"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Monday, August 23, 2010

உலகின் இறுதி நாள்!

                                               ஓரிறையின் நற்பெயரால்
     உலகம் ஒரு நாள் அழியும் என்பது இஸ்லாம் முன்மொழியும் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்று!இன்று உலகம் சந்திக்கும் அபாயங்களை பார்த்து இதை இஸ்லாம் முன் மொழியவில்லை மாறாக உலகம் தோன்றிய காலத்திலிருந்தே இறைவன் புறத்திலிருந்து அனுப்பட்ட அனைத்து இறைத்தூதுவர்களும் மக்கள் மத்தியில் "உலக அழிவு"பற்றி எச்சரிக்காமல் இல்லை.

     இறைப்புறத்திலிருந்து ஏனைய இறைத்தூதுவர்கள் மூலம் இதுக்குறித்து அறிவிக்கப்பட்டிருந்தாலும் இறுதி வேதம் மூலமும் இறுதித்தூதுவர் மூலமும் நாம் அதிகமாக அறியலாம் அதற்கு முன்பாக.,
ஏன் உலகம் அழியா வேண்டும்..?

  நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து நலமுடன் வாழ இந்த உலகம் நீலையாக இருக்க வேண்டியது அவசியம் தானே... நடு நிலையோடு ஒப்பு நோக்கும் எவருக்கும் இந்த எண்ணம் எழத்தான் செய்யும்.அதற்கு முன்பு இந்த உலகம் அழியாமல் நீடித்து நிலைத்திருந்தால் இது மட்டுமா சாத்தியம்?

   நல்ல முறையில் செயல்களை புரிவோர்கள் தொடர்ந்து செயலாற்றி உலகிற்கு நன்மை பயக்குவது போல் தவறுகள் புரியும் தீயவர்கள் தொடர்ந்து இவ்வுலகத்தில் தீமையே செயல் படுத்தி வருவார்கள் என்பதையும் யாராலும் மறுக்க முடியாது மேலும் எந்த ஒரு தொடர்ந்து நடைபெறும் செயலும் ஒரு முடிவுக்கு வந்தே ஆக வேண்டும் என்பதே அறிவுடையோர் எவரும் ஏற்கும் பொதுவான வாதம் ஆகும்.அந்த அடிப்படையில் லாஜிக் என்ற பார்வையிலும் உலக அழிவு என்பது சாத்தியமே!

       மேலும் நாம் அன்றாட வாழ்வில் பார்க்கும் அனைத்து உயிருள்ள பொருட்களும் சாதரண ஒரு செல் உயிரியிலிருந்து, ஊர்வன, கால் நடைகள், பறப்பன முதலிய மனிதன் வரை ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே உயிரோடிருப்பதை நாம் கண்கூடாக காண்கிறோம்.

    இருப்பினும் அவைகளுக்கு வழங்கப்படும் சாரசரி ஆயுளுக்கு முன்பாகவோ அல்லது பின்போ நிலையான கால கணிப்பின்றி அவைகள் மரணமடைவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.இதில் நாம் ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும்,

      எந்த உயிரினமும் எத்தகையே சிறப்பை தம் வாழ் நாளில் பெற்றிருப்பினும் அவை வாழும் தம் காலத்தை சற்று அதிகமாக்க தான் அவை பயன்படுமே தவிர தனது இறப்பை இல்லாமல் ஆக்க முடியாது., இதற்கு படைப்பினங்களின் உச்சமாக இருக்கும் மனிதன் உட்பட சாட்சியாக இருக்கிறான்.,

     இன்னும் சொல்லப்போனால் ஏனைய உயிர்கள் அவை பெற்ற திறன், உணவு, கால சூழல் மற்றும் அறிவின் சதவீகித அளவிற்கு தம் வாழ்க்கையே அமைத்து வாழும் கால சாரசரியே அனைத்தையும் ஒருங்கே மிக நுட்பமாக, தெளிவாக, கட்டமைப்புடன் பெற்ற மனிதனின் ஆயுள் சாரசரியுடன் ஒப்பிடும் போது மனித வாழ்வு மிகவும் சொற்பமே!

    இதற்கு உயிரின தொடக்கம் ஒரு உயிரியின் மூலமே நடைப்பெற்றது என கூறும் பரிணாமம் இவ்வாறு மனித ஆயுள் மனித சிறப்பியல்புகளை விட பின் தங்கிய ஏனைய உயிரின சாரசரியோடு குறைவாக இருக்க காரணம் கூறுமா....?

   அதுப்போலவே கோடிக்கணக்கான ஆண்டுகள் தொடந்து இயங்கிவரும் இவ்வுலக செயலாக்கமும் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும் என்பதும் மேற்கூறிய தர்க்க ரீதியாக வாதத்தால் உண்மையாகிறது.

     அறிவியல் ரீதியாக பார்த்தாலும் கூட உலக அழிவு என்பது ஏற்படக்கூடியதே., நாம் உலகமெங்கும் பார்க்கும் இயற்கைச்சீற்றங்களான நில நடுக்கம் பூகம்பமும் போன்றவைகளும் சுனாமி போன்ற கடல் கொந்தளிப்புகளும் எரிமலை சீற்றங்களும் பனிமலை உருகுதலும் வெப்பமயமாகுதலும் மற்றும் பேரிடர்பாடுகளும் ஏற்படுத்திய தாக்கத்தைப்பற்றி குறிப்பிடும் போது புவி தன் சமநிலையில் இருந்து தளர்ந்துப் போக வாய்ப்புள்ளது.

  அதனால், எண்ணில்லா மாற்றங்களை நாம் எதிர் நோக்க நேரிடலாம்.எனவும் புவியியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள் பூமியில் நாள்தோறும் ஏற்படும் இத்தகையே மாற்றங்கள் உலகம் ஒரு சமச்சீர் நிலையிலிருந்து மாறி போகிகொண்டிருப்பதை தான் காட்டுகிறது

    லண்டனிலுள்ள ‘ஆன் யு.சி.எல்., ஹசார்ட் ஆய்வு மைய’த்தின் பில் மெக் கைர் என்ற ஆராய்ச்சியாளர் பருவநிலை மாற்றத்தால் பூமியில் ஏற்படும் பேரழிவுகள் குறித்து ஆய்வு செய்கிறார்.
   இதுபற்றி அவர் கூறியபோது பருவநிலை மாற்றம் இனி பேரழிவுகளை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நிகழக் கூடியவை சில நூற்றாண்டுகளிலேயே நிகழ்ந்து விடும். இதற்காக, பருவநிலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பது கூட கட்டாயம் இல்லை. சிறிய அளவில் ஏற்படும் மாற்றம் கூட பேரழிவுகளை உருவாக்கும்.

      கிரீன்லாந்து, அண்டார்டிகா போன்ற இடங்களில் பல கிலோ மீற்றர்களுக்குப் பரவி கிடக்கும் ஐஸ் மலைகள் உருகுவதால், பூமியின் மீதுள்ள அடுக்குகள் தம் எடையை இழக்கும். அதனால் நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக ஏற்படும். தைவானில் சமீபத்தில் திடீரென குறைந்த காற்றழுத்தத்தால் சூறாவளி ஏற்பட்டது. இந்தச் சூறாவளிதான் நிலநடுக்கத்தையும் உருவாக்கியது.

    இதுபோல சிறிய மாற்றங்கள் பருவநிலையில் ஏற்பட்டால் கூட எரிமலை சீற்றம், நிலச்சரிவு போன்றவை அடிக்கடி நிகழும். வெப்பம் அதிகரிப்பதால், மலைப் பகுதிகளிலுள்ள ஐஸ் ஏரிகள் உடைப்பெடுத்து திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அதோடு நிலச்சரிவும் நடக்கும். இவ்வாறு மெக் கைர் தெரிவித்தார்
நன்றி:http://www.tamiluk.net/

         இவ்வாறு இயற்கையான சீற்றங்கள் மட்டுமில்லாது உலகநாடுகளும் தங்களுக்குள் போரின் மூலமும் தங்களை தாங்களே அழித்துக்கொள்ள அனைத்து முயற்சிகளும் எடுத்து வருகின்றன ஆக இயற்கைச்சீற்றங்களும் சுயநலம் கொண்ட மனித எண்ணங்களும் உலகை அழிவு பாதையின் பால் நோக்கியே அழைத்து செல்கின்றன என்பது அறியப்பட்ட உண்மை

    இறுதியாக, உலக அழிவு குறித்து இறுதி வேதம் இயம்புவதை கேளுங்கள்

இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் -  (69:14)
அந்த நாளில் தாம் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும்.  (69:15)
வானமும் பிளந்து, அன்னாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து விடும்.  (69:16)
வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்-  (70:8)
இன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்)-  (70:9)
இன்னும், நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது-  (77:8)
மேலும், வானம் பிளக்கப்படும் போது-  (77:9)
அன்றியும், மலைகள் (தூசிகளைப் போல்) பறக்கடிக்கப்படும்போது-  (77:10)

  நம்புவோர் உலக அழிவை எதிர் பார்த்திருங்கள் அஃது நம்பாதோர் அதற்காக காத்திருங்கள்

          நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும்.  (77:7)
              
                                          அல்லாஹ் மிக்க அறிந்தவன்


3 comments:

 1. நம்புவோர் உலக அழிவை எதிர் பார்த்திருங்கள் அஃது நம்பாதோர் அதற்காக காத்திருங்கள்......
  நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும். (77:7)..............
  அஸ்ஸலாமு அழைக்கும்.  இறுதி

  நாளை பற்றி குரான்
  கூறும் செய்திகளை
  மிக தெளிவாக விளக்கியதற்கு naari...... sagodarar gulam......

  ReplyDelete
 2. இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் - (69:14)
  அந்த நாளில் தாம் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும். (69:15)
  வானமும் பிளந்து, அன்னாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து விடும். (69:16)
  வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்- (70:8)
  இன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்)- (70:9)
  இன்னும், நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது- (77:8)
  மேலும், வானம் பிளக்கப்படும் போது- (77:9)
  அன்றியும், மலைகள் (தூசிகளைப் போல்) பறக்கடிக்கப்படும்போது- (77:10)

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
  @ SADAMFIVE

  பொருத்தமான இறை வசனங்களை மேற்கோள் காட்டி - வருகை தந்ததற்கு நன்றி

  ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

  ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்