"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Wednesday, June 13, 2012

சுதந்திரம் எனப்படுவது யாதெனில்....


ஓரிறையின் நற்பெயரால்

மத அடிப்படையிலான இறை கட்டளைகள் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானாவை. அவை மனிதர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறி அவற்றை விட்டு வெளியே வந்தால் மட்டுமே முழுமையான சுதந்திர காற்றை நம்மால் சுவாசிக்க முடியும் என்கின்றனர்... நவீனத்துவ வாதிகள்(?)

சுதந்திரம் என்ற வார்த்தை உரிமையை அளவுகோலாக கொண்டு கணிக்கப்படுகிறது. உரிமைகளே பெறப்பட்ட சுதந்திரத்தை பறைசாற்றும். உரிமைகள் பலவழிகளில் பெறப்பட்டாலும் பொதுவாக நான்கு மிகமுக்கியமாக இருக்கிறது.

 • கருத்துரிமை
 • பேச்சுரிமை
 • அரசியல் உரிமை
 • சமய உரிமை

இப்படி தனிமனித மற்றும் சமூகம் சார்ந்த நிலைப்பாடுகளின் கீழாக நாம் எடுக்கும் எந்த ஒரு தன்னிச்சையான முடிவுகளிலும் நமது விருப்பத்திற்கு மாற்றமாக அடுத்தவரின் தலையீடோ, துன்புறுத்தலோ, கட்டாயப்படுத்துதலோ இல்லாதிருப்பதே தனிமனித சுதந்திரம் எனப்படுகிறது.

இப்படி பொது பார்வையில் சுதந்திரம் என்பது நமது செயல்களை நாமே தீர்மானித்துக்கொள்ளும் உரிமையை வழங்குவதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் நமது உரிமைகள் நம்மால் முழுவதும் தீர்மானிக்கப்படுவதில்லை. இது தான் ஆச்சரியமான உண்மையும் கூட! இதை சில உலகியல் நிகழ்வுகள் வாயிலாக நிதர்சனமாக உணரலாம்.

சுதந்திரம் நமது பிறப்புரிமை... என்பதே எல்லோர் வாழ்விலும் முன்மொழியப்படும் முதன்மையான முழக்கமாகும். ஆனால் எங்கே பிறக்க வேண்டும், எப்படி பிறக்க வேண்டும் என்ற பிறக்கும் உரிமை கூட நம்மில் எவருக்கும் அவரவர் வசம் வழங்கப்படவில்லை. அது போலவே எப்போது மரணிக்க வேண்டும், எங்கே மரணிக்க வேண்டும் என்று சுயமாய் இறப்பை தேர்வு செய்யும் உரிமையும் நமக்கு வழங்கப்படவில்லை.

இப்படி பிறப்பையும் - இறப்பையும் தேர்ந்தெடுக்க உரிமம் பெறாத நமக்கு இவற்றுக்கு இடைப்பட்ட காலத்திலாவது நமது தனிமனித சுதந்திரத்தின் கீழாய் ஒன்றை செயல்படுத்துகிறோமா என்றால் அதுவும் இல்லை...

நமது உணவு பழக்கவழக்கமாகட்டும், கல்வியாகட்டும், ஆடை அணியும் முறையாகட்டும், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகட்டும் இவை எல்லாம் ஏற்கனவே வரையறை செய்து வைக்கப்பட்ட முறைமையின் கீழாக தான் தொடர்கிறோம். புதிதாய் நாம் ஒன்றையும் நமது உரிமையின் அளவுகோலாய் வைத்து தொடங்குவதில்லை. அப்படி சுய தீர்மானிப்பின் கீழ் ஒன்றை பெறுவதாய் இருந்தாலும் அது எதிர்மறை விளைவை தான் ஏற்படுத்தும்.

சின்ன உதாரணம் பாருங்கள், நமக்கு எவ்வளவு திறமைகள் இருந்தாலும் ஒரு விளையாட்டு போட்டியில் ஈடுபடும் போது அந்த விளையாட்டிற்கான விதிமுறைகளுடன் உடன்பட்டால் மட்டுமே அந்த போட்டிகளில் நம்மை சேர்த்துக்கொள்வார்கள். இல்லை எனக்கு எல்லாம் தெரியும் நானாக தான் எல்லா முடிவுகளும் எடுப்பேன் என்றால்.. அந்த விளையாட்டில் நம்மை சேர்த்துக்கொள்ளவே மாட்டார்கள்.

அது போலவே,நாம் பெரும் தொகை கொடுத்து வாங்கும் வாகனம். அதில் நமது காசில் வாங்கிய எரிபொருள், ஓட்டுனரும் நாமே அதற்காக சாலைகளில் நமது விருப்பத்திற்கு ஓட்ட முடியுமா??? அட சாலைகளும் நம்முடையது என்றே வைத்துக்கொண்டாலும் அப்பவும் நமது பயணத்தை நமது தனிமனித சுதந்திரம் என கூறி நமது விருப்பமாய் அமைக்க முடியாது.

மாறாக சிறியதாய் எரியும் சிவப்பு விளக்கிற்கு கட்டுப்பட்டுதான் நிற்க வேண்டும். அட அந்த சிவப்பு விளக்கு கூட நமது காசில் வாங்கிக்கொடுக்கப்பட்டதாக இருந்தாலும் சரியே! இல்லை... இல்லை எனது சுதந்திரத்தை தீர்மானிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது என கூறி அந்த சிவப்பு விளக்கை அலட்சப்படுத்தி பயணம் மேற்கொண்டால்...

சுதந்திரம் குறித்த நமது அடிப்படை புரிதலே முதலில் தவறு, சுதந்திரம் என்றால் கட்டுப்பாடுகளை உடைப்பது அல்லது மறுப்பது அல்ல. மாறாக அத்தகைய கட்டுபாடுகளால் ஏற்படும் விளைவு நமக்கு நன்மை ஏற்படுத்த வல்லதா தீமை ஏற்படுத்த வல்லதா என்பதை சுய அறிவுடன் தீர்மானித்து அதை ஏற்று சுதந்திரமாய் செயல்படுத்துவதே..!


இறுதியாய்
சுதந்திர கொடியாக இருப்பீனும் கூட அது வானில் பட்டொளி வீசி பறக்க வேண்டுமானால் உயர்ந்த கம்பத்தில் கட்டப்பட்ட கயிறு அக்கொடியுடன் இணைப்பட்டிருந்தால் மட்டுமே அது சாத்தியம்.

அது போல விண்ணில் அங்குமிங்குமாய் அலையும் பட்டம் கூட கீழே நிற்கும் ஒரு சிறுவனின் கைப்பிடியில் கட்டுண்டால் மட்டுமே அவை தன்னை எப்போதும் விண்ணில் நிலை நிறுத்திக்கொள்ள முடியும். இவை இரண்டும் சுதந்திரம் எனும் பெயரில் தன்னிச்சையாய் செயல்பட எண்ணி அவை இணைக்கப்பட்ட பிணைப்பிலிருந்து தன்னை விடுவிக்க முற்பட்டால்...

பதில் தரும் பொறுப்பை உங்களிடமே தருகிறேன்.

மாற்று சிந்தனை தவிர்த்து தன் மன இச்சைகளை பின்பற்றி எடுக்கும் முடிவுகளுக்கு பெயர் தான் சுதந்திரம் என்றால் அப்படிப்பட்ட சுதந்திரத்தால் இறுதியில் ஒழுக்கக்கேட்டை தான் நாம் அடைய முடியும்.

எவ்வளவு பிரபலமான ஆளாக இருப்பீனும் ஐம்பது பைசா போஸ்ட்கார்ட்டில் கூட பெறுநராக அவர் பெயர் எழுதாவிட்டால் அது அவரிடத்தில் போய் சேர்வதில்லை. உலகியல் கட்டுப்பாடுகளே இப்படி இருக்க

எல்லாம் அறிந்த ஓர் உயரிய சக்தி வழங்கும் தெளிவான மற்றும் பாதுகாப்பான வழிமுறையை பின்பற்றினால் ஈருலகிலும் நாம் வெற்றி பெறலாம் என்ற மனித வாழ்வில் பின்பற்ற உகந்த செயல்களை கட்டுப்பாடுகளுடன் விதித்திருக்க, நமக்கு வழங்கப்பட்ட சிற்றறிவு மூலம் அவை தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என எதிர்க்க முற்பட்டால் இறுதியில் நமக்கே அது நஷ்டத்தை ஏற்படுத்தும்.

சிந்தியுங்கள் ...
எது சுதந்திரம்..?
எது முழுமையான சுதந்திரம்..?

அல்லாஹ் மிக்க அறிந்தவன்


38 comments:

 1. Freedom is not broken to rules & rights, but thats rules affect our society, that time we struggle for freedom,
  super line, masha allah...
  Lovely explain, easily almost people understand ur article...

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

   வருகைக்கும் கருத்திற்கும்
   ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

   Delete
 2. பதிவு அருமை ....

  சுதந்திரம், கட்டுப்பாடு இவை இரண்டும் ஒன்றா ?

  ReplyDelete
  Replies
  1. = பதிவு அருமை .... ==

   நன்றி!

   == சுதந்திரம், கட்டுப்பாடு இவை இரண்டும் ஒன்றா ? ==
   அனானி அண்ணே என்ன சொல்ல வர்றீங்கன்னு சரியா புரியல கொஞ்சம் தெளிவா சொல்லுங்கண்ணே...

   Delete
 3. முஸ்லிம்களுக்கு தமிழக அரசின் பச்சைத் துரோகம்! 1.

  முஸ்லிம்கள் கொந்தளிப்பு! – முற்றுகைப் போராட்டம் அறிவித்தது டிஎன்டிஜே!!

  தமிழக அரசு ஒப்பந்தப் பயிற்சி மருத்துவர் பணி நியமனத்தில் மிகப்பெரிய பச்சைத் துரோகத்தை முஸ்லிம்களுக்கு இழைத்துள்ளது.

  முன்பெல்லாம் முஸ்லிம் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 3.5சதவீத இடஒதுக்கீட்டை 2 சதவீதம், அல்லது 2.5சதவீத வீதம் என இட ஒதுக்கீட்டைக் குறைத்து வழங்கி துரோகமிழைத்து வந்த தமிழகஅரசு தற்போது ஒரு இடம் கூட வழங்காமல் கோழி முட்டையை முஸ்லிம்களுக்கு வழங்கி தன்னுடைய முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்தியுள்ளது.

  நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவேன் என வாக்களித்து முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்ற ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்த பின்னரும் அந்த வாக்குறுதி பற்றி வாய் திறக்கவில்லை.

  அடிக்கடி தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் சட்டசபையில் அறிக்கை வாசிக்கும் ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு குறித்து வாய் திறந்ததில்லை.

  இந்த நிலையில் ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவதற்குப் பதிலாக அவர் பாஷையில் பட்டை நாமம் போட்டுள்ளார்.

  கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் 1349 மருத்துவர்கள் அரசு மருத்துவப் பணிக்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

  முஸ்லிம்களுக்கான 3.5சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 47 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

  இட ஒதுக்கீடு அடிப்படையில் மட்டும் இல்லாமல் பொதுப்பிரிவில் தகுதியான முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட முடியும். அந்த வகையில் 20 நபர்களாவது தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

  இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலோ, பொதுத்தேர்வு அடிப்படையிலோ எந்த முஸ்லிமும் தேர்வு செய்யப்படவில்லை. ஒரே ஒரு முஸ்லிமைக் கூட இந்த அரசு நியமிக்கவில்லை.

  இதோ தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல்:
  அரசால் தேர்வு செய்யப்பட்ட மருத்தவர்களின் முழு பட்டியலை காண இங்கே கிளிக் செய்யவும்

  கடந்த முறை இதே போன்று மருத்துவ பணி நியமனத்திற்காக அழைக்கப்பட்ட 2438 மருத்துவர்களில் 88 முஸ்லிம்கள் உள்ளனர்.
  சரியாக 3.5 % வழங்கப்பட்டுள்ளது.

  பொதுப்பிரிவில் முஸ்லிம்கள் தேர்வு செய்யப்படாததால் இதுவே முஸ்லிம்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

  ஆனால் இப்போது செய்யப்பட்டுள்ள பச்சைத் துரோகம் இந்திய அரசியல் வரலாற்றில் பீஜேபி கூட செய்யத் துணியாத பச்சைத் துரோகமாகும்.

  ஒரு முஸ்லிம் கூட நியமிக்கப்படக் கூடாது என்ற அளவுக்கு இவர்கள் வெறிபிடித்து அலைவதற்குக் காரணம் என்ன?

  3.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க சட்டம் இருந்தும் அதைக் கூட காலில் போட்டு மிதிக்கும் அளவுக்கு இவர்களுக்குத் துணிவு வரக் காரணம் என்ன?

  இந்த அநீதி சரி செய்யப்பட்ட வேண்டும்.

  முஸ்லிம்கள் பொதுப்பிரிவிலும் சேர்த்து 70 பேர் உடனடியாக நியமிக்க வேண்டும்.

  இதற்குக் காரணமான அதிகாரிகள் மீதும், அமைச்சர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது அறிக்கையில் கூறியுள்ளதோடு சென்னை கிரீன்ஸ் ரோட்டிலுள்ள டிஎன்பிஎஸ்ஸி அலுவலகத்தை முற்றுகையிட்டு முஸ்லிம்களின் எதிர்ப்பைத் தெரிவிக்க, மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை 14.06.12 வியாழன் அன்று காலை 11மணிக்கு நடத்துவது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னை மாவட்டம் அறிவித்துள்ளது.

  பயிற்சி ஒப்பந்த மருத்துவர்கள் பணிநியமனத்தில் மட்டுமல்லாது, நூலகர்களை பணியமர்த்திய விஷயத்திலும் இந்த துரோகம் தொடர்கின்றது.

  Continued………

  ReplyDelete
 4. முஸ்லிம்களுக்கு தமிழக அரசின் பச்சைத் துரோகம்! 2.

  தமிழ்நாட்டில் மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் 41 நூலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிலும் ஒரு முஸ்லிமுக்குக் கூட இடம் வழங்கப்படவில்லை.

  இது போன்று தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் நூலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த 32 மாவட்டங்களிலும் இதுதான் நிலை என்று சொல்லப்படுகிறது.

  இதன் மூலம் தமிழக அரசு முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் துரோகம் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

  வேண்டுமென்றே திட்டமிட்டு முஸ்லிம்களை அனைத்து அரசுப்பணிகளிலும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு இவ்வாறு செயல்பட்டு வருவது இதன் மூலம் உறுதியாகின்றது.

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வாணையம் ஆகியவை மூலம் போட்டித் தேர்வு நடத்தி, தமிழக அரசு பணியாளர்களை நியமித்து வருகிறது.

  இதுபோல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பதிவு மூப்பு அடிப்படையிலும் ஏராளமானோரை தமிழக அரசு பணிக்கு நியமித்து வருகிறது.

  இது போக சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என பல்லாயிரம் பேரை மாவட்ட ஆட்சியர் மூலம் தேர்ந்தெடுக்கிறது.

  நகராட்சி மூலம் பேட்ஜ் டிரைவர் போன்றவர்களும் பணியமர்த்தப்படுகிறார்கள்.
  இந்த அரசு வேலை வாய்ப்புகள் அனைத்திலும் முஸ்லிம்கள் 3.5 சதவீத அடிப்படையில் நியமிக்கப்படவில்லை.

  மாறாக வஞ்சக எண்ணத்துடன் இவர்கள் ரகசியமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று முஸ்லிம்கள் குமுறுகின்றனர்.

  முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிப்போம் என்று வெற்று வாக்குறுதி அளித்து முஸ்லிம்களை ஒரு புறம் ஏமாற்றிக் கொண்டு, மற்றொரு புறத்தில் அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் 3.5 சதவீத இட ஒதுக்கீடையும் பறிக்கும் அ.தி.மு.க. வின் செயல் மிகவும் கண்டனத்திற்குரியது.

  எனவே தமிழக அரசு உடனே வெள்ளையறிக்கை வெளியிட்டு, முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்ட நாள் முதல் இன்று வரை தமிழக அரசின் எத்தனை பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

  அதில் முஸ்லிம்களுக்கான 3.5சதவீத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளனவா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

  இட ஒதுக்கீடு அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு தந்திருந்தால் அதை தெளிவுபடுத்த வேண்டும்.

  வாய்ப்புத் தராமல் முஸ்லிம்களை புறக்கணித்திருந்தால் அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. அழகிய கருத்துக்களுக்கு
   ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

   Delete
 5. அஸ்ஸலாமு அலைக்கும்

  ரொம்ப எளிமையான தெளிவு...
  மாஷாஅல்லாஹ்..

  அரசியல் பாடம் படிக்கும் போது என்னவெல்லாம் குழப்பினாங்க சுதந்திரம் என்றா என்ன என்று சொல்ல..யு கிரேட் அண்ணா
  உங்கள் சகோ
  பஸ்மின்

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்

   == ரொம்ப எளிமையான தெளிவு...==
   அல்ஹம்துலில்லாஹ்

   வருகைக்கும் வாசிற்பிக்கும் நன்றி
   ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

   Delete
 6. சிறந்த விளக்கங்கள். பதிவு அருமை.

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

   ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

   Delete
 7. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

  போலியாக சித்தரிக்கப்படும் சுதந்திரம் குறித்து, மிக தெளிவான கேள்விகளைக்கொண்ட அருமையான பதிவு!. மாஷாஅல்லாஹ்..


  இறைவன் தங்களின் இப்பணிக்கு நற்கூலி வழங்குவானாக..

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்

   கருத்திற்கும் வருகைக்கும்
   ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

   Delete
 8. சுதந்திரம் மறுப்பு என்பது ....ஒட்டு மொத்த மணித இனத்திற்கும் பாகு பாடு இல்லாமல்

  எல்லோருக்கும் எல்லாம் என்றால் அங்கே சுதந்திரம் இருக்கு என்று பொருள்

  பட்டம் விடும் சிறுவனிடம் உனக்கு பாத்து முழ நூல் மட்டுமே

  இன்னொரு சிறுவனுக்கு முழு நூல் கண்டு எவ்வளவு

  தூரம் வேண்டுமானாலும் பறக்க வடலாம் என்றால் ..

  முதலாம் சிறுவனின் சுதந்திரம் பறிக்க பட்ட தானே அர்த்தம்

  அதே போன்று மதத்தின் பெயரால் இனத்தின் பெயரால்

  எதனைஎல்லாம் தடுக்கிறார்கள் அரசு வேலை வாய்ப்பு

  குறிப்பிட்ட மதம் இனத்திற்கு மட்டுமே என்றால்

  மற்றவனெல்லாம் ...ஒலிபெருக்கி வைத்து நாட்கள்

  முழுவது பக்தி பாடு போடலாம் அது சுதந்திரம் ..

  ஐந்து நிமிட பாங்கொலி தூக்கத்திற்கு இடையூறு

  ஐந்து நிமிட பாங்கு கூறுவதை தடுப்பதுதான் சுதந்திர மறுப்பு

  கட்டுப்பாடை மீறுவதல்ல சுதந்திரம் ..அனுமதிக்க பட்ட விசயம்

  அடைய துடிப்பதுதான் சுதந்திரம் ..

  ReplyDelete
 9. சுதந்திரம் மறுப்பு என்பது ....ஒட்டு மொத்த மணித இனத்திற்கும் பாகு பாடு இல்லாமல்

  எல்லோருக்கும் எல்லாம் என்றால் அங்கே சுதந்திரம் இருக்கு என்று பொருள்

  பட்டம் விடும் சிறுவனிடம் உனக்கு பாத்து முழ நூல் மட்டுமே

  இன்னொரு சிறுவனுக்கு முழு நூல் கண்டு எவ்வளவு

  தூரம் வேண்டுமானாலும் பறக்க வடலாம் என்றால் ..

  முதலாம் சிறுவனின் சுதந்திரம் பறிக்க பட்ட தானே அர்த்தம்

  அதே போன்று மதத்தின் பெயரால் இனத்தின் பெயரால்

  எதனைஎல்லாம் தடுக்கிறார்கள் அரசு வேலை வாய்ப்பு

  குறிப்பிட்ட மதம் இனத்திற்கு மட்டுமே என்றால்

  மற்றவனெல்லாம் ...ஒலிபெருக்கி வைத்து நாட்கள்

  முழுவது பக்தி பாடு போடலாம் அது சுதந்திரம் ..

  ஐந்து நிமிட பாங்கொலி தூக்கத்திற்கு இடையூறு

  ஐந்து நிமிட பாங்கு கூறுவதை தடுப்பதுதான் சுதந்திர மறுப்பு

  கட்டுப்பாடை மீறுவதல்ல சுதந்திரம் ..அனுமதிக்க பட்ட விசயம்

  அடைய துடிப்பதுதான் சுதந்திரம் ..

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கும் வருகைக்கும்

   நன்றி ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

   Delete
 10. என்னதான் சுதந்திரத்தைப் பற்றி பக்கம் பக்கமாக பேசினாலும் எழுதினாலும் அதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது என்று தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். சுதந்திரத்திற்கும் ஒரு எல்லை இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. சுதந்திரம் என்பதும் கட்டுப்பாடோடு கையாண்டால் மட்டுமே நாகரீகமாக அமையும் என்று சொன்னதன் மூலம் உலகில் அனைவருமே கட்டுப்பட்டு தான் வாழ்கிறார்கள் என்று வித்தியாசமான கோணத்தில் நிதர்சனத்தை சொல்லியிருக்கிறீர்கள் (அப்பாடா...புரிஞ்சுதா?;)))). அருமை. வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

   = என்னதான் சுதந்திரத்தைப் பற்றி பக்கம் பக்கமாக பேசினாலும் எழுதினாலும் அதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது என்று தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். =

   அல்ஹம்துலில்லாஹ்

   வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
   ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

   Delete
 11. //ஐந்து நிமிட பாங்கு கூறுவதை தடுப்பதுதான் சுதந்திர மறுப்பு
  //
  அதே போல சவுதி அரேபியாவில் இந்து பக்தி பாடல்களை ஒலிபரப்புவதற்கு ஆதரவு தெரிவிப்பீர்களா சகோ?

  ReplyDelete
  Replies
  1. //சவுதி அரேபியாவில் இந்து பக்தி பாடல்களை ஒலிபரப்புவதற்கு//

   அந்நாட்டின் குடிமக்கள் இந்து மதமாக இருந்து விருப்பப்பட்டு போராடினால்..........
   ====================================================================
   கூடுதல் தகவல்களாக!

   நாகூர் தர்கா போன்றவற்றில் நடக்கும் சந்தனக்கூடு, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் அங்கு கிடையாது.

   மேடைபோட்டு அரசியல்வாதிகளால் காதுகள் கூச வசைபாடும் ஆபாச வர்ணனைகள் கிடையாது. வயது வித்தியாசம் பாராமல் செவிகளை பதம்பார்க்கும் ஒலி பெருக்கி அலறல்கள் கிடையாது.

   இதுவும் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால், உங்களின் அரசியல் ஆதாயத்திற்கு ஒரு மதம் சார்ந்த விஷயம் மட்டும் தேவை. அப்பொழுதுதானே இந்தியர்களின் ஒற்றுமையை கெடுக்க வெள்ளையன் கையாண்ட தந்திரம் பயனளிக்கும்.

   ஏன் அனானி அவர்களே!

   ஆமா! இந்நாட்டின் குடிமக்களின் மதம் சார்ந்த விருப்பங்களை பூர்த்திசெய்து விட்டுத்தான் இந்த கேள்வியை கேட்கிறீர்களா?, தேடிப்பாருங்கள், நம் நாட்டில் ஒரு மதத்திற்குள்ளேயே எத்தனை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன என்பது தெரியும்.

   Delete
 12. கட்டுரை ஆசிரியர் கேட்ட கேள்விக்கு பதில் ..

  இந்தியமண்ணில் பிறந்த குடிமகன் ..

  எல்லா வற்றிலும் சமம் ..பேசும் மொழி

  உண்ணும் உணவு உடுத்தும் உடை ..

  நுகர்வு எல்லாம் ஒன்று ..அரசை தேர்ந்தெடுக்கும்

  தேர்தல் வரும்போது கூட என் சகோதர .சகோதரிகளே

  வாக்குகளைதாருங்கள் கேட்கும்போது கூட எல்லாம் ஒன்று

  ஆட்சி ..என வந்து விட்டால் ..உனக்கு அறுபது பங்கு அவனுக்கு

  நாற்பது பங்கு ..மத்தவனுக்கு ..ஊ......தான் என்றால் எப்படி ..

  ReplyDelete
 13. அட!
  சவுதி அரேபியா மக்கள் இந்து மதத்துக்கு மாற உரிமை உள்ளதா சகோ?

  ReplyDelete
 14. எல்லா நாட்டிற்கும் அவர்களுக்கென்று ஒரு சட்ட திட்டம் வகுத்து வைத்திருக்கின்றனர்.... ஒரு நாட்டின் சட்டத்தில் இன்னொரு நாடோ நாட்டு மக்களோ தலையிட முடியாது... அந்நாட்டு சட்டப்படி ஒரு சவூதி குடிமகன் இந்து மதத்துக்கு மட்டுமல்ல எந்த மதத்துக்கும் மாற முடியாது.

  நம்நாடு மத சார்பற்ற ஜனநாயக நாடு நம்நாட்டு அரசியல் சட்டப்படி அனைவருக்கும் சம உரிமை உண்டு... அவரவர் மதங்களை பரப்பவும் பின்பற்றவும் முழு உரிமை இருக்கு

  ஏற்கனவே அவர்கள் சிலைவணக்கத்தில் இருந்து மாறி முஸ்லிம்களாக மீண்டவர்கள் தான்.....

  பாகிஸ்தான் மலேசியா இந்தோநேசியா போன்ற முஸ்லிம் நாடுகளில் இந்து கோவில்கள் மற்றும் அவர்களுக்கு சுதந்திரம் உள்ளதே....

  பிற நாடுகளை ஓப்பீடு செய்வதை காட்டிலும் நம்நாட்டில் நடப்பதை பற்றி பேசினால் பயனுள்ளதாக இருக்கும்...

  ReplyDelete
 15. அருமையான பதில் சகோ,
  ஆகவே இந்தியாவை இந்துநாடாக ஆக்கி அனைவரும் கட்டாயமாக இந்துக்களாகத்தான் இருக்க வேண்டும் என்று சட்டம் போட்டால், அந்த சட்டத்தை நீங்கள் மதிப்பீர்களா சகோ?

  சவுதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகள் ஆட்சேபித்தால்,

  அதில் மற்றவர்கள் தலையிடக்கூடாது என்று சவுதி அரேபிய அரசாங்கத்திடம் சொல்வீர்களா? அந்த சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று இந்திய குடிமக்களிடம் சொல்வீர்களா?

  ReplyDelete
 16. அன்பு சகோ, அனானி.,

  உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!..

  முதலில் பொதுவான அடிப்படையே நாம் புரிந்து வைத்திருக்க வேண்டும் சகோ. ஒவ்வொரு நாட்டுகென்றும் ஒரு வரையறையும் சில சட்டத்திட்டங்களும் பிறிதொரு நாட்டிற்கு மாறுபடும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே...

  அப்படியிருக்க ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட ஒரு நாட்டின் சட்டத்தில் அதற்கு சிறிதும் தொடர்பில்லாத வேற்று நபர்கள் தலையீடுவது என்பது எப்படி ஏற்புடையதாகும்.

  அது சவுதி அரசாங்கத்திற்கும் பொருந்தும், இந்திய அரசாங்கத்திற்கும் பொருந்தும். இவை இரண்டும் அல்லாத வேறு நாடுகளுக்கும் பொருந்தும் சகோ.

  == ஆகவே இந்தியாவை இந்துநாடாக ஆக்கி அனைவரும் கட்டாயமாக இந்துக்களாகத்தான் இருக்க வேண்டும் என்று சட்டம் போட்டால், அந்த சட்டத்தை நீங்கள் மதிப்பீர்களா சகோ?

  சவுதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகள் ஆட்சேபித்தால்,==

  உங்கள் புரிதல் தவறு சகோ,
  ஒரு நாட்டின் குடிமகன் என்ற விதத்தில் நமக்கு எதிராக ஒரு சட்டம் இயற்றப்பட்டதாக அதை எதிர்த்து குரலிடுவது நமது அடிப்படை உரிமை. அதற்கு எதற்கு பிற நாட்டின் ஆட்சபனை வேண்டும்?

  ஒரு வேளை நாளையே இந்திய அராசங்கம் முடிவெடுத்து இந்தியாவை இஸ்லாமிய நாடாக ஆக்க தீர்மானித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் சகோ...?

  இதை எதிர்க்கும் நாடுகளை ஆதாரிப்பீர்களா? எதிர்ப்பீர்களா..?

  சகோ பாகிஸ்தான், சவுதி போன்ற நாடுகள் இஸ்லாமிய ஆட்சியுடைய மதசார்புடைய நாடுகள் என்றே தன்னை இந்த சமூகத்தில் இனங்காட்டியிருக்கிறது,

  ஆனால் இந்தியா அப்படியல்ல அது தன்னை மதசார்ப்பற்ற நாடென்றே பிரகடனப்படுத்துகிறது .. அடிப்படை வித்தியாசங்களை புரிந்துக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

  மாற்றுக்கருத்து இருப்பீன் மற்றவை பிற
  உங்கள் சகோதரன்
  குலாம்

  ReplyDelete
 17. ///ஆகவே இந்தியாவை இந்துநாடாக ஆக்கி அனைவரும் கட்டாயமாக இந்துக்களாகத்தான் இருக்க வேண்டும் என்று சட்டம் போட்டால், அந்த சட்டத்தை நீங்கள் மதிப்பீர்களா சகோ?///

  முதலில் இந்தியாவை இந்து நாடாக மாற்றட்டும் பிறகு நீங்கள் சொல்வதைப் பற்றி யோசிக்கலாம்... பிறக்காத பிள்ளைக்கு பேர் எதற்கு...

  ///அதில் மற்றவர்கள் தலையிடக்கூடாது என்று சவுதி அரேபிய அரசாங்கத்திடம் சொல்வீர்களா? அந்த சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று இந்திய குடிமக்களிடம் சொல்வீர்களா?////

  நம் நாட்டின் இறையாண்மையில் சவூதி என்ன அமெரிக்கா கூட தலையிட முடியாது.. குஜராத் இனப்படுகொலையில் எந்த முஸ்லிம் நாடு வந்து தலையிட்டது..? அல்லது இலங்கையில் நடந்த இனப்படுகொலையில் எந்த நாடு வந்து தலையிட்டது.. வெட்டப்பட்டவர்கள் இந்துக்கள்.... அவர்கள் தமிழர்கள் என்பதால் தமிழக தமிழர்களை தவிர வேறு எந்த இந்தியரும் குரல் கொடுத்தார்களா...?

  பொதுவாக எந்த நாட்டு மக்களாவது அந்த நாட்டு தலைவர்களால் கொடுமைப்படுத்தபட்டால் ஐநா என்ற டம்மி அமைப்பிடம் முறையிடலாம்... இந்திய முஸ்லிம்களுக்கு பிரச்சனை என்றால் எந்த முஸ்லிம் நாடும் ஆட்சேபனை தெரிவிக்காது.. மனிதாபிமான அடிப்படையில் குரல் கொடுக்கும் அவ்வளவுதான்...

  இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு தங்களை எப்படி காத்துக்கொள்வது என்று நன்கு தெரியும் கடந்தகால நிகழ்வுகள் எங்களுக்கு நிறைய படிப்பினையை கொடுத்திருகின்றன... நாங்கள் பிறரை நம்பி இல்லை....

  நாங்கள் இம்மண்ணின் மைந்தர்கள் ஆரியர்கள் போன்று கைபர் போலன் கணவாய் வழியாக வந்த வந்தேறிகள் அல்ல...

  ReplyDelete
 18. //ஒரு நாட்டின் குடிமகன் என்ற விதத்தில் நமக்கு எதிராக ஒரு சட்டம் இயற்றப்பட்டதாக அதை எதிர்த்து குரலிடுவது நமது அடிப்படை உரிமை.//
  பரவாயில்லை. அதாவது ஒத்துகொள்கிறீர்களே.

  அதே உரிமை சவுதி அரேபிய மக்களுக்கும் உண்டா?

  அங்கு ஒருவர் இந்துவாக மதம் மாற விரும்பினால், அந்த உரிமைக்காக குரல் கொடுப்பீர்களா?

  ஏனென்றால், அப்படி எவனாவது குரல் கொடுத்தால் குரல் வரும் தலையை எடுப்பதாக சட்டம் போட்டிருப்பதால், இந்த கேள்வியை உங்களிடம் கேட்க வேண்டியிருக்கிறது.

  பாகிஸ்தானில் இந்துக்களை கட்டாயமாக சுன்னத் செய்தும் இந்து பெண்களை முஸ்லீம்களுக்கு திருமணம் செய்துவைத்தும் மதம் மாற்றி இஸ்லாமை “வளர்க்கிறார்கள்”
  எதிர்த்து பேசினால் துப்பாக்கியால் சுடுகிறார்கள்.

  அதனால் குறைந்த பட்சம், “அப்படி மதம் மாற விரும்பினால் அதனை ஆதரிப்பேன்” என்று உங்கள் திருவாயை திறந்து ஒரே ஒரு முறை சொல்லலாமே?

  என்ன செய்யலாம் சொல்லுங்கள் சகோ

  ReplyDelete
 19. //நாங்கள் இம்மண்ணின் மைந்தர்கள் ஆரியர்கள் போன்று கைபர் போலன் கணவாய் வழியாக வந்த வந்தேறிகள் அல்ல..//
  அப்படியா? மரைக்காயர்களும் ராவுத்தர்களும் அரேபியாவிலிருந்து இங்கே வந்தவர்கள் என்று கூறிகொள்கிறார்களே?
  நீங்கள் எதில் சேர்த்தி?

  ReplyDelete
 20. ஆனால் இந்தியா அப்படியல்ல அது தன்னை மதசார்ப்பற்ற நாடென்றே பிரகடனப்படுத்துகிறது .. //
  அதுதான் தவறு என்று சொல்லிகொண்டிருக்கிறீர்களே.
  இஸ்லாமிய நாடுகள் எல்லாம் இஸ்லாமிய மத நாடுகளாக இருக்க வேண்டும், முஸ்லீம்கள் சிறுபான்மையாக இருக்கும் நாடுகளெல்லாம் மதசார்பற்ற நாடுகளாக இருக்க வேண்டும் என்றல்லவா நீங்கள் சொல்கிறீர்கள்.
  அந்த லாஜிக் என்ன?

  ReplyDelete
 21. அன்பு சகோ அனானி.,
  உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!!

  == மரைக்காயர்களும் ராவுத்தர்களும் அரேபியாவிலிருந்து இங்கே வந்தவர்கள் என்று கூறிகொள்கிறார்களே?
  நீங்கள் எதில் சேர்த்தி?==

  முதலில் மரைக்காயர், ராவூத்தர் போன்றவற்றிற்கு அவர்களுக்கு பொருள் தெரியுமா என அவர்களிடம் கேளுங்கள்.  ==ஆனால் இந்தியா அப்படியல்ல அது தன்னை மதசார்ப்பற்ற நாடென்றே பிரகடனப்படுத்துகிறது .. //
  அதுதான் தவறு என்று சொல்லிகொண்டிருக்கிறீர்களே.==


  உங்களின் வாதங்கள் திசை திருப்பும் வண்ணமாக இருப்பதாகவே உணர்கிறேன். உங்கள் கேள்விகள் இஸ்லாத்தை எதிர்ப்பதில் இருப்பதாகவே புரிந்துக்கொள்ள முடிகிறது.

  நான் ஏற்கனவே தெளிவாக சொல்லி இருக்கிறேன். சில சட்டங்கள் வேறு சில நாடுகளுக்கு வேற்றுமையாக தான் தெரியும்.

  பாருங்கள் இந்தியாவில் கூட அனைத்து மக்களுக்கும் அனைத்து இடங்களிலும் சட்டங்கள் நிலையானவை அல்ல

  இன்று இந்தியாவில் வாழும் இந்து, முஸ்லிம் சீக்கிய மக்களுக்கு வருமான வரிகளிலும், திருமண முறைகளிலும், அரசு வேலைகளில் தாடி மற்றும் பாதுக்காப்பு ஆயுதங்கள் வைத்திருப்பது போன்ற பொது சட்டங்களில் சில சலுகைகள் தரப்பட்டு இருக்கின்றன. இவை நாம் அறிந்த ஒன்றே.. இவற்றிற்கு எதிராக யாரும் இங்கே உரிமை மறுப்பு கொடி பிடிப்பதில்லை.

  அட, இங்கே செய்யப்படும் விபச்சாரம் சட்டபூர்வ தண்டனைக்கு உள்ளாக்கப்படும் போது அதே செய்கையை மும்பையில் சிவப்பு விளக்கு பகுதியில் செய்தால்...?
  விதிவிலக்கு அளிக்கப்படுகிறது...

  இதுதான் இந்தியாவின் சட்ட ஒழுங்கு சகோ., இப்படி சட்டங்களை நாம் வகுத்துக்கொண்டு பிற நாடுகளை குற்றம் சொல்லல் எப்படி நியாயம்? அதுவும் அந்த நாடுகள் தன்மை முழுமையாக ஒரு மதரீதியான நாடாக பிரகடனப்படுத்திய பிறகும்..

  இன்னும் பாருங்கள் மதசார்பற்ற மாநிலங்களை கொண்ட நாடு என உரத்து சொல்லும் இந்தியாவில் தான் தமிழக அனைத்து அரசு சார்ந்த செயல்களுக்கும் கோயில் படம் பதித்த லோகோ பயன்படுத்த படுகிறது.

  இப்போது சொல்லுங்கள்...? மதசார்பற்ற நாடு என சொல்லப்படும் ஒன்றின் அளவுகோல் இதுவா...?

  ReplyDelete
 22. //குறைந்த பட்சம், “அப்படி மதம் மாற விரும்பினால் அதனை ஆதரிப்பேன்” என்று உங்கள் திருவாயை திறந்து ஒரே ஒரு முறை சொல்லலாமே?//

  இதற்கு பதில் சொல்லமாட்டேன் என்கிறீர்களே?

  இப்போது சொல்லுங்கள்
  உங்கள் மத உரிமை கோரிக்கையின் அளவுகோல் இதுதானா?

  மற்ற நாடுகளை குறை சொல்லவில்லை. இந்தியா இஸ்லாமிய நாடாக வேண்டும் என்று இஸ்லாமிய பதிவர்கள் எழுதுகிறீர்கள். அப்போது இருக்கும் இஸ்லாமிய நாடுகளில் இல்லாத உரிமைகளை பற்றி பேச வேண்டும் அல்லவா?

  இந்தியா இஸ்லாமிய நாடாக ஆனால், அங்கு இந்து பெண்கள் கட்டாயமாக மதம் மாற்றம் செய்தால் அதற்கு எதிராக குரல் எழுப்ப மாட்டீர்கள்தானே? இந்து ஆண்கள் கட்டாயமாக சுன்னத் செய்யப்பட்டு மதம் மாற்றப்பட்டால் குரல் எழுப்ப மாட்டீர்கள். முஸ்லீம்கள் இந்துமதத்துக்கு போக விரும்பினால் தலையை எடுக்கும் சட்டங்கள் இருக்கும். இல்லையா?

  இந்தியா தற்போதைக்கு மதச்சார்பற்ற நாடாகவும் உங்கள் எண்ணம் ஈடேறும்போது இஸ்லாமிய நாடாகவும் ஆகவேண்டும் அப்படித்தானே?

  மதம் மாறாத தமிழர்களை, காஷ்மீரி இந்துக்களை துரத்தியது போல தமிழகத்திலிருந்து துரத்திவிடுவீர்கள். இல்லையா?

  ReplyDelete
 23. உங்கள் பெயரை போலவே உங்கள் கேள்விகளும் இருக்கின்றது....! யூகங்களுக்கு பதில் கிடையாது....! சகோதரர்களே இவர் நமது நேரத்தை சாப்பிடும் முடிவில் இருப்பதால் அவரது அர்த்தமில்லா யூகங்களுக்கு பதில் சொல்ல முயற்சி செய்து நேரத்தை வீணடிக்காதீர்கள்....

  ReplyDelete
 24. அனானி அண்ணே.,

  பாருங்க தொடர்பற்று தான் உங்கள் வாதங்களை வைத்து வருகிறீர்கள்.

  == குறைந்த பட்சம், “அப்படி மதம் மாற விரும்பினால் அதனை ஆதரிப்பேன்” என்று உங்கள் திருவாயை திறந்து ஒரே ஒரு முறை சொல்லலாமே?// ==

  இதற்கு சவுதி என்ன சொல்ல வேண்டி இருக்கிறது. இஸ்லாத்தை பொருத்தவரை அசத்தியத்திலிருந்து சத்தியம் தெளிவாக பிரித்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. நீங்களோ நானோ விரும்பினால் இஸ்லாத்தை ஏற்கலாம். அல்லது தாரளமாக மறுக்கலாம். இஸ்லாம் யாரையும் தம்மை பின்பற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. மாறாக பின்பற்றினால் சொர்க்கம் என்கிறது. அஃதில்லையென்றால் நரகம் என்கிறது. இதுவே ஒருவர் இஸ்லாத்தில் இருப்பதற்கும், விலகுவதற்கும் போதுமான சான்று

  சகோ ஒன்றை விமர்சிப்பதாக இருந்தால் அதன் மூலத்தை கொண்ட விமர்ச்சிக்க வேண்டும். எனும் போது நீங்கள் இஸ்லாத்தை குறைக்கண்டால் அதற்கு ஆதார தரவுகள் குர்-ஆன் மற்றும் ஹதிஸ்களில் இருந்து தான் தரவேண்டும். மாறாக சவுதியோ, பாகிஸ்தானோ இஸ்லாத்தின் அத்தாரிட்டி இல்லை.

  இந்தியா இஸ்லாமிய நாடாக மாறினாலும் அதனால் இஸ்லாத்திற்கு எந்த இலாபமும் இல்லை சகோ அதை முதலில் புரிந்துக்கொள்ளுங்கள்.

  குறைந்த பட்சம் உங்கள் பெயர் பதிந்து கருத்துக்கள் சொல்லக்கூட உங்களுக்கு நேர்மை இல்லை. உங்கள் நேரத்தையும் வீணாக்கி என் மற்றும் எல்லோர் நேரத்தையும் வீணாக்குகிறீர்கள். சகோ

  அடுத்த முறையாவது உங்கள் சொந்த பெயருடன் வாருங்கள்

  உங்கள் சகோதரன்
  குலாம்.

  ReplyDelete
 25. சகோ .அனானி (அனாமத் பெயர் )

  இந்தியா உங்கள் அப்பனுடையது மட்டுமல்ல

  என் அப்பனுடையதும் தான் ..நாங்கள் எங்கள்பரம்பரை

  ஒரு காலத்தில் அறியாமையின் பக்கம் இந்துக்களாய்

  இருந்து ஓரிறை பக்கம் ஈர்க்க பட்டோம் .உங்களை

  அன்றாடம் நிந்திக்கு பகுத்தறிவாளர் என்பவரை எந்த நாட்டுடன்

  ஒப்பிடுவீர் ..மத நம்பிக்கை என்பது ..அவன் ஆன்மாவிற் உள்பட்டது

  ReplyDelete
 26. நாடுகள் தாண்டி சவுதி அரேபியாவரை தன் சிந்தனையை செலுத்தும் அனானி, பாவம் நமது ஊர்களில் நடக்கும் அநீதிகளை கண்டுகொள்ளவே பயப்படுகிறார்போல, அல்லது இவையெல்லாம் அவருக்கு அநீதியாக தெரியவில்லையோ என்னவோ.. :((

  பள்ளிக்கூடத்தில் வழங்கப்படும் இலவச செருப்புக்களைகூட பள்ளி மாணவர்கள் உயர்ந்த சாதி ஆட்கள் வாழும் தெருக்களில் அணிந்து செல்ல தடை செய்யும் கற்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவல நிலை, சமூக வலைதளங்களிலும், நேரடியாகவும் இவ் விஞ்ஞான உலகில் நடக்கும் ஜாதிச்சண்டைகள்..

  உண்மையில் அனானிக்கு அக்கறை என்ற ஒன்று இருந்தால் இவைகளையல்லவா மாற்ற முயற்ச்சிக்கவேண்டும் இவற்றிக்கு உண்மையில் தீர்வு என்ன? இவற்றை எவ்வாறு போக்க வேண்டும், இவற்றிக்கு எங்கு மருந்து இருக்கிறது என்று அராய்ச்சியல்லவா செய்ய வேண்டும் அதைவிடுத்து இவற்றிக்கு மூலகாரணியாக உள்ள ஒரு மத்ததை உலகளாவிய அளவில் செயல்படுத்த முயற்சிக்கும் இந்தப்போக்கை என்னவென்று சொல்வது.

  இவைகளை சமூகத்தில் இருந்து விரட்டியடிப்பது என்பது நினைத்துப்பார்க்க முடியாத விஷயம் ஏனெனில் இவை நிகழ்வது தனிமனித விருப்பம் சார்ந்தது அல்ல, மாறாக மதம்/கடவுள் என்னும் பெயரில் புகுத்தப்பட்ட நம்பிக்கைகள், மேலும் இவைகளை வைத்துத்தான் இன்றைய அரசியல்வாதிகளின் பிழைப்பு, நடக்கிறது.

  நான் இஸ்லாத்தை பின்பற்றுகிறேன், இதைவிட சிறந்த ஒன்றை கொண்டு வாருங்கள் நான் பின்பற்றுகிறேன். இது நானாக கூறவில்லை இறைவன் எனக்கு இந்த அனுமதியை அளித்துவிட்டான்,

  இவனல்லவா இறைவன், இறைவன் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்.

  அடுத்த பின்னூட்டத்தில் அனானி அவர்கள் இதைவிட சிறந்த ஒரு கொள்கையையும், கடந்தவாரம் சவுதியில் மாதமாறியதற்க்காக தலைவெட்டப்பட்ட நபர்களின் பட்டியலையும் அளிப்பார் என்று எதிர்பாக்கிறேன்.

  ReplyDelete
 27. SALAM,

  சுதந்திரம் என்றால் என்ன என்று நன்கு விளக்கியுளீர்கள்...இப்படி கூட தாவா செய்யலாம் என்பதை வழிகான்பித்தமைக்கு நன்றி....

  புதிய வரவுகள்:கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)

  கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?

  ReplyDelete
 28. உங்களுக்கு அரபி தெரியுமா?
  என்ன சொல்றாருன்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்.
  http://www.youtube.com/watch?v=uI9C2CCT-QM&sns=tw

  ReplyDelete
  Replies
  1. அனானி அண்ணே அதுலெ என்ன இருக்குன்னு நீங்களே சொல்லுங்களே அண்ணே

   Delete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்