"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Thursday, October 06, 2011

ஒரு நீதிக்கவிதை..!


சூரியனுக்கும் தாகமெடுக்கும் நண்பகல் கோடை
கானல் நீரும் கரைந்துப்போகும் கடுமையான சூடு...
எங்கு நோக்கினும்.,
வெப்பக்காற்றின் வேதனையான வருடல்...
எச்சில்- விலை என்ன என்றுக்கேட்க தோன்றும் நாவறட்சி

புழுதிப்படிந்த பெருந்திறலில்
திசைமாறிய தசை உருவம்
உயிரற்ற காற்றின் உஷ்ணம் தாங்காமல் மேலெழும்பி -கீழே
மயங்கிவிழும் மஞ்சள் நிற மணல் நிறைந்த 
பாலை தேசத்தின் நடுவே

கண்களுக்குள் விரல் புதைத்து வாழ்வின் வழி செல்ல
மெல்ல மெல்ல தள்ளாடி வந்தது....
அயர்ந்த அவ்வேளையிலும்
வறண்ட வாய் தேசம் புக துளித் தண்ணீரை தேடி
சுடுமணலில் சுருங்கி நின்றது

சுழற்றி அடிக்கும் சூறாவளின் சுவாலைகளில்
சுழலாமல் கருக்கும் அனலின் சுவாசங்களில் - சிக்குண்டும்
ஒற்றை உயிர் இனியும் உலவ வேண்டும் என்ற எண்ணத்தில்
கண்ணின் வழி
காட்சிகளை
பற்றி பிடிக்க...

சற்றே தூரத்தில் அசாதரணமாய் ஏதோ தென்பட
அங்கேணும் தண்ணீர்
கிடைக்குமா
என சந்தேகத்தில் கண்கள் கண்ணீர் கொண்டது
கிடைக்கும் இந்த தேசத்தில்...
கால்கள் நம்பிக்கை கொண்டது.

கால் வாசி உயிரும்
முக்கால் வாசி உணர்வும் அற்ற நிலையில்
அவ்விடம் நோக்கி தேகம் மையல் கொண்டன
தண்ணீரின் தடயங்கள் இருப்பதை பார்த்து
தாகத்தின் சுவடுகள் சாந்தம் கொண்டன...

ஆயிரம் வால்ட் மின்சாரத்தை
அதிவேகமாக மின்மினி பூச்சிகளில் புகுத்திய
புத்துணர்ச்சி...
காரணம் கண்ட காட்சி
அகல விழி திறந்து
ஆராவாரம் அற்ற அப்பகுதியில்
அறிவார்ந்து
அதை நோக்கிய போது

கரைப்படிந்த பாத்திரம் - எனினும்
அதனுள்ளே கால்வாசி தண்ணீர்..!
அதிர்ச்சி விழிகளில் ஆசை தீ பரவ
எடுத்து பருகும் எண்ணத்தில்
பாத்திரம் நோக்கி தம் கரம் நீட்ட
பாத்திரம் தொடும் முன் ஒரு பத்திரம்
கண் சுட்டது

ஆம்! அங்கே ஒரு பலகை
பலவகை வார்த்தைகளுடன்.,
நேற்றி சுருக்கி எழுத்தை ஆராய்ந்தான்...


                                                                  அறிவிப்பு
====================================================================
  இந்த பாத்திரத்தில் இருக்கும் தண்ணிரை அருகே இருக்கும் குழாயில் ஊற்றி
பம்பில் அடித்தால் தண்ணீர் வரும்- 
குடித்து முடித்தப்பின் அந்த பாத்திரத்தில் மீண்டும் தண்ணீர் நிரப்பி இங்கு வைத்து விடவும.
=====================================================================

" வார்த்தைகள் படித்ததும் வரையறையற்ற குழப்பம்.."

அருகே...
ஆயிரம் வருடங்களுக்கும் மேலான
அரதபுரதான...
ஆழ்துளை ஆயுத குழாய் - தண்ணீர்
வருவதற்கான அடையாளங்களை முற்றிலும் தொலைத்த
அறிகுறீகளுடன் அயர்ந்து நின்றது.

வார்த்தை பிழையென்றால்
தண்ணீரும் வீண்
தம் உயிரும் வீண்
செய்முறை பயிற்சிப்படி செயல்பட மனம் மறுத்தது

 சுயநல சுருக்கு
சிந்தையை இறுக்கி கட்டியது
சூன்யமாய் விளக்கி...
கொண்ட தாகத்தை பெரிதாய் காட்டியது
முடிவில் முரண்பாட்டு அறிவு சொன்னதை
முழுதாய் மனம் ஏற்றது

பருகலாம் என்று பத்திரமாய் எடுத்த
பாத்திரம் வாய்வரை செல்ல
உதட்டின் ஓரத்தில் ஒருதுளி விழ
சுளிரென்று சுட்டது சுய சிந்தனை

எழுதிய வார்த்தைகள் உண்மையென்றால்...
அறிவற்று அனேக மக்களுக்கு
அநீதி விளைவித்தவன் போலாவேனே...?

இன்றைய என் சுய நலத்திற்காக
இந்நீர்அருந்தினால்
இவ்விடம் நோக்கும்
நாளைய மனிதர்களின் நல்வாழ்வை நாசமாக்குதல்
சரியா...?

பராவயில்லை.,
இருக்கும் தண்ணிரை குழாயில் ஊற்றுவோம்
எழுதியது பொய்யென்றால்
பயனற்று போவது நம்வாழ்வு மட்டும்
உண்மையென்றால்
பயனடையபோவது
இனிவரும் எல்லோரும் தான்

முடிவாய் குழாயில் நீர் ஊற்ற
முடிவு செய்தான்.

ஊற்றினான்..!
ஒன்றும் ஆகவில்லை -எனினும்
உயிர் இன்னும் போகவில்லை... எண்ணிணான்
சில நிசப்தங்களுடன் கணங்கள் தொடர்ந்தன


ஆச்சரியம்!
இறக்க முனைந்தவனின் மீது 
இரக்கம் கொண்டதோ என்னவோ...
மெல்ல தலைக்காட்டிய  தண்ணீர்
புவியில் கால்ப்பதித்த மகிழ்ச்சியில்
குழாயின் வாய் பிளந்து
தம் வருகையே
அதிகரித்தது...

வாயில் நுழைந்த நீர் அவனது
வாழ்வையை ஈரமாக்கியது
புத்துணர்ச்சி...பூ
அப்பாலையில் புதிதாய் பூத்தது
மனமகிழ்ச்சி பொங்க.. அள்ளி பருகிய
நீர்
தாகத்தை தகர்த்தது...
பெருகிய வெள்ளத்தில் அவனது
சுயநல அழுக்கு அடித்துப்போனது...

நிரம்ப குடித்த மகிழ்ச்சியில்
கடவுளுக்கு நன்றி உதிர்த்துவிட்டு
பவ்யமாய் பழைய பாத்திரத்தில்
புதுநீர் புகுத்தி
நலமுடன் வைத்து

வெற்றி புன்னகையோடு
வடக்கோ தெற்கோ.. ஏதும் அறியாமல்
வாழ்வியல் திசை நோக்கி புறப்பட்டான்...
அந்த பொதுநல விரும்பி..!

.  .  .

 இந்த நீதிக்கதை நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான்., எனினும் கவிதை வடிவில் எழுத இங்கு சிறிய முயற்சி.

     நம் எல்லோர் வாழ்விலும் இக்கட்டான சில தருணங்கள் வரத்தான் செய்கிறது. எனினும் சுய நலமிக்க மனிதர்கள் கிடைக்கும் அந்த வாய்ப்பை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்... ஆனால் அத்தருண சுய நலங்கள் பலரது வாழ்வையை அழித்து விடுகிறது., ஆக நமக்கு எவ்வளவு சிரமம் ஏற்பட்டாலும் பொது நல விரும்பியாக இருக்கவேண்டும் அல்லது இறக்கவேண்டும் என்பதே இக்கதை சொல்லும் நீதி!!!4 comments:

 1. ஸலாம் சகோ.குலாம்,
  அருமையான பகிர்வு.

  இவ்வுலகில்,
  சுயநலவாதங்கள் ஒழிய வேண்டுமானால்...
  பிறர்நலவாதங்கள் அதிகரிக்க வேண்டுமானால்...
  அதற்கு என்ன வழி..?


  "தான் இதுபோல பிறர்நலவாதியாக வாழ என்ன அவசியம்...
  இதனால் எனக்கு என்ன இலாபம்...
  இவ்வுலகில் எனக்கு நஷ்டம்தானே..."

  என்று ஒருவன் யோசித்தால்...

  அதற்கான பதில்...

  மறுமை-நியாயத்தீர்ப்பு நாள்-சுவனம்-இத்துடன் இறையச்சத்துடன் கூடிய இறைநம்பிக்கை மட்டுமே..!

  இதை, இந்த பதிவு உணர்த்துகிறது சகோ.குலாம்.
  சிறந்ததொரு பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 2. வ அலைக்கும் சலாம் வரஹ்
  சகோ @சிட்டிசன் ஆப் வேர்ல்டு

  பொது நல செய்கை தொடர்ந்து முன்னிருத்தப்படுவதற்கு கடவுள் / மறுமைக்கோட்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.,
  ஜஸாகல்லாஹ் கைரன்
  நன்றி சகோ

  ReplyDelete
 3. assalumu alaikkum
  sago arumaiyana padhivu. idhai anaivarum vunara vendum.idhu pondra karuththugalai anaivarukkum ethi vaikkavendum.kurippaga naththigargalukku.

  kalam.

  ReplyDelete
 4. வ அலைக்கும் சலாம் வரஹ்
  சகோ @ kalam.

  ஜஸாகல்லாஹ் கைரன்
  நன்றி சகோ

  ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்