"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Wednesday, November 16, 2011

இயற்கையின் தேடலா - தெரிவா கடவுள்..?


                                          ஓரிறையின் நற்பெயரால்
   
     கடவுளின் செயல்களாக சொல்வதையெல்லாம் மறுப்பதற்கு இயற்கை என்ற சொல்லாடலை நாத்திகர்கள் முன்னிருத்துகிறார்கள்.,  குறிப்பாக உலக உருவாக்கம், உயிரின வாழ்வுக்குறித்து இரு தரப்பிலும் வாதங்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன.

  அனைத்து நிகழ்வுகளும் இறை விதிப்படியே நடப்பதாக கடவுளை ஏற்போர் கூறினாலும் அதை மறுக்கும் நாத்திக கொள்கை இயற்கை அல்லது தற்செயல் என்ற நிலையை எல்லா செயல்களிலும் நிறுவ முயல்கிறது
 
      தற்செயல் என்பது எந்த வித முன்னேற்பாடோ அல்லது திட்டமிடலோ இன்றி திடீரென நிகழ்வுறும் ஒரு நிகழ்வாகும். அதுவும் ஒழுங்கமைப்புடன் நிகழ ஆயிரத்தில் ஒரு மடங்கே சாத்தியம், அதிலும் அச்செயல் ஒரே நேர்க்கோட்டில் தொடர்ந்திருக்க கோடியில் ஒரு மடங்கே வாய்ப்புண்டு!

  ஆக உலக உருவாக்கத்திற்கு பெருவெடிப்புக்கொள்கை வரை விவரித்து செல்லும் அறிவியல் அதற்கு முந்தைய நிலையை விளக்க வழியின்றி திடீரென ஏற்பட்ட தற்செயலின் விளைவு என முற்றுப்புள்ளி வைக்கிறது.

பால்வெளியில் பூமி உட்பட ஏனைய கோள்கள் தொடர்ந்து இயங்குவது குறிப்பாய் தத்தமது நீள்வட்ட பாதையில் தனித்தன்மையுடன் வலம்வருவது தற்செயல் அல்லது திடீரென ஏற்பட்ட செயலின் விளைவு என்பது ஏற்றுக்கொள்ளும் வாதமா...?

இங்கு இயற்கை-மனித வாழ்வை முன்னிலைப்படுத்தி பதிவிடுவதால் உலக உருவாக்கம் குறித்து மேலும் தொடரவில்லை.

  ஏனைய எல்லா நிலைகளிலும் இயற்கையை இறைவனுக்கு மறுப்பாக கொணர்ந்த போதிலும் உயிரினங்களின் வாழ்வு தொடர்பான செய்கைகளில் இயற்கை பெரிதும் முன்னிலைப்படுத்தபடுகிறது. இயற்கையோடு உயிரினங்களுக்கு உள்ள தொடர்பை குறித்துக்காண்போமேயானால்,

       இயற்கையானது, வாழும் காலம்- சூழல் மற்றும் தட்பவெப்ப நிலைகளுக்கு தகுந்தாற்போல் எந்த ஒரு உயிரினத்தின் உடல் அமைப்புகளை தேர்வு செய்து அவ்விடங்களில் வாழ வழியும் ஏற்படுத்தி இருக்கிறது. அத்தோடு வாழ்வியல் ஆதாரத்திற்கு தேவையான உணவுகளை ஏற்படுத்தியும் அவ்வுயிர்களின் சந்ததி நிலைக்கும் வகையில் இனப்பெருக்கம் செய்யும் வழிமுறையும் ஏற்படுத்தியுள்ளது.

    ஆனால் இந்த பொதுத்தன்மை மனிதன் உட்பட எல்லா உயிரினங்களுக்கும் சீராக ஓரே மாதிரி அமைக்கப்பெற்றிருந்தால் எல்லாவற்றிற்கும் இயற்கை ஒன்றே போதுமானது என்ற நிலைப்பாட்டிற்கு ஓரளவிற்கு வர வாய்ப்பிருக்கிறது.,

  ஆனால் ஏனைய உயிரினங்களுக்கு இயற்கை அளிக்கும் நிலைகள் மனிதனுக்கு மட்டும் எதிர்விகிதத்தில் முற்றிலும் மாறுபட்டு இருப்பது இயல்பாக பல கேள்விகளை நமக்கு ஏற்படுத்துகிறது.

 உதாரணத்திற்கு உயிரினங்களின் பிறப்பை எடுத்துக்கொள்வோம்,

  • மீன்களை எடுத்துக்கொண்டால், பிறந்தப் பொழுதிலிருந்தே அவை நீந்துவதற்கு கற்றுக்கொள்கின்றன. 
  • அதுப்போல கால் நடைகள் பிறந்த சிலமணி நேரங்களிலே எழுந்து நிற்பதுடன் இல்லாமல், ஆச்சரியம்! தம் தாயின் மடி தேடிச் சென்று பாலருந்தவும் செய்கின்றன.
  • பறவைகளோ சில நாட்களுக்கு பிறகு தம் இறக்கை வளர்ந்தவுடன் எந்த வித செய்முறைபயிற்சியுமின்றி இலகுவாக இயல்பாக விண்ணில் பறக்கிறது...

     இவை அனைத்து உயிரின செயல்களின் மூலத்தை தெரிவு செய்தது இயற்கையென்றால் அதே இயற்கை மனிதனுக்கும் அதே நிலையில் தன் இனம் சார்ந்த செய்கைகளை இயல்பாகவே தாங்கி பிறப்பிக்க செய்திருக்க வேண்டும் ஆனால்..?


  பிறக்கும் போதே ஏதுமறியா நிலைக்கொண்ட மனிதன் குறிப்பாக பிறந்து ஒரு மாதம் வரை படுத்த வாக்கிலே இருக்கிறான். நான்காம் மாதத்திலே தனது கைகளைத் தரையில் ஊன்றித் தலையைத் தூக்கிப் பார்க்க முயற்சிக்கிறான்.
 
        ஐந்தாம் மாதத்தில் உட்கார பழகும் மனிதன் ஆறாம் மாத்திலே எழ முயற்சிக்கிறான். எட்டாம் மாதத்திலே மெல்ல மெல்ல நடக்க கற்றுக்கொள்கிறான். எதையாவது பிடித்துக்கொண்டு பயணிக்க மனிதனுக்கு முழுதாய் ஒரு வருடம் தேவைப்படுகிறது.,

    பின்பே ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலை உபயோகித்துப் பொருட்களை எடுக்கக் கற்றுக் கொள்கிறான். இப்படி அடிப்படை செய்கைகளை கற்றுக்கொள்வதற்கே ஒருசில வருடங்கள் ஆகின்றது . அதற்கு பிறகே பேச்சும், பிறர் செய்கைகளை புரிந்துக்கொள்ளும் உணர்வும் அடைகிறான்., என்பதும் நாம் அறிந்த ஒன்றே..!
This quote taken from senthilvayal.wordpress

எல்லா உயிர்களுக்கும் தன் இனம்சார்ந்த செயல்களுடன் பிறப்பின் தொடக்கத்தை தேர்வு செய்யும் இயற்கை மனிதனுக்கு மட்டும் பூஜ்ய நிலை தொடக்கத்தை ஏன் தர வேண்டும்?

   உயிரினங்களின் தகவமைப்புக்கு தக்கவாறு எந்த ஒரு உயிரின் தொடக்கத்தை இயற்கை தீர்மானிப்பது உண்மையென்றால் மற்ற உயிரிகளை விட மனிதனுக்கே தம் இனம்சார்ந்த இயல்பு நிலை பண்புகள் பிறக்கும் போதே அளிக்கப்பட்டிருக்க வேண்டும் - ஆனால் இவ்விடத்தில் இயற்கை அந்நிலையே தேர்ந்தேடுத்து அளிக்கவில்லையே அது ஏன்?

 எனினும் பிற்காலத்தில் பூஜ்ய தொடக்கத்தை ஆரம்பமாகக் கொண்டு வாழ்வை துவக்கிய மனிதன் பிறப்பிலேயே சிறப்பியல்கூறுகளை அதிகம் கொண்ட ஏனைய உயிரினங்களை விட எல்லா நிலைகளிலும் முதிர்ச்சி பெறுகிறான். இப்படியொரு தலைகீழ் மாற்றத்தை இயற்கை ஏன் தேர்வு செய்து வைத்திருக்கவேண்டும்..? 

இவை மட்டுமில்லாது, ஏனைய உயிர்களுக்கு வழங்கப்படாத வாழ்வியலுக்கு உகந்த செயல்பாடுகளை மனிதனுக்கு மட்டும் தேர்வு செய்து இயற்கை வழங்க காரணமென்ன?

அதாவது வெட்கம், ஒழுக்கம், இனவிருத்தி செய்வதில் வரையறை, போன்ற வாழ்வதாரத்திற்கு சிறிதும் தேவையற்ற நிலைகளை மனிதனுக்கு மட்டும் பிரத்தியேகமாக ஏன் ஏற்படுத்தியது? மேலும் எதை அடிப்படையாக வைத்து நன்மை- தீமைகளை பிரிந்தறிந்து நன்மையை மட்டும் மேற்கொள்வது சிறந்தது எனும் பண்பியல் கூறுகளை இயற்கை கற்றுக்கொடுத்து?

இயற்கை என்ற ஒன்றே மனிதன் உட்பட அனைத்துயிர்களின் வாழ்வை தீர்மானித்து நடத்துவதாக கொண்டால் மேற்கொண்ட கேள்விகளுக்கு இயற்கையே எல்லாவற்றிற்கும் ஆதாரம் என்பவர்கள் பதில் தந்தாக வேண்டும்?

   ஏனெனில் இறைவனின் செய்கைகளை திசை திருப்புவதற்கு இயற்கை ஒன்றையே தீர்வாக கொண்டிருப்பவர்கள், அந்த இயற்கை எல்லா விளைவுகளுக்கும் தெளிவான காரணங்களை கொண்டிருக்கவில்லை என்பதை உணர மேற்சொன்ன சிறு உதாரணமே போதுமானது.,

   ஆக இயற்கை என்பது எதிர்கேள்விகளுக்கு உட்படாத தன்மைகளை கொண்ட விசயங்களில் மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பதில் தரும்., மாறாக பொதுவில் நிறுத்தும் எல்லாவற்றிற்கும் பதில் தராது. ஆக இயற்கை என்பது எல்லா செய்கைகளின் முடிவுறுத்தப்பட்ட தீர்வல்ல. மாறாக தீர்மானித்தவனின் முடிவுறுத்தப்பட்ட செய்கைகளில் ஒன்று.

  ஆக எந்நிலையில் பதில் இயற்கைக்கே தேவைப்படுகின்றதோ அல்லது இயற்கையால் தேடப்படுகின்றதோ அங்கு இறைவன் இருப்பு அவசியமாக்கப்படுகிறது.,  எப்போதும் பதில்களின்றி தேங்கி நிற்கும் எண்ணற்ற நிலைகள் இறைவனின் இருப்பை தெரிவு செய்பவைகளாகதான் இருக்கின்றன.

 ஏனெனில் எந்த ஒரு நிகழ்வின் விளைவுக்கும் ஒரு நிலைக்கு மேல் நம்மால் காரணம் தேடமுடியவில்லையோ அங்கு நம் அறிவை விஞ்சிய வேறோன்றின் தலையீடு இருக்க வேண்டும் என்பது எண்ணுவதே சிந்தனையுள்ள எவரும் ஓப்புக்கொள்ளும் வாதம்!

நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. (03:190))

                                                    அல்லாஹ் நன்கு அறிந்தவன்.


12 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும். அருமையான விளக்கம். "மாஸா அல்லாஹ்" பரிணாம கோட்பாட்டை பொய்யாக்கக் கூடிய இதுபோன்ற பல கேள்விகள் இருந்தும் ஏன் இவர்கள் அறிவியல் எனும் பெயரில் அதை தூக்கிப்பிடித்துக்கொண்டிருக்கிரார்கள்? உதாரணமாக பறவைகளை பார்த்து மனிதன் பறக்க ஆசைப்பட்டதன் விளைவே பல கடின முயற்சியின் பின் விமானத்தை கண்டுபிடித்தான். ஆனால் அவ்வாறு பறக்க ஆசைப்பட்ட மனிதனுக்கு ஏன் அந்த இயற்க்கை இறக்கைகளை கொடுக்க வில்லை?

    ReplyDelete
  2. Assalamu ALaikum,

    A thought provoking article...Jasakkallah for sharing..

    wassallam,

    Your brother,
    Aashiq Ahamed A

    ReplyDelete
  3. வ அலைக்கும் சலாம் வரஹ்
    சகோ Faizal

    பரிணாம வாத்தை தர்க்கரீதியாக பொய்ப்பிக்க நிரம்ப தகவல்களை திரட்டி தரவேண்டும் எனபதில்லை சகோ., மாறாக நிதர்சன வாழ்க்கைக்கு பொருந்தாதவைகளை இனங்கண்டு எளிதாக விளக்கினாலே போதும்.,

    இன்ஷா அல்லாஹ் அவர்களின் மனமாற்றத்திற்க்காக வேண்டியே இக்கட்டுரையும் .,

    கருத்திற்கும் வருகைக்கும் நன்றி சகோ
    ஜஸாகல்லாஹ் கைரன்

    ReplyDelete
  4. வ அலைக்கும் சலாம் வரஹ்
    அன்பு சகோ ஆஷிக்

    கருத்திற்கும் வருகைக்கும் நன்றி சகோ
    ஜஸாகல்லாஹ் கைரன்

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

    அருமையான பதிவு.

    சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்கட்டும்.

    ReplyDelete
  6. மதச்சார்பு இருப்பினும், எளிய தமிழில் சொல்ல நினைப்பதைத் தெளிவாகச் சொல்கிறீர்கள்.
    உளப்பூர்வமான பாராட்டுகள்.

    ReplyDelete
  7. வ அலைக்கும் சலாம் வரஹ்
    அன்பின் VANJOOR அப்பா

    தங்களின் தெளிவான கருத்திற்கும் மேலான வருகைக்கும் நன்றி
    ஜஸாகல்லாஹ் கைரன்

    ReplyDelete
  8. அன்பு சகோ பரமசிவம்.,
    தங்களின் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக
    நான் எங்கேயும் மதசார்பை முன்னிருத்துவதில்லை சகோ., நாம் கடவுளை வணக்கத்திற்குரியவனாக ஏற்றுக்கொண்டால் ., அந்த வணக்கத்திற்குரிய கடவுள் எப்படிப்பட்ட தன்மைகளை உடையவராக இருக்கவேண்டும் என்பதை விளக்கவே இங்கு கட்டுரைகள்.,ஏனைய பதிவுகளை பாருங்கள் மாற்றுக்கருத்திருந்தால் தெரியப்படுத்துங்கள்

    நடு நிலையோடு இப்பதிவை வாசித்தமைக்கு நன்றிகள் சகோ

    ReplyDelete
  9. வ அலைக்கும் சலாம் வரஹ்
    அன்பு சகோ இப்ராஹிம் சலாத்தோடு சேர்த்து கருத்தையும் சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்
    :)

    ReplyDelete
  10. சிறப்பான கேள்விகள்...

    //எல்லா உயிர்களுக்கும் தன் இனம்சார்ந்த செயல்களுடன் பிறப்பின் தொடக்கத்தை தேர்வு செய்யும் இயற்கை மனிதனுக்கு மட்டும் பூஜ்ய நிலை தொடக்கத்தை ஏன் தர வேண்டும்?//

    பரிநாமதால் விளக்க முடியாத கேள்விகள்.

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    //சிறப்பான கேள்விகள்...//
    குறந்த பட்ச தவறான புரிதலுடனான பதில்கள் கூட அவர்களிடம் இல்லையே சகோ....

    //பரிநாமதால் விளக்க முடியாத கேள்விகள்.//
    முதலில் பரிணாமம் இக்கேள்விகளை விளங்கட்டும் சகோ
    ஹி ஹி

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ
    ஜஸாகல்லாஹ் கைரன்

    ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்