"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Tuesday, November 29, 2011

இது 'திருடி' போட்ட பதிவு!


3D! 
   பொதுவாகவே பெரும்பாலானவர்களுக்கு நன்கு பரிச்சயமான வார்த்தையாக இருந்தாலும் தொழில் நுட்பம் சார்ந்தவர்களுக்கு அதிகம் பயன்பாட்டுமிக்க வார்த்தை இது. 3D என்றால் சட்டென நினைவுக்கு வருவது இதன் ஊடாக எடுக்கப்பட்ட ஆங்கில மற்றும் அனிமேஷன் திரைப்படங்கள் தான். அவைகள் 3D தொழில் நுட்பத்தின் முதிர்ச்சி தான் தவிர முழுவதும் திரைப்படங்களுக்காக உருவாக்கப்பட்டதல்ல அதன் நுட்பங்கள்...

முப்பரிமாணம் 
  3D என்று சுருக்கமாக சொல்லப்படுகின்ற Three Dimensional என்பதன் தமிழாக்கம் முப்பரிமாணம் என்பதாகும். இதன் முக்கிய நிகழ்வு மாற்றம் சாதாரணமாக நாம் பார்க்கும் அல்லது நோக்கும் ஒரு பொருளின் நீள, அகல, உயர அளவுகளை ஒருங்கிணைத்து காட்டி நேரடியாக பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி தரும் .
     பெரும்பாலும் இது இயற்பியல் மற்றும் பொறியியல் துறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. முப்பரிமாண தோற்றத்தின் மூலம் ஒரு பொருளின் அமைப்பை மற்றும் வடிவத்தை சுலபமாக புரிந்து கொள்ள முடியும்.


    3D தொழில் நுட்ப யுக்தி வணிக ரீதியாக இன்றும் ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் விளையாட்டுகளிலும் பயன்படுத்திக்கொள்ளப்படுகிறது . மேலும் பொழுதுப்போக்குத்துறையிலும் இதன் தாக்கம் எதிரொலித்தது 3D பயன்படுத்தி சில புகைப்படங்களும் உருவாக்கப்பட்டன. அப்படி உருவாக்கப்பட்ட சில புகைப்படங்களை காணுவதற்கே இப்பதிவு


அதற்கு முன்பாக,
இந்த வகை புகைப்படங்களை சாதரணமான நிலையில் எளிதாக பார்வையிட முடியாது. முதலில் இரு கண்களையும் ஒரே இடம் நோக்கி சீராக இணைக்க வேண்டும். அதாவது நம் இருகண்களும் மூக்கை பார்க்கும் வண்ணம் ஒரே மூலையில் ஒருங்கிணைக்க வேண்டும். அதற்கு முன் நமது மானிட்டரின் மையப்பகுதி நமது கண்ணிற்கு நேராக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 

   இந்த முறை படங்கள் அதற்குரிய தோற்றத்தில் நேரிடையாக தெரியாது. மாறாக அதன் வடிவில் மட்டுமே தெரியும். அதாவது ஜஸ்கிரீமில் ஒரு பகுதி எடுக்கும் போது, எடுக்கப்பட்ட பகுதியில் எப்படி குழியாக தோன்றுமோ அந்த அமைப்பில் இவ்வமைப்பு படங்கள் தெரியும். படங்கள் மிக தெளிவாக உங்களுக்கு தெரிந்தவுடன் உங்களுக்கும் அப்படத்திற்கும் உள்ள இடைவெளியே பின்னோக்கி, அதிகப்படுத்தினால் அப்படத்தின் உள்ளளவு அதிகரித்துக்கொண்டே போகும்.
சரிவர பார்க்கமுடியவில்லையென்றால் நான்காம் படத்தை மட்டும் முயற்சிக்கவும்.


முதலில் எளிதாக ஒரு படம்
இந்த மஞ்சள் நிறப்படத்தில் மேற்சொன்ன முறையே பயன்படுத்தி பார்வையிட்டால்., நடுவிற்கு சற்று நகர்ந்து இடதுபக்கத்தில் ஒரு கோழிக்குஞ்சு ஒன்று உள்ளதை பார்க்கலாம். அடுத்து, (2)
இந்த படத்தில் ஆறு செங்குத்தான மலை வடிவ கூம்புகளும் அவற்றிற்கு இடையிடையே குழிகளும் இருக்கிறது., இன்னும் எளிதாக சொல்வதாக இருந்தால் நமது வீட்டில் உபயோகப்படுத்தும் இட்லி சட்டிப்போன்று பள்ளங்களும் மேடுகளும்..அடுத்து,(3)
இந்த படத்தின் விளைவை எளிதாக விளங்கிக்கொள்ளலாம்., அதாவது நடுவில் இருக்கும் நீல வண்ணக்கோடு சாதாரணமாக பார்பதற்கு மேலெழும்பி இருப்பதுப்போல் தோன்றினாலும்., உண்மையாக 3ட் அமைப்பில் பார்க்கும் போது மிக செங்குத்தாக கீழ் நோக்கி போகிறது. கீழ் நோக்கி செல்லும் இருப்பக்க நீலகோடுகளையும் நடுவில் இருக்கும் வெள்ளை நிறக்கோடு இறுதியில் ஒரே புள்ளியில் இணைக்கிறது.இறுதியாக, (4)
இவ்வமைப்பு புகைப்படங்களில் இதை, மாஸ்டர் பீஸ் என்றே சொல்லலாம். ரோஜாக்களின் பின்னணியில் தெரியும் இந்த புகைப்படத்தில் நடுவில் ஒரு ஹார்ட் (வடிவம்) தெளிவாக இருக்கிறது. (தொண்ணுறாம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ஆனந்த விகடனின் பின்பக்க அட்டைப்படத்தில் இப்படத்தை பார்த்ததாக நினைவு.)


            தொடக்க காலத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்களே இவை. ஆனால் இதை பார்வையிடுவதை காட்டிலும் இன்னும் எளிதாக Stereoscopic imaging எனப்படும் முப்பரிமாண படிம படங்களால் பார்வையிட முடியும் 
* * *

முப்பரிமாண படிமம், 
  ஓர் படிமத்தில் உயரம்,அகலம் தவிர ஆழத்தின் தோற்றத்தை உருவாக்கவும் மூன்று பிரிமாணங்களில் காட்சித் தகவலை பதிவதற்கும் திறனுள்ள நுட்பமாகும். 

  ஒவ்வொரு கண்ணிற்கும் சற்றே வேறுபட்ட படிமத்தை ஏற்படுத்தி இருப்படத்திலும் ஒரே இயல்புத்தன்மையே உருவாக்குகிறது. பல முப்பரிமாண காட்சிகள் இந்த நுட்பத்தையே பயன்படுத்துகின்றன. இதனை முதலில் சர் சார்லெஸ் வீட்ஸ்டோன் என்பவர் 1840ஆம் ஆண்டு கண்டறிந்தார். இவ்வகை படிமங்கள் 3D ஒளிவருடிகளை கொண்டு உருவாக்கப்படுகின்றன.

படங்களின் துல்லியம், தெளிவு, நம் கண் முன்னே இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தும் பிரமிப்பு -இவ்வகை புகைப்படத்தின் கூடுதல் சிறப்பு.

இவ்வகைப்படத்திற்கு அதிக சிரத்தை தேவையில்லை. இருக்கும் இரண்டு படங்களை ஒரே படமாக இருக்குமாறு ஒன்றின் மீது ஒன்றை அடுக்கும் வண்ணம் கண்களை சுழற்றினால் போதும். கீழுள்ள படத்தில் இன்னும் எளிதாக இதை அறியலாம்.


இதனடிப்படையில் முதல் படத்தை பார்வையிவோம்.
அழகான மணல் திட்டு மேல் நோக்கியும் அதில் இருக்கும் இரண்டு குழிகள் கீழ் நோக்கி இருப்பதை காணலாம்.(2)
மிக நேர்த்தியான படம்., தேரை மட்டும் தெளிவாக அதன் பின்புலங்கள் மிக தொலைவில் மிக அருமையான புகைப்படம் (3)
உருக்கப்பட்ட நெருப்புப்போல்... பிளக்கப்பட்ட பளிங்கு கல் போல... இடை இடையிலே பள்ளம் (4)
இம்முறையில் இது ஒரு வித்தியாசமான படம் என்றே சொல்லலாம். முன்னே தெரியும் குட்டி டைனோசரஸ் 3D அமைப்பில் பின்னோக்கி இருக்கிறது.. (5)
இப்புகைப்படமும் 3D தொழில் நுட்பத்திற்கொரு சான்று! வலமிருந்து இடமாக வளைந்து செல்லும் பாலம் அத்தோடு எங்கோ தெரியும் ஆரஞ்சு நிற போர்டு., பார்த்தால் பிரமிப்பை தான் ஏற்படுத்தும்.(6)
சுவாலைகள் முன்னும் பின்னும் ....

இறுதியாக (7)
நான் பிரமித்த புகைப்படம் இது தொழில் நுடபத்தின் விளைவு மிக நேர்த்தி! திறக்கப்பட்ட கதவு முன்னோக்கி...அதிலும் இடது பக்கம் தெளிவாய் தெரியும் தாழ்பாள், தூரத்தில் மரங்கள்... அவசியம் பார்வையிட வேண்டிய புகைப்படம்...   இந்த பதிவிற்கு இது 3D போட்டோ பதிவு என பெயரிட நினைத்தேன் எனினும் இது தொழில் நுட்பம் சார்ந்த பதிவேன நினைத்து வருபவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்! இன்னும் crossed eye 3d photos என தேடினால் அனேக புகைப்படங்கள் அணிவகுக்கின்றன., நீங்களும் பார்வையிடுங்கள்., 


நன்றி
1.சகோ ஆமினா
2.சகோ ஜெயமாறன்
3. சகோ நிருபன்

Ref:11 comments:

 1. Ibnu Shakir has left a new comment on your post
  மிக சிறப்பான ஒரு பதிவு போட்டதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  இதே போல அறிவுப்பூர்வமான பதிவுகளையே தாருங்கள்.

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  குலாம் சாஹிப் !

  அடேங்கப்பா !!!

  அம்மாடியோவ் !!!!

  வ்வ்வாவ் !!!!!!

  க‌ண்ணுக்கும் கருத்துக்கும் அறிவுக்கும் .......

  "திருடி" போட்டு உள்ளங்களை "திருடி"ய‌ ப‌திவு.

  ReplyDelete
 3. வ அலைக்கும் சலாம் வரஹ்

  அன்பின் அப்பா....

  விரைவான வருகைக்கும்
  மகிழ்வான கருத்திற்கும்

  நன்றி
  ஜஸாகல்லாஹ் கைரன்

  ReplyDelete
 4. ada ponga pa nangalam 3D padatha thiruttu vcd la parppom. ana neenga ithukku pakkam pakkama eluthirukkinga...........

  arumai nanba valthugal..

  ReplyDelete
 5. அன்பு சகோ Jeyamaran
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ!

  ReplyDelete
 6. Ibnu Shakir has left a new comment on your post "இது 'திருடி' போட்ட பதிவு!":

  சகோ குலாம்
  நான் எழுதியதைத்தான் அப்படியே பிரசுரித்துவிட்டீர்களே. பிறகென்ன எடிட் செய்து போட்டது போல போட்டிருக்கிறீர்கள்?
  நீங்கள் அஞ்சாதவராயிற்றே!
  எதனைக்கண்டு அல்லது யாரைக்கண்டு அஞ்சுகிறீர்கள்?

  ReplyDelete
 7. அன்பு சகோ
  இந்த பதிவு நான் முஸ்லிம் தளத்தின் நோக்கங்களை அடிப்படையாக கொண்ட பதிவல்ல.. பயனளிக்கும் வகையில் பொழுதுப்போக்கிற்காக சில தகவலை அவ்வபோது பகிர்கிறேன். மாறாக கடவுள் - நாத்திகத்தை மையப்படுத்தி பதிவிடுவதே நான் முஸ்லிம் தளத்தின் அடிப்படை நோக்கம்

  சரி விசயத்திற்கு வருகிறேன்
  முன்னமே சொல்ல மறந்து விட்டேன்., உங்களின் முதல் மற்றும் அடுத்த பின்னூட்டத்தையும் அப்படியே வெளியிடுகிறேன். மாறாக எடிட் செய்யவில்லை. இருந்தாலும் மூலத்தில் அப்படியே வெளியிடாமல் என் பெயர் பதிந்து வெளியிட காரணம் இருக்கிறது சகோ

  பொதுவில் நிறுத்தும் எதன் மீதும் விமர்சனம் விவாதம் ஏற்படுவது இயல்புதான். உண்மையை அறிந்துக்கொள்ளும் நோக்குடன் அப்படி விவாதிப்பது, அவசியமானது -நியாயமானது கூட, ஆனால் இஸ்லாத்தை விமர்சிக்கிறேன் பேர்வழி என தொடங்கும் உங்களின் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகள், குற்றச்சாட்டை முன்னிருத்தியோ, விமர்சனமாக பதியப்படவில்லை. தொடர்பற்ற ஆயத் /ஹதிஸ்களை மேற்கோள் காட்டி கீழ்த்தரமான வசைப்பாடல்களை முன்னிருத்தி இஸ்லாம்- முஹம்மது நபி ஸல் அவர்களின் வாழ்வை விமர்சிப்பதாக உள்ளது. அப்படிப்பட்ட சீர்க்கெட்ட பதிவுகளை அடுத்தவர் பார்க்கும் வாய்ப்பு நான் முஸ்லிம் தளம் மூலமாக வழங்கக்கூடாதென்பதற்காகவே இவ்வாறு செய்தேன்.


  அது சரி., சுமார் 20 பதிவுகள் நாத்திகத்திற்கு எதிராக நான் முஸ்லிம் தளத்தில் இருக்க அதென்ன... இந்த பதிவிற்கு மட்டும் பின்னூட்டம்...?

  நீங்கள் எளிதில் இனங்காண்பதற்காக தளத்தின் வலதுப்புறத்தில் அப்பதிவுகளின் பட்டியலை இணைத்து இருக்கிறேன். மீண்டும் ஒரு முறை பார்வையிடுங்கள்., உங்களின் அடுத்த பின்னூட்டம் அதை நோக்கி இருக்க வேண்டும் என்பது என் ஆவல்!

  அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் தவிர யாருக்கும் நான் பயப்பட தேவையில்லை., பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை., உங்கள் கேள்விகளை /பதில்களை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன்.

  இன்ஷா அல்லாஹ்

  ReplyDelete
 8. Ibnu Shakir has left a new comment on your post "இது 'திருடி' போட்ட பதிவு!":

  அன்பு சகோதரர் குலாம்,

  அதற்கு கூட ஒரு முறை பின்னூட்டம் அளித்தேன். அதனையும் நீங்கள் இதே போலத்தான் பிரசுரித்தீர்கள்.

  மெஹர் பற்றிய விளக்கத்தை என் நண்பன் எழுதி நான் பிரசுரித்திருக்கிறேன். இது நகைச்சுவை பதிவு இல்லை. நேரடியான விமர்சனம்.

  மெஹர் என்பது என்ன?

  உங்கள் மேலான கருத்துக்களை அங்கே எழுதுங்கள்

  ReplyDelete
 9. G u l a m said...
  December 2, 2011 6:56 PM

  //ஒரு பெண்ணை அனுபவிப்பதற்கு ஒரு ஆண் அந்த பெண்ணுக்கு தரும் பணம்தான் மெஹர். //

  நல்ல தொடக்கம் ஆனாம் முழுவதும் தவறான புரிதல்...

  சகோ .,
  நான் எப்போதும் சொல்வது இதுதான்! ஒரு கொள்கையே எதிர்ப்பதாக இருந்தால் அல்லது அக்கொள்கையின் மூடத்தனத்தை பொதுவில் வைத்தால் அதைக்காட்டிலும் அல்லது அதற்கு மாற்றாக எல்லோருக்கும் நன்மைப்பயக்ககூடிய வகையில் ஒரு கொள்கையே நிறுவ வேண்டும்...
  ஆனால் நீங்கள் உட்பட இஸ்லாத்தை விமர்சிக்கிறேன் என ஆயத்/ ஹதிஸ்களை புட்டுபுட்டு (?) வைத்து மக்களுக்கு விளக்கும் எவரும் அதற்கு மாற்றாக என்ன நிலைக்கொள்கையே முன்னிருத்துகிறீர்கள்.?


  இஸ்லாத்தை விமர்சித்தே உங்களுக்கான எழுத்தை உங்களுக்கான கூட்டம் மத்தியில் புலம் பெயர செய்கிறீர்கள். உங்களுக்கான அடையாளம் "முன்னால் இஸ்லாமியர்" என்ற கட்டமைப்பில்.

  மஹர் குறித்த உங்கள் சிந்தனைக்கு என்னால் இன்ஷா அல்லாஹ் இங்கு விளக்கம் தர முடியும்... ஆனால் இப்பதிவு குற்றச்சாட்டோ / விமர்சனமோ முன்னிருத்தி பதிவிடப்படவில்லை மாறாக..

  //ஒரு பெண்ணோடு கலந்துவிட்டதுதான் காரணம். அதற்காகத்தான் அந்த மெஹர் திரும்ப பெறக்கூடாது. அந்த கலப்புக்கு கொடுக்கும் விலைதான் மெஹர். இதற்கு பெயர் விபச்சாரம். திருமணம் அல்ல.// >>>>> இப்படி!
  காழ்ப்புணர்ச்சியின் கலவை இப்பதிவு!
  உண்மையா சொல்லுங்கள் இப்பதிவை எந்த சமூக அக்கறையோடு எழுதுகிறீர்கள்? நான் இந்த பதிவு உள்ளே சொல்லவில்லை - வினவில் இதுக்குறித்து ஏற்கனவே விவாதிக்கப்பட்டுவிட்டது., ஒரு மேலோட்ட பார்வை மட்டுமே இங்கே.,

  சரி இஸ்லாம் கொடுத்து முடிக்க சொல்லும் மஹர் என்னும் திருமணகொடை வேண்டாமென்றால் வரதட்சணை எனும் சமூக கொடுமையின் வழி பெண்களிடத்தில் வாங்கி முடிக்கும் நிலை சரியா...?- இதற்கு பெயர் என்ன கரும்பு தின்ன கூலி என்பதோ...? அல்லது

  யாரும் யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்று சமத்துவ உலகம் படைக்கும் எண்ணத்தோடு ஒரு கம்யூனிஷ அரசியல் முலாம் பூசினால் நாளை விவாகரத்து ஏற்பட்டு பிரியும் போது யாருக்கய்யா பாதிப்பு? ஆணுக்கா... பெண்ணுக்கா...

  இன்றுவரை விவாகரத்து பெறும் ஆணுக்கல்ல பெண்ணுக்கே ஜீவானம்சம் தரப்படுகிறது! ஏன் தரப்பட வேண்டும்? வாழ்வியல் பாதிப்பு இருவருக்கும் தானே பெண்ணுக்கு மட்டும் ஏன்? இது பெண்களை வஞ்சிக்கும் செயலல்லவா? எங்கே போனது உங்களது உரத்துக்கூறும் ஆண் பெண் சமத்துவ சிந்தனை?

  அல்ஹம்துலில்லாஹ் இஸ்லாம்- குர்-ஆன் /ஹதிஸ் குறித்து உங்களிடம் பாடம் கற்கும் நிலையில் அல்லாஹ் என்னை வைத்திருக்கவில்லை .ஐயா., நாத்திகம் குறித்த ஐயங்களே எனக்கு மிகைத்து இருக்கிறது

  அதுக்குறித்து விவாதிக்க தயாரா...? மீண்டுமொரு முறை கேட்கிறேன். உண்மையில் நீங்கள் கொண்ட கொள்கையே இவ்வுலகிற்கு எடுத்துரைத்து அதன் வழி நல் பயணத்திற்கு மக்களை அழைப்பது உங்கள் நோக்கமாக இருந்தால் என் தள வாசல் திறந்தே இருக்கிறது.,

  அப்படி உண்மையாக - உண்மையே பேச உங்களுக்கு உடன் பாடென்றால் உங்கள் பெயர் முகவரியுடன் நான் முஸ்லிம் தளத்தில் பதிகிறேன்.

  நீங்கள் கொண்ட கொள்கை -நாத்திகம் பேச தயாரா நீங்கள்...?

  -இறை நாடினால் காத்திருக்கிறேன்
  உங்கள் சகோதரன்
  குலாம்.


  ( அவர் தளத்தில் பதியப்பட்ட பின்னுட்டம் இது)

  ReplyDelete
 10. * இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே! குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே அட மறந்தே போச்சி.சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர்.ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். please go to visit this link. thank you.

  * பெரியாரின் கனவு நினைவாகிறது! முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது! தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே !. please go to visit this link. thank you.

  * நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.

  * இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று! இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்!. please go to visit this link. thank you.

  * தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

  * தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

  * இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
  please go to visit this link. thank you.

  * ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

  * கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

  ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்