"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Monday, December 27, 2010

பரிணாமத்தில் மனிதன்..?

                                                ஓரிறையின் நற்பெயரால்...
        
    பொதுவாக, ஒரு செல் உயிரி மூலமாக ஏனைய உயிரிகள் வளர்ச்சியடைந்தன என்றாலும், அஃது அவ்வாறு ஒரு உயிரி பிறிதொரு உயிரியாக மாற்றமடைய அவ்வுயிரியின் சுய தேவை, வாழும் சூழல், மிக முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இவற்றை அடிப்படையாக கொண்டுதான் ஒரு உயிரி காலப்போக்கில் தன்னை பிறிதொரு உயிரினமாக மாற்றிக்கொள்கிறது. -என்பது தான் பரிணாமத்தின் தகவமைப்பு கோட்பாடு.      
 
      ஏனைய உயிரினங்களைப்போல மனிதன் என்ற உயிரினமும் மேற்கண்ட சங்கிலித்தொடர் உயிரின வளர்ச்சியிலேயே இறுதியாக உருவான ஒரு உயிரினம் என்பதும் பரிணாமம் எடுத்து வைக்கும் வாதம்.
   ஒரு உயிரிலிருந்து மேற்கண்ட அடிப்படையில் பிறிதொரு உயிரினம் உருவாவதென்றால் அதன் முந்தைய நிலையில் இருக்கும் உயிரின் அனைத்து சிறப்பியல் கூறுகளையும் மாற்றமடையும் உயிரி இயல்பாகவே பெற்று இருக்க வேண்டும்.

        எந்த ஒரு உயிரியும் அதன் முந்தைய நிலையில் இருக்கும் ஏனைய உயிரினங்களின் எந்த ஒரு சிறப்பியல் கூறுகளை தாங்கி உருவாதில்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம் இனி., உயிர் படைப்பில் உயர் படைப்பாக வர்ணிக்கப்படும் மனிதனின் தோற்றம் குறித்து பரிணாம கோட்பாட்டின் அடிப்படையில் சில இயல்பான சந்தேகங்கள் குறித்து காண்போம்.,

        சங்கிலித்தொடர் வரிசையில் ஏனைய உயிரிகளைப்போல் பரிணாம வளர்ச்சியில் தான் மனிதன் உருவானான் என்றால் இயல்பாகவே ஏனைய உயிரினங்களின் சிறப்பியல்புகளை தாங்கி உருவாகி இருக்கவேண்டும் அஃது உருவாகாதது ஏன்?

உதாரணத்திற்கு, எந்த ஒரு உயிரினமும்


நீந்துவன >>> ஊர்வன >>> தாவுவன >>> நடப்பன >>> பறப்பன 

போன்ற இயற்பண்புகள் அடிப்படையில் வாழ்வை அமைத்துக்கொண்டிருக்கின்றன என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.இதன் அடிப்படையில் வாழ்வை தொடரும் உயிரினத்தில் இறுதியாக உருவாகும் ஓர் உயிரி மேற்கண்ட பண்புகளை தாங்கி உருவாவது அவசியமாகும். அதுவும் ஒர் அறிவார்ந்த உயிரி மேற்கண்டவற்றை தாங்கி வளர்வது எளிதே.,

     ஆனால் மேற்கண்ட பண்புகளில் நீந்துவன >>> ஊர்வன >>> தாவுவன >>> நடப்பன போன்ற பண்புகளை பெற்று உருவான மனிதன் "பறப்பன" என்ற பறவைகளின் மிக சாதாரண ஒரு பண்பை தாங்கி உருவாகாதது ஏன்? ஏனெனில் உயிரியின் பிரத்தியேக மாற்றத்திற்கு மிக முக்கிய காரணி., அவ்வுயிரியின் சுயதேவை மற்றும் கால சூழல் ஆகும் எனும்போது மனிதன் பறக்கவேண்டும் என்பது அவனது சுயதேவை என்ற நிலையும் தாண்டி... காலகாலமாக அவனது தேடுதலின் அதிகப்பட்ச பேராசையாக இன்றும் ஆழ்மனதில் நிறைவேறாத எண்ணமாக தொடர்கிறது,

      மனிதனால் பறக்கமுடிந்தால் ஏனைய நிலைகளை விட எந்த ஒரு பணியையும் விரைவாகவும், எளிதாகவும் செய்ய முடியும். எனவே பறக்கும் மனிதனால் சாரதாரண நிலையில் இருக்கும் மனிதனை விட அதிக அளவில் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் ஆக செயல் ரீதியான காரணங்களின் உந்துதலால் ஏற்படும் மாற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பரிணாமத்தில், உயிரின வளர்ச்சி விளைவால் இன்னும் மனித உயிரி பறக்க முற்படாதது ஆச்சரியமே.....

இதைத்தவிர தர்க்கரீதியாகவும் பல இடர்பாடுகள் இருக்கிறது பரிணாமம் உருவாக்கிய மனிதனுக்கு..

     மனிதன் என்ற ஒரு உயிரினம் ஏனைய உயிரினங்களைப்போல் இல்லாமல் தனித்தொரு சீராய் ஒழுங்குப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட படைப்பினமாக காண்கிறோம்.

     அஃதில்லாமல் பரிணாமம் தான் மனிதனை உருவாக்கியது என்றால்... ஏனைய உயிரினங்களைப்போல் ஊண், உறக்கம், பசி, இச்சை, கோபம், வேகம், பாசம் போன்ற ஏனைய வாழ்வியல் பண்புகள் மனிதனுக்கும் பொதுவாக கொண்டாலும் "வெட்கம்" என்ற உயரிய பண்பை எந்த உயிரின் மூலத்திலிருந்து பெற்றான்..? பொதுவாக உலகில் பல்வேறு பகுதியில் வாழவேண்டி இருந்ததால் மனிதன் கால சூழலுக்கு தகுந்தாற்போல் ஆடை அணிய கற்றுக்கொண்டான் என்றாலும் அஃது தங்களின் வெட்கத்தலங்கள் மறைக்கப்படவேண்டியவைகள் என்பதை எந்த பரிணாம மூலத்தில் கற்றுக்கொண்டான்.


 ஏனெனில் உயிரின மாற்றத்தின் விளைவாக உணவு, பாதுகாப்பு போன்ற வாழ்வாதார தேவையை மட்டுமே கண்டறிந்து அதற்கான செய்கைகளை 
வேண்டுமானால் அதிகப்படுத்த முடியுமே தவிர உயிர் வாழ தொடர்பே இல்லாத வெட்கம் என்ற பண்பை கற்ற வேண்டியது அவசியமே இல்லை. ஆனால் மனிதனுக்கு மட்டும் அத்தகைய பிரத்தியேக பண்பு உண்டானது எப்படி?

    இன்றும், நாம் சர்வ சாதாரணமாக பார்க்கிறோம், கால்நடைகளில் குட்டியே தன் தாயோடு கூடுவதை காண்கிறோம். மேலும் உடல் உறவில் எந்த ஒரு ஒழுக்க நெறியையும் அவை பின்பற்றுவதில்லை.

   ஆனால்., மனித உயிரி., தாய் (தகப்பன்)- சகோதரி(சகோதரன்) - மகள்(மகன்) - என்று தரம் பிரித்து மனைவியோடு (கணவனோடு) மட்டுமே கூடும் அசாத்திய ஒழுக்க மாண்பை எங்கிருந்து பெற்றது... எந்த பரிணாம உயிரியின் இயல்புகள் மனிதனுக்கு அத்தகைய சிறப்பை வழங்கியது?
  
அத்தோடு மட்டுமில்லாமல்., மனைவி/ கணவன் தவிர்த்து மாற்றாருடன் கூடுவது தவறு என்ற உயிரிய பண்பையும் எந்த பரிணாம உயிரின வளர்ச்சியில் கற்றுக்கொண்டான்...?

     ஆக மனிதன் பிரத்தியேகமாக திட்டமிடப்பட்டு ஒழுக்க நெறி முறைகளின் படி வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் உருவான தனியானதொரு படைப்பு என்பது தெளிவு! இதை தாண்டியும் உயிரின வளர்ச்சியின் விளைவாக குரங்கினம் >>>> நியண்டர்தால் >>> மனிதன் உருவானதாக சொன்னால் எதிர்ப்பார்ப்போம்.. மேற்குறிப்பிடப்பட்ட வினாவிற்கு பதில் தருமா பரிணாமம்...?

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்)தூதர் உங்களிடம் வந்துள்ளார். அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்;. ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கும் எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை. அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான். (திருக்குர்-ஆன் 04:170)
                                            
                                                                 அல்லாஹ் மிக்க அறிந்தவன்

13 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

  சகோ நல்லதொரு கட்டுரையை கொடுத்துருக்கீங்க. வாழ்த்துக்கள்!!

  //மேற்குறிப்பிடப்பட்ட வினாவிற்கு பதில் தருமா பரிணாமம்...?//

  பாக்கலாம் ;)

  ReplyDelete
 2. சகோதரர் குலாம் அவர்களுக்கு,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  நீங்கள் எழுப்பி இருக்கும் கேள்விகளுக்கு, இதுவரை கிடைத்திருக்க கூடிய எலும்பு துண்டுகளை வைத்து பதில் சொல்லுவது கடினமான விஷயம்.

  ----
  குரங்கினம் >>>> நியண்டர்தால் >>> மனிதன் உருவானதாக சொன்னால்
  ----

  இப்போது இது குறித்த அவர்களது எண்ணங்கள் மாறி விட்டன. பார்க்க

  கரைந்து போன பரிணாம ஆதாரங்கள்

  மனிதனின் பேச்சு கூட பரிணாமவாதிகளுக்கு புரியாத புதிராகவே உள்ளது.

  பரிணாமம் நடந்திருக்க வேண்டுமென்று பரிணாம நம்பிக்கையாளர்கள் நம்பலாம். ஆனால் நேரான பார்வை கொண்ட எவரும் அதில் சந்தேகம் கொள்ளாமல் இருக்க முடியாது. இதனால் தான் பரிணாமம் இன்னும் கோட்பாடு அளவிலேயே உள்ளது...


  நல்லதொரு பகிர்வுக்கு நன்றி...


  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத்.

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  அருமையான தெளிவான பதிவு
  அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக

  ReplyDelete
 4. வ அலைக்கும் வரஹ்

  சகோதரி., ஆமினா துஆ செய்யுங்கள்., இங்கு உருவாகும் கட்டுரைகள் எல்லாம் நம் சகோதர தளங்களில் பார்த்த பதிவுகளின் பாதிப்பின் விளைவே.,,
  //பதில் தருமா பரிணாமம்// பொறுத்திருங்கள் உங்களோடு சேர்ந்து நானும் காத்திருக்கிறேன் இன்ஷா அல்லாஹ்..
  தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

  சகோதரர் ஆஷிக் அவர்களின் முதல் வருகைக்கு நன்றி,
  என்னை எழுத தூண்டியதே உங்களின் "எதிர்க்குரல்" தளம் தான் சகோதரரே., நாம் என்ன சொன்னாலும் பரிணாம மரத்தில் வலிய ஏறி நிற்கும் அச்சகோதரங்களுக்கு அல்லாஹ் தான் நேர்வழிக் காட்ட வேண்டும்
  //மனிதனின் பேச்சு கூட பரிணாமவாதிகளுக்கு புரியாத புதிராகவே உள்ளது.//
  இன்ஷா அல்லாஹ் இது குறித்தும் தாங்கள் பதிவிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

  சகோதரர்., ஹைதர் அலி.,
  என்னைப் பொருத்தவரை இப்பதிவும் முழுமைபெற்றதாக நினைக்கவில்லை., இதிலும் நிறைய குறைகள் இருப்பதாகவே உணர்கிறேன் இன்ஷா அல்லாஹ் துஆ செய்யுங்கள் இறை நாடினால் இனியும் சந்திப்போம் இதைப்போன்ற பதிவுகளின் வாயிலாக...

  ஜஸகல்லாஹ் கைரன்
  -ஓர் இறை அடிமை

  ReplyDelete
 5. அஸ்ஸலாமு அழைக்கும் குலாம் .... மிக தெளிவாக
  விளக்கி இருகிறிர்கள் நன்றி ..............நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.......

  ReplyDelete
 6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
  சகோதரர் குலாம் அவர்களுக்கு,
  நல்ல சிந்திக்க வைக்கும் பதிவு.

  பொதுவாய் சாதாரண மனித கண்டுபிடிப்புகளிலேயே பிளாக் அண்ட் ஒயிட் டிவி பரிணாமம் பெற்று கலர் டிவி ஆகும். பின்னர் பிளாட் டிவியாக பரிணாமம் பெற்று எல்சிடியாக பரிணாமம் பெற்று விடும். ஆனால், அது என்றும் ரோட்டில் ஓடும் ஒரு பைக்காக(?) பரிணாமம் பெறாது..!

  ReplyDelete
 7. வ அலைக்கும் சலாம் வரஹ்

  சகோதர் நஸிருதீன் கருத்துக்கு நன்றி.,

  சகோதரர்., முஹம்மது ஆஷிக்
  நாம் என்ன சொன்னாலும் பரிணாம மரத்தில் வலிய ஏறி நிற்கும் அச்சகோதரங்களுக்கும் அல்லாஹ் தான் நேர்வழிக் காட்ட வேண்டும்

  ReplyDelete
 8. அஸ்ஸலாமு அழைக்கும் குலாம்
  .............மௌலுது ஓதுவதற்கு ஆதாரமாக.......(முஸ்லிம் 4 பாகம்)(கவிதை என்னும் பாடம் )
  (ஹதீஸ் 4540
  இதை தொடர்ந்து வரும் ஹதீஸை ஆதரமாக சொகிறார்கள் )
  இதற்கு எனக்கு விவரமாக பதில் தாக .....................உக்களுக்கும் ,எனக்கும் நேர்வழி காட்டக்குடியவன் அல்லாஹ் ஒருவனே!

  ReplyDelete
 9. உம்மத் என்னும்
  பிளாக் மிக அறுபுதமாய் அறிவியல் முறைளும் ,,தர்க ரீதியாகவும்,,குரான் ,ஹதீஸ் மூலமாகவும் மக்களுக்கு விளக்கம் கொடுக்கிறது ......அதில் உள்ள அணைத்து சகோதரர்களுக்கும் எனது அன்பார்ந்த நன்றி ......எல்லா புகழும்
  இறைவனுக்கே

  ReplyDelete
 10. அஸ்ஸலாமு அழைக்கும் ..சகோதரர் குலாம்,,,
  கிறிஸ்தவர்களுடன்
  தொஹீத் ஜமாஅத் நடத்திய.....நேருக்கு நேர் ....

  ReplyDelete
 11. நல்ல தொடர், தொடரட்டும் ........

  ReplyDelete
 12. அஸ்ஸலாமு அழைக்கும் ..........சகோதரர்
  குலாம் புதிய
  ஆர்டிகள் எழுத
  வில்லையா ?உங்களுக்கும் ,எனக்கும் நேர்வழி காட்டக்குடியவன் அல்லா ஒருவன ...

  ReplyDelete
 13. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
  சகோதரர் Issadeen Rilwan தாமதமான பதிலுக்கு மன்னித்துக்கொள்ளுங்கள்., இஸ்லாமிய பணியில் என்னையும் இணைத்துக்கொள்ள துஆ செய்யுங்கள்

  வ அலைக்கும் ஸலாம் வரஹ்
  சகோதரர் நஸூருதீன் ., எனது வேலைப்பணி காரணமாக எழுத்து பணியை தொடர முடியவில்லை., இன்ஷா அல்லாஹ் இனி வாய்ப்பு கிடைக்கும் போது எழுதுகிறேன் அதற்காக துஆ செய்யுங்கள்

  ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்