"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Wednesday, October 27, 2010

இயற்கை இறைவனா...?

                                       ஓரிறையின் நற்பெயரால்

    இக்கட்டுரை யாரையும் விமர்சிக்கும் நோக்கில் இங்கு பதியவில்லை. சிறு தெளிவு பெறும் பொருட்டே....உங்கள் பார்வைக்கு

     மனித மூலங்கள் மண்ணில் தோன்றிய நாட்களிலிருந்தே ஓரிறை கொள்கை மட்டுமே தொடங்கி-தொடரப்பட்டது. எனினும் காலம் செல்ல செல்ல தங்கள் மன இச்சையின்படி செயலாற்றும் மனிதர்களும், சுயநலத்தின் அடிப்படையில் செயல்படும் மனிதர்களின் செயல்களும் ஓரிறை கோட்பாடென்னும் இந்நேரிய பாதையை விட்டு ஏனைய மக்களை திசை திருப்பச்செய்தது....

      அதன் வாயிலாக பல மக்களின் இச்செயல்களால் பல தெய்வ கொள்கையும் வளர்ந்தது. அதில் இன்னும் ஒரு படி மேலே போய் மனித எண்ணங்களில் தோன்றுவதையெல்லாம் கடவுளாக வர்ணிக்க தொடங்கினார்கள்.

   அவ்வபோது அவர்களை சீர்திருத்த தீர்க்கதரிசிகள் வந்தார்கள். எனினும் இங்கு அத்தகைய மனிதர்கள் கடவுளாக கொண்டது எதையெல்லாம் என்பதை குறித்து காண்போம்


மனிதன் தன் எண்ணத்தின் படி கடவுளை உருவகிக்க தொடங்கினான். அதாவது எதை கண்டு பயந்தானோ அதை கடவுளாக, எதன் மீது பிரியம் கொண்டானோ, இன்னும் சொல்ல போனால் தனது ஆசைக்காக கூட கடவுளை உருவாக்க தொடங்கினான். அதில் முக்கியமானதாக   "இயற்கை"யை கடவுளாக கண்டான். உதாரணத்திற்கு இங்கு ஒன்று...

      மக்களில் சூரியனையும், சந்திரனையும் தெய்வமாக கருதி வணங்குவதை நாம் பார்க்கிறோம். இங்கு ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். ஒரு செயலை பின் தொடர்வதாலோ அல்லது அச்செயலை தொடர்ந்து செய்து வருவதாலோ மற்ற யாவரையும் விட நாம் அதிக பலன் பெற வேண்டும். ஆனால் பாருங்கள் சூரியனை வணங்காதவனுக்கு அது எத்தகைய வெப்பத்தை தருமோ அதைப்போல தான் அதனை கடவுளாக வணங்குபவனுக்கும் தரும்.மாறாக வணங்கிய காரணத்திற்காக எந்த வித கூடுதல் பலனும் பிரத்தியேக நிழலோ கொடுக்காது.
 
   சந்திரனும் தன்னில் எவ்வளவு பிரகாசிக்க முடியுமோ அதன் மட்டுமே தன்னை வணங்கும் மற்றும் வணங்கா மக்களுக்கு மத்தியில் வெளிப்படுத்தும். மாறாக அவர்களின் நிலையறிந்து எதையும் கொடுக்காது.

  இன்னும் சொல்லப்போனால் மழைக்காலத்திலும், மேக மூட்டத்திலும் சூரியன் காணக்கிடைக்காது அல்லது தன் ஒளியிழந்தே காணக்கிடைக்கும். அதுப்போல அமாவாசை இரவுகளில் சந்திரனே கண்களுக்கு தெரிவதில்லை. இவ்வாறு கடவுளாக காணும் அதன் நிலைகளை சற்று ஆராய்ந்தால் அவைகள் நிரந்தமற்ற மற்றும் பலஹீனமான ஒரு படைப்பு என்பதையே நமக்கு காட்டுகிறது. 
 அதுப்போலதான் ஏனைய கடவுளாக கொண்ட அனைத்து இயற்கைகளும்.


 இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். இவைகளை வணங்குபவருக்கு-வணங்காதவருக்கு பிரித்தறிந்து எப்படி இவை பலன் தர இயலாதோ அதுப்போல தானே பொதுவாக அல்லாஹ்வை வணங்காதவனுக்கும் இறைவன் எந்த இழப்பையேயும் ஏற்படுவதில்லையே -அது ஏன்?

   அதாவது அல்லாஹ்வை மட்டும் வணங்குவர்பவர்களில் பலர் ஏழைகளாகவும்,  உடல் ஊனமுற்றவர்களாவும், கஷ்டம் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வையன்றி பிறரை அல்லது மற்றவைகளை வணங்குபவர்கள் செல்வந்தர்களாகவும், உடல் ஆரோக்கியம் நிறைந்தவர்களாகவும் இன்பமான வாழ்வை வாழ்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

   இன்னும் ஒரு படி மேலே போய் அல்லாஹ்வை வணங்காமல் -அஃது அவனை திட்டுபவர்களும் கூட நலமாக இப்பூமியில் நடமாடுகிறார்களே அது ஏன்... இதற்கு அழகான பதிலை இஸ்லாம் சொல்கிறது. இதற்கு முதற்காரணம்


(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.  (1:2)


மேலும் பார்க்க: 6:164, 10:32, 11:6, 29:60, 37:5, 40:65, 51:58

        அடுத்து, அல்லாஹ்வை வணங்கினாலும் அவனை வணங்காவிட்டாலும் இவ்வுலகில் அவனது கருணையே பொதுவாக்கி வைத்திருக்கிறான். எனவே அவனை வணங்காதவர்களுக்கு இவ்வுலகத்தில் துன்பம் தருவதாக இருப்பின் அவனுக்கு ஒரு நொடி பொழுது கூட தேவையில்லை.

  எனினும் அஃது பாவங்களும் தீமைகளும் செய்யும் மற்றும் அவனை வணங்க மறுக்கும் மக்கள் தங்கள் இறுதி வேளைக்குள் அவனை அறிந்து அவர்களின் செயல்களை சீர்த்திருத்தி கொள்கிறார்களா என பார்க்கவே இத்தகைய அவகாசம். அதனை அல்குர்-ஆன்


மனிதர்களை அவர்கள் சம்பாதித்த (தீ) வினைக்காக அல்லாஹ் அவர்களை (உடனுக்குடன்) பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் பூமியில் உயிர்ப் பிராணிகள் ஒன்றையுமே விட்டு வைக்கமாட்டான்; ஆயினும், ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவர்களைப் (பிடிக்காது) பிற்படுத்துகிறான்; அவர்களுடைய தவணை வந்துவிட்டால் நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவனாகவே இருக்கின்றான். (35:45) 

 இவ்வாறு இயம்புகிறது. எனவே இறைவனை மறுப்பவர்களும்- மறந்தவர்களும் தங்களின் பிறவி மார்க்கத்திற்கு வருவதற்காக எல்லா வழிவகைகளையும் ஏற்படுத்தி வைக்கிறான் அதனை அவர்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கும் போதே இறைவன் அவர்களுக்கு வேதனையே அளிக்கிறான்.

எனவே இத்தகைய
இயற்கைகள் படைப்பாளன் அல்ல., மாறாக படைப்பாளனுடையதே!...

   நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப்பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும் ஊமைகளும் தாம். (8:22)

                                                அல்லாஹ் மிக்க அறிந்தவன்

read more "இயற்கை இறைவனா...?"

Saturday, October 23, 2010

எதில் கண்ணியம்

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
   என் இணைய தள சகோதரிகளே! பொழுதுப்போக்கிற்காக உலாவரும் இவ்விணையத்திலும் மார்க்கம் குறித்து பேசுவது மகிழ்வளிக்கிறது.இன்றைய கால கட்டத்தில் சுதந்திரம் -பெண்ணுரிமை- நாகரீகம் என பேசி ஆண்களுக்கு சமமாக பெண்களையும் வழி நடத்தி செல்வதாக போலி நட்புறவில் தங்கள் வாழ்க்கை பயணத்தில் வாழ்வை தொலைக்கும் அநேகம் பெண்கள்.  உண்மை நிலை உணராமல் அஃது விபரீத பாதைக்கு இன்று பயணம் மேற்கொள்கின்றனர். எனினும் அதனால் ஏற்படும் இழப்பை அடையும்போது தான் தங்களின் பாதை பயனற்றது என அறிகின்றனர். பெண்களே! அஃதில்லாமல் அல்லாஹ்வும் அவன் தூதரும் கூறிய வழியில் வாழ்வை அமைக்க வல்லோன் நமக்கு நற்கிருபை புரிவானாக! 

• 3006. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
"ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்ய வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுவிட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)" என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், 'நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்" என்று கூறினார்கள். ( புஹாரி )

• 1513. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஃபழ்ல்(ரலி) நபி(ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்தபோது 'கஸ்அம்' எனும் கோத்திரத்தை சார்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபி(ஸல்) அவர்கள்) ஃபழ்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள். பிறகு அப்பெண் நபி(ஸல்) அவர்களை நோக்கி, 'இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் என்னுடைய வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா? எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்!" என்றார்கள். இது இறுதி ஹஜ்ஜில் நிகழ்ந்தது.( புஹாரி )

• 1862. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
"மணமுடிக்கத்தகாத ஆண் துணையில்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது. மண முடிக்கத் தகாத ஆண் துணையுடன் பெண் இருக்கும்போதே ஆண்கள் அவளைச் சந்திக்க வேண்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! நான் இன்னின்ன ராணுவப் பிரிவுடன் புறப்பட இருக்கிறேன்; என் மனைவி ஹஜ் செய்ய எண்ணுகிறார் (நான் என்ன செய்வது)?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீரும் மனைவியுடன் (ஹஜ்ஜுக்குப்) புறப்படுவீராக! என்றனர்
.( புஹாரி )


• 5232. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் '(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'கணவருடைய
(சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' என்று கூறினார்கள்..( புஹாரி )

• மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது;( 24;31)

நபியின் மனைவிமார்களாகிய) அவர்கள், தங்களுடைய தந்தையர் முன்பும், தங்கள் ஆண் மக்கள் முன்பும் தங்கள் சகோதரர்கள் முன்பும், தங்கள் சகோதரர்களின் ஆண்மக்கள் முன்பும், தங்கள் சகோதரிகளின் ஆண்மக்கள் முன்பும், அவர்களின் பெண்கள் முன்பும்; அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் முன்பும் (வருவது) அவர்கள் மீது குற்றமாகாது எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; (நபியின் மனைவிமார்களே!) நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கின்றான். ( 33;55)

அல்லாஹு ஹராம் ஆக்கியதை ஹலால் ஆக்கும் உரிமை எவருக்கும் இல்லை
அல்லாஹுவை பயந்து கொள்ளுங்கள்
அல்லாஹு எம் அனைவரையும் பாதுகாப்பானாக ஆமீன்


• மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல்குர்அன் 24:31)
                                                                                  - ருக்கையா அப்துல்லாஹ்

           S R I   L A N G A

read more "எதில் கண்ணியம்"

Monday, October 11, 2010

யார் கடவுள்...?

                                    ஓரிறையின் நற்பெயரால்

    இன்று உலகத்தில் எத்தனையோ விஷயங்கள் பேசுவதற்கு இருக்க. "கடவுளை குறித்து மட்டும் கட்டுரை வடிக்க காரணம் என்ன? என்ற எண்ணம் சிலருக்கு ஏற்படலாம்.
இஸ்லாத்தை பொருத்தவரை மனிதர்களை இறைவன் படைத்ததே அவனை வணங்குவதற்காக தான்! எனும்போது உலக மானிட படைப்பின் நோக்கம் ஈடேற அவனை வணங்கும் முறையும் அதை விட அவ்வாறு வணங்குவதற்குறியவன் யார் என்பதையும் நினையுட்டவே இங்கு ஒரு சிறிய ஆக்கம்.

   கடவுளை வணங்குவது இருக்கட்டும் அதற்கு முன்பாக அத்தகைய கடவுள் இருப்பது உண்மைதானா? கடவுளை ஏற்பது நமது அறிவுக்கு பொருத்தமானதா? முதலில் பார்ப்போம்.

இயற்கையா? இறைவனா?


     இன்று கடவுளை மறுப்போர், உலக தோன்றங்கள் குறித்தும் இப்பிரபஞ்ச உருவாக்கம் குறித்தும் கூறும்போது மிக தெளிவாக அறிவியல் ரீதியாக காரணங்கள் கொண்டு விளக்கி கூறுகின்றனர்.எனினும் இத்தகைய இப்பிரபஞ்ச உருவாக்கம் குறித்து பதில் அறிவு பூர்வமாக கூறினாலும் "அஃது ஏன் உலகம் உண்டாக வேண்டும்?" என்ற கேள்விக்கு எந்த பதிலும் அறிவு பூர்வமாக இதுவரை இல்லை.

     அதுப்போலவே ஏனைய கோள்களும், சூரியன், சந்திரன்,நட்சத்திர கூட்டங்கள், ஆகியவை உண்டான முறை குறித்தும் அவைகள் தற்போது வரை செயல்படும் நிலை குறித்தும் இனி அவைகளுக்கு ஏற்படும் மாற்றம் குறித்தும் மிக துல்லியமாக தகவல்கள் தந்த போதிலும் சூரியனும் சந்திர பூமி இயக்கமும் ஏனைய கோள்களும் தத்தமது பாதையில் மிக நேர்த்தியாக செயல்பட எந்த மூலங்கள் அதற்கு அடிப்படை? என்ற கேள்விக்கும் விடையில்லை.

   சுருக்கமாக கூறினால் நடைபெறும் அனைத்து வித செயல்களும் அறிவியல் ரீதியாக சொல்ல முடிந்த கடவுளி மறுக்கும் விஞ்ஞானம் அத்தகைய பால்வெளியில் நடைபெறும் நிலையான மற்றும் சமச்சீரான இயக்கத்தை எது அவைகளுக்கு கற்று தந்தது?
  
   இந்த வினாவிற்கு விடை கூறவேண்டும் எனபதற்காக ஒரு பதில் முன்னிறுத்தி சொல்லப்பட்டது தான் "இயற்கை" அதாவது மேற்கண்ட நிகழ்வுகள் உருவாக்க மூலம் இயற்கையாக அதாவது "தற்செயலாக" -எதிர்பாராத விதமாக ஏற்பட்டது என்கின்றனர்.

இது கடவுள் படைத்தார் என்பதற்கு மாற்றமாக சொல்ல வேண்டுமென்பதற்காக கூறப்பட்ட வாதமே தவிர அறிவு பூர்வமானவாதமல்ல.
   ஏனெனில் தற்செயல் என்பது எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல், யாதொரு திட்டமிடலும் இல்லாமல் நிகழும் ஒரு செயலாகும்.

   இச்செயலின் மூலம் அந்நிகழ்வு மிக நேர்த்தியாக இருப்பதற்கு நூறில் ஒரு பங்கே வாய்ப்புள்ளது.அதுவும் ஆயிரத்தில் ஒரு முறை மட்டுமே அத்தகைய சமச்சீர் ஒழுங்குமுறை சாத்தியம். அதன் அடிப்படையில் தற்செயல் அல்லது எதிர்பாராவிதமாகவே இப்பிரபஞ்ச உருவாக்கம் ஏற்பட்டது என ஏற்றுக்கொண்டாலும் அதை தொடர்ந்த நிகழ்வுகள் அதாவது சூரியன், சந்திரன் மற்றும் ஏனைய கோள்கள் மிக நேர்த்தியாக தத்தமது நீள்வட்ட பாதையில் சொல்லிவைத்ததுப்போல சிறிதும் ஒழுங்கினமின்றி சுழல்கின்றதே இது எப்படி தற்செயலால் சாத்தியமாகும்.

    ஏனெனில் தற்செயல் ஏற்படுத்தும் விளைவுகள் பெரும்பாலும் ஒரு சமச்சீரற்ற நிலையே உருவாக்கும். அஃது ஒரு முறை நேர்த்தியாக தற்செயல் விளைவகளை வெளிப்படுத்தினாலும் தொடர்ந்து மிக தெளிவான ஒழுங்கான விளைவுகளை தரமுடியாது., அஃது அவ்வாறு தந்தால் அதற்கு பெயர் தற்செயல் அல்ல! முன்கூட்டியே திட்டமிட்ட ஒரு செயல்.

  ஆக! மேற்குறிப்பிட்ட பால்வெளி நிகழ்வுகள் அனைத்தையும் ஆராயும் எந்த ஒரு சாரசரி அறிவுள்ளவனும் அதன் இயக்கம் ஏதோ திடீரென்று எதுவென்ற தெரியாத ஒரு நிலையோ அல்லது "தற்செயல்" மூலத்திலோ ஏற்பட்டதன்று. மாறாக முன்கூட்டியே அதன் விளைவுகளை நன்கு ஆராய்ந்து தீர்க்கமாக முடிவெடுக்கப்பட்ட ஒரு புத்திசாலித்தனத்தால் தான் உருவாக்க முடியும் என்பதை உணர்ந்துக்கொள்வான்.

  எனவே தற்செயல் என்பது புத்திசாலித்தனம் ஆகாது!அஃது புத்திசாலித்தனமாக செயல்படுவதாக இருந்தால் அது எப்படி தற்செயலாகும்? எனவே இத்தகைய புத்திசாலித்தனம் நமது அறிவுக்கும் பொருந்தக்கூடிய நிலையிலேயே இருக்கிறது.மேலும் அந்த புத்திசாலித்தனத்தை இதுவரையிலும் நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் முடியவே இல்லை.

  ஆக அறிவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஐம்புலன்களுக்கும் ஆட்கொள்ளப்படாத அந்த ஒரு சக்தியே "கடவுள்" என ஏற்றுக்கொள்வதில் என்ன தடை இருக்கிறது?



யார் கடவுள்?

    சரி., கடவுள் இருப்பதாக ஏற்றுக்கொள்கிறோம். எத்தனை கடவுள்? ஒருவரா? பலரா? அல்லது ஒருவர் தான் என்றால் எந்த கடவுள் உண்மையானவர்? இது கடவுளை ஏற்போர்களும் சிந்திக்கவேண்டிய கேள்வி., நீங்களோ நானோ பிறந்த மதத்தின் அடிப்படையில் கடவுளை பின்பற்றினால் போதுமென்றிருந்தால் "கடவுள்' நமக்கு பகுத்தறிவு என்ற ஒரு அறிவை வழங்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.

  பிறப்போர் உண்மையான கடவுள் யார் என அறியவும் அஃது அதிலே இருப்போர் உண்மையான கடவுள் வழி அறிந்து நடந்திடவுமே நமக்கு ஏனைய உயிரினத்திற்கு தரப்படாத ஒரு சிறப்பம்சத்தை தந்திருக்கிறான். ஆக கடவுள் என்று சொல்லக்கூடியவர் எப்படி இருக்கவேண்டும் என்பதை முதலில் தேர்வு செய்யுங்கள் அந்த நிலைக்கு ஒருவர் இருந்தால் அவர் தான் உலகின் கடவுள் ஒரே கடவுள்.
  • கடவுள் என்று சொல்லக்கூடியவர் தான் தோன்றியாக இருக்க வேண்டும். அவருக்கு தகப்பனோ,மகனோ வம்சாவழிகளோ இருக்கக்கூடாது.
  • அவர் இணை துணை இல்லாதவராக இருக்கவேண்டும், மனைவி மக்கள் இல்லாதவராக இருக்கவேண்டும்.
  • எந்த ஒரு உயிரினத்திடமிருந்தும் எந்தவித தேவையும் அற்றவராக இருக்கவேண்டும்.
  • மனிதர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டவராக; கட்டுப்பாட்டிற்குள் அகப்படாதவராக இருக்கவேண்டும்.
  • மனித மற்றும் ஏனைய உயிரினங்களின் பலகினங்களை தன்னுள் கொண்டவராக இருக்கக்கூடாது
  • அவரை பற்றிய வரையறைகள் முழுதாக மற்றும் தெளிவாக நமக்கு விளக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • மனித சமுதாய முழுவதற்கும் கடவுளை ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் "அத்தாட்சிகள் கடவுள் புறத்திலிருந்து" அந்தந்த சமுகத்திற்கு வழங்கப்பட்டிருக்கவேண்டும்.
  • எக்காலத்திற்கும் பின்பற்றத்தகுந்த செயல்முறைகள் உலகம் அழியும் வரையிலும் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கவேண்டும்
  • நன்மைகள் புரிந்தால் பரிசும், தீமைகள் புரிந்தால் தண்டனையும் அளிக்கவேண்டும் அதுவும் மேற்கொள்ள மற்றும் தவிர்க்கவேண்டியவை குறித்த விளக்கங்கள் மற்றும் சட்டமுறைமைகள் எந்த ஒரு தனிமனிதனுக்கும் இலகுவாக வழங்கப்பட்டிருக்கவேண்டும்.
  • மனித நலத்திற்கோ சமுகத்திற்கோ பிரயோஜனமற்ற சடங்குகள் சம்பிரதாயங்கள் ஏற்படுத்தபடாமல் இருக்கவேண்டும்.
  • இறுதியாக, தனி மனித வாழ்வுக்கு ஏதுவான அனைத்து நடைமுறை சாத்தியக்கூறுகளும் அவரால் மனித சமுதாய முழுமைக்கும் தெளிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும்
இதை அடிப்படையாக கொண்டு எவர் இருக்கிறானோ "அவர் தான் கடவுள்"

                                                                அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

read more "யார் கடவுள்...?"

Tuesday, October 05, 2010

இடைவேளை

எவன் கைவசம் நம் உயிர் உள்ளதோ அவனை துதித்து....

வண்ணங்களுடன் வாழ்ந்தவர்களை 
வெண்மையாக அழகு பார்ப்பது மரணம்..

நம்மை சிரிக்க வைத்தவர்களை கூட
அழ வைப்பது 
நம்மை வியக்க வைத்தவர்களை கூட
வியர்க்க செய்வது...
அறிந்துக்கொள்ளும் முன்னே நம்மை அழைத்து செல்வது

எங்கு இருந்தாலும், எப்படி இருந்தாலும்
வேண்டும் என்று கேட்காமலே 
நம்மை தேடி வரும் நேரம் அறியாத பயணம் 

எல்லா நிலைகளிலும் ஜெயித்தவர் கூட
தோற்பது இதனிடம் மட்டும் தான்

மரித்த மனிதர்களின் கருவறை மண்ணறை
அதை உணர்வதற்கே நமக்கு மரணம் எனும் முன்னுரை

கால்கள் பிண்ணி கொள்ள உயிர் தொண்டை குழியிலே ஜனிக்க 
இவ்வுலகிலே சுவைத்து பார்த்து அனுபவிக்க முடியாத சுவை 
அனைத்து ஜீவனும் சுவைத்தே ஆகவேண்டிய சுவை 

மரணம் முன்னோருடன் சென்று சேர
உள்ளோர் கப்ர் வரை வந்து 
வழியனுப்பும் தொடர் பயணம்...

அற்பமான இவ்வுலக வாழ்கையின் எல்லை..
மறுமை வாழ்கையின் திறவுகோல்
அது திறக்க போவது 
சொர்கத்தின் வாயிலா?
நரகத்தின் வாயிலா?

இதுதான் நாம் சம்பாதித்தவற்றின் இறுதி முடிவு...
நிரந்தரமான வாழ்கையின் ஆரம்பம்...
நாம் இல்லாமல் போகும் முன்
இறைவனை தவிர எதுவும் இல்லை என சொல்ல முற்படுவோம்.

மனம் சொல்லும் மக்கா நோக்கி புனித பயணம்
மரணம் செல்லுமோ மண்ணறை நோக்கி புதிய பயணம்...

நாம் ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை
மாறாக வீழ்ந்து கொண்டிருக்கிறோம்
முழுதாய் விழு முன்
மார்க்கம் அறிந்துடுவோம்.

மரணம் வாழ்வின் நீதியா? வாழ்வின் மீதியா...?
விடை அறிந்தால்....
நம்மில் மரணம் ஜனிக்கும் முன்- ஏனையோருக்கு
நம்மின் மனிதம் அளிப்போம்...








                                                                                             - ருக்கையா அப்துல்லாஹ்
                                                                     S R I   L A N G A

read more "இடைவேளை"

Sunday, October 03, 2010

தேவையுடையவனா...இறைவன்?

                                                          ஒரிறையின் நற்பெயரால் 


       இஸ்லாத்தை பொறுத்தவரை மனித மூலங்கள் மண்ணில் படைக்கப்படுவதற்கு முன்பே அவர்களுக்கு உண்டான தெரிதல்களும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும் தெளிவாக வழங்கப்பட்ட பின்னரே மனிதர்கள் அவ்வழி வாழ எத்தனித்தது. அதன் அடிப்படையில் மனிதர்கள் படைக்கப்பட்டதன் நோக்கம் குறித்து திருக்குர்-ஆன் கூறும்போது


      இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.(51:56)


              இங்கு இறைவன் மனிதர்கள் படைக்கப்பட்ட காரணமே அவனை வணங்குவதற்காகதான் எனும்போது மனிதர்கள் வணங்குவவேண்டுமென்பது ஏக இறைவனுக்கு தேவையா..? என்றே கேள்வியே அபத்தமானது. 


    ஏனெனில் அல்லாஹ் மனிதர்கள் மற்றும் ஜின்களை படைத்ததால் வணங்க சொல்லவில்லை. வணங்குவதற்கு வேண்டிய அவைகளை படைத்திருக்கிறான். சரி., அவ்வாறு வணங்க சொன்னப்போதும் அது தேவையே அடிப்படையாக கொண்டதா?


  ஏனெனில் தேவையானது ஒரு சொல். செயல் அல்லது ஏனையவற்றின் மூலமாக ஒருவர் மற்றவரை சார்ந்திருப்பது. அந்த அடிப்படையில் தேவைகள் என்பது இரண்டை மையப்படுத்தி இருக்க வேண்டும். ஒன்று, பெறப்படும் தேவையின் மூலம் அதை சார்ந்தவர் பயன்பாடு பெற வேண்டும்.அல்லது, அத்தேவையே அடையாவிட்டால் அதன் விளைவால் அவர் பாதிக்கப்படவேண்டும். இதுவே "தேவை" என்பதன் அளவுகோல். 


இதை அடிப்படையாக வைத்து இனி காண்போம்.
                                                


தேவையுடையவனா..? இறைவன்! 


இஸ்லாம் ஐந்து காரியங்கள் மீது நிர்மானிக்கப்பட்டுள்ளது.

  • வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராவார்கள் என்று சாட்சி கூறுவது,
  •  தொழுகையை நிலை நாட்டுவது
  •  ரமளான் மாதம் நோன்பு நோற்பது
  • ஜகாத் கொடுப்பது
  •  ஹஜ் செய்வது .
                (என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்அறிவிப்பவர் : இப்னு உமர் -ரலி, நூல் : புகாரீ)     
  
        பொதுவாக, இஸ்லாத்தில் அடிப்படை கொள்கைகள் அனைத்தும் இறைவனோடு தொடர்புடையதாக இருந்தாலும் முதலாவது மற்றும் நான்காவது (கலிமா மற்றும் ஜகாத்) ஆகியவை தவிர ஏனைய மூன்று கொள்கைகளும் நோன்பு, தொழுகை மற்றும் ஹஜ் ஆகியவைகள் இறைவனுக்கு செய்யவேண்டிய வணக்கம் என்ற நிலைகளிலேயே குறிப்பிடப்படுகிறது. ஆக இம்மூன்றும் இறைவனை தேவையுடையவனாக ஆக்குகிறாதா?


   
தொழுகை
     தொழுகை என்ற இறைவணக்கம் நாளொன்றுக்கு ஐந்துமுறையென ஏழு வயது முதல் சுய அறிவுள்ள ஏனைய ஆண், பெண் அனைவரின் மீது கடமையாக இஸ்லாம் பணிக்கிறது.தொழுகை பொதுவாக இறைவனுக்கு மேற்கொள்ளும் வணக்கமாக கூறினாலும் அத்தொழுகையால் மனிதர்கள் அடையும் விளைவை குறித்து வல்லோன் தன் வான் மறையில்
    
   (நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான்.  (29:45)




    மேற்கூறப்பட்ட வசனத்தில் தொழுகையானது மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்குவதாக இருக்கிறது என அல்லாஹ் கூறுகிறான்.ஆக தொழுகை என்பது மனித மனங்களில் தோன்றும் அனைத்து விதமான தனி மனித ஒழுக்க சீர்க்கேடுகளையும் அருவறுக்கத்தக்க சமுக தீமைகளையும் வேரறுக்கவே இறைவன் புறத்தில் ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட்ட பிரத்தியேக பாதுகாப்பு என்பதை அறியலாம்.




நோன்பு
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.  (2:183)


       பசி உணர்தல், தீய செயல் மற்றும் பேச்சுக்கள் தவிர்த்தல் போன்றவைகள் இருந்தாலும் நோன்பின் பிரதான நோக்கம் தூய்மையே ஆகும். இங்கு தூய்மை என்பது உளத்தூய்மையே குறிக்கும் அதாவது நாம் மேற்கொள்ளும் எந்த ஒரு செயலையும் இறைவனுக்கு பயந்து செயல்படுத்தும்போது தவறுகள் களையப்பட்டு நன்மைகள் பக்கமே நமது வாழ்வின் பயணமிருக்கும். இதுவே உளத்தூய்மையின் அடிப்படையாகும்.




ஹஜ்
அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது. மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்;. இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். 
  ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை. ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கி;றான்.  (3:97)

    மேற்கூறிய வசனம் மிக தெளிவாக ஹஜ்ஜிக்கான இரண்டு அடிப்படை கூறுகளை சொல்கிறது. ஒன்று, அவ்விடத்தில் ஒன்றுகூடும் போது அவர் அச்சமற்று பாதுக்காப்பு பெறுகிறார், பிறிதொன்று வசதியிருந்தால் மட்டுமே நிறைவேற்ற வேண்டிய கடமையாக பணிக்கிறது .


     மேலும் பாருங்கள் அஃது அக்கடமையே நிறைவேற்றும் வாய்ப்பு கிட்டியும் நிறைவேற்றவில்லையென்றால் அதனால் இறைவனுக்கு எந்த இழப்பும் ஏற்படபோவதில்லை என்பதை இந்த மனித சமுகத்திற்கு அவனே உரக்கச்சொல்கிறான்




    ஆக இஸ்லாம் ஏனைய வணக்கங்களை மேற்கொள்ள சொன்னாலும் அதற்கு அடிப்படைக்காரணம் தக்வா எனும் 'இறையச்சத்தை' மனித சமுகம் எக்காலமும் பேணவேண்டும் என்பதற்காக தான் தவிர அவர்களின் பால் இறைவன் தேவையுடையவன் என்பதற்காக அல்ல. 


   ஏனெனில் இந்த நொடியிலிருந்து கூட எவரும் எத்தகைய வணக்கங்களையும் அறவே செய்யாவிட்டாலும் கூட அவர்களுக்கும் அவர்களின் சமுகத்திற்கும் தான் இழப்பே தவிர ஏக இறைவனின் கண்ணியத்திற்கு அணுவளவேனும் கூட தீங்கு ஏற்படாது. வணக்கங்கள் என்பது இஸ்லாத்தை பொருத்தவரை இறைவனை முன்னிருத்தி மனிதன் நன்மையின் பக்கம் விரையச் செய்யும் ஒரு காரியமே!   


    எந்த ஒரு மனிதனும் வணக்கத்தை செய்யும்போதோ அல்லது தவிர்க்கும்போதோ இறைவன் எந்த இலாபமோ, நஷ்டமோ அடைவதில்லை. எனும்போது "தேவை" என்ற அளவுகோல் இறைவனுக்கு பொருந்தாது. ஏனெனில்...


மனிதர்களே! அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்; ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்; புகழுக்குரியவன்.(35:15)


                                                           அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "தேவையுடையவனா...இறைவன்?"

Sunday, September 26, 2010

பதில் தருமா பரிணாமம்..?

                                                                        ஓரிறையின் நற்பெயரால்

   மனிதன் படைப்புருவாக்கத்தை குறித்து பல்வேறு இணையங்களில் அவ்வபோது விவாதங்கள் நடைப்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. 
   எனினும் பரிணாமம் மூலம்தான் மனிதன் உட்பட ஏனைய அனைத்து உயிர்களும் தோன்றின என வாதிடும் நண்பர்கள் அவர்களுக்கு (பரிணாமத்திற்கு) எதிராக கேள்விகள் கேட்கப்படும்போது ஒரு நிலை தாண்டி அக்கேள்விக்கு பதிலாக கடவுளை முன்னிருத்தி பேசுபொருளை திசை திருப்புகின்றனர்.

   அத்தோடு முடிந்து விடுகிறது அதற்கு பிறகு அவர்கள் அடுத்த ஆக்கம் வரை தலை காட்டுவதில்லை.ஏனைய ஆக்கங்களிலும் இதே நிலைதான்...


பரிணாமம் குறித்து எளிய இலக்கணம்:
  
சூழ்நிலைக்குத் தகுந்தவாறு ஒரு உயிரினம் தன்னை தகவமைத்துக்கொள்வதே பரிணாமம். என்பதே "பரிணாமம்" குறித்த எளிய முன்னுரை

    அதாவது எந்த ஒரு உயிரினமும் தாம் இருக்கின்ற சூழலுக்கேற்றவாறு தன்னை தயார்ப்படுத்தி தன் உணவு,உறைவிடம்,மேலும் தன் சுய தேவை தொடர்பான மூலங்களை செயல்படுத்தி காலப்போக்கில் தன்னையே பிறிதொரு உயிரினமாக தகவமைத்துக் மாற்றிக் கொள்கிறது என்பது ஆகும்.
  
  ஆக எந்த ஒரு உயிரினமும் சங்கிலிதொடர் முறையிலேயே ஏனைய காலகட்டத்தில் பிறிதொரு உயிரினமாக மாறுகிறது (அவ்வாறு ஏற்படும் தன்னிலை மாற்றத்திற்கு நீண்ட காலங்கள் ஆகும் என்பதையும் உடன்பாட்டு அடிப்படையில் ஏற்றுக்கொள்வோம்) அதன் அடிப்படையில் நமக்கு இந்த உயிரின மாற்றம் தொடர்பாக இயல்பாக சில கேள்விகள் பிறக்கிறது., 
  
  •  முதன்முதலில் ஒரு செல் உயிரி மூலம் தான் உலக உயிரினங்களின் வளர்ச்சி ஏற்பட்டதென்றால் எந்த உயிரன மூலத்தின் தொடர்ச்சியாக தாவரங்கள் உருவாயிற்று. அந்த உயிரி தாவரமாக உருமாற்றமடைய கால சூழ்நிலை அவசியமென்ன?

  •        முள்ளம் பன்றிகள் பெற்றிருக்கும் தன் உடலில் முட்களை பரிணாம ரீதியாக எந்த உயிரின மூலத்திலிருந்து பெற்றது?அது வாழும் கால சூழலில் தன்னை பிற உயிரினங்களிருந்து காத்துக்கொள்வதற்காக அஃது உருவானதாக கொண்டால,அந்த இன்றியமையாத பயன்பாடு அவ்வுயிரினம் மூலமாக ஏனைய விலங்குகளுக்கு தொடராதது ஏன்?

  • அதுப்போலவே பச்சோந்தி என சொல்லப்படும் ஓணான் போன்ற ஒருவகை உயிரினம் தேவைகேற்ப தன் தோலின் நிறத்தை மாற்றும் பண்பை எந்த பரிணாக அடிப்படையில் பெற்றுக் கொண்டது? பாதுகாப்பின் அடிப்படையில் தான் அஃது மாற்றமடைவதாக கொள்ளும்போது அதன் இந்த தேவையை ஓணான் போன்ற அதன் கிளை உயிரினம் பெறாதது ஏன்? -இந்த இரண்டு உயிரினமும் வெவ்வேறு கால கட்டங்களில்,கால சூழலில், மாறுப்பட்ட எதிரின விலங்குகளோடு வாழ்பவையல்ல.இரண்டும் ஒன்றாக அதுவும் நம் கண்ணெதிரே உலா வரும் உயிரினங்களே.ஆக சம காலத்தில் வாழும் ஒரே வகையில் இருக்கும் இரு உயிரினங்கள் வெவ்வேறு நிலைகளில் இருப்பது ஏன்? அல்லது இரண்டும் வெவ்வேறு திணை,தொகுதி,வகுப்பு,வரிசை, துணைவரிசை, குடும்பம் கொண்டதாக இருந்தாலும் பச்சோந்தியின் சிறப்பு பண்பை ஓணான் பெறாதது ஏன்?

  •  ஆமைகளுக்கு அதன் பாதுகாப்பு அவசியம் கருதி மேல்புறமாக இருக்கும் ஓடு எந்த உயிரின மூலத்திலிருந்து எந்த சமயத்தில் பெற்றது?

  • தேனீக்கள் தனது அபார சக்தியால் தனது (வீட்டை) கூட்டை அறுங்கோண வடிவில் அதுவும் சற்றும் கோணாலாக இல்லாமல், கணித ரீதியாக அறுகோண வடிவம் என்பது அதிக எடையைத் தாங்கும் அமைப்பாகும்-இதனை எந்த பரிணாம நிலையின் போது பெற்றது?

  • மேலும் தன் தேவைகேற்ப தேனெடுக்கப் போகும்போது தேன் இல்லாத பூக்களை விடுத்து அதிக தேனுள்ள பூக்களை மிக எளிதாக ,லாவகமாக அவற்றால் எப்படி கண்டறிய முடிகிறது? பகுத்தறிவின் மொத்த உலகமாக வர்ணிக்கப்படும் மனிதனால் அத்தகையே தேனீக்களின் சாதரண செயல்களை செயல் படுத்த முடியாதது ஏன்?

  • ஒரு நல்ல திடமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் தேனீக்கள் வரை இருக்கும். இத்தகைய பிரம்மாண்டமான எண்ணிக்கையில் இருப்பினும் கூட இவற்றிற்கிடையே எந்த விதமான நிர்வாகக் கோளாறுகளோ அல்லது குளறுபடிகளோ வருவதில்லை.-இந்த நிர்வாக திறனை எந்த கட்டத்தில் பெற்றது,அதன் பின் அதன் மூலம் உண்டான(?) ஏனைய உயிரினங்களுக்கு வீடுகட்டும் ஒழுங்குமுறையும்,திறம்பட செய்ய வேண்டிய நிர்வாக திறனும் தேனீக்கள் போன்று இல்லாமல் போனது ஏன்?

  • ஒரு நல்ல கூட்டின் சுற்றளவு 3 மீட்டர் வரை கூட இருக்கும். இவற்றின் கூடு அதிகமான தேனீக்களின் எண்ணிக்கையினால் ஏற்படும் அதிக படியான எடையால் விழுந்து விடாமல் இருப்பதற்காக வேலைக்கார தேனீக்கள் மரங்களின் பிசினைக் கொண்டு, அவற்றில் சில நொதியங்களைச் சேர்த்து புரொபோலிஸ் என்னும் பிசின் போன்ற பொருளைக் கொண்டு உறுதியாக ஒட்டப்படுகின்றது.-தனது கூடு அதிகப்படியான எடையால் விழுந்துவிடாமல் இருக்க இந்த பாதுகாப்பான முன்னேற்பாடு அவ்வுயிர்களுக்கு எப்படி தெரிந்தது?அல்லது கால சூழலுக்கு தகுந்தவாறே தனது நிலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது எனக் கொண்டால் இந்த வகையில் அமைந்த கூடு கட்டுமானத்திற்கு முன்பாக அதன் கூடுகள் எத்தனை முறை விழுந்துள்ளது அல்லது விழும் என்ற முன்னேச்சரிக்கை உணர்வு அதற்கு எப்படி தெரியும்? 

  • வண்ணத்துப்பூச்சிகள்- அதன் இறக்கைகள் பல்வேறு நிறங்களில் அமைந்திருக்க பரிணாம அடிப்படையில் என்ன காரணம்? ஏனெனில் பரிணாம அடிப்படையில் அதன் இறக்கையின் நிறங்கள் என்பது தேவையில்லாத ஓன்று. பச்சோந்திகள் போல தனது பாதுக்காப்புக்காக வண்ணத்துப்பூச்சிகள் தனது நிறங்களை பயன்படுத்துவதில்லை. சூழ்நிலைக்குத் தகுந்தவாறு ஒரு உயிரினம் தன்னை தகவமைத்துக்கொள்வதே பரிணாமம்- எனும்போது எந்த சூழ் நிலையிலும் தனது இறக்கையின் வண்ணத்திற்கு மூலமான தேவைகளுக்கு அப்பூச்சிகளுக்கு அவசியமே ஏற்படவில்லை.அப்படி வர்ண தேவைகள் அவசியமென்றால் பரிணாம அறிவியலில் அதற்கான ஆதாரம்?

  • அதுவும் அவைகளில் 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு உள்ளினங்கள் உள்ளன அதுவும் வெவ்வேறான வர்ண மூலத்துடன்-? வர்ணங்கள் அழகுக்காவே என்றாலும் (அதுதான் உண்மையும்) கூட எந்த நிலையிலும் ஒரு உயிரினம் தனக்கான அழகை தேர்ந்தெடுக்க முடியாது.அப்படி தானே தேர்ந்தெடுப்பதாக இருந்தால் இன்றளவும் மனிதனால் தன் அழகை தானே தெரிவு செய்ய முடிவதில்லை ஏன்?

  • சிறுத்தைகளுக்கு அதி வேகமான ஓட்டம் இரைப்பிடிப்பிற்காக தன் சுய தேவையின் அடிப்படையில் காலப்போக்கில் ஏற்பட்டதாக இருக்கலாம். ஆனால் தம் உடம்பில் உண்டான(இருக்கும்) கோண வடிவ வர்ண தோற்றத்திற்கு என்ன காரணம்?அதுப்போலவே வரிக்குதிரைக்கும்,ஓட்டகசிவிங்கிகளுக்கும், மான்களுக்கும், புலிகளுக்கும் -தம் உடம்புகளில் இருக்கும் பிரத்தியேக வண்ண அமைப்புகளுக்கு எந்த சூழல் அந்த மாற்றங்களை அவைகளுக்கு ஏற்படுத்தியது?

  • மற்ற பறவைகள் போலல்லாமல் ஆந்தைகளுக்கு மட்டும் மனித முக அமைப்பு இருப்பது ஏன்? அதனை தொடர்ந்த உயிரினங்கள் அத்தகையை இயல்பை பெறாதது ஏன்? 

  • மனிதனை விட 14 மடங்கு அதிகமாக நுகரும் சக்தி கொண்ட பூனைகளுக்கு பார்வையின் மூலம் வண்ணங்களை பிரித்தறிய முடியாமல் நிறக்குருடு தன்மையே பெற்றிருப்பது ஏன்? ஏனெனில் பரிணாமத்தின் மூலம் தன் சுய தேவை அடிப்படையில் தன்னின நிலையில் வளர்ச்சி பெறுவதே சாத்தியம்,ஆனால் இங்கு ஏனைய உயிரினங்களின் நிலைகளை தாங்கி உருவாகும் ஒரு உயிர் அதன் இயல்பை ஒத்து வளர்ச்சி பெற வேண்டும்.ஆனால் இங்கு பூனை என்ற ஒரு விலங்கு ஏனைய உயிரினங்களின் நிலை தாங்கி மெல்ல மெல்ல மாற்றமடையும்போது பார்வை அடிப்படையில் நிறக்குருடு எனும் குறைப்பாட்டை தன்னகத்து கொண்டு உருவாகிறது, இது எதன் அடிப்படையில் சாத்தியம்? அவ்வாறு நிறக்குருடு அடைவதற்கு கால,சூழல் பரிணாம பிண்ணனி என்ன?

  • நண்டு எனும் நீர் வாழ் உயிரினம் எந்த உயிரின தோற்ற வளர்ச்சியின் விளைவாக வித்தியாசமான கூட்டுக்கண்கள் அமைப்பை பெற்றுள்ளது? 

  • சிலந்தி தன் இரைக்காக தனது தன் உடலில் உள்ள சுரப்பிகள் மூலம் வீடு (நூலாம் படை) கட்டுவது தன் சுய தேவை அடிப்படையில் என்பது ஏற்புடையது.ஆனால் அவ்வாறு உருவாக்கிய தம் வீடு மிக மெல்லிய இழையாக இருந்த போதிலும் தான் மட்டும் அந்த சிக்கல் வழியாக இலகுவாக செல்வதற்கும்,அவ்வீட்டின் எடை அச்சிலந்தியின் எடையே விட மிக சொற்பான இருந்தாலும் எடை கணத்தால் ஒடிந்தோ,விழுந்தோ விடாமல் இருக்க எந்த கால சூழலில் அல்லது எந்த பரிமாண வளர்ச்சி கட்டத்தில் எந்த கற்றுக்கொண்டது?

  •  ஏனைய எல்லா உயிரினத்தின் தொடர்பில் கடைசியாய் உலா வரும் மனிதன் ஏனைய உயிரினங்கள் போலலல்லாது தாயிக்கும்.தாரத்திற்கும்,மகளுக்கும் வித்தியாசம் உணர்ந்து அஃது மனைவியோடு மட்டும் வீடு கூடும் அந்த திறமையான ஒழுங்க மாண்பை பெற்றது எப்படி? அஃது அவ்வாறு எந்த காலகட்டத்தில் எந்த பரிணாம் வளர்ச்சியின் மூலம் பெற்றான்? அதுப்போல அவனுக்கு இருக்கும் நாணமும்,வெட்கமும் எந்த உயிரின மூலத்திலிருந்து எத்தகைய பரிணாம கால சூழ் நிலை கற்றுக்கொடுத்து?

              மேலே குறிப்பிட்ட விளக்கத்தின் (வினாவின்) படி உயிரினங்கள் ஒவ்வொன்றும் பொதுவான உயிரினங்களின் தொடர்பு அடிப்படை இயல்புகளில் கூட ஒற்றுமையில்லாமல் அவையாவும் தனக்கென்று தனித்தனி சிறப்பியல்புகளுடனேயே அமைய காண்கிறோம்.
   
    எனவே அத்தகையே தனி இயல்புகள் என்பது பரிணாம மாற்றத்தால் எப்படி ஏற்பட்டது என்பதை விட ,ஏற்பட வாய்ப்பே இல்லை என்பது சிந்தனைக்கு உரிய வாதம்.
    
     இப்படி ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு தனித்தன்மை சிறப்பியல்புகளுடன் அமைய வாழ்வதென்பது இவ்வுயிர்கள் பிரத்தியேகமாக படைப்பாக இருந்தால் மட்டுமே சாத்தியம்.  எனவே இந்நிலைகளை கடவுள் என்ற சக்தியால் மட்டுமே உண்டாக்க முடியும் என்பதே உண்மை.

                பரிணாமவியலார் கூற்றுப்படி உலகில் முதன்முதலில் தான்தோன்றியான முதல் உயிரின உருவாக்க மூலம் தவிர்த்து அதை தொடர்ந்த ஏனைய உயிரின தோற்றம், வளர்ச்சி படி நிலை ஆகியவற்றிற்கு தெளிவான விளக்கங்கள் பரிணாமவியல் கோட்பாட்டில் இருப்பதாக சான்றுப் பகிர்கிறார்கள்.

    அதன் அடிப்படைப்பில் மேற்குறிப்பட்ட உயிரினங்கள் தாங்கள் கூறும் பரிணாமவியல் ஊடாக வலம் வந்ததற்கு சான்றுகள் இருக்க வேண்டும்.அதுவும் மேலே குறிப்பிட்டவைகள் உயிரினங்கள் ஏதாவது ஒரு உயிரினங்களின் தொடர் வரிசையில் வந்தே ஆக வேண்டும்.

  ஏனெனில் ஆரம்ப நிலை மீன்கள் >தலைப்பிரட்டை >தவளை உதாரணமும், இறுதியாக குரங்கினம்> நியாண்டர்தால் > மனிதன் உதாரணமும் -போன்ற மேற்கோள்கள் பரிணாம் குறித்த உயிரின தொடர்வரிசைக்கு ஆதாரமாக (?) காட்டுகிறார்கள். எனவே மேற்குறிப்பிட்ட வினாவிற்கு பதில் தருமா பரிணாம வாத சிந்தனை....?

பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும்தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை... (6:38)

                                                               அல்லாஹ் மிக்க அறிந்தவன்

read more "பதில் தருமா பரிணாமம்..?"

Tuesday, September 21, 2010

இணையம் சொல்லும் பாடம் (குறிப்பாய் பெண்களுக்கு!)

  அஸ்ஸலாமு அலைக்கும்அளவற்ற அருளாளன் நிகரே இல்லா அன்புடையோன் அல்லாஹுவின் பெயரால் ஆரம்பம் செய்து ...
 சாட் பண்ணுவதை பற்றி கொஞ்சம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இந்த கட்டுரையை அமைக்கின்றேன்..


   இது சரியா பிழையா என விவாதம் பண்ண போனால் விளைவுகள் பாதகமாகவே அமையும் ஆயினும் உண்மை என்னவென்றால் இது தவிர்க்க படவேண்டிய ஒன்று...சாட் பண்ணுவது நேர்முகமாக அல்லாமல் மறைமுகமாக ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் இருப்பதை போன்றதே..எங்கு ஆணும் பெண்ணும் தனித்திருக்கிறார்களோ அங்கு மூன்றாவதாக ஷெய்த்தான் வந்துவிடுகிறான்.((நபி மொழி)) 


  
நாம் எவ்வளவு தான் நல்லவர்களாக இருந்தாலும் நம் எண்ணங்களில் ஊடுருவியுள்ள ஷெய்த்தான் நல்லவன் இல்லையே! நம்மை வழி தவற செய்வதுதான் அவன் தலையாய நோக்கம்..


       நாம் மார்க்கம் சம்பந்தமான விடயங்கள் தான் பகிர்ந்து கொள்கிறோம் என சொல்லி கொள்பவர்களும் இருக்கின்றனர்.எனினும் எவரின் நம்பகத்தன்மையும் யாரும் அறியமுடியாது.அப்படியிருக்க ஒருவர் நல்லவர் என்று நினைக்கும் அதே நேரத்தில் அவர் கெட்டவராகவும் இருக்க வாய்பிருக்கிறது. மேலும் ஒருவர் மற்ற நபர்களுடன் பொதுபடையாக பழக வேண்டிருப்பதால் முடிந்த அளவிற்கு தன்னை நல்லவனாகவே தான் காட்டிக்கொள்வார். 


   ஆக இணையத்தில் இருப்பவர்கள் ஒன்று நல்லவராக இருக்கலாம்.அல்லது நல்லவராக நடிக்கலாம். ஏனெனில் உள்ளங்களில் உள்ளவற்றை நன்கு அறிந்தவன் அல்லாஹு ஒருவன்தான்.எப்படித்தான் சகோதரங்கள் என்ற வார்த்தைகளை பிரயோகித்தாலும் உண்மையான சகோதரங்கள் ஆகிவிடாது..மார்க்கத்தில் உடன் பிறவா சகோதரங்கள் என்று ஒன்று இல்லை... 


  வீணான பேச்சுக்கள் தேவையில்லாத விடயங்கள் தவிர்க்க பட வேண்டும்.ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் நம்மால்முடிந்தவரை மற்றவர்களுக்கு நன்மைகளை பெற்று கொடுக்க முயற்சிக்க வேண்டுமே தவிர பாவங்களுக்கு நாம் காரணமாக அமைந்து விட கூடாது.சாட் பண்ணுவது வழி தவறுதல்களுக்கு அழைத்து செல்லுமே தவிர அவற்றால் நன்மைகள் விளைவது மிகவும் குறைவு
  • அறிமுகம் இல்லாத புதிய நபர்களுடன் குறிப்பாக எதிர்பாலினத்துடன் சாட் பண்ணுவதை தவிர்ப்பது சிறந்தது 
  • இரவு நேரத்தில் காலம் தாழ்த்தி சாட் பண்ணுவது தவிர்க்கப்பட வேண்டும்
என் அன்புக்குரிய சகோதரிகளே...!!!


''நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள். (33;32)'


         நபியின் மனைவிமார்களுக்கே இந்த கட்டளை என்றால் நாம் எல்லாம் எங்கே ?
தயவு செய்து நளினமான பேச்சுகளை தவிர்த்து கொள்ளுங்கள். நண்பன்தானே என்ற நோக்கில் தொலைபேசி இலக்கங்களை பகிர்ந்து கொள்வது, புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது. தொலைபேசியில் பேசுவது..இவை எல்லாம் நம் மார்க்கம் கற்றுத்தந்த வழிமுறைகள் அல்ல.என்னதான் நண்பன் , சகோதரன் என்றாலும் அல்லாஹு ஹராம் ஆக்கியது ஹராம் தான் அதை மாற்றும் அதிகாரம் எவருக்கும் இல்லை.


அன்புக்குரிய சகோதரர்களே! பெண்களை பாவம் செய்வதற்கு காரணமாக நீங்கள் இருப்பதை தவிர்த்து கொள்ளுங்கள் .அவர்களின் பேச்சுகளில் பிழைகள் இருப்பின் சுட்டிகாட்டுங்கள் அவர்கள் தவறிழைக்கும் வேலையில் கண்டியுங்கள் மாறாக சுதந்திரம்,சம உரிமை எனும் பெயரில் தட்டி கொடுக்காதீர்கள்,ஊக்கபடுத்தாதீர்கள் 


 நாம் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள் நாளை நம் பொறுப்புகள் பற்றி விசாரிக்கப்படுவோம்.அல்லாஹுவின் முன் நாளை நிற்க போவதை எண்ணி அஞ்சி கொள்வோம்.நம் இறைவனிடம் நாம் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஏனெனில் எத்தனையோ சகோதரிகளின் அனுபவமும் அவல நிலையுமே வெளிப்பட்டு இவ்வுண்மைக்கு சாட்சியாக இருக்கின்றது. நாளை மறுமையை அஞ்சி கொள்வோமாக!


சுவனம் எனும் எம் இலட்சிய பயணத்தில் விளையும் இடையூறுகளை இறைவனுக்காக களைவோமாக !
அல்லாஹு நம் அனைவரையும் நேரான வழியில் செலுத்துவானாக !!
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்....!!!

ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்கவற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையயடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் துய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.  (24:21)
                        
                                                          - ருக்கையா அப்துல்லாஹ்
                                                               S R I   L A N G A

read more "இணையம் சொல்லும் பாடம் (குறிப்பாய் பெண்களுக்கு!)"

Saturday, September 18, 2010

இறைத்தூதர்கள் ஏன்?

                                               ஓரிறையின் நற்பெயரால்...

   ஒருவன் கடவுளை மறுப்பதாலோ, ஏற்பதாலோ கடவுளுக்கு எந்த ஒரு நன்மையும்,தீமையும் விளைவதில்லை. மாறாக நாம் மேற்கொள்ளும் செயல்களுக்கு ஏற்றவாறு நமக்கே பயன்களும்,தீமைகளும் வந்தடைகின்றன. அதை யாராக இருந்தாலும் கண்கூடாக நடைமுறையில் காண்கிறோம்.

   ஆக கடவுள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால் கடவுள் இல்லை என வாதிடுவோர் பரிணாம கோட்பாடு எனும் தியரியை தாண்டி எந்த ஒரு நிருபிக்கப்பட்ட அறிவியல் ஆதாரங்களையும் இதுவரையும் முன் வைக்கவில்லை.

   இந்த குற்றச்சாட்டை அவர்களிடம் முன்வைத்தால் அவரகள் இதே கேள்வியே கடவுளை நம்புவோரிடமும் முன்வைப்பர். நியாயமானது தான். (எனினும் சாதாரணமாக தர்க்கரீதியாக நடைமுறை வாழ்வில் கூட கடவுள் இல்லை என்பதை நிருபிக்க முடியவில்லை என்பது வேறு விசயம்)

    கடவுளை மறுப்பதற்கு எந்த ஒரு பகுத்தறிவு சிந்தனையும் தேவையில்லை. கடவுளை நம்புவதற்கு தான் பகுத்தறிவு அவசியமாகிறது. எப்படி? இறைவழி நின்று அலசுகிறது இக்கட்டுரை
    
    கடவுள் தான் இவ்வுலகில் அனைத்து உயிர்களையும் படைத்ததாக கொண்டால் ஏனைய உயிர்கள் அல்லாது பிரத்தியேக குணாதிசயங்களோடு மனிதர்களை மட்டும் படைத்ததன் நோக்கம் என்ன? அந்த நோக்கத்தை நிறைவேற்ற கடவுள் மேற்கொண்ட நடவடிக்கை என்ன?

  என்ற கேள்விகளுக்கு தெளிவான விடை சிந்தனைக்கு உகந்த வகையில் அமைந்தால் "கடவுளை நம்புவதற்கு" எந்த வித தடையும் எவருக்கும் இல்லை. சரி.,

மனித மூலங்கள் மண்ணில் படைக்கபடுவதற்கு முழு முதற் காரணம் குறித்து குர்-ஆன் கூறும்போது,

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.(51:56)   

        (ஜின்கள்- இக்கட்டுரையின் நோக்கமில்லை என்பதால் அவை குறித்த பார்வை இங்கு வேண்டாம்) ஆக மனித படைப்பின் நோக்கமே இறைவனை வணங்குவதற்காகவே எனும் போது கடவுளுக்கு வழிபாடுகள் தேவையா...? என்ற கேள்வியே அர்த்தமற்றதாகிறது.

  ஆனால் "அல்லாஹ்" எவ்வித தேவையுடையவனும் அல்ல என்பது வேறு விசயம்.அவ்வாறு வணங்குவதற்காக படைக்கப்பட்ட மனிதனுக்கு வணங்குவது உட்பட வாழ்வதற்கு தேவையான அனைத்து நடைமுறை செய்கைகளும், தெரிவுகளும் மிக தெளிவாக மற்றும் சரியாக கடவுள் புறத்தால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

  அவ்வாறு மனித சமுக முழுமைக்கும் பின்பற்ற தகுந்த வழிகாட்டுதல்கள் இருக்கும் போது தான் மனிதர்கள் மேற்கொண்ட நன்மை தீமைக்கு தகுந்தாற்போல் அவர்களுக்கு பரிசோ,தண்டனையோ அளிப்பதென்பது நியாயமானதாகும்.

மனித குல முழுமைக்கும் நேர்வழி காட்ட கடவுளே நேரடியாக இப்புவிக்கு வர வேண்டுமா?

     மனிதர்களுக்கு வழிகாட்ட கடவுளே நேரடியாக மனித வடிவெடுத்து வருகிறார் என வைத்துக்கொள்வோம்.தாளாரமாக மனிதர்கள் மேற்கொள்ள வேண்டிய தவிர்க்க வேண்டிய அனைத்து விசயங்களையும் தன் சொல்,செயல் மூலமாக மிக தெளிவாக எடுத்துரைக்க முடியும்.அதன் படி மக்களையும் நேரான வழியில் செலுத்த முடியும். சரி, எவ்வளவு காலத்திற்கு மனிதர்களோடு மனிதராக கடவுள் உலா வர முடியும்?

   அச்சமுகம் நல்லவனவற்றை பின்பற்றும் வரையிலா...அல்லது உலகம் அழியும் வரையிலுமா...? மேலும், கடவுள் மனிதனாக அவதரிக்கும் பொழுது மனித குணாதிசயங்களுடன் மனிதான மாற முடியும்,  அல்லது இருக்கும் காலம் வரை மனிதனாக நடிக்கவே மட்டும் தான் முடியும். உங்களைப்போன்று என்னைப்போன்று இயல்பாகவே ஆசை, துக்கம், தூக்கம், கோபம், தாபம், ஏமாற்றம், பசி போன்ற சராசரி மனித எண்ணங்களோடு நிச்சயமாக வாழ முடியாது.

    ஆக மிக நேர்த்தியான மற்றும் துல்லியமான வழிகாட்டுதல்கள் கடவுள் மனிதனாக இருந்து தந்த போதிலும்,ஒரு நிலையில் அவைகளை சரிவர நாம் பின்பற்றா நிலையில் எளிதாக நம்மால் முறையிட முடியும் ஏனெனில் நாம் மனிதனாக பிறந்து மனிதனாக வாழ்கிறோம்.

      ஆனால் வழிகாட்ட வந்தவரோ கடவுளாக இருந்து மனிதனாக வாழ்ந்தவர்.ஆக கடவுள் மனிதனாக அவதரித்து மனித மனங்களை சீர் செய்வதென்பது ஒரு முழுமைப்பெற்ற பணியாகாது. அப்படியெனில், எக்காலத்திற்கும் ,எந்நேரத்திலும் மனிதர்களால் குறை கூறா வண்ணம் ஒரு நிலையான வழிகாட்டியே அதுவும் பொதுவான பின்பற்றதலோடு கடவுள் என்பவர் ஏற்படுத்த வேண்டும்.அது தான் நியாயமானதும் கூட அதற்கு.,

       "மனிதனாக பிறந்து மனிதனாக வாழ்ந்து மனிதனாக மரிக்கும் ஒருவரை மனிதர்களுக்கு நேர்வழி காட்ட அவர்களுக்கு மத்தியில் வாழ செய்ய வேண்டும். இதை தான் "இஸ்லாம்" மிக தெளிவாக முன்மொழிகிறது.

     மனித மூலங்கள் மண்ணில் வாழ தொடங்கிய நாள் முதல் அவர்களுக்கு "ஓரிறையின் போதனைகளின்" அடிப்படையில் வாழ்வில் மேற்கொள்ள வேண்டிய ஏவல்கள்-விலக்கல்களை மிக தெளிவாக விளக்கி மக்களை பின்பற்ற சொன்னதோடு தாமும் பின்பற்றி வாழலானார்கள்.

  அவ்வாறு மக்களோடு மக்களாக வாழும் தருவாயில் எல்லோருக்கும் ஏற்படும் எண்ணங்களின் அடிப்படையில் தங்களின் வாழ்க்கையே அமைத்துக்கொண்டாலும் கெட்ட செயல்பாடுகள் யாவும் துறந்து நன்மையே மட்டுமே செய்து மனித புனிதர்களாக வாழ்ந்து மக்களுக்கு ஓர் நல்ல வழிகாட்டியானவர்கள் தான் இறைவன் மனிதர்களுக்கு மத்தியில் தேர்ந்தெடுத்த "இறைத்தூதர்கள்" ஆவார்கள்.

(நபியே!) உமக்கு முன்னரும் மானிடர்களையே அன்றி (வேறெவரையும்) நம்முடைய தூதர்களாக நாம் அனுப்பவில்லை அவர்களுக்கே நாம் வஹீ அறிவித்தோம். எனவே "(இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (நினைவுபடுத்தும்) வேதங்களுடையோரிடம் கேட்டுத் (தெரிந்து) கொள்ளுங்கள்" (என்று நபியே! அவர்களிடம் கூறும்).  (21:7)
            
       ஒவ்வொரு சமுதாயமும் நேர்வழி பெற வேண்டும் என்பதற்காக உலகில் உண்டான அனைத்து சமுதாயத்தினருக்கும் "இறைத்தூதர்கள்" அனுப்பப்பட்டனர். அதுவும் அவர்கள் மொழி பேசக்கூடியவராகவே. மேலும் அம்மக்களில் ஒருவரே முன் மாதிரியாக நின்று அம்மக்களுக்கு மத்தியில் வாழ்வதால் அதை அச்சமுகம் எந்த வித பிறழ்வுமின்றி மிக எளிதாக பின்பற்ற முடியும்.

   அவ்வாறு பின்பற்ற நிலை வரும்போது கூட ஒரு தகுந்த காரணம் சொல்லமுடியாது ஏனெனில் இங்கு வழிகாட்டி நம்மைப்போல் மனிதனாக பிறந்து மனிதனாக வாழ்பவரே! எனவே அவரை பின்பற்றுவது எல்லா காலத்திற்கும் எல்லா நேரத்திற்கும் பொருந்தக்கூடியதே.,

 ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.  (14:4)

        அவ்வாறு அவர் மரணித்த பின், வரும் காலங்களில் வழிதவறும் மக்களுக்காக வேறொரு "இறைத்தூதர்" அப்போதைய மக்கள் மத்தியில் இறைவனால் நியமிக்கப்படுவார். ஆதம் அலை தொட்டு நூஹ், மூஸா,இப்ராஹீம்,ஈஸா (அலை) தொடர்ந்து அனுப்பப்பட்டவர்கள் தான் இறைத்தூதர்கள்.அவர்களில் முஹம்மது நபியுடன் "இறைத்தூதர்" வரிசை முற்றுப்பெற்றது.

முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார் மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.  (33:40)

     இறைத்தூதர்கள் வரும் வழியில் அவர்களில் சிலருக்கு வேதங்களும் கொடுக்கப்பட்டன.அத்தகைய வேதங்களில் இறுதியானது தான் "குர்-ஆன்".ஆக இன்று முஹம்மது நபி அவர்கள் உயிரோடு இல்லையென்றாலும் அவர்களை பின்பற்ற தகுந்த வகையில் அவர்கள் கொணர்ந்த வேதமும் அவர்களின் வாழ்வும் நம் கண் முன் திறந்தே இருக்கிறது.

   அதை பின்பற்றுவது உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும் ஏனெனில் ஏனைய இறைத்தூதர்கள் போல் அல்லாமல் "இறுதித்தூதரும் -இறுதி வேதமும்" உலகம் முழுவதற்கும் அருட்கொடையான ஒன்று! மாறாக இஸ்லாமிய சமுதாயத்திற்கு மட்டும் உரித்தானதல்ல!!


   (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.  (21:107)

                                                   அல்லாஹ் மிக்க அறிந்தவன்
       

read more "இறைத்தூதர்கள் ஏன்?"

Thursday, September 09, 2010

இஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து

                                              ஓரிறையின் நற்பெயரால்...
   குர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் ஏசுவும் ஒன்றா...? இஸ்லாமியர் சிலர் மனதில் கூட ஊசலாடும் கேள்வி இது தான்.

  சுருக்கமாக கூறினால் "ஒன்று" என்று சொல்லலாம்.விளக்கமாக கூறினால் "இல்லை" என்று சொல்லலாம்.என்ன தெளிவான குழப்பமாக இருக்கிறதா? அதை விளக்கவே இக்கட்டுரை.



 இயேசுவை கடவுளாகவோ, கடவுளின் மகனாகவோ உயர்த்தி வர்ணிக்கப்படும் கிறித்துவத்தில் அவரது ஏனைய அற்புத நிகழ்வுகள் குறித்து சிலாகித்து கூறப்பட்டாலும் இயேசு கிறித்துவை பற்றி பைபிள் இப்படியும் குறிப்பிடுகிறது.


 34.பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள், சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.
 35.எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.                                
                                                                                     (மத்தேயூ அதிகாரம்:10)

17.பின்பு, அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்;

 18.அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே; (மாற்கு அதிகாரம்:10)

 49.பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.
 50.ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்.
 51.நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
 52.எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள்.
 53.தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்.   (லூக்கா அதிகாரம்:12)

34. ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.  (மாற்கு அதிகாரம்:15)

 19.அப்பொழுது, வேதபாரகன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
 20.அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
                                                                                        ( மத்தேயூ அதிகாரம்:8)

                 இவ்வாறு கடவுள் ஸ்தானத்திற்கு அல்லது கடவுளின் மகனாக மகிமைப்படுத்தி கூறப்படும் இயேசு கிறித்துவை பற்றிதான் மேலுள்ள வாக்கியங்களும் உள்ளன.அவ்வாறு கடவுளாகவோ அல்லது கடவுளின் மகனாகவோ கருதப்படுபவர் குறித்து சராசரி மனித பண்புகளோடு அல்லது அதற்கு கீழாக விவரிக்கப்பட்டிருக்கிறது.

   இங்கு பைபிள் குறித்து நான் விமர்ச்சிக்க வரவில்லை. மாறாக கடவுளாகவோ அல்லது கடவுளின் மகனாகவோ சித்தரிக்கப்படும் ஒருவரின் தகுதிக்கு இவ்வாசகங்கள் ஏற்புடையதா என்பதே என் கேள்வி? 
  
    ஆனால் இஸ்லாம் இயேசு கிறிஸ்து குறித்து கூறும்போது கடவுளின் மகன் இல்லையேன்று ஆணித்தரமாக கூறினாலும் இறைவனின் தூதுவர்களில் ஒருவர் என்பதை முன்மொழிந்து அவரது தூது தன்மைக்கு கலங்கமோ, தவறான கற்பிதங்களோ கொடுக்காமல் தூதரும்,தூய மனிதர் என்ற நிலைப்பாட்டிலும் இயேசுவை மிகச்சரியாக கண்ணியப்படுத்துகிறது.

    இங்கு ஒரு தெளிவு "பைபிளும், குர்-ஆனும் முன்மொழியும் அந்த இறைத்தூதரை "இயேசு கிறித்து" என்ற பெயரில் உச்சரிக்கும் பொழுது சிலுவையில் அறையப்பட்டு,கை,கால்களில் ஆணிகள் ஊடுருவப்பட்ட நிலையில், முள் கீரிடம் சுமந்தவராக, செங்குருதி வடிந்தவராக மனித கரங்களால் உருவாக்கப்பட்ட இடதுபுறம் தலைச்சாய்த்த முகம் தான் ஏனோ...ஞாபகம் வருகிறது.

   கடவுளின் மகன்(?) என கூறப்படும் அந்த தூயவருக்கு கொடுக்கும் கண்ணியமா இது? அதே நேரத்தில் திருக்குர்-ஆன் கூறும் நபி ஈஸா (அலை) அவர்கள் பெயரை உச்சரிக்கும் பொழுது எந்தவித எண்ணத்தோன்றங்களும் எழாது என்பதால் இனி அந்த தூய இறைத்தூதரை "ஈஸா (அலை) என்ற பதத்திலே இங்கு பெரும்பாலும் பயன்படுத்துகின்றேன். அல்லாஹ் அவன் திருத்தூதரை குறித்து சொல்வதை கேளுங்கள்.,

மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்;. மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;.  (3:45)

     "மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்."  (3:46)


"ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்;. இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்;. நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்;. மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்;. பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது. (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்" என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!  (3:55)

 அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்;. அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்;. தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்;. இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்;... (2:253 ன் சுருக்கம்


மேலும் பார்க்க நபி ஈஸா அலை குறித்து :    (2-87, 3-45>59, 4-157,171, 
5-17,72,75,78,110>120, 9-30, 19-16>34, 23-50, 42-13, 43-57,61,63, 61-6, 3-52, 57-27, 61-14)  

    மேற்குறிப்பிடப்பட்ட அல்லது குர்-ஆன் முழுவதும் நபி ஈஸா அலை அவர்களை பற்றி குறிப்பிடும் எந்த ஒரு வசனமும் அவர்களின் தூதுத்துவ தன்மைக்கு இழிவாகவோ தனி மனித கண்ணியத்திற்கு குறைவான நிலையிலோ குறிப்பிடுவதாக இல்லவே இல்லை.

  நான் மர்யமின் மைந்தருக்கு மிகவும் நெருக்கமானவன் ஆவேன் - இறைத் தூதர்கள் தந்தை வழிச் சகோதரர்கள் ஆவர் - எனக்கும் அவருக்கும் இடையே இறைத்தூதர் எவருமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(புஹாரி : 3442 அபூஹுரைரா (ரலி))


 'ஆதமின் மக்களில் (புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை கூக்குரலெழுப்பும். மர்யமையும் அவரின் மகனையும் தவிர' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூஹுரைரா (ரலி) அறிவித்துவிட்டு பிறகு, 'நான் இக்குழந்தைக்காகவும் வருங்கால வழித்தோன்றலுக்காகவும் சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்னும் (மர்யமுடைய தாய் செய்த பிரார்த்தனையை கூறும் - என்ற 3:36-வது) இறைவசனத்தை ஓதுவார்கள். 


(புஹாரி : 3431 ஸயீத் பின் அல் முஸய்யப் (ரலி)

.
  இவ்வாறு இறைவனும் அவனது இறுதித்தூதரும் நபி ஈஸா (அலை) அவர்ககளை கண்ணியப்படுத்தி கூற என்ன காரணம்? ஆக, கிறித்துவம் கூறும் இறைமகன் பண்புகள் ஈஸா (அலை) அவர்களுக்கு பொருந்தி வருகின்றதா? இஸ்லாம் கூறும் இறைத்தூதர் என்ற நிலை ஈஸா (அலை) அவர்களுக்கு பொருந்துன்றதா?

    நன்றாக சிந்தியுங்கள் கிறித்துவ சகோதரங்களே., இஸ்லாமியர்கள் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் புனித வேதமாக வர்ணிக்கப்படும் பைபிள் குறித்தும் அது கடவுளின் மகனாக உருவப்படுத்தும் இயேசு குறித்தும் தான்.மாறாக கிறித்துவ சமுகத்திற்கு உண்மையாக அனுப்பப்பட்ட இஞ்ஜில் வேதங்குறித்தோ அல்லது உண்மைத்தூதர் ஈஸா(அலை) அவர்கள் குறித்தோ அல்ல.,

   ஏனெனில் உண்மையான இயேசுவை விமர்சிப்பவன் தூய முஸ்லிமாக இருக்க முடியாது., தூய இயேசுவை பின்பற்றாதவன் உண்மை கிறித்துவனாக இருக்க முடியாது.ஆக அந்த தூய இறைத்தூதர் ஈஸா(அலை)அவர்கள் சொன்னது என்ன? செய்ய சொன்னது என்ன ? என்பதை அறிய முற்படுங்கள்.,

      நீங்கள் உண்மை தேடுதலில் விருப்பம் உடையவராக இருந்தால் இரண்டில் ஒன்றுதான் கலங்கப்படுத்தப்படாத உண்மையாகவே இறைவனின் வார்த்தைகளாக இருக்க முடியும் என்ற நடு நிலை எண்ணத்தோடு பைபிளையும் குர்-ஆனையும் ஆராயுங்கள். சர்வ வல்லமை படைத்த இறைவன் உங்களுக்கும் எனக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்.

    பின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம், மர்யமின் குமாரர் ஈஸாவை (அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் - அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம், ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்க வில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்); ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப் பேணவில்லை அப்பால், அவர்களில் ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்)கூலியை நாம் வழங்கினோம்; எனினும், அவர்களில் பெரும் பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாகவே இருக்கின்றனர்.  (திருக்குர்-ஆன் 57:27)

                                                      அல்லாஹ் மிக்க அறிந்தவன்

read more "இஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து"

Sunday, September 05, 2010

மனிதம் மறைத்த மரணங்கள்....













குருதியின் நிறம் கூட அறியாதவர்களின் 
சடலங்கள் குவியலாய்., 
காஃபா-  புண்ணிய பூமி.., வல்லோன் சொன்னது
காஸா - புண்படுத்தப்பட்ட பூமியோ.. யார் செல்வது?

அந்த சகோரங்களுக்கும் சேர்த்தே நமது "துஆ" இருக்கட்டும்
ஓடித்திரிந்த சாலைகள் 
உறவுகளுடன் கூடி மகிழ்ந்த இல்லங்கள் 
தொழுது தியானித்த மசூதிகள் 
இவை மட்டுமா ?

இன்னோரன்ன எத்தனையோ...
இழந்து நிற்கின்றோம் பேதைகளாக 
உடமைகளை மட்டும் அல்ல
உரிமைகளையும் தான்!

உயிரின் பெறுமதி உணரப்பட வில்லை 
அது காரணமே இன்றி பறிக்கபடுகிறது 
யூதனின் துப்பாக்கி முனையாலே ...
எம்மவரின் குருதியில் மட்டும் ஏனோ 
இனம் தேடபடுகிறது 

நிரை நிரையாக பேரீச்சை மரங்கள் ,
மனதை கவரும் பூஞ்சோலைகள் 
ஆயினும் அம்மலர்கள் கூட 
மணம் வீச மறுக்கின்றன 
பலஸ்தீனியன் புதையுண்ட மண்ணில் 
அது முளை கொண்டமயலோ ?

இது நாம் சுரண்டிய பூமி அல்ல 
எமக்கே உரித்தான பூமி 
எமது புனித பூமி 
விடியலுக்காக காத்திருக்கின்றோம் 
எம் இறைவனிடம் கை ஏந்தி !!!


என்னோடு சேர்ந்து நீங்களும்...

                                                                                                                           - ருக்கையா அப்துல்லாஹ்
                                                                                                                               S R I   L A N G A
read more "மனிதம் மறைத்த மரணங்கள்...."

Categories

அமல்கள் அறியாமை அறிவியல் அல்லாஹ் அவதாரம் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உஜைர் நபி உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் எதிரி ஏன் இஸ்லாம் ஏற்றத்தாழ்வு ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தஜ்ஜால் தண்டனை தாய் திருமணங்கள் தேவை நன்மைகள் நபிமொழி நரகம் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மனசாட்சி மனம் மனிதன் மனிதர்கள் மரணம் மறுமை மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வானவர்கள் வாழ்க்கை விதி விமர்சனம். விளக்கம் ஹராம்