"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Monday, November 21, 2011

நாத்திகனுக்குள் உண்மையைத் தேடி...

                                         ஓரிறையின் நற்பெயரால்.

     பொதுவாக எல்லா மதம் சார்ந்த / சாரா கொள்கைகள் நன்மை செய்வதை முன்னிலைப்படுத்தி கோட்பாடுகளை வகுத்தாலும் ஏனைய மதங்களை விட இஸ்லாமே நாத்திகவாதிகளால் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.

 ஏனெனில் ஏனைய கொள்கைகள் போல நன்மைகள் மேற்கொள்வதை முன்னிலைப்படுத்துவதோடு மட்டுமல்லாது, அதன் எதிர் விளைவான தீமையை தடுக்கவும் இஸ்லாம் அதை பின்பற்றுவோர் மீது சமூக கடமையாக பணிக்கிறது.

  ஆக அதனடிப்படையில் இன்று எல்லா ஊடகங்கள் வாயிலாகவும் இஸ்லாமியர்கள் அவரவர் பங்களிப்பை முடிந்த வரையில் அளித்து வருகிறார்கள்.  குறிப்பாக இணையத்தில் அதன் தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது., எல்லா துறைச்சார்ந்த கோட்பாடுகளை விளக்கும் தளங்களை விட இஸ்லாத்தை விளக்கும் தளங்கள் தமிழில் அதிகம்., நான் வாசித்த வரையில் சுமார் இருநூற்று ஐம்பதிற்கும் மேலாக இருக்கிறது 

   ஒரு கொள்கையை விளக்கும் போது நேர்மறை எதிர்மறை கருத்துக்கள் எழ தான் செய்யும் ஆனால் எந்த ஓரு நிகழ்வையும் ஏற்பதும் மறுப்பதும் ஒருவரது நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட விஷயம். ஆனால் தான் கொண்ட கொள்கை தான் உண்மையானது எனக் கூறி பிறரை ஏற்க செய்வதாக இருந்தால் அச்செய்கையை பொதுவில் நிறுத்தி, 
  • அறிவியல் ரீதியாக 
  • தர்க்கரீதியாக 

     ஒன்றின் கீழாக நிறுத்தி அவை விளக்கப்பட வேண்டும். அது இஸ்லாத்திற்கும் பொருந்தும் -நாத்திகத்திற்கும் பொருந்தும்., ஆனால் இஸ்லாம் எப்படி குர்-ஆன் சுன்னாவை முன்னிருத்தி பிறரை தன்பால் அழைக்கிறதோ, அதுப்போல நாத்திகம் அதுக்கொண்ட கொள்கையே முன்னிருத்தி அழைப்பதில்லை. மாறாக ஒரு நிலையில் இஸ்லாத்தை விமர்சித்து -தவறான புரிதலுடன் குற்றப்படுத்தி தம் கொள்கையை பறைச்சாற்றுகிறது. எண்ணற்ற தளங்கள் இஸ்லாம் சார்ந்த விமர்சனத்திற்கு / குற்றச்சாட்டிற்கு தெளிவான விரிவான விளக்கம் தந்துக்கொண்ட இருக்கின்றன.

     மேலும் ஒரு கோணத்தில் உயிரின தோற்றத்தின் மூலத்திற்கு பரிணாமத்தை அடிப்படையாக கொண்ட சித்தாந்தத்தை அறிவியலாகவும்,  கண் முன் இல்லா கடவுளை ஏற்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாது என தர்க்க ரீதியாகவும் வாதமெழுப்ப நாத்திகம் முயல்கிறது., அவற்றை மறுக்கும் விதமாக கீழ்கண்ட தளங்களில்  நாத்திகத்தை பொய்ப்பித்து படைப்பியல் கொள்கையை நிறுவ இஸ்லாத்தை முன்னிருத்தாமல் அவர்களிலும் வழியிலேயே பரிணாமம் -கடவுள் -கம்யூனிசம் குறித்து ஆய்வு ரீதியாவும் தர்க்கரீதியாகவும் ஆக்கங்களை வெளியிடுகிறது.



     நீங்களும் பார்வையிடுங்கள் இந்த ஆக்கங்கள் சமூக பயன்பாடு உடையது என நீங்கள் நினைத்தால் இந்த பதிவை மீள்பதிவாகவோ அல்லது தனிப்பக்கமாகவோ உங்கள் வலைத்தளத்தில் வெளியிடுங்கள். குறைந்த பட்சம் நாத்திக சகோதரர்களுக்காவது இப்பக்கத்தை அறிய செய்யுங்கள். 


* * *

" சகோதரர் ஆஷிக் அஹ்மத்தின் பரிணாமம் குறித்த பதிவுகள் "  
  

1. பரிணாமவியலாளர்கள் செய்த பித்தலாட்டங்கள், 
2. பரிணாமம் என்றால் என்னவென்று விளக்குவதிலேயே குழப்பங்கள் இருப்பது, 
3. முதன் முதலாக உயிரினப்படிமங்களில் காணப்படும் உயிரினங்கள் திடீரென தோன்றியிருப்பது, 
4. பெரும்பாலான உயிரினங்கள் மாற்றமடையால் தொடர்ந்தது, 
5. பரிணாமவியலாளர்களுக்குள் இருக்கும் குழப்பங்கள், 
6. நவீன வர்ணாசிரமமாக மனிதர்களிடையே இனபேதத்தை கற்பித்து பலரின் அழிவுக்கு காரணமாக பரிணாமம் இருந்தது மற்றும் ஹிட்லரின் வெறிக்கு பின்னால் முக்கிய காரணகர்த்தாவாக பரிணாமம் இருந்தது,
7. ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இறைநம்பிக்கையாளர்களாக இருப்பது, 
8. பரிணாமம் குறித்து மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள்,
9. பரிணாமம் குறித்து ஆசிரியர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வுகள்.
10. குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்தானா?
11. பரிணாமம் உண்மையாக இருந்தால் கூட அதனை வைத்து இறைவனை மறுக்க முடியுமா? 

12. பரிணாமத்தின் துணை கொண்டு நடந்த அட்டுழியங்கள் - மனித ZOO 


மேலும் பரிணாமம் குறித்து இந்த தளத்தில் உள்ள கட்டுரைகள்

1. எழுத்து விவாதங்களில் பங்கேற்கும் முஸ்லிம்கள் கவனத்திற்கு - I 
2. புரியாதப் புதிர்கள்..
3. Evolution Theory --- மக்கள் என்ன சொல்கிறார்கள்?
4. பரிணாமவியலை நம்புபவர்கள் இதையும் நம்புவார்களா?
5. பரிணாமவியல் உண்மையென்றால் அறிவியலாளர்களிடம் ஏன் இவ்வளவு கருத்து வேறுபாடுகள்? 
6. Evolution St(he)ory > Harry Potter Stories - I
7. Evolution St(he)ory > Harry Potter Stories - II
8. Evolution St(he)ory > Harry Potter Stories - III
9. Evolution St(he)ory > Harry Potter Stories - IV 
10. தற்செயலாய் வீடு உருவாகுமா?
11. "செயற்கை செல்(?)" (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா நாத்திகத்தையா? 
12. Evolution St(he)ory > Harry Potter Stories - V
13. (பல) நாத்திகர்கள் அறியாமையில் இருக்கின்றார்களா?
14. Evolution St(he)ory > Harry Potter Stories - VI
15. சில ஆச்சர்யங்கள், சில கேள்விகள் - I
16. சில ஆச்சர்யங்கள், சில கேள்விகள் - II
17. இதுவும் சரி, அதுவும் சரி - எதுதான் தவறு?
18. Evolution St(he)ory > Harry Potter Stories - VII 
19. தயங்குகின்றார்களாம் ஆசிரியர்கள்...பரிணாமத்தை ஆதரிக்க !!!!!!!!!!! 
20. விஞ்ஞானிகளால் உயிர்பெற்ற பெண்ணடிமைத்தனம்...  
21. டாகின்ஸ் VS வென்டர் - யார் சரி? யார் தவறு?
22. உலக நாத்திகர் மாநாட்டில் முஸ்லிம்கள் விவாதம்...
23. உலகின் 'முதல்' பறவை இறந்தது...bye-bye birdie
24. மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்... 

25. வாட்சின்:ஆச்சர்யங்கள்-மர்மங்கள்-குழப்பங்கள்.

* * *






" சகோதரர் பைசலின் பரிணாமம் குறித்த பதிவுகள் ".
     


* * *



" சகோதரர் ஹைதரின் கம்யூனிசம் குறித்த பதிவுகள். "
     


அல்லாஹ் மிக்க அறிந்தவன்

13 comments:

  1. இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
    சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



    Please follow



    (First 2 mins audio may not be clear... sorry for that)

    http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk

    http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

    http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo


    Online Books
    http://www.vallalyaar.com/?p=409



    http://sagakalvi.blogspot.com/

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    அன்பின் குலாம்,

    சரியான‌ இல‌க்கை நோக்கி
    ஆதாரங்களுடன் ஆணித்தரமாக
    முறையாக விள‌க்கி
    எடுத்துரைக்கும்

    உங்க‌ளுக்கும்
    உங்க‌ள் தோழ‌ர்க‌ளுக்கும்
    என்னுடைய‌ இத‌ய‌ங்க‌னிந்த‌ பாராட்டுக்க‌ள்.


    வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

    .

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அழைக்கும்

    சகோதரே இந்த இணையதளத்தை பாராட்ட வார்த்தைகளில்லை ...

    அல்ஹம்துலில்லாஹ் ... அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக !

    ReplyDelete
  4. அன்பு சகோ sivamjothi28

    தங்களின் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக

    வாய்ப்பிருந்தால் வீடியோவை பார்த்து - கருத்துக்கள் இருந்தால் பதிகிறேன்
    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  5. வ அலைக்கும் சலாம் வரஹ்
    அன்பின் VANJOOR அப்பா அவர்களுக்கு.,

    பகிர்ந்த கருத்துகளுக்கு நன்றி., நீங்கள் கடந்து சென்றுக்கொண்டிருக்கும் பாதையில் நாங்களும் பயணிப்பதை எண்ணி உவகை அடைகிறோம.

    மேலான ஆதரவுக்கு நன்றி
    ஜஸாகல்லாஹ் கைரன்
    :)

    ReplyDelete
  6. வ அலைக்கும் சலாம் வரஹ்
    அன்பின் சகோ NAGORE FLASH
    அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்
    இஸ்லாத்தை விளக்கும் இமாலய தளங்களுக்கு இடையில் சிக்குண்ட சிறிய கல் தான் நான் முஸ்லிம் தளம் - மேலும் ஆக்கம் பல உருவாக துஆ செய்யுங்கள்
    மேலான கருத்திற்கு நன்றி சகோ
    ஜஸாகல்லாஹ் கைரன்
    :)

    ReplyDelete
  7. assalamualikkum
    தங்களின் கொள்கைகைள முன்னிருத்தி இஸ்லாத்தை விமர்சிக்கத்துனிவில்லாத குருட்டுக்கூட்டம இதற்க்கெல்லாம் பதில் ் தருமா என்று பார்த்துபார்த்து து காத்திருந்ததற்க்கு ஏமாற்றமதான் மிச்சம்

    அருமையான முயற்ச்சி
    ஜஸாக்கல்லாஹு கைரன்

    ReplyDelete
  8. வ அலைக்கும் சலாம் வரஹ்

    அன்பு சகோ abdul hakkim

    // பதில் ் தருமா என்று பார்த்துபார்த்து து காத்திருந்ததற்க்கு ஏமாற்றமதான் மிச்சம்//

    சரிதான் பல ஆக்கம் தொடர்பான பின்னூட்ட முடிவுகள் இதை தான் உணர்த்துக்கின்றன. எனினும் சொல்வது நம் கடமை என்பது நீங்களும் அறிந்த ஒன்றுதானே சகோ

    பகிர்ந்த கருத்துகளுக்கு நன்றி
    ஜஸாகல்லாஹ் கைரன்
    :)

    ReplyDelete
  9. வாசகர்களின் கனிவான பார்வைக்கு !

    இஸ்லாமியர்களை திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக ஆக்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ் கள்ளக் கூட்டணியும், உலகளாவிய அமெரிக்க பயங்கரவாதமும், பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும்,

    இந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு, எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் இயங்குகின்றன.

    "அமைதிக்காலங்களில் தான் எதிர்கால வகுப்புக் கலவரங்களுக்கான விதைகள் சத்தமின்றித் தூவப்படுகின்றன, ஆனால் நாம் அப்போது சும்மா இருக்கின்றோம்"

    சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

    ***** திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக்கும் மிருகங்கள். அவசியம் படியுங்கள். *****


    .

    ReplyDelete
  10. குலாம் ,அஸ்ஸலாமு அலைக்கும்,பகடுவில் பின்னூட்டம் இட வேண்டாம்.அவன் முன்பு தில்லுதுரை என்ற பெயரில் இஸ்லாம் பற்றியும் நபி[ஸல்]அவர்கள் பற்றியும் மிகக்கொடுமையாக எழுதி வந்தவன் .பின்னர் செங்கோடியிலும் நிலா என்ற பெயரிலும் எழுதியவனே இப்போது இந்த பெயரில் ஆட்டம் போட்டு வருகிறான் ,நீங்கள் என்னதான் விளக்கம் எழுதினாலும் அதை கேலி செய்வதே அவனது வழக்கம்.தினமணியில் அவன் முன்னர் எழுதியவைகள் அவனை சங்கபரிவார் சேர்ந்தவன் என்பதை தெளிவாக அடையாளம் காட்டும்.

    ReplyDelete
  11. வ அலைக்கும் சலாம் வரஹ்
    சகோ இப்ராஹிம் .. நீங்கள் சொல்வது சரிதான்!

    இருந்தாலும் அவர்களின் (தமிழன்- செங்கொடி- சாகித் & கோ) பொதுவான குற்றச்சாட்டு " ஆயத் / ஹதிஸ் குறித்து சொன்னா அங்கே விளக்க ஆளே வருவதில்லை.. என்பதே.,

    அல்ஹம்துலில்லாஹ்! எத்தனையோ சகாக்கள் அவர்களுக்கு மறுப்பும்- பொறுப்பான பதிலும் தெளிவாக கூறியிருந்தும் அவர்களின் பயணப்பாதை இஸ்லாத்தை முடக்குவதிலேயே கழிகிறது., ஆக அவர்கள் இஸ்லாம் என்பது வெறும் மாயையாக நிறுவ முயல்கிறார்கள்.

    ஆக நாமும் பதிலுக்கு அவர்கள் சார்ந்த கொள்கையே வெளிகொணர்வதற்காக சில செய்திகளை பதிவு செய்வதற்காகவே அங்கே சென்றோம் - எனினும் தாங்கள் குறிப்பிட்ட அத்தளத்திற்கு இதுவே என் முதல் பின்னுட்டம் என்பதையும் தாங்கள் அறிவீர்கள்.,

    அளித்த அறவுரைக்கு
    நன்றி சகோ
    ஜஸாகல்லாஹ் கைரன்

    ReplyDelete
  12. Tamilan has left a new comment on your post "நாத்திகனுக்குள் உண்மையைத் தேடி...":

    வணக்கம் நண்பரே, ஈஸ்வரன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்.

    என் தளத்தில் ஒரு பதிவு. வழக்கம் போல் வந்து மறுப்பு எழுதிவிட்டுப்போங்கள்.

    ReplyDelete
  13. எந்த ஒருவன் கடவுளாக இருக்க முடியுமோ அவனது அருள் உங்களுக்கும் எனக்கும் கிடைக்கட்டுமாக!

    அன்பு சகோ
    கவலைப்படாதீர்கள் "வழக்கம்ப்போல்" இனி நான் அங்கு பின்னூட்டம் பதிய போவதில்லை., ஏனெனில் எனது இறுதி பின்னூட்டத்தில் விவாதிக்கும் முறைமை குறித்து தெளிவாக "வழக்கம்ப்போல்" சொல்லியும் இருந்தேன்.

    அதுக்குறித்த பரிசீலனையும் "வழக்கம்போல்" .... மிஸ்ஸிங்.

    "வழக்கம் போல்" மௌனித்து பின் என் நினைவு வந்தவுடன் இங்கு பின்னூட்டமிட்டு "வழக்கம்போல்" மேற்கண்ட விஷயத்தை மறுபடி மறுபடி சொல்லாதீங்க..!

    எனது தளத்தில் தேவையற்ற வசைப்பாடல்கள், அநாகரிக தாக்குதல்கள் "வழக்கம்ப்போல்" பதிவதில்லை. நீங்கள் விரும்பினால் "வழக்கத்திற்கு மாறாக" இங்கே விவாதிக்கலாம்.. -இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்