"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Tuesday, February 14, 2012

கி.மு வில் கடவுள்!

                                  ஓரிறையின் நற்பெயரால்


"ஆரம்பத்தில் பல தெய்வ கொள்கையில் விற்றிருந்த மனித சமூகம் பின்னாளிலே ஓரிறையின் பக்கம் ஈர்க்கப்பட்டது." 
இப்படிதான் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை கடவுளுக்கும் மனித சமூகத்திற்கும் உள்ள உறவுக்குறித்து கருத்து பொதுவாக இவ்வுலகத்தில் நிலவி வந்தது.

ஆனால் இந்த நூற்றாண்டில் மனித இனம் (ANTHROPOLOGY) தொடர்பான ஆய்வுகளும், அகழ்வராய்ச்சி (ARCHAEOLOGY) குறித்தும் மிகதுல்லியமாக நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் மேற்கண்ட கருத்தியலுக்கு மாற்றமாய் ஒரு முடிவை சொன்னது.
 அதாவது,  மனித சமூகங்கள் மண்ணில் தோற்றுவிக்கப்பட்ட காலத்திலிருந்தே ஓரிறைக்கொள்கை வலம் வர தொடங்கிவிட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக.,
"மனித இன இயலின் ஆதாரப்படி பூர்விக இனங்களின் ஆதிமதம் உண்மையிலேயே ஏக இறைக்கொள்கையாகவே இருந்தது"  - என அகழ்வராய்ச்சித் துறையின் பிரபல பேராசிரியர் சர். சார்லஸ் மார்ஸ்டனும் (SIR. CHARLES MARSTON)
 " ... ஆதி மனிதனின் ஆரம்பக்கால வரலாற்றின் படி, மத நம்பிக்கை ஏக தெய்வ வணக்கத்திலிருந்து பல தெய்வ வணக்கத்தின் பால் சரிந்தது என்பதும் ,  ... ஆதி மனிதன் இறப்பிற்கு பின்னால் ஒரு வாழ்வு உண்டென்பதிலும் நம்பிக்கை வைத்திருந்தான் - என்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பேராசிரியர் டாக்டர். லாங்க்டன் கூறுகிறார்.
இந்த ஆய்வுகளை வைத்து மட்டுமின்றி தர்க்கரீதியாகவும் மனிதமூலங்களின் ஆரம்பம் ஓரிறைக்கொள்கை என்பதை நிருபிக்கலாம்.

இன்று பல தெய்வ கொள்கைகள் மற்றும் கடவுள் மறுப்புகள் இருக்கிறதென்றால். அவை இவற்றிற்கு எதிரான மூலத்திலிருந்து தான் பெறப்பட்டிருக்க வேண்டும். அதாவது இவை இரண்டுக்கும் எதிராக பின்பற்றப்படும் ஒருக்கொள்கை இருந்தால் மட்டுமே இவை இரண்டும் இப்போது பின்பற்றப்பட சாத்தியம். ஆக கடவுள் மறுப்புக்கு எதிராக கடவுள் ஏற்பும், அதே நேரத்தில் பல தெய்வ கொள்கைகளுக்கு எதிராக ஒருக்கொள்கையும் இருக்கவேண்டுமானால் அது ஓரிறைக்கொள்கையாக தான் இருத்தல் வேண்டும்.

     நாத்திகத்தின் பொதுவான சித்தாந்தம் பரிணாமம் மூலமே மனித உயிர்களின் உற்பத்தி தொடங்கியது என்பதே! சரி ஒரு வாதத்திற்கு அதை ஏற்றுக் கொண்டாலும் உயிர் வாழ சிறிதும் தொடர்பே இல்லாத இறை நம்பிக்கை என்ற ஒன்று ஏன் ஆதிமனிதனுக்கு ஏற்பட வேண்டும்..?

 அன்றைய கட்டத்தில் உயிர்வாழ காற்றே பிரதான ஆகாரமாக இருக்க "அக்ஸிஜன் குறித்து அறியவேண்டிய ஆரம்பகால மக்கள் கடவுள் குறித்து அறிந்து வைத்திருப்பது எப்படி?   


இயற்கையே எல்லாவற்றிற்கும் போதுமானதென்றால் ,

 • இல்லாத கடவுள் குறித்து அவர்களுக்கு ஏன் தெரிய வேண்டும்.? 
 • கடவுள் என்ற ஒன்று இருப்பதை அறிந்திடாத அந்த சமூகத்திற்கு கடவுள்  குறித்து யாரால் விளக்க முடியும்...? 
 • அதை விட முக்கிய கேள்வி ஏன் விளக்க வேண்டும்..? - 

தேவையில்லாத ஒன்றை தேவையில்லாத நிலையில் தேவையில்லாமல்...  தெளிவாய் முன்மொழியப்பட வேண்டிய அவசியம் என்ன?

  இதெற்கெல்லாம் ஒற்றை வரியில் பதில் தருவதாக இருந்தால் ஆதிமனிதர்கள் இயற்கையே உயிர் உருவாக்கியாக ஏற்காமல் இயல்பாகவே கடவுளைக்குறித்து அறிந்து வைத்திருந்தார்கள் .எனினும் அவர்களுக்கு பின்பற்ற வேண்டியவைகள் குறித்து விளக்கி கூற அவர்களிலிருந்தே ஒருவர் கடவுளால் தேர்ந்தேடுக்கப்பட்டு அந்தந்த சமுதாயத்திற்கு அனுப்பப்பட்டிருப்பது தான் உண்மை.

இதை அல்லாஹ் தன் மறையில் 


(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்;. அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்;. அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்... (02:213) 
என தெளிவாக ஆதி மனித நிலைக்குறித்து கூறுகிறான்

ஆக ஓரிறையின் பால் மக்களை அழைக்கும் செயலானது முஹம்மது நபி அவர்களால் புதிதாக தொடங்கப்பட்டதல்ல. மாறாக ஆதி மனிதரிலிருந்து தொடங்கி நபி மூஸா, நபி ஈஸா வரையிலுமே பின்பற்றப்பட்டது - பின்பற்றும்படி மக்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சி முஹம்மது நபி அவர்களின் வருகையோடு முற்றுப்பெற்றது.

ஆக எல்லா இறைத்தூதர்களுமே அல்லாஹ் என்ற ஓரிறையை ஏற்க சொல்வதற்கே மனித சமூகத்திற்கு அனுப்பப்பட்டனர். மாறாக அல்லாஹ்வை வணங்குமாறு முஹம்மது நபிகள் மட்டும் புதிதாய் இஸ்லாத்தை போதிக்கவில்லை. இதற்கு ஒரு எளிய உதாரணம் பாருங்கள்.

இஸ்லாத்தை விமர்சிப்போருக்கும் தெரியும் முஹம்மது நபிகளின் தந்தை பெயர் அப்துல்லாஹ் (அப்து (அடிமை) + அல்லாஹ்) என்று . இதற்கு பொருள் அல்லாஹ்வின் அடிமை. முஹம்மது நபிகளின் வருகைக்கு பிறகே அல்லாஹ் என்ற கடவுளை வணங்க வேண்டிய கொள்கை போதிக்கப்பட்டிருந்தால் அவரது தந்தையின் பெயரை அப்துல்லாஹ் என யார் வைத்தது...?


முஹம்மது நபியா....?!

அல்லாஹ் என்ற பதம் முஹம்மது நபியால் அறிமுகப்படுத்தப்பட்டது என்போர் இதற்கு பதில் தரட்டும்.

. . . 
 உண்டு என்பதற்கு பிறகே இல்லையென்ற ஒரு நிலை உண்டாக வேண்டும்! ஆக அல்லாஹ் என்ற ஓரிறைக்கொள்கையை மட்டுமே வணங்கும் பழக்கும் தொடக்க காலத்திலிருந்த பின்பற்றப்பட்ட ஒன்றாகும்.

   எனினும் மனிதனின் சிந்தனையோட்டத்தில் ஏடுக்கும் தவறான முடிவுகள் அவர்களை பல தெய்வ கொள்கைக்கு வழிவகுத்தது. அதிலும் சொற்ப பிரிவு மக்கள் கடவுள் மறுப்புக்கு செல்ல நேரிட்டது. ஆக பல தெய்வ கோட்பாடுகள் தெளிவற்ற முறையிலே உள்ளதால் அவற்றை விமர்சிக்க நாத்திகம் பெருமுயற்சி எடுப்பதில்லை. ஆனால் இஸ்லாம் தன் கோட்பாடுகளை இன்றளவும் தெளிவாக வைத்திருப்பதால் அவை இஸ்லாத்திற்கு எதிராக செயல்பட எத்தனிக்கின்றன.

 ஏனெனில் இன்று இஸ்லாத்தை விமர்சிக்கும் நாத்திகர்கள் எவரும் சொல்லும் வார்த்தை "நான் முன்னாள் முஸ்லிம்" இவ்வார்த்தையை கேட்கும் நடு நிலையாளர்கள் கூட இஸ்லாத்திலும் குறைப்பாடுகள் இருப்பதாக தான் உணர்வார்கள். ஆனால் பாருங்கள் அவர்களில் எவரும் வானம் மற்றும் பூமியின் அமைப்புகளை பார்த்தோ, சந்திர சூரிய இயக்கங்களை அறிந்தோ அல்லது பால்வெளி மாற்றங்களை ஆராய்ந்தோ அவை இறைவனால் படைக்கப்பட வாய்ப்பில்லையென இஸ்லாத்தை விட்டு வெளியே வருவதில்லை.

மாறாக தனக்கு சொல்லிதரப்பட்டவைகளையும் -அறிமுகம் செய்து வைக்கப்பட்டவைகளுமே இஸ்லாமாக உணர்ந்து அதை ஏற்கின்றனர்.அவர்கள் தவறாய் கற்ற இஸ்லாத்தை பின்னாளில் ஆய்வறிவோடு ஓப்பிடும் போது அது இஸ்லாத்தையே தவறாக காட்டுகிறது. ஆக இஸ்லாத்திலிருந்து வெளியேறுகிறார்கள். இஸ்லாத்திற்கு எதிராகவும் விமர்சிக்கிறார்கள். அவர்களின் விமர்சனத்தை பார்க்கும் போதே இதை நம்மால் தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகிறது.

ஆனால் எதையும் தர்க்கரீதியாகவும் ஆய்வுரீதியாகவும் ஆராய்ந்து பின்பற்றும் நாத்திகர்கள் பலர் இஸ்லாம் நோக்கி வருகிறார்கள் இதற்கு என்ன காரணம்...? 

வெற்று ஊகங்களையோ, போதிக்கப்பட்டவைகளை மட்டுமோ ஏற்று இஸ்லாத்தை நோக்கி வருவதில்லை. மாறாக ஆய்வுரீதியான சிந்தித்து அதன் விளைவால் இஸ்லாத்தை நோக்கி வருகிறார்கள்..
 
எது எப்படி நமக்கு அறிமுகப்படுத்த படுகிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு பெயர் தான் நம்பிக்கை! -ஆனால்
அது சரியா அல்லது தவறா என ஆராய்ந்து முடிவெடுத்து அதை ஏற்பதே அறிவு.

ஊகங்களை வைத்து இஸ்லாதை விட்டு வெளியேறுவதும்...
ஆய்ந்தறிந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதும் -
எது மேலானது..?

பதில் தரும் பொறுப்பு உங்களிடமே!

குறிப்பு:
 (ஆக்கம் தொடர்பாக விவாதிக்கும் போது மேற்கண்ட இரண்டு மேற்கோள்களும் எனக்கு நம்பக தன்மை வாய்ந்த சகோதர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற செய்திகள் ஆதார மூலங்களோடு அவைக்குறித்த மேலதிக செய்திகள் கிடைத்தால் இன்ஷா அல்லாஹ் தெரியப்படுத்தவும்). 

                                                     அல்லாஹ் மிக்க அறிந்தவன்


27 comments:

 1. ஸலாம் சகோ.குலாம்...!

  BALL-1//அன்றைய கட்டத்தில் உயிர்வாழ காற்றே பிரதான ஆகாரமாக இருக்க "அக்ஸிஜன் குறித்து அறியவேண்டிய ஆரம்பகால மக்கள் கடவுள் குறித்து அறிந்து வைத்திருப்பது எப்படி?//---SIXER...!


  BALL-2//இயற்கையே எல்லாவற்றிற்கும் போதுமானதென்றால் ,

  இல்லாத கடவுள் குறித்து அவர்களுக்கு ஏன் தெரிய வேண்டும்.? //---FOUR..!

  BALL-3//கடவுள் என்ற ஒன்று இருப்பதை அறிந்திடாத அந்த சமூகத்திற்கு கடவுள் குறித்து யாரால் விளக்க முடியும்...? //---FOUR..!

  BALL-4//அதை விட முக்கிய கேள்வி ஏன் விளக்க வேண்டும்..?//--- FOUR..!


  BALL-5//தேவையில்லாத ஒன்றை தேவையில்லாத நிலையில் தேவையில்லாமல்... தெளிவாய் முன்மொழியப்பட வேண்டிய அவசியம் என்ன?//---SIXER..!

  BALL-6(NO BALL)///முஹம்மது நபிகளின் வருகைக்கு பிறகே அல்லாஹ் என்ற கடவுளை வணங்க வேண்டிய கொள்கை போதிக்கப்பட்டிருந்தால் அவரது தந்தையின் பெயரை அப்துல்லாஹ் என யார் வைத்தது...?
  முஹம்மது நபியா....?!///---BALL GONE OUT OF THE STADIUM..! BIG SIX..!

  FREE HIT///உண்டு என்பதற்கு பிறகே இல்லையென்ற ஒரு நிலை உண்டாக வேண்டும்! ஆக அல்லாஹ் என்ற ஓரிறைக்கொள்கையை மட்டுமே வணங்கும் பழக்கும் தொடக்க காலத்திலிருந்த பின்பற்றப்பட்ட ஒன்றாகும்.///---WINNING SHOT...SIX.....MAN OF THE MATCH..!

  வழக்கம்போலவே அருமையான பதிவு சகோ.குலாம்.

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்

   எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியான பின்னூட்டத்திற்கு நன்றி சகோ
   பின்னூட்டவாதி..... என்பது சரியாக தான் இருக்கிறது

   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ
   ஜஸாகல்லாஹ் கைரன்

   Delete
 2. Replies
  1. அன்பு சகோ அனானி
   காரணம் இல்லாமல் சிரித்தால் அதற்கு பெயர் வேறு!

   Delete
 3. உலகில் அனைத்து மக்களும் ஒரே இறைவனை மட்டுமே நம்புகிறார்கள்.

  அதிலும்...குறிப்பாக இந்தியாவில், ஒருவருக்கு முருகனாகவும், ஒருவருக்கு திருமாலாகவும், ஒருவருக்கு சிவனாகவும், ஒருவருக்கு சக்தியாகவும், ஒருவருக்கு ஐயப்பனாகவும்,ஒருவருக்கு அம்மனாகவும், ஒருவருக்கு பெருமாளாகவும்,
  ஒருவருக்கு பிள்ளையாராகவும் தெரிகின்றது. ஏன் அந்த ஏக இறைவனை ஏதாவது பெயர் சொல்லி அழைத்தால் அவருக்குப் பிடிக்காதா?

  தான் படைத்த மக்கள், தன்னை, ஆசையுடன், பாசத்துடன், பக்தியுடன், அன்புடன் தன்னை அழைப்பதை அந்த இறைவன் வெறுப்பாரா? அப்படி வெறுத்தால் அவர் எப்படி இறைவனாக இருக்கமுடியும்?

  ReplyDelete
  Replies
  1. //உலகில் அனைத்து மக்களும் ஒரே இறைவனை மட்டுமே நம்புகிறார்கள்.//
   நண்பர் ராகவன் அவர்களே! இதில் 'நம்புகிறார்கள்' என்பது 'நம்பவேண்டும்' என்றிருந்தால் நன்றாக இருக்கும்.
   தாங்கள் குறிப்பிட்டிருப்பதில் முருகனும்,பிள்ளையாரும், சகோதரர்கள். இவ்விருவருக்கும் சிவனும் சக்தியும் பெற்றோர் (தங்கள் நம்பிக்கைப்படி)ஒவ்வொருவரின உருவ அமைப்பும் வெவ்வேறானவை. அதெப்படி இவைகள் அனைத்துமே ஏக இறைவனின் பல பெயர்கள் என்று சொல்கிறீர்கள். புரியவில்லையே சகோதரா

   Delete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

   சகோ மஸ்தூக்கா
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
   ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

   Delete
 4. அன்பு சகோ ராவணன்

  இன்று இறைவனை ஏற்கும் பலரும் சொல்வது , பல பெயர்களில் அழைத்தாலும் அது ஒரே இறைவனையே குறிக்கும் என்று.,

  நானும் ஏற்றுக்கொள்கிறேன். இறைவனை ஏனைய பெயர்களிலும் தாரளமாய் கூறி அழைக்கலாம்.

  ஆனால்!
  இறைவனுக்கென சில இலக்கணங்கள் இருக்கிறது சகோ. அதற்கு உட்பட்டு எந்த பெயரை சுட்டி வேண்டுமானாலும் அழைக்கலாம். ஆனால் இன்று முருகனாகவோ, விஷ்ணுவாகவோ, பிரம்மா, திருமால், சிவன் போன்ற கடவுளர்களை குறிப்பிடும் போது இறைவனின் தூய மாண்புகள் மறைக்கப்பட்டு நமக்கு, கையில் வேலுடனோ, பார்க்கடலில் சுழலும் சக்கரத்துடன் வீற்றிருக்கும் ஒருவராகவோ, நான்கு புறமும் தலைக்கொண்டவராகவோ, நீல நிற மேனி உடையவராகவோ, தலையில் பிறை கொண்டவராகவோ தான் கடவுளின் உருவம் காட்சியளிக்கிறது.

  உதாரணமாக.,
  பிரம்மா- என்பதற்கு படைப்பாளன் என்றே பொருள். கடவுளின் பண்புகளில் மிகவும் பொருந்தக்கூடிய ஒரு பெயர். ஆனால் இன்று பிரம்மா என்ற பெயர் நம்முன் மொழியப்பட்டால் படைப்பாளன் என்பது நினைவிற்கு வருவதில்லை மாறாக மனித புனைவுகளால் உருவாக்கப்பட்ட அந்த நான்கு முகங்கள் தான் கடவுளாக நம் முன்னால் நிற்கிறது. யாரும் பார்க்காத கடவுளுக்கு உருவம் கொடுத்தது யார் தவறு...? கடவுளா இப்படி அமைக்க சொன்னார்...?

  கோர முகத்துடன், கையில் ஆயுதங்களுடன் ... இன்னும் சில கடவுள்கள் இதுவா நாம் கடவுள் என்று ஏற்றுக்கொண்டவருக்கு கொடுக்கும் கண்ணியம்...!

  ஆக கடவுளை பாசத்துடன், பரிவுடன், அன்புடன், ஆதரவுடன் அழைப்பதில் தவறில்லை சகோ ஆனால் அது அவரின் தன்மைக்கு கலங்கம் கற்பிக்கும் தன்மையில் இருக்கக்கூடாதென்பது மிக முக்கியமான கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

  மாற்றுக்கருத்து இருப்பீன் மற்றவை பிற

  ReplyDelete
 5. //எது எப்படி நமக்கு அறிமுகப்படுத்த படுகிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு பெயர் தான் நம்பிக்கை! -ஆனால்
  அது சரியா அல்லது தவறா என ஆராய்ந்து முடிவெடுத்து அதை ஏற்பதே அறிவு.//

  இதை தான் நாம் எதிர்பார்க்கிறோம் சகோ. ஆனால் சிந்திக்க விடுவதில்லை நாத்திகர்கள்.

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

   //இதை தான் நாம் எதிர்பார்க்கிறோம் சகோ. ஆனால் சிந்திக்க விடுவதில்லை நாத்திகர்கள்.//

   பொறுத்திருப்போம்

   இன்ஷா அல்லாஹ் மாற்றம் வரும்

   Delete
 6. சலாம் சகோ குலாம்,

  வாரே வாஹ்.....அழகாக, நேர்த்தியாக தொகுக்கப்பட்ட ஒரு ஆழமான பதிவு. கேள்விகள் அனைத்தும் அருமை. நம்புங்கள் நான் சுட்டிக்காட்ட நினைத்த பல பாய்ண்ட்களை சகோ பின்னூட்டவாதி ஆசிக் சொல்லிவிட்டார்.

  அவரை நான் வெறித்தனமாக வழி மொழிகிறேன்.

  ReplyDelete
 7. சலாம் சகோ குலாம்,

  வாரே வாஹ்.....அழகாக, நேர்த்தியாக தொகுக்கப்பட்ட ஒரு ஆழமான பதிவு. கேள்விகள் அனைத்தும் அருமை. நம்புங்கள் நான் சுட்டிக்காட்ட நினைத்த பல பாய்ண்ட்களை சகோ பின்னூட்டவாதி ஆசிக் சொல்லிவிட்டார்.

  அவரை நான் வெறித்தனமாக வழி மொழிகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்

   //நம்புங்கள் நான் சுட்டிக்காட்ட நினைத்த பல பாய்ண்ட்களை சகோ பின்னூட்டவாதி ஆசிக் சொல்லிவிட்டார்.//

   நம்புகிறேன்!


   //அவரை நான் வெறித்தனமாக வழி மொழிகிறேன்.//

   இதையும் நம்பலாமா..?

   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
   ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

   Delete
 8. #எது எப்படி நமக்கு அறிமுகப்படுத்த படுகிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு பெயர் தான் நம்பிக்கை! -ஆனால்
  அது சரியா அல்லது தவறா என ஆராய்ந்து முடிவெடுத்து அதை ஏற்பதே அறிவு.#

  சலாம் சகோ..

  அருமை...சரியான விளக்கம்...

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் வரஹ்

   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

   Delete
 9. //ஏனெனில் இன்று இஸ்லாத்தை விமர்சிக்கும் நாத்திகர்கள் எவரும் சொல்லும் வார்த்தை "நான் முன்னாள் முஸ்லிம்"//

  இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாகவே படுகிறது, ஏனெனில் நாத்திகர்கள் தங்களின் கொள்கையைச் சொல்வதற்கு அஞ்சுவது கிடையாது, அவர்களின் கருத்தை அவர்கள் தைரியமாகவே சொல்லி விடுவர். அவர்களுக்கு இஸ்லாமிய முகமூடி ஒன்றும் அவசியம் இருக்காது என்றே எனக்கு எண்ணத் தோன்றுகிறது.

  ஒரே கருத்தை திரும்ப திரும்ப கூறும் கோயபல்ஸ் பரம்பரையில் இருந்து வருபவர்களே இது போன்ற குழப்பங்களுக்கு காரணமாக இருக்கலாம்.

  இறைவன் மிக அறிந்தவன்.

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

   எது எப்படியோ சகோ.. தங்களை முன்னாள் முஸ்லிம்கள் என சொல்வதன் மூலம் இஸ்லாத்தின் மீது பொது பார்வையில் தவறான எண்ணம் ஏற்படுத்த வேண்டும் என்ற ஆவலில் தான் சகோ


   இறைவன் மிக அறிந்தவன்.
   நிச்சயமாக!

   Delete
 10. Assalamu alikum bro!
  "Padika padika mega aavalaga ullathu ennoru morai padika"
  masha allah ethu pola pala aakangal veliyeda ellam valla allah kerubai seivanaga! Aameen

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்

   அல்ஹம்துலில்லாஹ்!

   வருகைக்கும் கனிவான துஆவிற்கும் நன்றி
   ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

   Delete
 11. ////யாரும் பார்க்காத கடவுளுக்கு உருவம் கொடுத்தது யார் தவறு...? கடவுளா இப்படி அமைக்க சொன்னார்...? /////

  "யாரும் பார்க்காத கடவுள்", என்னே ஒரு சொல் விளையாட்டு.

  இறைவனை நீங்கள் காணவில்லையென்றால் அந்த இறைவனின் கருணை உங்கள் மீது இன்னமும் விழவில்லை என்று பொருள்.

  அதற்காக உலகில் உள்ள எவருமே இறைவனை பார்த்திருக்க முடியாது என்று எப்படி கூறுகின்றீர்கள்?

  அப்படியென்றால் இறைவன் என்று ஒருவர் இல்லையா? இல்லாதவரை யாரும் பார்த்திருக்கமுடியாது.

  இறைவன் என்று ஒருவர் இருந்தால்,ஒருவர்கூட பார்த்திருக்க வாய்ப்பில்லையா?

  எங்கோ, பக்குவப் படாத பாலைவனப் பகுதியில் வாழந்த முகமதுவிற்கு அருள்வாக்கு கூறிய இறைவன், மற்ற பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு தம் முகம் காட்டவில்லை என்று எப்படி உறுதியாகக் கூறுகின்றீர்கள்?

  அந்த இறைவன் உங்களிடம் ஏதாவது ஸ்பெஷலாக கூறினாரா?

  இறைவன் என்று ஒருவர் இருக்கின்றார் என்று கூறினால் நீங்கள் ஒரு ஆத்திகவாதி.

  இறைவன் இதைச் செய்வார், அதைச் செய்வார், இப்படி இருப்பார், அப்படி இருப்பார் என்று கூறினாலும் நீங்கள் ஆத்திகவாதியே.

  ஆனால்...அதைவிடுத்து, இறைவன் இப்படித்தான் இருப்பார், இப்படித்தான் செய்வார் என்று கூறும்போது, நீங்கள் நாத்திகவாதியாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

  இறைவன் என்ன உங்கள் வீட்டு அடிமையா? இல்லை வேலைக்காரனா? நீங்கள் பாடும் தாளத்திற்கு ஆட?

  உண்மையான இறைவனைத் தேடுங்கள். இறைவனின் கருணைப் பார்வை உங்கள்மீது விழலாம். உங்கள் வாழ்வில் சாந்தியும் சமாதனமும் ஏற்படும்.

  யாரோ,எவரோ சொன்னார்கள் என்பதற்காக கண்டதையும் நம்பினால்.....நம்பினால்....என்ன சொல்ல..........இப்படியே புலம்பவேண்டியதுதான்.

  ReplyDelete
  Replies
  1. அன்பு சகோ ராவணன்

   தற்போது தான் உங்கள் தள பதிவை பார்வையிட்டேன்.

   உண்மையை அறிந்துக்கொள்ளும் ஆர்வம் இல்லையென்பதை விட விமர்சிக்கும் ஒன்றை குறித்தாவது குறைந்த பட்ச தெளிவு உங்களுக்கு இல்லையென்பது உங்கள் பதிவில் பளிச்சிடுகிறது!!

   இங்கே, உங்கள் பின்னூட்டத்தில் பல தெய்வ கொள்கை சார்ந்து பேசி உங்கள் தளத்தில் நாத்திக முகமுடியுடன் கடவுளை விமர்சிக்கிறீர்கள். பல தெய்வக்கொள்கைக்கு எதிராய் இங்கே நான் விளக்கமளிப்பதும் வீண் தான்...

   சகோ உங்களை போன்றோர்களை நான் கேட்பது ஒன்று தான்.. இஸ்லாத்தை அது கூறும் ஓரிறையை எதிர்ப்பதில் காட்டும் அக்கறையை உங்கள் கொள்கைகளை விளக்கி அது எப்படி இஸ்லாத்திற்கு மேலாக பின்பற்ற உகந்தது என்பதை சொல்வதற்கு முனைவதில்லையே....?


   எனக்கு அதிக நேரமில்லை.. விளக்க தயாராகுங்கள்

   இறை நாடினால் பார்ப்போம்

   Delete
 12. அஸ்ஸலாம் அலைக்கும் ...சகோஸ்..
  பெருசா சொல்வதற்கு எதுவுமில்லை ஏன்னா ,முதல்லேயே
  முஹம்மத் ஆஷிக் சூப்பராக சொல்லியுள்ளார் ....
  " மேன் ஆப் தி மேட்ச் முஹம்மது ஆஷிக் "
  அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி ...குலாம் பாய்

  ReplyDelete
 13. வ அலைக்கும் சலாம் வரஹ்

  == முதல்லேயே
  முஹம்மத் ஆஷிக் சூப்பராக சொல்லியுள்ளார் ....==

  உண்மைத்தான் சகோ
  அவர் அறிவாலும் அனுபவத்திலும் என்னை விட சிறந்தவர்.

  எனக்கு முன்னமே இணையத்தில் கால் பதித்தவர். மார்க்கமும் நன்கு கற்றவர் கூட.,
  அவர் மீது எனக்கு நிறைய மரியாதை உண்டு

  பிறகு எப்படி //" மேன் ஆப் தி மேட்ச் முஹம்மது ஆஷிக் // இல்லாமல் இருப்பார்

  நாத்திகத்திற்கு எதிரான ஓட்டத்தில் இன்ஷா அல்லாஹ் ஒரு பை-ரன்னராக இருக்க முடிந்தால் அதுவே போதும் எனக்கு

  வருகைக்கும் கருத்திற்கும்
  ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

  ReplyDelete
 14. அப்துல் கலாம்May 8, 2012 at 10:48 AM

  ”உயிர் வாழ சிறிதும் தொடர்பே இல்லாத இறை நம்பிக்கை என்ற ஒன்று ஏன் ஆதிமனிதனுக்கு ஏற்பட வேண்டும்..?”

  என்ற கேள்வியில் சிந்தனையை தூண்டி !

  ”தேவையில்லாத ஒன்றை தேவையில்லாத நிலையில் தேவையில்லாமல்... தெளிவாய் முன்மொழியப்பட வேண்டிய அவசியம் என்ன? “

  என்ற கேள்வியில் விளக்கம் தந்து !!

  உண்டு என்பதற்கு பிறகே இல்லையென்ற ஒரு நிலை உண்டாக வேண்டும்! ஆக அல்லாஹ் என்ற ஓரிறைக்கொள்கையை மட்டுமே வணங்கும் பழக்கும் தொடக்க காலத்திலிருந்த பின்பற்றப்பட்ட ஒன்றாகும்.

  என்ற லாஜிக்கான கேள்வியில் தொகுக்க பட்ட நடு நிலையில் சிந்தித்து கற்க நினைப்பவர்களுக்கு வினா தாள்.

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

   Delete
 15. "கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்ல வருகிறேன்.." // இதில் "கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை" எனும் போது "கடவுள் அல்லாதவராலும் முடியும்?" என்றொரு அர்த்தம் வருகிறதே. இது இறைவனுக்கு இணை வைப்பாக இருக்காதா? அல்லாஹ் அல்லாத எவராலும் இறை நாட்டம் இல்லாமல் நன்மையோ தீமையோ தனக்குத் தானே செய்வதற்குக் கூட சக்தி இல்லாதிருக்கும் போது "கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை" என்ற வாசகம் பிழையாகத் தானே உள்ளது..... தயவு செய்து விளக்கம் அளிப்பீர் என நம்புகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அன்பு சகோ அனானி

   = "கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்ல வருகிறேன்.." =

   மேற்கண்ட வார்த்தை வஞ்சகப்புகழ்ச்சியணியில் அமைக்கப்பட்ட வார்த்தை சகோ. இதில் எந்த முரண்பாடும் ஷிர்க்கும் இல்லை சகோ ஏனெனில்
   = "கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை" =
   என்ற வார்த்தையோடு நிறுத்திக்கொள்ள வில்லை அதை தொடர்ந்து
   = கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது =
   என்றும் தொடர்கிறேன். ஆக இதில் பிழை உள்ளதாக நான் அறியவில்லை,
   ஏனெனில்

   கடவுளால் தான் எல்லாம் முடியும் என்பதும்
   கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்பதும் -- அடிப்படையில் ஒன்றே

   உங்கள் சகோதரன்
   குலாம்

   Delete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்