"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Saturday, April 28, 2012

வரலாறு கற்றுக்கொண்ட பாடம்!

                                           ஓரிறையின் நற்பெயரால்


இஸ்லாம் என்ற விஷம் அரேபியாவில் மிக வேகமாகப் பரவி வருகின்றது இந்த விஷத்தை முறியடிக்க வேண்டுமானால் அது வெளிவரும் வாசலை அடைத்தாக வேண்டும் அதற்கு ஒரே வழி நபி முஹம்மதை கொல்ல வேண்டும்...

ஓரிறைக்கொள்கையின் வெளிச்சப்புள்ளிகள் மக்காவை ஆக்ரமிக்க தொடங்கிய போது குறைஷியர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் இது. தீர்மானத்தை நிறைவேற்ற மனமுகந்து முன்வந்தார் ஒரு திடகாத்திரமான இளைஞர்!

ஓட்டகங்களை மேய்ப்பதிலே தம் இளவயதை கழித்ததன் விளைவாக இயல்பாகவே நல்ல வலிமையும் கம்பீரமான உடல்வாகும் கொண்டிருந்த அவருக்கு மிக எளிதாய் ஏற்படும் கோபமும், துணிவும் வெளிப்படையாய் முஸ்லிம்கள் பலருக்கு இன்னல் தருவதற்கு ஏதுவாய் இருந்தது.

தம் மூதாதையர்கள் வணங்கி வழிப்பட்ட உருவச்சிலைகளை கடவுள்களல்ல அவையாவும் மனித கரங்களின் கற்பனையே.. என்ற விமர்சனம் செய்து, பிறக்கும் பெண் பிள்ளைகளை கொல்லும் பழக்கமுடைய தம் சமூகத்தில் ஆணும் பெண்ணும் இறைவன் முன் சமம் என்ற சமத்துவமும், ஆண்டான் அடிமை இல்லை அனைவரும் இறைவனின் அடிமைகள் என தம் மேற்குடி குலத்தாரோடு கறுப்பின மக்களை கைக்கோர்க்க முற்பட்டதும் முஹம்மத (ஸல்) அவர்களை கொல்ல நியாயமான காரணமாக தெரிந்தது அந்த வாலிபருக்கு.

குலங்களாலும் கோத்திரங்களாலும் சச்சரவுக்குழிகளில் மண்டிக்கிடக்கும் அந்த அரேபிய பாலையில் முஹம்மதும் (ஸல்) ஓர் உயர் குறைஷிக்குலத்தை சார்ந்தவர் என்பதால் வெளிப்படையாக அவரை எதிர்த்தால் ஏனைய கிளை கோத்திரங்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என பயந்து காலம் தள்ளிய அந்த குறைஷிக்கூட்டத்திற்கு இந்த இளையவரின் கர்ஜனை பெரும் ஊக்கத்தை கொடுத்தது. எப்படி கொல்வது வழித்தேடியவர்களின் விழிக்களுக்கு முன்னமே தம் வாளை உயர்த்தி தம் வஞ்சனையே தீர்க்க அந்த பாலை பெருவெளியில்

கோபத்தின் தடங்களை மட்டுமே வழிக்காட்டியாக கொண்டு முஹம்மத் (ஸல்) அவர்களை கொல்ல விரைகிறார் அந்த வாலிபர்...


கி.பி 634  ஆம் ஆண்டு.

இஸ்லாத்தின் இரண்டாம் கலிபா மதினாவில் ஆட்சிப்பொறுப்பை ஏற்கிறார்.
பொறுப்பை ஏற்றவுடன் தம் மக்கள் மத்தியில் இப்படி பிரகடனம் செய்கிறார்:
"மக்களே, என் மீது உங்களுக்கு சில உரிமைகள் உள்ளன. அதனை நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் கோரலாம். அதில் ஒன்று, உங்களில் ஒருவர் கோரிக்கையுடன் வரும்போது, அது சரியான முறையில் தீர்க்கப்பட்டு அவர் திருப்திகரமாக திரும்பி செல்வதாகும். மற்றொரு உரிமை என்னவென்றால், நாட்டின் வருவாயை நான் தவறான முறையில் பயன்படுத்தியிருந்தால் அதனை நீங்கள் தட்டி கேட்பதாகும். நாட்டின் எல்லைகளை பலப்படுத்தி உங்களை ஆபத்திலிருந்து காப்பதும் என்னுடைய பொறுப்புகளில் ஒன்றாகும். அதுபோல, நீங்கள் போருக்கு செல்லும்போது, உங்கள் குடும்பத்தை ஒரு தந்தையின் பொறுப்பில் இருந்து நான் கவனிக்க வேண்டும் என்பதும் உங்களின் உரிமைகளில் ஒன்றாகும்.
மக்களே, இறைவனை நினைவுக்கூர்ந்து கொண்டே இருங்கள், என்னுடைய தவறுகளை மன்னியுங்கள், எனக்கு ஒத்துழையுங்கள். நல்லதை அமல்படுத்தி தீயதை தடுக்க எனக்கு உதவி புரியுங்கள். இறைவன் என் மீது விதித்துள்ள கடமைகளை நிறைவேற்ற எனக்கு ஆலோசனை கூறுங்கள். 
சொற்பொழிவுகளில் மட்டும் இப்படியான வாசகங்களை படித்து செல்லாமல் தம் வாழ்நாள் முழுவதும் அதன்படி செயல்படுத்தியது கலிபாவின் அரசியல் வாழ்வு. தம் மக்களின் வாழ்வியலை நிதர்சனமாக அறிய இரவு நேரங்களில் நகர்வலம் வருவதுண்டு அப்படி ஒரு நாள் வலம் வரும்போது...

ஒரு குடிசையின் உள்ளிருந்து விளக்கின் மெல்லிய வெளிச்சமும் அதை விட கூடுதலாக குழந்தைகளின் அழுகுரலும் வெளியே வரக் கண்டார்கள்.
கலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது, அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள். அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று உள்ளே சென்றதும் அவர்களின் முகம் அறியா வகையில் இருந்ததால் உண்மையே அறிய ஏதுவாக அந்நிலையில்...

கலிபா: “குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன?”
பெண்மணி: “அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்”
கலிபா: “அடுப்பில் என்ன இருக்கிறது?”
பெண்மணி: “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன். இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத இந்த நாட்டின் கலிபா அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”.

அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலிஃபா அவர்கள் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக! உமது துன்பமான நிலைமையை கலிபா எப்படி அறிவார்?” என்று வினவினார்.
“முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் அவர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.

கலிஃபா அவர்கள் விரைந்து பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும், கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டார்கள்.சாக்குப்பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து, அதைத் தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.

உதவியாளர் பதறியவாறு, “இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!” என்றார். கலிஃபாவோ அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.“என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான் தான் நீர் அல்ல... அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும்!”

தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார். அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் அந்த நாட்டின் கலிஃபா அவர்கள். உதவியாளரும் அவரை பின்தொடர... குடிசையை அடைந்த கலிபா மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள்.

அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அந்த மங்கலான வெளிச்சத்திலும் அவர்களின் அடர்ந்த தாடிக்குள் புகை படர்ந்தது தெளிவாய் தெரிந்தது.

பிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள். வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த கலிபா அவர்களின் முகமும் மலர்ந்தது.

சாந்தமான அப்பெண்மணியிடம் ‘ இக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா’ என வினவ. தம் கணவர் இறக்க தமக்குஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார். வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப் போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக! உண்மையில் கலிஃபா பதவிக்கு அவரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்”.

அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலிஃபா என்பதை அம்மாது அப்போதும் அறிந்து கொள்ளவில்லை! கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த கலிபா அவர்கள் அதன் பின்னர் தம்மிடம் நோக்கி திரும்ப ஆரம்பித்தார்கள்.

பிறர் நலனில் கொள்ளும் அக்கறை ஒரு ஆட்சியாளர் என்ற நிலையும் தாணடி இன்னும் பல நூறு செயல்கள் கலிபாவின் ஆட்சி முழுவதும் காணப்படுகிறது. உதாரணத்திற்கு தான் இங்கொன்று. தன் ஒவ்வொரு செயலுக்கும் நாளை இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என எதுவொன்றையும் சீர்தூக்கி பார்த்து அதை சரியாக செய்வதற்கே தன் வாழ்வை அற்பணித்த இஸ்லாமிய வரலாற்றின் இரண்டாம் கலிபா.

மேற்கண்ட இரு நிகழ்வுகளில் நூறு சதவீகிதம் மாறுப்பட்ட சிந்தனையுடன் செயல்பட்ட இருவரும் ஒருவர் என்றால்...
. . . 
ஆனால் உண்மை அது தான் இருவரும் ஒருவரே -அவர்தான். . .
உமர் பின் கத்தாப் ரலியல்லாஹூ அன்ஹூ

இஸ்லாம் ஒரு மனிதனின் உள்ளத்தில் எந்தளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தவல்லது என்பதற்கு உமர் (ரலி)யின் வாழ்வு மிகப்பெரிய சான்றாக உள்ளது. முஹம்மத் (ஸல்) அவர்களின் உயிரை எடுப்பதற்கு புறப்பட்ட இவர் தம் உயிரை விடவும் மேலாக முஹம்மத் (ஸல்) அவர்களை நேசிக்க தொடங்கியது தான் இஸ்லாம் என்ன செய்தது என்று யோசிக்க வேண்டிய ஒன்று...

வெறும் ஓட்டங்களை மேய்க்கும் இடையராக இளம் வயதை துவங்கிய உமர் (ரலி) அவர்கள் சுமார் 22 ½ லட்சம் சதுரமைல்களை பத்தாண்டுகள் சர்வ வல்லமையுடன் ஆட்சி புரிந்தது இன்றைய ஆட்சியாளர்களுக்கு இவரிடத்தில் படிப்பினை மட்டும் அல்ல., பல்கலைகழகங்களில் வைக்கும் அளவிற்கு பல பாடங்கள் இருக்கிறது என்பதை பறைச்சாற்றுகிறது.

இன்றைய நாட்களில் சமூக சேவை, பொது நலம், மக்களுக்கான உழைப்பது என்பதையெல்லாம் 50% தள்ளுபடி விலையில் விற்பனை செய்த பிறகே ஆட்சி அதிகாரத்தில் அமர்கிறார்கள். மீதம் இருக்கும் பொதுமக்களுக்காக செயல்திட்டங்களும் அவர்கள் மீது நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமும் போடப்படும் வழக்குகளில் சீரழிந்து போகிறது.

மக்களின் வரிபணத்தில் வாழ்வை பெருக்கும் அரசியல்வாதிகள் இந்த வாய்மையாளரின் செயல் திட்டங்களை அறிந்துக்கொள்வது காலத்தின் அவசியமாகிறது.

தொலைத்தொடர்ப்பில்லாத அத்தகைய காலக்கட்டத்தில் அந்த ஆட்சித்தலைவர் தம் ஆளுகைக்கு கீழுள்ள அனைத்து பகுதிகளுக்கு இடையே ஒரு சீரான தொடர்பை ஏற்படுத்தினார். எந்த பகுதியில் எந்த செயல்கள் நடந்தாலும் அது முறையாக அவரிடம் சேரும் பொருட்டு அதற்காக அனைத்து வழிமுறைகளையும் செய்தார்.

அதனால் தான் அன்றைய பைஸாந்திய பேரரசு வரை நீண்டிருந்த அவருடைய பல இலட்ச மைல்கள் கொண்ட நிலப்பரப்பை மதினாவின் பள்ளிவாயிலின் முற்றத்திலிருந்தே அவரால் கண்காணிக்க முடிந்தது.

மக்களோடு மக்களாக அவர்களின் நேரடி தொடர்பை எப்போதும் வைத்திருந்தார்கள். தம் குடும்பத்திற்கு தேவையானதை அரசாங்கத்தில் இருந்து பெறாமல் தம் கைகாலே உழைத்து சம்பாதித்து உண்டார்கள், அரசாங்க விளக்குகளை கூட அவர் வீட்டு முற்றத்திற்கு வெளிச்சம் தர அனுமதிக்கவில்லை அவர். ஆட்சி முழுவதும் யாருக்கும் பாரபட்ச நீதி வழங்கப்பட்டதாக எந்த ஒரு குற்றச்சாட்டும் எழவே இல்லை. ஆனால் இன்றைய ஆட்சியாளர்களோ, அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழாவிட்டால்தான் ஆச்சரியம்.

ஒருமுறை, பைத்துல் முகத்தஸ் வெற்றிப்பெற்றதை காண்பதற்காக தனது பணியாளுடன் ஒரு ஓட்டகத்தில் பயணப்படுகிறார் கலிபா உமர்(ரலி). முடிவில் பணியாள் அமர்ந்திருக்க ஒட்டகையின் கயிற்றை பிடித்தவண்ணம் பாலஸ்தீன மண்ணில் நுழைகிறார் கலிபா. ஆச்சரியமுற்றது அம்மக்கள் மட்டுமல்ல., பல வரலாற்று ஆய்வாளர்களும் தான்.

தனக்காக மட்டும் ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு அரசியல் ஆதாயம் பெற தேர்தல் நேரத்தில் மட்டும் ஏழைகளை கட்டியணைத்து போஸ் கொடுக்கும் போலி அரசியல்வாதிகள் போலல்ல அவர்களது வாழ்வு. நபிகள் நாயகம் எனும் பாடசாலையில் தாம் நிதர்சனமாக பயின்ற வாழ்க்கை பாடப்புத்தகத்தின் அனைத்து பக்கங்களையும் தம் அரசியல் தேர்வில் எழுத்தாக்கினார்.

எந்நிலையிலும் இறைவனை மட்டுமே அஞ்சி அனைத்து மக்களுக்கும் நீதமான தீர்ப்பை வழங்கினார்கள். வரலாறு படிப்பினைகள் பல பேர்களுக்கு கற்றுக்கொடுத்தது. ஆனால் ஹஜ்ரத் உமரோ (ரலி) வரலாற்றுக்கே பல படிப்பினைகள் கற்றுக்கொடுத்தவர்கள். அவர்களின் சீர்பட்ட வாழ்வுக்கு அடிப்படைக்காரணம் அவர்கள் கொண்ட இறை நம்பிக்கை மட்டுமே.

தேசதந்தை மீண்டும் உயிர்பெற்று வந்து சொல்ல போவதில்லை அந்த உமரின் ஆட்சி தான் இனியும் வேண்டுமென்று. ஆனால் அந்த உமரின் (ரலி) ஆட்சியை நம்மால் நிதர்சனமாய் கொண்டு வரமுடியும். ஆட்சியாளர் ஒவ்வொருவரும் உளப்பூர்வமாக தம்மை அந்த உமராக நினைத்தால் மட்டும்...

                                         அல்லாஹ் நன்கு அறிந்தவன்.


Reference :

http://ta.wikipedia.org/wiki/omar(rali)
http://azeezbaqavi.blogspot.com/
http://www.tamililquran.com
http://peacetrain1.blogspot.com/
http://www.islamforlife.co.uk/khalifa_umar_bin_al.htm
Gibbon - In The Decline and Fall of the Roman Empire
Washington Irving - In his book Mahomet and His Successors


read more "வரலாறு கற்றுக்கொண்ட பாடம்!"

Tuesday, April 17, 2012

ஓர் அழைப்பு!


                                          ஓரிறையின் நற்பெயரால்


நம் அனைவரின் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக..!

முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு -குறிப்பாய் என் நாத்திக சகோதரர்களுக்கு ஒரு சிறிய நினைவூட்டலாய் இப்பதிவு

ஏனையவைகள் போலல்லாமல் எதற்கெடுத்தாலும் இன்று இஸ்லாம் விவாதிக்கும் பொருளாக மாறிவிட்டது. மற்ற எந்த கொள்கை /துறை சார்ந்த கோட்பாடுகளை விட இஸ்லாம் விமர்சித்து குற்றப்படுத்தபடுவது அதிகம் என்றே சொல்லலாம்.

பொதுவில் பகிரப்படும் எதன் மீதும் விமர்சனம் ஏற்படுவது இயல்பே. ஆனால் விமர்சனங்கள் அல்லது குற்றச்சாட்டுகள் என்பன தெளிவு பெறும் நோக்கில் அமைந்தால் சந்தோசமே..! ஆனால் இன்று இணையத்தில் நாத்திகராக தம்மை முன்னிருத்திக்கொள்வோரில் ஒரு பகுதியினர் காழ்ப்புணர்ச்சி ஒன்றை மட்டுமே பிரதானமாக கொண்டு போலி பெயர்களுடன் இஸ்லாத்தை எதிர்க்க முற்படுவதுதான் பலதளங்களில் காண முடிகிறது.

அப்படிப்பட்ட நாத்திக முகமூடியுடன் இணைய உலாவரும் அத்தகையவர்களுக்காக இந்த பதிவு அல்ல.. உண்மையாக கடவுள் கொள்கைகளில் ஏற்பட்ட அதிருப்தி, அறிவுப்பூர்வமான சிந்தனைக்கு இறை மறுப்பே சிறந்த வழி என்ற உண்மையாய் நாத்திகத்தின் பக்கம் சென்றவர்களுக்கே,

தொடருங்கள்...

இன்று உலகில் நடக்கும் வன்முறைகள், வறுமை பட்டினி சாவுகள், இயற்கை சீற்றங்கள், போர்கள் போன்றவற்றால் மக்கள் படும் அவதிகளை கண்டு மனம் பொறுக்காமல் கடவுள் இருந்தால் ஏன் மக்களுக்கு இப்படியான பிரச்சனை...? இந்த கேள்வியே அறிவுப்பூர்வமாக ஏற்று கடவுளை மறுக்கும் நீங்கள் -

ஒருவேளை கடவுளே இல்லையென்பதை ஏற்றுக்கொண்டாலும் அப்பவும் இதே பிரச்சனைகள் இவ்வுலகில் தொடரத்தானே செய்யும்.. இதற்கு என்ன பதில் வைத்து இருக்கீறீர்கள் சகோ...?

கடவுள் இருக்கிறார் என ஏற்றுக்கொண்டாலும் இல்லையென மறுத்தாலும் சில செயல்கள் இவ்வுலகில் நடைபெறத்தான் செய்யும். அப்படியிருக்க இங்கு ஏற்பு அல்லது மறுப்பு இதில் ஒன்றை சார்ந்திருக்க நமக்கு அத்தகையே செயல்களுக்கான காரணங்கள் நமதறிவுக்கு எட்டும் வகையில் தர்க்கரீதியாகவும் -அறிவுப்பூர்வமாகவும் விளக்கப்பட அல்லது விளக்கப்பட்டிருக்க வேண்டும்
மேற்கண்ட வினாவிற்கு

எந்த நாத்திகராவது, உங்களின் முன்முடிவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு உண்மையாய் இஸ்லாம் இந்த நிலைப்பாட்டிற்கு என்ன பதில் வைத்திருக்கிறது என யோசித்து இருக்கிறீர்களா..?

இஸ்லாத்தை விமர்சிக்கும் எந்த நாத்திகரும் அதிகப்பட்சம் நூறு வசனங்களை குர்-ஆனில் படித்திருந்தாலே ஆச்சரியம்... ஆனால் எடுத்த மாத்திரத்திலே சொல்வார்கள் குர்-ஆன் குறைபாடுடையது என்று

நான் சீன மொழியை கற்றுக்கொண்டிருக்கும் போதே அதில் சில வார்த்தைகள் தெரிந்தவுடன் சீன மொழி இலக்கணம் முழுக்க குறைபாடுடையவை என்றால் என்னை என்ன சொல்வீர்கள் நீங்கள் ..?

இப்படித்தான் நாத்திக சகோதரர்களுக்கு குர்-ஆனோடு தொடர்பு. ஆறாயிரம் வசனங்களுக்கு மேலுள்ள குர்-ஆனில் வெறும் நூற்றை மட்டுமே தொட்டு அவை மனித வாழ்வுக்கு ஒத்துவராதவை என்றால் அதற்கு இரண்டு அர்த்தம் மட்டுமே கொடுக்க முடியும்

  • ஒன்று, முன்முடிவுகளோடு அதை அணுகுவது,
  • அல்லது அறியாமை.

வேறன்ன சொல்ல முடியும்?

கடவுளை கண் முன் நிறுத்தினால் தான் நான் நம்புவேன் என்றால் அந்த செயலை நீங்களோ அல்லது நானோ மரணிக்கும் வரை என்னால் நிருபிக்க முடியாது. என்னால் மட்டுமல்ல இவ்வுலகில் எவராலும் நிருபிக்க முடியாது...?

பின் எப்படி தான் கடவுளின் இருப்பை ஏற்பது...?

அதற்கான முயற்சியில் பல தளங்கள் இயங்க., கடவுளின் இருப்பை தர்க்கரீதியாக உணர்த்த இந்த தளத்திலும் சில ஆக்கங்கள் வரையப்பட்டுள்ளது. கடவுளை ஏற்க மறுப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதை ஒவ்வொரு ஆக்கத்திலும் தர்க்கரீதியாக சொல்லப்பட்டிருக்கிறது. அதன் கீழாக நாத்திக சகோதரர்களுடன் நடந்த விவாதமும் பின்னூட்டமாக சில பதிவுகளில் இருக்கிறது. நீங்களே பார்வையிடுங்கள். கண்ணியமாய் விவாதிக்க அல்லது கருத்து பரிமாறவும் நான் தயார் - இன்ஷா அல்லாஹ்

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;. (அல்குர்-ஆன் 04:01)
எனக்கு நாத்திகர்கள் எதிரிகளல்ல.. அவர்களும் என் சகோதரர்களே., இந்த இறைவசனம் அப்படித்தான் எனக்கு கற்றுக்கொடுத்து இருக்கிறது.
என் எதிர்ப்பெல்லாம் போலியாய் சமத்துவம் பேசும் நாத்திகத்திற்கே..!


உங்கள் உள்ளங்கள் உண்மையான தேடுதலில் செல்ல பிரார்த்திக்கும்...
உங்கள் சகோதரன்.
G u l a m 
இறை நாடினால் இனியும் சந்திப்போம்...


                                                             அல்லாஹ் நன்கு அறிந்தவன்



இஸ்லாம் -பெண்ணியம் குறித்த விமர்சனங்களுக்கு
விளக்கமாய்
சகோதரிகளின்
ஒர் புதிய வலைத்தளம்..!





   




  1. கடவுள் இருகின்றானா?
  2. கடவுள் படைப்பில் மனிதர்களிடையே ஏற்ற தாழ்வு ஏன்?
  3. கடவுளை அறிய ஐம்புலன்கள் போதுமா ?
  4. கடவுளில்லா உலகம்...?
  5. நிதியை மிஞ்சும் நீதி -யாரிடம்...?
  6. பதில் தருமா பரிணாமம்..?
  7. தேவையுடையவனா...இறைவன்?
  8. யார் கடவுள்...?
  9. மனித வாழ்வில் மனசாட்சி!
  10. பரிணாமத்தில் மனிதன்..?
  11. கடவுள் இருந்தால்..
  12. கடவுளும்- நாமும்
  13. பகுத்தறிவாளர்களின் கடவுள்..!
  14. "நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்"
  15. மரணம்:- பொய்க்கும் நாத்திகம்
  16. நடைமுறை வாழ்வில் நாத்திகத்தின் 'முரண்பாடு'..!
  17. 'வாழ்வை பூஜ்யமாக்கும்' மறுமைக்கோட்பாடு.
  18. கடவுளின் "பிறப்பும்.- இருப்பும்."
  19. இயற்கையின் தேடலா - தெரிவா கடவுள்..?
  20. கடவுள் ஏன் இருக்க வேண்டும்....?
  21. கடவுளை விமர்சிக்கும் ஓர் அறிவாளி?
  22. இறை வழிக்காட்டுதலும், மனித பின்பற்றுதலும் -எங்கே தவறு?
  23. கி.மு வில் கடவுள்!
  24. நாத்திகம் விரும்பும் இஸ்லாம்..!..?
  25. #கடவுள்# ஒரு மெகா தவறான புரிதல்!



                                     (நாத்திகர் மறுக்கும் இறைவன் நாடினால் இனியும் தொடரும்)

read more "ஓர் அழைப்பு!"

Wednesday, April 11, 2012

"பொய்யும், பொய் சார்ந்த இடமும்..."

                                                  ஓரிறையின் நற்பெயரால்

இன்று பொய் பேசுபவர்கள் யாரும் இல்லை என்பதை விட பொய் பேசாதவர்கள் நம்மில் யாரும் இல்லையேன்றே சொல்லலாம். விளையாட்டிற்காகவோ, பிறர் சிரிக்க வேண்டுமென்பதற்காகவே சொல்லும் பொய்யானது இந்த சமூகத்தின் பார்வையில் ஒரு பொழுதுப்போக்காகவே பேசப்படுகிறது. அதைவிட ஒரு ஆச்சரியமான விசயம் பொய் என்பது ஒரு சமூகத்தீமையாக கூட கணக்கில் எடுத்துக்கொள்ள படுவதில்லை.

உணவகங்களில், வர்த்த நிறுவனங்களில், தெருவோர கடைகளில், இப்படி மக்கள் கூடும் வியாபார தளங்களில் எல்லாம் இயல்பாகவே மக்கள் பொய் பேசும் நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. பொய் பேசுவது என்பது வேலை பெற நமது கூடுதல் தகுதியுடன் இன்று சேர்க்கப்பட்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை.

நம்மிடம் அரை மணி நேரம் ஒருவர் கூடுதலாக பேசினால் கூட அர்ஜன்ட்டா சின்ன வேலை இருக்கு என...அவரிடமிருந்து தப்பிப்பதற்கு பொய்யாக தான் ஒரு காரணத்தை தேர்ந்தெடுக்கிறோம். பொய் என்பதற்கு தற்கால அகராதியில் பொருள் தேடினால் சாமர்த்தியம் என்றே பொருள் மாற்றம் செய்யப்பட்டிருக்கும்.பொய் பேச மறுப்பவனை பிழைக்க தெரியாதவன் என்று கேலி பேசுகிறது இந்த சமூதாயம்.

இன்று பலரும் பிறர் மத்தியில் தமது ஹூரோயிஸம் பேசப்பட வேண்டும் என்பதற்காக பொய் பேசுவதை ஒரு ஆயுதமாக வைத்திருக்கிறோம். இந்த பழக்கம் பின்னாளில் நமக்குள் பல்வேறு தீய எண்ணங்களையும் உள்வாங்கிக்கொள்கிறது நெருப்பு விறகினை தின்பதுப்போல்...

இந்த சமூகத்திற்கு தீமையென்று என்று தெரியாமலே இந்த சமூகத்திற்கு எதிராய் ஒன்றை செய்துக்கொண்டிருக்கிறோமென்றால் அது பொய் என்று சொல்வதில் பொய்யில்லை.! சகோஸ்

பொய்யானது பிறர் மீது வெறுப்பையும், பொறாமையும், பிறரை மதிக்காமல் ஏளனம் செய்யும் நிலையையும் இயல்பாகவே நம்முள் ஏற்படுத்த வழிவகுக்கிறது. உதாரணம் சில சொல்லணும்னா.,

நம்மை கடக்கும் ஒருவர் கால் வழுக்கி சறுக்கினால் கூட ஒரு நமட்டு சிரிப்பிற்கு பின்னரே அவருக்கு உதவ விரைகிறோம். சாலையோர கூட்டத்தை பிளந்து என்னமோ ஏதோ என வேகமாய் முண்டியடித்து போய் பார்க்கும் போது ஏற்பட்ட விபத்து அவ்வளவு பெரிதொன்றுமில்லையென்றால் நமக்கு ஏற்படும் நிம்மதியை விட ஏமாற்றமே அதிகம்.

இப்படி பிறர் நலனில் கொள்ளவேண்டிய அக்கறையை கூட பொழுதுப்போக்காக்கும் இந்த கொடிய பழக்கத்தை நாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லையென்றால் பொய் என்னும் போதை நம் உள்ளத்தில் ஊடுறவ தொடங்கிவிட்டதென்ற பொருள்.



இப்படி தனி மனித ஒழுக்கத்திற்கும், பிறர் நலனுக்கும் கேடுவிளைவிக்கும் இத்தகைய செயலை விட்டொழிக்க தெளிவான எச்சரிக்கையே நபிகள் நாயகம் அவர்கள் மனிதக்குலம் முழுமைக்கும் மிக கவனமாக பிரகனப்படுத்தினார்கள்.


ஒருமுறை தோழர்கள் மத்தியில் நபியவர்கள்,


‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)' என்று கூறினோம்.‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்' என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)' என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் ‘அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?' என்று நினைக்கும் அளவிற்கு சொல்லிக்கொண்டிருந்தார்கள்.(1)

இறைவனுக்கு இணைவைக்கும் பெரும்பாவ பட்டியலில் பொய்யையும் இணைத்து இருக்கிறார்கள் என்றால் பொய் பேசுவது நம்மை எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்பதை நாம் நிதர்சனமாக உணர்ந்துக்கொள்ளலாம்

அடுத்து பாருங்கள்.
 ‎'நம்பிக்கையாளர் கோழையாக இருக்க இயலுமா?' என நபிகள் நாயகத்திடம் வினவப்பட்ட போது, அதற்கு 'ஆம்' என்றனர். 'கஞ்சனாக இருக்க இயலுமா?' என்றபோது அதற்கும் 'ஆம்' என்று பதிலளித்தனர். 'பொய்யனாக இருக்க இயலுமா?' என்று கேட்டபோது அதற்கு அவர்கள், 'இல்லை (இருக்க இயலாது)' என்று பதிலளித்தார்கள்.(2)


இறை நம்பிக்கையாளர் ஒருக்காலும் பொய் சொல்வராக இருக்க முடியாதென்பதை மிக தெளிவாக கோடிட்டு காட்டி அப்படி பொய் சொல்பவராக இருந்தால் அவரது இறை நம்பிக்கையானது அர்த்தமற்றது என்பதையும் பறை சாற்றுகிறது இந்நபிமொழி..

சிறு பருவத்தில் கற்பிக்கப்படும் எதுவும் அவர்களின் மனதில் ஆழமாக பதிய வாய்ப்பு அதிகம். அப்படி அவ்வயதில் விளையாட்டிற்காக சொல்லப்படும் பொய்களை கூட அங்கீகரிக்கவில்லை நபிகள் நாயகம் ஸல் அவர்கள்

ஒருமுறை எங்கள் வீட்டிற்கு நபி (ஸல்) அவர்கள் வருகை தந்தபோது என் தாயார் என்னை அழைத்து, ‘இங்கே வா! உனக்கு ஒரு பொருள் தருகின்றேன்!' என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார், ‘நீர் அவனுக்குத் எதனைத் தர விரும்புகின்றீர்?' என்று வினவினார்கள். அதற்கு என் தாயார், ‘நான் அவனுக்கு பேரித்தம் பழம் தர விரும்புகின்றேன் என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார் என் தாயாரிடம், ‘நீர் எதனையாவது அவனுக்குக் கொடுப்பதாக அழைத்து கொடுக்கவில்லையென்றால், உம் வினைப்பட்டியலில் இந்தப் பொய் எழுதப்பட்டுவிடும்' என்று கூறினார்கள்.(3)


பொய் என்பதின் அளவுக்கோல் என்னவென்பதை உண்மையாய் விளக்க இந்த ஒரு நபிமொழியே போதுமென்று நினைக்கிறேன்.

பொய் சொல்லுவியாடா... -ஏதோ போலி காரணம் சொல்லி காலையில் ஸ்கூலுக்கு போக மறுத்த சிறுவ(யது மக)னை அடித்து பொய்க்கு எதிரான சீர்திருத்தத்தை தொடங்கும் நாம்..
அப்பா வீட்டுல இல்லேன்னு சொல்லு கண்ணு... மொபைலில் கடன்காரனிடம் சொல்லப்பணிக்கும் மாலை பொழுகளில் ஏனோ மறக்க தான் செய்கிறோம்...

அந்நிலை மாற்றப்பட வேண்டுமென்றால்
மலையோ, மணலோ, காடோ, வயலோ, கடலோ இப்படி எதுவாக இருப்பீனும் அது

பொய்யும், பொய் சார்ந்த இடமும் ஆகாமல் பார்த்துக்கொண்டால் போதும்.!


                                             அல்லாஹ் நன்கு அறிந்தவன்


(1).அறிவிப்பவர்: ஸஃப்வான் இப்னு ஸலீம்
ஆதாரம்: முஅத்தா
(2).அறிவிப்பவர்: அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி)
ஆதாரம்: புகாரி.
(3).அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஆமிர் (ரலி)
ஆதாரம்: அபூதாவூத்.
read more ""பொய்யும், பொய் சார்ந்த இடமும்...""

Tuesday, March 27, 2012

நாத்திகம் விரும்பும் இஸ்லாம் ..! ?

                                              ஓரிறையின் நற்பெயரால்

நாத்திகர்கள் - 

பொதுவாக இந்த சமூகத்தில் இறை மறுப்பாளர்களாக அறிமுகப்படுத்தப்பட்டாலும் பதிவுலகில் இஸ்லாத்தை எதிர்ப்பதிலே அவர்கள் குறியீடு அதிகம் அறியப்படுகிறது. இது மிகைப்படுத்தப்பட்ட வாக்கியமல்ல. பதிவுலகில் அவர்கள் சார்ந்த கொள்கைகளை விளக்கி இடும் பதிவுகளை காட்டிலும் இஸ்லாத்தை சாடி வெளியிடும் ஆக்கங்களே மிக மிக அதிகம்!

  • பெண்ணடிமைத்தனம் ,
  • சம நீதியின்மை
  • ஆணாதிக்கம்
  • தீவிரவாதம்
  • மரண தண்டனைகள்
  • அடிமை வாழ்வு

இவைகள் போல பல இஸ்லாத்தோடு இணைக்கப்பட்டு பெரும்பாலும் விமர்சிக்கப்படுகிறது. இன்னும் சிலர் வேத வரிகளுக்கும் தூதர் மொழிகளுக்கும் தன்னிலை விளக்கம் அளித்து அதை பொதுவாக்கி விமர்சிக்கிறார்கள். இன்னும் ஆச்சரியம்! ஆரம்ப நாட்களில் கேட்கப்பட்ட அதே புரிதலும் அதே கேள்விகளும் தான் இன்றளவும் விமர்சனங்களாக இணையத்தில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றது. பதில்கள் தெளிவாய் தரப்பட்ட பின்னரும்...

விளக்கங்கள் அளிக்கப்பட்டால் அவை கண்டிப்பாய் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பது அவசியமில்லை. மாற்றுக்கருத்து தாரளமாய் இருக்கலாம், அது நம் ஆய்வின் சரியான திசை நோக்க பயன்படும். ஆனால் நாத்திகர்களுக்கோ அந்த விளக்கங்கள் என்ன சொல்கிறது என்று பார்ப்பதற்கு கூட மனம் வருவதில்லை. இறுதிவரை அவர்களின் கேள்விகள் எங்கேயும் கேள்விகளாகவே மட்டுமே இருக்கப்பட வேண்டும் என்பதே எண்ணமாக இருக்கும் போலும்!

ஆனால் பாருங்கள் இஸ்லாத்தை கடுமையாக விமர்சிக்கிறார்கள் - அது ஆணாதிக்க மதம் வேண்டாம் என்கிறார்கள். சரி ஒரு வாதத்திற்கு இதை ஏற்றுக்கொண்டாலும் எவை மனிதக்குல முழுமைக்கும் தேவை அவை எப்படி பின்பற்றப்பட வேண்டும் என்பதை விளக்கி எங்கேயும் பதிவுகள் இடுவதில்லை. அதுக்குறித்து விவாதிக்கவும் அழைப்பு விடுப்பதில்லை. 

எவரும் தாம் ஏற்ற கொள்கை கோட்பாடுகளை விளக்கி அதன் பின்பற்றும் நடைமுறை சாத்தியக்கூறுகளை பொதுவில் முன்மொழிவதில்லை. சமூகத்திற்கு நலன் பயக்கும் பெயரில் ஆக்கங்கள் சில இட்டாலும், இஸ்லாம் என்ற ஒற்றைப்புள்ளியை மையப்படுத்தியே அவர்களது பெரும்பாலான கட்டுரைகள் இருக்கின்றன. ஆக என்ன சொல்லவருகிறார்கள் அவர்கள்...?

தம் கொள்கை எப்படியும் இருக்கலாம். ஆனால் இஸ்லாம் மட்டும் விமர்சிக்கப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும் -சமூகத்தின் மீது அக்கறைக்கொண்டவர்கள் நாத்திகர்களென்றால் கொஞ்சம் யோசிக்கவேண்டும் அவர்கள்.

தமிழில் நாத்திகம் - பரிணாமத்தை எதிர்த்து பதிவிடும் முஸ்லிம் தளங்கள் மிகக்குறைவு. (அப்படி விமர்சிக்கும் தளங்களில் கூட கண்ணியமான முறையில் தான் விமர்சனம் செய்யப்படுகிறது.) முஸ்லிம் பதிவர்கள் பெரும்பாலும் இஸ்லாம் சார்ந்த கருத்துக்களை மையப்படுத்தி விளக்கியே மக்களை அதன் பால் அழைக்கிறார்கள். 

ஆக நாத்திகத்தை எதிர்க்கமாலும் முஸ்லிம் பதிவர்களால் தங்களின் நிலைப்பாட்டை இணையத்தில் தக்கவைத்துக்கொள்ள முடியும். 
ஆனால் இஸ்லாத்தை விமர்சிக்காமல் எந்த நாத்திக பதிவராலும் தம்மை பதிவுலகில் தக்கவைத்து கொள்ள முடியவில்லையென்பதை தான் மேற்கண்ட செயல்கள் காட்டுகிறது. 

இதற்கு என்ன காரணம்...? 

ஆயிரமாயிரம் கொள்கைகளும் கோட்பாடுகளும் நாத்திகத்திற்கு எதிராய் உலகில் இருக்க இஸ்லாம் மட்டும் ஏன் பிரதானமாக விமர்சிக்கப்படுகிறது?

பதிவின் மையக் கருத்தே இது தான்.. இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்

                


இங்குள்ள எந்த நாத்திகரும்

  • வானமும்- பூமியும் படைக்கப்பட்டதன் நிலையறிந்து இவை கடவுளால் படைக்கப்பட வாய்ப்பில்லையென உணர்ந்து மதத்திலிருந்து வெளியேறினார்களா..? இல்லை., 
  • காற்றும், மழையும், பிறப்பும், இறப்பும் உண்டாக்க ஒரு கடவுள் தேவையில்லையென்பதை அறிவியல் அளவுகோலில் துல்லியமாக அளந்து கடவுளை மறுத்தார்களா...? என்றால் அதுவும் இல்லை என்பதே உண்மையான பதிலாக இருக்க முடியும் 
பின் எப்படி மத வெளியேற்றம்...? 

எந்த ஒரு மனிதனின் இயல்பு நிலை மாற்றத்திற்கு முதன்மை காரணம் வளரும் சூழலில் பயிற்றுவிக்கப்படும் கருத்துக்கள். அக்காலங்களில் பயிற்றுவிக்கப்படும் எதுவும் பிற்கால செயல்களில் பிரதிபலிக்க நூறு சதவீகித வாய்ப்புள்ளது. அதனடிப்படையில் போதிய அறிவின்றி தவறாகவோ அல்லது புரிதலற்ற முறையிலோ தனக்கு பயிற்றுவிக்கப்படும் கடவுள் கொள்கைகளை உண்மையென ஏற்று பின்னாளில் அவற்றை நிதர்சன வாழ்வில் பொருத்தும் போது நிச்சயமாக அது தனதறிவுக்கு தவறாக தான் காட்டும். அத்தோடு தன் நிலையில் தலைக்கீழ் மாற்றத்தை தான் ஏற்படுத்தும்.

அப்படி பயிற்றுவிக்கப்படுவது இஸ்லாமாக இருந்தாலும் சரியே... அதனால் தான் இணைய உலவிகளில் இஸ்லாத்தை விமர்சிக்கும் அனேகர் சொல்வது நான் முன்னாள் முஸ்லிம் என்று... அவர்களின் இம்மாற்றத்திற்கு காரணம் தனக்கு தவறாக விளக்கப்பட்ட இஸ்லாமே தவிர நபிகளார் விளக்கிய இஸ்லாமல்ல., 

பின்னாளில் பொதுவில் வந்து அறிவியலாக்க முயலும் பரிணாமத்தையும், கடவுள் குறித்த (தவறாக கற்றுணர்ந்த) தர்க்கரீதியான வாதங்களையும் தோதாக வளைத்து தம் மத வெளியேற்றத்திற்கு இதுவே நிலையான காரணம் என சொல்கிறார்கள். ஆனால் இன்று வரையிலும் தங்களின் திருமணம், மற்றும் பொது நிகழ்வுகளை ஏதாவது ஒரு மதம் சார்ந்த அடிப்படையிலே செய்து வருகின்றனர். 

அவ்வபோது பொதுவில் எங்கும் கடவுள் இல்லையென்று சொல்லிக்கொண்டே எல்லாம் கடவுள் என்ற கொள்கைக் கொண்டவர்களுக்கு பண்டிகை கால வாழ்த்து செய்திகளை பின்னூட்டமாய் பரிமாறுகிறார்கள். இது எதுமாதிரியான கொள்கை பிடிப்போ தெரியவில்லை.? ஆனால் இஸ்லாத்தை மட்டும் தொடர்ந்து தாக்கி எழுத பட வேண்டும் ? ஏன்?

 உளவியல் ரீதியாக சிந்தித்தால் எளிதாக உணரலாம்.

நாத்திகத்திற்கு நேர் எதிர் கொள்கை ஒன்று உலகில் உண்டென்றால் அது இஸ்லாம் மட்டுமே! 

பொதுவாக மதங்கள், கடவுள் உண்டென்பதை உறுதியாக நம்பினாலும், கடவுளை வணங்கப்பட வேண்டிய ஒரு நிலையில் மட்டுமே வைத்து பார்க்கிறது. கடவுளின் தலையீடு பூஜை, புனஷ்காரம் போன்ற செயல்களிலோ, பண்டிகை தினங்களிலோ அல்லது விழாக்காலங்களிலோ மட்டுமே பிரதான படுத்தப்படுகிறது.      
  
நடைமுறை வாழ்வின் பெரும்பாலான செயல்களுக்கு தங்களின் சுய விருப்பு, வெறுப்பின் அடிப்படையில் எதையும் தீர்மானிக்கிறார்கள். கடவுளின் கட்டளை ஏற்று நடப்பது நடைமுறைக்கு சாத்தியமில்லையென்பதை மறைமுகமாக ஏற்றும் கொள்கிறார்கள். இன்று ஒரு மதம் சார்ந்த இருவர் பேசிக்கொள்ளும் போது கடவுள் குறித்தோ அல்லது அவனது கட்டளைக்குறித்தோ பேசுவதும் இல்லை, விவாதிப்பதும் இல்லை. கடவுளின் தாக்கம் அவர்களின் செய்கைகளில் வெளிப்படுவது மிக மிக குறைந்தே இருக்கிறது.

இந்நிலை நாத்திகத்திற்கு மிக வசதியாய் போயிற்று மதம் உருவாக்கிய கடவுள்களை விமர்சிக்க வேண்டிய அவசியமும் இல்லை. அப்படி விமர்சித்தாலும் அவற்றை அவர்கள் பொருட்டாய் கொள்வதும் இல்லை.

ஆனால் இஸ்லாம் மட்டுமே வணக்க வழிப்பாட்டோடு கடவுளை ஒரங்கட்டாமல் எந்த ஒரு காரியமெனிலும் அதற்கு கடவுளின் ஓப்புதலை பொருத்தி பார்க்க சொல்கிறது. சரியென்றால் அவற்றை பின்பற்ற சொல்கிறது. தவறேன்றால் விட்டு விலக சொல்கிறது. சர்வ சாதரணமாக சந்திக்கும் தருணங்களில் கூட சலாத்தினையே முதலில் சொல்ல பணிக்கிறது. கல்யாண பத்திரிக்கையில் மட்டும் கடவுள் பெயர் பொதிக்காமல் காலம் முழுவதுமே கடவுளின் தலையீட்டை அவசியமாக்குகிறது.

இப்படி இஸ்லாம் நாத்திகத்திற்கு எதிராய் தம் இருப்பை மௌனத்தால் முன்னிருத்துவதால் நாத்திகத்தின் வெறுப்பும் எதிர்ப்பும் இஸ்லாத்தின் மீது இயல்பாகவே திரும்புகிறது. தமது கொள்கைகளை கட்டிக்காக்க வேண்டிய தருணத்திற்கு நாத்திகம் தள்ளப்படுகிறது. எவ்வளவு பெரிதாய் தம் கோட்டை நாத்திகம் வரைந்தாலும் அதையும் தாண்டி இஸ்லாமிய கோடு பயணிப்பதை நாத்திகம் நிதர்சனமாக உணர்கிறது. 

 இந்நிலை மாற ஒரே வழி எதிரில் இருக்கும் கோட்டை சிறிதாக்க வேண்டும் அதற்கு அக்கோட்டை அழிக்கவேண்டும் மக்களின் மனதில் நாத்திகம் உயர்ந்த கொள்கையாக எண்ணப்பட வேண்டுமானால் அதற்கு எதிராக இருக்கும் இஸ்லாம் குறைப்படுத்த படவேண்டும். ஆம்! அதைத்தான் நாத்திகம் இப்போது செய்ய முயன்றுக் கொண்டிருக்கிறது 

ஆனால்...
பெயரளவிற்கு மட்டும் கடவுளை ஏற்று...
முஹம்மதை (ஸல்) முன்னமே மறந்து... 
வெள்ளிக்கிழமை மட்டுமே இறை தொழுது...
பொழுது போகா விட்டால் மட்டுமே மார்க்கம் பேசி...
எந்த கொள்கையும் தம் சொந்த கொள்கையாக நிறுவி
போலி சமத்துவம் பேச
முஸ்லிம்கள் கற்றுக்கொண்டால்

விமர்சனம் ஏதுமின்றி
பொதுவில் கூட
நாத்திகம் விரும்பும் இஸ்லாம்...! இணையமெங்கும் காட்சியளிக்கும்


பிறச்சேர்க்கை:  இந்த தளம் Blog spot லிருந்து dot Com ற்கு மாறி இருப்பதால் இப்பதிவை மீண்டும் புதிதாக தமிழ்மணம் திரட்டி உள்ளது. ஓட்டு போட்டவர்கள் (குறிப்பாய் மைனஸ் ஓட்டுகளை )மீண்டுமொருமுறை போட்டுக்கொள்ளவும் 

                                               அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "நாத்திகம் விரும்பும் இஸ்லாம் ..! ?"

Tuesday, March 13, 2012

தீவிரவாதமும், முஸ்லிம்களும்!

                                                  ஓரிறையின் நற்பெயரால்

தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உலகம் முழுக்க இம்மாதிரியான சம்பவங்களை நடத்தியவர்களை 'தவறாக வழிநடத்தப்பட்டவர்கள்' என்றே வரலாறு பதிகின்றது. அவர்கள் சார்ந்த கொள்கையை, மதத்தை காரணமாக காட்டியதில்லை. ஆனால் இஸ்லாம் என்று வரும்போது மட்டும், இஸ்லாம் சொல்லாத ஒன்றை சிலர் செய்யும் போது, அதற்கு மதச்சாயம் பூசி பார்க்கப்படுகின்றது.

எல்லாருக்கும் உலகம் எடுத்த அளவுக்கோலை முஸ்லிம்கள் என்று சொல்லப்படுவர்கள் விசயத்திலும் இவ்வுலகம் கடைபிடித்திருக்குமானால் இப்பதிவிற்கு அவசியம் இருந்திருக்காது.

1. அறிவியலை துணையாகக்கொண்டு லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தான் ஹிட்லர்,
2. FBI தகவல்படி, அமெரிக்காவில் 94% தீவிரவாத தாக்குதலை நடத்தியது முஸ்லிம் பெயர் தாங்கிகள் அல்லாதவர்களே.
3. போர் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவித்த இலங்கை அரசாங்கமும், புலிகளும்
4. நார்வே நாட்டில் சமீபத்தில் நடந்த தாக்குதலில், இனவெறியின் உச்சத்தில் பல மக்களை கொன்றுக்குவித்த Anders Behring Breivik...etc etc..

இப்படி சொல்லிகொண்டே போகலாம். ஆனால் இவற்றிற்கு அவர்கள் சார்ந்த கொள்கையை நோக்கி யாரும் கை நீட்டுவதில்லை.

தீவிரவாதம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்களை சார்ந்தது அல்ல என்று உண்மை இருக்க, சில ஊடகங்களோ,

எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல...
ஆனால்
எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களே..!

- என்று கூறுகின்றன.

மேற்கத்திய ஊடகங்களால் மக்கள் மத்தியில் 
திரும்ப திரும்ப பரப்படுகின்ற ஒரு விஷமப்பிரச்சாரம் இது. 
உலகில் தீவிரவாதம் என்றாலே முஸ்லிம்களை மாத்திரம் ஒப்பு நோக்கி அதில் பொருத்தும் மன்பான்மைக்கு என்ன காரணம்..?
தீவிரவாதம் முஸ்லிம்களுக்கு குலச்சொத்தா என்ன ...?  

இன்று ஏகாத்திய நாடுகளின் ஊடங்களில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக காட்டும் இந்த நிலை 19ம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஏற்படுத்தப்பட்ட மாயை. ஏனெனில் 19ம் நூற்றாண்டுகளின் ஆவணச்சான்றுகளை ஆராய்ந்தால் எந்த ஒரு பயங்கவாத செயலும் முஸ்லிம்களால் நடத்தப்படவே இல்லை. அல்லது முஸ்லிம்கள் நடத்திய அப்படிப்பட்ட பயங்கரவாத செயல்கள் காண்பது அரிது.,

இதோ உங்கள் முன் கடந்த நூற்றாண்டின் காட்சிகளின் சாட்சிகள் நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள் இங்கு யார் தீவிரவாதிகள் என்று..!

பயங்கரவாதம்! இந்த சொல் உருவாக்கப்பட காரணமாக இருந்த நிகழ்ச்சியும் நபரும்...

1790 ம் ஆண்டு ஏற்பட்ட பிரஞ்சுப்புரட்சியின் போது உருவாக்கப்பட்ட சொல் இது. 1793 மற்றும் 1794 ஆண்டுகளில் ஆட்சிச்செய்த மேக்ஸிமிலின் ரோப்ஸியர் ஆட்சியை பயங்கரவாத ஆட்சியாக இவ்வுலகம் வர்ணித்தது. அவர் சுமார் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் தலையை துண்டித்தார். வராலற்றுக்குறிப்பில் இன்னும் விளக்கமாக பார்த்தால்...

சுமார் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களை கைது செய்த அவர்
அதில் சுமார் 40000 பேருக்கு மரண தண்டனை வழங்கினார்.
இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான நபர்களை நாடு கடத்தினார்.
மீதமுள்ள இரண்டு இலட்ச பேர்களை சித்ரவதை செய்து பசி, பட்டினி போட்டு சிறையிலேயே இறக்க செய்தார்.

1881 ம் ஆண்டு ரஷ்யாவின் சர் அலெக்சாண்டர் II வெடிக்குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொன்றது இக்னல் ஹைனிவிக்கி என்பவன்.

1886 ல் சிகாகோ நகரில் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் தொழிலாளர்கள் பேரணியில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த வெடிக்குண்டு சம்பவத்தை நிகழ்த்தியது எட்டு அனார்கிஸ்ட்கள்.

1901 ம் ஆண்டு செப்டம்பர் 6 அமெரிக்க ஜனாதிபதி வில்லியம் மெக்கன்லி அவரது அதிகார எதிர்ப்பு குழுவிலுள்ள லியோன் கோல்கோஸ் என்பவனால் சுடப்பட்டார்.

1910 ஆம் ஆண்டு அக்டோபர் 1 லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு டைம் பத்திரிக்கை வளாகத்தில் நிகழ்ந்தது. இந்த சம்பவத்திற்கு காரணம் ஜேம்ஸ் மற்றும் ஜோஸப். இருவருமே கிறித்துவர்கள்.

1914 ஜூன் 28ல் பிரான்ஸ்சில் உள்ள சர்வஜோவில் ஆஸ்திரியா இளவரசர் ஆர்க்டூக் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்படுகிறார்கள். 
முதல் உலகப்போர் நிகழ இதுவும் ஒரு காரணம்!
இக்கொலைகளுக்கு காரணமானவர்கள் பொஸினியா நாட்டின் யங் பொஸினியா அமைப்பை சார்ந்த செர்பியர்கள்.

1925 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 பல்கேரியா நாட்டின் தலைநகர் சொஃபாயாவில் செயிண்ட் நெடிலியா சர்ச்சில் ஒரு வெடிக்குண்டு தாக்குதலில் 150ம் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 500க்கும் அதிகமானோர் காயமுற்றனர். பல்கேரியாவில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் சம்பவம் இது தான். இந்த ஈனச்செயலை நிகழ்த்தியது பல்கேரியா நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி!

1934 அக்டோபர் 9 யூகோஸ்லோவியா மன்னர் முதலாம் அலெக்சாண்டர் லாடா ஜார்ஜிஃப் என்பவனால் கொலை செய்யப்பட்டார்.

முதல்முதலில் அமெரிக்க விமானம் 1961 மே 1 ம் தேதி ரமிரேஸ் ஆர்டிஸ் என்பவனால் கியுபாவிற்கு கடத்தப்பட்டது.
இது எத்தனை பேருக்கு தெரியும்..?

1968 ஆகஸ்ட் 28ல் கௌதமாலாவில் அமெரிக்கத்தூதர் முஸ்லிம் அல்லாதவனால் தான் கொலை செய்யப்பட்டார்.
1969 ஜூலை 30ல் ஜப்பானின் அமெரிக்கத்தூதர் ஒரு ஜப்பானியராலேயே குத்திக்கொலை செய்யப்பட்டார். அதே ஆண்டு செப்டம்பர் 3 அன்று பிரேசிலின் அமெரிக்கத்தூதரும் கடத்தப்பட்டார்.

1995 ஆண்டு ஏப்ரல் 19ல் பிரபலமாக அறியப்பட்ட ஒக்லஹாமா குண்டு வெடிப்பில் வாகனத்தில் குண்டு வைத்து பெடரல் கட்டிடத்தில் மோத செய்த போது சுமார் 166 பேர்கள் கொல்லப்பட்டனர். பல நூறு பேர்கள் காயமுற்றனர். மத்திய கிழக்கு நாடுகளின் சதியென ஊகிக்கப்பட்ட இச்சம்பவம் பின்னாளில் வலது சாரி இயக்கத்தவர்களால் நடத்தப்பட்டதை கண்டறிந்தனர். இச்சம்பவம் திமிதி மற்றும் டெர்ரி என்ற இருவரின் தலைமையில் நடத்தப்பட்டது. இவர்கள் இருவரும் கிறித்துவர்கள். 

இரண்டாம் உலகப்போருக்கு பின் 1941 லிருந்து 1948 வரை சுமார் 259 பயங்கரவாத தாக்குதல்கள் இக்னோ, ஸ்டெய்ன் கேங், ஹெகனா போன்ற பல யூத தீவிரவாத இயக்கங்களால் நடத்தப்பட்டது.

அதில் பிரபலமான ஒரு தாக்குதல் 1946 ஜூலை 22ல் கிங் டேவிட் ஹோட்டலில் நடைப்பெற்ற குண்டு வெடிப்பு.
நடத்தியது இக்னோ அமைப்பின் மெனசெம் பிகன். பல நாடுகளை சேர்ந்த அப்பாவி மக்கள் 91 பேர் கொல்லப்பட்டனர். இதன் விளைவால் மெனசெம் பிகன் உலகின் நம்பர் ஒன் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டார். பின்னாளிலோ இஸ்ரேல் நாட்டின் பிரதமர் அவர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமைதிக்கான நோபல் பரிசும் பெறுகிறார்.!

1968 முதல் 1992 வரை ஜெர்மனியில் படார் மெனாஃப்கேங் அமைப்பு பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்றது.
அதே சமயத்தில் இத்தாலியிலும் ரெட் பிரிக்கேட்ஸ் எனும் குழு அப்பாவிகளை கொன்றதோடு அப்போதைய பிரதமர் அல்டோ மோரோவையும் கடத்தி சென்று 55 நாட்களுக்கு பிறகு கொன்றது

நாமறிந்த ஒன்று தான் ஐப்பானின் சிவப்புப்படை மற்றும் ஓம் சிர்க் எனப்படும் சின்ரிக்கோ போன்ற புத்த தீவிரவாத அமைப்புகள்.
1995 மார்ச் 20ல் ஓம் சிரிக் புத்த தீவிரவாதிகள் டோக்யோ நகரின் சுரங்கப்பாதையில் விஷவாயுவை செலுத்தினார்கள். நல்லவேளை 12 நபர்கள் மட்டுமே இறந்தார்கள். ஆனால் 5700க்கும் மேற்பட்டோருக்கு உடலியல் பாதிப்பு ஏற்பட்டது.

பிரிட்டனில் சுமார் நூறு வருடங்களும் மேலாக I R A (ஜரிஸ் குடியரசுப்படை) தீவிர வாத தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பில் இருப்பவர்கள் கத்தோலிக்க கிறித்துவர்கள்

  • 1972ஆண்டு மட்டும் இவ்வமைப்பு மூன்று குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது.
  • 1974 ல் கில்போட்பப்பில் நடத்திய வெடிக்குண்டு தாக்குதலில் 5 பேர் இறந்தார்கள் மேலும் 44 பேர் காயம் அடைந்தார்கள்.அதே ஆண்டு பர்மிங்ஹாம்பப் குண்டு வெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர். 182 பேர் காயம் அடைந்தார்கள்.
  • 1996 லண்டனில் நடந்த குண்டு வெடிப்பில் இருவர் இறக்க நூறுக்கும் மேற்பட்டோர் காயமுற்றார்கள். அதே ஆண்டு மேன்செஸ்டரில் வணிக வளாக தாக்குதலில் 200க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.
  • 1998 ஆகஸ்ட் 1ல் பேன் பிரிட்ஜ் குண்டு வெடிப்பில் சுமார் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
  • பதினைந்து நாட்களுக்கு பிறகு ஆகஸ்ட் 15ல் ஓமேக் எனும் இடத்தில் 500 பவுண்டு எடைக்கொண்ட வெடிக்குண்டை காரில் நிரப்பி வெடிக்க செய்ததில் 29 பேர் கொல்லப்பட்டு 330 பேர் படுகாயமுற்றனர். 2001 மார்ச் 4ல் பி,பி.ஸி கட்டிடத்தை தகர்த்தவர்களும் இதே I R A தான்.

மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் யாரும் முஸ்லிம்கள் இல்லை..!

இலண்டனில் நூறு வருடங்களுக்கு மேலாக தீவிரவாத தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது I R A  அமைப்பு

ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் E T A தீவிரவாத அமைப்பு 

உகாண்டாவில் LORD'S சேல்வேஷன் ஆர்மி

மற்ற அனைத்தையும் விட இலங்கையின் L T T E உலகறிந்த தீவிர வாத அமைப்பு

                      

இது மட்டுமா நம் இந்தியாவில் கூட 

பஞ்சாப்பில் பிரிந்தன் வாலா - சீக்கிய தீவிரவாத அமைப்பு பொற்கோவில் சம்பவத்திற்கு பதிலடி பெயரில் பல தாக்குதலை நடத்தியுள்ளது.

திரிபுராவில் A T T F  மற்றும் N L F T போன்ற பலம் வாய்ந்த தீவிர வாத அமைப்புகள் பல தாக்குதலை நடத்தி வருகிறது.

அஸ்ஸாமில் 1900- 2006 வரை உல்பா தீவிரவாதிகள் 749 பயங்கரவாத தாக்குதலை நடத்தியுள்ளது.


# ஆர்.எஸ்.எஸ் எனும் காவி தீவிரவாதம். இது இந்தியாவில் மட்டுமில்லது வெளிநாடுகளிலும் வேறு சில பெயர்களால் இயங்குகின்றது. மியான்மரில் சனதன் தர்ம சுயம்சேவாக் சங்கம் (எஸ்.டி.எஸ்.எஸ்), மொரிசியசில் மொரிசியஸ் சுயம்சேவாக் சங்கம் (எம்.எஸ்.எஸ்) மற்றும் சில இடங்களில் இந்து சுயம்சேவாக் சங்கம் ஆக இயங்குகின்றது. .

      மாகாத்மா காந்தி ஜனவரி 30, 1948 அன்று ஒளிவு மறைவின்றி நாதுராம் கோட்சே இந்து மகா சபை என்னும ஆர் எஸ் எஸ் அமைப்பை சார்ந்தவனால் சுட்டுக்கொல்லப்பட்டது நம் எல்லோருக்கும் நினைவிருக்கும்.நமது தேச தந்தையை கொன்ற பெருமை இந்த இயக்கத்தையே சாரும். அதுவும் எப்படி பாருங்கள்.

1934 ல் இருந்து தொடர்ந்து 5 முறை அவரை கொலை செய்ய முயன்று தோற்றதின் விளைவாக 6 வது முறையாக இந்த கொடூர நிகழ்வு நடந்தேறியது. இந்த இயக்கம் மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டது. 1948 காந்தி படுகொலை செய்யப்பட்ட பொழுது, அவசர நிலை (1975-77) அமலில் இருந்தபொழுதும் மற்றும் 1992 ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபொழுதும் தடைசெய்யப்பட்டிருந்தது.

 சிவசேனா...  சொல்லவே தேவையில்லை.,


பால் தாக்கரேயின் முழக்கம் (?) பற்றி ஏஷியா டைம்ஸ் இப்படி அறிவித்தது:
"இஸ்லாமியர்களுடன் நேருக்கு நேராக மோதுவதற்கு" "தொல்லை கொடுக்கும் இஸ்லாமியர்கள் நாட்டிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும்... நாலு கோடி [நாற்பது மில்லியன்] பங்களாதேஷ் இஸ்லாமியர்களை உதைத்துத் துரத்துங்கள்; அதன் பிறகு நாடு பாதுகாப்புறுதி பெறும்" என்று சிவ சேனைத் தலைவர் கூறினார். இந்தியாவை "இந்து ராஜ்யம்" (இந்து நாடு) என்று அழைக்கத் தொடங்குமாறு இந்துக்களை வலியுறுத்திய அவர், "நமது மதம் (இந்து மதம்) மட்டுமே இங்கு மதிக்கப்பட வேண்டும்" என்றும் "மற்ற மதத்தவர்களை நாம் கவனித்துக் கொள்வோம்" என்றும் கூறினார்.
சங்பரிவார்கள் அமைப்பு இன்னும் ஒரு படி மேல போயி ஒரு Hindu Unity எனும் தளம் உருவாக்கி கொல்லப்பட வேண்டியவர்கள் குறித்த ஒரு block list ஐ தயாரித்து வைத்து இருக்கிறது.,

நக்ஸலைட் அல்லது மாவோயிஸ்ட்கள் - 
2000 முதல் 2006 வரை நேபாளில் மட்டும் 99 தீவிரவாத தாக்குதல் நடத்தியுள்ளார்கள் 2009 ஆம் ஆண்டின் படி, இந்தியா முழுவதுமுள்ள 21 மாநிலங்களில் உள்ள 220 மாவட்டங்களில், அதாவது இந்தியாவின் நிலப்பரப்பில் ஏறத்தாழ 40 சதவீதப் பகுதிகளில் நக்சலைட்டுகள் இயங்கி வருகின்றனர் அத்தோடு இந்திய நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு அவர்களின் தாக்குதலுக்கும் இரையாகி உள்ளது. (காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை விட இது மிக அதிகம்)

எனவே தான் மாவோயிஸ்ட் அல்லது நக்சலைட் பிரிவினையாளர்கள் ஏற்படுத்தும் வன்முறையானது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறி இருக்கிறார்.


இப்படி வரலாற்றில் முஸ்லிம்களால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களை விட அஃதில்லாதவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களே அதிகம். இன்று காஷ்மீரையும் தாலிபான்களை மட்டுமே தீவிரவாதிகளாக பார்க்கும் நபர்களுக்கு மேற்கண்ட சம்பவங்கள் வெறும் வரலாற்று செய்திகளாக தான் நினைவில் இருக்கும்.

இறுதியாக

60 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்களை கொன்ற ஹிட்லர்
இந்திய பிரதமர் இந்திரகாந்தியை கொன்ற அவர் பாதுகாப்பு படை வீரர்கள்
தேச தந்தை காந்தியை கொன்ற கோட்சே...  
யாரும் முஸ்லிம்கள் இல்லை

இக்னோவை யூத தீவிரவாதிகள் என்றோ, 
I R A வை கத்தோலிக்க தீவிரவாதிகள் என்றோ, 
மாவேயிஸ்ட்டுகளை கம்யூனிஷ தீவிரவாதிகள் என்றோ, 
உல்பாவை -இந்து தீவிரவாதிகள் என்றோ, 
பிரிந்தன் வாலா வை - சீக்கிய தீவிரவாதிகள் என்றோ, 
L T T E  ஐ - தமிழ் தீவிரவாதிகள் என்றோ, 
ஓம் சின்ரிக்கோவை - புத்த தீவிரவாதிகள் என்றோ, 
A T T F ஐ- கிறித்துவ தீவிரவாதிகள் என்றோ,

யாரும் அவர்கள் சார்ந்த மதம் அல்லது கொள்கைகளை முன்வைத்து அழைப்பதில்லை. ஆனால் முஸ்லிம்கள் செய்யும் செயல்களுக்கு மட்டும் இஸ்லாமிய பெயர் இணைத்து முன்மொழியப்படுவது எந்த விதத்தில் நியாயம்..? 

முஸ்லிம்கள் தவறுகள் செய்தால் அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று தான். அச்செயல் உண்மையென இருந்தால் அவர்களுக்கு தண்டனையும் கொடுக்கலாம் ஏனெனில் இஸ்லாம் இதைப்போன்ற தீவிரவாத செயல்களை ஆதாரிக்கவும் இல்லை -அங்கீகரிக்கவும் இல்லை. 

ஆனால் மேற்கத்திய ஊடகங்கள் கொடுக்கும் செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு தொப்பியையும்- தாடியையும் தீவிரவாதத்தின் அடையாளமாக்க வேண்டாம் என்பதே என் போன்றோர்களின் வேண்டுகோள்!

                                                 அல்லாஹ் மிக்க அறிந்தவன்


Our sincere thanks to :
Dr.ZAHIR NAIK &
இத்திஹாதுல் இஹ்வானில் முஸ்லிமின் (IIM)

REFERENCE :
  
                   
read more "தீவிரவாதமும், முஸ்லிம்களும்!"

Wednesday, February 29, 2012

எதை தீர்மானிக்க வேண்டும்- "நாம்" ?

                                         ஓரிறையின் நற்பெயரால்

பிறர் செய்யும் செயல்கள் அங்கீகாரம் பெறும் போது பாராட்டும் நாம் அந்த செயலை தொடர்வதற்கு சற்று யோசிக்கதான் செய்கிறோம்.

இந்த சமூகம் நம்மை எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ற நினைவு அல்லது பார்த்துக்கொண்டிருப்பதாக ஓர் உணர்வு நம் உள்ளத்தில் ஆழ பதிந்திருப்பதே ஒருசெயலை செய்வதற்கும் அல்லது செய்ய மறுப்பதற்கும் பொதுவான காரணமாக இருக்கிறது.

 அட! நமது விருப்பு-வெறுப்புகளை தீர்மானிப்பதில் கூட அடுத்தவரின் விமர்சனமும் முக்கிய நிலையில் இருப்பது தான் ஆச்சரியமான உண்மை.
இதற்கு பெரிய உதாரணமெல்லாம் தேவையில்லை.

கடைக்கு போயி ஒரு சட்டை எடுப்பதாக இருந்தால் கூட அது நம் உடலுக்கு பொருத்தமாக இருக்கிறதா... நமக்கு பிடித்த கலரில் இருக்கிறதா என்று பார்ப்பதை விட நாளை அதை உடுத்தும் போது எதாவது ஒரு காரணம் சொல்லி பிறர் நம்மை கேலி பேசி விட கூடாது என்ற எண்ணத்திலே பெரும்பாலும் தேர்ந்தேடுக்கிறோம்.

பாருங்கள்... சாதாரண ஒரு சட்டையை தீர்மானிப்பதில் கூட நமது எண்ணங்கள் வசதிகளை விட இந்த உலகத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறோமென்றால் ஏனைய முக்கிய விசயங்கள் குறித்து என்ன சொல்வது..?

இப்படியான நம் மன நிலைக்கு என்ன காரணம்?
எந்த சந்தர்பத்திலும் நமது தீர்மானிப்பு பிறரால் தவறு என சொல்லப்பட்டு விடக்கூடாது என்ற அச்ச உணர்வும், நாம் எடுக்கும் முடிவுகள் எப்போதும் வெற்றி பெற்றதாக இருக்க வேண்டும் என்ற ஒரு வறட்டு எண்ணமும் எப்போதும் நம்மை ஆட்கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட எண்ணங்களால் நமக்கு நிலையாக எந்த பயனும் இல்லை
முதலில், எப்போதும் வெற்றி என்ற எண்ணம் தேவையை இல்லாதது. வெற்றி என்பதும் தோல்வி என்பதும் நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் ஒன்றல்ல. எப்போதும் வெற்றியாய் தேர்ந்தெடுத்துக்கொள்ள!

 மாறாக இந்த சமூகத்தால் நமக்கு வழங்கப்படும் ஒன்று. சென்ற முறை வெற்றி என்ற சமூகம் இந்த முறை தோல்வி என்கிறது. அதே சமூகம் அடுத்த முறை வெற்றி அல்லது தோல்வியை கொடுக்கும்.

நம்மை பொருத்தவரை இவை மாறி மாறி வரும் ஒரு செய்தி அவ்வளவே! நம்மால் முடிந்தவரை எதையும் செய்வது போதுமானது. ஏனெனில் இறுதி வரை நம்மால் வெற்றியை மட்டுமே தக்க வைத்துக்கொள்ளவும் முடியாது. அப்படி வைத்திருந்தால் வெற்றி என்பதன் சுவையை முழுதாய் உணரவும் முடியாது. இதை தெளிவாய் உணர்ந்தால் போலியான அச்ச உணர்வு நம்மை விட்டு அகன்று போகும்



அடுத்தாய் விமர்சனம்.,
பிறர் விமர்சனத்திற்கு பயந்தே நம்மில் பெரும்பாலானோர் எதையும் செய்வதில் முனைப்பு காட்டுவதில்லை.

இதை செய்தால் பிறர் நம்மை விமர்சிப்பார்களோ... என்றெண்ணி
"நமக்கு ஏன்டா இந்த தேவையில்லாத வேலையினு.." ஒதுங்கியும் அப்படியே அச்செயல் குறித்து பிறரிடம் கேட்டாலும் "உனக்கு ஏன்டா இந்த வேண்டாத வேலையினு..!"  சொல்லும் அந்த ஏளனமும் எந்த ஒன்றையும் செயல்படுத்த நமக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. (நல்ல முறையில் ஆலோசனை வழங்கி நம்மை ஊக்கப்படுத்தும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது வேறு விசயம்)

அப்படீனா விமர்சனமே வேண்டாமா... ?
வேண்டும்! விமர்சனம் என்பது நமது நிலைகளை மாற்றியமைக்கும் ஒரு ஆரோக்கியமான விசயம் தான். ஆனால் அந்த விமர்சனம் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். விமர்சிக்கும் எதுவும் உண்மையாக இருக்க வேண்டும், ஊகத்தின் அடிப்படையில் இருக்ககூடாது. நேர்மையானதாக இருக்கவேண்டும். பிழைகள் -தவறுகள் குறித்து தெளிவாக சுட்டிக்காட்டவேண்டும்.

அதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

"ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு கண்ணாடி..!" என்றார்கள்.

அறிவிப்பாளர் :அபூ ஹூரைரா (ரலி) அவர்கள்
நூல் :அபுதாவூது

முகம் பார்க்கும் கண்ணாடியின் மிக முக்கிய சிறப்பம்சம், தன் முன் நிற்பவரிடம் என்ன உண்டோ அதை மட்டும் தான் காட்டும்.. பொய்யாகவோ, போலியாகவோ எதையும் காட்டாது. அது சுட்டிக்காட்டும் குறைகளை திருத்திக்கொள்ள தான் முயற்சிப்போமே தவிர அதன் மீது கோபம் கொள்ள மாட்டோம்.

அது மட்டுமல்ல. கண்ணாடியானது நம்மிடம் மட்டுமே எதையும் சொல்லும். நாம் சென்ற பிறகு நம் முகத்தில் உள்ள குறைகளை அடுத்து வருபவருக்கு காட்டாது!

இந்த கண்ணாடியை போல...

எதை சொல்ல வேண்டுமோ
எப்படி சொல்லவேண்டுமோ
யாரிடம் மட்டும் சொல்லவேண்டுமோ -
அப்படி சொல்லப்படவேண்டும் உண்மையான விமர்சனம்!

அப்படியான விமர்சனத்தை எதிர் நோக்குங்கள் . முடிந்தால் விளக்கம் கொடுங்கள். தவறேன்றால் திருத்திக்கொள்ளுங்கள்! அஃதில்லாத தேவையற்ற சாடல் விமர்சனத்தை சட்டை செய்யாதீர்கள்!

பிறர் அதை சொல்வார்களோ இதை சொல்வார்களோ என்ற எண்ணத்தில் நமக்கு அனுமதிக்கப்பட்ட ஒரு செயலை நாம் ஏன் செய்யாமல் விட வேண்டும்? நமக்கு விலக்கப்பட்ட ஒன்றை ஏன் அடுத்தவருக்காக பிடித்ததுப்போல் காட்ட வேண்டும்.?

எதையும் செய்வதற்கு தூதரின் வழிக்காடுதல்கள் தெளிவாய் இருக்க அதன் வழி நமது விருப்பமானதை பின்பற்றி போவதில், தேவையற்றதை தவிர்ந்துக் கொள்வதில் நிலையாய் இருங்கள்.

எதை தீர்மானிக்க வேண்டும் நாம்? என்பதை விட எதையும் தீர்மானிக்க வேண்டும் நாம்!

                                                  அல்லாஹ் நன்கு அறிந்தவன்

read more "எதை தீர்மானிக்க வேண்டும்- "நாம்" ?"

Tuesday, February 14, 2012

கி.மு வில் கடவுள்!

                                  ஓரிறையின் நற்பெயரால்


"ஆரம்பத்தில் பல தெய்வ கொள்கையில் விற்றிருந்த மனித சமூகம் பின்னாளிலே ஓரிறையின் பக்கம் ஈர்க்கப்பட்டது." 
இப்படிதான் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை கடவுளுக்கும் மனித சமூகத்திற்கும் உள்ள உறவுக்குறித்து கருத்து பொதுவாக இவ்வுலகத்தில் நிலவி வந்தது.

ஆனால் இந்த நூற்றாண்டில் மனித இனம் (ANTHROPOLOGY) தொடர்பான ஆய்வுகளும், அகழ்வராய்ச்சி (ARCHAEOLOGY) குறித்தும் மிகதுல்லியமாக நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் மேற்கண்ட கருத்தியலுக்கு மாற்றமாய் ஒரு முடிவை சொன்னது.
 அதாவது,  மனித சமூகங்கள் மண்ணில் தோற்றுவிக்கப்பட்ட காலத்திலிருந்தே ஓரிறைக்கொள்கை வலம் வர தொடங்கிவிட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக.,
"மனித இன இயலின் ஆதாரப்படி பூர்விக இனங்களின் ஆதிமதம் உண்மையிலேயே ஏக இறைக்கொள்கையாகவே இருந்தது"  - என அகழ்வராய்ச்சித் துறையின் பிரபல பேராசிரியர் சர். சார்லஸ் மார்ஸ்டனும் (SIR. CHARLES MARSTON)
 " ... ஆதி மனிதனின் ஆரம்பக்கால வரலாற்றின் படி, மத நம்பிக்கை ஏக தெய்வ வணக்கத்திலிருந்து பல தெய்வ வணக்கத்தின் பால் சரிந்தது என்பதும் ,  ... ஆதி மனிதன் இறப்பிற்கு பின்னால் ஒரு வாழ்வு உண்டென்பதிலும் நம்பிக்கை வைத்திருந்தான் - என்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பேராசிரியர் டாக்டர். லாங்க்டன் கூறுகிறார்.
இந்த ஆய்வுகளை வைத்து மட்டுமின்றி தர்க்கரீதியாகவும் மனிதமூலங்களின் ஆரம்பம் ஓரிறைக்கொள்கை என்பதை நிருபிக்கலாம்.

இன்று பல தெய்வ கொள்கைகள் மற்றும் கடவுள் மறுப்புகள் இருக்கிறதென்றால். அவை இவற்றிற்கு எதிரான மூலத்திலிருந்து தான் பெறப்பட்டிருக்க வேண்டும். அதாவது இவை இரண்டுக்கும் எதிராக பின்பற்றப்படும் ஒருக்கொள்கை இருந்தால் மட்டுமே இவை இரண்டும் இப்போது பின்பற்றப்பட சாத்தியம். ஆக கடவுள் மறுப்புக்கு எதிராக கடவுள் ஏற்பும், அதே நேரத்தில் பல தெய்வ கொள்கைகளுக்கு எதிராக ஒருக்கொள்கையும் இருக்கவேண்டுமானால் அது ஓரிறைக்கொள்கையாக தான் இருத்தல் வேண்டும்.

     நாத்திகத்தின் பொதுவான சித்தாந்தம் பரிணாமம் மூலமே மனித உயிர்களின் உற்பத்தி தொடங்கியது என்பதே! சரி ஒரு வாதத்திற்கு அதை ஏற்றுக் கொண்டாலும் உயிர் வாழ சிறிதும் தொடர்பே இல்லாத இறை நம்பிக்கை என்ற ஒன்று ஏன் ஆதிமனிதனுக்கு ஏற்பட வேண்டும்..?

 அன்றைய கட்டத்தில் உயிர்வாழ காற்றே பிரதான ஆகாரமாக இருக்க "அக்ஸிஜன் குறித்து அறியவேண்டிய ஆரம்பகால மக்கள் கடவுள் குறித்து அறிந்து வைத்திருப்பது எப்படி?   


இயற்கையே எல்லாவற்றிற்கும் போதுமானதென்றால் ,

  • இல்லாத கடவுள் குறித்து அவர்களுக்கு ஏன் தெரிய வேண்டும்.? 
  • கடவுள் என்ற ஒன்று இருப்பதை அறிந்திடாத அந்த சமூகத்திற்கு கடவுள்  குறித்து யாரால் விளக்க முடியும்...? 
  • அதை விட முக்கிய கேள்வி ஏன் விளக்க வேண்டும்..? - 

தேவையில்லாத ஒன்றை தேவையில்லாத நிலையில் தேவையில்லாமல்...  தெளிவாய் முன்மொழியப்பட வேண்டிய அவசியம் என்ன?

  இதெற்கெல்லாம் ஒற்றை வரியில் பதில் தருவதாக இருந்தால் ஆதிமனிதர்கள் இயற்கையே உயிர் உருவாக்கியாக ஏற்காமல் இயல்பாகவே கடவுளைக்குறித்து அறிந்து வைத்திருந்தார்கள் .எனினும் அவர்களுக்கு பின்பற்ற வேண்டியவைகள் குறித்து விளக்கி கூற அவர்களிலிருந்தே ஒருவர் கடவுளால் தேர்ந்தேடுக்கப்பட்டு அந்தந்த சமுதாயத்திற்கு அனுப்பப்பட்டிருப்பது தான் உண்மை.

இதை அல்லாஹ் தன் மறையில் 


(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்;. அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்;. அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்... (02:213) 
என தெளிவாக ஆதி மனித நிலைக்குறித்து கூறுகிறான்

ஆக ஓரிறையின் பால் மக்களை அழைக்கும் செயலானது முஹம்மது நபி அவர்களால் புதிதாக தொடங்கப்பட்டதல்ல. மாறாக ஆதி மனிதரிலிருந்து தொடங்கி நபி மூஸா, நபி ஈஸா வரையிலுமே பின்பற்றப்பட்டது - பின்பற்றும்படி மக்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சி முஹம்மது நபி அவர்களின் வருகையோடு முற்றுப்பெற்றது.

ஆக எல்லா இறைத்தூதர்களுமே அல்லாஹ் என்ற ஓரிறையை ஏற்க சொல்வதற்கே மனித சமூகத்திற்கு அனுப்பப்பட்டனர். மாறாக அல்லாஹ்வை வணங்குமாறு முஹம்மது நபிகள் மட்டும் புதிதாய் இஸ்லாத்தை போதிக்கவில்லை. இதற்கு ஒரு எளிய உதாரணம் பாருங்கள்.

இஸ்லாத்தை விமர்சிப்போருக்கும் தெரியும் முஹம்மது நபிகளின் தந்தை பெயர் அப்துல்லாஹ் (அப்து (அடிமை) + அல்லாஹ்) என்று . இதற்கு பொருள் அல்லாஹ்வின் அடிமை. முஹம்மது நபிகளின் வருகைக்கு பிறகே அல்லாஹ் என்ற கடவுளை வணங்க வேண்டிய கொள்கை போதிக்கப்பட்டிருந்தால் அவரது தந்தையின் பெயரை அப்துல்லாஹ் என யார் வைத்தது...?


முஹம்மது நபியா....?!

அல்லாஹ் என்ற பதம் முஹம்மது நபியால் அறிமுகப்படுத்தப்பட்டது என்போர் இதற்கு பதில் தரட்டும்.

. . . 
 உண்டு என்பதற்கு பிறகே இல்லையென்ற ஒரு நிலை உண்டாக வேண்டும்! ஆக அல்லாஹ் என்ற ஓரிறைக்கொள்கையை மட்டுமே வணங்கும் பழக்கும் தொடக்க காலத்திலிருந்த பின்பற்றப்பட்ட ஒன்றாகும்.

   எனினும் மனிதனின் சிந்தனையோட்டத்தில் ஏடுக்கும் தவறான முடிவுகள் அவர்களை பல தெய்வ கொள்கைக்கு வழிவகுத்தது. அதிலும் சொற்ப பிரிவு மக்கள் கடவுள் மறுப்புக்கு செல்ல நேரிட்டது. ஆக பல தெய்வ கோட்பாடுகள் தெளிவற்ற முறையிலே உள்ளதால் அவற்றை விமர்சிக்க நாத்திகம் பெருமுயற்சி எடுப்பதில்லை. ஆனால் இஸ்லாம் தன் கோட்பாடுகளை இன்றளவும் தெளிவாக வைத்திருப்பதால் அவை இஸ்லாத்திற்கு எதிராக செயல்பட எத்தனிக்கின்றன.

 ஏனெனில் இன்று இஸ்லாத்தை விமர்சிக்கும் நாத்திகர்கள் எவரும் சொல்லும் வார்த்தை "நான் முன்னாள் முஸ்லிம்" இவ்வார்த்தையை கேட்கும் நடு நிலையாளர்கள் கூட இஸ்லாத்திலும் குறைப்பாடுகள் இருப்பதாக தான் உணர்வார்கள். ஆனால் பாருங்கள் அவர்களில் எவரும் வானம் மற்றும் பூமியின் அமைப்புகளை பார்த்தோ, சந்திர சூரிய இயக்கங்களை அறிந்தோ அல்லது பால்வெளி மாற்றங்களை ஆராய்ந்தோ அவை இறைவனால் படைக்கப்பட வாய்ப்பில்லையென இஸ்லாத்தை விட்டு வெளியே வருவதில்லை.

மாறாக தனக்கு சொல்லிதரப்பட்டவைகளையும் -அறிமுகம் செய்து வைக்கப்பட்டவைகளுமே இஸ்லாமாக உணர்ந்து அதை ஏற்கின்றனர்.அவர்கள் தவறாய் கற்ற இஸ்லாத்தை பின்னாளில் ஆய்வறிவோடு ஓப்பிடும் போது அது இஸ்லாத்தையே தவறாக காட்டுகிறது. ஆக இஸ்லாத்திலிருந்து வெளியேறுகிறார்கள். இஸ்லாத்திற்கு எதிராகவும் விமர்சிக்கிறார்கள். அவர்களின் விமர்சனத்தை பார்க்கும் போதே இதை நம்மால் தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகிறது.

ஆனால் எதையும் தர்க்கரீதியாகவும் ஆய்வுரீதியாகவும் ஆராய்ந்து பின்பற்றும் நாத்திகர்கள் பலர் இஸ்லாம் நோக்கி வருகிறார்கள் இதற்கு என்ன காரணம்...? 

வெற்று ஊகங்களையோ, போதிக்கப்பட்டவைகளை மட்டுமோ ஏற்று இஸ்லாத்தை நோக்கி வருவதில்லை. மாறாக ஆய்வுரீதியான சிந்தித்து அதன் விளைவால் இஸ்லாத்தை நோக்கி வருகிறார்கள்..
 
எது எப்படி நமக்கு அறிமுகப்படுத்த படுகிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு பெயர் தான் நம்பிக்கை! -ஆனால்
அது சரியா அல்லது தவறா என ஆராய்ந்து முடிவெடுத்து அதை ஏற்பதே அறிவு.

ஊகங்களை வைத்து இஸ்லாதை விட்டு வெளியேறுவதும்...
ஆய்ந்தறிந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதும் -
எது மேலானது..?

பதில் தரும் பொறுப்பு உங்களிடமே!

குறிப்பு:
 (ஆக்கம் தொடர்பாக விவாதிக்கும் போது மேற்கண்ட இரண்டு மேற்கோள்களும் எனக்கு நம்பக தன்மை வாய்ந்த சகோதர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற செய்திகள் ஆதார மூலங்களோடு அவைக்குறித்த மேலதிக செய்திகள் கிடைத்தால் இன்ஷா அல்லாஹ் தெரியப்படுத்தவும்). 

                                                     அல்லாஹ் மிக்க அறிந்தவன்

read more "கி.மு வில் கடவுள்!"

Thursday, February 09, 2012

மத்ஹபுகளை பின்பற்றலாம் வாங்க..!

 ஓரிறையின் நற்பெயரால்


நீங்க மத்ஹபுகளை பின்பற்றுறீங்களா.?

ஆமாங்க...

பின்பற்ற என்ன காரணம்..?

............................................

(கொஞ்ச நேரம் யோசனைக்கு பிறகு)

நாங்கள் பாரம்பரியமா இந்த மத்ஹபுகளை தான் பின்பற்றுகிறோம் ..
அப்புறம்..... 
நபிகளின் வழிமுறையை இலகுவாக்கி இமாம்கள் பின்பற்ற சொல்றாங்க. பின்பற்றுகிறோம்.  இதில் என்ன தவறு..?
என்பதோடு மட்டுமே முடித்துக்கொள்வார்கள்...

  •  உண்மையாக மத்ஹபுகள் என்ன சொல்லுகிறது., ?
  • இமாம்கள் பெயரில் மத்ஹபுகள் உருவானது எப்படி?
  • இமாம்கள் உண்மையாக என்ன சொன்னார்கள்.. - என்று அலசவே இக்கட்டுரை


    மத்ஹபுகள் என்றால் வழிமுறை என்ற பொதுவான அர்த்தத்தில் கையாளப்பட்டாலும். இவ்வார்த்தை 'தஹப' என்ற வேர்ச்சொல்லிருந்து உண்டானது. இதற்கு போக்கு அல்லது கருத்து என பொருள்படும்.

      அக்காலகட்டத்தில் தான் முன்னிருத்தும் கேள்விகளுக்கு இமாம்களிடமிருந்து பெறப்படும் பதில்களை பொதுவில் வைத்து பிறரிடம் உரையாடும் போது அக்கருத்தை மையப்படுத்த இது இன்னாரின் கருத்து (உம்: இது ஷாஃபி இமாமின் கருத்து) என கூறுவதற்கு இவ்வார்த்தையை பயன்படுத்துவர். பின்னாளில் இது மாற்றமடைந்து மத்ஹபு என்று நிலைப்பெற்றது.

பெரும்பான்மையானவர்களிடம் கேட்டால் மத்ஹபுகள் நான்கு என்றே சொல்லுவர். அது தவறு. மத்ஹபுகள் 1. சைதி மத்ஹபு 2. அவ்சாயி மத்ஹபு 3. ழாஹிரி மத்ஹபு 4. லைதி மத்ஹபு 5. தவ்ரி மத்ஹபு 6. ஜரீரி மத்ஹபு போன்றவைகளும் மத்ஹபுகளுக்குள் அடக்கம். எனினும் இவை காலப்போக்கில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ளாமைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் மூன்று அடிப்படை காரணங்கள் பிரதானப்படுத்த படுகிறது அவை

1. இம்மத்ஹபுகளைப் பின்பற்றியோர் எண்ணிக்கையில் குறைவாக இருந்தமை.
2. இம்மத்ஹபை பின்பற்றியோர் அதில் உறுதியாக இல்லாமல் இருந்தது அல்லது பெயரளவில் மட்டும் அதை பின்பற்றியது - மற்றும்
3. மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் அதிக ஈடுபாடு செலுத்தாமை.

இதுவே இம்மத்ஹபுகள் இன்று பெயரளவிற்கு மட்டும் நினைவில் இருக்க காரணங்கள். அதுவல்லாமல் ஹனபி, ஷாஃபி, மாலிக் மற்றும் ஹன்பல் (ஹம்பலி) ஆகிய நான்கு மத்ஹபுகளே அதிக அளவில் பின்பற்றப்படுகிறது(?) இவைகள் குறித்த இமாம்களின் நிலை என்னவென்பதை பார்ப்போம்.

முதலில் இமாம்கள் வாழ்ந்த வருடங்கள் குறித்த காலக்குறிப்பை காண்போம்


மேற்கண்ட கணக்கீட்டில் ஹனபி இமாமே ஆரம்பமானவர் என்பதை அறிய முடிகிறது. தமிழகத்தில் ஏனைய மத்ஹபுகளை விட ஹனபி மத்ஹபுகளை பின்பற்றுவோரே அதிகம். அதாவது மத்ஹபுகளை பின்பற்றுவோரில் நான்கில் ஒருவர் ஹனபி மத்ஹபை சார்ந்தவராவர்.

ஹனபி மத்ஹபின் இமாமாக கூறப்படும் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் இயற்பெயர் அந்-நூமான் பின் தாபித்(ரஹ்). திருக்குர்-ஆனில் ஆழ்ந்த ஞானமும், புலமையும் பெற்றிருந்த இமாமவர்கள் அந்நாளில் குழப்பங்களின் கூடாரமான கூஃபாவில் வாழ்ந்ததால் பொய்யான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை தரம் பிரித்து தேர்ந்தெடுப்பதில் மிக கவனமாகவும் இருந்தார்கள். 

அதற்காகவே வாழ் நாளை செலவழித்தார்கள். இதில் கவனிக்கப்படவேண்டிய ஒரு விசயம் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் தனது வாழ்நாளில் எந்த ஒரு மார்க்க நூலையும் எழுதி வைக்கவே இல்லை.

ஆனால் இன்று ஹனபி மத்ஹபின் ஆதார நூல்களாக முன்மொழியப்படும் நூற்களெல்லாம் இமாமவர்களின் மறைவிற்கு பின்னரே தொகுக்கப்பட்டன. அதாவது

  •  குத்ரி எனும் நூல் 300 வருடங்களுக்குப் பிறகும்,  
  • ஹிதாயா மற்றும் காஜிகான் எனும் நூல்கள் சுமார் 400 வருடங்களுக்குப் பிறகும், கன்னியா சுமார் 500 வருடங்களுக்குப் பிறகும், 
  • தஹாவி, ஷரஹ் விகாயா, நிகாயா ,கன்ஜ் மற்றும் ஜாமிஉல்ருமூஸ் போன்ற நூற்கள் சுமார் 600 வருடங்களுக்குப் பிறகும், 
  • ஃபதாவே பஜாஸியா, பதாஉல் கதீர் மற்றும் குலாஸத் கைதானி போன்ற நூற்கள் சுமார் 700 வருடங்களுக்குப் பிறகும்,  
  • சல்பீ, தன்வீர் அப்ஸார்,  பஹ்ரு ராயின் மற்றும் தகீரா போன்ற நூற்கள் சுமார் 800 வருடங்களுக்குப் பிறகும், 
  • துர்ருல் முக்தார் சுமார் 900 வருடங்களுக்குப் பிறகும் இறுதியாக 
  • .ஃபதாவா ஆலம்கீரி இமாமவர்கள் மரணித்து 1000 வருடங்களுக்குப் பின்னரே தொகுப்பட்டவைகளாகும்.
     ஆக இமாமின் மறைவுக்கு பின்னர் சுமார் மூன்னூறு ஆண்டுகளுக்கு பிறகே ஏனைய எல்லா நூற்களும் தொகுக்கப்பட்டன. எந்த நூலிலும் இமாமிடமிருந்து எப்படி செய்திகள் சேகரிக்கப்பட்டன என்ற விபரமும் அவற்றை அறிவித்தவர் வரிசை குறித்த தகவலும் இல்லவே இல்லை. 

 மேலும், ஹனபி மத்ஹபின் மிக முக்கிய பிக்ஹு சட்ட நூல்களாக குறிப்பிடப்படும் துர்ருல் முக்தார் மற்றும் ஃபதாவா ஆலம்கீரி ஆகிய இரண்டு நூற்களுக்கும் இமாமின் வாழ்வுக்கும் இடைப்பட்ட கால அளவு சுமார் ஒரு நூற்றாண்டுகள் என்பது மிக முக்கியமான ஒன்று. அதிலும் ஃபதாவா ஆலம்கீரி எனும் நூல் மார்க்க ரீதியான தொடர்பற்று மெகலாய மன்னர் ஓளரங்கஷீப் காலத்தில் தொகுக்கப்பட்ட ஒன்றாகும். 

 ஆக தமது கருத்துக்கள் சமூகத்திற்கு அவசியமென கருதியிருந்தால் தங்களது  காலத்திலே தமது நூல்களை எழுதி இருப்பார்கள். அல்லது குறைந்த பட்சம் பிறரையாவது எழுத செய்திருப்பார்கள். ஆனால் இமாம் அபூஹனிபா (ரஹ்) அவர்கள் வரலாற்றில் எங்கேயும் தாமே எழுதியதற்கோ அல்லது பிறரை எழுத பணித்ததற்கோ ஆதாரங்கள் இல்லவே இல்லை. 


மேலும் இமாம் ஷாஃபி அவர்கள், மாலிக் இமாமின் மாணவர் ஆவார். அதுபோலவே, ஷாஃபி இமாமின் மாணவரே ஹன்பல் இமாம் அவர்கள்.இவர்களுள் யாரும் தமது ஆசிரியர்களைப் பின்பற்றவுமில்லை. எந்த ஆசிரியரும் தமது மாணவர்களை தங்களைப் பின்பற்றுமாறு வற்புறுத்தவுமில்லை. ஏனெனில் அவர்களுக்கான தெரிதல்கள் யாவற்றிற்கும் இறைவேதத்தையும் - தூதர் மொழியையும் சார்ந்திருந்தார்கள். 

எனினும் மத்ஹபு உருவாக்கங்கள் பிற்கால உலமாக்களால் ஏற்படுத்தபட்ட வழிமுறை என்பதற்கு இன்னொரு சான்று பாருங்கள்.
  
இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களின் மறைவிற்கு பிறகே அவர்களது மாணவர்களால் அவர்களின் மீது கொண்ட அதீத பிரியம் காரணமாக பின்னாளில் நூற்களாக தொகுக்கப்பட்டன. இன்று ஷாபிஈ மத்ஹபில் மார்க்கத்தீர்ப்பு  வழங்கக்கூடிய (பத்வா) நூல்களான

1.நூல் அல்மஜ்மூ ஷரஹுல் முஹத்தப்
இமாமவர்களுக்கும் இன்நூல் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் 427 வருடங்கள்

2.நூல் பத்ஹுல் முயுன்
இமாமவர்களுக்கும் இன்நூல் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் சுமார் 7 நூற்றாண்டுகள்

3.நூல் இஆனதுத் தாலிபின்
இமாமவர்களுக்கும் இன்நூல் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் 1062 வருடங்கள்

இடைப்பட்ட காலங்களை கவனிக்கும் போதே இந்நூல்களின் நன்பகத்தன்மைக்குறித்து அதிகம் விளக்க தேவையில்லையென நினைக்கிறேன்...!

இதே நிலை தான் ஏனைய இமாம்களின் பெயரில் நிறுவப்பட்ட மத்ஹபுகளிலும். 

ஆக நான்கு இமாம்களுக்கும் அவர்கள் பெயரால் இன்று சமூகத்தில் நிலவும் மத்ஹபுகளுக்கும் எந்த வித சம்பந்தமுமில்லை. ஏனெனில் மேற்கண்ட நூற்களை நன்கு ஆராய்ந்தால் முன்னுக்குப்பின் முரண், அல்லாஹ்வும் அவனது தூதரின் சொல்லுக்கும் மாறுபாடு, பகுத்தறிவிற்கு பொருந்தாத வாதங்கள். 

"இமாமுல் அஃலம்! "  தலை சிறந்த இமாம் (கள்) என அனைவராலும் இந்த சமூகத்தில் அறியப்பட்டவர்கள் எப்படி இப்படிப்பட்ட தவறான கருத்துக்களை தருவார்கள்...?

சரி மத்ஹப் பற்றினால் அக்கருத்துக்கள் எல்லாம் எங்களுக்கு ஏற்புடையவைகள் தான் என சொன்னாலும் அதே இமாம்கள் கூறிய செய்திகளையும் கீழே பாருங்கள். நாற்பெரும் இமாம்கள் தங்களது சொல் / செயல் குறித்து என்ன சொல்கிறார்கள் பாருங்கள்.,

இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள்:
எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம் முடிவு செய்தோம் என்பதை அறியாமல் எங்கள் சொல்லை எடுத்து நடப்பது எவருக்கும் ஹலால் இல்லை
(நூல்: ஹாஷியா இப்னுல் ஆபிதீன் பாகம் 6, பக்கம் 293)

இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்:
நான் (சில நேரங்களில்) சரியாகவும் (சில நேரங்களில்) தவறாகவும் முடிவெடுக்கக் கூடிய ஒரு மனிதன்;. எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள்! அவற்றில் குர்ஆனுக்கும் நபிவழிக்கும் பொருத்தமில்லாதவற்றை விட்டு விடுங்கள்.
(நூல்: உஸுலுல் அஹ்காம் பக்கம்:294 பாகம்:6)

இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் 
எனது நூலில் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாற்றமானதைக் கண்டால், நபி (ஸல்) அவர்களின் வழி முறையையே (மக்களிடம்) கூறுங்கள்;, என் கூற்றை விட்டு விடுங்கள்.
(நூல்: அல்மஜ்மூஃ பாகம் – 1 பக்கம் – 63) 
இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் 
இமாம் அபூஹனீஃபா, இமாம் மாலிக், இமாம் அவ்ஸாயீ ஆகியோரின் கருத்துக்கள் அவர்களின் அபிப்பிரயாமே. என்னிடத்தில் அவையனைத்தும் சமமே! உண்மையான ஆதாரமோ நபித்தோழர்களிடம் (உள்ள ஹதீஸ்களில்) தான் உள்ளது.   (நூல்: ஜாமிஉ இப்னு அப்தில்பர் பக்கம் 149 பாகம் 2)

 எதற்கெடுத்தாலும் மத்ஹபுகளை முன்னிருத்துவோர் மேற்கண்ட வரிகளை மீண்டுமொருமுறை ஆய்தறிவது அவசியமானது. இமாம்களின் சொற்கள் இதுவென்று வரையறையின்றி தெளிவில்லாதவற்றை நமக்கிடையில் வைத்திருக்கும் போது அந்த இமாம்களே அவை பின்பற்ற உகந்ததல்ல என்று தெளிவாய் சான்று பகீர்கிறார்கள். 

உண்மையாக மேற்கண்ட இமாம்களின் மீது மதிப்பு வைத்திருந்தால் அவர்களின் கூற்றுப்படி பின்பற்றுதல்கள் அனைத்தும் அல்லாஹ்வின் வார்த்தையிலும் அண்ணாலாரின் வாழ்விலுமே சாத்தியம் என்பதை உணர்ந்து அந்த தூய இமாம்கள் எதை பின்பற்றினார்களோ அந்த நபிவழி மத்ஹபை நாமும் பின்பற்றலாம் வாங்க....!

                                                           அல்லாஹ் நன்கு அறிந்தவன்

Our Sincere Thanks to:
Bro. Nashid Ahmed
Bro. shaik Dawood.

REFERENCES:
export.writer.zoho.com

read more "மத்ஹபுகளை பின்பற்றலாம் வாங்க..!"

Categories

அமல்கள் அறியாமை அறிவியல் அல்லாஹ் அவதாரம் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உஜைர் நபி உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் எதிரி ஏன் இஸ்லாம் ஏற்றத்தாழ்வு ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தஜ்ஜால் தண்டனை தாய் திருமணங்கள் தேவை நன்மைகள் நபிமொழி நரகம் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மனசாட்சி மனம் மனிதன் மனிதர்கள் மரணம் மறுமை மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வானவர்கள் வாழ்க்கை விதி விமர்சனம். விளக்கம் ஹராம்