"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Friday, September 23, 2011

நடைமுறை வாழ்வில் நாத்திகத்தின் 'முரண்பாடு'..!


                                       ஓரிறையின் நற்பெயரால்.,
           தம் கொள்கைப்படி வாழ மக்களை பின்பற்ற அழைக்கும் ஒரு மதமோ அல்லது மதம் சாரா இயக்கங்களோ தங்களுக்கென ஒரு கோட்பாட்டை ஒரு வரையறை செய்திருக்க வேண்டியது அவசியம். அக்கோட்பாடு சரியானதா அல்லது தவறானதா என்பது அதுக்குறித்து விவாதிக்க படும்போது அறிந்துக்கொள்ளலாம். 

       ஆனால் கடவுளை ஏற்றுக்கொள்ளாமல் அதை எதிர்க்கும் நாத்திகம் என்ற ஒரு கொள்கை(?) கடவுள் மறுப்பு அல்லது எதிர்ப்பு என்ற பிரதான ஒரு காரணத்தை மட்டுமே முன்னிருத்தி இச்சமுகத்தில் தன்னை ஒரு இயக்கமாக நிறுவ முயல்கிறது, கம்யூனிஷ மற்றும் திராவிட இயக்க சாயல் இவற்றில் இருந்தாலும் உலகம் தழுவிய அளவில் ஒரே கொள்கை கோட்பாடுகளை கொண்ட ஒரு பேரியக்கமாக நாத்திகம் இல்லை., கொள்கைரீதியில் தனக்கென வரையறை கொள்ளாவிட்டாலும் வாழ்வியல் முறையிலாவது தனக்கென தனிச்சட்டங்கள் ஏற்படுத்தி இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.,  

        மதங்கள் முன்னிறுத்தும் சடங்கு சம்பிரதாயங்கள் போலியானது என புறந்தள்ளி வாழ்க்கைக்கும் வாதத்திற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் எந்த ஒரு செய்கையும் நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்துபவர்களே நாத்திகர்கள் என இச்சமுகத்தில் அவர்களுக்கு ஒரு குறீயிடு உண்டு. ஆனால் எதை மதங்கள் மேற்கொள்வதாக விமர்சித்து அதை விடுத்தார்களோ அத்தகைய செயலை பகுத்தறிவு போர்வையில் தமது அன்றாட நடைமுறை வாழ்வில் அவர்கள் மேற்கொள்வது தான் அபத்தமானது... ஏன் அறிவுக்கு பொருந்தாததும் கூட., அவற்றில் ஓரிரண்டு குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

 வணக்கம்???
    பொதுவாக மதங்களின் அடிப்படை கொள்கை "இறையை வணங்குதல்" ஆகும். ஆக வணங்குதல் அவசியமற்ற ஒன்று என்று அசெய்கையே எதிர்க்கும் நாத்திகர்கள்., அச்செயலுக்கு சொல் வடிவம் கொடுத்து ஏற்பது தான் நடை முறை வாழ்க்கையில் நாத்திகம் கொள்ளும் நூறு சதவீகித தெளிவான முரண்பாடு.

         இஸ்லாம் தவிர்த்த ஏனைய மதங்களை பின்பற்றுவோர் சர்வசாதாரணமாக ஒருவரை ஒருவர் சந்திக்கின்ற போது பெரும்பாலும் "வணக்கம்" என்ற வார்த்தையையே உபயோகப்படுத்துகிறார்கள். இது அறிமுகப்படுத்தும்போது வாழ்த்துச்செய்தியாக கொண்டாலும் இது இறைவனுக்கு மட்டுமே உரித்தாக வேண்டிய ஒரு செயல் வடிவ வார்த்தை.

   சரி மதங்களை பின்பற்றோர் தான் தவறாக இறைவனுக்கு மட்டுமே கொடுக்கவேண்டிய கண்ணியத்தை சக மனிதர்கள் மத்தியில் சொல்கிறார்களென்றால் பகுத்தறிவில் செயல்படும் நாத்திகர்களும் அதே வார்த்தையே சொல்வது தான் ஏற்றுக்கொள்ள முடியாதது.

        ஏனெனில் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொள்ளும் போது உங்கள் மீது அமைதியும் சமாதானமும் நிலவட்டும் என்று சொல்வதே ஏற்புடைய வார்த்தையாக இருக்கும் ஏனெனில் எந்த ஒரு மனிதருக்கும் அமைதி மற்றும் சமாதானம் என்பது எல்லா காலங்களிலும் தேவையான ஒன்று. மேலும் இவ்வாக்கியத்தை ஒருவரை சந்திக்கும் எல்லா தருணங்களிலும் உபயோகப்படுத்தலாம். ஆக மேற்கண்ட வரிகளே மனித அறிமுக பொழுதுகளில் சொல்வது ஏற்புடையதும் பிறிதொருவர் மேல் கொண்ட அக்கறைக்கு உரித்தான வார்த்தையாக இருக்கும்.,

  எனினும் அவ்வார்த்தை ஒரு மார்க்க/ மத ரீதியான அடையாளத்தை ஏற்படுத்தும் என குறை சொன்னாலும் பரவாயில்லை., உடன்பாட்டு முறையில் அதை ஏற்றுக்கொள்வோம்., மேற்கண்ட வார்த்தைகள் சொல்வது வேண்டாம் என்ற போதிலும் குறைந்த பட்சம் நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? என்று கேட்பதே ஏற்புடைய வார்த்தையாகும்.

             வணக்கம் என்ற வார்த்தையின் விளக்கம் குறித்து சற்று ஆராய்ந்தால் இவ்வார்த்தை தமிழ் மொழியில் இருவேறு அர்த்ததில் கையாளப்படவில்லை., மேலும் இதற்கு வேறு மறைமுக பொருளும் இல்லை., இவ்வார்த்தை வணங்குதல் அல்லது வணங்கப்படுதலை மட்டுமே மையப்படுத்திய ஒரு  இணைப்பு வார்த்தையாகும்-  தமிழ் பொருளகராதியில் இவ்வார்த்தையின் பொருள் குறித்து பார்த்தாலும் வணக்கம் என்ற தனிச்சொல்லுக்கு எந்தவித அர்த்தமும் கிடையாது வேறு வினை/பெயர்ச்சொல்லுடன் சேரும் போதே பொருள்கொள்ளப்படுகிறது. உதாரணமாக வணக்கம் தெரிவிக்கிறேன்., உன்னையே வணங்குகிறேன்.. இப்படி.,

    ஆக எதிரில் நிற்கும் ஒருவரை சுட்டி "வணக்கம் என்ற சொல்லை உபயோகித்தால் அச்சொல் அர்த்தம் பெற்று அவர் வணக்கத்திற்குரியவராக பொருள்படும். எதையும் அறிவுரீதியாக அணுகி சம்பிரதாயங்களை மறுக்கும் நாத்திகம், அடிபணிதலுக்குறிய பிரத்தியேகமான சொல்லாடல் வார்த்தையை பயன்படுத்துவது ஏன்? அதுவும் அவர்களின் அடிப்படைக்கு கூற்றுக்கு எதிராக அவ்வார்த்தை இருந்தும்..?

   இல்லை...இல்லை வணக்கம் என்ற வார்த்தையை வணங்குதல் என்ற பொருளில் பயன்படுத்த வில்லை மாறாக ஒருவரின் அறிமுக துவக்கத்தில் வெறும் வழக்கு சொல்லாக தான் பயன்படுத்துகிறோம் என்றால்., மேற்குறிப்பிட்ட அற்புத முகமனோடு அனேக வார்த்தைகள் அழகிய தமிழில் அணிவத்திருக்க வெறுமனே வாய் உச்சரிப்பிற்காக பொருளற்ற வெற்று வார்த்தையே பயன்படுத்த வேண்டிய அவசியமென்னே?



அடுத்து, பிறந்த நாள் கொண்டாட்டம்.

      மதம் தவிர்த்தும் ஏனைய இயக்கம் சாந்தவர்களாலும் பிறந்த நாள் கொண்டாடுவதை நாம் அன்றாடம் வாழ்வில் பார்த்து தான் வருகிறோம்., அதிலும் இறந்த தலைவர்களுக்கு மாலை அணிவித்து அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் வழக்கம் தேவையா இல்லையா என்பதை விட முதலில் அது அறிவுக்கு பொருத்தமானதா...?
(( இங்கு எல்லோரையும் குறித்து பேசவில்லை, பகுத்தறிவு பேசும் நாத்திகர்களை குறித்தே ))

      ஏனெனில் ஒருவர் இறந்தவுடனேயே அவரது வாழ் நாள் வரையறுக்கப்பட்டு அவரது ஆயூட்காலமும் கணக்கிடப்பட்டு அவரது செய்கைகள் முடிவுறுகின்றன. அப்படியிருக்கும் போது இறந்த மனிதர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவதென்பது எப்படி சாத்தியமாகும்..? வருடா வருடம் பிறந்த நாள் என்ற பெயரில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் சடங்கு தமிழகத்தில் திராவிட கழக பெயரில் நாத்திகர்கள் நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

   உயிருள்ளவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவது தேவையில்லையென்ற போதிலும் அது அவர்களுக்கு மன மகிழ்ச்சியளிக்கும் என்ற விதத்திலாவது அச்செய்கையை நியாயப்படுத்தலாம்., ஆனால் இறந்தவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவதற்கு பெயர் தானா.. பகுத்தறிவு???

      இச்செயலை நியாயப்படுத்த, நாங்கள் பெரியார் புரிந்த சேவைக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கும் முகமே அவர் சிலைக்கு மாலை அணிவிக்கிறோம் என சமாதானம் சொல்கின்றனர்., ஆனால் ஒரு மனிதர் மேற்கொண்ட சேவைக்கு கொடுக்கும் கண்ணியத்தின் வழிமுறை அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவிப்பதிலா இருக்கிறது..? அதுவும் எதை வணங்கும் பொருளாக ஆக்க வேண்டாம் என்று மறுத்தாரோ அத்தகைய கல்லிலே அவரை வடித்து மரியாதை எனும் பெயரில் வருடத்திற்கு ஒரு முறை மாலை அணிவிப்பதை சடங்காக செய்து வருவதுதான் உச்சக்கட்ட கொடுமை.,

     ஆக இறந்த ஒருவரை கண்ணியப்படுத்துதல் என்பது அவரது எண்ணத்தை பூர்த்தி செய்வது , அல்லது அவரது சொல்லுக்கு செயல்வடிவம் கொடுப்பதில் இருக்கிறது., இன்னும் அதிகப்பட்சமாக அவர் பெயரில் பொது மக்களின் நலத்திற்கு தேவையானவற்றை ஏற்படுத்துவது மற்றும் உருவாக்குவது அவர் கொணர்ந்த கொள்கைக்கு மதிப்பு கொடுக்கும் விதமாக அமையும். மாறாக "மாலை அணிவிப்பதில் மாற்றமடைய போவதில்லை மரித்தவரின் மரியாதை.!"
   
          இச்செயலை நாடு தழுவிய அளவில் உள்ள அனைத்து நாத்திகர்களும் செய்யவில்லை மாறாக சில "இயக்க தோழர்கள்" மட்டுமே செய்வதாக சொன்னாலும் .இஃது அறிவுக்கு பொருந்தாத இச்செயலை ஏன் ஏனைய நாத்திகர்கள் எதிர்க்கவில்லை... குறைந்த பட்சம் விமர்சிக்கக்கூட வில்லை?
 
ஆக,
     1. இறந்தவருக்கு பிறந்த நாள் கொண்டாடுவதும்
     2. ஒருவரை கண்ணியப்படுத்த அவரது உருவப்படத்திற்கு அல்லது சிலைக்கு மாலை அணிவிப்பதும்
  நடைமுறை வாழ்வில் நாத்திகம் சந்திக்கும் இரண்டாவது தெளிவான முரண்பாடு.  

எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே!
-தந்தைபெரியார் - "விடுதலை" 15-2-1973
(This quote taken from tamil oviya blogspot)

அதுப்போல,
பெரியாரின் போதனைகளை பின்பற்றுவோரை குறித்து இங்கு நான் விமர்சிக்க வில்லை மாறாக அவரது பெயரை வைத்து பகுத்தறிவுக்கு பொருத்தமில்லாத செய்கைகளின் ஈடுபடும் நாத்திகர்களை குறித்தே இங்கு விமர்சனம்.!


சார்ட்டா சொல்லணும்னா...
   மதங்களின் போலி சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை மறுக்கும் நாத்திகர்கள் அதே, மதம் சார்ந்த நபர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏன்? அதுவும் பகுத்தறிவிற்கு பொருத்தமில்லாத வகையில் இருந்தும் கூட???


இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும் - இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை. (39:23)
                                                                             அல்லாஹ் நன்கு அறிந்தவன்.


83 comments:

  1. நீங்கள் முதலில் உங்கள் மத அடிப்படை வாதமான உறுவ வணக்க்ம் கூடாது என்ற பார்வையில் இருப்பதால் அதற்கு வளு சேர்க்க முயல்வது தெரிகிறது. நாத்திகர்கள் ஒரே மாதிரியாக உலக அல்வில் இல்லை என்பதால் அது தவரானது என்று முடிவு சொல்லத் தேவை இல்லை. வணக்கம் என்பது மனிதனை வணங்குதல் ந்ன்று என்றே கருதுகிறோம். இல்லாத இறைவன் என்ற கற்பனையை வண்ங்கும் அறியாமையைச் சுட்டிக்காடுவதில் எங்களுக்கு ஆர்வமே. நாத்திகம் என்பது மத நிருவனம் அல்ல.கால், இடம் சார்ந்த,சூழல் சார்ந்த தேவைகளை கைக்கொண்டு வாழும் வாழ்க்கையே நாத்திகர்களின் வாழ்க்கை. புரியாத அரபி வார்த்தைகளி எத்தினை இசுலாமியர்கள் பயன் படுத்துகிறார்கள் இது அறியாமைதானே. குடும்ப பாசம் வாயிபௌ இவைகளின் சிரமங்களால் ஆங்காங்கே பிழைகள் நடக்களாம். புதிதாக நாத்திகராவோர்க்கு குடும்ப,மற்றும் உம்மைப்போண்றவர்களின் தொல்லைகள் ஏராளம். 5கடமை முடிக்காத முசுலீம்களின் தொகை என்ன என்று தெரியுமா? முசுலீம் என்றால் மொழிப்பற்று, நாட்டுப்பற்று இல்லாதவர்களாக இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவோராகவே உம்மைப்போண்றோர் உள்ளனர் என்று கருத்தத் தோண்ருகிறது.
    இரசீத்கான் மயிலாடுதுறை.

    ReplyDelete
  2. ஐயா., இரசீத் கான் அவர்களுக்கு.,
    உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
    உண்மையாகவே இங்கு நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை., மதங்களின் போலி சடங்குகள் மற்றும் சம்பிரதாங்களை மறுக்கும் நாத்திகர்கள் அதே, மதம் சார்ந்த நபர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏன்? அதுவும் பகுத்தறிவிற்கு பொருந்தமில்லாத வகையில் இருந்தும் கூட??? என்பது தான் இங்கு கேள்வியாக கேட்டுள்ளேன்.
    அவர்களின் வாழ்வியல் முறைக்கு இஸ்லாமிய தலையீடு தான் காரணம் என்று சொல்வதற்கும் என்ன சம்பந்தம்?

    சர்வ வல்லமை வாய்ந்தவராக ஆத்திகர்கள் குறிப்பிடும் பேரண்ட அதிபதி இறைவனை வணங்குவதையை தவறு என்று வாதிடும் நாத்திகர்கள் தன்னைப்போன்ற சராசரி மனிதர்களை வணங்குவதாக சொல்வது பகுத்தறிவு வாதமா? அதை இங்கு நீங்கள் நியாயப்படுத்துவது தான் ஆச்சரியமான அபத்தம்! .,

    நாத்திகம் குறித்த கேள்விக்கு அதை விடுத்து கடவுள்- இஸ்லாம் - முஸ்லிம் என அடுத்த நிலைக்கு சென்றதுவும் ஏன் என்று புரியவில்லை., ஏனைய ஆக்கங்களையும் பார்வையிடுங்கள்.,- அப்படியே உங்கள் கேள்விகளையும் இந்த பாமரனுக்கு புரியும் விதத்தில் எளிதாய் விளங்குங்கள், இன்ஷா அல்லாஹ் பதில் சொல்ல ஏதுவாக இருக்கும்

    -இறை நாடினால் இனியும் சந்திப்போம்

    ReplyDelete
  3. சகோ. குலாம்,

    உங்களின் மீது இறைவனின் அமைதி நிலவட்டுமாக.

    நாத்திகர்களின் அடிப்படை தவருகளிலேயே கை வைத்துள்ளீர்கள், இதை ஆரம்பமாக வைத்து, அவர்களின் மற்ற பொய் பிரச்சாரங்களையும் நேர்மையான முறையில் வெளி கொணருங்கள்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. ///மனித வாழ்க்கை என்பது பூமியில் நிலவுவது. குற்றங்கள் என்பது பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டுமே நிகழக்கூடியது. அந்தக் குற்றங்களுக்கான தண்டனையும் அந்த காலத்திற்குள்ளாகவே வழங்குவதை மனிதச் சட்டம் அடிப்படையாக கொண்டிருக்கிறது. ஆனால் இறைச் சட்டமோ உலகில் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என அவகாசமளித்து இறந்தற்குப் பிறகு தண்டனையளிப்பதை அடிப்படையாகக் கொண்டது. ஆக இரண்டுக்கும் இடையிலுள்ள மாறுபாடான கூறுகளை உள்வாங்காமல், இறைவன் படைத்தவன் மனிதன் இறையின் படைப்பு என்று நம்பிக்கை சார்ந்த தகுதியை உள்ளீடாகக் கொண்டு எழுப்பப்படும் கேள்விகளின் தொகுப்பே உங்களின் கட்டுரை. இதுபோன்ற காரணங்களால் இந்த ஒப்பீடு சரியானது அல்ல////
    செங்கொடி உளறி கொட்டியுள்ளார் ,தக்க பதில் அளிக்கவும்

    ReplyDelete
  5. ////முசுலீம் என்றால் மொழிப்பற்று, நாட்டுப்பற்று இல்லாதவர்களாக இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவோராகவே உம்மைப்போண்றோர் உள்ளனர் என்று கருத்தத் தோண்ருகிறது.////
    முஸ்லிம் அல்லாதவர்கள் எல்லாம் மொழி பற்றுள்ளவர்கள் என்றால் தமிழகத்தில் ஏன் ஆங்கில மோகம் தலைவிரித்தாடுகிறது.?
    2 G ஸ்பெக்ட்ரம் ஊழல் ,ராணுவ தளவாட ஊழல் முதல் பாங்க லோன் மோசடி வரை யிலான நாட்டுபற்றுகளை முஸ்லிம்கள் செய்வதில்லையே அறிவீரா?
    இறைகற்பனை இலான் என்பதோடு நிற்க வேண்டியதுதானே ,பிறகென்ன ஈரசித்கான்
    புதிதாக முஸ்லிம் ஆகியோருக்கு உடலை இருகூறாக பிரிக்கும் வேதனைகளை எல்லாம் தூக்கி எறிந்து வளர்ந்திருக்கிறது .ஆதலால் நீங்கள் நாத்திக கோட்பாட்டில் பெருமையடிப்பதற்காக இருக்க வேண்டாம்.

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    அன்பு சகோ கார்பன் கூட்டாளி, உண்மைத்தான் துஆ செய்யுங்கள் மதரீதியான சூழலில் சிக்கித்தவிக்கும் நாத்திகம் எனும் மாயையின் ஏனைய செயல்கள் குறித்தும் இன்ஷா அல்லாஹ் வெளியிட., '
    ஜஸாகல்லாஹ் கைரன்
    நன்றி சகோ

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    அன்பு சகோ இப்ராஹிம் .,
    அல்ஹம்துலில்லாஹ்., சகோதரர் அந்த மறுப்பிற்கான 'மறுப்பும்' அவர் தளத்திலே வெளிடப்பட்டுள்ளது.இன்ஷா அல்லாஹ் பார்வையிடலாம்.

    ReplyDelete
  8. அரபிக் என்ன கடவுளின் மொழியா?
    நீங்கள் சொல்லும் வணக்கத்தை தமிழில் சொல்லலாமே.
    யார் சொல்லக்கூடாதுன்னு சொன்னது

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோ வால் பையன்

      இந்த பதிவு சலாத்தை தமிழில் சொல்லலாமா? வேண்டாமா என்பது குறித்தல்ல., நாத்திகர்கள் நடைமுறையில் கொண்டிருக்கும் முரண்பாடுகளை குறித்தே ., அதுக்குறித்து தொடருங்கள் சகோ

      Delete
  9. நண்பர் இப்ராஹிம்,

    நீங்கள் மேற்கோள் கொடுத்துள்ள என்னுடைய அந்த கருத்து எப்படி உளரலாக இருக்கிறது என்று கூற முடியுமா? உங்களுக்கு பிடிக்காத கருத்துகளெல்லாம் உளரலாகிவிடுமா?

    நண்பர் குலாம்,

    என்னுடைய கேள்வியை நீங்கள் மடை மாற்றியிருந்தீர்களே தவிர பதில் கூறவில்லை. ஒருவேளை, நீங்கள் ஏற்கனவே அந்தக் கேள்விக்கு பதில் கூறிவிட்டிருந்ததாக கருதினால் மேற்கோள் காட்டுங்கள். பின் நான் என்னுடைய கருத்தின் பொருள் என்ன? நீங்கள் பதிலாக கூறியிருந்தது அந்தக் கருத்திற்கு பதிலளிப்பதாய் இருந்ததா என்பதை விளக்குகிறேன்.

    ReplyDelete
  10. நண்பர் இப்ராஹிம்,

    நீங்கள் மேற்கோள் கொடுத்துள்ள என்னுடைய அந்த கருத்து எப்படி உளரலாக இருக்கிறது என்று கூற முடியுமா? உங்களுக்கு பிடிக்காத கருத்துகளெல்லாம் உளரலாகிவிடுமா?

    நண்பர் குலாம்,

    என்னுடைய கேள்வியை நீங்கள் மடை மாற்றியிருந்தீர்களே தவிர பதில் கூறவில்லை. ஒருவேளை, நீங்கள் ஏற்கனவே அந்தக் கேள்விக்கு பதில் கூறிவிட்டிருந்ததாக கருதினால் மேற்கோள் காட்டுங்கள். பின் நான் என்னுடைய கருத்தின் பொருள் என்ன? நீங்கள் பதிலாக கூறியிருந்தது அந்தக் கருத்திற்கு பதிலளிப்பதாய் இருந்ததா என்பதை விளக்குகிறேன்.

    ReplyDelete
  11. வாங்க செங்கொடி அண்ணே நலமா?
    இந்த ஆக்கம் எழுதி சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் இப்போ வந்து கருத்திடுவது மகிழ்வளிக்கிறது. நான் ஏற்கனவே எனது மறுப்பை உங்கள் தளத்தில் பதிவு செய்து இருக்கிறேன். எனினும் என்னுடைய அடிப்படைக்கு கேள்விகளுக்கு பதில் இல்லை.

    இந்த ஆக்கத்தில் கூட நாத்திகம் தமது கொள்கையில் கொண்ட முரண்பாட்டை தான் விளக்கியிருக்கிறேன். அதை இறுதியில் எளிமைப்படுத்தியும் இருக்கிறேன் இப்படி

    மதங்களின் போலி சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை மறுக்கும் நாத்திகர்கள் அதே, மதம் சார்ந்த நபர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏன்? அதுவும் பகுத்தறிவிற்கு பொருத்தமில்லாத வகையில் இருந்தும் கூட???


    ஆக இந்த இரண்டு வரி கேள்விக்கு பதில் சொல்லுங்க சகோ

    ReplyDelete
  12. மிக்க நலம் குலாம் தம்பி,

    நண்பர் ஒருவர் இங்கு, “உங்களைக் குறித்த பின்னூட்டம் ஒன்று உங்களின் பதில் இல்லாமல் இருக்கிறது” என்று தகவல் தெரிவித்ததனால் வந்தேனேயன்றி பதிவின் மூலம் அல்ல. வணக்கம் குறித்தும், சடங்குகள் குறித்தும் ஏற்கனவே பல இடங்களில் பதில் கூறியிருப்பதால் மீண்டும் அது தேவையில்லை என்று கருதுகிறேன்.

    ஒன்றை மட்டும் நினைவூட்ட விரும்புகிறேன், என்னுடைய பின்னூட்டத்தினால் பதில் கூறிய நீங்கள் என்னுடைய பின்னூட்டத்திற்கு பதில் கூறவில்லை.

    ReplyDelete
  13. அன்பு சகோ

    == வணக்கம் குறித்தும், சடங்குகள் குறித்தும் ஏற்கனவே பல இடங்களில் பதில் கூறியிருப்பதால் ==

    அப்படியா நல்லது. லிங்க் கொடுங்க சகோ, இறை நாடினால் பார்த்து மாற்று கருத்து இருப்பீன் தொடர்கிறேன்.

    ReplyDelete
  14. அன்புத்தம்பி,

    வணக்கம், சடங்கு - என்னுடைய கருத்துகளை சுட்டிக் காட்ட முடியும். ஆனால் அது தொடர்ந்து விவாதமானால் .. .. .. ஏற்கனவே நம்மிடையே விவாத அனுபவங்கள் இருக்கின்றன. எனக்கொன்றும் ஆட்சேபம் இல்லை, நீங்கள் விவாத நேர்மையுடன் தொடர்வீர்களென்றால் .. .. ..

    இப்போதும் கூட பாருங்கள், நான் என்ன நோக்கத்திற்காக இரண்டு ஆண்டுகள் கழித்து இப்போது பின்னூட்டினேனோ அதை நீங்கள் கண்டு கொள்ளவில்லை. ஏன் தம்பி?

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோ செங்கொடி.,

      வணக்கம், சடங்கு போன்றவற்றை குறித்து எதில் சுட்டிக்காட்டுவீர்கள்? மதரீதியான கோட்பாடுகளிலா? தாரளமாய் நானும் கூட சுட்டிக்காட்டுவேன், ஆனால் இங்கே கேள்வி நாத்திக கொள்கையில் போலி சடங்குகள் இருக்கின்றனவா? இல்லையா என்பதே., உங்கள் தரப்பில் இல்லையென்பதற்கு நான் சுட்டிக்காட்டிய இரண்டு கேள்விகளுக்கும் தெளிவாக நேரடியாக சுருக்கமாக இங்கே பதிலை தாருங்கள்.

      நமக்குள் தொடந்த விவாதங்களில் உங்கள் தரப்பு வாதத்தை இரட்டிப்பு செய்து என் சார்பு கருத்தை மட்டும் நான் இங்கே வெளியிடவில்லை. உங்கள் வார்த்தையில் ஒரு எழுத்தை கூட நான் மறைக்கவில்லை. கடந்த விவாதங்களில் உங்கள் எண்ணத்தையும், என் எண்ணத்தையும் மிக தெளிவாகவே மக்கள் விளங்கி இருப்பார்கள். ஆக அவர்கள் முடிவெடுத்துக்கொள்ளட்டும் நம்மில் நேர்மையாளர் யார் என்று..

      நான் நேர்மையுடன் தொடராவிட்டால் நீங்கள் வந்தே இருக்கவேண்டிய அவசியமே இல்லையே. உங்கள் தளத்திலே மேற்கோள் காட்டி தொடர்ந்து இருக்கலாமே?. என் நேர்மைக்குறித்து யோசிக்கும் உங்கள் அக்கறைக்கு நன்றி!., இன்ஷா அல்லாஹ் கூடுமானவரை நான் நேர்மையாளனாகவே நடந்துக்கொள்ள முயலுகிறேன். நீங்கள் பல ஆண்டுகள் சவுதியில் இருந்தாக அறிந்தேன். உங்கள் நேர்மைக்கு ஒரு சவால். அங்கே உங்களை நாத்திகராக உங்கள் கொள்கை இறை மறுப்பு என்று பறைச்சாற்றிக்கொண்டா இருந்தீர்கள்.?

      ஒரு வார்த்தையில் ஆம் என்று சொல்லுங்கள்! உங்கள் நேர்மையை மெஞ்சுக்கிறேன்.

      // இப்போதும் கூட பாருங்கள், நான் என்ன நோக்கத்திற்காக இரண்டு ஆண்டுகள் கழித்து இப்போது பின்னூட்டினேனோ அதை நீங்கள் கண்டு கொள்ளவில்லை. //

      உண்மையாக புரியவில்லை. நினைவூட்டினால் நலம்

      முஸ்லிமாக இருப்பதற்கே இருபத்து நான்கு மணி நேரமும் ஒதுக்குகிறேன். முஸ்லிமல்லாதவர்களுடன் கருத்து பரிமாற்றம் கொள்வதற்கு இரண்டு மணி நேரத்தினை மட்டுமே ஒரு நாளில் ஒதுக்குகிறேன்.

      புரிந்துக்கொண்டால் தொடரலாம்.
      உங்கள் சகோதரன்

      Delete
  15. நண்பர் குலாம்,

    \\\.. .. என்று தகவல் தெரிவித்ததனால் வந்தேனேயன்றி பதிவின் மூலம் அல்ல/// அதாவது உங்கள் பதிவுக்கு பதில் கூறுவது என்னுடைய வருகையின் நோக்கமில்லை. (ஆனாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை)

    \\\வணக்கம் குறித்தும், சடங்குகள் குறித்தும் ஏற்கனவே பல இடங்களில் பதில் கூறியிருப்பதால் மீண்டும் அது தேவையில்லை என்று கருதுகிறேன்/// \\\அப்படியா நல்லது. லிங்க் கொடுங்க சகோ, இறை நாடினால் பார்த்து மாற்று கருத்து இருப்பீன் தொடர்கிறேன்/// \\\வணக்கம், சடங்கு - என்னுடைய கருத்துகளை சுட்டிக் காட்ட முடியும்/// \\\வணக்கம், சடங்கு போன்றவற்றை குறித்து எதில் சுட்டிக்காட்டுவீர்கள்? மதரீதியான கோட்பாடுகளிலா? தாரளமாய் நானும் கூட சுட்டிக்காட்டுவேன்/// இப்படி தொடர்பாய் படித்துப்பாருங்கள் சகோதரரே, அப்போது தான் தெளிவாய் பொருள் விளங்கும்.

    என்னுடைய கருத்தை மறைத்தீர்கள் என்று எங்கும் உங்களை குற்றம் சாட்டியதில்லை. நான் உங்கள் தளத்தில் உலவுகிறேன் என்பது மட்டுமே நீங்கள் நேர்மையாளர் என்பதற்கான சான்றாகிவிடுமா? நண்பரே! என்னுடைய நேர்மை குறித்து இங்கு கேள்வி எழுப்பப்படவில்லை. அவ்வாறு எழுப்பினாலும் அதை மெய்ப்பிக்க நான் சௌதியில் இருந்த காலங்களை தூசு துடைக்க வேண்டிய தேவையும் இல்லை. அதேநேரம் உங்களுடைய நேர்மைக்கு நான் மலேசியாவில் சுற்றிக் கொண்டிருக்க வேண்டியதும் இல்லை. உங்களுடைய எழுத்திலிருந்தே எடுத்து வைக்க இயலும். எனவே, ஏதோ ஒரு துணிவில் மக்கள் பக்கம் கைகாட்டி விடவேண்டிய தேவையும், சிந்தனையும் எனக்கில்லை.

    உண்மையாகவே உங்களுக்கு புரியவில்லை என்பதை நான் நம்பிவிட்டதால் நினைவூட்டுகிறேன். \\\அந்த மறுப்பிற்கான 'மறுப்பும்' அவர் தளத்திலே வெளிடப்பட்டுள்ளது.இன்ஷா அல்லாஹ் பார்வையிடலாம்/// \\\என்னுடைய கேள்வியை நீங்கள் மடை மாற்றியிருந்தீர்களே தவிர பதில் கூறவில்லை. ஒருவேளை, நீங்கள் ஏற்கனவே அந்தக் கேள்விக்கு பதில் கூறிவிட்டிருந்ததாக கருதினால் மேற்கோள் காட்டுங்கள். பின் நான் என்னுடைய கருத்தின் பொருள் என்ன? நீங்கள் பதிலாக கூறியிருந்தது அந்தக் கருத்திற்கு பதிலளிப்பதாய் இருந்ததா என்பதை விளக்குகிறேன்/// இதன் தொடர்ச்சி உங்களின் செப்டம்பர் 27ல் இல்லை. அதனால் \\\என்னுடைய பின்னூட்டத்தினால் பதில் கூறிய நீங்கள் என்னுடைய பின்னூட்டத்திற்கு பதில் கூறவில்லை/// இதன் பிறகான உங்கள் செப்டெம்பர் 27 இரண்டாவது மறுமொழியிலும் இதன் தொடர்ச்சி இல்லை. எனவே, \\\நான் என்ன நோக்கத்திற்காக இரண்டு ஆண்டுகள் கழித்து இப்போது பின்னூட்டினேனோ அதை நீங்கள் கண்டு கொள்ளவில்லை. ஏன் தம்பி?/// இதன் பிற்கு தான் நீங்கள் உண்மையாக புரியவில்லை என்றீர்கள். நினைவுபடுத்தியது போதுமா?

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோ., செங்கொடி

      எழுத்தை வைத்து ஒருவரின் நேர்மையை சுட்டிக்காட்ட வேண்டுமென்றால் பங்குக்கொள்ளும் இரண்டு நபர்களும் ஒரே வாதத்தை முன்வைத்து தம் தரப்பு கருத்தை வேறுப்படுத்தி சொன்னால் மட்டுமே இருவரின் கூற்றில் எவரது கூற்று உண்மை என விளக்க- விளங்க முடியும். எதிரும் புதிருமாய் இரு கருத்தை முன்வைக்கும் போது தம் தரப்பை நியாப்படுத்தவே ஒருவர் விரும்புவார். சரி என்பதற்காக முறைமைகளை தம் வாதத்தில் வைப்பார். அதையே சென்ற விவாதத்தில் நான் செய்தேன். ஏன் நீங்கள் கூட அதை தான் உங்கள் தரப்பில் செய்தீர்கள்., அப்படியானால் என்னைப்பொருத்தவரை நீங்கள் நேர்மையற்றவரா..? ஆக எழுத்தை வைத்து நேர்மையை எடை போடுவதென்பது எதிர் புதிர் விவாத களத்தில் சாத்தியமில்லாத ஒன்று!

      நேர்மை என்பது சந்தர்ப்பவாதங்களில் மட்டும் வெளிப்படும் ஒன்றல்ல.. எல்லா தருணங்களிலும் வாழ்வில் பிரதிப்பளிக்கப்பட வேண்டிய ஒன்று. அல்ஹம்துலில்லாஹ்! என் இறைவனுக்கு கட்டுப்பட்டு அவனது ஏவல்களை- விலக்கல்களை முடிந்த அளவிற்கு நான் பின்பற்றுகிறேன்.எங்கும் என்னை முஸ்லிமாகவே முன்னிருத்துகிறேன். கொண்ட கொள்கையில் நிற்பதே நேர்மைக்கான நிதர்சன விளக்கம். உங்கள் கொள்கைகளை முன்னிருத்தி கோட்பாடுகளை இச்சமூகத்திற்கு வெளிச்சம் காட்டி சவுதியிலும் வாழ்ந்திருக்க வேண்டும். அப்படியாய் நீங்கள் இருந்திருக்கிறீர்களா? இருக்கிறீர்களா? ஏனெனில் எழுத்தில் நாத்திகத்தை வெளிப்படுத்தினால் மட்டும் போதாது. அதனை வாழ்விலும் வெளிப்படுத்தி இருக்க வேண்டும். அதுதான் உண்மையான கொள்கைப்பிடிப்பு , நேர்மைக்கான இலக்கணம்., இப்போது நேர்மை என்பதற்கு விளக்கம் தாருங்கள்..

      நான் ஏற்கனவே கூறியது தான், எனது தளத்தில் பின்னூட்டமிட்டால் மட்டுமே நான் தொடர்ந்து பதிலளிக்க முடியும். ஆக சகோ இப்ராஹூம் கூறியதின் அடிப்படையில் அந்த தளத்தில் மறுப்பிட்டேன். அதை பாலோ அப் செய்யவில்லை. ஆக அதற்கு நீங்கள் ஏதும் மறுப்பு கொடுத்திருந்தாலும் என்னால் பார்க்க இயலாது. ஆகவே தான் மீண்டும் கேட்டேன். அதனை நினைவூட்டி அதை இங்கே பதிந்தால்... தொடரலாம் என்றேன்.

      இதுவே போதுமெனே நினைக்கிறேன்.
      மாற்றுக்கருத்து இருப்பீன் மற்றவை பிற

      உங்கள் சகோதரன்
      குலாம்

      Delete
  16. நண்பர் குலாம்,

    உங்கள் கருத்து நகைப்புக்கிடமானதாகவும், யதார்த்தத்திற்கு எதிராகவும் இருக்கிறது. உங்கள் நடைமுறை வாழ்வில் நேர்மையாக இருக்கிறீர்களா என்பது எனக்கோ இங்குள்ள பார்வையாளர்களுக்கோ தெரியுமா? அல்லது நான் எல்லா இடத்திலும் நாத்திகனாக நடந்து கொண்டிருக்கிறேன் என்று கூறினால் அது உங்களுக்கும் இங்குள்ள பார்வையாளர்களுக்கும் போதுமானதாக இருக்குமா? உங்களை நானும் என்னை நீங்களும் நம்மை பார்வையாளர்களும் அறிந்து கொண்டிருப்பது நம்முடைய எழுத்தின் மூலம் மட்டுமே (நேரில் தெரிந்த வெகுசில விலக்குகள் இருக்கக் கூடும்) எனவே நம்முடைய நேர்மையை காட்டுவதற்கான ஒரே அளவுகோலும் நம்முடைய எழுத்து மட்டுமே. இந்த அடிப்படையிலிருந்து தான் உங்கள் எழுத்திலிருந்து உங்கள் நேர்மையின்மையை காட்ட முடியும் என்று கூறியிருந்தேன். இப்போதும் கூறுகிறேன்.

    ஒருவர் தம் நிலைக்கு ஆதரவாக எடுத்துவைக்கும் வாதங்கள் சரியானதாகவும் இருக்கலாம் தவறானதாகவும் இருக்கலாம். வாதம் எதிர்வாதம் இவைகளைக் கொண்டு ஒன்று நேர்மையானது அற்றது என்று கூறவியலாது. ஆனால் அவரது வாதத்தில் சரி தவறுகளுக்கு அப்பாற்பட்டு அது நேர்மையாக செய்யப்படும் வாதமா அல்லவா என்பதை அறியலாம். தவறானது என்பதை உணர்ந்து கொண்டே சரியானது என்று வரட்டுத்தனம் செய்தால் அது நேர்மையற்றது என்று கூற முடியும். எழுப்பபடும் கேள்விகளுக்கு வேண்டுமென்றே பதில் கூற மறுத்தால் அது நேர்மையற்றது என்று கூற முடியும். பலமுறை சுட்டிக் காட்டிய பிறகும் திருகல் தனத்தை தொடர்ந்தால் அது நேர்மையற்றது என்று கூற முடியும். இந்த அடிப்படையிலிருந்து தான் உங்கள் எழுத்திலிருந்து உங்கள் நேர்மையின்மையை காட்ட முடியும் என்று கூறியிருந்தேன். இப்போதும் கூறுகிறேன்.

    நிரூபிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? எனக் கொன்றும் தயக்கமில்லை.

    யார் நேர்மையாளன் என கண்டறிவதற்காக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நான் பின்னூட்டம் இடவில்லை. என்னுடைய சுட்டிக் காட்டலெல்லாம் \\\என்னுடைய கேள்வியை நீங்கள் மடை மாற்றியிருந்தீர்களே தவிர பதில் கூறவில்லை. ஒருவேளை, நீங்கள் ஏற்கனவே அந்தக் கேள்விக்கு பதில் கூறிவிட்டிருந்ததாக கருதினால் மேற்கோள் காட்டுங்கள்/// என்பது மட்டுமே, அதுவும் நீங்கள் பதில் கூறிவிட்டேன் என்று குறிப்பிட்டிருப்பதால். இதை நான் ஒன்றுக்கு மேற்பட்ட முறை சுட்டிக் காட்டிய பிறகு இப்போது நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் \\\சகோ இப்ராஹூம் கூறியதின் அடிப்படையில் அந்த தளத்தில் மறுப்பிட்டேன். அதை பாலோ அப் செய்யவில்லை. ஆக அதற்கு நீங்கள் ஏதும் மறுப்பு கொடுத்திருந்தாலும் என்னால் பார்க்க இயலாது/// இது பொய்யான தகவல்.

    என்னுடைய தளத்தில் குறிப்பிட்ட அந்த பதிவில் நீங்கள் முதன்முதலில் பின்னூட்ட்மிட்டது 16 செப்டம்பர் 2011 அன்று. அதிலிருந்து 29 செப்டம்பர் 2011 வரையில் தொடர்ச்சியாக என்னுடன் பின்னூட்ட விவாதத்தில் ஈடுபட்டிருந்தீர்கள். நீங்கள் விவாதம் செய்தீர்கள் எனும் அடிப்படையில் என்னுடைய அந்த மறுப்பை நீங்கள் பார்த்திருக்கும் வாய்ப்பு உண்டு. பார்க்கும் கடமையும் உங்களுக்கு உண்டு. ஆனால் இதை நீங்கள் இப்ராஹிம் பின்னூட்டமிட்டதற்குப் பிற்குதான் அங்கு நீங்கள் மறு மொழி இட்டது போல் காட்டியிருக்கிறீர்கள். இதை எப்படி எடுத்துக் கொள்வது? இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது என்பதால் ஏற்பட்ட தவறு என்று கொள்வதா? அறிந்து கொண்டே செய்தது என்று கொள்வதா?

    குறிப்பிட்ட அந்தப் பதிவு இது தான் கண்டு கொள்ளலாம்: மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 4 (http://senkodi.wordpress.com/2011/09/07/man-evolution-4/)

    மீண்டும் கூறுகிறேன், நீங்கள் நேர்மையுடன் வாதிப்பதாக உறுதியளித்தால், இந்த விவாதத்தை தொடர்வதில் எனக்கு ஆட்சேபனை ஒன்றுமில்லை.

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோ செங்கொடி.,

      நம்மில் வாத திறமை மிகுந்திருப்பவரே தனது வீரிய வாதத்தை எடுத்து வைக்க முடியும். அந்த கருத்து தவறாக இருப்பீனும் கூட இங்கே வெளிப்படும் எழுத்துக்களில் திறமையும்,விவேகமுமே முன்னிலை வகிக்கிறது. மாறாக நேர்மை புலப்படவில்லை. நேர்மை எழுத்தில் வெளிப்பட வேண்டுமானால் எல்லோரும் ஒப்புக்கொள்ள விசயத்தை நாம் மறுத்தால் அல்லது ஏற்றால் மட்டுமே அது சாத்தியம்.

      மீண்டும் சொல்கிறேன் எதிர் எதிர் துருவங்களைக்கொண்ட கருத்து வேற்றுமையில் நேர்மை புலப்பட வாய்ப்பில்லை.


      // உங்கள் நடைமுறை வாழ்வில் நேர்மையாக இருக்கிறீர்களா என்பது எனக்கோ இங்குள்ள பார்வையாளர்களுக்கோ தெரியுமா? அல்லது நான் எல்லா இடத்திலும் நாத்திகனாக நடந்து கொண்டிருக்கிறேன் என்று கூறினால் அது உங்களுக்கும் இங்குள்ள பார்வையாளர்களுக்கும் போதுமானதாக இருக்குமா? //

      அல்ஹம்துலில்லாஹ் நான் எதிர்ப்பார்த்த பாயிண்ட் இது தான்!
      உங்களின் நேர்மையையும், எனது நேர்மைமையும் உண்மையாய் எடை போடுவது எப்படி? ஏனேனில் எழுத்தில் நேர்மை என்பது மட்டும் வாழ்வில் ஒருவர் நேர்மையாக இருப்பதற்கு அளவுகோல் அல்ல. பிறரை புகைப்ப்டிக்க கூடாது அது உடல் நலத்திற்கு தீங்கானது என நம் எழுத்தில் சொல்வேமேயானால் அது உலகமே அங்கிகரீக்கும் உண்மை. இந்த எழுத்தில் அவரது நேர்மை வெளிப்படாது உண்மை மட்டுமே வெளிப்படும்.

      மாறாக பிறரை சிகரெட் குடிக்கக்கூடாது என பொதுப்படுத்தினால் நாமும் அதிலிருந்து தவீர்ந்திருக்க வேண்டும். அப்போது தான் நமது எழுத்தில் வெளிப்படும் உண்மை நேர்மையானதாக இருக்கும். அதே அளவுகோல் தான் கடவுளை பின்பற்றுபவராக இருப்பீனும் அஃதில்லாத கொள்கை சார் கருத்துகளாக இருப்பீனும்.

      நான் நேர்மையாக இருப்பதற்கு என் இறைவன் சாட்சி! எனக்கு வேறு யாரும் எனக்கு சாட்சி பகர தேவையில்லையென்கிறேன். நான் பொய்யன் என்றால் மறுமை எனக்கு பதிலளிக்கும். ஆனால் வெறும் எழுத்தில் உங்கள் நேர்மையே இங்கு பறை சாற்றினாலும் இங்கே யாரும் நம்ப போதுமானதாக இல்லையென நீங்களே சாட்சி கூறுவீர்களேயானால் எனக்கு அஃதில்லாத ஆதாரப்பூர்வமான வழியில் தான் உங்கள் நேர்மையை நிருபிக்க வேண்டும்.
      முதலில் அதை செய்யுங்கள்.

      மற்றப்படி அதை தொடரும் உங்கள் சொல்லாடல்கள் சந்தர்ப்பவாத மிகுதி வாய்ந்தது. ஏனெனில் நான் இங்கே மேற்கோள் இட்ட இடுகை நாத்திக மூட நம்பிக்கைகள் குறித்தானது. அதில் வந்து பரிணாமம் குறித்த லிங்க் கொடுத்து அதற்காக அதில் பதிலிடுங்கள் என்றால் பொருத்தமற்ற பொருளாக தான் இதுப்படும்.

      எத்தனையோ இடங்களில் நான் பின்னூட்டம் இட்டு அதை தொடர்ந்தும், விட்டும் வந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் என் இணைய வசதியும் , பணி நேரமும் அப்படி அமைந்திருக்கிறது. அதற்கு உங்கள் தளமும் விதிவிலக்கல்ல., ஆகவே தான் எனது தளத்தில் உங்களது கேள்விகளையும், குற்றச்சாட்டுகளையும் வகைப்படுத்துங்கள் என்றேன்

      // என்னுடைய தளத்தில் குறிப்பிட்ட அந்த பதிவில் நீங்கள் முதன்முதலில் பின்னூட்ட்மிட்டது 16 செப்டம்பர் 2011 அன்று. அதிலிருந்து 29 செப்டம்பர் 2011 வரையில் தொடர்ச்சியாக என்னுடன் பின்னூட்ட விவாதத்தில் ஈடுபட்டிருந்தீர்கள். நீங்கள் விவாதம் செய்தீர்கள் எனும் அடிப்படையில் என்னுடைய அந்த மறுப்பை நீங்கள் பார்த்திருக்கும் வாய்ப்பு உண்டு. பார்க்கும் கடமையும் உங்களுக்கு உண்டு. //

      அது சரி நானே எனது கடமையிலிருந்து தவறியிருந்தாலும் அதை நினைவவூட்டுவது உங்களது உரிமை அல்லவா? 2011 செப்டம்பருக்கு பிறகு இன்று தான் என்னை இணையத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததா உங்களுக்கு..? அல்லது இடை காலத்தில் நாம் எதுக்குறித்தும் விவாதிக்கவுமில்லையா..? சகோதரர் வால்பையன் சொன்னவுடன் இங்கே வந்து கருத்திடும் மர்மம் என்ன?

      கைர்,.

      நாத்திக முரண்பாடு குறித்த இப்பதிவுக்கு முதலில் உங்கள் வாழ்வியல் நேர்மையையும், ஆக்கத்திற்கு எதிரான கருத்துக்களையும் இங்கே பட்டியலிடுங்கள். அல்லது அது தொடர்பான உங்கள் இடுகைகளை சிபாரிசு செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் தொடர்கிறேன். பரிணாமம் குறித்து அடுத்த சுழற்சியில் இன்ஷா அல்லாஹ் தொடரலாம்.

      நேர்மையை குறித்து எனக்கு நீங்கள் பாடம் நடத்த வேண்டாம். உங்களுக்காக வழிக்காட்டுதலை விட என்னிடத்தில் நேர்மைக்கான வழிக்காட்டல் மிக தெளிவாகவே உள்ளது. முடிந்தால் உங்கள் நேர்மையே பரிசிலித்து உங்களால் நேர்மையாக இருக்க முடியும் பட்சத்தில் இங்கே வாருங்கள்

      காத்திருக்கிறேன் இன்ஷா அல்லாஹ்

      Delete
  17. நண்பர் குலாம்,

    என்ன சொல்ல, ஏன் இப்படி சொதப்புகிறீர்கள்? நான் என்ன சொல்கிறேன் என்பது புரியவில்லை என்றால் மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். அல்லது என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று விளக்கம் கேளுங்கள். ஆனால் புரியாதது போல் நடிக்காதீர்கள்.

    நீங்கள் உங்கள் எழுத்தில் நேர்மையற்று நடந்து கொள்கிறீர்கள் என்று கருத்து சொல்லவில்லை, உங்கள் மீது குற்றம் சாட்டுகிறேன். பிரிந்து நின்று அவரவர் வாதங்கள் வைத்து விவாதிப்பதைக் கொண்டு உங்களின் நேர்மையின்மை வெளிப்பட்டு விட்டதாக கூறவில்லை. உங்களுக்கு வேறு வழியில்லாததால் நான் அப்படி கூறியதாக நீங்களே வலிந்து கற்பனை செய்து கொண்டு பதில் கூறியிருக்கிறீர்கள். ஆனால் நான் மிகத்தெளிவாகவே எழுதியிருக்கிறேன்.\\\ஒருவர் தம் நிலைக்கு ஆதரவாக எடுத்துவைக்கும் வாதங்கள் சரியானதாகவும் இருக்கலாம் தவறானதாகவும் இருக்கலாம். வாதம் எதிர்வாதம் இவைகளைக் கொண்டு ஒன்று நேர்மையானது அற்றது என்று கூறவியலாது. ஆனால் அவரது வாதத்தில் சரி தவறுகளுக்கு அப்பாற்பட்டு அது நேர்மையாக செய்யப்படும் வாதமா அல்லவா என்பதை அறியலாம். தவறானது என்பதை உணர்ந்து கொண்டே சரியானது என்று வரட்டுத்தனம் செய்தால் அது நேர்மையற்றது என்று கூற முடியும். எழுப்பபடும் கேள்விகளுக்கு வேண்டுமென்றே பதில் கூற மறுத்தால் அது நேர்மையற்றது என்று கூற முடியும். பலமுறை சுட்டிக் காட்டிய பிறகும் திருகல் தனத்தை தொடர்ந்தால் அது நேர்மையற்றது என்று கூற முடியும். இந்த அடிப்படையிலிருந்து தான் உங்கள் எழுத்திலிருந்து உங்கள் நேர்மையின்மையை காட்ட முடியும் என்று கூறியிருந்தேன். இப்போதும் கூறுகிறேன். நிரூபிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? எனக் கொன்றும் தயக்கமில்லை./// நீங்கள் தமிழில் தானே படித்தீர்கள்? இதற்கு என்ன பொருள் என்று புரியவில்லையா? பக்கத்தில் மூன்றாம் வகுப்பு படிக்கும் தமிழ் குழந்தையிட கேட்டுப் பாருங்கள் (மலாய் குழந்தையிடம் கேட்டுவிடாதீர்கள்) இதற்குப் பிறகும் உங்களால் \\\மீண்டும் சொல்கிறேன் எதிர் எதிர் துருவங்களைக்கொண்ட கருத்து வேற்றுமையில் நேர்மை புலப்பட வாய்ப்பில்லை/// இப்படி சொல்ல முடிகிறது என்றால் உங்கள் எழுத்தில் நேர்மை எங்காவது புலப்படுகிறதா?

    நண்பர் குலாம், வெளிப்படையாகத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்கள் கூறும் புகைப் பிடிக்கும் உதாரணங்களெல்லாம் நேரில் பழகும் வாய்ப்பு உள்ளோருக்கு மட்டுமே பொருந்தும். உங்களுக்கும் எனக்கும் அப்படியான வாய்ப்பு இருக்கிறதா? நீங்கள் கருப்பா? சிவப்பா? என்று எனக்கு தெரியுமா? அல்லது நான் குள்ளமா? நெட்டையா? என்று உங்களுக்கு தெரியுமா? அல்லது நம் வாசகர்களுக்கு அப்படியான வாய்ப்பு இருக்கிறதா? நம்மிடையே இருக்கும் ஒரே தொடர்பு நம்முடைய எழுத்து மட்டுமே. நம்மிடையே எதைக் கூற வேண்டுமென்றாலும் மறுக்க வேண்டுமென்றாலும் அது நம்முடைய எழுத்துகளிலிருந்து மட்டுமே செய்ய முடியும். நான் அப்படித்தான் உங்களுடைய எழுத்துகளிலிருந்து உங்கள் நேர்மையின்மையை குற்றப்படுத்திக் கொண்டிருக்கிறேன். துணிவிருந்தால் உங்கள் எழுத்துகளிலிருந்து அதை மறுத்துக் காட்டுங்கள். அதை விடுத்து விட்டு சிகரெட், எல்லாம் வல்ல அல்லா என்று தேவையற்ற இடங்களிலெல்லாம் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.

    தொடரும் .. .. ..

    ReplyDelete
  18. தொடர்ச்சி .. .. ..

    நான் என்னவோ உங்களுக்கு சான்றிதழ் தந்தே தீர்வது முத்திரைக் கட்டை தூக்கிக் கொண்டு அலைந்து கொண்டிருப்பதைப் போல், அல்லா சாட்சிக்கு வரமாட்டார் எனும் துணிவில் அல்லாவின் சாட்சி போதும் என்கிறீர்கள். இதோ நேரடியாகவே உங்களின் நேர்மையின்மையை வெளிப்படுத்துகிறேன். முதலில் நீங்கள் என்ன சொன்னீர்கள் \\\சகோ இப்ராஹூம் கூறியதின் அடிப்படையில் அந்த தளத்தில் மறுப்பிட்டேன்/// இதை மறுத்து நான் இப்படி எழுதினேன் \\\இது பொய்யான தகவல். என்னுடைய தளத்தில் குறிப்பிட்ட அந்த பதிவில் நீங்கள் முதன்முதலில் பின்னூட்ட்மிட்டது 16 செப்டம்பர் 2011 அன்று. அதிலிருந்து 29 செப்டம்பர் 2011 வரையில் தொடர்ச்சியாக என்னுடன் பின்னூட்ட விவாதத்தில் ஈடுபட்டிருந்தீர்கள். நீங்கள் விவாதம் செய்தீர்கள் எனும் அடிப்படையில் என்னுடைய அந்த மறுப்பை நீங்கள் பார்த்திருக்கும் வாய்ப்பு உண்டு. பார்க்கும் கடமையும் உங்களுக்கு உண்டு. ஆனால் இதை நீங்கள் இப்ராஹிம் பின்னூட்டமிட்டதற்குப் பிற்குதான் அங்கு நீங்கள் மறு மொழி இட்டது போல் காட்டியிருக்கிறீர்கள்/// அதாவது இப்ராஹிம் சுட்டிக் காட்டிய பிறகு தான் அந்தப் பதிவில் பின்னூட்டமிட்டதாய் முதலில் கூறினீர்கள். அதை மறுத்து நீங்கள் அதற்கு முன்பிருந்தே என்னுடன் விவாதம் செய்து கொண்டிருக்கிறீர்கள், இப்ராஹிம் உங்களிடம் கூறுவதற்கு முன்பே அங்கு நீங்கள் பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள் என்று தேதியை குறிப்பிட்டு எடுத்துக் காட்டினேன். இதற்கு பதில் கூற வேண்டிய நீங்கள், பதில் கூறாமல் ஏன் நினைவுபடுத்தவில்லை என்று என்னைக் கேட்கிறீர்கள். ஆக எது முக்கியத்துவமானது? எது முக்கியத்துவம் இல்லாதது என்று உங்களுக்கு புரிந்திருக்கிறது. அதனால் தான் எதற்கு பதில் கூறினால் மாட்டிக் கொள்வோம் எதற்கு பதில் கூறினால் நழுவி விடலாம் என யோசித்து, மாட்டிக் கொள்வதற்கு பதில் கூறாமல், நழுவிப் போவதற்காக ஏன் நினைவுபடுத்தவில்லை என்று கேட்டிருக்கிறீர்கள். இதில் தானே உங்கள் நேர்மையின்மை அம்மணமாக தெரிகிறது. இந்த நேர்மையின்மையை சுட்டிக் காட்டினால் \\\நான் நேர்மையாக இருப்பதற்கு என் இறைவன் சாட்சி! எனக்கு வேறு யாரும் எனக்கு சாட்சி பகர தேவையில்லையென்கிறேன். நான் பொய்யன் என்றால் மறுமை எனக்கு பதிலளிக்கும்/// என்கிறீர்கள். இது தான் நீங்கள் “சர்வமும் சடுதியில் வல்ல”உங்கள் இறைவனை நம்பும் லட்சணமா?

    நண்பர் குலாம், நேர்மையாய் இருப்பது என்பது வேறு நேர்மையாய் இருப்பதைப் போல நடிப்பது என்பது வேறு. நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்தாலும் அது உங்கள் விருப்பம் அதில் நான் ஒன்றும் செய்துவிட முடியாது. ஆனால் நடிப்பதாக இருந்தால் அதை நீண்ட நாள் செய்ய முடியாது என்பதை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

    பின்குறிப்பு ஒன்று: என்னுடைய நேர்மை மீது நீங்கள் குற்றம் சாட்ட விரும்பினால் தாராளமாக அதை செய்யலாம். ஆனால் நான் உங்களை சுட்டிக்காட்டியது போல் குறிப்பாக என்னுடைய எழுத்திலிருந்து எடுத்துக் காட்டி குற்றம் சாட்டுங்கள். அதற்கு நேரடியாக விளக்கமளிப்பதற்கும், தவறிருப்பதாக உணர்ந்தால் அந்தக் கணத்திலேயே அதை ஏற்றுக் கொண்டு சுயவிமர்சனம் செய்து கொள்வதற்கும் எந்த நொடியிலும் நான் ஆயத்தமாகவே இருக்கிறேன்.

    பின்குறிப்பு இரண்டு: உங்களுடைய இந்த இடுகைக்கு மறுப்பளிப்பது என்னுடைய நோக்கமல்ல என்பதை ஏற்கனவே நான் வெளிப்படுத்தியிருக்கிறேன். ஆனாலும் நீங்கள் உங்கள் எழுத்தில் நேர்மையாக இருப்பதாக உறுதியளித்தால் அதையும் செய்வதற்கு நான் ஆயத்தமாகவே இருக்கிறேன். ஏனென்றால் இந்த இடுகையை எழுதிவிட்டு எந்த அளவுக்கு இறுமாந்தீர்களோ எனக்குத் தெரியாது. ஆனால் இதைப் படித்ததில் வரலாற்றறிவும், இயங்கியல் அறிவும் இல்லாமல் எழுதப்பட்ட மதக் கசடாகவே எனக்குத் தெரிகிறது. இந்த ஒட்டாண்டித்தனத்தை திரை கிழித்து உங்கள் கண்ணெதிரே காட்டுவதற்கு எனக்கு அதிகம் சிரமம் ஒன்றும் இருக்கப் போவதில்லை. ஆனால் நேர்மையின்மை என்று எவற்றை நான் சுட்டிக்காட்டியிருக்கிறேனோ அவைகள் குறித்து நீங்கள் உறுதியளிக்க வேண்டும். சம்மதமா?

    பின்குறிப்பு மூன்று: இந்தப் பதிவில் நான் இட்டுக் கொண்டிருக்கும் பின்னூட்டங்களுக்கும் நண்பர் வால்பையனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதுகுறித்த எந்த கருத்துப் பரிமாற்றமும் இதுவரை இல்லை. ஆனால் இந்த தகவலை அவருக்கும் தெரிவிப்பதே சரி என்பதால் அவருடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோ செங்கொடி

      அதிகம் பேச தேவையில்லை

      // உங்கள் நேர்மையின்மையை காட்ட முடியும் என்று கூறியிருந்தேன். இப்போதும் கூறுகிறேன். நிரூபிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? எனக் கொன்றும் தயக்கமில்லை. //

      நிருபியுங்கள்!

      அண்ணே உங்களுக்கு துணிவிருந்தால் நாத்திகம் குறித்து விவரிக்க வாருங்கள் நான் மேற்கோள் காட்டிய ஆக்கத்திற்கு எதிராக கருத்திட இந்த நொடி பொழுது வரை துணிவில்லை எனது நேர்மையை இவர் குற்றப்படுத்த போகிறாராம்.. பெரிய நகை முரண் தான் போங்க.,


      எழுத்தில் நேர்மை வெளிப்பட வேண்டுமானால் செயலில் நடைமுறையில் உண்மை இருந்தாக வேண்டும். நீங்கள் மூன்றாம் வகுப்பு படிக்கும் பாலகர் அல்ல., மீண்டும் மீண்டும் தலையில் குட்டி கற்பிப்பதற்கு.,


      //என்னுடைய நேர்மை மீது நீங்கள் குற்றம் சாட்ட விரும்பினால் தாராளமாக அதை செய்யலாம். ஆனால் நான் உங்களை சுட்டிக்காட்டியது போல் குறிப்பாக என்னுடைய எழுத்திலிருந்து எடுத்துக் காட்டி குற்றம் சாட்டுங்கள்.//

      இது ஒரு நேர்மையான பேச்சா! எழுத்தை வைத்து மட்டும் ஒருவர் நேர்மையை நிருபிப்பது எப்படி? புரியல ஐயா, உங்களுக்கும் எனக்கும் என்ன சொத்து தகராறா..? உங்கள் பதிவு செய்யப்பட்ட எழுத்தை வைத்து உங்களை குற்றப்படுத்த... நான் கூறுவது நடைமுறை வாழ்வில் பின்பற்றியாகவேண்டிய நேர்மை. உங்கள் மலுப்பலுக்கு இந்த வாக்கியங்களும் ஓர் சான்று! இதுவரை அதற்கு ஒற்றை வரி விளக்கத்தை நீங்கள் தரவில்லை.

      // பின்குறிப்பு இரண்டு: உங்களுடைய இந்த இடுகைக்கு மறுப்பளிப்பது என்னுடைய நோக்கமல்ல என்பதை ஏற்கனவே நான் வெளிப்படுத்தியிருக்கிறேன். ஆனாலும் நீங்கள் உங்கள் எழுத்தில் நேர்மையாக இருப்பதாக உறுதியளித்தால் அதையும் செய்வதற்கு நான் ஆயத்தமாகவே இருக்கிறேன்.//

      ஐயா செங்கொடி உங்கள் வாய் சவாடாலுக்கு மட்டும் பஞ்சமில்லை என்பதை இந்த பின்னூட்டம் வரை நிருபித்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஆயத்தமாக இருந்துக்கொள்வதை பற்றி எனக்கு கவலை இல்லை, என்னைப்பொருத்தவரை ஆக்கத்திற்கு எதிராக கருத்திட பட்ட எல்லா எதிர் மறை பின்னூட்டத்திற்கு இதுவரை பதிலளித்து தான் வருகிறேன். இதைப்போல தேவையில்லாமல் தொடரும் பின்னூட்டங்கள் எல்லாம் என் நேரத்தை அபகரித்துக்கொண்டிருக்கின்றன.

      முடிந்தால் எதிர் மறை கருத்துக்களை பதிவு செய்யுங்கள். இல்லையேல் உங்கள் கற்பனை கோட்டையை உங்கள் தளத்தில் விரிவுப்படுத்திக்கொள்ளுங்கள்..

      உங்கள் சகோதரன்
      குலாம்

      Delete
  19. //சகோதரர் வால்பையன் சொன்னவுடன் இங்கே வந்து கருத்திடும் மர்மம் என்ன?//

    நான், யார்கிட்டயும், எதுவும் சொல்லல.

    எனக்கு இது வேலையும் இல்ல. என் கருத்துகளை மட்டுமே நான் பதிவு செய்துகிட்டு இருக்கேன். என்னை ஏங்க கோர்த்து விடுறிங்க.
    அதுனால தான் உங்க வாதத்தில் நேர்மை இல்லைன்னு செங்கொடி சொல்றாரு.

    ReplyDelete
    Replies
    1. //அதுனால தான் உங்க வாதத்தில் நேர்மை இல்லைன்னு செங்கொடி சொல்றாரு. //

      சகோ வால் பையன்,

      சபாஷ்! நேர்மைக்கு நீங்கள் இலக்கணம் புல்லரிக்கிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாகி எந்த பின்னூட்ட தொடர்பும் இல்லாமல் பேஸ்புக்கில் நான் லிங்க் கொடுத்து உங்களை விவாதிக்க அழைத்தவுடன் அண்ணன் செங்கொடி தீடிரென்று ஏன் வர வேண்டும்..? நடு நிலையும் கொஞ்சம் அறிவுள்ளவரும் சிந்திக்கு எடுக்கும் முடிவை தான் நானும் எடுத்தேன். அதை பொதுவில் அவரிடமே சொன்னேன். இது ஒரு நேர்மையற்ற செயலா..? என்னே உங்கள் பகுத்தறிவு...

      Delete
  20. //இந்த பதிவு சலாத்தை தமிழில் சொல்லலாமா? வேண்டாமா என்பது குறித்தல்ல., நாத்திகர்கள் நடைமுறையில் கொண்டிருக்கும் முரண்பாடுகளை குறித்தே ., அதுக்குறித்து தொடருங்கள் சகோ//

    நாத்திகர்கள் தவறிருப்பின் ஒப்புக்கொள்வார்கள்.
    புத்தகத்துல போட்ருக்குன்னு வாதம் பண்ணிகிட்டு இருக்க மாட்டாங்க.

    நான் பெரியாரிஸ்ட் அல்ல.
    லெனின், மார்க்ஸ் படத்தை வைத்திருப்பவர்கள், முருகன் படத்தை ஏன் வச்சிருக்குறன்னு கேட்கும் தகுதியை இழக்கிறார்கள் என வினவு தளத்திலேயே எழுதியிருக்கிறேன். ஆகினும் முருகனுக்கு பூஜையெல்லாம் உண்டு. லெனினுக்கும், மார்க்ஸுக்கும் அது இல்லை என்பதை கருத்தில் கொள்க.

    இஸ்லாத்தில் பிறந்த நாள் கொண்டாட்டமில்லையான்னு எனக்கு தெரியாது, ஆனா மிலாடி நபின்னு முகமது பிறந்தநாளை கொண்டாடுவிங்கன்னு மட்டும் தெரியும். கொண்டாட்டங்கள் மனித சமூகம் குழுமமாக கூட பயன்படுத்தப்படுகிறது. கொண்டாடுவதும், விலக்குவதும் அவரவர் விருப்பம்.

    நாத்திக கொள்கை பிற மனிதர்களின் வாழ்விற்கு இடையூறாக இருக்கிறதா என்பது மட்டுமே விவாத பொருளாக இருக்க வேண்டும். ஆனா தம் அடிக்கிறான், தண்ணி அடிக்கிறான்னு பேச்சு போகுது.

    மையத்தை மாத்துங்க, விவாதிக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. //இஸ்லாத்தில் பிறந்த நாள் கொண்டாட்டமில்லையான்னு எனக்கு தெரியாது, ஆனா மிலாடி நபின்னு முகமது பிறந்தநாளை கொண்டாடுவிங்கன்னு மட்டும் தெரியும்.//

      தெளிவற்று நீங்கள் இஸ்லாத்தை விளங்கி இருக்கிறீர்கள் அரைகுறை முஸ்லிம்களை போல., அண்ணன் விவாதிக்க முற்படும் முன் அதுக்குறித்து ஒரளவிற்காவது தெரிந்து விமர்சிப்பது நலம். அஃது இல்லாவிடில் உங்கள் சந்தேகங்களை இங்கே கேள்விகளாக முன்வைக்க வேண்டும். தெரிவுறுத்தப்பட்ட முடிவுகளாக வைப்பது தான் நகை முரண்.

      அடுத்து, நாத்திகம் உட்பட எந்த கொள்கையாக இருந்தாலும் அது எல்லா காலத்திற்கும், எல்லா நிலைகளுக்கும் ஏற்றவாறு கொள்கைகளை பிரகடனப்படுத்தி இருக்க வேண்டும். அப்போது மட்டுமே அது மற்றவற்றுடன் ஒப்பிடப்பட்டு தம்மை நிலை நிறுத்திக்கொள்ள முடியும். இஸ்லாம் உட்பட எல்லா கொள்கைகளுக்கும் மாற்று மற்றும் பகுத்தறிவு ரீதியான கொள்கையாக நாத்திகத்தை கொண்டால் பொதுவில் அதன் சாதக நன்மைகளை பட்டியலிட வேண்டும். அதுவும் மற்ற எந்த கொள்கையும் தோற்றும் இடங்களில் நாத்திகம் நிலைப்பெற்றதாக. அதில் தண்ணியும் வரும் தம்மும் வரும்.. அதுக்கும் தெளிவான மறுப்புகளையும் - சிந்தைக்கு உகந்த பதிலையும் கொண்டிருக்க வேண்டும்.

      அதுதான் ஒரு கொள்கை உண்மையா இல்லையா என்பதை நிர்ணயிக்கும் இடம். யோசனை செய்து சொல்லுங்கள் நாத்திகம் குறித்து விவாதிக்க நான் தயார். ஆனால் எனது எல்லா கேள்விகளுக்கும் விடைகளை அதன் கொள்கைகளிலிருந்தே நீங்கள் மேற்கோள் காட்டியாக வேண்டும்

      மையத்தை பிடிங்க, விவாதிக்கலாம்.

      உங்கள் சகோதரன்
      குலாம்,.

      Delete
  21. நண்பர் குலாம்,

    தெளிவாகவும், தீர்க்கமாகவும், குறிப்பாகவும் விவாதிக்கும் போது உங்களுக்கு ‘அதிகம் பேசவேண்டிய தேவை’ இல்லாமல் போய்விடும் என்பதை ஏற்கனவே பலமுறை நீங்கள் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். இப்போதும் அதையே செய்திருக்கிறீர்கள். உங்களின் முடைத்தனத்திற்கு வாழ்த்துக்கள்.

    விசயத்திற்கு வருவோம். நேர்மை குறித்து நான் என்ன கூறிக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கும் எனக்குமான தொடர்பு எழுத்தில் மட்டும் தான் என்பதால், எழுத்தைத்தவிர வேறு எந்தத் தொடர்பும் இல்லை என்பதால் நம்மிடையே நேரமையை முடிவு செய்ய அந்த எழுத்துகளிலிருந்து மட்டுமே முடியும் என்கிறேன். இது சரியா? தவறா? சரி என்றால் ஏற்றுக் கொள்ளுங்கள் தவறு என்றால் எப்படி தவறு என்று விளக்குங்கள்.

    இதே நேர்மை குறித்து நீங்கள் என்ன கூறிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் சௌதியில் நாத்திகராக நடந்தீர்களா? என்கிறீர்கள். நேரில் நடப்பதைக் கொண்டு தான் நேர்மையைத் தீர்மானிக்க முடியுமே தவிர எழுத்தைக் கொண்டு அல்ல என்கிறீர்கள். இது பொதுவான அம்சம். புகை பிடிக்காதீர்கள் என எழுதும் ஒருவர் நடப்பில் வளையம் வளையமாக புகை விடுபவராக இருக்கலாம். ஆனால் இது நமக்கு பொருந்துமா என்பது தான் என்னுடைய கேள்வி. ஏனென்றால் நடப்பில் நான் புகை வளையம் விடுகிறேனா என்பது உங்களுக்கும், நீங்கள் முட்டி வலிக்க தொழுகிறீர்களா என்பது எனக்கும் தெரியாது. இந்த இடத்தில் எதைக் கொண்டு நேர்மையைத் தீர்மானிப்பது? சொல்ல முடியுமா உங்களால்? எனவே தான் நான் நம்மிருவரிடையே இருக்கும் ஒரே தொடர்பான எழுத்தில் இருந்துதான் அதைச் செய்யமுடியும் இதைத்தவிர வேறு வழியில்லை என்கிறேன். இது சரியா? தவறா? சரி என்றால் ஏற்றுக் கொள்ளுங்கள் தவறு என்றால் எப்படி தவறு என்று விளக்குங்கள்.

    \\\நிருபியுங்கள்/// என்று கூறியிருக்கிறீர்கள். கடந்த பின்னூட்டத்திலேயே நிரூபித்திருந்தேனே (நீங்கள் பின்னூட்டமிட்டது இப்ராஹிம் கூறியதற்கு முன்னரா பின்னரா). நீங்களும் அதற்கு பதில் கூறினால் மாட்டிக் கொள்ள நேரும் என்பதால், பதில் கூறினால் உங்களுடைய நேர்மையின்மையை நீங்களே ஒப்புக் கொண்டது போல் ஆகிவிடும் என்பதால் பதிலே கூறாமல் நழுவி விட்டீர்களே. பிறகு எப்படி நிருபியுங்கள் என்று கூற முடிகிறது உங்களால்? ஆனாலும் பரவாயில்லை. பானைக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இன்னொரு நிரூபணத்தையும் தருகிறேன். கடவுளின் இருப்பு குறித்த வாதத்தில் \\\இந்த உலகில் சோதித்தறிய முடியும் படியான, மனிதர்கள் கோரிக்கையை இறைவன் நிறைவேற்றியதற்கான சான்று ஏதாவது கூற முடியுமா?/// என்றொரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அந்த விவாதத்தில் முதலில் இந்தக் கேள்வியை கண்டு கொள்ளாமல் விட்ட நீங்கள் பதில் கூற வேண்டும் என வலியுறுத்திக் கேட்ட பிறகு பதில் என்ற பெயரில் ஏதேதோ கூறினீர்கள். அதாவது என்ன கேட்கப்பட்டுள்ளதோ அதற்கான பதிலைக் கூறாமல் சுற்றி வளைத்து பதில் என்ற போர்வையில் எதையெதையோ கூறினீர்கள். ஆனாலும் விடப்பிடியாக கேள்வியின் பொருளை உணர்த்தி மீண்டும் மீண்டும் கேட்டேன். கடைசிவரை நீங்கள் பதில் கூறவே இல்லை. இந்த இடத்தில் நேர்மையாளர்கள் என்ன செய்திருப்பார்கள். பதில் கூறியிருப்பார்கள் அல்லது என்னால் பதில் கூற முடியவில்லை என்று கூறியிருப்பார்கள். இரண்டையுமே நீங்கள் செய்யவில்லையே, பின் எப்படி நேர்மையாளராக நீங்கள் இருக்க முடியும்?

    தொடரும்.. .. ..

    ReplyDelete
  22. தொடர்ச்சி.. .. ..

    \\\எழுத்தில் நேர்மை வெளிப்பட வேண்டுமானால் செயலில் நடைமுறையில் உண்மை இருந்தாக வேண்டும்/// மிகச் சரியாக கூறியிருக்கிறீர்கள். இதையே இப்படியும் கூறலாம் “நடைமுறையில் நேர்மை இருந்தால் அது எழுத்திலும் எதிரொலிக்கும்” சரிதானே. உங்கள் எழுத்தில் நேர்மை இல்லை என நிரூபித்திருக்கிறேன், என்றால் அது உங்கள் நடைமுறைக்கும் பொருந்தும், அதாவது நீங்கள் நடைமுறையில் நேர்மையற்றவராக இருப்பதால் தான் எழுத்திலும் அது வெளிப்படுகிறது என்கிறேன். சரிதானே.

    இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இடுகையில் எதை முன்னிட்டு பின்னூட்டங்கள் தொடங்கப்பட்டது? இப்ராஹிம் குறிப்பிட்ட என்னுடைய மேற்கோளுக்கு பதிலளித்து விட்டதாக கூறினீர்கள். இல்லை நீங்கள் பதிலளிக்கவில்லை என நான் கூறினேன். அது குறித்தும் நீங்கள் ஒன்றும் கூறவில்லை, இவைகளில் உங்களின் நேர்மையின்மை படிந்திருக்கவில்லையா?

    உங்களின் இந்த இடுகைக்கு பதில் கூறுவது குறித்து நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இன்னின்ன விதங்களிலெல்லாம் நீங்கள் விவாத நேர்மை இல்லாமல் செயல்படுகிறீர்கள் என்று குற்றம் சாட்டி நிரூபித்தும் காட்டியிருக்கிறேன். இத்தன்மைகளை மீண்டும் தொடரமாட்டேன் என நீங்கள் உறுதியளித்தால் இதற்கு மறுப்பளிக்கிறேன் என்று தெளிவாக பலமுறை கூறியிருக்கிறேன். அதன்பிறகு நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள்? நான் இன்னும் பதில் கூறவில்லை என்று. இதிலும் உங்கள் நேர்மையின்மை பளிச்சிடுகிறது. என்றாலும் கூட இதை விடக்கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன். உங்கள் நேர்மையின்மையை உங்கள் வாசகர்களுக்கே காட்ட இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் என்பதாலும், உங்கள் பதிவின் ஒட்டாண்டித் தனத்தை உங்களுக்கே திரை கிழித்துக் காட்டவேண்டும் என்பதாலும் மீண்டும் களமிறங்குகிறேன்.

    இதை புதிய விவாதமாக செங்கொடி தளத்தின் தனிப்பகுதியில் பதியவைத்து அங்கும் இங்குமாய் இந்த விவாதம் பயணிக்கும்

    ReplyDelete
  23. விவாதம் தொடங்கப்பட்டு விட்டது. ‘நாத்திகத்தின் முரண்பாடு’ குறித்து பதிவிடும் போது இங்கும் பகிரப்படும். குலாம் இங்கேயே பதிலளிக்கலாம். அது அங்கும் பகிரப்படும்

    நண்பர்களே! தோழர்களே!
    24 மணி நேரமும் முஸ்லீமாக இருப்பதற்கே ஒதுக்குவதாய் கூறிக் கொள்ளும் குலாம், நேர்மையாய் இருப்பது குறித்து தன்னிடம் மிகச் சிறந்த வழிகாட்டல் இருப்பதாக பீற்றிக் கொள்ளும் குலாம், செத்த பிறகான வாழ்வில்(!) தான் பதில் கூற வேண்டியதிருப்பதால் என் நேர்மையை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது என்று வீராப்பு பேசும் குலாம், கடந்த 6 ம் தேதி பின்னிரவில் போடப்பட்ட என்னுடைய பின்னூட்டத்தை வெளியிடாமல் கடந்த மூன்று நாட்களாக தடுத்து வைத்திருக்கிறார். இது தான் அவர் நேர்மையின் இலக்கணமும், அவர் இறைவனை நம்பும் அழகும்.
    அவர் வெளியிடாமல் தடுத்து வைத்திருக்கும் பின்னூட்டம் இதோ

    http://senkodi.wordpress.com/argue-kulam/#comment-7999

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோ செங்கொடி

      வழக்கபோல் பொங்கி விட்டீர்கள்! நன்று., மூன்று நாள் உங்கள் பின்னூட்டத்தை நான் வேண்டுமென்றே தடுத்து வைத்திருந்தேன் என்பதை ஆதாரத்துடன் நிருபிக்க முடியுமா? ஏன் சகோ இப்படி ஒரு பொழைப்பு... எதிராக நிற்கும் கேள்விகளுக்கு பதில் இல்லா விடில் இதைப்போல் திசை மாற்றும் உங்களிடம் ஏராளம் உண்டென்பதை நன்கறிவேன்.

      அதெப்படி காலையிலே பேஸ்புக்குல நாத்திகர்களிடம் கருத்திட்டு, விவாத அழைப்பு விடுத்தால் உடனே நான் முஸ்லிம் தளத்தில் ஆஜாராகி விடுகிறீர்கள்.

      நன்றி ஐயா.,
      வாழ்க நாத்திகம்

      // நாத்திகத்தின் முரண்பாடு’ குறித்து பதிவிடும் போது இங்கும் பகிரப்படும்.//

      உருப்படியான வாக்கியம். நன்றி காத்திருக்கிறேன்.

      Delete
  24. நினைவூட்டலுக்கு நன்றி., உண்மையாக நீங்கள் சொன்ன பிறகே இப்போது தான் பார்க்கிறேன் இப்போதே வெளியிடுகிறேன்

    ReplyDelete
  25. மற்றப்படி இதில் எந்த உள் நோக்கமும் இல்லை. நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதனால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை,

    ReplyDelete
  26. // தெளிவாகவும், தீர்க்கமாகவும், குறிப்பாகவும் விவாதிக்கும் போது உங்களுக்கு ‘அதிகம் பேசவேண்டிய தேவை’ இல்லாமல் போய்விடும் என்பதை ஏற்கனவே பலமுறை நீங்கள் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். இப்போதும் அதையே செய்திருக்கிறீர்கள். உங்களின் முடைத்தனத்திற்கு வாழ்த்துக்கள்.//


    பெயர் கூட பொதுவெளியில் தெரிந்துவிட கூடாதென்பதற்காக புனைபெயரோடு உலகில் உலவும் உங்களின் நேர்மையை விட என் நேர்மை தரம் தாழ்ந்து விட வில்லை. சகோ செங்கொடி பேச்சில் கண்ணியம் இருப்பீன் நலம்


    // எழுத்தைத்தவிர வேறு எந்தத் தொடர்பும் இல்லை என்பதால் நம்மிடையே நேரமையை முடிவு செய்ய அந்த எழுத்துகளிலிருந்து மட்டுமே முடியும் என்கிறேன். இது சரியா? தவறா? சரி என்றால் ஏற்றுக் கொள்ளுங்கள் தவறு என்றால் எப்படி தவறு என்று விளக்குங்கள்.//

    மீண்டுமொரு முறை விளக்க மறுபடி நான் காப்பி பேஸ்ட் செய்ய தேவையில்லையென நினைக்கிறென். தயவு செய்து எழுத்தில் நேர்மை என்பதன் விளக்கத்தை எனக்கு தெளிவு படுத்துங்கள் சகோ செங்கொடி

    // இந்த உலகில் சோதித்தறிய முடியும் படியான, மனிதர்கள் கோரிக்கையை இறைவன் நிறைவேற்றியதற்கான சான்று ஏதாவது கூற முடியுமா?/// என்றொரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அந்த விவாதத்தில் முதலில் இந்தக் கேள்வியை கண்டு கொள்ளாமல் விட்ட நீங்கள் பதில் கூற வேண்டும் என வலியுறுத்திக் கேட்ட பிறகு பதில் என்ற பெயரில் ஏதேதோ கூறினீர்கள்.//

    பதில் என்ற பெயரில் ஏதோதோ ... இப்படியான வார்த்தைகள் உங்களின் முன்முடிவுகளுடன் அணுகும் முறைமையே பறைச்சாற்றுகிறது. முதலில் பதில் இல்லையென்றீர்கள். பிறகோ திருப்தி இல்லையெங்கிறீர்கள். பின்ன என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள். நான் ஏற்கனவே தெளிவாக சொல்லி விட்டேன். விவாத களத்தில் நீங்கள் உங்கள் சார்பான கருத்துக்களையும், நான் எனது சார்ப்பான கருத்துக்களையும் மட்டுமே சார்ந்து பின்னூட்ட மிட முடியும். அஃதில்லாமல் திருப்தி அல்லது தெளிவற்ற பதில் இல்லையென்றால் இப்போது சொல்கிறேன் இதுவரை விவாதித்த எந்த பின்னூட்டத்திலும் நீங்கள் கடவுள் இல்லையென்று அறிவியல் நிருபித்த உலகியல் சான்றை ஒன்றுக்கூட ஆதாரத்துடன் சுட்டி தந்து மேற்கோள் காட்டவில்லை, இதற்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா..?

    இறுதியாக சொல்கிறேன். உங்கள் வாய்சவடால் வாக்கியங்களை உங்கள் தளத்தில் அமைத்துக்கொள்ளுங்கள் உங்களுக்காக ஒரு கூட்டம் காத்திருக்கும். களத்தில் நின்று கண்ணியமான வார்த்தைகளுடன் கடவுள்- நாத்திகம் குறித்து விவாதிக்க வருவதாக இருந்தால் தொடருங்கள்.

    இல்லையேல் இப்படியே பேசிக்கொண்டு உங்களை அசுவாசம் படுத்திக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  27. நண்பர் குலாம்,

    மூன்று நாட்கள் என்னுடைய பின்னூட்டம் உங்கள் தளத்தில் இருந்திருக்கிறது. இன்று காலையில் உங்களுக்கு இணையத்தில் இருக்க நேரம் கிடைத்திருக்கிறது. ஆனாலும் உங்கள் தளத்தை நீங்களே பார்க்கவில்லை. ஏனென்றால் ஒரு பின்னூட்டம் காத்திருப்பில் இருப்பது உங்களுக்கு தெரியவில்லையே. ஆனால் என்னுடைய பின்னூட்டம் இன்னும் வெளியிடப்படவில்லை என்பதை நான் வெளிப்படுத்திய இரண்டு மணி நேரத்திற்குள் அது உங்களுக்குத் தெரிந்து உடனே மறுமொழியும் போட்டுவிட்டீர்கள். எந்த உள்நோக்கமும் இல்லாமல் தான் மூன்று நாட்களாக என்னுடைய பின்னூட்டத்தை தடுத்து வைத்திருந்தீர்கள் என்பது மிக நல்ல்ல்ல்ல்ல்ல்லாவே தெரியுது. இதுக்காக நான் முகநூலுக்கெல்லாம் போய் துப்பறிய வேண்டியதில்லீங்கோ.

    புனை பெயர் வைத்துக் கொள்வது நேர்மையின்மையின் அடையாளமா? அல்லது அது ஒரு தவறான செயலா? இந்த எளிய விசயம் கூட தெரியாமல் எப்படி இவ்வளவு வயதுவரை வளர்ந்தீர்களோ? ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது என்னுடைய நேர்மை மீது குற்றம் சுமத்த எந்த ஒன்றும் உங்களிடம் இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. நேர்மை குறித்து போதிய விளக்கம் அளிக்கப்பட்டாகி விட்டது, நேர்மையின்மை குறித்து நிரூபிக்கப்பட்டும் (இப்ராஹிமுக்கு முந்தியா பிந்தியா) இருக்கிறது. இதன் பிறகும் “என்ன கையப்பிடிச்சு இழுத்தியா” டைப் வாதங்கள். சரி என்றால் ஏற்றுக் கொள்ளுங்கள் தவறு என்றால் விளக்குங்கள் என்று நேரடியாக கேட்டிருக்கிறேன். பதில் சொல்ல முடிந்ததா உங்களால்? ஆனாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று காட்ட வேண்டுமே அதற்காக எழுத்தில் நேர்மை என்றால் என்ன என்று விளக்குங்கள் (செப்ட் 30ம் தேதி பின்னூட்டத்தில் முதலிரண்டு பத்திகளைப் பார்க்கவும்) என்றொரு கேள்வி. யப்பா .. .. .. தாங்கலடா சாமி .. .. ..

    இந்த உலகில் சோதித்தறிய முடியும் படியான, மனிதர்கள் கோரிக்கையை இறைவன் நிறைவேற்றியதற்கான சான்று ஏதாவது கூற முடியுமா? இந்தக் கேள்விக்கு பதிலைப் போல் கூறினீர்கள் ஆனால் பதில் கூறவில்லை இது நேர்மையா? இது தான் என்னுடைய கேள்வி. ஆனால் நீங்களோ இதை திருப்தியளிக்கவில்லை என்பதைப் போல் திரித்திருக்கிறீர்கள். இதை அந்த விவாதத்தில் எப்படியெல்லாம் பதில் என்ற போர்வையில் சுற்ரி வளைத்தீர்கள் என்பதை காட்டினால் தான் உங்கள் நேர்மையின்மை தெள்ளெனப் புரியும். இல்லாவிடின் இப்படித்தான் நேர்மையாளன் போல் வேசம் போடுவீர்கள்.

    இந்தக் கேள்விக்கு முதலில் நீங்கள் எழுதிய பதில் வானம் பூமியைப் பாருங்கள் கருவளர்ச்சியைப் பாருங்கள் மொழி நிறங்கள் வேறுபடுவதைப் பாருங்கள். இவைகளில் எதை நீங்கள் சோதித்தீர்கள் என்று கூறுங்கள், அவை எப்படி கடவுளோடு தொடர்புடையது என்று நான் கூறுகிறேன். இது கேள்விக்கான பதிலா அல்லது பதில் கூற வேண்டும் என்பதற்காக கூறப்பட்ட ஏதோ ஒன்றா?

    இதற்கு நான் கேள்வியை ஊன்றிப் படியுங்கள் என்று கூறி நீங்கள் கூறியிருப்பதெல்லாம் மனிதன் கேட்டு கடவுள் தந்ததா? என்றும் கேட்டிருந்தேன். இதன் பிறகு பலமுறை இந்தக்கேள்விக்கு பதிலளியுங்கள் என்று கேட்டும் னீங்கள் கண்டு கொள்ளவே இல்லை. பின் வேறு வழியில்லாமல் பதில் கூற வேண்டுமே என்பதற்காக தேனீ, கடல் என்றீர்கள். இதன்பிறகு கேள்வியின் பொருளை விளக்கி இதற்கு பதில் கூறுங்கள் என்று கேட்டேன். இதன்பிறகு எந்தப் பதிலையும் நீங்கள் கூறவில்லை.

    ஆனால் இப்போது ஏதோ நீங்கள் பதில் கூறி விட்டது போலும், அந்தப் பதில் எனக்கு திருப்தியை தாராதது போலும் எழுதியிருக்கிறீர்கள். உங்களுக்கு தைரியம், மானம், ரோஷம், வெட்கம் இப்படி ஏதாவது இருக்கிறது என நீங்கள் எண்ணினால் அந்தக் கேள்விக்கு நீங்கள் கூறிய பதிலை இங்கே பதிவு செய்து அது எப்படி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாக இருக்கிறது என்பதை விளக்குங்கள். அப்படி நீங்கள் செய்யாதபட்சத்தில் நீங்கள் நேர்மையற்றவர் என்று நீங்களே ஒப்புக் கொண்டீர்கள் என்பது பொருள். என்ன சம்மதமா நண்பர் குலாம் அவர்களே! (தைரியம், மானம், ரோஷம், வெட்கம் - இப்படியெல்லாம் சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறேனே என்று பிலாக்கணம் வைக்காதீர்கள். உங்கள் நடிப்பும் வெளி வேசமும் அவ்வளவு அறுவெறுக்கத் தக்கதாய் இருக்கிறது. அதை தாங்க முடியாமல் தான் இப்படியெல்லாம் எழுதியிருக்கிறேன்) கண்ணியம் என்பது வெறுமனே வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் மட்டும் இல்லை. நேர்மையாய் இருப்பதில் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோ., செங்கொடி.,

      கடந்த 3 நாட்களாக உங்கள் பின்னூட்டத்தை பார்வையிட இல்லையென்பது உண்மை. இது பொய்யென்றால் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்..?

      // புனை பெயர் வைத்துக் கொள்வது நேர்மையின்மையின் அடையாளமா? அல்லது அது ஒரு தவறான செயலா? //

      மிக அழகான பதில் நான் சொல்வது இணையத்தில் அல்ல பொதுவெளியில்., உங்கள் பெயர் என்ன? அதை சொல்லுங்கள்.

      ஐயா., அல்லாஹ் நாடினால் இந்த இழையில் நாளை தொடர்கிறேன்

      இவ்வளவு அங்கலாய்ப்பு இங்கே தேவையில்லை சகோ.,
      சுருக்கமாக இங்கே எனது கேள்வி

      இந்த ஆக்கத்திற்கான உங்கள் பதில் /மறுப்பு பதில் என்ன முதலில் அதை பதியுங்கள். எனக்கு சூடு, வெட்கம் தைரியம் இருக்கிறது. அதை அறிய வேண்டுமானால் முதலில் நீங்கள் உண்மையாளனாக இருக்க வேண்டும். தற்போது சவுதியில் வெளி நடப்பு செய்ததாக அறிகிறேன். அதே தைரியம், வெட்கம், மானம், சூடு அனைத்தும் உங்களுக்கு இருந்தால் இந்தியாவிலே தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்கிறேன். உங்கள் தொடர்பு எண்ணை கொடுங்கள். பொதுவெளியில் பேசி கடவுள் மறுப்பை உறுதிப்படுத்துங்கள்

      Delete
  28. அன்பு சகோ செங்கொடி

    சில குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்தி இருந்தீர்கள். பதிலும் விளக்கமும் தருவதற்காகவே இப்பின்னூட்டங்கள்

    விளக்கம் 1 பின்னூட்டம் குறித்து

    மூன்று நாட்கள் உங்கள் பின்னூட்டத்தை தடுத்து வைத்தாக கூறீனீர்கள். உண்மை தான். மூன்று நாட்களுக்கு பிறகே அதுவும் நீங்கள் கூறிய பின்னரே பிளாக்கர் உள் சென்று உங்கள் பின்னூட்டத்தை வெளியிட்டேன். இதில் என்ன பிரச்சனை இருப்பதாக நினைக்கிறீர்கள். எனது பணியும், நான் இணையத்தில் இணையும் நேரமும் அப்படியானது. ஆக உடனடியாக சில பின்னூட்டங்களை பார்வையிடவும் சில நேரங்களில் சில நாட்கள் கழித்து பின்னூட்டங்களை பார்வையிடவும் எனக்கு நேர்ந்திருக்கிறது/ இதற்கு முன்னர் கூட உங்களின் பல பின்னூட்டத்தை இதைப்போல சில நாட்கள் கழித்து வெளியிட்டு இருக்கின்றேன். ஏனெனில் அப்போதே என்னால் பார்க்க முடிந்திருக்கும் . உங்கள் பின்னூட்டங்கள் மட்டுமல்ல என் ஆக்கத்திற்கு ஆதரவு மற்றும் நேர்மறையாக கருத்து தெரிவித்து வரும் பின்னூட்டங்கள் கூட ஒருவாரம் கழித்து கூட வெளியிட்டு இருக்கிறேன். எதிர் மறை பின்னூட்டங்கள் என்றால் எனக்கு பாதகமான கருத்துகளை கொண்டிருக்கும். ஆனால் நேர்மறை பின்னூட்டங்களை ஒருவார காலம் அளவிற்கு கழித்து வெளியிட என்ன காரணம்...? மீண்டும் சொல்கிறேன் என் பணியை பொருத்தே என் இணைய வருகை.

    சரி அப்படியே சில நாட்கள் நான் வெளியிடும் பின்னூட்டங்களில் ஏதெனும் வார்த்தைகளை சேர்த்தோ, எடுத்தோ அல்லது திரித்தோவா வெளியிடுகிறேன்? உள்ளது உள்ளப்படியே தானே சகோ., நாம் விவாதிக்க தொடங்கிய நாள் முதல் நேற்று வரையிலும் உங்கள் பின்னூட்டங்களில் ஏதெனும் மாறுதல் செய்து இதுவரை வெளியிட்டு இருக்கின்றேனா...? அப்படி ஏதாவது ஒரு பின்னூட்டத்தின் ஒரு வார்த்தையாவது உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா?

    சகோ உங்கள் பின்னூட்டங்களை நான் பார்த்து அதில் உள்ள கருத்துகளுக்கு எதிர் கருத்து இல்லாமல் பயந்து.... அதை அப்படியே மட்டுறுத்தி வைத்திருப்பதாக நினைத்தால் அது வெறும் பகல் கனவு என்பதை அறிந்துக்கொள்ளுங்கள். ஏனெனில் இஸ்லாத்தை மட்டுமே எழுதிக்கொண்டிருக்கும் சுமார் 200 இணையத்தளத்திற்கு மத்தியில் நாத்திகம் குறித்து முழுக்க முழுக்க பேசப்படவே "நான் முஸ்லிம்" எனும் தளம் உருவாக்கப்பட்டிருக்கிறதென்றால் இதைப்போன்ற விவாதங்களை எதிர்ப்பார்த்து தான் காத்திருக்கிறேன். ஆக உங்கள் பின்னூட்டங்கள் மட்டுறுத்தி வைக்கப்பட்டமைக்கு மனம் போன போக்கில் போலி காரணங்களை அடுக்க வேண்டாம். ஏனெனில் என்னிடம் நேரடியாக விவாதிக்கும் சில கிறித்துவர்கள், நாத்திகர்கள் எழுப்பிய கேள்விகள் உங்கள் கேள்விகளை காட்டிலும் ஆரோக்கியமானதாகவும், அறிவுப்பூர்வமானதாகவும் இருந்திருக்கின்றன.
    ஆக இனியும் காலதாமதத்தோடு பின்னூட்டங்கள் வெளியிட வாய்ப்புண்டு.

    ReplyDelete
  29. விளக்கம் 2. எழுத்தின் நேர்மை.

    ஒருவர் எழுத்தில் உள்ள நேர்மையை வெளிப்படுத்த வேண்டுமானால் பொதுவில் உறுதி செய்யப்பட்ட செயல்கள், நிகழ்வுகளை வைத்தே உண்மைப்படுத்த முடியும். உதாரணத்திற்கு நீங்கள் 2+2=4 எனக்கூறி நான் 2+2=5 என கூறினால் இதில் யாரது கூற்று உண்மையானது என்பதை எளிதில் அறியலாம். ஆனால் நாம் நிற்கும் விவாத களம் அப்படியானது அல்ல எதிரும் புதிருமான விவாதத்தில் இருவரும் இரு சார்க்கொள்கையில் தனக்கு சாதமானதை ஏற்று நின்று வாதிடும் போது அதை எழுத்தில் உண்மைப்படுத்துவது எப்படி என நான் கேட்டேன். ஏனெனில் இருவருக்குமான விவாதத்தில் நம்மில் ஒருவர் விடுக்கும் கேள்விக்கு பதில் சொல்லாமலோ, அல்லது சொல்வதில் கருத்து சிதைவு ஏற்பட்டாலோ அவரது நேர்மையின்மைக்கு சான்று பகர முடியாது. ஏனெனில் இங்கே பதில் சொல்வதில் நம் இருவரின் அறிவு திறன் யாருக்கு மிகைத்திருக்கிறதோ அவரே திறம் பட செயல்பட முடியும். மேலும் அவர் அதுக்குறித்து விரைவாக அறிந்திருந்த போதும் இணையமும், நேரமும் அவரது வருகையை தாமதப்படுத்தலாம்.

    ஆக தாமதிக்கும் அல்லது கருத்து சிதைவுடன் கூடிய பதில்களில் ஒருவரின் நேர்மையை தீர்மானித்து விட முடியாது. அஃதில்லாமல் முன் பின் முரணாக, நேற்று உண்டென்பதை இன்று இல்லையென்பதாக, முன்னர் சரி என்றதை பின்னர் தவறு என்று கூறினால்... இப்படி ஒரே தீர்வில் இரட்டை நிலைப்பாட்டை கொண்டிருந்தால் மட்டுமே அவரது எழுத்தில் நேர்மையில்லை என்பதை சுட்டிக்காட்ட முடியும். அப்படியான என் வாத முழுக்க ஒரே ஒரு முரண்பாட்டை நீங்கள் சுட்டிக்காட்டுங்கள் பார்க்கலாம். நானே ஏற்றுக்கொள்கிறேன். என் நேர்மையின்மையை.

    ReplyDelete
  30. விளக்கம் 3 விவாத மையக்கரு.

    நாம் விவாதிக்கும் கருப்பொருள் இன்று உலகில் முக்கியமாய் தொடரும் ஒரு செயலைக்குறித்து. ஆக உலகில் இன்னும் நிகழ்வுகளும், செயல்களும் நீடித்துக்கொண்டிருக்கும் வரை இக்கருப்பொருளின் விவாதிக்கும் பாங்கும் விரிவடைந்துக்கொண்டே தான் போகும். மூன்று அல்லது நான்கு சுழற்சி பின்னூட்டத்திலே தீர்வு வேண்டுமானால் அதற்கு இன்று உலகில் கடவுள் உண்டு / இல்லை என்பதை மூன்றாம் நிலை நமக்கு உறுதி செய்து தந்திருக்க வேண்டும். அப்போது மட்டுமே வெற்றி தோல்வி விரைவில் தீர்மானிக்கப்படும். அஃதில்லாமல் நாம் இந்த இரண்டு கூற்றில் எது உண்மையாக இருக்க அதிக வாய்ப்புண்டு என்ற சாத்தியங்களை ஆராய்கிறோம். அதை அவரது வாதமாக எடுத்து வைக்கிறோம்.

    நான் கடவுள் உண்டு என்பதை இஸ்லாதை மேற்கோள் காட்டி சொல்கிறேன். ஆனால் நீங்களோ கடவுள் மறுப்பை இஸ்லாத்தை எதிர் கேள்விகள் கேட்டே நிறுவ முயல்கிறீர்கள். இது தான் பிரச்சனை. எப்படி நான் கடவுள் உண்டென்பதை இஸ்லாத்திலிருந்து விளக்குகிறேனோ., கடவுள் இல்லையென்பதை நீங்கள் நாத்திக கொள்கையிலிருந்து விளக்க வேண்டும். ஆனால் நாத்திகத்தின் அடிப்படை கொள்கை என்ன என்பதை கூட உங்களைப்போன்ற நாத்திகர்களால் இன்னும் தெளிவாக முன்மொழியப்படுவதில்லை.

    ஆகவே தான் கேட்டேன். கொள்கையின் அடிப்படையில் எழுத்து மட்டும் அமைந்தால் போதாது. உங்கள் வாழ்வும் அமைந்திருக்க வேண்டும் என்று. ஆனால் இதுவரை பதிலில்லை. சமார்த்தியமாக எழுத்து மட்டுமே நமக்கிடையிலான தொடர்பு என்று எழுத்தில் மட்டுமே உங்கள் நேர்மையை நிலைத்திருக்க பார்க்கிறீர்கள். சரி போகட்டும்

    கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக நல்லூர் முழக்கம் மற்றும் செங்கொடி தளத்தில் நான் பின்னூட்டமிட்ட போது இடையில் மற்றவர்களால் குறுக்கீடு ஏற்பட்டவுடன் நான் முஸ்லிம் தளத்தில் தொடர்ந்து விவாதிக்கலாம் என நான் சொன்னவுடன்., அதை நீங்கள் ஏற்றுக்கொண்டு நான் முஸ்லிம் தளத்தில் உரையாட தொடங்கி நேற்று வரை தொடந்திட்ட போதும்.. சகோ இப்ராஹீம் சுட்டிக்காட்டிய ஆக்கத்திற்கு இன்னும் நீங்கள் விளக்கமளிக்கவில்லை என இரண்டு வருடங்களுக்கு முன்னரான ஒரு ஆக்கத்தை சுட்டிக்காட்டி என் நேர்மையை பரிசோதிப்பது எனக்கு நகைப்பை தான் கூட்டுகிறது.

    உங்கள் தளங்களுக்கு வர வாய்ப்பில்லை. ஆக இங்கேயே தொடருங்கள் என நான் கூறி ஆண்டுகள் இரண்டு ஆகியும் அந்த ஆக்கத்தின் கருத்தை இங்கே பதிந்தது என்னிடம் மறுப்பை கேட்டிருக்கலாமே...? அஃதில்லாமல் திடிரென ஒரு மாதத்திற்கு சமீபமாக வந்து நாத்திகம் குறித்து பேச வரவில்லை. அந்த ஆக்கத்திற்கு மறுப்பு எங்கே? என கேட்டால்., ஏற்கனவே நமக்கிடையிலான உடன்படிக்கையை நீங்களும் ஏற்றுக்கொண்டு நான் முஸ்லிம் மட்டுமே நமது விவாத களம் என முடிவு செய்திட்ட போதும். இப்படியான கேள்விகள் யாருடையே நேர்மையை பரிசிலிக்க போதுமானது என்பதை உங்கள் சிந்தைக்கே விடுகிறேன்.

    நான் இணையத்தில் கரம் பதித்து நாத்திகம் குறித்து தமிழன், இப்னு பசிர் போன்றவர்களோடு விவாதித்து அவர்களது கேடுக்கெட்ட நரகல் எழுத்து நடையால் மேலும் தொடர்வதை நிறுத்திக்கொண்டேன். அப்படியான வார்த்தை குவியலிருந்து வேறுப்பட்டு மாறுப்பட்டு கண்ணியமான மறுப்புகள் உங்கள் ஆக்கத்தில் இருந்தாலே உங்களது விவாதிக்க ஒப்புக்கொண்டேன். எனினும் வலையுகம் ஹைதர், எதிர்க்குரல் ஆசிக், நெத்தியடி முஹம்மத், சுவனப்பிரியன் போன்றவர்கள் இதுவும் விரலுக்கு இறைத்த நீர் தான் என்று சொன்னார்கள். ஒரு கட்டத்தில் நாத்திகம் நோக்கி நான் எழுப்பும் கேள்விகளுக்கெல்லாம் உங்கள் பதில் இஸ்லாத்தை நோக்கியே பயணிப்பதை நிதர்சனமாக உணர்ந்த நேரத்தில் மேற்கண்ட வாக்கியங்களில் உள்ள உண்மை தெளிவாக புரிந்தது.

    அதிகப்படம் இஸ்லாத்தை எதிர்த்து உங்களைப்போன்ற நாத்திகர்களால் வெறும் 20 கேள்விகளுக்கு மேல் தாண்ட முடியாது. அதையை இடம் பொருள் மாற்றி தான் கேட்டுக்கொண்டிருக்க முடியும். தருமி, கும்மி தொட்டு வால்பையன் வரை அதே தான் பார்த்துக்கொண்டிருக்கின்றேன். சமீபத்திய நமது மூன்றாம் சுற்று விவாதிப்பும் அதையை உறுதி செய்திட்டது.

    ReplyDelete
  31. தொடர்ச்சி...
    ஆக உங்களோடு கடவுள் குறித்து விவாதிப்பது எனக்கு ஒருவித சடைவை தான் தருகிறது. இனியும் மேலும் கடவுள் / இஸ்லாம் குறித்து தொடர எனக்கு விருப்பமில்லை. ஏனெனில் மீண்டும் மீண்டும் தொடரும் கொசுவர்த்தி சுருள் கேள்விகள், நீங்கள் இந்தியாவில் தான் தற்போது இருக்கீறிர்கள் இறைவன் நாடினால் அடுத்த இரண்டு மாதம் கழித்து கம்பெனி நிமித்தமாக அங்கே வர வாய்ப்புண்டு. உங்கள் தொடர்புக்குறித்து அறிய செய்தால் தாரளமாக பொதுவெளியில் கடவுள்- இஸ்லாம் குறித்து விவாதிக்க ஏற்பாடு செய்கிறேன். ஏனெனில் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சகோ இனிமை உங்களிடம் இதைப்போல் கேட்டதற்கு நீங்கள் இந்தியாவில் இல்லை என்ற நியாயமான காரணத்தை தான் பதிலாக தந்தீர்கள். இப்போது அந்த பிரச்சனை இல்லை. என்ன சொல்கிறீர்கள், யோசித்து சொல்லுங்கள். ஏனெனில் குலாமின் எழுத்தை பொய்யாக்குவதை விட இந்த சமூகத்திற்கு கடவுளின் மறுப்பை உறுதி செய்ய வேண்டிய மிக பெரிய பொறுப்பு உங்களிடத்தில் உள்ளது,

    இதற்கும் ஏதாவது துணை காரணங்களை கற்பித்து நேரடி விவாதம் தவிர்த்து எழுத்து விவாதத்திற்கு மட்டும் தான் நான் தயார் நீங்கள் கூறுவீர்களேயானால் நாத்திகம்- பரிணாமம் குறித்து மட்டுமே இனி உங்களோடு விவாதிக்க உடன்படுகிறேன். இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து உங்கள் நேர்மையை பறைச்சாற்றுங்கள்.
    இதுவல்லாமல் அந்த கேள்விக்கு பதில் சொல்லல., இந்த கேள்விக்கு பதில் சொல்லலன்னு இஸ்லாம் கடவுள் குறித்து தான் பேச வேண்டும் என மீண்டும் முளைக்கும் மீள் கேள்விகளை இங்கே கொண்டு காப்பி பேஸ்ட் செய்து பின்னூட்டமிட்டால் அதையும் தாரளமாக வெளியிடுகிறேன். ஆனால் எனது பதில் பின்னூட்டங்கள் இஸ்லாத்தை நோக்கியதாக இருக்காது நாத்திகத்தை குறித்ததாக தான் இருக்கும்.

    நான் முஸ்லிம் தளம் வருவதாக இருந்தால் மேற்கண்டவற்றில் ஒன்றை முடிவு செய்யுங்கள். அப்போது நேர்மையாளன் யார் என பொதுவெளியில் தெளிவாய் தெரியும்.. இல்லையேல் உங்கள் தளத்தில் உங்கள் எண்ணத்தை எப்படி வேண்டுமானாலும் எழுத்தாக்கி கொள்ளுங்கள். அடுத்தவரின் நேர்மையை குறித்து இனி எங்கும் பேச வாய் திறக்காதீர்கள்,

    உங்கள் சகோதரன்
    குலாம்.

    ReplyDelete
  32. //அதிகப்படம் இஸ்லாத்தை எதிர்த்து உங்களைப்போன்ற நாத்திகர்களால் வெறும் 20 கேள்விகளுக்கு மேல் தாண்ட முடியாது. அதையை இடம் பொருள் மாற்றி தான் கேட்டுக்கொண்டிருக்க முடியும். தருமி, கும்மி தொட்டு வால்பையன் வரை அதே தான் பார்த்துக்கொண்டிருக்கின்றேன். சமீபத்திய நமது மூன்றாம் சுற்று விவாதிப்பும் அதையை உறுதி செய்திட்டது.//

    அந்த இருபதிலும் ஒத்த கேள்விக்கு கூட ஒழுங்கா பதில் சொல்ல முடியலைன்னே வருத்தம் உள்ளகுல்ல இருந்தாலும் வெளியே வலிக்காத மாதிரியே நடிக்கிறது நல்ல அரசியல்வாதிக்கு தேவையான குணம். எந்த கட்சியில சேரப்போறிங்க?

    எதாவது கேள்வி கேட்டா அது எங்க நம்பிக்கை என்பதை தவிர லாஜிக்கலா அதுக்கு விளக்கம் சொல்ல முடியல. நீங்க இஸ்லாத்தை எங்கிருந்து வளக்கப்போறிங்க? கஷ்டகாலம்

    பிஜேவின் அதே கோனங்கி புத்தி தான் தெரியுது. எதாவது கேள்வி கேட்டா இந்த கேள்வியில் அர்த்தமே இல்லையேன்னு கேனத்தனமா ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு வேற எதாவது உளரிட்டு தாவிடுறது. நீங்க என்னைக்காவது முழுசா ஒரு கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிங்களா?

    எத்தனையோ கேள்விகள் செங்கொடி தளத்திலும், என் தளத்திலும் இருக்கு. ஃபேஸ்புக்கிலும் அப்பப்ப நான் கேள்விகளை வச்சிகிட்டு தான் இருக்கேன்.
    உங்களுக்கு ப்ளாக்குல பண்ணா தான் பண்னா மாதிரி இருக்குன்னு சொல்றிங்க. நான்லாம் பல பேரும் மொபைலில் தான் ஃபேஸ்புக் வர்றேன். அதுல ப்ளாக்கை துறந்து விவாதிச்சு.

    வெளங்கிடும்

    அறிவியலா ஆன்மிகமான்னு ஃபேஸ்புக்கில் ஒரு குழுமம் இருக்கு. அதுல சேருங்க. உங்களுக்கு கடவுள் மறுப்புன்னா என்ன? இஸ்லாம் ஏன் பொய் மதம்னு விளக்கமா சொல்லி கொடுப்பாங்க

    ReplyDelete
    Replies
    1. வாங்க வால் பையன் அண்ணே.,

      பொதுவில் விவாதிக்க வந்தால் முதலில் அதன் மூலத்தை அறிய முற்படணும்... இத ஆயிரம் தபா சொல்லியாச்சி உங்ககிட்ட., ஆனா பாருங்க என்னிடம் நீங்கள் இஸ்லாம் குறித்து கேள்வி எழுப்பும் முன்னமே பரிணாமம் குறித்து உங்களிடம் நான் கேள்வி எழுப்பி இருக்கின்றேன்.

      எதிர்க்குரலில் கேட்ட கேள்விக்கு இதுவரை உங்களிடம் பதில் இல்லை., அந்த லிங்க் மற்றும் கேள்விகளை இரண்டு முறை உங்களுக்கு பேஸ்புக்கில் எடுத்தும் கொடுத்து விட்டேன். பரிணாமம் குறித்து பதிலளிக்க வாய் திறக்காத உங்களுக்கு இஸ்லாத்தை குறித்து அரைகுறை அறிவோட விவாதிக்க எங்கிருந்து தான் தைரியம் வருகிறதோ...?


      இப்போது கேட்கிறேன் இஸ்லாத்தை உரசாத எந்த கேள்விகளையாவது வைத்துக்கொண்டு உங்களின் நாத்திக கொள்கையை நிறுவ உங்களால் முடியுமா? இஸ்லாத்தை காழ்ப்புணர்ச்சியோடு அணுகி அல்லாஹ்வின் அர்ஸூ, நபிகளார் 6 வயது திருமணம்... இப்படி தான் உங்களால் நாத்திக வண்டியை ஓட்ட முடிகிறது. முதலில் நாத்திகம் - ஒரு சிறுக்குறிப்பு வரைய முடியுமா உங்களால்...

      எதுன்ன கோணங்கி தனமா பதில்.... உங்கள் தளத்தை பத்தி சொல்லவே வேணாம்... கடவுளால் தூக்க முடியாத கல் என அறிவு ஜீவியாக உங்கள் கடவுள் மறுப்பை வெளிப்படுத்தியவர் தானே நீங்கள்.

      செங்கொடி தளத்தை பற்றி குறிப்பிடும் நீங்கள் நான் முஸ்லிம் தளத்தின் 25 ஆக்கத்திற்கும் என்ன பதில் வைத்திருக்கீறிர்கள். குறைந்த பட்சம் நாத்திகர்களின் முரண்பாடுகள் குறித்தாவது இதுவரை உங்கள் மறுப்பை பதிவு செய்து விட்டிருக்கவேண்டாமா...?


      அண்ணே., பொறுமையா போயி பேஸ்புக்குல மொக்கையே போட்டுக்கிட்டு இருங்க., அது என்ன பேஜ்னே... அறிவியலா ஆன்மிகமா தானே... ஒரு ஆறேழு மாசத்துக்கு முன்னாடி நான் என்ன கேள்வி கேட்டு இருக்கேன் நாத்திக அறிவு ஜீவிகள் என்ன பதில் சொல்லி இருக்காங்கன்னு தேடி புடிச்சி படிங்க. அண்ணே.,

      முதல்ல உங்க கொள்கையிலாவது உண்மையா இருக்கிங்களான்னு பார்க்கிறதுக்கு முன்னாடி உங்கள் கொள்கையாவது உண்மையா இருக்கான்னு பாருங்கண்ணே

      Delete
  33. //கேள்வி எழுப்பும் முன்னமே பரிணாமம் குறித்து உங்களிடம் நான் கேள்வி எழுப்பி இருக்கின்றேன். //

    புதுக்கதை. எனது ப்ளாக்கில் ஆரம்பத்தில் இருந்தே கேள்வி

    //பரிணாமம் குறித்து பதிலளிக்க வாய் திறக்காத உங்களுக்கு இஸ்லாத்தை குறித்து அரைகுறை அறிவோட விவாதிக்க எங்கிருந்து தான் தைரியம் வருகிறதோ...?//

    பரிணாமம் குறித்து உங்களுக்கு இருக்கும் முழு அறிவை கண்டு வியக்கேன்.

    //இஸ்லாத்தை உரசாத எந்த கேள்விகளையாவது வைத்துக்கொண்டு உங்களின் நாத்திக கொள்கையை நிறுவ உங்களால் முடியுமா//

    நாத்திகம்னாலே இஸ்லாத்தை கேள்வி கேக்குறதுன்னு உங்க புரிதல் இருந்தா அதுக்கு நான் என்ன பண்ண முடியும். என் ப்ளாக்கை ஒழுங்கா படிச்சிருக்கனும்

    //கடவுளால் தூக்க முடியாத கல் என அறிவு ஜீவியாக உங்கள் கடவுள் மறுப்பை வெளிப்படுத்தியவர் தானே நீங்கள்.//

    கேள்விக்கு பதில் சொல்லிட்டு நான் அறிவுஜீவியா, முட்டாஜீவியான்னு பட்டம் கொடுப்பது தானே முறை.

    //குறைந்த பட்சம் நாத்திகர்களின் முரண்பாடுகள்//

    நீங்க எப்படி குண்டு வைக்கிறவனெல்லாம் இஸ்லாமியன் அல்லன்னு சொல்றிங்களோ அதே போல் தான், சிலைக்கு மாலை போடுகிறவர்களை நான் நாத்திகனாக பார்க்க முடியாது. உங்க முரண்பாட்டை என் மேல் திணித்தால் நான் என்ன பண்றது.

    //பொறுமையா போயி பேஸ்புக்குல மொக்கையே போட்டுக்கிட்டு இருங்க.//

    அதுனால நாடு நாசமா போயிருச்சா என்ன?

    //ஒரு ஆறேழு மாசத்துக்கு முன்னாடி நான் என்ன கேள்வி கேட்டு இருக்கேன் நாத்திக அறிவு ஜீவிகள் என்ன பதில் சொல்லி இருக்காங்கன்னு தேடி புடிச்சி படிங்க. //

    அப்படி என்னாங்க அசர வைக்கிற மாதிரி ஒரு கேள்விய கேட்டுபுட்டிங்க?

    //முதல்ல உங்க கொள்கையிலாவது உண்மையா இருக்கிங்களான்னு பார்க்கிறதுக்கு முன்னாடி உங்கள் கொள்கையாவது உண்மையா இருக்கான்னு பாருங்கண்ணே
    //

    மனிதனா இருக்குறது என் கொள்கை. அந்த கொள்கையில என்ன உண்மை பிறண்டுச்சுன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. அறிவு ஜீவி வால் பையன் அண்ணனுக்கு.,

      இப்போ தெளிவா சொல்லுங்க நீங்க நாத்திகரா?
      கடவுள் மறுப்பாளரா?

      ஏன் கேட்கிறேனா., உங்க மனசாட்சிப்படி தான் உங்கள் வாழ்க்கையை தொடரன்னு சொல்றீங்கன்னா.., அந்த மனசாட்சி பலமுறை நன்மையாகவும் சிலமுறை தீயவையாகவும் முடிவுகளை எடுக்கின்றன.,

      பொதுவாக மனசாட்சி என்பது பெரும்பாலும் நன்மை செய்வதை அடிப்படையாக கொண்டிருந்தாலும் இரண்டு அடிப்படை காரணங்கள் மனசாட்சியின் செயல் போக்கை மாற்றுகிறது
      (1) நிலையற்ற மனித எண்ணங்கள்
      (2) மனிதர்கள் வாழும் சூழல்,சமுகம் இவ்விரு நிலைகளும் மனசாட்சியின் செயல் திறத்தை எவ்வாறு மாற்றுகிறது என்பதை பார்ப்போம்.

      மனசாட்சியின் அடிப்படை செயல் நிர்வாகத்திற்கு மிக முக்கிய காரணியாக அமைவது மனித எண்ணங்கள் ஆகும்.சாதரணமாக அனைத்து நிலைகளிலும் நன்மை தீமைகளே தரம் பிரித்து செயல்படுத்தினாலும் சாதாரண நிலை கடந்த அதாவது ஆசை, கோபம், விரக்தி, வேகம் மற்றும் தேவை போன்றவை மிகைக்கும் போது மனசாட்சியால் நன்மையை மட்டும் மேற்கொள்ள முடியாது.

      மாறாக அந்நேரங்களில் ஏற்படும் மனித எண்ணங்களுக்கே மனசாட்சி முக்கியத்துவம் கொடுக்கும். உதாரணமாக மனிதனுக்கு கோபம் வரும் வரை இயல்பாக பேசக்கூடியவன் அஃது கோபம் மிகுதியால் தவறான வார்த்தை பிரயோகமும் ஏன் கொலை செய்யக்கூடிய அளவிற்கு கூட அவனை தள்ளும் நிலைக்கு காண்கிறோம்.

      அதுப்போலவே., அடுத்தவர் செய்யும் ஒரு தவறை கண்டிக்கும் மனசாட்சி அதே தவறை தமது மனம் உட்பட்டு செய்யும் போதும் நியாயம் கற்பிக்கவே முயலும் மது அருந்துவது இதற்கு நல்ல உதாரணம் பொதுவாக மது அருந்துவதை வன்மையாக கண்டித்தாலும் ஏதாவது ஒரு காரணத்தை முன்னிருத்தி தாம் மது அருந்த செய்வதை மனசாட்சி தவறென்று சொல்லாது.

      மேலும் பாதிப்பும் -தீங்கும் மனசாட்சி செயல் போக்கை முற்றிலும் மாற்றக்கூடியவை., நாம் பிறருக்கு தீங்கோ பாதிப்போ ஏற்படுத்தாமல் இருந்தும் நமக்கு பிறரால் மிக பெரிய பாதிப்போ தீங்கோ ஏற்படுத்தப்பட்டால் பழிக்குப்பழி வாங்குவதை தான் முதலில் நமது மனசாட்சி ஊக்குவிக்கும். ஆக பிறர் நமக்கு தந்தது தீது என்று உணர்ந்தும் அதே தீமையே தான் நாம் அவருக்கு வழங்க வேண்டும் என மனசாட்சி வலியுறுத்தும் போது அதன் நீதத்தன்மை பூஜ்யமாக்கப்படுகிறது.


      இப்போ சொல்லுங்கண்ணே., மனசாட்சிப்படி நீங்க வாழ்றதுக்கும் இறைமறுப்புக்கும் என்ன சம்பந்தம்? சரி ஒருவாதத்திற்கு நானும் மனசாட்சிப்படி வாழணும்னா எந்த இடத்தில் எந்த நோக்கத்தோடு செயல்படுவது?

      ஆனால் ஆணோ பெண்ணோ தம் மனம் உடன்பட்டு விபச்சாரம் புரிவதாக இருந்தால் அதற்கு மனசாட்சி ஆசையின் மிகுதியால் அதை குற்றம் காண்பதில்லை. மேலும் இதை சமுக குற்றமாக பார்க்காமல் இருவரும் உடன்பட்டு தானே செய்கிறோம் என ஆறுதல் கூறி மேலும் இத்தகாத செயலை மனசாட்சி நியாயப்படுத்தவே செய்கிறது.
      ஆக சிந்தனை மாறுபாடும் சுயநலமிக்க எண்ண வெளிபாடும் மனசாட்சி அதன் உண்மை நிலைக்கு புறம்பாக அல்லது எதிராக முடிவெடுப்பதை தவறாக காணாது.

      கொலை, கொள்ளை மற்றும் வன்முறை போன்றவைகள் யாவும் பொதுவாக எல்லோராலும் சமுக சீர்கேடுகளாக கருதப்பட்டாலும் அச்செயல்கள் தவறென்று மிக நன்றாக தெரிந்தும் அத்தகைய தீய செயல்களை செய்யக்கூடியவர்கள்., அவர்களின் மனசாட்சிக்கு உடன்பட்டு தான் செய்கிறார்கள் என்பது தெளிவு. அஃது அவர்களின் மனநிலையும் இச்செயல்பாடுகளுக்கு அவர்கள் இயங்கும் சமுக பிண்ணனியே குற்றம் சாற்றி தமது தவறான போக்கிற்கு நியாயத்தை கற்பிக்கிறது.

      ஆக அங்கு மனசாட்சியின் நடு நிலை செயல்பாடு பொய்தே போய்விடுகிறது. சுய தேவையின் அடிப்படையில் மாற்றமடையும் தற்காலிக எண்ணங்களும் சமுக சூழ்நிலைகளின் குறுக்கீடும் மனசாட்சியின் செயல் திறத்தை மாற்றவல்ல ஆயுதமாகும். எனவே மனசாட்சியால் நன்மையான காரியங்களை மட்டுமோ அல்லது உண்மையை அடிப்படையாக செயல்களை மட்டுமோ எல்லா நிலையிலும் செய்ய முடியாது. ஆக மனசாட்சிக்கு மட்டுமே கட்டுப்பட்டு 100 சதவீகித உண்மையான வாழ்வை எவராலும் மேற்கொள்ள முடியாது.

      அப்படியானால் நமது எண்ணத்திற்கு -தேவைக்கு -நேரத்திற்கு தகுந்தாற்போல் மாற்றமடையாத, எல்லா சமுக சூழலிலும் ஒரே நிலையில் செயல்பட, மனிதர்களுக்கு மனிதர் மாறுபடாத நீதமாக இருக்க மனசாட்சியை எப்படி பெறுவது?

      அப்புறம் அண்ணே நான் பரிணாமம் குறித்து சந்தேகங்களையும், கேள்விகளையும் தான் கேட்டுக்கொண்டிருக்கின்றேன். உங்களைப்போல முன்முடிவுகளோடு இஸ்லாத்தை குறை காண்பது போல அல்ல.,

      கடவுளால் தூக்க முடியாத கல்...? சரி இதற்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி எனக்கு கடவுள்னா அது என்ன/ யாரு இத சொல்லுங்கண்ணே.,

      அப்படியே பரிணாமம் குறித்து சகோ கும்மி உங்கள் பதிவிலிருந்து மேற்கோள் காட்டினார். அதைப்படித்து விட்டு தானே பரிணாமத்தின் தகவமைப்பு கோட்ப்பாட்டிலிருந்து சில கேள்விகளை கேட்டேன்.

      ஒண்ணும் சொல்றாப்ல இல்ல., முதலில் உங்களை அசுவாசப்படுத்தி பின்னர் தொடருங்கள்

      Delete
  34. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. சகோ வால் பையன்
      கண்ணியமாக உரையாட முடிந்தால் மட்டும் தொடருங்கள்.
      உங்கள் பின்னூட்டம் டெலிட் பண்ணப்பட்டு விட்டது

      Delete
  35. //எனக்கு கடவுள்னா அது என்ன/ யாரு இத சொல்லுங்கண்ணே.,//

    இப்படி எங்கிட்ட கேட்டா வேற என்ன மாதிரியான பதில் வரும்னு எதிர் பார்க்குறிங்க?
    இத்தனைக்கும் நான் ஒண்ணும் கெட்ட வார்த்தையில் திட்டலையே.
    எதாவது திட்டியிருந்தாலும் எனக்கு உங்க கடவுள் தீர்ப்பு நாளில் தண்டனை கொடுக்கப்போறார். நீங்க ஏன் தல உனர்ச்சி வசப்படுறிங்க?

    ReplyDelete
  36. நண்பர் குலாம்,

    விளக்கம் 1 குறித்து: மூன்று நாட்கள் பின்னூட்டத்தை தடுத்து வைத்திருந்தது குறித்து பெரிதாக எடுத்துக் கொள்ள ஒன்றுமில்லை. நீங்கள் வெட்டிச் சுருக்குகிறீர்கள் என்றோ பின்னூட்டத்தை திருத்துகிறீர்கள் என்றோ என்றும் குற்றம் சாட்டியதில்லை. ஆனால் இந்த இடுகையைப் பொருத்தவரை உடனுக்குடன் பின்னூட்டத்தை வெளியிட்டு வந்த நீங்கள் திடீரென மூன்று நாட்களாகியும் வெளிவராமல் இருந்ததால் வெளி வரச் செய்வதற்கு என்ன செய்யலாம் எனும் யோசனையில் தான் அவ்வாறு எழுதியிருந்தேன். அது சரியாக வேலையும் செய்தது. மெய்யாகவே, மெய்யாகவே இதில் உங்களுக்கு உள்நோக்கம் எதுவும் இல்லை என்றால்; நான் ஆட்சேபிக்கவும் எதுவும் இல்லை.

    விளக்கம் 2 குறித்து: இதில் நான் குறிப்பிடும் ஒரு அம்சத்தை நீங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள தொடர்ந்து மறுத்து வருகிறீர்கள். பொதுவாக ஒருவரின் நேர்மையை மதிப்பிடுவதற்கு எழுத்து மட்டும் போதாது, அவரின் நடைமுறையும் தேவை என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. இதை ஏற்கனவே நான் தெரிவித்தும் இருக்கிறேன். ஆனால் குறிப்பாக நம்மிருவரிடையே (ஒருவரின் நடைமுறைகள் குறித்து மற்றொருவர்) நடைமுறைகள் குறித்து அறியும் வாய்ப்பு இல்லை. எனவே தான் வாய்ப்பில்லாத நடைமுறையை தவிர்த்து விட்டு வாய்ப்பு இருக்கிற எழுத்தை எடுத்துக் கொள்கிறேன். அதைத்தான் எடுத்துக் கொள்ள முடியும், வேறு வழியில்லை. இதை நீங்கள் பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் கூறியது கூறலை தொடர்ந்து கொண்டிருந்தால் அதில் என்ன நேர்மை இருந்துவிட முடியும்?

    உங்கள் எழுத்தில் வெறும் தாமதத்தையோ கருத்துச் சிதைவையோ மட்டும் நான் சுட்டவில்லை. தெளிவாக நிருவி இருக்கிறேன். இந்த உலகில் சோதித்தறிய முடியும் படியான, மனிதர்கள் கோரிக்கையை இறைவன் நிறைவேற்றியதற்கான சான்று ஏதாவது கூற முடியுமா? இந்தக் கேள்விக்கு முதலில் தவறான பதிலைக் கூறிய நீங்கள் அது எவ்வாறு தவறான பதிலாகவும் கேள்வியோடு தொடர்பற்றும் இருக்கிறது என விளக்கிய பிறகு பதில் கூறவே இல்லை. பலமுறை திரும்பத் திரும்பக் கேட்டு பதில் கூறமல் இருக்க முடியாது எனும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திய பிறகு முதலில் என்ன பதில் கூறினீர்களோ அதையே திரும்பக் கூறுகிறீர்கள். இது தாமதமோ கருத்துச் சிதைவோ அல்ல கூறுவதற்கு உங்களிடம் பதில் இல்லை. அதை ஒப்புக் கொள்ளும் நேர்மையும் இல்லை. அதனால் தான் இன்றுவரை பதில் கூறாமல் இருக்கிறீர்கள். ஆனால் இப்போதோ பதில் கூறிவிட்டதாகவும் அந்தப் பதில் எனக்கு திருப்தியை தராதது போலும் பசப்பியிருக்கிறீர்கள். இது என்ன விதத்தில் நேர்மை? பதில் கூறுங்கள்.

    விளக்கம் 3 குறித்து: இது குறித்து ஏற்கனவே நான் விள்க்கி இருக்கிறேன் அதன் பிற்கும் நீங்கள் இப்படி கூறியிருப்பது உங்கள் நேர்மையின்மையைத் தான் வெளிப்படுத்துகிறது. \\\நான் கடவுள் உண்டு என்பதை இஸ்லாதை மேற்கோள் காட்டி சொல்கிறேன். ஆனால் நீங்களோ கடவுள் மறுப்பை இஸ்லாத்தை எதிர் கேள்விகள் கேட்டே நிறுவ முயல்கிறீர்கள்/// இது பச்சைப் பொய். முதலாவது எந்த அடிப்படையில் இருந்து நீங்கள் கடவுள் ஏற்பை வைக்கிறீர்களோ அந்த அடைப்படையில் இருந்தே கடவுள் மறுப்பை கூற முடியும். இரண்டாவதாக, என்னுடைய கடவுள் மறுப்புக்கான காரணங்களை இஸ்லாமியக் கலப்பின்றி தெளிவாக உங்களிடம் முன்வைத்திருக்கிறேன். அவையாவன;

    தொடரும் .. .. ..

    ReplyDelete
  37. நண்பர் குலாம்,

    விளக்கம் 1 குறித்து: மூன்று நாட்கள் பின்னூட்டத்தை தடுத்து வைத்திருந்தது குறித்து பெரிதாக எடுத்துக் கொள்ள ஒன்றுமில்லை. நீங்கள் வெட்டிச் சுருக்குகிறீர்கள் என்றோ பின்னூட்டத்தை திருத்துகிறீர்கள் என்றோ என்றும் குற்றம் சாட்டியதில்லை. ஆனால் இந்த இடுகையைப் பொருத்தவரை உடனுக்குடன் பின்னூட்டத்தை வெளியிட்டு வந்த நீங்கள் திடீரென மூன்று நாட்களாகியும் வெளிவராமல் இருந்ததால் வெளி வரச் செய்வதற்கு என்ன செய்யலாம் எனும் யோசனையில் தான் அவ்வாறு எழுதியிருந்தேன். அது சரியாக வேலையும் செய்தது. மெய்யாகவே, மெய்யாகவே இதில் உங்களுக்கு உள்நோக்கம் எதுவும் இல்லை என்றால்; நான் ஆட்சேபிக்கவும் எதுவும் இல்லை.

    விளக்கம் 2 குறித்து: இதில் நான் குறிப்பிடும் ஒரு அம்சத்தை நீங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள தொடர்ந்து மறுத்து வருகிறீர்கள். பொதுவாக ஒருவரின் நேர்மையை மதிப்பிடுவதற்கு எழுத்து மட்டும் போதாது, அவரின் நடைமுறையும் தேவை என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. இதை ஏற்கனவே நான் தெரிவித்தும் இருக்கிறேன். ஆனால் குறிப்பாக நம்மிருவரிடையே (ஒருவரின் நடைமுறைகள் குறித்து மற்றொருவர்) நடைமுறைகள் குறித்து அறியும் வாய்ப்பு இல்லை. எனவே தான் வாய்ப்பில்லாத நடைமுறையை தவிர்த்து விட்டு வாய்ப்பு இருக்கிற எழுத்தை எடுத்துக் கொள்கிறேன். அதைத்தான் எடுத்துக் கொள்ள முடியும், வேறு வழியில்லை. இதை நீங்கள் பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் கூறியது கூறலை தொடர்ந்து கொண்டிருந்தால் அதில் என்ன நேர்மை இருந்துவிட முடியும்?

    உங்கள் எழுத்தில் வெறும் தாமதத்தையோ கருத்துச் சிதைவையோ மட்டும் நான் சுட்டவில்லை. தெளிவாக நிருவி இருக்கிறேன். இந்த உலகில் சோதித்தறிய முடியும் படியான, மனிதர்கள் கோரிக்கையை இறைவன் நிறைவேற்றியதற்கான சான்று ஏதாவது கூற முடியுமா? இந்தக் கேள்விக்கு முதலில் தவறான பதிலைக் கூறிய நீங்கள் அது எவ்வாறு தவறான பதிலாகவும் கேள்வியோடு தொடர்பற்றும் இருக்கிறது என விளக்கிய பிறகு பதில் கூறவே இல்லை. பலமுறை திரும்பத் திரும்பக் கேட்டு பதில் கூறமல் இருக்க முடியாது எனும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திய பிறகு முதலில் என்ன பதில் கூறினீர்களோ அதையே திரும்பக் கூறுகிறீர்கள். இது தாமதமோ கருத்துச் சிதைவோ அல்ல கூறுவதற்கு உங்களிடம் பதில் இல்லை. அதை ஒப்புக் கொள்ளும் நேர்மையும் இல்லை. அதனால் தான் இன்றுவரை பதில் கூறாமல் இருக்கிறீர்கள். ஆனால் இப்போதோ பதில் கூறிவிட்டதாகவும் அந்தப் பதில் எனக்கு திருப்தியை தராதது போலும் பசப்பியிருக்கிறீர்கள். இது என்ன விதத்தில் நேர்மை? பதில் கூறுங்கள்.

    விளக்கம் 3 குறித்து: இது குறித்து ஏற்கனவே நான் விள்க்கி இருக்கிறேன் அதன் பிற்கும் நீங்கள் இப்படி கூறியிருப்பது உங்கள் நேர்மையின்மையைத் தான் வெளிப்படுத்துகிறது. \\\நான் கடவுள் உண்டு என்பதை இஸ்லாதை மேற்கோள் காட்டி சொல்கிறேன். ஆனால் நீங்களோ கடவுள் மறுப்பை இஸ்லாத்தை எதிர் கேள்விகள் கேட்டே நிறுவ முயல்கிறீர்கள்/// இது பச்சைப் பொய். முதலாவது எந்த அடிப்படையில் இருந்து நீங்கள் கடவுள் ஏற்பை வைக்கிறீர்களோ அந்த அடைப்படையில் இருந்தே கடவுள் மறுப்பை கூற முடியும். இரண்டாவதாக, என்னுடைய கடவுள் மறுப்புக்கான காரணங்களை இஸ்லாமியக் கலப்பின்றி தெளிவாக உங்களிடம் முன்வைத்திருக்கிறேன். அவையாவன;

    தொடரும்.. .. ..

    ReplyDelete
  38. அறிவியல் ரீதியான காரணங்கள்:
    1. எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் என்று எதுவுமில்லை.
    2. தொடக்கமோ முடிவோ இல்லாத பொருள் என்று எதுவும் இல்லை.
    3. எந்த ஒரு பொருளையும் சாராமலும், எந்த ஒன்றிலிருந்து சார்பு பெறப்படாமலும் எதுவுமில்லை.

    வரலாற்றுரீதியான காரணங்கள்:
    1. ஆதி மனிதர்கள் வாழ்வில் கடவுள் எனும் நிலை இருந்ததற்கான எந்த சான்றும் கண்டறியப் படவில்லை.
    2. பூமியில் மனிதன் எனும் உயிரினம் தவிர ஏனைய உயிரினங்களுக்கு கடவுள் எனும் உணர்வு இல்லை.

    சமூக ரீதியான காரணங்கள்:
    1. கடவுளின் தகுதிகள் கூறும் படியான ஆற்றல் இருந்திருந்தால் மனித வாழ்வில் அது செலுத்தியிருக்கும் தாக்கம் மக்களிடம் கண்டறியப்படவில்லை. தெளிவாகச் சொன்னால் மனித வாழ்வின் அறவாழ்வு விழுமியங்கள் அழிந்திருக்கின்றன.
    2. கடவுளிடமிருந்து கிடைத்தது என்று சொல்லத்தக்க, சோதித்தறியத்தக்க எதுவுமே கண்டறியப்படவில்லை.
    இவை இஸ்லாத்தை எதிர்க் கேள்வி கேட்டு நிருவும் முயற்சியா இது. இது ஏற்கனவே உங்களுக்கு விளக்கப்பட்டிருக்கிறது எனும் அடிப்படையில் இதற்குப் பிறகும் உங்கள் கருத்தை நீங்கள் திரும்பப் பெறாவிட்டால் நீங்கள் நேர்மையற்றவர் என்பது மீண்டும் இங்கே நிரூபணமாகும்.

    \\\நாத்திகத்தின் அடிப்படை கொள்கை என்ன என்பதை கூட உங்களைப்போன்ற நாத்திகர்களால் இன்னும் தெளிவாக முன்மொழியப்படுவதில்லை/// இதுவும் பச்சைப் பொய்.
    கடவுள் எதிர்ப்பை தாண்டி நாத்திக அடிப்படை கொள்கை என்ன? என்பது 23 செப்டம்பர் 2011 ல் நீங்கள் என்னிடம் கேட்ட கேள்வி. இதற்கு நான் 24 செப்டம்பர் 2011 அளித்த பதில்
    ஒன்றுமில்லை. நாத்திகம் என்பது ஆத்திகத்திற்கு எதிர்ப்பதம். கடவுள் மறுப்பு மட்டுமே அதன் சாரம். நாத்திகம் முழுமையான ஒன்றல்ல. நாத்திகர்களுக்கான சமூகப் பார்வை ஒரே போல் இருப்பதில்லை. சமயத்தில் சமூகப் பார்வையே இருப்பதில்லை. பெரியார் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பார்ப்பனிய எதிர்ப்பை சமூகப் பார்வையாக கொண்டிருந்தார். கம்யூனிஸ்டுகளைப் பொருத்தவரை நாத்திகம் ஒரு விசயமே அல்ல. சமூக ஏற்றத்தாழ்வுகள் நீடித்திருப்பதுவரை மதங்களும் நீடித்திருக்கும். சமூக ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்படும் போது கடவுள் நம்பிக்கையும் புண்ணின் மீதிருக்கும் காய்ந்த பொருக்கைப் போல் உதிர்ந்துவிடும். கம்யூனிஸ்டுகளின் சமூகப் பார்வை என்ன? என்று கேட்கமாட்டீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

    என்பது. ஆகவே நீங்கள் அடிப்படையில்லாமல் மேம்போக்காக எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். என்ன செய்யப் போகிறீர்கள்? தவறாக எழுதிவிட்டேன் என்று உங்கள் கருத்தை பின்வாங்கப் போகிறீர்களா? அல்லது உங்களின் நேர்மையின்மையை ஒப்புக் கொள்ளப் போகிறீர்களா?

    ReplyDelete
  39. \\\உங்கள் தளங்களுக்கு வர வாய்ப்பில்லை. ஆக இங்கேயே தொடருங்கள் என நான் கூறி ஆண்டுகள் இரண்டு ஆகியும் அந்த ஆக்கத்தின் கருத்தை இங்கே பதிந்தது என்னிடம் மறுப்பை கேட்டிருக்கலாமே...? அஃதில்லாமல் திடிரென ஒரு மாதத்திற்கு சமீபமாக வந்து நாத்திகம் குறித்து பேச வரவில்லை. அந்த ஆக்கத்திற்கு மறுப்பு எங்கே? என கேட்டால்/// இது அடுத்த பொய். இப்ராஹிம் என்பவர் என்னுடைய மேற்கோளைக் காட்டீந்த உளரலுக்கு பதிலளியுங்கள் என்று உங்களிடம் கூறுகிறார். நீங்கள் அதற்கு பதில் கூறிவிட்டேன் என்று அவருக்கு பதிலளித்துள்ளீர்கள். இந்த நிலையில் தான் நான் நீங்கள் மடைமாற்றியிருந்தீர்களே தவிர பதில் கூறவில்லை. பதில் கூறியிருந்ததாக நீங்கள் கருதினால் எடுத்துக் காட்டுங்கள் என்று கேட்டிருந்தேன். ஆனால் நீங்களோ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆக்கத்திற்கு மறுப்பு எங்கே என்று நான் கேட்டதாக கூறுகிறீர்கள். இதை என்னவென்பது?

    \\\ஆக உங்களோடு கடவுள் குறித்து விவாதிப்பது எனக்கு ஒருவித சடைவை தான் தருகிறது. இனியும் மேலும் கடவுள் / இஸ்லாம் குறித்து தொடர எனக்கு விருப்பமில்லை/// இப்படி நீங்கள் ஒரு முடிவுக்கு வந்தால் அதற்கு நான் ஒன்றும் செய்யவியலாது. ஆனால் அதற்கு என்னை காரணமாக காட்டுவதை ஏற்க முடியாது. நான் மீண்டும் மீண்டும் இதைத்தான் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நீங்கள் எந்த அடிப்படையில் இருந்து எழுதுகிறீர்களோ அந்த அடிப்படையில் இருந்து நான் நானும் எழுத முடியும். நீங்கள் பொதுவில் நாத்திகம் குறித்து எழுதுவதாக நினைத்துக் கொண்டிருக்கலாம் ஆனால் அதன் உள்ளடக்கம் இஸ்லாமாக இருக்கிறது என்பதை பலமுறை உங்களுக்கு விளக்கியிருக்கிறேன். அதன் பிறகும் தான் இப்படி கூறியிருக்கிறீர்கள். என்ன சொல்வது. வேறென்ன சொல்வது துணிவிருந்தால் நான் எந்த இடத்தில் தேவையில்லாமல் இஸ்லாத்தை இழுத்து பதிலளித்தேன் என்பதை சுட்டிக் காட்டுங்கள். உங்கள் நண்பர்கள் உங்களிடம் என்னைப் பற்றி ஆயிரம் கூறியிருக்கலாம். அது பற்றி எனக்கு அக்கரையில்லை. அது குறித்து எனக்கு நீங்கள் அறிவித்தால் அது சரியா தவறா என்பதை மட்டுமே என்னால் நோக்கவியலும். அந்த அடிப்படையிலும் கேட்கிறேன், துணிவிருந்தால் நான் எந்த இடத்தில் தேவையில்லாமல் இஸ்லாத்தை இழுத்து பதிலளித்தேன் என்பதை சுட்டிக் காட்டுங்கள். சுட்டிக்காட்ட முடியவிட்டால் நீங்கள் நேர்மையற்றவர் என ஒப்புக் கொள்ள வேண்டியதிருக்கும் சம்மதமா?

    நண்பர் குலாம், நேரடி விவாதம் குறித்து பலமுறை நான் விளக்கி விட்டேன். ஏன் நான் நேரடி விவாதம் செய்ய விரும்புவதில்லை என்பதை விளக்கி ஒரு பதிவே போட்டிருக்கிறேன். நான் எழுத்து விவாதத்திற்கு மட்டுமே தயாராக இருக்கிறேன். அது எப்போதென்றாலும், யாருடன் என்றாலும், எந்தத் தலைப்பில் என்றாலும் எனக்கு சம்மதமே.

    இஸ்லாம் குறித்து மட்டும் தான் பேசுவேன் என்று நீங்கள் உட்பட யாரிடமும் நான் கூறியதில்லை. என்னைப் பொருத்தவரை என்னிடம் கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் உரிய முறையில் பதிலளித்திருக்கிறேன். அதேநேரம் என்னுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ஓடிப் போனவர்களும், திசை திருப்பியவர்களும், வறட்டுத்தனம் செய்தவர்களுமே இருக்கிறார்கள் நீங்கள் உட்பட. இஸ்லாம் என்றாலும் கம்யூனிசம் என்றலும் அல்லது இவையல்லாத வேறு எதுவென்றாலும் யாரும் என்னுடன் விவாதிக்கலாம். ஏனென்றால் என்னிடம் இருப்பது தேடல். இஸ்லாம் குறித்து என்னுடன் விவாதிக்க விருப்பமில்லை என்றால் அது உங்கள் விருப்பம், நான் கூறுவதற்கு அதில் ஒன்றுமில்லை. ஆனால் அதற்கு என்னை காரணமாக் கூறுவீர்கள் என்றால் அதை ஆதாரபூர்வமாக சுட்டிக் காட்டுங்கள். பரிசீலிக்கிறேன். போகிறபோக்கில் தூற்றிவிட்டுப் போனால் மன்னிக்கவும் அதை என்னால் சாதாரணமாக் எடுத்துக் கொள்ள முடியாது.

    நான் நேர்மையானவன். என் நேர்மையில் எவரும் கல்லெறிந்து விட முடியாது. அதேநேரம் என்னுடன் தொடர்பில் இருப்பவர்களின் நேர்மையின்மையை என்னால் சகித்துக் கொண்டிருக்கவும் முடியாது. அதனால் தான் நண்பர் குலாம், உங்களின் நேர்மையின்மையை உங்களின் முகத்துக்கு நேராக காட்டிக் கொண்டிருக்கிறேன். என் தளத்தில் மட்டுமல்ல, எவர் தளம் என்றாலும் இதுவே என் நிலைப்பாடு.


    கடந்த என்னுடைய பின்னூட்டத்தின் இறுதியில் இப்படி கேட்டிருந்தேன், \\\அந்தக் கேள்விக்கு நீங்கள் கூறிய பதிலை இங்கே பதிவு செய்து அது எப்படி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாக இருக்கிறது என்பதை விளக்குங்கள். அப்படி நீங்கள் செய்யாதபட்சத்தில் நீங்கள் நேர்மையற்றவர் என்று நீங்களே ஒப்புக் கொண்டீர்கள் என்பது பொருள்/// நன்றி நண்பர் குலாம். உங்களை நீங்களே நேர்மையற்றவர் என ஒப்புக் கொண்டதற்காக.

    ReplyDelete
  40. நண்பர் குலாம்,

    உங்கள் பதிவு வணக்கம், பிறந்த நாள் கொண்டாட்டங்கள் எனும் இரண்டை கொண்டிருக்கிறது. இதில் வணக்கம் என்பதை மட்டும் தற்போது எடுத்துக் கொள்வோம். இதில் ஒரு முடிவுக்கு வந்த பிறகு பிறந்தநாள் கொண்டாட்டங்களை எடுத்துக் கொள்ளலாம்.

    நாத்திக முரண்பாடு(!) குறித்தான அந்தப் பதிவின் பின்னூட்டத்தில் இரசித் கான் என்பவருக்கு நீங்கள் கொடுத்த பதிலிலிருந்து தொடங்குவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன். நாத்திகம் குறித்த பதிலில் இஸ்லாம் குறித்து ஏன் பேசுகிறீர்கள் என்பது தான் நீங்கள் அவருக்கு கொடுத்த பதில். இதே பதிலை என்னிடமும் சிலமுறை கூறி அதற்கு பதிலும் அளித்திருக்கிறேன். இதிலிருந்தே தொடங்கலாம். ஒருவரது நிலைப்பாட்டின் அடிப்படையை கண்டு கொள்ளாமல் விட்டால் தவறான முடிவுகளுக்கே சென்று சேரக் கூடும். எடுத்துக்காட்டாக அமெரிக்க எதிர்ப்பை எடுத்துக் கொள்ளலாம். இஸ்லாமியவாதிகளும் அமெரிக்காவை எதிர்க்கிறார்கள், கம்யூனிஸ்டுகளும் அமெரிக்காவை எதிர்க்கிறார்கள். இரண்டும் ஒன்று என்பதாக எடுத்துக் கொள்ள முடியுமா? இஸ்லாமிய அரசுகளை அமெரிக்க கருவறுத்து தன் கைப்பாவையாய் வைத்து ஆட்டுவித்து வருகிறது, முஸ்லீம்களின் எதிரியான இஸ்ரேலை தாங்கிப் பிடித்து வளர்த்து விடுகிறது போன்ற அடிப்படையிலிருந்தே முஸ்லீம்களின் அமெரிக்க எதிர்ப்பு வருகிறது. ஆனால் இதே அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகெங்கும் கோடிக்கணக்கான மக்களை தங்களின் லாபத்திற்காக வதைத்து வருவது குறித்து முஸ்லீம்களுக்கு ஏதாவது கவலை உண்டா? இந்தோனேசியாவில் லட்சக் கணக்கான கம்யூனிஸ்டுகளை கொன்று குவித்தது குறித்து முஸ்லீம்களுக்கு கருத்து ஏதும் உண்டா? லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்கா செய்த அரசியல் சதிகள் குறித்து.. ..? அவ்வளவு ஏன் இவர்கள் ஆராதிக்கும் சௌதி அரேபியாவில் 70களின் தொடக்கத்தில் அமெரிக்காவின் விருப்பத்திற்காக நஜ்ரான் பகுதியில் கொல்லப்பட்ட நூற்றுக்கும் அதிகமான கம்யூனிஸ்டுகள் குறித்து முஸ்லீம்கள் எதுவும் பேசுவதில்லை. எனவே அமெரிக்க எதிர்ப்பு எனும் ஒன்றை வைத்துக் கொண்டு முஸ்லீம்களும் கம்யூனிஸ்டுகளும் ஒரே நிலையில் இருப்பதாக கூறமுடியாதல்லவா? முஸ்லீம்களின் அமஎரிக்க எதிர்ப்பு மேம்போக்கானது, கம்யூனிஸ்டுகளின் அமெரிக்க எதிர்ப்பு ஆழமானது எனும் வேறுபாட்டை புரிந்து கொள்ளாமல் கம்யூனிஸ்டுகளின் அமெரிக்க எதிர்ப்பையும், முஸ்லீம்களின் அமெரிக்க எதிர்ப்பையும் ஒன்றாக மதிப்பிட்டால் அது பெரும் பிழையாகவே இருக்கும்.

    அதே போலத்தான் நாத்திகத்தின் முரண்பாடு என இவர் கூறுவது எந்த அடிப்படையில் இருந்து எழுந்து வருகிறது என்பதை அறியாமல் நாத்திகத்தின் முரண்பாட்டை அலச முடியாது. வணக்கம் சொல்வது பகுத்தறிவுக்கு முரணானது என நண்பர் குலாம் கூறுவதற்கான காரணம், நாத்திகர்கள் சர்வ வல்லமை கொண்டவராக ஆத்திகர்களால் கருதப்படும் கடவுளையே வணங்க மறுக்கிறார்கள். அப்படியென்றால் சக மனிதனையே வணங்கும் வணக்கம் எனும் முகமன் எப்படி பகுத்தறிவுக்கு உவப்பானதாகும்? இதுதான் முரண்பாட்டின் சாரம். ஆனால் இப்படி கேள்வி எழுப்புபவர்கள் யார்? தங்களை இந்துக்கள் என அழைத்துக் கொள்ளும் பார்ப்பனிய மதத்தைச் சேர்ந்தவர்கள் இப்படி கேள்வி எழுப்புவதில்லை. கிருஸ்தவர்களும் இப்படி கேள்வி எழுப்புவதில்லை. முஸ்லீம்கள் மட்டுமே இப்படி கேள்வி எழுப்புகிறார்கள். ஏனென்றால் வணக்கம் எனும் சொல்லை வேறு எந்தக் கடவுளோடும் அல்லது வேறு எதனோடும் தொடர்புபடுத்தப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை. அவர்கள் மதமும் அதை அனுமதிப்பதில்லை. மட்டுமல்லாது வணக்கம் எனும் சொல்லுக்கு மாற்றாக அவர் முன்வைப்பது இஸ்லாமிய முகமனைத் தான். எனவே நாத்திகத்தின் முரண்பாடு என இங்கு குறிப்பிடப்படுவது இஸ்லாமிய அடிப்படையிலிருந்து நாத்திகத்தை நோக்கி எழுப்பப்படும் ஒன்று.


    வணக்கம் எனும் சொல்லின் பொருள் கடவுளை வணங்குவது என்பது தானா? நிச்சயமாக இல்லை. வளைதல், இணங்குதல் என்பது தான் வணக்கம் எனும் சொல்லின் பொருள். திருக்குறளின் 827வது குறள் இதை தெளிவாக விளக்கும்.

    ReplyDelete
  41. சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் 
    தீங்கு குறித்தமை யான்.
    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வணக்கம் கூறும் முறை இல்லை. அப்படியென்றால் இந்தக் குறளின் பொருள் என்ன? வில் வளைவது எப்படி தீங்கில் முடியுமோ அது போல பகைவர்கள் இணக்கமாக பேசுவதை ஏற்பதும் தீங்கில் தான் முடியும் என்பது தான் அதன் பொருள். வணக்கம் எனும் சொல்லின் பொருளை உணர்த்துவதற்கு குறளைத் தேடியெல்லாம் போக வேண்டியதில்லை. நடைமுறையிலிருந்தே பார்க்கலாம். வணங்காமுடி என்றொரு சொல்லைச் செவியுற்றிருக்கலாம். இதன் பொருள் என்ன? என்னுடைய முடி எந்தக் கடவுளையும் வணங்காத நாத்திக முடி என்பதா இதன் பொருள்? அல்ல, சீப்புக்கு வளையாத முடி என்பது தான் பொருள். இந்தச் சொல்லையே ஆகு பெயராக்கி சில மனிதர்களைச் சுட்டுவதற்கும் வணங்காமுடி எனப் பயன்படுத்துவார்கள். இதன் பொருள் குறிப்பிட்ட அந்த ஒருவர் எந்தக் கடவுளையும் வணங்காத நாத்திகர் என்பதா? எந்த மனிதரின் அறிவுரைக்கும் இணங்காமல் தன் முடிவுகளை செயல்படுத்தக் கூடியவர் என்பதா? சிந்தித்துப் பார்ப்பவர்களுக்கு உண்மையும் யதார்த்தமும் புரியும்.

    சரி, ஒருவருக்கு ஒருவர் முகமனாக வணக்கம் கூறிக் கொள்வதன் பொருள் என்ன? உனக்கு நான் பகைவனல்ல நண்பன் தான் என்பதை வெளிக்காட்டுவதே வணக்கம் கூறிக் கொள்வதன் பொருள். இன்றும் கூட வணக்கம் கூறாமல் யாரும் செல்லும் போது “நான் என்ன இவன் கூட சண்டையா போட்டேன். ஒரு வணக்கம் கூட சொல்லாமல் போகிறானே” என்று வெள்ளந்தியாக பேசுவதைக் கேட்டிருக்கலாம். இதற்கு மாறாக வணக்கம் என்று கூறிவிட்டால் “சுடலை மாடனுக்கு விடலை போடுவது போல் 41 தேங்காயும் குறும்பாட்டுக் கறியும் கொண்டா” என்று யாரும் கேட்பதில்லை. வணக்கம் எனும் முகமனின் பொருள் யதார்த்தத்தில் இப்படித்தான் இருக்கிறது.

    இவைகளை மீறி வணக்கம் எனும் சொல்லுக்கு வரலாற்று ரீதியாக கம்பீரமான ஒரு பொருளும் இருக்கிறது. திராவிட இயக்கம் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக போராடிய வரலாறு அது. திராவிட இயக்கத்திற்கு முன்பு வணக்கம் சொல்வது நடைமுறையில் இல்லை. நமஸ்காரம், கும்புடுறேன் சாமி என்பன தான். ஆதிக்க சாதியைச் சார்ந்த இருவர் சந்தித்துக் கொண்டால் நமஸ்காரம் என்பர்கள். அந்த மட்டத்திலும் உயர்வு தாழ்வினால் ஒருவர் நமஸ்காரம் என்றால் மற்றொருவர் ம்ம் என்று உறுமி விட்டுப் போவார். ஒடுக்கப்பட்ட மக்களோ துண்டை அவிழ்த்து இடுப்பில் கட்டிக் கொண்டு ஒதுங்கி நின்று கும்புடுறேன் சாமி என்பர், பார்ப்பனியப் பன்னாடைகளோ கேவலமாய் சைகை காட்டிவிட்டுச் செல்லும். இந்தக் கொடுமைகளை மறுத்துத் தான் திராவிட இயக்கம் தோளில் துண்டை நீளமாக போட்டுக் கொள்ளும் நடைமுறையையும், உனக்கும் எனக்கும் உயர்வு தாழ்வு ஏதுமில்லை நாம் நண்பர்களே என்பதை உணர்த்தும் வணக்கம் எனும் சொல்லையும் பிரபலப்படுத்தினார்கள். இன்றும் தோளில் துண்டு போடுவதை அநாகரிகமாக விமர்சிக்கும் அம்பிகளைப் போல் வணக்கம் எனும் சொல்லை இழிவு படுத்த சில தும்பிகள் ரெக்கையை படபடக்கின்றன.

    ReplyDelete
  42. வணக்கம் எனும் சொல்லுக்கு வணக்குதல் என்று பொதுவில் அறியப்பட்டிருக்கும் பொருள் எவ்வாறு வந்தது? அது இயல்பான பொருளா? ஏற்றப்பட்ட பொருளா? இணங்குதல் எனும் பொருளிலிருந்து ஏற்றப்பட்ட பொருளாகத்தான் வணங்குதல் எனும் பொருள் வந்திருக்கிறது. அதாவது, கடவுளுக்கு உருவகிக்கப்படும் தகுதிகள் அனைத்தையும் இணங்கி ஏற்றுக் கொள்கிறேன் எனும் வழியில் தான் வணங்குதல் எனும் பொருளும் ஏற்றப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று இயல்பான பொருளே தெரியாத அளவுக்கு ஏற்றப்பட்ட பொருள் முதன்மை பெற்றிருக்கிறது.

    இன்று பொதுவாக சௌக்கியமா எனும் விசாரிப்பு தான் முகமனாக இருக்கிறது. வணக்கம் என்பது பரவலாக எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுவதில்லை. மட்டுமல்லாமல் கூறப்பட்டே ஆகவேண்டும் எனும் வற்புறுத்தலும் இல்லை. விருப்பம் இருந்தால் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் நண்பர் குலாம், இதற்கு மாற்றாக நீங்கள் கொண்டிருக்கிறீர்களே ஒரு வாக்கியம், அது ஆட்சேபகரமானது. சாந்தியும் சமாதானமும் நிலவட்டும் என அனைவரும் கூறவேண்டும் என்றொரு வரையறுப்பு இருக்கிறது. யாரால் நாங்கள் சாந்தியையும் சமாதானத்தையும் இழந்திருக்கிறோமோ அவர்களைப் பார்த்து சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என எப்படிக் கூறமுடியும்?

    வணக்கம் எனும் சொல் குறித்து எதையுமே அறிந்து கொள்ளாமல் மண்டபத்தில் ‘யாரோ’ எழுதி வைத்ததைப் படித்துவிட்டு வந்து கட்டுரை வரைந்திருக்கிறீர்கள். எதையும் மேலோட்டமாக பார்த்து எழுதுவதை விட ஆய்ந்து முழுமையாக உள்வாங்கி எழுதுவதே சிறந்தது. இதற்குப் பிறகும் இதில் முரண்பாடு இருப்பதாக நீங்கள் கருதினால் பதிவு செய்யுங்கள் தொடர்வோம்.

    ReplyDelete
  43. அன்பு சகோ செங்கொடி.,

    இஸ்லாம் குறித்து இனி விவாதிக்க விருப்பமில்லையென்ற போதிலும் மீண்டும் மீண்டும் அதே காப்பி பேஸ்ட் கேள்விகளுடன் இங்கே முறையிட்டதால் இறுதியாக இஸ்லாம் எனும் வட்டத்திற்கு சென்று வர முயற்சிக்கிறேன்.

    கடவுளை ஏற்க என்னிடம் ஆதாரக்குறீயிடுகள் கேட்டதற்கு குர்-ஆன் கடவுள் தந்தது அதன் மூலம் சில வரலாற்று, நிகழ்கால, எதிர்க்கால நிகழ்வுகளை சுட்டிக்காட்டி கடவுளை மெய்பிக்கும் சாத்தியக்கூறுகளை முன் வைத்தேன். எனினும் அவைகள் ஏற்கப்படாதனென கூறினீர்கள். நான் முஸ்லிம் எனது ஆரம்ப ஆதார குறீயீடுகள் இஸ்லாத்திலிருந்து தான் மேற்கோள் காட்டவேண்டும். அடுத்து சில நிருபிக்கப்பட்ட சில விஞ்ஞான உண்மைகள் குர்-ஆனோடு பொருந்தி வருதற்கும் சுமார் 20 தலைப்பில் கீழ் ஆய்வாளர்களின் காணொளியோடு மேற்கோள் காட்டினேன். எனினும் அவைகள் சவுதி அரசால் மேற்கோள்ளப்பட்டது என ஒற்றை வரி பதிலால் முடித்துக்கொண்டீர்கள். அந்த தலைப்பீன் கீழ் உள்ள ஆக்கங்களை படித்தால் அவை கடவுளை எப்படி இங்காண செய்யும் என்பதையும் புரிந்துக்கொள்ளலாம். அல்லது அதிலிருந்து எதிர்க்கேள்விகள் கேட்கலாம் இரண்டையும் செய்யவில்லை நீங்கள்.

    இப்போது மீண்டும் அதே பல்லவியை தான் பாடிக்கொண்டிருக்கிறீர்கள். அதை தொடந்து முரண்பாட்டின் அடிப்படையில் நான் உடன்பட்டு ஒரு வாதத்தையும் வைத்தேன். அதாவது கடவுள் ஏற்பு என்னுடைய நம்பிக்கையென்றே வைத்துக்கொள்வோம். அதற்கு எந்த வித ஆதாரக்குறியீடுகளும் வைத்திருக்கவில்லை. ஆனால் கடவுள் மறுப்பென்பது தெளிவான அடிப்படை ஆதாரங்களைக்கொண்ட கொள்கையாக நீங்கள் சொல்கிறீர்கள். ஆக கடவுளை மறுக்க எங்கே விஞ்ஞான நிருபணங்கள் என நான் கேட்டதற்கு வரலாற்று ரீதியாக, தொல்லியல் ரீதியாக சமூக ரீதியாக ஆதாரங்கள் இருப்பதாக சில காரணங்களை கூறினீர்கள். அதையே இங்கேயும் இப்படி காப்பி செய்து இருக்கீறீர்கள்.

    // அறிவியல் ரீதியான காரணங்கள்:
    1. எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் என்று எதுவுமில்லை.
    2. தொடக்கமோ முடிவோ இல்லாத பொருள் என்று எதுவும் இல்லை.
    3. எந்த ஒரு பொருளையும் சாராமலும், எந்த ஒன்றிலிருந்து சார்பு பெறப்படாமலும் எதுவுமில்லை.

    வரலாற்றுரீதியான காரணங்கள்:
    1. ஆதி மனிதர்கள் வாழ்வில் கடவுள் எனும் நிலை இருந்ததற்கான எந்த சான்றும் கண்டறியப் படவில்லை.
    2. பூமியில் மனிதன் எனும் உயிரினம் தவிர ஏனைய உயிரினங்களுக்கு கடவுள் எனும் உணர்வு இல்லை.

    சமூக ரீதியான காரணங்கள்:
    1. கடவுளின் தகுதிகள் கூறும் படியான ஆற்றல் இருந்திருந்தால் மனித வாழ்வில் அது செலுத்தியிருக்கும் தாக்கம் மக்களிடம் கண்டறியப்படவில்லை. தெளிவாகச் சொன்னால் மனித வாழ்வின் அறவாழ்வு விழுமியங்கள் அழிந்திருக்கின்றன. //

    இப்படி

    இதில் நிருபிக்கப்பட்ட எந்த ஒரு ஆதாரப்பூர்வமான ஒரு சான்றையாவது இணைத்திருக்கீறீர்களா..? சகோ
    ஒன்றை மெய்பிக்க என்னிடம் ஆதாரக்குறியீடுகள் கேட்கும் நீங்கள் அதனை பொய்ப்பிப்பதாக இருந்தாலும் அதற்கான ஆதாரக்குறியீடுகள் தந்திருக்க வேண்டுமல்லவா? இதுவரை நீங்கள் அறிந்த - அறிவிக்கப்பட்ட செவி வழி செய்தியை மட்டும் தானே பரத்திக்கொண்டீருக்கிறீர்கள். இதோ அறிவியல் உண்மைப்படுத்திய ஆதாரம் என ஒன்றையும் இப்பொழுதுவரை கூட நிறுவவில்லையே.,

    ReplyDelete
  44. சரி போகட்டும்., கடவுளின் செய்கைகளாக கடவுளே பிரதாபித்து சில செய்திகளை பட்டியலிட்டு அவை கடவுளல்லாத பிற இன, சமூக தனி அல்லது குழுக்களால் நிறைவேற்ற முடியுமா என கேட்டிருந்தேன். சுமார் நான்கு சுழற்சி முறை பின்னூட்டத்திலும் அதாவது,
    November 19, 2012 at 7:54 PM அன்று
    November 25, 2012 at 7:41 AM அன்று
    December 8, 2012 at 8:00 AM அன்று
    December 14, 2012 at 3:31 AM அன்று

    // 1. ஆதிமனிதன் கடவுளை வணங்கவில்லை... என்பதற்கு தொல்லியல் சான்றுகள் எங்கே?
    2. குகை ஓவியங்களை கடவுள் மறுப்பை உண்மைப்படுத்தும் ஆவணங்கள் என்னென்ன?
    3. கடவுள் என்றால் என்ன? அறிவியல் ரீதியான இலக்கணம்?
    4. ஒருவர் பிறக்கும் நேரம் - இறக்கும் நேரம் துல்லியமாக என்ன?
    5. மழை பொழிவை ஏன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை?
    6. பெருவெடிப்புக்கொள்கை ஏன் நிகழ வேண்டும்.?
    7. கோள்கள் எப்படி பால்வெளியில் இயங்குகிறது? யார் இயக்குவது?
    8. வீண்ணில் ஏற்படும் மோதல்களும், சீரற்ற விபத்துகளையும் நவீன அறிவியல் நிகழ்த்தியதா..? இல்லையென்றால் அறிவியலால் அதை ஏன் தடுக்க முடியவில்லை?
    9. அறிவியலில் தர்செயல் எப்படி சாத்தியம் ? அதற்கு நிருபணம்?
    10. எதிர்க்காலத்தை சார்ந்திருப்பது எப்படி உண்மை அறிவியலாகும்?//
    இப்படி சில கேள்விகள் ஆனால் இதுவரை இதற்கு தெளிவற்ற பதில்கள் விளக்கங்களாக தந்தாலும். ஒற்றை வரியில் ஆதாரக்குறியீடுகள் தரவில்லை.

    // செங்கொடிJanuary 15, 2013 at 7:56 PM
    10
    கடவுளுக்கான அறிவியல் ரீதியான இலக்கணம் என்பது குளிரும் நெருப்பு என்பதைப் போல முரணான சொற்றொடர்.//

    ஆக கடவுளை மெய்பிக்க எனக்கு வைத்திருக்கும் அதே அளவுகோல்கள் உங்களுக்கும் கடவுளை பொய்பிக்க உங்களுக்கு நீங்கள் எடுக்கவில்லையென்பதை தான் இத்தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
    கைர்., இனி இதற்கு மேல் கடவுள் இஸ்லாம் குறித்து மீண்டும் மீண்டும் உங்களின் பதில் தரா கேள்விகளை முன்னிருத்தி பதிவிடுவது எனக்கு ஒருவித சடைவை தருகிறது.

    ReplyDelete
  45. இந்த ஆக்கம் தொடர்பாக உங்கள் வாதத்தை அணுகுவோம்.,

    // வணக்கம் எனும் சொல்லின் பொருள் கடவுளை வணங்குவது என்பது தானா? நிச்சயமாக இல்லை. வளைதல், இணங்குதல் என்பது தான் வணக்கம் எனும் சொல்லின் பொருள். திருக்குறளின் 827வது குறள் இதை தெளிவாக விளக்கும்//

    இதிலிருந்தே தொடங்கலாம் என நான் நினைக்கிறேன். சகோ இங்கே நான் மைய்யலிட்டது வணக்கம் என்ற பொது வழக்கு சொற்பிரயோகத்தை குறித்தே. பொதுவாக வணக்கம் என்பது வணங்குதலை குறிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல் குறியீடாகும். ஆக இங்கே வணக்கத்தை வள்ளுவர் வாக்கில் இணக்கமாக, வளைதலாக பொதுப்படுத்துவது சந்தர்ப்பவாத மேற்கோள்கள் தான். ஏனெனில் இன்று வணக்கத்தை பயன்படுத்தும் எவரும் வள்ளுவரின் மேற்கோளுக்கிணங்க குறிப்பு தந்து பொதுவில் பயன்படுத்துவதில்லை. இந்த வார்த்தைக்காக நீங்கள் சற்று சிரமமபட்டு தமிழின் இறந்த கால வரலாற்றை தேடி இருக்கிறீர்கள். நன்று ஆனால் அதே பழமை தொய்ந்த அர்த்த பொருளில் தான் வணக்கம் என்ற வார்த்தையை இங்கே எல்லோரும் பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு எந்த நடைமுறை சாத்தியக்கூறுகள் இல்லை.

    இப்படி அறிதிட்டு தெளிவாக முன்மொழியப்படாத வார்த்தையாக வணக்கம் என்பதனை பயன்படுத்துவதற்கு நீங்கள் கொடுத்திருக்கும் நிகழ்கால உதராணம் தான் நகைப்புக்குரியது. ஏனெனில் பழமை மிகுந்த வார்த்தை குறிப்புக்கு சமகால உதாரணங்களை ஒப்பிடுவது நிகழ்கால நடைமுறைக்கு மாற்றமானது. தொல் தமிழில் "கம்பன் நல்கவி இயற்றினான். என்ற வாக்கியம் திறம்பட்ட ஒரு கவிஞரை ஒருமையில் விளித்தாலும், அதன் சாரம்சம் அவர் பெருமை கூறுவதே., இதை அளவுகோலாக கொண்டு நேற்றைய முதல்வரான "கலைஞர் கருணாநிதி திறம்பட ஆட்சி நடத்தினான்." என ஒருமையில் அழைத்தால் இதை மரியாதையின்மை வாக்கியமாகவே எவராலும் பார்க்கப்படும்

    ஆக நான் சொல்ல வருவது ஒரு வார்த்தை அதன் ஆதி நிலையிலிருந்து பிறழ்வுற்று தற்போது பொதுவில் எவ்வாறு, எச்சொல் பிரயோகத்திற்காக மக்கள் பயன்பாட்டில் உள்ளது என்பதே., ஆக சந்தேகத்திற்கு உட்பட்டு அல்லது அறிதிட்டு கூறமுடியாத நிலைக்கொண்ட வணக்கம் போன்ற சொல்லை, ஆத்திகர்கள் தங்களது வழிப்பாட்டு சொல்லாக பயன்பாட்டில் கொண்டிருக்கும் வேளையில் நாத்திகர்கள் பயன்படுத்த வேண்டிய அவசியமென்ன? நான் கேட்ட எந்த நாத்திகரும் நீங்கள் கூறிய உதாரண இடுகைகளை வகைப்படுத்தவில்லை. மாறாக கூறுவதால் உங்களுக்கு என்ன பிரச்சனை என்பது போல தான் பதிலளித்தார்கள். நீங்கள் சொல்லலாம். அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லையென., அதைதான் நானும் சொல்கிறேன். பயன்பாட்டு சொல்லின் மூலம் வழக்கொழிந்து சென்ற பிறகு அந்த வார்த்தை இன்றைய நடைமுறை மாற்றத்தை ஏற்றிருந்தும் கூட வாதம் என வரும் போது வள்ளுவனை இங்கே கொணர்வது சந்தர்ப்ப வாதமானது. ஏனெனில் வளைதல், இணங்குதல் போன்றவற்றிற்காக ஒப்பான நலவார்த்தைகள் நம் தமிழில் உண்டு. ஆக 2000 வருடங்களுக்கு முன்னர் உயிர்த்த சொல் வடிவை தற்கால பயன்பாட்டோடு பொருத்தி தக்க பதிலென கூறுவது ஏற்புடையதன்று.

    ReplyDelete
  46. // ஒரு வாக்கியம், அது ஆட்சேபகரமானது. சாந்தியும் சமாதானமும் நிலவட்டும் என அனைவரும் கூறவேண்டும் என்றொரு வரையறுப்பு இருக்கிறது. யாரால் நாங்கள் சாந்தியையும் சமாதானத்தையும் இழந்திருக்கிறோமோ அவர்களைப் பார்த்து சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என எப்படிக் கூறமுடியும்?//

    தெளிற்ற முரண்பாடாக பேசுவது தான் உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஒருவரால் சாந்தியும் சமாதானத்தையும் இழந்திருந்தாலும் அவருக்கும் சாந்தி உண்டாகட்டும் என கூறுவது மனிதத்தின் உயர் நிலை அல்லவா.,

    இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
    நன்னயம் செய்து விடல்.,

    என்ற வள்ளுவன் வாக்கு எதை பறைச்சாற்றுகிறது செங்கொடி., தயவுகூர்ந்து வாக்கியத்தின் அறிவார்ந்த அர்த்ததை உள்வாங்குங்கள். சொல்லப்படுவது முஸ்லிம்களின் முகமன் என்பதற்காக முன்முடிவுகளுடன் அணுக வேண்டாம்.


    // கடந்த என்னுடைய பின்னூட்டத்தின் இறுதியில் இப்படி கேட்டிருந்தேன், அந்தக் கேள்விக்கு நீங்கள் கூறிய பதிலை இங்கே பதிவு செய்து அது எப்படி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாக இருக்கிறது என்பதை விளக்குங்கள். அப்படி நீங்கள் செய்யாதபட்சத்தில் நீங்கள் நேர்மையற்றவர் என்று நீங்களே ஒப்புக் கொண்டீர்கள் என்பது பொருள்/// நன்றி நண்பர் குலாம். உங்களை நீங்களே நேர்மையற்றவர் என ஒப்புக் கொண்டதற்காக.//

    என் நேர்மையை உரசிப்பார்க்க இஸ்லாமும், சமூகம் என்ற பொதுவெளியும் இருக்கிறது. விட்டில் பூச்சியாய் எழுத்து வெளிச்சத்தில் மட்டுமே வாழும் நீங்கள் தான் உங்கள் நேர்மையை நாத்திக மனிதராக வலம் தந்து இந்த உலக பெருவெளியோடு ஒப்பு நோக்க வேண்டும். எவரது நேர்மைக்கும் மதிப்பெண் கொடுக்கும் உயரிய தகுதியை உங்களுக்கு இங்கே யாரும் வழங்கவில்லை. அவசரப்பட்டு வார்த்தைகளை விடாதீர்கள்.

    நிறங்களை மாற்றிக்கொண்டே இருக்கும் நாத்திகத்தின் கேட்பாரற்ற கொள்கை குறித்து மீண்டுமொரு ஆக்கத்தில் சந்திப்போம்

    உங்கள் சகோதரன்
    குலாம்.

    ReplyDelete
  47. நண்பர் குலாம்,

    இவ்வளவு கேவலமான, இவ்வளவு அசிங்கமான, வெட்கம் கெட்ட மனிதரா நீங்கள்? உங்களுக்கு தமிழ் தெரியும் தானே. நான் எழுதியிருப்பதற்கும் நீங்கள் எழுதியிருப்பதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? அதெப்படி இவ்வளவு முட்டாளாக ஒருவரால் இருக்க முடியும்? அல்லது இப்படி அம்பலப்பட்ட பின்னரும் ஒருவரால் தொடர்ந்து நடிக்க முடியுமா?

    விளக்கம் 2 ல் நான் குறிப்பிடும் ஒரு அம்சத்தை நீங்கள் பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறேன். முதலில் அதை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு, பரிசீலித்து பதில் கூறுங்கள். அடுத்து குறிப்பான ஒரு எடுத்துக்காட்டில் பதில் கூறாமல் நீங்கள் எவ்வாறு பசப்பியிருக்கிறீர்கள் என்று காட்டியிருக்கிறேன். இதற்கு உரிய விளக்கமளியுங்கள்.

    விளக்கம் 3 ல் நீங்கள் தொடர்ச்சியாக பொய் கூறி இருக்கிறீர்கள் என்று உங்கள் பழைய எழுத்துகளைக் காட்டி நிரூபித்திருக்கிறேன். அவைகளுக்கு பதில் கூறுங்கள்.

    நைந்து இற்றுப் போய் காற்றில் ஆடிக் கொண்டிருக்கும் வெட்கம்கெட்ட நேர்மையின்மையை இனியும் உங்களால் மறைக்க முடியாது.

    வணக்கம் குறித்து நான் பல அம்சங்களில் அதை எழுதியிருக்கிறேன். ஒரு அம்சத்திற்கு மட்டும் பதில் கூறியிருக்கிறீர்கள் ஏனையவற்றுக்கும் பதில் கூறுங்கள் பின்னர் நான் மொத்தமாக என்னுடைய விளக்கங்களைத் தருகிறேன்.

    இந்தத் தளத்தில் குலாமின் இடுகைகளுக்கு தொடர்ந்து பின்னூட்டமிட்டு ஊக்கமூட்டிக் கொண்டிருக்கும் அனைத்து இஸ்லாமிய நண்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன். குலாம் செய்து கொண்டிருப்பது சரியான செயலா? விவாதம் செய்தால் அதற்கெதிராக கேலி செய்பவன் என்னைச் சேர்ந்தவனில்லை என்றொரு ஹதீஸ் உண்டு. குலாம் உங்களைச் சேர்ந்தவர் என்று நீங்கள் கருதுகிறீர்களா? குலாம் ஒருபோதும் இதற்கு விடையளிக்கப் போவதில்லை. என்றால் எனக்கு நீங்கள் விளக்கம் தாருங்கள் அல்லது குலாமை வற்புறுத்தி பதில் சொல்லச் செய்யுங்கள். ஏனென்றால் நீங்கள் எதை நம்பிக் கொண்டிருக்கிறீர்களோ அந்த நம்பிக்கையின் பேரால் தான் அவர் எழுதிக் கொண்டிருக்கிறார், இரண்டையும் செய்யாமல் வழக்கம் போல் அமைதி காப்பீர்கள் என்றால் குலாமைப் போலவே உங்களுக்கும் வெட்கம், மானம், சூடு, சொரணை என்று எதுவுமே இல்லை என்று நான் முடிவு செய்ய வேண்டியதிருக்கும்.

    ReplyDelete
  48. அன்பு சகோ., செங்கொடி.,

    வார்த்தைகள் தடிக்கும் போது நானும் உங்கள் வழியிலே சொல்லாடலை பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம்
    மன்னிக்க.,

    ஆக்கம் தொடர்பாக இனி விவாதிக்க கூடாதென்ற நோக்கில் எழுதப்பட்ட உங்கள் பின்னூட்டமாய் இது தெளிவாக தெரிகிறது. உங்களுக்கும் எனக்கும் என்ன குடும்ப தகராறா... அல்லது உங்கள் சொத்தை அபகரித்து பொதுவெளியில் பொய் பேசி திரிகிறேனா...

    மானங்கெட்ட செங்கொடி., இப்படி சொல்வதற்கு வருத்தப்படுகிறேன். சவுதியில் இஸ்லாமிய அடையாளத்துடன் அலைந்து கேவலம் உலக ஆதாயத்திற்காக கொண்ட கொள்கையில் உறுதி தொலைத்து எழுத்துவானில் நாத்திக விண்மீன் வேசம்... இது ஒரு பொழப்பா., உங்களுக்கு

    பொதுவெளியில் வந்து நாத்திகம் பேச அழைக்கிறேன். இவர் எழுத்து மூலம் தான் விவாதிப்பாராம் பொதுவெளி விவாதத்திற்கு வரமாட்டாராம். அதுக்கு காரணத்தை தம் தளத்தில் எழுத்தாக்கி வைத்திருக்கிறாராம்.. உங்கள் நேர்மையின் நிறம் இன்னும் வெளுத்து கொண்டே போகிறது சகோ செங்கொடி

    இரண்டு வருடமாய் இந்த ஆக்கத்திற்கு பதில் சொல்ல வராதவர் இன்று வந்து என் நேர்மையை குறைப்பேசிக்கொண்டிருப்பது தான் அபத்தமான முரண்பாடு. ஐயா., எனக்கு நேர்மையும் வெட்கமும் குறிப்பாக சகிப்புதன்மையும் உண்மையும் இருக்கிறது. அதனால் தான் இப்படி படிப்பதற்கு கூட அருகதையற்ற வார்த்தைகளைக்கொண்ட உங்கள் பின்னூட்டத்தை வெளியிட முடிந்தது.

    மீண்டும் மீண்டும் சொல்கிறேன் அசிங்கத்தை இங்கே கொண்டு வர வேண்டாம். அதற்கு உங்கள் தளம் இருக்கிறது. மானமும் மரியாதையும் ரோசமும் வெட்கமும் மானமும் ஈனமும் இருந்தால் பொதுவெளி வந்து விவாதிக்க ஒப்புக்கொடுங்கள்.

    அஃதில்லாத எந்த உங்களின் மட்டரக பின்னூட்டங்களும் இங்கே இனி வெளியிடப்போவதில்லை.


    ReplyDelete
  49. முன்குறிப்பு: நண்பர் குலாமுக்கு தீண்டத்தகாததாய் தெரியும் சொற்கள் எதுவும் இப்பின்னூட்டத்தில் இடம்பெறவில்லை.

    அன்பார்ந்த நான்முஸ்லீம் தள வாசகர்களே!

    முதலில் நான் ஏன் சில கடுமையான சொற்களைப் பாவித்தேன் என்பதற்கான காரணத்தை விளக்கி விடுவது பொருத்தமானதாக இருக்கும். குலாமைத் தவிர வேறு எவரிடத்தும் இந்த அளவுக்கு கடினமான சொற்பாவனைகளை நான் செய்ததில்லை. ஏனென்றால் குலாம் அளவுக்கு அப்பட்டமான வேடதாரியை நான் கண்டதில்லை. அவரின் எழுத்துகளைப் பார்த்தால் கண்ணியமான, நேர்மையான நீதிமான் போல இருக்கும். ஆனால் விவாதங்களில் அவர் வெளிக்காட்டியதெல்லாம் இதற்கு நேர்மாறான குணங்கள். விவாதம் என்று வந்துவிட்டால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும், திரிக்காமல் பதில் கூற வேண்டும், என்ன கேட்கப்பட்டிருக்கிறது என்பதை பரிசீலித்து உள்வாங்கி பதிலளிக்க வேண்டும். இதில் எதையுமே குலாம் செய்ததில்லை. விவாதத்தின் மையத்தை நோக்கி நகர்த்தும் கேள்விகளை கண்டு கொள்ளாமல் நழுவி விடுவது, ஒன்றை கேள்வியாக கேட்டால் அதல்லாத வேறொன்றுக்கு பதில் கூறுவது, தொடர்பே இல்லாமல் பதில் என்ற போர்வையில் எதையாவது கூறி வைப்பது இதுதான் அவர் வாதத்தின் ஒட்டுமொத்த சாராம்சமாக இருக்கும். இந்தத் தன்மையை குலாமுடன் நான் நடத்திய அனைத்து விவாதங்களிலும் நீங்கள் காணலாம். பலமுறை இவைகளை சுட்டிக் காட்டி சரியான பாதைக்கு வாருங்கள் என அழைத்தாலும் கண்ணை மூடிக் கொண்டு சொந்தப் பாதையிலே தொடர்வார். இந்த இவரின் நடிப்பையும் வேடத்தையும் தாங்க முடியாமல் என்ன செய்தால் இவர் நேர்மையாக பதிலளிக்க முன்வருவார் என சிந்தித்து நான் கண்டுபிடித்த வழி தான் கடுமையான சொற்களை பாவிப்பது என்பது. ஆனால் இந்த உத்தியில் என்னால் வெற்றியடைய முடியவில்லை என்பதை நேர்மையுடன் ஒப்புக் கொள்கிறேன்.

    அதேநேரம் குலாமிடத்தில் இப்படி கடுமையான சொற்களை பாவிப்பதை நான் தவறு என்றும் கருதவில்லை. எப்படி என்றால், எழுத்தில் கண்ணியமாக இருப்பது, நாகரீகமாக எழுதுவது என்பதன் பொருள் வெறுமனே வசைச் சொற்களைத் தவிர்ப்பது மட்டுமல்ல. சொல்லில் நேர்மையை கடைப்பிடிப்பது தான். திட்டமிட்டு நேர்மையற்று இருப்பது அதாவது கேள்விகளுக்கு பதில் கூற முடியாத இடத்தில் நேர்மையாக அதை ஒப்புக் கொள்வதற்குப் பதிலாக எல்லாவித கள்ள உத்திகளையும் பயன்படுத்திக் கொள்வது ஆனால் சொல்லில் கடுமையாக இல்லாமல் மென்மையான சொற்களை பயன்படுத்துவது. இதை எவ்வளவு நாள் சகிப்பது? இதற்கு எதிராகவும், அவரை நேர்வழிக்கு கொண்டுவரவேண்டும் எனும் எண்ணத்தினாலும் தான் நான் கடுமையான சொற்களை பாவித்தேன். எனவே இதில் நான் எந்தத் தவறையும் காணவில்லை. இப்போது ஏன் அது போன்ற சொற்களை தவிர்த்திருக்கிறேன் என்றால் இதை காரணமாகக் காட்டி இந்தப் பின்னூட்டத்தை அவர் தடுத்துவிடக் கூடாதே என்பதற்காகத் தான்.

    தொடரும் .. .. ..

    ReplyDelete
  50. தொடர்ச்சி .. .. ..

    நான் மீண்டும் மீண்டும் குலாமைக் கேட்டுக் கொள்வது இதைத்தான். நான் எதை கேள்வியாக கேட்டிருக்கிறேனோ அதற்கு பதிலளியுங்கள் என்பது தான். அவரை நோக்கி நான் கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறேன். நேர்மையற்று நடந்து கொள்கிறார் என்பது சாதாரணமாக கடந்து போகும் விசயமா? இதை குலாம் ஒருபோதும் பரிசீலிக்கப் போவதில்லை. ஆனால் நீங்கள் அவருக்கு இதை உணர வைக்கலாம். இதுவரை குலாமுடன் நடந்த அத்தனை விவாதங்களையும் படித்துப் பாருங்கள். நான் கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் சரிதானா என்பதைப் பரீசீலித்துப் பாருங்கள். நான் குற்றம்சாட்டியவாறு இல்லை என்றால் என்னை நீங்கள் எவ்வளவு கடுமையாக வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். நான் தகுந்தமுறையில் பரிசீலித்து பதிலளிக்கிறேன். ஆனால் நான் கூறுவது உண்மை என்றால் நீங்கள் ஒவ்வொருவரும் குலாமுக்கு பின்னூட்டம் மூலம் இதை தெரிவிக்க வேண்டும். அப்போது தான் கொஞ்சமாவது அவரை உணரவைக்க முடியும்.

    இந்த இடுகைக்கு நான் பின்னூடமிட வந்த காரணமான இப்ராஹிம் எடுத்துக்காட்டிய என்னுடைய மேற்கோளுக்கு பதிலளிக்கப்பட்டிருக்கிறதா இல்லையா? என்பதை இன்றுவரை குலாம் தெளிவுபடுத்தவில்லை. நேர்மையற்று இருக்கிறார் என்று அவரின் எழுத்துக்களையே ஆதாரமாகக் காட்டி நிரூபித்திருக்கிறேன். இதற்கு குறிப்பாக எந்த பதிலையும் அவர் தரவில்லை. நேர்மை என்பது எழுத்து மட்டுமா? என கேள்வி கேட்பதிலேயே குறியாக இருக்கிறார். ஆனால் எனக்கும் குலாமுக்கும் இடையே எழுத்தைத்தவிர வேறு எந்தத் தொடர்பும் இல்லை எனும் போது எதைக் கொண்டு நேர்மையை அளவிடுவது எனும் கேள்வியை மட்டும் கடைசிவரை கண்டு கொள்ளவே இல்லை. கடைசியாக வணக்கம் குறித்தும் நான் விரிவாக எழுதியிருக்கிறேன். அதில் ஒரு அம்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பதில் கூறிவிட்டு ஏனையவற்றை விட்டுவிட்டார். இதை சுட்டிக் காட்டிய எனது பதில் அவருக்கு நான் விவாதத்தை தொடர விருப்பமில்லை எனக் கூறியது போல் தெரிகிறது. இது தான், இதைத்தான் நான் அன்றிலிருந்து நேர்மையற்ற செயல் என குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறேன். வெளிப்படையாக இருங்கள். முடிந்தால் பதில் கூறுங்கள், முடியாவிட்டால் என்னிடம் பதில் இல்லை என்பதை ஒப்புக் கொள்ளுங்கள் என்கிறேன். குறைந்தபட்சம் அமைதியாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் அவரின் நேர்மையின்மையை மறைக்க எழுத்தில் வேடம் கட்டிக் கொண்டு என்மீது திருப்புகிறார். இதை சகித்துக் கொண்டிருக்க வேண்டுமோ.

    இறுதியாக, உங்கள் ஒப்புதலுடன் தன் நேர்மையை வெளிப்படுத்திக் கொள்ள அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கலாம் என எண்ணுகிறேன்.
    1) வணக்கம் என்பதில் நான் பரிசீலித்திருக்கும் அனைத்து அம்சங்களையும் உள்வாங்கி பதில் கூற வேண்டும்.
    2) நேர்மை குறித்து நான் என்னென்ன குற்றச்சாட்டுகள் கூறியிருக்கிறேனோ அவைகளையெல்லாம் பரிசீலித்து தகுந்த பதிலளிப்பதுடன், இனிமேல் அவைகளைத் தொடர மாட்டேன் என்றும் உறுதியளிக்க வேண்டும்.
    குலாம் இதற்கு தயாராக இருக்க மாட்டார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அது உங்களுக்கும் தெரிய வேண்டுமல்லவா? கேட்டுச் சொல்லுங்கள். நான் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  51. அன்பு சகோ செங்கொடி.,

    நாத்திக சகோதரர்களிடம் ஒரு தவறான அணுகுமுறை உண்டு. அறிவுரீதியான கேள்விகளால் தான் முன்னோக்கப்படும் போது ஆத்திகர்களை உணர்வு ரீதியாக ஆட்கொள்ள செய்வது. இதை நான் பல விவாத நிலைகளில் கண்டிருக்கின்றேன். அதுவே உங்களது கடந்த சில பின்னூட்டங்களிலும் கண்டு வருகிறேன். உங்கள் கடந்த பின்னூட்டத்திற்கு எதிர்வினையாக நானும் உங்களை வசைமொழி பாடியதாக எண்ண வேண்டாம். ஏனெனில் பொதுவெளியில் ஒரு செய்தியை உணர்வுப்பூர்வமாக அணுகுவதை விட அறிவுப்பூர்வமாக அணுகுவதே சிறந்ததை அறிந்தவன் தான் நான். அதற்கு சான்றாக " முஸ்லிம்களும் -தீவிரவாதமும் " என்ற ஆக்கத்தில் ஒரு சகோதரரின் பின்னூட்டத்திற்கு என் பதிலும் பாருங்கள்.

    //
    LTTE March 15, 2012 at 2:00 PM
    This comment has been removed by a blog administrator.
    ReplyDelete
    Replies

    G u l a m March 15, 2012 at 4:37 PM
    அன்பு சகோ LTTE

    உங்களது பின்னூட்டத்தை என்னால் வெளியிட முடியாது. கீழ்த்தரமான வசைப்பாடலுக்கு இங்கே வேலையே இல்லையே... அனைத்தும் ஆதார ரீதியாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள். அவை குறித்து கருத்து கூறாமல் என் பிறப்பை குறித்து வசைப்பாடினால்... உங்கள் அறியாமையை கண்டு வருத்தமடைகிறேன்.

    உங்கள் பின்னூட்டத்தை வெளியிட்டு இருந்தால் உங்களையும் உங்கள் அபிமான இயக்கத்தையும் குறித்து மக்கள் என்ன நினைப்பார்கள்... இதிலிருந்தே தெரியவில்லையா.. யோசித்துக்கொள்ளுங்கள்

    நான் முஸ்லிம் - மரியாதையாகவே இதுவரை எங்கேயும் என் கருத்தை பதிந்து வருகிறேன். இன்ஷா அல்லாஹ் இனியும் பதிவேன். அப்படித்தான் எனக்கு பேச கற்றுக்கொடுத்து இருக்கிறது என் மார்க்கம்.

    உங்கள் இயக்கம் என்ன கற்றுக்கொடுத்தது என்பதை மீண்டுமொரு நீங்களே உங்கள் பின்னூட்டத்தை படித்து புரிந்துக் கொள்ளுங்கள்.
    Delete //
    அதற்கான சுட்டி : http://www.naanmuslim.com/2012/03/blog-post.html

    ஆக உங்களின் போலி மற்றும் சந்தர்ப்பவாத கருத்துகளை தொடர்ந்து கண்ட போதே அப்படி சில கடுமையான சொற்களை உபயோகிக்க வேண்டியதாகி விட்டது.
    கைர்., சில விசயங்களை இறுதியாக முன்வைக்க விரும்புகிறேன். இதற்கு மட்டும் தெளிவாக நேரடியாக பதிலை பதிவு செய்யுங்கள். அஃதில்லையேல் உங்களுடன் இனி விவாதிக்க விருப்பமில்லை.

    ReplyDelete
  52. முதல் பாயிண்ட்.
    கடந்த பின்னூட்டம் வரை மூன்று கட்டங்களை மையப்படுத்தி குற்றச்சாட்டுகளும் விவாதங்களும் தொடர்கின்றன. அதில் முதல் மற்றும் முக்கியமான கடந்த முறை நிகழ்ந்த
    விவாதத்தில் தெளிவான பதில் இல்லையென்பதே உங்கள் குற்றச்சாட்டு. மேலும் உங்கள் கருத்தை நான் பரீசிலிக்கவில்லையென்பதும் உங்கள் வாதம்.

    நூறு சதவீகிதம் உங்களோடு உடன்படாத புள்ளியில் நான் உங்களோடு விவாதித்துக்கொண்டிருக்கும் போது நீங்கள் சொல்லும் கருத்துக்கு முரண்பட்டு என் கருத்தை முன்வைத்தால் மட்டுமே நம் விவாததத்தை தொடர முடியும். அப்படியிருக்க எப்படி எதற்கும் மறுத்து நான் பேசிக்கொண்டிருப்பதாக கூற முடியும். அத்தோடு பரிசீலனைக்குறித்து பேசீனீர்கள்? பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் அளவிற்கு உங்களின் எந்த வாதம் ஆதார ரீதியான தரவுகளைக்கொண்டிருந்தது...? இன்று வரை கூட நிருபிக்கப்பட்ட எந்த ஆவண சான்றையும் இங்கே கடவுளுக்கு எதிராக நீங்கள் சமர்பிக்க வில்லை.


    அடுத்து,
    நேர்மையின்மை குறித்து., ஆரம்பத்திலிருந்தே உங்கள் பின்னூட்டத்தில் உங்கள் முகமுடியை கிழித்து விடுகிறேன், உங்கள் ஆணவத்தை அடக்குகிறேன். என பல்வேறு வீரதீர வசனங்கள் தான் நிறைந்திருந்தன. ஒருவரின் நேர்மையின்மையை நிருபிக்க வேண்டுமானால் அதை நிருபிக்க முன்வரும் நபர் சமூகத்தில் நேர்மையாளர் என சான்று பகிரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பாருங்கள் இந்த சமூகத்தில் முஸ்லிமாக என்னை அடையாளப்படுத்திய அளவிற்கு கூட நாத்திகனாக உங்களை நீங்கள் அடையாளப்படுத்தி இருக்கவில்லையென்பதே நீங்கள் மறுத்தாலும் உடைபடும் உண்மை. அதுமட்டுமில்லாமல் ஒருவரின் அறிவுக்கேற்பவே அவரது வாதங்களும் எடுபடும். என்னை தாண்டிய அறிவுடையவராக நீங்கள் இருப்பீன் உங்கள் தரப்பை இன்னும் ஆழமாக மெய்ப்படுத்தலாம். என்னால் தெளிவாக முன்மொழிய முடியாத தருணங்கள் என் குறை அறிவை தான் வெளிப்படுத்துமே தவிர என் நேர்மையை எடை போடாது.

    அதுமட்டுமில்லை எனது நேர்மையை எடை போட உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதே என் கேள்வி? ஏனெனில் நீங்கள் நேர்மையாளர் என யார் உங்களுக்கு சர்டிபிக்கெட் கொடுத்திருப்பது? அறிய செய்வீர்களா? ஆக வெறுமன எனது நேர்மைக்குறித்து உரத்தக்குரலெடுத்து கூப்பாடு போடவேண்டாம். சமீபத்தில் கூட எங்கள் ஆபீஸுக்கு அருகாமையிலுள்ள விக்டோரியா சர்ச்சில் கூட பாஸ்டருடன் உரையாடி விட்டு தான் வந்தேன். அங்கே தெரிந்துக்கொண்டார்கள் என் நேர்மைப்பற்றி.
    ஆக இனியும் பொதுவில் ஒருவரின் நேர்மையின்மையை குறித்து ஆதாரமற்று கூறாதீர்கள்.

    ReplyDelete
  53. அடுத்து அந்த ஆக்கம் தொடர்பாக.,
    நான் ஏற்கனவே சொல்லி விட்டேன். உங்கள் தளத்தில் உரையாடுவது எனக்கு பிடிக்கவில்லையென. ஆக சகோதரர் இப்ராஹூம் கொடுத்த சுட்டிக்கு நான் கொடுத்த மறுப்பு உங்களுக்கு போதவில்லையென்றால் அதனை இங்கே பதிவு செய்து என்னிடம் மீண்டும் மாற்றுக்கருத்து கேட்டிருக்க வேண்டும். இதுவரை உங்கள் எதிர்க்கருத்தை இங்கே பதிந்தீர்களா...? பகிராத ஒன்றுக்கு பதில் தரா என்னை பரிசீலனைக்கு உட்பட சொன்னால் அது எப்படி முறையான செய்கையாகும். தயவு செய்து இப்போவாது அந்த ஆக்கம் தொடர்பான உங்கள் வாதம் தான் என்ன? அறிய தாருங்கள்

    அடுத்து இந்த ஆக்கம் தொடர்பாக.,
    வணக்கம் குறித்து நீங்கள் கூறிய இலக்கணம் தவறேன்று நான் எங்காவது கூறினேனா...? கொடுத்த விளக்கம் தான் ஏற்புடையதல்ல என்றேன். ஏனெனில் இன்று வணக்கம் என்ற சொல்லாடலுக்கு நீங்கள் கொடுத்த குறள் அகராதிப்படி விளக்கத்தை தான் பொதுவில் நாத்திகர்கள் பயன்படுத்துகிறார்களா..? என்பதே என் மையக்கருத்து. இதிலும் குற்றம் கண்டால் சொல்வதற்கு ஒன்றுமில்லை. எனக்கு எவரையும் குற்றப்படுத்தி அல்லது அவரை மட்டம் தட்டி தான் என் கருத்தை மிகைக்க செய்ய வேண்டும் என்ற எண்ணமில்லை,

    ஒன்றை நன்றாக புரிந்துக்கொள்ளுங்கள் சகோ, என்னால் குர்-ஆன் ஹதிஸ் குறித்து மட்டும் விளக்கி பதிவிட்டு என்னை இஸ்லாமியனாக இணையவெளியில் தக்கவைத்துக்கொள்ள முடியும். ஆனால் விமர்சனத்தை எதிர்க்கொள்வதற்காகவே நாத்திகம் குறித்து பொதுவில் பதிவிடுகிறேன். ஆக விமர்சனத்திற்கு பயந்தவன், நேர்மையற்றவன், பின்னூட்டங்களை மட்டுறுத்துபவன் என்ற பொதுப்புத்தி வார்த்தைகள் வேண்டாம்.

    இறுதியாக

    1. கடவுள் இல்லையென்பதற்கு அறிவியல் நிருபித்த ஆதார சான்றுகள் என்ன?
    2. நீங்கள் நாத்திகனாக தான் சவுதியிலும் இந்தியாவிலும் வலம் வந்தீர்களா?
    3. பொதுவெளி விவாதத்திற்கு ஏன் வர மறுக்கிறீர்கள்?

    இதற்கு இதுவரை ஒற்றை வரி பதிலை கூட தெளிவாக முன்வைக்கவில்லை. ஆக வாய்சவடால் வேணாம் அண்ணே., விமர்சனமும் விவாதமும் எனக்கு புதிதல்ல அல்ஹம்துலில்லாஹ் எத்தகையே கேள்விகளையும் உள்வாங்கும் குணத்தை அல்லாஹ் எனக்கு வழங்கி இருக்கிறான். எதிர்மறை கருத்துக்களை உளமார வரவேற்கிறேன். ஆக மேற்கண்ட கேள்விகளுக்கும், ஆக்கம் தொடர்பாகவும் உங்கள் பின்னூட்டம் தொடருமானால் தாரளமாக விவாதிக்கலாம். இன்ஷா அல்லாஹ்

    அஃதில்லாமல் நேர்மையின்மை- பதில் தரவில்லை, வெட்கம், ரோசமின்மை போன்ற அஃறிணை வார்த்தைகள் தொடருமானால் நிச்சயமாக பின்னூட்டங்கள் வெளியிடப்படாது, என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    உங்கள் சகோதரன்
    குலாம்.

    ReplyDelete
  54. // கடவுள் இல்லையென்பதற்கு அறிவியல் நிருபித்த ஆதார சான்றுகள் என்ன?//

    அறிவியல், கடவுள் என்ற ஒன்று உலகம் உருவாக தேவையில்லை என்று தான் சொல்லியுள்ளது. மேலும் இருக்கு என்பவர்களுக்கு தான் அதை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது.

    // பொதுவெளி விவாதத்திற்கு ஏன் வர மறுக்கிறீர்கள்?//

    அதற்குண்டான அவசியம் இருப்பதாக தேவையில்லை. முகத்தை பார்த்தால் தான் பதில் கிடைக்கும் போல உங்களுக்கு. எங்களுக்கு அப்படியில்லை.

    இவை இரண்டும் பொது கேள்விகள் அதனால் எனது புரிதலை சொல்லியுள்ளேன்.
    செங்கொடியும் அவரது புரிதலை சொல்லுவார் என நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோ வால் பையன்.,

      உண்மைதான் சகோ., இருக்கிறது அல்லது உண்டு என்பதற்கு தான் ஆதாரப்பூர்வ நிருபணம் தேவை. பட் என்னுடைய கேள்வி என்னன்னா? கடவுள் என்பவர் அல்லது என்பதை நிருபிக்க உங்களுக்கு எத்தகைய ஆதார ரீதியான நிருபணம் தேவை என்பதே?

      ஏனெனில் கண்ணால் காணும் காட்சியாகவோ, கையில் அகப்படும் பொருளாகவோ அல்லது நுகர்ந்து உணரும் வாயு பொருளாகவோ கடவுள் இருந்தாக வேண்டும் என்ற இலக்கணத்தையோ அல்லது இந்த அண்ட பெருவெளியில் கடவுளின் இருப்பு எங்கு தேடினும் இல்லை ஆக கடவுள் இல்லையென்ற பொதுபுரிதலை உங்களுக்கு யார் தந்தது. இதை எந்த அறிவியலின் அளவுகோலில் உதவியால் கண்டறிந்தீர்கள்.?

      இன்னும் இதை மையமாக கொண்ட கேள்விகளுக்கு நான் எற்கனவே பதில் அளித்து இருக்கிறேன்.
      கடவுளின் பிறப்பும்- இருப்பும்
      http://www.naanmuslim.com/2011/10/blog-post_11.html

      வாழ்வை பூஜ்யமாக்கும் மறுமைக்கோட்பாடு
      http://www.naanmuslim.com/2011/09/blog-post_28.html

      வாய்ப்பிருந்தால் இந்த இரண்டு ஆக்கங்களையும் படித்துவிட்டு அதிலிருந்து புதிய கேள்விகள் கேளுங்கள்


      பொதுவெளி விவாதம் என்பது இணையத்தில் விவாதிப்பது போல அல்ல. படிக்காத, கணிணியில் இணையம் வசதியில்லாத பாமர மக்களுக்கும் நமது கருத்தை எளிதாக புரிய வைக்க முடியும். அத்தோடு தனிப்பட்ட இருவர்க்கு மட்டும் நடக்கும் விவாதத்தை விட ஒரு குழுவாக சேர்ந்து விவாதிக்கும் போது இன்னும் ஏராளமான கருத்துக்களும் கிடைக்கபெறும். மேலும் அதை பொதுவில் பகிர்வதால் ஏராளமானவர்களும் ஒரு தெளிவை பெற முடியும். மத்தப்படி செங்கொடி முகம் எனக்கு தெரிந்தால் என்ன தெரியாவிட்டால் என்ன?

      இன்ஷா அல்லாஹ் அவர் கூறும் கருத்துக்கள் கேட்டு தொடர்கிறேன்.

      Delete
  55. //கடவுள் என்பவர் அல்லது என்பதை நிருபிக்க உங்களுக்கு எத்தகைய ஆதார ரீதியான நிருபணம் தேவை என்பதே? //

    ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். உலகம் உருவாக கடவுள் தேவையில்லை என்று. இவ்வுலகம் கடவுளால் தான் உருவாக்கபட்டது என்பதை எந்த தொங்கல் கேள்வியும் இல்லாமல் நிரூபிக்கலாம்.

    சொர்க்கம், நரகம் போன்ற நம்பிக்கை சார்ந்த விசயங்களின் லாஜிக் மீறல்களை களைந்து காட்டலாம்

    எல்லாத்தையும் விட ஏன் இந்த உலகம் கடவுளால் உருவாக்கபட்டது என்பதையும் லாஜிக்கோட நிரூபிக்கலாம்.

    //பொதுவெளி விவாதம் என்பது இணையத்தில் விவாதிப்பது போல அல்ல. படிக்காத, கணிணியில் இணையம் வசதியில்லாத பாமர மக்களுக்கும் நமது கருத்தை எளிதாக புரிய வைக்க முடியும்.//

    இங்க விவாதிக்கலாம், நீங்க வெற்றி பெற்றால் புக்கு போட்டு எல்லாத்துக்கும் கொடுத்துருங்க. விவாதத்தின் தன்மை பார்த்துட்டு நேரில் விவாதிப்பது குறித்து முடிவு செய்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. சகோ வால் பையன்,

      தயவு செய்து ஒற்றை வரி பதிலையை மீண்டும் மீண்டும் சொல்லாதீர்கள். நான் மேற்கோள் காட்டிய ஆக்கத்தை படித்து விட்டு அதிலிருந்து கேள்விகளை தொடருங்கள் இல்லையேல்

      // உலகம் உருவாக கடவுள் தேவையில்லை என்று. இவ்வுலகம் கடவுளால் தான் உருவாக்கபட்டது என்பதை எந்த தொங்கல் கேள்வியும் இல்லாமல் நிரூபிக்கலாம்.

      சொர்க்கம், நரகம் போன்ற நம்பிக்கை சார்ந்த விசயங்களின் லாஜிக் மீறல்களை களைந்து காட்டலாம்

      எல்லாத்தையும் விட ஏன் இந்த உலகம் கடவுளால் உருவாக்கபட்டது என்பதையும் லாஜிக்கோட நிரூபிக்கலாம்.//

      தாரளமா அதை தானே நான் கேட்கிறேன். நிருபியுங்கள் சகோ

      Delete
  56. நீரூபியுங்களா?

    நானா கடவுள் இருக்குன்னு சொல்லிகிட்டு திரியுறேன்.
    இருக்குன்னு சொல்ற ஆள் தானே நிரூபிக்கனும்.

    அதென்ன இல்லையேல்
    உங்ககிட்ட பதில் இல்லைனா அப்படி சொல்லி தப்பிச்சிகிறதா?
    நல்ல மதம் நல்ல ஃபாலோயர்
    நீங்க இப்படியே மதம் புடிச்சி திரிங்க

    ReplyDelete
    Replies
    1. காமெடி பண்ணாம., அந்த பதிவுக்கு உங்க பதிலை பதிவு பண்ணுங்க அண்ணே

      Delete
  57. நண்பர் குலாம்,

    அறிவுவயப்பட்டு அணுகுவதை விட உணர்ச்சிவயப்பட்டு அணுகுவது நாத்திகர்களின் பொதுவான பழக்கம் என்பதாக குறிப்பிட்டிருந்தீர்கள். என்னைப் பொருத்தவரை நான் அவ்வாறு அணுகுபவனல்லன். ஆனால் என்னை முன்வைத்தே அந்த தவறன கருத்தை நீங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். எதை வைத்து நான் உணர்ச்சிவயப்பட்டு அணுகுவதாக முடிவெடுத்திருக்கிறீர்கள்? நான் வசைச் சொற்களைப் பயன்படுத்தினேன் என்பதைக் கொண்டு தான். ஆனால், நான் ஏன் அவ்வாறான சொற்களைப் பயன்படுத்தினேன் என்பதற்கு மிகத் தெளிவாக விள்க்கமளித்திருக்கிறேன். அவைகளைப் பரிசீலித்தல்லவா முடிவெடுத்திருக்க வேண்டும். எதிர்க்கருத்தை பரிசீலிக்காமல் அகவயமாய் உங்களின் விருப்பப்படி முடிவெடுப்பது உணர்ச்சி நிலையா? அறிவு நிலையா?

    நான் வசைச் சொற்களைப் பயன்படுத்தியதன் காரணமே நீங்கள் அறிவுவயப்பட்டு பதிலளிக்க மறுக்கிறீர்கள் என்பதால் தான். இதற்கு ஏராள எடுத்துக்காட்டுகளை நான் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன். நான் எழுப்பும் எந்தக் குறிப்பான கேள்விக்கும் நீங்கள் பதில் கூறியதில்லை. இது தான் அறிவுவயப்பட்டு எடுக்கும் முடிவா?

    இதை குறிப்பாக பார்க்கலாம். நான் உங்களுக்கான முந்திய பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தது என்ன? விளக்கம் 2ல் நான் கூறிய ஒரு அம்சத்தை நீங்கள் பரிச்சீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. எடுத்துக் கொண்டு பதில் கூறுங்கள் என்று கேட்டிருந்தேன். இது உணர்ர்சியவயப்பட்ட நிலையா? அறிவுவயப்பட்டுத்தானே கூறியிருக்கிறேன். நீங்கள் ஏன் அறிவு வயப்பட்டு இதற்கு பதிலளிக்கவில்லை? பரிசீலிக்கக் கூறிய அம்சம் என்ன? ஒருவரின் நேர்மை என்பதை நடைமுறை வாழ்விலிருந்தே கண்டுகொள்ள முடியும் என்று கூறினீர்கள். நான் மறுக்கவில்லை. ஆனாலும் நம் இருவருக்குமான உறவில் நடைமுறை வாழ்வை கண்ணுறும் சாத்தியம் இல்லை. நீங்கள் இப்போது ஒரு பாஸ்டருடன் சந்தித்துவிட்டு வந்ததைப் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். இது போல் நானும் முன்பு பலமுறை எழுதியிருக்கிறேன். ரமலான் நேர உபரி ஊதியத்தை பெற மறுத்தது, முத்தவ்வாவிடம் விவாதித்தது என்று புதிதாக இப்போது எழுதாமல் ஏற்கனவே எழுதியதிலிருந்து எடுத்துக் காட்ட முடியும். இவைகளெல்லாம் உங்களையும் என்னையும் பொறுத்தவரை தனிப்பட்ட கூற்றுகள். இந்த தனிப்பட்ட கூற்றுகளைக் கொண்டு நேர்மையை முடிவு செய்ய முடியுமா? அல்லது ஒருவரின் நடவடிக்கைகளை மற்றொருவர் பார்க்க வாய்ப்பில்ல்லாத நிலையில் இருவருக்கும் இடையில் ஒரே உறவாக இருக்கும் எழுத்தைக் கொண்டு நேர்மையை முடிவு செய்ய முடியுமா? இதுதானே நான் பரிசீலிக்கக் கோரிய அம்சம். இதை ஏன் நீங்கள் பரிசீலிக்க மறுக்கிறீர்கள். அதாவது, நீங்கள் கூறிய வாழ்ழ்கை நடைமுறையை கொண்டுதான் நேர்மையை சோதிக்க முடியும் என நீங்கள் கூறிய கருத்தை பரிசீலித்து அது சரியாக இருந்ததால் ஏற்றுக் கொண்டு, அதேநேரம் அதிலிருக்கும் மாறுபட்ட அம்சத்தை சுட்டிக் காட்டி பரிசீலிக்கக் கோரியிருக்கிறேன். இது அறிவுவயப்பட்ட நிலையா? உணர்ச்சி வயப்பட்ட நிலையா?

    தொடரும் .. .. ..

    ReplyDelete
  58. தொடர்ச்சி .. .. ..

    விளக்கம் 3 ல் நீங்கள் தொடர்ச்சியாக பொய்யான தகவலைக் கூறிவருகிறீர்கள் என்று கூறி அதற்கான ஆதாரத் தரவுகளாக பழைய எழுத்துகளிலிருந்து மேற்கோள் காட்டியிருந்தேன். இதற்கு அறிவிவயப்பட்டு பதில் கூறவேண்டுமென்றால் என்ன செய்திருக்க வேண்டும்? நீங்கள் கூறியது பொய்யில்லை, மெய்தான் என்பதை நிரூபிப்பதற்காக உங்கள் வாதங்களை வைத்திருக்க வேண்டும், அதற்கான ஆதாரத் தரவுகளைக் காட்டியிருக்க வேண்டும். ஆனால் நீங்கள் செய்தது என்ன? முன்பு அந்த விவாதம் நடந்தபோது என்னுடைய கேள்விகளுக்கு பதிலில்லாத பதிலைக் கூறியிருக்கிறீர்கள் என்று நான் கூறியிருந்தேனோ அதே பதிலில்லாத பதிலை மீண்டும் வெட்டி ஒட்டியிருக்கிறீர்கள். தெளிவாகச் சொன்னால் நான் நீங்கள் பொய் சொல்லுகிறீகள் என்று கூறினேன் அதற்கு நீங்கள் எந்த மறுப்பும் சொல்லாமல் முன்னர் கூறியதை வெட்டி ஒட்டியிருக்கிறீர்கள். அதாவது என் கேள்வி எதை நோக்கி இருந்ததோ அதற்கான பதிலாக உங்கள் பதில் இல்லை. இதைத்தான் நான் சுட்டிக் காட்டினேன். நீங்களோ நான் மட்டுமல்லாது நாத்திகர்களே உணர்ச்சிவயப்பட்டு அணுகுவதாக ஆதாரமற்று கூறுகிறீர்கள். சொல்லுங்கள் நீங்கள் செய்திருப்பது அறிவயப்பட்ட நிலையா? உணர்ச்சிவயப்பட்ட நிலையா?

    வணக்கம் குறித்து நான் என்ன கூறியிருந்தேன்? பல அம்சங்களில் வணக்கம் குறித்து கூறியிருக்கிறேன். ஆனால், நீங்களோ ஒரு அம்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பதில் கூறியிருக்கிறீர்கள். ஏனைய எல்லா அம்சங்களுக்கும் பதில் கூறுங்கள் பிறகு ஒட்டு மொத்தமாக என்னுடைய பதிலைக் கூறுகிறேன் என்று எழுதியிருந்தேன். ஆனால் நீங்கள் இப்போது என்ன எழுதியிருக்கிறீர்கள்? \\\வணக்கம் குறித்து நீங்கள் கூறிய இலக்கணம் தவறேன்று நான் எங்காவது கூறினேனா...? கொடுத்த விளக்கம் தான் ஏற்புடையதல்ல என்றேன். ஏனெனில் இன்று வணக்கம் என்ற சொல்லாடலுக்கு நீங்கள் கொடுத்த குறள் அகராதிப்படி விளக்கத்தை தான் பொதுவில் நாத்திகர்கள் பயன்படுத்துகிறார்களா..? என்பதே என் மையக்கருத்து. இதிலும் குற்றம் கண்டால் சொல்வதற்கு ஒன்றுமில்லை. எனக்கு எவரையும் குற்றப்படுத்தி அல்லது அவரை மட்டம் தட்டி தான் என் கருத்தை மிகைக்க செய்ய வேண்டும் என்ற எண்ணமில்லை/// இது நான் எழுதியதற்கான பதிலாக இருக்கிறதா? இப்படி சம்மந்தமில்லாமல் நீங்கள் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்று தானே நான் தொடர்ச்சியாக குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறேன். இதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டு என்னை உணர்ச்சியவயப்பட்டு அணுகுவதாக கூறியிருக்கிறீர்களே இது சரியா? சொல்லுங்கள் நீங்கள் செய்திருப்பது அறிவயப்பட்ட நிலையா? உணர்ச்சிவயப்பட்ட நிலையா?

    \\\உங்களின் போலி மற்றும் சந்தர்ப்பவாத கருத்துகளை தொடர்ந்து கண்ட போதே அப்படி சில கடுமையான சொற்களை உபயோகிக்க வேண்டியதாகி விட்டது/// என்றும் எழுதியிருக்கிறீர்கள். இது பொய்யான தகவலில்லையா? இதுவரை நாம் விவாதித்த வற்றில் நான் தான் கடுமையான சொற்களை பயன்படுத்தி இருக்கிறேன். அதற்கு எதிர்வினையாக, அதாவது, நான் பயன்படுத்தினேன் என்பதற்காக நீங்களும் பயன்படுத்தியிருக்கிறீர்கள், பயன்படுத்துவதாக தெரிவித்தும் இருக்கிறீர்கள். ஆனால் இப்போதோ என்னுடைய போலி, சந்தர்ப்பவாத கருத்துகளுக்காக கடுமையான சொற்களை பயன்படுத்தியதாக கூறுகிறீர்கள். இது போலி, சத்தர்ப்பவாத கருத்து, ஆகவே நான் இப்படி கடுஞ்சொற்களை பயன்படுத்தியிருக்கிறேன் என்ற உங்கள் மேற்கோள் எதையாவது காட்ட முடியுமா? ஏன் இப்படி நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் ஏதாவது உள்நோக்கம் இருக்கிறதா?

    ReplyDelete
  59. தொடர்ச்சி .. .. ..

    அடுத்து உங்கள் பாயிண்டுகளுக்கு வருவோம், \\\நூறு சதவீகிதம் உங்களோடு உடன்படாத புள்ளியில் நான் உங்களோடு விவாதித்துக்கொண்டிருக்கும் போது நீங்கள் சொல்லும் கருத்துக்கு முரண்பட்டு என் கருத்தை முன்வைத்தால் மட்டுமே நம் விவாததத்தை தொடர முடியும். அப்படியிருக்க எப்படி எதற்கும் மறுத்து நான் பேசிக்கொண்டிருப்பதாக கூற முடியும்/// இதை எதற்காக கூறியிருக்கிறீர்கள் என்றே புரியவில்லை. நான் கூறுவதற்கெல்லாம் நீங்கள் மறுத்துப் பேசுகிறீர்கள் என்று எந்த இடத்திலும் நான் உங்களைக் கூறியதாக நினைவில்லை. அப்படி இருந்தால் மேற்கோள் காட்டுங்கள். மற்றப்படி இது தேவையற்ற ஒன்று.

    அடுத்து நேர்மை குறித்து நீங்கள் எழுதியிருப்பது, \\\ஆரம்பத்திலிருந்தே உங்கள் பின்னூட்டத்தில் உங்கள் முகமுடியை கிழித்து விடுகிறேன், உங்கள் ஆணவத்தை அடக்குகிறேன். என பல்வேறு வீரதீர வசனங்கள் தான் நிறைந்திருந்தன. ஒருவரின் நேர்மையின்மையை நிருபிக்க வேண்டுமானால் அதை நிருபிக்க முன்வரும் நபர் சமூகத்தில் நேர்மையாளர் என சான்று பகிரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பாருங்கள் இந்த சமூகத்தில் முஸ்லிமாக என்னை அடையாளப்படுத்திய அளவிற்கு கூட நாத்திகனாக உங்களை நீங்கள் அடையாளப்படுத்தி இருக்கவில்லையென்பதே நீங்கள் மறுத்தாலும் உடைபடும் உண்மை. அதுமட்டுமில்லாமல் ஒருவரின் அறிவுக்கேற்பவே அவரது வாதங்களும் எடுபடும். என்னை தாண்டிய அறிவுடையவராக நீங்கள் இருப்பீன் உங்கள் தரப்பை இன்னும் ஆழமாக மெய்ப்படுத்தலாம். என்னால் தெளிவாக முன்மொழிய முடியாத தருணங்கள் என் குறை அறிவை தான் வெளிப்படுத்துமே தவிர என் நேர்மையை எடை போடாது. அதுமட்டுமில்லை எனது நேர்மையை எடை போட உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதே என் கேள்வி? ஏனெனில் நீங்கள் நேர்மையாளர் என யார் உங்களுக்கு சர்டிபிக்கெட் கொடுத்திருப்பது? அறிய செய்வீர்களா? ஆக வெறுமன எனது நேர்மைக்குறித்து உரத்தக்குரலெடுத்து கூப்பாடு போடவேண்டாம்/// முதலிலேயே பொய்யான தகவல். நீங்கள் குறிப்பிட்டிருப்பது போன்ற சொல்லாடல்களை தற்போதைய பின்னூட்டங்களில் நான் பயன்படுத்தியதில்லை. எனவே நான் கூறாத சொற்களை என்மீது திணிக்காதீர்கள். நீங்கள் எந்த அளவுக்கு உங்களை நீங்கள் மதாபிமானியாக வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது. தெரிந்தால் தான் நான் எந்த அளவுக்கு என்னை நாத்திகனாக வெளிககாட்டிக்கொண்டேன் என்பதோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியும். ஆனால் நீங்கள் அப்படி என்னைப் பற்றி தெரிந்து கொள்ளாமலேயே அவ்வாறான ஒப்பீட்ட்டை செய்திருக்கிறீர்கள், இது தவறான ஒப்பீடு. ஆனால், நீங்கள் முஸ்லீமாக உங்களை வெளிப்படுத்திக் கொண்ட அளவைவிட நான் நாத்திகனாக என்னை வெளிப்படுத்திக் கொண்ட அளவு அதிகம் என்று ஒரு விடயத்தில் என்னால் உறுதியாக கூறமுடியும். ஒருவன் முஸ்லீமாக வாழ்வதை எந்த நாட்டிலும் தடுப்பதில்லை. ஆனால் பல நாடுகளில் ஒருவன் நாத்திகனாக வாழ்வதை ஏற்பதில்லை. அப்படி ஏற்காத ஒரு நாட்டில் நான் நாத்திகனாக வாழ்ந்திருக்கிறேன். எந்தவித மத சடங்குகளிலும் நான் சமரசம் செய்து கொண்டதே இல்லை. இந்த விடயத்தில் உங்களைவிட அதிக துணிவோடும், இழப்புகளுக்கு அஞ்சாமலும் நான் நாத்திகனாக வாழ்ந்து காட்டியிருக்கிறேன். ஆனால் இவ்வாறு நான் கூறுவதைக் கொண்டோ நீங்கள் கூறுவதைக் கொண்டோ முடிவுக்கு வந்துவிட முடியுமா? வந்தால் அது சரியான முடிவாக இருக்குமா? நீங்கள் கூறுவதிலும் நான் கூறுவதிலும் இருக்கும் உண்மைத்தன்மை நீங்களோ நானோ கூறுவதைப் பொறுத்து தான் இருக்குமேயல்லாது உறுதித்தன்மை வாய்ந்ததாக இருக்காது. ஆனால் நம்மிடையேயான ஒரே உறவான எழுத்து என்பது உறுதியாக இருப்பது. நேற்று நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதும் இன்று நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்பதும் இணையத்தில் பதியப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே தான் கூறுகிறேன், உங்களின் நேர்மையின்மையை உங்களின் எழுத்தைக் கொண்டே கூறியிருக்கிறேன். நம்மிருவரைப் பொருத்தவரை எழுத்தைக் கொண்டு தவிர நேர்மையை உரசிப்பார்க்க வேறு கருவிகளில்லை. இதை ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா? அறிவுவயப்பட்டு பதில் கூறுங்கள்.

    தொடரும் .. .. ..

    ReplyDelete
  60. தொடர்ச்சி .. .. ..

    அடுத்து உங்கள் எழுத்தில் நேர்மையின்மை வெளிப்பட்டிருக்கிறது என்பதற்கு உங்கள் எழுத்திலிருந்தே பல ஆதாரத் தரவுகளைக் காட்டியிருக்கிறேன். அவைகளுக்கு உங்கள் பதில் என்ன? என்னை உணர்ச்சியவயப்பட்டவனாக சுட்டிக்காட்டும் முன்பு உங்கள் அறிவுவப்பட்ட பதிலைச் சுட்டிக் காட்டுங்கள். எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டிருக்கிறீர்கள்? யார் சான்றிதழ் தந்தது என்று கேட்டிருக்கிறீர்கள். எனக்கு இருக்கும் தகுதி என்னுடைய நேர்மை. நான் நேர்மையாக நடந்து கொள்கிறேன், அதானாலேயே நேர்மையின்மையைக் கண்டு சுட்டிக் காட்டுகிறேன். எனக்கான சான்றிதழைத் தந்ததும் நீங்கள் தான். பல்முறை கேட்டும் இன்றுவரை என்னுடைய எழுத்திலிருந்து என் நேர்மையின்மையை உங்களால் சுட்டிக்காட்ட முடிந்திருக்கிறதா? இல்லையே? இதைவிட வேறென்ன சான்றிதழ் வேண்டும்?

    அடுத்து பழைய ஆக்கம் தொடர்பாக, \\\நான் ஏற்கனவே சொல்லி விட்டேன். உங்கள் தளத்தில் உரையாடுவது எனக்கு பிடிக்கவில்லையென. ஆக சகோதரர் இப்ராஹூம் கொடுத்த சுட்டிக்கு நான் கொடுத்த மறுப்பு உங்களுக்கு போதவில்லையென்றால் அதனை இங்கே பதிவு செய்து என்னிடம் மீண்டும் மாற்றுக்கருத்து கேட்டிருக்க வேண்டும். இதுவரை உங்கள் எதிர்க்கருத்தை இங்கே பதிந்தீர்களா...? பகிராத ஒன்றுக்கு பதில் தரா என்னை பரிசீலனைக்கு உட்பட சொன்னால் அது எப்படி முறையான செய்கையாகும். தயவு செய்து இப்போவாது அந்த ஆக்கம் தொடர்பான உங்கள் வாதம் தான் என்ன? அறிய தாருங்கள்/// என்று கூறியிருக்கிறீர்கள். இதிலும் தொடக்கத்தில் நீங்கள் கூறியிருப்பது பொய்யான தகவல் பழைய செங்கொடி தளத்தில் நடந்த அந்த பின்னூட்ட விவாதத்தில் பின்னூட்டத்தில் முழுமையாக விவாதிக்க முடியவில்லை என்று தான் கூறியிருந்தீர்களே அல்லாது, செங்கொடி தளத்தில் விவாதிப்பது எனக்கு பிடிக்கவில்லை என்று நீங்கள் கூறவில்லை. அடுத்து, இப்ராகிமின் சுட்டிக்காட்டலுக்கு நீங்கள் கொடுத்த பதில் போதவில்லை என்று நான் கூறவில்லை. பதில் கூறிவிட்டதாக நீங்கள் இப்ராஹிமிடம் கூறியிருந்தீர்கள். அப்படியல்ல நீங்கள் பதில் என்ற போர்வையில் கூறியிருந்தீர்களே தவிர முறையான பதில் கூறவில்லை என்று கூறியிருந்தேன். அதன் பிறகு நீங்கள் இதை தவிர்த்து விட்டீர்கள். மீண்டும் இதை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விவாதத்தை தொடர்வேண்டும் எனும் நோக்கில் அந்த பின்னூட்டத்தை நான் எழுதவில்லை. மாறாக நீங்கள் பதில் கூறியதாக கூறியிருந்தீர்கள், ஆனால் அது பதிலாக இல்லை அப்படி பதில் கூறியதாக நீங்கள் கருதினால் சுட்டிக் காட்டுங்கள் என்று கேட்டிருந்தேன். இன்னொருமுறை அந்த முதல் பின்னூட்டத்தை படித்துப் பாருங்கள். என்றால் யார் அதற்கு எதிர்வினை செய்ய வேண்டும்? பரிசீலிப்பீர்களா? பரிசீலித்து அறிவுவயப்பட்டு பதில் கூறுங்கள்.

    அடுத்து இறுதியாக என்று மூன்று கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள். கேள்விகளுக்கு நான் என்றுமே அஞ்சுபவனல்லன். இந்தக் கேள்விகளுக்கு புதிதாக அல்ல பழைய என்னுடைய எழுத்துகளிலிருந்தே பதில் தருகிறேன். ஆனால் அதற்கு முன்னதாக எனக்கொரு உத்திரவாதம் வேண்டும். இதுவரை நடந்த விவாதங்களில் நீங்கள் நேர்மையற்று நடந்து கொள்கிறீர்கள் என நான் உங்களை எந்தெந்த அம்சங்களைக் கொண்டு குற்றம்சாட்டியிருக்கிறேனோ அந்தந்த அம்சங்கள் குறித்து விளக்கமளித்து இனி அவ்வாறு தொடராது என்பதற்கு உறுதியளிக்க வேண்டும். இரண்டு அம்சங்களை வலியுறுத்தி இதைக் கூறுகிறேன். 1) இந்தக் கேள்விகளுக்கு நான் பதில் கூறி அதிலிருந்து தொடரும் விவாதங்களில் மீண்டும் அதே நேர்மையின்மை போக்கை நீங்கள் வெளிப்படுத்தினால் என்னுடைய நேரம் மட்டுமல்லாது உங்களுடைய நேரமும் வீணாகும். 2) நீங்கள் கேள்வி கேட்பவராக இருந்து நான் பதில் கூறி அதைச்சுற்றி விவாதம் நடக்கும். ஆனால் நான் கேள்வி கேட்டால் அது திசைதிருப்பப்படும் என்று நடந்தால் அதுவும் பயனற்றுப் போகும். ஆகவே தான் கூறுகிறேன். விளக்கமளியுங்கள் உறுதி கூறுங்கள். நாம் விவாதத்தைத் தொடர்வோம்.

    தொடரும் .. .. ..

    ReplyDelete
  61. தொடர்ச்சி .. .. ..

    பின்குறிப்பு 1: பரிசீலனைக்கு ஆதாரத் தரவுகள் வேண்டுமா? விவாதம் என்று வந்துவிட்டால் எதிர்த்தரப்பு வைக்கும் வாதங்கள் அனைத்துமே ஆதாரத்தரவுகளின் அடிப்படையிலானவை எனும் நிலையிலிருந்து தான் அணுக வேண்டும். விவாதத்தில் வந்து நின்று கொண்டு ஆதாரமில்லாமல் போசுவதோ மேம்போக்காக பேசுவதோ கூடாது எனும் நிலையிலிருந்து தான் நான் வாதித்துக் கொண்டிருக்கிறேன். பரிசீலித்துப்பாருங்கள் ஆதாரமற்றதாக இருந்தால் இது ஆதாரமற்ற கூற்று எனவே இதை நான் மறுதலிக்கிறேன் என்று குறிப்பாக கூறுங்கள். அவ்வாறன்றி நீங்கள் பரிசீலிக்க மறுக்கிறீர்கள் என்று பலமுறை சுட்டிக்காட்டிய பிறகு பதில் கூறவேண்டுமே என்பதற்காக நீங்கள் ஆதாரத்தரவு தரவில்லை என்று பொத்தம் பொதுவாகக் கூறாதீர்கள். எந்தக் கூற்றுக்கு ஆதாரத்தரவில்லை என்று குறிப்பாக கூறுங்கள் அது எவ்வாறு ஆதாரபூர்வமாக இருக்கிறது என்று நான் கூறுகிறேன்.

    பின்குறிப்பு 2: அறிவு மிகைத்தவராக இருந்தால் அவர் வாதம் எடுபடும் எனும் பொருளிலும் கூறியிருக்கிறீர்கள். விவாதத்தில் உள்ளீடு தான் முக்கியம். சரியான உள்ளீடு இருந்தால் போதிய எடுத்துவைக்கும் திறன் இல்லாமலிருந்தாலும் ஒருவரால் சரியான நிலையை அடைய முடியும். அறிவு மிகைத்தல் என்பது சரியான உள்ளீட்டை அடைய உதவும். எனவே, என்னைவிட அறிவு மிகைத்தவராக நீங்கள் அல்லாதிருந்தாலும் சரியான உள்ளீடு இருக்கும் பட்சத்தில் உங்களால் விவாதத்தை சரியான திசை நோக்கி நகர்த்த முடியும். இதற்கு அடுத்த நிலையிலும் கூட என்னை விட நீங்கள் அறிவு மிகைத்தவராக இருக்கிறீர்கள் எனவே உங்கள் அளவுக்கு என்னால் திறம்பட வாதிக்க முடியாது எனவே நான் நீங்கிக் கொள்கிறேன் என் உங்களால் கூறியிருக்க முடியும். நீங்கள் அப்படி செய்ததில்லையே எனும்போது அறிவுமிகைத்தல் எனும் உங்கள் கூற்றும் செயலற்றுப் போகிறது.

    தோழமையுடன்
    செங்கொடி

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோ செங்கொடி

      பழைய பல்லவிக்கு மீண்டும் புதிய பதில்கள் தேவையில்லை.

      1. கடவுள் இல்லையென்பதற்கு அறிவியல் நிருபித்த ஆதார சான்றுகள் என்ன?
      2. நீங்கள் நாத்திகனாக தான் சவுதியிலும் இந்தியாவிலும் வலம் வந்தீர்களா?
      3. பொதுவெளி விவாதத்திற்கு ஏன் வர மறுக்கிறீர்கள்?

      Delete
  62. கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரம் நான் தான்.
    இவ்ளோ கழவி ஊத்தியும், கம்முனு கிடக்கே அந்த சவம்

    ReplyDelete
  63. அது எப்படி நண்பர் குலாம்,

    நீங்கள் பதில் கூற வேண்டும் என நிர்பந்தமான இடம் வரும்போதெல்லாம் உங்களுக்கு எல்லாம் பழைய பல்லவிகள் ஆகிவிடுகின்றன?

    உங்கள் மீது நேர்மையற்று நடக்கிறீர்கள் என்று குற்றச்சாட்டை கூறி அதை உங்களுடைய எழுத்திலிருந்தே நிரூபித்தும் காட்டியிருக்கிறேன்.

    நீங்கள் என் மீது சுமத்திய உணர்ச்சிவயப்பட்டு அனுகுகிறீர்கள் எனும் குற்றச்சாட்டை மறுத்தும் வாதங்களை வைத்திருக்கிறேன்.

    பதில் கூறியாக வேண்டிய நீங்கள் அவைகளெல்லாம் பழைய பல்லவிகள் விட்டுத்தள்ளுங்கள் என்கிறீர்கள்.

    கேள்விகளை முன்வைத்திருக்கிறீர்கள். (அதில் நாத்திகத்தின் முரண்பாடு காணாமல் போய்விட்டது) உங்களைப்போல் அவைகளை நான் கண்டும் காணாமல் கடந்து செல்லவில்லை. உங்களைப்போல் அவைகளை பதில் என்ற போர்வையில் ஏதேதோ எழுதி காலம் கடத்தவில்லை. உங்களைப்போல் அவைகளை வேறொன்றாக உருவகப்படுத்தி திரிககவில்லை.

    மாறாக பதில் கூறுகிறேன் என்று கூறியிருக்கிறேன். அதற்கு முன்னதாக உங்களுடைய என்னுடைய நேரம் வீணாகாதிருக்கும் பொருட்டு விளக்கம் கூறி உறுதி தாருங்கள் என்று கேட்கிறேன். நான் முஸ்லீமாக நடந்து கொள்கிறேன், மறுமையில் நான் பதில் சொல்ல வேண்டியதிருக்கும் என்றெல்லாம் சுற்றி வளைக்கும் உங்களால் “நான் நேர்மையாக நடந்து கொள்கிறேன், விவாதத்தில் நேர்மையாக நடந்து கொள்கிறேன்” என்று உறுதி கூற மட்டும் முடியவில்லையா? அட குறைந்தபட்சம் இன்னின்ன காரணங்களால் அவ்வாறான உறுதி எதையும் தர முடியாது என்றாவது கூறலாமே

    நண்பரே! உங்கள் நேர்மையைப்பற்றி எங்காவது விசாரித்து விட்டு வாருங்கள்.

    ReplyDelete
  64. இறுதி வரை உங்களால் உண்மையெனும் வட்டத்துக்குள் வரமுடியாதென்பதை தான் தற்போதைய பின்னூட்டம் வரை நிருபித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

    நன்றி!

    ReplyDelete
  65. நண்பர் குலாம்,

    இதற்கு மேலும் உங்களுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்க விரும்பவில்லை. எனக்கு வேறு வேலைகள் இருக்கின்றன. குறைந்தபட்ச நேர்மையைக் கூட காட்டத் துணியாத கோழைகளிடம் பொருதிக் கொண்டிருப்பது சரியானதும் அல்ல. ஒருமுறைபெரியாரிடம், “இவ்வளவு தள்ளாத வயதிலும் பிரச்சாரம் செய்து கொண்டிருகிறீர்கள். ஆனாலும் மாற்றம் ஒன்றும் இல்லையே. கடவுள் நம்பிக்கை அதிகரித்துக் கொண்டு தானே இருக்கிறது” என்று கேட்கப்பட்டது. அதற்கு பெரியார், “ரோஷம் இருக்கிறவனைத்தான் சிந்திக்க வைக்க முடியும்” என்று தயக்கமே இல்லாமல் பதில் கூறினார். அதே பதிலை உங்களுக்கும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

    இந்த பின்னூட்டங்களை நீக்கி விட மாட்டீர்கள் என நம்புகிறேன். என்றாவது யாரேனும் ஒரு நேர்மையாளர் உங்களுக்கு இவை குறித்து விளக்கக் கூடும்.

    உங்கள் தளத்தில் நான் இடும் கடைசி பின்னூட்டமாக இது இருக்கும். இதற்கும் நீங்கள் ஏதாவது பதிலளிப்பீர்கள் என்று எனக்கு தெரியும். ஒரு வேளை அது பதிலளிக்கும் அவசியத்தோடு இருந்தால் என்னுடைய தளத்தில் பதில் கூறிக் கொள்கிறேன்.

    என்னுடைய பின்னூட்டக் கருத்துகளை படித்துவந்த அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  66. அன்பு சகோ.,


    என் சிந்தையை தொடும் எந்த ஒன்றையும் பரிசிலனைக்கு எடுத்துக்கொண்டு தான் இதுவரை இருக்கிறேன். என் தவறுகள் சுட்டிக்காட்டப்படும் பொழுதுகளில்லாம் அதனை ஏற்று நேர்மையாளானாக தான் இருக்கிறேன். இறை நாடினால் நாத்திகம் தொடர்பாக எனது பதிவுகள் இன்னும் அழுத்தமாக தொடரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நீங்கள் தொடர்வதும் விட்டு விலகுவதும் உங்கள் விருப்பை சார்ந்தது. இறுதியாக நான் சொல்வது இதுதான். நாத்திகம், ஆத்திகம் போல நம்பிக்கை சார்ந்தது அல்ல என்பதே உங்கள் வாதம். அது ஆதாரப்பூர்வமான சான்றுகளை கொண்டது என கூக்குரலிட்டால் அதை சார்ந்தே உங்கள் பதிவுகளையும், பின்னூட்டங்களையும் இனியாவது எங்கையும் பதியுங்கள். அடுத்தவர் நேர்மையை உரசிப்பார்க்கும் தகுதி உங்களுக்கு இல்லை. பெரியார் கூறிய பதில் உங்களை காட்டிலும் வேறு யாருக்கும் இந்த நேரத்தில் பொருந்தாது.

    நன்றி
    உங்கள் சகோதரன்
    குலாம்.

    ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்