"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Sunday, June 20, 2010

கடவுளை அறிய ஐம்புலன்கள் போதுமா ?



    ஓரிறையின் நற்பெயரால்

ஒரு செயல் அல்லது பொருளின் தன்மைகளை  பற்றி அறியவே நமக்கு புலனறிவு வழங்கபட்டுகிறது அப்புலன்களின் மூலம் கடவுளை அறிந்து கொள்ள முடியுமா ? எனக்கேட்டால் முடியாது என்பதே அறிவுக்கு பொருத்தமான பதிலாக இருக்க முடியும் !

புலன்களின் ஒரு  முக்கிய அம்சமான "பார்த்தல்" எனும் செயல்பாட்டின் மூலம் கடவுளை  காணமுடியுமா

   இன்று உலகில் கடவுளை ஏற்ப்போர்,மறுப்போர் உட்பட யாரும் கடவுளை கண்களால் பார்க்க வில்லை. 


  கடவுளை மறுப்போர் இதனை மிகப்பெரும் ஆதாரமாக கொள்கின்றனர். கண்களால் பார்க்க விட்டால் கடவுள் இல்லை என்றாகி விடுமா


ஒரு செயலையோ,பொருளையோ நாம் கண்களால் காணும் பொழுது அந்நிகழ்வை உண்மை படுத்துகிறோம் என்பதே சரி,பார்க்க வில்லையன்பதற்காக அந்நிகழ்வு உண்மையில்லை என்றாகி விடாது  


இதனை விளக்க ஒரு சிறிய உதாரணம் கூறலாம்.
  மழைக்காலங்களில் சிலவகை புச்சிக்களை புதிதாக நாம் காண்போம். அதற்கு முன்பு வரை அப்புச்சியை பார்த்திருக்க மாட்டோம். அதை குறித்து எண்ணும் போது அப்புச்சி அன்றுதான் படைக்கபட்டிருக்கும் என எந்த ஒரு பகுதறிவாளனும் எண்ண மாட்டான்.


  மாறாக நேற்றுவரை அப்புச்சியைபற்றி தான் ஏதும் அறிந்திருக்கவில்லை என்றே கூறுவான். இதன் மூலம் ஏற்கனவே இருக்கின்ற ஒன்றை பற்றி அறியாமல் இருப்பதற்கு வாய்ப்புள்ளது என்பது தெளிவு! 


 நாம் பார்க்காமல் இருந்தாலும் பார்க்க முடியாவிட்டாலும் ஒரு நிகழ்வு உண்மையாக இருப்பதற்க்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.ஆக பார்த்தல் என்பது ஐந்தறிவின் ஒரு பகுதி தான் தவிர அது ஒன்றே முழுமை பெற்ற பகுத்தறிவு ஆகாது.


 ஆக கடவுளை நாம் காணவில்லை என்பதை விட காணக்கூடிய வாய்ப்பு கடவுளால் நமக்கு வழங்க படவில்லை என்பதே சிந்திப்போர் எவரும் ஏற்றுக் கொள்ளும் சீரிய வாதமாகும்.

 (இஸ்லாத்தை பொறுத்தவரை இவ்வுலக வாழ்வில் கடவுளை யாரும் பார்க்க முடியாது இவ்வுலக வாழ்விற்கு பிறகே இறைவனை அனைவரும் பார்க்க முடியும் என்கிறது)
அதுபோலவே  வெளிபடையாக உணரும் ஏனைய புலன்களின் மூலமும் கடவுளை அறிய முடியாது. ஏனைய புலனறிவுகள் சிறப்பாக செயல் பட்டாலும் குறிபட்ட புலன்களின் மூலமே சிலவற்றின் தன்மையே அறிய முடியும். 


   அதாவது மணத்தை அறிய ஏனைய அறிவுகள் இருந்த போதிலும் நுகர்ந்துணரும் புலனறிவு இருந்தால் மட்டுமே அது சாத்தியம்! அதுபோலவே ஒலிகளை உள்வாங்குவதற்கு கேட்டறியும் அறிவு இல்லையென்றால் ஏனைய அறிவுகளால் பலனில்லை.


 அனைத்து புலன்களும் நன்றாக  செயல்படும் வேளையிலும் கூட தனக்கு பின் உள்ள ஒரு பொருள் பற்றி ஒருவரிடம் வினவினால் அவர் எத்தகைய பதிலும் கூற முடியா நிலையே ஏற்படும். மேலும் எதிரில்- ஒரு குறிப்பிட தொலைவிற்கு அப்பால் இருக்கும் ஒன்றை பற்றியும் நம்மால் அறிந்துகொள்ள முடியாது.


  எல்லா நிலையிலும் ஐம்புலன்களால் மேற்கொள்ளப்படும்  செயல்கள் முழுமை பெறாது எனவும் அறியலாம்      
நேற்றுவரை சாதாரண ஒரு புச்சியினம் பற்றி ஒன்றும் அறிந்திருக்க வாய்பில்லாத நமக்கு, இன்றும் ஒரு தூர தொலைவிற்கு பிறகு நமது புலன்கள் செயல்படாது எனும் போது யாவற்றையும்  படைத்து இரட்சிக்கும் கடவுள் நம் புலன்களின் கட்டு பாட்டிற்குள் வர வேண்டும் என்று எண்ணுவது எந்த விதத்தில் நியாயம் ?

    நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப்பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை)அறிந்து கொள்ளாச் செவிடர்களும் ஊமைகளும் தாம் ((8:22) 
                 அல்லாஹ் நன்கு அறிந்தவன்

7 comments:

  1. assalamu alaikkum uggaludaiya ARTICALS very super. @gulamdasthakir nana

    ReplyDelete
  2. சகோ.குலாம்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    அருமையாக விளக்கி உள்ளீர்கள், மனிதனுடைய புலன்கள் குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே உள்ளது,அதை வைத்து கடவுளை பார்ப்பேன், கடவுள் பேச்சை கேட்பேன் என கூறுவது சரியானது அல்ல.

    இன்னும் சற்று விளக்கமாக போட்டிருக்கலாம் என தோன்றுகிறது.

    ReplyDelete
  3. வ அலைக்கும் சலாம் வரஹ்

    அன்பு சகோ @ Nasurudeen

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
    ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

    ReplyDelete
  4. salam
    Dear Bro @ ஏழாம் அறிவு

    thanks for ur valuable comment

    ReplyDelete
  5. வ அலைக்கும் சலாம் வரஹ்

    அன்பு சகோ @ கார்பன் கூட்டாளி

    //இன்னும் சற்று விளக்கமாக போட்டிருக்கலாம் என தோன்றுகிறது./

    இன்னும் விளக்கி இருக்கலாம் சரிதான் சகோ
    ஆனால் இவ்வாக்கம் நான் ப்ளாக் தொடக்கத்தில் எழுதிய ஆக்கம். இன்ஷா அல்லாஹ் இந்த லிங்க்கில் சென்றால் நாத்திகம் குறித்த ஏனைய பதிவுகளை பார்த்துக்கொள்ளலாம் ச்கோ
    http://iraiadimai.blogspot.com/p/blog-page_01.html

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ

    ReplyDelete
  6. 1) கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவைநீ - சிவவாக்கியர்
    2) என் கண் மணியுள் இருக்கும் தலைவ நின்னைக் காணவே
    என்ன தவஞ்செய் தேன் - மெய்யருள் வியப்பு(வள்ளலார் )
    3) எங்கண்ணிற் பாவையன்றோ ? - கண்ணம்மா !(பாரதியார்)
    4) கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர் - கந்த குரு
    கவசம்
    http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html

    ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்