"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Friday, September 14, 2012

#கடவுள்# ஒரு மெகா தவறான புரிதல்!

                                           ஓரிறையின் நற்பெயரால்

 உலகில் நாம் பின்பற்றும் எந்த செய்கையானாலும் அவை இரண்டு விசயங்களை மையமாக கொண்டிருக்கிறது. அதாவது ஒன்றின் மூலங்களை ஆதார குறியீடுகளுடன் ஆராய்ந்து அவற்றை ஏற்பது அல்லது மறுப்பது. மற்றொன்று விளக்க வழி ஏதுமின்றி மனதளவில் அதை உண்மை அல்லது பொய்யென நம்புவது. 

உலகில் பெரும்பாலான செய்கைகள் முதல் நிலையில் பின்பற்றபட்டாலும் மிக குறைவான விசயங்களே நம்பிக்கை சார்ந்ததாக கூறி இரண்டாம் நிலையில் அங்கீகரிக்கப்படுகிறது.

அப்படி, மனித வாழ்வில் இரண்டாம் நிலையில் வைத்து பார்க்கப்படும் நம்பிக்கை சார்ந்த விசயமாகவே "கடவுள்" இருப்பதாக பெரும்பான்மையானவர்கள் நினைக்கிறார்கள். உண்மையாகவே எதையும் விளக்க முடியா நிலையில் வெற்று ஊகங்களில் மட்டுமே கடவுளும் அவர் சார்ந்த கோட்பாடுகளும் இருக்கின்றனவா என்பதை விளக்கவே இக்கட்டுரை.

தொடர்வோம்...

 கடவுள் இருக்கிறாரரா.. இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டுமானால் அதற்கு முதலில் குறைந்த பட்சம் கடவுள் குறித்த நேர்மறை தகவல்களோ அல்லது எதிர்மறை செய்திகளோ நமக்கு தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இன்று கடவுளை ஏற்போர் நம்பிக்கை சார்ந்து மட்டுமே கடவுளை ஏற்கின்றனர் அதற்கு எந்த வித ஆதார நிருபணமும் தரவில்லையென குறைகூறும் கடவுள் மறுப்பாளர்கள் தாங்கள் மறுக்கும் கடவுள் எப்படிப்பட்டது / எப்படிப்பட்டவர் என்பதை இது வரை தெளிவுறுத்தியது இல்லை. 

 இன்று உலகில் இயங்கிவரும் சமூக ஏற்றத்தாழ்வுகளை பார்த்தும், நடைமுறை வாழ்வில் அப்பாவிகள், வறியவர்கள் போன்றவர்கள் பாதிக்கப்படுவதை பார்த்தும் கடவுள் இல்லையென்று சொன்னால் அது எப்படி கடவுளை மறுப்பதாகும்? வேண்டுமானால் இப்படிப்பட்ட செய்கைகளுக்காக அவரை கெட்ட கடவுள் என வேண்டுமானால் சொல்லலாம். அஃதில்லாமல் கடவுள் இல்லையென்று சொல்ல முடியாது. ஆக, 

ஒன்றை ஆதார ரீதியாக மறுப்பதற்கு முதலில் அதுக்குறித்து விளக்கப்படவேண்டும். ஆக கடவுள் இல்லையென்று சொன்னால் அதற்கான ஆதாரக்குறியீடுகள் தந்தாக வேண்டும். ஆனால் இன்று கடவுளை விமர்சிக்கும் எவரும் கடவுள் என்றால் என்ன என்பது குறித்து விளங்கவில்லையென்பது கண்கூடு.

சரி அப்படியானால் கடவுள் உண்டு என்பதை விளக்கும் ஆதார நிருபணம்...?

மனிதன் தெரிந்து வைத்திருக்கும் அனைத்து விசயங்களையும் சரி தவறு என தீர்மானிப்பதற்கு மனிதனிடம் இருக்கும் மிகப்பெரிய அளவுகோல் அவனது அறிவு மட்டுமே. அதாவது மனித அறிவு தம் புறக்காரணிகள் மூலம் எதை கேட்டதோ, பார்த்ததோ, உணர்ந்ததோ, அதை அடிப்படையாக வைத்து ஆராய்ந்து அந்த செய்கைக்கு ஒரு வரைவிலக்கணம் மனித அறிவு கற்பிக்கிறது. 

அதையே பிறிதொருவர் அறிவும் ஏற்றால் அதை உண்மை என்கிறோம்.  ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய விசயம் எதை நாம் அறிந்திருக்கிறோமோ, அறிகிறோமோ அதை மட்டுமே உண்மை என்கிறோம். மாறாக அறியாத அல்லது புலப்படாத ஒன்றை பொய் என்று கூறிவிட முடியாது. 

இதை இன்னும் எளிதாக விளக்கிட... 
நல்ல நிலையில் உள்ள மனித காதுகளுக்கு சுமார் 20 டெசிபல் முதல் 20000 டெசிபல் வரை உள்ள சப்தங்கள் மட்டுமே கேட்க முடியும். இந்த டெசிபல் அளவிற்கு மேலாகவோ அல்லது கீழாகவோ நம்மால் கேட்க முடியாது. அதனால் தான் எறும்புகளின் கமிஞ்சைகள் ,குண்டுசீ விழும் சப்தம் போன்றவற்றை கேட்க முடிவதில்லை. 

அதுப்போலவே குறிப்பிட்ட தூரத்திற்கு பிறகோ அல்லது மிக மிக அருகாமையிலோ நம் பார்வையில் எதுவும் தெளிவாக தெரிவதில்லை. எனினும் 20 டெசிபலுக்கு கீழாக எந்த ஓலியும் கிடையாது என்றோ நம் பார்வையில் இறுதியில் தெரிவதே உலகின் முடிவு என்பதையோ நாம் ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக மனித செவிகளுக்கும், பார்வைகளுக்கும் இவ்வளவு தான் சக்தி என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

எப்படி செய்திகளை கேட்பதற்கு செவிகளும், காட்சிகளை பார்ப்பதற்கு விழிகளும் மனிதனின் உபயோகத்திற்கு வழங்கப்பட்டிருப்பதுப்போல எதையும் ஆராயும் நோக்கிற்காக அவனுக்கு சிந்திக்கும் திறனும் வழங்கப்பட்டிருக்கிறது. செவிகளும், விழிகளும் ஒரு நிலைக்கு மேலாக செயல்பட முடியாது என்பதை தெளிவாக அறிந்து வைத்திருக்கும் நாம் நமது அறிவு மட்டும் எப்போதும் எதையும் விளங்கும் என்று எண்ணுவது எப்படி நியாயமானதாகும்? அதுவும் அவை தரும் விளக்கம் மட்டுமே உண்மையானது, மனித அறிவு குறைபாடே இல்லாதது என்று நூறு சதவீகிதம் யாரால் உத்திரவாதம் தர முடியும்?

வெயிட் வெயிட்... இந்த இடத்தில் ஒரு கிராஸ் கொஸ்டீன்....
இன்று சாதரணமாக மனிதனால் பார்க்க முடியாத, கேட்க முடியாதவற்றையெல்லாம் மனித அறிவு அறிவியல் சாதனங்களை பயன்படுத்தி கண்டறிந்து அப்புறம் தானே அதை உண்மையென்கிறது. அப்படி இருக்க கடவுள் என்பவர்/ என்பது உண்மையானால் அதையும் அறிவியலால் கண்டறிந்து உண்மைப்படுத்தி இருக்கலாமே.. இதுவரை அறிவியலால் அப்படி ஒன்றை கண்டறிய முடியவில்லையென்றால் கடவுள் இல்லையென்றுதானே அர்த்தம்... என்ன சொல்றீங்க?Good Question! But...
அறிவியல் கொடுக்கும் விளக்கமும்- ஆதார சான்றும் மனித அறிவுக்கு எதாவது ஒரு விதத்தில் புலப்படக்கூடியதாக இருக்கும். அதாவது பெரிய மலைகளிலிருந்து சிறிய அணுத்துகளாகட்டும். இவை மனித அறிவால் ஆராயும் தன்மைகள் கொண்டவை. அதனால் தான் அவைக்குறித்த செய்திகளை வெளிக்கொணர்ந்தது மனித அறிவால் சாத்தியமாயிற்று. 

இனியும் இதை விட கூடுதலாக பல விசயங்கள் கூட மனித அறிவால் கண்டறிய முடியும். அதைப்போலவே கடவுள் என்ற நிலையும் அவ்வாறே நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால் அறிவியலால் அதை மெய்படுத்த அல்லது மறுக்க முடியும்

ஆனால் கடவுள் என்பவர் / என்பது கண்களில் விரியும் காட்சியாகவோ, அகப்படும் பொருளாகவோ இருக்க வேண்டும் என்பது யார் சொன்னது? 
மனித அறிவுகளில் கட்டுப்பட வேண்டிய ஒன்று என்று யார் தீர்மானித்தது?
மனித உருவாக்க சாதனங்களால் ஆய்ந்தறிந்து அளவிட முடியும் என்பதை மனித அறிவுக்கு யார் உணர்த்தியது.? 

இன்னும் பாருங்கள் உலகில் எல்லாவற்றையும் அளவிட முடிந்தாலும் அவற்றிக்கே உரிய சாதனங்களை பயன்படுத்தினால் மட்டுமே அவற்றின் தன்மைகளை துல்லியமாக அறிந்துக்கொள்ள முடியும். 

அதாவது ஓளியின் வேகத்தை அளவிடுவதற்கு வெப்ப மானிகள் உதவாது. ஆயிரம் டன்களை துல்லியமாக எடைபோடும் கருவிகளால் கூட மூன்றில் ஐந்தை கழித்தால் எவ்வளவு என்று கூற தெரியாது. லிட்டர் அளவுகோலை வைத்துக்கொண்டு காற்றின் வேகத்தை அறிய முடியாது. ஒரு கிராம் கத்திரிக்காயை துல்லியமாக எடை போட ரிக்டர் அளவுகோலை பயன்படுத்த முடியாது.  

இப்படி அறிவியல் சாதனங்களால் கூட அவற்றின் செயல் திறனுக்கு மாறுபடும் ஒன்றின் மேல் ஆதிக்கம் செலுத்த முடியாத போது... மனித அறிவுக்கு உட்படாத, அறிவியல் சாதனங்களால் சோதித்து வரையரை செய்ய முடியாத ஒன்றை இல்லையென்று கூறுவது வெற்று ஊகங்கள் மட்டுமே... 

கடவுள் இல்லையென்று சொல்பவர்கள், தான் மறுக்கும் கடவுளுக்கு தவறான புரிதலை தான் தன்னிடம் வைத்திருக்கிறார்கள். கடவுள் இல்லையென்று தீர்மானிப்பது இருக்கட்டும்! அதற்கு முன் கடவுள் என்றால் என்ன... என்பது குறித்தாவது முதலில் தெரிந்துக்கொள்ள முற்படுங்கள்... 

ஏனெனில் நீங்கள் மறுக்கும் கடவுள்களை நான் கடவுளாகவே ஏற்பதில்லை.

உங்கள் சகோதரன்
குலாம்.

                                                                அல்லாஹ் நன்கு அறிந்தவன்

மேலும் தொடர்புடைய ஆக்கங்கள்:
பகுத்தறிவாளர்களின் கடவுள்..!
கடவுளின் "பிறப்பும்.- இருப்பும்."

43 comments:

 1. எப்படி செய்திகளை கேட்பதற்கு செவிகளும், காட்சிகளை பார்ப்பதற்கு விழிகளும் மனிதனின் உபயோகத்திற்கு வழங்கப்பட்டிருப்பதுப்போல எதையும் ஆராயும் நோக்கிற்காக அவனுக்கு சிந்திக்கும் திறனும் வழங்கப்பட்டிருக்கிறது. செவிகளும், விழிகளும் ஒரு நிலைக்கு மேலாக செயல்பட முடியாது என்பதை தெளிவாக அறிந்து வைத்திருக்கும் நாம் நமது அறிவு மட்டும் எப்போதும் எதையும் விளங்கும் என்று எண்ணுவது எப்படி நியாயமானதாகும்? அதுவும் அவை தரும் விளக்கம் மட்டுமே உண்மையானது, மனித அறிவு குறைபாடே இல்லாதது என்று நூறு சதவீகிதம் யாரால் உத்திரவாதம் தர முடியும்?///

  மாஷா அல்லாஹ்

  அதாவது ஓளியின் வேகத்தை அளவிடுவதற்கு வெப்ப மானிகள் உதவாது. அதுப்போல ஆயிரம் டன்களை துல்லியமாக எடைபோடும் கருவிகளால் கூட மூன்றில் ஐந்தை கழித்தால் எவ்வளவு என்று கூற தெரியாது. லிட்டர் அளவுகோலை வைத்துக்கொண்டு காற்றின் வேகத்தை அறிய முடியாது. ஒரு கிராம் கத்திரிக்காயை துல்லியமாக எடை போட ரிக்டர் அளவுகோலை பயன்படுத்த முடியாது.
  இப்படி அறிவியல் சாதனங்களால் கூட அவற்றின் செயல், தன்மைக்கு மாறுபடும் ஒன்றின் மேல் ஆதிக்கம் செலுத்த முடியாத போது... மனித அறிவுக்கு உட்படாத, அறிவியல் சாதனங்களால் சோதித்து வரையரை செய்ய முடியாத ஒன்றை இல்லையென்று கூறுவது வெற்று ஊகங்கள் மட்டுமே... ////

  மிகச் சரி.

  ஏனெனில் நீங்கள் மறுக்கும் கடவுள்களை நான் கடவுளாகவே ஏற்பதில்லை.///

  நச்...


  ReplyDelete
 2. எனக்கு ரொம்ப பிடிச்ச பாயிண்ட்

  //// ஆனால் கடவுள் என்பவர் / என்பது கண்களில் விரியும் காட்சியாகவோ, அகப்படும் பொருளாகவோ இருக்க வேண்டும் என்பது யார் சொன்னது?
  மனித அறிவுகளில் கட்டுப்பட வேண்டிய ஒன்று என்று யார் தீர்மானித்தது?
  மனித உருவாக்க சாதனங்களால் ஆய்ந்தறிந்து அளவிட முடியும் என்பதை மனித அறிவுக்கு யார் உணர்த்தியது.? ////

  இதுக்கு பதில் : மனிதன்-தான்.

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

   கருத்திற்கு நன்றி சகோ

   Delete
 3. சலாம் சகோ.குலாம்.
  சிந்தனையை தூண்டிவிடக்கூடிய சிறந்த பதிவு.

  //20 டெசிபல் முதல் 20000 டெசிபல் வரை உள்ள சப்தங்கள் மட்டுமே கேட்க முடியும். இந்த டெசிபல் அளவிற்கு மேலாகவோ அல்லது கீழாகவோ நம்மால் கேட்க முடியாது//---உண்மை..!

  //குறிப்பிட்ட தூரத்திற்கு பிறகோ அல்லது மிக மிக அருகாமையிலோ நம் பார்வையில் எதுவும் தெளிவாக தெரிவதில்லை.//---உண்மை..! பார்வைக்கொடு நேர்க்கோட்டில் அன்றி.... வளைந்து எல்லாம் செல்லாது..! இன்னும், திரை மறைவுக்கு பின்னர் உள்ள வற்றை காண இயலாது..!

  இதேபோலவே... மற்ற புலன்களுக்கும்..! எல்லா வாசனையையும் நுகர முடியாது. தொடு உணர்ச்சி இல்லாத செல்களும் நம்மிடம் உண்டு. இருந்தாலும், எடை குறைவாக உள்ளது நம்மை தொட்டால் உணர முடியாது. நாக்கு அறியாத சுவையும் உண்டு..!

  இப்படி ஒரு பலகீனனாக இருந்து கொண்டு... கடவுளை கண்டுபிடிக்க இன்னும் ஒரு சாதனமும் கண்டுபிக்காமல்... கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வருவது அறிவியலுக்கு முற்றும் எதிரானது..!

  நீண்ட ஓய்வுக்கு பின்னர்... அதே சூடு குறையாமல்... ஒரு பதிவு. மாஷாஅல்லாஹ்.
  நன்றி சகோ.குலாம்..!

  ReplyDelete
  Replies
  1. இப்படி ஒரு பலகீனனாக இருந்து கொண்டு... கடவுளை கண்டுபிடிக்க இன்னும் ஒரு சாதனமும் கண்டுபிக்காமல்... கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வருவது அறிவியலுக்கு முற்றும் எதிரானது..!////

   மாஷா அல்லாஹ்

   Delete
  2. வ அலைக்கும் சலாம் வரஹ்

   சகோ சிட்டிசன்

   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
   ஜஸாகல்லாஹ் கைரன்

   Delete
 4. //ஒரு கிராம் கத்திரிக்காயை துல்லியமாக எடை போட ரிக்டர் அளவுகோலை பயன்படுத்த முடியாது. //
  Ultimate brother :)

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

   வருகைக்கு நன்றி சகோ

   Delete
 5. அல்லா எல்லாம் அரிந்தவன்

  ReplyDelete
 6. சலாம் சகோ குலாம்
  கடவுளை மறுப்பதற்க்கு விஞ்ஞானத்தில் எந்த முகாந்திரமும் இல்லை என்பதை தர்க்கரீதியாகக் கூறியுள்ளீர்கள் இதில் வேடிக்கை என்னவென்றால் இதுவரை கண்டுபிடிக்கப்படவைகளில் பலதும் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதை மெய்படுத்திக்கொண்டிருக்கும்போது கடவுள் இல்லை என்பது எவ்வளவு மடத்தனம்

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்

   == இதுவரை கண்டுபிடிக்கப்படவைகளில் பலதும் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதை மெய்படுத்திக்கொண்டிருக்கும்போது ==

   சரியான வார்தைகள்

   கருத்திற்கு ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

   Delete
 7. அருமை பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கு நன்றி சகோ

   Delete
 8. இப்பதிவுக்கான மறுப்பு நல்லூர் முழக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேடலுள்ளவர்கள் காண்க
  உதாரணங்கள் மட்டும் உண்மையாகிவிடுவதில்லை
  http://nallurmuzhakkam.wordpress.com/2012/09/22/gulam-senkodi-2-1/

  செங்கொடி

  ReplyDelete
 9. சகோதரர் செங்கொடி தம் நல்லூர் முழக்கம் என்ற தளத்தில் எழுதியய மறுப்பாக்கத்திற்கு விளக்கங்கள் அவரது வாதங்களும் அதற்கு நம் பதில்களும். நடு நிலையாளர்கள் தீர்மானித்துக்கொள்ளுங்கள் .... எது சரியான நிலைப்பாடென்று.,

  சகோதரர் செங்கொடி தம் வாதத்தை முதலில் இப்படி தொடங்குகிறார்

  == ‘கடவுள் ஒரு மெகா தவறான புரிதல்’ எனும் கட்டுரையில் நண்பர் குலாம் கூறியிருப்பது என்ன? கடவுளை எந்த மனிதனாலும் அறிந்து கொள்ள முடியாது. கடவுளை அளக்கும் உயரமோ, தகுதியோ அறிவியலுக்கு இல்லை. கடவுளை மறுப்பவர்கள் எந்த ஆதார குறியீடுகளையும் காட்டவில்லை. கடவுள் என்றால் என்னவென்றே தெரியாமல் மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதைத்தானே எல்லா மதவாதிகளும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். நண்பர் குலாம் புதிதாக இதில் கூறுவதற்கு என்ன இருக்கிறது? தர்க்கத்தைக் குழைத்து எழுதிவிட்டால் .. .. .. சுத்திச் சுத்தி எழுதினாலும் விக்ஸ் விக்ஸ் தான்(விவேக் காமெடி) ==

  சகோதரர் கூறியிருப்பது உண்மை தான்! (முதல் இரண்டு வரிகள் மட்டும்). கடவுளை அறியலால் அளக்க முடியாது என கூறும் கடவுள் ஏற்பாளர்கள் அதற்கான காரணம் என்ன சொல்கிறார்கள் என்பதை முன்னிருந்தாமல் பொத்தாம் பொதுவாக மதவாதிகள் என்னவென்று தெரியாமல் மறுக்கிறார்கள் என்பது சகோதரரின் மிகவும் தவறான சிந்தனை.

  கடவுளை இதுவரை எந்த மனிதனும் கண்டதில்லை என்பதற்காக எந்த கடவுள் ஏற்பாளர்களும் கடவுளை இங்கே பார்க்க முடியாது என்று ஒரு பசப்பலான பதிலை கூறவில்லை. மாறாக கடவுளை இந்த உலகத்தில் யாராலும் காணமுடியாது என்ற இலக்கணத்தோடே கடவுள் இவ்வுலக மனிதர்களுக்கு அறிமுகம் ஆகிறார்.

  ஆக கடவுளின் காட்சி குறித்து ஐயமோ அல்லது கேள்வி கேட்கும் எண்ணம் தோன்றுவதற்கு முன்பாகவே பதில் தயாராகவே இருக்கிறது என்பதை சகோதரர் புரிந்துக்கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப்போனால் கடவுளை தற்போது தம் புறக்கண்களால் காண முடியவில்லை என்பதாலே கடவுள் இல்லையென்றும் கூறும் சகாக்கள் யோசிக்க வேண்டும் புதிய பதிலுக்கு., ஆக நான் புதிதாக சொல்ல ஒன்றுமில்லை ஏற்கனவே ஏராளமான இறைத்தூதர்கள் சொன்ன செய்தியை தான் நானும் சொல்லியாக வேண்டும். ஆக விக்ஸ் என்பதை விக்ஸ் என்று தான் எந்த காலத்திலும் எழுத முடியும்.

  ReplyDelete
 10. அடுத்து சகோதரர் செங்கொடி

  == கடவுளை நம்பும் எவரும் குலாம் உட்பட இதுவரை கடவுள் என்றால் என்ன? என்பதை தெளிவாக கூறியிருக்கிறார்களா? கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரக் குறியீடுகள் தந்திருக்கிறார்களா? பாவம் எதிர்நோக்கி சுட்டுவிரல் நீட்டும் முன் தம்மை நோக்கி மூன்று விரல்கள் நீண்டிருக்கின்றன என்பதை மறந்துவிட்டார். ==

  சகோதரர் செங்கொடி எனது ஏனைய ஆக்கங்கள் படித்து இருப்பீர் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன். கடவுள் இருக்கிறார் என்றால் ஆதார குறியீடுகள் தாருங்கள் என்கிறீர்கள். எப்படி குறீயிடுகள் வேண்டும் சகோ செங்கொடி? கடவுளை கண் முன் நிறுத்த வேண்டுமா? அல்லது உணர்வுகளில் சிக்க வைக்க வேண்டுமா? அல்லது கணம், அடர்த்தி கொண்டு வகைப்படுத்த வேண்டுமா?

  மீண்டும் தொடங்கிய இடத்திலே நிற்கிறீர்கள். தெளிவாக ஆக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன். கடவுளை அறிவியலால் அளக்க முடியாது! நேரடியாகவும் காண முடியாது! அதற்கான காரணத்தை சேர்த்தே விளக்கி இருக்கிறென். இப்போது சொல்லுங்கள் கடவுளை இவையல்லாத எந்த மூலங்களை வைத்து ஆதார குறியீடுகள் தருவது சகோதரர் விளக்குவாரா...?

  என் தரப்பில் இந்த தர்க்கரீதியான விளக்கத்திற்கு உடன் பட மறுக்கும் உங்களைப்போன்றவர்களுக்காக தான் ஒரு துணைக்கேள்வியும் கேட்டு இருக்கிறேன், அறிவியலால் உணர்த்த முடியாதது கடவுள் என்கிறேன். அதற்கு அறிவியலால் உணர்த்த முடியும் கடவுள் இல்லையென்பதற்கு என்ன பதில் வைத்து இருக்கிறீர்கள் .சகோ இது தானே நான் ஆக்கத்தில் மையப்படுத்தி இருப்பது! என்னை நோக்கி நீண்டிருக்கும் மூன்று விரல்கள் நீளும் முன்னமே இதை தான் நான் சொல்லி வருகிறென். தற்போது உங்களை நோக்கும் இரு விரல்களுக்கு குறைந்த பட்சம் ஒரு விரலுக்காகவது என்ன சொல்ல போகிறீர்கள் சகோ?

  ReplyDelete
 11. அடுத்து

  == கடவுளை மறுப்பவர்கள் எந்தக் கடவுளை மறுக்கிறார்கள்? எந்தக் கடவுள் இருப்பதாக நம்பப்படுகிறதோ அந்தக் கடவுளைத்தான் மறுக்க முடியும். மறுப்பதற்கென்று இன்னொரு கடவுளையா உருவாக்க முடியும். \\\ஏனெனில் நீங்கள் மறுக்கும் கடவுள்களை நான் கடவுளாகவே ஏற்பதில்லை// இப்படியும் குலாம் எழுதியிருக்கின்றார் என்றால், அவர் கூற விரும்புவதன் பொருள் என்ன? ==

  ஒருவர் என்ன கூற விரும்புகிறார் என்பதை அவர் தான் சொல்ல முடியும். நாமாக தீர்மானித்தால் அது நமது சுய தீர்மானிப்பே! சகோ தெளிவற்ற வரிகள் மேற்கண்டவை. ஒருவர் கடவுளை ஏற்கிறார் என்றால் அதற்கான காரணமும், ஏற்கும் கடவுளும் குறித்து சொல்கிறார் என்றால் அதற்கு எதிராக அவர் கூற்றை மறுக்க வேண்டுமானால் அவர் கூறும் கூற்றை பொய்யாக்க வேண்டும். அல்லது அவரது கூற்றில் இவை இவை முரண்பாடானது என நிறுவ வேண்டும். உதாரணத்தியோற்கு நான் கடவுள் என்பவர் / என்பது இப்படி தான் என்று சொன்னால், மறுக்கும் நீங்களோ அதற்கு எதிரான அல்லது அதை பொய்யாக்கும் ஆதார குறியீடுகள் தரவேண்டும் அதாவது இப்படி இருந்தால் கடவுள் இல்லை, இப்படி இருக்கவும் கடவுளால் முடியாது, - ஆக கடவுள் என்று ஒன்று இல்லை என கூற வேண்டும் அஃதில்லாமல் இருக்கிறது என்று நம்பப்படும் ஒன்றை நான் மறுக்கிறென் என்றால் அதுவும் ஒருவிதத்தில் இல்லை என நம்பும் ஒரு எதிர்மறை நம்பிக்கை அவ்வளவே! அந்த நம்பிக்கையை மட்டும் வைத்து கடவுளை இல்லை என கூறினால் ???

  அடுத்து நான் மறுக்கும் கடவுள் என்று சொன்னதன் பொருள்,
  ஆரம்பத்தில் நான் கண்ட இறை நிராகரிப்பாளர் தங்களை நாத்திகவாதிகள் என இந்த சமூகத்தில் அடையாளம் காட்டுவதற்கு மறுத்த கடவுள் என்ன தெரியுமா? தீப்பெட்டி அட்டையிலும், பட்டாசுகளை சுற்றி இருக்கும் தாளிலும் அச்சாகி இருக்கும் உருங்களையும், பூஜை புனஸ்காரங்கள் தேவைப்படும் கடவுள்களையுமே. இதை மறுப்பதற்கு எதற்கு நாத்திக போர்வை, அந்த போர்வை இல்லாமல் நானும் தான் அதை மறுப்பேன்.

  ReplyDelete
 12. == இன்னும் தெளிவாகவே சொல்லிவிடலாம், கடவுளை மறுத்தே ஆகவேண்டும் எனும் அவசியம் கம்யூனிஸ்டுகளுக்கு இல்லை. சமூக ரீதியான போராட்டத்தில் கடவுளின் வடிவம் சுரண்டலை தக்க வைப்பதற்கு பயன்படுகிறது என்பது தான் அதில் முதன்மையான அம்சம், அந்த அடிப்படையில் நின்றுதான் நாங்கள் கடவுளை மறுக்கிறோம். எனவே ‘கடவுள் மறுப்பை’ பிழையற புரிந்து கொள்ளும் கடமையும் நண்பருக்கு உண்டு. ==

  இது தான் கடவுள் மறுப்புக்கு நாத்திக வாதிகளின் குறிப்பாய் கம்யீனிஷ வாதிகளின் பிரதான கருத்தாக இருப்பீன் மிக நன்று! இப்போது கேட்கிறேன் சுரண்டலை ஊக்குவிக்கும் கடவுட்கொள்கையா நான் ஆதரித்து பேசி வருகிறேன். அல்லது அதுதான் உண்மையான கடவுட் கொள்கையின் சாரம்சமா?? சரி ஒருவாதத்திற்கு உங்களோடு உடன் படுகிறேன். இந்த சமூகத்தில் வர்த்தக ரீதியாக வாழும் மக்கள் மத்தியில் சுரண்டலை தடுக்கும் வகையில் கடவுள் கொள்கை அமைந்தால் அப்போது கடவுள் இருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்வீர்களா..?

  இன்னும் பாருங்கள் கடவுள் இல்லையென்று சொல்லக்கூடிய கம்யூனிச நாடுகளில் வர்த்தக ரீதியான மக்களின் மத்தியில் கலவரங்களும், போராட்டங்களும் நடக்கவே இல்லையா? இங்கே பிரச்சனைகளுக்கு என்ன காரணம் சொல்வீர்கள் சகோ! கடவுட்கொள்கையா? அல்லது சுய நலமா? சமூகத்தின் மத்தியில் சுரண்டலை ஆதாரிப்பதற்காக நாங்கள் கடவுளை ஆதாரிக்கவில்லை என்பதை சகோதரர் இன்னும் புரிந்துக்கொள்ள விலையென்பது தான் என் வருத்தம்

  ReplyDelete
 13. == மனிதனின் அறிவு என்பது இதுவரை மனிதகுலம் புலன்களால் புலன்களால் பெற்ற தகவல்களை ஒருங்கிணைத்து பயன்படுத்துவது தான். அறிவியல் என்பது தன்னிடம் இருக்கும் தகவல்களைக் கொண்டு தனக்கு தேவையான புதிரை அவிழ்க்கும் முயற்சி, தொடர் சோதனைகளால் உண்மையை மட்டுமே உறுதிப்படுத்தும் ஒழுங்கு. மனிதனுக்கு ஏற்படும் ஐயங்களை தீர்த்து வைப்பதற்கு இருக்கும் ஒரே உரைகல் அறிவியல் மட்டுமே, வேறொன்று இல்லை. இப்போது குலாம் கூறும் எடுத்துக்காட்டை எடுத்துக் கொள்வோம். \\\எதை நாம் அறிந்திருக்கிறோமோ, அறிகிறோமோ அதை மட்டுமே உண்மை என்கிறோம். மாறாக அறியாத அல்லது புலப்படாத ஒன்றை பொய் என்று கூறிவிட முடியாது/// சரிதான் அதேநேரம் அதை உறுதியாக இருக்கிறது என்றும் கூறிவிட முடியாதே. ஏதாவது வகையில் ஒரு மெய்ப்பித்தல் இருந்தால் மட்டுமே அதை உண்மை என்று ஏற்க முடியும் அல்லவா? ==

  சகோ நான் மேற்கோள் காட்டிய வார்த்தைகளை வைத்தே உங்கள் தரப்பை நியாயப்படுத்த நினைக்கிறீர்கள். மீண்டும் சொல்கிறேன். மனித அறிவு உணர்ந்துக்கொள்ளும் வகையில் அமைந்தால் மட்டுமே அதை உண்மை அல்லது பொய் என்கிறோம். சுமார் 5000 வருடங்களுக்கு முன்னர் நாம் இன்று வைத்திருக்கும் எந்த ஒரு தொழில் நுட்பமும் இல்லை. அதை உருவாக்கும் ஆக்க திறனும் இல்லை. ஆக அன்றைய நாட்களில் இன்றைய நவீன வளர்ச்சிகள் எதுவுமே சாத்தியம் ஆகும் என்பதை உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. ஆக இன்னும் சொல்ல போனால் அவர்களை பொருத்தவரை அன்று இந்த நவீனத்துவ கண்டுப்பிடிப்புகள் நிகழ வாய்ப்பில்லை என்று கூட நூறு சதவீகிதம் நம்பி இருக்கலாம். ஆனால் இன்று எதிர் பாராத நிறைய கண்டுப்பிடிப்புகள்.

  ஆக இதை தான் சொல்கிறேன் காலப்போக்கில் நம் புலன்களுக்கு தென்படும், கட்டுப்படும் ஒன்றீன் மீதே நம் ஆதிக்கத்தை செலுத்தி அதன் வரைவிலக்கணம் ஏற்படுத்த முடியும். ஆனால் 5000 ஆண்டுகளுக்கு முன் அல்ல உலகில் முதல் மனிதன் தோன்றிய காலத்தே கடவுள் என்ற ஒன்றை காணும் எந்த ஒரு வாய்ப்பும் மனிதர்களுக்கு வழங்கப்படவில்லையெனும் போது இன்னும் ஆயிரம் வருடங்கள் ஓடினாலும் இதே கேள்விகளும் பதில்களும் தான் தொடரும்.

  ஆக கடவுளை உறுதி செய்யும் சாதனங்கள் அதை காட்டிலும் சக்தி மிகுந்தாக இருக்கவேண்டும். அப்படி அவற்றால் கடவுளை கண்டறிந்தால் கண்டறியப்பட்ட அது எப்படி கடவுளாக ஏற்க முடியும்?? கடவுளை கண்டறிந்த அதுவல்லவா கடவுளை காட்டிலும் சக்தி மிகுந்ததாக இருக்கும். தயவு செய்து கடவுள் என்று நான் கூறும் மூலத்தை புரிந்துக்கொள்ள முயலுங்கள் சகோ

  ReplyDelete
 14. == கடவுளின் இருப்பு என்பது நம்பிக்கையா? உறுதியானதா? நம்பிக்கையானது என்றால் அதில் கேள்வி கேட்பதற்கு ஒன்றுமில்லை. உறுதியானது என்றால் சான்றாதாரங்களைக் காட்டுங்கள். ஆதாரம் ஒன்றுமில்லை ஆனால் உறுதியானது என்றால் அது போங்காட்டம். ஆமாப்பா நம்பிக்கைதான் என்று தெளிவுபடுத்திவிடுவதில் ஆத்திகவாதிகளுக்கு என்ன சிக்கல்? அப்படிச் செய்தால் மதவாதமே அடிபட்டுப்போகும். அதனால் தான் கேட்காத ஒலியலைகள் தொடக்கம் உதாரணத்துக்கு மேல் உதாரணமாக காட்டிக் கொண்டிருப்பார்கள், உண்மையை ஒருபோதும் பேச மாட்டார்கள். ==

  அதை கேள்வியை தான் இன்னும் டீடெய்லா கேட்கிறேன் அண்ணே., கடவுளின் இருப்பு நம்பிக்கையென்றால் அதை பொய்பிக்கும் அறிவியல் நிருபணம் என்ன?
  அறியலை பொருத்தவரை இல்லாத ஒன்று என்று ஒன்று இல்லை. எங்கே நீங்கள் நிருபணம் தாங்களேன் கடவுள் இல்லையென்று.. கேட்காத ஒலியலைகள் உதாரணே ஆனாலும் அது உண்மை என்பதை எவரும் ஒப்பு கொள்வர். ஆனால் கடவுள் இருக்கிறார் என்பதை மதவாதிகளின் நம்பிக்கையாக நிறுவ முயலும் நீங்கள் கடவுள் இல்லா நிலையில் கேட்கும் பல கேள்விகளுக்கு போங்காட்டம் ஆட கூட வர மாட்டேன் எங்கீறீர்களே அது ஏன் சகோ? பொய் எப்போதும் கைக்கொடுப்பதில்லை சகோ

  ReplyDelete
 15. == ஆன்மீகவாதிகள் எப்போதும் கடவுளை பேரண்டத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக, மனித அறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே காட்டுவார்கள். ஆனால் கடவுள் பேரண்டத்திற்கு அப்பாற்பட்டு, மனித அறிவுக்கு அப்பாற்பட்டு இயங்குகிறாரா? இல்லை. பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடைசிக் கட்ட உயிரினமான மனித மூளையைத் தாண்டி வெறெதிலாவது கடவுள் குறித்த சிந்தனையோ, கற்பனையோ தோன்றியிருக்கிறது என்று எந்த கடவுள் நம்பிக்கையாளராவது நிரூபிக்க முடியுமா? அல்லது இப்பூமியைத் தாண்டி பேரண்டத்தின் வேறெந்த மூலையிலாவது மனிதர்கள் வாழ்கிறார்கள் என்று கூற முடியுமா? ஆக பேரண்டத்தில் வேறெங்குமே வாழாத, பூமியில் தோன்றி வாழ்ந்த பல்கோடி உயிரினங்களில் வெகு அண்மையில் தோன்றிய மனித மனங்களில் மட்டும் உயிர் வாழ்வதாக இவர்கள் கூறும் கற்பனைக் கடவுளுக்கு ஆதாரம் கேட்டால் கேட்காத ஒலியலைகள் தொடக்கம் உதாரணத்துக்கு மேல் உதாரணமாக காட்டிக் கொண்டிருப்பார்கள் என்றால் அதன் பொருள் வெறும் சப்பைக்கட்டு என்பதைத் தவிர வேறு காரணம் இருக்க முடியுமா?==

  சரி மனித மூளையை தவிர வேறந்த உயிரின அறிவிற்கும் கடவுள் குறித்து அறிந்துக்கொள்ளவில்லையென்பதற்கு ஆதாரம் தர முடியுமா சகோ..? அதுமட்டுமில்லை ஒருவேளை நீங்கள் சொல்வதுப்போல வேறந்த அறிவிற்கும் எட்டாத கடவுள் என்ற கொள்கை மனித அறிவுக்கு மட்டும் பிரத்தியேகமாக ஏற்பட காரணமென்ன.. இன்றைய தற்கால போலி சாமியார்களை உதாரணம் காட்டக்கூடாது., நான் கேட்பது கடவுள் என்று கூறப்படும்,
  உங்களை பொருத்தவரை பொய் என்று கூறப்படும் ஓரிறை கொள்கை குறித்து.

  ReplyDelete
 16. == கடவுள் எனும் ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனை அவர்களுக்கு இருந்தது என்பதை விளக்குவது போல் எதுவும் கிடைக்கவில்லை. மாறாக பல்வேறு பகுதிகளில் செய்யப்பட்ட பலவிதமான சடங்குகளின் சாட்சிகள் அப்படி ஒரு சிந்தனை அவர்களுக்குள் இல்லை என்றும், அந்த வழிபாடுகள் இயற்கைக்கு அவர்கள் பயந்து வழிபட்டதையும் உணர்த்துகின்றன.==

  == வரலாறும் அறிவியலும் இப்படி இருக்கும் போது எந்த அடிப்படையில் கடவுளை ஏற்பது? மதவாதிகள் காட்டும் உதாரணங்களின் அடிப்படையிலா? அறிவியல் ஆய்வுகளோ, வரலாற்று படிமங்களோ வேண்டாம். சமூக ரீதியிலாவது கடவுளின் இருப்பை உணர முடியுமா? ==

  இதெல்லாம் உங்கள் சுய புரிதலின் ஒரு அங்கம். மனித இனத்தின் மூலங்கள் ஓரிறை கடவுள் கொள்கையை ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் உள்ளன சகோ. இங்கே எனது கேள்வியை இன்னும் எளிது படுத்தி விட்டீர்கள். உங்களை பொறுத்தவரை கடவுள் என்ற நிலை மனித உயிர்வாழ்தலுக்கு முற்றிலும் அவசியே இல்லாதது அப்படியிருக்க கடவுள் என்ற சிந்தனை மனிதனுக்கு எப்போது ஏன் வந்தது என்று விளக்கினால் சமூகம், வரலாறு குறித்து இன்னும் ஆழமாக செல்லலாம்

  ReplyDelete
 17. == இதோ, சில்லரை வர்த்தகத்தில் 51 நூற்றுமேனிக்கு அன்னிய முதலீட்டை அனுமதித்துள்ளது அரசு. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படப் போவது உறுதி. எங்கே அனைத்து நம்பிக்கையாளர்களும் ஒன்றுகூடி கடவுளை பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். தனியார்மயம், தாராளமயத்திலிருந்து அரசை பின்வாங்கச் செய்துவிட முடியுமா? பின் எந்த அடிப்படையில் கடவுளை ஏற்பது? உதாரணங்கள் மட்டும் உண்மைக்கு போதுமானதில்லையே. இன்னொன்று தெரியுமா திரு குலாம் அவர்களே! உங்களின் கடவுள் வெறு நம்பிக்கையாய் இருந்தால் கூட, அது மூடநம்பிக்கை இல்லை என்பதற்கும் நீங்கள் நிரூபணங்கள் காட்டியாக வேண்டும். ==

  கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவது உறுதி! என்ன சொல்ல வருகிறீர்கள் சகோ மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் கடவுள் இல்லையெங்கிறீர்களா.. நீங்களும் வழக்கம்போல் தான் கடவுள் மறுப்பை நியாயப்படுத்துகிறீர்கள். சரி கடவுள் இல்லையென்று சொல்லும் நீங்கள் அந்த மக்களின் பாதிப்புக்கு என்ன காரணம் சொல்கிறீர்கள் சகோ? உதாரணங்கள் மட்டும் உண்மைக்கு போதுமோ போதாதோ.. அதை நடு நிலை வாசிப்பாளர்கள் தீர்மானிப்பார்கள். நிச்சயமாக சுய ப்ய்ரிதலை உலக உண்மையாக்க நினைக்கும் எந்த எண்ணங்களும் மக்கள் மன்றத்தில் உயிர் பெறாது.

  மூட நம்பிக்கை வளர்ப்பவற்றை கடவுளாக பார்த்து பார்த்து உங்களின் கடவுள் மீதான் கோபம் வரட்டு சிந்தாந்தமாக மாறிவிட்டது தான் என் வருத்தம்.

  கடவுள் ஏற்புக்கு நம்பிக்கை தாண்டி என்னால் பல காரணங்கள் சொல்ல முடியும் இன்ஷா அல்லாஹ் ஆனால் பாருங்கள் நீங்களோ நம்பிக்கை என்ற ஒன்றை மட்டுமே பிரதான வைத்து கடவுள் மறுப்பை ஆய்வு ரீதியான செய்கை என நியாயப்படுத்துகிறீர்கள்.

  உங்கள் உள்ளமும் உண்மையான தேடுதலின் பால செல்ல மீண்டும் பிரார்த்திக்கும்
  உங்கள் சகோதரன்
  குலாம்.

  ReplyDelete
 18. மேற்கண்ட பின்னூட்டங்களுக்கான மறுப்பு நல்லூர் முழக்கத்தில் பதியப்பட்டுள்ளது. தேடலுள்ளவர்கள் காண்க.

  பின்னூட்டங்களா? பிற்போக்கு ஊட்டங்களா?
  http://nallurmuzhakkam.wordpress.com/2012/09/26/gulam-senkodi-2-2/

  ReplyDelete
 19. மேற்கண்ட பின்னூட்டங்களுக்கான மறுப்பு நல்லூர் முழக்கத்தில் பதியப்பட்டுள்ளது. தேடலுள்ளவர்கள் காண்க.

  பின்னூட்டங்களா? பிற்போக்கு ஊட்டங்களா?
  http://nallurmuzhakkam.wordpress.com/2012/09/26/gulam-senkodi-2-2/

  ReplyDelete
 20. நல்லூர் முழக்கம் தளத்திலே மேற்கண்ட மறுப்புரைக்கு விளக்கம் அளிக்க முற்பட்டேன் ஆனால் கமெண்ட் கொடுத்து பப்ளிஷ் செய்தால்

  நீங்கள் Gulam ?

  You are being asked to login because gulamdhasthakir@gmail.com is used by an account you are not logged into now.
  By logging in you'll post the following comment to...

  இப்படி காட்டுகிறது. ஆக மறுப்புரைக்கான விளக்கம் இங்கே .,

  ReplyDelete
 21. அன்பு சகோ செங்கொடி.,

  மீண்டும் ஒரு பதிவிட்டு என் பதிலுக்காக காத்திருக்கிறீர்கள் .நன்று! உங்களுக்கு பதில் தரும் கால அவகாசம் இருக்கின்றது மகிழ்ச்சி., தொடர்கிறேன்.


  இறுதி பத்தியிலிருந்து தொடங்கலாம் என நினைக்கிறேன் உங்கள் நிலைப்பாடை தெளிவாக உணர்(த்து)வதற்கு!

  == நான் தெளிவாக மீண்டும் மீண்டும் கேட்க விரும்புவது இதைத்தான். கடவுள் என்பது நம்பிக்கையா? உறுதியானதா? இந்தக் கேள்விக்கு பதில் கூறுவதிலிருந்து இன்னும் எத்தனை முறை நண்பர் நழுவிச் செல்லப் போகிறார் என்று பார்க்கலாம். ==

  கடவுள் உண்டென்பது இறை ஏற்பாளர்களின் நம்பிக்கையென்பது உங்கள் எண்ணம். ஆக உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக நீங்கள் இருந்தால் கடவுள் இல்லையென்பதை அறிவியல் ரீதியாக மெய்பிக்க சொன்னேன். அறிவியல் ரீதியாக மெய்பிக்க கண்ணெதிரே இல்லை என்ற ஒரு நிலைப்பாடு மட்டும் போதாது என்பதையும் குறிப்பிட்டேன். அத்தோடு ஆய்வு ரீதியாக கடவுளின் இருப்பை மெய்பித்தால் அவர் நம் ஆளுகைக்கு வந்துவிடுவார். ஆக நம் ஆளுகைக்கு உட்படும் ஒன்றை எப்படி நாம் கடவுளாக ஏற்போம் என்பதே என் இப்போதைய கேள்வி?

  ஆக சர்வ வல்லமைப்பெற்ற கடவுளின் இருப்பை எந்த ஆளுகைக்குள்ளும் அகப்படாமல் நாத்திகவாதிகளுக்கு எப்படி நிருபிக்க வேண்டும்? பகுத்தறிவோடு சொன்னால் கடவுளின் இருப்பை குறித்து தொடரலாம்.

  பொதுவான காரண காரியங்களை அலசி ஒன்றை மெய்படுத்தவோ அல்லது பொய் படுத்தவோ அறிவியலை நாம் துணைக்கு அழைக்கிறோம். அதனடிப்படையில் கண்ணுக்கு தெரியாத உணர்வுகளில் ஆட்படாத எதுவும் இல்லை அல்லது சூன்யம் என கூறுவது ஏற்புடையது தான். இருந்தாலும் இதில் நாம் மிக முக்கிய மையம் ஒன்று உள்ளது.

  அதை மையப்படுத்தி நான் வரைந்த ஆக்கத்தில் விளக்கியும் இருக்கிறேன். அறிவியலால் ஒன்றை தெளிவாக வரையறுக்க அதன் மூலத்தை அறிய உதவும் சாதனங்கள் இருந்தால் மட்டுமே சாத்தியம். மாறாக மற்ற சக்திமிகு எந்த உபகரணங்கள் துணை இருந்தாலும் ஒன்றின் மூலத்தை அறிய அவற்றால் முடியாது. உதாரணத்தையும் தெளிவாக சேர்த்தே கொடுத்திருந்தேன் (உண்மையாக்கப்பட்ட உதாரணங்கள் மாறாக புனை கதைகள் அல்ல)
  இன்னும் தெளிவாக இங்கே சொல்கிறேன்., ரிக்டர், வெப்பமானி, காற்றழுத்த மானி, லிட்டர், கிலோ, பைட் போன்றவற்றை அளக்கும் அளவுக்கோல்கள் இருந்தாலும் அவற்றால் ஒருவரின் பயடேட்டாவை தெளிவாக சொல்ல முடியாது. அவர் கூறினாலோ அல்லது அவரது சார்ந்த ஆவண சான்றுகள் இருந்தால் மட்டுமே சாத்தியம்.
  தேட்ஸ் ஆல்!

  ReplyDelete
 22. நான் சொல்ல வருவதும் இதுதான்., எல்லாவற்றையும் மனித அறிவு அறிநது அதை ஆராயும் வழிமுறைகளை கண்டு அவற்றை வரையறுத்தாலும் அவை அவற்றின் எல்லைக்குள் மட்டுமே பிரயாணப்படும். மாறாக மாற்று செய்கைகளின் மீது மனித அறிவின் அறிவியல் ஆதிக்கம் செலுத்த முடியாது. ஆக ஐந்தாம் நிலையில் உள்ள ஒன்றை அதற்கு கீழாக உள்ள நான்கு நிலை கருவிகளால் ஆராய முடியாத போது எண்ணிடலங்காத தன்மைகளை தன்னுள் கொண்ட கடவுள் என்ற பண்பை அளக்கும் அளவுகோல் நம்மிடம் இல்லை. அதற்கு கீழுள்ள நிலைகளில் உள்ள அளவுகோல்கள் நாம் இதுவரை நம்மிடம் உள்ளது. அதை மட்டும் வைத்து எப்படி கடவுள் இல்லையென்ற முடிவுக்கு வர முடியும் சகோ...

  எதுகை மோனையில் தலைப்பை வைத்து ஆக்கங்கள் வடித்தால் அனைத்தும் உண்மையென்றாகி விடாது செங்கொடி,
  உங்கள் எதார்த்த உலக புரிதலை வைத்து எதையும் உண்மைப்படுத்தலாம் என்ற எண்ணம் எனக்குள் உங்கள் குறித்த நடுநிலைபார்வை மீது ஐயங்கொள்ள வைக்கிறது.

  நீங்கள் உலகில் கடவுள் என்று கூறப்படுவதை எதிர்த்து வாதிடுகிறீர்கள் - நானோ உண்மை கடவுளை ஏற்று வாதிடுகிறேன். ஆக உங்களுக்கும் எனக்கும் இடையில் உடன்படும் ஓர் மையப்புள்ளி பொதுவாக கடவுளாக கூறப்படுபவைகளல்ல, நீங்களும் நானும் உண்மையென நம்பும் / மறுக்கும் கடவுள் குறித்தே. அதாவது உலகில் ஒரே கடவுள் அதுவும் உண்மை கடவுள். உண்டா இல்லையா என்பதே., நான் ஏற்கனவே சொன்னது தான் விமர்சிக்கும் எதுவும் அதன் மூலத்தை வைத்து விமர்சிக்கபட வேண்டும். நான் முஸ்லிம் அல்லாஹ் அல்லாத எதுவும் கடவுள் இல்லையென்கிறேன். அதற்கான சாத்தியக்கூறுகள் குர்-ஆனிலும் நபி மொழிகளிலும் மிகைத்திருப்பதாக உணர்கிறேன். என் ஆய்வில் அவை சரியென உடன்படுகிறேன். அதற்கு எதிர்மறையான கருத்துள்ள உங்களோடு வாதிடுகிறேன். இதில் எங்கே நழுவுதலும் வழுதலும் உள்ளது என்று எனக்கு தெரியவில்லை சகோ செங்கொடி.

  ReplyDelete
 23. நீங்கள் என்னோடு விவாதிக்க உடன்படுவதாக இருந்தால் உலகின் ஒரே கடவுளான அல்லாஹ் இல்லையென்பதற்கான சாத்தியக்கூறுகளை எனக்கு தரவேண்டும். ஓரிறைக்குறித்து அறிமுகப்படுத்த படும்போதே அவர் அல்லது அது நம் புலன்களுக்கு கட்டுப்பட மாட்டாது என்றே எனக்கு பிரகடனப்படுத்தும் போது கடவுளை நம் புலன்களில் உணர்த்தப்படவேண்டும் என்றால் எனக்கு நகைப்பு தான் வருகிறது சகோ செங்கொடி.

  ஆய்வு ரீதியாக அல்லது நேரடியாக கடவுளின் இருப்பை உணர்த்துங்கள் என்ற கேள்வி தாண்டி கடவுளை மறுக்க உங்களுக்கு ஏதும் காரணம் சொல்ல முடியுமா? ஏனெனில் கடவுள் குறித்து உங்கள் புரிதல் அப்படி. நான் ஏற்கனவே உங்களிடம் விவாதிக்கும் போது கூறியது தான் கடவுள் இல்லையென்றால் இயற்கை தான் எல்லாவற்றிற்கும் தீர்வென்றால் எங்கேல்லாம் கடவுள் பெயரால் கேள்விகள் முடிச்சிடப்படுகிறதோ அனைத்து கேள்விகளுக்கும் இயற்கை பதில் தந்திருக்க வேண்டும். அதை விளக்கும் வகையிலே "ஓர் அழைப்பு" தலைப்பில் தொடர் கட்டுரைகள்.

  கடவுள் மறுக்க இயற்கை எல்லாவற்றிற்கும் பதில் தந்திருக்க வேண்டும். அதாவது பிக்பாங்க் தியரி வரை முன்னோக்கி செல்லும் உலக அறிவியல் அதற்கு முன் செல்ல வழியின்றி தவிப்பது ஏன்? இன்று நீங்களும் நானும் ஏற்பட்ட மாற்றத்தை பற்றி தான் பேசி கொண்டிருக்கிறோம். என் கேள்வி ஏன் ஏற்பட வேண்டும் என்பதே? உயிர்கள் உயிர் வாழ இப்பூவி மட்டுமே தகுதியானது. அப்படியிருக்க ஏன் இப்பூமீ தாண்டி ஏனைய கோள்கள். இன்னும் சொல்ல போனால் சூரிய, சந்திர கோள்கள் சார்ந்த பிரபஞ்சம் போல் இன்னும் அயிரமாயிரம் பிரபஞ்சங்கள் இருக்கின்றன. அவை படைக்கப்பட்டதன் அல்லது உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன? ஏனைய உயிர்கள் போலில்லாமல் மனித உயிரி மட்டும் பற்பல சிறப்பம்சங்களுடன் காணப்பட காரணம் என்ன? அதிலும் மற்ற எல்லா உயிரினங்களையும் விட பலகீன படைப்பாக இருந்துக்கொண்டு?

  வாழ்வியலை எடுத்துக்கொண்டால் மற்ற உயிரினத்திற்கு இல்லாத ஒழுக்க முறைகள் , உடலுறவில் கட்டுப்பாடு இப்படி மனிதனுக்கு மட்டும் ஏற்பட காரணம் என்ன சகோ? குறைந்த பட்சம் நீதியாவது இந்த உலகில் எல்லோருக்கும் சமமாக வழங்கப்பட இயற்கை ஓர் ஏற்பாட்டை செய்திருக்க வேண்டும் இந்த கேளவியை நான் உங்களிடம் முன்னிருத்திய போது வர்க்கரீதியாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் சமூகத்தில் சூழ் நிலைக்கேற்ப எடுக்கப்படுவதே சட்டமும் நீதியும் என்கிறீர்கள். அது எப்படி சாத்தியம். இந்த இடத்தில் கடவுளால் சம நீதி தரமுடியும் என்கிறேன் நான். இதை மறுக்கும் சாத்தியக்கூறை அல்லவா நீங்கள் தந்திருக்க வேண்டும். நீங்கள் சொல்லும் இயற்கை வழங்கி இருக்க வேண்டும்.

  அத்தோடு நம் வாழ்வியல் முறையையும் எப்படி நாம் தீர்மானித்து கொள்வது? என்ற கேள்விக்கும் சூழ்நிலைகளை பதிலாக்கினால் உலகில் நன்மையென்றும் தீமை என்றும் ஒன்றுமில்லை சகோ.,

  ReplyDelete
 24. கைர்,
  எனது கடைசி பின்னூட்டதில் மனிதர்கள் பாதிக்கபடுவதற்கு இறைவனிடம் பிரார்த்தித்து அவர்களின் பாதிப்பை நிவர்த்தி செய்தால் கடவுளின் இருப்பை தெளிவாய் உணர்த்தலாமே., சபாஷ்! என்ன ஒரு அறிவுப்பூர்வமான கடவுள் மறுப்பு சிந்தனை., உண்மையாகவே உங்கள் அறியாமை எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது சகோ செங்கொடி.,

  சரி நீங்கள் சொல்வதுப்போல கடவுளிடம் பிரார்த்திக்கிறோம். கடவுள் பாதிப்பை நீக்கி விடுகிறார். நாத்திவாதிகளில் கால்வாசி நபர்கள் கடவுளின் இருப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். ஓகே அடுத்து புயல், வெள்ளம், போன்றவை ஏற்பாடாமல் இருக்க பிரார்த்தனை அரைவாசி பேர் கடவுளை ஏற்றுக்கொள்கிறார்கள். விபத்து, ,திருட்டு, கொலை, கொள்ளை போன்ற சமூக கேடுகள் ஏற்படாமல் இருக்க பிரார்த்தனை செய்தால் அதையும் ஏற்கிறார் கடவுள் என வைத்துக்கொள்வோம் அனைத்து நாத்திக வாதிகளும் இறை ஏற்பாளர்களாகி விடுவார்கள்.,

  அப்புறம் எதுக்கு சகோ இந்த உலகம் படைக்கப்பட்டதன் நோக்கம்???? இன்னும் எளிதாக எல்லோரையும் ஆரம்பத்திலே முஸ்லிம்களாக படைத்திருந்தால்., நாத்திகம் என்ற பேச்சிக்கே இடம் இல்லையே சகோ... இன்று நீங்களும் நானும் கடவுளை குறித்து விவாதித்தா கொண்டிருப்போம்? குர்-ஆனை குறித்தல்லவா சிலாகித்து கூறிக்கொண்டிருப்போம்.

  உங்களுக்கு இஸ்லாம் கூறும் இவ்வுலக கொள்கை கோட்பாடுகள் குறித்த அறிவு மிகவும் குறைவென்ற நினைக்க தோன்றுகிறது சகோ. உங்களின் மேற்கண்ட எல்லா நிலை புரிதலுக்கும் ஒவ்வொன்றாக சுமார் 20 ஆக்கத்திற்கும் மேலாக நான் முஸ்லிம் தளத்தில் இட்டிருக்கிறேன் சகோ.
  இந்த ஆக்கத்தை நம் விவாத களத்தின் இரண்டாம் பகுதிக்கு பயன்படுத்த சொல்லியிருக்கின்றேன். பட் எனது நாத்திக கேள்விகள் இருபது ஆக்கங்களின் பிரதிபலித்து தான் கொண்டிருக்கின்றன சகோ. மீண்டும் கடவுள் மறுப்பு குறித்து நுனிப்புல் மேய்வதாகவே நினைக்கிறென்.

  உங்களை பொறுத்தவரை கடவுள் இல்லையென்றால் அதனால் எனக்கு எதுவும் பாதிப்பு இல்லை. ஆனால் கடவுள் இருப்பதால் எல்லோருக்கும் பாதிப்பு என்றால் அதற்கான காரணம் சொல்ல வேண்டும். சொல்வீர்களா? சகோ

  ReplyDelete
 25. வழக்கம் போல மிக வேகமாக மறுப்பு இடுகை. சகோ செங்கொடி சுய தீர்மானிப்புகள் உங்களுக்கு அதிகம் என்பதை தான் இந்த ஆக்கமும் உண்மைப்படுத்துகிறது.

  பை தீ வே.. விவாதங்கள் என்பது கருத்துக்களை பரிமாறும் ஒரு கூடம் அவ்வளவே .இதில் நான் சொல்வது தான் சரியென்று சொல்ல மாட்டேன். ஏனெனில் நான் விவாதத்தின் ஐம்பது சதவீகிதத்தை மட்டுமே பொதுவில் வைக்கிறேன். மீதமுள்ள ஐம்பது சதவீகிதம் நீங்கள் வைக்கிறீர்கள். பார்வையாளர்கள் தீர்மானித்துக்கொள்ளட்டும். யார் நழுவுகிறார்கள் என்று. ஆக தேவையில்லா வார்த்தை பிரகடனங்கள் வேண்டாமென்று நினைக்கிறேன். நீங்கள் கடவுளை ஏற்க வில்லையென்றாலும் அதனால் நாளை உண்மையாக கடவுள் இருந்தால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. மாறாக உங்கள் நிலைப்பட்டில் உறுதியாக இருந்து கடவுள் இருப்பது உண்மையென்றால்.. பதில் தரும் பொறுப்பு உங்களிடமே விட்டு விடுகிறேன்.

  அரைத்த மாவையே அரைப்பதுப்போல உணர்கிறேன் சகோ செங்கொடி உங்களிடம் புதிதாக (கடவுள் மறுப்பு) கேள்விகளை எதிர்ப்பார்க்கிறேன். இதையும் ஒரு பின்னூட்டமாக வழக்கம் போல கருதாமல்... மூன்றாம் ஆக்கத்திற்கு அடிக்கல் இட்டால் அதற்கும் வாழ்த்துகள்! தொடருங்கள்.,

  மாத இறுதி மற்றும் ஏற்கனவே நிலுவையில் என் பணிகள் நிற்கிறது. அதை முடித்தாக வேண்டும். ஆக நீங்கள் மறுக்கும் இறை, நாடினால் வழக்கம்போல் இன்னும் இதுக்குறித்து விரிவாக நான் முஸ்லிம் தளத்தில் விளக்க முற்படுகிறேன்

  உங்கள் சகோதரன்
  குலாம்.

  ReplyDelete
 26. இரண்டாம் தொகுதி பின்னூட்டங்களுக்கான மறுப்பு நல்லூர் முழக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. தேடலுள்ளவர்கள் காண்க.

  அல்வாவை விட அதன் இனிப்பே முதன்மையானது.
  http://nallurmuzhakkam.wordpress.com/2012/09/29/gulam-senkodi-2-3/

  ReplyDelete
  Replies
  1. சகோ செங்கொடி மூன்றாம் ஆக்கம் எழுதி உள்ளார்., அந்த ஆக்கத்தின் கீழாக பின்னூட்டமிட்டேன் இப்படி வருகிறது.

   நீங்கள் Gulam ?
   You are being asked to login because gulamdhasthakir@gmail.com is used by an account you are not logged into now.

   By logging in you'll post the following comment to அல்வாவை விட அதன் இனிப்பே முதன்மையானது:

   ஆக ஒருவேளை அங்கே பின்னூட்டம் வரவில்லையன்றால் .. அதற்காக இங்கே பதிகிறேன்.

   அன்பு சகோ செங்கொடி.,
   கவலைப்படாதீங்க உங்களுக்கு பயந்தெல்லாம் ஓடி ஒளியவில்லை., எனக்கு இரண்டு நாட்களாக ஜூரம். அதனால் ஆன் லைன் வரவில்லை. எனது பெயரில் சுவனப்பிரியன் மற்றும் செல்லத்துரை தளத்திற்கு வைரஸ் லிங்குடன் ஒரு பின்னூட்டம் இட்டதாக சகோதரர் ஒருவர் சொன்னதால் ஆன் லைன் வரவேண்டிய நிலை.

   இன்று உங்கள் பின்னூட்டத்தை வெளியிட்டு இருக்கிறேன். நடு நிலையாளர்கள்?? உங்கள் பார்வை என்பதில் தான் நடு நிலை என்றே ஒன்றில்லையே., சரி விடுங்கள். பார்ப்போர் பார்த்துக்கொள்ளட்டும். வழக்கம்போல இந்த பதிவிலும் உங்களும் ஒரு பக்க சார்புடமை பளிச்சிடுகிறது. அதுவும் என் மீதான குற்றச்சாடுகளை இன்னும் மெருகூட்டி சொல்லி இருக்கிறீர்கள். நன்று! இங்கே உண்மையை தீர்மானிப்பதற்கு உங்களையும் என்னையும் சாராத ஆட்கள் இருந்தால் மட்டுமே சாத்தியம்.

   ஓகே உங்களின் மூன்றாம் ஆக்கத்திற்கு வாழ்த்துகள். வேற என்ன சொல்ல? நான் பக்கபக்கமாய் இடும் பின்னூட்டங்களை பரிசீலிக்காமல் அதற்கு பதில் தருவதாக எண்ணிக்கொண்டு உங்களின் சுய நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் சொன்னால்.. என்னாலும் எல்லாவற்றையும் காப்பி பேஸ்ட் செய்து கூற முடியாது சகோ செங்கொடி.

   அப்புறம் ஒரு விசயம். உங்களின் நோக்கம் "ஓர் அழைப்பு" தலைப்புக்கு பதில் தருவதே. அதென்ன அந்த தலைப்பீன் கீழாக நான் சில கேள்விகளை முன்வைத்தால் உங்கள் அறியாமை ஸாரி., உங்கள் அறியும் ஆமை பதில் தராமல் அந்த வட்டத்திற்குள் வராமல் வெளியே சுற்ற நினைக்கிறது.

   எனது அடிப்படை கேள்விகளுக்கு இன்னும் நீங்கள் பதில் தரவில்லை என்பதை முதல் இரண்டு ஆக்கத்தின் பின்னூட்டத்தில் பார்த்தால் புரியும். வேண்டுமானால் பட்டியல் தருகிறேன். அதை இன்னும் விவரித்து தான் "ஓர் அழைப்பு" தலைப்பின் கீழ் ஆக்கங்கள் ஆக நீங்கள் பதில் தருவதாக இருந்தால் அந்த ஆக்கங்களையும் உள்ளடக்கியதாக தான் இருக்க வேண்டும். அதை விடுத்து நான்காம் ஆக்கத்திற்கு இதையும் உங்கள் சுய தீர்மானிப்புக்கு ஒரு பகடையாய் வைத்தால் ஸாரி நான் உங்க ஆட்டத்திற்கு வரல.,

   அது சரி சகோ செங்கொடி எனக்கும் ரொம்ப போர் அடிக்குது. ஏனெனில் கருத்து பரிமாற்றம் அல்லது விவாதங்கள் என்பது வேறு. தனது செய்கை தான் உண்மையானது என்பதை பொதுவில் சுய தீர்மானிப்பில் முடிவெடுப்பது என்பது வேறு. அதை உங்கள் எழுத்தில் அதிகம் காண்கிறென்.அதுவுமில்லாமல் என்னை வெறுப்பேதுவதாக நினைத்து நகைச்சுவை எனும் பெயரில் உங்கள் எழுத்துக்களை வீணடித்திட வேண்டாம். சரி எப்போதுமே நாம் சொல்வது ஒன்று தான் எந்த ஒன்றை தவறேன்று சொல்கிறோமோ அதற்கு மாற்றமாக எதை உண்மையெங்கிறோமோ அதை விளக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ் உங்களை பொறுத்தவரை கடவுள் இல்லையென்றால் குறைந்த பட்சம் உங்கள் கொள்கை அல்லது கடவுளில்லா நிலையில் எப்படி நம் வாழ்வை அமைத்துக்கொள்வது என்று சொல்வீர்களா..?

   இன்ஷா அல்லாஹ் அவ்வாறு ஆக்கம் வரைந்து எனக்கு மெயிலிடுங்கள் கேள்விகளோடு உங்களை சந்திக்கிறேன். வர தாமதமானால் பெருமையாக சொல்லிக்கொள்ளுங்கள் குலாம் ஓடி விட்டாரென்று. ஏனெனில் என்னுடைய இலக்கு செங்கொடி மாத்திரம் அல்ல ஒட்டுமொத்த நாத்திக சிந்தனையை...

   உங்கள் சகோதரன்
   குலாம்

   Delete
  2. //குறைந்த பட்சம் உங்கள் கொள்கை அல்லது கடவுளில்லா நிலையில் எப்படி நம் வாழ்வை அமைத்துக்கொள்வது என்று சொல்வீர்களா..?///
   இது போன்று தலைப்புகளிலே செங்கொடியை விவாதத்துக்கு அழையுங்கள் .

   கடவுளை காட்டு என்று குழந்தை கூட கேட்கும் .அதுபோலவே செங்கொடி கேட்டுக் கொண்டு நான் விவாதத்தில் வெற்றி பெற்றேன் என்று பெருமை அடிப்பது வழக்கம் .

   Delete
 27. மேற்கண்ட பின்னூட்டத்திற்கான மறுப்பும் நல்லூர் முழக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இஸ்லாமிய பரப்புரைப் பதிவர்களே வருக.

  ஓடி ஒழியும் ஓர் இஸ்லாமிய பதிவர் அல்லது அனைத்து இஸ்லாமிய பரப்புரை பதிவர்களுக்கும் ஒரு சவால்
  http://nallurmuzhakkam.wordpress.com/2012/10/04/gulam-senkodi-2-4/

  ReplyDelete
 28. சற்றுமுன் செங்கொடிக்கு இட்ட மெயிலில்..
  G u l a m gulamdhasthakir@gmail.com
  11:43 PM (0 minutes ago)

  to செங்கொடி
  சகோ செங்கொடி நான் இடும் பின்னூட்டம் அனைத்திற்கும் இப்படி தான் வருகிறது அதற்கான ஸ்கீன்ஸ்டார்ட் எடுத்து வைத்து என்னை மெய்பிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மாறாக நான் சொல்வது பொய்யில்லை என்பதற்காக தான் இந்த மெயிலிடுகை.

  வார்த்தைகளை கவனித்து பேசுங்கள் என்பது மட்டுமே என் வேண்டுகோள்

  அந்த மெயிலுடன் எனது தற்போதைய ஸ்கீன் ஸ்டார்டையும் இணைத்து அனுப்பியுள்ளேன்.

  அவரது தளத்தில் தற்போது இட்ட பின்னூட்டத்திற்கும் இப்படி தான் வருகிறது

  நீங்கள் Gulam ?

  You are being asked to login because gulamdhasthakir@gmail.com is used by an account you are not logged into now.

  By logging in you'll post the following comment to ஓடி ஒழியும் ஓர் இஸ்லாமிய பரப்புரை பதிவர் ‘அல்லது’ அனைத்து இஸ்லாமிய பரப்புரை பதிவர்களுக்கும் ஒரு சவால்:
  அண்ணே, செங்கொடி., ரொம்பவும் பயம் காட்டாதீங்கண்ணே,.

  சுற்றி வளைத்து பேச ஒன்றுமில்லை., நீங்கள் சவுதி அரேபியாவில் மதம் சாராத குறிப்பாய் இஸ்லாமியன் என்ற அடையாளம் சாராத நாத்திகவாதியாக தான் அச்சமுகத்தில் தான் வேலை செய்து வருகிறார்களா? அதற்கு ஆதாரம் தர முடியுமா?

  ஏன் இங்கே மட்டும் பொய்யான பரப்புரை. சவுதியில் இருந்தால் உங்கள் அட்ரஸ் கொடுங்கள் நேரடியாக விவாதிக்க ஏற்பாடு செய்கிறேன் இன்ஷா அல்லாஹ் அல்லது இந்தியாவில் இருந்தால் விவாதத்திற்கு வர தயாரா…?

  இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கண்ணே.,

  எவருக்கும் ஸாரி., எவனுக்கும் ஓடி ஒளியும் எண்ணமும், பழக்கமும எனக்கு இல்லை. கவனித்து பேச கற்றுக்கொள்ளுங்கள்

  WordPress.com / Gravatar.com credentials can be used.

  ReplyDelete
 29. மேற்கண்ட பின்னூட்டத்திற்கான மறுப்பும், விளக்கமும் நல்லூர் முழக்கம் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. தேடலுள்ளவர்கள் காண்க.

  கவுண்டமணியை விட சூப்பரா நடிக்கிறீங்க தம்பி நீங்க
  http://nallurmuzhakkam.wordpress.com/2012/10/06/gulam-senkodi-2-5/

  ReplyDelete
 30. நடந்து கொண்டிருக்கும் இந்த விவாதத்தின் இறுதிப் பகுதி நல்லூர் முழக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேடலுள்ளவர்கள் காண்க.

  ஓர் இஸ்லாமிய பரப்புரை பதிவரின் பொய்யில் உறையும் கள்ளமௌனம்
  http://nallurmuzhakkam.wordpress.com/2012/10/10/gulam-senkodi-2-6/

  ReplyDelete
 31. சகோதருக்கு அங்கே விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது

  ReplyDelete
 32. குலாம் அளித்த விளக்கத்திற்கு மறுப்பு விள்க்கமும் நல்லூர் முழக்கம் தளத்தில் அளிக்கப்பட்டுள்ளது. தேடலுடையவர்கள் காண்க.

  நீங்கள் தூங்கவில்லை என நிரூபிக்க இமைகளை விரித்துப் பிடிக்க வேண்டுமோ
  http://nallurmuzhakkam.wordpress.com/2012/10/10/gulam-senkodi-2-6/#comment-665

  ReplyDelete
 33. One who proposes should bear the burden of proof. கருத்தை முன்வைப்பவரருக்குதான் நிரூபிக்க வேண்டிய பொறுப்பும் உண்டு. நீரூபிக்காத ஒன்றை மறுக்கத் தேவையில்லை.அல்லாவின் இருப்பு நிரூபிக்கப்படவில்லை.

  ReplyDelete
 34. அன்பு சகோ Dr.Anburaj


  குட். கடவுளின் இருப்பை எப்படி நிருபிக்க வேண்டும் ? இதுதானே என் கேள்வி. கடவுள் குறித்த இங்குள்ள ஏனைய ஆக்கங்களையும் படித்து விட்டு பதில் தாருங்கள் இன்ஷா அல்லாஹ் தொடரலாம்...

  ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்