"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Monday, August 22, 2011

"நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்"

                                      ஓரிறையின் நற்பெயரால்

நாத்திகம் 
    பிறிதொருவரின் கொள்கையை தவறென்று வாதிட்டால் அதற்கு மாற்றமாக தான் கொண்ட கொள்கை குறித்த இலக்கணத்தை மிக தெளிவாக வரையறை செய்திருக்க வேண்டும். அதனடிப்படையில் இறை பின்பற்றுதலை எதிர்க்கும் நாத்திகம் இறை மறுப்புக்கான ஒரு வரைவிலக்கணத்தை இதுவரை ஏற்படுத்த வில்லையென்பதை விட தான் நிராகரிக்கும் இறைக்குறித்துக்கூட ஒரு தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை.  விக்கிபீடியா நாத்திகம் குறித்து இவ்வாறு கூறுகிறது 
     நாத்திகம் -கடவுள் பற்றிய எத்தகைய நம்பிக்கையும் இல்லாமல் இருத்தல் அல்லது கடவுள் தொடர்பான நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் மறுக்கும் ஒரு கொள்கையாகும்.
     பொதுவாக இறை மறுப்பை அடிப்படையாக கொண்டாலும் இறைமறுப்பு என்றால் என்ன என்பதை வரையறை செய்வது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் உள்ளன.அதாவது, இறை என்றால் என்ன என்பதை வரையறை செய்வதில் குழப்பம் இருப்பதால், இறைமறுப்பு என்பதை வரையறை செய்வதிலும் குழப்பம் வருகிறது. இறை என்றால் தொன்மங்கங்களில் வரும் கடவுள்களா, அல்லது மெய்யியலில் வரையறை செய்யப்படும் கருத்துருவா, அல்லது இயற்கைச் சுட்டும் வேறுபெயரா என்ற பல விதமான கருத்துருக்கள் உள்ளன.
...
           ஒரு கொள்கைக்கு மாற்றமாக உருவாகும் நேர் எதிர் கொள்கை தனக்கென ஒரு உறுதியான நிலைப்பாட்டை இதுவரை வைத்திருக்காதது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே..! இன்னும் இதில் வேடிக்கையென்னவென்றால் நாத்திகம் குறித்து கூறுகையில் எங்கெணும் பகுத்தறிவு என்ற வார்த்தை குறிப்பிடப்படவில்லை., ஆனால் இறை மறுப்பை பேசும் நாத்திகர்களுக்கு தமிழகத்தில் பகுத்தறிவாளர்கள் என குறியீடு இருப்பது தான் வருத்தத்திற்குரியது.,
         நீண்ட காலமாக நாத்திக பார்வையில் விரியும் செந்திற காட்சி இஸ்லாத்தின் வெண்மையை பொய்மையாக்க குறை கண்டு காழ்ப்புணர்ச்சியை யூனிக்கோடில் கக்கிக்கொண்டிருக்கிறது.,இஸ்லாமிய வெறுப்புக்கு தெளிவான மறுப்பு அழகாய் சொல்லப்பட்ட போதிலும் கடவுளை விமர்சிக்கும் நாத்திகர்கள் இதுவரையிலும் நாத்திகம் குறித்து உரையாட வாய் திறப்பதில்லை .ஆகவே அன்புள்ளம் கொண்ட இணைய வாழ் பெருமக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால்...

             நாத்திகரா  நீங்கள்..?
      Good!.. உங்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம்., கீழ்க்கண்ட ஆத்திக பதிவர்கள் உங்களோடு நாத்திகம் குறித்து நாகரிமான முறையில் உரையாட காத்திருக்கிறார்கள்., அவர்களின் நாத்திகம் குறித்த சந்தேக பார்வையை நீங்களும் பாருங்கள்., உங்கள் பார்வையில் நாத்திகம் உண்மையென்றால் அதுக்குறித்து உரையாட வாருங்கள்., 





"நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்"

மேலும் நாத்திகம் குறித்த
சந்தேகங்கள்...
பார்வைகள்...
எண்ணங்கள்..




"மனிதர்க்கு பகுத்தறிவு என்ற சுயமாக சிந்தித்துணரும் மூளையை இறைவன் கொடுத்து, தன்மூலம் மனிதர் தன்னை (இறைவனை) உணர்ந்து,
தன் தூதர்கள் மூலம் தரப்பட்ட சட்டங்களுக்கு அடிபணித்து ஒழுகி, 
வழங்கப்பட்ட கிருபைகளுக்கு தனக்கு நன்றி தெரிவித்து,
இவ்வுலகில் இறையச்சத்துடன் வாழ்கின்றனரா" என்று சோதிக்க நாடுகிறான், இறைவன்..!
 ஆறாவது அறிவாகிய பகுத்தறிவை பயன்படுத்தி இறைவனை பகுத்துணர வேண்டிய மனிதர்களில் வெகு சிலர், எதோ பார்த்த்து உணரும் ஓரறிவு பிராணிகள் போல...'கண்ணால் கண்டால்தான் நம்புவேன்' என்கின்றனர். 
    இதில் வேடிக்கை என்னவென்றால் கடவுள் விஷயத்தில் பகுத்தறிவையே பயன்படுத்தாத இவர்கள், 
தங்களை தாங்களே பகுத்தறிவாதிகள் என்றும் சொல்லிக்கொள்கின்றனர். 

...என்றும் உங்கள் அன்புள்ள சகோ.,
~முஹம்மத் ஆஷிக் - citizen of world~
Mohamed Ashik Habib Mohamed.


~முஹம்மத் ஆஷிக்_citizen of world~
               mohaashik[at]gmail.com




நாத்திகம் என்றால் என்ன???....
     கடவுளை மறுப்பது என்று விளக்கம் சொல்கின்றார்கள் நாத்திகர்கள். எப்படி மறுக்க முடியும்?? தர்க்கரீதியான காரணங்கள் இருக்கவேண்டுமல்லவா??. காரணம் கேட்டால் அறிவியலை நோக்கி கைநீட்டுகின்றார்கள் நாத்திகர்கள். ஆச்சர்யம். ஆம் நிச்சயம் ஆச்சர்யமான ஒன்றுதான். ஏனென்றால், ஆயிரக்கணக்கான ஆய்வாளர்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருப்பதாக பிரபல பெர்க்கிலி பல்கலைகழக தளம் கூறுகின்றது. அறிவியல் இறைவனை மறுப்பதாக இருந்தால், எப்படி ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இறைநம்பிக்கையாளர்களாக இருக்க முடியும்???. இதற்கு நாத்திகர்கள் என்ன பதில் வைத்திருக்கின்றார்கள்?

அதுபோல, எந்த அறிவியலை வைத்து இறைவனை மறுக்கின்றார்களோ, அதே அறிவியலை வைத்து தான், "இந்த உலகம் தற்செயலாக தோன்றியிருக்க முடியாது, இதற்கு பின்னால் ஒரு அறிவார்ந்த சக்தி இருக்கின்றது" என்று நம்புபவர்களாக இருக்கின்றனர் பல விஞ்ஞானிகள். 

ஆக, அறிவியல் துணைக்கொண்டு இறைவனை மறுப்பது நிச்சயம் புரியாத புதிராகவே உள்ளது. 

ஒருசில நாத்திகர்கள் உணர்வுரீதியாக இறைவனை மறுக்கின்றனர். "உலகில் இவ்வளவு பிரச்சனை நடக்கின்றதே...அதனை போக்க இறைவன் வரவில்லையே. அதனால் இறைவன் இல்லை"....இம்மாதிரி வாதங்கள் எப்படி இறைவனை மறுக்கும்?. உதவி செய்யவில்லை என்றால் இறைவன் இல்லையென்று ஆகிவிடுமா??. 'இறைவன் என்றால் இப்படிதான்' என்ற அளவுக்கோலை இவர்களுக்கு யார் கொடுத்தது???


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ 

          எதிர்க்குரல்
aashiq.ahamed.14[at]gmail.com

           ===============================================================


*நாத்திகம் மறுக்கும் கடவுளுக்கு இலக்கணம்..?


 *பொதுவாக, இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்களாகிய நாங்கள் வாழ்வின் எல்லா நிலைகளிலும் மார்க்கப் போதனைப்படி ஏவல்/விலக்களை பின்பற்றுகிறோம் இஸ்லாமல்லாத ஏனைய மதங்களை பின்பற்றுவோர் தங்களது வாழ்வுமுறையே அவர்களது மதத்தின் படி (சரியோ/ தவறோ) பின்பற்றுகிறார்கள்., எந்த மத வழிமுறைகளையும் பின்பற்றா நீங்கள் எதன் அடிப்படையில் வாழ்வை அமைத்துள்ளீர்கள்., குறிப்பாக "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற திருமண பந்தத்தை எந்த நாத்திக சட்ட்த்தில் எடுத்தீர்கள்..?


*ஒருவன் ஏன் இறை மறுப்பாளானாக இருக்க வேண்டும்..?
G u l a m 
இறை நாடினால் இனியும் சந்திப்போம்...


    நான் முஸ்லிம்
gulamdhasthakir[at]gmail.com

===============================================================



      நாத்திகர்களின் பிரதான ஆதாரமாகிய பரிணாமம் என்பது பொய் என்று சமீப காலத்தில் வெளிச்சம் போட்டு காட்டபடுகிறது. இருப்பினும் நாத்திக கொள்கையினால் மக்களுக்கு உள்ள ஆபத்துக்களை விளங்கி கொள்ள வேண்டும்.

இவ்வுலகில் பல மத கொள்கைகள் இருந்தாலும் அவற்றின் அடிப்படை பிற மனிதர்களை கொல்லாதே, தவறு செய்யாதே என்பதே.  அப்படி தவறுகள் செய்தால் தண்டனை, நரகம் என்பதே இந்த கொள்கைகளில் போதிக்கப்படும் பிரதான விஷயங்கள். இந்த தண்டனைக்கு பயந்துகொண்டே பலவகையான குற்றங்கள் நடைபெறுவதில்லை.

கடவுளே இல்லை என கூறும் நாத்திகர்கள் இவ்வகையான குற்றங்களின் பக்கம் செல்ல மாட்டார்கள் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. இவர்களுடைய கொள்கையே உலகில் உள்ள கொள்கைகளில் மோசமான கொள்கை என்பதற்கு இவ்வுலகில் நடந்த, நடக்கும் சம்பவங்களே சாட்சி.

இவ்வுலகில் பெரிய தவறு பிற மனிதனை கொலை செய்வது. அதிக மக்களை கொன்று குவித்தவன் யாரென்று அனைவரும் அறிந்ததே, ஹிட்லர், அனைத்து யூதர்களையும் அழித்தொழிக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டவன். பிறப்பால் ஒரு கிறித்துவனாக இருந்தும் கடவுள் நம்பிக்கை இல்லாதவனாகவே இருந்தான்.

வெள்ளை காலர் குற்றங்கள் (White collar crime)  என்பதை பற்றி அறிந்திருப்பீர்கள், குற்ற உணர்வு இல்லாமல் மெத்த படித்த மேதாவிகளால் செய்யப்படும் வரி ஏய்ப்பு, திருட்டு, கொள்ளை, சட்ட விரோதமாக பணம் ஈட்டல் மற்றும் சைபர் குற்றங்கள். அமெரிக்க வணிக அமைச்சரவையின் 1996 ன்  அறிக்கையின் படி வெள்ளை காலர் குற்றங்களால் நிறுவனங்களுக்கு  ஏற்பட்ட நஷ்டத்தின் மதிப்பு 400பில்லியன் டாலர்கள். மேலும் இந்த குற்றங்களினால் ஏற்படும் இழப்பு அதிகரிந்து தான் செல்கிறது. ஏனெனில் இப்படிப்பட்ட குற்றங்கள் மிகவும் சாமர்த்தியமான முறையில் செய்யபடுகின்றன, குற்றங்கள் புரிபவர்களை கண்டறிவது என்பது அரசாங்கத்திற்கே சவாலாக உள்ளது. என்னதான் மறைவாக செய்தாலும் நமக்கு மேலே ஒருவன் பார்த்து கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் மனிதர்களுக்குள் இல்லாமல் இந்த வெள்ளை காலர் குற்றங்களை எப்படி குறைக்க முடியும் என்பதற்கு நாத்திகர்கள் பதில் தருவார்களா?

மேலும் தனி மனித ஒழுக்கம் சம்பந்தமான குற்றங்களை எந்த அரசாங்கத்தாலும் கட்டுபடுத்த முடியாது அவற்றிக்கு முக்கியம் கடவுள் நம்பிக்கை மட்டுமே, மனிதன் பயப்படுவது தப்பு செய்தால் கடவுள் தண்டனை கொடுத்துவிடுவார் என்பதற்கோ, கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகர்கள் யாரை பார்த்து பயப்பட வேண்டும்?

இதுபோல பல, இந்த நாத்திக கொள்கையினால் தனி மனித ஒழுக்கம் கெட்டு குற்றங்களும் குழப்பங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதை அனைவரும் அறிவர்.

                                      Faisal
carbonfriend[at]gmail.com


        ==============================================================



1) உலகில் காணப்படும்/பேசப்படும் ஒவ்வொன்றையும் அறிவியல் ரீதியாக மட்டுமே நிரூபிக்க வேண்டும் என்று சொல்லும் நீங்கள் உங்கள் மனைவி, மக்கள், குடும்பத்தார் அனைவரும் உங்களை நேசிக்கிறார்கள் என்றால், அதை அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா?

2) விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்க முடியாத எத்தனையோ விஷயங்கள்பகுத்தறிவுப் பூர்வமானதாக இருப்பதை நீங்கள் மறுக்கிறீர்களா?

3) கடவுளின் பெயரால் மக்கள் சுயமாக நடத்தும் அனாச்சாரங்கள்/அக்கிரமங்கள்/சமூக அவலங்களை வைத்து 'கடவுளே இல்லை' என்று முடிவு செய்வது எந்த வகையான பகுத்தறிவு? 

4) 'கடவுள்' என்ற சூப்பர் பவர் இருக்கிறான் என்று சொல்வது மூடத்தனம் என சொல்லிக் கொண்டு தங்கள் முன்னோர்களுக்கு கற்சிலைகளை உண்டாக்குவதும், அதற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதும் மட்டும் பகுத்தறிவுதானா?

5) பகுத்தறிவின் ஊற்றாக தங்களை எண்ணிக் கொண்டிருப்பவர்கள், காலம் முழுதும் கருப்புச் சட்டையே கதி என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதில் உள்ள‌ அறிவியல் தத்துவம்தான் என்ன?

6) நேற்று ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்த விஷயங்களை 'விஞ்ஞானக் கண்டுபிடிப்பு' என அறிவிக்கும்போது ஏற்றுக்கொள்ளும் நீங்கள், அதே விஷயத்தை 14 நூற்றாண்டுகளுக்கு முன் தெளிவாக சொல்லப்பட்டிருந்தும் அதை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுப்பது உங்கள் பகுத்தறிவுக்கு உட்பட்டதா?

7) பூமி உருண்டை வடிவமானது என்பதையும் ஒவ்வொரு கோள்களும் அதன் துணைக் கோள்களும் தன்னைத் தானே சுழன்றுக் கொண்டே சுற்றி வருகின்றன என்பதையும், அவற்றின் ஈர்ப்பு விசை குறித்து அறிவித்து தந்த விஷயங்களையும், இன்றைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வரும்/அந்த‌ விஞ்ஞானிகளைக் கூட வியப்படையச் செய்த இன்னும் பற்ப‌ல விஷயங்களை அன்றைக்கே முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதை வைத்தும், 'இது முஹம்மது நபியின் சொந்தக் கூற்று அல்ல' என்றும்'முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மற்ற யாரும் அன்றைய மக்களின் விஞ்ஞான அறிவைக் கொண்டு இவ்வளவு துல்லியமாக நிச்சயம் கூற முடியாது' என்றும், 'அது முக்காலத்தையும் அறிந்துள்ள பேராற்றல் மிகுந்த/மகத்தான‌ இறைவனின் வார்த்தைதான்'என்றும் பகுத்தறிவைப் பயன்படுத்தி இஸ்லாமியர்களாகிய நாங்கள் நம்புகிறோம். விஞ்ஞானம் முன்னேறி இராத அந்தக் காலக் கட்டத்தில் இவற்றையெல்லாம் முஹம்மது நபி(ஸல்) அவர்களால் எப்படிக்கூற முடிந்தது என்பதற்கு, கடவுளை மறுக்கும் உங்களின் அறிவியல் பூர்வமானபதிலென்ன? 

8) ' '"'பரிணாம வளர்ச்சி'யென கற்பனையாக உருவாக்கப்பட்ட‌ டார்வின் தத்துவம் 'பொய்' என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் அதிக அளவில் பெருகிய பிறகும், அதையே மீண்டும் மீண்டும் உங்கள் வாதத்திற்கு ஊன்றுகோலாக பயன்படுத்திக் கொண்டிருப்பதும் பகுத்தறிவுதான் என்கிறீர்களா?"
அன்புடன்,
உங்கள் சகோதரி,
அஸ்மா.

பயணிக்கும் பாதை
costblog[at]gmail.com

            =============================================================


    ஏனைய உயிரின தொடர்ச்சியின் விளைவாக மனிதன் உருவானான் என்றால் ஏன் மனிதன் பரிணாமம் அடைந்து வேறு நிலைக்கு இன்னும் மாற வில்லை? ஏனெனில் சூழ் நிலைக்கு தகுந்தவாறு ஒரு உயிரினம் மெல்ல மெல்ல மாற்றமடைவதே பரிணாமம். ஆக ஏனைய அஃறிணை உயிரினங்களின் மாற்றத்தை விட அறிவு மிகுந்த மனித உயிரி வாழும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற்றமடைய வேண்டியது அவசியமான ஒன்று., அஃது மாற்றடைவதற்கான அறிகுறீகள் கூட ஏற்படவில்லை என்பது ஆச்சரியமான ஒன்று..! 

N.H. ABDUL BASITH
"You can't satisfy all the people with your wealth, but satisfy them with a cheerful face and a good character" - PROPHET MUHAMMAD (S.A.W)


  வழிகாட்டி
basith27[at]gmail.com

       ===============================================================================


      இன்று நாத்திகர்களாக அடையாளப்படுத்துவோரில் பெரும்பாலானோர் இஸ்லாத்தைப்பற்றி அறைகுறையாக அறிந்துகொண்டு உளறிக்கொட்டுகிறார்களே தவிர தங்கள் கொள்கை என்ன? அது எவ்வாறு இஸ்லாத்தை விட சிரப்பாக உள்ளது? என்பதை குரிப்பிடத்தவறுகின்ரனர். இவர்கள், தங்கள் கொள்கையைவிட இஸ்லாம் கீழ்த்தரமானது என்பதை நிரூபிக்கத்துணிந்துவிட்டாலே இவர்களது வண்டவாளங்கள் அனைத்தும் வெளியாகிவிடும். எனவே இவர்களது கொள்கையும் சேர்த்து இவர்களது இஸ்லாம் தொடர்பான புரிதலிலுள்ள கோளாறுகளையும் தோலிருத்துக்காட்ட நாம் அல்லாஹ்வின் அருளால் தயாராகவே இருக்கிறோம்.

                -Mohamed Ihsas

       இஸ்சாஸ் ஓன்லைன்
 mohamedihsas786[at]gmail.com


      ==============================================================




     உலகத்தில் மதம் மற்றும் கடவுள் போன்ற கொள்கைகளை நம்பாமல் போனால், இவ்வுலகில் நடக்கும் பிரச்சனைகளுக்கு மனிதர்கள் எவ்வாறு தீர்வு காணுவர்? அதாவது தீர்வுகள் ஏதும் இல்லாத பட்சத்தில் யாருக்கு எந்த தீஓர்வு சரியெனபடுகின்றதோ அதையே அவர் தீர்வாக எடுத்துக் கொள்வர். அதனால் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் தீர்வு வராது. சரி அப்படியே அவரவருக்கு பிடித்த தீர்வையே வைத்துக் கொண்டாலும் அதை பின்பற்றுபவர்களின் அளவுகோல் என்ன? 
      அதாவது தமிழ் கலாச்சாரத்தில் ஒருவன் (பகுத்தறிவாதி) வளர்க்கப்பட்டால் அவன் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்வான், ஆந்திர கலாச்சாரத்தில் ஒருவன் (பகுத்தறிவாதி) வளர்க்கப்பட்டால் அவன் ஆந்திர முறைப்படி திருமணம் செய்து கொள்வான். தமிழ் நாட்டு பகுத்தறிவாதிக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டில் நம்பிக்கை இருக்கலாம். ஆந்திர பகுத்தறிவாதிக்கு நம்பிக்கை இல்லாமல் போகலாம். இப்போது தமிழ் நாட்டு பகுத்தறிவாதி ஆந்திர பகுத்தறிவாதியை திருமணம் செய்து கொண்டால் பகுத்தறிவாதிகளுக்குள் பிரச்சனை வருமா? வராதா?

     அடுத்து தமிழ் நாட்டு கலாச்சாரத்தில் வளர்ந்த ஒரு பகுத்தறிவாதி Living together கலாச்சாரத்தை பற்றி என்ன முடிவு சொல்வான். அது நன்று என்று கூறுவானா? அல்லது தீமை என்று கூறுவானா? தீமை என்று சொன்னால் என்ன காரணம் சொல்வான்? ஓரினப்புணர்ச்சி பற்றி பகுத்தறிவாதிகளின் முடிவு என்ன?

இந்தியாவில் சொத்து விவகாரங்களில் அவர்கள் எந்த சட்டத்தை பின்பற்றுவார்கள்? விவாகரத்து போன்ற விஷயங்களில் அவர்களின் நிலைபாடு என்ன? விவாகரத்து பண்ணினால் just like that விட்டுவிடுவார்களா? அல்லது பாதிக்கப்பட்டவருக்கு உதவித்தொகை கொடுக்க வேண்டுமா? விவாகரத்து செய்வதற்கு என்ன காரணங்கள் சொல்லலாம்? அதன் அளவுகோல் என்ன? அதை எவ்வாறு வழிவகுத்தார்கள்.

இது போன்ற மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு எந்த பகுத்தறிவாதிக்கு எந்த சட்டம் தன் மன்சாட்சிக்கு சரியன படுகின்றதோ அதை செய்தால், கண்டிப்பாக பிரச்சனைகளுக்கான சரியான தீர்வாக பகுத்தறிவாதிகளின் சட்டம் இருக்காது, தவிர இது மேலும் குழப்பங்களையும், சச்சரவுகளையுமே ஏற்படுத்தும். மதங்கள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று கூக்குரலிட்ட போலி பகுத்தறிவாதிகளே, முதலில் வாழ்க்கை வாழ்வதற்கு நீங்கள் அமைத்த கொள்கைகள் என்ன என்பதை கூறுங்கள். பின்னர் கடவுளை பற்றி பேசலாம்.
                                                                                                                             தோழைமையுடன்
                                                                                                             அபு நிஹான்                                                                                       



          hajamydheen[at]gmail.com


                           =====================================================


       நாத்தீகரா நீங்கள்? அப்போ இந்த கேள்விகளெல்லாம் உங்களை பார்த்துதான்..
இந்த பிரபஞ்சம்,இந்த பூமி,அதில் உள்ள உயிரினங்கள்(மனிதன் உட்பட),அதுவல்லாது,உயிர் வாழத்தேவையான நீர்,காற்று ஒளி,இவைகளின் வடிவமைப்பு என ஆதி முதல் அந்தம் வரை அத்துனையும் இயற்கையாகவே உருவானதாக கருதுகிறீர்களா???

உங்கள் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும் இயற்கையாக உருவானது என சொன்னால் நம்பி விடுவீர்களா??ம்ம்ஹும் இல்லை..இதை யாராவது உருவாக்கி இருக்க வேண்டும் என எதை வைத்து ஆணித்தரமாக சொல்கிறீர்கள்?

ஆம்! பகுத்தறிவு...அல்லவா?எந்த ஒரு பொருளும் ஒரு படைப்பாளி இல்லாது தானாக வந்துவிடாது என்ற அறிவு.வீடல்ல,ஒரு குருவிக் கூடானாலும்,எறும்பு தங்கும் புற்றானாலும்,அதை ஒருவர் உருவாக்காமல் வந்து விடுவதில்லை என்பதில் திண்ணமாக இருக்கும் நீங்கள்....முழு மனித சமுதாயமும் முயன்றாலும் முடிந்திடாத,கற்பனைக்கும் எட்டிவிடாத டிஸைனில் இந்த உலகத்தை ஒரு படைப்பாளன் இல்லாது தானாக உருவாகிவிட்டது என வாதிடுவது விந்தையாகவும்,கருத்துமுரணாகவும்,பின் முட்டாள்தனமாகவும் இருக்கிறதே!

நீங்கள் சொல்லலாம்,வீடு உட்பட என் வீட்டில் இருக்கும் அத்துனையும் மனிதன் உருவாக்க அதை நான் நேரடியாக கண்டிருக்கிறேன்,அதனால் படைப்பாளி இல்லாமல் வந்திருக்க முடியாது என சொல்கிறேன் என்று,..சரிதான்..வீடு கட்டும் போது நீங்கள் பார்த்ததால் நம்புகிறீர்கள்...

அதுபோல இவ்வுலகம் படைக்கப்படும் போது குத்துக்கால் போட்டு,கண்ணத்தில் கைவைத்து உக்காந்து நான் பார்க்கவில்லை அந்த ஒரே காரணத்தால் நம்பவில்லை என்கிறீர்கள் சரிதானே!

இயற்கையாகவேதான்,இந்த பூமி 100% பெர்ஃபெக்‌ஷனுடன் வந்துவிட்டது என உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா???ஒன்றும் இல்லை..கையில் பத்துவிதமான பொருட்களை வைத்துக்கொள்ளுங்கள்..ஒவ்வொன்றும் உங்களின் மேசையில் இன்ன இன்ன இடத்தில் இன்னின்னவாறு இருக்க வேண்டும் என முடிவு செய்து கொள்ளுங்கள் பின் அதை மேசையில் சிதரவிட்டுவிடுங்கள்... அவையாவும் தாங்கள் விரும்பிய பெர்ப்க்‌ஷனை பூர்த்தி செய்யும் சதவிகிதம் எத்தனை என நீங்களே யூகித்துக்கொள்ளவேண்டியதுதான்...அது ஒன்றில் இருந்து ஐந்து சதவிகிதத்தை கூட எட்டமுடியாது என்பது உறுதி..இதுதான் நீங்கள் சொல்லும் இயற்கையால் கொடுக்கப்பட முடிந்த பெர்ஃபெக்‌ஷன்...நீங்கள் விரும்பிய,அல்லது,குறைந்த பட்ச ஒழுங்கை எட்டவேண்டும் என்றால் கூட உங்களின் கைவைக்கப்படாமல் அங்கு ஒன்றும் நடக்காது.

அப்படி இருக்க இவ்வுலகில் இருக்கும் அத்துனையும் முழுமைபெற்றும்,அதில் ஒரு நேர்த்தியுடனும் இருக்க,அதுவோ இயற்கையாக வந்துவிட்டது என சொல்வது உங்களின் அறிவை நீங்களே ஏமாற்றிக்கொள்ளும் காரியம் இல்லையா?? 

ஒரு முறை முழு உலகையும் விழிவிரித்து திறந்த மனதுடன் பாருங்கள்.எத்தனை ரம்யமான படைப்பு,,,மாஷாஅல்லாஹ்...ஒவ்வொன்றும் தெரிவு செய்யப்பட்ட,வடிவமைப்பில் உச்சம் பெற்ற,படைப்பு....எங்கிருந்து வந்துவிட்டன இவை???

உதாரணத்திற்கு ஒன்றை பார்ப்போம்.
நீர்???இப்படியான ஒரு திரவத்தை மனிதன் காண்பதற்கு முன்புவரை சிந்தித்திருக்க முடியுமா?உலகில் மனிதன் உண்டாக்கிய அத்துனை விலைமதிப்புமிக்க பானங்கள்,நிறமற்ற சுவையற்ற எளிய நீரின் சுவையை விஞ்ச முடிந்ததா??இதுவும் இயற்கை என்றால்..இந்த நீர் ஏன் ஒரு அமிலமாக உருவாகி இருக்ககூடாது?..ஏன் வேறுவிதமான அடர்த்தியில் வெளியாகி இருக்ககூடாது...

மாசுக்களால் நிறைந்த உலகத்தில் மாசுமறுவற்று கண்ணாடிபோல் எப்படி உண்டானது...இந்த தன்மையும் தானாக வந்துவிட்டதா?இவ்வாறு எப்படி எப்படியோ இருந்திருக்க வேண்டிய நீர்..ஏன் தனிச்சிறப்பு மிக்க இத்தகைய குணாதிசியங்களை கொண்டதாக இருக்க வேண்டும்?இதை உலகில் உள்ள பிற உயிரினங்கள் பயன்படுத்தும்,அதனால் இப்படித்தான் நீர் இருக்க வேண்டும் என இயற்கை முடிவு செய்துவிட்டதோ??? 
இயற்கை என்ற அறிவற்ற எந்திரத்தில் இருந்து வெளியாகும் இந்த திரவம் இத்தனை தன்மைகளை கொண்டிருக்கவேண்டும் என்ற நோக்க சிரத்தை யாருடையது?இத்தனை குவாலிட்டி,இத்தனை பெர்ஃபெக்‌ஷன் யாருடையது???
ஒரு வேலை எல்லாம் சரியாக உருவாகி நீர் மட்டும் கரியமிலமாக இந்த இயற்கையில் இருந்து,இயற்கையாக வெளியாகி இருப்பின்..மனிதன் அதை உண்டுதான் வாழ்ந்திருக்க வேண்டுமா???..இல்லை வெவ்வேறு விதமாக இயற்கையாக உருவான நீரானது...உயிரினங்களின் தேவையறிந்து பரிணாம வளர்ச்சி??? கண்டு இன்று இத்தனை தெள்ளியதாக இருக்கிறதா சகோதரர்களே!!!

இது போல இயற்கை படைப்பு ஒவ்வொன்றையும் சிந்தித்தாலே போதுமே!
நீங்கள் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக்கொள்ள போதுமான ஆதாரங்கள் கிடைத்துவிடுமே!அப்ரம் வருவோம்,அந்த இறைவன் யார்?யாராக இருக்க முடியும்?என்ற கேள்விகளுக்கெல்லாம்...

முன்முடிவுகளை தூர எறிந்துவிட்டு திறந்த மனதுடன் சிந்திப்போம்...

நிச்சயமாக வானங்கள்,பூமி ஆகியவற்றின் படைப்பிலும்,இரவும்,பகலும் மாறி மாறி  வருவதிலும்,அறிவுடையோருக்கு திடமான அத்தாட்சிகள் பல இருக்கின்றன
அல்குர்ஆன் - 3:90

அன்புடன்
ரஜின்

askabt.islam[at]gmail.com

   ====================================================================


                யாதுமே இல்லாதிருந்து பின்பு யாதுமே இல்லாதிருந்து பின்பு Cosmic agg ஆக உருவாகி அதனுள் ஏற்பட்ட வெப்ப அழுத்தத்தின் காரணமாக வெடித்துச் சிதறியதில் இருந்து (Big Bang) இன்று வரை இக்கணப்பொழுது வரை இப்பிரபஞ்சம் விரிந்துகொண்டேதான் செல்கின்றது. ஒளி வினாடிக்கு 3 இலட்சம் கி.மீ. வேகத்தில் பயணிக்கின்றது. ஆனால் இப்பிரபஞ்சம் ஒளியையும் விட வேகமாக விரிவடைகின்றது என்பதனை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதனை அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
 “(எவரது உதவியுமின்றி) எம் கைகளினாலே நாம் வானத்தை அமைத்தோம். மேலும் நாம் அதனை விசாலப்படுத்துகின்றோம்.” ( 51:47 )
கடவுள் மறுப்புவாதியின் பெயர் பகுத்தறிவுவாதி இந்த பெயரே பகுத்தறிவுக்கு புறம்பானது?
கடவுள் உண்டென வாதிடுபவன் தான் உண்மையான பகுத்தறிவுவாதி!
கடவுள் மறுப்பாளர்கள் தன் கொண்ட கொள்கையின் பால் ஒரு தீர்க்கமான முடிவை இதுவரை உலகிற்க்கு சமர்ப்பிக்கவே இல்லை கடவுள் மறுப்பு வாதம் ஒரு பொய்யான வாதம் என்பதை நாம் நிறும்பிக நான் கடமைப்பட்டுள்ளேன்

எனெனில் நான் முஸ்லிம் இஸ்லாம் கூறும் ஒறிறையின் அடிமை உலகம் ஏற்றுக்கொள்ளும் அறிவார்ந்த கருத்துக்களுக்கு பதிலலிக்க காத்திருக்கிறேன் பின்னூட்டங்களில் சான்றுகளின் அடிப்படையில் வாதிடுங்கள் கற்பனையை புறந்தள்ளிவிட்டு   
கடவுள் மறுப்புவாத தோழமைத்தேடி.
ஒ.பி.கலில் ரஹ்மான் எஸ்.பி.பட்டினம்

        kaleelsms.com                                                       
kaleelsms[at]gmail.com






படைத்தவன் நாடினால் பகுத்தறிவாளர்களின் பட்டியல் தொடரும்...





இறைவன் நாடினால் இத்தளத்திலோ அல்லது மேற்கண்டவர்களின் எந்த தளத்திலோ நாத்திகம் குறித்து உரையாட பதிவர்கள் தயாராக இருக்கிறார்கள்.
      இங்குள்ளவர் யாவரும் முகவரி தந்தே கருத்து தந்திருக்கிறார்கள்., போலி பெயரில் ஆநாகரிக பின்னூட்டமிடாமல் உங்கள் எழுத்துக்களோடு சேர்த்து உண்மையையும் கொண்டு வாருங்கள்., 
                                                                                    அல்லாஹ் நன்கு அறிந்தவன் 
read more ""நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்""

Tuesday, August 09, 2011

ரமலானில் முஸ்லிம்கள்!..?


                                            ஓரிறையின் நற்பெயரால்
                 இஸ்லாத்தில் ஏனைய ஆக்கங்களை விட ரமலான் குறித்தே அதிக ஆக்கங்கள் இணையத்தில் நிறைந்து காணப்படுகின்றன.,ரமலான் குறித்து புதிதாய் அறிந்து கொள்வதற்கு எதுவுமில்லை என்ற அளவிற்கு அதிகமதிகம் செய்திகள் கிடைக்கின்றன., அல்ஹம்துலில்லாஹ்..!
       
    அத்தகைய சங்கைமிகு ரமலான் மாதத்தில் இப்போது நாமும் இருக்கிறோம். ரமலான் மாதத்தின் நோன்பை முழுவதும் நோற்க அல்லாஹ் அருள்புரிவானாக..! நோன்பு நோற்பதால் உடலுக்கு ஏற்படும் மருத்துவ ரீதியான நன்மைகள் ஆயிரமாயிரம் நிருபனமானாலும் (benefit of islamic fasting என கூக்ளியிட்டால் ஏராளமாக கண்டுக்கொள்ளலாம்) அஃது நோன்பின் உண்மையான நோக்கமும் அதன் அடிப்படையில் செயல்படும் முஸ்லிம்களின் நிலையும் குறித்தே இந்த கட்டுரை

இஸ்லாமும் - ரமலானும்
          ஏனைய வணக்கங்களைப்போல் அல்லாமல் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே நோன்பு குறித்து இறை வசனங்கள் இருக்கின்றன அல்குர்-ஆனில்


 ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.  (2:183)
  
     இங்கு நோன்பு நோற்பதின் நோக்கத்தை எளிதாக அறிந்திட அல்லாஹ்
" நோன்பின் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்." என குறிப்பிடுகிறான். இங்கு தூய்மை என்பது உள்ளத்தூய்மையை குறிக்கிறது. மேலும் இரட்சகனின் இறுதித்தூதரும் ,
    யார் பொய்யான பேச்சையும் கெட்ட நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!"
அறிவிப்பாளர்:அபூ ஹுரைரா(ரலி அவர்கள்
புஹாரி பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1903 

                   பொதுவாக நோன்பு பட்டினி கிடப்பதை மையப்படுத்தியிருந்தாலும் அதை முன்னிலைப்படுத்தி கடமையாக்கப்படவில்லை. பசித்திருப்பதும்-தாகித்திருப்பதும் நோன்பு காலங்களில் ஒரு அம்சமாக இருந்தாலும், தனி மனித ஒழுக்கத்தை பிரதானப்படுத்தியே நோன்பு இருக்கிறதென்பதை தான் மேற்கண்ட வேத வரியும் தூதர் மொழியும் எடுத்து இயம்புகின்றன. ஆக பட்டினி கிடப்பது மட்டுமே நோன்பின் சாரம்சமாக இருந்தால் மேற்கண்ட இறை வசனங்களில் அல்லாஹ் அவ்வாறு கூற வேண்டிய அத்தியாவசியமும் இல்லை., அவனுடைய தூதரும் வழிமொழிய வேண்டிய அவசியமும் இல்லை.
       
            ஆக மேலதிக விளக்கம் இல்லாமலே நோன்பின் அடிப்படை நோக்கம் என்ன என்பதை எளிதாக அறியலாம்., எனினும் அத்தகைய சங்கை மிகு நோன்பு காலங்களில் முஸ்லிம்கள் செயல்பாடுகள் குறித்து காண்போம்.



ரமலானும் -முஸ்லிம்களும்
      எந்த ஒரு முஸ்லிமும் ரமலானிற்கு முன்னதாகவே அதனை வரவேற்க மிகுந்த ஆர்வமுடன் இருக்கிறார் என்பதில் இரு வேறுகருத்துக்கள் இல்லை. எனினும் நோன்பு காலங்களில் இரவு காலங்களில் சஹருக்கு முன்புவரை நன்கு எங்கேணும் அமர்ந்து விளையாடி (அல்லது சக நண்பர்களோடு அரட்டை அடித்து)விட்டு சஹருக்கு பின் நன்றாக தூங்கி நோன்பு திறப்பதற்கு முன் தன் கண்களை திறக்கும் சகோதரர்களின் நிலை மாறி
     
             பதினான்கு மணி நேரத்திற்கு மேலாக பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் மட்டுமல்லாது தனது அன்றாட அதிக அலுவல்களுக்கு மத்தியிலும் அந்தந்த தொழுகைக்கான பாங்கு சொல்லப்பட்டவுடன் மிகச்சரியாக (பள்ளி வாசலுக்கு) தொழ செல்வதும், ஏனைய பர்ளான தொழுகைகளை போலவே சுன்னத்தான இரவு தொழுகைக்கு மிக முன்னதாக அல்லது தனது அலுவல் பணி முடிந்தும் விரைவாக வந்து ஜமாத்தோடு கலந்து தொழுகையே தொடர்வதும்,
     
             ஆயிரமாயிரம் மக்கள் உலவும் கடை வீதிகளில் அரைகுறை ஆடையுடன் காட்சியளிக்கும் அனேக அனாச்சாரியங்களுக்கு மத்தியிலும் பார்வையை தாழ்த்தி ஈமானை அதிகரிக்கும் மாண்புடன் உலவுவதும், தீய பேச்சுக்க்கள் பேசிடினினும், கெட்ட எண்ணங்கள் வந்திடினும் மறுகணம் "அஸ்தாஃபீருல்லாஹ்..!" எனக்கூறி எண்ணத்தை தூய்மையாக்குதலும், திரைப்படத்திற்கு திரையிட்டு தன்னின் நேரங்களை குர்-ஆனோடு உரையாடுவதற்காக செலவிடுவதும்,அதிக பசி இருப்பதை அறிந்தும் அருகே வந்தவருக்கு தன்னிடமிருந்து ஏராளமான உணவும் அதை விட தாரளமான இடமும் கொடுக்கும் பொறுமையும் மன சகிப்புதன்மையும் பொரும்பாலான முஸ்லிம்களின் நோன்பாக இருக்கிறது... எனினும்
அத்தகைய சங்கை மிகு ரமலான் கடந்து விட்டால்...

ரமலான் முழுக்க நம்மில்-

  • தஸ்பீஹ்கும் கையுமாக இருந்தவரின் கரங்களில் உயர்ரக சிகரெட்டுகள்..!
  • பாங்கு சொல்வதற்கு முன்னதாக பள்ளிக்குள் நுழைந்தவர் தொழுகை நேரம் முடிந்தும் பள்ளியின் பக்கம் எட்டிப்பார்பதில்லை...!
  • கடைவீதீகளில் தரையுடன் மட்டுமே விழிகளால் பேசியவர்களின் பார்வை தேடும் விரச காட்சிகள்
  • தீயப்பேச்சுகள் இவையாவும் அடியோடு தவிர்த்த அனேகர்களின் வாயில் அநாகரிக பேச்சுக்களின் அடிச்சுவடுகள்...!
  • பெரு நாள் தொழுகை முடிந்து துஆ கேட்பதற்கு முன்பாகவே திரையரங்க வளாகங்களில்...டிக்கெட் கிடைத்த பெருமிதத்தோடு
       இப்படி சிலர்..!

  இப்படித்தான் பல வருட ரமலானும் அதைத்தொடர்ந்த மாதங்களும் வெற்று சடங்காக பலர் வாழ்கையில் வந்தும்- சென்றும் கொண்டிருக்கின்றது.


இதுதான் ரமலான் மாதம் முழுக்க நமக்கு அளிக்கப்பட்ட பயிற்சியா ? 


இதுதான் நோன்பு நோற்பதன் மூலம் நாம் அடைந்து கொண்ட பயன்பாடா..? 


தூய்மையுடையோர் என்பதற்கு இது தான் விளக்கமா?


நோன்பு காலங்களில் மட்டும்தான் ஒழுக்கத்துடன் செயல் பட வேண்டும் என அல்லாஹ் வரையரை ஏற்படுத்தி தந்திருக்கின்றானா..?

 சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம் நாம்...
  மேலும் புஹாரி பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1894 ல் அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்க
இரட்சகனின் இறுதித்தூதர் மேலும் கூறுகிறார்கள்

  "நோன்பு ஒரு கேடயமாகும்..!"


      ஆம்! அது பாவங்களிலிருந்து காக்கின்ற கேடயம்.,  அக்கேடயத்தை பயன்படுத்தி பாவ செயல்களிலிருந்தும், மன இச்சையிலிருந்தும் நம்மை தற்காத்து நோன்பில் நாம் கொண்ட பயிற்சியின் விளைவாக இறைவனுக்கு பயந்து ரமலான் மாதம் முழுக்க எவ்வாறு ஒழுக்க சீலர்களாக நம்மை தயார்படுத்தினோமோ அதன் தாக்கம் அதை தொடர்ந்த ஏனைய மாதங்களிலும் நம்மீது இருக்கவேண்டும்.,
         ஏனெனில் ஆதம் அலையை படைப்பதற்கு முன்னதாக இருந்த அதே அல்லாஹ் தான் நம்முடன் நோன்பிலும் இருக்கின்றான் -நோன்பல்லாத பிற காலங்களிலும் இருக்கின்றான். மேலும் ஒரு நல்ல செயலை தொடர்ந்து செய்வதற்கும், அதுப்போல கெட்டச்செயலை விட்டொழிப்பதற்கும் ஏனைய நிலைகளை விட ரமலான் மாத்திலேயே முறையாக பின்பற்றுதலுக்குரிய சாத்தியக்கூறுகள் அதிகம்.
      அந்த வாய்ப்பை நாம் நன்கு பயன்படுத்தி ரமலானில் மட்டும் முஸ்லிம்களாக இல்லாமல் நோன்பில் கொண்ட பயிற்சியின் விளைவால் உயிர் வாழும் காலம் முழுவதும் அல்லாஹ்விற்கு பயந்து அவனது ஏவல்-விலக்கல்களை பின்பற்றும் முன்மாதிரி முஸ்லிம்களாக வாழ வேண்டும். அத்தகைய நல்ல பாக்கியத்தை உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ் தந்தருள்வானாக..!

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள். (3:102)


                                                                                            அல்லாஹ் நன்கு அறிந்தவன்
read more "ரமலானில் முஸ்லிம்கள்!..?"

Wednesday, July 20, 2011

பகுத்தறிவாளர்களின் கடவுள்..!

                                    ஓரிறையின் நற்பெயரால்.,
                 தான் (மட்டும்) ஏற்கும் அல்லது மறுக்கும் நம்பிக்கை சார்ந்த ஒரு விசயத்தை அறிவு ரீதியாக பிறருக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை. அத்தகைய நிகழ்வை பிறர் விரும்பினால் உண்மையென ஏற்கவும் அல்லது பொய்யென மறுக்கவும் செய்யலாம்.,


         "கடவுள்" - என்ற நிலையை இஸ்லாம் அல்லாத மற்ற மதங்கள் யாவும் மேற்கண்ட நிலைப்பாட்டிலேயே வைத்து காண்கிறது.,ஆகவேதான் கடவுள் குறித்த விமர்சனங்களுக்கு அங்கு பதில் தருவதில்லை என்பதைவிட பதில் இல்லையென அறிந்து கடவுள் மறுப்புக்கு பலர் ஆளாகின்றனர். ஆக கடவுள் மறுப்புக்கு இஸ்லாம் அல்லாத ஏனைய மதங்களின் தவறான கடவுள் சார்ந்த கோட்பாடே பிரதான காரணம் என்றால் அது மிகையாகாது.ஆக இஸ்லாம் கூறும் கடவுள் குறித்த வரைவிலக்கணம் பகுத்தறிவிற்கு பொருத்தமானதா? என்பதை பார்க்கும் முன் கடவுளை மறுக்கும் நாத்திக சிந்தனை பகுத்தறிவிற்கு உகந்ததா... பார்ப்போம்.


  நாத்திகம் -
        பொதுவாக ஒருவரின் நாத்திக சிந்தனைக்கு அடிப்படைக்காரணம் தேடுதலில் விருப்பங்கொண்ட அவரின் சுய அறிவு. அது பாராட்டத்தக்கதே..! எனினும்., அவ்வறிவால் தம்மை சுற்றி நடைபெறும் கடவுள் பெயரால் அரங்கேறும் போலி வழிபாடுகளும், அனாச்சாரங்களும், அறிவிற்கு பொருந்தாத மூட பழக்க வழக்கங்களும், மிக முக்கியமாக கடவுள் பெயரால் நடைபெறும் சமூக புறக்கணிப்பும் தான் ஒருவரது கடவுள் மறுப்புகொள்கைக்கு மிக முக்கிய காரணியாகிறது.. இன்னும் சற்று ஆழமாக அதன் வெளிபாட்டை இஸ்லாத்திலும் காண்பிக்க குர்-ஆன் மற்றும் ஹதிஸ்களுக்கு தவறான புரிதலோடு தங்களின் சுய விளக்கத்தை அளித்து கடவுள் மறுப்புக்கு மேலும் மெருகேற்றுகிறார்கள் எனினும் அதற்கு நமது (இணைய) சகோதரங்கள் பலரால் தெளிவாக மறுப்பும் விளக்கமும் தரப்படுகிறது அல்ஹம்துலில்லாஹ்..!


       இங்கு கவனிக்கத்தக்க ஒரு விசயம் .. கடவுளை மறுக்க கடவுள் பெயரால் ஏற்படும் தவறுகளை முன்னிருத்தி மட்டுமே கடவுள் மறுப்புக்கு சான்று தரப்படுகிறது. மாறாக நேரடியாக கடவுள் இல்லையென மறுக்க தெளிவான காரணம் இல்லை.,


   "பரிணாமம்" அறிவியல் ரீதியாக கடவுள் மறுப்புக்கு மாபெரும் ஆயுதமாக கொண்டாலும் அஃது அதுவும் பயனற்று தான் போகும். ஏனெனில் இதுவரை நிகழ்வுற்ற பரிணாம கோட்பாடுகளை ஒருவேளை உண்மையென நம்பினாலும் (?) கூட "ஏற்பட்ட உயிரின மாற்றத்தை பற்றித்தான் பரிணாமம் பேசுகிறதே தவிர அஃது உயிரினங்கள் ஏன் மாற்றமடைந்தன என்பதற்கு தகுந்த சான்றின்றி இன்னும் கேள்விக்குறியோடு தான் ஆய்வை தொடர்வதாக அறிவியலார் பதில் தருகின்றனர்.


        ஆக அறிவியல் ரீதியான கடவுளை மறுக்க பரிணாமம் துணைக்கு வராது., சுருங்கக்கூறினால் "எதுவுமல்லாத சூன்யத்திலுருந்து ஒரு உயிரை அறிவியலார் உண்டாக்கினால் மட்டுமே விஞ்ஞானத்தால் கடவுள் இல்லை என்பதை ஆணித்தரமாக மறுக்க முடியும். அதுவரை கடவுளை மறுக்க தர்க்கரீதியான வழிகளை தான் தேட வேண்டும். எனினும் பகுத்தறிவு பார்வையில் அதுவும் சாத்தியமா என்றால்... இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..


 எந்த ஒன்றை மறுப்பதும், ஏற்பதும் அவரவர் உரிமை., அதே நேரத்தில் பொதுவில் அறுதியிட்டு கூறும் தம் வாதத்தை மெய்பிப்பதாக இருந்தால் அதற்கான சான்றுகளை தருவது அவரது கடமையாகும்., இதுவே ஒரு செயல், ஒரு தன்மை அல்லது ஒரு நிகழ்வை உண்மைப்படுத்தலின் வரைவிலக்கணம் ஆகும்.


     இதனடிப்படையில் கடவுள் குறித்த நிகழ்வை பொதுவில் நிறுத்தி ஏற்பதாக இருந்தாலும் அல்லது மறுப்பதாக இருந்தாலும் அதற்கான வரைவிலக்கணம் தெளிவாக முன்னிருத்தப்பட வேண்டும். அஃதில்லாமல் கூறும் வாதங்கள் நம்பிக்கை சார்ந்த அளவில் மட்டுமே பார்க்கப்படும். இந்நேரத்தில் கடவுள் குறித்த வரைவிலக்கணம் குறித்துப்பார்க்கும்போது சகோ ஜாகிர் நாயக் அவர்களின் அழகிய எளிய உதாரணத்தையும் இங்கு குறிப்பிடுவது அவசியம் என நினைக்கிறேன்.,


    என் கையில் ஒரு பேனாவை வைத்துக்கொண்டு இது ஒரு புத்தகம் என்று நான் கூறினால் இதனை மறுப்பதாக இருந்தால் கண்டிப்பாக அவருக்கு பேனாவை பற்றி அறிந்திருக்க வேண்டும் அஃது பேனாவை பற்றி தெரியாவிட்டாலும் புத்தகத்தைப்பற்றி கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.அப்போது தான் நான் கையில் வைத்திருப்பது புத்தகம் இல்லை என கூற இயலும்., என அவர் கூறினார்.,


    மேற்கண்ட கேள்வி எதிர் மறையாக இருப்பதால் விடைக்கான இருப்பொருட்களில் ஒன்றை மட்டும் நாம் அறிந்திருந்தாலே போதுமானது மற்றொரு பொருள் குறித்து அறியாமாலிருந்தாலும் நமது நிலைப்பாட்டை உண்மையாக்கலாம். இப்படிதான் மேற்கண்ட நாத்திக சிந்தனை கடவுளுக்கான கேள்விக்கு எதிர்மறை விளக்கத்தை கையாளுகிறது.


   ஆனால் இதே கேள்வி நேர்மறையாக கேட்கப்பட்டால்..!
             என் கையில் ஒரு பொருளை வைத்து கொண்டு. அதை பிறர் முன்னிலையில் காட்டி இது பேனா என்கிறேன். இதை மறுப்பதாக ஒருவர் இருந்தால் மற்ற எல்லா பொருட்களின் வரைவிலக்கணம் குறித்து தெரிந்திருந்தாலும் அஃது இக்கேள்விக்கு பதில் அவரால் சொல்ல முடியாது. மாறாக பேனாவின் வரைவிலக்கணம் தெரிந்திருந்தால் மட்டுமே உண்மையான பதில் தருவது சாத்தியம். 


     ஆக இந்த உதாரணத்தை மேற்கோளாக கொண்டு கடவுள் குறித்த வரைவிலக்கணத்தோடு ஒப்புநோக்கும் போது கடவுளை ஏற்பதாகவோ அல்லது மறுப்பதாகவோ இருந்தால் அவருக்கு கடவுள் குறித்த வரைவிலக்கணம் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும் அப்போது மட்டுமே இக்கேள்விக்கு உண்மையான பதில் தர இயலும்.


 மிக தெளிவாக - எளிதாக இஸ்லாம் 
  • (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.  (112:1)
  • அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.  (112:2)
  • அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.  (112:3)
  • அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.  (112:4)
         
              இப்படி குர்-ஆனில் கடவுளுக்கு வரைவிலக்கணம் தருகிறது. இவ்வரிகளை நம்பிக்கை என்ற அளவுகோலையும் தாண்டி மனித அறிவு ஏற்றுக்கொள்ளும் வாதமாகவும், அதே நேரத்தில் மனித எண்ணங்களால் வரையறுக்க இயலாத ஓர் உயரிய சக்திக்கு பொருந்தும் படியான முறையான செய்கைகளும் இருப்பதால் மேற்கண்ட வரைவிலக்கணத்தை ஏற்றுக்கொள்வதில் பகுத்தறிவாளர்களுக்கு எந்த வித ஆட்சபனையுமில்லை.,
           
          ஆக கடவுளுக்கான ஓர் உயரிய வரைவிலக்கணத்தை முன்னிருத்த்தி இது உண்மையானது என குர்-ஆன் கூறும் போது அஃது மேற்கண்ட கோட்பாட்டை பொய்யென மறுப்பதாக இருந்தால் அவ்வாறு தாங்கள் மறுக்கும் கடவுளுக்கு உண்மையான வரைவிலக்கணம் நாத்திக சிந்தனையாளர்கள் தர வேண்டும். ஆனால் இன்று வரை தாங்கள் மறுக்கும் கடவுளுக்கு உண்டான வரைவிலக்கணத்தை நாத்திக சிந்தனை தரவே இல்லை. இது ஆச்சரியமான விஷயமும் கூட...


           ஏனெனில் கடவுள் குறித்த நிலைப்பாட்டை ஏனைய மதங்கள் நம்பிக்கைச்சார்ந்த விசயமாக அணுகி கொண்டிருக்க... இஸ்லாம் மட்டுமே எப்படிப்பட்டவர் கடவுளாக இருக்க முடியும் அல்லது இருக்க வேண்டும் என கடவுள் குறித்து ஒரு தெளிவான வரைவிலக்கணம் ஏற்படுத்தி தந்திருக்கிறது எனும்போது எதையும் நம்பிக்கை கடந்து பகுத்தறிவு கண் கொண்டு ஆராயும் நாத்திகம் கடவுள் இல்லை என்பதை நிருபிக்க எப்படிப்பட்டவர் கடவுளாக இருக்கமுடியாது அஃது ஏன் கடவுளாக இருக்க முடியாது என்பதற்கு ஒரு வரைவிலக்கணம் நாத்திகம் உண்டான நாள் முதலே இயற்றி இருக்கவேண்டுமல்லவா..? இதுவரைக்கும் அஃது வரைவிலக்கணம் ஏற்படுத்தாதது மிகப்பெரிய கேள்விக்குறியே..! அஃது இனி ஏற்படுத்த முனைந்தாலும் மதங்கள் வணங்கும் போலி கடவுளர்களை தான் இவர்கள் இனங்காட்ட முடியும்


       அஃது அத்தகைய போலி கடவுளர்களை மறுப்பதற்கு பெயர் தான் நாத்திக சிந்தனையென்றால்... நாங்களும் அத்தகைய போலி கடவுளர்களை இல்லை என்று தான் சொல்வோம்.


       பகுத்தறிவு விதையில் மலர்ந்தது நாத்திகப்பூவென்றால் இனிமேலாவது நாத்திகம் மறுக்கும் கடவுளுக்கு ஒரு வரைவிலக்கணம் தரட்டும். அதுவரை கடவுள் மறுப்பாளர்கள் என தங்களை சொல்ல வேண்டாம் வேண்டுமானால் கடவுள் எதிர்ப்பாளர்கள் என்று- அதுவும் மதங்கள் சமைத்த போலி கடவுள்களின் எதிர்ப்பாளர்கள் என்று தங்களை சமூகங்களில் அடையாளப்படுத்தட்டும்.,. உங்களின் அறிவு சிந்தனைக்கு ஆணவ திரையிட வேண்டாம் என்பதே இப்பதிவின் நோக்கம் நாத்திக சகோதரங்களே...


                                                               அல்லாஹ் மிக்க அறிந்தவன் 
read more "பகுத்தறிவாளர்களின் கடவுள்..!"

Tuesday, June 28, 2011

அதிசய பிராணி வருகை Vs அவசர அறிவியல் புரிந்துணர்வு


                                         ஓரிறையின் நற்பெயரால்

        இப்பதிவிற்கு செல்லும் முன் முஸ்லிம் சமுகத்திற்கு ஓர் வேண்டுகோள்., 

      குர்-ஆன் விஞ்ஞான நூலல்ல... விஞ்ஞானத்தையும் உள்ளடக்கிய நூல்!, ஆக குர்-ஆனை விஞ்ஞான நூலாக நிறுவ சிரத்தையெடுத்து ஏற்படும் அறிவியல் விளைவையெல்லாம் குர்-ஆனோடு பொருத்த வேண்டாம்.,
      ஏனெனில் விஞ்ஞானம் எச்செயலை எதன் மூலம் செய்ய வேண்டும் என விளக்கும்., குர்-ஆன் அச்செயலை எப்படி (ஹலாலாக) செய்ய வேண்டும் என விளக்கம் தரும்.,ஆக நவீன அறிவியலுக்கும் மேலான மதிக்க மற்றும் அணுக வேண்டிய படிப்பினை வாய்ந்த நூல் தான் குர்-ஆன்.,
இப்போது பதிவிற்கு வருவோம்.,

அல்லாஹ் குர்-ஆன் அத்தியாயம் அந்நம்ல் (27) வசனம் (82) ல்
 அவர்கள் மீது (வேதனையுடைய) வாக்கு நெருங்கும் போது, அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து நாம் வெளியாக்குவோம்; அது, நிச்சயமாக மனிதர்கள் (யார், யார்) நம் வசனங்களின் மீது உறுதி கொள்ளவில்லையென்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்.


  இது DIVINE ISLAM இணையம் மொழிபெயர்த்த QURA'N VIEWER VERSION 2.910ன் தமிழாக்க வசனம்.,
ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி (ரஹ்) மொழிபெயர்த்த (தாருல் ஹூதா வெளியீடு) குர்-ஆன் தமிழாக்கத்தில் பிராணி என்ற வார்த்தைக்கு பதிலாக "கால் நடை" என்று வருகிறது .,

      ஆக., மேற்கண்ட வசனம் வாயிலாக, உலக அழிவு (கியாமத்) நாள் நெருங்கும்போது பூமியிலிருந்து ஒரு விலங்கு வெளியாகி மக்களிடையே "ஓரிறையே வணங்காது அவனை நிராகரித்து அவனை விசுவாசிக்காதவர் யார் யார் என ஓரிறையை உணரும் பொருட்டு அவர்கள் மத்தியில் பேசும் என கூறுகிறது.,

   மேலும் இப்பிராணிக்குறித்து மேலதிக வசனம் ஏதும் குர்-ஆனில் இல்லையெனிலும் கியாமத் (உலக அழிவு) நாளின் மிகப்பெரும் அடையாளங்களில் ஒன்றாக ஹுதைபா (ரலி), அறிவிக்க நூல் முஸ்லிம் எண் 5162 ல் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக ஹதிஸ் பதிவாகியுள்ளது., இதனடிப்படையில் ஒப்புநோக்கும் போது உலக அழிவு நாள் சமீபத்தில் மக்களிடையே பேசும் பிராணி தோன்றுவது உறுதி என வேத வரிகளும்- தூதர் மொழிகளும் சான்று பகிர்கின்றன.,
மேற்கண்ட சம்பவ அடிப்படையில் இரு கேள்விகள் முன்னிருத்தப்படுகின்றன.,

  • திடிரென பூமியை பிளந்து ஒரு விலங்கு வருவது எப்படி சாத்தியம்..?
  • அதுவும் மனிதர்களுடன் பேசுவதற்கான மொழியுடன் தோன்றுவது எவ்வாறு சாத்தியம்.?  
         -ஆக இது அறிவியலுக்கு முரண்படுகிறது ., எனவே.. குர்-ஆன் பொய்யுரைக்கிறது சொல்ல விளைகின்றன முரண்பாட்டு சிந்தனை.

  "அறிவியல் முரண்பாடு என்பது., நிருபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையோடு நாம் உடன்படுத்தும் ஒரு சோதனை முற்றிலுமாக மாறுபடுவதே ஆகும்"      இதோடு நாம் மேற்குறிப்பிட்ட முதல் வினாவை பொருத்தினால், அதாவது திடிரென பூமியில் ஒரு உயிரினம் தோன்றுவது., அறிவியலுக்கு முரணானதல்ல., ஏனெனில் இன்றும் சர்வ சாதாரணமாக பல வகையான தாவரங்கள் பூமியிலிருந்து முளைப்பதை காண்கிறோம் ஆக ஒரு உயிரினம் பூமிக்கு அடியில் இருந்து உருவாவது விஞ்ஞானத்திற்கு எதிரானது அல்ல. இதற்கு அறிவுஜீவிதனமாக தாவரங்கள் தான் முளைக்கும் விலங்குகள் பூமியில் தோன்ற வாய்ப்பில்லை என்றால் அதற்கு அறிவியல் ரீதியான நிருபனம் வேண்டும்.,    

         ஏனெனில் அறிவியல் என்பது., நடைபெற்று முடிந்த நிகழ்வுகளின் அடிப்படையை மையமாக வைத்து காரணத்தை அலசுவது ஆகும். முடிவுற்ற செயலை அஃது அது நடைபெற்ற விதம் குறித்து காரண காரியத்தோடு தெளிவாக வரையறுத்துக்கூறுவதே ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல் நிருபனம் ஆகும்., அதாவது இந்தபொழுது வரை நடைபெற்று முடிந்தவற்றில் கிடைக்கபெற்ற தொகுப்பை மட்டுமே வைத்து.,  ஒரு செயல் உண்மையென்றோ ,சாத்தியமென்றோ நாம் கூறுகிறோம்.,


   அஃதில்லாமல் இதுவரை நாம் கண்டறியா (சாத்தியமில்லை என வரையறுத்த) ஒரு செயல் பிற்காலத்தில் நடைபெறும் போது அதனையும் அறிவியல் உண்மையாக / அதிசயமாக ஏற்றுக்கொள்கிறோம் இதற்கு ஒரு எளிய உதாரணம் உயிர் பிழைப்பதற்கு எந்த வித சாத்தியக்கூறுகளும் இல்லையென மருத்துவர்களால் விரிவாக சோதிக்கப்பட்ட எத்தனையோ நோயாளிகள் உயிர் பெற்று ஆரோக்கியமடைவதை காண்கிறோம்.
     சென்ற நிமிடம் வரை சாத்தியமில்லை என வரையறுத்த அறிவியல் அறிவு அடுத்த நிமிடமே இது ஒரு "Medical Miracle" மருத்துவ உலகின் அதிசயம் என ஏற்று புலங்காகிதமடைவதை காண்கிறோம்., ஆக மனித அறிவுக்கு உடன் படாத, முடியாது என வரையறுக்கப்பட்ட செயல்களும் உலகில் நடப்பது சாத்தியமே!

    ஆக இவ்வுதாரணம் வாயிலாக இதுவரை இதைப்போன்று ஒரு உயிரினம் உருவாவதை நம் அறிவு ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அஃது அந்நேரத்தில் அப்பிராணி வெளிபடும் போது அறிவியல் உலகம் அதிசயமாக கட்டுரை வடிக்கும் போது இறைவனின் அத்தாட்சியை இவ்வுலகம் காணும்..! 
பேசும் மொழி..? 
 ஒரு விலங்கு -மனிதர்கள் இன்னொரு மனிதருக்கு தெரியாமல் மறைத்துவைத்திருக்கும் ரகசியத்தை கண்டுணர்ந்து கூறுவது என்றால், எந்த அடிப்படையில் அது சாத்தியப்படும்?
       உண்மைதான்... சாதாரணமாக ஒருவர் மனதில் உள்ளதையே அதிபுத்திசாலியாக இருந்தாலும் பிறிதொரு மனிதனால் கண்டறிய முடியாது எனும்போது.. ஒரு விலங்கால் எப்படி கண்டறிந்து சொல்வது சாத்தியமாகும் மனித மனங்களில் உள்ளவற்றை..? எனும் நோக்கில் சிந்தித்தால்... மேலும் இந்த வசனத்தை உற்று நோக்கினால் அவனது வல்லமையின் வெளிபாடாகவும் அத்தாட்சியின் விளைவாகவும் நடைபெறும் இச்சம்பவம் இது., எனவே அந்நேரத்தில் இறைவன் ஏற்படுத்தும் ஒரு அசாதாரண செயல் என்பதை அறியலாம்..    
   அஃதில்லாமல் மேலும்,
மொழி - உயிரினம் சமூக வயப்பட்டிருப்ப‌தன் அடையாளம். தன் இனத்தைச் சார்ந்த இன்னொரு உயிரினத்துடன் தன்னுடைய கருத்தைப் பரிமாறுவதற்குறிய ஒரு வளர்ச்சி. ஆனால் இதை இன்னொரு உயிரினம் இல்லாத ஒற்றை விலங்காக பூமியிலிருந்து திடீரென வெளிப்படும் விலங்கு செய்யமுடியுமா? 
என்று கூறினால்.,
           இன்றும் வீடுகளில் வளர்க்கப்படும் கிளி, மைனா, நாய் மற்றும் ஏனைய உயிரினங்கள் மனிதர்கள் பேசும் மொழியே புரிந்துக்கொள்வதோடு அவர்களுடன் (தத்தமது பேசும் மொழியுடனான) பேச்சு தொடர்பும் வைத்திருக்கிறது., மேலும் உரியவரின் ஏவல்-விலக்கல்களுக்கும் தெளிவாக கட்டுப்படுவதையும் காண்கிறோம்., அவ்வாறு இருக்கும் போது., ஒரு உயிரினம் -தன் இனத்தை சார்ந்த சக உயிரினத்துடன் மட்டும் தொடர்புக்கொள்ள தங்கள் மொழியறிவை பயன்படுத்திக்கொள்கிறது என்று கூறுவது எப்படி உண்மையாகும்..? 


    ஆக தன் இனம் தவிர்த்தும் ஏனைய நிலையில் உள்ள உயிரினங்களுடன் தமது மொழியறிவால் தன் /பிற செய்கையே புரிந்துக்கொள்ளவும் புரிய வைக்கவும் முடியும் என்பதையல்லவா இது காட்டுகிறது., ஆக எதிர்காலத்தில் மனிதர்கள் மத்தியில் பேசும் ஓர் அறிவார்ந்த உயிரி தோன்றுவதற்கே அறிவியல் ரீதியான சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளது.,
   அஃறிணை உயிரினங்களின் பேசும் மொழியறிதல் மனித அறிவுகளாலே சாத்தியமெனும்போதும் மனித அறிவு உணர்த்தும் படி அவ்வுயிர்கள் உணர்ந்து செயல்படுதல் சாத்தியமெனும் போதும் நவீன விஞ்ஞானம் இதுவரை பொய்பிக்காத ஒரு நிகழ்வு எப்படி சாத்தியமில்லாமல் போகும்..?

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப்பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும் ஊமைகளும் தாம். (8:22))

                                                                     அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "அதிசய பிராணி வருகை Vs அவசர அறிவியல் புரிந்துணர்வு"

Thursday, June 09, 2011

மூன்றாம் பார்வை


                                             ஒரிறையின் நற்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.,
நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக..!
      அல்ஹம்துலில்லாஹ்!., இன்று வரையிலும் என் செயல்பாடுகள் குறித்து  ஆலோசனைகளயும், நல் கருத்துக்களையும் கூறும் என் சகோதரங்களுக்கு நன்றிகள்...பல

          ஏனைய ஆக்கங்களின் வாயிலாக என் வார்த்தைகளை சந்தித்த உங்களுடன் மீண்டும் "மூன்றாம் பார்வை" மூலமாக சந்திப்பதில் மகிழ்ச்சியே..
அதென்ன மூன்றாம் பார்வை..? சிலரின் புருவங்கள் உயரலாம்
   ம்ம்ம்..சிறுவயதிலிருந்தே எந்த ஒன்றையும் சரி/தவறு என்ற நிலைக்கு அப்பாற்பட்டு மூன்றாம் நிலையில் பொதுவாக ஒப்பு நோக்கம் பழக்கம் இயல்பாகவே உடையவன் தான் நான்., அதை இங்குள்ள ஏனைய ஆக்கங்களில் உணர்ந்து இருப்பீர்கள்.சரி விஷயத்திற்கு வருகிறேன்., வலையில் உலவிய போது ஏனைய தளங்களின் பாதிப்பு என் பார்வையையும் விட்டுவைக்குமா என்ன..?
கவிதை,விடுகதை,விதை ஸாரி... கதை இப்படி எனனவெல்லாம் எழுதலாம் என எதை எதையோ யோசித்தப்போது என்மனதில் ஏதோதோ தோன்றியது. அதை எழுத்தாக்க வேண்டும் என்ற ஆசையில் பிற தளங்களின் வண்ணத்தை என் மூன்றாம் நிலை எண்ணத்தோடு பொருத்திய போது...  உருவானது தான்
 3ம் பார்வை

..........................
சாம்பிளுக்கு...


ஒன்றுமில்லை 
குர்-ஆனில்....
...
..
.


பின்...?

    இன்ஷா அல்லாஹ் பார்வையிடுங்கள்., மார்க்கத்திற்கு முரணாக இருப்பின் தெரியப்படுத்துங்கள்., திருத்திக்கொள்ள வாய்ப்பிருக்கும்...
                                               இறை நாடினால் இனியும் சந்திப்போம்
                                               -ஓர் இறை அடிமை
read more "மூன்றாம் பார்வை"

Wednesday, June 01, 2011

உஜைர் நபி வரலாற்றில் பிழை.?


                                            ஓரிறையின் நற்பெயரால்.,
            இன்று நேற்றல்ல.. மனித அறிவு இந்த மண்ணில் மதியிழக்கும் போதெல்லாம் அதற்கு நேர்வழி வழங்கும் இஸ்லாமிய வாழ்வியல் நெறியை குறைகாண்பதோடு, தனது அதி மேதாவித்தனமாக (அறைகுறை) ஆய்வறிவில் குர்-ஆனில் அங்காங்கே, கைவைத்து வரலாற்றுப் பிழையும், வாழ்வியல் பிழையும் நிறைந்திருக்கிறது என்ற தன் மனம்போனப்போக்கில் வெளியிடும் போலி குற்றச்சாட்டில் ஒன்று தான் நாம் இங்கு பார்க்க போவது.,

உஜைர் நபி குறித்து குர்-ஆன் கூறுவது என்ன...?


  யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?  (9:30)


    இந்த வசனத்தை மேற்கோள் காட்டி ஈஸா நபியை கிறித்துவர்கள் கடவுளின் மகனாக கூறுவது உண்மை தான், ஆனால் நபி உஜைரை எந்த யூதனும் கடவுளின் மகனாக கூறவில்லையே...ஆக குர்-ஆனின் வரலாற்றுப்பிழை என நிறுவ முயல்கின்றன சில திரித்துவ கொள்கைகள்.,

இங்கு உஜைர் நபியை கடவுளின் மகனாக யூதர்கள் சொன்னார்களா என்பதை பார்க்கும் முன்பு சொல்ல வேண்டிய காரணம் குறித்து அறிந்தாலே.. இது வரலாற்றுப் பிழை இல்லை வழிகெட்டவர்களின் பார்வையில் பிழை என்பதை அறியலாம்.,அதற்கு முன்பாக,
குரானிய பார்வையில் நபி ஈஸா அலை மற்றும் உஜைர் நபி குறித்த ஓப்பிட்டு பார்வை


முதலி நபி ஈஸா அலை அவர்கள் குறித்து பார்ப்போம்.,

அவர்களது பிறப்புக்குறித்து,
         அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே. அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப்பின் "குன்" (ஆகுக) எனக் கூறினான்;. அவர் (மனிதர்) ஆகிவிட்டார் ((3 :59))
மர்யம் அலை இறைவனிடம் "என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?" 
(அதற்கு)  "அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக' எனக்கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது. ((9 :47))


  மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார் ((3:46))

மேலும், அதை தொடர்ந்த வசனங்களில்,
     இஸ்ராயீலின் சந்ததியனருக்கு அவரை தூதராகவும் ஆக்குவான், 
"நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்;. நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்;. அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்;. அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்;. நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன்
பின் மர்யம் அலை அவர்கள் நபி ஈஸாவை பெற்றெடுத்தப்பின் மக்கள் முன்பாக அவர்கள் தொட்டிலிருந்தவாறே மக்களை நோக்கி
நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான். ((19 30))


ஆக நபி ஈஸா அலை அவர்கள்

  • ஏனையோரை போல் தாம்பத்திய உறவில்லாமல் இறைவனின் பிரத்தியேக ஆற்றல் மூலமாக அவனது ரூஹ் (ஆன்மா) கொண்டு படைக்கப்பட்டவர்கள்
  • சிறுபிரயாத்திலேயே... மக்களுடன் பேசினார்கள்.
  • சாதாரண களிமண்ணை பறவையாக்கினார்கள்
  • கடும் நோயுடையவர்களை வெறும் கைகளால் தடவியே குணப்படுத்தினார்கள்.
  • எல்லாவற்றையும் விட மிக பெரும் அற்புதமாக இறந்தவர்களை உயிர்பித்தார்கள்.

   
    நபி உஜைரை குறித்து பார்ப்போமேயானால், குர்-ஆனில் இந்த ஒரு வசனம் தவிர (9 30)  அறிந்த வரையில் வேறெங்கும் காணக்கிடைக்கவில்லை, அவர்கள் குறித்து சில ஹதிஸ்களே இருக்கிறது


குர்-ஆனின் விளக்கவுரை நூல்களில் ஒன்றான இப்னு கஸீர் நபி உஜைரை பற்றி பின்வருமாறு கூறுகிறது,

 (எஸ்ரா) கி.மு. 487 வாக்கில் யூதர்களிடையே வாழ்ந்த நல்ல மனிதர் ஒருவரின் பெயர். இவர் ஓர் இறைத்தூதாரா என்பது தொடர்பாகக் கருத்து வேறுபாடு உள்ளது. புக்த்தநஸ்ஸர் (நெபுகாட்நேஸர்- கி.மு 561) ஜெருசலத்தைக் கைப்பற்றி (கி.மு 568) அழித்தப்பின், தவ்ராத் (தோரா) வேதப் பிரதிகள் அனைத்தும் காணாமல் அல்லது அழிந்து போய்விட்டன.அப்போது உஸைர் (அலை) அவர்கள் தமது நினைவில் இருந்த தவ்ராத்தை எழுதினார்கள். இதனால் யூதர்கள் உஸைரை நபி மூஸா (அலை) அவர்களுக்கு இணையானவராகக் கருதினார்கள்.


  இவர்களை இறைத்தூதராகவே கருத்தில் கொண்டே நாம் பார்ப்போம்

  • உஜைர் நபி அவர்கள் தவ்ராவை மீண்டும் மக்கள் மத்தியில் எடுத்தியம்பினார்கள்
  • மக்கள் மூஸா அலை அவர்களுக்கு இணையாக கருதியிருந்தனர்.

       ஆக நபி ஈஸாவை போல "அற்புத செயல்கள்" என்ற பிரத்தியேக பண்புகளால் நபி உஜைர் அவர்கள் தன்னை இனங்காட்டவில்லை.
மாறாக மேற்குறிப்பிட்ட சம்பவத்தின் மூலமே அச்சமுக மக்களுக்கு மத்தியில் நன்கு பரிச்சயம் ஆனார்கள்.


    ஆக இவ்விரு இறைத்தூதர்களின் வாழ்வியல் நிகழ்வுகளை வைத்து ஒப்பு நோக்கும் போது நபி ஈஸா போன்று அசாதாரண செயல்கள் (ஒன்றுக்கூட) உஜைர் நபி புரியவில்லை என்பது தெளிவு!. எனவே அவர்கள் கடவுளின் மகன் என்றழைக்கப்படுவதற்கு நிரந்தர வாய்ப்புகள் குறைவு அதாவது,
    இறைவனின் வேதத்தை நினைவில் நிறுத்தி அதை புரனமைப்பு செய்ததே அவர்களின் பிரதான செயல். இச்செயலை அஃது சாதாரண மனிதரால் செய்ய இயலாது எண்றெண்ணியே இதை தெய்வீக செயலாக அங்கிகரித்து அம்மக்கள் அவர்களுக்கு ஒரு தெய்வீக அந்தஸ்தை கொடுத்து அவர்களை கடவுளின் மகன் என்றழைக்கலாயினர்.,
 
                ஆக இவர்கள் ஒரு குறிப்பிட்ட இட, சமுக சூழ்நிலையில் மட்டுமே மேற்கண்ட நிகழ்வை செயல்படுத்தி அம்மக்களிடையே வாழ்ந்ததால் அற்புத மிகுதியால் தன்னை நிலை நிறுத்திய நபி ஈஸாவைப்போல கடவுளின் மகன் என்ற தொடர் அந்தஸ்தை அக்காலம் தாண்டி அவர்கள் பெறவில்லை... ஆக இங்கு வரலாற்றுப் பிழைக்கோ /புரட்டுக்கோ வேலையே இல்லை.,
     
    இதையும் தாண்டி தங்களது திரி(பு)த்துவ வாதத்தை முன்னிருத்தி எந்த யூதருமே..... நபி உஜைரை கடவுளின் மகனாக கூறவில்லையென்று மீண்டும் முரண்பாட்டு அறிவை முன்னிருத்தினால்....அதற்கு அடுத்த வசனமே அவர்களுக்கு பதில் சொல்ல காத்திருக்கிறது...இல்லை இல்லை அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறது


அத்தவ்பா அத்தியாயம் 9 வசனம் 31 ல் அல்லாஹ் 


   அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; 
 
  இங்கு கிறித்துவர்கள் நபி ஈஸாவோடு சேர்த்து பாதிரிகளையும், சந்நியாசிகளையும் கடவுள்களாக ஆக்கிக்கொண்டதாக குர்-ஆன் கூறுகிறது. ஆனால் எந்த கிறித்துவரும் எந்த பாதிரிகளையும் சந்நியாசிகளையும் இன்று கடவுளாக கொள்ளவில்லை.,
  உஜைர் நபி குறித்து விழி அகல வரலாற்றைத் தோண்டியவர்கள்., இந்த வசனம் பொய்யுரைக்கிறது என தற்கால ஓப்பிட்டில் திறம்பட கூறலாமே.. போலி சிந்தனை இவ்வசனம் குறித்து சிறிதும் வாய் திறக்காதது ஏன்..?
விளக்கம் வேண்டுமானால் தெளிவாக இருக்கிறது

    மேற்கூறிய உஜைர் நபி குறித்த அதே பார்வை தான் இங்கேயும்., ஒரு குறிப்பிட்ட இட மற்றும் சமுக சூழ்நிலையில் வாழ்ந்த கிறித்துவர்கள் அஃது அந்த தருணத்தில் மேற்கூறிவர்களை கடவுளாக கொண்டனர் என்பதே மிக்க பொருத்தும்... சரி இருக்கட்டும் இன்றும் நபி ஈஸாவை கடவுளின் மகனல்ல நபி முஹம்மதைப் போல அவரும் கடவுளின் தூதர் என குர்-ஆன் கூறுவதை நம்பும் கிறித்துவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...?

       அவர்களின் கூற்று குர்-ஆனுக்கு ஆதாரமாக இருக்கிறதா....அல்லது கிறித்துவ கொள்கைக்கு மாற்றமா இருக்கிறதா? அவர்களை எந்த பட்டியலில் சேர்க்கிறது  உலகாதாய அறிவு...உஜைர் நபி குறித்து உரத்து கூறியவர்கள்,,,, மேற்கண்ட வினாக்களுக்கும் விடையளிக்கட்டும்...ஆங்கில எண்ணங்களுக்கு தங்கள் தளங்களில் எழுத்து வர்ணம் பூசுவோர்., ஒரு கணம் எழுத்தோடு சேர்த்து சிந்தனையும் விதைக்க முற்படட்டும்...  


 தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். ((9 32))

                                                                                 அல்லாஹ் மிக்க அறிந்தவன்

read more "உஜைர் நபி வரலாற்றில் பிழை.?"

Monday, May 23, 2011

உயிரின் நிழல்...

உயிரும் உருகும் என்று
உணர்ந்தேன் உன்னால்
இன்று....


நான்..தேடாமல் கிடைத்தாலோ
என்னவோ....
நீ..தேடிய போது(ம்) 
நான் உன்னை விட்டு தூரமானேன்....


தேவையற்ற நேரத்தில் கூட
தேவையானவை உணர்ந்து
தெளிவாய் தந்தவளே...


இல்லாமை வாசலில்
இயலாமை பூட்டிட்டு
நீ உறங்கிய போதும்
உள் வந்து
கல்லாமை போக்கியவளே


சோற்றில் உப்பு அதிகம் என 
அங்கலாய்த்த போது....உன் 
வேர்வைத்துளிகளை 
வேகமாக துடைத்தாய்...
அன்று உணரவில்லை...
என் உணவின் சுவை
உன் உணர்வுக
ளில் என்று




இரண்டும் இரண்டும் ஐந்தென்றேன்...
அறியாமலே...
தெரிந்தும் உண்மை என்றாய்...
நிலா சுடும் என்றேன்.. 
என் போலி பொது அறிவுக்கண்டு
உளம் பூரித்தாய்....


இடையில் மறைத்த
இறுதி ரொட்டித்துண்டும்
எனக்காகதான் என்று
உணராமலே உண்டுக்கொண்டிருந்தேனே....
நான் நானாக ஆவதற்கு
நீ நாராக ஆனாயே...


என்னவெல்லாமோ...
சாப்பிட தந்தாயே...
என்ன சாப்பிட்டாய் என நான் கேட்கின்ற போது
எண்ணற்றவைகள் என சொன்னாயே- 
எதுவும் இல்லையே நான் யோசிக்க மறந்த போது
என் எண்ணங்களை மட்டும் சாப்பிட்டு வாழ்ந்தாயே...


எனக்காக நிஜமாய்
வாழ்ந்த உனக்காக
நிழலாக கூட
வாழமுடியவில்லையெனும் போது...

விதைக்கும் நிழலுண்டு..
வந்தமரும் வழிப்போக்கன் 
யோசிப்பதில்லை ..
அதுப்போல...நானும் நேசித்ததில்லை
உன் உயிரின் நிழலை...


மொத்த நேரமும் உன் கணவருக்காக -எஞ்சிய
மற்ற நேரம் எனக்காக
எப்போது வாழ்ந்தாய்...
நீ
உனக்காக...?

தூர தேசத்திலும் பொருள் சேர்க்கும் கவனத்தில்...
நெற்றிச்சுருக்கத்தில் 
எனக்காக
உன் வாழ்வு சுருங்கி போனதை..
இறுதிவரை
நானறியாமலே...


read more "உயிரின் நிழல்..."

Saturday, May 14, 2011

போலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை...

                                          ஓரிறையின் நற்பெயரால்

இது ஒரு காமெடியாக எழுதப்பட்ட சீரியஸ் விசயங்க....

     ஜிஹாதுன்னா..? 


  பொதுமக்களையும்,அப்பாவிகளையும் கொல்றதுக்கு பேருதாங்க ஜிஹாது..... இது உலக வலை விற்பனர்கள் முதல் உள்ளூர் ஊறுகாய் வியாபாரி வரைக்கும் அறியாமலே அறிந்ததாய் சொல்லும் ஒரு வாக்கியம்.... இந்த அடிப்படை தவறான வாக்கியத்திற்கு அடிப்படையில் இரண்டு காரணம்.,

  • இஸ்லாமியர்கள் ஊடகத்தை சரிவர பயன்படுத்தி கொள்ளவில்லை., 
  • ஊடகம் இஸ்லாமியர்களை தவறாக பயன்படுத்தி கொண்டிருக்கின்றது- அதிலும் குறிப்பாக சினிமாத்துறை மிக மோசமாக இஸ்லாமிய எதிர்ப்பை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது., அத்தகைய சினிமாவில் இஸ்லாம் நிலை குறித்தே இங்கு பதிவு.

சின்ன ப்ளாஸ்பேக்


 ப்ளாக் & ஒயிட் சினிமாக்களில் இஸ்லாமியர்

 "அரே பாய் சைத்தான் நிம்மளிக்கி ப்லிம் காட்ரான்... "
      என்று உண்மை இஸ்லாமியர்களுக்கு கூட (பேச) தெரியாத மொழியில் நீள்வட்ட தொப்பியுடன், கொஞ்சம் குறுந்தாடி கறைபடிந்த பற்கள் நீண்ட ஜிப்பா சகிதமாக கையில் குச்சியுடன் வட்டியை வசூல் பண்ணும் காட்சியில் தோன்றுவார்... அதுதான் அன்றைய இஸ்லாமியர் அறிமுகம்.,
  
 இடைப்பட்ட காலங்களில் ஒரு படி மேல போய்.... வீடுகள் முழுக்க காபா படங்கள்., பாங்கு சொல்லும் போதே.. தொழுது கொண்டிருப்பார் ., எப்போதும் தலையில் வலைத்தொப்பியுடன் , கழுத்தில் தட்டை வடிவ தாயத்து அதில் முன்புறம் வளர்பிறை அதன் மேலாக 786 என பொறிக்கப்பட்டிருக்கும் ( பார்த்தீர்களா இஸ்லாத்தை எவ்வளவு ஆழமாக உணர்ந்து எடுத்திருக்கிறார்கள்)
    பெரும்பாலும் சோக செய்திகள் இவரிடம் சொல்லப்படும் போது "யா அல்லா..."(ஹ்)... என உச்சஸ்த்தாயில் கத்தி பெருமூச்சுடன் முடிப்பார்.. ப்ளாஷ் பேக் ஓவர்

 நிகழ்கால சினிமாக்களில் இஸ்லாம்


 இந்த ஆக்கத்தின் மையக்கருவே இது தான்., சில தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் நான் பார்த்த ஒரு காட்சி


காட்சி -1

 ஒரு நல்ல முஸ்லிம், தீவிரவாதியாக கருதப்பட்டு அடித்து செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அப்போது அங்கு குர்-ஆன் சகிதமாக நெற்றியில் தொழுதற்கான அடையாள தழும்புகளுடன், கண்டிப்பாக தாடியுடன் இருக்கும் கெட்ட முஸ்லிம் தீவிரவாதி சொல்கிறார்
"இந்த நாட்டில் இவ்வளவு நமக்குதான் மரியாதை.....
நல்ல முஸ்லிம் மிரட்சியுடன் பார்க்கிறார்...

மேலும் சில நிமிடங்கள் கழித்து
காட்சி -2

    நாட்புறமும் குண்டுகள் சத்தம் முழங்க ஏந்திய துப்பாக்கியுடன் சக முஸ்லிம் தீவிரவாதிகள் அங்கு வருகின்றனர்
நல்ல முஸ்லிம் கேட்கிறார் என்ன...... செய்ய போறீங்க......
கெட்ட முஸ்லிம்  தீவிரவாதி தன் உடம்பில் "பாம்" கட்டிக்கொண்டே கூலாக சொல்கிறார்
இந்த நாட்டிற்கு நாம யாருன்னு காட்ட போறோம்....

காட்சி - 3

 மருத்துவ மனை வளாகத்தில் தென்படுவோரை சுட்டுக்கொண்ட முன்னேற
நல்ல முஸ்லிம் ஹீரோவுடன் இணைந்து ஏனையோரை காப்பாற்ற முற்பட...
எதிரில் கெட்ட முஸ்லிம்  தீவிரவாதியும் வர
ஹீரோ கேட்கிறார்
எந்த கடவுள்டா மக்களை கொல்ல சொன்னீச்சு....
கெட்ட முஸ்லிம்  தீவிரவாதி
ஜிஹாத்...... ஜிஹாத்..... தொடர்ந்து இந்தியில் ஏதோ....சொல்ல
மீண்டும் கேட்கிறார் ஹீரோ
கடவுளை விடுங்க.. மனுஷங்களே பாருங்கடா...
ஜிஹாத்...... ஜிஹாத் 
மீண்டும் அதே உச்சரிப்பு கெட்ட முஸ்லிம்  தீவிரவாதியிடமிருந்து மேலும்    இந்தியில் ஏதோ... சொல்லிக்கொண்ட ஹீரோவை நெருங்க.. உடல் முழுவதும் பாம் வேறு... ஹீரோ கட்டிப்பிடித்தவாறே கட்டிடத்திலிருந்து குதிக்க வழக்கம் போல் கெட்ட முஸ்லிம்  தீவிரவாதி சாக வழக்கத்திற்கு மாறாக ஹீரோவும் சாகிறார்,
  இந்த கேப்ல... நல்ல முஸ்லிம் உருக்கமாக பேசுகிறார் அதைக்கேட்டு ஒரு கெட்ட முஸ்லிம்  தீவிரவாதி சுப்பாக்கியால் தன்னைதானே சுட்டு சூஸைடு வேறு...
????
    _______________________ X ____________________________

 
   இங்கு ஒரு விசயத்தை கண்டிப்பாக நாம் கவனிக்க வேண்டும் இஸ்லாத்திற்கு சம்பந்தமில்லாத செயல்களை வட்டிக்கு விடுதல், தகடு தாயத்து அணிதல் போன்றவற்றை செய்பவர்களை மீடியாவில் நல்ல முஸ்லிம்களாக காட்டப்படுகின்றனர். ஆனால் இஸ்லாம் செய்ய சொன்னதை செய்வர்களாக குர்-ஆன் ஓதுதல் தாடிவைத்தல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டவர்கள் மீடியாவில் தீவிரவாதிகளாக அறிமுகம்,,,

      இந்த சினிமாத்துறை இஸ்லாத்தை பற்றியும் அறிந்திருக்கவில்லை., இஸ்லாமியர்களை பற்றியும் தெரிந்திருக்கவில்லை., ஆயுதபூஜைக்கு தனது பழைய TVS 50 க்கு புதிதாய் சந்தனமிடுபவர்களும், ஹோலி பண்டிகையில் எதையாவது போலியாய் எரிக்கும் முஸ்லிம்களுமே இவர்கள் பார்வையில் உண்மை முஸ்லிம்கள்.,

    அட கேடுகெட்ட சினிமாத்துறையே.... இஸ்லாமியர்களை திருத்துவதாக சொல்லி இஸ்லாத்தில் இல்லாததை விமர்சிக்கிறாயே... உன் உலக அறிவை இஸ்லாமிய அறிவோடு பொருத்துவதை எப்படி மெச்சுவது..

ஜிஹாத்., -விளக்கம் கொடுத்து கொடுத்தே ஓய்து போனவர்கள் நம்மில் அனேகம்...
அல்லாஹ் குர்-ஆனில்

"நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" (அல்குர்-ஆன். 5:32)


       நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ 


எவரது நாவாலும், கரத்தாலும் ஏனையவர்களுக்கு தீங்கு ஏற்படவில்லையோ - அவரே உண்மை முஸ்லிம் ஆவார்

    இவ்வாறு அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் கூறியிருக்க இஸ்லாம் அங்கிகரிக்காத, அறுவெறுக்கும் ஒன்றை, தடைசெய்த, ஏற்க மறுத்த ஒன்றை, இஸ்லாத்தில் பெயரில் செய்வதாக திரிப்பது எவ்வளவு பெரிய கொடுமை.,

  • தனி மனித கொலையை., அங்கிகரிக்காத இஸ்லாம் எப்படி இறைவன் பெயரில் மக்களை கூட்டம் கூட்டமாக கொல்ல சொல்லும்., ?
  • தற்கொலை ஹராம்..( விலக்கப்பட்டது) அஃது தற்கொலை புரிவோருக்கு நரகம் என மார்க்கம் சொல்லும் போதும் தற்கொலை படை தாக்குதலை நடத்தவோரை சுவனப்பதியில் எப்படி இஸ்லாம் நுழைய செய்யும்..?

     இவையெல்லாம் பார்க்கும்போது திரைத்துறை ஊடங்களுக்கு சரியான இஸ்லாமிய புரிதல் இல்லையென்பதை காட்டிலும் இஸ்லாம் குறித்த அடிப்படை அறிவுக்கூட இல்லை., என்பதே உண்மை.,
                                            
                                                                             அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "போலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை..."

Saturday, April 23, 2011

கடவுளும்- நாமும்


                                                   ஓரிறையின் நற்பெயரால்
கடவுளோடு தொடர்பு பொதுவாக மக்களுக்கு இரண்டு விதத்தில் இருக்கிறது
1.நாத்திக சிந்தனை
கடவுள் Vs நாம்
2.ஆத்திக சிந்தனை
கடவுளுக்காக நாம்


   இதில் முதலாவது சிந்தனை முற்றிலும் கடவுளை மறுக்க அனைத்து வழிகளையும் ஆராய்கிறது., அது கடவுள் மறுப்பாளர்களின் எதிர்ப்பாளர்களால் அவ்வபோது மறுக்கப்படுகிறது., எனினும் இது தர்க்க ரீதியான வெற்றியே தான் கடவுளை ஆதரிப்பவர்களுக்கு கொடுக்குமே தவிர நாத்திகவாதிகளின் மனதில் பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்தாது.,

    நாத்திக சிந்தனை அடியோடு ஒழிய வேண்டுமானால் அதற்கு எதிராக இருக்கும் ஆத்திக சிந்தனை முழு அளவில் வெளிபட பெற வேண்டும். ஆதாவது இறைவனை பின்பற்றுவோரது வாழ்வியல் ரீதியான வழிமுறைகள் மிக சரியாக, எப்போதும் நிலையாக இருக்கவேண்டும்.
 எனினும் ஆத்திக சிந்தனையென வரும்போது இரண்டு விதத்தில் வித்தியாசப்படுகிறது.


1.அனைத்தும் கடவுள்
2.அனைத்தும் கடவுளுடையது


  முதாலாவது, ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் என்ற அடிப்படையில் கடவுளை ஏற்பது -இது இஸ்லாம் தவிர ஏனைய அனைத்து மதங்களும் பின்பற்றும் வழிமுறை,
இரண்டாவது, ஒரே இறைவனே இவ்வுலகம் அனைத்தையும் படைத்து அதில் உள்ள யாவற்றையும் படைத்தாக ஏற்றுக்கொள்வது இஸ்லாம் கூறும் கடவுட்கொள்கை.

ஆக., நாத்திக சிந்தனையின் பிரதான கேள்விகளுக்கு "அனைத்தும் கடவுள்" என்ற ஆத்திக கொள்கையால் பதில் தர இயலாது.ஆக அதுவல்லாத "இஸ்லாம் கூறும் கடவுட்கோட்பாடுகளாலும் அதன் கூறும் வாழ்வியல் வழிமுறைகளாலும் மட்டுமே நாத்திக சிந்தனைக்கு போதுமான பதில் தர முடியும். எனினும் கோட்பாடுகளை முன்னிருத்தி போதுமான பதில் தரப்படினும் அடுத்து அவர்களிடம் முளைக்கும் கேள்வி அத்தகைய கோட்பாடுகளின் (அதன்)படி எத்தனை இஸ்லாமியர்கள் நடக்கிறார்கள்...? என்பதே..

இக்கேள்விக்கு பதில் தரும் முகமே இக்கட்டுரையின் நோக்கம்....
  
  அல்லாஹ் தன் திருமறையில் மனித வாழ்விற்கு தேவையான அனைத்து ஏவல்கள்- விலக்கல்களை மிக தெளிவாக இந்த மனித சமுகத்திற்கு ஏற்படுத்தி அதனை இறுதி நாள் வரை வரக்கூடிய மக்கள் யாவரும் பின்பற்ற சாத்தியமாக அச்செயல்களை எடுத்து செயல்படுத்துவதற்கு மனிதர்களுடையே ஓர் தூதரை ஏற்படுத்தி தந்தான். அந்த தூதரும் மிக சரியாக தெளிவாக அனைத்து செயல் முறைகளையும் செய்ததோடு அதனை செய்வதற்கும் ஏதுவாக ஏனைய விஷயங்களையும் இந்த மனித சமுகத்திர்கு தெளிவாக வலியுறுத்தினார்கள்.,

    ஆக இறை கட்டளைகளை (இறைவனின் நாட்டப்படி) எல்லோராலும் எல்லா காலக்கட்டங்களிலும் பின்பற்ற முடியும் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாயிலாக நாம் எளிதாக அறிந்திடலாம். அவர்கள் பிரத்தியேக பண்புகளுடன் இறைவன் பால் அனுப்பட்ட தூதராக இருந்தாலும் அவர்கள் மக்களிடையே மக்களாக வாழ்ந்ததை கண்டுதான் அச்சமுக இறை நிராகரிப்பாளர்கள்

"நீர் உண்மையாளரில் ஒருவராக இருப்பின் நீர் எங்களிடத்தில் மலக்குகளைக் கொண்டு வந்திருக்க வேண்டாமா?" (என்றும் கூறுகின்றனர்.) (15:07)


மேலும் அவர்கள் கூறுகிறார்கள்;
"இந்த ரஸூலுக்கு என்ன? இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார் கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக, ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப்பட்டிருக்க வேண்டாமா?" (25:07)


இதற்கு பதில் தரும் விதமாக இறைவன்
(நபியே!) நீர் சொல்வீராக "நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது...(18:110)

         ஆக மனிதர்கள் யாவரும் எக்காலத்திற்கும் பின்பற்ற தகுந்த வாழ்வியல் நெறிமுறைகள் எண்ணிடங்காமல் நபிகள் நாயகம் மூலம் மிக தெளிவாக நம்மை வந்தடைகிறது எனவே தான் வல்லோன் அல்லாஹ் தன் வான்மறையில் அன்னாரைக்குறித்து

  அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (33:21)


 ஆக நம்மால் அந்த வழிமுறைகளில் எந்த ஒன்றையும் பின்பற்ற முடியாது என நம் வாழ்வின் எந்த சூழ்நிலையிலும் சொல்ல முடியாது. அஃது சொன்னால் அது நமது சுய நலத்திற்காக ஏற்படுத்திய திரிபு வாதம் அல்லது அல்லாஹ் மீது பயமின்மை.
நம்முடைய வாழ்வு தற்காலத்தில் எந்த அளவிற்கு அமைந்திருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம் பாருங்கள்...

அல்லாஹ் தொழுகை குறித்து கூறும் போது
... நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும்... (29:45)


ஆக தொழுகையே சரிவர பேணும்போது அது வீணான தீயச்செயல்கள் மற்றும் மானக்கேடானவற்றை விட்டும் நம்மை காக்கும் என்பது குர்-ஆன் அளிக்கும் வாக்குறுதி. எனினும் தொழுவோரில் பலர் வீணான காரியங்கள் செய்கிறார்கள் என்பதும் உண்மை. எனும்போது குர்-ஆன் பொய்யுரைக்கிறதா? இல்லவே இல்லை... தொழும் அத்தொழுகை ஒரு முழுமையான தொழுகையாக அவர்களிடத்தில் இல்லை... ஏதோ கடமைக்காக தொழுகிறோம் என்பதே உண்மை.

      அதைப்போலவே நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற ஏனைய நல்லறங்கள் செய்து கொண்டும் புகைப்பிடித்தல், குடி, பொய், புறம் பேசுதல், அடுத்தவர்களின் உரிமையே பறிப்பது, வாக்குறுதி நிறைவேற்றாமை, அமானிதங்களை அபகரிப்பது,  வட்டி வாங்குவது போன்ற இழி செயல்கள் புரிவது.,
 
   இதையெல்லாம் புரிவது மார்க்கத்தை சரிவர புரிந்துகொள்ளா முஸ்லிம்கள் என்ற போதிலும் இதைப்போன்ற செயல்களை பார்ப்போருக்கு இஸ்லாம் மீதே காழ்புணர்ச்சி ஏற்படுகிறது என்பது உண்மை.ஆக வெறுமனே., பெயர் தாங்கி முஸ்லிம்களாக வாழாமல் அஃது அல்லாஹ்வும் அவன் தூதரும் பொருந்திக்கொளும் விதம் இவ்வுலக வாழ்வை அமைத்து கொண்டு ஏனையோருக்கும் ஒரு முன்மாதிரி சமுகமாக வாழ்வது நம் அனைவர் மீதும் தார்மீக கடமையாக இருக்கிறது. ஏனெனில்

அல்லாஹ் தன் வான் மறையில்
நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? (2:44)
  என பெயர் தாங்கி முஸ்லிம்களை சாடுகிறான்.

  பொதுவாக, எதிரில் வரையப்பட்டிருக்கும் ஒரு கோட்டினை நாம் சிறிதாக்க வேண்டுமெனில் நமது கோட்டை அதைக்காட்டிலும் சற்று பெரிதாக வரைந்தாலே போதும்.. அக்கோடு தானாகவே சிறிதாகி விடும்.
 
      அதுப்போல நாத்திகம் என்பதை இல்லாமல் ஆக்க தூய இஸ்லாமிய சிந்தனைகளை இவ்வுலகத்திற்கு எடுத்து இயம்புவதோடு மட்டுமில்லாமல் செயல் முறை ரீதியாகவும் உணர்த்தினாலே போதும். நாத்திகம் இஸ்லாத்தின் காலடியில் நசுங்கி போகும்.

  அல்லாஹ் அத்தகைய நல்ல பாக்கியத்தை உங்களுக்கும் எனக்கும் தந்தருள்வானாக...
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள். (03:102)
                                                                    அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "கடவுளும்- நாமும்"

Categories

அமல்கள் அறியாமை அறிவியல் அல்லாஹ் அவதாரம் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உஜைர் நபி உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் எதிரி ஏன் இஸ்லாம் ஏற்றத்தாழ்வு ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தஜ்ஜால் தண்டனை தாய் திருமணங்கள் தேவை நன்மைகள் நபிமொழி நரகம் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மனசாட்சி மனம் மனிதன் மனிதர்கள் மரணம் மறுமை மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வானவர்கள் வாழ்க்கை விதி விமர்சனம். விளக்கம் ஹராம்