"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Saturday, April 23, 2011

கடவுளும்- நாமும்


                                                   ஓரிறையின் நற்பெயரால்
கடவுளோடு தொடர்பு பொதுவாக மக்களுக்கு இரண்டு விதத்தில் இருக்கிறது
1.நாத்திக சிந்தனை
கடவுள் Vs நாம்
2.ஆத்திக சிந்தனை
கடவுளுக்காக நாம்


   இதில் முதலாவது சிந்தனை முற்றிலும் கடவுளை மறுக்க அனைத்து வழிகளையும் ஆராய்கிறது., அது கடவுள் மறுப்பாளர்களின் எதிர்ப்பாளர்களால் அவ்வபோது மறுக்கப்படுகிறது., எனினும் இது தர்க்க ரீதியான வெற்றியே தான் கடவுளை ஆதரிப்பவர்களுக்கு கொடுக்குமே தவிர நாத்திகவாதிகளின் மனதில் பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்தாது.,

    நாத்திக சிந்தனை அடியோடு ஒழிய வேண்டுமானால் அதற்கு எதிராக இருக்கும் ஆத்திக சிந்தனை முழு அளவில் வெளிபட பெற வேண்டும். ஆதாவது இறைவனை பின்பற்றுவோரது வாழ்வியல் ரீதியான வழிமுறைகள் மிக சரியாக, எப்போதும் நிலையாக இருக்கவேண்டும்.
 எனினும் ஆத்திக சிந்தனையென வரும்போது இரண்டு விதத்தில் வித்தியாசப்படுகிறது.


1.அனைத்தும் கடவுள்
2.அனைத்தும் கடவுளுடையது


  முதாலாவது, ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் என்ற அடிப்படையில் கடவுளை ஏற்பது -இது இஸ்லாம் தவிர ஏனைய அனைத்து மதங்களும் பின்பற்றும் வழிமுறை,
இரண்டாவது, ஒரே இறைவனே இவ்வுலகம் அனைத்தையும் படைத்து அதில் உள்ள யாவற்றையும் படைத்தாக ஏற்றுக்கொள்வது இஸ்லாம் கூறும் கடவுட்கொள்கை.

ஆக., நாத்திக சிந்தனையின் பிரதான கேள்விகளுக்கு "அனைத்தும் கடவுள்" என்ற ஆத்திக கொள்கையால் பதில் தர இயலாது.ஆக அதுவல்லாத "இஸ்லாம் கூறும் கடவுட்கோட்பாடுகளாலும் அதன் கூறும் வாழ்வியல் வழிமுறைகளாலும் மட்டுமே நாத்திக சிந்தனைக்கு போதுமான பதில் தர முடியும். எனினும் கோட்பாடுகளை முன்னிருத்தி போதுமான பதில் தரப்படினும் அடுத்து அவர்களிடம் முளைக்கும் கேள்வி அத்தகைய கோட்பாடுகளின் (அதன்)படி எத்தனை இஸ்லாமியர்கள் நடக்கிறார்கள்...? என்பதே..

இக்கேள்விக்கு பதில் தரும் முகமே இக்கட்டுரையின் நோக்கம்....
  
  அல்லாஹ் தன் திருமறையில் மனித வாழ்விற்கு தேவையான அனைத்து ஏவல்கள்- விலக்கல்களை மிக தெளிவாக இந்த மனித சமுகத்திற்கு ஏற்படுத்தி அதனை இறுதி நாள் வரை வரக்கூடிய மக்கள் யாவரும் பின்பற்ற சாத்தியமாக அச்செயல்களை எடுத்து செயல்படுத்துவதற்கு மனிதர்களுடையே ஓர் தூதரை ஏற்படுத்தி தந்தான். அந்த தூதரும் மிக சரியாக தெளிவாக அனைத்து செயல் முறைகளையும் செய்ததோடு அதனை செய்வதற்கும் ஏதுவாக ஏனைய விஷயங்களையும் இந்த மனித சமுகத்திர்கு தெளிவாக வலியுறுத்தினார்கள்.,

    ஆக இறை கட்டளைகளை (இறைவனின் நாட்டப்படி) எல்லோராலும் எல்லா காலக்கட்டங்களிலும் பின்பற்ற முடியும் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாயிலாக நாம் எளிதாக அறிந்திடலாம். அவர்கள் பிரத்தியேக பண்புகளுடன் இறைவன் பால் அனுப்பட்ட தூதராக இருந்தாலும் அவர்கள் மக்களிடையே மக்களாக வாழ்ந்ததை கண்டுதான் அச்சமுக இறை நிராகரிப்பாளர்கள்

"நீர் உண்மையாளரில் ஒருவராக இருப்பின் நீர் எங்களிடத்தில் மலக்குகளைக் கொண்டு வந்திருக்க வேண்டாமா?" (என்றும் கூறுகின்றனர்.) (15:07)


மேலும் அவர்கள் கூறுகிறார்கள்;
"இந்த ரஸூலுக்கு என்ன? இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார் கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக, ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப்பட்டிருக்க வேண்டாமா?" (25:07)


இதற்கு பதில் தரும் விதமாக இறைவன்
(நபியே!) நீர் சொல்வீராக "நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது...(18:110)

         ஆக மனிதர்கள் யாவரும் எக்காலத்திற்கும் பின்பற்ற தகுந்த வாழ்வியல் நெறிமுறைகள் எண்ணிடங்காமல் நபிகள் நாயகம் மூலம் மிக தெளிவாக நம்மை வந்தடைகிறது எனவே தான் வல்லோன் அல்லாஹ் தன் வான்மறையில் அன்னாரைக்குறித்து

  அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (33:21)


 ஆக நம்மால் அந்த வழிமுறைகளில் எந்த ஒன்றையும் பின்பற்ற முடியாது என நம் வாழ்வின் எந்த சூழ்நிலையிலும் சொல்ல முடியாது. அஃது சொன்னால் அது நமது சுய நலத்திற்காக ஏற்படுத்திய திரிபு வாதம் அல்லது அல்லாஹ் மீது பயமின்மை.
நம்முடைய வாழ்வு தற்காலத்தில் எந்த அளவிற்கு அமைந்திருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம் பாருங்கள்...

அல்லாஹ் தொழுகை குறித்து கூறும் போது
... நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும்... (29:45)


ஆக தொழுகையே சரிவர பேணும்போது அது வீணான தீயச்செயல்கள் மற்றும் மானக்கேடானவற்றை விட்டும் நம்மை காக்கும் என்பது குர்-ஆன் அளிக்கும் வாக்குறுதி. எனினும் தொழுவோரில் பலர் வீணான காரியங்கள் செய்கிறார்கள் என்பதும் உண்மை. எனும்போது குர்-ஆன் பொய்யுரைக்கிறதா? இல்லவே இல்லை... தொழும் அத்தொழுகை ஒரு முழுமையான தொழுகையாக அவர்களிடத்தில் இல்லை... ஏதோ கடமைக்காக தொழுகிறோம் என்பதே உண்மை.

      அதைப்போலவே நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற ஏனைய நல்லறங்கள் செய்து கொண்டும் புகைப்பிடித்தல், குடி, பொய், புறம் பேசுதல், அடுத்தவர்களின் உரிமையே பறிப்பது, வாக்குறுதி நிறைவேற்றாமை, அமானிதங்களை அபகரிப்பது,  வட்டி வாங்குவது போன்ற இழி செயல்கள் புரிவது.,
 
   இதையெல்லாம் புரிவது மார்க்கத்தை சரிவர புரிந்துகொள்ளா முஸ்லிம்கள் என்ற போதிலும் இதைப்போன்ற செயல்களை பார்ப்போருக்கு இஸ்லாம் மீதே காழ்புணர்ச்சி ஏற்படுகிறது என்பது உண்மை.ஆக வெறுமனே., பெயர் தாங்கி முஸ்லிம்களாக வாழாமல் அஃது அல்லாஹ்வும் அவன் தூதரும் பொருந்திக்கொளும் விதம் இவ்வுலக வாழ்வை அமைத்து கொண்டு ஏனையோருக்கும் ஒரு முன்மாதிரி சமுகமாக வாழ்வது நம் அனைவர் மீதும் தார்மீக கடமையாக இருக்கிறது. ஏனெனில்

அல்லாஹ் தன் வான் மறையில்
நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? (2:44)
  என பெயர் தாங்கி முஸ்லிம்களை சாடுகிறான்.

  பொதுவாக, எதிரில் வரையப்பட்டிருக்கும் ஒரு கோட்டினை நாம் சிறிதாக்க வேண்டுமெனில் நமது கோட்டை அதைக்காட்டிலும் சற்று பெரிதாக வரைந்தாலே போதும்.. அக்கோடு தானாகவே சிறிதாகி விடும்.
 
      அதுப்போல நாத்திகம் என்பதை இல்லாமல் ஆக்க தூய இஸ்லாமிய சிந்தனைகளை இவ்வுலகத்திற்கு எடுத்து இயம்புவதோடு மட்டுமில்லாமல் செயல் முறை ரீதியாகவும் உணர்த்தினாலே போதும். நாத்திகம் இஸ்லாத்தின் காலடியில் நசுங்கி போகும்.

  அல்லாஹ் அத்தகைய நல்ல பாக்கியத்தை உங்களுக்கும் எனக்கும் தந்தருள்வானாக...
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள். (03:102)
                                                                    அல்லாஹ் மிக்க அறிந்தவன்

13 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    //நாத்திக சிந்தனை அடியோடு ஒழிய வேண்டுமானால் அதற்கு எதிராக இருக்கும் ஆத்திக சிந்தனை முழு அளவில் வெளிபட பெற வேண்டும். ஆதாவது இறைவனை பின்பற்றுவோரது வாழ்வியல் ரீதியான வழிமுறைகள் மிக சரியாக, எப்போதும் நிலையாக இருக்கவேண்டும்.//

    சகோ சரியான சொல் சரியான சிந்தனை

    நன்றி சகோ

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    சகோ.குலாம்,
    மிகவும் தெளிவாக அழகிய முறையில் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்து எழுதி குர்ஆன் வசன சான்றுகளுடன் நிறுவி உள்ளமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் பாராட்டுக்கள் உரித்தாகுக.

    ReplyDelete
  3. வ அலைக்கும் ஸலாம் வரஹ்
    @சகோதரர் ஹைதர் அலி
    அவர்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
    @சகோதரர் முஹம்மது ஆஷிக்
    அவர்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
    பெயர் தாங்கி முஸ்லிம்களாக வாழாமல் அஃது அல்லாஹ்வும் அவன் தூதரும் பொருந்திக்கொளும் விதம் இவ்வுலக வாழ்வை அமைத்து கொண்டு ஏனையோருக்கும் ஒரு முன்மாதிரி சமுகமாக வாழ்வது நம் அனைவர் மீதும் தார்மீக கடமையாக இருக்கிறது.
    ஏனெனில் அல்லாஹ் தன் திருமறையில்
    மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;. இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்;. வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் -((3:110))
    அத்தகைய நல்ல பாக்கியத்தை நம் யாபேர்களுக்கும் அல்லாஹ் வழங்கியருள்வானாக!
    ஜஸாகல்லாஹ் கைரன்

    ReplyDelete
  4. நம் அனைவரின் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
    சகோதரர் தமிழன் (?) உங்களிடமிருந்து வழக்கம்போல் நாகரிமில்லாத ஒரு பின்னூட்டம்., மொத்தத்தில் உங்கள் பின்னூட்டம், கருத்துக்களை வைத்து பார்க்கும்போது இஸ்லாம் குறித்த சந்தேகமோ,அல்லது விளக்கம் வேண்டியோ இங்கு நீங்கள் வர (எழுத)வில்லை என்பது தெளிவு! காழ்ப்புணர்ச்சியில் உருவான உங்கள் வன்முறை வார்த்தைகளே அதற்கு சாட்சி.,
    சகோதரர் நான் மீண்டும் மீண்டும் கேட்பது இதைத்தான்.,
    (1).இஸ்லாத்தை விமர்சிப்பதாக இருந்தால் குர்-ஆன்,ஹதிஸ் தொகுப்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து உங்கள் விமர்சனம் / ஐயங்களை கேள்விகளாக எழுப்புங்கள் இன்ஷா அல்லாஹ் பதில் தர முயற்சிக்கிறேன் (அல்லது அறிந்தவர்கள் பதில்களுடன் உங்களை சந்திக்கிறேன்)
    சரி அதுவும் வேண்டாம்... உங்களை பொறுத்தவரை இஸ்லாம் ஒரு ஆணாதிக்க மதம், இங்கு அனைத்து சட்டங்களும் ஆண்-பெண் இருபாலாருக்கும் சம நீதியற்றது என நீங்கள் கருதினால் இஸ்லாம் வேண்டாம் என்றாலும் நான் உங்களுடன் உடன் படுகிறேன் ஆனால்,
    (2).நீங்கள் கொண்ட மதம் (அல்லது மதசார்பற்ற கொள்கை@ வேறு எந்த சித்தாந்த கொள்கையாக இருக்கட்டும் அது) குறித்து விளக்கி கூறுங்கள்
    அது தொடர்பாக நான் உங்களுடன் விவாதிக்க தயார் அதுவும் கண்ணியமான முறையில்..! கவலைப்படாதீர்கள்., ஏனெனில் உங்களைப்போல (அந்தளவிற்கு) மோசமாக பேச இன்னும் நான் கற்றுக்கொள்ளவில்லை.,
    மேற்கண்ட இரண்டு வழிமுறைகளே ஆரோக்கிய விவாத்திற்கான அழகிய வழி,ஆக இந்த இரண்டில் ஒன்றை தேர்ந்தேடுங்கள் அஃதில்லாமல் மீண்டும் கேவலமான பின்னூட்டங்களுடன் தாங்கள் வந்தால் அதை கண்டிப்பாக என் தளத்தில் அனுமதிக்க மாட்டேன்., அதுக்குறித்து விவாதிக்கவும் மாட்டேன்
    நீங்கள் உண்மையான தமிழன் என்றே நம்புகிறேன்... வினா அல்லது விடையோடு வாருங்கள் நானும் தமிழன் தான் காத்திருக்கிறேன் பொறுமையோடு
    இறை நாடினால்...இனியும் சந்திப்போம்,

    ReplyDelete
  5. இந்த கேள்வியை Peace Train "மரண அறிவிப்பு" என்ற பதிவில் கேட்டேன்.
    அல்லா ஏன் பத்து மாத குழந்தையை சாகடிக்க வேண்டும் ??? அந்த குழந்தை சுவர்க்கத்துக்கு போகுமா, நரகத்துக்கு போகுமா? சுவர்கத்துக்கு என்றால் - என்ன வயதில் இருக்கும்?
    (அது பிறந்து இருக்கவே வேண்டாமே - ஏன் அல்லா சோதனை பண்ணாமலே -சொர்கத்துக்கு அனுப்புகிறார்)? நரகத்துக்கு என்றால் -- :) என்னத்தச்சொல்ல....
    கொஞ்சம் பதில் கூற முடியுமா??????

    ReplyDelete
  6. சகோதரர் ., உங்கள் மீதும் ஓரிறையின் சாந்தியும் ,சமாதானமும் நிலவட்டுமாக.,
    பராவாயில்லை., நல்ல கேள்வி., கொஞ்சம் வேலைப் பளு இருப்பதால் இன்ஷா அல்லாஹ் நாளை பதிலளிக்கிறேன்.,

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அழைக்கும் ...சகோதரர் குலாம்
    கட்டுரை மிக நன்றாக இருந்தது எல்லாம் புகழும் அல்லாஹுக்கே.......
    உக்களுடைய இந்த அழைப்பு பணியை அல்லா இன்னும் மேலாகி தருவானாக ....எனக்கு துஆ செய்கள்.....

    ReplyDelete
  8. சகோதர சகோதரிகள் அனைவருக்கும்,

    சகோதரர் தமிழன்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    உங்கள் பிரச்சனை என்னவென்று இந்த பதிலின் முடிவில் தெளிவாக உணர்த்துகின்றேன் பாருங்கள். இன்ஷா அல்லாஹ்.

    1. --------
    அல்லா ஏன் பத்து மாத குழந்தையை சாகடிக்க வேண்டும் ??? அது பிறந்து இருக்கவே வேண்டாமே - ஏன் அல்லா சோதனை பண்ணாமலே -சொர்கத்துக்கு அனுப்புகிறார்)
    -------

    நச்சுனு இருக்கு உங்க கேள்வி. ஆனா பாருங்க நீங்க குர்ஆனா கொஞ்சமாச்சும் படிச்சிருந்தா இந்த கேள்விய கேட்டுருக்க மாட்டீங்க. இதற்கெல்லாம் ஆண்டவன் அழகா பதில் சொல்லிட்டான். எப்படி தெரியுமா...இப்படி,

    ”நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு” அல்குர்ஆன் 8:28

    புரியுதா...குழந்தை இறந்த சோகத்திலும் நாம் செயல்படுகின்றோம்? அப்போதும் இறைவன் மேல் நம்பிக்கை வைத்திருக்கின்றோமா இல்லையா? அவன் கொடுத்ததை அவனே எடுத்து கொண்டதற்காக அவன் மேல் நம்பிக்கை இழந்து விடுகின்றோமா என்றெல்லாம் நம்மை சோதிக்கின்றான் இறைவன்.

    அதுபோல இஸ்லாமில் மற்றொரு அழகிய விசயமும் உண்டு. இறைவன் கணக்குபடி நாம் இங்கே வாழ்வதெல்லாம் சில மணி நேரங்களுக்கு தான். நான் 27 வயதில் இறந்தாலும் ஒன்றுதான், அந்த குழந்தை 10 மாதத்தில் இறந்தாலும் ஒன்றுதான். இரண்டு உதாரணத்துக்கும் இடையே பெரிய வித்தியாசங்கள் இல்லை. நமக்கு தான் இந்த கால நேரம் அதிகமே தவிர இறைவனை பொறுத்தவரை அவை சில மணி பொழுதுகளே. ஆக, நாங்க இருவரும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் தான் இறைவன் கிட்ட போய் சேருகின்றோம்.

    இப்போது சொல்லட்டுமா உங்கள் பிரச்சனை என்னவென்று....குர்ஆன் குறித்த ஞானம் முழுமையாக இல்லாததுதான். நான் குரான் அனுப்புகின்றேன் சகோதரர். ஒரு முறை, ஒரே ஒரு முறை முழுமையாக, பாரபட்சமின்றி படித்து பார்க்க தாங்கள் தயாரா?

    இன்னொன்றையும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் பின்பற்றும் கொள்கை குறித்து உங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்கள் முன்னோர்கள் இருந்துவிட்டார்களே, என் கொள்கையை காப்பாற்ற வேண்டுமே என்ற எண்ணம் தான் இருக்கின்றதே ஒழிய அதை தாண்டி வேறொன்றுமில்லை. இன்று பாகிஸ்தானாகவும், பங்களாதேஷாகவும் மாறி இருப்பது உங்களுடைய முன்னோர்கள் தான் என்பது உங்களுக்கு புரியவில்லையா? ஏன் என்று ஆராய தெரியவில்லையா?

    இல்லை என் கொள்கை தான் உண்மை என்று சொல்வீர்களேயானால் நான் சொன்ன ஒப்பந்தத்திற்கு வாருங்கள். நம் இருவரும் உண்மையை கண்டறிய இறைவன் உதவுவானாக...ஆமீன்.

    அப்புறம்,

    2. -----
    அந்த குழந்தை சுவர்க்கத்துக்கு போகுமா, நரகத்துக்கு போகுமா?
    ----

    சுவர்க்கத்துக்கு...

    3. ----
    ஏன் அல்லா சோதனை பண்ணாமலே -சொர்கத்துக்கு அனுப்புகிறார்
    ----

    தெளிவாக சொல்லியதாக நினைக்கின்றேன். இருந்தாலும் இன்னொரு முறை. அது அதன் பெற்றோர்கான அல்லாஹ்வின் சோதனை.

    4. ----
    சுவர்கத்துக்கு என்றால் - என்ன வயதில் இருக்கும்?
    ----

    தெரியாது...

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  9. இரண்டாவதாக, ஒருவருக்கு சொர்க்கமா.. நரகமா.. என்பதை இறைவனை தவிர யாரும் வரையறுத்து கூற இயலாது., ஆனால் இறைவனுக்கு இணை கற்பித்தல், அவனுக்கு மாறு செய்தல்,அவன் ஒரு கறபனை என்றேண்ணி அவனை வணங்காது வசைப்பாடல் போன்ற அஃறிணை உயிர்களை விட கேவலமாக பூமியில் உலவும் உண்மையே அறிந்துக்கொள்ளா மனிதர்களுக்கு நரகம் என்பது உறுதி., ஆக இதனடிப்படையில் அணுகும்போது அச்சிறுபிரயாத்திலே மரணம் அடையும் அக்குழந்தை இறைவனுக்கு இணையோ,அல்லது மாறோ செய்யவில்லை ஆக இறைவன் நாடினால் அக்குழந்தைக்கு சொர்க்கம் .,
    மூன்றாவதாக எந்த வயதில் சொர்க்கம் செல்லும்...?
    குர்-ஆன் சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழையும் வயது 28 வயது என வரையறுத்திருக்கிறது என வைத்துக்கொள்ளும்., ஓ.கே இது நல்ல வயது தான் சொர்க்கத்தில் நுழைய என ஒப்புக்கொள்வீர்களா...? கண்டிப்பாக மாட்டீர்கள் அங்கும் முரண்பாட்டு அறிவு ஒரு கேள்வி எழுப்பும் ஏன் 28 வயது..? 27 லோ அல்லது 29 தோ இருந்தால் என்ன என்று....?
    ஆக எண்ணிக்கையில் ஒன்றை குறிப்பிடும் போது கண்டிப்பாக இறுதிவரை அதற்கு மாறுபட்டு கொண்டே கேள்விகள் எழுப்பலாம்..ஆக இதைப்போன்ற தேவையற்ற நிலைப்பாட்டை குர்-ஆன் சொல்லாது., குர்-ஆனிலும் நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள் வாயிலாகவும், நல்லடியார்கள் சொர்க்கத்தில் என்றென்றும் இளமையாக, அதே நேரத்தில் நிரந்தரமாக இருப்பார்கள் என்றே வர்ணிக்கிறது., சொர்க்கத்தில் இருக்க இதுவே போதுமானது.
    என் இறை நாட்டத்தால் சகோதரருக்கு ஒரளவு புரியும் படி சொல்லிருக்கிறேன் என்று நினைக்கிறேன்., மேலுள்ள கருத்திற்கு உடன்படுவதும் மறுப்பதும் உங்கள் உரிமை., தனக்கு இப்படி தான் பதில் வேண்டும் என்றோ அல்லது கிடைக்கும் பதிலை எதுவானாலும் அதை ஏற்க மாட்டேன் என்ற எண்ணத்தில் இருந்தாலோ கண்டிப்பாக உண்மையே அறிந்துக்கொள்ள முடியாது., நடு நிலை சிந்தனையே மேற்கொள்ளுங்கள்....
    இஸ்லாத்தில் அனைத்திற்கும் பதில் உண்டு அப்பதிலை சொல்வோரின் அறிவும் இருக்கும் கால,சூழ்நிலையே பொறுத்தே அப்பதில் கொஞ்சம் தாமதம் ஆகலாம்., எனவே தேவைற்ற இஸ்லாமிய எதிர்ப்பு வார்த்தைகளை தவிருங்கள்.ஏனெனில் இஸ்லாம் மனித மூலங்கள் மண்ணில் படைக்கப்படுவதற்கு முன்பே உருவான மார்க்கம்.,
    ஓராயிரம் கேள்விகளுடன் உங்களுக்காக (கேட்க) காத்திருக்கிறேன்... சகோதரர் எண்ணம் என்னவோ...?
    தாரளமாக கேளுங்கள் என்று கூறுவீர்கள் என நம்புகிறேன் அஃதில்லாமல் உலக படைப்பு, ஏற்றத்தாழ்வு, பலதாரணமணம், பெண்ணடிமை தனம், எதையாவது தூக்கி கொண்டு வரவேண்டாம் உங்கள் பதிலை எதிர்ப்பார்க்கும் ஆவலுடன்
    இறை நாடினால் இனியும் சந்திப்போம்
    -ஓர் இறை அடிமை

    ReplyDelete
  10. உங்கள் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக.,
    இங்கு மூன்று கேள்விகளை ஒரு சேர கேட்டு இருக்கிறீர்கள்., எனினும் இங்கு கூறும் பதிலால் நீங்கள் திருப்தியுற மாட்டீர்கள் என்பது தெளிவு! நடு நிலை பார்வைக்காகவே இந்த பதில்
    1. சிறுவயதிலேயே ஏன் மரணிக்க செய்யவேண்டும்?
    2.அக்குழந்தைக்கு சொர்க்கமா? நரகமா...?
    3.அஃது அங்கு செல்வதாக இருந்தால் அதன் வயதென்ன..?
    முதலாவதாக, இஸ்லாத்தை பொருத்தவரை இவ்வுலகம் ஒரு சோதனைக்கூடம் போன்றது., இங்கு (இவ்வுலகில்) நாம் மேற்கொள்ளும் செயல்களுக்கான பிரதிபலனை இறப்பிற்கு பிறகு நாம் அனுபவிப்போம்., அதாவது இறைவன் இருக்கிறான் என்று நம்பி அவன் ஏவிய செயல்களை செய்து அவன் விளக்கிய செயல்களிருந்து தவிர்த்து ஒருவர் வாழ்வாரேயானால் அவருக்கு இறைவன் வாக்களித்தப்படி சொர்க்கம் தருகிறான்.அஃதில்லாமல் இறைவனே கிடையாது, இறப்பிற்கு பிறகு ஒரு வாழ்வில்லை என தனது ஆறறிவின் உள் நின்று மன இச்சையின் படி என தம்மை அறிவாளிகளாக நினைத்து இறைக்கூற்றை ஆராய்ந்து பார்க்காமல் செயல்படும் போலி மனிதர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து நரகம் தண்டனையாக கிடைக்கிறது. அதன் வழியில் வாழ்வை மேற்கொள்ளும் மனிதர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து பல/ சில சோதனைகளை மனிதர்களுக்கு ஏற்படுத்துகிறான்.,இதனை குர்-ஆனில்
    "நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச் சோதனையாக இருக்கின்றன நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு" என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள் (8:28)
    உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான், ஆனால் அல்லாஹ் - அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது.(64:15)
    இதன் அடிப்படையிலேயே... நீங்கள் மேற்சொன்ன வினாவும் வருகிறது சிறுவயது மரணம் அக்குழந்தை வாயிலாக அப்பெற்றோர்களுக்கு சோதனையாக இறைவன் ஆக்கி வைத்திருக்கிறான்., அவர்கள் இறைவனுக்காக பொறுமை காக்கிறார்களா.. அல்லது அமைதியிழந்து சில கேடு கெட்டவர்களைப்போல் இறைவனையே திட்டுகிறார்களா...? ஆக இது குழந்தைக்கல்ல.. பெற்றோர்களுக்கே சோதனை... சகோதரரே... இது மட்டுமல்ல,,,, திடீர் விபத்துக்கள்,உடல் ஊனங்கள்,குழந்தை பேரின்மை, பசி, வறுமை, மழையின்மை, பூகம்பம், இயற்கை சீற்றங்கள் போன்ற காரணங்கள் அந்தந்த குடும்ப மற்றும் சமூகங்களுக்கு சோதனையாக அமைகின்றன. அத்தகைய சுழலில் அவர்களை சார்ந்தோர் எவ்வாறு செயல் படுகிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடதக்கது. சுருக்கமாக சொன்னால்... நான் மேல சொன்னது போல அவ்வாறு ஏற்படும் சூழ்நிலையில் மனிதன் இறைவனுக்காக பொறுமையே மேற்கொள்கிறானா,அல்லது தன் கோபத்தின் வெளிப்பாட்டால் தான்தோன்றி தனமாக செயல்படுகிறானா என்பதை கண்டறிவதற்கான இறைவனின் ஏற்பாடே இது... அறிவுஜிவி தனமாக ஏன் இறக்க செய்ய வேண்டும் என்றால்... ? 100 வயதிற்கு மேல் ஒருவர் வாழ்ந்து மரணித்தாலும் இதே.. கேள்வியே அங்கு கேட்கலாம்...? ஆக மரணமும், இழப்பும் அந்தந்த சமுகத்திற்கு இறைவனின் சோதனை என்பதை அறிய முற்பட்டால் கிடைக்கும் தெளிவு! சரி., ஏன் சோதிக்க வேண்டும்? திருமறை அதற்கும் விளக்கமும் தருகிறது
    உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் ( மிகைத்தவன்; மிக மன்னிப்பவன் (67:2)

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்கும் குலாம் நானா மிகவும் அருமையான பதில் சகோதரர் தமிழன் கேள்விகளை தொடுத்து இருப்பது தெளிவு பெறுவதற்காக அல்ல என்றுதான் நினைகின்றேன் ..எமது மார்கத்தை முடக்க நினைக்கும் பலர் இவ்வாறுதான் முன்னுக்கு பின் முரணாக விவாதித்து கொண்டே இருக்கின்றார்கள் இது இன்று மட்டுமல்ல சஹாபாக்களின் காலம் தொட்டே இருக்கின்றது ..மிகவும் அருமையான பதில்கள்

    சகோதரர் ஆஷிக் அவர்களுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக

    அல்லாஹ் அனைத்து மக்களுக்கும் ஹிதாயத்தை வழங்குவானாக

    உங்கள் சிறப்பான பணியை அல்லாஹ் பொருந்தி கொண்டு மென் மேலும் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக

    ஆமீன்..!!

    ReplyDelete
  12. சகோதரர் தமிழன் அவர்களுக்கு
    நான் முன்பே சொன்னது போல நாகரிக பின்னூட்டங்கள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படும்... கெட்ட வார்த்தைகள் பேசுவதில் தான் உங்களுக்கு என்ன ஒரு ஆர்வம் ., இதில் இஸ்லாம் கெட்ட மதம் என்று அங்கலாய்ப்பு வேறு என்ன முரண்பாடு உங்களிடமிருந்து.....மீண்டும் மீண்டும் சொல்கிறேன் வார்த்தையில் கண்ணியம் காத்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  13. அஸ்ஸலாமு அலைக்கும் குலாம் வெடிப்புகோடபாடு what is big bang theroy...

    ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்