"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Monday, October 17, 2011

தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!


                                             ஓரிறையின் நற்பெயரால்.,

    சமீபத்தில் தமிழ்மணம் சில வகை பதிவுகளை கட்டண சேவை பிரிவில் தொடர வேண்டி அறிவிப்பு வெளியிட்டு பதிவர்கள் மத்தியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது நாம் அறிந்ததே.,
=====================================
இத்தலைப்பு தொடர்பாக நிறைய ஆக்கங்களை நீங்கள் காண இருப்பதால் சொல்ல வேண்டிய விசயம் குறித்து சுருக்கமாக இங்கே.,
=====================================
. . . 

 டெர்ரர் கும்மி என்ற வலைதளம் தமிழ்மணம் தொடர்பாக ஒரு காமெடிப்பதிவை .. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா என்ற பெயரில் வெளியிட்டது.,

 இப்பதிவிற்கு பெயரிலி என்ற பெயரில் தொடர்ந்து பின்னூட்டமிட்ட தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவரான சகோதரர் ரமணிதரன் தம் கோப மிகுதியால் இப்பதிவிற்கு சிறிதும் தொடர்பே இல்லாத

உங்கள் மீது சாந்தியும் (அமைதி) சமாதானமும் உண்டாவதாக..!! என்ற இஸ்லாமிய முகமனை திரித்து

// சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள். // 
 - என தமது பின்னூட்டத்தில் தேவையற்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தி இருக்கிறார்.

1. இப்பதிவு இஸ்லாமிய பதிவர்கள் எழுதிய பதிவும் இல்லை., இவ்வாக்கம் இஸ்லாமியர்கள் தளத்திலும் வெளியிடப்படவில்லை.


2.இப்பதிவு நேரடியாக தமிழ்மணம் எனும் திரட்டியை மட்டும் குறித்து வரையப்பட்ட பதிவு., ஆக இங்கு இஸ்லாமிய முகமனை முன்னிருத்தி பதிலிட அதுவும் இப்படி மோசமான சொல்லாடலை பயன்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை.

     இப்பின்னூட்டம் குறித்து தமிழ்மணம் நிர்வாகத்தாருக்கு, முஸ்லிம்கள் சார்பாக மெயிலிட்டு சகோதரர் ஆஷிக் அஹமத் (எதிர்க்குரல்)  விளக்கம் கேட்டும் அதற்கு பொறுப்பான பதில் சொல்லவில்லை., மாறாக தம் செய்கையை நியாயப்படுத்தி அவர்கள் கூறிய பதிலில் ஆணவ எழுத்துக்களே அதிகம் நிறைந்திருக்கிறது.,
(அவர்களுடன் நடைபெற்ற மெயில் உரையாடல் சான்றுகளும் இருக்கிறது)

      ஆக பதிவிற்கு தொடர்பில்லாமல் இஸ்லாமிய முகமன் பழிக்கப்பட்ட நிகழ்வுக்காக அந்த பெயரிலி சகோதரர் ரமணிதரன் இச்செய்கைக்கு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும்.

   அதுமட்டுமில்லாமல் அங்கு உரையாடிய சக பதிவர்களையும் தமது எழுத்தால் அவமானப்படுத்தியும் இருக்கிறார்., ஆக நிர்வாகிகளில் ஒருவரான சகோதரர் ரமணிதரன் இட்ட பின்னூட்டத்திற்கு தமிழ் மணம் பொறுப்பாகாது என்று தமிழ் மணம் நிர்வாகம் சொன்னால் அதற்கு சரியான காரணம் சொல்லியாக தான் வேண்டும்., ஏனெனில் அத்தள பின்னூட்டத்தில் முடிவில்

On behalf of tamilmanam
-/tramanitharan, k.
(-/பெயரிலி.)

  என்றே எழுதி தாம் தமிழ்மணம் சார்பாக பின்னூட்டமிட்டிருப்பதாகவே சொல்லியும் இருக்கிறார்.ஆக அவரது பின்னூட்டத்திற்கும் தமிழ்மண நிர்வாகத்திற்கும் தொடர்பு இல்லையென்று சொன்னால் அதற்கு தமிழ்மணம் அப்போதே எதிர்பை அல்லது தம் மறுப்பை தெரிவித்து இருக்க வேண்டும்.,

   ஆக இச்செயல்பாடு தமிழ்மண நிர்வாகத்திற்கு தெரிந்தே தான் அரங்கேறியிருக்கிறது., ஆக இந்நிகழ்வுக்கு தமிழ்மணம் சரியான காரணம் சொல்ல வேண்டும் இல்லையேல்

   தனது அநாகரிக பேச்சால், அத்துமீறிய செய்கையால் ஆணவ போக்கால் தமிழர் மத்தியில் தமிழ்மணம் தரம் தாழ்வது போக போவது நிரந்தரம்., அத்தகைய இழிநிலை தமிழ்மணத்திற்கு ஏற்பட வேண்டாம் என்பதை வருத்ததோடு தெரிவித்துக்கொள்கிறேன்.,


புரிந்துணர்வுடன் இனியாவது தமிழ்மணம் தம் ஒத்துழைப்பை தொடரட்டும்...
நன்றி.!





தமிழ்மணம் கவனிக்க தவறிய தமிழ் மனங்களின் வார்த்தைகளையும் கொஞ்சம் கவனியுங்க:)
(தமிழ் மனங்களின் மீது அக்கறை கொண்ட எல்லோரும் இதை ஏனையோருக்கும் பார்வேர்டு செய்வதற்கு வசதியாக)

1. சகோதரி அஸ்மா:
 http://payanikkumpaathai.blogspot.com/2011/10/blog-post_17.html
 

2. சகோதரர் குலாம்: 
http://iraiadimai.blogspot.com/2011/10/blog-post_16.html
 

3. சகோதரர் Faaique:
http://faaique.blogspot.com/2011/10/blog-post_16.html
 

4. சகோதரர் முஹம்மது ஆஷிக்: 
http://pinnoottavaathi.blogspot.com/2011/10/blog-post_17.html
 

5. சகோதரர் அப்துல் பாசித்:  
http://bloggernanban.blogspot.com/2011/10/remove-tamilmanam-vote-button.html
 

6. சகோதரர் ஹைதர் அலி:
 http://valaiyukam.blogspot.com/2011/10/blog-post_16.html
 

7. சகோதரி ஆமீனா: 
http://kuttisuvarkkam.blogspot.com/2011/10/blog-post_17.html
 

8. சகோதரர் ஜமால்: 
http://www.itsjamaal.com/2011/10/my-dear-blog-friends.html
 

9. சகோதரர் ரஜின்: 
http://sunmarkam.blogspot.com/2011/10/blog-post.html
 

10. சகோதரர் இளம் தூயவன்:  
http://ilamthooyavan.blogspot.com/2011/10/blog-post.html
 

11. சகோதரர் அந்நியன் 2 (அய்யூப்): 
http://naattamain.blogspot.com/2011/10/blog-post.html
 

12. சகோதரர் கார்பன் கூட்டாளி:  
http://carbonfriend.blogspot.com/2011/10/blog-post.html
 

13. சகோதரி ஜலீலா கமால்: 
http://samaiyalattakaasam.blogspot.com/2011/10/blog-post_17.html
 

14. சகோதரர் சிநேகிதன் அக்பர்:  
http://sinekithan.blogspot.com/2011/10/blog-post.html
 

15. சகோதரர் ஹாஜா மைதீன்: 
http://hajaashraf.blogspot.com/2011/10/blog-post.html
 

16. சகோதரர் HajasreeN:  
http://hajasreen.blogspot.com/2011/10/blog-post_17.html
 
17. சகோதரர் அரபுத்தமிழன்: 

18. சகோதரர் அப்துல் ஹகீம்:  
http://neermarkkam.blogspot.com/2011/10/thamil-manme-mannippukkeel.html
                                                   

    இறை நாடினால் இனியும் தொடரும்....


38 comments:

  1. தமிழ்மணத்தில் ஒரு மாற்றம் நிகழ்த்தும்போதும்,புதிய முடிவு எடுக்கும்போதும் சம்பந்தபட்டவர்களுக்கு முறையான அறிவிப்பு கொடுக்க வேண்டும்.அது இல்லையெனில் அதென்ன மானங்கெட்ட நிர்வாகம்..?

    ReplyDelete
  2. கேள்வி நியாயமானது சகோ.பதில் கிட்டாது,ஆணவம் தலைக்கு மேல்!

    ReplyDelete
  3. தமிழ்மணத்திற்கு என் கண்டனங்கள்.

    ReplyDelete
  4. தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா

    நன்றி சகோ

    ReplyDelete
  5. தமிழ்மணத்தை விடுங்க
    இண்ட்லி

    தேன்கூடு

    உலவு

    திரட்டி

    தமிழ்வெளி -னு நமக்கு பல திரட்டிகள் உள்ளன.

    ReplyDelete
  6. தமிழ்மணம் இத்தோடு வெளியேற வேண்டும் அல்லது
    மன்னிப்பு கோர வேண்டும்

    ReplyDelete
  7. மண்னிப்பு கேட்கும் வரை தமிழ்மணத்தை தூக்கியெறிவோம்
    http://iyakkangal.blogspot.com/2011/10/blog-post_17.html

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    நம் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!!!

    தமிழ் மனங்களின் இந்த எதிர்ப்பை தமிழ்மணம் இந்தளவிற்கு எதிர் பார்த்திருக்காதென்ற நினைக்கிறேன்., இப்பொழுது தமிழ் மனங்களை குறித்து தமிழ்மணம் தெளிவாய் அறிந்திருக்கும் ஆக இனியும் தம் போக்கை தமிழ்மணம் மாற்றிக் கொள்ளாவிட்டால் தம் logo வை "ங்" லிருந்து "ஙே" க்கு தான் மாற்றிக்கொள்ள வேண்டும்.

    -இறை நாடினால் இனியும் சந்திப்போம்

    ReplyDelete
  9. 1. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...


    2.. தமிழ்மணம் சரவெடி! தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.


    3.
    தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!


    4. தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!

    5.
    தமிழ்மணம் ‍ ஊரை விட்டு போரேன் ஊராரோ !!!


    6.
    தமிழ்மணமா? தமிழர்களின் மனமா?


    7.
    தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..


    8.தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்க


    9. மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!


    10. "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?
    11. தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா


    12. அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! >


    13. தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???
    14. தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள்


    15. தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே!


    16. விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?


    17. தமிழ்மணமே மன்னிப்புகேள் 2

    18.தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...


    19. தமிழ்மணத்துக்கு கடுமையான கண்டனங்கள்


    20. தமிழ்மணத்திற்கு ஒரு இறுதிக் கடிதம்!


    21. யாருக்கு வேனும் உங்கள் ஓட்டு பட்டை

    22. பதிவுலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.


    23. தமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் ?


    24. சீ தமிழ் மனமே .......

    ஷைத்தானுக்கு கூட வெறும் 7 கல்லுதான் அடிப்பாங்க.... தமிழ் மணத்துக்கு எத்தனை கல்லுப்பா.....
    இன்னும் எத்தனை கல்லு எந்தப் பக்கம் இருந்தெல்லாம் வரப் போகுதோ!!!!

    ReplyDelete
  10. http://kjailani.blogspot.com/2011/10/blog-post.html


    தமிழ்மணமே இந்த வாரத்துக்குள் மண்ணீப்பு கேள்..!!!

    ReplyDelete
  11. தமிழ்மணமே மன்னிப்புக்கேள்
    ரமணிதரனை நிர்வாகப் பதவியிலிருந்து வெளியேற்று

    ReplyDelete
  12. இங்கே கிறிஸ்தவர்களைப் புண்படுத்தும் இஸ்லாமியர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    http://bibleunmaikal.blogspot.com/
    http://christianpaarvai.blogspot.com/

    ReplyDelete
  13. http://www.etisalat.ae/index.jsp?type=proxy

    is the place where you can recommend ETISAT to block Tamilmanam in UAE. I already submitted the request.

    ReplyDelete
  14. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  15. தமிழ்மணத்தை எதிர்க்கிறோம் என்கிற காரணத்திற்காக பொய்யான விஷயங்களை பரப்பாதீர்கள் என்பதே எமது தரப்புவாதம்.
    பதிவுலகில் மதவாத சக்தி தவறாகப் பயன்படுகிறதா?

    ReplyDelete
  16. உங்கள் அனைவர் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!!
    இப்பதிவு எப்படி எனக்கானதன்றோ அதுப்போல நீங்கள் இட்ட பின்னூட்டமும் உங்களுடையதன்று அனைத்தும் பொதுவானவையே! ஆக இடப்பட்ட பின்னூட்டத்திற்காக யாருக்கும் என் சார்பாக நன்றி கிடையாது. எனினும் காலம் கறிந்து, சூழல் அறிந்து, நோக்கம் அறிந்து செயல்பட்ட...

    ReplyDelete
  17. @சகோ raavanan

    @சகோ ’’சோதிடம்’’ சதீஷ்குமார்

    @சகோ ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~

    @சகோ Yoga.S.FR

    @சகோ Abdul Basith

    ReplyDelete
  18. @சகோ ஹைதர் அலி

    @சகோ UNMAIKAL

    @சகோ வேதாளம்

    @சகோ அஸ்மா

    @சகோ வைரை சதிஷ்

    ReplyDelete
  19. @சகோ சிகப்பு கடல்

    @சகோ Mohamed Faaique

    @சகோ ஜெய்லானி

    @சகோ abdul hakkim

    ReplyDelete
  20. மேற்கண்டவர்களுக்கும்
    நேரமின்மையால் இங்கு வருகை தராமல் ஏனைய சகோதர தளங்களில் கருத்திட்ட அனைவர்களுக்கும் சேர்த்து ஒரு வார்த்தை.,



    புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.
    ( இது மெய்யாலும் தாங்க... )

    ReplyDelete
  21. அன்பு சகோ ராபின்
    உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
    ஒரு கொள்கைக்குறித்து விமர்சிப்பதற்கு இஸ்லாமியரோ அஃது இல்லாதவரோ இருக்கவேண்டிய அவசியமில்லை. யாராக வேண்டுமானாலும் பொதுவில் வைக்கப்படும் விசயத்தை குறித்து விவாதிக்கலாம்- விமர்சிக்கலாம்.ஆக அதனடிப்படையில் கிறித்துவம் இஸ்லாம் மற்றும் ஏனைய கோட்பாடுகள் குறித்தும் விமர்சிக்க - விளக்கம் அளிக்கப்படுகிறது.

    ஆனால் அப்படி விமர்சிக்கப்படும் அந்த கொள்கை ஆதாரமற்றதாகவோ., ஊகங்களிலோ அல்லது தனது சொந்த வெறுப்பு- விருப்பில் அமைந்ததாகவோ இருக்கக்கூடாது., ஆக நீங்கள் மேற்கோள் காட்டும் அந்த தளத்தில் மேற்சொன்ன அடிப்படையில் ஆக்கங்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்., இன்ஷா அல்லாஹ் நான் உங்கள் சார்பாக கண்டனத்தை பதிவு செய்கிறேன். அவரிடம் அதுக்குறித்தும் வினவுகிறேன். ஏனெனில் எங்கு தவறை காணிணும் தம் கரத்தால், அல்லது நாவால் தடுக்கவேண்டும் அஃதில்லையேல் குறந்த பட்சம் மனதால் அத்தவறை வெறுத்து ஒதுக்க வேண்டும் என்பது நபிமொழி - இதுவரை என் சக்திக்குட்பட்டு அதை தான் செய்து வருகிறேன். இனியும் செய்வேன் -இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  22. சகோ அனானி
    உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
    தேவையற்ற சாடலகளை பயன்படுத்தி இருக்கிறீர்கள் உங்கள் கருத்தை வெளியிட முடியாது., உங்கள் கயமைத்தனத்தை மூட்டைக்கட்டி வைத்து எதையும் நேர்மையாக சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  23. அன்பு சகோ smart
    உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

    சகோதரரே இங்கு நீங்கள் உட்பட சகோ ரமணிதரனுக்கு ஆதரவாய் பேசும் யாரும் அந்த பிரச்சனைக்குரிய வார்த்தையான சாந்தியும் சமாதானமும் என்ற வார்த்தையின் பயன்பாட்டை குறித்து தான் பேசுகிறீர்கள்.,

    இங்கு நானோ அல்லது ஏனைய எந்த இஸ்லாமிய பதிவரோ அந்த வார்த்தையை இஸ்லாமியரல்லாத ரமணிதரன் பயன்படுத்தியது தவறு என்று சொல்லவில்லை., இன்னும் சொல்ல போனால் அந்த வார்த்தையை இஸ்லாம் அல்லாதவர்களும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே தான் என் எந்த ஒரு பின்னூட்டத்தின் தொடக்கத்திலும் அவ்வாக்கியத்தை சேர்த்திருக்கிறேன்., ஏனைய இஸ்லாமிய பதிவர்களும் அப்படியே!

    ஆக இங்கு அவ்வார்த்தை இஸ்லாமியர்களுக்கு மட்டுமே சொந்தமான அடையாள மொழி வார்த்தையாக நாங்கள் நிறுவ முயலவில்லை., அதற்காக தமிழிலும் சமஸ்கிருததிலும் ஆதாரம் தேட தேவையில்லை.,

    மாறாக பெரும்பாலான இஸ்லாமியர்களின் சொல்வழக்கு வார்த்தைகளை கொச்சைப்படுத்தும் நோக்கில்
    //சாந்தியும் அவ அக்கா சமாதானியும்// என ஆபாசப்படுத்தியது ஏன் என்று தான் ஆதங்கப்படுகின்றோம்..

    இன்னும் சொல்ல போனால் இங்குள்ள சிலப் பதிவுகளை தவிர ஏனைய அனைத்துப்பதிவுகளும் நாத்திகர்களுக்கேதிரான விமர்சனங்களாக தான் இருக்கின்றது., ஆக அதன் விளைவாக நாத்திகர்களிடம் உரையாடும் போது இஸ்லாமிய மீதான வசைப்பாடல்களை வீசத்தான் செய்கிறார்கள்., ஆனால் அவர்களுக்கு எதிராக நாங்கள் ஒன்றுக்கூடி பதிவு போடுவதில்லை.

    மாறாக இதை எதிர்த்து மட்டும் பதிவு போட காரணம் ., அவர்கள் எல்லோரும் தனிமனித செய்கையாக தான் தங்களை அங்கிகரித்து சொல்கிறார்கள்., ஆனால் இங்கோ ஒரு திரட்டி சார்பாக ஒருவர் கருத்து பதிவிடும் போது அதுவும் ஒரு "நடு நிலையான திரட்டி" என பெயர் பெற்ற திரட்டியின் பெயரில் கருத்திடும் போது எப்படி வெறுமனே இருக்க முடியும்

    சகோ.,இருந்தாலும் எடுத்தோம் - கவிழ்த்தோம் என நாங்கள் இப்பதிவுகளை இடவில்லை, மாறாக மூன்று தினங்களுக்கு முன்பாக தமிழ்மணத்திடம் மெயில் மூலமாக இதற்கு காரணம் கேட்டும் -அவர்களின் திமிர்தனமான பதிலே இப்பதிவுகளின் வெளியீடுகளுக்கு தலையாய காரணம்.,

    ஆக உங்கள் புரிதலில் தவறு இருக்கிறதென்றே நினைக்கிறேன்.

    //தமிழ்மணத்தை எதிர்க்கிறோம் என்கிற காரணத்திற்காக பொய்யான விஷயங்களை பரப்பாதீர்கள் என்பதே எமது தரப்புவாதம். மற்றபடி தமிழ் மணம் அல்லது பதிவர்கள் பிரச்சனையில் யாருக்கும் ஆதரவாளன் அல்ல. //
    இது தான் நான் உங்களுக்கு சொல்ல வருவதும்

    ReplyDelete
  24. மேற்படி, தமிழ்மண நிர்வாகிக்கு என்னுடைய கண்டனங்கள்.

    ReplyDelete
  25. //ஆக இங்கு அவ்வார்த்தை இஸ்லாமியர்களுக்கு மட்டுமே சொந்தமான அடையாள மொழி வார்த்தையாக நாங்கள் நிறுவ முயலவில்லை//

    “தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்…”
    அப்படி என்றால் இது போன்ற தலைப்பிட்ட பதிவுகள் அனைவர் சார்பாக எழுதப் பட்டதா? தலைப்புக்கு உங்கள் பதில் என்ன?

    உங்களை பரமபிதா ஆசீர்வதிப்பாராக!

    ReplyDelete
  26. அன்பு சகோ smart
    உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
    சென்ற பின்னூட்டத்திலே., தெளிவாக சொல்லி இருக்கிறேன்., அந்த வார்த்தையே சகோ ரமணிதரன் பயன்படுத்தியற்தாக யாரும் அவரை / தமிழ்மணத்தை எதிர்த்து பதிவு போடவில்லை
    //மாறாக பெரும்பாலான இஸ்லாமியர்களின் சொல்வழக்கு வார்த்தைகளை கொச்சைப்படுத்தும் நோக்கில்
    //சாந்தியும் அவ அக்கா சமாதானியும்// என ஆபாசப்படுத்தியது ஏன் என்று தான் ஆதங்கப்படுகின்றோம்.. // - இப்படி!
    மேலும் விரிவான விளக்கமும் பதிவில் இருக்கிறது. ஆக உங்கள் பின்னூட்டம் திசை திருப்பலை மையப்படுத்தியதாக இருப்பதாக உணர்கிறேன்.
    தமிழ்மணமும் தங்களது வருத்ததை தெரிவித்து இருக்கிறது., சகோ பொறுத்திருந்துங்கள் .,

    //உங்களை பரமபிதா ஆசீர்வதிப்பாராக! //
    உங்களையும் ஆசிர்வதிக்க வேண்டும் என்பதே என் ஆவல்.
    .

    ReplyDelete
  27. வார்த்தையிலும் தன எழுத்திலும் கண்ணியம் இல்லையெனில், ஒரு நிருவாகியாக பணியாற்ற தகுதி இல்லை ,இதை திரட்டியினர் அறிந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  28. neenga la aen unga kumbaloda serndhu pesuringa.
    muslim muslim nu aen kudhikureenga. ellarum onnu ninaikam a oo nu aduringa. kudutha link ellam ore muslim, orutharavathu hindu christian la ungaluku support panrangala. cha aetachum onnu aachuna kumbala serndhu group form panikuringa.

    ReplyDelete
  29. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    நம் அனைவர்கள் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.......!

    என்னால் இணையத்தில் சரிவர உலா வர முடியாமையால் என்னுடைய கண்டனத்தையும் தமிழ் மணத்திற்கு வெளிப்படுத்த முடியவில்லை, இருந்தும் நம் சகோத மக்களின் ஒற்றுமையால் ஏக இறைவனின் உதவியால் வெற்றி கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ்.........!

    தமிழ் மணம் ஒரு உயர்ந்த திரட்டி, அதன் சார்பாக எதை வெளியிட்டாலும் மறுப்பு தெரிவிக்க யாரும் இல்லை என்ற எண்ணத்தில் இரமனீதரன் (பெயர்லி) தமிழ் மணம் மூலமாக உலா வந்துக்கொண்டிருந்தார், அதை நம் சகோத தகர்த்தெரிந்தார்கள் என்பதை அந்த வெந்த மணம் உணர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை, அல்ஹம்துலில்லாஹ்............!

    மேலும் நம் சகோ இதுப் போன்ற விஷயங்களை கண்டறிந்து சுட்டிக்காட்டுவதில் தயக்கம் கொள்ளக்கூடாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். வஸ்ஸலாம்...........

    ReplyDelete
  30. @G u l a m
    உங்கள் கருதத்தில் மாறுபட்டாலும் உங்கள் கண்ணியமான பதில்கள் பிடித்திருக்கிறது நன்றி

    இஸ்லாமிய நாடுகளில் தமிழ்மணத்தை தடை செய்வோம் என்று சொல்வது பெரிய மிரட்டலாகத் தானே தெரிகிறது. அப்படிஎன்றால் "சாந்தி" "சமதானம்" என்கிற வார்த்தையை இனி யாருமே எவருமே எந்த காலத்திலும் எந்த இடத்திலும் கிண்டல் செய்யக் கூடாது என்று கூற உங்கள் குழுவிற்கு என்ன உரிமையுள்ளது?

    ReplyDelete
  31. முந்தயது
    "தமிழ்மணம்மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவ வேண்டாம்"

    இரண்டாவதாக
    "சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்"
    இந்த இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால்தான் அறியாமல் எழுதியவைஅல்ல என்பதை புரிந்துகொள்ளமுடியும்.


    பெயரிலி சொன்னதுக்கு தமிழ்மணம் பொறுப்பேற்க முடியாது என்பது ஏற்புடயதாக இல்லை
    பதிவர்களை கேவலமாக திட்டும் தம்ழ்மணமே மன்னிப்புகேள்

    ReplyDelete
  32. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    @ சகோ Starjan ( ஸ்டார்ஜன் )
    @சகோ இளம் தூயவன்
    @சகோ Haja
    @சகோ வ‌.அன்சாரி

    ஜஸாகல்லாஹ் கைரன்
    புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.
    .

    ReplyDelete
  33. அன்பு சகோ Anony
    உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

    ஏனையவர் தவிர்த்து இஸ்லாமியர்களை மட்டும் மேற்கோள் காட்ட என்ன காரணம்..? நல்ல கேள்வி தான். ஏன் பதிவிடப்பட்டது என ஆக்கத்திலும் ஏனைய பின்னூட்டத்திலும் சொல்லியிருக்கிறேன்.

    //ஆக பதிவிற்கு தொடர்பில்லாமல் இஸ்லாமிய முகமன் பழிக்கப்பட்ட நிகழ்வுக்காக அந்த பெயரிலி சகோதரர் ரமணிதரன் இச்செய்கைக்கு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும்.
    அதுமட்டுமில்லாமல் அங்கு உரையாடிய சக பதிவர்களையும் தமது எழுத்தால் அவமானப்படுத்தியும் இருக்கிறார்.,// -இப்படி!

    ஆக சக பதிவர்களை அவமானப்படுத்தியது ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும் இஸ்லாமிய முகமன் பழிக்கப்பட்டதை மையப்படுத்தியே தமிழ்மணம் மீதான கண்டன இடுகை. ஏனெனில் இப்பதிவின் முடிவில் பதிவிட்ட எல்லோருக்கும் பாதகமான சூழ்நிலையும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதாவது பின்னூட்டரீதியான் எதிர்ப்புகள் , தமிழ்மணம் திரட்டியிலிருந்து நீக்கம் போன்றவை

    ஆக எங்களை தவிர்த்து ஏனைய பதிவாளர்களும் பாதிக்கப்ட கூடாதென்பதற்காகவே மற்றவர்களின் இடுகைகளின் லிங்க் தரப்படவில்லை.

    ReplyDelete
  34. அன்பு சகோ smart
    உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
    இஸ்லாமிய நாடுகளில் தமிழ்மண தடை ஏற்பட செய்வதில் எனக்கு அந்த அளவு உடன்பாடு இல்லை.ஏனெனில் ஏனைய நடுநிலைவாதிகளின் நல்ல பதிவுகள் கூட பார்வையாளர்களை சென்றடையும் வாய்ப்புக்குறைவு. ஆனால் தடை செய்வதற்கான காரணம் அலசப்பட வேண்டியது அவசியம்...

    சாந்தி சமாதானம் என்ற சொல்லை இப்போது அல்ல எனக்கு தெரிந்த வரையில் முன்னமே கிண்டல் செய்யப்ப்ட்டுக்கொண்டுதான் இருக்கிறது., ஆனால் அதற்கும் இங்கு கையாளப்பட்ட சொல்லாடலுக்கும் நிரம்ப வித்தியாசம் உண்டு.

    அங்கேயல்லாம் தனிப்பட்ட நபர் சார்ந்த செயலாக அவ்வாக்கியம் நிறுவப்பட்டது. மேலும் கிண்டல் என்ற அளவிலும் மட்டுமே இருந்தது., ஆனால் சகோ இரமணிதரனோ பின்னூட்டதை தனிப்பட்ட நபரின் செயலாக முன்வைக்கவில்லை., ஒரு நிர்வாகம் சார்ந்தே இக்கருத்தை பதிவு செய்துள்ளார். அத்தோடு அவ்வாசகத்தை கிண்டல் செய்யவில்லை மாறாக கொச்சைப்படுத்தியுள்ளார் என்பதே இங்கு கவனிக்கப்படவேண்டிய செய்தி.,

    இஸ்லாத்தை பொருத்தவரை ஆதாரிப்பதற்கும்- எதிர்ப்பதற்கும் அளவுகோல் குர்-ஆன் / சுன்னா மட்டுமே மாறாக குழும சார்ந்து செயல்படுதல் அல்ல., குழுமம்- ஒரு எளிய வழி செயலாக்க முறை அவ்வளவே ! நாளை நானே இஸ்லாத்திற்கு முரணான பதிவிட்டால் எனக்கும் எதிர்ப்பு , மறுப்பு தெரிவித்து கண்டனப்பதிவுகள் வலம் வரும்.

    ஆக சகோதரர் ரமணிதரன் செய்தது தவறே இல்லையென்றாலும் அவ்விடத்தில் தேவைற்று அந்த சொல்லாடலை பயன்படுத்த வேண்டிய அவசியமென்ன...? என்பதே என் பிரதான கேள்வி
    -மாற்றுக்கருத்து இருப்பீன் மற்றவை பிற
    .

    ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்