ஓரிறையின் நற்பெயரால்
இரண்டும் சுழலும் தன்மையுடையது, தேவைக்கேற்ப அதன் வேகத்தை கூட்டலாம், குறைக்கலாம். மனிதனின் அடிப்படை வசதிக்கு இன்றியமையாத பயன்பாட்டை தருகிறது. இப்படி இரண்டு பொருட்களுக்கும் இடையே உள்ள ஒரு சில பொதுவான விசயங்களை எடுத்துக்கொண்டு வாகனத்தின் சக்கரமும், வீட்டின் மின்விசிறியும் அடிப்படையில் சமமானது என உங்களிடம் ஒருவர் வாதிட்டால் அவரை என்ன சொல்வீர்கள்….?
இதைப்போலதான் சமூகத்தின் சில தவறான புரிதல்களால் ஆணும் -பெண்ணும் சமம் என்ற பேச்சு நடைமுறையில் இருக்கிறது., ஆணும் பெண்ணும் சமமா -சமமில்லையா என பார்ப்பது ஒருபுறம் இருக்கட்டும் அதற்கு முன்பு இவர்களை ஓப்பிட்டு பார்க்க முனைவது அறிவுப்பூர்வமானதா..?
தொடர்வோம்...
பொதுவாக, ஒப்பிடப்படும் இருப்பொருட்கள் அல்லது இரு நிலைகள் ஒரே அளவு, தன்மை, மற்றும் இயல்பியல் பண்புகளை கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் அவற்றிற்கிடையே ஒப்பிட்டு அதனை சமன் செய்ய முடியும். அஃதில்லாமல் இரண்டிற்கு மத்தியில் இருக்கும் ஒரு சில பொதுவான ஒற்றுமைகளை மட்டும் எடுத்துக்கொண்டு இரண்டையும் சமன் செய்ய முற்பட்டால் நமக்கு தெளிவான முடிவுகள் கிடைக்காது.
மேலும், ஒப்பிடப்படும் இரண்டு நிலைகளின் உண்மை நிலையை அறிய அவை இரண்டும் அல்லாத மூன்றாம் மூலத்திலிருந்து இவற்றை அணுகினால் மட்டுமே நம்பகதன்மை வாய்ந்த விடை நமக்கு கிடைக்ககூடும். ஆனால் இங்கே ஆணையும் பெண்ணையும் ஒப்பிடுவது ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோவாக தான் இருக்க முடியும். அதனால் சமம் என்று சொன்னாலோ சமமில்லை என்று சொன்னாலோ அது சந்தர்ப்பவாத சூழ்நிலையில் எடுக்கப்பட்ட முடிவாக தான் இருக்கும். ஆக இரண்டு விடைகளில் எந்த ஒன்று உண்மையாக இருக்க முடியும் என்பதற்கு அதிக சாத்தியக்கூறுகள் எதில் இருக்கிறது என்று ஆராய்வதே இங்கே அறிவுப்பூர்வமானது.
ஆணையும் பெண்ணையும் ஒப்பிட வேண்டுமானால் இருவரும் அடிப்படையில் ஒரே தன்மைகளை கொண்டிருக்க வேண்டும். ஆனால் பேச்சு, செயல், நகைச்சுவை, உணர்வுகள், அறிவுத்திறன் போன்ற பொதுவான படைப்பியல் ஒற்றுமைகளை தவிர உடலியல் ரீதியாகவும், இயங்கியல் ரீதியாகவும் பல வேற்றுமைகள் இருவருக்குமிடையே இருக்கிறது. அதிலும் இருக்கும் ஒற்றுமைகளில் கூட நிலையான சமன்பாடு கிடையாது. இடத்திற்கு கால சூழ் நிலைக்கு தகுந்தார்போல் இருவருக்குமிடையே திறன்கள் மாறுபடும்.
உடலியல் அமைப்பை எடுத்துக்கொண்டால் இருவரும் சமமான நிலையை பெற்றிருக்கவில்லை என்பதை நாம் எல்லோரும் எளிதாக அறிவோம். ஏனெனில் நீண்ட தூர பயணம், அதிகப்படியான வேலைப்பளு, விரைவான ஓட்டம் இப்படி அதிகமாக அல்லது வேகமாக செயல்படும் நிலையில் ஆண்களை விட பெண்கள் முன்னமே களைப்படைந்து விடுகிறார்கள்.
குணாதிசயங்களை எடுத்துக்கொண்டாலும் இருவருக்குமிடையே தெளிவான வேறுபாடு. ஆண்களை காட்டிலும் பெண்கள் எளிதாக உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள், அதிக இரக்க மனப்பான்மை கொண்டவர்கள். பொறுமை அதிகம் கொண்டவர்கள். வெட்கம் எனும் பண்பு அவர்களிடத்தில் மிக மிக அதிகம். இதற்கு அடையாளமாக தான் ஆண்கள் அணியும் ஆடைகளை விட கூடுதலாகவே பெண்கள் உடை அணிந்தே உலா வருகிறார்கள்.
அடுத்து முக்கியமாக பொது வாழ்க்கையில் இருவரும் ஒரே மாதிரி நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. அடுத்தவருக்கு உதவுதல், பிறரை மதித்தல் போன்ற நன்மையான விசயங்களில் இருவருக்குமிடையே ஒரளவு சமமான நிலை நிலவினாலும், சிகரெட், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களில் பெண்களை விட ஆண்களே அதிகமாக ஈடுபடுகின்றனர். வன்முறை, கலவரம் போன்ற தகாத செயல்களில் ஆண்களை காட்டிலும் பெண்களின் பங்களிப்பு மிக மிக குறைவே.,
உடலியல்க்கூறுகள், பண்பியல் மற்றும் சமூகரீதியான செய்கைகளில் பெண்களும் ஆண்களும் சமமான நிலையில் இல்லவே இல்லை. இப்படி சமமற்று இயங்கும் இரு நிலைகளை பொதுவில் வைத்து சமம் என்று வர்ணித்தால் அது எப்படி அறிவார்ந்த வாதமாகும்? வார்த்தையில் மட்டும் பேணப்படும் சமத்துவம் என்பதாக தான் பொருள்படும்.
இருவரும் அடிப்படையில் சமமானவர்கள் இல்லை என்பதை நடைமுறைகளில் காணப்படும் சாத்தியங்களை வைத்து தர்க்கரீதியாகவும் நிருபிக்கலாம்.
- இன்றும் சென்னைப்போன்ற பெருநகரங்களில் பெண்கள் மட்டும் தனியாக பயணம் செய்யும் பொருட்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதுப்போலவே இரயில்களிலும் இரண்டு கம்பார்ட்மெண்ட் ஒதுக்கப்பட்டு தான் இருக்கிறது. இது எதற்காக...? பெண்களின் சிரமத்தை குறைப்பதற்காகதான் என சொல்வீர்களேயானால்.. அதே சிரமம் ஆண்களுக்கும் இருக்க தானே செய்கிறது. ஆனால் எங்கும் பிரத்தியேகமாக ஆண்களுக்கென்று எந்த பேருந்தோ, ரயில்களோ இயக்கபடுவதில்லை.
- அதுமட்டுமா, இன்று விவாகரத்து கோரும் தம்பதியரில் தீர்ப்புக்கு பிறகு பெண்களுக்கே ஜீவானம்சம் வழங்கப்படுகிறது, மாறாக ஆண்களுக்கு எந்த பெண்ணிடம் இருந்தும் வாழ்வாதரம் வாங்கி தரப்படுவதில்லை.
- பொதுவாக, பெண்களின் பெயருக்கு பின்னால் தன் தந்தையின் பெயரையோ அல்லது கணவனின் பெயரையோ இணைத்து கூறும் பழக்கம் இன்னும் நடைமுறையில் இருக்கிறது. எந்த ஆணின் பெயரோடும் தம் தாய் அல்லது மனைவியின் பெயர் இணைத்து முன்மொழியப்படுவதில்லை. ( சில மேலை நாடுகளில் வேண்டுமானால் இந்நிலைக்கு மாற்றமாக இருக்கலாம். ஆனால் எதற்க்கெடுத்தாலும் ஆணும்-பெண்ணும் சமம் என வாதிடும் இந்தியா போன்ற நாடுகளில் இந்நிலை தொடரத்தான் செய்கிறது)
இதைப்போன்ற செயல்கள் சமூகத்தில் ஆண்களும் பெண்ணுகளும் சமமற்ற நிலையில் இருப்பதை தான் காட்டுகிறது. மேற்கண்ட செயல்கள் பெண்ணிற்கு இழைக்கப்படும் அநீதியாக எந்த ஒரு சமூக நல ஆர்வலரும் எதிர்ப்பு தெரிவித்தது இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஆணும் பெண்ணும் சமம் என சமத்துவம் பேசும் மனிதர்கள் கூட இந்நிலையே பொது வாழ்வில் ஏற்றுத்தான் கொள்கிறார்கள்.
ஆணோ பெண்ணோ அவர்கள் படைக்கப்பட்டிருக்கும் விதத்திற்கு தகுந்தாற்போல சிற்சில செயல்களில் ஒருவரைக்காட்டிலும் ஒருவர் ஏற்ற இறக்க வாழ்வியல் நிலைகளை கொண்டு தான் இருக்கின்றனர். அதைத்தான் மேற்கண்ட செயல்கள் காட்டுகின்றன.
அதுமட்டுமல்ல, ஒரு செயலின் விளைவில் ஏற்படும் இழப்பு இருவருக்கும் பொதுவாக இருப்பதில்லை. ஆண்களை விட பெண்களுக்கே எந்த பிரச்சனைகளின் முடிவிலும் பாதிப்பு அதிகம். அதை நிதர்சனமாக விளக்கும் எத்தனையோ செய்திகளை அன்றாடம் நாம் பார்த்தும் படித்தும் வருகிறோம்.
ஆணும் பெண்ணும் சமம் என வாதிடுவோர்களின் அடிப்படை நோக்கம் அவர்களின் வாழ்வு வீட்டு சமையலறையோடு மட்டுமே முடங்கி விடக்கூடாது அவர்களுக்கும் இந்த சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்பதாக தான் இருக்கும். அதற்கு ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்வதில் அந்த அங்கிகாரம் கிடைக்க போவதில்லை.
சுதந்திரம் எனும் பெயரில் போலியாய் சமத்துவத்தை நிலை நாட்டுவதில்(?) எந்த பயனும் இல்லை. சமம் எனும் பெயரில் பெண்கள் காட்சி பொருளாகத்தான் இன்று மேலை நாடுகளில் காட்டப்பபடுகின்றனர். இதில் அவர்கள் கண்ணியம் கேவலப்படுத்தப்படுவது தான் நிதர்சனமான உண்மை. அப்படியானால் சமமும், சமத்துவமும் உண்மையில் எங்கேதான் இருக்கிறது..?
அவர்களின் உரிமைகளை அவர்களுக்கு வழங்கி அவர்களது கடமைகளையும் சரிவர செய்ய ஆர்வமூட்டுவதில் தான் இருக்கிறது சகோஸ்...
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
Tweet | |||||
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
ReplyDeleteமிக அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்.ஆனால் இனி உங்களுக்காக வரும் பாருங்கள் பின்னூட்டமாகவோ (அ) எதிர்பதிவாகவோ "ஆணாதிக்கவாதி" என்ற பெயர்.
வ அலைக்கும் சலாம் வரஹ்
Delete== இனி உங்களுக்காக வரும் பாருங்கள் பின்னூட்டமாகவோ (அ) எதிர்பதிவாகவோ "ஆணாதிக்கவாதி" என்ற பெயர். ==
அட ஆமாம் இத நான் யோசிக்கவே இல்லையே... ஹி ஹி...
வருகைக்கு நன்றி சகோ...
சகோ குலாம்,
ReplyDeleteமாஷா அல்லாஹ்.... அழகாக, உளவியல் ரீதியில் எழுதப்பட்ட கட்டுரை...
ஆணும் பெண்ணும் எல்லா நிலைகளிலும் சமம் கிடையாது.... இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மூடர்களே..
/* அவர்களின் உரிமைகளை அவர்களுக்கு வழங்கி அவர்களது கடமைகளையும் சரிவர செய்ய ஆர்வமூட்டுவதில் தான் இருக்கிறது சகோஸ்... */
ReplyDeleteஇது முடியாது சகோ.... இது கொஞ்சம் கஷ்டமான காரியம்.... பெண்ணுரிமை பேசும் பலரும் தங்கள் மனைவிகளுக்கு அவர்கள் வெளி உலகிற்கு கூறும்
உரிமைகளை கொடுப்பது இல்லை... பெண்ணுரிமை என்று கூறுவதெல்லாம் தான் பகுத்தறிவு வாதி என்று காட்டிக்கொள்ள போடும் வேசமே அன்றி வேறில்லை..
வ அலைக்கும் சலாம் வரஹ்
Delete= = பெண்ணுரிமை என்று கூறுவதெல்லாம் தான் பகுத்தறிவு வாதி என்று காட்டிக்கொள்ள போடும் வேசமே அன்றி வேறில்லை.. = =
உண்மைதான் சகோ பெண்களுக்கான உரிமை மறுப்பு என்பது இந்த சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமே செய்வதாக குற்றம் சாட்டும் போலி பகுத்தறிவாதிகள் கூட மேற்கண்ட நிலையில் உடன் பட்டு தான் நிற்கிறார்கள்..
அந்நிலையில் எங்கே போனதோ அவர்களது ஆண் பெண் சமத்துவ பேச்சு.. பொறுத்திருப்போம். - பதில் தருவார்களென
கருத்திற்கு
ஜஸாகல்லாஹ் கைரன் சகோ
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅன்பு சகோ Pebble
Deleteஉங்கள் கருத்தில் தனிமனித சாடல் இருப்பதாக உணர்கிறேன். மன்னித்துக்கொள்ளுங்கள் உங்கள் பின்னூட்டத்தை என்னால் வெளியிட முடியவில்லை.
Assalamu alaikum,
DeleteYou are correct. I didnt realize at the time of commenting. Thanks for your feed back. :)
Jazak-Allah.
வ அலைக்கும் சலாம் வரஹ்
Deleteஅன்பு சகோ Pebble
உங்கள் தெளிவான புரிதலுக்கு நன்றி
வருகைக்கு ஜஸாகல்லாஹ் கைரன்
சகோ
.
ReplyDelete.
CLICK >>>>
இஸ்லாமிய பெண்ணுரிமைக்காக போராடும் என் மாற்றுமத சகோதரர்களின் அன்பான கவனத்திற்கு!!!! பெண்களும் கட்டாயம் கல்வி கற்க வேண்டுமாம்..!!! :( என்ன ஒரு ஆணாதிக்கம் பார்த்தீங்களா?? :( இதை எல்லாம் கேட்டு நீங்க பொங்கி எழணும்!!!
.
.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
Deleteஅன்பின் வாஞ்சூர் அப்பா,
அருமையான சுட்டிகளை பகிர்ந்தமைக்கு நன்றி
.
ReplyDelete.
CLICK >>>>>
காஷ்மீர் என்றாலே தீவிரவாதம் முஸ்லிம் என்றாலே தீவிரவாதம் என்று சொல்பவர்கள் கவனிக்கவும்.
தன்னை துன்புறுத்திய படையில் உள்ள ஒருவனுக்கு உதவும் இதயம் எத்தனை பேருக்கு உண்டு? காஷ்மீர் முஸ்லிம் வாலிபனும்,படை வீரனும்... <<<<<<< TO READ
.
.
அன்பு சகோ
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி.,
வாய்ப்பு இருப்பீன் உங்கள் தளத்தில் இணைந்துக்கொள்கிறேன் சகோ
சலாம்! சகோ குலாம்!
ReplyDeleteஅருமையான ஆக்கத்தை பகிர்ந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
வ அலைக்கும் சலாம் வரஹ்
Deleteஅன்பு சகோ
வாழ்த்திற்கும், வருகைக்கும் நன்றி
ஜஸாகல்லாஹ் கைரன்
அஸ் ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ் சகோ.குலாம்,
ReplyDeleteரொம்ப அவசியமான, அழுத்தமான கட்டுரை. என் பார்வையிலும் இதை யோசிக்கையில் ஒரு கேள்வி மட்டுமே வந்தது. ஒரு ஆணின் வயிற்றில் கட்டியோ, பொருளோ சிக்கிக்கொண்டு உள்ளுறுப்புக்களை நகர்த்திக் கொண்டும் வலித்துக் கொண்டும் இருந்தால் அந்த ஆணினால் வேறு எந்த விஷயத்தில் கவனம் செலுத்த இயலும்? ஆனால் நூற்றாண்டுகள் பல கடந்தும் பெண்ணின் வயிற்றில் ஒவ்வொரு முறை கருவுறும்போதும் எத்தனை மாற்றங்கள்? ஆனால் அதையும் பொறுத்துக் கொண்டு வீட்டினரின் தேவைகளை கவனிக்கவும், அலுவலக வேலை செய்பவராக இருந்தால் அதையும் நினைவில் கொள்ளவும், அதே நேரம் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமலும் இருக்க ஒரு ஆணால் இயலுமா? அந்த குணத்தையும் பொறுமையையும் பெண்களுக்குத்தானே இறைவன் தந்துள்ளான்? அதே போல் வெளியிடங்களில் ஒரு பிரச்சினை, நாலு பேர் மத்தியில் பொறுமையுடனும் விவேகத்துடனும் செயல்படும் திறமையை ஆண்களுக்கே உரித்தாக்கி வைத்துள்ளான் இறைவன். இல்லையெனில் பக்குவமாக பஞ்சாயத்து பேச வேண்டிய இடத்தில் குழாயடிக் சண்டையாகி மாறிவிடும். இந்த சின்ன உதாரணங்களே போதும் ஆணும் பெண்ணும் எத்தனை தூரம் வித்தியாசமான படைப்புகள் என்பதற்கு.
என்னை பொறுத்தவரை இந்த சமநீதி கோஷம் எல்லாம் ஆண்களுக்கான ஆதாயமே தவிர பெண்களுக்கு இல்லை. இதை நம்பிக்கொண்டிருக்கும் பெண்களும் விட்டில் பூச்சியினரே. அல்லாஹ் காப்பானாக.
வ அலைக்கும் சலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
Delete== என்னை பொறுத்தவரை இந்த சமநீதி கோஷம் எல்லாம் ஆண்களுக்கான ஆதாயமே தவிர பெண்களுக்கு இல்லை. ==
தெளிவான கருத்து சகோ எவ்வளவு நுணுக்கமாக ஆராய்ந்தாலும் ஆண்களும் பெண்களும் உடலியல், இயங்கியல்ரீதியாக ஒரு போதும் சமமாகாத நிலையில் இருக்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மை.
ஆக சமூகத்தில் சமத்துவம் எனும் பெயரில் பெண்களுக்கு ஆதரவாக குரல்கொடுப்பதாக சொல்வதெல்லாம்... அவர்களின் சுய நலத்திற்கு என்பது தெளிவு...
வருகைக்கும் கருத்திற்கும்
ஜஸாகல்லாஹ் கைரன் சகோ
ஆணும் பெண்ணு சமம் என்பதை ..,
ReplyDeleteசரியாக புந்து கொள்ளாதவரை கஷ்டம் தான்
ஆன்மாக்கள் ஒன்று தான் அவர்களை இறை வழிபாடுகளை
ஒரே முறைதான் கடை பிடிக்க வேண்டும் செயல் பட சொல்லும் .இறைவன்
நற்கூலியை இரு பலருக்கும் இறைவன் ஒன்றாக தான் வழங்குவான் ...,
நடை முறை வாழ்கையில் ஆணுக்கு உண்டான கடமை
பெண்ணுக்கு உண்டான கடமை அதற்காக இளம் வயதிலே
ஆயத்தமாக்க வேண்டியது .தாயின் கடமை ..
பெண்ணும் ஆணும் சமம் என்று உடை விசயத்தில் கூறுவது
தொழில் விசயத்தில் கூறுவது ..,மடமை அதே போன்று எல்லாத்திலும்
பெண் சுதந்திரம் என கூறி கூறி சில நாடுகளில் முப்பது வயதுகளில்
கட்டுப்பாடற்ற செக்ஸ் வைத்தமையால் வயோதிக தன்மை அடைந்த
மூதாட்டியை போல் காண படுவதுடன் ..பலராலும் ஒதுக்கப்பட்டு
பல கஷ்டங்களை பெறுவதை கண் கூடாய் காண முடிகிறது ..
உலக வாழ்வில் பாதுகாக்க பட போற்ற பட வேண்டிய பெண்மை
சமம் சுதந்திரம் என்ற பெயரால் வீதியில் வீசப்பட்ட நாறிப்போன பண்டமாக
காட்சி அழிப்பது வேதனை அளிப்பதாக உள்ளது .
.பெண்ணை பூ என்று கவிஞர்கள் வர்ணித்து ஏன்..
பாது காப்பாய் இருப்பது என்பதை சுட்டிக்காட்டவே
பெண் ஆணுக்கு நிகர் என்று சொல்வது சோம்பல் குணம் கொண்ட ஆண்
பெண்ணுக்கு சுதந்திரம் வேண்டுமென கூறும் ஆண் தன்னை விடுவித்து
கொண்டு பெண்ணிடம் கையேந்தும் நிலை கொண்டவன் என்பேன் ..
மகளை .மனைவியை ..எல்லாவற்றிகும் மேலாக தாயை போற்ற தெரித்தவன்
கலாசார ரீதியாக என்றும்போல் வாழ வகை செய் வதே சால சிறந்தது
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
Deleteஅன்பு சகோ
உண்மைதான்... நிதர்சன வாழ்வில் பெண்கள் மதிக்கப்படவேண்டியவர்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.
ஆனால் இன்று ஆணும் பெண்ணும் சமம் என்ற போலி சமத்துவம் பேசுவோர் பெண்களுக்கு சுதந்திரம் முழுக்க வழங்குவதாக கூறி அவர்களை இந்த சமூகத்தின் கண்களுக்கு காட்சி பொருளாகதான் மாற்றி விட்டார்கள்.
ஆண்கள் உபயோகப்படுத்தும் சேவிங் கிரீமுக்கும், பாடிஸ்பேரேக்கும் பெண்களை தான் விளம்பரத்திற்காக பயன்படுத்துகிறார்கள்...?
இதுவா அவர்களுக்கு கொடுக்கும் கண்ணியம்...? இல்லை இப்படிப்பட்ட சுதந்திரத்தால் என்ன சாதித்து விட போகிறார்கள்..?
சிந்திக்கவேண்டும் நடுநிலையாளர்கள்....
கருத்திற்கு நன்றி
ஜஸாகல்லாஹ் கைரன் சகோ
உங்களது இந்த கட்டுரையை முழுமையாக அனைவரும் புறிய எனது இந்த கட்டுரையை பார்க்கவும்(முக்கிய குறிப்பு: இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம்-பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி.
ReplyDeleteஆழமான கருத்துள்ள கட்டுரை,சிறந்த கருத்துக்கள் உங்கள் தளம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
என்ன சகோ.ரொம்ப நாளா கட்டுரையே இல்லை..சீக்கிரம் கட்டுரை தாங்க படிக்க ஆவலா இருக்கு...
எனது தள கட்டுரைகளில் சில:அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,திருமண வீட்டில் வீடியோ!-அதிர்ச்சி சம்பவம்,14,000 மக்களின் இஸ்லாமிய வருகை-திகைக்கும் இங்கிலாந்த்-www.tvpmuslim.blogspot.com