளை ஏற்படுத்த வல்லது
 மறுமையில் வழங்கப்படும் தீர்ப்பை நம்பா விட்டாலும் ,மனித உருவாக்க தீர்ப்புகள் முழுமையற்றவை என்பதை ஏற்றதாக தான் வேண்டும். பொறுத்திருப்போம் என்ன சொல்லுகிறதென நாத்திகம்!

                                                                அல்லாஹ் நன்கு அறிந்தவன்


read more "கடவுள் ஏன் இருக்க வேண்டும்....?"

Monday, November 21, 2011

நாத்திகனுக்குள் உண்மையைத் தேடி...

                                         ஓரிறையின் நற்பெயரால்.

     பொதுவாக எல்லா மதம் சார்ந்த / சாரா கொள்கைகள் நன்மை செய்வதை முன்னிலைப்படுத்தி கோட்பாடுகளை வகுத்தாலும் ஏனைய மதங்களை விட இஸ்லாமே நாத்திகவாதிகளால் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.

 ஏனெனில் ஏனைய கொள்கைகள் போல நன்மைகள் மேற்கொள்வதை முன்னிலைப்படுத்துவதோடு மட்டுமல்லாது, அதன் எதிர் விளைவான தீமையை தடுக்கவும் இஸ்லாம் அதை பின்பற்றுவோர் மீது சமூக கடமையாக பணிக்கிறது.

  ஆக அதனடிப்படையில் இன்று எல்லா ஊடகங்கள் வாயிலாகவும் இஸ்லாமியர்கள் அவரவர் பங்களிப்பை முடிந்த வரையில் அளித்து வருகிறார்கள்.  குறிப்பாக இணையத்தில் அதன் தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது., எல்லா துறைச்சார்ந்த கோட்பாடுகளை விளக்கும் தளங்களை விட இஸ்லாத்தை விளக்கும் தளங்கள் தமிழில் அதிகம்., நான் வாசித்த வரையில் சுமார் இருநூற்று ஐம்பதிற்கும் மேலாக இருக்கிறது 

   ஒரு கொள்கையை விளக்கும் போது நேர்மறை எதிர்மறை கருத்துக்கள் எழ தான் செய்யும் ஆனால் எந்த ஓரு நிகழ்வையும் ஏற்பதும் மறுப்பதும் ஒருவரது நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட விஷயம். ஆனால் தான் கொண்ட கொள்கை தான் உண்மையானது எனக் கூறி பிறரை ஏற்க செய்வதாக இருந்தால் அச்செய்கையை பொதுவில் நிறுத்தி, 
  • அறிவியல் ரீதியாக 
  • தர்க்கரீதியாக 

     ஒன்றின் கீழாக நிறுத்தி அவை விளக்கப்பட வேண்டும். அது இஸ்லாத்திற்கும் பொருந்தும் -நாத்திகத்திற்கும் பொருந்தும்., ஆனால் இஸ்லாம் எப்படி குர்-ஆன் சுன்னாவை முன்னிருத்தி பிறரை தன்பால் அழைக்கிறதோ, அதுப்போல நாத்திகம் அதுக்கொண்ட கொள்கையே முன்னிருத்தி அழைப்பதில்லை. மாறாக ஒரு நிலையில் இஸ்லாத்தை விமர்சித்து -தவறான புரிதலுடன் குற்றப்படுத்தி தம் கொள்கையை பறைச்சாற்றுகிறது. எண்ணற்ற தளங்கள் இஸ்லாம் சார்ந்த விமர்சனத்திற்கு / குற்றச்சாட்டிற்கு தெளிவான விரிவான விளக்கம் தந்துக்கொண்ட இருக்கின்றன.

     மேலும் ஒரு கோணத்தில் உயிரின தோற்றத்தின் மூலத்திற்கு பரிணாமத்தை அடிப்படையாக கொண்ட சித்தாந்தத்தை அறிவியலாகவும்,  கண் முன் இல்லா கடவுளை ஏற்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாது என தர்க்க ரீதியாகவும் வாதமெழுப்ப நாத்திகம் முயல்கிறது., அவற்றை மறுக்கும் விதமாக கீழ்கண்ட தளங்களில்  நாத்திகத்தை பொய்ப்பித்து படைப்பியல் கொள்கையை நிறுவ இஸ்லாத்தை முன்னிருத்தாமல் அவர்களிலும் வழியிலேயே பரிணாமம் -கடவுள் -கம்யூனிசம் குறித்து ஆய்வு ரீதியாவும் தர்க்கரீதியாகவும் ஆக்கங்களை வெளியிடுகிறது.



     நீங்களும் பார்வையிடுங்கள் இந்த ஆக்கங்கள் சமூக பயன்பாடு உடையது என நீங்கள் நினைத்தால் இந்த பதிவை மீள்பதிவாகவோ அல்லது தனிப்பக்கமாகவோ உங்கள் வலைத்தளத்தில் வெளியிடுங்கள். குறைந்த பட்சம் நாத்திக சகோதரர்களுக்காவது இப்பக்கத்தை அறிய செய்யுங்கள். 


* * *

" சகோதரர் ஆஷிக் அஹ்மத்தின் பரிணாமம் குறித்த பதிவுகள் "  
  

1. பரிணாமவியலாளர்கள் செய்த பித்தலாட்டங்கள், 
2. பரிணாமம் என்றால் என்னவென்று விளக்குவதிலேயே குழப்பங்கள் இருப்பது, 
3. முதன் முதலாக உயிரினப்படிமங்களில் காணப்படும் உயிரினங்கள் திடீரென தோன்றியிருப்பது, 
4. பெரும்பாலான உயிரினங்கள் மாற்றமடையால் தொடர்ந்தது, 
5. பரிணாமவியலாளர்களுக்குள் இருக்கும் குழப்பங்கள், 
6. நவீன வர்ணாசிரமமாக மனிதர்களிடையே இனபேதத்தை கற்பித்து பலரின் அழிவுக்கு காரணமாக பரிணாமம் இருந்தது மற்றும் ஹிட்லரின் வெறிக்கு பின்னால் முக்கிய காரணகர்த்தாவாக பரிணாமம் இருந்தது,
7. ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இறைநம்பிக்கையாளர்களாக இருப்பது, 
8. பரிணாமம் குறித்து மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள்,
9. பரிணாமம் குறித்து ஆசிரியர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வுகள்.
10. குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்தானா?
11. பரிணாமம் உண்மையாக இருந்தால் கூட அதனை வைத்து இறைவனை மறுக்க முடியுமா? 

12. பரிணாமத்தின் துணை கொண்டு நடந்த அட்டுழியங்கள் - மனித ZOO 


மேலும் பரிணாமம் குறித்து இந்த தளத்தில் உள்ள கட்டுரைகள்

1. எழுத்து விவாதங்களில் பங்கேற்கும் முஸ்லிம்கள் கவனத்திற்கு - I 
2. புரியாதப் புதிர்கள்..
3. Evolution Theory --- மக்கள் என்ன சொல்கிறார்கள்?
4. பரிணாமவியலை நம்புபவர்கள் இதையும் நம்புவார்களா?
5. பரிணாமவியல் உண்மையென்றால் அறிவியலாளர்களிடம் ஏன் இவ்வளவு கருத்து வேறுபாடுகள்? 
6. Evolution St(he)ory > Harry Potter Stories - I
7. Evolution St(he)ory > Harry Potter Stories - II
8. Evolution St(he)ory > Harry Potter Stories - III
9. Evolution St(he)ory > Harry Potter Stories - IV 
10. தற்செயலாய் வீடு உருவாகுமா?
11. "செயற்கை செல்(?)" (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா நாத்திகத்தையா? 
12. Evolution St(he)ory > Harry Potter Stories - V
13. (பல) நாத்திகர்கள் அறியாமையில் இருக்கின்றார்களா?
14. Evolution St(he)ory > Harry Potter Stories - VI
15. சில ஆச்சர்யங்கள், சில கேள்விகள் - I
16. சில ஆச்சர்யங்கள், சில கேள்விகள் - II
17. இதுவும் சரி, அதுவும் சரி - எதுதான் தவறு?
18. Evolution St(he)ory > Harry Potter Stories - VII 
19. தயங்குகின்றார்களாம் ஆசிரியர்கள்...பரிணாமத்தை ஆதரிக்க !!!!!!!!!!! 
20. விஞ்ஞானிகளால் உயிர்பெற்ற பெண்ணடிமைத்தனம்...  
21. டாகின்ஸ் VS வென்டர் - யார் சரி? யார் தவறு?
22. உலக நாத்திகர் மாநாட்டில் முஸ்லிம்கள் விவாதம்...
23. உலகின் 'முதல்' பறவை இறந்தது...bye-bye birdie
24. மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்... 

25. வாட்சின்:ஆச்சர்யங்கள்-மர்மங்கள்-குழப்பங்கள்.

* * *






" சகோதரர் பைசலின் பரிணாமம் குறித்த பதிவுகள் ".
     


* * *



" சகோதரர் ஹைதரின் கம்யூனிசம் குறித்த பதிவுகள். "
     


அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "நாத்திகனுக்குள் உண்மையைத் தேடி..."

Categories

அமல்கள் அறியாமை அறிவியல் அல்லாஹ் அவதாரம் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உஜைர் நபி உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் எதிரி ஏன் இஸ்லாம் ஏற்றத்தாழ்வு ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தஜ்ஜால் தண்டனை தாய் திருமணங்கள் தேவை நன்மைகள் நபிமொழி நரகம் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மனசாட்சி மனம் மனிதன் மனிதர்கள் மரணம் மறுமை மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வானவர்கள் வாழ்க்கை விதி விமர்சனம். விளக்கம் ஹராம்