"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Wednesday, June 16, 2010

கடவுள் படைப்பில் மனிதர்களிடையே ஏற்ற தாழ்வு ஏன்?

ஓரிறையின் நற்பெயரால்
   கடவுள் மறுப்பாளர்களின் பிரதான கேள்வியாக  இன்று இது கேட்கப் படுகிறது. ஆரம்பத்தில் கடவுளை கண்முன் காட்டுங்கள் ,அவ்வாறு காட்டினால் நாங்களும் ஏற்றுக் கொள்ள தயார் என்று அறை கூவல் விட்ட பகுதறிவளர்கள்(?) உண்மையிலேயே இந்த வினா பகுத்து அறிவதற்கு உரியது என்பதை நிதர்சனமாக உணர்ந்து அதனை புறந்தள்ளி அடுத்து கையில் எடுத்த வினா தான் . . .


    உலகத்தை படைத்தது  காக்கும் கடவுள் ஏழைபணக்காரன்வறியவர், உழைப்பாளிவிவசாயி,உடல் ஊனமுற்றோர்என மக்கள் மத்தியில் பலதரப்பட்ட நிலைகளை ஆக்கியது ஏன்நீதமாக செயல் படும் கடவுள் என்று சொல்பவர் இப்படி ஏற்ற ,தாழ்வுகளை ஏற்படுத்தலாமா...?

இக்கேள்வியே படிக்கும் போது, ஆமாம்! ஏன் கடவுள் அவ்வாறு படைத்துள்ளார் ., என்று  நடுநிலையாளர்கள் கூட ஒருகணம் சிந்திக்கத்தான் செய்வார்கள். ஆம்! அச்சிந்தனையை தான் இஸ்லாமும் வரவேற்கிறது. இயற்கை மார்க்கமான இஸ்லாம் இக்கேள்விக்கான பதிலை மிக தெளிவாகவும்அழுத்தமாகவும் உரைக்கிறது. 

 அல்லாஹ் திருமறையில் 

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை (51:56)
ஆக,மனிதன் படைக்கப்பட்டதின் முழுமுதற் காரணம் அவனை வணங்கு வதற்காகவே என்பது தெளிவு! அவ்வாறு வணங்குவதற்காக படைக்கபட்ட  மனிதனின் தோற்றம் பற்றி வல்ல நாயன் கூறுகிறான்,

மனிதர்களே!  உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய ன்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;. அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்;. மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான் (4:01)

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (49:13)

  மனித சந்ததி ஒரே பெற்றோர்களிடமிருந்து உருவாயிற்று ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டே குலங்களாகவும்,கோத்திரங்ககளாகவும் பிரித்து வைக்கப்பட்டிருகிறார்கள் என்பதின் மூலம்  மனிதனின் பிறப்பின் அடிப்படையில் எந்த வித ஏற்ற தாழ்வுகள் ஏற்படுத்தபடவில்லை என்பதை மேற்கண்ட வசனத்திற்கு மேலதிக விளக்கம் இல்லாமலே புரிந்து கொள்ளலாம்.

  அடுத்து ,மிக முக்கியமாக விவாதிக்கப்படும் மனித வாழ்வில் ஏற்படும் ஏற்ற தாழ்வு பற்றி காண்போம்.

    இவ்வுலக வாழ்வு குறித்து இஸ்லாம் கூறும் இலக்கணத்தை சற்று அறிந்து கொண்டால் இந்நிலைபாடு ஏன் என புரியும்இறந்த பிறகு இருக்கும் ஒரு நிலையான வாழ்வுக்கு தன்னை தயார் படுத்தி கொள்ளவதற்க்கான ஒரு சோதனை கூடம் தான் இவ்வுலக வாழ்வு என்கிறது இஸ்லாம். 
    நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்களின் அடிப்படையில் இறந்தபிறகு அதற்காக வெகுமதியோ,தண்டனையோ இறைவன் புறத்திலிருந்து கொடுக்கப்படும் என்பதே இஸ்லாம் கூறும் மறு உலக நம்பிகை.
    எனவே இவ்வுலகம் சோதனைக்காக படைக்கப்பட்டிருப்ப்பதால் தான் மனிதர்களிடையே இத்தகையே ஏற்ற தாழ்வை இறைவன் உருவாக்கி இருக்கிறான்.


   ஏனெனில் யாராக இருந்தாலும் அவர் பெற்ற, செலவழித்த செல்வம் குறித்து நாளை(மறுமையில்) கேள்வி கேட்டபடுவார். எனவே இறைவனுக்கு பயந்து செல்வந்தர்கள் நல்ல வழியில் பொருளிட்டினார்களா? செலவு செய்தார்களா
 அதுபோல,ஏழைகள் இருக்கும் செல்வத்திற்கு அதிகமாக பெற தவறான வழியில் செல்லாமல் மேலும் பெற நியாயமான முறையில் உழைத்தார்களா... என்பனவற்றிக்காகவே அல்லாஹ் செல்வத்தை மக்களிடையே மாறி மாறி வர செய்கிறான். 


  இதனை தன் திருமறையில்...
"நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச) சோதனையாக இருக்கின்றன நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு" என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள் (8:28)

உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான், ஆனால் அல்லாஹ் - அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது.(64:15)

(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்;. உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்;. ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.(3:186)

     ஆக இளவயதில் மரணம், திடீர் விபத்துக்கள்,உடல் ஊனங்கள்குழந்தை பேரின்மைபசிவறுமைமழையின்மைபூகம்பம்இயற்கை சீற்றங்கள் போன்ற காரணங்கள் அந்தந்த குடும்ப மற்றும் சமூகங்களுக்கு சோதனையாக அமைகின்றன. 


   அத்தகைய சுழலில் அவர்களை சார்ந்தோர் எவ்வாறு செயல் படுகிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடதக்கது. சுருக்கமாக சொன்னால்... அவ்வாறு ஏற்படும்  சூழ்நிலையில் மனிதன் இறைவனுக்காக பொறுமையே மேற்கொள்கிறானா,அல்லது தன் கோபத்தின் வெளிப்பாட்டால்  தான்தோன்றி தனமாக செயல்படுகிறானா என்பதை கண்டறிவதற்கான இறைவனின் ஏற்பாடே இது ஆகும். திருமறையில்...

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன் (67:2) 

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக  (2:155)

அன்றியும், (அல்லாஹ்வின் பாதையில் போரிடும்) உங்களிலிருந்துள்ள முஜாஹிதுகளையும், பொறுமையாளர்களையும் நாம் அறியும் வரை உங்களை நிச்சயமாக நாம் சோதிப்போம்; உங்கள் செய்திகளையும் நாம் சோதிப்போம் (அவற்றின் உண்மையை வெளிப்படுத்துவதற்காக) (47:31)

   மேற்கண்ட வசனத்தின் வாயிலாக சோதிப்பதற்காகவே எந்த ஒரு இழப்பும் நம்மை வந்தடைகிறது என்பதை விளங்கலாம். உலகின் அதிபதியான அளவற்ற அன்புடையோனகிய வல்ல நாயன் அணுவளவேணும் அநியாயம் எவருக்கும் இழைத்திட மாட்டான். 


 பகுத்தறிவு பார்வைக்கு இறுதியாக ... மனித பார்வையில் கால்நடைகளும், பறவையினங்களும் வெறும் ஐயறிவு உயரினமாக தென்படும்போது., அவ்வுயிர்கள் தேவைக்காக மட்டுமே பயன்படும் நிலையில் இருக்கும் போது அவ்வுயிர்களை படைத்திட்ட உண்மை இறைவன் கூறுவதை கேளுங்கள்.

பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும் (6:38)

   மனித படைப்போடு  ஏனைய உயிரினங்களையும் ஒப்பு நோக்கியிருக்கும்  இறைவனின் நீத தன்மைக்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்? 
                                                     அல்லாஹ் மிக அறிந்தவன்           
            
            

6 comments:

 1. இது என்ன மாதிரியான வாதம் என்று தெரியவில்லை.
  இந்த சோதனை அனைத்து மக்களிடமும், அனைவரின் குடும்பத்திலும் ஒன்று போல் இருந்தால் , நீங்கள் சொல்வது சரி என்று சொல்லமுடியும். இந்த குரான் என்பது சரியான உளறலே. அதைஏன் உங்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை.

  ReplyDelete
 2. சகோ தமிழன்
  உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக

  நடை முறை வாழ்வில் அனைத்து மக்களும் உடலியல், இயங்கியல், செயலியல் மற்றும் பொருளாதார கூறுகளில் சமமாக இருக்கவில்லை.,
  ஏன் அப்படி இருக்க வில்லை என்பதற்கு இறைவனின் சோதனைக்கான ஒரு களமாக இவ்வுலக வாழ்வு அமைக்கப்பட்டிருப்பதே அதற்கு காரணம் எனவும் விளக்கப்பட்டுள்ளது.,

  எதை புரிந்துக்கொள்ள முடியவில்லை..?
  ஆக்கத்தின் கருப்பொருளையா ..அல்லது உலகியல் ஏற்றத்தாழ்வு நிலையையா..?

  நீங்கள் சொல்வதுப்போல்
  //அனைத்து மக்களிடமும், அனைவரின் குடும்பத்திலும் ஒன்று போல் இருந்தால் //
  சரி என்கிறீர்கள்..?
  இந்த கூற்று எப்படி சரியாகும்...?

  எல்லோர் வாழ்விலும் ஒரே மாதிரியாக சோதனை ஏற்பட்டால் அது பொதுவானதாக அல்லது சமமான நிகழ்வாக தானே இருக்கும் பிறகு எப்படி அது ஏற்றத்தாழ்வு என்ற நிலைக்கு வரும்..?

  ஆக ஒருவர் செய்கைகளில் இல்லாதது பிறிதொருவர் செய்கையில் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் தானே அதற்கு பெயர் சமமின்மை அல்லது ஏற்றத்தாழ்வு...!

  அல்மதுலில்லாஹ் குர்-ஆன் உளறவில்லை அதன் கூற்றில் தெளிவாக இருக்கிறது - ஆக நீங்கள் சொல்ல வருவதுதான் என்ன வாதம் என்பது புரியவில்லை.,

  மாற்றுக்கருத்துக்கள் இருப்பீன் மற்றவை பிற
  .

  ReplyDelete
 3. You came up with an innovative post reflecting each and every single point in a very clear and concise manner.

  ReplyDelete
 4. A nice information which i had been looking for long. finally I found that here. thanks :)

  ReplyDelete
 5. சகோ இதில் முடிவாக தெரிவது ? இறைவன் இந்த உலக வாழ்வை படைத்தது ஒரு சோதனைக்காலம் தான் என்றுகூருகிரீர்கள் சரியா. இது வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்தி ,மறுமையில் அதற்க்கு மருந்து இடுவதை போல் அல்லவா உள்ளது.
  இறை வணக்கம் என்பது இஸ்லாத்தில் கட்டாயம் ஆக்க பட்ட ஒன்று. மறுமை அடைய இறைவணக்கம் முக்கியம் அல்லவா. தோழர் பகத்சிங் போன்ற போராளிகள் இறை வணக்கம் அற்றவர்கள். அவர்கள் இறை வணக்கம் இல்லாத காரணத்தால் மறுமை என்று இருந்தால் அவர்கள் அங்கு நல் வாழ்வு வாழ்வார்களா ?

  ReplyDelete
  Replies
  1. அன்பு சகோ Navanee kannan

   ஒரு செயல் மீதான விமர்சனத்தை வைப்பதாக இருந்தால் அந்த செயலின் இலக்கணத்தை முழுவதும் அறிந்துக்கொள்வது இன்றியமையாதது. இது பொதுவாக எல்லா நிகழ்வுகளுக்கும் பொருந்தும். அந்த அடிப்படையில் இஸ்லாத்தின் மீது விமர்சனம் வைப்பதாக இருந்தால் இஸ்லாத்தின் வழிமுறைகளை அறிந்துக்கொள்வது மிக முக்கியமானது. இஸ்லாம் இந்த வாழ்க்கையை சோதனைக்களம் என்கிறது. இங்கே பல வித சோதனைகள் வழங்கப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கே அதற்கு உரிய பரிசாக சொர்க்கம் கிடைக்கும் என்கிறது. இதில் என்ன பிரச்சனை சகோ?

   ஏனெனில் அடிப்படையில் இப்பூமியில் மனிதர்கள் படைக்கப்பட்டதன் நோக்கம் இறைவனை வணங்கவேண்டும் என்பதற்காக தான் என்கிறது, அப்படியிருக்க அவனை வணங்காமல் வாழ நினைப்பது எப்படி ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்றாகும்..? இங்கே பகத் சிங் மட்டுமல்ல, இஸ்லாம் பற்றிய அறிவோ, அறிமுகமோ ஒருவருக்கு கிடைத்திருக்குமாயின் அவர் சீர்த்தூக்கி பார்த்து, அதனடிப்படையில் இஸ்லாம் பணிக்கும் வாழ்வின் அடிப்படையில் வாழ்வை தொடர்வது கடமையாகிறது. அஃதில்லாமல் இஸ்லாம் குறித்து எந்த வித செய்தியும் அவருக்கு கிடைக்கவில்லையென்றால் அவர் மீது எந்த குற்றமும் கிடையாது.

   "அன்றியும், அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவுக்கும் ஏதம் அநியாயம் செய்யப்பட மாட்டாது இன்னும், நீங்கள் செய்தவற்றிற்கேயன்றி (வேறு எதற்கும்) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள். (36:54) என்ற இறை வசனம் வாயிலாக மிக தெளிவாக இறைவனின் நீதத்தன்மை பிரகடனப்படுத்தப்படுகிறது. ஆக அவர் குறித்து நீங்களோ நானோ கவலைப்பட தேவையில்லை. ஆனால் உங்களுக்கும்,எனக்கும் இந்த கட்டுரையை படிக்கும் வாய்ப்புள்ள எவருக்கும் இஸ்லாமிய அறிமுகமும் அது தொடர்பான செய்திகளும் கிடைக்கிறது.அது குறித்து நாளை கண்டிப்பாக பதில் சொல்லியே ஆ க வேண்டும்.

   இன்ஷா அல்லாஹ் இந்த ஆக்கமும் உங்களுக்கு பயன்படலாம் என நினைக்கிறேன்.
   http://www.naanmuslim.com/2010/07/blog-post.html
   மாற்றுக்கருத்து இருப்பீன் தொடர்வோம்

   Delete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்