"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Saturday, May 14, 2011

போலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை...

                                          ஓரிறையின் நற்பெயரால்

இது ஒரு காமெடியாக எழுதப்பட்ட சீரியஸ் விசயங்க....

     ஜிஹாதுன்னா..? 


  பொதுமக்களையும்,அப்பாவிகளையும் கொல்றதுக்கு பேருதாங்க ஜிஹாது..... இது உலக வலை விற்பனர்கள் முதல் உள்ளூர் ஊறுகாய் வியாபாரி வரைக்கும் அறியாமலே அறிந்ததாய் சொல்லும் ஒரு வாக்கியம்.... இந்த அடிப்படை தவறான வாக்கியத்திற்கு அடிப்படையில் இரண்டு காரணம்.,

  • இஸ்லாமியர்கள் ஊடகத்தை சரிவர பயன்படுத்தி கொள்ளவில்லை., 
  • ஊடகம் இஸ்லாமியர்களை தவறாக பயன்படுத்தி கொண்டிருக்கின்றது- அதிலும் குறிப்பாக சினிமாத்துறை மிக மோசமாக இஸ்லாமிய எதிர்ப்பை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது., அத்தகைய சினிமாவில் இஸ்லாம் நிலை குறித்தே இங்கு பதிவு.

சின்ன ப்ளாஸ்பேக்


 ப்ளாக் & ஒயிட் சினிமாக்களில் இஸ்லாமியர்

 "அரே பாய் சைத்தான் நிம்மளிக்கி ப்லிம் காட்ரான்... "
      என்று உண்மை இஸ்லாமியர்களுக்கு கூட (பேச) தெரியாத மொழியில் நீள்வட்ட தொப்பியுடன், கொஞ்சம் குறுந்தாடி கறைபடிந்த பற்கள் நீண்ட ஜிப்பா சகிதமாக கையில் குச்சியுடன் வட்டியை வசூல் பண்ணும் காட்சியில் தோன்றுவார்... அதுதான் அன்றைய இஸ்லாமியர் அறிமுகம்.,
  
 இடைப்பட்ட காலங்களில் ஒரு படி மேல போய்.... வீடுகள் முழுக்க காபா படங்கள்., பாங்கு சொல்லும் போதே.. தொழுது கொண்டிருப்பார் ., எப்போதும் தலையில் வலைத்தொப்பியுடன் , கழுத்தில் தட்டை வடிவ தாயத்து அதில் முன்புறம் வளர்பிறை அதன் மேலாக 786 என பொறிக்கப்பட்டிருக்கும் ( பார்த்தீர்களா இஸ்லாத்தை எவ்வளவு ஆழமாக உணர்ந்து எடுத்திருக்கிறார்கள்)
    பெரும்பாலும் சோக செய்திகள் இவரிடம் சொல்லப்படும் போது "யா அல்லா..."(ஹ்)... என உச்சஸ்த்தாயில் கத்தி பெருமூச்சுடன் முடிப்பார்.. ப்ளாஷ் பேக் ஓவர்

 நிகழ்கால சினிமாக்களில் இஸ்லாம்


 இந்த ஆக்கத்தின் மையக்கருவே இது தான்., சில தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் நான் பார்த்த ஒரு காட்சி


காட்சி -1

 ஒரு நல்ல முஸ்லிம், தீவிரவாதியாக கருதப்பட்டு அடித்து செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அப்போது அங்கு குர்-ஆன் சகிதமாக நெற்றியில் தொழுதற்கான அடையாள தழும்புகளுடன், கண்டிப்பாக தாடியுடன் இருக்கும் கெட்ட முஸ்லிம் தீவிரவாதி சொல்கிறார்
"இந்த நாட்டில் இவ்வளவு நமக்குதான் மரியாதை.....
நல்ல முஸ்லிம் மிரட்சியுடன் பார்க்கிறார்...

மேலும் சில நிமிடங்கள் கழித்து
காட்சி -2

    நாட்புறமும் குண்டுகள் சத்தம் முழங்க ஏந்திய துப்பாக்கியுடன் சக முஸ்லிம் தீவிரவாதிகள் அங்கு வருகின்றனர்
நல்ல முஸ்லிம் கேட்கிறார் என்ன...... செய்ய போறீங்க......
கெட்ட முஸ்லிம்  தீவிரவாதி தன் உடம்பில் "பாம்" கட்டிக்கொண்டே கூலாக சொல்கிறார்
இந்த நாட்டிற்கு நாம யாருன்னு காட்ட போறோம்....

காட்சி - 3

 மருத்துவ மனை வளாகத்தில் தென்படுவோரை சுட்டுக்கொண்ட முன்னேற
நல்ல முஸ்லிம் ஹீரோவுடன் இணைந்து ஏனையோரை காப்பாற்ற முற்பட...
எதிரில் கெட்ட முஸ்லிம்  தீவிரவாதியும் வர
ஹீரோ கேட்கிறார்
எந்த கடவுள்டா மக்களை கொல்ல சொன்னீச்சு....
கெட்ட முஸ்லிம்  தீவிரவாதி
ஜிஹாத்...... ஜிஹாத்..... தொடர்ந்து இந்தியில் ஏதோ....சொல்ல
மீண்டும் கேட்கிறார் ஹீரோ
கடவுளை விடுங்க.. மனுஷங்களே பாருங்கடா...
ஜிஹாத்...... ஜிஹாத் 
மீண்டும் அதே உச்சரிப்பு கெட்ட முஸ்லிம்  தீவிரவாதியிடமிருந்து மேலும்    இந்தியில் ஏதோ... சொல்லிக்கொண்ட ஹீரோவை நெருங்க.. உடல் முழுவதும் பாம் வேறு... ஹீரோ கட்டிப்பிடித்தவாறே கட்டிடத்திலிருந்து குதிக்க வழக்கம் போல் கெட்ட முஸ்லிம்  தீவிரவாதி சாக வழக்கத்திற்கு மாறாக ஹீரோவும் சாகிறார்,
  இந்த கேப்ல... நல்ல முஸ்லிம் உருக்கமாக பேசுகிறார் அதைக்கேட்டு ஒரு கெட்ட முஸ்லிம்  தீவிரவாதி சுப்பாக்கியால் தன்னைதானே சுட்டு சூஸைடு வேறு...
????
    _______________________ X ____________________________

 
   இங்கு ஒரு விசயத்தை கண்டிப்பாக நாம் கவனிக்க வேண்டும் இஸ்லாத்திற்கு சம்பந்தமில்லாத செயல்களை வட்டிக்கு விடுதல், தகடு தாயத்து அணிதல் போன்றவற்றை செய்பவர்களை மீடியாவில் நல்ல முஸ்லிம்களாக காட்டப்படுகின்றனர். ஆனால் இஸ்லாம் செய்ய சொன்னதை செய்வர்களாக குர்-ஆன் ஓதுதல் தாடிவைத்தல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டவர்கள் மீடியாவில் தீவிரவாதிகளாக அறிமுகம்,,,

      இந்த சினிமாத்துறை இஸ்லாத்தை பற்றியும் அறிந்திருக்கவில்லை., இஸ்லாமியர்களை பற்றியும் தெரிந்திருக்கவில்லை., ஆயுதபூஜைக்கு தனது பழைய TVS 50 க்கு புதிதாய் சந்தனமிடுபவர்களும், ஹோலி பண்டிகையில் எதையாவது போலியாய் எரிக்கும் முஸ்லிம்களுமே இவர்கள் பார்வையில் உண்மை முஸ்லிம்கள்.,

    அட கேடுகெட்ட சினிமாத்துறையே.... இஸ்லாமியர்களை திருத்துவதாக சொல்லி இஸ்லாத்தில் இல்லாததை விமர்சிக்கிறாயே... உன் உலக அறிவை இஸ்லாமிய அறிவோடு பொருத்துவதை எப்படி மெச்சுவது..

ஜிஹாத்., -விளக்கம் கொடுத்து கொடுத்தே ஓய்து போனவர்கள் நம்மில் அனேகம்...
அல்லாஹ் குர்-ஆனில்

"நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" (அல்குர்-ஆன். 5:32)


       நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ 


எவரது நாவாலும், கரத்தாலும் ஏனையவர்களுக்கு தீங்கு ஏற்படவில்லையோ - அவரே உண்மை முஸ்லிம் ஆவார்

    இவ்வாறு அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் கூறியிருக்க இஸ்லாம் அங்கிகரிக்காத, அறுவெறுக்கும் ஒன்றை, தடைசெய்த, ஏற்க மறுத்த ஒன்றை, இஸ்லாத்தில் பெயரில் செய்வதாக திரிப்பது எவ்வளவு பெரிய கொடுமை.,

  • தனி மனித கொலையை., அங்கிகரிக்காத இஸ்லாம் எப்படி இறைவன் பெயரில் மக்களை கூட்டம் கூட்டமாக கொல்ல சொல்லும்., ?
  • தற்கொலை ஹராம்..( விலக்கப்பட்டது) அஃது தற்கொலை புரிவோருக்கு நரகம் என மார்க்கம் சொல்லும் போதும் தற்கொலை படை தாக்குதலை நடத்தவோரை சுவனப்பதியில் எப்படி இஸ்லாம் நுழைய செய்யும்..?

     இவையெல்லாம் பார்க்கும்போது திரைத்துறை ஊடங்களுக்கு சரியான இஸ்லாமிய புரிதல் இல்லையென்பதை காட்டிலும் இஸ்லாம் குறித்த அடிப்படை அறிவுக்கூட இல்லை., என்பதே உண்மை.,
                                            
                                                                             அல்லாஹ் மிக்க அறிந்தவன்

10 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    நல்ல நோக்கத்தில் இடப்பட்ட பதிவு. ஆனால், இந்த islamophobia-காரர்கள் உண்மையிலேயே ஜிஹாத் பற்றி தெரியாமலா இருக்கிறார்கள்..?

    இவர்கள்தான், பாகிஸ்தானிய முல்லாக்கள் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்வதாகவும் கூறுகிறார்கள்.

    உண்மை அப்படியிருக்க, 'குர்ஆன் காஃபிர்களை கொல்ல சொல்கிறது' என்று மீண்டும்.. மீண்டும் மீண்டும் இவர்கள் மீடியாக்களில் காட்டுக்கத்தல் போடுவதால்...

    எனக்கென்னவோ...

    இவர்கள் முஸ்லிம்கள் அல்லாத பிற சமயத்தவரை எல்லாம்....

    "இஸ்லாமிய எதிர்ப்பு பயங்கரவாதி"களாய் ஆக்கி இந்திய அமைதிக்கு குந்தகம் விளைவிக்க நாடி...

    இப்படி தொடர்ந்து உண்மைக்கு மாறாய் ஜிஹாத்-ஐ திரித்து 'பயங்கரவாதம்' செய்ய பிறரை தூண்டுகிறார்களோ என்ற ஐயம் தோன்றுகிறது..!

    நாம் பலமுறை விளக்கம் சொன்ன பிறகும் மீண்டும் தொடர்ந்து அதையே சொல்வதால், இவர்கள் ஏதோ தெரியாமல் உலறுவதைப்போல எனக்கு தெரியவில்லை..!

    இந்திய-தமிழக அரசுகள்... இனி இந்த ஊடக காரர்களை சரியான ஒரு சட்டம் போட்டு தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.... என்று கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  2. @குலாம் நண்பரே,
    //ஜிஹாத்., -விளக்கம் கொடுத்து கொடுத்தே ஓய்து போனவர்கள் நம்மில் அனேகம்... //

    அதனால் தான் நான் விளக்கம் குடுத்து இருக்கிறேன்!!!

    ReplyDelete
  3. sorry,
    இணைப்பை குடுக்கவில்லை.

    http://tamilan1001.blogspot.com/2011/05/blog-post_15.html
    வந்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

    ReplyDelete
  4. @குலம் அண்ணன் நான்கு உரைக்கக்கூடிய கட்டுரை. இதுபோல் கீற்று தளத்தில் இஸ்லாமியர்கள் தொட்டுக்கொள்ள ஊறுகாய் அல்ல : ஆத்மார்த்தி எழுதி உள்ள கட்டுரையும் உங்கள் கட்டுரையும் தெல்லா தெளிவாக எடுத்து கூறக் கூடியதாக இருகிரது. மீடியக்களை இஸ்லாமியர்கள் சரியாக பயன்படுத்துவதில்ல. உண்மைதான்.
    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14467&Itemid=139

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் குலாம் அவர்களே.....
    எனது பெயர் தங்களுக்கு தேவையில்லை என்று நினைக்கிறேன். விஷயத்திற்க்கு
    வருவோம். புதிதாய் வெளிவந்த விரல் நடிகரின் படத்தை பார்த்து விட்டு தங்களின் ஆதங்கத்தை தங்களின் ப்லொக்கில் தட்டியிருக்கிறீர்கள்.. இதற்கு பாராட்டுக்கள் வேறு........(!!!!)
    தாங்கள் சொல்கின்ற படி வைத்துக்கொள்வோம். குர்ரானில் கூறப்பட்டுள்ளது, வட்டிக்கு வாங்க கூடாது. கொலை செய்தல் கூடாது போன்றவற்றை அனைத்து முஸ்லிம்களும் பின்பற்றுகிறார்கள் என்று தங்களால் உறுதி அளிக்க முடியுமா? ஹலாலான முறையில் போர் புரிதலை இஸ்லாம் அனுமதித்துள்ளது. தங்களின் பார்வையில் ஹலாலாக தெரிந்து அதற்காக போர் புரிபவர்கள் தான் தற்போதைய தீவிர வாதிகள்
    இதில் முஸ்லிம்களே அதிகமாக் போராடுகிறார்கள். இவர்களை மையமாக வைத்து எடுக்கின்ற படங்களே இவை. முஸ்லிமாக இருந்து கொண்டு கொலை கொள்ளை தீவிரவாதம் போன்றவற்றை செய்பவன் உண்மையான் முஸ்லிமே அல்ல என்று தாங்கள் கூறியிருக்க வேண்டுமே தவிர அதை வெளிச்சம்போட்டு காட்டிய ஊடகத்தை குறை கூற கூடாது. (தங்களின் BLOG-ல்)
    நீங்கள் சொல்ல வரும் விஷயத்தை வாதமாக முன் வையுங்கள். அடுத்தவர்கள் அதை படித்து தங்களின் வாதங்ளை கூறுவார்கள். நீண்களே ஒரு தலைப்பை எடுத்து நீன்களே அதற்கு விளக்கத்தையும் கொடுத்து நீங்களே அதற்கு தீர்ப்பையும் கூறி முடித்து வைத்தல் அழகல்ல நண்பா ! தங்களை விட வயதில் சின்னவன் நான் ஏதேனும் அதிக ப்ரசங்கி தனமாக நடந்திருந்தால் மன்னியுங்கள். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் (இஸ்லாம் மார்கத்தின் படி படம் பார்ப்பதே தவறு. நீங்கள் படத்தை பார்த்ததே தவறு. இதில் comment
    வேறு.)

    ReplyDelete
  6. வ அலைக்கும் சலாம் வரஹ்
    சகோதரர்... அவர்களுக்கு தங்களின் மனம் திறந்த பகிர்வுக்கு நன்றி.,
    இங்கு நான் எடுத்து வைத்தது சினிமாக்களில் இஸ்லாமியர்களாக சித்தரிக்கப்படும் நபர்களை குறித்து., மாறாக அத்திரைப்படம் குறித்த விமர்சனத்தை அல்ல.... நீங்கள் சற்று அசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள்., உங்களின் வார்த்தையில் கோபம் தெரி(க்)கிறது., இங்கு நான் மையப்படுத்தியது இஸ்லாத்தை ஊடகம் எவ்வாறு காண்கிறது என்றே., அதாவது இஸ்லாமிய பெயர்தாங்கிகள் செய்வதை எவ்வாறு இஸ்லாத்தோடு தொடர்புப்படுத்தி அதை இஸ்லாமிய வளையத்திற்குள் காட்டுகிறார்கள் என்பதை தான்.,
    சகோதரரே., அதென்ன.. ஹலான ஜிஹாத்., ? சற்று எனக்கு விளக்கம் தருகிறீர்களா? நானே தெளிவாக குறிப்பிட்டுள்ளேன் பொது மக்களையும், அப்பாவிகளையும் கொல்வதற்கு பெயர் தான் ஜிஹாத் என்ற மாயையே இன்றைய சினிமாக்கள் உருவாக்கி வைத்திருக்கின்றன., இதற்கு இஸ்லாத்தில் என்ங்கெனும் இடமுண்டா? சகோதரர் பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன் இன்ஷா அல்லாஹ்., இங்கு நான் ஒரு ஆயத்தோ அல்லது ஹதிஸ் குறித்தோ விவாதிப்பதாக இருந்தால் தான் நானே தலைப்பிட்டு நானே விளக்கம் கொடுத்து., அதை நானே நியாயப்படுத்துதல் தவறு ஏனெனில் அஃது குறித்த மேலதிக விளக்கம் நான் அறியாமல் இருக்கலாம்.,
    ஜிஹாத் என்ற வார்த்தைக்கு அப்பாவி மக்களை கொல்லுதல் என்ற வடிகட்டிய பொய்யை தவறேன்று சொல்வதற்கு எந்த விளக்கமும் சொல்லவேண்டியதில்லை சகோதரரே,... அதென்ன வட்டிக்கு தாவி விட்டீர்கள் ., இதற்கு பெரிய அளவில் ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை சகோதரரே ஒரு வாக்கியம் போதும் உண்மையான முஸ்லிம் வட்டி வாங்க மாட்டான்., அஃது வட்டி வாங்குபவன் உண்மை முஸ்லிமாக இருக்க மாட்டான்., எண்ணிக்கையில் இல்லை இஸ்லாம் எண்ணங்களில் இருக்கிறது சகோதரரே., தட்ஸ் ஆல்.,

    //கொலை கொள்ளை தீவிரவாதம் போன்றவற்றை செய்பவன் உண்மையான் முஸ்லிமே அல்ல என்று தாங்கள் கூறியிருக்க வேண்டுமே தவிர//
    அதே தானே நானும் சொல்கிறேன்
    //அதை வெளிச்சம்போட்டு காட்டிய ஊடகத்தை குறை கூற கூடாது.//
    //(இஸ்லாம் மார்கத்தின் படி படம் பார்ப்பதே தவறு. நீங்கள் படத்தை பார்த்ததே தவறு. //
    உங்களின் வார்த்தையில் தான் முரண்பாடு சகோதரரே.,
    ஊடகம் வேண்டும் என்கிறீர்களா? வேண்டாம் என்கிறீர்களா?
    சரி உங்கள் வாதத்திற்கே வருவோம்... நல்ல முஸ்லிம்களை இனம்காட்டும் ஊடகங்கள்( சினிமா) குறித்து எனக்கு தாருங்கள்., ஹலான ஜிஹாத் குறித்தும் தெளிவு தாருங்கள்
    இறை நாடினால் இனியும் சந்திப்போம்
    ஓர் இறை அடிமை

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும்,

    மிகவும் அழகாக எடுத்து வைத்துள்ளீர்கள்..

    நிம்பல் கார்மேலே போறான் நம்பெல் நடந்து வர்றான், இப்படி பேசுபவரையே தேடுகிறேன் ஒருவரையும் காணவில்லை, ஒருவேளை சினிமா காரர்கள் கண்களுக்கு மட்டும் தெரிவார்களோ!!?

    ReplyDelete
  8. வ அலைக்கும் சலாம் வரஹ்
    உண்மைதான் சகோதரர் கார்பன் கூட்டாளி
    ஹா... ஹா... ஹா...
    இதற்கு இதைத்தவிர வேறு என்ன பதில் சொல்வது...
    அதுசரி.. ஆக்ஸிஜன் கூட்டாளி அப்படினாலும் நியாயம் இருக்கு., அதென்ன கார்பன் கூட்டாளி..? சகோ

    ReplyDelete
  9. Any opinions about this

    http://www.danielpipes.org/990/what-is-jihad

    Ain't there two verses exists in quran, the later supersede the former.

    ReplyDelete
  10. சகோ அனானி
    உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்!

    நீங்கள் கொடுத்த சுட்டியே நீங்களே பாருங்கள்
    யர்ரோ சொல்வதும் - செய்வதும் இஸ்லாமாகாது

    குர்-ஆன் சுன்னா ஆதார அடிப்படையில் விமர்சனத்தை எடுத்து வையுங்கள்... உங்கள் பெயர் பதிந்து.,

    ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்