"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Tuesday, June 22, 2010

இஸ்லாம் கூறும் மறுமை வாழ்வு

                                          ஓரிறையின் நற்பெயரால்...
 மனிதன் எல்லா நிலைகளிலும் நன்மை களை செய்து,    தீமைகளை களைந்து வாழ இறைவனின் கொள்கை கோட்பாட்டுகள் வேண்டுமா ? அல்லது மனசாட்சிக்கு கட்டுபட்டாலே போதுமா     
         
மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள்(21:1)  


இவ்வுலக வாழ்வோடு அனைத்தும் முடிவடைகிறதுஇறப்புக்கு பின் ஒரு வாழ்வு  கிடையாது அது வெறும் மாயை என வாதிடும் சக நண்பர்களுக்காக இங்கு சில விளக்கங்கள்


ஏனைய மதங்களில் இறப்பிற்கு பிறகுண்டான சொர்க்கம்,நரகம் குறித்து கூறப்பட்டாலும் அத்தகைய வாழ்வு குறித்து இஸ்லாம் மிக தெளிவாகவும், விரிவாகவும் கூறியுள்ளது.  


இவ்வுலகில் வாழும் எந்த ஒரு மனிதராக இருந்தாலும் அவருக்கு வழங்கப்பட்ட நற்போதனைகளின் அடிப்படையில் தனது வாழ்வை அமைத்து கொண்டால் அவருக்கு வெகுமதியாக சுவர்க்கமோ,அதுவல்லாது,தனது மனோ இச்சையை பின்பற்றி கெடுதியின் பக்கம் செல்வாராயின் அதற்கு தண்டனையாக நரகமோ இறப்பிற்கு பின்னுள்ள வாழ்வில்  இறைவன் புறத்திலிருந்து வழங்கப்படும் என்பதே இஸ்லாம் வரையறுக்கும் மறுமை வாழ்வு


      ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் (செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர்( (நரக)நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப (இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.(3:185)

       பிறகு, கியாம நாளன்று, நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள். (23:16)
   
      மறுமை அல்லது மறுஉலக வாழ்வை ஏற்காமல் இருப்பதால் ஏற்படும் நன்மைதீமைகளை சற்று அறிவோம். மனசாட்சிக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தாலே போதுமானதுகடவுள் என்பதெல்லாம் தேவையில்லாத ஒன்று  என்பதே கடவுள் மறுப்பாளர்களின் பொதுவான கருத்து. 
  
    இதனடிப்படையில் அணுகும் போது ஒரளவிற்கு தனிமனித ஒழுக்கத்தை சரி காணலாமேயோழிய ஒட்டு மொத்த சமுதாய நலனையும் சீர் செய்யமுடியாது ஏனெனில் மனிதனின் மனசாட்சியானது, , எண்ணங்களின் அடிப்படையில் வீட்டு சுழலின்பெற்றோர்கள் வளர்ப்பின்வாழும் இடத்திற்கு தகுந்தார்போல்  மாறுபடும். திருட்டு என்பது தவறென்று அனைவரும் அறிந்திருந்தாலும் திருடனின் மனசாட்சி அது சரி என நியாயம் கற்பிக்கிறது..


  அதுபோலவே மதுபுகை பழக்கம் மற்றும் விபச்சாரம் போன்ற ஏனைய தவறுகளும். பிறரால் நமக்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்பின் போதும் ஒரு தவறு சரியெனபடுகிறது இவைகள் தவறென்று ஏற்று கொள்வோரின் தனிமனித வாழ்வு வேண்டுமானால் மேம்பாடு அடையலாம். (சமுகம் முழுவதும் நிலையான நன்மையே ஏற்படுத்த முடியாது) எனினும் மனசாட்சி எதாவது ஒரு நிலையில் இந்த தவறுகளை விரக்தியின் அடிப்படையிலோ,ஆசையின்  அடிப்படையிலோ சரி காணும்போது தனி மனித ஒழுக்கமும் சீர் கெட்டுபோகும். 


  உதரணமாக,கற்பழிப்போ,விபச்சாரமோ சமுக கொடுமை என நம் மன சாட்சி ஏற்றுக்கொள்ளும்.எனவே அதை செய்ய நாட மாட்டோம்.ஆனால் ஆணோ,பெண்ணோ விருப்பப்பட்டு சேர நினைத்தால் மன சாட்சியின் பார்வையில் அது தவறென்று கூறாது. மேலும் அத்தவறுகளை  மனம் நாடும்போதேல்லாம் செய்யவே தூண்டும். அதுபோலவே ஏனைய உடன்பாட்டு தவறுகளும்.ஆக மனசாட்சியின் மூலமாக தீமையே தவிர்த்தல் என்பது முழுவதும் சாத்தியமற்றது.எனவே  மனசாட்சியால் தற்காலிக நன்மையே மட்டுமே ஏற்படுத்தமுடியும்.


        ஆனால் .. எந்த ஒரு சுழலிலும்,வளர்ப்பிலும் வாழும் மனிதன் இறைவனை ஏற்று அவனது போதனைகளை நம்பும்பொழுது இத்தகைய தவறுகள் செய்ய மனசாட்சி நாடும்போது இறைவன் தன்னை கண்காணிக்கிறான்,தான் செய்யும் தவறுக்காக  மறுமையில் தண்டனை வழங்குவான்  எனும் எண்ணம் ஏற்படும்.எனவே தவறு செய்வதற்கான மனநிலை ஏற்பட வாய்ப்புகள் மிகமிக குறைவு.உடன்பாட்டின் அடிப்படையில் தவறிழைப்பின் கூட கடவுளிடம் பாவமன்னிப்பு கேட்டு திருந்துவான். கடவுளுக்கு பயந்து மறுமுறை அது நிகழாவண்ணம் பார்த்து கொள்வான்.


மனிதர்களே! உங்கள் இறைவனையஞ்ச (நடந்து) கொள்ளுங்கள்; இன்னும் அந்த (கியாமத்) நாளைக்குறித்துப் பயந்து கொள்ளுங்கள்; (அந்நாளில்) தந்தை தன் மகனுக்கு பலனளிக்க மாட்டார்; (அதே போன்று) பிள்ளையும் தன் தந்தைக்கு எதையும் நிறைவேற்றி வைக்க இயலாது நிச்சயமாக அல்லாவின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே இவ்வுலக வாழ்க்கை உங்களை மருட்டி ஏமாற்றிவிட வேண்டாம்; மருட்டி ஏமாற்றுபவ(னாகிய ஷைத்தா)னும் அல்லாஹ்வைக் குறித்து உங்களை மருட்டி ஏமாற்றாதிருக்கட்டும்.(31:33)

  கால சுழலுக்கு தகுந்தார் போல் செயல்படும் மனசாட்சிக்கு கட்டுபடுதல் மூலமாக எல்லா நிலையிலும் தவறிழைப்பதை முழுவதுமாக தவிர்க்க இயலாது. மாறாக-, இயல்பாகவே நம்மை ஒருவர் கண்காணிக்கிறார் எனும் போது அவரது பார்வையில் நாம் தவறிழைக்க மாட்டோம்,அதுபோலேவே எப்போதும் நம்மை கண்காணிக்க ஒருவர் இருக்கிறார் எனும் மனநிலை அடையும் போது  தவறு செய்யும் எண்ணம் ஏற்படுவதே சற்று அரிதாக தான் இருக்கும் 

அடுத்து நன்மைகள் குறித்து
தீமைகளை தவிர்த்து கொள்வதற்கு மனசாட்சி மேற்கொள்ளும் கட்டுபாடுகளை போல நன்மைகளை செய்வதற்கு  ஆர்வமூட்டுவதில்லை.ஏனெனில் தீமையே போல் அல்லாது, நன்மையான  காரியம்  செய்வதால் பிற மக்களுக்கோ,சமுகத்திற்கோ  நலம் பயக்கும் அதே வேளையில் செய்யாவிடின் தனிமனித ஒழுங்கிற்கு எந்த பாதகமும் ஏற்படுவதில்லை.


  ஆகவே சராசரி மனிதர்களின் மனசாட்சி ஒருவேளை நன்மை செய்ய தூண்டலாம்.அல்லது இது அவசியமன்று என ஒதுக்கலாம் ஆர்வ மிகுதியோ ,சமுக பற்றோ அல்லது புகழை விரும்பியோ தவிர மனசாட்சி சமுதாய நலனில் ஈடுபாடு செலுத்துவதில்லை .
    
  ஆனால் இஸ்லாம் தீமையே தவிர்ப்பது போல் நன்மையான காரியத்தின் பால் செல்வதற்கும் இறைவனிடத்தில் வெகுமதி அளிக்கப்படும் என்கிறது.உதரணமாக தன் மனைவிக்கோ, பெற்றோருக்கோ, பிள்ளைகளுக்கோ, ஏனைய உறவினருக்கோ ஆதரவற்ற அனாதைகளுக்கோ உதவுவது சமுக கடமை என்பதையும் தாண்டிஅதை ஒரு மார்க்க கடமையாக இஸ்லாம் வலியுறுத்துக்கிறது.


  பிறமக்கள் மற்றும் சமுக நலனில் அக்கறை காட்டுதல் குறித்து  ஏராளமான வேத வரிகளும்,தூதர் மொழிகளும் உள்ளன.தனிமனித மற்றும் சமுக வாழ்வு நிலையான நலன் பெற ஓரிறை கூறும் மறுமை கோட்பாடே சிறந்தது.

 அந்நாளில் ஒவ்வோர் ஆத்மாவும், அது சம்பாதித்ததற்குக் கூலி கொடுக்கப்படும்; அந்நாளில் எந்த அநியாயமும் இல்லை. நிச்சயமாக, அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.(40:17)
அல்லாஹ் மிக்க அறிந்தவன்

1 comment:

  1. everyone follow this comments and increase your iman

    ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்